அன்று மாலை அவர் பெண் வீட்டுக்கு வந்தாள். உள்ளூரிலேயே இருப்பதால் அவ்வப்போது வந்து செல்வாள். அம்மாவிடம் பேசிவிட்டு அப்பாவிடம் வந்தாள்.
"என்னப்பா... அம்மா என்ன சொல்றாங்க?"
"எங்கே சொல்றா... வழக்கம் போலதான்..."
"ம்ம்ம்.. மாறுவா... பார்ப்போம்.."
"சிலபேர் மாறவே மாட்டாங்கம்மா..."
"நீங்க மாறலையா? முன்னாடி மாதிரியா இருக்கீங்க..."
"மாறியிருக்கேனா? நானா? அப்படியெல்லாம் சொல்ல முடியாதும்மா... அடிப்படையா யாரும் சில குணங்கள்ல மாறமாட்டாங்க... "
"நாங்க இப்போ உன்கூட சாதாரணமா பேசலையா... பேசுவா... வரட்டா..."
கிளம்பி விட்டாள். "ஏற்கெனவே ஏகப்பட்ட கேரக்டர்ஸ் இங்கே... நான் கிளம்பறேன்... எல்லோருக்கும் போயிட்டு வர்றேன்"
உள்ளே வந்து கொண்டிருந்த மருமகளிடம் "வரேன் மன்னி.." என்றபடியே சென்றாள். வழக்கம்போல திரும்பும் வழியில் தனது காரிலேயே மகளை விட்டு விட்டுத் திரும்பிய அவள் அம்மா "வாம்மா... போற வழில உன்னை இறக்கி விட்டுடறேன்" என்றவள், ராகவி கையில் எதையோ கொடுத்து விட்டு "இந்தா ராகவி... இது உனக்கு" என்றவள், "ராகவி.. என்ன பெயரடி வச்சிருக்காங்க... யார் வச்சது?" என்றாள்.
"ம்ம்ம்.. ஏன் உனக்குத் தெரியாதா பாட்டி? எப்போ பார்த்தாலும் இதையே கேட்டுகிட்டு... எங்கப்பா அம்மா தான் வச்சாங்க... உனக்கு யார் பாட்டி மைத்ரேயின்னு பேர் வச்சாங்க...." என்றாள்.
"வாயாடி... எங்க வெங்கட்ராமன் மாமாதான் பேர் வச்சார்.. உங்களுக்கெல்லாம் அப்படிச் சொன்னா புரியாது... ஜீவி மாமான்னு சொன்னா புரியும்.."
"ஓ.. மைத்ரேயின்னு பேர் வச்சதாலதான் கண்ல அவ்வளவு மையா பாட்டி?"
"வாயாடி... வரட்டுமா... தாத்தா வந்திருப்பார்... கிளம்பறேன்" என்றபடியே சென்றாள்.
மருமகள் இவர் கையில் ஒரு பொட்டலத்தைத் தந்தாள். "மாமா... வெள்ளையப்பம்.."
அவருக்குப் பிடித்த பண்டம்! தான் வேலை பார்த்த நாளில் இப்படி ஏதாவது வீட்டுக்கு வாங்கி வந்திருக்கிறோமோ என்று யோசித்தபடியே அதைப் பிரித்துச் சாப்பிட்டார் சங்கரன்.
***
ஒருநாள் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இருமிய சங்கரனுக்கு இழுத்துப் பிடித்துக்கொண்டது. திணறிய சங்கரனை மகன் சரவணன் ஆசுவாசப்படுத்தினான். மெதுவாக விலாப்பக்கம் நீவி விட்டான். விசாலி தோசையுடன் வந்தவள், அதை இருவர் தட்டிலும் போட்டு விட்டு உள்ளே சென்றாள்.
சற்று நேரம் பொறுத்து உள்ளே சென்ற சரவணன் "அம்மா... இன்னுமா உன் கோபம் தீரவில்லை? அவர் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கார்.. நீ பாட்டுக்கக்க ஒண்ணுமே நடக்காதது மாதிரி உள்ளே வரயே..." என்றான்.
"சரியாய் போயிடுச்சு இல்லையா"
"ம்ம்... ஆனால் பழைய அப்பா இல்லம்மா அவர்..."
'பழைய அப்பா இல்லை..' பாத்திரங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த விசாலியின் மனசுக்குள் இந்த வார்த்தைகள் இரண்டுமூன்றுமுறை சுற்றி வந்தன.
"என்னால் முடியவில்லை... இழுத்துப் பிடிச்சுக்கிட்டிருக்கு... கொ ஞ்சம் இந்த மாவுப்பாத்திரத்தை எடுத்து உள்ளே வைங்களேன்..." இவள் சொன்னது காதிலேயே கேட்காதது போல கடந்து சென்ற சங்கரன்...
"நான்னு இல்லடி... எல்லோருமே சுயநலம்தான்... நீ எந்தெந்த வகைல சுயநலம்னு எனக்குத் தெரியாதா?"
யார் அவர்... அவருக்குப் பணத்தை எடுத்து கொடுக்கறீங்களே... வருமா... நாம் இருக்கற நிலைல...
"என் பணம்... நான் சம்பாதிக்கறேன்... உன்னை ஏண்டி கேட்கணும்?"
வரும்போது காற்கறி வாங்கிட்டு வந்தா நாளை சமையலுக்காகும்.... பையனும் பொண்ணும் ஸ்கூலுக்கு எடுத்துக் போக சமைக்க வசதியாய் இருக்கும்...
"நீ என்னடி பண்றே வீட்டில்... தண்டச்சோறு... நீ சாப்பிடறியே சோறு... அது என் சம்பாத்தியத்தில் வர்றதுடி... ஓசியில சாப்பிடறே... கொஞ்சம் வேலை செய்... தேஞ்சு போயிட மாட்டே"
இதோ பரிந்துபேசும் சரவணன் அப்பாவிடம் உதை வாங்கி இருக்கிறான். இரவு ஒன்பதுமணிக்குமேல் நண்பனுடன் தெருவில் நின்று பேசினான் என்று தெருவே கேட்கும்படி இரைந்தார்.
"அப்படியே போயிடு... அவன் கூடவே அவன் வீட்டுக்குப் போயிடு... உள்ளே வராதே"
அவன் ஏதோ எதிர்த்துப்பேச, அவனை பெல்ட்டை எடுத்துக்கொண்டு விளாசியவர் அவனை தெருவில் இழுத்துத் தள்ளினார்.
அவனைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துவந்த விசாலியையும் அடித்தார். அப்போது அவர் பேசிய பேச்சை உச்சகட்டமாக விசாலியால் ஏற்கவே முடியவில்லை. "அவன் என் மகனே இல்ல... யாருக்குடி பெத்தே அவனை..."
அது வரைக்கும் கூட ஒன்றும் பெரிதாக பேசிக்கொள்வதில்லை இருவரும் என்றாலும் அப்புறம் விசாலி முழுமையாக இறுகி விட்டாள்.
சங்கரன் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலை, அலுவலகம் என்று சென்று வந்து கொண்டிருந்தார். பாட்டு கேட்டுக் கொண்டிருப்பார். அவர் பாட்டுக் கேட்கும்போது வீட்டில் யாரும் பேசக்கூடாது.
ஒய்வு பெற்ற நாளிலிருந்துதான் அவரிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. தன் தேவை இனி யாருக்கும் இருக்காது, தன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று என்கிற பயம் அவருக்கு வந்திருக்கிறது என்று நினைத்தாள் விசாலி. அவளிடம் மாறுதலே இல்லை.
***
பெரிய மாறுதல் எதையும் காட்டவில்லை விசாலி என்பதை சங்கரன் உணர்ந்தே இருந்தார். அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. தான் நடந்துகொண்டிருந்த விதங்களில் இருந்த சில அநியாயங்களை நினைத்து
இப்போது மாற்ற முயன்றுகொண்டிருந்தார். அவற்றை மாற்ற முடியாது என்றே அவருக்கும் தோன்றியது.
தனக்குப் பிடித்த எதுவும் கூட முன்னர் தன் வீட்டில் நடக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்ப்பார். தான் நினைப்பது போலதான் இவர்களும் நினைத்திருப்பார்கள் என்று மனதுக்குள் இப்போது தோன்றுகிறது.
தன் விருப்பம் என்று எதுவும் இவர் காட்டிக்கொள்ளாததால் இவருக்குப் பிடித்த மாதிரி எதுவும் வீட்டில் நடக்கவில்லையா, அலலது வீட்டில் அப்படி எதுவும் நடக்காததால் இவர் தையும் காட்டிக் கொள்ளவில்லையா... எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் பார்வையில் அப்படி... தன் பார்வையில் இப்படி...
ஓய்வுக்குப் பின் சும்மா இருந்த நாட்களில் இவர் சிந்தனை வேறு திசையில் ஓடியது.
தான் பேசிய சில வார்த்தைகளை சொல்லி விசாலியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றும் அவருக்கு. ஆனால் அவள் அதற்கு எந்த இடமும் தரவில்லை. அந்த வாய்ப்பு வருவதை முடிந்தவரை தடுத்தே வந்தாள்.
முன்னர் தான் செய்யாத சில வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். சரவணனுக்கு திருமணம் ஆனதிலிருந்து அவன் அறைக்குள் அவர் செல்வதில்லை. அவன் பார்த்த பிறகுதான் தினசரிகளை அவர் கையிலெடுப்பார்.
முதலில் இதைக் கவனிக்காத சரவணன் அப்பாவிடம் சொல்லிப் பார்த்தான்.. வழக்கம்போல நீங்கள் முதலில் படிப்பதில் தப்பில்லை என்றான். இவர் பதில் எதுவும் சொல்லவில்லை என்றாலும் எடுப்பதில்லை ; படிப்பதில்லை. அலுவலகம் செல்பவனுக்கு முதல் மரியாதை என்று நினைத்தார்.
"என்னி ஜென்மமுல சேஸின பாபமு ஈ ஜென்மமுதோ விடு நன்னா..."
மனதுக்குள் மறுபடி பாலமுரளி பாடினார். ஒருமுறை, ஒருமுறை மட்டும் விசாலி இவர் முகம் பார்த்து மலர பேசி விட்டால் போதும். நடிப்புக்காவது பேசிவிட்டால் போதும், அந்த கணமே, எங்காவது கண்காணாமல் கிளம்பிச் சென்று விடலாம் என்று நினைப்பார்.
இந்த ஒன்றை மட்டும் ஏன் எதிர்பார்க்கிறோம் என்று அவருக்கே தோன்றும்.
இவர் ஒய்வு பெற்ற பின்பும் கூட இவரோடு சரியாய்ப் பேசாமல் விலகியே இருந்த சரவணன் இப்போதெல்லாம் கொஞ்சம் நெருங்கிப் பேசி வந்தான். மகளும் இப்போதெல்லாம் சற்றே தைரியம் பெற்று இவருடன் இயல்பாய் பேசத் தொடங்கி இருந்தாள்.
சரவணனுக்கு அப்பா மீதான ஆரம்ப கால அதிருப்திகள் அவனுக்குத் திருமணமாகி ராகவி பிறந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கி இருந்தன. அதற்கு சங்கரனின் நடவடிக்கைகளும் காரணம். சகோதரியிடம் இதுபற்றி அவன் பேசியபோது அவளும் இதே கருத்தை எதிரொலித்தாள்.
ராகவி இவரிடம் பெரிதாக ஒட்டுவதில்லை. விலகிப் போவதுமில்லை. சரவணனோ, அவன் மனைவியோ ராகவியிடம் தாத்தா பற்றி எதுவும் விசேஷமாகச் சொல்வதில்லை என்பதுகூட காரணமாயிருக்கலாம். ஏனோ அவளும் இவர் மனதில் பெரிய இடம் எதுவும் பெறவில்லை. மகனும், மகளும் கூட அப்படிதான். விரோதமாக எதுவும் தோன்றவில்லை என்றாலும் விட்டு விட்டு இருக்க முடியாமல் எல்லாம் இல்லை. விசாலி ஒருமுறை பேசவேண்டும். தனது தவறு நேர்செய்யப்படவேண்டும்.
அதற்காகக் காத்திருந்தார்.
ஒருநாள் காலை விசாலி வீட்டு வேலை செய்த கையோடு வந்து நாற்காலியில் அமர்ந்தவள் முகம் வேர்க்க அப்படியே சரிந்து, முடிந்து போனாள்.
சரவணனும், மருமகளும் அவளைத் தூக்கிப் பிடித்து அழுது கொண்டிருக்க,
ராகவி ஒன்றும் புரியாமல் "பாட்டி... பாட்டி..." என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க...
சங்கரன் வெளியே நடக்கத் தொடங்கினார்.
================================================================================================
பிரிஞ்சி இலை உபயோகங்கள் இப்படி எல்லாம் இருக்கிறதா என்ன? ஆச்சர்யம்தான். சில விருப்பங்களை நிறைவேற்றுமாமே...!
==============================================================================================
எனக்கும் ஞாபகமறதி உண்டு... இதைவிட மோசமாகவே உண்டு. சிலசமயங்களில் நிறையவே அசடு வழிந்திருக்கிறேன்!
===================================================================================
ஏகாந்தன் ஸார் இரண்டுமூன்று நாட்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருந்தார். கிட்டத்தட்ட இதே போல கருத்துடைய ஒன்றை வியாழனில் பகிர எடுத்து வைத்திருக்கிறேன் என்று அங்கு சொல்லியிருந்தேன். அது....
==================================================================================
இந்த வாரம் இன்னொரு சபாபதியிஸம்!
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், மற்றும் தொடரும் அனைவருக்கும்..கீதாக்கா வல்லிம்மா இருவருக்கும் மாலை வணக்கம்…..கூடவே ஒரு வேளை ஃபர்ஸ்ட்டூஊஊஊனு குரல் வந்துருமோனு…அதுவும் பிஸி இல்லையாம் லீவாம்….ஒரு எதிர்பார்ப்பு…..ஓடி வந்திருக்கேன்……வைரவா மூச்சு வாங்குது…ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரெங்கன்... இனிய காலை வணக்கம்.
நீக்குஹா ஹா ஹா கீத்ஸ்ஸ் இந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:)) மீ எப்ப வேணுமெண்டாலும் ஜம்ப் ஆவேன்:)).. செவ்வாய் நைட் கிட்ட வந்து ஸ்லீப் ஆகிட்டேன்ன்.. இப்பெல்லாம் மீ ரொம்ப பிஸியாக ஓடுவதால்.. முழிக்க முடியுதில்லையாக்கும்.. அதிலும் குளிர்வேறு உதறி அடிச்சு உடம்பை முறிக்குது கர்:))..
நீக்குநலம் வாழ்க...
பதிலளிநீக்குவாழ்க நலம்!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க... வாங்க...
நீக்குகதை நல்லா போகுதே..இன்னும் முடிக்கவில்லை. கடமைகள்..வரேன் விளக்கமாகக் கருத்து போட...
பதிலளிநீக்குகீதா
//கதை நல்லா போகுதே..//
நீக்குகத்தரிக்காய் காய்ச்சுடுச்சே....
ஆ!! நான் இன்னும் வாசிச்சு முடிக்கவில்லைனு சொன்னேன்...கத்தரிக்காய் காய்ச்சுருச்சா,,,நல்லா காச்சுருக்கான்னு பார்க்கிறேன்..
நீக்குகீதா
ஹா... ஹா... ஹா...!
நீக்கு// சில பேர் மாறவே மாட்டாங்கம்மா..///
பதிலளிநீக்குநிறைய பேரைக் கண்டிருக்கிறேன்...
எங்கள் உறவிலேயே இருந்தார்கள்..
அப்படியொரு வைராக்கியம்...
ஆமாம்... எல்லா அனுபவங்களுக்கும் நிறையபேர் நினைவில் நிழலாடுவார்கள்!
நீக்குஅனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், காலை/மாலை வணக்கம், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா... நல்வரவும், நன்றிகளும்.
நீக்குவிசாலியை அப்படிக் கேட்டது அவருடைய நேர்மையைச் சந்தேகிக்கிறாப்போல் இல்லையோ? அதுக்கப்புறமும் பெயருக்குத் தான் வாழ முடியும். விசாலி செய்தது சரி தான். ஆனால் கடமைகளில் எதையும் குறைக்கவில்லை. இந்த மனுஷன் முழுக்க முழுக்க தன்னலமாக இருந்துவிட்டுப் பின்னர் விசாலி பேசணும்னா எப்படி? அவருக்குப் பிள்ளை, பெண், மருமகள், பேத்தி ஆகியோர் மீதும் தனிப்பட்ட பாசம் இல்லை. அவருடைய ஈகோ விசாலி சாதாரணமாகப் பேசணும்னு எதிர்பார்த்திருக்கிறதே தவிர உண்மையில் அவர் விசாலிக்காக உருகவெல்லாம் இல்லை.
பதிலளிநீக்குஎன்றும் சொல்லலாம் கீதா அக்கா...
நீக்குப்ரிஞ்சி இலைப்பயன்பாடும் ஸ்ரீதர், வாணி ஆகியோரின் சிரிப்புத் துணுக்குகளும் அருமை. ஏகாந்தன் சாரின் பதிவுகள் 2,3 படிக்காமல் காத்திருக்கிறது. கொஞ்சம் கனமான விஷயமாக எழுதுவார் என்பதால் நேரம் கிடைக்கும்போது போய்ப் படிக்கணும்னு வைச்சிருக்கேன்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா... நேற்று அவர் வெளியிட்டிருக்கும் கவிதையையும் தவறாது படிக்கவும்.
நீக்கு@ ஸ்ரீராம், @ கீதா சாம்பசிவம்: வியாழக்கிழமையும் அதுவுமா என் கதை ஓடுகிறதே இங்கே. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி..
நீக்குமாற்றி மாற்றி இன்ஸ்பிரேஷனில் வருவதுதானே ஏகாந்தன் ஸார்.. படித்தது, பிடித்தது, தோன்றுவது, பகிர்வது.......
நீக்குஆமாம், போய்ப் பார்த்தேன், படிச்சேன், கவிதையை ரசித்தேன். கருத்தும் சொல்லிட்டேன். அதோடு திரைப்படம் "அசம்பவா" பற்றிய விமரிசனமும் படித்தேன். "அடக்கவொடுக்கமான"அதிரடி எங்கே பிறந்தாங்க என்றும் தெரிந்து கொண்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்.
நீக்குதிரைப்படம் நன்றாக இருக்கும்போல் தெரிகிறது. இங்கே கிடைக்குதானு பார்க்கணும்.
அஸம்பவா படம் நான் பார்த்ததில்லை. ஆனால் அந்தப் பொருளில் ஒன்று எழுதி வைத்திருந்தேன். தேடிப்பார்த்தேன். காணோம். ஆனால் நினைவிலிருந்து அதை மீண்டும் எழுதி வைத்திருக்கிறேன். பிறிதொரு நாளில் பகிர்கிறேன்!
நீக்குஉண்மைதான். இன்ஸ்பைர் ஆகிறோம். அனுபவத்தில் ஆழ்கிறோம். தோன்றுகிறது. போடுகிறோம்.. பகிர்கிறோம்.
நீக்குஉங்கள் ‘அஸம்பவா’வைப் பகிருங்கள்.
அசம்பவ் என்ற பெயரில் 2004-ல் வந்த ஹிந்திப்படம் ஒன்றும் இருக்கிறது- அர்ஜுன் ராம்பால், ப்ரியங்கா சோப்ரா நடித்தது. வாங்கும்போது ஜாக்ரதை!
நீக்கு//உங்கள் ‘அஸம்பவா’வைப் பகிருங்கள்.//
நீக்குஅடுத்த வாரம் பகிர்கிறேன் ஏகாந்தன் ஸார்...
நானும் என் ஆதம்பாவா பற்றி சொல்லட்டோ:))
நீக்குநாட்டார் பாடல் ஒன்று பாடமாக்கி எழுதியது எக்ஸாமுக்கு கர்:))..
ஆதம்பாவா ஆதம்பாவா
அவரைக் கண்டால்
சொல்லி விடுங்கோ
பூவரசங் கன்னி ஒன்று
பூ மலர்ந்து வாடுதென்று....
எப்பூடி/... இது ஒரு பந்திதான் நினைவில இருக்குது.
அஸம்பாவும் ஆதம்பாவும் ஒன்றா அதிராபாவாய்!!!
நீக்குசொல்லி இருக்கும் வரிகள் ரசிக்க வைக்கின்றன.
இந்த சபாபதியிஸத்தில் ஆழ்ந்த தத்துவம் இருக்கிறது போலிருக்கிறதே.
பதிலளிநீக்குநமது வேண்டுதல்களை எல்லாம் ஆண்டவன் இப்படித்தான் சந்திக்கிறானா! அவன் தான் சூது,வாது தெரியாதவனாயிற்றே, குழந்தையிலும் குழந்தையாயிற்றே...
நெனச்சது நெனச்சபடி... உள்ளது உள்ளபடி என்று வைத்துக் கொள்ளலாமா ஏகாந்தன் ஸார்?!!
நீக்குவச்சுக்கலாம், வச்சுக்கலாம். தோஷமில்லை!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கங்களுடன் நம் அனைவருக்கும் இந்நாள் இனிமை ததும்பும் நாளாகவும் இருக்கவும் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கதை அருமை. கதை மட்டும் ஒரு முறை கடகடவென வாசித்து விட்டேன். கதை முடிவு காண எனக்கும் அவ்வளவு ஆவல். ஒரு சோகந்தான் வைராக்கியத்தின் இறுதிப் புள்ளி என்பதை உணர வைக்கிறது. மீதிக் கதம்பத்தையும் படித்த பின் மீண்டும் வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... இனிய காலை வணக்கமும், பிரார்த்தனைகளுக்கு நன்றியும். கதையை வாசித்ததற்கும் நன்றி.
நீக்குஅன்பு ஸ்ரீராம், துரை, கீதாமா, கீதா ஆர் இன்னும் வருபவர்களுக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகதையின் பெயரே பிரிஞ்சி இலையொன்னு நினைத்தேன் மா. எப்படியெல்லாம் வாழ்க்கை மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது.
முதலில் கோபிப்பானேன். பிறகு காத்திருப்பானேன். அவள் மடிந்த பிறகு
வெளியே நடந்தால் அவருக்கு எல்லாம் சரியாகிவிடுமா.
என்ன மனிதர் இவர்.
அருமையாகக் கதையை எழுதி இருக்கிறிர்கள்.ஸ்ரீராம். மிக வருத்தமாக இருக்கிறது.
பிரிஞ்சி இலைத் துணுக்கும், வாணி அவர்களின் சிரிப்புப் பகுதியும் புன்னகை தருகின்றன.
நீக்குவாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். இந்தக்கதையை நான் நீட்டியெழுத விரும்பினேன். முடியவில்லை!
நீக்குநன்றி மா.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதலைப்பு இல்லா கதை.... அட பேசாமல் போய்விட்டாரே.....
நகைச்சுவை சிறப்பு.
தொடரட்டும் பதிவுகள்.
நன்றி வெங்கட். இனிய காலை வணக்கம். உங்களிடமிருந்து பதிவே காணோமே...
நீக்குசபாபதி சூப்பர். இப்படி அல்லவோ சமத்தாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவெண்ணெய்க்கட்டி சமர்த்து!
நீக்குபிறவிக்குணம் என்று எல்லா மனிதர்களுக்கும் உண்டு.
பதிலளிநீக்குஆமாம் ஜி... நன்றி ஜி.
நீக்குஸ்ரீராம் கதை பல நினைவுகளை, சில நிகழ்வுகளை, வசனங்களைக் சுற்றி நடப்பவற்றிலிருந்து கிளப்பி விட்டுச்சு!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குரொம்பவே ஈகோயிஸ்டிக்கான கேரக்டர் சங்கரன் என்று தோன்றினாலும், அவருக்கு ஏன் அப்படியான ஒரு இறுக்கம் ஏற்பட்டிருந்தது என்றும் தோன்றுகிறது ஸ்ரீராம்.
கண்டிப்பாக அவர் விசாலியைப் பார்த்துக் கேட்ட கேள்வி மிகத் தவறுதான். அதுவும் ஒரு பெண்ணைத் தன் மனைவியைப் பார்த்துக் கேட்கக் கூடாத கேள்வி அது. அது விசாலியை மிகவும் பாதித்திருக்கும். அதனால் அவளது இறுக்கம் தவறில்லைதான். இறுக்கமாக இருந்தாலும் கடைமைகளைச் செய்கிறாள்தான். சில பெண்கள் என்றால் டைவோர்ஸ் வாங்கிக் கொண்டு போயிருப்பார்கள்.
ஏன் சங்கரனுக்கு வீட்டிலுள்ளோர் ஒருவர் மீதும் கொஞ்சம் கூட அன்பு தோன்றாமல் போயிற்று? அதற்கும் ஏதாவது காரணங்கள் இருந்திருக்கலாமோ?
ம்ம் இருந்தாலும் இருவருக்கிடையிலும் ஏதோ ஒரு திரை. மனம் விட்டுப் பேசவில்லை என்றாலும் கூட தன் மனம் எதிர்பார்ப்பதை இருவருமே சொல்லி சண்டை கூடப்ப் போட்டிருக்கலாம்....ம்ம்ம்ம்
இப்படி இருவருமே மகிழ்ச்சி இல்லாமல் ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்க. பிள்ளைகளாவது வளர்ந்ததும் கொஞ்சம் இருவருக்கிடையில் என்ன பிரச்சனை என்று ஆய்ந்திருக்கலாமோ?
பல பிள்ளைகளும் செய்வதில்லைதான்....அவரவர் வேலை அவரவர்களுக்கு...
கீதா
கீதா... கதையை அலசி துவைச்சு காயப்போட்டிருக்கீங்க... உங்களை கதை நிறையவே பாதித்திருக்கிறது போல தெரிகிறது. இதன் தொடர்ச்சி அல்லது வேறு கோணங்களிலான கதைகளை உங்களிடமிருந்தோ, துரை செல்வராஜூ ஸாரிடமிருந்தோ எதிர் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!
நீக்குசங்கரன் போன்றவர்கள் அதீத கோபத்தில் தங்களையே இழந்துவிடுபவர்டளே. கொட்டிவிட்ட வார்த்தைகளை திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்பதை உணராதவர்கள். காவம் சென்றபின் வருந்தி பயனில்லை என்பதையும் உணராதவர்கள். ஆனால் பாசம் உள்ளலர்கள். ஆகவே தான் தன் மனைவி தன்னை மன்னித்து விட மாட்டாளா என்று ஏங்குகிறார். விசாலி இல்லை என்று ஆனதும் அவருடைய வாழ்க்கையே இருண்டு விடும்... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...
பதிலளிநீக்குநன்றி ஜோஸப் ஸார்... இங்கே கதை முடிஞ்சு போச்சு... உங்கள் மனங்களில் தொடரலாம்!
நீக்குஅடடா.. இன்னும் கொஞ்சம் தீட்டியிருக்கலாம்..
நீக்குதீட்டியிருக்கலாமா? நீட்டி இருக்கலாமா? ஒருநாள் எழுதும் மூடில் மறுநாள் மனம் இல்லை. பாணி மாறிவிடும் அபாயம் ஒருபுறம். எழுதவே முடியாத நிலை மறுபுறம். எனவே சட்டென முடித்து விட்டேன் ஸார்.
நீக்குசெல்பேசியில் கருத்துரை இடும்போது எழுத்துப்பிழை நேர்ந்தால் பதிவு செய்தபின் திருத்த வழியில்லையே? அழித்துவிட்டு மீண்டும் இடவேண்டும்.அது நீட்டியிருக்க வேண்டும். நீங்கள் சரியாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்.
நீக்குமுழுக் கதையையும் எழுதி முடித்துவிட்டு பதிவு செய்தால்
பாணி மாறாது. நான் அப்படித்தான் செய்கிறேன்.
நானும் பெரும்பாலும் அப்படிதான் ஜோஸப் ஸார். இப்போது முடியவில்லை. முன்பு வெற்றி பெற்ற காதல் கதை என்று ஒரு தொடர் எழுதினேன். அதை அப்படி எழுதினேன். ஆனாலதற்கு இப்படி கஷ்டப்பட வேண்டிய தேவை இல்லை! அப்படீ... எழுதிடலாம்!
நீக்குஇரண்டு ஜோக்குகளுமே அருமை. அந்த காலத்து கேலிச்சித்திரங்களுக்கு இணையே இவ்லை.
பதிலளிநீக்குஆமாம். நன்றி ஜோஸப் ஸார்.
நீக்கு"ராகவி.. என்ன பெயரடி வச்சிருக்காங்க... யார் வச்சது?"//
பதிலளிநீக்குஓ இது மருமகளின் அம்மாவுக்கும் தோன்றியிருக்கு போல! இதுதானே சங்கரன் அன்று தன் பேத்திக்குத் தான் தேர்ந்தெடுத்த பெயரை சரவணன் வைக்கவில்லை என்று தோன்றியிருக்கு.....இப்படிச் சின்ன சின்னா விஷயங்கள் தான் கட்டிடம் போல மனதுள் கட்டப்பட்டு ஒரு நாள் எரிமலை போல் வெடிக்கிறது இல்லையென்றால் பூகம்பம் போல் இடிந்து விழுகிறது.
அதுவும் டேக் இட் ஈசி இல்லை என்றால் ரொம்பவே பிரச்சனைதான்.
தன் குழந்தையை அவனது சிறு வயதில் பெல்டால் அடித்தது அதன் பின்னான வார்த்தைகள்...
இப்படி ஒரு பெற்றோர் தன் பெண் குழந்தையை என் கண் முன்னரேயே தெருவில் இழுத்து போட்டார்கள். ரொம்பவே சில்லியான ஒரு சுக்கும் இல்லாத காரணத்திற்கு. ஆனால் இப்போது அக்குழந்தை பெரியவளாக வளார்ந்து கல்லூரி என்று வந்தாயிற்று. பெற்றோரிடம் இருந்து விலகி இருபது போலும் தெரியலை...
ஆனால் சங்கரன் அப்படி அடித்திருந்தாலும் அதன் பின்னர் சரவணனோடு அன்பாக இருந்திருந்தால் அந்த வலி கூடத் தெரிந்திருக்காதா இருகுக்கும்..
விசாலி மன இறுக்கம் இருந்தாலும், தன் மனதை ஓப்பனாக மகன், மகளை அவர்கள் வளர்ந்து திருமண வயதை நெருங்கிய சமயமேனும் அவர்களை வைத்துக் கொண்டு அப்பா இப்படி இருப்பதில் எனக்கு மனசு வலிக்குது....என்று பேசியிருக்கலாமோ? அட்லீஸ்ட் அவள் மன இறுக்கம் குறைந்திருக்குமோ...
அந்த மன இறுக்கம் தான் அவளைக் கடைசியில் கொண்டு சென்று விட்டது டக்கென...
முடிவு பிடித்திருந்தது ஸ்ரீராம். வாசகர்களின் யூகங்களுக்கு விட்டது.
கடைசி வரை விசாலி தனக்கு மன்னிப்பு கொடுக்க அவசாகம் தரவில்லை என்ற ஈகோ அவரை அப்படி ந்டக்க வைத்திருக்கலாம். அதாவது அவர் எதிர்பார்க்காமல் நடந்த விசாலியின் முடிவு அவரால் அதை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லை...
ஸ்ரீராம் உங்களுக்கு ஒன்று நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதீத ஈகோ உள்ளவர்கள் மனதளவில் ரொம்ப வீக்காக இருப்பார்கள் அதை மறைக்க அந்த ஈகோவைத் தங்கள் கேடயமாகப் (அதாவது அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டு!!!!!!) பயன்படுத்திக் கொண்டு இருப்பாங்க...குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாத கேஸாக...
அவர் ஒரு வேளை அப்படியே போய்விடுவாரோ இனி அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் என்றும் தோன்றியது...இப்பவும் அவரது ஈகோ....
இப்படிப் சில யூகங்கள் முடிவில் தோன்றுகிறது...
விசாலி சங்கரன் இடையில் நிறைய விஷயங்கள் பேசுவதற்கு உள்ளது அதாவது நாம் வாசகர்கள், கதையை எழுதிய நீங்களும் தான்...
கீதா
ஜீவி ஸாரை கண்டுக்கலை நீங்க! கவனிக்கவில்லையோ!!
நீக்குபார்க்கிறேன் ஸ்ரீராம் ...இப்படித்தான் பல கருத்துகள் கண்ணில் படாமல் போய்விடுகிறது...நான் மாலையில் அப்புற்ம் இங்கு வரலியே....ஜீவி அண்ணாவும் கதையை அலசக் கூடியவர்.
நீக்குஇதோ பார்க்கிறேன் ஸ்ரீராம்
கீதா
எனக்குத் தெரிந்து விசாலி போல வைராக்கியமாகக் கடைசிவரை இருப்பவர்களும் உண்டு. இல்லை பிரிந்து போகும் பெண்களும் உண்டு. இல்லை வைராக்கியம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு வைத்துக் கொண்டு மீண்டும் சகஜமாக இருக்கும் பெண்களையும் பார்க்கிறேன் ஸ்ரீராம். சங்கரன் அளவு இறுக்கமாக இல்லைதான் நான் பார்த்த குடும்பங்களில்...ஆனால் இது போன்ற வார்த்தைகள் எல்லாம் அதான் சங்கரன் விடும் வார்த்தைகள் அதையும் விட அதிகமான அசிங்கமான வார்த்தைகளை அதுவும் அடிக்கடி விடும் ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த சமயம் பிறகு அந்த கணவன் மார்கள் கொஞ்சம் இயல்பாகவும் இருப்பதால் பெண்களும் என்னதான் அவமானப்பட்டாலும் கொஞ்சம் டேக் ஈசியாக தங்கள் மனதை டைவேர்ட் செய்து கொண்டு சகஜமாகப் போய்விடுகிறார்கள்.
பதிலளிநீக்குசங்கரனின் இறுக்கத்திற்குக் கண்டிப்பாக ஏதோ ஒன்று அவர் மனதுள் ஆழமாகப் பதிந்த ஒன்று இருப்பது போல் இருக்கிறது.
அவரும் கூட தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு உங்க அம்மா செய்யறது மனசுக்கு கஷ்டமாக இருக்கு என்றோ அல்லது நான் இதை எல்லாம் எதிர்பார்க்கிறேன் என்றோ சொல்லியிருக்கலாம்...ஆனால் இந்தப் பாழாய்ப் போன ஈகோ...அப்புறம் இந்த ப்ரிஜுடிஸ் prejudice இதுவும் ரொம்பவே மனித உறவுகளைப் படுத்தும் ஒரு விஷயம்...
இதுதான் பலரையும் மனித உறவுகளில் இருந்து பிரிக்கிறது.
கத்தரி காய்ச்சு கீழ விழுந்தப்புறம் இதைப் பத்திப் பேச முடியாதுதான்!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா
ஸ்ரீராம் உங்கள் கதை நீங்கள் சொன்ன விதம் அருமை.
அதோடு கூட உளவியல் ரீதியாக ஆராயவும் நிறைய யோகிக்கவும் வைக்கும் கதை..
இன்னும் சொல்லலாம்....ம்ம்ம்
கீதா
//ஸ்ரீராம் உங்கள் கதை நீங்கள் சொன்ன விதம் அருமை.//
நீக்குநன்றி கீதா. இன்னும் மெதுவாக நீட்டி எழுத வேண்டிய கதை இது. முடித்து விட்டேன்!
//இன்னும் சொல்லலாம்....ம்ம்ம்//
சொல்லுங்களேன்... காத்திருக்கிறேன்...
"நான்னு இல்லடி... எல்லோருமே சுயநலம்தான்... நீ எந்தெந்த வகைல சுயநலம்னு எனக்குத் தெரியாதா?"//
பதிலளிநீக்குஇதுவும் யோசிக்க வைத்தது...
சங்கரன் வீசும் வார்த்தைகள் அத்தனையும் விசாலியை அனாவசியமாகத் திட்டும் - அவளது நியாயமான கேள்விக்கும் - வேண்டாத வார்த்தைகள் உட்பட.....யதார்த்தம்...ஸ்ரீராம்...
கீதா
"என் பணம்... நான் சம்பாதிக்கறேன்... உன்னை ஏண்டி கேட்கணும்?"
நீக்குவரும்போது காற்கறி வாங்கிட்டு வந்தா நாளை சமையலுக்காகும்.... பையனும் பொண்ணும் ஸ்கூலுக்கு எடுத்துக் போக சமைக்க வசதியாய் இருக்கும்...
"நீ என்னடி பண்றே வீட்டில்... தண்டச்சோறு... நீ சாப்பிடறியே சோறு... அது என் சம்பாத்தியத்தில் வர்றதுடி... ஓசியில சாப்பிடறே... கொஞ்சம் வேலை செய்... தேஞ்சு போயிட மாட்டே"//
முந்தைய கருத்தில் அந்த யதார்த்தமுக்கு கோட் செஞ்சது விட்டுப் போச்சு!!..
கீதா
எழுதப்பட்ட கதையோ, அல்லது அதில் இருக்கும் வரிகளோ எங்காவது ஒரு இடத்திலாவது ஒரு வாசகனையாவது கவர்ந்ததால் அது படைப்பாளனுக்கு சந்தோஷம்!
நீக்குபிரிஞ்சி இலை உபயோகங்கள் இப்படி எல்லாம் இருக்கிறதா என்ன? ஆச்சர்யம்தான். சில விருப்பங்களை நிறைவேற்றுமாமே...! //
பதிலளிநீக்குஅட! இப்படி எல்லாம் உண்டானு யோசிக்க வைக்குது...ஆச்சரியமாகவும் இருக்கு.
கீதா
ஆமாம். ஆனால் செல்வம் பட சிவாஜி போல பாடத் தோன்றுகிறது... (ஒரு வரி மட்டும்)
நீக்குமனிதர்களில் பலருக்கு கோபத்தை எப்படி கையாளுவது என்று தெரியாது. அதுவும் கொடும் சொற்களால் மனைவியை வாட்டாத கணவன்மார்கள் உண்டா? ஸ்ரீராமன் உட்பட(நான் சொல்வது ராமாயண ஸ்ரீராமன்). கீதா அக்கா ஒப்புகொள்ளாவிடிலும் கம்பனும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் மறந்து, மன்னிப்பதில்தான் வாழ்வதின் சிறப்பு இருக்கிறது. அப்படி செய்திருந்தால் விசாலியின் பாத்திரம் இன்னும் உயர்ந்திருக்குமோ?
பதிலளிநீக்குஆனால் எதையும் உபதேசம் செய்யாமல் நடந்தது, நடந்தபடி எழுதியிருக்கும் உங்கள் நடை(அப்படி எழுதுவது ரொம்ப கஷ்டம்) மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!
நன்றி பானு அக்கா... உங்கள் பாராட்டு சந்தோஷமாக இருக்கிறது.
நீக்குhttps://sivamgss.blogspot.com/2017/08/blog-post_95.html
நீக்குhttp://sivamgss.blogspot.com/2008/07/72_12.html
//http://sivamgss.blogspot.com/2008/07/72.html// "ஜனகனின் புத்திரியே!, உன்னை நான் மீட்டது என் கெளரவத்தை நிலைநாட்டவே. இந்த யுத்தம் உன்னைக் கருதி மேற்கொள்ளப் பட்டது அல்ல. என்னுடைய தவங்களினால் தூய்மை பெற்றிருந்த நான் அவற்றின் வலிமை கொண்டும், என் வீரத்தின் வலிமை கொண்டும், இக்ஷ்வாகு குலத்திற்கு நேரிட்ட இழுக்கைக் களைவதற்காகவும், என் வரலாற்றை இழுக்கில்லாமல் நிலைநாட்டவுமே,அவதூறுகளைத் தவிர்க்கவுமே உன்னை மீட்கும் காரணத்தால் இந்தப் போரை மேற்கொண்டேன். இனி நீ எங்கு செல்லவேண்டுமோ அங்கே செல்வாய்! உன் மனம்போல் நீ செல்லலாம். இதோ என் இளவல் லட்சுமணன் இருக்கின்றான், அல்லது பரதனுடனோ நீ யாரோடு வேண்டுமானாலும் வாழலாம்!"//
இவை நான் ராமாயணம் எழுதிய போது வால்மீகியில் இருந்து எடுத்துக்காட்டிய வார்த்தைகள். ஸ்ரீராமன் தன் மனைவியை வார்த்தையால் வாட்டியதாகத் தான் நான் சொல்லி இருக்கேன். இதை எங்கேயும் எப்போவும் மறுத்ததில்லை. என்னோட ஒரே கருத்து சீதை அக்னிப்ரவேசத்தில் புகுந்தது தானாகத் தான் என்பதே! ராமன் செய்யச் சொல்லவில்லை. அக்னியில் புகுந்து நீ நிரூபித்துக்காட்டு என ராமன் எங்கேயும் சொல்லவே இல்லை.
நீக்குஹையோ ஸ்ரீராம் இந்த ஞாபக மறதி....இருக்கே...ஹைஃபைவ்!!! மீக்கும்...அதை என்னத்த சொல்ல....
பதிலளிநீக்குஆனால் மறதி என்பது கவனக் குறைவு அதாவது கான்சென்ற்றேஷன் குறைவுதான். ஜி எம் பி சார் போட்டிருந்தாரே ஒரு பதிவு எண்ணங்கள்னு அதாவது மூளைக்குள் வந்து கொன்டே இருக்கும் எண்ணங்கள்..
அப்ப்டித்தான் ஒரு எண்ணம் வரும் அடுத்து வேறு எதையோ பார்க்கும் போது எண்ணம் அங்கு போயிடும் இப்படி ஒரு நாளைக்கு நம் மூளையில் அது ஏதோ ஒரு கணக்கு உண்டே!!!! ஹான் 50000 எண்ணங்களுக்கும் மெலாக நம் மனதில் வந்து போகுமாம்...சிதறல்கள்...
இப்படித்தான் எண்ணச் சிதறல்களினால். கான்செற்றேஷன், ஃபோக்கஸ்டாக இல்லாததால் நாம் செய்ய நினைப்பது மறந்து விடுகிறது என்று இந்த மூளையைப் பற்றி வாசித்தது இப்ப மூளை நினைவுபடுத்தியது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜோக் ரசித்தேன் பின்ன அது என்னை பிரதிபலித்ததே!!!!!! ஹிஹிஹிஹி
கீதா
ஞாபக மறதி... அதில் நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்கீதா... என்னை யாராலும் அடிச்சுக்க முடியாது!
நீக்கு//..ஞாபகமறதி..என்னை யாராலும் அடிச்சுக்க முடியாது!//
நீக்குயாரும் ஒன்னும் சொல்லவில்லை என்பதற்காக நீங்களே உங்களுக்கு மெடல் கொடுத்துக்கொள்ளக்கூடாது!
ஹா... ஹா... ஹா... மறதிக்கும் போட்டியா?!
நீக்குஏகாந்தன் அண்ணா எனக்கும் ஸ்ரீராமுக்கும் சேர்த்து முதல் பரிசு மெடல் நீங்க யாரும் கொடுக்காட்டியும் நாங்களே எடுத்துக்கறோம்!!!!! ஹிஹிஹிஹி
நீக்குகீதா
ஏகாந்தன் அண்ணாவின் பதிவும் பார்த்தேன் உங்க கமென்டும் அங்கு பார்த்தேனே!!!
பதிலளிநீக்குஉங்கள் கவிதை அருமை யதார்த்த வரிகள் ஸ்ரீராம் ரொம்பப் பிடித்தது..
ஹூம் ஆனா நீங்க இதை சங்கரனுக்குச் சொல்லிக் கொடுக்காம போயிட்டீங்களே!!!!!! கொஞ்சம் விசாலிக்கும்!!! ஹா ஹா ஹா ஹா இக்கதைக்கு ரொம்பப் பொருத்தமான வரிகள். இதையும் நுழைத்திருக்கலாம் நீங்க கதைல!!
கீதா
நான் சொல்லிக்கொடுக்கும் நிலையில் அடஙக சங்கரன் இல்லையே...! ஹா.. ஹா.. ஹா....
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க... வாங்க...
நீக்குபெரும்பான்மையோர் உங்கள் கவிதை வரிகளைப் போலத்தான் வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரியாமல் தொலைத்துக் கொள்கின்றனர்..அதாவது அதற்கான வாய்ப்பு கிடைத்தும் கூட...!!
பதிலளிநீக்குவாழ்க்கை ஷார்ட்டுப்பா....இருக்கற கிடைச்சிருக்கற வாழ்க்கைய புரிஞ்சுக்கிட்டு ஓவரா நோண்டி ஆராயாம அனுபவிக்கோணும் என்று ஹா ஹா ஹா ஹா....சொன்னா யாரு கேக்கறாங்க!!!!!!!!!!!
மீண்டும் மீண்டும் ஸ்ரீராம் நீங்க எழுதின கதை தான் நினைவுக்கு வருது இந்த வரிகளை வாசிக்கும் போது அத்தனை பொருத்தம்...
நீங்க ரொம்ப நல்லா யோசிக்கறீங்க ஸ்ரீராம்!!! சான்ஸே இல்லை...பாராட்டுகள்!!!!
கீதா
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்று பட்டிக்காடா பட்டணமா சிவாஜி போல பாடிடவா?!!!
நீக்குசபாபதியிஸம்// ஹா ஹா ஹா ஹா ஹா செம....வார்த்தை விளையாடல்!!!
பதிலளிநீக்குரசித்தேன் ஸ்ரீராம்
கீதா
நன்றி கீதா.
நீக்குவெஜிடபிள் பிரியாணி செய்யலாம் என்று கடைக்குச் சென்று பிரிஞ்சி இலையைக் கேட்டால் எல்லாம் தீர்ந்து விட்டது "யாரோ எதுனா வாட்சாப்ப்புல எழுதியிருப்பாங்க" என்கிறார் கடைக்காரர். என்ன செய்யலாம் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குவாட்ஸப்பிலும் ‘பிரிஞ்சி’ மேயறாங்களா!
நீக்கு//வாட்ஸப்பிலும் ‘பிரிஞ்சி’ மேயறாங்களா!// ஸ்ரீராமை கலாய்க்க நான் செய்த கற்பனை இது ;))
நீக்குஹா... ஹா... ஹா... நாம் சொன்னாலும் நம்புவதற்கு நாலுபேர் இருப்பாங்க போல... நன்றி பானு அக்கா!
நீக்குவிசாலி இப்படி இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குஅது போலவே அவர் முன்னால் கதையை சொல்லி விட்டீர்கள்.
அந்த வார்த்தையை தாங்கி கொள்ள முடியாதுதான்.
ஒய்வு பெற்றபின் நிறைய யோசித்துப் பார்க்க நேரம் கிடைத்து இருக்கிறது. குடுமபத்தினர் தன்னிடம் நடந்து கொள்ளும் முறை எதனால் என்று தெரிந்து இருக்கிறது. இனி நினைத்துப் பார்த்து என்ன செய்ய சென்ற காலங்கள் வருமா ? போனது போனது தான்.
//மனதுக்குள் மறுபடி பாலமுரளி பாடினார். ஒருமுறை, ஒருமுறை மட்டும் விசாலி இவர் முகம் பார்த்து மலர பேசி விட்டால் போதும். நடிப்புக்காவது பேசிவிட்டால் போதும், அந்த கணமே, எங்காவது கண்காணாமல் கிளம்பிச் சென்று விடலாம் என்று நினைப்பார். //
அவர் நினைப்பை பொய்யாக்கி பேசாமலே கண்ணை மூடி விட்டாரே விசாலம்!
//விசாலி ஒருமுறை பேசவேண்டும். தனது தவறு நேர்செய்யப்படவேண்டும். //
தன் தவறை நேர் செய்ய நினைக்கிறார்.
அதற்காகதான் வீட்டில் இருந்து இருக்கிறார் போல கிள்மபி விட்டாரே!
உறவுகளை பேணி பாதுகாப்பது, அன்பு, பாசம், நேசம், காதல் இவை ஏதும் இல்லாத போது கடமைக்கு வாழ்ந்து மறைந்து விட்டார் விசாலி.
கதை மனதை கனக்க வைத்து விட்டது.
நன்றி கோமதி அக்கா.. கதையைப் படித்து, பிரித்து மேய்ந்திருப்பதற்கு நன்றி!
நீக்குப்ரிஞ்சி இலை ஜோதிடம் நல்லா இருக்கே!
பதிலளிநீக்குஞாபகமறதி ஜோக் நன்றாக இருக்கிறது.
வாழ்க்கை புரிதல் கவிதை நன்றாக இருக்கிறது.
சபாபதியிஸம் ரசித்தேன்.
சாபதியை காப்பி அடித்து சுப்பாண்டி பாத்திரம் பூந்தளிரில் வந்தது.
அனைத்தும் அருமை ஸ்ரீராம்.
ஒவ்வொன்றாக ரசித்திருப்பதற்கும் நன்றி கோமதி அக்கா...
நீக்கு"சங்கரன் வெளியே நடக்கத் தொடங்கினார்" மனம் குமுறியதோ?
பதிலளிநீக்குஜோக் இரண்டும் செம ஹா...ஹா.
நன்றி சகோதரி மாதேவி. என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை நீங்கள்!
நீக்குகதையின் நடுப்பகுதியைப் படித்திருந்தேன். முதல் பகுதியைப் படித்தேனா? எதற்கும் திருப்பியும் ஆரம்பத்திலிருந்து படித்துவிட்டு வந்து எழுதுகிறேன். அடுத்தவாரம் முடியலாம் என எதிர்பார்த்தேன்..
பதிலளிநீக்குஇந்த வாரமே முடித்துவிட்டேன் ஏகாந்தன் ஸார்... முழுசும் படிசீங்களா?
நீக்குஆஆஆஆஆஆஆ கதை விறுவிறுப்பாகிறதே. முதல் பகுதியில் இந்த தாத்தாவும் பாட்டியும் பேசாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை நேக்கு:).. ரெண்டாவதில் கொஞ்சம் புரிஞ்சது.. இப்போ முளுவதும் பிரிஞ்சு போச்சூஊஊஊஉ:)) ஹா ஹா ஹா கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்ர் ரத்தம் சூடாக இருக்கும்போது என்னவெல்லாமோ பண்ணச் சொல்லும், ஆனா இப்போ சூடு குறைஞ்சதும் அன்பு அணைப்பு தேவைப்படுதோ? ஹா ஹா ஹா இதுகும் என்னிடம் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கு ஆனா இப்போ நேரம் போதுமோ தெரியல்லியே.. எனக்கு ரைமாகுது யோகா கிளாஸ்ஸ்க்கு ஓடோணும்.. அதிரா முக்கால் ஞானி எல்லோ இப்போ:)).
பதிலளிநீக்குஇன்று கண்ணதாசன் நினைவு நாள் தெரியுமோ அதிரா? உங்களை அறியாமலேயே அவர் பெயரை இழுத்து விட்டீர்களோ!
நீக்குஇல்லை ஸ்ரீராம் தெரியாது, நீங்க சொல்லித்தான் தெரியும்.. ஆனா போனவருடம் ஒரு வெள்ளிக்கிழமை அவரின் நினைவு நாள் வந்துதா/ அல்லது பி நாள்.. அப்பவும் நீங்கதான் சொன்னீங்க, உடனே நான் ஜண்டைப்பிடிச்சேன்:)) அப்போ ஏன் கண்ணதாசன் அங்கிளுக்கு பாட்டுப் போட்டிருக்கலாமே .. அடுத்தமுறையாவது போடுங்கோ என:).. ஆனா இன்றுவரை நீங்க அதுக்காக போடவில்லையாக்கும்:))..
நீக்குஇதை நான் மறந்திடக்கூடாது என்றே டெய்ய்ய்ய்ய்ய்ய்லி ரெண்டுதரம் அல்லாரை ஊஸ் குடிச்சுக் கொண்டிருக்கிறேனாக்கும்:)) சரி சரி நீங்க இதை மறந்திடுங்கோ:)) ஹா ஹா ஹா.
இந்த உங்கள் பதிலை நான் படிக்கவில்லை அதிரா... நம்புங்க ப்ளீஸ்....
நீக்கு// தான் வேலை பார்த்த நாளில் இப்படி ஏதாவது வீட்டுக்கு வாங்கி வந்திருக்கிறோமோ என்று யோசித்தபடியே அதைப் பிரித்துச் சாப்பிட்டார் சங்கரன்.
பதிலளிநீக்கு//
உண்மைதான் முன்னாளில் தாம் எதுவும் செய்திருக்க மாட்டினம், ஆனா வயசானதும் தமக்கு அதை எல்லாம் எல்லோரும் செய்யோணும் என எதிர்பார்ப்பது என்ன விதமான எதிர்பார்ப்பு?:)).. இக்கதைப்பகுதியில் இண்டைக்கு யூப்பர் ஜண்டைக் காட்சிகள் கண்ணில விரியுது அடிஅடி எண்டு அடிக்கலாம் போல இருக்கே வைரவா...
சில சமயங்களில் நம்மிடம் பிறர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படி நாம் பிறரிடம்நடந்து கொள்வதில்லை. சரியா?
நீக்கு//சில சமயங்களில்//- அப்படியா ஶ்ராம்? அனேகமா எல்லாச் சமயங்களிலும் என்று தோன்றுகிறது. பயணத்தில். மூன்றுவாரம் படித்துத்தான் எழுத முடியும். இன்றைய பின்னூட்டங்கள் கதையை முழுவதும் படிக்கத் தூண்டுகிறது.
நீக்குஇன்னும் கதை படிக்கலை. பின்னூட்டங்கள் மட்டுமே நிறைய யோசிக்க வைக்குது. பாடுமதி வெங்கடேச்வரன், கீதா ரங்கன் பின்னூட்டங்கள்.
நீக்குநான் நாளைக்குத்தான் எழுதமுடியும்னு தோணுது. அது பாலையில் பூத்த ரோஜாவா இருந்திடுமோ?
'சில சமயங்களில்' என்று சொல்லி இருப்பதில் ஏதும் கருத்த்துப்பிழை இருக்கிறதா நெல்லை? உங்களை இன்னும் காணோமேன்னு நினைத்துக் கொண்டிருந்தேன். பயணத்தில் இருக்கிறீர்களா?
நீக்குபாலையில் பூத்த ரோஜா... ஓ...
நீக்குபரவாயில்லை எழுதுங்கள்.
ஆதாம் ஶ்ரீராம். பெரும்பாலும் நாம எல்லோருமே பிறரிடம் நாம எதிர்பார்ப்பதைப் போல நாம நடந்துகொள்ள தவறிடறோம். விதிவிலக்குகள் நிறைய இருக்கலாம்.
நீக்கு//சில சமயங்களில் நம்மிடம் பிறர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படி நாம் பிறரிடம்நடந்து கொள்வதில்லை. சரியா?//
நீக்குதன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே..
அந்த தன்மை வர அதிராவைப்போல் கருணை வேண்டுமே:))).. சரி சரி ஒரு ஃபுளோல வந்திட்ட்டுது விட்டிடுங்கோ:)).. என் செக் இங்கில்லை எனும் தஎகிறியத்தில கண்டபடி எழுத வருதே நேக்கு:)) ஹா ஹா ஹா
இந்த விஷயத்தில் நான் விதிவிலக்கில் இருக்க ரொம்ப ஆசைப்படுவேன் நெல்லை. இருக்கிறேனா என்பதை என்னுடன் பழகியவர்கள்தான் சொல்லவேண்டும்.
நீக்குஹா... ஹா... ஹா... ரொம்பப்பிடித்த பாடல் அதிரா!
நீக்கு///"நீ என்னடி பண்றே வீட்டில்... தண்டச்சோறு... நீ சாப்பிடறியே சோறு... அது என் சம்பாத்தியத்தில் வர்றதுடி... ஓசியில சாப்பிடறே... கொஞ்சம் வேலை செய்... தேஞ்சு போயிட மாட்டே"//
பதிலளிநீக்குபாருங்கோ பாருங்கோ பிளட்டூஊஊஊஊஊ ஹொட் டா இருக்கெண்டு அர்த்தமாம்:)) ஹா ஹா ஹா.. இந்தக்காலம் எனில் இதை எல்லாம் வீடியோ எடுத்து வச்சிடோணும்.. வயசான காலத்தில டெய்லி ஓம் மந்திரம் போல ஓட விடோணும் வீட்டில ஹா ஹா ஹா..
சட்டென யோசிக்காமல் பேசிவிட்டார் போல... சங்கரனுக்கு கெட்ட நேரம்!
நீக்குஒருத்தர் ஆத்திரத்தில் க்க்கிய விஷத்தை காணொளியா எடுத்துவச்சி காலம் பூரா பழி வாங்கணுமோ?
நீக்குஐயோ... இப்படி கெட்ட எண்ணமா? ஹா ஹா
//ஒருத்தர் ஆத்திரத்தில் க்க்கிய விஷத்தை காணொளியா எடுத்துவச்சி காலம் பூரா பழி வாங்கணுமோ?//
நீக்கும்ஹூம்ம்ம் ஆத்திரத்தில என்ன வேணுமெண்டாலும் பேசலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பிறகு அதை மறந்திடு.. அது கோபத்தில பேசிட்டேன் என உடனே சொன்னால் பறவாயில்லை:)).. நல்லா ஓடி ஆடிப்போட்டு இப்போ உடல் தளரும் நேரம் சொன்னால் விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...
இந்த விஷயத்தில் நானும் பூனை கட்சி :) வாயிருக்குன்னு பேசினா இப்படி என்ன இதுக்கும் மேலே செஞ்சாலும் தப்பில்ல :)
நீக்குI am with both of you. Frgiving does not come easy. and why should she anyway.
நீக்குநேரடியாக இல்லைனாலும் ஸ்ரீராமனின் இத்தகைய சுடுசொல் தான் சீதையைத் தீக்குளிக்கவும், பின்னாட்களில் பூமியில் மறையவும் வைத்தது. இத்தனைக்கும் மனமொத்த தம்பதியராகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவனின் நிர்ப்பந்தங்கள் புரிந்த மனைவியாகத் தான் சீதையும் இருந்திருக்கிறாள். ஆனாலும் பிரிவு வரவில்லையா? இங்கே பிரியாமல் குழந்தைகளுக்காக வேண்டியும் சமூகத்தின் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளவும் விசாலி ஓர் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போய்விட்டாள்.
நீக்குஇங்கே சங்கரன் தான்பணி ஓய்வு பெற்றபின்னராவது தன் அகங்காரத்தை மறந்துவிட்டு மனைவியிடம் தனிமையில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். தவறு செய்தது அவர். பாதிக்கப்பட்டது விசாலி. இந்த லக்ஷணத்தில் விசாலி அவருக்கு மன்னிக்கும் சந்தர்ப்பம் கொடுக்கலைனு இன்னும் அவள் மேல் குற்றம். அதான் வாழ்க்கை பூராக் கொடுத்திருந்தாளே! மகன், மருமகள், பேத்தி எல்லோரும் சென்றபின்னர் இருவரும் தனியாக இருந்த சமயங்களை இந்த சங்கரன் என்ன செய்தார்? வீணாகத் தானே கழித்தார்? இந்த அழகில் இசையை ரசிக்கிறாராம்.
கோபம் என்பது பிறவிக் குணம். அவங்களை மன்னிக்கும்போது மன்னிப்பவர் தெய்வத் தன்மை பெறுகிறார். மன்னிக்காதவர் மனித நிலையிலேயே இருக்கிறார்.
நீக்குவயிற்றில் எட்டி உதைத்ததைப் பொறுத்துக்கொண்ட தாய், பையன் நெஞ்சில் உதைத்தாலும் சுடு சொல் சொன்னாலும் தானே அதை வாலன்டியராக மன்னித்து மறக்கிறாள்.
கணவனுடம் அத்தகைய ரத்தத் தொடர்பு இல்லை என்பதால் மன்னிக்கும் மனம் வருவதில்லையோ?
உங்க கோணத்திலே கோபம் என்பது ஆண்களின் பிறவிக்குணம் என்னும் பொருள் வருகிறது நெல்லைத்தமிழரே. அத்தகைய சுடுசொல்லைக் கேட்கும் பெண்ணுக்கும் கோபம் வரும் என்பதை மறந்து விடுகிறீர்கள். இதை விட சங்கரன் மகனை ஏன் சரியாக வளர்க்கவில்லை எனக் கேட்டு மனைவியை அடித்திருந்தால்/திட்டி இருந்தால் அவளும் மன்னித்துவிட்டுப் பேசி இருப்பாள். ஆனால்? இங்கே சந்தேகம் வருவது விசாலியின் Integrity மேல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நுட்பமான இடம் இருக்கிறது. அந்த இடத்தை நாம் தாக்கினால் அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. பெண்களுக்கு அது Integrity.
நீக்குவிசாலி இத்தனை நாட்கள் தன்னோடு பேசவில்லை என்று வருந்துகிறார் எனில், அது உண்மையாகவும் இருந்தால் சங்கரனே விசாலியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கவேண்டும். அப்போது அவரும் தெய்வம் ஆகி இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களே மன்னித்துத் தெய்வம் ஆகணும்னு என்ன கட்டாயம்? அதுவும் கணவன், மனைவி உறவிலேயே சந்தேகப்படும் கணவனிடம்!
நீக்குமன்னிப்பதும் தவறேயில்லை ஆனால் தவறு செய்தவர் மனத்தால் உணர்ந்து கேட்டால்தான் அந்த மன்னிப்புக்கும் ஒரு மரியாதை உண்டு .அதோட இவர் ஈகோயிஸ்ட் .அவர் கோபத்தில் கையை நீட்டி ஒரு அரை விட்டிருந்தா கூட விசாலி பொறுத்திருந்திருப்பார் .
நீக்குநற்குணங்களை பிறவிக்குணங்களாக கொண்டாடுவதில் தவறில்லை .துஷ்ட குணங்கள் களை போன்றவை அவற்றை ஆரம்பத்திலேயே வெட்டிடனும் .அதோட இந்த பிறவிக்குணம் அவர் மகனுக்கும் ஜீன்ஸ் வழியே வந்திருந்தா ??
நீக்குஇங்கே உண்மை சம்பவம் ஒரு ஆந்திர பெண் பெற்றோர் பார்த்து மணமுடித்தது கணவன் கொஞ்சம் ஊதாரி முன் கோபி தான சொல்வதை கேட்கவேண்டுமென்ற குணமுள்ளவன் .பெண் வீட்டார் அவசரப்பட்டுவிட்டனர் .ஆனால இருவரிலும் தவறு இருக்கு .பெண்ணின் தவறு அவசரப்பட்டு இவனை திருமணம் செய்தது .பெண்ணுக்கு குழந்தை பிறந்தது ஆனாலும் கணவனுடன் ஒப்புரவாகவில்லை பாஸ்போர்ட் குழந்தைக்கு பெர்த் சர்டிபிகேட் செய்யும்போது இந்த சோ கால்ட் பிறவி கோபக்கார கணவன் என்ன செய்தான் தெரியுமா //இவளுக்கு நிறைய நட்புக்கள் இருக்கு இது எனது குழந்தை இல்லை ..//அந்த பெண் தீயாய் எரிந்துபோனா மனதளவில் உடனே டி என் ஏ டெஸ்ட் எடுத்து ப்ரூவும் செய்து காட்டினா இந்த பிறவி கோபக்காரனை ..இப்படிப்பட்ட கோபக்காரங்களை மன்னிப்பது விஷத்தை குடிப்பதற்கு சமம் .அதோடு டைவர்ஸ் அப்பளை செஞ்சுட்டா
கீசா மேடம்... பயணத்தில் இந்தப் பகுதி படித்தேன். முந்தைய இரண்டு நினைவில்லை. நாளைக்கு பின்னூட்டம் போட்டால் ஆறின கஞ்சி ஆகிடும்.
நீக்குஆனால் உங்க மறுமொழில அர்த்தம் இருக்கு.
மன்னிக்கும் குணம் பெண்கள்டதான் அதிகம், அவங்கள்டதான் அந்தத் தெய்வத் தன்மை அதிகம். இந்த மாதிரி விஷயங்களில் பெண் ஆணை விட பலமடங்கு உயர்ந்தவள்.
நாளைக்கு எழுதறேன். கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்
இந்த கண்ணியில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. பொதுவாக வல்லிம்மா சொல்வது போல மன்னிப்ப்பது தேவகுணம். அதற்கும் ஒருமனம் வேண்டும்! ஒரு பக்குவம் வேண்டும்!
நீக்குஆனால் நாவினாற் சுட்டவடுவை மன்னிக்கலாம். மறக்க முடியாது.
சங்கரன் விசாலியிடம் பேசத்தயங்கியிருக்கலாம். ஏதோஒன்று அவரைத் தடுத்திருக்கலாம். மேலும் விசாலி முடிந்தவரை அந்த மாதிரி சந்தர்ப்பங்களைத் தடுத்தே வந்திருக்கிறாள் என்று கொள்ளலாம்!
//இந்த அழகில் இசையை ரசிக்கிறாராம்.///
நீக்குஹா ஹா ஹா ஆங்ங்ங் விட்டிடாதீங்கோ கீசாக்கா அதானே:)).. வல்லிம்மாவும் அஞ்சுவும் நம்மட கட்சியாம்:))..அ டம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு:)) ஹா ஹா ஹா.
மன்னிப்பு மன்னிப்பு என்கிறீங்களே?:)).. எப்பவும் பெண்கள்தான் மன்னிக்கோணும் என ஏன் எதிர்பார்க்கிறீங்க?.. இள வயதில தப்பே பண்ணாத மனைவியை இவர் மன்னிச்சாரா?.. எதுக்காக அப்படி கண்டபடி திட்டினார்ர்?:).. இப்போ மன்னிப்பது தேவ குணம் அசுர குணம் அந்தக் குணம் இந்தக்குணம் என எப்பூடிக் குரல் எழுப்பினாலும் வேலைக்காகாது.. மன்னிச்சால் மட்டும் என்ன பண்ணுவார்.. உடனே மனைவிக்கு தாஜ்மகால் கட்டிடுவாரோ..? இன்னும் வேலை வாங்குவார்ர்.. அதைச் செய் இதைச் செய் என...
இப்போகூட அவர் எதையாவது கேட்டு மனைவி மன்னிக்காட்டில் பறவாயில்லை.. தப்பு என கொஞ்சமாவது இறங்கி வரலாம்ம்..
//தான் பேசிய சில வார்த்தைகளை சொல்லி விசாலியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றும் அவருக்கு. ஆனால் அவள் அதற்கு எந்த இடமும் தரவில்லை. அந்த வாய்ப்பு வருவதை முடிந்தவரை தடுத்தே வந்தாள்.///
இதென்ன இது அவ என்ன வேற்றுக் கிரகத்திலயா இருக்கிறா?:).. யாருமில்லாத நேரத்திலயாவது தடாரெனக் கால்ல விழலாமெல்லோ நெல்லைத்தமிழன் மாதிரி:).. ஹா ஹா ஹா ஏன் எங்கட வீட்டிலும் நடக்கும் பிளீஸ் பிளீஸ் என.. அப்போ பிரச்சனை உடனே தீர்ந்திடுமே:))..
இது இப்பவும் ஈகோ.. மனிவியிடம் பேச என்ன அப்பொயின்மெண்ட் வைக்கிறாரோ?:).. அவ மன்னிப்பு கேட்பதற்கு இடமே தரவில்லையாம் கர்ர்ர்:)).. இன்னும் கணவன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என உழைக்கிறாவே அதுவே தேவ குணம்தானாக்கும்:))..
ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊ ஹொட்டா ஒரு கப் வூட் அப்பிள் ஊஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).
நல்லவேளை எதிர்க்கட்சியினர் நித்திரையாகிட்டினம்:)
வழமையாக கீசாக்கா பெண்களுக்கு எதிர்க் கட்சியிலயே நிற்பா:) ஆனா பாருங்கோ அம்பேரிக்கா போகும்போது பிரித்தானியாக் காத்துப் பட்டதால நம் கட்சியில் சேர்ந்திட்டா ஹா ஹா ஹா..
ஆஆஆ நெல்லைத்தமிழன் தொபுக்கடீர் என பெண்கள்தான் உயர்தவர்கள் எனச் சொல்லிட்டு ஓடிட்டார்ர் ஹா ஹா ஹா நான் சொன்னனே:))
நீக்கு//அப்படியே சரிந்து, முடிந்து போனாள்.
சரவணனும், மருமகளும் அவளைத் தூக்கிப் பிடித்து அழுது கொண்டிருக்க,
ராகவி ஒன்றும் புரியாமல் "பாட்டி... பாட்டி..." என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க...
சங்கரன் வெளியே நடக்கத் தொடங்கினார். //
ஓ இனி அமுதா வயசுக்கு வந்தென்ன வராட்டி என்ன:)).. முடிஞ்சபின் எதைப்பேசி என்ன புண்ணியம்.
ஸ்ரீராம் கதையே முடிஞ்சிடுச்சோ?:).. ஆஆஆஆஅ எங்களை அடிபடவே விடமாட்டேன் என்கிறீங்களே:)) ஹா ஹா ஹா.
/இனி அமுதா வயசுக்கு வந்தென்ன வராட்டி என்ன:))// - தன் மூத்த பையனிடமே தங்கின அம்மா, அவனின் மனைவியை கொஞ்சம் படுத்தினார். கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருந்தால்தான் பையனிடமே இருக்கமுடியும் என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். மற்ற பையன்களிடம் சென்று அவர் இருந்ததில்லை (தன் தின வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தொடரணும் என்பதால்). கடைசியில் படுக்கையில் இருந்தபோது, 'உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேனோ' என்று மூத்த மருமகளைக் கேட்டாராம். அதற்கு அந்த மருமகள், 'அப்படியெல்லாம் இல்லையம்மா' என்று சொன்னாரம். என்னிடம் அதைச் சொன்னவர், 'அவரிடம் ஆமாம் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருந்துவிடப்போகிறது. கஷ்டப்படுத்தும்போது தோன்றாதது கடைசி காலத்தில் தோன்றி என்ன புண்ணியம்' என்றார்.
நீக்கு//அது வரைக்கும் கூட ஒன்றும் பெரிதாக பேசிக்கொள்வதில்லை இருவரும் என்றாலும் அப்புறம் விசாலி முழுமையாக இறுகி விட்டாள்.//
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ வ்வ் இக்காலம் எனில் டிவோஸ்தேன்ன்ன் ஹா ஹா ஹா..
டிவோர்ஸுக்கு முன்னால் செமையா அடி விழுந்திருக்கும்!
நீக்குஅதிரா.. இன்னும் காலம் அப்படி இந்தியாவுல மாறிடலை.
நீக்குஅதுனாலத்தான் அமெரிக்காவில் குடியேறும் நம்மவர்கள் ஆரம்பத்துல இருந்தே 50% வேலையை (வீட்தாடு வேலைகள்ங்க)ளும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறாங்களோ?
அது உண்மைதான், உண்மையில் தன் அம்மா அப்பா குடும்ப சப்போர்ட் இருப்போர் அல்லது நல்ல உழைப்பில் இருக்கும் பெண்கள் எனில் டிவோஸ் க்கு போய் விடுகின்றனர், ஆனா கணவனின் வருமானத்தை மட்ட்டும் நம்பி வாழும் பெண்கள் தான்.. கூடவே இருந்து அனுபவிக்கின்றனர்.
நீக்குஅதிரா... கணவனின் வருமானத்தை மட்டும் நம்பி - இப்படிச் சொல்லும்போது சம்பாதிப்பவன் பெரிய ஆளாகவும் வீட்டையும் குழந்தைகளையும் கணவனின் மனநிலையையும் மேனேஜ் பண்ணறவங்க சின்னவங்களாகவும் அர்த்தம் வந்துடுது.
நீக்குகுடும்பம்னா பண வரவு வேணும், குடும்ப வேலைகளும் நடக்கணும். அதை யார் பொறுப்பா செய்தால் என்ன. என் தனிப்பட்ட ஒபினியன் வீட்டு வேலை, பசங்களைப் பார்த்துக்கொள்ள ரொம்பப் பொறுமை வேணும். அது பெரும்பாலும் ஆண்கள்ட கிடையாது.
பசங்களுக்கும் அப்பாவுக்கும் பாலமா இருப்பது சுலபமல்ல. கிச்சன் வேலையும் சுலபமல்ல.
சுரபமான வேலை ஸ்விம்மிங், யோகா போவதுதான் ஹா ஹா
ஆணிடம் அகங்காரம் அல்லது அகம்பாவம் என்பது பிறவிக்குணம்! விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்கள் அடங்கியே ஜெயிப்பவர்கள். ஆண்கள் அந்தக் கலை அறியாதவர்கள்.
நீக்கு//இப்படிச் சொல்லும்போது சம்பாதிப்பவன் பெரிய ஆளாகவும் வீட்டையும் குழந்தைகளையும் கணவனின் மனநிலையையும் மேனேஜ் பண்ணறவங்க சின்னவங்களாகவும் அர்த்தம் வந்துடுது.//
நீக்குஇதுதானே நெல்லைத்தமிழன் நம் நாடுகளில் காலகாலமாக நடக்கும் உண்மை..
அதிலும் இலங்கை முறை வேறு ஆனா தமிழ்நாட்டில் பல மனைவிகளுக்கு பல வருடமானாலும் கணவனின் சம்பளம் எவ்வளவு எனத் தெரியாது.. ஒரு பொருள் வாங்குவதாயினும் கணவரிடம் கேட்டு பணம் பெற்றுக் கொண்டுபோய் வாங்கும் சூழலில் இன்னும் எத்தனை பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அங்கு.
திருமணத்தின் பின்பு கணவனும் மனைவியும் . இது நம் வீடு.. இது நம் பணம் என நினைச்சால்தான் குடும்பம் நல்லபடி இருக்கும். இதனாலதான் கணவனின் சம்பளம் தெரியாத கோபத்தால் சில மனைவிகள் அடம்பிடிச்சு செலவு ஓவராக செய்து கடனாளி ஆக்குகின்றனர்.. அதுகும் ஒருவகையில் ஆண்களின் இந்த ஒளிப்புத்தன்மைதானே காரணம்..
சரி சரி நிறையப் பேச வருது வேண்டாம்ம்.. இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலோ போகும் ஹா ஹா ஹா:).
//சுரபமான வேலை ஸ்விம்மிங், யோகா போவதுதான் ஹா ஹா//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஆனா இதனால புளொக்கில் கும்மி அடிக்க முடியுதில்லையே:))
//கணவனின் சம்பளம் தெரியாத கோபத்தால் சில மனைவிகள் அடம்பிடிச்சு செலவு ஓவராக செய்து கடனாளி ஆக்குகின்றனர்// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சம்பளம் தெரியாமல், கொஞ்சம் கூட செலவழிக்காமல் கஞ்சத்தனமாகவே இருந்துவிட்டு, கடைசி காலத்தில் ஏகப்பட்ட பணம் இருக்குன்னு தெரிஞ்சு, இன்னும் கொஞ்சம் நல்லா வாழ்ந்திருக்கலாமே என்று எண்ணுபவர்கள்தாம் அதிகம்.
நீக்கு'ஓவராச் செலவழித்து' - இந்தக் குணத்தை நான் எப்போவுமே வெறுக்கறேன். தேவையில்லாமல் எதுக்கும் செலவழிக்கக்கூடாது என்பது என் எண்ணம். என் பெரியப்பா எனக்குச் சொல்லியிருக்கிறார், We are only custodians of our fund என்று. அது என் மனதில் பதிந்துபோயிருக்கிறது.
//ஒய்வு பெற்ற நாளிலிருந்துதான் அவரிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது//
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ வேற வழி? ரத்தம் சூடு குறைஞ்சிட்டுதாம்ம் ஹா ஹா ஹா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. என யும்மாவோ சொல்லியிருக்கினம்...
சரி சரி மிகுதிக்கு லேட்டாத்தான் வருவேன் ஸ்ரீராம்.. அதுவரை மன்னிச்ச்ச்ச்:)) ஆனா அஞ்சுவை மட்டும் மன்னிக்காதீங்கோ பிளீஸ்ஸ் ஏனெனில் அவ இப்போ ச்ச்சும்மாதான் ஸ்லீப் பண்ணுறா கர்ர்ர்ர்ர்:)) அதிராவோட வரலாமில்லையோ டோகாவுக்கு சே சே யோகாவுக்கு:))
பாவம் அஞ்சுவுக்கு என்ன வேலையோ... அஞ்சுதான் என்னை மன்னிக்கவேண்டும்.... இப்போ கொடுக்கற பதில்கள் மாதிரி பின்பகுதியில் சென்றவாரம் நான் பதில்கள் தரவில்லை!
நீக்குகர்ர்ர்ர்ர் 4 ஶ்ரீராம்ம்ம்ம்ம் உப்பூடிச் சொன்னா மட்டும் விட்டிடுவமோ:) தேம்ஸ் கரையில வச்சு இது பற்றி அஞ்சு வொறீங்:) தெரியுமோ:) நெற்றிக்கண்ணை திறக்கினும் குற்றம் குற்றமே:)...
நீக்குஆஆ அஞ்சூ நீங்க அந்த ஒரு ஜோடிக் காப்பை என் கையில் போட்டுவிடுவதாக சொல்லி, சொல்லச் சொன்னதை ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)
இனி வந்து ஓவரா நல்லபிள்ளைக்கு நடிச்சு அதனாலென்ன த்றீராம் எனப் பூசி மெழுகினால் கால்ல கல்லைக்கட்டி நடுத்தேம்ஸ்ல போட்டிடுவேன்ன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)...
ம்ஹூம் பூஸோ கொக்கோ:)...
ஹையோ இண்டைக்கு கண்ணதாசன் அங்கிளின் நினைவுநாள்ல அதிராவை ஆரும் திட்டப்பிடாதூஊஊ மீ பாய்ய்ய்:)))
மிகுதி வீட்டுக்கு வந்து:)
// மீ பாய்ய்ய்:))//
நீக்குfrom when ?????
ஹலோ மியாவ் இப்படி ஒரு குழந்தையை (மீ ) பற்றி இல்லாததும் பொல்லாதும் சொல்றதா :) ஸ்ரீராம் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை .எனக்கு தெரியும் ஒர்க் பிசி ..
நீக்குநன்றி ஏஞ்சல்... பதில் எல்லாவற்றுக்கும் சொல்வது சில நேரங்களில் சிரமமாகி விடுகிறது!
நீக்கு"என்னி ஜென்மமுல சேஸின பாபமு ஈ ஜென்மமுதோ விடு நன்னா..."//
பதிலளிநீக்குஇது எந்த க்ருதியின் வரிகள் ஸ்ரீராம்....நமக்குத்தான் வரிகளே நினைவுல பதியலையே!!!!!!!!!
இப்படி பாட்டு கேட்பவரா இப்படி இறுக்கமுடன் சங்கரன் என்றும் தோன்றுதே...ஆனா இருக்காங்கதான் அனுபவிச்சு இழுத்து இழுத்து பாடறவங்களே கூட மத்தபடி செம ராங்கியா இருப்பாங்க எரிஞ்சுவிழுந்து கொண்டுன்னு...
ரிட்டையர் ஆன பிறகு இப்படி எல்லாம் கில்ட்!!! ஆனால் அப்பவும் ஈகோ....
போன பதிவுல சொன்னது போல விசாலியின் இறுக்கத்துக்குக் காரணம் அவரது ரிட்டையர்மென்ட் இல்லைனு தோணிச்சு அதுபடியே கதை பயணித்திருக்கு!!!
கீதா
// "என்னி ஜென்மமுல சேஸின பாபமு ஈ ஜென்மமுதோ விடு நன்னா..."//
நீக்குபத்ராசலர் கீர்த்தனை கீதா... எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்!
https://www.youtube.com/watch?v=dxV6a1Rm_2E
Geetha rengan , Bathrachala Ramadhasar kruthis. manase karainjuduum . Blamurali kirushnas voice is awesome.
நீக்குஸ்ரீராம் அண்ட் வல்லிம்மா மிக்க நன்றி...அது எனக்கு எப்பவுமே வரிகள் நினைவுக்கு வரதில்லையே அதான் பிரச்சனை...மெட்டு நினைவில் இருக்கும்..
நீக்குலிங்க் கிற்கும் மிக்க ந்னறி
கேட்டுவிடுகிறேன்...
கீதா
ஒருமுறை, ஒருமுறை மட்டும் விசாலி இவர் முகம் பார்த்து மலர பேசி விட்டால் போதும். நடிப்புக்காவது பேசிவிட்டால் போதும், அந்த கணமே, எங்காவது கண்காணாமல் கிளம்பிச் சென்று விடலாம் என்று நினைப்பார்.
பதிலளிநீக்குஇந்த ஒன்றை மட்டும் ஏன் எதிர்பார்க்கிறோம் என்று அவருக்கே தோன்றும்.//
அதான் விசாலி பேசாமல் போய்விட அவரும் நடையைக் கட்டிவிட்டார்!!
மொத்தத்தில் இருவருமே சரியா கொஞ்சம் கூடச் சந்தோஷமா வாழலை...
கீதா
வாழத்தெரியாதவர்கள்! அல்லது கவலைப்படாதவர்கள், கர்மயோகிகள்!!!!
நீக்குகர்மயோகிகளா? தவறான பொருள்ல எழுதிட்டீங்களோ ஶ்ரீராம?
நீக்குநல்லதோ, கெட்டதோ தான் செய்வதையே செய்துகொண்டிருப்பவர்கள்! அதைத்தான் கர்ம(ம்)யோகிகள் என்று சொன்ன்னேன்!
நீக்கு:)))
இவர் ஒய்வு பெற்ற பின்பும் கூட இவரோடு சரியாய்ப் பேசாமல் விலகியே இருந்த சரவணன் இப்போதெல்லாம் கொஞ்சம் நெருங்கிப் பேசி வந்தான். மகளும் இப்போதெல்லாம் சற்றே தைரியம் பெற்று இவருடன் இயல்பாய் பேசத் தொடங்கி இருந்தாள்.
பதிலளிநீக்குசரவணனுக்கு அப்பா மீதான ஆரம்ப கால அதிருப்திகள் அவனுக்குத் திருமணமாகி ராகவி பிறந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கி இருந்தன. அதற்கு சங்கரனின் நடவடிக்கைகளும் காரணம். சகோதரியிடம் இதுபற்றி அவன் பேசியபோது அவளும் இதே கருத்தை எதிரொலித்தாள்.//
இதைத்தான் மேலே கோட் பண்ணி சொல்ல வந்து கோட்டிங்க் விட்டுப் போச்ஹ்கு...இப்பவாச்சும் பிள்ளைகள் கொஞ்சம் அம்மா அப்பாவை உட்கார வைச்சு பேசியிருக்கலாமோ? பஞ்சாயத்து பண்ணியிருக்கலாமோ?!!!! ஹா ஹா ஹா..
இந்த மாதிரியான கதைகள் எல்லாம் சின்ன சீரியலாகவோ, படமாகவோ வருவதே இல்லையே. பழீக்குப் பழி, குடும்பம் கலைத்தல், அரதப்பழசான மாமியார் மருமகள் சண்டை, வெட்டிக் காதல் இப்படித்தான் வருது. மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள்....இது ஸ்ரீராம் ஒரு படத்திற்கான நல்ல கதைக்கரு...என் மனசுல என்னவெல்லாமோ விரியுது..!!!!
கீதா
ஆஹா... அப்போ நான் சீரியல் எழுதப்போகலாம்னு சொல்லுங்க...
பதிலளிநீக்குஇந்தப் பகுதியைப் படித்தேன்.
பதிலளிநீக்குஎதுக்கு வாழறோம் என்ற காரணமே சங்கரனுக்கும் விசாலிக்கும் புரியலையோ? விசாலி, சங்கரனுக்கு மன்னிப்பு அளிக்கும் சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாமோ? நான் சங்கரன் சார்பாகத்தான் பேச மனசுல தோணுது. அலுவலகத்தில் வேலை பார்க்கிறவங்க கண்டவங்கட்ட எல்லாம் திட்டு வாங்க, அவமானப்படும் சூழல் வரும். அதை தன் குடும்பத்துக்குத்தானே பொறுத்துக்கறாங்க. சுடுசொல் எய்வது சிலரின் குணமாக அமைந்துவிடுகிறது என்பதற்காக அவங்களை மனைவி, அவர் சம்பாதிப்பதை நிறுத்தியவுடன் பழி வாங்கும் விதமாக நடத்த வேண்டுமா?
சிலபேர் மகிழ்ச்சியா வாழ்வதையே பாவம் என்று நினைத்து விடுகின்றனர். சுலபமாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களிடம் எதையாவது விளக்கிச் சொன்னால் அவர்கள் சொல்லும் விளக்கங்கள் ஆயாசமாய் இருக்கும்.
நீக்குவிசாலி தான் வாழ்நாள் பூராவும் சங்கரனின் மன்னிப்புக்குக் காத்திருந்திருக்கிறாளே! தன் நேர்மையைச் சந்தேகிக்கும் கணவனை எந்த மனைவியும் மன்னிக்க மாட்டாள். மன்னிக்கவும் கூடாது. அதுவும் சங்கரனின் மகன் விபரம் தெரிந்து பெரிய பையன் ஆன பின்னர் குழந்தைகள் எதிரில் நடந்தது இது! விபரம் புரிந்த பிள்ளையையும் வைத்துக்கொண்டு தாயை இப்படிப் பேசும் தகப்பனை சரவணன் வேண்டுமானால் மன்னித்திருக்கலாம். அந்தத் தாய் ஒரு நாளும் மன்னிக்க மாட்டாள். நீங்கள் உங்கள் கோணத்தில் இருந்தே பேசுகிறீர்கள் நெல்லைத்தமிழரே. அவருக்கு அலுவலக நெருக்கடி எனில் மனைவி வீட்டில் சும்மாவா இருந்தாள். அவளுக்கும் பிரச்னைகள் உண்டு. உடம்பு நோய் இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். சம்பாதித்துக்கொடுப்பதால் ஆண் என்னும் திமிரால் எது வேண்டுமானாலும் பேசிவிடலாமா என்ன?
நீக்கு//சுடுசொல் எய்வது சிலரின் குணமாக அமைந்துவிடுகிறது என்பதற்காக அவங்களை மனைவி, அவர் சம்பாதிப்பதை நிறுத்தியவுடன் பழி வாங்கும் விதமாக நடத்த வேண்டுமா?// கதையை மறுபடி படிங்க நெல்லைத்தமிழரே! அவர் தன் மனைவியிடம், மகனை, "எவனுக்குடி பெத்தே?" என்று கேட்ட கணத்திலிருந்து விசாலி அவர் வாழ்க்கையில் இருந்து விலகிவிடுகிறாள். அவர் பணி ஓய்வு பெறும்வரை காத்திருக்கவில்லை. அவசரம், அவசரமாகப் படிச்சுட்டு உங்க மனப்போக்குப்படி விமரிசனம் பண்ணறீங்க! :(
நீக்குஆஹா !! சூப்பர் கீதாக்கா rocks :)எதை வேணும்னாலும் தாங்கலாம் ஆனா இந்த நேர்மையை நேர்மைக்கு ஒரு குட்டி பங்கம் வந்தாலும் பொண்ணுங்க எரிச்சிடுவாங்க யாரா இருந்தாலும் .
நீக்குஅன்பில்லாத கணவனை கூட பெண்கள் மன்னிப்பாங்க ஆனா சந்தேகசுடு வார்த்தைகள் வந்தா அவ்ளோதான்
//அதுவும் சங்கரனின் மகன் விபரம் தெரிந்து பெரிய பையன் ஆன பின்னர் குழந்தைகள் எதிரில் நடந்தது இது! //
நீக்குஅப்படியா அர்த்தம் வந்திருக்கிறது? விசாலி பழசை நினைத்துப்பார்ப்பது போல எழுதியிருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
//இதோ பரிந்துபேசும் சரவணன் அப்பாவிடம் உதை வாங்கி இருக்கிறான். இரவு ஒன்பதுமணிக்குமேல் நண்பனுடன் தெருவில் நின்று பேசினான் என்று தெருவே கேட்கும்படி இரைந்தார்.
நீக்கு"அப்படியே போயிடு... அவன் கூடவே அவன் வீட்டுக்குப் போயிடு... உள்ளே வராதே"// குறைந்த பட்சமாக அந்த சரவணன் எட்டு, ஒன்பதாம் வகுப்பாவது படித்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த வயது இளைஞர்கள் தான் நண்பர்களோடு வாசலில், தெருமுக்கில் என நின்று பேச ஆரம்பிப்பார்கள். இதைக் கண்டித்திருக்கவேண்டியது சங்கரன் தான்! விசாலி அல்ல. அதுவும் அவர்கள் என்ன பேசுகிறார்கள், எதைப்பற்றி என்றெல்லாம் கேட்டுத்தெரிந்து கொண்டு தப்பாய்ப் பேசி இருந்தாலோ தப்பாய் நடந்திருந்தாலோ கடுமையான தண்டனை கொடுத்திருக்கலாம். அதில் விசாலி சம்பந்தம் எங்கே வந்தது? பையனைக் கண்டிப்பதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நினைத்துக் கண்டிப்பவர் அவன் வளர்ச்சியில் பங்கேற்று ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு நல்லது, கெட்டதைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு மனைவியைக் கன்னாபின்னாவெனக் கேவலமாகப் பேசினால் கேட்டுக்கொண்டிருக்க மனைவி என்ன கல்லா? இரும்பா? உயிர், உணர்ச்சி உள்ள பெண்! அப்படியும் வெளியே போகாமல் வெளி மனிதர்களிடம் குற்றம், குறை சொல்லாமல் கணவனின் மோசமான குணத்தைக் காட்டிக்கொடுக்காமல் இதைக் குடும்பத்தோடு கட்டிக் காத்ததும் அதே மனைவி தான்!
நல்லவேளை ஸ்ரீராம்... இந்தக் கதையை விவாதிக்க எல்லோரையும் நேரே அழைத்து கலந்துரையாடல் நிகழ்த்தியிருந்தீங்கன்னா... கீசா மேடம் நிச்சயம் ஒரு கம்போடதான் அங்கு வந்திருப்பாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு இந்த சங்கரன் மீது. ஹா ஹா.
நீக்குஆஹா... சங்கரன் மாதிரி எனக்கும் எப்பவும் தனிமையா எங்கேனும் போய்விடணும்னு பல வருடங்களாத் தோணும் ஆசை. சாதாரணமா சாப்பிட பணம் இருக்கு. போதும்.... பந்தங்களிலிருந்து விலகி எங்காவது போலாமா... ஹரித்வார், ரிஷிகேஷ் மாதிரி.. என்று தோணும்.. தோணுது.. குடும்ப பந்தம் என்பது முடிவுறாத சுழல் அல்லவா?
பதிலளிநீக்குஇங்க பதினாறு வருஷம் படுக்கையில் இருந்த கணவனை கண்ணும் கருத்துமா அவர் இறக்கும் வரை பார்த்துக்கிட்ட தேவசேனாக்கள் (டைரக்டர் ஶ்ரீதர் மனைவி) வெகு வெகு அபூர்வமாகிட்ட உலகமாக அல்லவா இருக்கு
தனியா போவது தப்பில்லை. அதற்கு மற்றவர்களை புண்படுத்திவிட்டு போகணுமா என்ன? தேவசேனா போன்றவர்கள் நிச்சயம் போற்றப்படவேண்டியவர்கள்.
நீக்குஇதிலும் சங்கரன் குணம்தான் அவர் வாழ்க்கைல வெளிப்பட்டிருக்கு.
நீக்குசங்கரன், தானே வாலன்டியராப் போய் மனைவியிடம் உண்மையான மன்னிப்பை வேண்டிக் கேட்டுக்கிட்டு, அது கிடைத்தபின் அவர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம்
அப்படிக் கிடைத்திருந்தால் அப்புறம் கதை ஏது?
நீக்குபடுத்த படுக்கையாக இருக்கும் மனைவியை சுமார் 20 ஆண்டுகளாகக் கட்டிக்காப்பாற்றும், அவளுக்குச் சேவை செய்யும் கணவனையும் நான் கண்டு கொண்டிருக்கிறேன். ஆகவே இது ஒன்றும் அதிசயமே இல்லை. கணவனை மனைவி கவனிப்பதோ, மனைவியைக் கணவன் கவனிப்பதோ அவர்கள் மேல் இருக்கும் அதிகப் பாசத்தால் தான்! அந்தப் பாசம் தான் அவர்களை உயிர்ப்புடன் வைத்து என்றாவது ஒரு நாள் என்னும் கனவில் கொண்டு நிறுத்துகிறது.
நீக்குதேவசேனா அப்படி நடந்துக்கும் அளவுக்கு ஸ்ரீதரும் மனைவியிடம் நடந்து கொண்டிருப்பார் இல்லையா? அதையும் இங்கே சொல்லியாகணும்.
நீக்குஅப்படி இருந்திருக்க வாய்ப்பில்லைனு நினைக்கறேன் கீசா மேடம்... ஸ்ரீதர் ரொம்பவும் கோப குணம் உள்ளவர். எல்லோரும் தேவசேனாவைப் பற்றித்தான் புகழ்ந்து எழுதியிருக்காங்க. ஸ்ரீதரும் ரொம்ப நல்லவிதமா தேவசேனாவைப் பார்த்துக்கிட்டார்னு ஒருத்தரும் எழுதலை. ஹா ஹா
நீக்குபிரிஞ்சி, மற்ற நகைச்சுவைகள் மனதைக் கவர்ந்தன. பிரிஞ்சி இலை பற்றிப் படித்தவுடன், கங்கையில் மூழ்கி எழுந்தா பாவம் போயே போச் போன்ற சுலப வழியைக் காட்டுது. அப்படி நிஜத்தில் இருக்க முடியுமென்றால்...
பதிலளிநீக்குஇது போன்ற நம்பிக்கைகளால் நம்ம மனசை நாமளே சமாதானப்படுத்திக் கொள்கிறோம், அல்லது ஏமாற்றிக் கொள்கிறோம்!
நீக்குமுனபகுதியை மீண்டும் வாசிக்கணும்.
பதிலளிநீக்குதீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
அர்த்தம் இல்லாத தண்டனையை விசாலி கொடுத்து என்ன சாதித்தாள்? (ஆனா இதுமாதிரி ஒரு சொல்லுக்காக கடைசிவரை பேசாமல் இருந்து மறைந்த பெண்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். அதுக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு வாழ்க்கைலேர்ந்து ஒதுங்கிடலாம் இல்லை ஒதுக்கிடலாம்)
நீங்கள் சங்கரனைப் பற்றி மட்டும் யோசிக்கிறீர்கள்! விசாலி? அவர் வாழ்வின் பொருள்?
நீக்குஅதுதான் ஆணாதிக்க மனமோ?
நீக்குநேரடியாக இல்லைனாலும் ஸ்ரீராமனின் இத்தகைய சுடுசொல் தான் சீதையைத் தீக்குளிக்கவும், பின்னாட்களில் பூமியில் மறையவும் வைத்தது. இத்தனைக்கும் மனமொத்த தம்பதியராகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவனின் நிர்ப்பந்தங்கள் புரிந்த மனைவியாகத் தான் சீதையும் இருந்திருக்கிறாள். ஆனாலும் பிரிவு வரவில்லையா? இங்கே பிரியாமல் குழந்தைகளுக்காக வேண்டியும் சமூகத்தின் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளவும் விசாலி ஓர் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போய்விட்டாள்.
நீக்குஇங்கே சங்கரன் தான்பணி ஓய்வு பெற்றபின்னராவது தன் அகங்காரத்தை மறந்துவிட்டு மனைவியிடம் தனிமையில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். தவறு செய்தது அவர். பாதிக்கப்பட்டது விசாலி. இந்த லக்ஷணத்தில் விசாலி அவருக்கு மன்னிக்கும் சந்தர்ப்பம் கொடுக்கலைனு இன்னும் அவள் மேல் குற்றம். அதான் வாழ்க்கை பூராக் கொடுத்திருந்தாளே! மகன், மருமகள், பேத்தி எல்லோரும் சென்றபின்னர் இருவரும் தனியாக இருந்த சமயங்களை இந்த சங்கரன் என்ன செய்தார்? வீணாகத் தானே கழித்தார்? இந்த அழகில் இசையை ரசிக்கிறாராம்.
சங்கரனுக்கு மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பத்தை விசாலி கொடுக்க விரும்பவில்லை என்று கொள்ளலாம். அவர் குணத்துக்கு அல்லது அதுவரை இருக்கும் சூழ்நிலைக்கு சங்கரனாலும் அது முடியவில்லை என்று கொள்ளலாம்!
நீக்குநெல்லை அப்படி இல்லை நெல்லை....விசாலியின் ஆங்கிளில் யோசிக்கணும்..என்னதான் சங்கரனின் இந்தக் குணத்துக்கு ஏதேனும் காரனங்கள் இருந்தாலும்...விசாலியால் எத்தனை பொருத்துக் கொள்ள முடியும். இது ஹையஸ்ட் ஃபார்ம் ஆஃப் ஈகோ...
நீக்குஎனக்கு ஸ்ரீராமின் கதை பல யோசிக்க வைத்தது. பல ஆங்கிளில் ஒவ்வொரு கேரக்கட்டரின் இடத்திலிருந்தும் யோசிக்க வைத்தது...அதுவும் உளவியல் ரீதியாக...
நல்ல கதை...எனக்கு யாராவது இதைப் படமாக எடுக்க மாட்டாங்களான்னும் தோணிச்ஹ்கு...தாக்கம் அதிகமாக இருக்கும்!!!
கீதா
கீதா ரங்கன்...இது மாதிரி வந்த ஏகப்பட்ட கதைகளை நீங்க பார்த்ததில்லையா? உதாரணமா 'சிறை'
நீக்குநிறைய பேர் கதை நாவல்கள்ல என்ன உபயோகம் இருக்கு? கொஞ்சம் டைம் பாஸ் தவிர என்று நினைத்துவிடுகிறார்கள். அதனால, எழுத்தாளர்னா, ஓ இவர் எழுத்தாளராம்டா என்று கடந்துவிடுகின்றனர்.
பதிலளிநீக்குஅவங்க காலம், சமூகம் பற்றிக் காட்டும் கண்ணாடிகள்.
இத்தகைய கதைகள் ஓரிருவர் மனதை அசைத்துப் பார்த்தாலும் எழுதியதன் நோக்கம் நிறைவேறிடும். இது அத்தகைய தகுதி பெற்ற கதை. பாராட்டுகள் ஶ்ரீராம். இதற்குத் தலைப்பு தேவையில்லை. கடலில் பெய்த மழை, திக்குத் தெரியாத, இலக்கில்லா வாழ்வு, பாலைவனப் பூக்கள் என்று எந்தத் தலைப்பும் இடலாம்
நன்றி நெல்லை. நிஜமா சந்தோஷமா இருக்கு.
நீக்குமிக அருமையா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம் .விசாலியின் பாராமுகத்துக்கு விடைக்கிடைத்து .ஆனால் நல்லவேளை இவர்கள் பேசாமல் இருந்தது இல்லைன்னா இதை பார்த்து வளரும் மகனுக்கு அதே துஷ்டகுணம் வந்திருக்கும் .எகத்தாளம் எல்லாம் நார்மல்னு நினைச்சே வளர்ந்திருப்பான் மகன் இனொரு சங்கரன் உரு வாகாமல் இருந்ததே நன்று .
பதிலளிநீக்குஎன்ன மனிதர்கள் :( இப்படி பட்ட கேரக்டர்ஸ் இன்னும் கூட இருக்கிறார்களா ? இது போன்ற ஒரு கேரக்டரை நான் சந்தித்திருக்கிறேன் அவர் ஒரு வக்கீல் இப்பொது உலகில் இல்லை தான சம்பாதின்றோம் என்ற திமிரில் ரொம்பவே அழிச்சட்டியம் செய்வார் அவர் பிள்ளைகளில் ஒரு மகன் பிரிந்து சென்றவர் திரும்பவில்லை #தான் என்ற அகங்காரம் ஒருவரை இப்படி ஆக்கி இருக்கு ..ஒருவேளை சங்கரனின் தந்தையும் இப்படித்தான் இருந்தாரோ ?
நீங்கள் சொன்ன பிறகு அப்படி ஒரு கோணத்தை நானும் பார்க்கிறேன் ஏஞ்சல்!
நீக்குகல்லால் அடித்தால் வலி கொஞ்சம் நாளில் போயிடும் ஆனா சொல்லால் அடிச்சா அது ரணம் ஆறவே ஆறாது ..அவர்களின் மரணம் கூட நம்மை பாதிக்காது என்பதே உண்மை .இப்படி பட்ட குரூர குணம் கொண்டவர்களை உருவாக்குவது எதுன்னே புரியலை :(
பதிலளிநீக்குஇளையராஜா இசையில், மனோ குரலில், ராமராஜன் நடிப்பில் ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா ஏஞ்சல்?
நீக்கு"கல்லால அடிச்ச அடி வலிக்கவில்ல ராசா... சொல்லால அடிச்சுப்புட்டே தொடச்சு விடு லேசா....
பிரிஞ்சி இலைல ஏதாவது ஒரு கிராஃப்ட் செயணும்னு ரொம்ப நாள் ஆசை :) செஞ்சுறலாம் :) //எதிர் மறை சக்திகள் /// ஆஹா நல்லா இருக்கே கிலோ கிலோவா வாங்கி சோஷியல் மீடியா வாட்சாப் பேப்பர்கள் எல்லா இடத்திலும் வீசணும் :)
பதிலளிநீக்குஞாபக மறதி வந்தா நல்ல இருக்கும்னு நினைக்கிறேன் எனக்கு :)
குட்டி கவிதை சூப்பர் ..
சபாபதியிஸம் கலகலப்பு :)
ரசனைக்கு நன்றி ஏஞ்சல்.
நீக்குஞாபக மறதியை அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குபொதுவாக வந்துபோகிற எபி கதை இல்லை இது என்று முதல் பகுதியிலேயே தெரிந்ததில் சந்தோஷம்! திரும்பவும் படித்துப்பார்த்தேன். உறவுகளில் ஆங்காங்கே காணப்படும் உளவியல் சிக்கல்களைத் தீண்டியிருக்கிறீர்கள். இந்தமாதிரி ’உறவாடா உறவுகள்’ இப்படித்தான் முடியும். ‘சுபம்’ஆக முடித்திருந்தால் ஒட்டவைத்ததாக இருந்திருக்கும். அந்த ‘ஸ்டீரியோ டைப்’-இல் மாட்டாமல் தப்பித்துவிட்டீர்கள்! எங்களையும் காத்துவிட்டீர்கள்!
பதிலளிநீக்குஇத்தகைய தம்பதிகளும் சமூகத்தில் இருக்கிறார்கள். மனைவிமார்கள் தங்களின் சுயம் சிதைக்கப்பட்ட நிலையில், துக்கங்களைத் தாங்கிக்கொண்டு தொடர்கிறார்கள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார்கள். உழைக்கிறார்கள். ஓரமாகப் படுத்துத் தூங்குகிறார்கள். ஒரு நாள் போய்விடுகிறார்கள்..
இலகுவாகச் சென்ற கனமான கதை. நன்றி.
ஆஹா... நன்றி ஏகாந்தன் ஸார். தன்யனானேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை அருமை. இந்த மாதிரி எதைப்பேசுகிறோம் என்று புரியாதவர்களும், சிலசமயம் வேண்டுமென்றே கரித்துக் கொட்டி மனத்திருப்தி அடைபவர்களும், அந்த காலத்தில் மட்டுமின்றி இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விசாலியின் முடிவு சரிதான். இன்னமும் கொஞச நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் அவளின் இயல்பான குணத்திற்கு அவரை மன்னிக்கும் மனப் பக்குவத்திற்கு வந்திருப்பாளோ என்னவோ! ஆனால் சங்கரனுக்கு இந்தப்பிறவியில் செய்த பாவத்திற்கு இந்தப் பிறவியிலேயே தண்டனை கிடைத்து விட்டது. தெய்வம் நின்று கொன்றே விட்டது.
பிரிஞ்சி இலையின் பயன்பாடுகள் சுவாரஸ்யமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்களை போக்குவிக்கும் தன்மை அதற்கு உண்டு என்பது மிகவும் புதிதான தகவல். நன்றி.
ஞாபக மறதி ஜோக் ரசித்தேன். நமக்கும் இந்த மாதிரி பேச வரும் சமயம் சப்ஜெக்டை மறந்து விடும் குணாதிசயங்கள் சமயங்களில் சில நேரம் ஏற்படுவதுண்டு.
கவிதை அழகாக உள்ளது. வாழ்க்கையின் யதார்த்தம். இதைத்தான் அனேகமாக தவற விடுகிறோமோ எனத் தோன்றுகிறது.
சபாபதி மிக புத்திசாலிதான். எதற்கும் இரு அர்த்தங்கள் உண்டு என்பதை சுலபமாக புரிந்து கொண்டு நிருப்பிக்கிறான். ரசித்தேன். சுவையான கதம்பத்தை தந்த தங்களுக்கு மிகுந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குவிசாலியின் குணத்துக்கு எவ்வளவு காலம் உயிரோடு இருந்திருந்தாலும் மாறியிருப்பாளா என்பது சந்தேகமே.. சங்கரனுக்கு இது வாழ்நாள் தண்டனை!
அனைத்தயும் ரசித்ததற்கு நன்றிகள்.
விசாலி மேல் எந்தத்தப்புமில்லை, இல்லை, இல்லை, இல்லவேஇல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குசரி... சரி... சரி!!!
நீக்கு@நெல்லைத்தமிழன் ஓடிப்போய் புதன் கிழமை பதிவில் மேலும் ஏற்றுக தட்டி பாருங்க :)))))))))ஒரு சம்பவம் நடந்திருக்கு அடக்க ஒடுக்கம் தானே வண்டியில் ஏறி வசமா மாட்டியிருக்கு :)
பதிலளிநீக்குGrrrrrrrrrr N thamizhan please don’t go:)
நீக்கு:))))
நீக்குபல பேரின் வாழ்க்கைகளைப் பிரதிபலிக்கிற கதை. நல்ல நடை.
பதிலளிநீக்குநகைச்சுவை கார்ட்டூன் பகிர்வுகள் அருமை:).
சிறப்பான தொகுப்பு.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஸ்ரீராம் ஜி கதை மிக அருமை. முடிவு டாப்! சங்கரன் போன்ற இப்படியான ஆண்களுக்கு விசாலி நல்ல தண்டனை கொடுத்திருக்கிறாள். எவ்வளவுநாள் தான் பொறுத்துப் போக முடியும்? ஆனால் விசாலியின் மரணம் தான் வேதனையாக இருந்தது. அந்த மரணம் சங்கரனை வெகுவாகப் பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇப்படி வாழும் பெண்கள் இருக்கிறார்கள். வயது 80 எட்டிய பிறகும். அந்தக் கிழவர் இன்னும் அந்த தண்டனையை அனுபவித்துத்தான் வருகிறார். இதிலாவது சங்கரன் விசாலியை விட்டு விலகவில்லை. ஆனால் நான் சொல்லும் அந்தக் கிழவர் இடையில் தன் மனைவி அல்லாமல் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பு கொண்டு ஆனால் அப்பெண் அப்புறம் இவரை விட்டுப் போக அது மனைவிக்குத் தெரியவந்த பின்னும் கணவனை துரத்தவில்லை ஆனால் வீட்டிலேயே மௌனமாகத் தண்டனை கொடுத்துவிட்டார்.
நல்ல கதைக்குப் பாராட்டுகள்.
பிரிஞ்ஜி இலைபற்றிய தகவல்கள் ஆச்சரியம்.
ஜோக்குகளையும் ரசித்தேன்.
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குகிட்டத்தட்ட இதே போல ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
ஸ்ரீராம் ஜீவி மாமா சொல்லிருப்பது கதையில் பார்த்தேன்...நீங்க நம்ம ஜீவி அண்ணாவைத்தான் அங்கு சொல்லிருக்கீங்க நு முதல்ல நினைச்சு கருத்தும் வேர்ட்ல எழுதி வைச்சிருந்தேன் ஸ்ரீராம்...அப்புறம் நாம தப்பா சொல்லிடக் கூடாதேனு அதை விட்டுவிட்டேன்...கதை வாசிக்கும் போதே தோன்றிவிட்டது...
பதிலளிநீக்குஅதுவும் நான் அத்தனை அலசி அலசி வாசித்தேன் ஹா ஹா ஹ ஹ ஹாஅ
அப்புறம் நீங்க சொன்னதைப் பார்த்ததும் நான் அவர் கமெண்டைக் கண்டுக்காம போயிட்டேன்னு நினைச்சு தேடினேன்...
அப்ப நான் நினைச்சது சரிதானா!!!!! நன்றி நன்றி ஸ்ரீராம்....
இனி தோன்றியதை சொல்லிடனூம்!!!ஹா ஹா ஹா ஹா ஹா நோட் பண்ணிக்கிட்டேன்....
கீதா
இன்னும்கூட ஒரு சிறுகுறும்பு இருக்கு கீதா...!
நீக்குநான் படிக்கையிலேயே கவனித்தேன். அதோடு ஜீவி சாரின் அப்பா பெயர் தான் கணேசன், அவர் பெயர் வெங்கட்ராமன் என்று சொல்லவும் நினைத்தேன். கதையின் தாக்கத்தில் மறந்துட்டேன். ஜீ.வி. என்னும்பெயர் அப்படித் தான் வந்தது என ஒரு முறை சொன்ன நினைவு. அல்லது நானாக நினைத்துக் கொண்டிருக்கலாம்.
நீக்குநேற்று முற்று முழுதாக கொமெண்ட் போட முடியாமல் போச்சு..
பதிலளிநீக்குபிரிஞ்சி இலைத் தகவல்கள் அருமை, சமையலுக்கு மட்டுமே அதுவும் அசைவத்துக்கே இதனை பாவிப்பேன் நான்.. ஏதோ பே லீவ்ஸ் என்றாலே அசைவம் என்பதுபோலாகி விட்டது எனக்கு:).
கவிதை அழகு.. ஆனா..
எல்லோருக்கும்
புரிஞ்சுகொண்டு
வாழத்தான் ஆசை -ஆனால்
வாழ்க்கையோ
பலருக்கு
புரியமுன்
முடிந்துவிடுகிறது...
ஹா ஹா ஹா.
கடசி பூஸ்பிள்ளை சூப்பர்ர்.. பால் குடிக்க விட்டதோடல்லாமல் தூக்கியும் வச்சிருக்கிறார் தம்பி.. என்னா சொகுசு ஹா ஹா ஹா.
அடடே... இதுவும் நல்லா இருக்கே...
நீக்கு