வெள்ளி, 25 அக்டோபர், 2019

வெள்ளி வீடியோ : இமைமூடித் தூங்காமல் போராடினேன் -உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன்



முக்தா ஸ்ரீனிவாசன் 1957 இல் முதலில் இயக்கிய 'முதலாளி' திரைப்படம் நான்கு மாதங்களில் தயாரிக்கப்பட்டதாம்.  



சாதாரணமாக அப்போதெல்லாம் படங்கள் தயாரிக்க ஒரு வருடம் ஆகுமாம்.  எனவே இது ஒரு சாதனை என்றால், அவர் இயக்கிய இந்த முதல் படம்  தேசிய விருது பெற்றது இன்னொரு சாதனை .   பின்னர் அவர் சொந்த நிறுவனம் தொடங்கினார்.  முக்தா பிலிம்ஸ்.  நடிகை சந்தியாவை இயக்கியிருக்கும் அவர் அவர் மகள் ஜெயலலிதாவையும் இயக்கி இருக்கிறார்.  



சோவையும், நாகேஷையும் இணைத்து மூன்று படங்கள் எடுத்தவர்.  வாலியை, தேவிகாவை, தீபாவை, விசுவை, மௌலியை எல்லாம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.  





எஸ். பாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற  'அந்த நாள்' திரைப்படத்தில் இவர் உதவி இயக்குனர்.  பின்னாட்களில் சிவாஜியை வைத்து பதினோரு படங்கள் இயக்கியிருக்கிறார்.  



புத்தகங்களும் நிறைய எழுதி இருக்கும் இவரை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன்.  தனது புத்தகங்களை தனது ஸ்டாலில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார். 



அவர் தயாரித்து இயக்கி இருக்கும்  'பூஜைக்கு வந்த மலர்' படத்திலிருந்து இன்று ஒரு பாடல்.  படத்தின் திரைக்கதையை எழுதி இருப்பவர் கே பாலச்சந்தர்!  படம் வெளிவந்த ஆண்டு 1965.



வாலியின் பாடலுக்கு  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.



பி பி ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரலில் மிக இனிமையான பாடல்.  பாடல் காட்சியில் நடித்திருப்பவர்கள் ஜெமினி - சாவித்ரி.  படத்தில் முத்துராமனும் உண்டு.  நாகேஷின் புகழ்பெற்ற இன்ஷுரன்ஸ் காமெடி இந்தப் படத்தில்தான்.



மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட 
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் 

குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக 
குயில் தந்த குரலாக நான் பாடுவேன் - கண் 
மையேந்தும் விழியாட...

உறவென்னும் விளக்காக உயிரென்னும் சுடராக 
ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன் 

விரல் கொஞ்சும் யாழாக யாழ் கொஞ்சும் இசையாக 
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன் 

கைவிரல் கொஞ்சும் யாழாக யாழ்கொஞ்சும் இசையாக 
இசைகொஞ்சும் மனமாக நான் மாறுவேன்...

இளங்காதல் வயதாலே தனியாகினேன் -அந்த 
இளவேனில் நிலவாலே கனியாகினேன் 

இமைமூடித் தூங்காமல் போராடினேன் -உந்தன் 
இதழோடு இதழ் வைத்து சீராடினேன் 


கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன் - உன் 
மடிமீது தலைசாய்த்து இளைப்பாறினேன் 

அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன் - அதைப் 
பரிமாறும் நேரத்தில் பசியாறினேன் 

94 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்த நன்னாளாக நிறைந்திருக்கவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  உங்களுக்கும் இந்த நாள் இனிமையானதாக அமையட்டும்.

      நீக்கு
    2. உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    தலைப்பை பார்த்ததுமே பாடல் மனதுக்குள் ஓட ஆரம்பித்து விட்டது. அந்த அளவிற்கு இது மிக பிரபலமான பாடல். பி. பி ஸ்ரீனிவாஸ், சுசீலா அவர்களின் இனிமையான குரலில் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாது. மேலும் இன்றைய வெள்ளி பாடலுக்கு,அதன் படத்தை பற்றி கூடுதல் செய்திகள், இயக்குனரின் திறமைகள் என பல செய்திகள் பக்க வாத்தியமாக மிளிரச் செய்தது. இந்த படமும் நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். நாகேஷ் காமெடியும் இயல்பாக நன்றாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே நண்பர்களை அவ்வப்போது கேட்க நினைக்கும் கேள்வி...   தலைப்பில் போடும் வரிகளை வைத்து அதைப் படிக்கும்போதே பாடலைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறதா என்று...   இன்று நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள்போலும்...  எனக்குப் பிடித்த நாகேஷ் காமெடிகள் இந்தப் படக்காமெடியும் ஒன்று.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      சில பாடல்கள் இப்படித்தான் நீங்கள் பகிர்ந்த தலைப்பின் வரிகளை படித்துக் கொள்ளும் போதே. அதைப் பிடித்துக் கொண்டே என் மனதுள் வந்து விழுந்து விடும்..( இன்று வரை..! அதுவும் பழைய பாடல்கள்.. ) இப்போ வரும் புதுப் பாடல்கள் எங்கிருந்து எடுத்துப் போட்டாலும், பிடித்தும் ஏறாது. மனதில் பதிந்ததும் இல்லை.காரணம்.. இப்போதைய பாடல்களை அவ்வளவாக நான் கேட்பதேயில்லை.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வாங்க கமலா அக்கா...  நானும் பெரும்பாலும் புதிய பாடல்கள் பகிர்வதில்லை!

      நீக்கு
    4. //தலைப்பில் போடும் வரிகளை வைத்து அதைப் படிக்கும்போதே பாடலைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறதா என்று...//அதற்கு பாடலை நிறைய முறை கேட்டிருக்க வேண்டும். பாடல் வரிகள் மனதில் பதிந்திருக்க வேண்டும். 

      நீக்கு
    5. அப்படிக் கண்டுபிடிப்பது எனக்கு ஓரளவுக்கு எளிது என்பதால் கேட்டேன்!

      நீக்கு
  4. இந்தப்பாடல் - பூஜைக்கு வந்த மலர்...

    பாத காணிக்கை படத்தில் தான் இந்த அழகு வார்த்தைகளுடன் அந்தப் பாடல்...

    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா...
    பெண்ணென்று எண்ணிப் பேசாமல் வந்த
    பொன்வண்ண மேனிச் சிலையே வா...

    மலர் கொள்ள வந்த தலைவா வா..
    மனங் கொள்ள வந்த இறைவா வா...

    அடடா... அடடா!...

    கன்னித் தமிழ்
    திரைப் பாடல்களால்
    அணி செய்யப்பட்ட நாட்கள் அவை...

    இனி அப்படியொரு நாட்கள்
    அமையப் போவது இல்லை...

    அணி செய்வதற்கான
    கவிஞர்களும் கலைஞர்களும் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'பூஜைக்கு வந்தமலரே வா' பாடலின்  ஆரம்ப இசை...  ஏறுவரிசையில் கீதம் ஒலிக்கும்...  வரிகள் படிக்கும்போது அந்த ஆரம்ப இசையும் மனதில் வந்துபோவது இசை அமைப்பாளரின் திறமை.  பி பி எஸ் ஜானகி இணையில் அபூர்வ பாடல்.

      நீக்கு
    2. அது பாவாடை, தாவணியில் கன்னித்தமிழ். களிப்பூட்டிய தமிழ்.
      இப்போது, சல்வார்-கமீஸில் சலிப்பூட்டும், பேண்ட்-ஷர்ட்டுக்குள் பம்மும்...

      நீக்கு
    3. லெகின்ஸ் என்ன பாவம் செய்தது?...

      அதை உட்டுட்டீங்களே!?...

      நீக்கு
  5. என்று கேட்டாலும் இனிமை...

    இன்னொரு பாடலும் மனதில் வந்து போனது :-

    கட்டோடு குழலாட ஆட - ஆட
    கண்ணென்ற மீனாட ஆட - ஆட
    கொத்தோடு நகையாட ஆட - ஆட
    கொண்டாடும் மயிலே நீ ஆடு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடும் தமிழ்! தாலாட்டியது யாரோ?

      நீக்கு
    2. தமிழுக்குத் தாலாட்டு யார் பாட?!...

      தமிழ் தன்னைத் தானே
      தாலாட்டிக் கொண்டது!!....

      நீக்கு
    3. வாங்க DD...   இந்தப் பாடலுக்கும் அந்த ஆரம்ப இசை...     அருமையான பாடல்.

      ஏகாந்தன் ஸார்...  கண்ணதாசனாய்தான் இருக்கும்.

      நீக்கு
  6. கீதா ஆர். சொல்கிறபடி டெலிபதி ஏதாவது இங்கு ‘ஓவர்ட்ரைவ்’ல் வேலை செய்கிறதா! துரைசாரின் கதைக்கு ஒரு கமெண்ட் போடுகிற சாக்கில் உங்கள் எஸ்.பி.பி பக்தியைக் கொஞ்சம் கலாய்த்துவிட்டிருந்தேன் செவ்வாயில். அதுபற்றிய தொடர்சிந்தனையில் நேற்று ‘இவரிடம் சொல்லி எஸ்பிபி மட்டும் போட்டுக்கொண்டிருக்காமல், வெள்ளியின் ஒரு பாடலாவது டிஎம் எஸ், பிபிஎஸ், ஏ எம் ராஜா, என்று போடச்சொல்லவேண்டும்.. அது கண்டசாலா, சிஎஸ்ஜே, பாகவதரில் போய் நின்றாலும் சரி..’ என நினைத்திருந்தேன்.
    இன்றைக்கு சமத்தாக பிபிஎஸ், பி.சுசீலாவைப் போட்டிருக்கிறீர்களே. சில சமயம் உங்களைப் பாராட்டத்தான் தோன்றுகிறது!

    கண்மையேந்தும் விழியாட.. மலரேந்தும் குழலாட.. இளம் வயதிலேயே என்னில் இழைந்த பாடல். சிலவரிகள் அதை, திரைப்பாடல் என்ற நிலையிலிருந்து வேறுதளத்திற்குக் கொண்டுபோயிருக்கும்.

    இது வாலியின் வேலையா? வாலி ஐயா! வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   நீங்கள் சொல்லியிருந்ததை படித்தேன் ஏகாந்தன் ஸார்...    ஏனோ அந்தப் பாடல் எஸ் பி பி பாடியிருந்தாலும் பிடித்திருக்காது...  !

      ஏற்கெனவே பாகவதர் பாடல்முதல் ஏ எம் ராஜாபாடல் வரை எல்லாம் பகிர்ந்திருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.

      //சில சமயம் உங்களைப் பாராட்டத்தான் தோன்றுகிறது!//

      சில சமயம்?!!!

      நீக்கு
    2. விஸ்வநாதன் -ராமமூர்த்தி இணை, சில இணையற்ற பாடல்களைத் தந்திருக்கிறது..
      சரி, காலை நடைக்கு நேரமாச்சு..

      நீக்கு
    3. //சில இணையற்ற//

      பணிவுடன் சிறு திருத்தம் :  சில அல்ல பல!

      நீக்கு
    4. // சில அல்ல.. பல..//

      மிகப் பணிவுடன்
      இன்னுமொரு சிறு திருத்தம்..

      பல அல்ல..

      பற்பல!...

      நீக்கு
    5. ஹா... ஹா...  ஹா...

      ஹேற்றுக் கொள்ளப்பட்டது!

      நீக்கு
    6. இருவரும் சொல்வது சரிதான்.

      விஸ்வனாதன்-ராமமூர்த்தி, அசத்திய இசை ஜோடி
      ஆனந்தமாவோம் பாடிப் பாடி...

      செய்த புண்ணியம். தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் - எத்தனைத் திறனான கவிஞர்கள், எத்தனை அருமையான இசையமைப்பாளர்கள், எத்தனை விதமாக மனதைக் கொள்ளைகொண்ட குரல்கள்..

      நீக்கு
    7. உண்மைதான்.  எனக்கும் தோன்றும்.

      நீக்கு
  7. மனதோடு மனமாட மணக்கும் தமிழ் - நல்
    இனத்தோடு இனம் கூடத் தழைக்கும் தமிழ்...

    வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ் ...

      அமிழ்து!

      நீக்கு
  8. எனக்கு அன்றைக்கே சந்தேகம் தட்டியது...

    பூங்குரலோன் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் வாழ்க..
    மெல்லிசை மன்னர்கள் வாழ்க..
    கவியரசர் வாழ்க..
    கன்னித் தமிழும் வாழ்க.. வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சந்தேகம்?  அதைச் சொல்லவே இல்லையே...

      நீக்கு
    2. இந்த வாரம் அந்த காலத்து நீராவி இஞ்சின் ரயிலில் எங்களை அழைத்துச் செல்வீர்கள்.. என நினைத்தேன்...

      நீக்கு
    3. இப்பவும் பிறந்த கேள்வி அங்கேயே நிற்கிறது!

      நீக்கு
  9. கேட்க கேட்க அலுக்காத, அருமையான பாடல். ஏன் இன்றைக்கு ஒன்றோடு நிறுத்தி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. வாங்க பானு அக்கா...    என்னவோ அப்படி அமைந்து விட்டது!

    பதிலளிநீக்கு
  11. முக்தா சீனிவாசனை நானும் புத்தக கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம்,'சூரியகாந்தி' போன்ற படங்கள் இனிமேல் வராதா? என்று கேட்டேன். அதற்கு அவர்,"வராதுமா, குடும்ப கதைகளை சீரியல்கள் எடுத்துக்கொண்டு விட்டன".  என்றார். ஜெயலலிதா தன் வாழ்க்கையில் முக்கியமான நான்கு ஆண்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டவர் முக்தா சீனிவாசன் அவர்கள். மற்ற மூவரில் எம்.ஜி.ஆர். கிடையாது.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொல்லி இருக்கிறார்.  அனுபவம்!  முக்கியமான ஒருவராக இவரைக் குறிப்பிடுவது கூட ஆச்சர்யம் இல்லை.  ஆனால் அந்த நால்வரில் எம் ஜி ஆர் இல்லையென்பது மிகப்பெரிய ஆச்சர்யம்!

      நீக்கு
    2. ஒரு அரசியல்வாதியாக அல்ல. தனிமனுஷியாக இருந்து, அதைச் சொல்லியிருக்கிறார். உண்மை ஓடோடி வந்துவிட்டது..

      நீக்கு
    3. எங்காவது ஓரிடத்திலாவது  உண்மை பேசிதானே ஆகவேண்டும்!

      நீக்கு
  12. முக்தா சீனிவாசன் இயக்கிய அனைத்து படங்களிலும் நகைச்சுவை காட்சிகள் மிக அருமையாக இருக்கும். தேன்மழை என்று நினைக்கிறேன். சோ அடிக்கும் லூட்டியை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜோஸப் ஸார்..தேன்மழை ஜோக்ஸ் ரொம்பப் பிரபலம்.   இங்கே வெள்ளி  வீடியோவிலேயே அதைப் பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  13. உறவென்னும் விளக்காக உயிரென்னும் சுடராக 

    ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்//

    எத்தனை அழகான வரிகள். அப்போதெல்லாம் எழுதப்பட்ட பாடல்களுக்காகவே இசை அமைக்கப்பட்டது. ஆகவேதான் பாடலாசிரியர்களால் அழகான பாடல்களை தரமுடிந்தது. இப்போது இசைக்கு ஏற்றவாறு பாடல்கள் எழுதப்படுவதால் வெற்று வார்த்தைகளின் கலப்பாகத்தான் பாடல்கள் அமைகின்றன.  

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பாடல் நல்லா இருக்கு. நல்ல வரிகள்.

    முக்தா ஸ்ரீனிவாசன் படங்களுக்கு அவர் தம்பிதான் ப்ரொடக்‌ஷன் மேனேஜர்னு நினைக்கிறேன். அதனைப் பற்றி முக்தா எழுதியிருந்து படித்தேனா நினைவில்லை. படப்பிடிப்புத் தளத்துக்குத் தேவையான எல்லாவற்றையும், உணவுப்பொருட்கள் முதல் கொண்டு ரெடி பண்ணிவைத்துவிடுவாராம். கடைசி நேரத்தில் திட்டத்தை முக்தா சீனிவாசன் மாற்றினால் அவருக்கு பயங்கர கோபம் வந்துடுமாம், பணம் வீணாகுதேன்னு..

    முக்தா சீனிவாசன் புத்தகம் வாங்கணும். அதுபோல சோ எழுதிய (குமுதம்) புத்தகம் வாங்கணும்..ஆனா விலைதான் கண்ணைக் கட்டுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   மிக இனிமையான பாடல் என்பதில் சந்தேகமே இல்லை!  முக்தா சீனிவாசன் நிறையபுத்தகங்கள் எழுதி இருக்கிறாரே...    எந்த புத்தகம்?  சோ குமுதத்தில் எழுதிய புத்தகத்தின் தலைப்பு என்ன? 

      நீக்கு
    2. சோ குமுதத்தில் தன் அனுபவங்களைத் தொடராக எழுதினார் இல்லையா...அதுதான் இல்லையா நெல்லை..

      கீதா

      நீக்கு
    3. //முக்தா ஸ்ரீனிவாசன் படங்களுக்கு அவர் தம்பிதான் ப்ரொடக்‌ஷன் மேனேஜர்னு நினைக்கிறேன். // தம்பி இல்லை அண்ணா. முக்தா ராமசாமி.  
      முக்தா ஸ்ரீனிவாசனின் புத்தகம் நான் வாங்கினேன். அப்படி ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. 

      நீக்கு
    4. அதனால்தான் நான் வாங்கவில்லை!

      நீக்கு
    5. சோ எழுதிய புத்தகம் 'ஒசாமா..' என்று ஏதோ வரும். 

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. பாடல் பிடித்த பாடல்.
    இனிமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  17. முக்தா சீனிவாசன் அவர்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  18. தலைப்புப் பாடலை எழுதியவருக்கு இன்ஃபெக்ஷன் கவலை எல்லாம் இல்லை போலிருக்கு.

    'முதலாளி' படம் என்றால் சேலம் எம்.ஏ.வேணு நினைவுக்கு வருவார். அடுத்து அந்த 'தென்னை மரச் சோலையிலே சிட்டு போல போற பென்ணே' பாடலும், அந்த பாடல் காட்சியில் இயல்பாக நடித்திருந்த எஸ்.எஸ்.ஆரும், தேவிகாவும். தேவிகாவின் முதல் படமும் இது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா....   தலைப்பை எழுதியவருக்கு அந்த வரிகளைக் கொடுத்தவருக்கே இல்லையே!

      நீக்கு
  19. //எஸ். பாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற 'அந்த நாள்' திரைப்படத்தில்//

    இரண்டு பாலச்சந்தர்களுக்கும் இன்ஷியல் வேறாக இருந்தாலும் சட்டென்று இருவருக்கும் வித்தியாசம் தெரிய வீணை எஸ். பாலச்
    சந்தர் என்று இவரைக் குறிப்பிடுவதுண்டு. இன்னொன்று. இந்த இருவரில் ஒருவர் தங்கள் பெயரில் 'பால'வுக்கு அடுத்து 'ச்' போட்டுக் கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  20. ஜெமினியின் காதல் காட்சி துள்ளல் நடிப்பையெல்லாம் பாராட்டக் கூடாதென்று என்று சபதமா எடுத்திருக்கிறீர்கள்?.. அவர் படங்களைப் போட்டு ரொப்பி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   ஜெமினி ரசிகரா நீங்கள்...    நான் பெரும்பாலும் பாடல் பகிர்வுகளில் பாடலைப் பற்றிச் சொல்லும் அளவு நடிப்பைப் பற்றிச் சொன்னதில்லை!

      நீக்கு
  21. ஸ்ரீராம் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். முன்பு. அருமையான பாடல். கேட்க கேட்க அலுக்காத பாடல். பல வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் கேட்டேன் ஸ்ரீராம்.

    மற்றவை எல்லாம் தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. இனிமையான பாடல்.
    கண்,விழி,மலர்,கூந்தல்,வளை எல்லாம் காதலன் வரவில்
    காத்திருந்து அசையும் பாடல் வரிகள்..
    சுசீலா அம்மா குரலும் ,பிபி ஸ்ரீனிவாசன் அவர்கள் குரலும் இழையும்
    இன்னோரு பாடல்.

    மெல்லிசை மன்னர்களும்,கண்ணதாசன்,வாலி இருவரின்
    கவிதைத் தமிழ் , மனதை விட்டு அகலுவதில்லை.
    மிக நன்றீ ஸ்ரீராம். இன்னும் இந்த ஊர் நேரத்துக்கும்
    என் உடல் நேரத்துக்கும் சிங்க் ஆகவில்லை.
    நேரமாகிறது. டைப் செய்வதற்கே."}

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...    இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள்?   அப்போதெல்லாம் பெரும்பாலும் பாடல்வரிகள், இசை, குரல் எல்லாமே நன்றாய் அமைந்திருந்தன - குறிப்பாக இந்தப் பாடலில்.

      நீக்கு
  23. /இதழோடு இதழ் வைத்து சீராடினேன் / அப்படியென்றால்....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் மனமும் தாமரை..
      என் மனமும் தாமரை...

      எனவே
      தாமரை இதழ்களோடு
      தாமரை இதழ்களை வைத்து சீராடினேன்..
      இன்பக் காவிரியில் ஆனந்த நீராடினேன்..

      இதுதான் அர்த்தம்....

      நீக்கு
  24. வாங்க ஜி எம் பி ஸார்...    மறந்து விட்டீர்கள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார்...

      சிறப்பு!

      நீக்கு
    2. ஜி எம் பி ஸார்...    எந்த தீபாவளி மலர் வாங்குவது என்று நாயகனுக்கு குழப்பமாம்.   அந்தக் குழப்பத்தில் அவருக்குத் தூக்கமே வரவில்லை.   அவரிடம் இருக்கும் காசுக்கு ஒரு தீபாவளி மலர்தான் வாங்க முடியும்.   கடைசியில் அவர் ஒன்று வாங்கி விட்டார்.   பார்த்தால் நாயகியும் வேறொரு தீபாவளி மலர் ஒன்று வாங்கி வந்து விட்டாராம்.  இரண்டு இதழையும் - தீபாவளி மலரையும் - ஒன்றாக வைத்து ஆனந்தத்தில் சீராடினாராம்.....
      அதைச் சொல்கிறார்.

      நீக்கு
    3. அடடா! விளக்கவே பிறந்தவர்கள் இங்கே .. பளபளன்னு மின்னுது !

      நீக்கு
  25. பாட்டை கேட்டுட்டே டைப்பிங் ..:) இனிய பாடல் ..இதுவரை கேட்டதில்லை .
    முக்தா சீனிவாசன் அவரகள் பற்றிய தகவல் அறிந்துகொண்டேன் 

    பதிலளிநீக்கு
  26. எங்கள் பிளாக் ஆசிரியர்கள் மற்றும் இங்கு வருகை தரும் அனைத்து நட்புக்கள் எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

    பதிலளிநீக்கு
  27. அழகிய பாட்டு.. கேட்டிருக்கிறேன்.

    ஆனா அக்காலத்து கதாநாயகிகளை இக்காலத்தில் கூட்டி வந்தால்.. அம்மாவாக இல்லாட்டில் பாட்டியாகத்தான் நடிக்க விடுவார்கள்.... இப்போதைய ஹீரோயின்ஸ் உடன் ஒப்பிடும்போது அக்காலக் ஹீரோயின்ஸ் அம்மாக்கள் போலெல்லோ இருக்கினம்..

    பதிலளிநீக்கு
  28. இசையோடு இசைந்து வரும் வரிகளால் ஆன பாடல்.
    சிறப்பான பகிர்வு

    பதிலளிநீக்கு
  29. இனிய பாடல். கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!