நாமும்..என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கே போகிறாய் A ?
அவன் எங்கே போறான்னு பாரு என்றால் a குனிந்து தேடிக் ....
நாமும், சுற்று முற்றும் ..
( பிட்சுக்களை தவிர) என்ன தான் நடக்குது இங்கே என்று பார்த்தால்..
அதோ அ ....ங் ....ங் .கே ..ஒரு பிட்சு...
மற்றும் நிறைய மோட்டார் சைக்கிள்கள்.
இங்கே?
அனு பிரேம் சொன்ன ...
கைக்கு அடக்கமான புத்தர் சிலைகள்!
ஆனால் A யின் கவனம் அங்கே இல்லை!
நினைத்தேன் ...அந்த வேகத்தைப் பார்க்கும்போதே
இப்படித்தான் ஏதோ இருக்கும் என்று
நானும் தொட்டுப் பார்க்கலாமா?
கை பர பரக்குதே
மழை நீர் சேகரிப்பு?
இந்தக் கட்டடத்தின் மீதுள்ள structure என்னவாக இருக்கும்?
வாராய்... நீ... வாராய் .....
==========================================
விடுமுறைதின பொழுது போக்கு :
A) What is odd in this picture?
B) Spot the ball and the bat in this picture.
==========================================
காலை வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குகாலை வணக்கம் நெ த மற்றும் உள்ள த நே எல்லோருக்கும்!
நீக்குஎன்றும் முதல் ரேங்க் வாங்குபவன் இரண்டாவது ரேங்க் வாங்கினால் புருவம் உயர்வது போல, இன்று 5:30க்குப் பதில் 6 மணிக்குதான் ஷெடியூல் செய்திருந்தீர்களா?
பதிலளிநீக்குஎல்லாம் செய்து முடித்து பப்ளிஷ் கமாண்ட் கொடுக்காமல் விட்டுவிட்டேன்! மன்னிக்கவும்!
நீக்குவகுத்தன் வகுத்த வகையல்லால் கோடி
பதிலளிநீக்குதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது..
வாழ்க நலம்...
விளக்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். செய்கிறேன். நன்றி.
நீக்குசாலமன் பாப்பையா விளக்கம்:
நீக்குகோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
அந்த ‘கோடிப்பொருள்’, சேர்த்துவைத்தவனை அனுபவிக்க ஆரம்பித்துவிடுகிறது..!
நீக்குஉண்மைதான்.
நீக்கு// கோடிப் பொருள் சேர்த்து வைத்தவனை அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறது..//
நீக்குஆகா.. அற்புதம்!...
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஒரே சன்னியாசிகள் படமாக இருக்கிறதே.
இங்கே அங்கே ,எங்கேயும் புத்த பிட்சுக்கள்.
அந்த நாய்க்குட்டிதான் எத்தனை புசுபுசுவென்று இருக்கிறது:)
காலைக் கவ்வுகிறதா. ஆடையைக் கவ்வுகிறதா.
மறைந்து நின்று எட்டிப் பார்க்கும் படம் அழகு.
குழந்தைகள் . காப்பிடல் ஏ, ஸ்மால் ஏ. அருமை.
மழை வருகிறதோ கடைசிப் படத்தில்.
புதிர்கள் இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. வாழ்க வளமுடன்!
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குஅழகிய தமிழல் பிக்குகள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். ஐபிஎல் நினைவில் பிட்சாகிவிட்டன
ஆம்! அதுவும் சரிதான்!
நீக்குஅழகிய தமிழில் குறிப்பிடுவதில் ஒரு சிக்கல். ‘பி’க்கு பதிலாக அங்கே ‘பே’ விழுந்துவிட்டால் பிரச்னை!
நீக்குநினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க !
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்!
நீக்குகுடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
பதிலளிநீக்குவடிஅன்று வேந்தன் தொழில்
வடு அன்று - பழி அல்ல. நல்ல நோக்கத்தில் செய்வது
நீக்குஆ !! எல்லோரும் குறள் எடுத்து தாக்க ஆரம்பித்துவிட்டீர்களே!
நீக்குநான் எழுதியபோதும் வெளியிட்டபோதும் யாருமே வந்திருக்கவில்லை. இன்று துரை சார் வர நேரமாகும் எனத் தோன்றியது. அதனால் குறள்.
நீக்குஇப்போது பார்த்தால் வல்லிம்மா, துரை செல்வராஜு சார் பின்னூட்டங்களும் உள்ளன. அது எப்படி?
அதானே! அது எப்படி! அவர் பின்னூட்டம் ஆறு இரண்டுக்கு. உங்கள் பின்னூட்டம் ஆறு ஐந்துக்கு. நீங்க பரீட்சைப் பேப்பரில் மெதுவாக அழகாக எழுதி முடிக்கும் முன்பு அவர் ஏற்கெனவே கைவசம் வைத்திருந்த குறளை டமால் என்று பட்டனைத் தட்டிவிட்டா - தட்டுல நாலு இட்லி வரும் வேகத்தில் அனுப்பிவிட்டார் என்று நினைக்கிறேன்!
நீக்குகுடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
நீக்குவடுஅன்று வேந்தன் தொழில்.
(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:549)
பொழிப்பு: குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.
படங்கள் அழகு ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி. கி ஜீ !
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இன்று சற்றே தாமதம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி. வாழ்க வளமுடன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள், அதற்கேற்ற புதிர் வாசகங்கள் அனைத்தும் அருமை. குட்டிச்செல்லம் மிகவும் அழகாக உள்ளது. அதன் ஒவ்வொரு படமும், மழை வரும் பொழுதும் மனதிற்கு குளிர்ச்சி.
முதலில் தலைப்பை மாற்றி படித்து விட்டேன். காவி பிட்சுகளும், காலைச் சுற்றும் செல்வமுமாக..:) (தாமதத்தின் கண் சரியாக திறக்காத காரணம்) படங்களை பார்த்த பின் செல்லம் என்பது புரிந்தது.
வி.பு இன்னமும் பார்க்கவில்லை. பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, மீண்டும் வருக!
நீக்குஇன்றைக்கு என்ன பிட்சுக்கள் தரிசன வாரமா?
பதிலளிநீக்குபடங்கள் அருமை
நன்றி!
நீக்குபடங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி!
நீக்குபடங்கள் நல்லா இருக்கு...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குBatம் (இடது மேல் வவ்வால்), Baalம் வலது புறம் கீழே மரத்தின் பொந்தில் சிவப்பு நிறப் பந்து கண்டுபிடிப்பது சுலபம்.
பதிலளிநீக்குமுதல் படத்தில் wideக்கான கோடு இல்லாததும் (இரு புறமும்), வலது கை பேட்ஸ்மனுக்கு ஸ்லிப்புகளே இல்லாததுமா? ஆனா பாருங்க..நாங்க எதையாவது எழுதுவோம். ஆனா நீங்க புதிருக்கான பதிலே கொடுக்கமாட்டீங்க. இது என்ன வகைப் புதிரோ.
முதல் பாதி சரி. இரண்டாம் பாதி ஊஹூம் .
நீக்குசரி...அதையும் நானே சொல்லிடறேன். பேட்டின் பின்புறம்தான் வரணும். இங்க பந்து படும் பகுதி தெரியுது. ஹா ஹா ஹா.
நீக்குஇல்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதல் படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்டது. கொஞ்சம் யோசிக்கனும் என்று நினைக்கும் போது பதில் வந்து விட்டது.
இரண்டாவது கெளரவம் படப்பாடலை நினைவு படுத்துகிறது. "ஆலம் விழுதுகள் போல் உறவு... வேரென நீயிருந்தாய்.. அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்." என பந்து பாடிக் களிப்பதை பறக்கும் வெளவால் அகமகிழ்ந்து கேட்கிறதோ.? ஹா.ஹா.ஹா.
இது சும்மா ஜாலி கற்பனைதான்...! இன்னமும் கவனிக்கிறேன். அதற்குள் நன்றாக கவனித்து விடை எழுதி விடும் நெ. தமிழர் சகோவிற்கு வாழ்த்துகளுடன் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆனால் இங்கே ஒரு சிறு திருத்தம். நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் கௌரவம் அல்ல, வியட்நாம் வீடு!
நீக்குஆகா.. படத்தையே மாற்றி விட்டேனோ? நல்லது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடல் எனக்கு பிடிக்கும். அதுதான் வேர்களைப் பார்த்ததும் உடனே நினைவுக்கு வந்து விட்டது. தகவலுக்கு நன்றி
நீக்குநள்ளிரவைக் கடந்து 2:50 மணிக்கு அலாரம்..
பதிலளிநீக்கு2:45 க்கு விழிப்பு வந்து விட்டது.. ஆனால் கண்களைத் திறக்க முடியாதபடிக்கு வலி...
போங்கப்பா... இன்னிக்கு ஞாயித்துக் கெழமை... யாரும் கோச்சுக்க மாட்டாங்க..ந்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு படுத்துக்கிட்டேன்...
3:25 க்கு மறுபடியும் திடுக்கிட்டு விழித்து எபி க்கு வந்தால் யாரையும் காணோம்...
காவி, கையில் பிரம்பு, நெத்தியில திருநீறு, நீண்ட தாடி, ஜடாமுடி ...
இல்லையில்லை.. இதோ.. இதோ... என்று குறளைச் சொல்லி விட்டு வெளியிடச் சொன்னால்....
எபி க்கு தலை சுத்துது...
தட்டிக் கொடுத்து தாஜா பண்ணினால்
நெல்லை காலார வந்திருக்கிறார்....
இன்னிக்கு ஏன் கண்ணைத் தெறக்க முடியலை!?..
அதை அப்புற்ம் சொல்றேனுங்கோ...
ஒரே சஸ்பென்சா இருக்குதே!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதல் படத்திற்கு..ஒருநாள் ஆட்டத்தில் சிகப்பு நிற பந்து உபயோகப்படுத்த மாட்டார்கள். (வெள்ளை நிறப் பந்துதான்.) எங்கள் வீட்டிலிருக்கும் கிரிகெட் ரசிகரிடமிருந்து வந்த பதில். (நான் வெகு நேரமாக கைபேசியுடன் போராடி கொண்டிருப்பதை பார்த்து அவர் கூறிய பதில்) சரியா?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இது சரி.
நீக்குபதில் சரி என்றதற்கும் நன்றிகள்.
நீக்குஇது ஒரு நாள் மேட்ச் என்று எங்காகிலும் குறிப்பிட்டிருக்காங்களா?
நீக்குகலர் ட்ரெஸ் போட்டால் அதுதான் அர்த்தம். இல்லையேல் எல்லோரும் பாரதிராஜா படத்து ஆண் தேவதன்கள் போல வெண்ணிற ஆடை அல்லவா அணிந்திருப்பார்கள்?
நீக்குபடங்கள் அழகு. அந்த செல்லம் செம அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம். நல்வரவு வந்தவர்க்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும். நாளையிலிருந்து தளர்த்தப் போவதாய் ஒரு பக்கம் சொல்கின்றனர். இன்னொரு பக்கம் குழப்பமாய்த் தெரிகிறது. அடையாள அட்டை கொடுப்பவர்கள் தான் வாரம் ஒரு நாள் வெளியே வரலாம் என்கின்றனர். அந்த அட்டையை 60க்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தான் கொடுப்பார்களாம். அப்போ 60க்கு மேல் உள்ளவர்கள் என்ன செய்யலாம்? அரசே எல்லாமும் கொடுத்து விடுமா? :(
பதிலளிநீக்குபார்ப்போம்.
நீக்குசாதாரணமாய் மருந்துக்கடையில் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பார்கள். இப்போது அவர்களும் வருவதில்லை. இங்கே இருக்கும் உதவி செய்யும் நபரைத் தேடினால் அவர் ஊரிலேயே இல்லையாம்! எல்லாக் கடைகளும் மளிகை சாமான்கள் இல்லாமல் இங்கே மூடிவிட்டார்கள்.
பதிலளிநீக்குஅடக் கடவுளே. விரைவில் எல்லாம் சரியாகட்டும்.
நீக்குபுலம்பலை நிறுத்திக் கொண்டு படங்களைப் பார்க்கலாம். எல்லாப் படங்களும் அருமை. இங்கேயும் ஓர் செல்லம் ரசிகர் இருக்கார் போல! புஸுபுஸுவென அதுதான் எத்தனை அழகு? நான் முதல்லே எதையோ விட்டுட்டார், தேடிக் கொண்டு போறார்னே நினைச்சேன். புதிர்ப் படங்களில் முதல் படத்துக்குக் கமலா பதில் சொல்லிட்டார். இரண்டாம் படத்தில் வவ்வாலையும், பந்தையும் கண்டு பிடிச்சுட்டேன்.
பதிலளிநீக்குவெரி குட்.
நீக்குகடைசிப் படம் எடுத்திருக்கும் கோணம் அழகோ அழகு. ஆனால் தலைப்புத் தான் பொருந்தவில்லை. அந்தப் பாடலுக்கு ஏற்ற காட்சியாக இல்லையே!
பதிலளிநீக்குபடம் போட்டவர் பாட்டை நினைக்கவில்லையோ?
நீக்குபடங்கள் எல்லாம் அழகு. அன்பே உருவான சாதுக்களை விரும்பும் செல்லக்குட்டி படம் அருமை.
பதிலளிநீக்குஅவர் ஆடையைப்பற்றி இழுத்துகொண்டு எங்கே அழைத்து போக பார்க்கிறது.
உங்கள் இளவரசன் செல்லக்குட்டியை தொட்டுப்பார்க்க விரும்புகிறாரே வரவில்லையா சின்னக்குட்டி இளவரசன் கிட்ட.
படங்கள் எல்லாம் அழகு.
நன்றி.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎதையாவது எழுதவேண்டும் என்று நினைத்து இப்படி எல்லாம் வழியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் நண்பரே.
நீக்குபடங்கள் எல்லாம் நல்லாருக்கு. புத்தர் பொம்மைகள் அழகு
பதிலளிநீக்குசெல்லம் படம் தான் சூப்பர்.புஸு புஸு குட்டி...அழகா துணிய கடிச்சு இழுக்குது பப்பி..
கீதா
நன்றி.
நீக்கு1. ஏலேய் யாருலே அது சேப்பு பந்த போட்டதுனு வெள்ளாட தெரியாதவன் லாம் வந்துட்டானுங்கன்னு விளாசி தள்ளினதுல அது அந்தாண்டை மரத்துல போய் சிக்கிருச்சு போல!!!!!
பதிலளிநீக்கு2. அதான் அந்த சேப்பு பந்து...அப்புறம் வொவ்வாலு...
கீதா
ஹா ஹா!
நீக்குபடங்கள் அருமை. எட்டிப்பார்க்கும் நாய்க்குட்டி, வாவ்!
பதிலளிநீக்குஎன்ன இது!...
பதிலளிநீக்குஇன்றும் எபி தூங்கி விட்டதா!..
பதிலளிநீக்குமறுபடியும் தூக்கம்...
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்கு