வியாழன், 16 ஏப்ரல், 2020

காவலரைக் கண்டால்...


பொறுக்கியும் போலீஸும் - சிறு அனுபவத் தொடர் 

திருமணமாகி வந்து குடித்தனம் வைத்த புதிதில் நான் இருந்த இடம் மெயின் ரோடிலிருந்து விலகி அது இருக்கும் இடமே மற்றவர்களுக்குத் தெரியாததாய் அமைந்த ஒரு இடம்.  அது ஒருவகையில் பாதுகாப்பு. ஒருவகையில் பாதுகாப்பில்லை! 

அங்கு திருட வரலாம் என்று யாருக்கும் ஐடியா கிடைக்காது.   உள்ளே வீடு இருப்பதே (மூன்று வீடுகள் மட்டும்)  தெரியாது.  இது பாதுகாப்பு. தப்பித்தவறி தெரிந்து விட்டால், தனியாய் இருப்பதே அல்லது மற்றபேர் கண்ணில் படாமல் இருப்பதே பாதுகாப்பின்மையும் கூட .

இதற்காக நான் ஆட்டோவில் வந்தால் கூட வெளியில் மெயின் ரோடிலேயே இறங்கி ஆட்டோ நகர்ந்ததும் உள்ளே நடப்போம். அவர் நாங்கள் எங்கே செல்கிறோம் என்று பார்க்கக் கூடாதே!


என் நண்பன் சொல்வான்...   "ஓவர் பாதுகாப்பு உடம்புக்கு ஆகாது தம்பி...  இப்படி இருப்பவர்கள்தான் செமையா மாட்டுவாங்க.."


எனக்கும் அந்த பயம் இருந்தது.   அதனாலேயே நான் இன்னும் பாதுகாப்பை பலப்படுத்துவேன்.  ஏனெனில் வீட்டில் நான், பாஸ், எங்கள் பத்து மாத குழந்தை..   அவ்வளவே..   அப்பா, அம்மாவைப் பிரிந்து தனிக்குடித்தனம் வைத்த புதிது.

எங்கள் வீடு இருந்த இடத்துக்கு எதிரே ஒரு பெரிய மைதானம் இருந்தது. பின்னாட்களில் சுற்றுச்சுவர் எழுப்பி மறைத்துவிட்ட அந்த மைதானத்தில் நாங்கள் வந்த புதிதில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன!  மைதானத்தை ஒட்டி இருந்த குடிசைகளில் கஞ்சா வியாபாரமும், பலான தொழிலும் நடந்ததாய்ச் சொல்வார்கள்.  அந்தக் குடிசையில் இருந்த பெண் நிமிர்ந்த பார்வையும் டாக் டாக் நடையுமாய் இருப்பாள்.  ஆண்களே அவளுக்கு பயப்படுவார்கள்.  போலீஸ் தாண்டிச் செல்லுமே தவிர அவளை ஒன்றும் கேட்காது!

அவள் எங்களிடம் மரியாதையாய் இருந்தாள்.  காம்பவுண்டுக்கு வெளியேதான்.  ஆனால் என் மகன் ஜன்னலில் ஏறி நின்று "அத்தே...  அத்தே..." என்று கத்துவான்.  அவள் திரும்பிப்பார்த்துப் புன்னகைப்பாள்!


உண்மையில் அப்போது எங்களிடம் தொலைக்காட்சிப் பெட்டி கூட கிடையாது...    ஒரே ஒரு பழைய சோஃபா...  இரண்டு பிரம்பு நாற்காலி, ஆனால் அது வருபவனுக்குத் தெரியாதே...   வெள்ளையும் சொள்ளையுமா இருக்கான்...   நல்லவேட்டை என்று தேட்டை போட வந்தால்...?!!  நகைகள் கூட ஊரில்தான் இருந்தது.  எங்கள் கையிலில்லை.


இந்த வகையில் நான் இன்னொரு பாதுகாப்பும் செய்வேன்.  எங்கள் அலுவலகத்துக்கு வாசலில் இருக்கும் கடையிலிருந்து தினசரி காலை/மாலை டீ வரும்.  மாதக்கணக்கு!  எப்போதாவது நான் ஊருக்குச் செல்வதாயிருந்து லீவில் சென்றால், ஊருக்குச் சென்றிருக்கிறார், அதனால் அவருக்கு இன்னும் மூன்று நாட்களுக்கு டீ வேண்டாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்று ஆபீசில் சொல்லி வைத்திருப்பேன்.


ஏனென்றால் டீக்கடைக்காரர் நல்லவர்தான்.  டீ கொண்டுவரும் பையனும் நல்லவன்தான். அவன் கேஷுவலாக கடையில்போய் "ஸ்ரீராம் சாருக்கு அடுத்த மூன்று நாள் டீ வேண்டாமாம்...  ஊருக்குப்போயிருக்கிறார்" என்று சொல்ல,  அதை கடை ஓனரும் கேட்பார், கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் "சிலரும்" கேட்கக்கூடும்.   அந்த "சிலர்"  தேட்டைபோட காத்திருப்பவர்களாயிருக்கக் கூடும்!  எனவே பாதுகாப்பு நடவடிக்கை!  கடைக்காரர்களும், அலுவலகத்திலும் கிண்டல் செய்யாமல் எனக்கு ஒத்துழைத்தார்கள்.  


ஆரம்ப காலங்களில் பழைய பேப்பர் எடுப்பவர்களை வீட்டுக்கே சில வருடங்கள் அழைத்ததில்லை.  பொதுவான இடத்தில் வைத்தே போட்டோம்.  போர்வை, கம்பளி விற்கும் வடநாட்டு வியாபாரிகளை பக்கம் அண்டவே விடுவதில்லை.  அதேபோலவே இலவச புத்தகம் தருகிறோம், டிக்ஷனரி தருகிறோம் என்று வருபவர்களையும் பக்கமே அனுமதித்ததில்லை.

இந்த சமயத்தில்தான் மதுரையில் நான் வளர்த்த இரண்டு நாய்ச் செல்லங்களும் என்னிடம் வந்து சேர்ந்தன.  அதிலொன்று இறந்துவிட, இன்னொன்று மட்டும் இருந்தது.  அது பிடிவாதக்கார ராட்சசன்.  எங்களையே அண்டவிடாது.  அது நினைத்ததுதான் செல்லும்!



பால்போட வருபவர்கள், பழைய பேப்பர்க்காரர்கள் அதைப் பார்த்து எச்சரிக்கையாய் இருப்பார்கள்.  "நானே பக்கத்தில்போக பயப்படுவேன்" என்று அவர்களிடம் நானும் செம பில்டப் கொடுப்பேன்!  அது ஓரளவு உண்மையும் கூட.


ஆள் கொஞ்சம் குள்ளம்.  ஆனால் கோபக்காரன்!  முகத்திலேயே தெரிகிறதா?  இவனைப்பற்றிச் சொல்ல சில சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு.  இவனை நண்பன் பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் மாமனார் மறைவுக்கு ஊர் சென்றிருக்க, நண்பன் இதனை வெளியில் கட்டி விட்டு, உட்கார்ந்து கொஞ்ச நேரம் காற்று வாங்கி விட்டு உள்ளே செல்ல முயன்றிருக்கிறான்.  அவனை நாற்காலியை விட்டு எழவே விடவில்லை இவன்.  உறுமி, குலைத்து அமர வைத்துப் படுத்தி இருக்கிறான்.

எதிர்பாராமல் ஏதாவது சத்தப் படுத்தினால் இவனுக்குப் பிடிக்காது.  ஒருநாள் இரவு படுக்கும் சமயம், என் அப்பா போர்வையை உதறிவிட்டு, இவன் கோபத்துக்கு ஆளாகி பட்டபாடு...

மெதுவாய் நடந்துவந்தால் ரொம்ப சந்தேகப்படுவான்.   அவனுக்கு ஏதோ ஆபத்து வருகிறது என்று நினைப்பான் போல.  என் அப்பாவைப் பெற்ற பாட்டி மெதுவாய்த்தான் நடந்து வருவார்.  அவர் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டால் வீடு ரணகளம்தான்!

அப்படியாவது இவனை ஏன் வளர்த்தீர்கள்?  வீட்டில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறீர்களா?  இவன் எங்களுக்கெல்லாம் செல்லம்தான்.  இவன் கோபத்தோடு சேர்ந்து இவனை நாங்கள் விரும்பினோம். 

இவ்வளவு கோபக்காரன், என் பெரிய மகன் பத்து மாதக் குழந்தை, மிக்சியைஇழுத்துக் கொண்டு வருவான்.  அவனைப் பார்த்து நகர்ந்து கொள்ளும்.  அவனை ஒன்றும் சொல்லாது..  கோபப்படாது!  கரண்டியைக் கொண்டுவந்து இவனை அடிப்பான் மகன்.  ஒன்றும் செய்யாது.  நகர்ந்து உட்கார்ந்து கொள்ளும்.  நாங்கள் ஓடிவந்து அவனைத் தூக்கிக்கொள்ளுவோம்!

இவன் மறைந்து ரொம்ப வருஷம் கழித்தும் வீட்டுக்கு வருபவர்களிடம் இவனின் தாக்கம் இருந்தது.  "அதை முதலில் கட்டிப்போடுங்கள்" என்பார்கள்!

நானும் அது மறைந்து விட்டது என்பதைச் சொல்லாமல், "அது மொட்டை மாடியில் கட்டிப் போடப்பட்டிருக்கிறது" என்று சொல்வேன்.

ஊர் செல்கையில் என்னிடமிருக்கும்  மேஜை, நாற்காலிகளை இழுத்து வாசல் கதவுக்கு அருகே நிறுத்துவேன்.  மேஜையின் காலில் கயிறு கட்டி, கதவை மூடியபின்  வெளியிலிருந்து கயிறை இழுத்து மேஜையை கதவை ஒட்டி வரச்செய்து கதவைப் பூட்டுவேன்.  மெதுவாய்த்தான் மேஜையை இழுக்கவேண்டும். நாங்கள் ஊரிலிருந்து வந்து கதவு திறக்கும்போதும் சர்வ ஜாக்கிரதையாய்த்தான் கதவைத் திறப்போம்! ஏனென்றால் மேஜை மேல் எவர்சில்வர் பாத்திரங்களை அடுக்கி வைத்திருப்பேன்.  கதவை உடைத்துத் திறந்தால் அவை கீழே உருண்டு சத்தம் ஊரையே கூட்டும்.  வந்திருப்பவர்கள் சத்தத்துக்கு பயந்தே ஓடிவிடுவார்கள் என்பதும் எங்கள் (அசட்டு!) நம்பிக்கை  மேலும் கீழ் வீட்டுக்காரர்கள் எழுந்து விடுவார்களென்று நம்பிக்கை. 
     
அட, அவர்கள் சத்தம் கேட்டு, அவர்கள் கதவை இன்னும் இழுத்து மூடிக் கொண்டாலும் இப்படி ஆட்கள் திருட வந்திருக்கிறார்களென்று தெரியவருமே...

இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு திகில் அனுபவம் கூட முன்னர் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

பின்னால் காம்பவுண்டுக்கு வெளியே இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் பெயரைக் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தோம்.  இரவு ஏதாவது ஆபத்து என்றால் குரல் கொடுக்க!  அவர்களிடமும் நட்பாய் முன்னரே பேசும்போது இயல்பாய் சொல்லி வைத்திருந்தோம்!
                      
எங்கள் காம்பவுண்ட் அருகில் வீடுகளே இல்லாததும், மைதானமும் முட்புதர்களும் எங்களை அப்படி எல்லாம் யோசிக்க வைத்திருந்தன.
                     
ஆனால் இதற்கெல்லாம் ஒன்றும் வாய்ப்பே வரவில்லையென்பது கடவுள் அருள்.  
                        
நாட்கள் செல்லச்செல்ல பழகி விட்டது என்பது வேறு விஷயம்.  பின்னாட்களில் நள்ளிரவில் எல்லாம் வெளியே உலாத்தும் அளவு பழகி விட்டோம்.
                     
கவலை இன்றிதான் இருந்தோம்.  அப்போது ஜூனியர் விகடன் வாங்கிப் படிக்கும் பழக்கம் உண்டு.  அதில் அவ்வப்போது ராத்திரி ரவுண்டப் போன்ற சமாச்சாரங்களுடன் ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள் பற்றியும் பதறவைக்கும் ரிப்போர்ட்கள் வரும்.  பத்திரிகை விற்க வேண்டுமே!​ இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் என்கிற பெயரில் பல விஷயங்களை நேரில் அல்லது மிக அருகில் இருந்து பார்த்தது போல எழுதுவார்கள்.
                        
அப்படி ஒருமுறை எழுதப்பட்டது, சென்னை நகரில் நள்ளிரவில் திடீரென ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழையும்.  சுத்தியலால் வீட்டில் உள்ளவர்கள் மண்டையைப் பிளந்துவிட்டு இருப்பதை - அது ஒரு சவரன் நகையாய் இருந்தால் கூட - கொள்ளை அடித்துச் செல்லும்.  சரியாய் வேட்டை சிக்காவிட்டால் இன்னும் விபரீதம். கடுப்பில் வீட்டில் இருப்பவர்கள் மண்டையில் ஸ்க்ரூ டிரைவரால் துளையிட்டுக் கொல்கிறார்கள் என பீதி கிளப்பியது.


உடனே நான் இரண்டு காரியங்கள் செய்தேன். முதலில் ஜூவி வாங்குவதை நிறுத்தினேன்.  அதன்மூலம் வாரத்துக்கு இரண்டுமுறை அது கிளப்பும் பீதியை நிறுத்தினேன்.  இரண்டாவதாக வாசல் கதவில் ஒரு இரும்பு கிராதி வைத்து மூன்று நான்கு தாழ்ப்பாள் வைத்து பாதுகாப்பை பலப் படுத்தினேன்.  உள் மரக் கதவில் கதவின் குறுக்கே இரண்டு இரும்பு சட்டங்கள் வைத்து அடித்து மாட்டுவதுபோல செய்துகொண்டேன்.
                         
இதைத்தவிர வாசல் கதவுக்கு அருகே ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில் சீப்பு பௌடர் வைத்து (ஏமாற்றுகிறேனாம்.. ) அதன் நடுவே மிளகாய்ப்பொடி வைத்தேன்.  இரவில் ஏதாவது சத்தம் கேட்டால் முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டுதான் கதைவைத் திறக்க வேண்டும் என்று பாஸுக்கு பீதி ஊட்டினேன்!  மிளகாய்ப்பொடியை, வாசல் கதவை உடைக்க முயற்சிப்பவர்கள் மேல் வீசினால் அது நம்மையே தாக்கக்கூடாது அல்லவா...   அதற்காக!
                  
இத்தனையும் தேவையா, என்றால், ஆம், அந்த ஏரியாவுக்கு அப்போது தேவையாய்த்தான் இருந்தது.  ஒன்றும் அந்த மாதிரி எல்லாம் நடக்கவில்லை என்றாலும் எங்கள் மனதுக்கு இந்த நடவடிக்கைகள் சற்று தெம்பூட்டின,  நிம்மதியாய்த் தூங்க வைத்தன.  ஏனெனில் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஒரு பெரிய வெற்றிடத்தைக் கடந்து நீண்ட தூரம் நடந்துதான் சாலைக்கு வரவேண்டும்.   அந்நாட்களில்  சென்னையின் அந்த சாலைகளோ இரவு ஒன்பது மணிக்குமேல் அமைதியாகிவிடும்.  நடமாட்டம் இராது. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் சைக்கிளிலோ பைக்கிலோ கடந்து செல்வார்கள்.
                      
என் இளையவன், பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல் 'இரவு நேரத்தில் மட்டும் வலி வர வைத்து விடாதே...'  என்பதுதான்.
                     
[பெரிய சஸ்பென்ஸ் என்று இல்லை...   ரொம்ப நீளமாய்ப் போவதால் அடுத்த வியாழன் தொடர்கிறேனே...]
                    
========================================================================================================


பொக்கிஷம் :

குமுதத்தில்வந்த சித்திரக் கதை!  படத் தொடர்.  படங்கள் செல்லம்.  ஆனால் எழுதியது யார் என்று கடைசிவரை சொல்லவே இல்லை.  29 வாரங்கள் வந்தது என்று நினைவு.  தலைகீழாய் , அதாவது கடைசி அத்தியாயத்திலிருந்து தொடங்கி பைண்ட் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.  அப்போது ஆர்வமுடன் வாராவாரம் படித்த தொடர்.  ஷிரோத்கர், பட்டாபி, போதிராஜேன்றெல்லாம் கேரக்டர்கள்.  போதிராஜ்மகராஜ்  என்றபெயரில் மகானாய் வந்து ஒரு பணக்காரரை ஏமாற்றும் கதை.  கடைசியில் அவரை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றுவார் அந்த போதிராஜ்.  அவர் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.


----------------------------------------------------------------------------------------------------------

சம்பவங்கள் நிஜம் ; பெயர்கள் கற்பனை! உண்மைக் கதைகளின் மாதப் பத்திரிகை!



-------------------------------------------------------------------

அந்தக் கால சினிமா பத்திரிகை.


சினிமா பத்திரிகை என்றால் கவர்ச்சி வேண்டாமா?!  இது இன்னொரு பத்திரிகை.


கவர்ச்சியாய் முடிக்க வேண்டாம்...    சிரிப்புத் துணுக்கோடு முடிப்போம் இந்த வாரத்தை..


159 கருத்துகள்:

  1. எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜு ஸார் வாங்க...

      நீக்கு
    2. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
      அன்பு ஸ்ரீராம் ,துரை இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    3. உங்கள் வீட்டுப் பாதுகாப்பு ,உங்களுக்கு இருந்த பயத்தைக் காட்டுகிறது.
      இப்போது நகைச்சுவையாக இருந்தாலும், அப்போது இன்னும் சிறிய வயதல்லவா.
      எச்சரிக்கை மிகத் தேவை.நீங்கள் சொல்லி இருக்கும் விதம் எனக்கே பயமாக இருக்கிறது.
      இது எந்த இடம்?

      அந்த இடத்தில் இப்போது நிறைய வீடுகள் வந்திருக்கும்.
      நாதாங்கி போட்டது, டீக்கடை உஷார், குழந்தையின் அத்தே,!

      பாவம் உங்கள் மனைவி. தன் பயம் ,உங்கள் பயம் எல்லாவற்றையும்
      தாங்கி இருக்கிறார்.
      உங்கள் செல்லம் கம்பீரமாக இருக்கிறது.
      இத்தனை போக்கிரிக்கு சத்தம் ஆகாது.
      அது நாற்காலியில் இருந்து எழ விடாமல் சத்தம் போட்டது நினைத்து
      இடை விடாமல் சிரித்தேன்.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா... வணக்கம். ஆமாம் அம்மா... அப்போ ரொம்பச் சின்ன வயசு. நம் பாதுகாப்பை நாம்தானே் பார்த்துக் கொள்ளணும்! மனைவி என் நடவடிக்கைகள் காரணமாக என்மேல் பாரத்தைப் போட்டு நிம்மதியாக இருந்தார்!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா... வாங்க... இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு

  4. இதைத்தவிர வாசல் கதவுக்கு அருகே ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில் சீப்பு பௌடர் வைத்து (ஏமாற்றுகிறேனாம்.. ) அதன் நடுவே மிளகாய்ப்பொடி வைத்தேன். இரவில் ஏதாவது சத்தம் கேட்டால் முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டுதான் கதைவைத் திறக்க வேண்டும் என்று பாஸுக்கு பீதி ஊட்டினேன்! மிளகாய்ப்பொடியை, வாசல் கதவை உடைக்க முயற்சிப்பவர்கள் மேல் வீசினால் அது நம்மையே தாக்கக்கூடாது அல்லவா... அதற்காக!//////
    அடேங்கப்பா என்ன முன்னேற்பாடு. நிறைய துப்பறியும் நாவல் படித்திருப்பீர்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கிறோமோ இல்லையோ.. தானாய் நமக்குத் தோன்றும் அல்லவா!

      நீக்கு
  5. இவ்வளவு கோபக்காரன், என் பெரிய மகன் பத்து மாதக் குழந்தை, மிக்சியைஇழுத்துக் கொண்டு வருவான். அவனைப் பார்த்து நகர்ந்து கொள்ளும். அவனை ஒன்றும் சொல்லாது.. கோபப்படாது! கரண்டியைக் கொண்டுவந்து இவனை அடிப்பான் மகன். ஒன்றும் செய்யாது. நகர்ந்து உட்கார்ந்து கொள்ளும். நாங்கள் ஓடிவந்து அவனைத் தூக்கிக்கொள்ளுவோம்!/////////அவன் நிஜமாகவே செல்லம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ரொம்ப ஆச்சர்யமான செல்லம். அவனைக் பொஞ்சினால், தடவிக் கொடுத்தால் அவனுக்குப் பிடிக்காது. அனுமதிக்கவே மாட்டான். உறுமுவான். அப்படிப்பட்டவன் கடைசி நிமிடங்களில் என்னைத் தேடி வந்து மடியில் தலையை வைந்தது. அப்படியே உயிரை விட்டது.
      இப்போது நிடைத்தாலும் கண்கலங்கும்.

      நீக்கு
    2. அச்சோ பாவம் குழந்தை. நீங்களும் தான்.

      நீக்கு
  6. சினிமாபத்திரிக்கை, ரசிகனும், கலையும் பொக்கிஷங்கள் தான்.
    என்ன எழுதி இருந்தார்களோ.
    குமுதத்தில் வந்தது நினைவில் இல்லை.போஜ ராஜ்.
    கடைசி ஜோக் அச்சு அசல் ஓல்ட் டேஸ்.
    மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறென்ன எழுதி இருப்பார்கள்? சினிமா கதைகள்தான்!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதம்பம் சுவாரஷ்யமாக செல்கிறது. அனுபவ தொடர் மட்டுமே படித்திருக்கிறேன். தனியாக இருக்கும் இடத்தில், தனியாக இருக்கும் சூழ்நிலையை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நீங்கள் கூறிய சில பல எச்சரிக்கை உணர்வுகள் நாங்கள் தனியாக இருந்த காலங்களில் எங்களுக்கும் ஒத்துப் போனது. தனியாக இருக்கிறோம் எனும் போதே நம்மிடம் அந்த உணர்வுகள் எத்தனை கற்பனையை உதயமாக்கி விடுகிறது இல்லையா?

    மேலும் மேஜை நாற்காலிகளை கயிறு கட்டி இழுத்து வந்து வாசல் கதவோடு பிணைக்கும் யோஜனை அருமை.( எனக்கு மிஸ்டர் பீன் நினைவுக்கு வந்தார் ஹா.ஹா.ஹா.) ஆனாலும் நாங்களும் ஒரு சில நாட்கள் தொடர்ந்து வெளியூர் பிரயாணத்தின் போது இந்த மாதிரி அப்போது கதவுக்கு பின்புறம் முட்டுக்கள் கொடுத்து கதவை பூட்டி சென்றதெல்லாம் நினைவுக்கு வந்தது.

    கதவை பூட்டி விட்டோமா என நானும் கணவரும்,பூட்டை ஆளுக்கு நான்கு முறை இழுத்து பார்த்து சந்தேக நிவர்த்தி செய்து கொண்ட காலங்கள் அவை. இப்படி இழுத்து இழுத்தே திருடன் வந்து பூட்டை தொட்டவுடன் பூட்டு தானாகவே கழன்று அவனுக்கு சுலபமாக கையோடு வந்து விடும் போலிருக்கிறது என நினைத்து கேலி செய்தபடி பிராயாணங்கள் தொடரும்.

    கடைசியில் நீங்கள் கூறிய மிளகாய்பொடி ஐடியா பிரமாதம். சிரித்தபடி படித்தேன். நீங்கள் கொடுத்த ஐடியாவை கண்டு அந்த நேரத்தில் உங்கள் பாஸ் கொஞ்சம் பயந்துதான் போயிருப்பார். ஹா.ஹா.ஹா.

    பிறவற்றை படித்த பின் இன்னமும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேட்கிறீர்கள் - இந்த முன்னேற்பாடுகள் தெரியாமல் ஒருநாள், முத்தமிழ் நகர் பக்கம் போயிருந்தபோது இரவு அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினேன். பயங்கரக் குரைப்பு சத்தத்துடன் கதவு திறந்து, ஒரு முகமூடி உருவம் என் மீது மிளகாய்ப்பொடி வீசியதில் பயந்து போய் குதிகால் பிடரியில் இடிபட ஓடி வந்துட்டேன்.

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... கமலா அக்கா.. இந்த மூட்டை இழு இழு என்று இழுத்துப் பார்க்கும் பழக்கம் என் பாஸுக்கும் பெரியவனுக்கும் உண்டு!

      நான் கொடுத்த ஐடியாக்களால் பாஸ் பயப்படவெல்லாம் இல்லை. உறவுகளிடம் சொல்லி பீத்திக் கொள்வார். பாரத்தை என்மேல் போட்டு நிம்மதியாக இருந்தார்!

      நீக்கு
    3. வணக்கம் கெளதமன் சகோதரரே.

      எனக்கு இன்னமும் சிரித்து முடியல்லை. முகம் தெரிந்த உங்களுக்கே இந்த கதியென்றால், உண்மையிலேயே ஒரு முகமூடி கொள்ளைக்காரன் வந்திருந்தால்...! விழுந்து விழுந்து சிரித்தேன். (அடியேதும் படாமல் எனச் சொல்ல மாட்டேன். எனையறியாமல் விழுந்த வேகத்தில் எங்கேனும் அடி பட்டிருக்கலாம். சிரித்து முடித்துப் பின் பார்க்கலாம். ஹா.ஹா.ஹா. ) இந்த மாதிரி மனம் விட்டு பேசி சிரிப்பது இந்த காலகட்டத்தில் அவசியமும் கூட.. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. விழாமல் சிரிக்கப் பழகுங்கள் கமலா அக்கா!!

      நீக்கு
  8. கதம்பத்தை சுவையாகப் பின்னியருக்கிறீர்கள்.

    இவ்வளவு முன்னெச்சரிக்கையாக நான் எப்போதும் இருந்ததில்லை. செல்லத்தின் மீதான அன்பைப் பார்த்தும் நான் ஆச்சர்யப்படுகிறேன். அடுக்கு மாடியில் ஒருவர் வீட்டு நாய் குலைத்துக் கொண்டிருப்பதையே என்னால் தாங்க முடியவில்லை. கம்ப்ளெயின் பண்ணலாமா என மனதுல் தோன்றுகிறது (ஆனால் அது எப்போதாவதுதான் குலைக்கிறது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. இங்கு எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு சமர்த்துச் செல்லம் வளர்க்கிறார்கள். அதைப்பற்றி பின்னர் எழுதவேண்டும்.

      நீக்கு
  9. செல்லத்தின் தொடர் வந்த வருடம் எது?

    செல்லமின் ஓவியத்தில் "இடியாப்பம் விற்கும் பையன்" ஒரு தொடரில் வருவான். அந்தச் சித்திரங்கள்தான் குமுத்த்தில் முதல் முதலில் படித்த நினைவு இருக்கிறது.

    கல்கியிலும் இரண்டு புறாக்கற் படத்துடன் ஒரு சித்திரத் தொடர் வந்தது.

    இவையெல்லாம் எந்த வருடம் எனத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் ஜீ ! அட! அந்தக்காலத்தில் நாங்க பிறந்திருக்கவே மாட்டோம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. இதெல்லாம் டூ டூ மச் கேஜிஜி சார். நான் நினைக்கிறேன் அது 75-76 களில் வந்திருக்கலாம். எனக்கு 'இடியாப்பேம்' என்று கூவும் பையனின் படம்கூட மனதில் பதிந்திருக்கிறது.

      குமுதம் மட்டும் எங்க அப்பாவுக்குத் தெரியாம படிப்பேன். (மற்ற மேகசின்கள் படித்தால், துக்ளக், விகடன்.. எங்க அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார். குமுதம்னா, என்னடா பொம்பளைப் பத்திரிகை படிக்கற என்று கடிந்துகொள்வார்)

      நீக்கு
    3. எந்த வருடம் என்று ஞாபகமில்லை நெல்லை. எழுபதுகளாய் இருக்கலாம்! கல்கியில் வினு ஓவியத்துடன் ஒரு சித்திரக்கதை படித்திருக்குறேன். கிராமத்தில் விளையாடி வளரும் வாலிபன்தான் இளவரசன் என்று போகும் கதை!

      நீக்கு
    4. // கிராமத்தில் விளையாடி வளரும் வாலிபன்தான் இளவரசன் என்று போகும் கதை!// ஆளப்பிறந்தவன்.

      நீக்கு
    5. ஆமாம் என்று நினைக்கிறேன்!!

      நீக்கு
  10. சினிமா பத்திரிகை அட்டையில் கவர்ச்சி மிஸ்ஸிங்.

    ஜோக் - ஹா ஹா. டிபிகல் அந்தக்கால சிரிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ச்சி மிஸ்ஸிங்கா? நெஞ்சையடைக்கிறது எனக்கு!

      நீக்கு
    2. //..நெஞ்சையடைக்கிறது எனக்கு!//

      chilled இளநீர் குடித்தால் இதற்கு நல்லது!
      ’கலை’ யின் அட்டைப்படக் கன்னி யாரோ? அந்தக் காலத்தில் இந்தப் பத்திரிக்கையை ரகசியமாகக் கொல்லைப்புறம் உட்கார்ந்து படித்திருப்பார்கள் - வீட்டுப் பெரிசுகளின் கையில், கல்கி, விகடனைத் திணித்துவிட்டு!

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... இந்துநேசன் இதைவிட மோசமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  11. இனிய காலை வணக்கம்.

    பாதுகாப்புக்காகச் செய்த விஷயங்கள் - ஸ்வாரஸ்யம். எப்படியோ நல்ல விதமாக அந்த நாட்கள் கடந்தனவே.

    பழைய பத்திரிகைகள் - ரசிகன் என்று ஒரு பத்திரிகை - கேள்விப்பட்டதே இல்லை.

    சித்திரக் கதை - இப்போதும் இது போன்ற சித்திரக் கதைகள் தமிழில் வருகின்றதா?

    ஜோக் - ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் வாரப் பத்திரிகைகளில் சித்திரக்கதை வருவதில்லை என்றே நினைக்கிறேன்.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா... வாங்க..

      நீக்கு
    2. காலை 6:55க்கு வந்தவளை மதியம் 1:14க்கு வரவேற்கிறீர்கள். நல்ல சுறுசுறுப்பு! 

      நீக்கு
    3. என்ன செய்ய... என் நிலைமை அப்படி!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இவ்வார பொக்கிஷ பகிர்வுகளும் அருமை. சித்திரக்கதை முன்பெல்லாம் இந்த மாதிரி புத்தகங்கள் வாங்கும் போது விடாமல் முதலில் அதைத்தான் படிப்போம்.ஆனால் இது படித்ததில்லை.

    அந்த கால சினிமா நாயகி படம் காந்த கண்களோடு ரொம்பவே அழகாய் இருக்கிறார். பார்த்து அறிந்த நடிகையாய்தான் இருக்கிறார். ஆனால் பெயர் தெரியவில்லை. ஏதோ காந்தம் என்பது அவர் பெயரோடு வருமோ? அந்த காலத்தில் இப்படி கவர்ச்சிப் படங்ளும் இருந்திருக்கிறதே... !

    நகைச்சுவை அருமை. ரோடுக்கு ஏது நடு. இருந்தாலும், அவர் அளக்கும் போது நகைச்சுவை அளவின்றி வருகிறது. பகிர்வத்தனைக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த நடிபையின் பெயரில் ஏதோ காந்தம் என்று வரும் என்று எனக்கும் தோன்றியது கமலா அக்கா... டி பி ராஜகாந்தம்?!!!

      நீக்கு
    2. ஆமாம்.. டி. பி ராஜகாந்தம்தான் எங்கள் அம்மா அடிக்கடிச் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். நினைவாக தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா.. நீங்கள் கொடுத்த க்ளூவை காந்தம் போல பற்றிக் கொண்டேன்!!!

      நீக்கு
    4. அவர் நடித்த கடைசி நான்கு படங்கள், பாலும் பழமும், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி, உதிரிப்பூக்கள், நிலாப்பெண்ணே.

      நீக்கு
  14. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். கொரோனாவை வெல்லும் சக்தியை நமக்கெல்லாம் கொடுக்கும்படி இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  15. தனியாக இருக்கையில் அதிகம் பேய்க்கதைகள் படிக்கலாம். பொழுது போகும் என்பதோடு உயிர்ப்போடும் இருக்கும்! :))))) பொதுவாக நான் தனியாகவெல்லாம் இருந்தது இல்லை. கல்யாணம் ஆகித் தனிக்குடித்தனம் வைச்சப்போக் கூடத் தனித்தனி வாசலே தவிரப் பக்கத்திலேயே இன்னொரு வீடும் இருந்தது. ஆகவே பயமெல்லாம் ஏற்பட்டதில்லை. அதைவிட ராஜஸ்தான் வந்ததும் இருந்த ராணுவக் குடியிருப்பு தனியோ தனி, தன்னந்தனி. பக்கத்தில் உள்ள இன்னொரு குடியிருப்புக்குப் போகணும்னா நான் இங்கே கதவை எல்லாம் இழுத்து மூடிக்கொண்டு சுமார் அரை பர்லாங்காவது நடந்து சென்று அந்த வீட்டுக்கும் உள்ளே போக அரை பர்லாங்க் நடந்து போய் அவங்களை அழைக்கணும். :)))) ஆகவே தனிமை பழகி விட்டது என்றே சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு தனியாக இருந்தாலும் ராணுவக் குடியிருப்பு! பாதுகாப்பு! உங்கள் இந்த அனுபவம் எல்லாம் முன்னர் உங்க தளத்தில் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  16. உங்க செல்லம் மாதிரி ஒரு செல்லம் ஜாம்நகரில் இருக்கையில் வளர்த்தோம். வளர்த்தோம் என்ன? அதுவே வந்து வளர்ந்தது! அதுக்குப் பிரசவம் எல்லாம் பார்த்து! எங்கே போனாலும் இது ஒரு பிரச்னை! பெண் நாய்களாகவே வந்து அமையும். ஆனால் நாங்களாக வளர்த்தவை எல்லாம் ஆண் நாய்கள் தான். மணி, ஜானி, ப்ரவுனி, ப்ளாக்கி, மோதி என!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், என் செல்லம் வளர்ப்பு அனுபவத்தில் ப்ரௌனி மட்டுமே (நாய்மனம் கதாநாயகி) பெண்.

      நீக்கு
  17. முன்னெச்சரிக்கை பயங்கர சுவாரஸ்யமே

    //அது மொட்டை மாடியில் கட்டிப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்வேன்//

    மனதை நெகிழ வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பாதுகாப்பு கருதி ஜி! அவர்களுக்கிருக்கும் பயத்தைத் தக்க வைக்க!

      நீக்கு
  18. படிக்கும்போது கிரேஸி தீவ்ஸ் இந்த பாலவாக்கம் நினைவில் வந்தது. கடைசி வரை ஊரை ப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தனிக்குடித்தனம் சொந்த வீடோ? எந்த இடமோ? ஒரு சின்ன சந்தேகம், கயறு கட்டி மேஜையை இழுத்து கதவு பக்கம் கொண்டு  வைப்பதெல்லாம் சரி. திரும்ப கதவைத் திறக்கும்போது கயிறால் மேஜையை தள்ள முடியாதே. அப்போது மேஜையை எப்படி தள்ளுவீர்கள். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (ஊர்) பெயரில் என்ன இருக்கிறது ஜெயக்குமார் சந்திரசேகரன் ஸார்... சென்னையில் ஒரு ஒதுக்குப் புறமான இடம்?

      கதவை மெதுவாக இன்ச் இன்ச்சாகத் திறக்கவேண்டும். அப்போல்லாம் ஒல்லி உருவம்தானே? கொஞ்சம் கதவு திறந்ததும் இடுக்கில் உடம்பை நுழைத்து உள்ளே சென்று சரிசெய்து கதவைத் திறந்து விடுவேன்! எங்கள் சகோதர வட்டத்தில் இது அப்போது பிரபலம்!

      நீக்கு
  19. நல்ல அனுபவம். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீடு எடுத்தால் இவ்வாறு சிக்கல்கள் ஏற்படும். ஆனால் பின்னாளில் பலர் குடிவர சரியாகிவிடும். ம்ம்ம்ம்....

    பாஸ் யாரு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் பாஷையில், பாஸ் அவருடைய திருமதிதான்.

      நீக்கு
    2. வாங்க சிபா... கேஜிஜி சொல்லி இருப்பது போல அது என் பாஸ்... ச்சே... மனைவி!

      நீக்கு
  20. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    தங்கள் பதிவு - எமது திரட்டியில்: வலை ஓலை

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சிபா... கணினி சரியாகி, கணினி வழி வரும்போதுதான் இதெல்லாம் கவனிக்கணும்.

      நீக்கு
  21. யப்பா... எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்...!

    பதிலளிநீக்கு
  22. வலைச் சித்தரின் கருத்தை வழி மொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
  23. சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்திருக்கிறீர்களே?என் கணவரின் மறைவுக்குப் பிறகு வீட்டில் தனியாக இருக்க நேர்ந்த பொழுது பயமாக இருந்ததால் க்ரில் கேட்டை பூட்டிக்  கொண்டேன். அந்த சமயத்தில் எங்கள் குடியிருப்பிற்கு அடுத்த குடியிருப்பில் ஏ.சி.யின் கம்ப்ரெஸ்ஸர் வைப்பதற்காக பில்டரே  நிறுவியிலிருக்கும் இரும்பு ஏணி வழியாக பதினாறாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் ஒருவன் நுழைய முற்பட்டான் என்று கேள்வி  பட்டதும், க்ரில் கதவை  பூட்டுவதில்லை. அப்படி யாரவது வெளியில் இருக்கும் ஏணி வழியே வீட்டிற்குள் நுழைந்தால், நான் வாசல் கதவை திறந்து கொண்டு ஓட சுலபமாக இருக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ஓட்டப்பந்தைய வீராங்கனையா நீங்க!

      நீக்கு
    2. வாங்க பானு அக்கா... ஓடும் ஐடியா சரி இல்லை. வாசலில் ஒருவன் நின்றால் என்ன செய்வீர்கள்? அலறும் அலார்ம் ஒன்று இருக்கிறது. ஏணி, க்ராதியைத் தொட்டால் அலார்ம் கிய்யா முய்யான்னு அலர்றா மாதிரி பண்ணிடுங்க..

      நீக்கு
  24. பிளான் பட்டாபி, குவாக் சுந்தரம் போன்ற சித்திர கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் நினைவில் இல்லை. ரசிகன், கலை இந்த பெயர்களில் சினிமா பத்திரிகையா? எனக்குத் தெரிந்ததெல்லாம் பொம்மையும், பேசும் படமும்தான். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... நிற...றைய சினிமாப் பத்திரிபைகள் உண்டு அப்போது... குண்டூசி, சிரஞ்சீவி, தி ஃபேமஸ் இந்துநேசன்...

      நீக்கு
  25. என்னுடைய நாய் பயம் ஸ்ரீராம் சாருக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் எல்கே. ஆனால் நீங்கள் வந்தபோது எங்கள் வீட்டில் செல்லமெல்லாம் கிடையாது! காம்பௌண்டுக்குள் இரண்டு பொதுச் செல்லங்கள் இருந்தன!

      நீக்கு
  26. இத்தனை பாதுகாப்பா?! நான் இத்தனைலாம் மெனக்கெட மாட்டேன். மாமா இன்னும் மோசம். சில சமயம் வாசல் கதவைக்கூட சரியா பூட்ட மாட்டாரு

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் காலை வணக்கங்கள். முதலில் கொரோனா நம்மை விட்டு வெகு சீக்கிரம் ஓடி விட வேண்டுகின்றேன்.
    என்ன ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள். ஆனால், யாவையும் யோசித்து நடைமுறையாக்க பட்டவை. மிக துல்லியமாக யோசித்திருக்கின்றீர்கள். நாங்கள் வெகு காலம் முன் ஆதம்பாக்கத்தில் குடியிருந்த போது, கோடை நாட்களில் மொட்டை மாடியில் சென்று படுத்து உறங்குவோம். அவ்வாறு ஒரு நாள் படுத்து உறங்கியெழுந்த போது, முன்று வீடு தள்ளி இருந்த வீட்டில் ஒரே அமளி, கூட்டம். சென்று விசாரித்ததில், இரவு திருடர்கள் வந்து ஆள் இல்லாத படுக்கை அறையில் இருந்த காட்ரெஜ் பீரோவை சூரையாடி விட்டிருந்தனர். அன்றிலிருந்து மொட்டை மாடி படுக்கை, தூக்கம் எல்லாம் மூட்டை கட்டப் பட்டது. உங்கள் பதிவை படித்த பின் வந்த பசுமை நினைவுகள் இவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொரோனா... கொரோனா... அந்த வார்த்தையையே மறந்துடுங்க ரமா... உங்கள் ஆதம்பாக்கம் அனுபவம்போல எங்களுக்கும் உண்டு!

      நீக்கு
  28. ஸ்காட்லாந்துக்காரர்கள் உங்கள் திகில் புராணத்தைப் படித்தால் என்ன சொல்வார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கெல்லாம் (இரண்டு நாடுகளிலும்) திருடர்கள் பயம் அறவே கிடையாது. அவங்க பயப்படுவது ஆமிக்கு மட்டும்தான்.

      இங்க பெங்களூர்ல ஒரு தடவை ரூமில் இருந்த என் லேப்டாப் BAGஐ, ஒரு சேஃப்டிக்காக, ஜன்னலுக்குக் கீழே இருந்த மேசையின் கீழ்ப்பக்கம் வைத்தேன். அன்று நாங்கள் குக்கே சுப்ரமணியா கோவிலுக்குப் பயணப்பட்டு மறுநாள் இரவு வந்தபோது, என் லேப்டாப் மாயமானது தெரிந்தது. ஜன்னல்வழி திருடன், ஹார்ட் டிஸ்க், லேப்டாப்லாம் எடுத்துச் சென்றிருந்தான். நல்லவன் போலிருக்கு. என் பாஸ்போர்ட்டை ஜன்னலிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தான். வெளியில் மழை வேறு.

      பெங்களூரில் திருடர் பயம் அதிகம், தனிவீடுகளில் இருப்பவர்களுக்கு

      நீக்கு
    2. நான் குறிப்பிட்டது நம்ப ஸ்கொட்டிஷ் லேடியை!

      நீக்கு
    3. ஆமாம் ஏகாந்தன் சார். அவங்க பூர்வீகம் இலங்கை. அங்கதான் ஆமிக்கும் வெள்ளை கலர் வேனுக்கும் பயப்படுவாங்க.

      நீக்கு
    4. வாங்க ஏகாந்தன் ஸார்... வந்து என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை... அவங்களிடம் சொல்ல நிறைய திகில் அனுபவங்கள் இருக்கும்.

      நீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. //என் நண்பன் சொல்வான்... "ஓவர் பாதுகாப்பு உடம்புக்கு ஆகாது தம்பி... இப்படி இருப்பவர்கள்தான் செமையா மாட்டுவாங்க.."//

    ஏற்கனவே பயந்த உங்களை இன்னும் பயமுறுத்தி இருக்குமே உங்கள் நண்பரின் பேச்சு.

    தேவன் கதையை படிப்பது போல் இருந்தது, திகில் சிரிப்பு எல்லாம் கலவையாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவன் கதை போலவா? ஆஹா... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல்லே?!!

      நீக்கு
    2. 'தேவன் கோவில் மணியோசை..’ என்கிற பாட்டு கேட்க ஆரம்பித்துவிட்டதோ!

      நீக்கு
  31. திருவெண்காட்டில் இருந்த காலங்களில் ஊர் சீக்கீரம்(இரவு) அடங்கி விடும். யாரும் வெளியில் நடமாட மாட்டார்கள். தொலைகாட்சிகள் இல்லா காலம் ஊர் மிகவும் அமைதியாக இருக்கும். 7.30க்கு எல்லாம் ஆந்தையார் அலர ஆறம்பித்து விடுவார். மாடி படி விளக்கு போட்டு வைத்து இருப்பேன் சாருக்கு வெளிச்சம் தெரியவேண்டும் என்று . ஆந்தை பூச்சிகளை பிடிக்க படியில் ஏறி வரும் சத்தம் குட துல்லியமாக கேட்கும். தெருவின் ஓரத்தில் உள்ள ஒருவர் வீட்டில் ஆடுகள் மாடுகள் இருக்கும் அவை சில நேறம் இரவு சத்தம் கொடுக்கும். (சின்ன சத்தமும் நம்மை அதிர வைக்கும் தனியாக இருக்கும் போது.) டிரான்சிஸ்டர் மட்டுமே எனக்கு துணையாக இருக்கும். ஏதாவது பாடிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருக்கும் கதை புத்தகங்கள் கையில் இருந்தாலும் மனம் அதில் ஓடாது. கீழ் வீட்டுக்கு போய் பேசிக் கொண்டு இருக்கலாம் என்றால் அவர்களை இரவு நேரம் போய் தொந்தரவு கொடுக்க கூடாது என்பது சாரின் கட்டளை.

    சார் மாயவரத்திற்கு ஏதாவது வாங்க போய் இருந்தால் இரவு கடைசி பஸ்9.25 குகு முடிந்து விடும்.

    மின்சாரம் போய் விட்டால் கேட்கவே வேண்டாம் கும் இருட்டாய் இருக்கும் தெரு. நாய்கள் வேறு குரைக்கும். எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து அகோரமூர்த்தி கோவில் தெரியும் அதன் கோபுர விளக்கு தெரியும் அவரிடம் வேண்டிக் கொண்டு நிற்பேன் இவர்கள் சீக்கீரம் வர வேண்டும் என்று. குழந்தைகள் பிறந்தவுடன் பயம் போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கரமான அனுபவங்களா இருந்திருக்கும். தனியா இருக்கறது கொடுமை.

      நீக்கு
  32. //எதிர்பாராமல் ஏதாவது சத்தப் படுத்தினால் இவனுக்குப் பிடிக்காது. ஒருநாள் இரவு படுக்கும் சமயம், என் அப்பா போர்வையை உதறிவிட்டு, இவன் கோபத்துக்கு ஆளாகி பட்டபாடு...

    மெதுவாய் நடந்துவந்தால் ரொம்ப சந்தேகப்படுவான். அவனுக்கு ஏதோ ஆபத்து வருகிறது என்று நினைப்பான் போல. என் அப்பாவைப் பெற்ற பாட்டி மெதுவாய்த்தான் நடந்து வருவார். அவர் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டால் வீடு ரணகளம்தான்//!

    உங்களை போலவே மிகவு பயந்த சுபாவம் போல!
    முன் ஜாக்கிரதை முத்தண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உங்களை போலவே மிகவு பயந்த சுபாவம் போல!
      முன் ஜாக்கிரதை முத்தண்ணா.//

      ஹா... ஹா.... ஹா... கோவக்காரன். முசுடு அவன்.

      நீக்கு
  33. //என் மகன் ஜன்னலில் ஏறி நின்று "அத்தே... அத்தே..." என்று கத்துவான். அவள் திரும்பிப்பார்த்துப் புன்னகைப்பாள்!//

    கள்ளம் கபடம் தெரியா குழந்தை . அத்தையும் புன்னைகைத்து சென்றதை நினைத்து புன்னகைபுரிந்தேன் நானும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனுக்கு அப்போ வாயில் வந்த ஒரே வார்த்தை அதுதான். அம்மாவும் அத்தேதான். கோபம் வந்தால் அத்தே அத்தே அத்தே என்று அழ ஆரம்பிப்பான்!

      நீக்கு
  34. அந்தக்கால பொக்கிஷபகிர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  35. தனியே....தன்னம் தனியே....இவ்வளவு பாதுகாப்பை நினைத்தால் இப்பொழுது சிரிப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  36. அந்தநாள் நினைவுகளா ..இருங்க படிச்சிட்டு வரேன் 

    //அந்தக் குடிசையில் இருந்த பெண் நிமிர்ந்த பார்வையும் டாக் டாக் நடையுமாய் இருப்பாள்.  //
    என்னே ஒரு அவதானிப்பு :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... அது அவள் தொழில் தந்த தைரியம்! நள்ளிரவுகளில் ஒரு வாடை வரும். பின்னாட்களில் தெரிந்தது. அந்தக் காம்பௌண்டின் கடைசி பகுதி யாரும் செல்லாமல் புதர் மண்டிக் கிடக்கும். என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அந்தப் பகுதியில் வெளியே சற்று மேடாக்கி, உள்ளே ஏறிக்குதித்து க.சாராயம் காய்ச்சப்படும். பின்னாட்களில் கஞ்சாவோடு நின்றது. அதுவே அவள் 'கம்பீரத்துக்கு" காரணம். அதுவே எங்களுக்கு பாதுகாப்புமாகவும் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ...!

      நீக்கு
    2. //Angel16 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:13


      //அந்தக் குடிசையில் இருந்த பெண் நிமிர்ந்த பார்வையும் டாக் டாக் நடையுமாய் இருப்பாள். //
      என்னே ஒரு அவதானிப்பு :) //

      ஹா ஹா ஹா கை குடுங்கோ அஞ்சு.. வாணாம் வாணாம்ம்.. அங்கிருந்தே வணக்கம் வைக்கிறேன்:)).. அதானே.... அண்ணியை வீட்டைப்பூட்டிப்போட்டு உள்ளே இரு எனச் சொல்லி வெருட்டிப் போட்டு:)), இவர் மட்டும் வெளியே வந்து அந்தம்மாவைப் பார்த்ததோடில்லாமல் வர்ணிப்பு வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....

      ஜி எம் பி ஐயா கீழே ஜொள்ளி இருப்பதுதான் கரீட்டூஊஊஊஊ..

      //மெல்ல மெல்ல மனம் திரக்கிறார் ஸ்ரீராம்///

      ஹா ஹா ஹா .. மீ ஓடிடுறேன்ன்.. கார்டின் வேர்க் அழைக்கிறது:))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா

      தவறான அவதானிப்பு??!!

      நீக்கு
  37. /மகன் ஜன்னலில் ஏறி நின்று "அத்தே...  அத்தே..." என்று கத்துவான்.  அவள் திரும்பிப்பார்த்துப் புன்னகைப்பாள்!//soooo sweeeet ..குழந்தையும் தெய்வமும் ஒன்று யாரையும் மதிப்பிடாத தெய்வகுணம் ...என் மகள் 10 மாத குழந்தையா மெட்றாசுக்கு கூட்டிப்போனப்போ தயிர் விக்கிறவங்க பானைவிக்கிறவங்களை எல்லாம் அங்கிள் ஆன்டின்னுவா :)  நாமெல்லாரும் இப்படித்தான் இருந்திருப்போம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மகன் அவளையும், அங்கு மாடு வைத்திருந்த ஒரு வயதான மாதுவையும் இந்த வகையில் நட்பாக்கி வைத்திருந்தான். ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்் அந்த வயதான மாது மழை பெய்த ஒரு நாளில் சாலையில் மின் பெட்டி அருகே தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்து கருகிப் போனாள்.

      நீக்கு
  38. /அப்படியாவது இவனை ஏன் வளர்த்தீர்கள்?  வீட்டில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறீர்களா?  இவன் எங்களுக்கெல்லாம் செல்லம்தான்.  இவன் கோபத்தோடு சேர்ந்து இவனை நாங்கள் விரும்பினோம். .////
    ஆஹா சூப்பர் கோபக்காரரா இருந்தாலும் பாசமுள்ளவர்னு நினைக்கிறேன் .நான் பைரவர்களை வளர்த்த நினைவு வருது .மகள் இப்போ அடம்  பிடிக்கிறா .இப்போதைய உங்கள் வீட்டில் ஏதாவது செல்லங்கள் வளர்க்க இயலுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசமுள்ளவன். அவன் இறுதி நேரம் பற்றி சொல்லி இருக்கினேன் பாருங்கள். இப்போதைய வீட்டில் வளர்க்கலாம். ஆனால் மாட்டேன். போதும். பொதுச் செல்லங்களே போதும்.

      நீக்கு
    2. படித்தேன் கடைசி நிமிடங்களை :( உண்மை ஸ்ரீராம் ..எனக்கும் செல்லங்கள் வளர்ப்பதில் தயக்கம் .மிகுந்த அன்போடு கூடவே வளர்த்து அவை பிரியும் தருணம் பைத்தியமே பிடிக்கும் .என் வலைப்பூவின் சைடில் பாருங்க நிபி இருப்பான் .ஹாம்ஸ்டர் 3 வருடம்தான் அவற்றின் வாழ்காலம் ..கொஞ்சமும் யோசிக்காமல் மகளுக்குன்னு வாங்கிட்டு என்னோடு அதிகம் பாசமாயிட்டான் .மூன்று வயதுக்கு முன் ஒரு மாதம் முன் அப்படியே ஸ்லோவாகினான் ஒரு இரவு என்னை அவனுடைய சிறு வீட்டிலிருந்து வெளியே வந்து எட்டி பார்த்துட்டே இருந்தான் பிறகு தூங்கப்போனவன் எழும்பலை .இப்பவு அழுகை வரும் .எலி தானேன்னு யாரும் நினைக்காதீங்க அவற்றுக்கும் உணர்வுண்டு அன்பு பாசம் உண்டு .அப்புறம் எனக்கு ஜெசி மல்ட்டியை விட்டு போக ஆசையில்லை ஒவ்வொரு வருஷமும் ஏதாவது சாக்கு அமையும்  தட்டிக்கழிப்பேன் இவ்வருஷம் மூணு பேருக்கும் நியூயார்க் போக டிக்கட் புக் பண்ணினார் கணவர் அடுத்த நாளே கொரோனா வந்து எல்லாம் கேன்சல்ட் .செல்லங்கள் சன்தோஷம் தரும்தான் கூடவே அவற்றை பிரியும்போது வரும் வலியை அனுபவிக்க மன தைரியமில்லை பலருக்கு 

      நீக்கு
    3. எங்க வீட்டுக்கும் பொது செல்லங்கள் சில பூசார்கள் விதவிதமான வண்ண பார்வைகள் சிட்டுக்கள் மரத்தையொட்டி உள்ள பொந்தில் நான்கு எலிகள் ( நைட் விசிட்டர்ஸ் ) புறாக்கள் அணில்கள் வராங்க 

      நீக்கு
    4. எலிகளுக்கும் நேசம் காட்டும் உங்கள் மீது எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் உண்டு ஏஞ்சல்.

      நீக்கு
  39. .உங்கள் அனுபவம் பயம் நியாயமானதே . எங்கள் வீட்டில் ஊரில் ஒரு பயமில்லாத இடம் .இங்கே வெளிநாட்டில் ஜெர்மனியை பொறுத்தவரை பயமேயில்ல .ஆனா லண்டன் வித்தியாச அனுபவம் சில நாடுகளின் வருகைப்பின் நாடு நாசமாகிவிட்டது இங்கே அதன் விளைவே eu விலகல் .விளக்கமா சொன்னா ரேசிஸ்ட் என்ற முத்திரை குத்தப்படலாம் என்மேல் :)
    இன்னொன்று நமது இந்திய இலங்கை பெண்களின் நகைமோகமும் திருட்டு அதிகரிக்க ஒரு காரணம் .( இதில் ஸ்கொட்டிஷ்க்காரம்மாவிம் நானும் விதிவிலக்கு ) .இதை எங்கள் முன்னாள் பிரதமரே ஒருமுறை சொன்னார்  திருட்டை தவிர்க்க //ஆசியர்கள் நகை அணிந்து செல்வதை தவிர்க்கவும்னு //

    பதிலளிநீக்கு
  40. ஹையோ இந்த ஜூவி நக்கீரன்லாம்  திருட்டுத்தனமா படிச்சி பயந்த நாட்கள் மறக்க முடியாது ..ஆட்டோ சங்கர் கதையெல்லாம் படிச்சி நெஞ்சு படபடக்கும் .உண்மையில் அப்போதைய ஜர்னலிஸ்ட்கள் எழுத்து காம்ப்ரமைஸ் இல்லாம எழுதியவை நேரில் பார்ப்பது போலிருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோ சங்கர் கதையில் பயப்பட என்ன இருந்தது? ஊர்வம்புதான் இருந்தது!

      நீக்கு
  41. நடுரோட்டு ஜோக் ரசித்தேன் .அந்த அட்டைப்பட பெண்கள் பெயரென்ன ?

    பதிலளிநீக்கு
  42. வந்துவிட்டேன்...

    இது எந்த வீடைப் பத்தி சொல்றீங்கன்னு கொஞ்சம் தெரியுது. அதுதான் என்றால் ஆமாம் உள்ளே இருப்பதே தெரியாது...

    // "ஓவர் பாதுகாப்பு உடம்புக்கு ஆகாது தம்பி... இப்படி இருப்பவர்கள்தான் செமையா மாட்டுவாங்க.."//

    ஹா ஹா ஹஹா...

    ஆனால் என் மகன் ஜன்னலில் ஏறி நின்று "அத்தே... அத்தே..." என்று கத்துவான். //

    க்யூட் ராகுல்! இப்ப வளர்ந்து பார்க்கறேன் அவரை. அப்ப குட்டிப் பையனா நினைச்சு ரசிச்சேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  43. சிறிது சிறிதாக மனம் திறக்கிறீர் கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... என்ன வகையான அவதானிப்பு இது ஜி எம் பி ஸார்..!

      நீக்கு
  44. //ஏனென்றால் டீக்கடைக்காரர் நல்லவர்தான். டீ கொண்டுவரும் பையனும் நல்லவன்தான். அவன் கேஷுவலாக கடையில்போய் "ஸ்ரீராம் சாருக்கு அடுத்த மூன்று நாள் டீ வேண்டாமாம்... ஊருக்குப்போயிருக்கிறார்" என்று சொல்ல, அதை கடை ஓனரும் கேட்பார், கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் "சிலரும்" கேட்கக்கூடும். அந்த "சிலர்" தேட்டைபோட காத்திருப்பவர்களாயிருக்கக் கூடும்! எனவே பாதுகாப்பு நடவடிக்கை! கடைக்காரர்களும், அலுவலகத்திலும் கிண்டல் செய்யாமல் எனக்கு ஒத்துழைத்தார்கள். //

    ஆஹா பிரதமருக்கான பாதுகாப்பை விடவும் பல அடுக்கு பாதுகாப்பு போல ஹா ஹா ஹா ஹாஹ் ஆ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...் ஹா... ஹா... ஹா

      ஆனால் இது நானே செய்து கொண்டது!

      நீக்கு
  45. நானுமே இந்த பழைய பேப்பர்காரர், ஸேல்ஸ், நன் கொடை வாங்க வரவங்க யாரையும் விட்டதில்லை.

    //"நானே பக்கத்தில்போக பயப்படுவேன்" என்று அவர்களிடம் நானும் செம பில்டப் கொடுப்பேன்! //

    ஹா ஹா ஹா ஹா...

    ஸ்ரீராம் செல்லங்கள் இருப்பது அத்தனை பாதுகாப்பு. இதோ இங்க இப்ப கண்ணழகி யாரையும் கேட் பக்கம் கூட விடுறதில்லை. சிலரைக் கண்டால் அது என்ன ஸ்மெல் வருமோ தெரியலை அவர்களின் மீது பாயறது போல போவா. ஸோ எனக்கு அவ சத்தம் வைச்சே கண்டு பிடிச்சுருவேன். அதுவும் இப்ப அவளுக்கு எப்படித்தான் தெரியுமோ சோசியல் டிஸ்டன்ஸ் எல்லாம் பக்கத்துவீட்டுக் குழந்தைகள் கூட கேட் பக்கம் வரக் கூடாது!!!!!!!!

    கோபக்காரக் குள்ளன் செம ஸ்வீட் ஸ்ரீராம்...ஹையோ என்ன அழகு. முன்னாடியே கூட இங்க இவன பார்த்திருக்கேனே...

    //அப்படியாவது இவனை ஏன் வளர்த்தீர்கள்? வீட்டில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறீர்களா? இவன் எங்களுக்கெல்லாம் செல்லம்தான். இவன் கோபத்தோடு சேர்ந்து இவனை நாங்கள் விரும்பினோம். //

    யெஸ் யெஸ்...இதுதான்..ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்...இப்படியானதுங்க ரொம்பவெ பாசக்காரங்களா இருப்பாங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அது பாசத்தை அதிகம் வெளிக்காட்டாமலேயே வாழ்ந்து மறைந்தது. என்ன கடனோ, எங்கள் வீட்டில் வாழ...

      நீக்கு
  46. அடேங்கப்பா சின்ன வீட்டைக் கோட்டிய வீடு மாதிரி ஆக்கியிருக்கீங்களே!!!!அதுவும் பாஸை வேற பயமுறுத்தி...னீங்க எல்லாம் முகத்துல கர்சீஃப் கட்டினீங்கனா வரும் திருடன் தான் பயப்பட்டு ஓடுவான் ஆ இவங்க நம்மையும் மிஞ்சர ஆள் முகமூடி என்று... ஹா ஹா ஹா..ஆனா கண்டிப்பா இந்த முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஸ்டைல் தேவைதான்.

    ஜூவி ரிப்போர்ட்டர் எல்லாம் ஊரில் இருந்தப்ப என் மாமா திருவனந்தபுரத்திலிருந்து வீக் எண்ட் வந்துருவார் வரப்ப இதெல்லாம் கூடவே வரும். ஆனா நாங்க படிக்கக் கூடாது!!!! ஸோ அவர் இல்லாதப்ப ஒன்னே ஒன்னுதான்... எடுத்து வாசித்துவிட்டு அப்புறம் ஜூவி எல்லாம் தொடக் கூட இல்லை. அத்தனை நெகட்டிவ் சமாச்சாரங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  47. படக்கதைகள் வாசிக்க ரொம்பப் பிடிக்கும் ஆனா மாமா கொண்டு வரும் குமுதத்தில் தொடர்ந்து வாசிக்க முடிந்ததில்லை. அவர் வாசித்துவிட்டு கண்டிஷன் நாங்கள் தொடக் கூடாது என்று கண்டிஷன் போட்டு அதைக் கரெக்டா வைச்சிருப்பார். நாங்க எடுத்தாலும் தெரிஞ்சுடும் அளவு.

    ரொம்ப பயம் அப்போதெல்லாம். பாட்டியிடம் கூடத் தைரியமாகப் பேசி சண்டை போட்டிருக்கிறேன் ஆனால் மாமாக்களிடம் ரொம்பவே பயம். வீட்டில் பாடப் புத்தகம் தவிர வேறு எதுவும் அலவ்ட் இல்லை. அதனால வாசிக்கும் சான்ஸ் போச்சு. நான் எழுதுவதும் தடைபட்டு போன சம்பவம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எங்கள் மாமாக்களிடம் பயம் கிடையாது... ஹி... ஹி... ஹி...

      நீக்கு
  48. அட 1951 லேயே அப்படியான பபத்திரிகையா!! ஆச்சரியம்..

    ஹா ஹா ஹா ஜோக் ரசித்தேன்..

    நல்ல ஸ்வாரஸ்யமான பதிவு

    கீதா

    பதிலளிநீக்கு
  49. //என் நண்பன் சொல்வான்... "ஓவர் பாதுகாப்பு உடம்புக்கு ஆகாது தம்பி... இப்படி இருப்பவர்கள்தான் செமையா மாட்டுவாங்க.."//

    ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை ஸ்ரீராம், எனக்கும் இதில் 100 வீதமும் நம்பிக்கை உண்டு, கோடு போட்டு வாழ்பவர்கள் பலர் பின்பு தாமே அக்கோட்டை உடைக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.. கடுமையாக ஜாதி, மதம் பார்ப்போர், மற்றும், சில விசயங்களில் கடும் கோட்பாடுகளுடன் இருப்போரைத்தான் கடவுள் சோதனைக்குள்ளாக்கி அவற்றை உடைத்திருக்கிறார்.

    நம் நாட்டிலும் கடுமையாக சாதி வெறி பார்த்த சிலர், திடீர் இடம்பெயர்வுகளால். வேறு வழியின்றி, தாம் ஒதுக்கி வைத்த வீடுகளிலேயே தஞ்சம் புகுந்து தண்ணி தாங்கோ எனக் கேட்டு வாங்கிக் குடிச்ச கதைகள் பல பல.. ஹா ஹா ஹா..

    கடையில் சாப்பிட மாட்டேன் என வீட்டுச் சாப்பாட்டோடு இருந்த பலர், உயிரைக் காக்க கடையில் சாப்பிட வைத்ததும் கடவுள்தான் ஹா ஹா ஹா.. சரி சரி எங்கேயோ போயிட்டேன்.. உங்கள் போஸ்ட்டுக்கு வருகிறேன்.. உங்கள் கதை என்ன கதையோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்ச்ணி வசப்பட்டு எங்கேயோ போயிட்டீங்க போல...

      நீக்கு
    2. //..கடுமையாக ஜாதி, மதம் பார்ப்போர், மற்றும், சில விசயங்களில் கடும் கோட்பாடுகளுடன் இருப்போரைத்தான் கடவுள் சோதனைக்குள்ளாக்கி அவற்றை உடைத்திருக்கிறார்...//

      கடுமையான அவதானிப்பு..

      நீக்கு
  50. //வெள்ளையும் சொள்ளையுமா இருக்கான்... நல்லவேட்டை என்று தேட்டை போட வந்தால்...?!! //

    ஹா ஹா ஹா :)

    பதிலளிநீக்கு
  51. //நானும் அது மறைந்து விட்டது என்பதைச் சொல்லாமல், "அது மொட்டை மாடியில் கட்டிப் போடப்பட்டிருக்கிறது" என்று சொல்வேன்.//

    ஹா ஹா ஹா ரொம்பத்தான் ஷார்ப்பூஊஊஊ நீங்க ஸ்ரீராம்:))

    பதிலளிநீக்கு
  52. ///[பெரிய சஸ்பென்ஸ் என்று இல்லை... ரொம்ப நீளமாய்ப் போவதால் அடுத்த வியாழன் தொடர்கிறேனே...]//

    ஹா ஹா ஹா மொத்தத்தில ஒன்று மட்டும் புரியுது, அழகாக தனிக்குடித்தனம் வந்தும், அந்த தனிமையை அனுபவிக்க முடியாமல் இப்பூடிப் பலப்பல பீதியுடனேயே வாழ்ந்திருக்கிறீங்கள்:).. ஹா ஹா ஹா விதி ஆரை விட்டது:)).. திகில் கதை படிப்பதைப்போல இருக்குது, ஆனால் எனக்கு திகில்க் கதைகள் பிடிக்காது, இது நிஜக் கதை என்பதால் ஆர்வ மிகுதியாகி விட்டது தொடருங்கோ:))

    பதிலளிநீக்கு
  53. அந்தக்கால பத்திரிகையை எல்லாம் பொக்கிசமாக வைத்திருக்கிறீங்கள்.. எனக்கும் இப்படி சேர்த்து வைப்பதில் சின்னனில் இருந்தே ஆர்வம், ஆனால் எல்லாம் காணாமல் போயிந்தி:)..

    //சிரிப்புத் துணுக்கோடு//
    துணுக்கு ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  54. //கவர்ச்சியாய் முடிக்க வேண்டாம்... //

    இப்பூடியும் நடக்கிறதோ எங்கள் புளொக்கில்?:)) இது கெள அண்ணனுக்குத் தெரியுமோ?:)).. அவர் கவர்ச்சி என்பதை, ஏதும் புராண இதிகாசமாக்க்கும் என நினைச்சே விட்டிடுப்பார்ர் ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  55. ஒருவழியாய் இப்போது தான் வரமுடிந்தது...

    காலையிலேயே முதல் ஆளாகப் படித்து விட்டாலும்
    கைத் தொலைபேசியில் தட்டுவது சிரமமாக இருக்கிறது...

    இருந்தாலும் யாரு நம்மளத் தேடப் போறாங்க!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ... அப்படி இல்லை துரை செல்வராஜு ஸார்... சொல்வதற்கு ஒன்றும் இல்லை, அவ்வளவுதான்னு நினைச்சேன்!

      நீக்கு
  56. >>> முதலில் ஜூவி வாங்குவதை நிறுத்தினேன்...<<<

    ஆக - கஷ்டப்பட்டு சம்பாதித்த காசும் மிச்சம்..

    பதிலளிநீக்கு
  57. சுருக்கமாகச் சொன்னால் -
    இன்றைய பதிவு பெரிய ஞானப் பொக்கிஷம் போல் இருக்கிறது!...

    பதிலளிநீக்கு
  58. ஒரே சிரிப்பு மயம் தான். இந்த மாதிரி எத்தனை பொக்கிஷங்கள் வைத்திருக்கிறீர்கள்?

    அது சரி, எப்படி நீங்கள் இப்படி பண்ணலாம் - "//கவர்ச்சியாய் முடிக்க வேண்டாம்... //"

    பதிலளிநீக்கு
  59. "கலை" என்று பெயர் போட்டிருக்கும் அந்த பத்திரிகை நீங்கள் சொல்வதுபோல சினிமா பத்திரிகை மாதிரி தெரியவில்லையே?!!... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  60. பிரச்சனை வராது போயிருந்தாலும் இப்படி முன் ஜாக்கிரதையாக இருந்தது நிச்சயம் மனதுக்கு ஒரு நிம்மதியைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. செல்ல நாயின் பெயரைச் சொல்லவில்லையே. குழந்தைகளிடம் பூனைகளும், நாய்களும் பிரியம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன். தொடருங்கள்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராமலக்‌ஷ்மி... செல்லத்தின் பெயர் சாத்தி!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!