இவ்வளவு க்ளீனா இருக்கற முயல் பெட்டியில குப்பை போடுவதா!
அதோ அங்கே என்ன அது? முசாஃபரி பங்களாவா !
அப்போ இங்கே என்ன?
இதுதான் அந்த பங்களாவா?
கலைக்கூடம் !
ஆ ! மீண்டும் மழையா!
மழையே மழையே பயணம் முழுதும் நனையும் வகையில் வா...!
சாய்ந்திருப்பது பாதையா, கேமிரா கோணமா?
சாலைக்கு குடையாய் இருக்கும் மரங்கள்!
மழையானாலும், வெயில் அடித்தாலும், சாலை மட்டும் மெளனமாக நீண்டு நெளிந்து சென்றுகொண்டிருக்கும்.
பாடும்போது நான் தென்றல் காற்று...
பம்மி நிற்பதோ தென்னங்கீற்று !
கண்ணாடியில் கேமிராக்காரர்!
மழை பொழிந்துகொண்டே இருக்கும்
கார் நனைந்துகொண்டே இருக்கும்!
சீராக ஆடி நீரைத் துடைத்து...
பாதைகளைக்காட்டி..
ஒரு நிமிடம்.... உங்களுக்கு ஒரு கேள்வி :
மண் அள்ளும், தோண்டும் எந்திரம் கொண்ட வண்டிகளுக்கு ஏன் எப்பொழுதும் மஞ்சள் நிற வர்ணம் அடிக்கப்படுகிறது?
ஆஹா ! சாப்பிடுமிடம் வந்தாச்சு!
வீட்டுச் சாப்பாடு ! ஆனால் நோட்டுக் கொடுக்கணும்!
எல்லோரும் சாப்பிடப் போயாச்சு .....
கதவைத் திறங்கப்பா...!
கேள்வியை இங்கே தேடாதீங்க! மேலே இருக்கு. பார்த்து, யோசித்து பதில் சொல்லுங்க!
========================================
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வாழ்க வளமுடன்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க!
நீக்குகண்ணாடி மேலே
பதிலளிநீக்குகருமுகில் துளிகள்..
காலத்தின் வண்ணம்
கலையாத விதைகள்...
ஆஹா ! "ரேடியோ பெட்டி"யில் கேட்கும் பாட்டு போல, திரட்டுப் பாலாக இனிக்கிறதே!
நீக்குகுடகு சென்றதிலிருந்து மேகக் கூட்டமும் மழையும் தான்.
நீக்குவளைந்து வளைந்து போகும் பாதை
கூடவே வரும் மழை,
வண்டியின் மேல் மழைத்துளிகளின்
கோலங்கள் எல்லாமே அழகு.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
Test
பதிலளிநீக்குPass.
நீக்குமஞ்சள் பெயிண்ட் அடித்ததற்கு காரணம் மு. கருணாநிதி
பதிலளிநீக்குஹா ஹா !!
நீக்குலாரிகள் மஞ்சப் பெயிண்ட்டுக்கு மாறியாக வேண்டும் என்று 70 களில் சட்டம் போட்டார்கள் என்று நினைக்கிறேன்... அதற்கு பலத்த எதிர்ப்பும் அப்போது இருந்தது..
நீக்குசில வர்த்தக நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பல வண்ணங்களில் லாரிகளில் தீட்டியிருந்தார்கள்...
ஆனாலும் எதிர்ப்பு பிசுபிசுத்துப் போனது..
அதுக்கு அப்புறம் சில ஆண்டுகளில்
மத்திய அரசு நேஷனல் பர்மிட் லாரிகளுக்கு ஊற வைத்த கொட்டைப் பாக்கு நிறத்தில் வர்ணம் பூச வேண்டும் என்று நடைமுறைப் படுத்தினார்கள்...
//மஞ்சள் பெயிண்ட் அடித்ததற்கு காரணம் மு. கருணாநிதி//
நீக்குயாருக்கு அடித்ததற்கு !
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வராவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி கொஞ்சம் கொஞ்சமாகக் கொரோனாவை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்துவிடுவோமோ? நேற்றைய நிலவரம் மிக மிக மோசம். இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்! ஆனாலும் ஊரடங்கை நீட்டிக்கப் போவதாய்த் தெரியவில்லை என்பதோடு கடைகள் திறப்பதையோ நிறுத்தவில்லை. நேற்று ஓர் அரை மணி நேரம் அந்த மாஸ்கைப் போட்டுக் கொண்டு வெளியே சென்றதே (இத்தனைக்கும் மாலை ஆறுமணி) போதும், போதும் என்றாகிவிட்டது. வியர்வை ஊற்று! :( எல்லோரும் மணிக்கணக்காக எப்படித் தான் போட்டுக்கறாங்களோ!
பதிலளிநீக்குபொறுமை கடலினிலும் பெரிது.
நீக்குஇந்த ஜேசிபி எல்லாம் கொஞ்சம் ஆபத்தான வாகனங்கள் என்பதாலும் முக்கியமான வேலைகள் செய்வதாலும் தூரத்திலிருந்து பார்த்தால் கூடத் தெரியும் வண்ணம் மஞ்சள் என்பதாலும் மஞ்சள் வண்ணம் அடிச்சிருக்கலாம். பள்ளி வாகனங்கள் கூட மஞ்சள் வண்ணம் தான்.
பதிலளிநீக்குஆம். எல்லா சீதோஷ்ண நிலையிலும், வெளிச்சம் அதிகம் இல்லாத இடங்களிலும் கூட மஞ்சள் நிறம் எளிதாக அடையாளம் காணப்படும் என்பது சரி. முக்கியமாக டிப்பர் லாரி போன்ற off road operating vehicles, குழந்தைகள் மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகள் எல்லாம் சுலபமாக அடையாளம் காணப்பட மஞ்சள் நிறம் அடிக்கப்படும். அவ்வாறு வர்ணம் அடிக்கப்படாத வண்டிகளுக்கு உரிமம் கொடுக்கமாட்டார்கள்.
நீக்குபடங்களும் அதற்கான தலைப்புகளும் அருமை.கௌதமன் சாரின் கைவண்ணமோ? ஸ்ரீராமுக்கு இன்னமும் புது வீடு பழகி இங்கே எப்போதும் போல் வரமுடியவில்லை. கணினிப் பிரச்னையும் கூடச் சேர்ந்துவிட்டது. கடைசிப் படம் ரொம்பப் பிடிச்சது. மழைக்காலத்தில் மலைப்பிரதேசங்களில் பெய்யும் மழையின் அழகுக்கு ஈடு, இணை இல்லை. இதை ஊட்டியில் அனுபவிச்சிருக்கேன். சில சமயங்களில் அரவங்காட்டில் மழை பெய்யாது. எதிரே வெலிங்க்டனில் கொட்டும். :))))
பதிலளிநீக்குஹா ஹா - உண்மை. நானும் எமரால்டில் இருந்த நாட்களில், அட்டிபாயில், எத்திலார் போன்ற சில இடங்களில் பெய்யும் மழையைப் பார்த்ததுண்டு.
நீக்குகீசா மேடம்... இந்த மழை ஒருவேளை குறள் படிக்கவில்லையோ. (நல்லார் இருவர் உளரேல் அவர் பொருட்டு... ஹா ஹா)
நீக்குஇது எப்போக் குறளில் சேர்ந்தது? மூதுரை அல்லவோ?
நீக்கு"நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை." என்னைக் கிண்டல் செய்யும் சாக்கில் தப்புத்தப்பாகச் சொல்கிறீர்களே! இஃகி,இஃகி,இஃகி!
பரவாயில்லை..தேர்வுல தேறிட்டீங்க. ஆனா எனக்கு உங்களையும் பிடிக்கும் என்பதால், மாமாவை மட்டும் 'நல்லார் ஒருவர்' என்று குறிப்பிட விரும்பாமல், உங்களையும் சேர்த்து 'இருவர்' என்று குறிப்பிட்டேன். ஹா ஹா
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஇன்னும் பாகமண்டலா போய்ச் சேரவில்லை போலிருக்கு! பயணத்திலேயே இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குசில பெயர்கள் உதாரணமாகத் "தஞ்சையம்பதி" ஆசிரியர் குழுவில் "ஸ்ரீராம்" பெயர் "பூஸானந்தாவின் சொற்பொழிவுகள்" "தேவதையின் சமையல் பக்கம்" ஆகியவை அழுத்தமான எழுத்துக்களில் வரவில்லை. ஆனால் அவற்றின் மீது க்ளிக் செய்தால் கிளிப்பச்சை வர்ணத்திற்கு மாறுகிறது.
பதிலளிநீக்குஎல்லாமே எனக்கு அந்த கலரில்தான் (கிளிப்பச்சை) வருகிறது. நீங்கள் வேறு எந்த நிறங்கள் மாறுபட்டிருப்பதாக கூறுகிறீர்கள்?
நீக்குகேட்டவர்க்கு கேட்டபடி, பார்த்தவருக்கு பார்த்தபடி!
நீக்குநான் சொல்வது என்னவெனில் க்ளிக் செய்யாமல் பார்த்தால் அனைத்தும் bold letters தெரிகிறது/தெரிய வேண்டும். ஆனால் சில பெயர்கள் மட்டும் bold letters இல்லாமல் வருகிறது. க்ளிக் செய்தால் பச்சை வண்ணம் எல்லாவற்றையும் போல் வருகிறது.
நீக்குகேஜிஜி சார்... கீசா மேடம் சொல்வதைவிட முக்கியம்... தொடரும் இடுகைகள் வெளியிட்டு எவ்வளவு நேரமாகிறது என்பது. அதைச் சேர்க்க முயலுங்கள்.
நீக்குதொடரும் இடுகைகளா? நெல்லைத் தமிழனா கேட்கிறது?.. கிள்ளி விட்டுப் பார்த்துக் கொள்கிறேன்.. ஹா... ஹா.. ஹா... (இந்த ஹாஹாஹா கூட முரளி பாணி தான்!) எப்பப்போ இந்த ஹா..ஹா.. ஹா.. வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்..
நீக்குஜீவி சார்... நான் 90%, எபில இருந்துதான் மற்ற தளங்களுக்குப் போகிறேன். இங்க இல்லாத தளங்களுக்குச் செல்வது அபூர்வம் (மதுரைத்தமிழன், ராஜியின் காணாமல் போன கனவுகள் போன்றவைகளுக்கும் இடைவெளியில் செல்வேன்). தமிழ்மணம் இல்லாததுனால, பெரும்பாலான தளங்களுக்குச் செல்வதில்லை.
நீக்குஎப்போவேனும் போனால், கட கடவென விட்டுப்போனவைகளைப் படித்துவிடுவேன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான படங்கள். அதன் வர்ணனை வரிகளும் அருமை. இயற்கையும், மழையும் சேர்ந்து படங்களுக்கு அழகூட்டுகிறது. வளைந்து செல்லும் சாலைகள் படங்கள் நன்றாக உள்ளது.
மஞ்சள் நிறம் ஆற்றலை குறிப்பது. அதனால் அவர்கள் (தயாரிப்பாளர்கள்) மஞ்சளை இந்த வாகனத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். இரண்டாவது பார்வைக்கு பளிச்சென இருப்பதால், இதர வண்டிகளில் வரும் மக்களின் பாதுகாப்புக்காக இந்த நிறம் பொருத்தமாக அமைந்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகமலா ஹரிஹரன் மேடம்... நீங்க சொல்றதைப் பார்த்தால் மோர்க்குழம்பு ஆற்றல் தரும், வெந்தயக் குழம்பால் உடலுக்கு பிரயோசனம் இல்லை என்று அர்த்தமாகிறதே
நீக்குஆஹா, கெளம்பிட்டாரையா, கெளம்பிட்டார்!
நீக்குஹா ஹா ஹா. மோர் குழம்பிலும் ஒரு வகையாக மெயினாக வெந்தயம் கொஞ்சம் கூடவே எடுத்துக் கொண்டு, மி. வத்தல், தனியா, கொஞ்சம் க. ப. உ. ப தேங்காய்ப்பூ, எல்லாவற்றையும் வறுத்து சேர்த்து எரிஉளியாக வைத்திருக்கிறோமே..! இரண்டும் பயனுள்ளவைதான் என்பதை அறியாமல் நெல்லையில் பிறந்தென்ன பயன்? வெந்தயம்+மோர்=ஆற்றல்.. நாங்களும் நெல்லையாக்கும்... ஹா ஹா ஹா.
நீக்குபடங்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் ஈர்க்கின்றன. நார் எழுதுவது? கேஜிஜி சாரா இல்லை ஶ்ரீராமா?
பதிலளிநீக்குநிறைய படங்கள் அவுட் ஆஃப் ஃபோகசில் இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிட நெஞ்சுரம் வேண்டும். பாராட்டுகள்.
நார் எழுதுவதுதான் சார்!
நீக்குநார்.. சார்.. பார்.. rhyming !
நீக்குஹா ஹா !!
நீக்குகாலையில் ஐபேடிலிருந்துதான் பின்னூட்டம் இடுவேன். அப்போ தட்டச்சுத் தவறுகள் தவிர்க்கமுடியாது. எனக்கு தட்டச்சுத் தவறே பிடிக்காது, ஆனால் வேறு வழியில்லாமல் தவறுகள் நேர்கின்றன. அதுனால படிக்கறவங்க பொறுத்துக்கணும்.
நீக்குகீசா மேடம், அதிரா போன்ற தளங்களுக்கு ஐபேடில் போக முடியாது. கீசா மேடத்தின் தளம் ஏஸ் கவுண்டர் எரர் கொடுக்கும், அதிரா தளம் இண்ட்லி எரர் கொடுக்கும்
எப்போதும் தூர இருக்கும்போதே பளிச் என்று தெரிவது மஞ்சள் நிறம். பாதை சரிந்திருந்தால் பொக்லைன் இயந்திரம் தூர இருக்கும்போதே கண்ணில் பட்டு நாம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம்.
பதிலளிநீக்குஇதே காரணத்துக்காக வளைவு பகுதியில் எச்சரிக்கையாக மஞ்சள் பெயின்ட் அடித்திருப்பார்கள். பாதையின் இரண்டு பகுதிகளிலும் நடைபாதை ஐடென்டிஃபை பண்ண (கார் அந்தப் பகதியில் புகாமல் இருக்க) மஞ்சள் கோடு போட்டிருப்பார்கள். பள்ளி, கல்லூரி பேருந்து, குழந்தைகள் பயணிக்கும் வாகனமும் மஞ்சள் பெயின,டுதான்.
இவர் ஆபத்தானவர் எனக் காண்பிக்க மஞ்சள் துண்டு அணிந்திருந்தார் எனச் சொன்னால் அது அரசியல். அதற்கு இங்கு இடம் கிடையாது.
ஹா ஹா ! நன்று, நன்று!
நீக்குவெங்கட் நாகராஜ்- ஆதி வெங்கட் தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குதிரு & திருமதி வெங்கட் நாகராஜ் தம்பதியருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள் - Many, many happy returns of the day !
நீக்குநன்றி ஏகாந்தன் சார்.
நீக்குவெங்கட்-ஆதி, செல்லப்பா சார்--அவர் மனைவி, ரஞ்சனி-நாராயணன் ஆகியோர் அனைவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். பூரண ஆரோக்கியத்துடன் திகழப் பிரார்த்தனைகள்.
நீக்குதிரு செல்லப்பா அவர்களின் வாட்ஸ்அப் செய்தி பார்த்து விட்டு நான் நேற்று எங்கள் 46 வது மணநாள் என்று எழுதி இருந்தேன். வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குநன்றி டிடி !
நீக்குஅழகான படங்கள். மழை நேரப் பயணம் என்றுமே பிடித்தது. மழை நேர மண்வாசம் மனதை மயக்கும் வாசம்.
பதிலளிநீக்குமஞ்சள் வண்ணத்திற்கான காரணம் - ஏற்கனவே சொல்லி விட்டார்கள்! கில்லர்ஜி சொன்ன பதில் - :)))
நன்றி! ஹா ஹா !! கில்லர்
நீக்குபடங்கள் அழகு. இங்கு வேறு சிலி சிலுவென்று காற்று வீசுகிறதா? படங்களைப்பார்க்கும் பொழுது அங்கயே சென்று விட்டோமோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆதி, வெங்கட்டிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இறை அருளோடு இந்த நாள் மீண்டும் மீண்டும் வர வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குமண நாள் :) வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.
நீக்குகர்னாடகாவில் கேமராவுக்கு நிறைய வேலை!
பதிலளிநீக்குஆம்.
நீக்குபெரிசாய் தோற்றமளித்த எங்கள் பிளாக் ஏதோ கைக்குள் அடக்கிய சைஸூக்குள் வந்து விட்டதாக உணர்வு.
பதிலளிநீக்குஇன்னமும் மாற்றமும் வர வேண்டும்... அதை கௌதமன் ஐயா செய்வார் என்று நம்புகிறேன்.. நன்றி...
நீக்குஅப்படியா?.. காத்திருப்போம்.
நீக்குநேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக செய்யவேண்டும். முயற்சி செய்கிறேன்.
நீக்குமுசாஃபுரி பங்களா?.. எந்த காலத்து பெயர்?
பதிலளிநீக்குமழை தான் இந்தப் பகுதி ஹீரோ போலிருக்கு.
ஹீரோவின் தெளிவான பிரசன்னம்.
ஹா ஹா.
நீக்குபழங்களில் முக்கணி போல பதிவுலகில் மூன்று திருமண நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசெல்லப்பா - விஜயலட்சுமி, நாராயணன் - ரஞ்சனி, வெங்கட் - ஆதி
தம்பதியருக்கு திருமண் நன்னாள் வாழ்த்துக்கள்! எல்லா நலன்களும் பெற்று
வாழ்வீராக!..
படங்களும் அதற்கு கொடுக்கப்பட்ட வாசகங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குமெளனமாக நீண்டு நெளிந்து செல்லும் சாலை அழகு.
மழை நேர பயணம் அருமை.
இன்று திருமணநாள் கொண்டாடும் மூன்று தம்பதியர்களுக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
செய்தி சொன்ன ஜீவி சாருக்கு நன்றி.
நீக்குதிருமண நாள் காணும் மூன்று தம்பதியருக்கும்
மனம் நிறை வாழ்த்துகள்.
புதிய வடிவு நல்லா இருக்கு. படங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகெளதமன்ஜி! நிலா பத்திரிகைக்கு முகப்பு அட்டை வேண்டும். (அந்தக் கதையில் போட்டிருந்தீர்களே, அந்த மாதிரி) மதி -- ஒளி என்று இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். மதி (மாதங்களையும்) ஒளி (இதழ்களையும்) குறிக்கும். பத்திரிகைக்கான சின்னம் (லோகோ) ஏற்கனவே வரைந்தது தான். ஒவ்வொரு இதழுக்கும் முகப்பு அட்டைப்படம் மாற்ற முடியுமானால் நினைத்தாலே நிலா
பதிலளிநீக்குகுளுகுளுவென்று இருக்கிறது!...
ஒவ்வொரு விஷயமாக கொண்டுவர முயற்சி செய்கிறேன். நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்கு"சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ '...
பதிலளிநீக்குதிருமணநாள் கொண்டாடும் மூன்று தம்பதிகளுக்கும் வாழ்த்துகள்.