திங்கள், 27 ஏப்ரல், 2020

திங்க கிழமை : வெறுமரிசி அடை : பானுமதி வெங்கடேஸ்வரன் ரெசிப்பி




தேவையான பொருள்கள்:




புழுங்கல் அரிசி     - 2 கப்  
(சிவப்பு அரிசியாக  இருந்தால் நலம்)
பச்சை மிளகாய்  - 5
தேங்காய் துருவல்  -  1 

கறிவேப்பிலை   -  1 ஆர்க் 
சீரகம்                    - ஒரு டீ ஸ்பூன்
உப்பு                      - 2 டீ ஸ்பூன் 


செய்முறை:

அரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.  பிறகு ஊறிய அரிசியோடு தேங்காய், உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்க்கவும். 





இதனுடன் பச்சை மிளகாய் விழுதை தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.   இந்த வெறுமரிசி அடையை வார்த்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். அல்லது வார்த்து மூடி வைக்க வேண்டும். நேரமானால் வடக்கென்று ஆகி விடும்.  

சிவப்பரிசியில் செய்யும்  வெறுமரிசி அடை மிகவும் சுவையாக   இருக்கும்.  இதைத்தான் கர்நாடகாவில் அக்கி ரொட்டி என்கிறார்கள். ஆனால் அதற்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை போட்ட தேங்காய் துருவல் கொடுப்பார்கள்.
               
==================================


69 கருத்துகள்:

  1. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் நல்விருந்து வானத் தவர்க்கு..

    நலமே வாழ்க....

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. என் மருமகள் செய்த அக்கி ரொட்டி இந்த வகை இல்லை. நான் (?) என்று சொல்வார்களே அந்த மாதிரி இருந்தது. முக்கோண வடிவ முரட்டுச் சப்பாத்தி முகப் பவுடர் போட்டு வந்தது போல.

      நீக்கு
    2. அக்கி ரொட்டி இப்படி இல்லை. அதுக்கு மாவு தண்ணீர் விட்டெல்லாம் அரைக்க வேண்டாம். அரிசி மாவு பொடியாக இருந்தாலே போதும். மேலும் அதில் உள்பொருட்கள் நிறையச் சேர்ப்பார்கள். வெங்காயம், கொத்துமல்லி (இது நிறையவே வேணும்.) கிட்டத்தட்ட மராத்திக்காரர்களின் தாலி பீத் மாதிரினு சொல்லலாம் அக்கி ரொட்டியை.

      நீக்கு
    3. கௌ அண்ணா அக்கி ரொட்டி வெளியே பார்க்க ஹார்டா ஆனால் உள்ளே சாஃப்டா இருக்குமே. கீதாக்கா சொல்லிருக்காப்ல அதுல எல்லாம் சேர்த்து செய்ஞ்சு..எங்க வீட்டுல மாதத்தில் ஒரு முறையேனும் இருக்கும். கூர்க் அக்கி ரொட்டி ரெசிப்பி நல்ல வெந்த சாதத்தில் கொஞ்சம் அரிசிமாவு போட்டு பிசைந்து செய்யறாங்க. எதுவா இருந்தாலும் மாவு ஈரப்பதத்துடன் கொஞ்சம் ஒட்டறா மாதிரி இருந்தாதான் தண்ணீர் தொட்டு தொட்டு மெலிசா தட்டவும் க்ராக் விழாமலும் இருக்கும்.

      கீதாக்கா சொல்லிருப்பது போல கிட்டத்தட்ட மராட்டி தாலி பீத் போல...

      கீதா

      நீக்கு
    4. //முக்கோண வடிவ முரட்டுச் சப்பாத்தி முகப் பவுடர் போட்டு வந்தது போல.// haha! What a comparison!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததொரு நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் அனைவருக்கும் இனிய திங்கள் காலை
    வணக்கம். என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    அக்கி ரொட்டி மருமகள் செய்வார்.
    இந்த அடையும் நன்றாக இருக்கிறது.
    சுலபமாகச் செய்துவிடலாம்.

    நன்றி பானு மா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடப் பிரார்த்தனைகள். ஊரடங்கில் இருந்து அனைவரையும் நல்லபடியாக விடுவிக்க இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரடங்கு முடிந்தபிறகுதான் அதிக ஆபத்துனு நினைக்கிறேன். கஷ்டமான வேலையை இறைவனிடம் செய்யச் சொல்றீங்களே. அவரவர் விதி வழி அடைய நின்னனரே

      நீக்கு
    2. ஐரோப்பாவில் கொரோனாவைக் கடுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்த நாடாகக் கருதப்படும் ஜெர்மனி, ஊரடங்கை லேசாகத் தளர்த்தப்பார்க்கிறது. தளர்த்தினால் இதுவரை கொண்டிருந்த கட்டுப்பாடு கலைந்த சௌகரியத்தில், சனியன் உள்ளே மீள்நுழைந்து ஆட அரம்பித்துவிடுமோ என அஞ்சுகிறது. மூன்று மாநிலங்களில் தளர்த்தியிருக்கும் அமெரிக்காவும் மூச்சைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது. ‘ஒன்னுமே புரியல.. ஒலகத்திலே..’ கதிதான் எங்கும்.

      நீக்கு
  6. எனக்குத் தெரிஞ்சு நாங்க பார்த்த பாலக்காட்டு மாமிகள் எல்லோரும் வெறும் அரிசி அடைக்குத்தெங்காயோடு உப்பு மட்டுமே போட்டு அரைப்பார்கள். அதோடு வார்க்கும்போது முருங்கைக்கீரை சேர்ப்பார்கள். எங்க வீட்டில் நம்மவருக்குக் காரம் வேண்டும் என்பதால் நான் காரம் சேர்ப்பேன். பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம் சேர்ப்பேன். இதில் மிஞ்சின மாவில் தான் அடை மாவைக் கலந்து திப்பிசத் தவலை வடை பண்ணியது நினைவில் இருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்ணறதுல பாதிக்குமேல் திப்பிசம். இதில் எதை நினைவில் வைத்துக்கொள்வது?

      நீக்கு
    2. இஃகி,இஃகி, இஃகி, இப்போப் போன வாரம் தானே போட்டிருந்தேன். சுட்டி தரேன் இருங்க! கடைசிப் பதிவுக்கு முந்திய பதிவே அது தான்! https://sivamgss.blogspot.com/2020/04/blog-post_17.html

      நீக்கு
  7. https://www.indianhealthyrecipes.com/akki-roti-recipe-akki-rotti/ here is one method of making akki roti.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கைல முதல் முறையா தன்னுடைய தளத்துச் சுட்டிக்கு பதிலா வேற சுட்டி கொடுத்திருக்காங்க கூசா மேடம். எப்படி இதன் செய்முறையை எழுத மறந்தாங்க? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. அக்கி ரொட்டியைப் பார்த்திருக்கேன், பண்ணியதில்லை. பண்ணி இருந்தால் தான் என்னுடைய தளத்தின் சுட்டி கொடுக்க முடியும். இது பொதுவாக அனைவரும் செலும் தளம். ஆகையால் இதைக் கொடுத்தேன்.

      நீக்கு
    3. ஒருத்தர் பேரில் டைப்போ எர்ர் வருவதற்கு சாரி. கீதா சாம்பசிவம் மேடம்னு வந்திருக்கணும்.

      நீக்கு
  8. அட அடை நல்லாயிருக்கே.... எனக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்று பானுமதி வெங்கடேச்வரனின் தேங்கா-அரிசி அடையா? என் பையனுக்காக அடிக்கடி (அதாவது ஒரு மாத்த்தில் இரு தடவை) பண்ணியிருக்கிறாள். பெண் இதற்கு புதினாச் சட்னி தொட்டுக் கொள்வாள். பையன் வெறும்னவே சாப்பிடுவான். நான் சாப்பிடுவதில்லை.

    நல்ல பகிர்வு. பாராட்டுகள். (கர்ர்ர்ர்ர்ர்.. நான் இதை எபிக்கு அனுப்பணும்னு நினைத்திருந்தேன். ஹா ஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அனுப்பி வைக்க நினைச்சுப் பின்னர் வேண்டாம்னு விட்ட குறிப்புக்களில் இந்த வெறும் அரிசி அடையும் ஒண்ணு.

      நீக்கு
    2. அட! அப்போ நான் முயல்களை வென்று விட்ட ஆமையா? ஹாஹா!

      நீக்கு
  10. பெங்களூரில் அக்கி ரொட்டி சாப்பிடுவோம். அது கீதா சாம்பசிவம் மேடம் சொல்வது போல, ப மிளகாய், கொத்தமல்லியோட இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். As usual எனக்குப் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் வெறுமரிசி அடை நன்றாக உள்ளது. படங்களும், விளக்கங்களும் அருமை. இது வரை அடைக்கு பருப்புகள் சேர்த்து மெனக்கெட்டிருக்கிறோம். பருப்பில்லாத சிகப்பரிசியில் அடை.. செய்து பார்க்க வேண்டும். ருசியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ருசியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.// அதிலென்ன சந்தேகம்? ருசியாகத்தான் இருக்கும். சூடாக சப்பிட்டு விடுங்கள்.நன்றி.  

      நீக்கு
  12. நாங்கள் சிகப்பரிசி உபயோகிப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க மாப்பிள்ளைச் சம்பா சிவப்பரிசி அல்லது கறுங்குருவை சிவப்பரிசியில் தான் இப்போக் கஞ்சி. நம்மவரின் மனோநிலைக்கும், அவர் பார்க்கும் சமையல் குறிப்புகளுக்கும் ஏற்ப இதெல்லாம் மாறிக் கொண்டே இருக்கும்! :)))) இப்போதைக்குச் சிவப்பு அரிசி.

      நீக்கு
    2. @Nellai Tamizhan: for a change உபயோகித்துப் பாருங்களேன். நன்றி நெல்லை. 

      நீக்கு
  13. வெறுமரிசி அடை தோசை எனபதற்கு பதிலாக தேங்காய் சீரா அரைச்சுவிட்ட அடை தோசைன்னு சொல்லலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லலாமே. நெல்லைத் தமிழன் தேங்காய் அரிசி அடை என்கிறார். What is in name? An adai is an adai, an adai, an adai.. right? Thank you. 

      நீக்கு
  14. //இதனுடன் பச்சை மிளகாய் விழுதை தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.// எதுக்கு இந்த கொலை வெறி :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை மிளகாய்+கொத்துமல்லித் தழையை நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு உப்பு, புளி, பெருங்காயம் வைத்து அரைத்துக் கொண்டு கடுகு, உபருப்பு தாளித்துத் தொட்டுக்கலாம் எல்கே. மதுரை கோபு ஐயங்கார் கடையில் மத்தியானம் பஜ்ஜி, வெள்ளை அப்பத்துக்குக் கொடுக்கும் சட்னி இது தான்!

      நீக்கு
    2. கொலை வெறி எல்லாம் இல்லை. கீதா அக்கா சொல்வது போல் ப.மிளகாய் விழுது செய்தால் அத்தனை காரமாக இருக்காது. அதையும் செய்து இணைத்திருக்கலாம். நன்றி.  

      நீக்கு
    3. கீதா அக்கா வெறுமரிசி அடை உங்களை மிகவும் ஈர்த்து விட்டது போலிருக்கிறது மீண்டும்,மீண்டும் வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி, நன்றி, நன்றி. 

      நீக்கு
  15. அட! வெறுமரிசி அடை இத்தனை சீக்கிரம் வெளியாகி விட்டதே! நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சுவையான குறிப்பு. பச்சை மிளகாய் விழுது - யப்பா... படிக்கும்போதே காரமா இருக்கே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா! அவ்வளவு காரமெல்லாம் கிடையாது வெங்கட். நன்றி. 

      நீக்கு
  17. வெறுமரிசி அடை குறிப்பு , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    எனக்கு பிடிக்கும் என் கண்வருக்கு பிடிக்காது அதனால் செய்வது இல்லை.

    அக்கி ரொட்டி அரிசிமாவில் நிறைய உபசாரம் செய்து(கொத்துமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய் , தேங்காய் பூ எல்லாம் போட்டு) மெலிதாக எண்ணெய் தொட்டுக் கொண்டு தட்ட வேண்டும். சூடாய் சாப்பிட வேண்டும் ஆறினால் நன்றாக இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கி ரொட்டி அரிசிமாவில் நிறைய உபசாரம் செய்து// ஹாஹா நல்ல விளக்கம்.! நன்றி. 

      நீக்கு
  18. ரொம்ப நல்லா இருக்கு....

    இதே அரிசி மட்டும் கெட்டியா ஆட்டி ,தேங்காய் பல்லு பல்லா சேர்த்து அம்மா அரிசி ரொட்டி செய்வாங்க..

    இதே மாவை நீர்க்க கரைத்து ஊற்றினால் நீர் தோசை...


    இன்னக்கி இரவு என்ன டிபன் என்பதில் குழப்பம் தீர்ந்தது.....

    😊😊😊😊😊


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதே மாவை நீர்க்க கரைத்து ஊற்றினால் நீர் தோசை...// என் மருமகளும் இதைத்தான் கூறினாள். நன்றி அனு.

      நீக்கு
  19. தொட்டுக் கொள்ளும் வகையறாக்கள் (காரசாரமான பொடிகளில் ஏதேனும் ஒன்று) நன்றாக இருந்தால் மட்டுமே அடை சிறக்கும் + பிடிக்கும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் டி.டி. நன்றி. 

      நீக்கு
  20. எங்கள் வீட்டில் அடை எப்பொழுதாவதுதான். காரசட்னி அல்லது தக்காளி தொக்குடன்.

    பதிலளிநீக்கு
  21. ஹை பானுக்கா சூப்பர்! பார்சல்னு சொல்ல முடியாது ஹிஹிஹிஹி...ஆறிப் போனா கொஞ்சம் கடிக்க கஷ்டமா இருக்கும். நல்ல ரெசிப்பி நினைவு படுத்திட்டீங்க ரொம்ப நாளாச்சு செஞ்சு. ஸோ நாளைய டிஃபன் நம் வீட்டில் இதுதான்.

    1 கப் அரிசிதானே? அங்கு விடுபட்டிருக்குனு நினைக்கிறேன்...தேவையான பொருட்களில்...

    நல்லா வந்திருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2 கப் புழுங்கலரிசினு போட்டிருந்ததைக் காலம்பரவே பார்த்தேனே கீதா? (சிவப்பு அரிசினும் போட்டிருக்காங்க.)

      நீக்கு
    2. விடுபட்டுப் போனது தேங்காயின் அளவு. நான் கொஞ்சமாகத்தான் தேங்காய் சேர்த்தேன், ஆதியும் குறிப்பிட மறந்திருக்கிறேன். நன்றி கீதா

      நீக்கு
  22. புகுந்த வீட்டுக்கு வந்தப்ப மாமியாரிடம் கற்றுக் கொண்டது. திருமணம் ஆன புதிதில் சென்னையில் தான் ஸ்டே நான் மட்டும். அப்ப மாமியார் ஒருநாள் தேங்காய் சோசை/அடை/வெறும் அரிசி அடை செய்வியா? என்று இப்படி மூன்று பெயரும் சொல்லிக் கேட்க...நான் தேங்காய் தோசை செய்யத் தெரியும்னு ..(எம்புட்டு கஷ்டப்பட்டு படிச்சிட்டு வந்திருந்தேன்...சில டிஃபன் எல்லாம் சென்னைக்காரங்களுக்கு செஞ்சு அசத்தணும்னு ஹிஹிஹி) மூணுமே ஒண்ணுதான்னு அம்மா சொல்ல நான் மீண்டும் விழித்தேன்...தேங்காய் தோசைய அடைன்னு சொல்றாங்களேன்னு.. எனக்குக் கேட்கவும் பயம்..நல்ல காலம் மாமியாரே என்னிடம் ஒரே டிஃபன் தான் அதுன்னு சொல்லி சரி உனக்குத் தெரிஞ்சதுலயே சொல்றேன் இன்று மாலை டிஃபனுக்கு தேங்காய் தோசை. எங்க செய் பார்க்கலாம்னு சொல்லிட ஆஹா பரவால்லையே நம்ம ஊர் போல இங்கயும் தேங்காய் சேர்க்கறாங்களேனு. (ஏன்னா எங்க வீட்டுல தேங்காய் அடிக்கடி பயன்படுத்துவாங்க. இங்க தேங்காய் என்பதே வெகு அரிது..ரொம்ப கொஞ்சம் தான்...) ஆனாலும் ஒரு டவுட்...அடைன்னு சொன்னாங்களே...

    நானும் கன ஜோரா பச்சரிசி டப்பாவைத் திறந்து எவ்வளவு போடனும் என்று அம்மாவிடம் கேட்க அம்மா, எந்த அரிசி எடுக்கறன்னு கேட்க நான் விழிக்க...(ஆஹா நம்ம வீட்டுல பச்சரிசி புழுங்கரிசி வித்தியாசம் பாட்டிகிட்ட கேட்டு உருப்போட்டு வந்திருக்கமே போச்சா ...பல்பு வாங்கிட்டமான்னு பயந்து...) அம்மா இது பச்சரிசிதானே...

    அம்மா: அரிசி பச்சரிசிதான் ஆனா தேங்காய் தோசை செய்ய புழுங்கரிசி ஊறப் போடணும் நு சொல்ல.....நான்: ஓ எங்க வீட்டுல பச்சரிசி தேங்காய் எலலம் அரைச்சு கொஞ்சம் தனியா எடுத்து கூழ் காச்சி சேர்த்து அல்லது காச்சாமல் செய்வது.

    நீங்க சொல்றது தெரியலைம்மா..என்று சொல்லி அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு செய்தேன்....இப்படி நிறைய..ஆரம்பத்தில். இரு வேறு பக்குவங்கள். நான் பேசிய தமிழ் அவங்களுக்குப் புரிய கஷ்டப்பட என்று.

    அப்படிக் கற்றுக் கொண்டது. அப்புறம் நான் திருவனந்தபுரத்திலதானே ஸோ அப்ப சிவப்பரிசி போட்டுக் கற்றுக் கொண்டேன். செமையா இருக்கும் சிவப்பரிசி போட்டா.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. தேங்காய் கொஞ்சம் கூடுதலா போட்டா அல்லது சமமா போட்டா அத்தனை ரொம்ப வடக்குன்னு ஆகறதில்லைனு அப்புறம் தெரிந்து கொண்டேன் பானுக்கா.

    அக்கா அக்கி ரொட்டி வேறு அல்லவா?

    இங்கு கன்னடத்தார் புழுங்கரிசி அத்தனை பயன்படுத்துவதில்லை. தோசைக்குக் கூட தோசா ரைஸ் என்று பச்சரிசி...அப்புறம் ஸ்டீம்ட் ரைஸ் நு (பாதி புழுக்கிய அரிசி..) இப்படித்தான் இங்க யூஸ் பணறாங்க.

    ஸோ தேங்காய் வெல்லம் போட்டு சைட் டிஷ் தருவது அக்கி தோசாவுக்கு அது. பச்சரிசி/தோசா ரைஸ்லதான் செய்யறாங்க

    அக்கி ரொட்டி என்பது கேரளத்தில் பத்ரி. (ப்ளெயினாக இருக்கும் கர்நாடகாவில் சேர்ப்பது போல எதுவும் சேர்க்காம செய்வாங்க)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த வெறும் அரிசி அடையைக் கல்யாணம் ஆகிப் பத்து வருஷங்கள் கழித்துப் பக்கத்து வீட்டுப் பாலக்காட்டு மாமி மூலம் தெரிந்து கொண்டேன். :))))

      நீக்கு
  24. ஆஆஆஆ என்னாதிது அரிசியில தோசை செய்து எங்களை எல்லாம் பேய்க்காட்டுறா பானு அக்கா:))..

    ஆனா பச்சைமிளகாய் தேங்காய் சேர்த்திருப்பதால் நன்றாகவே இருக்கும்.

    கோதுமை மாவுக்குள் இப்படிச் சேர்த்து வெங்காயமும் இறம்பப் போட்டு ரொட்டி சுடுவோம் சூப்பரோ ஜூப்பர்... ஒரு இடிச்ச சம்பல் இருந்தால், நிறைய சாப்பிட்டிடலாம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா. //கோதுமை மாவுக்குள் இப்படிச் சேர்த்து வெங்காயமும் இறம்பப் போட்டு ரொட்டி சுடுவோம் சூப்பரோ ஜூப்பர்...// ஐயோ! ஐயோ! அது கோதுமை தோசை.  

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இல்லை பானு அக்கா, ரொட்டி பதமாக குழைத்து உருட்டிச் சுடுவதைச் சொன்னேன், ரொட்டி சூப்பராக இருக்கும்.

      நீக்கு
  25. அரிசி அடை நல்லா இருக்குக்கா .நான் பச்சரிசியை  நீர்த்தோசை தான் செய்வேன் .இதையும் செஞ்சு பார்க்கிறேன் .இதுக்கு காரசட்னிதான் நல்ல இருக்கும் .

    காய்ந்து போனாலும் அதை உப்புமாவாக்கலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் ஏன்ஜெல் புதன்,வியாழன் தவிர மற்ற கிழமைகளில் வருவதில்லை என்று நினைத்துக் கொண்டேன், வந்து விட்டீர்கள். ஆயுசு நூறு!  நன்றி. 

      நீக்கு
  26. முக்கோணம்ன்னாலே அது வேறே விஷயம்!..

    ஒருகாலத்திலே எவ்வளவு கியாதி பெற்ற வார்த்தை இது?..

    பதிலளிநீக்கு
  27. எந்த முக்கோணம்ன்னு யோசிக்காதீங்க.. சிவப்பு முக்கோணத்தை சொல்றேன்..

    பதிலளிநீக்கு
  28. இன்னிக்கு நைட் காரம் தூக்கலாக இல்லாத அடை தான்! தொட்டுக்க அவியல்.. அம்மாடின்னு இருந்தது...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!