கண்ணால் காண்பதும் பே(பொ)ய் காதால் கேட்பதும் பே(பொ)ய்
கீதா ரெங்கன்
“டீச்சர் நாங்க எழுதி முடிச்சுட்டோம். 6.40 பஸ்ஸ பிடிக்கணும். நாங்க போட்டுமா டீச்சர்”
பள்ளியில் மாலை நேர ஸ்டடி க்ளாஸ். மணி 6.30 ஆகிக் கொண்டிருந்தது.
‘எல்லாம் இந்த புனிதாவுக்காக நான் கேக்கணுமாயிருக்கு. சரியான பயந்தாங்கொள்ளி.’ புனிதா என் மயினி/அத்தை பெண். நெருங்கிய கூட்டுகாரி. சுருக்க புனித். நான் சூரியகலா. சுருக்க கலா, கல், கல்லு. நாங்க ரண்டு பேரும் ஒரே வகுப்பு. பஸ்ஸிற்கு நேரம் ஆகத் தொடங்கியதும் அவள் பயம் கூடியது. எல்லாம் அந்தப் பாழாய்ப் போன ரத்தக்காட்டேரி ப்யேயிதான்…
“டீச்சர் எங்க ஊர்ல இருட்டினா ரத்தக்காட்டேரி வந்துரும்னிட்டு புனிதா பயப்படுறா” இப்படி புனிதாவை வம்புக்கிழுத்துக் குமைப்பதில் எனக்கு ஒரு இத்திரி சந்தோஷம். மற்ற மாணவிகள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தனர்.
“ஆமா டீச்சர். பொண்ணுன்னா ப்யேயி எற(ர)ங்கிடும் டீச்சர்.” ஆனால் டீச்சர் இரங்கவில்லை. சில மாணவிகளை ஏசிக் கொண்டிருந்ததில் பிஸியாக இருந்தார்.
“ஏன்ட்டி! டீச்சரைப் போயி ப்யேயின்ற?”. அவள் செவியில் கிசுகிசுத்தேன்.
“ஹா இது கொள்ளாமே. என்னைய மாட்டிவிடுத? இரிக்கிட்டி ஒனக்கு. ஒன் கொதவளையை சங்குக் கழுத்துனு சொல்லிக்குவலா அந்தச் சங்குக் கொதவளைய, அந்தப் ப்யேயி பிடிக்கறப்பத் தெரியும்ட்டி” என்று பல்லைக்கடித்தபடி என் செவிக்குள் கிசுகிசுத்தாள் புனிதா. அவளுக்குப் பொறாமை! என்னை பயமுறுத்துகிறாளாம். நானா பயப்படுவேன்!
“இந்த பஸ்ஸை விட்டா அப்புறம் அடுத்த பஸ் வருமான்னு தெரியாது டீச்சர். வேற பஸ்ல போனா மெயின் ரோட்டுல இறங்கி ஊருக்கு ஒரு மைல் நடந்து போணும். இருட்டுது டீச்சர்”.
டீச்சருக்கு என்ன தோன்றியதோ? “எழுதின நோட்டை அங்க வைச்சுட்டுக் கெளம்புங்க”. அனுமதித்துவிட்டார்.
பள்ளியிலிருந்து 5 நிமிட நடையில் பெரிய பஸ்டான்ட். பள்ளி வழியாகத்தான் பஸ் செல்லும் என்றாலும் நிறுத்துவது என்பதெல்லாம் டிரைவரைப் பொருத்து. பஸ்ஸை பிடிக்க ஓடினோம். அந்த ஓட்டத்திலும் பேகில் வைத்திருந்த பன்னை எடுத்து புனிதாவிடம் கொடுத்து, நானும் தின்றபடியே ஓடினேன். ஓடினோம். பசி பத்தும் செய்யும்.
“ஏ குருட்டு மூதி, செருப்பு பிஞ்சிரும்” என்ற குரல் தேய்ந்திருந்த போது என் செருப்பு பிய்ந்து என்னைப் பழிவாங்கியது.
“ஏய் கல்லு என்னாச்சுட்டி? நிக்க? பஸ்ஸு போயிரும்ட்டி”
“இருடே அந்தாளு கால தெரியாம சவுட்டிட்டேன். என் செருப்புக்கு சாபம் விட்டான். பிஞ்சிருச்சி. இந்தா பின்னு போட்டுட்டு ஓடியாரேன். நீ ஓடிப் போயி பஸ்ஸ பிடிச்சு நிறுத்துடே”
பஸ்டாண்டிற்குள் நுழைந்த போது, பஸ் இல்லை. “போன பஸ்ஸே வரலயாம் மக்கா. மத்தது பணிமனைல கெடக்காம். உங்கூருக்குப் போற பஸ்ஸு இனி இல்ல.”
“ஐயோ! இப்ப என்ன ச்செய்ய? ஏட்டி நம்மூர் ஆளு ஆரெங்கிலும் இருக்காவளான்னு பாருட்டி”. புனிதா பரபரத்தாள். டீக்கடையில் இருந்த இலங்கை வானொலியில் “நானே வருவேன்” பாடல் புனிதாவின் டென்ஷனை கூட்டியது. “நல்ல நேரத்துல போட்டாண்டே பாட்டு”
“மக்கா! அன்னா பாரு. மாட்டாஸ்பத்திரி வளி போற பஸ்ஸு நிக்கில்லா. எறங்கி ஊருக்கு நடந்துருவம் என்ன ச்சொல்லுத”
“ஐயோ பயமாருக்குட்டி”
“ஷ்ஷு …..ந்தா…நா இருக்கேன்லா. அல்லாத இப்பம் என்னடே செய்வம்?” அவளை இழுத்துக் கொண்டு பேருந்தில் ஏறினேன்.
எங்கள் ஊரில், பலவகைப் பேய்கள் மக்களைப் பிடித்து பயறடித்து ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம். முந்தைய அம்மாசி சமயத்துல கூட ஊருக்குப் போற பாதையில ஆரோ சத்துக் கிடந்ததை ரத்தக்காட்டேரி ப்யேயி அடிச்சுப் போட்டதா பேசிக் கொண்டனர். யார் விழுந்தாலும், சத்தாலும், பாவம் அதுதான் பழி சுமந்தது. ஊர் மக்கள் அந்த ரோட்டில 7 மணிக்கு மேல நடக்கறதில்லைன்னு எனக்கு அப்பந்தான் ஓர்மை வந்தது.
பஸ் ப்ரேக் அடித்துக் குலுங்கி இறங்கும் இடத்திற்குச் சற்று முன்னதாகவே நின்றது. எங்களை இறங்கச் சொன்னார் கண்டக்டர். ஊருக்குள் செல்லும் ரோட்டில் முக்கில் திரும்ப ஒரு 5 நிமிட நடை. வேறு வழியில்லை. கண்டக்டருடன் ஒடக்குக்கு நேரமில்லை.
“என்னட்டி இப்படி இருட்டாருக்கு. ரோடு லைட்டு கூட எரியலை. கரன்ட் கட்டா?”
“இங்கனயாச்சும் வண்டி வெளிச்சம் அப்பப்ப இருக்குடே. நம்ம ஊர் பாதைல திரும்பினா லைட்டே கெடையாதுல்லா. நெலா நல்லாத்தான் இருக்குது. ஆனா மள மேகம் அப்பப்ப மறச்சிருது. அதான்…”
“ஐயோ, பயம்மா இருக்குட்டி… பௌர்ணமிலா. அந்த மாந்திரி வீட்டில ப்யேயியோட்டுவாங்கட்டி”
“அப்ப எல்லாம் ஓடி இங்கன வந்துருமோ? ஆரையாச்சும் பிடிச்சுக்கிட?"
என்னை நுள்ளினாள். முறைச்சிருப்பா. இருட்டில் தெரியவில்லை.
“ஏண்டே, ப்யேயினாலே பெம்பளை ப்யேயிதானா இதுவரை ஆம்பிள்ளை ப்யேயினு கேட்டுட்டேயில்ல. ரத்தக்காட்டேரி ஆம்பிளையா பெம்பிள்ளையா டே? எதுக்குக் கேக்கேன்னா ஆம்பிள்ளைனு வையி, ஜகன்மோகினி ராகம் பாடினா மயங்கிடும்லா. இல்ல…..எங்கொரலைக் கேட்டு ப்யேயி துண்டக் காங்கலை துணியக் காங்கலைன்னிட்டு ஓடிரும்லா? அப்பம் நாம அங்கோடி ஓடிப் போயிரலாம்....என்ன ச்சொல்லுத.."
“என்னை ஏண்ட்டி இப்படிப் பாடா படுத்துத. அலம்பாதட்டி. எனக்க சொபாவம் ஒனக்கு தெரியுமில்ல?”. வேகமாக நடந்து ஊர்ப்பாதையில் திரும்பினோம். “காக்க காக்க கனகவேல் காக்க”
“ஏட்டி அவயம் வைச்சீன்ன அதுக்கு கோவம் வந்திருந்திட்டி”. அந்த நேரத்திலும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
நிலவு எட்டிப் பார்த்தப்ப தகதகவென மின்னிய வாய்க்காலைக் கூட புனிதாவின் பயத்தில் ரசிக்க முடியல. அவள கெவனமா கூட்டிட்டு போணுமே.
வயல் பக்கம் கொஞ்ச தூரத்தில் இருந்த சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தது போலும். காற்றில் பிணம் எரியும் வாடை கலந்து வந்தது. புனிதாவை சீண்ட நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன். திடீரென்று அவள் கை என் கையை அழுத்தமாகப் பிடித்தது. என்னோடு ஒட்டிக் கொண்டாள். கை விசர்த்திருந்தது.
“ஏன் பயறுதே. சொள்ளை மாடன் கோயில் இந்தா வந்திரும்லா.”
“ஒறச்சு பேசாதட்டி, அன்னா பாரு. அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் எடையில அத்தத்துல அனங்குது பாரு ப்யேயிதான்.” அவள் குரல் நடுங்கியது.
“இரு நான் போயி அதை பேட்டி எடுத்து கொஞ்சம் ஐஸு வைச்சு ஒரு பாட்டு பாடிட்டு வந்திர்றேன்.”
“ஒங்கூட வன்னதே தப்பா போச்சுட்டி. நாளைலருந்து நேரத்தே ஒத்தைல போயிருவம்லா”.
“பயறாதடே. சொள்ளமாடன், மேலாங்கோட்டு அம்மைய்யுங்காட்டி ஏதும் செஞ்சுற முடியுமாடே?”
சொடலைமாடன் கோயிலின் எதிர்த்தாற்போல இருக்கும் ஆத்துப்பாலத்து சைடுல இருந்து பட்டிகள் குரைக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது.
“பட்டிங்க குரைக்குது பாருட்டி. பட்டி கண்ணுக்கு அது தெரியுமாம்ல. ப்யேயேதான். உரப்பு. கோயிலு சொவரு பக்கம் மறஞ்சி நிக்கி. பட்டி வேற தொரத்தும்ட்டி” புனிதாவின் உடல் நடுங்கியது.
“மக்களே அப்ப நீ பட்டியா? ப்யேயா? இல்ல....ஒன் கண்ணுக்கு மட்டும் தெரியுதுல அப்ப பட்டி. ஒன்னைய பட்டி தொரத்திச்சுனா நீ ப்யேயி...என்ன ச்சொல்லுத?”
புனிதாவின் கோபம், பயம் கூடியிருக்கும். அமைதியாக வந்ததில் தெரிந்தது.
“பட்டிங்களை சமாளிச்சுரலாம். பயராதே. பிஸ்கட் பன் இருக்குல்லா......”
“ஏட்டி அங்கன பாருட்டி கால் இல்ல...”
பீரிட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நிலவொளியில் ஏதோ தெரிந்தது. என்னடே உம் ப்யேயி சாம்பல் நெறத்துல இருக்கு”
“……………………………….”
திடீரென்று சலங்கைச் சத்தம் கேட்டது. கால்ல சலங்கை கட்டிட்டு சவுக்கு கறக்கிட்டு வருவானே அவனோ? அவன் குறியும் ச்சொல்லுவான், பிள்ளைங்களுக்கு நல்லது ச்சொல்லுவான். ஆர்க்கிட்டயும் எதுவும் கேக்க மாட்டான். ஆரெங்கிலும் தின்னக் கொடுத்தா வாங்கித் திம்பான்……
“ஏண்டே கால் இல்லன்னியே சலங்கைச் சத்தம் கேக்குது”.
“...............”
நான் தனியாக நடப்பது போல இருக்க.....ஐயோ எண்டெ தெய்வமே! புனிதாவை காங்கலை. அந்த உருவத்தை உத்துப் பாத்ததுல அவளைக் கவனிக்காம….. ஆடிப் போனேன். லேசாகப் பயம் எட்டிப் பார்க்கத் துவங்கியது. பைய பொறத்த திரும்பிப் பாத்தா, பிரமை பிடிச்சாப்ல நின்னிட்டிருந்தா. “என்னாச்சுடே?” அருகில் சென்று அவளை உலுக்கிய போது அவள் ஒன்னுக்குப் போயிருப்பது தெரிந்தது. பாவம்!
“பரவால்லடே….வா" என்றபடி அவளை அணைத்து இறுகப் பிடித்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன். நல்லகாலம் புத்தகப் பை கனமாக இருக்கவில்லை. இதயத்துள் குதிரை ரேஸ்!
காணாமல் போயிருந்த உருவம் மீண்டும் வந்து கையை ஆட்டுது, முன்புறமோ பின்புறமோ ஏதோ அடர்த்தியாக நீண்டு தொங்கிட்டுருக்கு என்று சொன்னாள். ப்யேயிக்கு முடி எல்லாம் உண்டோ? என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை.
“எங்கடே? அது அந்த ரண்டு மரத்தோட கிளையும் தாந்து காத்துல அனங்குது அப்படித் தெரியுது. அரண்டவ கண்ணுக்கு இருண்டதெல்லாம் ப்யேயி ”
“இல்லட்டி நல்லா பாரு சொள்ளமாடன் கோயிலுக்குப் பக்கத்துல அசையிது பாரு அங்கன இங்கன நடக்குதுல்லா...”
இருட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டிருக்க, மேகம் விலகி நிலவின் வெளிச்சமும் கொஞ்சம் வந்திட உத்துப் பார்த்த போது புனிதா சொன்னது போல் அது உருவம்தானோ? திடீரென்று ஒருவினோதமான சிரிப்பொலி கேட்டது.
“ரத்தக்காட்டேரியேதான்ட்டி.” அவள் குரலில் அழுகை எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புனிதா என்னைத் தடுத்து நிறுத்தி அப்படியே நின்றுவிட்டாள். உத்துப் பார்த்தேன். திடீரென்று ஒரு பக்கதிலிருந்து மறு பக்கம் மின்னல் வேகத்தில் ஏதோ போனது போல் இருந்தது. மீண்டும் வினோதமான சிரிப்பொலி.
“புனித் கண்ணைத் தொறக்காத. அப்படியே எம்மேல சாஞ்சுக்கிட்டு நட. நான் பாத்துக்கிடறேன்”.
சொடலைமாடன் கோயில். ஒரு பீடத்தில் சுடலைமாடன் சிலை கொஞ்சம் கோர ஸ்வரூபத்துடன் இருக்கும். கோயில் அருகே வந்ததும் அது தெரிந்தது.
“ஏடே! புனித் இங்கன பாருடே. நா அப்பமே சொன்னேம்லா... ப்யேயி இல்லன்னு. சொள்ளமாடனுக்கு போட வேட்டித் துணி தொங்குது. ஊதுபத்தி வாசனை. பாருடே மாடன் முன்ன விளக்கு காத்துல ஆடி ஆடி எரியுது. பூசை ஏற்பாடு போல. மரக் கிளை எல்லாம் காத்துல அனங்கி உருவம் போல தோணியிருக்கு”
“ஆனா அந்தச் சலங்கைச் சத்தம், சிரிப்பு எல்லாம் பயமாருக்குட்டி”
“மக்கா, கொமரி ஆத்தா சொன்னால்லா, ப்யேயி நடமாட்டத்தைத் தடுக்க சலங்கைக்காரன் அர்த்த ராத்திரியில இங்கன பூசை செய்யிரான்னிட்டு. மணியடிச்சிரிப்பான். அதான் சத்தம்.”
பீடத்தின் கீழே செத்த தள்ளி இருந்தவை சரியாகத் தெரியவில்லை என்றாலும் ஏதோ மனதை நெருடியதை புனிதாவிடம் சொல்லவில்லை.
“இனி பயப்படாம வாடே நாம விடு விடுனு நடப்போம்...”
திடீரென்று எங்கள் பின்னால் பட்டி குரைத்துக் கொண்டு ஓடி வர சலங்கைச் சத்தமும் சிறிதாகக் கேட்டது ஆனால் உருவம் எதுவும் இல்லை. “பட்டி, பட்டி ப்யேயி ப்யேயி” என்று புனிதா நடுங்கத் துவங்கினாள். பட்டிகளுக்கு பன்னை போட எடுத்த போது, பட்டிகளின் குரைப்பு வித்தியாசமாக சட்டென்று நின்றது.
எனக்கு ஆச்சரியம். அந்தக் மாந்திரி தாந்திரி? அவெந்தானே பட்டி குரைச்சுத் தொறத்தினா குரைப்பை கூடக் கட்டிப் போட்ருவானாமே….சுடுகாட்டுல பூசை செஞ்சு பில்லி, சூன்னியம், ஏவல் செய்வினை, வசியம்னிட்டு என்னென்னமோ ச்செய்வான்னு ச்சொல்லுவாங்கலா. ஊர்ல அவென் பெரிய ஆளு. எல்லாரும் மரியாதை செய்வார்கள். என்னைத் தவிர. ஒரு வேளை அவெந்தானோ?
எனக்கு அப்போதுதான் ஏதோ ஒன்று எங்கள் பின்னே வந்தது போன்று தோன்றியது. நிலவின் ஒளியும் மறைந்து இருட்டு அப்பியிருந்தது. ‘இரிசிகாட்டேரியும் இத்துன்ப சேனையும் எல்லிலுமிருட்டிரும்………எல்லாம் இடிவிழுந்தோடிட…’ நாக்கு தந்தியடித்தது.
“விடு என்னை ஒன்னும் செஞ்சுராத...அம்மே..அம்மே..ஏட் டி ஏட்டி ப்யேயி என் சங்கை பிடிக்க வருது.... ப்யேயி ப்யேயி .என்று திக்கித் திணறிச் சொல்லிக் கொண்டே சரிந்தவளைப் பிடித்துக் கொண்டேன். குறைந்திருந்த பயம் மீண்டும் என் அடிவயிற்றில் உருண்டது. என் இதயத் துடிப்பு ரேஸ் எடுத்தது.
நான் அவளை இறுகப் பிடித்துக் கொண்டு பைய திரும்பிப் பார்க்க எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. பட்டி தொரத்தினது அந்த உருவத்தைதானோ? அப்பம் அந்த உருவத்த காங்கலையே? மனப்பிராந்தோ?
செவியைக் கூர்மையாக்கி சுற்றிலும் கவனத்துடன் வாட்டர் பேகை எடுத்து புனிதாவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றிக் குடிக்க வைத்தேன். என் அட்ரினல் வேகமாக வேலை செய்யத் தொடங்கியது. நடுக்கத்தில் வாட்டர்பேக் கீழே விழவும் ஏதோ தெரித்தது போல…..தண்ணீரா? ரத்தமா? மயான அமைதி. இனம் புரியாத ஏதோ ஒன்று மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.
“புனித் விழிச்சுக்கடே என் கூட வேகமா வாடே. அம்மங்கோயில், வண்ணாம்பாறை மில் பக்கம் வந்தாச்சு. பாரு தோப்பு கடந்தா ஊருதானே”
"ம்.. நான் சத்துருவேன்ட்டி" என்று புனிதா முனகிட, பயத்துடன் அவளை இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக நடக்கத் தொடங்கினேன்.
தூரத்தில் புள்ளி வடிவில் வெளிச்சம். வண்டியோ? டார்ச்சோ? யாரோ வருவது போலத் தெரிய, “பாருடே ஆரோ வராங்க. பயறாதடே.” தைரியப்படுத்தினேன். அருகில் வரவும் மாமாவும், அப்பாவும்…..என் உயிர் மீண்டது. இருவரும் கோபத்தின் உச்சியில். மாமா புனிதாவின் கையைப் பிடித்துக் கொண்டதும் மாமாவைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள். அவளின் பயம் நீங்கியிருக்கவில்லை.
“6.40 பஸ்ல கூட வரக் காங்கலியேன்னிட்டு பொறத்த வந்தப்பத்தான் ஐயப்பன் ச்சொல்லுதான் பஸ்ஸே வரலைன்னிட்டு. ப்யேயி ரோடு. இவிங்கள வேறக் காங்கலையேன்னிட்டு பொச முட்டி வெப்ராளப்பட்டு வந்தா சவத்த மூதிங்க.. அஞ்சேகால் பஸ்ல நேரத்தே வராம அப்படி என்ன ஸ்டடி க்ளாஸ் வேண்டிக் கெடக்குட்டி? அந்தி சந்தில வராதேன்னிட்டு எத்தர வாட்டி ச்சொன்னாலும்…மூதிங்க. நாள உங்க டீச்சரை கண்டு பராதி ச்சொல்லணும்.”
வீடு வரும் வரை ஏசிக் கொண்டே வந்தார்கள். வீட்டில் நுழைந்ததும் ஆரும் காணாதபடி புனிதாவின் சங்கைப் பார்த்த போது பொடலியின் கீழ் ஏதோ சிவப்பாக....ரத்தமோ? காயம் எதுவும் இல்லை. துடைத்து விட்டுவிட்டேன். ஆனால் அத்தைக்குச் சந்தேகம். எங்களைக் குளிக்கச் சொல்லி விபூதி பூசி கையில் காப்பு கட்டிவிட்டார். “தட்டுல போயி கெடக்கண்டா. இங்கன கெடங்க ரண்டுபேரும்”. அன்று புனிதா உறங்கவே இல்லை.
வெளுப்பாங்காலத்துல புனிதாவிற்கு நல்ல சுரம். கூடவே வல்லாத சடவு. “ஏட்டி கலா மூதி! ஒனக்குத்தான் ப்யேயி இல்லனா நடுங்கற பிள்ளைய இப்படியா கூட்டி வாரது? புள்ள எப்படிக் கெடக்கு பாரு. மொத ச்சோலியா புள்ளைய மேலத்தெரு மாந்திரிகிட்ட கூட்டிப் போயி மந்திரிச்சுட்டு வந்துரு.” “அத்தை அந்தாளு.....”
“ஏட்டி மரியாதையா பேசு. நீ கூட போனா போதும். ஒனக்கு மந்திரிக்க ச்சொல்லல. வெளங்கிச்சா. ”
எனக்கு ஏனோ அந்த மாந்திரியைக் கண்டால் ஆகாது. அவனிடம் ஏதோ ஒரு கள்ளத்தனம், அமானுஷ்ய வெறி இருப்பது போலப்படும். ஊரில் அமானுஷ்யம் என்ற பெயரில் ரகசியங்கள் பல நடப்பதற்குக் காரணம் அந்த ஆள்தான் என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருக்கும்.
வேண்டா வெறுப்போடு புனிதாவை கூட்டிக் கொண்டு முதல் முறையாக அந்த மாந்திரி விட்டிற்குச் சென்றேன். அந்த அறையே வித்தியாசமாக இருந்தது. கருப்புக் கயிறுகள், முடிக்கற்றைகள், வேர்கள், மைச்சட்டி, சிவப்பு, கருப்பு வண்ண திரவம் இருந்த குப்பிகள், மண்டை ஓடுகள்.... அவன் டக்கென்று அருகில் இருந்த திரைச்சீலையை இழுத்து மறைக்க, அந்தச் சிவப்புக் கலர் குப்பி என் கண்ணில் இருந்து தப்பவில்லை. ரத்தம்? மாந்திரி ஏதேதோ சொல்லி தண்ணி, எளநீ தெளித்து புனிதாவின் மீது ஏதேதோ தூவினான். ஏதோ ஒரு வேர், வேப்பிலை அடித்தான்.
“நீ நடைல போயி இரி. அவளுக்கு ஒரு மந்திரம் ச்செவில ச்சொல்லணும். ஆரும் காங்காம”. எனக்கு அதில் உடன்பாடு இல்லை ஆனால் என்னால் பேச இயலவில்லை. அவன் குரல் அப்படியாக இருந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் புனிதா வெளியில் வந்த போது பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். அவள்தான் கோரமாக அவள் வர்ணித்த சாம்பல் நிற பேயாக இருந்தாள். நெற்றியில் பெரிய சிவப்பு பொட்டு.
இவளுக்கா சுரம் என்பது போல் அவள் முகத்தில் ஒரு அமைதியான சிரிப்பு. வித்தியாசமாக இருந்தாள். அவள் கையில் காப்பைக் காணவில்லை. அந்த இடத்தில் புதியதாய் தாயத்துடன் கறுப்புக் கயிறு! அந்தச் சிவப்புப் பொட்டும் என் கண்ணை உறுத்தியது. அதைத் தொட்டுப் பார்க்க முயன்ற போது மாந்திரியின் உறுமல் என்னை உலுக்கியது.
“மந்திரிச்ச பொட்டு, தாயத்து. தொட்டா என்ன நடக்குமின்னு அறியாந்லே?” என்று முடிப்பதற்குள் புனிதா என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தாள். மாந்திரி சிரித்த போது வினோதமான அந்தச் சத்தம்......அவன் காவிப் பற்கள் எனக்கு அருவருப்பாகத் தெரிந்தது. என் கண்கள் மாந்திரியின் கால்களை அனிச்சையாகப் பார்த்திட சலங்கை எதுவும் இல்லை. அந்தச் சிரிப்பு அது மனதில் அதிர்ந்தது.
மேலத் தெருவிலிருந்து பஸ் ஸ்டாப்பை கடந்து திரும்பிய போது பலரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்தனர்.
“ஏட்டி கல்லு நேத்து ராத்திரி நீங்க ரண்டு பேருந்தானே அங்கன ரோட்டோடி வந்தது? என்ன தைரியம்ட்டி? அந்தப் ப்யேயிய பாத்தீங்களா? அதான் புனிதா பிள்ளை பயந்திருச்சு போல. நல்ல ந்யேரம் தப்பிச்சீங்க. அந்த நல்ல மனுசன் சலங்கைக்காரனை ப்யேயி அடிச்சுப் போட்டிருச்சாம் சொள்ளமாடன் கோயிலு பக்கத்துல.” என்று வீரம்மை படபடப்புடன் சொல்லிக் கொண்டே நடந்தாள்.
முந்தைய நாள் நிகழ்விலிருந்தே இன்னும் விலகாத நிலையில் இப்படியான ஒரு காலையாக அது விடியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த சலங்கைச் சத்தம்! அவந்தான் பின்னால வந்தானோ? தப்பிக்கறதுக்கோ? ஒன்றும் புரியவில்லை. முந்தைய நாள் நிகழ்வுகள் மனதில் விரிந்திட ஏதோ புரிவது போல் தோன்ற பின்னால் பார்த்த போது அந்த மாந்திரி வந்து கொண்டிருந்தான். எங்களையே உற்றுப் பார்ப்பது போல் தோன்றியது. அல்லது எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். எல்லோரும் அவனுக்குக் கும்பிடு வைத்தனர். புனிதாவின் தோற்றம், நெற்றிப் பொட்டு, கறுப்புக் கயிறு....அவன் பார்வை...அந்த வினோதமான சிரிப்பு...என் மனதில் எச்சரிக்கை மணி பலமாக அடித்தது.
நான் புனிதாவின் நெற்றிப் பொட்டை வேகமாக அழித்து, அவள் தடுக்கத் தடுக்க அவள் கையில் கட்டியிருந்த அந்தக் கருப்புக் கயிற்றை அறுத்தெறிந்து விட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, வேகமாக ஓடினேன் வீடு நோக்கி.
எனக்கு இரவு 7.15. ஏற்கனவே செய்திகளால் நைந்திருக்கும் மனம்.
பதிலளிநீக்குஹ்ம்ம். கீதா ரங்கன், பிரமாத கதை. பாத்திரங்கள்
பேசும் நெல்லைத் தமிழ் நன்றாக இருக்கிறது.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
காக்க காக்க கதிர்வேல் காக்க.
இனிய காலை வணக்கம் அம்மா... வாங்க... அனைத்தும் சீக்கிரம் சரியாக பிரார்த்திப்போம்.
நீக்குநம் நாடும், உலகமும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன் இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
நீக்குஸ்ரீராம் தேதி கொடுத்திருந்தது ஏப்ரல் என்று நினைவு இருந்தது இன்றாக இருக்குமோ என்று மொபைலில் எட்டிப் பார்த்தால் ஆஹா அதே.
வருகிறேன் பின்னர். ஷட் டவுன் என்பதால் நிறைய வேலைகள். வேறு ஒன்றுமில்லை நேற்று ஜவ்வரிசி மற்றும் அரிசி கூழ் வடாம் வற்றல் ஒரு ஃபேஸ் போட்டு எடுத்துவிட்டேன். மழை வந்துவிட்டதால் நேற்று அரைத்த மாவை இலை வடாமாக மாற்றிவிடலாம் என்று ப்ளான். கணினி கிடைக்கும் போது, நெட் இருக்கும் போது வருகிறேன்.. பதில் சொல்ல..
கீதா
ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. கதையை இங்குப் பகிர்ந்து ஊக்குவித்து எல்லோரது கருத்துகளும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இங்கு வருவது என்று நம்மை மேம்படுத்த உதவும் எபி ஆசிரியகள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
நீக்குகல்லூரிக் காலத்திலிருந்தே பத்திரைகையில் எழுத ஆசைப்பட்டு வீட்டில் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த சில தருணங்களில் பேருந்திற்குத் தரும் காசைப் பத்திரப்படுத்தித் வீட்டிற்கு மூன்று மைல் தூரம் நடந்தே வந்து, திருட்டுத்தனமாக தோழியின் விலாசம் கொடுத்து எழுதிப் போட்டு ஏமாற்றமடைந்து அதன் பின் வாய்ப்பே கிடைக்காமல் இருந்த எனக்கு வலையுலகிற்கு வர நண்பர் துளசி ஊக்குவித்து கல்லூரியில் எழுதியது போல் எழுது என்று தட்டிக் கொடுத்து எனக்கொரு தளமும் கொடுத்து, இதோ இப்போது எபி என்னையும் கதை எழுத வைத்து திங்க பதிவு எழுத வைத்து, நாம் எழுதுவதற்கு ஒரு சிறு ஊக்கம் தட்டிக் கொடுத்தல் கிடைக்காதா ஒரு விமர்சனம் கிடைக்காதா என்று ஏங்கியிருந்த எனக்கு இந்தக் கேவாபோக பகுதியில் இங்கு வெளியிட்டு எத்தனை ஊக்க மிகு வார்த்தைகள், மேம்படுத்தல்கள் என்று மனம் இன்னும் எழுதத் தூண்ட வைக்கிறது. மனம் நெகிழ்ந்து மீண்டும் நன்றிகள் எபிக்கும் கருத்திடும் அனைவருக்கும். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கீதா என்று சொல்ல வைக்கிறது.
கீதா
மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குஎங்கள் ஊரின் மூன்றுவிதமான தமிழ்க் கலவை. ஒன்று கடலோர கிராமங்களின் பேச்சுவழக்கு (அது அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. கொஞ்சமே கொஞ்சம்..) மற்றொன்று மலையாளம் கலந்த தமிழ். மற்றொன்று நெல்லைத் தமிழும் கலந்து வரும். நாஞ்சில் தமிழ்..
கீதா
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் நெல்லை... வாங்க..்
நீக்குநாரோயில் ப்பேய் மனம் கவர்ந்தது. ப்பேய் நம் மனதில் இருக்கா இல்லை மாந்த்ரீகர்களின் பிஸினெஸில் இருக்கா என்ற யோசனை.
பதிலளிநீக்குஅரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்.
எழுத்து நடை, உரையாடலில் நேட்டிவிட்டி. கதைக் களனும் வித்தியாசமானது.
பாராட்டுகள் கீதா ரங்கன்.
ஆ!! ஆ!! இது நெல்லையோ?!! இஸ் இட் யு? நெல்லை? என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்....ஹா ஹா ஹா ஹா...
நீக்குபேய் நம் மனதிலும் ...எங்கள் ஊரில் மாந்திரீகம் நிறையப் பேசப்படும். துப்பல்கள், ஒரு ஓலையால் பின்னப்பட்ட ஒரு கூடு போன்ற ஒன்று அது வெளியில் தெருவில் கிடந்தால் அதன் அருகில் செல்லக் கூடாது என்று இன்னும் பல பொருட்கள் பற்றி சொல்லப்பட்ட காலம் அது.
மிக்க நன்றி நெல்லை பாராட்டியதற்கு
கீதா
///
நீக்குஆ!! ஆ!! இது நெல்லையோ?!! இஸ் இட் யு? நெல்லை? என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்....ஹா ஹா ஹா ஹா...///
கீதா உங்களுக்குத் தெரியாது:)... நெ தமிழன் ஜொள்ளிட்டார், தான் இனி ஆரையும் திட்ட மாட்டேன்.. ஒன்லி பாராட்டு மட்டுமே என:)(( அது கொரோனாவாலப்போல:)) அதனால நான் இனிப் பயப்பூடாமல் சரித்திரக் கதை எல்லாம் ஜொள்ளப் போறேனாக்கும்:)...
அவர் சொன்னதை டக்கெனக் ஸ்கிறீன் ஷொட் எடுத்து வச்சிட்டேனாக்கும்... பேயோ கொக்கோ:)... ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்ர் பூஸோ கொக்கோ:)...
@அதிரா - நான் பொதுவா டைம் வேஸ்ட் என்று நினைக்கும் தளங்களுக்குப் போவதில்லை. நான் தொடருகின்ற எழுத்தாளர்களெல்லாம், ரசனையா எழுதுவாங்க. ஆனா பாருங்க.. எனக்கு முதலில் தவறுகள்லாம் கண்ணுல படும். அப்புறம் 'பாராட்டுவது' என்பது இயற்கையா என்னிடம் கிடையாது (ரொம்ப ரொம்ப அபூர்வம்). எனக்குப் பிடிக்கலைனா பொதுவா நான் பின்னூட்டம் போடமாட்டேன்.
நீக்குஇருந்தாலும் வெளிப்படையா பாராட்டினாத்தானே எழுதுறவங்களுக்கு உற்சாகமா இருக்கும். 'குறைகளைக்' கண்டுபிடித்து என்ன செய்யப்போறோம்னு தோணுது (ஆனா கலாய்ப்பதை விடமாட்டேன். அதுனால சந்தடி சாக்குல கம்பமஹாபாரதம் எழுத முயலாதீங்க. ஹா ஹா ஹா)
///அதுனால சந்தடி சாக்குல கம்பமஹாபாரதம் எழுத முயலாதீங்க. ஹா ஹா ஹா)///
நீக்குஆஆஆஆ ஆஙா ஆஙா நான் இப்போதைக்கு கம்பபாரதியாகும் ஐடியா இல்லை:)... அது மக்களுக்குக் கொஞ்சம் நினைவிருக்குது நெ தமிழன்:)... அதால கோவலன்- கண்ணகியைத்தான் நினைவுபடுத்த நினைக்கிறேன்:)... அதுவரை நீங்களும் உங்கட முடிவை மாத்திடாதீங்கொ:)-.. அதாவது பாராட்டும் எண்ணத்தை ஆக்கும்:).. ஹா ஹா ஹா..
கொரோனா நேரத்தில ஏதும் சரித்திரப் புரட்டி பண்ணோணும் என லெக்க்ஸ்சூ கை:) எல்லாம் ஆடுது நேக்கு:)... ஹா ஹா ஹா
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
பதிலளிநீக்குஅஞ்சல் அறிவார் தொழில்
அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சவேண்டும். அதுவே அறிவுடையவர்கள் செய்வது. அச்சம் கொள்ள வேண்டியவைகள் மீது அச்சமில்லாமல் இருப்பது அறியாமையாகும்.
கதைக்கு இதுதான் பொருத்தமான குறளாக இருக்கும்.
பயம் என்பது ஒருசிலவற்றிற்குத் தேவைதான். அதாவது நல்ல பயம்...கிலி அல்ல. உடம்பு நடுங்கும் பயம் அல்லாமல் நம்மைக் காத்துக்கொள்ள உதவும் பயம். அப்படிச் சொல்லலாம் இல்லையா நெல்லை?
நீக்குகீதா
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அஃதிலார் அதனை மேற் கொள்வது...
பதிலளிநீக்குவாழ்க நலம்....
அன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குஇன்றைய கதைக் களம் கீதா அவர்களுடையதா!... கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்...
பதிலளிநீக்குஆமாம் துரை அண்ணா. கருத்து பார்க்கிறேன்...
நீக்குநன்றி அண்ணா
கீதா
அன்பு கீதா ரங்கனுக்கு பாராட்டுகள். எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது. அட்டகாசம்.
பதிலளிநீக்குஓஹோ இது நாகர்கோயில் பேச்சு நடையா.
கொள்ளாம்'' வந்திருக்கேன்னு பார்த்தேன். வாழ்த்துகள் மா.
வல்லிம்மா மிக்க நன்றி. ஹையோ நான் எழுதுவது ஒன்றுமே இல்லை. இங்கும் சரி, வ்லையுலகிலும் சரி அடித்து ஆடாதவர் உண்டோ..எத்தனை பேர் அட்டகாசமாக எழுதுகிறார்கள்..
நீக்குநாகர்கோயில் வழக்கு அங்கு மூன்று வகை உண்டு..சொல்லப்போனால் இன்னொன்றும் உண்டு தேங்காப்பட்டணக் கடலோரம் தமிழ் அது தனிப்பட்டது. பல வார்த்தைகள் எங்களுக்குமே புரியாது அம்மா...
கொள்ளாம் என்பது மலையாளம் கலந்து வரும் தமிழ்
மிக்க நன்றி அம்மா பாராட்டிற்கு
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நாளாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், விரைவில் அனைத்தும் சரியான நிலைமையில் திரும்பப் பிரார்த்தனைகள்.நாரோயில் பேய் அட்டகாசமா ஆட்டம் ஆடி இருக்குப் போல!
பதிலளிநீக்குஹாஹா ஹா ஹா கீதாக்கா பேயாட்டாம் அட்டகாசமா இருக்கா அப்ப?!!!! நன்றி நன்றி அக்கா
நீக்குகீதா
அனைவருக்கும் காலை வணக்கம். ஆஹா கீதா ரங்கன் கதை! வருகிறேன். ஆனால் ஏதோ பேய் சமாசாரம் போல தெரிகிறதே..? எனக்கு அதெல்லாம் கொஞ்சம் பயம் கிட்டேளா. ஏற்கனவே ஊர் கிலியடிச்சு கிடக்கு,அதில் பேய் பயம் வேறயா??
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா பானுக்கா ஓ பேயினா பேடியாணோ?!!! ஹா ஹா
நீக்குகீதா
ஒரு பெண்ணின் மனோநிலையிலிருந்தும் நாரோயில் கிராமங்களின் களமும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. கடைசியில் மந்திரவாதியின் மந்திரிக்கப்பட்ட தாயத்தை அவிழ்த்து எறிவதும் அவனைக் கண்டு பயப்படாமல் இருப்பதும் இயல்பாக வந்து உள்ளது. ஆனால் அந்தச் சலங்கைக்காரன் மந்திரவாதியின் திருட்டுத்தனம் எதையேனும் கண்டு பிடித்திருப்பானோ? அதான் கொல்லப்பட்டானோ? இந்தக் கொலையை இந்தப் பெண்கள் நேரில் பார்த்திருக்கலாமோ என்னும் சந்தேகத்தில் அந்த மந்திரவாதி இவர்களை மிரட்டி இருப்பானோ? இன்னொரு கதையும் எழுதலாம் போல!
பதிலளிநீக்குமந்திரவாதியின் திருட்டுத்தனம் ....ஆமாம் கிட்டத்தட்ட அதே அதே அதே அக்கா ஆனால் பேயின் மீது பழி... இதிலிருந்து இன்னொரு கதையும் எழுத வந்து ஹையோ ஹையோ அது உடைந்துவிட்டதே இங்கு...மூச்!! வேறு எதுவும் சொல்லாமல் ஓடிப் போகிறேன்..ஹா ஹா ஹா ஹா
நீக்குமிக்க மிக்க நன்றி கீதாக்கா....
கீதா
ஆஆஆஅ என்னாதூஊஊ இன்னொரு பேய்க்கதையோ அதுவும் தொடரப் போகுதோ... ஹையோ நான் காஞ்சனா 2 ஏ இன்னும் பார்க்கேல்லையாக்கும்... பகல்ல நேரம் கிடைக்குதில்ல நைட்டில பயம்ம்ம்மாக் கிடக்கூ மீ என்ன பண்ணட்டும்:.....
நீக்குஅதிரா காஞ்சனா அத்தனை பயமா என்ன?
நீக்குஆமாம் அதிரா இதன் தொடர்ச்சி யாகவும் கொள்ளலாம் மற்றொரு கதை ஆனால் அது தொடக்கத்தில்தான் இருக்கிறது...இப்போது எழுத கொஞ்சம் கஷ்டமாக இருப்பதால் அதை எழுத முடியலை...
கீதா
என்ன இருந்தாலும் இம்மாதிரிப் பேய்க்கதைகளில் உள்ள சுவாரசியம் வேறே எதிலும் இல்லை. நிஜம்மாகவே கண்ணெதிரே பேய் வந்தால் என்ன பண்ணுவேனோ தெரியலை. படிக்கையில் சுவாரசியம். காக்க, காக்க, கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க!
பதிலளிநீக்குஆஆஆஆ கீசாக்காவும் கந்தசஷ்டி பாடுறா ஹா ஹா ஹா சே சே அதிராவைப்போல தைரியஜாலி:) இங்கின ஆருமே இல்லை:)...
நீக்குஹைஃபைவ் கீதாக்கா மீக்கும் பேய்க்கதைகள் அமானுஷ்யக் கதைகள், த்ரில்லர், சஸ்பென்ஸ் கதைகள் ரொம்பப் பிடிக்கும்.
நீக்குஹா ஹா ஹா கண்ணெதிரே!!வந்தா....பாட்டு பாடி ஓட்டி விட்டுருவோம்...எங்களைப் பேய்க்காட்ட முடியாது சும்மா இப்படி ஃபேன்ஸி ட்ரெஸ் எல்லாம் போட்டு வராதன்னு...சொல்லி...ஹா ஹா
நன்றி கீதாக்கா
கீதா
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநாரோயில் மொழியில் நல்ல கதை. சிறப்பாக வந்திருக்கிறது கீதாஜி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
சுட்டி பத்மநாபன் அண்ணாச்சிக்கு அனுப்பி இருக்கிறேன்.
மிக்க மிக்க நன்றி வெங்கட்ஜி! அட பப்பு அண்ணாச்சிக்கு அனுப்பிருக்கீங்களா...
நீக்குபப்பு அண்ணாச்சி என்ன சொல்கிறார்னு சொல்லுங்க நான் நாரோயில விட்டு வந்து 32 வ்ருஷம் ஆகுது. அதுக்கப்புறம் 8 வருடம் திருவனந்தபுரம் அப்ப நாரோயிலும் தி புரமும் கலந்து கட்டி மொழி வந்தாலும் அதன் பின் சென்னை வாழ்க்கை என்றானதால் அந்த வழக்குகள் ஒழுங்காக வந்திருக்கா என்று தெரிந்து கொள்ளத்தான்...
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! அங்கங்கே மலையாள மொழித்தூவல்களுடன் சரளமான நடை!! வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா கருத்திற்கும் வாழ்த்திற்கும்...
நீக்குகீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! இந்த நாள் இனியதொரு நாளாய் திகழட்டும்!!
பதிலளிநீக்குநாஞ்சில் பி டி சாமி- எறங்கிட்டாரா காலைலே! கிடுகிடுக்குதே எ.பி..
பதிலளிநீக்குகீதா ரெங்கனுக்கு ‘பேய்க் கதை மன்னி’ என்கிற பட்டம் அளிக்கப்படுகிறது. லாக்டவுனால் பட்டமளிப்புவிழா தாமதமாகலாம்!
//// ‘பேய்க் கதை மன்னி/////
நீக்குஆஆவ்வ்வ்வ் மீயும் இதைப் படு பயங்கரமாக வழொமொழிகிறேன்:)... எத்தனை மணிக்கெனச் சொன்னால் மேக்கப் போட்டுக்கொண்டு வந்திடுவேன் கெள அண்ணன்:)...
ஆங் ஜொள்ள மறந்திட்டேன் என் செக்கையும் கையோஓடு கூட்டி வாறேன்ன் தனியே வரப் பயம்மாக்கிடக்கூஊஉ:)
ஆஆ மன்னிக்கவும் ... அது ஏ அண்ணன் ஆக்கும்:).. பேய்ப்பயத்தில எல்லாமே தடுமாறுதே நேக்கு கர்ர்ர்ர்:)... சே சே இப்ப பார்த்து அஞ்சுவையும் காணல்ல:)... பேய் கிட்ட வந்தால்... இந்தா அஞ்சுவைப் பிடி எனச் சொல்லிப்போட்டு மீ ஓடிடுவேன் நாம ஆரூஊஊஉ 1500 மீட்டரில 2 ஆவதா வந்தேனாக்கும் க்கும்:)..
நீக்கு//என் செக்கையும் கையோஓடு கூட்டி வாறேன்ன் தனியே வரப் பயம்மாக்கிடக்கூஊஉ:)//
நீக்குஇதோ வந்துட்டே இருக்கேன் வித்தவுட் மாஸ்க் அண்ட் க்ளவுஸ் :) எங்க தலைவி கூப்டா வராம இருப்பேனோ :)
ஆ!! ஆ@ ஏகாந்தன் அண்ணா பட்டமா?!!! எங்கே எப்போது...அது சரி லாக் டவுன் இண்டெஃபினிட் ஸோ...ஹா ஹா ஹா ஹா...
நீக்குபிடி சாமி ரேஞ்சுக்கு எல்லாம் இல்லை அண்ணா...அவர் பேய்க்கதை மன்னன் ஆச்செ. ஆனால் அவர் கதைகள் எதுவும் வாசித்ததில்லை. கேள்விப்பட்டது மட்டுமே. நிறைய வாசிக்க வேண்டும் என்று பல் ஏழுத்தாளர்களின் கதைகள் இருக்கும் தளங்கள் எடுத்து வைத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு.
கீதா
ஏன் ஏகானந்தன் அண்ணா பிஞ்சு வை திகில் படுத்தறீங்க..அவங்க பிஞ்சு சொற்பொழிவாளர்னா பயப்படமாட்டாங்கன்னு நினைச்சீங்களா அதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான் ...பில்டிங்க் ஸ்ற்றாங்க் பேஸ்மென்ட் வீக் ஹா ஹா ஹா ஹா...பாருங்க பயந்துட்டாங்க பாவம்...துணைக்கு செக் இல்லாம ....
நீக்குகீதா
////பில்டிங்க் ஸ்ற்றாங்க் பேஸ்மென்ட் வீக் ஹா ஹா ஹா ஹா...///
நீக்குஆஆஆ இது கீதாக்கும் தெரிஞ்சிடுச்சோ:)...
“அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடும்மாமே கீதா” ஹா ஹா ஹா என் கூக்குரலுக்குச் சொன்னேன்:)...
மலையாளமும், நெல்லைத்தமிழும் கலந்த உரையாடல் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி ரசித்தமைக்கு...
நீக்குஆமாம் ஜி நாகர்கோவில் தமிழ் மூன்று வழக்குகளில் பேசப்படும்..
கீதா
பள்ளி நாட்களில் படித்த புத்தகங்களுள் மலையாள மாந்திரீகம் என்ற புத்தகமும் உண்டு...
பதிலளிநீக்குஅதை மீண்டும் படித்த மாதிரி இருக்கிறது...
குணங்குறிகள் எல்லாமே அட்டகாசம்...
அட்டகாசம் என்றால் பேய்ச்சிரிப்பு என்பார்கள்... அதேதான் போல...
ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா இந்த ஹா ஹா பேய்ச்சிரிப்பாக்கும்!!! எங்கள் ஊரில் மலையாள மாந்திரீகம் அடிக்கடிப் பேசபப்டும் ஒன்று அப்போது...
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு.
கீதா
மறுபடியும் பேய் பிசாசுகளின் வரலாற்றுச் சாதனைகள் ஆரம்பமாகி விட்டது போல எபியில்...
பதிலளிநீக்குபயந்த மனதுடையவர்கள் - வேப்பிலையைத் தலைக்கருகில் வைத்துக் கொண்டு தூங்கவும்..
குறளைப் பேய்களோடு சேர்த்து கொரானா பேயையும் விரட்டி அடித்த மாதிரி இருக்கும்...
////
நீக்குதுரை செல்வராஜூ7 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 8:57
மறுபடியும் பேய் பிசாசுகளின் வரலாற்றுச் சாதனைகள் ஆரம்பமாகி விட்டது போல எபியில்...////
யேஸ் துரை அண்ணன் கரீட்டூஊ:)... ஸ்பெயினூ... இத்தாலி, நியூ யோக்கூஊஊ எல்லாம் இங்கின எங் பு ல தான் அதனால அதிரா இனிப் பயப்புட மாட்டனாக்கும்:)... ஸ்கொட்..... ல ஒண்ணும் இல்லை ஜாஆஆமீஈஈ அதிரா சேவ்வ்வ்வ்வ்வ்வ்:)
ஹா ஹா ஹா துரை அண்ணா, இங்கு எபி ல நட்பேயார் நகைச்சுவைப் பேயாராக அலைந்து கொண்டிருந்தார் இப்ப தொற்றிற்குப் பயந்து பதுங்கி இருக்கிறார் போல!!!! பாருங்க இந்தப் பேயாரைப் பார்த்து அந்தப் பேயாருக்குப் பயம் போல!!!
நீக்குஅப்போதுதான் எனக்குத் தோன்றியது அட நம்மூர்ல கூடப் பேய்க் கதைனு நான் எழுதியது அப்படியே கிடக்குதேன்னு அதுவும் நம்ம அதிரா வேறு ஒரு பாட்டி பற்றி சொல்லியிருந்தார் பேய் அனுபவம் சொன்ன போது அப்பதான் எழுதி முடிக்க ந்னைத்து முடித்து ரொம்ப நாள் கழித்து எபிக்கு அனுப்பினேன்...ஸோ கௌ அண்ணா, பேய் பற்றிக் கேள்விகள் கேட்ட கீதாக்கா, அனுபவம் சொன்ன அதிரா எல்லாருக்குமே நன்றி சொல்லணுமாக்கும் நான்...
நன்றி துரை அண்ணா
கீதா
கீதா, என்ன சொல்வது? எப்படி பாராட்டுவது? பிரமாதம்! நிலைக்களன், கதை மாந்தர்களின் சுபாவம், சொல்ல வந்ததை போட்டு உடைக்காமல் வாசகர்களின் யூகத்திற்கு விட்டது.முழுமையான எழுத்தாளராகி விட்டீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள்! நாஞ்சில் நாட்டு மொழி புரிவதுதான் சில இடங்களில் சிக்கலாக இருந்தது.
பதிலளிநீக்குமுழுமையான எழுத்தாளராகி விட்டீர்கள்.//
நீக்குஆ ஆ ஆ பானுக்கா!! ரொம்ப ரொம்ப நன்றி!! இதற்கு முன்னும் கூட ஏதோ இரு கதைகளில் நீங்க சொன்ன நினைவு... தேர்ந்த என்று ஆனால் எந்தக் கதைகளுக்கு என்றெல்லாம் நினைவு இல்லை ஹிஹிஹி...
மிக்க மிக்க நன்றி பானுக்கா வசிஷ்டர் வாய் பட்டம்!! (இன்னும் உண்டு நெல்லை, ஏகாந்தன் அண்ணா ஜீவி அண்ணா என்று சொல்லலாம்... )
இங்கு சொன்னதற்குக் காரணம் நீங்கள் எல்லோரும் நிறைய வாசிப்பவர்கள். வாசிப்பு அனுபவம் ஏராளம். அப்படியான எந்த வாசிப்பு அனுபவமும் இல்லாதவள் நான். அதனால்தான் சொன்னது பானுக்கா..
மிக்க நன்றி பானுக்கா பாராட்டிற்கு.
கீதா
அருமையான நடையும் கதையும்.
பதிலளிநீக்குdo visit https://lkarthik.in
மிக்க நன்றி கார்த்திக் கருத்திற்கு
நீக்குகீதா
பொச முட்டி வெப்ராளப்பட்டு, கொள்ளாம் போன்ற வார்த்தைகளுக்கு அருஞ்சொற் பொருள் கொடுத்திருக்கலாம். பேயை ப்பேய் என்றது கொஞ்சம் உறுத்துகிறது.
பதிலளிநீக்குபொசமுட்டி (திட்டற வார்த்தைனு நினைக்கேன்), வெப்ராளப்பட்டு (கலங்கிப்போய், என்னாச்சுன்னு நினைச்சு) - இரண்டு தனி வார்த்தைகள். மூதி-மூதேவியின் பேச்சுவழக்கு. அந்த நாரோயில் நடைதான் ரசனை.
நீக்குஆஆஆஆ அபச்சாரம் அபச்சாரம் ஏதேதோ கெட்ட வார்த்தையில் ஆரையோ திட்டுறார் நெ தமிழன்:)... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...
நீக்குபானுக்கா நெல்லை ..பொசை முட்டி என்றால் நெஞ்சு அடைச்சு முட்டி வருமே அப்படி...தவிப்பில்..வருமே அது...வெப்ராளம் என்றால் மனம் புழுக்கம்...என்னாச்சோ ஏதாச்சோன்னு...
நீக்குகொள்ளாம் என்றால் நல்லாருக்கு, நன்றாக இருக்கு. என்பது ஆனால் இதனை கொஞ்சம் கோபத்தில் சர்க்காஸ்டிக்காக, தமிழில் சொல்லுவோம் இல்லையா இது நல்லாருக்கே அப்ப நீ சொல்றது என்று சொல்லுவோம் இல்லையா அப்படியும் சொல்வதுண்டு..இது கொள்ளாமே என்று கோபத்தில் இங்கு இந்தக் கதையில் வரும்...உரையாடல் கோபத்தில்...
கீதா
கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு
நீக்குகீதா
தமிழ் எத்தனை வகை இருந்தாலும் இனிமை... கேரளா வாசத்துடன் நெல்லைத்தமிழ் இனிமை... மிகவும் ரசித்தேன்... இதே போல் பேசும் ராஜபாளையம் கல்லூரி நண்பனும் ஞாபகம் வந்தது...
பதிலளிநீக்குசகோதரி கீதா அவர்களுக்கு ஒரு பேய்க்கொத்து... சே... பூங்கொத்து...
மிக்க நன்றி டிடி
நீக்குஉங்கள் நண்பரையும் நினைவுபடுத்தியது சந்தோஷம். ஹா ஹா ஹா ஹா பேய்க்கொத்து/பூங்கொத்து...சிரித்துவிட்டேன் டிடி...
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆகா! அகப்பட்டார் பேயார்.
பதிலளிநீக்குவிறுவிறுப்பான நடையில் வாழ்த்துகள்.
மிக்க நன்றி மாதேவி கருத்திற்கு வாழ்த்திற்கு எல்லாம்
நீக்குகீதா
நானும் என் பெரிய பெண்ணும் ஒரு முறை ஒரு பேய் படத்திற்கு போய் விட்டு வந்து ஒரு வாரம் தூக்கம், நிம்மதி, சோறு எதுவும் சரியாக இல்லாமல் அவதி பட்டோம். வீட்டில் கணவரிடமிருந்து வேறு வசைபாடல். அப்படிபட்ட தைரியசாலி நான். இருப்பினும் இந்த கதையின் கருவும் நடையும் அபாரம் கீதா. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குரமா மிக்க நன்றி. ஓ! ஆமாம் சிலருக்குப் பேய்ப்படம் பார்த்தால் பயம் தோன்றும் என்று சொல்லிக் கேட்டதுண்டு.
நீக்குபேய்ப்படம் மிகவும் ஸ்வாரஸ்யமாகப் பார்ப்பேன் ஆனால் பயந்ததில்லை.
மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு
கீதா
மிக அருமையான திகில் கதை.
பதிலளிநீக்குநாரோயில் பேச்சு வழக்கு படிக்க கேட்க அருமை.
ஒரே மூச்சில் படித்தேன்.
//“ஏட்டி கல்லு நேத்து ராத்திரி நீங்க ரண்டு பேருந்தானே அங்கன ரோட்டோடி வந்தது? என்ன தைரியம்ட்டி? அந்தப் ப்யேயிய பாத்தீங்களா? அதான் புனிதா பிள்ளை பயந்திருச்சு போல. நல்ல ந்யேரம் தப்பிச்சீங்க. அந்த நல்ல மனுசன் சலங்கைக்காரனை ப்யேயி அடிச்சுப் போட்டிருச்சாம் சொள்ளமாடன் கோயிலு பக்கத்துல.” என்று வீரம்மை படபடப்புடன் சொல்லிக் கொண்டே நடந்தாள்.//
புனிதா சலங்கை சத்தம் கேட்டது என்று சொன்னது நிஜம் தான்.
முன்பு விகடனில் ஒரு கதை வந்தது ஒரு சாமியார் ஒரு வீட்டுக்கு காலை வந்து ஒரு பூ கொடுப்பார் அந்த வீட்டு கன்னி பெண்ணுக்கு.
தலையில் வைத்துக் கொள் என்று சொல்வார், அந்த பெண் அதை பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு மறந்து விடுவாள்.
இரவு அந்த கிண்ணம் நடந்து கதவை தட்டும் சத்தம் கேட்டு வந்த வீட்டில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தினரை கூட்டிக் கொண்டு அந்த கிண்ணம் போகும் வழியில் போவார்கள் அது நேரே சுடுகாடு போகும் . சுடுகாட்டில் அந்த சாமியார் மந்திரம் சொல்லிக் கொண்டு இருப்பார் சத்தம் கேட்டு வா பெண்ணே! வா என்று திரும்புவார்.அந்த பெண் அவர் கொடுத்த மலரை தலையில் வைத்து இருந்தால் என்னாகும் என்று ஊர் கூடி சாமியாரை அடித்து துரத்துவார்கள்.
அதை சிறு வயதில் பயந்து கொண்டு படித்தேன் அதே போல இன்று கீதாவின் கதையை படித்தேன். அந்த கதை வந்த போது யார் என்ன கொடுத்தாலும் வாங்க பயம்.
நொடிக்கு நொடி நல்ல பயமுறுத்தல வார்த்தைகளில் இருந்தது.
///நான் புனிதாவின் நெற்றிப் பொட்டை வேகமாக அழித்து, அவள் தடுக்கத் தடுக்க அவள் கையில் கட்டியிருந்த அந்தக் கருப்புக் கயிற்றை அறுத்தெறிந்து விட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, வேகமாக ஓடினேன் வீடு நோக்கி.//
கடைசியில் நல்ல காரியம் செய்தாள் கல்.
காக்க, காக்க, கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க! காப்பாற்றி விட்டார் முருகன்.
பாராட்டுக்கள் கீதா, வாழ்த்துக்கள்.
ஹா ஹா ஹா பேய்க்கதை படிச்சுப் பயந்துபோய்க் கந்த சஷ்டி கவசம் பாடுறா கோமதி அக்கா:)
நீக்குநான் பாடவில்லை அதிரா, கதையில் தோழியை காப்பாற்றிய பெண் பாடி கொண்டே இருக்கிறார்.
நீக்குஹா ஹா ஹா ஓ நான் இன்னும் கதை படிக்கவில்லைக் கோமதி அக்கா:).. நெஸ்டமோல்ட்க்குள் போன் விட்டா போட்டு ரீ ரெடியாகுது குடிச்சிட்டுத்தான் படிப்பேன்:) ஹா ஹா ஹா
நீக்குகோமதிக்கா ஆஹா கருத்தில் ஒரு கதையே சொல்லிவிட்டீங்களே. கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும் போல!!! அக்கா அதன் பின் அந்தப் பயம் போயிருக்குமே உங்களுக்கு..
நீக்குநானும் சிறு வயதில் பல அமானுஷ்யங்கள், மாந்திரீக வினைகள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். குறிப்பாக வள்ளியூரில் இருந்த போதும், நாகர்கோவிலில் இருந்த போதும். மிகச் சிறிய வயதில் கேட்ட போது பயம் என்றில்லை ஆனால் எப்படி நடக்கும் என்று பார்க்க ஆவல் தோன்றும். ஆனால் அதன் பின் மாபெரும் இறைசக்திக்கு நிகர் வேறு எதுவும் இருக்க இயலாது. பாசிட்டிவ் இருந்தால் நெகட்டிவ் இருக்கும் தான் ஆனால் அதை பாசிட்டிவ் தகர்த்திடும் என்பதும் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஆமாம் அக்கா அந்தச் சலங்கை சத்தம் கேட்டதை வைத்துத்தான் கலாவிற்கு சந்தேகம் வருகிறது...
பாராட்டிற்கு மிக்க நன்றி கோமதிக்கா...
கீதா
விசயம் போல சொல்லிச் சென்றவிதமும் வெகு சுவாரஸ்யம்...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குமிக்க நன்றி ரமணி சகோ கருத்திற்கு.
நீக்குகீதா
அந்தக் காலத்துப் படப்பாடல் -
பதிலளிநீக்குஅம்மனோ சாமியோ..
அத்தையோ.. மாமியோ!...
ஞாபகத்துக்கு வந்து விட்டது....
அடித்து விளையாடி இருக்கிறார் கீதா...
ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா இந்தப் பாட்டை நினைவுபடுத்திவிட்டீங்களே. எங்கள் வீட்டில் என் கஸின்ஸ் எல்லோரும் இந்தப் பாட்டைப் பாடி ஜெ போல நான் ஆடுவதைப் பார்த்து சிரித்துக் கும்மாளம் அடிப்பார்கள். நான் தான் அவர்களுக்கு என்டெர்டெய்னர்...அப்புறம் கே ஆர் விஜயா போல என்னை நடிக்கச் சொல்லி ஒரே கலாட்டாவாக இருக்கும்.
நீக்குபாராட்டியமைக்கு மிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
நன்றாக எழுதப்பட்ட கதை. இதுவரை எபி-யில் வந்த கீதா ரெங்கன் கதைகளில் அவர் விளையாடியிருப்பது இதில்தான்(மற்றவை முயற்சிகள்). ஹோம் க்ரௌண்டோ ?
பதிலளிநீக்குஇதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே சீரான flow. இருட்டு கவ்விய கிராமத்துப் பாதை. தோழிகளிடையே உயிர்கொள்ளும் பீதி, நடுக்கம் எல்லாம் superb. இந்த மாதிரிக் கதைகளில் முடிவு, எழுதுபவரை சோதிக்கும். அங்கேயும் கடைசி பால் சிக்ஸ்! கீதா ரெங்கனின் கையில் கோப்பை!
ஆஆஆஆ அது என்ன கோப்பை எனச் சொல்லுங்கோ ஏ அண்ணன்:).... ஹா ஹா ஹா
நீக்குஆஹா ஏகாந்தன் அண்ணா இப்படி ஒரு பாராட்டா!!!! ஹா ஹா ஹா ஹா //ஹோம் க்ரௌன்ட்//
நீக்குகடைசி பால் சிக்ஸ்...கோப்பை...ஹா ஹா ஹா ஹா அண்ணா கிரிக்கெட் ஆராதகர் என்பதாக கிரிக்கெட்டிலேயே விமர்சனம் வைச்சுட்டீங்க!! ஹா ஹா ஹா
மிக்க மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா உங்களின் இப்படியான பாராடிற்கு. எதிர்பார்க்காத ஒன்று!
கீதா
அதிரா அது தங்கக் கோப்பையாக்கும்!!! கோஹினூர் டைமன்ட், நவரத்தினம் பதித்த கோப்பை!!!!! அப்படித்தானே ஏகாந்தன் அண்ணா.!!!! (அதிரா கோஹினூர் இங்கதானே இருக்கு...ஏகாந்தன் அண்ணாவும் இங்கதானே இருக்கிறார்!!!)
நீக்குகீதா
ம்ஹூம்ம்ம்ம் ஆ தோ வ வ:) கீதா:)
நீக்குஉங்களுக்கு மில்க் கோப்பையாம்:)... அதான் பால்... கோப்பை:)... டயமண்ட் எனில் அது அதிராக்கு மட்டும்தேன் தருவார் கெள அண்ணன்:)... பிக்கோஸ் வள்ளியின் நேர்த்தியை நான் நிறைவேத்த வாணாம்:).... ஒரு நீதி நேர்மை இல்லாமலே ஒரு பேச்டு:).. அதில கோஹினூர் வைரமாமே கர்ர்ர்ர்ர்:)...
ஹையோ ஏ அண்ணனோடு பேசிக் கன நாளாகிட்டுதா... கெள அண்ணன் எண்டே வாய் வருது கர்ர்ர்ர்:)..
நீக்குபால் கோப்பையே தான் பால் கோப்பையேதான்!!!
நீக்கு(ஹையோ ஏகாந்தன் அண்ணா என்னிடம் ரகசியமாகச் சொன்னதை அதுவும் அதிராவுக்குத் தெரியாமப் பார்த்துக்கணும்னு சொல்லியதை இப்படி அதுவும் அதிராவிடம் சொல்லிப் போட்டேனே...கர்ர்ர்ர்ர்ர்ர்....ஓட்டை வாய்!! அப்புறம் தானே கிட்னிக்கு உரைத்தது! ஹிஹி)
கீதா
என்னாதூஊ இன்உ கீதாவின் கதையோ? ஆஆவ்வ்வ்வ்வ் இப்போ நேக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச் எல்லாமே பிரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்... கீதா கொம்பியூட்டர் பிரச்டனை எனக் காணாமல் போனது கதை எழுதத்தான் எனப் புரிஞ்ஞ்ஞ்சு போச்சு...
பதிலளிநீக்குஎன்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊ... ஒரு ரீ குடிச்சிட்டு வருகிறேன் திருவாளர் ப்பேய்( எல்லாம் ஒரு மருவாதைதேன்:)) பற்றிப் படிக்க.....
ஹா ஹா ஹா ஹா அதிரா இதை வாசித்து சிரித்து முடியலை...!! ஆனா ஐடியா நல்லாருக்கே!! இப்படியும் செய்யலாமோ?!! ஹிஹிஹி
நீக்குகீதா
அஆவ் கீதா கதையா இன்னிக்கு ...தலைப்பு சூப்பர் ..நாட்டுக்கு இப்போதைய அவசிய தலைப்பு .இருங்க ஸ்டோரி படிச்சிட்டு வரேன்
பதிலளிநீக்குநன்றி நன்றி ஏஞ்சல்!!!
நீக்குகீதா
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் இருட்டில் பயம் தெள்ய விசில் அடிசு வருவார்களாம் எப்படி ஆனாலும் பாராட்டுகள் கீதா மொழி நடை ஒரு நேட்டிவிடியை தருகிறது கீதாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை
பதிலளிநீக்குஹை ஜி எம் பி சார்!! மிக்க நன்றி உங்களிடமிருந்து நானும் இப்படியான கருத்தை எதிர்பார்க்கவில்லை!
நீக்குமிக்க நன்றி சார்!
கீதா
பாராட்டுவதை பாராட்டியும்மற்றவற்றில் என்கருத்தையும் மனம் நோகாமலும் செய்துதான் இருக்கிறேன் I DO NOT SAY YES ALWAYS
நீக்கு//என்னை நுள்ளினாள்//
பதிலளிநீக்குநாரோயில் பேச்சில் கொஞ்சம் இலங்கை தமிழும் இருக்குன்னு நினைக்கேன் .
ஒருவர் ஸ்கூல் பேருந்தில் நுள்ளு வாங்கினது நினைவு வருதே :)
ஹா ஹா ஹா அதே அதே.. நுள்ளுறது... என நான் எழுதினால் ஸ்ரீராம் ஓடிவந்து .. அதென்ன அது எனக் கேட்பார்ர், ஆனா இப்போ எல்லாம் தெரிஞ்சதுபோல டவுட்டே இல்லாமல் இருக்கிறாரே கர்ர்ர்:)).. எல்லாம் அதிராவின் ட்ரெயிங் தான் போலும்:)) ஹா ஹா ஹா..
நீக்குஉணவுமுறை, மற்றும் பல சொல்லாடல் எல்லாம் கேரளாவும் இலங்கையும் ஒத்துப்போகும்.... முக்கியமாக தேங்காய்ப்பால் சமையல்.. புட்டு இடியப்பம்.. எல்லாமே..
//ஒருவர் ஸ்கூல் பேருந்தில் நுள்ளு வாங்கினது நினைவு வருதே :)//
ஹா ஹா ஹா ஹையோ இதை இன்னும் மறக்கலியே நீங்க:)).. கொரொனா எல்லாத்தையும் மறக்கடிக்கும் என நினைச்சேனே:))..
எனக்கொரு டவுட்டூஊஊஊ.. கொரொனா வந்தால் ரேஸ்ட், ஸ்மெல் மட்டும்தான் போகுமோ?:)).. பழசு மறக்கும் தன்மை எல்லாம் வராதாமோ?:)) ஹா ஹா ஹா
கணினி ரிப்பேர் அதிரா... கையொடிந்த மாதிரி இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் எப்போது ஆள் வரமுடியுமோ.. எப்போது சரியாபுமோ...
நீக்கு//ஹா ஹா ஹா ஹையோ இதை இன்னும் மறக்கலியே நீங்க:)).//
நீக்கு/ஹா ஹா ஹா ஹையோ இதை இன்னும் மறக்கலியே நீங்க:)).//
ஹாஹா வரலாறு முக்கியம் அமைச்சரே :) எது வந்தாலும் என்னோட ஞாபக சக்தி அதுவும் உங்களைப்பற்றினது போகவே போகாது :)
ஓ ஶ்ரீராம் இது என்ன கொடுமை... இப்போ கடைகளும் திறக்காதே.. நானும் இப்படி நினைப்பேன்... இண்டநெட் க்கு ஏதும் பிரச்சனை என்ன பண்ணலாம் என... இப்போ வாக்கையை எஞோய் பண்ணுவதே இந்த இண்டநெட்டாலதானே.... இந்த ஜென்மத்தில் இனி இப்படி ஒரு சான்ஸ் வராதெல்லோ:)
நீக்கு//எது வந்தாலும் என்னோட ஞாபக சக்தி அதுவும் உங்களைப்பற்றினது போகவே போகாது :)///
நீக்கு🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
ஏஞ்சல் நிறைய சொல் வழக்குகள், உடை, உணவுப் பழக்கங்கள் கேரளம், நாரோயில் இலங்கைக்கு ஒத்துப் போகும்!!! நாரோயில் தமிழ் அக்சென்ட், மலையாள அக்சென்ட் இலங்கைத் தமிழ் அக்சென்ட் டோன் பல ஒரே போல இருக்கும்.
நீக்குஅதிராவும் சொல்லிருக்காங்க. அதே!!
கீதா
அதிரா அதை ஏன் கேக்கறீங்க ஸ்ரீராம்க்கு கம்ப்யூட்டர் ஒருவிதப் பிரச்சனை என்றால் மீ க்கு ஒரு விதப் பிரச்சனை!!!!!
நீக்குஆது சரி எப்படி இப்படி ஒரு பொம்மை எல்லாம் போடுறீங்க? அதிரா? கம்ப்யூட்டர்ல வருமா? நமக்கு இப்படி எதுவும் வருதில்லையே. மொபைல் வழி போட்டாலும் வருதில்லையே.
கீதா
//எது வந்தாலும் என்னோட ஞாபக சக்தி அதுவும் உங்களைப்பற்றினது போகவே போகாது :)///
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சுட்டேன்...ஏஞ்சல் தேர் யு ஆர்!!!!
அதிரா அதுக்குத்தான் வல்லாரை ஸ்மூதி!!!! ஏஞ்சல் குடிப்பது!!!
கீதா
அது போன்ல தான் கீதா:)
நீக்குஓ! போன்லயா...
நீக்குஅடுத்த முறை இங்கு போனில் பார்க்கிறேன்...
கீதா
கீதா
🐣🐣🐣🐣🐣🐧🐧🐧🐧🐧🐧🐧
நீக்கு🐬🐬🐬🐬🐬🐬🐟🐟🐟🐟
நீக்கு🍭🍭🍭🍭🍭🍭🍭🍭😸😸😸😸😸😸😸😸
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சுவை:), அதிராவைப்போல அடக்கொடுக்கமாக:)... இருக்கச் சொல்லுங்கோ கீதா ஜொள்ளிட்டேன் நான்:)....
நீக்கு👹👹👹👹👹👹👹👹🤨🧐🤓😎😌😨😰😧💩👻👹👺😻😻😻😻😻
🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🥳🤠🤠
நீக்கு🐒🐒🐒🐒🐒🐒🦍🦍🐱🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐮🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐊🐊🐊🐜🐜🐜🐜🐜🐜🐝🐝
நீக்குஅச்சச்சோஓ எல்லோரும் ஓடுங்கோ ஓடிப்போய் வேப்பிலைக் குடிலுக்குள் இருங்கோ:)...
நீக்குகொரொனா உடம்பில ஏறிட்டால் இப்பூடி குட்டிக் குட்டி ஸ்ரிக்கர் போட்டு வெலாட:) வைக்குமாமே:)...
க்கூ கெக்கூ:)... ஆஆஆஆ அதாரது இருமுறது:)🤧 ஹையோ மீ ஒரு அப்பாவி சுவீட் 16... அனுபவிக்க இன்னும் எவ்ளோ இருக்கெனக்கு:)... அதனால மீ ஓடிடுறேன்ன்ன்:) எஸ்கேஏஏஏஏஏப்ப்ப்ப்:)..
@ pinju :)) eppoodi :)))))))
நீக்குவாவ் !! சூப்பரா இருந்தது கதை கீதா .கல் சூர்யகலா கீதாவா தோணுச்சி எனக்கு ..அழகான ஊர்மொழி .ஒரே மூச்சில் படிச்சிட்டேன்
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப நன்றி ஏஞ்சல்! ஆமா நாரோயில் மொழி அது தனிதான் இல்லையா...
நீக்குகல் சூர்யகலா கீதாவா தோணுச்சி //
ஹா ஹா ஹா....இன்ஃபேக்ட் கல் சொல்லும் டயலாக்ஸ் எல்லாம் நானும் என் கசினும் எங்கள் ஊர்ப் பாதையில் 7.30, 8 மணிக்கு நடக்கும்படி ஆனால் நான் இப்படித்தான் பேசிக்க் கொண்டே போவேன். சும்மா ஜாலியாக...அதுவும் என் கழுத்தைச் சங்கு போன்ற கழுத்து, சங்குக் கழுத்துனு சொல்லி சும்மா உதார் விட்டுக் கொண்டுச் செல்வது வழக்கம்...இருட்டாக இருக்கும். ரோட் லைட் எதுவும் கிடையாது. ஒரு பக்கம் வயல் மரங்கள் ரோட்டோரம், மறு பக்கம் அகண்ட வாய்க்கால் அதன் இப்புறம் செடிகள்...அதன் அப்புறம் வயல் அதை ஒட்டி தேரேகால்புதூர் என்ற சின்ன ஊர் எனவே ரோட்டில் குறுக்கே பாம்புகள் நடமாட்டம் நிறைய இருக்கும். ராத்திரி எதுவும் கண்ணிற்குத் தெரியாது.. கஸின் பயப்படுவாள்...நான் அதைப் போக்க ஏதாவது பேசிக் கொண்டே போவது..பாடிக் கொண்டே அதான் கொஞ்சம் கதையில். மற்றவை கற்பனை..ஹிஹிஹி
மிக்க மிக்க நன்றி ஏஞ்சல்
கீதா
என்ன ஆச்சு?.. என்னால் வாசிக்கவே முடியவில்லையே! எழுத்துக்கள் கோலம் போட்ட மாதிரி ஒன்றிற்கு ஒன்று கோர்த்துக் கொண்டிருக்கின்றனவே?..
பதிலளிநீக்குவேறு யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ஜீவி ஸார்...?
நீக்குப்பேயி தன் வேலயக் காட்டிடுச்சு போல.
நீக்குஸ்ரீராம் சொல்லுவது போல யாரும் சொல்லவில்லையே. ஜீவி அண்ணா உங்கள் நெட், கூகுள் அல்லது கணினியில் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ?
நீக்கு//ப்பேயி தன் வேலயக் காட்டிடுச்சு போல.//
ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா அப்படி இருக்குமோ?!!!
நகைச்சுவை நட்பேயாரைக் காணலையே!! நாளைக்கு வருவாரா? அவங்களுக்கு ஏது லாக் டவுன் எல்லாம்?!! ஹா ஹா ஹா
கீதா
ஆஆஆஆ ரீ குடிச்சிட்டு இங்கின வந்து, கண்ணை அங்கின இங்கின திருப்பாமல் முதல்ல கதையைப் படிச்சு முடிச்சிட்டேன்.. ஸ்கூலில் படிப்பதைப்போலவே இருந்தது, நாமும் இப்படித்தானே பல தடவைகள் பல விஷயங்களுக்கு மிரண்டு ஓடியது, கூக்குரல் போட்டதெல்லாம் நினைவுக்கு வந்து போகிறது...
பதிலளிநீக்குஅழகாக அருமையாக எழுதிட்டீங்க கீதா..
பாசைதான் புரிஞ்சுகொள்ளக் கஸ்டமாக இருக்குது பல இடங்களில், ஆனா இதில நெல்லைத்தமிழும் ககலந்திருக்கு என தெரிஞ்சுகொண்டேன் கொமெண்ட்ஸ் மூலம்.. அப்போ நெல்லைத்தமிழனை நேரில ஜந்திச்சால்ல் சே..சே சந்திச்சால் இப்பூடித்தான் பேசுவாரோ?:)) ஆவ்வ்வ்வ்வ்வ்.. சந்திக்க முன் ஒரு கிளாஸ் க்குப் போகோணும் போல இருக்கே:))
ஹா ஹா ஹா அதிரா நெல்லை அந்த பாஷை எல்லாம் பேசமாட்டார்!!!
நீக்குபாசைக்கு ஒரு டிக்ஷனரி கொடுத்திருக்கலாமோ?
பயறாத/ பயப்படத.
பானுக்காவுக்குக் கொடுத்திருக்கும் பதில்ல மூன்று வார்த்தைகளுக்குச் சொல்லியிருப்பேன். அவயம்/சத்தம். அங்கூடி/அவ்வழியே. அங்கன,இங்கன/ அங்கே இங்கே...அப்படி இப்படி
எங்கள் மாவட்டத்தில் மூன்று வழக்கு மொழிகள். மலையாளம் கலந்த தமிழ், கடலோரத் தமிழ், நெல்லைத் தமிழ் கொஞ்சம் கலந்த தமிழ்...இன்னும் ஒன்று தேங்காய்ப்பட்டணம் பகுதிகளில் ஒரு குறிப்ப்ட்ட சமூகத்தினர் பேசும் மொழி புரிந்து கொள்ள மிகவும் கடினம். எனக்கும் அது அவ்வளவாகத் தெரியாது அதைப் பயன்படுத்தவில்லை.
அழகாக அருமையாக எழுதிட்டீங்க கீதா..//
மிக்க நன்றி அதிரா
கீதா
சே..சே... அதிராவின் தலை தெரிஞ்சதும்:)) எல்லோரும் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டினமே:)) ஆரையும் காணம் ஹா ஹா ஹா:)) சரி சரி மீ போயிட்டு வாறேன்ன்ன்..
பதிலளிநீக்குநாளைக்கு கெள அண்ணன் என்ன பேய்க்காட்டப்போறாரோ பதில்களில் நம்மை:))
ஹா ஹா ஹா அதிரா இங்கதான் இருந்தேன் அதிரா..நெட் போக...இப்ப ..இனி நைட் தான் வர இயலும். மீண்டும் கணினி கை மாறுகிற நேரம்!!..
நீக்குகீதா
// நாளைக்கு கெள அண்ணன் என்ன பேய்க்காட்டப்போறாரோ பதில்களில் நம்மை:))// ஆங் ... அந்த பயம் இருக்கட்டும்.
நீக்குஹா ஹா ஹா கீதாவும் கணினியும் படும் பாடு:)....
நீக்குகெள அண்ணன்..... நாங்க ப்பேய்க்கே பய....ப்.....பி...ட மாட்டமாக்கும்ம்ம்:).... ஹையோ இந்த நேரம் பார்த்து ஜன்னல் கேட்டின் ஆடுதே:)... கர்ர்ர்ர்ர்ர்ர்:)
ஹாஹா :) வி ஆர் தி பேய் கேர்ள்ஸ் :)
நீக்குச்ச்ச்ச்ச்ச்ச்சியேர்ஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அஞ்சு:) ஹா ஹா ஹா:)..
நீக்குஊசிக்குறிப்பு:)..-
நான் கட்டிலுக்குக் கீழ இரும்பு வச்சுத்தான் படுக்கிறேனாக்கும்:)
..கட்டிலுக்குக் கீழ இரும்பு வச்சுத்தான் படுக்கிறேனாக்கும்:)//
நீக்குகரும்பு வச்சுப் படுத்துறாதீங்க. எறும்பு கடிக்கும் !
ஏஞ்சல் ஹா ஹா மீ டூ!! எபி பேயாருக்கு சாலஞ்ச் வைப்போம்!!
நீக்குஅதிரா இரும்பு எல்லாம் கூடாது துரை அண்ணன் சொல்லிருப்பது போல வேப்பிலைதான்!!!!!!
கீதா
////கரும்பு வச்சுப் படுத்துறாதீங்க. எறும்பு கடிக்கும் !///
நீக்குஹா ஹா ஹா ஏ அண்ணன்... இப்போ எறும்பு மற்றும் கொரொனா மாதிரிக் கெட்ட கிருமிகளுக்குத்தான் பயப்புட வேண்டிக் கிடக்கூ:)
கீதா அது வேப்பிலை என்பது “ வந்தபின் காப்போனாக்கும்”:)... வந்த பேயை விரட்டுவது:)..
இரும்பு “வருமுன் காப்போனாக்கும்” பேயை வரவிடாமல் விரட்டுவது:)...
ஹையோ இப்போ துரை அண்ணன் என்னை விரட்டப் போறார் மீ எஸுக்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
பதிலளிநீக்குமிகப் பிரமாதமாய் ப்பேய் கதையை எழுதி இருக்கிறீர்கள். அதற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துகள். சரளமான நடையில் நன்றாக அனுபவித்து படிக்க முடிந்தது. பேய்படம் ஒன்றைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
அந்த சலங்கைகாரன்தான் பேய் மாதிரி அந்த வழியாக வருகிறவர்களை பயமுறுத்துகிறானோ என முதலில் நினைத்தேன். ஆனால் விடிந்ததும் மந்திரவாதியின் இயல்பான தோற்றத்தை கல்லு விவரித்ததும் கொஞ்சம் நெருடியது. முடிவில் என் ஊகமும் சரியானது. மந்தரவாதிகளின் பார்வை வசீகரம் கொஞ்சம் கலக்கமூட்டுபவைதான். அதிலும் நீங்கள் குறிப்பிடும் தோற்றம், அங்குள்ள சாமான்கள் பயத்தை தருவிப்பது. இந்த மாதிரி மக்களை ஏமாற்றி அவர்கள் உயிரை பயத்தால் பறிப்பதில் அவர்களுக்கு என்ன லாபம்? மக்களின் அறியாமையால் வரும் புகழின் மேல் ஆசையா?
இந்த கலக்கமான காலகட்டத்தில் கொஞ்சம் உங்களின் கதை போக்கை திசை மாற்ற உதவியது. ஒரு பேயின் மறுபக்கத்தை முடிவில் காட்டிய உங்களுக்கு மறுபடியும் பாராட்டுகளுடன் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குமிக்க மிக்க நன்றி கமலா அக்கா ரசித்துப் படித்தமைக்கு.
மக்களின் அறியாமையால் வரும் புகழின் மேல் ஆசையா?//
இதுவும் ஒருவித ஆணவம் எனலாம்.மாந்திரீகம் நல்ல பிஸினஸாக நடக்கிறது கமலாக்கா. ஏமாற்றல்கள் தான். மக்களும் அதற்குக் காரணம். இது பற்றிச் சிறிய வயதில், கல்லூரிக் காலம் வரை நிறையக் கேட்டதுண்டு.
மிக்க நன்றி கமலாக்கா பாராட்டிற்கு.
கீதா
மொபைலில் தான் தயங்கித் தயங்கி வாசிக்க முடிந்தது. எந்த ஊர் பாஷை இது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குநிச்சயம் நெல்லை இல்லை.. குமரி மாவட்டம்?.. அதுவுமில்லை. பின்னே?.. கேரளமும் தமிழகமும் இணையும்\
பார்டர் ஏரியாவா இருக்குமோ?.. உதகை பக்கம் கேரளம் நெருங்கும் நிலம்பூர் அருகிலா? நிச்சயமாக இல்லை.
குமரி -- மார்த்தாண்டம் தாண்டி?.. அப்படியும் தெரியலே. சகோ. கீதா தான் சொல்ல வேண்டும். எதுவாக
இருந்தாலும் அந்த பாமர உச்சரிப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார்.
அதுவும் சுடலைமாடன் கோயிலை நெருங்க நெருங்க.. பிரமாதம்!
சலங்கைக்காரன் தான் யாருன்னு தெரிலே. கதை முடியும் தருவாயில் வேறு மறுபடியும் சலங்கைக்காரனைப் பற்றிய பிரஸ்தாபம்.
வழக்கமா இந்த மாந்திரிககாரர்கள் மீது தான் பழி விழும். தொழில் நடக்க இந்த மாதிரி ஊர் ஜனங்களை பயமுறுத்தி வைச்சிருக்கிறதா..
இந்தக் கதையோ மாந்திரிகக்காரன் மீது சந்தேகம் விழாமலும் பார்த்துக் கொள்கிறது. புனிதாவின் கைக்காப்பை லவட்டிண்ட தோட மாந்திரிக்காரனை கதாசிரியர் மன்னித்து விட்டு விட்டார் போலிருக்கு.
எல்லாம் ,மனப்பீதியை ஊதி ஊதி விட்டு சகோ. பிரமாதமா கதை பண்ணிவிட்டார் என்று கைதட்டலாம் என்றால்?..
மறுபடியும் அந்த சலங்கைக்காரன் பற்றி தான் நினைவு ஓடுகிறது. ஆரானும் அந்த அப்பாவி?.. சொல்லுங்க, கீதா ரெங்கன்?..
ஜீவி அண்ணா எங்கள் மாவட்டத்தில் பொதுவாக மூன்று விதமான வழக்குத் தமிழ். கடலோரத்தில் பேசும் தமிழ். மலையாளம் கலந்த தமிழ். கொஞ்சம் நெல்லையில் பேசப்படும வார்த்தைகள் கலந்த தமிழ். மூதி, சொல்லுதே...இதையே சொல்லுடே, சொல்லுட்டி என்றும் பேசப்படும். மார்த்தாண்டம் பகுதியில் பேசப்படும் மலையாளம் கலந்த தமிழ் இழுத்து இழுத்துப் பேசப்படும். அது போல தேங்காய்ப்பட்டணம் பகுதிகளில் பேசப்படும் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பேசுவது கடலோரம் வேறு. அது புரிவது கஷ்டம் எனக்கும் பரிச்சயமில்லை.
பதிலளிநீக்குநான் படித்த பள்ளி கல்லூரிகளில் இந்த மூன்றும் கலந்து கட்டி வரும். ஏடி, சொல்லுடி என்பதெல்லாம் அழுத்தி சொல்லுட்டி ஏட்டி என்று. பேய் என்பதையே ப்யேயி என்றுதான் உச்சரிப்பாங்க...அப்படி என் மனதில் நினைவிருந்ததை வைத்து எழுதினேன். பல வருடங்கள் ஆகிவிட்டது ஊர்ப்பக்கம் போய்.
மிக்க நன்றி ஜீவி அண்ணா
கீதா
இலங்கைத் தமிழ்ச் சொற்களும் கூட வழக்கில் உண்டு. டோன் அக்சென்ட் கூட. ஆம் பாமரத்தனமும் கலந்தது தான்.
நீக்குசலங்கைக் காரனைப் பற்றிய சிறு குறிப்பு சூர்யகலா மனதில் சொல்லிக் கொள்வது வருகிறதே. அவன் அப்பாவி என்று.. குமரி ஆத்தா சொல்லுவதும் வருகிறதே. அவன் நல்லவன். யாருக்கும் கெடுதல் செய்யாதவன் சவுக்குசுற்றிக் கொண்டு வருபவன். நல்லது சொல்லிக் கொண்டே செல்பவன். யாரிடமும் எதுவும் கேட்கமாட்டான் என்று....ஆனால் தன்னை அடித்துக் கொள்ள எல்லாம்மாட்டான். எல்லோரும் அவன் ஊருக்கு நல்லது செய்ய பூசை செய்வதாக குமரி ஆத்தா சொல்கிறாள். மக்களும். மக்களுக்கு அந்த மாதிரீகன் மேலுள்ள மதிப்பு. கிராமங்களில் அப்படித்தானே. ஆனால் மாந்திரீகன் தான் அமானுஷ்ய விஷயங்களுக்குக் காரணம் என்பது யாருக்கும் தெரியாது . அவன் பேய் ஓட்டுபவன் என்று நினைக்கிறார்கள்...
ஆனால் சலங்கைக்காரன் மாந்த்ரீகனின் பூசையில் குறுக்கிடுகிறான் அவன் தான் பூசை செய்கிறான் என்று நினைத்து, அது மாந்திரீகனுக்கு உறுத்துகிறது. சுரியகலாவிற்கும் மாந்திரீகன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை என்று வருகிறதே. ஊரில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் என்று சொல்லி நடக்கும் பல விஷயங்களுக்கும் மாந்தீரீகன் தான் காரணம் என்று அவள் மனதிற்குப் படுவதாகச் சொல்லப்பட்டிருக்கே அண்ணா. மற்றும் சலங்கைக் காரன் கொல்லப்படுவதற்கும் அவன் தான் காரணம் என்று அவள் மனதிற்குப் படுவதால் தான் புனிதாவின் கறுப்புக் கயிறையும் நெற்றிப் பொட்டையும் அழித்து ஓடுகிறாள் அவளை இழுத்துக் கொண்டு. அவளுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை ஆனால் புனிதாவிற்கு அவனால் ஏதேனும் கெடுதல் வருமோ என்று ஏனென்றால் முதல் நாள் இருவரும் தானே நடந்துவருகிறார்கள்.
மாந்திரீகன் புனிதாவின் கையில் இருக்கும் காப்பை ஆட்டை போடவில்லை. அது அவள் அத்தையால் கட்டப்படும் காப்புக் கயிறு அதாவது மஞ்சள் அல்லது சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டுவார்கள் இல்லையா அது. அதைத்தான் மாந்திரீகண் மாற்றி கறுப்புக் கயிறு தாயத்துடன் கட்டுவது தான் சூரியகலாவிற்கு உறுத்துகிறது.
//பாமர உச்சரிப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார்.
அதுவும் சுடலைமாடன் கோயிலை நெருங்க நெருங்க.. பிரமாதம்!//
நன்றி நன்றி!!
மிக்க நன்றி அண்ணா விரிவான கருத்துரைக்கு.
கீதா
இரண்டு தடவை இந்த கதையை படித்த பிறகு தான் புரிய ஆரம்பித்தது. இருந்தும் சில வசனங்கள் புரியவில்லை. உதாரணத்துக்கு (வல்லாத சடவு) போன்ற சில சொற்கள். இம்மாதிரி தமிழில் தட்டச்சு செய்வதற்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு