அர்த்தமில்லாத கனவுகள் அடிக்கடி காண்பவன் நான். அதற்கு அர்த்தம் ஏற்படுத்திக் கொள்ள நினைப்பேன்! சில கனவுகள் யோசிக்க வைக்கும்.. என்ன காரணமாய் இருக்கும் என்று! யானை என்னைத் துரத்துவது போல தொடர் கனவு கண்டு அதை தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். வேறு சில நீண்ட கனவுகள் பற்றியும் எழுதி இருக்கிறேன். அடிக்கடி அல்லது அதிகம் படிக்கப்படும் பதிவுகளில் அடிக்கடி இடம்பெறும் பதிவாகவும் கனவுகள் பற்றிய பதிவு இருக்கிறது!
அம்மா திதி புது வீட்டில் கொடுக்க முடிந்த என்னால் அப்பாவின் திதியை கொடுக்க முடியவில்லை.
பொதுவாகவே நான் அடிக்கடி ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் அது நடக்காமல் போய்விடுகிறது. எல்லோரும் சாதாரணமாக அடிக்கடி ஏதாவது ஒன்றை, அதையே நினைத்து / சொல்லிக் கொண்டிருந்தால் அது நடக்கும் என்றுதான் சொல்வார்கள். என் சமீபத்து அனுபவம் நேர்மாறாய் இருக்கிறது.
இந்த தேதியிலிருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். எடுக்க முடியாமல் போனது. வீட்டைக் காலி செய்யப்போகிறேன் என்று நான் சொன்ன தேதியும், காரணங்களும் மறுக்கப்பட்டன - இல்லாத சட்டங்களையும் அதிகாரத்தையும் காட்டி!
அது மாதிரி நான் சொல்லிக் கொண்டிருந்தது, "அம்மாவை இந்த வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு.. அடுத்து அப்பாவையும் அழைத்து வரவேண்டும்..."
ஏதோ அப்பா அம்மா எல்லாம் பழைய வீட்டிலேயே இருந்து கொண்டு எங்களைத் தேடிக்கொண்டிருப்பது போலவும், உரிய முறைப்படி அவர்களை இங்கு வரவைப்பது போலவும் மனதுக்குள் ஒரு நினைப்பு! 26 வருடங்களுக்கும் மேல் அங்கிருந்த காரணமோ.. அல்லது அந்த வீட்டில் அப்பாவும் அம்மாவும் வந்து புழங்கிய காரணமோ!
அப்படிச் சொல்லிக் கொண்டிருந்ததில் அப்பாவுக்கு இந்தப் புது வீட்டின் அமைப்பு ரொம்பப் பிடிக்கும் என்கிற உணர்வு மேலோங்கி இருந்தது. ஆனால் கொரோனா அமர்க்களத்தில் திதி கொடுக்க முடியாமல் போக, நான் சொல்லிக் கொண்டிருந்தது / நினைத்துக் கொண்டிருந்தது நடக்கவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான்.
ஆனால் மார்ச் மாதத்தில் ஒரு கனவு வந்தது. அதில் அப்பா வந்தார். அதிசயம்! அதுவும் புது வீட்டில் இருந்தார். ஆனால் அந்தக் கனவின் வேறு சில அம்சங்கள் சற்றே சங்கடமான விஷயங்களாக இருந்ததால் வெளியில் சொல்லிக்கொள்ள முடியவில்லை... என்ன எண்ண ஓட்டங்களோ... என்ன கனவோ... என்ன காரணமோ..
யானை துரத்துவது போல கனவு வந்தபோது நான் பிள்ளையாருக்கு ஏதோ வேண்டுதல் டியூ என்று சொன்னார்கள். வேறு சில கனவுகளுக்கும் வெவ்வேறு பலன்கள் அவரவருக்குத் தோன்றியது போல சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலன் பற்றி பெரிதாக கவலைபப்டுவதில்லை என்றாலும் சிலசமயம் சில கனவுகள் மனதை அலைக்கழிக்கும்தான்!
அதுவும் அதிகாலைக் கனவுகள் பலிக்கும் என்றும் சொல்வார்கள். நல்ல கனவாய் இருந்தால் சரி, கெட்ட கனவாய் இருந்தால்...? எனக்கும் வேறு சிலருக்கும், ஏன், உங்களில் சிலருக்கும் உங்கள் கனவுகள் பலித்த நேரங்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும்.
ஸிக்மாண்ட் ப்ராய்ட் புத்தகம் நான் படித்ததில்லை. கனவுகள் ஏன் வருகின்றன ('கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது..' என்று பாடல் வரி மனதில் ஓடுகிறது!)
புது வீடு வந்ததும் மெதுவாய் புத்தகப் பெட்டிகளைத் திறந்து கிளறும்போது இந்தப் புத்தகம் கிடைத்தது! கனவுகளும் அதன் பலன்களும். அப்பா 1963 இல் வாங்கி இருக்கிறார் பாருங்கள்..
அவர் காப்பிரைட் பற்றி பேசி இருக்கிறார். ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபடியாலும், நான் அந்தப் புத்தகத்தை பதிப்பிக்கப் போவதில்லை என்பதாலும் நான் விதி மீறவில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்! காப்பிரைட் உரிமை ஐம்பது வருடங்கள்தான் செல்லும் என்று எங்கோ படித்த நினைவு!
வியாசர் கனவுகளுக்கு பலன் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்ததும் பகிரலாம் என்று தோன்றியது. ....
இப்போதெல்லாம் எழுத ஆரம்பித்த விஷயம் நீண்டு விடுவதால் இரண்டு வாரங்கள் தொடர்வது தொடர்கதையாகி வருகிறது. எபப்டியோ வியாழன் ரொம்பினால் சரி என்று எனக்குத் தோன்றும். நெல்லையின் சதவிகிதக் கணக்கு சரியாய் வரும் என்றுதான் தோன்றுகிறது. ஏகாந்தன் ஸார் என்ன சொல்கிறாரோ!
அது மாதிரி இந்தப் புத்தகத்தின் முன்னுரை பகுதிகளை அடுத்தவாரம் தருகிறேன்.
====================================================================================
தினமலர் சொல்கிறார்கள் பகுதிக்கு லிங்க் தரமுடியாது என்பதால்தான் நல்ல விஷயங்கள் அங்கு கிடைக்கும்போது அதை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து விட்டு அதற்கு லிங்க் கொடுப்பேன் - இதை முன்னரே சொல்லி இருக்கிறேன். பாஸிட்டிவ் செய்திகள் பல இபப்டிக் பகிர்ந்திருக்கிறேன். அது அல்லாத சில விஷயங்களை ஒன்றிரண்டு வியாழனில் பகிர்ந்திருக்கிறேன். அதுபோல ஒன்று...
முன்னர் ரேடியோ செய்திகள் கேட்டவர்களுக்கு "ஆகாஷ்வாணி... செய்திகள்... வாசிப்பது.. சரோஜ் நாராயணஸ்வாமி.." எனும் குரல் பரிச்சயமாகி இருக்கும். காலையும் மாலையும் 7.15 க்கு ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகள் அது. மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் கூட இப்படி செய்தி வாசித்திருக்கிறார்.
சரோஜ் நாராயணஸ்வாமி பற்றி தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் வந்ததை இங்கு பகிர்கிறேன்.
'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி...' என்ற கணீர் குரலுடன், 1962 முதல், 50 ஆண்டுகள், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பணியாற்றி ஓய்வுபெற்று, மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயண சுவாமி:
"ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக நான் தேர்வான உடனே, என் மாமா, 'உன் குரல் உலகம் எங்கும் ஒலிக்கும்; மிகவும் புகழ் அடைவாய்' என, ஆசிர்வாதம் செய்தார்.
பி.ஏ., ஆங்கிலம் படித்து விட்டு, தமிழ் செய்தி வாசிப்பாளராக ஆனது, எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. என் தாய்மொழி தமிழ் மீது, எனக்கு இருந்த ஆர்வம் தான், அந்த மொழியில் சிறப்பாக செய்தி வாசிக்க துாண்டியது. மேலும், என் தொழிலை நான் மிகவும் நேசித்தேன்.
காவிரிக் கரையோரம் வசித்த பெற்றோருக்கு பிறந்ததால், தமிழ் என் நாவில், சரளமாக வந்தது; அன்று, தமிழகம் முழுவதும் என் குரலை கேட்க காத்திருந்தது.
அதை இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.ஆரம்ப நாட்களில், செய்தி வாசிக்க நிறைய பயிற்சி செய்ய வேண்டும். ல, ள, ழ மற்றும் ண, ன எழுத்துக்களை சரியாக உச்சரிக்காவிட்டால், பொருளே மாறிவிடும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும் செய்தியை, தமிழில் மொழி மாற்றம் செய்த பிறகே, தமிழில் வாசிக்க முடியும்.ெவளிநாட்டு செய்திகளை வாசிக்கும் போது, அந்த நாட்டின் தலைவர்கள் பெயரையும் சரியாக உச்சரிக்க வேண்டும். அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு போன் செய்து, அந்த தலைவர்களின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை, கேட்டு தெரிந்து கொள்வேன்.
நான் வாசிப்பதில், எந்த தவறும் வந்து விடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமாக இருப்பேன்.
எந்த வார்த்தைகளுக்கு இடையே, இடைெவளி விட வேண்டும்; எந்த வார்த்தைக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, அதன்படி செய்வேன்.
செய்தி வாசிக்கும் நேரத்திற்கு, 2 - 3 மணி நேரத்திற்கு முன்பாகவே, அலுவலகம் சென்று விட வேண்டும்.
எனக்கு, எப்போதும் அழகாக இருக்க பிடிக்கும். என் புகுந்த வீட்டில், என்னை யாரும் குறை கூறியது இல்லை. என் கணவருக்கு என் மீது மிகுந்த பாசம் உண்டு. உதாரண தம்பதியாக நாங்கள் வாழ்ந்தோம்.
குழந்தைகள் பிறந்ததும், கணவரும், அவரின் பெற்றோரும் மிக ஆதரவாக இருந்தனர். அதனால், செய்தி வாசிக்க, இரவில் எந்த நேரமும் சென்று வர முடிந்தது.என் கணவர் நாராயணசுவாமி, எனக்கு கிடைத்த வரம். அவர் இறந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு மகன், மகள். இருவரும் உயர்ந்த வேலைகளில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளை அறிந்து கொள்ள, அதை வாசிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு, இறைவன் கொடுத்த வரம்!--
========================================================================================
பொக்கிஷம் :
இந்த வாரம் மிச்சமிருக்கும் ரூபி ஜோக்ஸ் மற்றும் கடைசியில் மற்றொரு மதன் ஜோக்... சுருக்கமாக முடிக்கிறேன்!
==========================================================================================
அம்மா திதி புது வீட்டில் கொடுக்க முடிந்த என்னால் அப்பாவின் திதியை கொடுக்க முடியவில்லை.
பொதுவாகவே நான் அடிக்கடி ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் அது நடக்காமல் போய்விடுகிறது. எல்லோரும் சாதாரணமாக அடிக்கடி ஏதாவது ஒன்றை, அதையே நினைத்து / சொல்லிக் கொண்டிருந்தால் அது நடக்கும் என்றுதான் சொல்வார்கள். என் சமீபத்து அனுபவம் நேர்மாறாய் இருக்கிறது.
இந்த தேதியிலிருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். எடுக்க முடியாமல் போனது. வீட்டைக் காலி செய்யப்போகிறேன் என்று நான் சொன்ன தேதியும், காரணங்களும் மறுக்கப்பட்டன - இல்லாத சட்டங்களையும் அதிகாரத்தையும் காட்டி!
அது மாதிரி நான் சொல்லிக் கொண்டிருந்தது, "அம்மாவை இந்த வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு.. அடுத்து அப்பாவையும் அழைத்து வரவேண்டும்..."
ஏதோ அப்பா அம்மா எல்லாம் பழைய வீட்டிலேயே இருந்து கொண்டு எங்களைத் தேடிக்கொண்டிருப்பது போலவும், உரிய முறைப்படி அவர்களை இங்கு வரவைப்பது போலவும் மனதுக்குள் ஒரு நினைப்பு! 26 வருடங்களுக்கும் மேல் அங்கிருந்த காரணமோ.. அல்லது அந்த வீட்டில் அப்பாவும் அம்மாவும் வந்து புழங்கிய காரணமோ!
அப்படிச் சொல்லிக் கொண்டிருந்ததில் அப்பாவுக்கு இந்தப் புது வீட்டின் அமைப்பு ரொம்பப் பிடிக்கும் என்கிற உணர்வு மேலோங்கி இருந்தது. ஆனால் கொரோனா அமர்க்களத்தில் திதி கொடுக்க முடியாமல் போக, நான் சொல்லிக் கொண்டிருந்தது / நினைத்துக் கொண்டிருந்தது நடக்கவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான்.
ஆனால் மார்ச் மாதத்தில் ஒரு கனவு வந்தது. அதில் அப்பா வந்தார். அதிசயம்! அதுவும் புது வீட்டில் இருந்தார். ஆனால் அந்தக் கனவின் வேறு சில அம்சங்கள் சற்றே சங்கடமான விஷயங்களாக இருந்ததால் வெளியில் சொல்லிக்கொள்ள முடியவில்லை... என்ன எண்ண ஓட்டங்களோ... என்ன கனவோ... என்ன காரணமோ..
யானை துரத்துவது போல கனவு வந்தபோது நான் பிள்ளையாருக்கு ஏதோ வேண்டுதல் டியூ என்று சொன்னார்கள். வேறு சில கனவுகளுக்கும் வெவ்வேறு பலன்கள் அவரவருக்குத் தோன்றியது போல சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலன் பற்றி பெரிதாக கவலைபப்டுவதில்லை என்றாலும் சிலசமயம் சில கனவுகள் மனதை அலைக்கழிக்கும்தான்!
அதுவும் அதிகாலைக் கனவுகள் பலிக்கும் என்றும் சொல்வார்கள். நல்ல கனவாய் இருந்தால் சரி, கெட்ட கனவாய் இருந்தால்...? எனக்கும் வேறு சிலருக்கும், ஏன், உங்களில் சிலருக்கும் உங்கள் கனவுகள் பலித்த நேரங்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும்.
ஸிக்மாண்ட் ப்ராய்ட் புத்தகம் நான் படித்ததில்லை. கனவுகள் ஏன் வருகின்றன ('கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது..' என்று பாடல் வரி மனதில் ஓடுகிறது!)
புது வீடு வந்ததும் மெதுவாய் புத்தகப் பெட்டிகளைத் திறந்து கிளறும்போது இந்தப் புத்தகம் கிடைத்தது! கனவுகளும் அதன் பலன்களும். அப்பா 1963 இல் வாங்கி இருக்கிறார் பாருங்கள்..
அவர் காப்பிரைட் பற்றி பேசி இருக்கிறார். ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபடியாலும், நான் அந்தப் புத்தகத்தை பதிப்பிக்கப் போவதில்லை என்பதாலும் நான் விதி மீறவில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்! காப்பிரைட் உரிமை ஐம்பது வருடங்கள்தான் செல்லும் என்று எங்கோ படித்த நினைவு!
வியாசர் கனவுகளுக்கு பலன் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்ததும் பகிரலாம் என்று தோன்றியது. ....
இப்போதெல்லாம் எழுத ஆரம்பித்த விஷயம் நீண்டு விடுவதால் இரண்டு வாரங்கள் தொடர்வது தொடர்கதையாகி வருகிறது. எபப்டியோ வியாழன் ரொம்பினால் சரி என்று எனக்குத் தோன்றும். நெல்லையின் சதவிகிதக் கணக்கு சரியாய் வரும் என்றுதான் தோன்றுகிறது. ஏகாந்தன் ஸார் என்ன சொல்கிறாரோ!
அது மாதிரி இந்தப் புத்தகத்தின் முன்னுரை பகுதிகளை அடுத்தவாரம் தருகிறேன்.
====================================================================================
தினமலர் சொல்கிறார்கள் பகுதிக்கு லிங்க் தரமுடியாது என்பதால்தான் நல்ல விஷயங்கள் அங்கு கிடைக்கும்போது அதை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து விட்டு அதற்கு லிங்க் கொடுப்பேன் - இதை முன்னரே சொல்லி இருக்கிறேன். பாஸிட்டிவ் செய்திகள் பல இபப்டிக் பகிர்ந்திருக்கிறேன். அது அல்லாத சில விஷயங்களை ஒன்றிரண்டு வியாழனில் பகிர்ந்திருக்கிறேன். அதுபோல ஒன்று...
முன்னர் ரேடியோ செய்திகள் கேட்டவர்களுக்கு "ஆகாஷ்வாணி... செய்திகள்... வாசிப்பது.. சரோஜ் நாராயணஸ்வாமி.." எனும் குரல் பரிச்சயமாகி இருக்கும். காலையும் மாலையும் 7.15 க்கு ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகள் அது. மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் கூட இப்படி செய்தி வாசித்திருக்கிறார்.
சரோஜ் நாராயணஸ்வாமி பற்றி தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் வந்ததை இங்கு பகிர்கிறேன்.
'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி...' என்ற கணீர் குரலுடன், 1962 முதல், 50 ஆண்டுகள், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பணியாற்றி ஓய்வுபெற்று, மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயண சுவாமி:
"ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக நான் தேர்வான உடனே, என் மாமா, 'உன் குரல் உலகம் எங்கும் ஒலிக்கும்; மிகவும் புகழ் அடைவாய்' என, ஆசிர்வாதம் செய்தார்.
பி.ஏ., ஆங்கிலம் படித்து விட்டு, தமிழ் செய்தி வாசிப்பாளராக ஆனது, எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. என் தாய்மொழி தமிழ் மீது, எனக்கு இருந்த ஆர்வம் தான், அந்த மொழியில் சிறப்பாக செய்தி வாசிக்க துாண்டியது. மேலும், என் தொழிலை நான் மிகவும் நேசித்தேன்.
காவிரிக் கரையோரம் வசித்த பெற்றோருக்கு பிறந்ததால், தமிழ் என் நாவில், சரளமாக வந்தது; அன்று, தமிழகம் முழுவதும் என் குரலை கேட்க காத்திருந்தது.
அதை இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.ஆரம்ப நாட்களில், செய்தி வாசிக்க நிறைய பயிற்சி செய்ய வேண்டும். ல, ள, ழ மற்றும் ண, ன எழுத்துக்களை சரியாக உச்சரிக்காவிட்டால், பொருளே மாறிவிடும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும் செய்தியை, தமிழில் மொழி மாற்றம் செய்த பிறகே, தமிழில் வாசிக்க முடியும்.ெவளிநாட்டு செய்திகளை வாசிக்கும் போது, அந்த நாட்டின் தலைவர்கள் பெயரையும் சரியாக உச்சரிக்க வேண்டும். அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு போன் செய்து, அந்த தலைவர்களின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை, கேட்டு தெரிந்து கொள்வேன்.
நான் வாசிப்பதில், எந்த தவறும் வந்து விடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமாக இருப்பேன்.
எந்த வார்த்தைகளுக்கு இடையே, இடைெவளி விட வேண்டும்; எந்த வார்த்தைக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, அதன்படி செய்வேன்.
செய்தி வாசிக்கும் நேரத்திற்கு, 2 - 3 மணி நேரத்திற்கு முன்பாகவே, அலுவலகம் சென்று விட வேண்டும்.
எனக்கு, எப்போதும் அழகாக இருக்க பிடிக்கும். என் புகுந்த வீட்டில், என்னை யாரும் குறை கூறியது இல்லை. என் கணவருக்கு என் மீது மிகுந்த பாசம் உண்டு. உதாரண தம்பதியாக நாங்கள் வாழ்ந்தோம்.
குழந்தைகள் பிறந்ததும், கணவரும், அவரின் பெற்றோரும் மிக ஆதரவாக இருந்தனர். அதனால், செய்தி வாசிக்க, இரவில் எந்த நேரமும் சென்று வர முடிந்தது.என் கணவர் நாராயணசுவாமி, எனக்கு கிடைத்த வரம். அவர் இறந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு மகன், மகள். இருவரும் உயர்ந்த வேலைகளில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளை அறிந்து கொள்ள, அதை வாசிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு, இறைவன் கொடுத்த வரம்!--
========================================================================================
பொக்கிஷம் :
இந்த வாரம் மிச்சமிருக்கும் ரூபி ஜோக்ஸ் மற்றும் கடைசியில் மற்றொரு மதன் ஜோக்... சுருக்கமாக முடிக்கிறேன்!
அப்படியே மதன் ஞாபகத்துக்கு வரவில்லை? அவரேதான் இந்தப் பெயரிலும் வரைந்தாரோ!
மறக்க மாட்டேங்க.. நான் அப்படிப்பட்ட ஆளில்லீங்க...!
இதுவன்றோ நிரூபணம்!
"அவ்வளவுதானா? கொஞ்சம் பகட்டாய்ச் சொல்லக் கூடாதா?" என்று பார்க்கிறாரோ அந்தப் பெண்மணி?!
சிரிப்புத் திருடன் சிங்காரவேலு ஞாபகம் வரவில்லை?
இது மதன்!
==========================================================================================
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நலமே விளைக...
நீக்குகொக்கைப் போல, சரியான காலம் வரும்வரை (காலம் கனியும் வரு) பொறுமையாக்க் காத்திருக்க வேண்டும். சரியான சமயம் வந்துவிட்டால், கொக்கு சட் என எப்படி உணவை (மீனைக்) கவ்வுகிறதோ அதேபோல வாய்ப்பைச் சட் என்று பயன்படுத்திக்கொள்ளணும்.
நீக்குநல்விளக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க.. நலம்தானே?
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஇனிய வணக்கம் வல்லிம்மா... வாங்க...
நீக்குஅன்பு ஸ்ரீராம், அப்பா கனவில் வந்தது மிக மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்த வரை கனவுகள் என் பயங்களே
நான் தீர்மானிப்பது போல சிமயங்களூம்,
மற்ற சம்யங்களில்
எதிர்பார்க்காததும் நடப்பது உண்டு.
அதுவும் அதிகாலைக் கனவுகள்
பல நேரங்களில் சஞ்சலங்கள் கொடுப்பதால், அனேகமாக
சீக்கிரம் எழுந்து விடும் வழக்கம் வந்துவிட்டது.
அப்பா புதிய வீட்டுக்கு வந்து விட்டேன் என்று சொன்னாரோ என்னவோ...
நீக்கு// என்னைப் பொறுத்த வரை கனவுகள் என் பயங்களே. //
பயங்கள் மட்டும்தான் கனவாய் வருமா?
எனக்கு வருகின்ற கனவுகள் சூசகமாக சிலவற்றை அறிவிக்கும். அது இரண்டு நாட்களுக்குள் நடந்துவிடும்.
நீக்குஅடடே... ஆச்சர்யமான இருக்கே... ஆனால் என் அம்மாவும் அப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நீக்குரூபியின் நகைச்சுவை மிகவும் ரியலிஸ்டாக இருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
ஆமாம் அம்மா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம். வாங்க கமலா அக்கா... அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா... வாங்க..
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோருடைய வாழ்விலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநற் பிரார்த்தனைகளுக்கு நன்றி கீதா அக்கா... வாங்க... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகனவுகள் நம் அன்றாட நாட்களின் நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை சம்பந்தப்படுத்தி வரும் என்பது நாம் அறிந்ததே.
உங்கள் மனதில் புது வீட்டில் வைத்து அப்பாவை அழைத்து திதி கொடுக்க முடியாமல் போய் விட்டதே என எண்ணம் அதிகமாக சுழன்றதினால், உங்கள் அப்பா கனவில் வந்திருக்கிறார். ஆனால் கனவில் நாம் அவர்களை பார்க்கும் போது மகிழ்வாக இருந்தாலும், அவர்கள் நம்மை பிரிந்த சமயங்களை, அந்த சம்பவங்களை வந்து நினைவுபடுத்தியபடியே இருக்கும். (இது எனக்குத்தானா இல்லை எல்லோருக்கும் அப்படித்தானா என தெரியவில்லை.)
ஒரு சிலருக்கு முக்கால் வாசி கனவு பலிக்கும். கனவு கண்ட பின் வரும் நாட்களில், அந்த கனவுக்கேற்றபடி சம்பவங்கள் நடக்கும்.
என் தந்தை தவறும் போது எனக்கு அப்படித்தான் கனவு வந்து மறுநாள் முழுவதும் மன சஞ்சலமாக இருந்தது. அனைவரும் அப்படி ஒரு கனவு வந்தால், அவருக்கு ஆயுள் கெட்டியென சமாதான படுத்தினார்கள். ஆனால் கனவு கண்ட பதினைந்தாவது நாள் நன்றாக இருந்த என் தந்தை இரவு படுத்தவுடன் தூக்கத்திலேயே தவறி விட்டார். இந்த சம்பவம் நடந்த பின் கனவுகள் வரும் போதெல்லாம் ஒரு வித பயம் வரும்.
சில கனவுகள் காலை நாம் அனைவரிடமும் சொல்கிற மாதிரி நினைவில் நிலைத்து நிற்கும். சில நமக்கே எழுந்தவுடன் மறந்து விடும். மொத்தத்தில் கனவும் ஒரு புரியாத புதிர்.
தங்களது அடுத்த வார அனுபவங்களையும். கனவின் பலன்கள், அது ஏன் வருகிறது என்ற விளக்கங்களையும், படித்த புத்தகத்தின் வாயிலாக தாங்கள் பகிர்வை எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாம் அறியாத ஒன்றை, பழகாத இடத்தை கனவில் பார்ப்பதில்லை. நான் வெளிநாட்டில் இருப்பதாக கனவே கண்டதில்லை. பிரிந்தவர்கள் கனவில் வரும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் தூக்கம் கலைந்த உடன் ஏக்கம் வருவது இயற்கைதானே... நிறைய கனவுகள் நினைவில் யிற்காமல் மறைந்து விடுவது உண்டு.
நீக்குபக்கத்துத் தோப்பிலே மயில்கள் வந்திருக்கின்றனவோ? இரண்டு நாட்களாக ஒரே அகவல்! இப்போக் கூட அகவிக் கொண்டிருக்கிறது, ஜன்னல் வழியே பார்த்தால் தெரியலை! :(
பதிலளிநீக்குஎனக்குக் கனவுகள் வந்து தான் நான் தூக்கத்திலே கத்துவதாகச் சொல்கிறார். ஆனால் எனக்கு எதுவும் நினைவில் இருப்பதில்லை. அப்படி நினைவு வந்தால் ஒரே குழப்பமாக இருக்கும், கனவா, நிஜமா என! ஆகவே ரொம்பவே பெரிசா எடுத்துக்கறதில்லை. ஆனால் உள்ளுணர்வு சொல்வதை மட்டும் அப்படியே /நம்பினேன்/நம்புகிறேன்/ இனியும் நம்புவேன்.
நீங்கள் தூக்கத்தில் கத்துவது பற்றி முன்னரும் சொல்லி இருக்கீங்க கீதாக்கா... மாமா பாவம்தான்! உள்ளுணர்வு சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தோமானால் நிறைய சந்தேகங்கள் வந்துவிடும் என்று தோன்றும் எனக்கு!
நீக்குஅப்பாவுக்குத் திதி கொடுக்காத குறை மனதில் இருந்ததால் கனவிலும் வந்திருப்பார். அவர் ஆசிகள் நிச்சயமாய் உங்களுக்கு உண்டு. தி.நகரில் எல்லாம் புரோகிதர் வரத் தடை ஏதும் இல்லை என என் மைத்துனர் சொன்னார். அங்கே அவங்க என் சின்ன மைத்துனர் (எங்க மதுரை பாஷையில் கொழுந்தன்)கணேஷின் மாதாந்திரத் திதி கொடுத்திருக்கார். 3 பேர் வந்திருக்கின்றனர். உங்க பகுதி தடை செய்யப்பட்ட பகுதியோ?
பதிலளிநீக்குராமாபுரத்தில் கூட புரோகிதர்கள் வரத்தடையில்லை என்று கெள்விப்பட்டேன். அங்கிருக்கும் ஒருவர் அவர் கணவரின் முதல் ஆண்டு திவசம் மே பத்தாம் தேதி வருவதாகவும், நடக்குமா என்று தெரியவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். சிறப்பாக நடந்ததாம். உங்கள் தகப்பனாரின் திதியை அடூத்த பட்சத்தில் செய்து விடுங்கள்.
நீக்குவாத்தியாரை வரவழைத்து ஹிரண்யமாகச் செய்திருக்கலாம். ஆனால் எங்கள் இலுவலகத் தோழியின் அனுபவம், திதியில் சேர்ந்து கொள்ள வந்த சகோதரர் போ. காவலர்களால் திருப்பி அனுப்பப் பட்டார். ஊரடங்கின் ஆரம்பகாலம் என்பதால் கண்டிப்பாக இருந்தார்கள்.
நீக்குபானு அக்கா... அடுத்த திதியும் தாண்டி விட்டது. இனி மாளயபட்சம்தான்.
இல்லை ஸ்ரீராம், அடுத்த 3 மாதங்களுக்குள்ளாகக் கட்டாயமாய்ச் செய்யலாம். ஆனால் அதே திதியில் இல்லை. அமாவாசை, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆகிய திதிகளில் செய்யலாம். விதி இருக்கிறது. வேண்டுமானால் தி.வா.வையும் கேட்டுக்கோங்க. நாங்க இரண்டு முறை அப்படிச் செய்திருக்கோம். 2007 ஆம் ஆண்டில் எங்க பொண்ணு பிரசவத்தின் போது (அப்பு பிறந்தப்போ) ஆகஸ்டில் வந்த மாமனார் ச்ராத்தம் செய்ய முடியவில்லை. அங்கே யு.எஸ்ஸில் தர்ப்பணம் கூடக் கொடுக்கக் கூடாதுனு எங்க புரோகிதர் சொல்லிட்டார். அப்போ அம்பத்தூரில் இருந்தோம். போகும்போதே புரோகிதரிடம் கேட்டுக் கொண்டு போய்விட்டோம். அவரும் வந்து பண்ணலாம், நாள் பார்த்து நான் சொல்றேன் எனச் சொல்லி அப்படியே செய்தேன். இப்போப் போன வருஷம் செப்டெம்பரில் 2019 அம்பேரிக்கா போனப்போவும் டிசம்பரில் மாமியார் ச்ராத்தம் வருவது தெரியும். புரோகிதரிடம் பேசியதில் நாங்கள் எப்போத் திரும்பி வரோம்னு கேட்டுக் கொண்டு அதற்கேற்றாற்போல் இரண்டு நாட்கள் சொல்லி இருந்தார் மார்ச் 5 ஒன்று மார்ச் 16 ஒன்று. மார்ச் ஐந்தாம் தேதி முகூர்த்தநாளாக இருந்ததால் புரோகிதர் பிசி. 16ஆம் தேதி வந்து நடத்திக் கொடுத்தார். இது சாஸ்திரங்களிலேயே சொல்லப் பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். நீங்க ஆபஸ்தம்ப சூத்திரம் எனில் புத்தகங்கள் கிடைக்கின்றன. வாங்கியும் பார்க்கலாம்.
நீக்குஇம்மாதிரி மாற்று ஏற்பாடுக்கு உங்கள் குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் சம்மதமும் கூடத் தேவை. ஆனால் இப்படிச் செய்யலாம் எனப் பலர் கூறிக் கேட்டிருக்கேன்.
நீக்குவீட்டு வாத்தியாரைத்தான் கேட்கணும். யாராவது சொல்வதை அவரிடம் சொன்னால் சமயங்களில் ஈகோ பிரச்னை ஆகிவிடும்! பார்ப்போம் அக்கா. தகவலுக்கு நன்றி. விசாரிக்கிறேன்.
நீக்குஉண்மைதான் ஸ்ரீராம். அவருடைய தலைமைக்கு அடி விழுந்துவிடுகிறது அல்லவா? எனக்குத் தெரியாதா, நான் சொல்லமாட்டேனா என்பார்! ஆனால் எங்களுக்கு அம்பத்தூரிலும் சரி, இங்கேயும் சரி நல்ல புரோகிதர்களே வாய்த்திருக்கிறார்கள். எங்கள் உறவினர் ஒருவர் அவர் அம்மாவுக்கு வருஷாப்திகம் தாம்பரத்தில் செய்திருக்கார். இப்போத் தான் மே 17 இல் ஆரம்பித்து 20 வரை.
நீக்குபுத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பகிருங்கள். பொதுவாக இந்த காப்புரிமை விஷயத்திற்கு அறுபது ஆண்டுகள் கணக்கு எனச் சொல்லுவார்கள். ஓர் மனிதரின் சராசரி ஆயுள் 60 ஆண்டுகள் என வைத்திருப்பதால் அவர் எழுதியவற்றுக்கும் வெளியிட்டு அறுபது ஆண்டுகள் என்பதாகக் கேள்வி.
பதிலளிநீக்குவரிக்கு வரி எடுத்துப் போடப் போதில்லை. கணினி இருந்தாலே பொறுமை இருக்காது. சும்மா ஒரு அறிமுகம்தான்.
நீக்குரூபியின் நகைச்சுவைத்துணுக்குகளும் கடைசியில் மதனின் நகைச்சுவையும் அபாரம்.இப்போதெல்லாம் நகைச்சுவை என்னும் பெயரில் வருவதைக் கண்டால் மனமே வேதனைப்படுகிறது. சிரிப்பே வருவதில்லை உயர்ந்த நகைச்சுவை கோலோச்சிய காலம்.
பதிலளிநீக்குபுத்தகங்கள் எதுவுமே வாங்குவதில்லை என்பதால் தெரியவில்லை.
நீக்குபுத்தகங்கள் நானும் எங்கே வாங்குகிறேன். பொதுவாக நகைச்சுவையே இப்போ தரம் கெட்டுவிட்டது! :(
நீக்குஅது என்னவோ உண்மைதான்!
நீக்குநான் ஶ்ரீராமோடு ஒத்துப் போகும் மற்றொரு விஷயம் எதையாவது வெளியில் சொன்னால் அது நடக்காமல் போவது. சில விஷயங்களை அதிகம் கோடித்தாலும் அது நடக்காது. அதனாலேயே பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கடைசி நேரத்தில்தான் பேக் பண்ணுவேன்.
பதிலளிநீக்குஎனக்கும் அது தான் நடக்கும். பொதுவாகவே நான் கிளம்புவதற்குக் கொஞ்ச நேரம் முன்னால் தான் துணிமணிகள், மருந்து என எடுத்து வைத்துக்கொள்வேன். நம்மவர் நேர் எதிர்! முன் கூட்டியே எடுத்து வைத்துக் கொள்வார்/வைத்துக் கொள்வதும் திருப்பி எடுப்பதும், மறுபடி வைப்பதுமாக இருக்கும். என்னிடம் நீ எதையானும் மறந்துடப் போறேனு வேறே சொல்லுவார். ஆனால் என்னமோ முன் கூட்டி எடுத்து வைத்துக் கொள்ளும் வழக்கமே வரலை.
நீக்குசொன்னால் நடக்காது என்பது நாம் நடக்கவேண்டும் என்று விரும்புவது! விரும்பாதது உடனே நடந்து விடும்... மர்ஃபி லா மாதிரி!
நீக்குஎனக்கு சில கனவுகள் பலித்திருக்கின்றன. ஆனாலும் நம் ஆழ் மனதின் எண்ணங்களும்,பயங்களுமே கனவாக வருகின்றன என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குரூபி,மற்றும் மதன் ஜோக்ஸ் அபாரம்.
உண்மைதானே... நம் ஆழ்மனம் நினைப்பதை நாமே சிலசமயம் உணர மாட்டோம்.
நீக்குசரோஜ் நாராயணசாமியின் குரலை கேட்காதவர் உண்டோ ?
பதிலளிநீக்குநகைப்புகள் அருமை
நன்றி கில்லர் ஜி.
நீக்குகடந்த வாரம் நானும், அனுஷ்காவும் பாம்பன் பாலத்தில் நடந்து போவதுபோல் கனவு கண்டேன்.
பதிலளிநீக்குதேவகோட்டையில் உள்ள பாம்பன் பாலமா?
நீக்குஆஹா! என்னவொரு கனவு!
நீக்குஎன்னை விசாரித்தாரா கில்லர் ஜி?
நீக்குநெல்லை... ஹா... ஹா... ஹா...
நாங்கள் பேசியது இரகசியம் வெளியில் சொல்வதற்கில்லை.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகனவில் அப்பா வருவது - நல்லதுதான். எனக்கும் என் அப்பா கனவில் வந்திருக்கிறார். குடும்பப் பிரச்சனையில் என்னைக் கேள்வி கேட்டு கண்டித்திருக்கிறார்.
வாங்க நெல்லை... வணக்கம்.
நீக்குஎன் கனவில் அப்பா அப்படியெல்லாம் செய்யவில்லை. அவர் இருப்பை உணர்ந்ததோடு சரி.
சமீபத்தில் எனக்கு வந்த கனவில், மேத்ஸ் எக்ஸாமுக்கு (பிஜி) எக்சாம் ஹாலுக்குச் செல்லாமல் வகுப்பறைக்கு சீக்கிரமே வந்தவன் தூங்கிவிட்டேன். எழுந்து நேரம் பார்த்தால் மாலை ஐந்து மணி. மறுநாள் அறிவியலின் ஒரு சப்ஜெக்டுக்கு சுத்தமா படிக்கலை. அங்கிருந்த நண்பரிடம் போர்ஷன் என்ன என்று கேட்டுக் குறித்துக்கொள்கிறேன். ஒன்றுக்கும் நோட்ஸ் இல்லை. நாளை பரீட்சை எழுதவே இயலாது. வேர்த்து விறுவிறுத்துவிட்டது. இப்படி படிக்காமலே வீண்டிக்கிறோமே என்று வருத்தம். தூக்கம் கலைந்தபிறகுதான்... அட எப்சாமெல்லாம் நமக்கேது.... வேலை பார்க்க ஆரம்பித்தே பலப்பல வருடங்களாகவிட்டதே. என்று பெரும் நிம்மதி. மகிழ்ச்சியோடு எழுந்தேன்.
பதிலளிநீக்குஇந்தமாதிரி எக்சாம் கனவு ஐந்து ஆறு முறைகளாவது கடந்த இருபது வருடங்களில் வந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட சூரியனைக் காண்பதாக கனவு வந்திருக்கிறது. பறப்பது போலவும், எனக்கு பறக்க முடியும் (மனிதனாகவே) என்ற மனவுகளும் அவ்வப்போது வந்திருக்கிறது. நடக்கும்போது செடி அருகே, பாதையில் விதவிதமான காசுகள் (பழல்காலத்து பெரிய செஸ் காசுகள்) நிறையக் கிடந்து அதை எடுத்துச் சேகரிப்பதுபோலும் கனவுகள் முன்பு வந்திருக்கின்றன.
பஹ்ரைனில் தனியாக இருந்தபோது படுக்கையில் மனைவி படுத்திருப்பது போலவும், அவள் மூச்சுவிடும் சப்தத்தையும் உணர்ந்திருக்கிறேன்.
ப்ரான்சில் ஒரு ஹோட்டலில் படுத்திருந்தபோது அருவங்கள் அறைக்குள் வந்துவிட்டதாக்க் கனவு கண்டு பயந்திருக்கிறேன். பிறகு அந்த இடமோ அல்லது அருகாமை இடமோ இடுகாடாக இருந்திருக்கணும் என நினைத்திருக்கிறேன். இந்த மாதிரி பயங்கரமான கனவுகள் வெகு அபூர்வம்.
உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம். குறிப்பாக ஃப்ரான்ஸ் அனுபவம். திகில்தான். அது திகிலா, பஹ்ரைன் கனவு திகிலா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்!!
நீக்கு@நெல்லைத்தமிழன் ஆச் சர்யமா இருக்கு .எனக்கும் இந்த எக்ஸாம் கனவு அடிக்கடி வரும் ரெக்கார்ட் ஷீட்ஸ் சப்மிட்டிங் எல்லாம் வரும் ஸ்கூல் யூனிஃபார்மோடு ..என்னவா இருக்கும் .!!!!!
நீக்குபஹ்ரைன் அனுபவம் - இது பல முறை நடந்துள்ளது. நிச்சயமா அவ, படுக்கைல இருக்கா. அதுவும் ஒரு விதத்தில் திகில்தான். இதை யார்கிட்டயாவது சொன்னா 'பாவம்..கொஞ்சம் மறை கழண்டுவிட்டது போலிருக்கு' என்றுதான் நினைப்பாங்க. இங்கதான் ரெலவெண்ட் என்பதால் எழுதினேன்.
நீக்குஃப்ரான்ஸ் - அது நிஜமாகவே திகில்தான். ஆனா பாருங்க...ஆட்டமேட்டிக்கா என் மனது சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்துவிடும். அதனால மனசளவுல எப்படியோ அதனைக் கடந்துவிடுவேன்.
திகில் ஒன்று, திகில் இரண்டு!
நீக்குநகைச்சுவைகள் அருமை ரசிக்க தக்கவைகளாக இருக்கிற்து
பதிலளிநீக்குநன்றி மதுரை.
நீக்கு//..ஸிக்மாண்ட் ப்ராய்ட் புத்தகம் நான் படித்ததில்லை.//
பதிலளிநீக்குநல்லது! படித்திருந்தால், கதை - கனவுக்கதை - வேறு மாதிரிபோயிருக்கும்..
Sigmund Freud -ஐத் தமிழில் மொழிபெயர்க்கவில்லை என நினைக்கிறேன். அப்படி யாராவது ஆர்வக்கோளாறு அறி’வாளி’கள் மொழியாக்கம் செய்து, அதை யாராவது படித்தும்விட்டால், வாசித்தவருக்கு அது இன்னும் விபரீதமான கனவுகளைக் கொண்டுவரும்!
நானும் தேடியதில்லை ஏகாந்தன் ஸார். ஆங்காங்கே ஒரு சோறு பதமாய்ப் படித்ததில் தேடிப் படிக்கும் ஆர்வம் வரவில்லை.
நீக்குஎனக்கு கனவுகள்பிடிக்குமென் இயலாமைகள் கனவில் வராது ஓடலாம் குதிக்கலாம் மேலும்கனவுகளில் இருந்து இடுகைக்கு விஷயமும் கிடைக்கும்
பதிலளிநீக்குஹா... ஹா.... ஹா... ஜி எம் பி ஸார்.. ஆனால் எவ்வளவு பதிவு இதை வைத்தே போடுவது!
நீக்குநகைச்சுவைகள் அருமை...
பதிலளிநீக்குசரோஜ் நாராயண சுவாமி அவர்களின் உச்சரிப்பே சிறப்பு...
கனவும் கடந்து போகட்டும்...
நன்றி DD.
நீக்குபொதுவாக நான் ஆழ்ந்து தூங்குவது அபூர்வம். நான் படுக்கைக்குப் போவதே கனவு காணத்தான்! சுவாரஸ்ய, விசித்திரக் கனவுகள் வரும். சில கனவுகளைக் காலையில் நினைவுக்குக் கொண்டுவரமுடிவதில்லை. டபாய்த்து ஓடிவிடுகின்றன. முன்பு என் அப்பா கனவில் அடிக்கடி வந்ததுண்டு. சமீபத்தில், அதாவது இரண்டு நாள்முன்பு என் கனவில் யூ.ஜி.! ஆனால், முழுதாக நினைவுபடுத்தமுடியவில்லை.
பதிலளிநீக்குஎனக்கும் அப்படி நல்ல தூக்கம் வரதில்லைதான், இந்தக் கனவு கண்டு கத்துகிறேன் என்று சொல்லும் நேரம் தவிர்த்து! :)))) நமக்கெல்லாம், "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது!" என்று சமாதானம் செய்து கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டியதுதான்.
நீக்குஏகாந்தன் ஸார்.. யூ.ஜி? யார்? நானும் ஆழ்ந்து தூங்கிப் பல நாட்கள் ஆச்சு.
நீக்குநல்ல உள்ளமோ, தொல்லை அனுபவிக்கும் உள்ளமோ.. தூக்கம் வர்றதில்லை கீதா அக்கா..
நீக்கு//..யூ.ஜி? யார்?//
நீக்குஜே.கிருஷ்ணமூர்த்தியைப்போன்றே மற்றுமொரு ஞானி. மரபுவழிச் செல்லாதவர். யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. (இருவரும் உறவல்ல!) பொதுவாக ‘யூஜி’ என நண்பர்களால், ஞானத்தேடல் உள்ளவர்களால் அழைக்கப்பட்டவர். எபி-யில் (GS-க்கு பதிலாக) ஒரிரண்டு மாதம் முன்பு யூஜி-பற்றி லேசாகச் சொல்லியிருக்கிறேன். இவரைப்பற்றிய புத்தகம் ‘அமேஸானில்’ ஆர்டர் பண்ண முடியாமல் தவித்தேன் - லாக்டவுனில் ‘எஸென்ஷியல் ஐடம்’களின் கீழ் ‘புத்தகங்கள்’ வராததால்! இப்போது முழு e-commerce-ஐத் திறந்துவிட்டார்கள் புண்ணியவான்கள். கிடைக்கிறது. திங்கள் வரும் என்கிறாள் எனக்காக ‘ஆர்டர்’ செய்த என் பெண். புத்தகத்தின் பெயர் ‘The Biology of Enlightenment'- on UG by his friend and follower Mukunda Rao.
தமிழில் செய்தி வாசிப்பவர்களின் எனக்கு "விஜயம்" "ஜானகி" இருவரின் குரல்களும் பிடிக்கும். சரோஜ் நாராயண்ஸ்வாமி பொதுவாக அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார். ஆனால் அவர் குரல் ஆரம்பத்தில் ஒரு மாதிரியும் முடிக்கையில் வேறு மாதிரியும் எனக்குத் தெரியும். என்றாலும் உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை மூவருமே நன்றாகக் கடைப்பிடிப்பார்கள். பூர்ணம் விஸ்வநாதன் வேலையில் சேர்ந்ததே அகில இந்திய வானொலியில் தான் என நினைக்கிறேன். சுதந்திரம் பெற்றபோது அவர் தான் செய்தி வாசித்தார் என்று படித்த நினைவு.
பதிலளிநீக்குவிஜயம், ஜானகி நினைவிருக்கு. பூர்ணம் விஸ்வனாதன் கூட செய்தி வாசித்ததாய்க் கேள்விப்பட்டிருக்கேன். படிச்சிருக்கேன். ஆனால் அவர் குரலில் செய்திகள் கேட்டதில்லை.
நீக்குஅவர் கபாணியில் செய்தி வாசித்தால் எப்படி இருக்கும்?!!
நீக்கு" ஏய்... என்னதிது.. தமிழ்நாடு கவுண்ட் ஏறிண்டே போறது... இதோ பார்.. சென்னை ஜாக்கிரதையா இருக்கணும்.. சொல்லிட்டேன்.."
பூர்ணம் விஸ்வநாதன் பின்னாட்களில் சென்னை வானொலியில் செய்தித்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த நினைவு.
நீக்குஎனக்கும் சரோஜ் நாராயணஸ்வாமியின் குரலை விட ஜானகி, விஜயம் பிடிக்கும். பஞ்சாபகேசன் ஈ என்று கூட ஒருவர் மிக நன்றாக வாசிப்பார்.
நீக்குஇவர்களுக்குப் பிறகு சரோஜ் அவர்களின் குரலில் ஒரு கடுமை இருப்பதாகத்
தோன்றும்.
நிர்மல பெரியசாமியின் வண்ண்ணக்கம் மாதிரி:)
நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி
நன்றி நண்பரே.
நீக்குஅப்பாவும் புதுவீட்டுக்கு வந்து ஆசீர்வதித்து விட்டார். நல்ல கனவுகளை எடுத்துக் கொள்ளவோம். சஞ்சலம் தருபவற்றை வெறும் கனவென்றே ஒதுக்கி விட வேண்டும்.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.
உங்கள் வார்த்தை உற்சாகம் தருகிறது. நன்றி ராமலஷ்மி.
நீக்குஎல்லாச் செய்திகளையும் ஒரே மாதிரி வாசிக்கக் கூடாது. குரலில் ஏற்ற இறக்கங்கள், அழுத்தம், தழுதழுப்பு, சந்தோஷம் எல்லாம் அந்த்ந்த செய்திகளைப் பொறுத்து அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். என் எதிர்பார்ப்பை என்னளவில் பூர்த்தி செய்தவர் விஜயம் அவர்கள் தான். அதுவும் இந்திரா காந்தி அவர்களின் காலகட்டத்தில் அவரது உணர்வு பூர்வமான செய்தி வாசிப்பில் மனம் தோய்ந்து ஒன்றிப் போயிருக்கிறேன்.
பதிலளிநீக்குவிஜயத்திற்கு அடுத்து தம் செய்தி வாசிப்பில் என்னைக் கவர்ந்தவர் ஷோபனா ரவி அவர்கள்.
சரோஜ் அவர்களின் குரலில் லேசாக ஆண் குரலின் பிசிறு தட்டல் உண்டு. செய்திகள் - வாசிப்பது ஸரோஜ் நாராயணசாமி என்று அழுத்தம் திருத்தமாக அவர் ஆரம்பிக்கும் பொழுதே களை கட்டி விடும். அந்த நேரத்தில்
வேறு ஏதாவது வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பவர்கள் கூட டப்பென்று தம் அரட்டையை நிறுத்தி விட்டு
செய்தியைக் கேட்கத் தோன்றும் அளவில் அவருக்கு ஒரு கமாண்டிங் டோன் உண்டு.
சரோஜ், விஜயம், ஜானகி, ஷோபனா எல்லோருமே தம் செய்தி வாசிப்பில் தனித்தன்மை கொண்டு தான் இருந்தார்கள்.
அந்தக் காலம் பொற்காலம்.
ஆனால் செய்தி வாசிப்பில் அதற்கான உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடாது; செய்திகள் வெறும் செய்திகளாகத் தான் இருக்க வேண்டும்; அதுவே செய்தி வாசிப்பின் இலக்கணம் என்றும் விஷயம் தெரிந்தவர்கள் கூறுவார்கள்.
எல்லா விஷயங்களிலும் இரட்டைக் கருத்துக்கள் இருக்கிற மாதிரி தான் இதிலேயும்.
//சரோஜ் அவர்களின் குரலில் லேசாக ஆண் குரலின் பிசிறு தட்டல் உண்டு.// நான் சொல்ல நினைத்தேன். வேண்டாம்னு விட்டேன். ஜீவி சார் சொல்லிட்டார். சரோஜ் அவர்கள் ஆண் குரலில் ஆரம்பித்துப் பெண் குரலில் முடிப்பார்.
நீக்குநான் என்றைக்கும் சரோஜ் நாராயணசாமியின் குரலின் ரசிகன் அல்ல.Not impressed! எனக்குப் பிடித்தவர் விஜயம் தான். அவருக்குமுன்னே சரோஜெல்லாம் ஒன்றுமில்லை. ஆண் குரலில் பத்மநாபன். அந்தக் காலத்து இரவு 7.15 தமிழ் நியூஸில் விஜயத்தின் குரல் கணீரென ஒலிக்கும். நியூஸ் கண்டெண்ட் ’சப்’ பென இருந்தாலும், அவர் குரல் அதில் ஏதோ முக்கியமாக இருப்பதுபோல் கவனிக்கவைக்கும்! தமிழுக்காகவே பிறந்தவர் அவர் என எண்ணியதுண்டு.
நீக்குஆனால் ஜீவி ஸார்.. ஷோபனா தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.
நீக்குவிஜயம், சரோஜ் நுணுக்கமான அவதானிப்பு ரசனை எல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் செய்திகள் டைம் எப்போது முடியும் என்று காத்திருந்து ஹிந்தி விவித்பாரதி வைத்துவிடுவேன். ஏழு மணிக்கு ஹிந்தி நேயர் விருப்பம் போல வைப்பார்கள். சரியாக அந்நிகழ்ச்சியின் பெயர் மறந்து விட்டது!
///அம்மா திதி புது வீட்டில் கொடுக்க முடிந்த என்னால்//
பதிலளிநீக்குஇது என்ன ஸ்ரீராம்????
திதி = திவசம் = நினைவுநாள் அதிரா.
நீக்குஅதில்லை ஸ்ரீராம், நாங்கள் இவை இரண்டையும் சொல்வதுண்டு.. நான் ஷொக்ட்ட்ட்ட்டாகிப் போன மற்றர் என்ன தெரியுமோ..
நீக்குநான் நினைச்சிருந்தேன் உங்கட அம்மா இருக்கிறா என்று, போன வருடம் திருப்பதி போனபோது.. நீங்கள் சொல்லியிருந்தீங்கள்.. பாஸ் இன் அம்மாவும் கூடவே வந்திருந்தார் என, ஆனா மீ அர்ச்சுனன் ஆச்சே:).. அதனால அம்மா மட்டும்தான் கண்ணுக்குத் தெரிஞ்சா:)).., பாஸ் ஐ விட்டு விட்டு அம்மாவை மட்டும் பார்த்து, உங்கள் அம்மா என முடிவெடுத்திட்டேன்ன்ன்.. “முருங்கி மாமி” எனச் சொல்லியிருக்கப்பிடாதோ கர்ர்ர்ர்ர்:))..
அதனால இந்த ஒரு வருடத்துள் ஏதும் ஆகி விட்டதோ எனத்தான் பதறிப்போய்...
என் 50 சதம் சம்பளத்தைக் கூட்டியிருக்கும்:) செக் க்கு மயில் தூது விட்டதனால் உண்மை தெரியவந்துது.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
இதில் என்ன இருக்கு? உங்களுக்கு எப்படித் தெரிய சான்ஸ்? அம்மா 2002. அப்பா 2016 அதிரா. அம்மா மறைவு அதிக பாதிப்பு என்று நினைத்தேன். அப்பா மறைவு அதைவிட அதிகம் பாதித்தது.
நீக்குஅப்பாவின் புத்தகங்களுக்குள் என்றும் ஒளிந்து, உங்களோடுதான் அப்பா இருப்பார்...
பதிலளிநீக்குஎனக்கும் கனவுகள் கண்டபடி வரும், திருநீறை எடுத்து அப்பிக் கொண்டு படுத்தால் மட்டும் கொஞ்சம் குறையும் ஹா ஹா ஹா.. ஆனா எனக்கு பல கனவுகள் - தெளிவாகக் கண்டால் பலிக்கிறது.. அதனால கனவென்றாலே பயமாக இருக்கும்.
புத்தகங்களோடு என்றும் ஒளிந்து... உண்மை அதிரா.. பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றிலும் கோடுபோட்டு அவர் அபிப்ராயங்களையும் எழுதி வைத்திருப்பார்.
நீக்குதிருநீறை அப்பிக்கொண்டால் கனவு வராது என்பது ஒரு நம்பிக்கை இல்லையா? சிலர் படுக்கும் முன் கைகால் சுத்தம் செய்து வாய் கொப்பளித்துப் படுப்பார்கள்.
சின்னனில் இந்தச் செய்திகள் தவறாமல் அப்பா கேட்பார், காதில் ஆகாசவானி.. கணீர் என ஒலித்து, இன்னும் மனதில் நிற்கிறது..
பதிலளிநீக்குநல்ல தகவல்.
ஓ... அங்கும் இந்தியச் செய்திகள் கேட்கும் வழக்கம் உண்டோ?
நீக்குஅங்கு எப்பவும் இந்தியச் செய்தி ரேடியோவில் அப்பா கேட்பார் ஸ்ரீராம், நாமும் வெயிட் பண்ணுவோம்ம்.. அந்த ஆகாசவானி.. மற்றும் “ஆல் இந்தியா ரேடியோ”.. இந்த இரு குரல்களுக்காகவும்.. அந்நேரம் இந்தியத் தொடர்புகல் இண்டநெட் இல்லாமையால, ரேடியோவில் மட்டும்தான், தமிழ்நாட்டுப் பாசை கேட்க முடியும்.. அதனால இந்த “ஆல் இந்தியா...” எனச் சொல்வதைக் கேட்டு நாங்கள்.. சின்னவர்கள் விழுந்து விழுந்து சிரிப்போம்.. அந்த ஒரு சொல்லுக்காகவே நாமும் நியூஸ் கேட்க ரெடியாகுவது வழக்கம்...
நீக்குஅப்பா அம்மா ஏன் கேட்பார்கள் எனில், தமிழ்நாட்டிலிருந்தாவது ஏதும் நல்ல சேதி வராதோ நம் நாட்டுப் பிரச்சனைக்கு எனும் நப்பாசைதான், சிலசமயம், இலங்கை பற்றி எதுவும் சொல்லாமல் விட்டால், அப்பா ஏசிக்கொண்டிருப்பார் ஹா ஹா ஹா...
அகில இந்திய வானொலி நிலையம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு நிறுவனப் பெயராக ஆல் இந்தியா ரேடியோ என்றே சொல்வார்கள்.
நீக்கு// சிலசமயம், இலங்கை பற்றி எதுவும் சொல்லாமல் விட்டால், அப்பா ஏசிக்கொண்டிருப்பார் ஹா ஹா ஹா...//
ஹூ...ம்... புரிகிறது.
பொக்கிஸம்...ஹா ஹா ஹா
பதிலளிநீக்கு1.ஹா
2.ஹா ஹா ஹா
3.ஹா ஹா
4.:)
5. ...
மதன் ஜோக் ஓகே.
நன்றி அதிரா.
நீக்குஎங்கள் குடும்பத்தில் கனவில் யானை வந்தால் குலதெய்வம் அழைக்கிறார் என்பார்கள். குலதெய்வம் சாஸ்தா என்பதால் யானை வாகனம் அவருக்கு.
பதிலளிநீக்குஎன் குலதெய்வ பதிவில் நான் இதை பகிர்ந்த போது நீங்கள் யானை கனவில் வருவதை சொன்னீர்கள் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள் என்றேன் . கொரேனா காலம் எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்கு மாறியபின் ஒரு முறை குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். அவரை தினம் வேண்டிக் கொள்ளுங்கள்.
அப்பா எப்போதும் உங்களுடன் இருப்பார். அப்பாவுக்கு இந்த வீடு மொட்டைமாடி எல்லாம் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் அதனால் அப்பா கனவு வந்து இருக்கும். தினம் அப்பா, அம்மா படத்திற்கு பூ போட்டு வணங்கி கொள்ளுங்கள் அவர்கள் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்.
வாங்க கோமதி அக்கா... ஆமாம்.. உங்கள் பதிவிலும் சொல்லியிருந்தேன். சென்றவருடம் குலதெய்வம் கோவில் சென்று வந்தோம். இந்த வருடமும் சென்றுவரத் திட்டமிட்டிருந்தோம். பார்ப்போம்.
நீக்குதினம் அப்பா அம்மாவை வணங்கியே கிளம்புகிறேன் கோமதி அக்கா.
சரோஜ் நாராயணஸ்வாமி பற்றி தினமலர் செய்தி பகிர்வு அருமை.
பதிலளிநீக்குபொக்கிஷ பகிர்வுகள் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபொக்கிஷம் சிறப்பு.
பதிலளிநீக்குசரோஜ் நாராயணசாமியுடன் ஒரு பேட்டி காணொளி பார்த்தது நினைவுக்கு வந்தது.
கனவுகள்.... பெரும்பாலான கனவுகள் மறந்து போய் விடும் எனக்கு!
வாங்க வெங்கட்.. ஆமாம், நிறைய கனவுகள் மறந்து விடும். சிலசமயம் எனக்கு நீளமான கனவுகள் வந்து அவை நினைவிலும் இருக்கும்.
நீக்குஇந்த கனவுகள் அதிகாலை கனவுகள் பத்தி முன்னம் போட்ட பதிவு இன்னமு இங்கே அதிகம் வாசித்த பதிவில் மேலே வரும் :)நினைச்சுப்பேன் நிறைய கனவுவாரியர்கள் இருக்காங்கன்னு
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... வாங்க ஏஞ்சல்.. நீங்க சொல்றது உண்மை. நிறைய கனவுப் பிரியர்கள் அல்லது கனவு ஆர்வல, ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள்தான்.
நீக்குஸ்ரீராம்ஜி உங்கள் அப்பா உங்கள் கனவில் வந்ததே அவர் உங்களை உங்கள் புதுவீட்டில் ஆசிர்வதித்துவிட்டார் என்றே தெரிகிறது. கனவுகள் ஒரு சில எழும் போது நினைவு இருக்கும் சில நினைவு இருப்பதில்லை.
பதிலளிநீக்குசரோஜ்நாராயணசாமி அவர்களின் குரலை மற்க்க முடியாது.
ஜோக்குகள் அனைத்தையும் ரசித்தேன்.
துளசிதரன்
உங்கள் வார்த்தைகள் நெகிழ்ச்சியான மகிழ்வைத் தருகின்றன துளஸிஜி. நன்றி.
நீக்குஉங்க கனவுகள் பற்றி இங்கு அடிக்கடி வாசித்த நினைவு இருக்கே. அதுவும் பாம்பு கனவு...
பதிலளிநீக்குஸ்ரீராம் எனக்குக் கனவே வரமாட்டேங்குதே என்ன செய்ய?!!!! ஹா ஹா ஹா
எப்போதாவது ரொம்ப ரொம்ப அபூர்வமாகக் கனவுகள் வருவதுண்டு. ஆனால் எதுவும் நினைவிருக்காது. கொஞ்சம் மாதங்கள் முன் வந்த ஒரு கனவு நல்ல ஒரு கதைக்கு வழிவகுத்தது ஆனா பாருங்க அதைக் குறித்து வைத்துக்கொள்ளாததால் போயே போச்!!!
ஸ்ரீராம் உங்க அப்பா உங்க கனவுல வந்ததே நல்ல விஷயம்தானே! உங்கள் கனவு வழியாக உங்க வீட்டுக்குள் வ்ந்து உங்கள் எல்லோரையும் ஆசிர்வதித்துவிட்டார். மட்டுமல்ல அவர் உங்களுடனேயேதானே இருக்கிறார் ஸ்ரீராம் இதோ இன்று கூட அவர் கையெழுத்துடன் புத்தகப் பக்கம் ஒன்றைப் பகிர்ந்திருக்கீங்க பாருங்க. புத்தங்களோடு புத்தகங்களாக அவர் உங்களோடு இருக்கிறார் ஸோ நீங்க எங்கு போனாலும் உங்களோடுதான் இருப்பார். அம்மாவும் தான். நீங்கள் அவர் திதி விட்டுப் போயிற்றே என்று வருந்தும் போதே அவரும் ஸ்ரீராம் பாவம் என்று உங்கள் கனவில் வந்து ஆசிர்வதித்துவிட்டார்!! மந்தில் நினைவுகளில் இருப்பது எத்தனை பெரிய விஷயம் ஸ்ரீராம்!!
கீதா
பாம்புக்கனவு என்ன என்று சட்டென நினைவுக்கு வரவில்லை கீதா... வாங்க... அப்பா புது வீட்டில் இருப்பதாக கனவு வந்தது எனக்கும் மகிழ்ச்சிதான் கீதா... அதுவும் அவர் நினைவு நாள் சமயம்! நீங்கள் சொல்லி இருப்பதுபோல இந்தப் புத்தகத்திலும்...
நீக்குகனவுகள் பற்றி நிறைய ஆராய்சிகள் இருக்கு. பலன்கள்னு கூடச் சொல்லுவாங்க ஆனால் நான் அதில் அதிகம் நுழைவதில்லை. அதைப் போட்டு ஆராய்வதும் இல்லை. உள்ளுணர்வுகளுகுக் கூட. அது பல சமயங்களில் மனதை வேறுவிதமாக்கும் நிலையும் உண்டு என்பதால். ஈசி கோயிங்க் தான் நமக்கு உதவுது!!!
பதிலளிநீக்குகீதா
உண்மையில் நானும் அப்படிதான் கீதா. ரொம்ப ஆராய்ந்து குழப்பிக் கொள்வதில்லை.
நீக்குசரோஜ்நாராயணசாமி எனக்கு மிகவும் பிடித்த செய்திவாசிப்பாளர். அவர் குரல் கேட்டு அது போல சிலோன் ராஜேஷ்வரி சண்முகம் (இவர் மடியில் அமர்ந்து அவர் என்னை கொஞ்ச...இலங்கை வானொலியில் என் குரல் பதிய இவர்தான் அப்போது நானள் இருந்த வீட்டின் எதிர்ப்புறம் இருந்ததால்..) இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் நான் ஏஐஆர் பரீச்சை எழுதிய போது என் கனவுல்கில் நான் ஏதோ அவர்களைப் போல் ரேடியோவில் செய்தி வாசிப்பது போலவும், பேசுவது போலவும் நினைத்து திரிந்த காலங்கள். எல்லாம் கலைந்து போன மேகங்கள்!! சரோஜ்நாராயணசாமி பற்றி வாசித்திருந்தாலும் இப்போதும் வாசித்து தெரிந்து கொண்டேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
பரவாயில்லையே... அதிரா உட்பட நாங்கள் இந்திய செய்தி அறிவிப்பாளர் பற்றிப் பேசிக் கொண்டிருக்க நீங்கள் இலங்கைச் செய்தி அறிவிப்பாளர் பற்றிச் சொல்கிறீர்கள். அவர் அவ்வளவு பழக்கமா உங்களுக்கு?
நீக்குஆமாம் ஸ்ரீராம் நல்ல பழக்கம் என் அத்தைகளுக்கு ஃப்ரென்ட் வேறு. எதிர்த்தாப்புலதான் இருந்தாங்க. வீட்டுக்குத் தொட்டடுத்து நான் படித்த ஸ்கூல். என் வகுப்பிலிருந்து பார்த்தால் பாட்டி கிச்சனில் வேலை செய்வது தெரியும் ஹா ஹா ஹா.
நீக்குஒன்றாம் வகுப்பு படித்த போது அங்கு ஒரு பாட்டு பாடி ஏதொ சொன்னேன். நல்ல மழை கொட்டு கொட்டு என்று கொட்டிய தினம். அப்போது மயில்வாகனன் அவர்கள் ராஜா அவர்களை எல்லாம் பார்த்திருக்கேன். ராஜேஷ்வரிசண்முகம் அவர்கள் கடிதத் தொடர்பில் கூட இருந்தாங்க நாங்க இங்கு வந்த பிறகும். அப்புறம் எங்கள் வீட்டுப் பிரச்சனைகளால் பல விட்டுப் போயின.
விவேக் ஜோக் கொஞ்சம் மாற்றி ....எனக்கு அவங்களை தெரியும் அவங்களுக்கு என்னை நினைவிருக்காது...ஹா ஹா ஹா இப்போது இவர்கள் யாருமே இல்லை.
அவங்க எத்தனையோ பேரை பார்த்திட்டுருக்காங்க அதுவும் நாங்க இங்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தபிறகு நினைவிருப்பது கஷ்டம்தான்.
அதே போல சென்னை மாரீஸ் ஹோட்டல் ஓனர் திரு ராமசாமிப் பிள்ளை அங்கிள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். அப்போது அவர்களுக்கு அங்கு இருந்த தோட்டங்கள் விஷயமாக வருவார். நான் அவரோடு நிறைய விளையாடியிருக்கேன். என் பாட்டி சமைத்துப் அவர் நம் வீட்டில்தான் சாப்பிடுவார். காரணம் நாங்கள் இருந்த வளாகம் பேர் மோடி ஹால், டூரிஸ்ட் ஹோம், முன் புறம் பெரிய ஹால் திருமண வரவேற்பு, ஸ்கூல் விழாக்காள், நடனப்பள்ளி என்று பல நடக்கும் ஹால் ஸ்டேஜோடு இருக்கும். மாடியில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வந்து தங்கும் அறைகள் டூரிஸ்ட் ஹோம். அதன் மற்றொரு புறம் ராதா கிருஷ்ணன் கோயில். சைடில் பேட்மின்டன் கோர்ட். நாங்கள் பின்புறம் இருந்த அவுட்ஹவுஸில். மிக மிகச் சிறிய ஒரு ரூம் கொண்ட வீடு. தாத்தாவுக்கு அங்கு இவற்றை எல்லாம் கவனித்துக் கொள்ளும் வேலை. கூடவே ஞாயிறு அன்று மாடியில் இருக்கும் ராதா கிருஷ்ணன் ஹாலில் பஜனை செய்வார் பூஜையும் செய்வார். அதற்கு வளாகத்தின் உரிமையாள்ர் மோடி தாத்தாவும் அவர் மனைவி கல்பனா பாட்டியும் வருவார்கள்.
அப்படி அங்கு வரும் போது மாரீஸ் ஹோட்டல் அங்கிள் வீட்டிற்கு வந்து பழக்கம். இங்கு வந்த பிறகு தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக விட அதுவும் நாங்கள் நாகர்கோவில் பக்கம் ஆகிப் போனதால். சென்னைக்கு வந்த பிறகு அப்பா மாரீஸ் ஹோட்டல் வீட்டிற்கு ஒரே ஒரு முறை சென்று வந்தார். ஆனால் அப்புறம் இல்லை.
அவ்வப்போது இலங்கை நினைவுகள் நானும் அப்பாவும் பேசிக் கொள்வதுண்டு.
கீதா
பெரிய ஆட்களுடன் நட்பில் இருந்திருக்கிறீர்கள் கீதா.
நீக்குபொக்கிஷத்தில் ரூபி வரைந்தது மதன் போலவே தான் இருக்கு மூக்கு...வாய்...அதுவும் இரண்டாவது படத்தில் வலது புறம் இருக்கும் அந்த கேரக்டர் ஸ்கெச் ஹையோ..
பதிலளிநீக்குஜோக்குகள் எல்லாமே ஹா ஹா ரகங்கள். ஸ்கெச் நிறைய சிமிலாரிட்டிஸ்!! ரூபிக்கும் மதனிற்கும்...
கீதா
ஆமாம். நடிகர்களுக்கு டூப்ளிகேட் இருப்பது போல மதனுக்கு ஒருவர்!
நீக்குஎன்ன ஸ்ரீராம் எவ்வளவோ பாட்டு எழுதினீங்க பாடலாசிரியர் அவதாரம் கூட எடுத்தீங்க! (ரகசியமா இருக்கட்டுமோ?! இல்லேனா பிஞ்சு பாடலாசிர்னு உங்களுக்குப் போட்டியா வந்திடப் போறாங்க!!!) ஓன்னு கூட இங்க போடலியே!! ஹூம்...ஒரு கவிதை கூட வரலையே! ரொம்ப நாளாச்சு!
பதிலளிநீக்குகீதா
கீதா... இதெல்லாம் எப்போ ஷெட்யூல் பண்ணியது தெரியுமா? கணினி சரியாய் இருந்த நாட்களில்!
நீக்குஆமாம் ஆமாம் ஸ்ரீராம் அது பப்ளிஷ் பண்ணிய பிறகு நினைவுக்கு வந்துச்சு..அப்புறம் .சரி அப்படியே இருக்கட்டும் ஒரு பிட் நம்ம பிஞ்சுவுக்கு கொடுத்து கொஞ்சம் அவங்க மண்டை குடையட்டும்னு...ஹா ஹா ஹா
நீக்குகீதா
முந்தைய கமென்ட் கொஞ்சம் அவசரத்தில் கொடுத்தது.கனவு பற்றி இன்னும் சொல்ல நினைத்து சொல்லாமல் போனதால் இப்போது. கல்லூரி வேலைகள்/கரெக்ஷ்னுக்கு பேப்பர்கள் என்பதால் விடுபட்டுவிட்டது.
பதிலளிநீக்குகனவுகள் உண்மையிலேயே நமக்கு எதையோ உணர்த்த வரும் செய்தி என்றே எனக்குத் தோன்றுகிறது. அதைப் புரிந்து கொள்ள ஆன்மீகமும், விஞ்ஞானமும் சேர்ந்த கலவையால் ஓரளவு முடியும். ஐம்புலன்களும் மூளையும் அயர்ந்து தூங்கும் போது விழித்திருக்கும் நம் ஆத்மாவுக்குப் புலப்படும் சில அனுபவங்கள் கிடைக்கும் சில செய்திகள் போல் தோன்றுகிறது. நம் அறிவுக்கு எட்டாத கனவுகளைப் பற்றி இப்படி ஊகிக்கத்தானே முடியும். கனவுகளைப் பற்றி கனவு காண வைத்த பதிவு.
துளசிதரன்
கனவுகள் நமக்கு எதையோ உணர்த்த வருவதாக எனக்குத் தோன்றுவதில்லை துளஸிஜி. மறந்துபோன நினைவுகள் சில ஆசைகள் மேலே வருகின்றன என்று தோன்றும்.
நீக்குஆகாசவானி ஆல் இந்தியா எங்கள் வீட்டில் அப்பா கேட்பார்.சரோஜ் நாராயணசாமி குரல் அதிரும்.
பதிலளிநீக்குநிறைவேறாத ஆசைகள் கனவாக வரும் என்றும் சொல்கிறார்கள். ஆழ் மனது எண்ணங்களும் வரும். உங்கள் புத்தகப் பதிவையும் காண்போம
அப்பா அம்மாவின் ஆசீர்வாதங்கள என்றும் உண்டு.
நன்றி மாதேவி.
நீக்கு