வெள்ளி, 11 அக்டோபர், 2019

வெள்ளி வீடியோ : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்



இன்றும் இரண்டு பாடல்கள்  பகிர்கிறேன். 


திருவருட்செல்வர் படத்தில் ஒரு பாடல் உண்டு.  "மன்னவன் வந்தானடி தோழி..."    பி சுசீலா குரலில் நல்ல பாடல்.   அது கல்யாணி ராகம்தானே கீதா?


அந்தப் பாடலின் முதல் வரியைக் கொண்டு 1975 இல் மாதவன் இயக்கத்தில் சிவாஜி-மஞ்சுளா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மன்னவன் வந்தானடி' 




இந்தப் படத்தை தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டரிலோ, ஞானம் தியேட்டரிலோ பார்த்தேன்.  சிவாஜி ரசிகன் இல்லையா?  அதனால் ஆவலாகப் பார்த்த படம்.  படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை.  ஆனால் இந்த இரண்டு பாடல்கள் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த இரண்டு பாடல்கள்.  அப்போது என் பக்கத்துக்கு இருக்கையில் துரை செல்வராஜூ ஸார் அமர்ந்து படம் பார்த்திருக்கக் கூடும்.




கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  இதே படத்தில் இரண்டு பாடல்களை வாலியும் எழுதி இருக்கிறார்.  

சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் பாடலை நான் முன்னரேயும் பகிர்ந்திருக்கக் கூடும்.  ஆனாலும் இன்றும் அந்தப் பாடலைப் பகிர்வதோடு, இன்னொரு அழகான காதல் பாடலையும் பகிர்கிறேன்.  பி சுசீலாவோடு டி எம் எஸ் இணைந்து பாடியிருக்கும் 'காதல் ராஜ்ஜியம் எனது...'




இந்த இரண்டு பாடல்களில் முதல் தெரிவு எது, இரண்டாவது தெரிவு எது என்று சொல்வது சற்றே கடினம்.இரண்டுமே முதல் தெரிவாக கூட வைத்துக்கொள்ளலாம்.

ஜமீந்தாரோ, பணக்காரரோ...   ஏமாற்றப்பட்ட சிவாஜி பெரியவனாகி அந்த சொத்தை மறுபடி அடைவதுதான் கதை என்று நினைவு.  அவர் தங்கை ஜெயசுதா தனது குழந்தையை தாலாட்டும்நேரம்,  அதே ஊரில் இருக்கும் கோமாளி போன்று வேடமிட்ட சிவாஜி குடிசைக்குள் நுழைந்து மருமானைத் தூங்க வைக்க பாடும் தாலாட்டு.  பாடல் வரிகள் படத்தின் கதையைச் சொல்லும்.


சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் 
ஏழ்மைத்  துன்பத்தில் ஆடுதடா இங்கே  
மாளிகை மன்றம் கண்ட மன்னன்  இன்று 
மாமர ஊஞ்சல் கண்டான் இங்கே 


பல்லக்கில் பட்டுக்கட்டி பரிசுகள் எடுத்து 
பச்சைப்பவளம் முத்து மாணிக்கம் தொடுத்து 
செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது - ஐயா 
சிந்தை கலங்காதே நாளைக்கு வருது...

கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு 
பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்துத் தோடு 
அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு - மாமன் 
அரண்மனை கட்டிவைப்பான் நாளை அன்போடு..


உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் 
ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும் 
காலத்தில் தெய்வம் வந்து சொந்தத்தை இணைக்கும்  - என் 
கண்ணனின் வாழ்வுக்கு ஒரு சொர்க்கமும் பிறக்கும் 


இந்தப் படத்தின் ஒரே காதல் பாடல்.  மிக இனிமையான பாடல்களில் ஒன்று என நான் நினைக்கும் பாடல்களில் ஒன்று.  கண்ணதாசன் வரிகளையும், எம் எஸ் வி இசையையும், டி எம் எஸ் சுசீலா குரலையும் மிகவும் ரசிக்கலாம்.  

இந்தப்பாடலில் வரும் ரிதம் என்று சொல்லவேண்டுமா...   அதை மிகவும் ரசிப்பேன்.  ராஜலீலைகள் இதுதானோ என்கிற இதில் சுசீலாம்மாவின் குழைவு,   சிங்காரப்பொன்மகள் சிரிப்பு எனும்போது டி எம் எஸ் குரல், சங்கீத வீணையின் படைப்பு எனும்போதும் குற்றாலதென்றலின் நினைப்பு எனும்போதும் செசீலாம்மாவின் குரலும், பின்னணியில் வரும் மிக மெலிதான கோரஸும் ...







காதல் ராஜ்ஜியம் எனது - அந்தக் 
காவல் ராஜ்ஜியம் உனது 
இது மன்னன் மாடத்து நிலவு - இதில் 
மாலை நாடகம் எழுது 

கண்ணான கண்மணி வனப்பு 
கல்யாணப் பந்தலின் அமைப்பு 
தேவதேவியின் திருமேனி - மஞ்சள் 
கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு...

காதல் ராஜ்ஜியம் எனது - அந்தக் 
காவல் ராஜ்ஜியம் உனது 
இது மன்னன் மாடத்து நிலவு - எந்தன்  
மார்பில் நீ வந்து உலவு 


திங்கள் ஒரு கண்ணில் 
குளிர் தென்றல் மறு கண்ணில் 
தாலாட்டும் பெண்மை இது 
வைகை மலர்ப்பொய்கை 
என மங்கை மணிச்செங்கை 
நீராட்டும் நேரம் இது 

தென்பாண்டித் தேவனின் அணைப்பு 
குற்றாலத் தென்றலின் நினைப்பு 
ராஸலீலைகள் இதுதானோ 
உள்ளம் கொள்ளாத ஆனந்தத் தவிப்பு 


கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் 
சந்தம் அதில் தோன்றும் 
தானாகப் பாடல் வரும் 
தத்தும் கிளி நித்தம் 
மணி முத்தம் இடும் சத்தம் 
தேனாகக் காதில் விழும் 
சிங்காரப் பொன்மகள் சிரிப்பு 
சங்கீத வீணையின் படைப்பு 
அழகு தேவதை அலங்காரம் 
கம்பன் சொல்லாத காவியச்சிறப்பு 

108 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    ஜிவாஜி பாடலா!!ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னவன் வந்தானடி கல்யாணிதான் ஸ்ரீராம்....

      மற்றதும் வாசித்துவிட்டு வருகிறேன்

      காற்றுள்ள போதே தூற்றிக் கொள்....கரன்ட் நெட் இருக்கும் போடே கமென்ட் இட்டுக் கொள்!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா...    இனிய காலைவணக்கம்....

      //ஜிவாஜி பாடலா?//

      இல்லை டி எம் எஸ்-  சுசீலா பாடல்! 

      நீக்கு
    3. மற்றதும் வாசிச்சுட்டு, இரண்டு பாடல்களும் கேட்டுட்டு அவைகளும் என்ன ராகம்னு சொல்லுங்க....

      நீக்கு
    4. காலை வணக்கம் கீதா சகோதரி

      புது பழமொழி நல்ல கற்பனை. சொல்லவும் சுவாரஸ்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. வாங்க கமலா அக்கா...     காலை வணக்கம்.  

      நீக்கு
    6. அன்பு ஸ்ரீராம், கீதா இன்னும் வரப்போகிறவர்களுக்கு
      இனிய வெள்ளிக்கிழமை நன்னாளுக்கான வாழ்த்துகளும் வணக்கங்களும்.
      இந்தப்படத்தின் இந்த இரண்டு பாடல்களும் மிகமிகப் பிடிக்கும்.
      சிவசக்தி என்ற திரைப்பட அரங்கு
      திருச்சியில் வீட்டு அருகில் இருந்தது. இரவு வேளையில்
      மொட்டை மாடியில் அமர்ந்தால்
      இந்தப் பாடல்கள் கேட்கும்.

      திருச்சியின் கோடை தகிக்கும் நாட்களில் தண்ணீர் விட்டு
      குளிர வைத்துப் பாய்விரித்து உட்கார்ந்தபடி கேட்ட பாடல்கள்.

      படம் பார்க்கவில்லை. பாடல்கள் மிக இனிமை.
      சுசீலா அம்மா பாடும்போது கதா நாயகியே
      அவர் குரலில் வந்துவிடுவார். என்ன ஒரு குழைவு.
      இந்தப் பாடலும் ,தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கமும்
      மிக மிக இனிமை.அதே ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துவும் தான்.

      உங்கள் பதிவு என்னை எழுத வைத்துவிட்டது.
      மிக மிக நன்றி மா

      நீக்கு
    7. வாங்க வல்லிம்மா..     இனிய காலை வணக்கம்.

      வீட்டில் இருந்தபடியே தியேட்டரில் ஒலிக்கும் பாடலைக்கேட்க முடிந்த காலம் எனக்கும் தஞ்சாவூரில் உண்டு. 

      இந்தப் படம் பார்க்காதது பெரிய நஷ்டமில்லை.   சொல்லப்போனால் நஷ்டமே இல்லை!

      நீங்கள் சொல்லியிருக்கும் பாடல் ராமன் எத்தனை ராமனடி படத்தில் வரும் சித்திரை மாதம் பௌர்ணமி மேகம் பாடல்...    இனிமையான பாடல்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.

    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் பாட்டு கேட்டு ரசித்துள்ளேன். மற்றொரு பாட்டு கேட்டதாக இப்போது நினைவுக்கு வரவில்லை.

    கைப்பேசி உயிரூட்டி கொண்டுள்ளது. இரண்டு பாட்டுக்களும் கேட்ட பின் மீண்டும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    ஆச்சரியம் என்னன்னா, எல்லோரும் டூயட் பட்டு கேட்டிருக்கேன், இது அவ்வளவா கேட்டதில்லைன்னு சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன்.  ஆனா நீங்க ஸோலோ ஸாங் கேட்டிருக்கீங்க..   இன்னொண்ணுதான் கேட்டதில்லைங்கறீங்க...    கேட்டுட்டு சொல்லுங்க...

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆகா.. நல்ல கற்பனைதான்....
    நானும் அந்தப் பக்கம் இருந்து ஸ்ரீராம் அவர்களுடன் படம் பார்த்திருப்பேன் - என்று...

    இந்தப் படத்தை பட்டுக்கோட்டை முருகையா வில் பார்த்ததாக நினைவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...    நீங்களும் அப்போ தஞ்சாவூரில் இருந்திருப்பீர்கள் என்று ந...........ம்பி எழுதினேனே....

      நீக்கு
  5. வல்லி சொன்ன "தேரில் வந்த ராஜராஜன்" பாடலும், "ஒரு முத்தாரத்தில்" பாடலும் கேட்டிருக்கேன். மற்ற விபரங்கள், படம் பெயர், பாடல் எல்லாமும் புத்தப்புதுசு. தாத்தாவோடு பேத்தி நடித்திருக்கும் படத்தை எப்படித் தான் ரசித்துப் பார்த்தீர்களோ! அதுவும் துரை வேறே பக்கத்தில் இருந்திருக்கார்! என்ன ரசனையோ போங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஒருமுத்தாரத்தில்' பாடல் 'சொர்க்க்ம்' படத்தில் கீதா அக்கா..    குடிக்க மாட்டேன் என்று சொல்லி பார்ட்டிக்கு வந்த சிவாஜி நைஸாக நகர்ந்து  'ஊற்றிக்கொண்டு' கண்கள் சிவக்க நின்று  கொண்டிருப்பார்!    

      நான் மறுபடி மறுபடி சொல்ல விரும்புவது நான் படங்களை ரசிப்பதைவிட பாடல்களைதான் அதிகம் ரசிப்பேன், ரசிக்கிறேன், கேட்பேன்.

      நீக்கு
    2. //தாத்தாவோடு பேத்தி நடித்திருக்கும் படத்தை எப்படித் தான் ரசித்துப் பார்த்தீர்களோ! //  ஹாஹா! சமீபத்தில் 'டூரிங் டாக்கீஸ்' என்றொரு யூ டியூப் சேனலில் நடிகர் சிவகுமாரின் இன்டெர்வியூ பார்த்தேன். அதில் அவர்," எனக்கு 27 வயதாக இருந்த பொழுது உடன் நடித்த நடிகைக்கு 17 வயது. எனக்கு 37 வயதாக இருந்த பொழுது உடன் நடித்த நடிகையின் வயது 17, எனக்கு 47 வயதான பொழுது கதா நாயகியாக நடித்த பெண்ணுக்கு 17 வயது, எனக்கு 57 வயதான பொழுதும், என்னோடு நடித்த பெண்ணுக்கு 17 வயதுதான். என்னப்பா கொடுமை, பேத்தி வயதில் இருக்கும் பெண்ணோடு டூயட் பாடுவதா?" என்றார்.  

      நீக்கு
  6. //சிவாஜி குடிசைக்குள் நுழைந்து மருமானைத் தூங்க வைக்க பாடும் தாலாட்டு. பாடல் வரிகள் படத்தின் கதையைச் சொல்லும்.// இதே மாதிரித் தாலாட்டுப் பாடல் பிரபுவும் "சின்னத்தம்பி"யில் பாடி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது அவர் தெருவில் நின்று பாடும் "தூளியில் ஆடவந்த"  பாடல். 

      இது சிவாஜி ஜெயசுதா தன் தங்கை என தெரிந்துகொண்டு (ஆனால் ஜெயசுதாவுக்குத் தெரியாது)  அவர் வசிக்கும் குடிசைக்குள் நுழைந்து அந்தக்குழந்தையின் தூளியை (மட்டும்) ஆட்டியபடி பாடும் பாடல்!!

      ஹிஹிஹி....

      நீக்கு
    2. ஜின்னத்தம்பி என்ன மாதிரியான கிறுக்கன்?...

      எலக்கண எலக்கியமா பாடத் தெரியுமாம்...
      கலியாணம் ..ண்டால் என்னான்னு தெரியாதாம்!..

      எப்பிடியோ கல்லா கட்டிட்டாங்க!...

      நீக்கு
    3. அதானே...    அவர் அப்பாவின்னு ஜனங்களும் நம்பிட்டாங்க...  "ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலிக்கயிறு...   என்னான்னு தெரியாது எனக்கு...   ஆத்தாளை நான் கேட்டு அறிஞ்சேனே இன்று...   ஆனாலும் பயனென்ன அதற்கு!"  அர்த்தத்தையா பார்த்தோம்..    இசையை அல்லவா பார்த்தோம்! வேறென்ன எல்லாமே அவர் செய்த பாவம் இல்லை..    நாம் செய்த பாவம்!!!!!

      நீக்கு
  7. இரண்டு பாடலுமே அற்புதமான மெட்டு. இதையெல்லாம் ஆழ்ந்து ரசிக்கும் ரசனை வேண்டும் இது சிலருக்கே இருக்ககூடும். அந்த சிலரில் நானும் ஒருவனே...

    அன்று "ஞானம்" தியேட்டரில் பச்சை வண்ணம் அடித்த கதவுக்கு அருகில் அமர்ந்திருந்த என்னை நினைவு கூறும் "ஞானம்" வராதது காலத்தின் கோலமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?   என்ன ஆச்சர்யம்!   ஆனால் நான் அந்த மீசையைக்கண்டு (!!!!)  பயந்து போயிருப்பேன் கில்லர்ஜி...   அதனால் சொல்லவில்லையே என்னவோ!

      நீக்கு
  8. நேற்று மாலை முக்கியமான வேலையாக முப்பது கி.மீ. தூரம் பேருந்தில் பயணம்... குளிர் காலம் ஆரம்பமாகி விட்டதால் சிலு சிலு என்று காற்று...

    பேருந்தில் அதிகக் கூட்டமில்லை...

    மனமாரப் பாடிக் கொண்டு சென்ற பாடல்களுள் இதுவும் ஒன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   என்ன ஆச்சர்யம் துரை செல்வராஜூ ஸார்...    நேற்று பாடிச் சென்ற பாடல்களில் இதுவும் ஒன்றா?   அந்த ஒன்று இங்கு பகிர்ந்திருக்கும் இரண்டில் எது?

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...     காலை வணக்கம்....    வாங்க...  வாங்க....

      நீக்கு
  10. கல்யாணியோ காந்தாரியோ!...

    இனிய சந்தத்துடன் கூடிய பாடல்...

    ஆனால் -

    அந்த மஞ்சுளா தான் வெறுங்காலோட ஆடிக்கிட்டு வருவாங்க..

    பரத நாட்டிய பாவனா (!)
    அதுக்குள்ள இது வேறயா...

    பரத நாட்டிய பாவனை..ங்கறதால இப்படி இருக்குமோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணி இதுவல்ல துரை செல்வராஜூ ஸார்...      திருவருட்செல்வர் பாட்டுதான் கல்யாணி..     இந்த ரிலாண்டு பாடல்களும் என்ன ராகம்னுன்னும் வெளியாகவில்லை.  கீதா ரெங்கன் கேட்டுகிட்டே ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்காங்க....

      நீக்கு
    2. //ரிலாண்டு பாடல்களும் //

      * இரண்டு பாடல்களும் 

      நீக்கு
  11. இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன்.
    மீண்டும் கேட்டேன்.
    இரண்டாவது பாடல் அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு வருகிறேன்.
    தேனும், பாலும் நிகழ்ச்சியில் , தேனருவி நிகழ்ச்சியில் கேட்டு இருக்கிறேன்.
    மெகா தொலைக்காட்சியில் அடிக்கடி வைப்பார்கள், இப்போது மெகா எங்களுக்கு தெரிவது இல்லை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா..    அவ்வப்போது போட்டுக் கொண்டிருப்பார்கள்,  அதலாம்தான் கமலா அக்கா இந்தப் பாடலை கேட்டதில்லை என்றதும் சற்றே ஆச்சர்யப்பட்டேன்.

      நீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இரண்டு பாடல்களும் இனிமை. கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வெங்கட்.

      கேட்டு ரசித்திருக்கிறீர்களா?   நன்றி வெங்கட்.

      நீக்கு
  13. என்ன இது?... காலங்கார்த்தால கல்யாணி, காந்தாரி, பாவனா, சாதனா...ன்னுக்கிட்டு?..
    கலா மாமி பக்கத்துல இல்லைன்ற தைரியமா!...

    அப்படியெல்லாம் இல்லை... ஆனாலும் அவ்விடத்துல..
    ஆனா, தானா... அஃகன்னா..ன்னு அளந்து உடுறதில
    இதெல்லாம் சும்மா லுலுலுவாயி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லுலுலுலாயியோ, இருளாயியோ...   எல்லாம் ஒரு சுவாரஸ்யம்தான்!

      நீக்கு
  14. இரண்டு பாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். மிகவும் இனிமையான பாடல்கள்.

    சிறுவயதில் இந்தப் படங்களுக்குச் செல்லும் வாய்ப்பில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத்தமிழன்.   சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.  எனக்கு பாட்டி (அப்பம்மா!) உபயத்தில் படம் பார்க்க அனுமதி கிடைக்கும்.  நாங்கள் தஞ்சாவூரில் இருந்தோம்.  பாட்டி குடந்தை அருகே பெரும்பண்ணையூர் என்கிற கிராமத்தில் இருந்தார்.   அவ்வப்போது படங்கள் சேர்ந்ததும் தஞ்சை வந்து கொத்துக்கொத்தாய் படங்கள் பார்த்துச் செல்வார்.  துணைக்கு நான்!  வசந்த மாளிகை, ராஜா, இன்னும் சில பெயர் ஞாபகமில்லா படங்கள் அப்படிதான்!

      நீக்கு
    2. வெள்ளி இடுகை தலைப்பைப் படித்து பாடல் நினைவுக்கு வருதா என்று பார்த்துவிட்டுத்தான் இடுகைக்குள் நுழைவேன். இன்று பாடலே மனதில் ஓடியது.

      சிறு வயதில் 4ப்பூ... என் பெரியம்மா பையன் 11ப்பூ.. இசை ஆரம்பித்த உடனேயே பாடலைச் சொல்லுவான். அப்போ எனக்கு அது அதிசயமா இருக்கும்

      பழைய பாடல்கள், அதிலும் சிவாஜி படப் பாடல்கள் பெரும்பாலும் காதால் கேட்க இனிமை. கண்ணால் பார்க்கக் கொடுமை என்பது என் அபிப்ராயம்.

      நீக்கு
    3. அதிலும் மஞ்சுளாவுடன் என்றால் கொடுமையிலும் பெரும் கொடுமை! அதைத் தனியாகக் குறிப்பிட வேண்டாமோ? :-)))

      நீக்கு
    4. வாங்க கிருஷ் ஸார்...   என்மகன், உத்தமன், டாக்டர் சிவா எங்கள் தங்க ராஜா...    அப்புறம் என்ன படம் மஞ்சுளாவோடு நடித்திருக்கிறார் சிவாஜி?

      நீக்கு
    5. கிருஷ்ணமூர்த்தி சார் - அப்போ ஸ்ரீதேவி, அம்பிகா இவங்களோட ஜோடியா நடிச்சா பரவாயில்லையா? பாவம் உடம்பு கொஞ்சம் பெருத்திருந்ததனால் நமக்கு கொஞ்சம் கொடுமையா இருக்கு. இப்போ பாருங்க 60, 70+ வயசெல்லாம் 20 வயசுகளோட நடிக்குதுகள். நாமும் ரொம்ப குற்றம் சொல்றதில்லை, ஏன்னா அவங்க உடம்பை 40 மாதிரி வச்சிருக்கறதுனால.

      நீக்கு
    6. நான் ஜிவாஜி வயசு, பருமன் இப்படி எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மஞ்சுளாவை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றுதான் சொன்னேன்! சகித்துக் கொள்ள முடிந்த ஒரே ஒரு படம் சாந்தி நிலையம்.

      நீக்கு
  15. >>> சிறுவயதில் இந்தப் படங்களுக்குச் செல்லும் வாய்ப்பில்லை.. <<<

    கொடுத்து வைச்சவங்க நீங்க!..

    ஆனாலும் அந்தப் பாக்கியமெல்லாம் மீண்டும் வருமோ?...

    இதென்னது? காலைல இருந்து பொண்ணுங்க பேரா நெனவுக்கு வருது?...

    அது யாரு அந்தப் பாக்கியா?.. ந்னு யாராவது வந்துடப் போறாங்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லீவுதானே?  குளிச்சுட்டு லட்சுமி, சரஸ்வதிக்கெல்லாம் (அட,  சாமிதாங்க...) கம்முனு பூஜை போடுங்க...   எல்லாம் சரியாயிடும்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... எனக்கு புத்தகங்கள் படிப்பதில்தான் (ஸ்டாப் ஸ்டாப்... கற்பனையை ஓட்டாதீங்க.. நான் சொன்னது நாவல்கள், கல்கி, விகடன், குமுதம் இத்யாதி). குமுத்த்தை மட்டும் எங்கப்பா பார்த்தால் என்னடா ஒம்பளைப் பத்திரிகை படிக்கறன்னு திட்டு விழும்.

      நீக்கு
  16. தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டரிலோ, ஞானம் தியேட்டரிலோ பார்த்தேன்.//

    நின் தஞ்சையில் பணியாற்றிபோது இந்த இரண்டு தியேட்டர்களிலும் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்.

      சிவாஜி ரசிகன் இல்லையா?  அதனால் ஆவலாகப் பார்த்த//

    நானும் ஒரு காலத்தில் சிவாஜி ரசிகன்தான்...அதாவது எழுபதுகளில்.. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜோஸப் ஸார்...    நானும் ஒரு காலத்தில்தான் சிவாஜி ரசிகன்!  இப்போ கொஞ்சம் ஞானம் வந்து விட்டது!!!!  தஞ்சையில் எங்கு, எந்த வங்கியில் பணியாற்றினீர்கள்?

      நீக்கு
  17. இந்த இரண்டு பாடல்களில் முதல் தெரிவு எது, இரண்டாவது தெரிவு எது என்று சொல்வது சற்றே கடினம்.இரண்டுமே முதல் தெரிவாக கூட வைத்துக்கொள்ளலாம்.//

    உண்மையில் சொல்லப் போனால் சிவாஜியின் பல படங்கள் எம் எஸ்ஸின் பாடல்களுக்காகவே ஓடியது என்றாலும் மிகையாகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி என்றில்லை, எம் ஜி ஆர் படங்களிலும் அதே கதைதான் ஜோஸப் ஸார்.

      நன்றி ஸார்.

      நீக்கு
  18. ஞானமுமில்லை; ஜூபிடருமில்லை... ராஜா கலையரங்கத்தில் பார்த்த படம் இது. இரண்டு பாடல்களுமே அருமை.கவியரசர் எழுத மெல்லிசை மன்னர் இசை மெருகூட்ட டி.எம். சௌந்தர்ராஜனும், பி.சுசீலாவும் செதுக்கிய பாடல்கள். குறிப்பாக, தாலாட்டு நம்மை உருக்கிவிடும்.

    பதிலளிநீக்கு
  19. இரண்டு பாடல்களுமே இனிமையானவை.திருவருட்செல்வர் படம் பார்திருக்கிறேன்.
    சுசீலா அவர்களின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் நெல்லை அவர்களுக்கு..

    >>> அதிலும் சிவாஜி படப் பாடல்கள் பெரும்பாலும் காதால் கேட்க இனிமை. கண்ணால் பார்க்கக் கொடுமை என்பது என் அபிப்ராயம்.. <<<<

    உங்கள் அபிப்பிராயம் அதுவாக இருந்தாலும்

    பிற்காலப் படங்களில் அவரை அப்படி நடிக்க வைத்துக் கெடுத்தார்கள்..

    அவர் அப்படி நடிக்கச் சம்மதித்ததற்கு காரணங்கள் பல இருக்கலாம்....

    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - இரும்புத் திரை
    முல்லை மலர் மேலே - உத்தமபுத்திரன்
    இரவும் நிலவும் - கர்ணன்
    பாவாடை தாவணியில் - நிச்சயதாம்பூலம்
    தாழையாம் பூமுடித்து - பாகப் பிரிவினை
    பாலிருக்கும் - பாவமன்னிப்பு
    கொடியசைந்ததும் - பார்த்தால் பசி தீரும்

    இப்படி இன்னும் பல பாடல் காட்சிகள் தங்களைக் கவரும் என்றே நம்புகின்றேன்...

    இயக்குனர்கள் சொன்னதைச் செய்து விட்டுப் போய் விட்டார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அவர் மாத்திரம் உடலை ஒல்லியாக வைத்துக்கொண்டிருந்தால் இன்னும் காலத்தால் அழியாத படங்கள் படைத்திருப்பார் (ரஜினி 70லும் நாம் ரசிக்க முடிவது மாதிரி). கர்ணன் படம்லாம் நினைவுபடுத்தாதீர்கள். அந்த மாதிரி இசைக்கு, வரிகளுக்கு யாரேனும் பிறந்து வந்தால்தான் சாத்தியம். இப்போவும் ரசிக்கும் படம்.

      சமீபத்தில் சித்ரா லட்சுமணனின் காணொளில அவர் சொல்றார்... முதல் மரியாதை படம் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்தது. அன்றைய காட்சிகளை பார்த்துவிட்டு பாரதிராஔஐஆவுக்கு மனதில் குழப்பம். எல்லோருக்கும் சிவாஜி நடிப்பு பிடித்திருந்தது. ஆனால் பாரதிராஜாவுக்கு ஏதோ குழப்பம். இரவு சிவாஜி வீட்டுக்கு இருவரும் போனார்களாம். பாரதிராஜா கடைசியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அண்ணே... விக் மற்றும் மேக்கப் இல்லாம வாங்க. திரும்பவும் படமெடுத்துடலாம் என்று சொன்னாராம்.. படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசைக்கு முன் படம் பார்த்த பஞ்சு, இளையராஜாவுக்கு படம் சுத்தமா பிடிக்கலையாம். தனக்குப் பிடிக்காத படம், பாரதிராஜாவின் கையைக் கடிக்கப்போகும் படம்... தன் கடும் உழைப்பைக் கொடுத்து பின்னணி இசை அமைத்த இளையராஜா ஒரு பைசாகூட ஊதியம் வாங்கிக்கொள்ளவில்லையாம். படம் சிவாஜி மற்றும் அவர் குடும்பத்துக்கு மட்டும் பிரமாதமாக வந்திருப்பதாக அபிப்ராயம்.

      ஒரு படம் வெற்றி பெறுமா பெறாதா என்று உறுதியாக யாருக்கும் தெரிவதில்லை. நல்ல இயக்குநர்கள் அமைந்திருந்தால் புது யுகத்திலும் சிவாஜிக்கு ரசிகர்கள் பெருகியிருப்பர். பாக்யராஜ்கூட சிவாஜியை நன்றாக உபயோகப்படுத்தலை

      நீக்கு
    2. //(ரஜினி 70லும் நாம் ரசிக்க முடிவது மாதிரி//
      என்னால இதை ரசிக்க முடியவில்லை நெ.தமிழன்... இந்த வயசில போய் சின்னஞ் சிறுகளை ஜோடி சேர்த்துக் கொண்டு நடிப்பது பார்க்கப் பிடிக்கவில்லை.. எங்கட சிவாஜி அங்கிளைப்போல, ஒரு வயசின் மேல் அப்பா வேசம் போட்டால்தான் அது அழகு.. உடம்பு மெல்லிசாக இருந்தால் மட்டும் போதுமோ:))

      நீக்கு
    3. //ஜோடி சேர்த்துக் கொண்டு நடிப்பது பார்க்கப் பிடிக்கவில்லை..// - பொறாமையோ? ஹா ஹா. அவங்களுக்கு மச்சம் நடிக்கறாங்க, கல்லா கட்டறாங்க. ஏன்... 47 வய்சு விஜய், 25 வயசு கீர்த்தி சுரேஷோட நடிச்சிருக்காரே.. ஹா ஹா

      நீக்கு
    4. துரை சார் மேலே குறிப்பிட்டிருக்கும் பழைய சிவாஜி படப் பாடல்கள் எல்லாம் class. இனிமையிலும் இனிமை.

      நீக்கு
  21. என்னதான் சிவாஜி ரசிகையாக இருந்தாலும், சிவாஜி,மஞ்சுளா ஜோடியாக நடித்த படங்களையெல்லாம் பார்த்ததில்லை.எங்கள் தங்க ராஜா விதிவிலக்கு. இரண்டுமே நல்ல பாடல்கள். அடிக்கடி விவிதபாரதியில் ஒலி பரப்புவார்களே.  'காதல் ராஜ்ஜியம் எனது...' பாடலின் ஆரம்பமும், பாடல் முழுவதும் ஒலிக்கும் குதிரையின் குளம்பொலி ஓசையும் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..' பாடலை நினைவு படுத்தும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...     ராஜாவின் பார்வை பாடல் சற்றே போர்!    இந்தப் பாடல் ரசிக்க வைக்கும்.

      நீக்கு
    2. என்னாது? சற்றே போரா? ஸ்ரீராம்! தீர்ப்பை மாத்துங்க இல்லாட்டி ரசனை கொறைச்சல்னு ஒத்துக்குங்க! :-))
      ஒவ்வொரு பாட்டும் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷல்! எனக்கு ஜி ராம்நாதனோ, அல்லது எஸ் எம் சுப்பையா நாயுடுவோ வெறும் பானையை தாளவாத்தியமாகப் பயன்படுத்திப் போட்ட ட்யூன்கள் இன்றைக்கும் பிடிக்கும். அதற்காக அதை மட்டும் தான் மெலடி மற்றதெல்லாம் பதடி என்று சொல்லிவிட முடியுமா?

      நீக்கு
    3. ஹா...    ஹா...   ஹா...   அந்தப் பாடல் கேட்க எனக்குப் பொறுமை போய்விடும் கிருஷ் சார்...     அதே போல "நினைத்தேன் வந்தாய் நூறு வயது"  பாடலும்...

      நீக்கு
  22. ஸ்ரீராம் இப்ப ஒரு கமென்ட் போட்டுட்டு போறேன்...மீண்டும் வருகிறேன்...கரன்ட் போய் போய் வருது வோல்டேஜ் ப்ராப்ளமும்...கரன்ட் ஸ்டெடியா வந்தப்புறம் வரேன்

    இரண்டு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன் உபயம் இலங்கை வானொலி. பிடித்த பாடல்கள்! இரண்டுமே அப்ப இ வா ல அடிக்கடி போடப்படும் பாடல்கள் என்று நினைவு..

    முதல் பாட்டு ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே முதல் சரணம் முடிந்ததும் மீண்டும் எடுத்துப் பாடும் போது இந்த லைனை 2 முறை சொல்லும் இடம் அந்த லைன் அப்படியே தர்பாரி கானடா னு சொல்லுது...ஆனா வேறு ராகம் டச் ஆகுதுன்னு தோணுது.....இன்னும் கேட்டுவிட்டு சொல்லுறேன்...

    ரெண்டாவது பாடல் செம...அதுவும் இன்னும் கூடக் கொஞ்சம் கேட்டுவிட்டு வந்து சொல்கிறேன் ஸ்ரீராம்...இப்ப மீண்டும் கரன்ட் போய்டுமாம்....ஸோ மொபைல்ல பாட்டைக் கேட்டுவிட்டு வரேன்...கரண்ட் வந்ததும்...

    ரெண்டாவது பாடல்ல பல வரிகள் செம டி எம் எஸ் அண்ட் சுசீலா கலக்குறாங்க....சரணம் செம ஃபீல் கொடுத்து பாடியிருக்காங்க அந்த சிச்சுவேஷன்னு ஏத்தாப்புல...மீண்டும் வரேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம் இப்ப ஒரு கமென்ட் போட்டுட்டு போறேன்...மீண்டும் வருகிறேன்..//

      என்னாதூஊஊஊஊஉ ஒரு கொமெண்ட்டோ? மீண்டும் வாறீங்களோ?:)) ஹையோ எனக்காராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோஓ.. மீ மயங்கிங்ங்ங்ங்ங்:)).. ஹா ஹா ஹா ஓகே மீ ஓடிடுறேன்ன்ன்.. மீண்டும் எப்போ சந்திப்பேனோ.. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!:))

      நீக்கு
    2. சரி கீதா...    அப்புறமா வாங்க...     அதற்குள் அதிராவுக்கு பொறாமை, திகைப்பு..  நீங்கள் ஒரு கமெண்ட் என்று சொன்னதில்!

      நீக்கு
    3. ஹா ஹா அஹ பக்தி "மான்" துள்ளி துள்ளி ஓடிட்டீங்களோ?! மயங்கிட்டீங்களா...இதோ எழுப்பி விடறேன்... நான் வந்தாச்சே...இப்பத்தான் கரன்ட் வந்நூஊஊஊஊஊஒ அந்த வரிய பார்க்கலையோ!! கரண்ட் போயிடும் ஸோ அப்புறம் வாரேன்னு சொன்னது...!!!!!

      ஊங்க பதில் இனிதான் பார்க்கணும் இங்க் முக்கியமான கமென்ட் கடமை ஆற்றிவிட்டு போறேன் தேம்ஸ்கு வாரேன்..

      கீதா

      நீக்கு
    4. ~ஸ்ரீராம்//
      அதற்குள் அதிராவுக்கு பொறாமை///

      ஆஆஆஆஆஆஆஆஆ ஒரு பக்திமானை:) இப்பூடி ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்சு மானபங்கப் படுத்திப் போட்டார் ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம் இதைத் தட்டிக்:) கேட்க இங்கின ஆருமே இல்லையோ:)).. சே..சே..சே... ஆபத்துக் குதவாப்பிள்ளை.. அரும்பசிக்கு உதவா அன்னம் தாகத்தைத் தீராத் தண்ணீர்:)
      ஒரு பக்திமானின் மானத்தைக் காக்காதோர் இருந்தென்ன லாபம்ம்ம்ம். ஏ அண்ணன் கூட வரல்லியே கர்ர்ர்ர்ர்:))...

      ஆஆஆஆஆஆ கீதா, இல்ல இல்ல என் பதில்களை நீங்கள் கறண்ட் வரும்போது படிச்சால் போதும்.. திரும்ப பதில் குடுக்கோணும் என்று நினைக்காதீங்கோ... மினக்கெட்டுப் பதில் எழுதிப் போடுகிறோம்ம்.. அதைப் படிக்கோணும் என மட்டும் எதிர்பார்ப்பேன்ன்:)).. மற்றும்படி குறை ஏதும் இல்லை மறைமூர்த்தி கண்ணாஅ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. ஆபத்தா! ஆமாமாம். பக்திமான்களுக்கு ஆபத்தான காலம்தான் இது.

      பக்தியை தூரத்தள்ளிட்டு - கருப்புப்புடவை, கருப்பு ரவிக்கை, கருப்புப் பொட்டு, கருப்புச் சப்பல், கருப்பு ஹேண்ட்பேக், கருப்பு வாட்ச், கருப்பு ஸெல்ஃபோன், கருப்புக் கண்ணாடி (!) சகிதமா, கருப்புக்கூந்தல் அலைபாய ஜங் -னு வந்து நில்லுங்க! அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

      நாட்டு நெலமயச் சொன்னேன்..

      நீக்கு
  23. ஆஆஆஆஅ அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)).. ஜாமம் நேரம் சரியா நினைவில்லை, ஒற்றைக்கண் மட்டும் திறந்து பார்த்தேன், அந்த ஒற்றைக்கண்ணிலும் ஒரு விசயம் மிஸ்ஸாகிறதே.. அப்போ இன்று ஸ்ரீராம் போஸ்ட் எழுதவில்லையோ:)) எழுதியிருந்தால், இப்படி மிஸ்ஸிங் வராதே:) எண்டெல்லாம் நினைச்செனா.. அப்பூடியே நித்திரையாகிட்டேன்ன்.. இப்போ பார்க்கிறேன்ன்.. அந்த மிஸ் வேர்ட் போடப்பட்டு விட்டது ஹா ஹா ஹா இது ஸ்ரீராமுக்கு மட்டும்தேன்ன் புரியுமாக்கும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஸ் ஆனதா?  சரியான நேரத்துக்குதானே வெளியானது?  இல்லையா?

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம் அவங்க பாட்டி!! தூக்கக் கலக்கத்துல கண்ணாடியும்போடாம பார்த்து ...அவங்க சொல்றத போயி....!!!!!!

      சரியான நேரத்துக்குத்தான் வெளியாச்சு ஸ்ரீராம்!!!

      கீதா

      நீக்கு
    3. //ஸ்ரீராம்.11 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:29
      மிஸ் ஆனதா? சரியான நேரத்துக்குதானே வெளியானது? இல்லையா?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேரம் பற்றியோ போஸ்ட் போட்டது பற்றியோ இங்கு நான் சொல்லவில்லையே... ஒரு சொல் மிஸ்ஸாகி இருந்தது, ஸ்ரீராம் எனில் இப்படி மிஸ் பண்ண மாட்டார்ர், அப்போ வேறு யாரோ இன்று போஸ்ட் போட்டிருக்கினம் என நினைச்சேன்ன்.. காலையில் பார்க்கிறேன்ன்.. அச்சொல்லை இணைச்சிட்டீங்க:)).. இதுக்கு மேல சொல்ல மாட்டேனாக்கும்:).. இது பூஸ் வானொலி நிலையம் பிரித்தானிய ஒலிபரப்பு:) ஒருமுறைதான் சொல்லும்.. திரும்பத்திரும்ப சொல்வதற்கு இங்கு ரேப் ரெகோடர் இல்லையாக்கும் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா ... மீ ஓடிடுறேன்ன்:))

      நீக்கு
    4. ஓ எஸ்...     புரிந்தது அதிரா...    மைக்ராஸ்க்கோப் கண்கள் உங்களுக்கு!

      நீக்கு
  24. //1975 இல் இந்தப் படத்தை தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டரிலோ, ஞானம் தியேட்டரிலோ பார்த்தேன்.//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊ ஓடிக்கமோன்ன்ன்.. எங்கட கணக்கு டப்பூஊஊஊஊஊஊஊஊஉ:)).. கணக்கில இன்னும் சில இலக்கம் கூட்ட வேண்டி இருக்கே ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    இதெல்லாம் வேறா?   இனி கொஞ்சம் கவனமாக இருப்பேன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அசந்து மறந்து கூட வருஷம் எதுவும் போட்டுடாதீங்க!!!! ஹா ஹா ஹா ஹா...கூட்டல் கழித்தல் போட்டுருவாங்க...!!!!!!! உங்க ஜீக்கரெட் ராக்கெட் போல வெளியாகலாமா!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. 75 ஆம் ஆண்டில் தியேட்டரில போய்ப் படம் பார்த்தவரெனில்:)).. ஹையோ நாங்க ரொம்பத் தப்புக் கணக்குப் போட்டிட்டோம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)).. ஆமா ஆமா ஜொள்ளிடாதீங்கோ ஸ்ரீராம்ம்ம்ம்:))..

      நீக்கு
  25. மன்னவன் வந்தானடி பாட்டு எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு... ஓ ஸ்ரீராமும் சிவாஜி ரசிகரோ.. எனக்கும் சிவாஜி அங்கிளையும் முத்துராமன் மாமாவையும்தான் பிடிக்கும்.. கீசாக்காவுக்குப் பிடிக்காதெல்லோ?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா...   அப்போ இதில் வரும் மற்ற இரண்டு பாடல்களைக் கூட கொஞ்சம் கேட்டிருப்பேன்.  ஆனால் இந்த இரண்டு பாடல்கள்தான் மனதில் தங்கி விட்டது.

      நீக்கு
  26. //அப்போது என் பக்கத்துக்கு இருக்கையில் துரை செல்வராஜூ ஸார் அமர்ந்து படம் பார்த்திருக்கக் கூடும்.//

    ஹா ஹா ஹா அந்நேரம் நீங்கள் ஒரு ஹாய்.. சொல்லவில்லையே எனத்தான் அவருக்கு இன்றுவரை கவலையாம்ம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அதுதான் கோவித்துக்கொண்டு பட்டுக்கோட்டை போய்விட்டாராம்...    ஆனா பாருங்க கதவுக்கு பக்கத்தில் கில்லர்ஜி இருந்திருக்கார், நான் கவனிக்கவில்லை!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஒருவேளை அப்போ மீசை இருந்திருக்காது கவனிச்சிருக்க மாட்டீங்க.. ஆனா வெளி வாசல்ல நெல்லைத்தமிழன் நிண்டவரமே:))

      நீக்கு
  27. இம்முறையும் எனக்கு இரண்டாவது முதலிடம் பிடிக்கவில்லை:)) முதலாவதுக்கே என் வோட்:)).. சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்.. சூப்பர்ர்ர்ர்.....

    2 வது கேட்டதாகவும் தெரியவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..    மிகவும் ரசிக்க வைக்கும் பாடல் அது.   வரிகளும் சூப்பர்.  அதனால்தான் அதை இரண்டாவது முறையாக பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்!

      இரண்டாவது பாடலைக் கேட்டுப்பாருங்கள்.  ரொம்ப நல்லாயிருக்கும்.

      நீக்கு
  28. குறை நினைச்சிடாதீங்கோ ஸ்ரீராம், இன்றும் எனக்குத் தலைப்புப் பிடிக்கவில்லை:(..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் ஏனென்று புரியவில்லை.  நேற்றும் சொன்னீர்கள்.  வாடை என்பது நாற்றம் என்ற பொருள் கொண்டீர்கள்போல...   இங்கு ஊமை, ஊமையின் பாஷை என்பதெல்லாம் பிடிக்கவில்லையோ....

      நீக்கு
    2. அதிரா அண்ட் ஸ்ரீராம் உண்மையாக இந்த வரிகளைக் கோட் செய்ய வேண்டும் என்றுருந்தேன் அருமையான வரிகள் என்று...காலையில் விட்டுப் போச்சு...மறந்தும் போச்சு இப்ப இங்கு பார்த்ததும் நினைவுக்கு வந்தது..

      ஸ்ரீராம் அந்த வரிகள் கொஞ்சம் மனதைக் கஷ்டப்படுத்தும் வருத்தமான வரிகள் இல்லயா அதான் அதிரா சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. எனக்கு அந்தப் பாடலின் சரணங்களின் வரிகள் எல்லாமே பிடிக்கும் கீதா...    அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்...  (கத்திக்கொண்டிருப்பேன்!)

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    தங்களது இரண்டாவது பகிர்வான பாடலை கேட்ட பின் பாடல் ரேடியோவில் கேட்டிருப்பது நினைவுக்கு வந்தது. 1970.. பதுகளில் வந்த படங்களை அதிகம் பார்த்ததில்லை. அப்போதெல்லாம் அதிக படங்களை பார்க்க வீட்டில் தடா...

    திருவருட்செல்வரில் வரும் "மன்னவன் வந்தானடி" பாடல் அதிகமாக கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இந்த மன்னவன் வந்ததே தெரியவில்லை.

    சிவாஜியின் பழைய படங்கள் கூட ஓரளவுக்கு தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். இந்தப்படம் அதிலும், பார்த்த நினைவில்லை இப்போது பாடலை ரசித்து கேட்டேன். டி.எம் எஸ.அவர்கள், பி. சுசிலா அவர்களின் இனிமையான குரலில் எம். எஸ். வி இசையில் பாடல் அற்புதமாக இருக்கிறது. இந்த மூவரின் கூட்டணிதான் எத்தனை அருமையான பாடல்களை தந்துள்ளது...
    தங்கள் வெள்ளி பாடல்கள் அதையெல்லாம் மறுபடியும் மீட்டு தந்து எங்களை வாராவாரம் சந்தோஷப்படுத்தி போகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...
      சிவாஜி படம் என்பதால் நானும் எல்லாப் படங்களும் பார்த்திருப்பேன் என்று அர்த்தமில்லை.  இது பார்க்க வாய்த்தது. பாடல்கள் இரண்டுமே ரசிக்க வைக்கும் ரகம் என்பதில் சந்தேகமில்லை.

      நன்றி அக்கா.

      நீக்கு
  30. சொர்கத்தில் பாட்டு காலையில் சொன்னது போல ஸ்ரீராம் அது இரு ராகங்கள் வருவது போல இருக்குனு சொன்னேன் இல்லையா அதான் ஜோன்புடி அந்த பாடல் என் சிற்றறிவுக்கு எட்டியவரை...

    காதல் ராஜ்ஜியம் பாட்டு சுத்த சாரங்க் அப்புறம் தேஷ் எல்லாம் வருவது போல இருக்கு....என் சிற்றறிவுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ...    தேஷை வாசனை பார்க்க முடியவில்லை அந்தப் பாடலில்.  நன்றி கீதா.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சரணத்தில் தேஷ் எட்டிப்பார்ப்பது போல இருந்துச்சு.

      ஸ்ரீராம் உங்க இசைக் குழு!!!!! என்ன சொல்றாங்க இந்தப் பாடல்களுக்கு ராகம்..

      நானும் இந்த ரெண்டையும் கொஞ்சம் தான் ஆராய்ந்தேன்...காதல் ராஜ்ஜியம் சுத்த சாரங்க்/ஹம்சநாதத்திற்கு கொஞ்சம் பக்கத்துல வரும் ..தேஷ்னா நீங்க பக்காவா பார்க்க முடியாது ஸ்ரீராம்.

      நானும் இன்னும் ஆராய வேண்டும். இப்போதைக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கேன்...

      அது போலத்தான் சொர்கத்தில் பாட்டும்...

      காதல் ராஜ்ஜியம் செம ட்யூன்...இன்னும் கொஞ்சம் ஆராய்கின்றேன்...ஸ்ரீராம் இந்தப் பாட்டில் ஆரம்பத்தில் தொடங்கியதும் ஜஸ்ட் ஸ்வரத்தை மட்டும் அவரோகணம் ஆரோகணமாக வந்ததும் பாட்டு தொடங்கும்...அந்த இடத்தைக் கூர்ந்து கேட்டுப் பாருங்க ஒரு ராகம் கிடைக்கும்...

      செம பாட்டு இது குதிரை குளம்புச் சத்தம் எல்லாம்..அதே போலத்தான் முதல் பாடலும்...மெல்லிசை மன்னர் ஜீனியஸ் என்றே சொல்லுவேன். அவரைப் பத்தி உங்களுக்குத்தான் தெரியுமே அவரது ஆரம்ப வாழ்க்கை...அந்த மாதிரியான ஒரு பேக்ரவுண்டில் இருந்து ஹையோ வாவ்!!! பிரமிப்பாக இருக்கிறது...நல்ல மனிதரும் கூட..

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்.  ஜீனியஸ்தான் அவர்.  இல்லாமல் பின்னே இவளவு இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்க முடியுமா?

      நீக்கு
    4. ஸ்ரீராம் உங்களுக்கு வாட்சப்பில் சொல்லியிருந்தேன் இல்லையா காதல் ராஜ்ஜியம் பாட்டில் பிருந்தாவனி இருக்குன்னு

      அந்த ஆரம்ப இசை ஸ்வரம் போல வருதே அது பிருந்தாவனி...கவனிங்க பிருந்தாவனி நாட் பிருந்தாவனசாரங்கா...

      ஸோ அதனால்தான் அப்புறம் இடையில் தேஷ் ஸ்வரங்கள் வருது போல தோணிச்சு....பிருந்தாவனி த்வனிதான் கூடுதலா இருக்கு....ஸ்ரீராம்..

      கீதா

      நீக்கு
  31. பழைய பாடல்கள், அதிலும் சிவாஜி படப் பாடல்கள் பெரும்பாலும் காதால் கேட்க இனிமை. கண்ணால் பார்க்கக் கொடுமை என்பது என் அபிப்ராயம். ATHE ATHE. HI FIVE. MURALI MA.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமால்பெருமை, திருவிளையாடல், திருவருட்செல்வர்,  பழனி, பாகப்பிரிவினை, இதெல்லாம் கூடவா அம்மா?   எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு என்றாலும், சில படங்களுக்குதான்!!!

      நீக்கு
    2. ஓ. ஸ்ரீராம். நெல்லையின் கருத்தைப் பதிந்தேன்.
      சிவாஜியின் பின்னாட்களுக்கான பாடல்கள், இந்த் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா இவர்களொட
      நடித்ததைத்தான் சொன்னேன். நாகராஜன் படப் பாடல்களில் ப்ழுது சொல்ல முடியுமா. ஸாரிமா மிஸ்கோட்
      செய்து விட்டேன். தம்பி இருந்தால் தாவி வந்து சண்டை போட்டிருப்பான்.

      நீக்கு
  32. இருபாடல்களுமே பல முறை கேட்டிருக்கிறேன். எல்லாம் அங்கிருந்தவரை. அப்போதும் ரசித்ததுண்டு. இப்போதும் மீண்டும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி. படமும் பார்த்த நினைவு இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. அண்ணனின் மகனை தன் மகளுக்கு மாமன் என்று குறிப்பிட்டு தங்கை ஏங்குவதான பல தமிழ்ப்பட பாடல்கள் அந்நாட்களில் மக்களை உருக்கின.

    மாணிக்கப் பாலாடை - பச்சை
    மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை
    யானையும் வாகனமாய் - மாமன்
    தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்
    தருவார் சீதனமாய்

    வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
    வைர எழுத்தாணி கொண்டு
    தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
    பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
    அள்ளி அணைத்திட வருவார்
    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

    --- என்ற பராசக்தி பாடல் இந்த வகை பாடல்களுக்கு எனக்குத் தெரிந்து முதன்மையானது. கலைஞர் எழுதிய பாடல் இது என்று பாட்டுப் புத்தகத்தில் போட்டிருக்கும்.

    முறை மாமன் உறவுமுறையெல்லாம் செல்லாக்காசான காலம் இது.
    டி.வி.சீரியல்களில் புருஷனை, 'மாமா.. மாமா.' என்று அழைக்கும் பொழுதெல்லாம் நிகழ்காலத்து ''டா' கொஞ்சல்கள் எல்லாம் வழிவிட்டு ஒதுங்கின மாதிரி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலைத் தான் நான் முதலில் நினைத்தேன்.
      ஸ்ரீரஞ்சனி இந்தப் பாடல் பாடுவதும்,
      சிவாஜி வந்து அந்தப் பாப்பாவை என்னிடம் கொடுக்கறியா என்று கெஞ்சுவார்..
      தங்கை கல்யாணி ,தர மறுப்பார். நல்ல படம். நல்ல பாடல்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!