செவ்வாய், 26 மே, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ



ரேடியோ பெட்டி






துரை செல்வராஜூ 
==============

" ஜோதி.. ஜோதீ!... "


" என்னம்மா!..    இதோ வந்துட்டேன்!... "

குரல் அருகாமையில் கேட்பது போலிருந்தாலும் உண்மையில் அடுத்த வீட்டு முற்றத்திலிருந்து கேட்கிறது....

பழங்காலத்து மச்சு வீடு..  வீட்டின் நடுவே முற்றம்.. சுற்றி வர உள் நாழி..

இந்த வீட்டின் கீழண்டையில் எப்படி அறைகள் இருக்கின்றனவோ அதேமாதிரி அந்த வீட்டின் மேலண்டைப் புறம் அறைகள்...

மொட்டை மாடியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சமச்சீராக ஒவ்வொரு அறை...

இந்த வீட்டின் உள்ளிருந்து படிகளில் ஏறினால் மொட்டை மாடியில் நடந்து அந்த வீட்டின் உள்ளே இறங்கி விடலாம்...

இரு குடும்பங்களும் ராசியாக இருப்பதனால் மேல் மாடியில் தடுப்பு கட்டப்படவில்லை...

கூட்டுக் குடும்பம் இருந்த வீடு ஏதோ ஒரு காலத்தில் இரு கூறாக கிரயம் ஆகி - இப்போது தனித்தனியாக... வேறு வேறு பட்டா பாத்திய அனுபோகங்களில்...

இருந்தாலும் முற்றத்தின் அந்தப் பக்கத்திலிருந்து அவ்வப்போது
"விசாலம் ... வத்தக் குழம்பு தாளிக்கிறயா!... -" என்று கேள்வி வரும்...

" ஆமா... நீலாம்மா!... பாப்பாக் கிட்ட கிண்ணம் கொடுத்து விடுங்க!... "
- என்று இங்கிருந்து பதில் போகும்...

பாப்பா..ன்னு சொல்றது சும்மா ஒரு பேச்சுக்குத்தான்...
பதினேழு முடிஞ்சி பதினெட்டு நடக்குது... பேரு நீலா - நீலாம்பிகா...

அந்த மாதிரி இந்தப் பக்கத்திலயும் அதே வயசுல ஒரு பாப்பா...
ஒருத்திக்கு ஒருத்தி ரெண்டு மாச வித்தியாசம்... அவ்வளவு தான்!..

பேரு!?..

முதல் வரியில வாசிச்சிருப்பீங்களே!... அதான்...

சில விநாடிகளில் கொலுசுகள் சிலுங்... சிலுங்.. என்று ஒலிக்க
தாவணித் தாமரையாய் ஓடி வந்தாள் ஜோதி...





" வெளக்கு வைக்கிற நேரத்தில வீட்டுல இல்லாம!.. ".
- துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த மகளை விசாலம் எதிர்கொண்டாள்...

ஜோதி பக்கத்து வீட்டில் நீலாவுடன் பேசிக்கொண்டிருந்தது விசாலத்துக்குத் தெரியும்...

இருந்தாலும் இந்த விசாரணை சும்மா ஒப்புக்கு!...

" அஞ்சு மணி தானம்மா ஆகுது!... "  - ஜடைகள் ரெண்டும் இப்படியும் அப்படியுமாக ஆடின...

" அதுக்காக... வயசுப் பையன் இருக்குற வீட்டுல என்ன ஜோலி?..
கையைக் காலைக் கழுவிட்டு வாசல்ல தண்ணி தெளிச்சு ஒரு கோலத்தைப் போடலாம்!... மாடத்து விளக்கை எடுத்து விளக்கி மஞ்ச குங்குமம் வைக்கலாம்!.. நாளைக்கு ஒரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணுக்கு இதெல்லாம் தினப்படி சொல்லியாத் தரணும்?... "

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஒன்றைச் சொல்ல நினைத்தாள் ஜோதி ..  ஆனால் - சொல்வதற்கு வாய் வரவில்லை...

" நீலாவோட அண்ணன் திருச்சியில இருந்து ரேடியோ வாங்கியாந்துருக்காங்க...   அதைப் பார்க்கத்தான் போனேன்...
நான் ஒன்னும் நானாப் போகலை... நீலா தான் கூப்பிட்டா!... "

மகளின் வார்த்தைகளைக் கேட்டதும் தாயின் மனம் தவித்தது -  ஒன்றைக்
கேட்பதற்கு... ஆனால் கேட்கவில்லை... இருந்தாலும் -

" ஏன் நீ ரேடியோ பார்த்ததில்லையா?.. " - என்றாள்..

" இது புது மாடலா இருக்கும்மா... டிரான்சிஸ்டர்..ன்னு சொல்றாங்க...
பேட்டரி கட்டை போடறது... கரண்டு தேவையில்லையாம்!... "

" ஆமா.. கரண்டுக்குப் பதிலாத் தான் பேட்டரிக் கட்டை போடுறோமில்லே!..  பாடத் தானே வேணும்!...  காலம் போற போக்குல கரண்டு கம்பிய விட்டா படம் காட்டுற பொட்டி தான் இன்னும் வரலே!... "

" கவலப்படாதேம்மா.. அதுவும் கொஞ்ச நாள்.. ல வந்துடும்... "

சிரித்தாள் ஜோதி...

" நானும் உங்கப்பாக் கிட்டே சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்....
ஒரு ரேடியோப் பொட்டி வாங்கி வைங்க...ன்னு..  அது எதுக்கு வெட்டிச் செலவு.. ..ன்னு கேக்க மாட்டேங்கிறாங்க... "

" லைசென்ஸ்.. எல்லாம் எடுக்கணுமாமே... லைசென்ஸ் பணம் கட்டலே.. ன்னா புடுங்கிக்கிட்டுப் போய்டுவாங்களாமே!... "

" ஆமா... அப்படித்தான் .. போஸ்ட்டாபீஸ்... க்குப் போயி பணம் கட்டணும்!... "

அப்படி இப்படி விசாரணை முடிவில் உடனடியாகத் தண்டனை...

" அது கெடந்துட்டுப் போவுது..  நாஞ் சொன்ன வேலையைப் பாரு...
மணி அஞ்சரை ஆச்சு... இன்னிக்கு வெள்ளிக்கிழமை... சாம்பிராணி போடணும்..  தூபக்கால்...ல கரியைப் போட்டு நெருப்பு உண்டாக்கு... "

" சரிம்மா!... " - என்றபடி பாவாடையைத் தூக்கிச் செருகிக் கொண்டு
வாசலைக் கூட்டுதற்கு ஆயத்தமானாள் ஜோதி...

தண்ணீர் வாளியுடன் வெளியே சென்ற ஜோதி திடீரென சப்தம் போட்டாள்..

" அம்மா.. அம்மா!.. இங்கே வாயேன்!... "

என்னவோ ஏதோ என்று அதிர்ச்சியுடன் வாசலுக்கு விரைந்தோடினாள் விசாலம்..

வலக் கையில் ஒரு அட்டைப்பெட்டி.. இடது தோளில் தொங்கு பை..
முக மலர்ச்சியுடன் நின்றிருந்தான் - அருண்..

விசாலம் குருசாமி தம்பதியினருக்கு முதற்பிள்ளை - அருண் ..  ஏரல் சேர்மன் ஸ்வாமிகளிடம் மடியேந்தி பெற்ற பிள்ளை.. அதனாலேயே அருணாசலம் என்று பெயர்..

அருண் - அருணாசலத்தைக் கண்டதும் விசாலத்துக்கு திக்கென்றது...

" என்னய்யா!... ஒரு வார்த்தை கூட எழுதிப் போடாம வந்து நிக்கிறே!... "

அண்ணனின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டு
அவன் மீது சாய்ந்து கொண்டாள் ஜோதி...

" திடீர்..ன்னு லீவு விட்டுட்டாங்க...ம்மா!... " - என்றான் அருண்..

" கடையில அப்பாவை பார்த்துட்டு தானே வர்றே!.. "

பஸ்டாண்டிலிருந்து கடைத்தெரு வழியாகத் தான் வீட்டுக்கு வரவேண்டும்...

பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்துக் கடை..

வள்ளியம்மாள் வெல்ல மண்டி.. விசாலத்தின் மாமியார் பெயர்...

நாற்பது வருசத்துக் கடை.. வெல்லம் சர்க்கரை மொத்த வியாபாரம்...
தை மாசிக்குப் பிறகு உளுந்து பயறு நிலக்கடலை வியாபாரமும் உண்டு

" ஆமா... கடைக்குத் தான் போனேன்... அப்பா கடையில இல்லை!... "

"எங்கே போனாங்களாம்?... "

கரும்பு சாகுபடிக்காரங்களுக்கு பணம் கொடுக்கப் போயிருக்காங்களாம்.. கணக்கப் பிள்ளை சொன்னார்...

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தப் பக்கத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நம்பிக்கையின் பேரில் வெல்ல மண்டி வியாபாரிகளே ஆயிரம் ரெண்டாயிரம் என்று முன்பணம் கொடுத்து விடுவார்கள்...

ஆங்காங்கே திருப்பனந்தாள், சோழபுரம், கருப்பூர் - என்று
கருப்பங் கொல்லைகளிலேயே ஆலை போட்டு கரும்பைப் பிழிந்து காய்ச்சி சர்க்கரை வெல்லம் என்று பார வண்டிகளில் ஏற்றி வந்து மண்டிகளில் சேர்த்து விட்டு மார்க்கெட் நிலவரப்படி மீதி பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்...

ஆனால் சாகுபடிக்காரர்களை அலைய விடக்கூடாது என்று
ஐயாவிடம் பால பாடம் படித்து விட்டு கடையில் அமர்ந்து இருப்பதால்
விவசாயிகளின் வீடு தேடிச் சென்று பணத்தைக் கொடுத்து நேர் செய்து விடுவார் - குருசாமி.

அந்த வெள்ளந்தி மக்களும் தஞ்சாவூர்..ல இருந்து அண்ணாச்சி ரொக்கம் கொண்டாந்து இருக்காங்க!.. -  என்று கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டு உபசரிப்பதும் அண்ணன் தங்கையாக உறவு கொண்டாடுவதும்...

கருப்பஞ்சாறு, வெல்லப்பாகு - இதெல்லாம் மகிழ்வோடு கொடுத்து
புள்ளைகளுக்குக் கொடுங்க!.. - என்று புன்னகைப்பதும்...

இந்த சந்தோஷத்துக்காகவே அவர்களைத் தேடிச் செல்வார் குருசாமி...

" சரி.. சரி... உள்ளே வா!... "

பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டினுள் ஓடிய ஜோதி அதை கூடத்தில்
சாமி மாடத்தின் கீழ் வைத்து விட்டு வாசலுக்கு ஓடி வந்தாள்...

வாசலில் தூசி அடங்கத் தண்ணீர் தெளித்தாள்...  இரட்டை இழையாய் நட்சத்திரக் கோலம் போட்டாள்...

மார்கழி இருபத்தைஞ்சாச்சு.. பொங்கலுக்கு இன்னும் அஞ்சு நாள் தான்...

நாளைக்குக் காலைல... சங்குக் கோலம் போடணும்..  மனதில் நினைத்துக் கொண்டாள்...

கோல மாவு கிண்ணத்தை நிலை மாடத்தினுள் வைத்து விட்டு
வீட்டுக்குள் ஓடினாள்...

" அண்ணே!.. என்ன... ண்ணே இளைச்சு போயிருக்கீங்க!... "

" ஒழுங்கா நேரா நேரத்துக்கு திங்கணும்.. தூங்கணும்!...  அது ரெண்டுந்தான் கிடையாதே.... ஹாஸ்டல் விட்டா காலேஜ்..  காலேஜ் விட்டா ஹாஸ்டல்... ரெண்டும் விட்டா சினிமாக் கொட்டாய்... "

" இதெல்லாம் இங்கே வந்து யாரு சொன்னது?... " - அதிர்ந்தான் அருண்..

" ஆளுங்க வேற வந்து சொல்லணுமாக்கும்... " - விசாலம் சிரித்தாள்..

அடுத்த வீட்டு கார்த்தி காலையில கிளம்பினானே!...  அவனோட வேலையாத் தான் இருக்கும்!... - என்றபடி அருண் யோசித்தான்..

" அந்தப் பையன் மத்தியானமா வந்திருக்கான்... நான் இன்னும் போய்
பார்க்கவும் இல்லை.. என்னா.. ஏதுன்னு.. கேக்கவும் இல்லை... அந்தப் பையன் தங்கமான புள்ளை!... "

அவசரமாக பதிலுரைத்தாள் விசாலம்...

" அப்போ நான் மட்டும் தங்கம் இல்லையா?.. "

அருணாசலத்தின் குரலில் ஏக்கம்...

" என் ராசா!...உனக்கு என்னய்யா குறை?... நீயும் தங்கம் தான்!...  அம்மா உன்னைய விட்டுக் கொடுப்பேனா!...  ஏரல்.. சேர்மன் சாமிகளோட வரமல்லோ நீ!...  அதனால தானே அவுக பேரை வச்சு அருண்...ன்னு கூப்புடுறோம்!... "

அதற்குள் கையில் காபி குவளைகளுடன் வந்தாள் ஜோதி...

" நான் யார் கொடுத்த வரமாம்!... " - ஜோதி ஆவலுடன் பரபரத்தாள்...

" நீ எங்க நாச்சியா கொடுத்த வரம்... அதனால தான் ஜோதி.... ன்னு பேரு!... "

" அது ஏம்மா.. அங்கே சிவகாசியில... அடுக்கு விளக்கு அண்ணாமலையார்..  பெரிய குத்து விளக்கு உண்ணாமலையாள்.. ந்னு இருக்கு?... "

" உண்ணாமலையாள் இல்லேடா செல்லம்!... உண்ணாமுலையாள்...
குலதெய்வத்தோட பேரைச் சரியாச் சொல்லணும்.. எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு... "

விழிகள் மலர தலையை ஆட்டினாள் ஜோதி...

" விளக்கு தானேம்மா ஆதி வழிபாடு.. அதுவும் இல்லாம முப்பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் முந்தி அவுக எல்லாம் குடும்பம் நடத்துன வீடு அம்மா அது..  அது கோயிலான குடும்பம்!... எந்தக் காலத்திலயோ ஏத்தி வச்ச விளக்கு...  இன்னைக்கும் சுடர் விட்டுக்கிட்டு இருக்கு... அண்ணாமலையாரே!... "

கன்னத்தில் போட்டுக் கொண்டு கை கூப்பினாள் விசாலம்...

" சரி.. சரி.. ஜோதி.. இங்கே வா... உட்கார்... கண்ணை மூடு!... "  - என்றான் அருண்...

" என்னப்பா.. வாங்கி வந்திருக்கே திருச்சியில இருந்து?... "

விசாலத்துக்கு ஆவல்...

" சாண்டக்ஸ் ஷூ கேட்டிருந்தேன்.. அதுவா இருக்கும்... " - என்றாள் ஜோதி...

" ஏன்?... தஞ்சாவூர்ல.. இல்லே...ன்னா!... "

" சும்மா சொல்லிக்கலாமில்லே.... திருச்சியில வாங்குனது..ன்னு!... "

" சரி.. சரி... கண்ணை மூடிக்கோ!... "

" ம்ம்!... " -  கண்களை இறுக மூடிக்கொண்ட பாவனையுடன் எதிரில் அமர்ந்தாள் ஜோதி...

சரசர.. - என்ற சத்தத்துடன் பெட்டியைப் பிரித்தான் அருண்...

ஆவல் தாங்கமாட்டாமல் கண்களைத் திறந்த ஜோதி ஆனந்தக் கூச்சலிட்டாள்..

அருணின் கைகளில் புத்தம் புதிய டிரான்சிஸ்டர்...
                 
   
சின்னச் சின்ன திருகுகள்.. பொன் வண்ணக் குமிழ்கள்...  அலை வரிசையைக் காட்டுவதற்கு பச்சை நிற முள்...

ஒரு ஓரத்தில் அழகோடு அழகாக வாயில் விரலை வைத்துக்
கொண்டிருக்கும் குழந்தையின் உருவம்...

அந்த ரேடியோவைக் கண்டு குழந்தையாகக் குதுகலித்துச் சிரித்தாள் ஜோதி...

அதைக் கண்ட விசாலத்துக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சிதான்..

ஆனாலும் சந்தேகம்...  ரேடியோ எல்லாம் வாங்குற அளவுக்கு அருண்கிட்ட ஏது பணம்?...  அந்த அளவுக்குப் பணம் எல்லாம் அனுப்பி வைக்க மாட்டாரே!..

மனதில் எழுந்த சந்தேகத்தை உடனடியாகக் கேட்டும் விட்டாள்...

" காலெஜ் கிரவுண்ட்... ல பொருட்காட்சி போட்டுருந்தாங்க..ம்மா...
தலைக்கு அஞ்சு ரூபாய் டிக்கெட்... முதல் நாள் வர்றவங்களுக்கு அதிர்ஷ்ட
குலுக்கல்..ன்னு சொல்லி அஞ்சு பேருக்கு முதல் பரிசு இந்த மாதிரி ரேடியோ..  அஞ்சு பேருக்கு அலாரம் டைம்பீஸ்.. பத்து பேருக்கு பிக்னிக் பேக்... "

" ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு வந்தாங்க...  நான் வாங்குன சீட்டுக்கு முதல் பரிசு ரேடியோ!.. "

அருண் சொல்லி முடித்தான்...

" என்னமோ நானும் சொல்லிக்கிட்டு தான் இருந்தேன்...
வெள்ளிக்கிழமை அதுவுமா... வீட்டுக்கு ரேடியோ வந்துருக்கு!.. "

விளக்கு மாடத்தைப் பார்த்து கைகூப்பிக் கொண்டாள் விசாலம்...

சற்றைக்கெல்லாம் வீடு முழுதும் சாம்பிராணிப் புகை பரவி நிற்க
வாசலில் சைக்கிள் சத்தம் கேட்டது...

" அப்பா... வந்துட்டாங்க... " - அருண் எழுந்தோடினான்...

வாசலில் அப்பாவுக்கும் மகனுக்கும் பேச்சு தொடர்ந்தது...

" நாகூர் பாசஞ்சர்..ல வந்தியா!... லெட்டர் போட்டிருக்கலாமில்லே!... "

" எதிர்பார்த்தது தான் லீவு ... ஆனா திடீர்..ன்னு சொல்லிட்டாங்க... "

அப்பாவின் சைக்கிள் கேரியரில் இருந்த அந்தப் பெட்டியைக் கண்ட அருணுக்கு சந்தோஷ அதிர்ச்சி...

" அப்பா... இது!... "

உதடுகளைக் குவித்து விரலை வைத்துக் காட்டிய குருசாமி...

" ஜாக்ரதையா பெட்டிய எடுத்துக்கிட்டு வா!... " - என்றார்...

" ஜோதீ!... ஜோதிக் கண்ணு!... "  - செல்லமாக அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய

அப்பாவையும் அண்ணனையும் எதிர் கொண்ட ஜோதி மறுபடியும் கத்தினாள்...

" அம்மா... அம்மா!... இங்கே வாயேன்... இன்னொரு விருந்தாளி!...
 "
சமையற் கட்டிலிருந்து கூடத்துக்கு வந்த விசாலம் திகைத்து நின்றாள் -
வீட்டுக்கு வந்திருக்கும் இன்னொரு ரேடியோவைக் கண்டு...

கூடத்தில் மெதுவாக சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் குருசாமி...

முழங்கால்களில் வலி... அது குளிர் காலத்தில் கொஞ்சம் அதிகம்...

அவர் அருகில் அமர்ந்து கால்களைத் தன் மடியில் வைத்துக் கொண்டு
தைலத்தைத் தடவியபடி மெதுவாக அமுக்கி விட்டாள் ஜோதி...

அருண் கொண்டு வந்திருந்த ரேடியோவின் புராணம் விலாவாரியாகச் சொல்லப்பட்டது..

கேட்டுக் கொண்டிருந்த குருசாமி அமைதியாகச் சொன்னார் -  " சரி.. சரி... ஒரு ரேடியோவை ஜோதிக்கு சீதனமாக் கொடுத்துடுவோம்!... "

" ஏற்கனவே அங்கே ஒன்னு இருக்கு!.. " என்றாள் விசாலம்...

"என்ன லே... சொல்லுறே!.. " - குருசாமிக்கு வியப்பு...

" இங்கேயும் ஒரு ரேடியோ பொட்டி சீதனமா வரப் போவுதில்லா!... "

" நீ சொல்றது எதுவும் எனக்கு வெளங்லையே!... "

" இதையெல்லாம் எடுத்துப் பாருங்க... நல்லாவே வெளங்கும்!... "

நாலைந்து பொங்கல் வாழ்த்து மடல்களை எடுத்து வந்து நீட்டினாள்...

வாழ்த்து மடல்களில் சிவகாசி லித்தோ வாசம் ஒட்டிக் கிடக்க அதையும் மீறியதாக அன்பின் நறுமணம் விரவியிருந்தது

வண்ண மயமான வாழ்த்து மடல்கள்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

சுட்டும் விழிச்சுடரே ஜோதி!..  கண் விழிக்குள் கார்த்தி!...

அன்பின் வடிவே அருண்!..  நெஞ்சமெல்லாம் நீலா!... - என்றெல்லாம் காவியங்கள்...

" இதே மாதிரி இங்கேயிருந்தும் அங்கே ஆறேழு பறந்துருக்கு!...  பசங்க ரெண்டு பேரும் ஒருத்தனுக்கொருத்தன் மச்சான்... மச்சான்...னு
பேசிக்குவானுங்க... சந்தேகப்பட்டேன்... சரியாயிடுச்சு! "

- என்றபடி மகனையும் மகளையும் பார்த்தாள் விசாலம்...

அருணின் முகத்தில் கலவரம்...

ஆனாலும் -

கால்களை அழுத்தி விட்டுக் கொண்டிருந்த -  மகளின் கூந்தலை வருடியவாறு புன்னகைத்தார் குருசாமி..

அகன்ற நெற்றியில் சில சுருக்கங்கள் தோன்றி மறைந்தன...

" அவரு ரொம்பவும் நல்ல மனுசன்.. முனுசிபாலிட்டி ஆபீசர்... .  ரெண்டு மூணு தடவை கடைக்கு செக்கிங்... அது... இது... ன்னு வந்திருக்காரு... இப்படி இருக்கறப்போ... இது வேறயா!... "

" பஜார்...ல மத்த கடைக்காரங்க ஒரு மாதிரியா பேசுவாங்களே!...
அது கெடக்குது!.. அவுங்க பேசுனா பேசிட்டுப் போவட்டும்!..  நாம நம்ம சோலியப் பார்ப்போம்... தை பொறந்ததும் போய்ப் பேசுவோம்!...
என்னடா செல்லம்!.."

குருசாமியின் வார்த்தைகளில் கனிவும் பாசமும் ததும்பியிருந்தன... ...

தகப்பனின் முழங்காலில் முகம் பதித்துக் கொண்டாள் ஜோதி...


===========================

118 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது கதையைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அன்பின் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

      நீக்கு
    2. நல்ல கதையை வாசகர்களுக்கு அளித்த உங்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. கதைக்களம் காண வரும்
    அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்புகள்.  ரேடியோ பொட்டியில் பாட்டு கேட்டுக்கொண்டே பேசலாம்!

      நீக்கு
    2. பாட்டு கேட்டுக்கொண்டே
      கதை படிக்கலாம்,
      கருத்தும் சொல்லலாம்!

      நீக்கு
  5. கதைக்கு எழிலூட்டும் எங்கோ(!)
    வாழ்க.. வாழ்க!..

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கதைக்கென மர்பி செட் படம் ஒன்றை வைத்திருந்தேன்....

    பல பிரச்னைகள்.. அனுப்புவதற்கு மறந்து போனது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ! நான் போடோஷாப் வேலை எல்லாம் செய்து இந்தப் படத்தை உருவாக்க வேண்டியதா போயிடுச்சு!

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கவும், பெருகி வரும் கொரோனா தன் தாக்கத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளவும் பிரார்த்திப்போம். விரைவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துச் செயல்பாட்டில் வரவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரும்பு விளைந்து வெல்லப்பாகாய்த் தேனாய் அருண நீலாவுக்கும்
      ஜோதி கார்த்திக் ஜோடிக்கும் தை நடக்கப் போகும் திருமணத்துக்கு நாங்கள் தயார்.

      துரை கதை என்றால் கேட்க உள்ளம் நிறைந்து
      ஏற்கின்றது. நன்றி ஸ்ரீராம். வாழ்த்துகள் துரை.

      நீக்கு
    2. 'ஜோதி'காவை 'சூர்யா'வுடன் சேர்க்காமல், 'கார்த்தி'யுடன் சேர்த்து வைத்த கதாசிரியர் விஷமக்காரர் போலிருக்கு!

      நீக்கு
    3. >>> அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.<<<

      அக்கா அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
    4. >>> கரும்பு விளைந்து வெல்லப்பாகாய்த் தேனாய் அருண நீலாவுக்கும்
      ஜோதி கார்த்திக் ஜோடிக்கும் தை நடக்கப் போகும் திருமணத்துக்கு நாங்கள் தயார்.<<<

      வல்லியம்மா அவர்களின் அன்பான கருத்துரைக்குமகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    5. >>> ஜோதி'காவை 'சூர்யா'வுடன் சேர்க்காமல், 'கார்த்தி'யுடன் சேர்த்து வைத்த கதாசிரியர் ...<<<<

      ஜோதிகாவு எல்லாம் இல்லை... ஜோதி... ஜோதி தான்!..

      மற்றபடிக்கு படிப்பு பரிட்சை எல்லாவற்றையும் மனதில் கொண்டு இப்போது போல் தூர இருந்தே பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற அன்பான கண்டிப்புடன் இரு குடும்பத்தினரும் ஏகோபித்த மனதுடன் ஆவணியில் முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள்...

      இடையில் வரப்போகும் மருகமளுக்கு ஜடையில் பூ தைத்துப் பார்க்க வேண்டும் என மாமியார்கள் ஆசைப்பட்டால் யாதொரு ஆட்சேபணையும் இல்லை..

      நீக்கு
    6. திருமணப் பத்திரிகை எங்களுக்கும் அனுப்பச் சொல்லுங்க!

      நீக்கு
  8. அன்பு துரையின் வானொலிபெட்டியின் கான மழையில் நனைந்து கொன்டே
    அன்பு காலை வணக்கம்.

    அழகான பண்பான குடும்பங்கள்.
    ஒன்றிய உறவுகள்.

    இசையும், கரும்பின் இனிப்பும்,
    வெல்லம் வழி வரும் கனிந்த பேச்சுகளும்
    மிக மிக இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வல்லியம்மா
      >>> வானொலிப்பெட்டியின் கான மழையில் நனைந்து கொன்டே...<<<

      அப்படியொரு வாழ்வு இனியும் கிடைக்குமோ!...

      நீக்கு
    2. இன்றும் வானொலி கிடைக்கிறதுமா துரை. விலைதான் அதிகம்.

      நீக்கு
  9. ஆமாம், இல்ல? அப்போதெல்லாம் ரேடியோவுக்கு உரிமம், சைகிளுக்கு உரிமம் என்றிருந்தது. பின்னால் அதை நீக்கினார்கள். இருந்தாலும் எங்க வீட்டில் பெரிய ரேடியோவும் இருந்ததில்லை. அறுபதுகளில் அண்ணா வேலைக்குப் போனதும் வாங்கிய முதல் டிரான்சிஸ்டர் ரேடியோவை ஹோசூருக்குப் போயிருக்கும்போது பாட்டுப் போட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பேன். பின்னால் அண்ணா அதை என்னை எடுத்துப்போகும்படி சொல்லி இருந்தார். அதற்கான பாட்டரி என் மாமா போட்டுத் தருவார். பாட்டரி மாற்றும்போதெல்லாம் டிவிஎஸ் நகருக்கு மாமா வீட்டுக்கு ரயில்வே லைன் ஓரமாக நடந்தே போவேன். மாமா மத்தியானம் சாப்பிட வரும்போது காத்திருந்து பாட்டரி போட்டுக் கொண்டு திரும்பும்போது மாமா பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அனுப்புவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சலகம் சென்று புதுப்பிக்க வேண்டும்... வானொலி நிகழ்ச்சிகள் குறித்து புத்தகம் கூட மாதாமாதம் வெளியாகும்...

      அன்பான மலரும் நினைவுகள்... மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. 'வானொலி' மாதம் இருமுறை வெளியான பத்திரிகை. வாங்கி, முன்பாகவே, அதில் வரப்போகும் முக்கிய நிகழ்ச்சிகளை, அடிக்கோடிட்டு, மார்க் செய்து வைப்போம். அந்த நாளில், அந்த நேரத்தில், மறக்காமல் கேட்டு ரசிப்போம்.

      நீக்கு
    3. ஓ!..
      'வானொலி' மாதம் இருமுறை வெளியான பத்திரிகை...

      அப்படியா ... தகவலுக்கு நன்றி..

      நீக்கு
  10. இரு மனங்களும் ஒருங்கிணைந்தால் அங்கே ஏது சச்சரவு? அன்புக்குக் குறைவில்லை. துரையைப் போலவே துரையின் கதை மாந்தர்களும் அன்பு ஊற்றாகவே அமைகின்றனர். ஆகவே இரு ஜோடிகளும் விரைவில் ஒருவருக்கு ஒருவர் இணையப் போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பது மனதில் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. அருமையான கதைக்களம். சுருக்கமான கதைப் பகுதி. தேவையான உரையாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> கதை மாந்தர்களும் அன்பு ஊற்றாகவே அமைகின்றனர். ..<<<

      நிகரற்ற அன்புதான் நிமிர்ந்து நிற்கும் மலைகளை வளைக்கின்றன...

      பொங்கல் வாழ்த்து மடல்களில் அன்பைப் பரிமாறிக் கொண்ட நாட்கள் தான் எத்தனை இனிமையானவை...

      நீக்கு
    2. உண்மைதான். எனக்கு வந்த முதல் பொங்கல் வாழ்த்து, நான் நான்காம் வகுப்புப் படித்தபோது வந்தது. என் வகுப்பு நண்பன் ராமன், என்னை போகிப் பண்டிகை அன்று தேடி வந்து, வாழ்த்தை என் கையில் கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடிப்போய்விட்டான். என்னுடைய அண்ணன் kayjeeதான் அது என்ன என்பாதை எனக்கு விளக்கிக் கூறினார்!

      நீக்கு
    3. எனக்கும் பொங்கல் வாழ்த்து முதல் முதல் வந்தது என் பெரியம்மா பெண், கடைசிச் சித்தி, மாமா பெண் ஆகியோர் இணைந்து வாங்கிக் கையெழுத்திட்டு அனுப்பியது. இத்தனைக்கும் அவங்க இருந்தது மதுரை ஜெய்ஹிந்த்புரம், நாங்க இருந்தது மேலாவணி மூலவீதி. தபால்காரர் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு வாழ்த்துமடலைக் கையில் கொடுத்ததும் விண்ணில் பறந்தேன். நானும் அவர்களுக்குத் தனித்தனியாக வாழ்த்து அட்டை வாங்கி அனுப்பினேன். இதுக்காகவே ஆரத்தியில் தட்டில் விழும் காசுகளை, நவராத்திரிக்கு, தீபாவளிக்குக் கொடுக்கும் காசுகளைச் சேர்த்து வைத்துக் கொள்வேன். அது ஒரு பொற்காலம்.

      நீக்கு
  11. எங்க குட்டிக்குஞ்சுலுவை நான் "மர்பி பாப்பா" என்றே சொல்லுவேன். இப்போது ரொம்பவே இளைத்துவிட்டாள். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாளா நீங்க சொல்லும் கு.கு ஆ.கு வா அல்லது பெ.கு வா என்று எனக்கு சந்தேகம் இருந்து வந்தது. இன்றுதான் அந்த சந்தேகம் நீங்கியது.

      நீக்கு
    2. ஹெஹெ எழுதினதும் நானே நினைச்சேன். இளைத்து விட்டது!" என எழுதாமல் இப்படி எழுதிட்டோமேனு! ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம்னா கருத்துப் பெட்டியில் எடிட் பண்ண வசதி இல்லை. அதான் தெரிஞ்சு போச்சு உங்களுக்கு! இஃகி,இஃகி,இஃகி, ஆனால் என்னோட வலைப்பக்கம் வந்திருந்தீங்கன்னா கு.கு.வின் பெயர் "துர்கா" எனத் தெரிந்திருக்கும். கோமதி அரசு எப்போ எழுதினாலும் துர்கா என்றே குறிப்பிடுவார். :))))))))))) கடைசியிலே சஸ்பென்ஸை உடைச்சுட்டேன் போல!

      நீக்கு
    3. இந்த கு.கு. பெ.கு என்று எனக்கு அப்போதே தெரியுமே!...

      நீக்கு
    4. செல்லக் கண்ணம்மா பேருடன் இளைத்து விட்டாள், விளையாடினாள் என்றால்தான் நன்றாக இருக்கிறது. பேத்தியை பார்க்க பாட்டியின் கண்கள் தேடுது , அள்ளி அணைக்க துடிக்கிறது கைகள்.
      துர்கா ஊருக்கு போகும் முன் போய் பார்க்கும் நல்ல நாள் விரைவில் வர வேண்டும்.

      நீக்கு
    5. >>> துர்கா ஊருக்கு போகும் முன் போய் பார்க்கும் நல்ல நாள் விரைவில் வர வேண்டும்.<<<

      இந்த பந்தத்தினாலும் பாசத்தினாலும் தான் எத்தனை எத்தனை சந்தோஷங்களும் சங்கடங்களும்..

      நல்லார் எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றி வையுங்கள் கடவுளே...

      நீக்கு
    6. ஆமாம், குழந்தை ரொம்பவே ஏங்குகிறாள், இரவில் சரியாகத் தூங்குவதும் இல்லை எனப் பையரும் சொன்னார். ரொம்பக் கஷ்டமாகத் தான் இருக்கிறது. எப்போ நிலைமை சரியாகும்னு தெரியலை! ஆனாலும் குழந்தை வலியை அடக்கிக் கொள்வாள். எங்காவது இடித்துக் கொண்டால் கூட முனகல் சப்தம் கூட வராது! அவ அம்மாவுக்குத் தான் பதறும்! அதைப் போல் இப்போ துக்கத்தையும் அடக்கிக் கொள்கிறாள் போல! :(((((

      நீக்கு
    7. நீங்கள் சஸ்பென்ஸை உடைக்காமலேயே எனக்கு நினைவில் இருக்கிறது. நீங்கள் அப்பு என்று குறிப்பிடும் இன்னொரு பேத்தியின் பெயர் அஞ்சலி, சரிதானே? 

      நீக்கு
    8. ஆமாம், அப்பு எங்க பெண்ணின் இரண்டாவது பெண். மூத்தவள் பெயர் பூஜா! இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். :))))) துர்கா பையருக்குத் திருமணம் ஆகிப் பதினோரு வருடங்களுக்குப் பின்னர் தவமாய்த் தவமிருந்து பிறந்த குழந்தை!

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கதை.

    வீடுகளைப் பற்றிய வர்ணனை, கோலம், இயல்பான உரையாடல்கள், அன்பு த்தும்பும் குடும்பங்கள், விவசாயியை மதிக்கும் பாங்கு.... என்ற பழைமையான விஷயங்களே கதையை ரசிக்க வைக்கிறது. துரை செல்வராஜு சாரின் கைவண்ணம் அருமை.

    எனக்கு என்ன சந்தேகம்னா, பொதுவா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதற்கு யோசிப்பாங்க. யாரேனும் ஒருவரிடத்தில் சிக்கல் இருந்தால்தான் இது நடக்கும்.

    இருந்தாலும் சிக்கலில்லாத கதைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...
      தங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி...

      வீண் பூசல்கள் வராது.. ஒற்றுமையாக இருப்பார்கள் - என்பதற்காகவும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கமும் உண்டு..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. எங்கப்பா பிலிப்ஸ் ரேடியோ (1 அடிக்கு 1/2 அடி, 1/4 அடி தடிமன்) ரொம்ப வருஷம் வைத்திருந்தார். அதற்கு லைசென்ஸ் நோட்டு உண்டு. ரேடியோவுக்கு லெதர் கவர் வேறு.

    அதில்தான் இந்திராவின் தேர்தல் தோல்வியைக் கேட்ட நினைவு இருக்கிறது. அப்பாவுக்கு இந்திராவின் தோல்வி கொண்டாட்டமாக இருந்தது.

    இப்போவும் எங்கோ இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் ரேடியோ பெட்டிக்கு அருகில் இருபுறமும் நாய்க்குட்டி பொம்மைகள்.. பிளாஸ்டிக் பூச்செடிகள்.. வெள்ளிக் கிழமைகளில் சந்தனப் பொட்டு எல்லாமே உண்டு..

      நீக்கு
  15. கிராமத்து வீட்டின் வர்ணனையை படித்த பொழுது கிராமத்தில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு சென்று விட்ட உணர்வு.  வழக்கம்போல் சுபமான முடிவு. இனிமையான கதை. நன்றியும் பாராட்டுகளும். //ஜடைகள் இரண்டும் அப்படியும் இப்படியுமாக ஆடின..// ஆஹா! என்ன ரசனை! நிறைய ரசித்திருக்கிறாரோ? ஹாஹா! படம் போட்டவருக்கு ரெட்டை ஜடை பெண் படம் கிடைக்கவில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> ஜடைகள் இரண்டும் அப்படியும் இப்படியுமாக ஆடின..<<<
      ஆஹா! என்ன ரசனை!..

      இனிமையான கதை. நன்றியும் பாராட்டுகளும்..
      தங்கள் அன்பினுக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
    2. ரெட்டை ஜடை பின்னாலே இருக்குங்கோ!

      நீக்கு
    3. நோ சமாளிஃபிகேஷன். ரெட்டை ஜடைக்கு அழகே ஒன்று முன்னாலும், இன்னொன்று பின்னாலும் இருப்பதுதான். 

      நீக்கு
    4. ஹா! இப்படி துரத்தினால் நான் எங்கே ஓடிப்போய் ஒளிந்து!

      நீக்கு
  16. ஒரே வீட்டில் எத்தனை வானொலிப் பெட்டிகள் நல்லதுதான் ஆளுக்கு ஓர் பாட்டு கேட்கலாம்.

    அப்பா சரோஜ் நாராயணசாமியிடம் செய்திகள் கேட்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      >>> ஒரே வீட்டில் எத்தனை வானொலிப் பெட்டிகள் நல்லதுதான் ஆளுக்கு ஓர் பாட்டு கேட்கலாம்..<<<

      அன்றைக்கு இப்படி சந்தைக்கடை மாதிரி சேனல்கள் இல்லையே...
      இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல் வழிந்து கொண்டிருக்கும் போது
      இங்கே திருச்சியில் நம்மூர் பாகவதர் பாடிக் கொண்டிருப்பார்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. அருமை... வானொலிப் பெட்டி பற்றிய இனிய நினைவுகள் வந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அருமையான கதை துரை செல்வராஜ் சார். எல்லோர் காதலும் இவ்வளவு எளிதாய் நிறைவேரினால் சொர்க்கம்தான். கதையிலாவது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      >>>எல்லோர் காதலும் இவ்வளவு எளிதாய் நிறைவேறினால் சொர்க்கம்தான்..<<<

      இங்கே அன்புதான் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது..

      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  19. கதை அருமையாக இருக்கிறது. அந்த காலத்து நினைவுகளை வாசிக்கும் போது மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. .....

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சிகரம் பாரதி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. நல்ல கதை.

    தொடரட்டும் உறவுகள். நட்பு உறவாக மாறுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      சரியாகச் சொன்னீர்கள்...நட்பு தான் இங்கே உறவாக மாறியிருக்கின்றது...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. நிஜத்திலும் இப்படி இருந்தா பரவாயில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் எல்.கே..

      நிஜத்தில் இப்படி நடந்திருக்கின்றது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. சுவையான கதை. இருபது வருடங்களுக்கு முன் இன்று ஸ்மார்ட் ஃபோண் கு பதிலாக எட்டு பேண்டு டொஷிபா டிரான்ஸிஸ்டர் லதான் fm உம் கிரிக்கஎட் காமண்ட்ரியும் கேட்டுட்டு பயநிப்போம். அந்நாட்களுக்கு இக்கதை என்னை கொண்டு சென்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அரவிந்த்..
      தங்கள் வருகைக்கும் மலரும் நினைவுகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் வழிக் கருத்துரை...

      அன்பின் ஜீவி அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. அருமையான அழகான கதை.
    வானொலி காலம் மிக அருமையான காலம்.

    //இரு குடும்பங்களும் ராசியாக இருப்பதனால் மேல் மாடியில் தடுப்பு கட்டப்படவில்லை...//

    "ராசி நல்ல ராசி" பாடல் நினைவுக்கு வருது கதை முழுவதையும் படித்தவுடன்.


    //" அதுக்காக... வயசுப் பையன் இருக்குற வீட்டுல என்ன ஜோலி?//


    அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஒன்றைச் சொல்ல நினைத்தாள் ஜோதி .. ஆனால் - சொல்வதற்கு வாய் வரவில்லை...//

    சொல்ல நினைத்தது தெரிந்து விட்டது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மதுரையில் மேலாவணி மூலவீதியில் இருந்தப்போ ஒண்ணாம் எண் வீட்டு மாடியில் இருந்து மேலக்கோபுர வாசலில் தெருப் பிரியும் வரை உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் மாடியைத் தாண்டியே போய்விடலாம். அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு மாலை வேளையில் அப்படித் தாண்டிக் குதித்துப் போய் விளையாடி இருக்கோம்.

      நீக்கு
  26. //ஏரல்.. சேர்மன் சாமிகளோட வரமல்லோ நீ!... அதனால தானே அவுக பேரை வச்சு அருண்...ன்னு கூப்புடுறோம்!... "//

    ஏரல் சேர்மன் சாமியிடம் வேண்டிதான் என் பெரியமாமா பிறந்ததாக அம்மா சொல்வார்கள். நேர்த்திக்கடனாக தாத்தா கட்டிய பெரியவெண்கலமணி இன்னும் அந்த கோவிலில் இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன் போய் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> ஏரல் சேர்மன் சாமியிடம் வேண்டிதான் என் பெரியமாமா பிறந்ததாக அம்மா சொல்வார்கள். நேர்த்திக்கடனாக தாத்தா கட்டிய பெரிய வெண்கலமணி இன்னும் அந்த கோவிலில் இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன் போய் பார்த்தேன்..<<<

      தங்கள் கருத்துரையைக் கண்டு கண்கள் கலங்கி விட்டன...

      ஏரல் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று நேர்ச்சை இருக்கின்றது..
      ஸ்வாமிகள் விரைவில் அந்தப் பேற்றினை விரைவில் அருள வேண்டும்...

      நீக்கு
    2. சிலிர்ப்பு. சில சமயங்கள் இப்படி அமைந்துவிடும்.

      நீக்கு
  27. மிக அருமையான கதை

    .// தை பொறந்ததும் போய்ப் பேசுவோம்!...
    என்னடா செல்லம்!.."//

    தை பொறந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.
    வாழ்க மணமக்கள்! வாழ்க வளமுடன் !.

    பதிலளிநீக்கு
  28. >>> தை பொறந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.
    வாழ்க மணமக்கள்! வாழ்க வளமுடன் !.. <<<

    ஆவணியில் முகூர்த்தம் வைத்திருப்பதாகக் கேள்வி...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  29. சிவகாசி லித்தோ என்று படித்தவுடன் என் சிறு வயதில் சிவகாசியில் மூன்று வருடம் இருந்த நினைவுகள் வந்து சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பொங்கல் வாழ்த்து மடல்களில் வீசும் லித்தோ வாசமே தனி...

      இன்றையத் தலைமுறையினர் எதை எல்லாம் இழந்திருக்கின்றனர்!...

      நீக்கு
  30. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான கதை. இந்த தடவை கிராமத்தின் மண்வாசனையோடு,வீட்டில் உள்ளோர் மனங்களின் நல்ல எண்ணங்களை கொண்ட நறுமணங்களும் சேர்ந்துள்ளது. அன்பான குடும்பம், பழைய பாரம்பரியங்களை கொஞ்சமும் விடாத செயல் முறைகளுடன், குழந்தைகளுடைய மனதை புரிந்து அவர்களுக்கு அனுசரணையாக பேசும் பெற்றோர் என அழகான கதை. இனி என்ன? தை பிறந்தால் சுலபமான பேச்சுக்கள்தான். மாசியில் மங்களமாய் திருமணங்களில் ஒரு மணமாய் கூடும் இல்லங்கள். படிக்க படிக்க சுவை மிகுந்த இக்கதைகளை எழுதும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.கதை அருமையாக அந்தக்கால ரேடியோவில் நிம்மதியாக கேட்ட பாடல்களைப் போல், மனதிற்கு இதமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      மகிழ்வான பாராட்டுரையும் மலரும் நினைவுகளாகக் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. மிகவும் அருமையான கதை, துரை செல்வராஜு சார். நல்ல முடிவு. வர்ணனைகள், சொல்லிச் சென்ற விதம் எலலமே மிக மிக ரசனையுடன் எழுதுகிறீர்கள் என்பது ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகிறது. பாராட்டுகள், வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்...
      தங்கள் வருகையும் பாராட்டும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  32. அந்த காலத்தில் கஷ்டப்பட்டு ஒரு நேசனல் எக்கோ வாங்கிப் பெருமைப்பட்டுத் திரிந்த நினைவுகளைத் தூண்டிப் போனது இந்தக்கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் முதலில் வந்தது மர்பி..
      அடுத்தது நேஷனல் பானா சோனிக்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  33. துரை அண்ணா ஆஹா அந்த வீட்டு வர்ணனை அப்படியே என் தோழியின் வீடு போல இருக்கு. நாகர்கோவில் பார்வதிபுரம் கிராமத்தில் இருக்கும் தோழி வீடு நீங்கள் சொன்ன அதே வர்ணனை அதுவும் அந்த மொட்டை மாடி. உள் வழி ஏறி மேலே போய் அப்படியே இறங்கி உள்ளே போக வசதி...

    கதை வழக்கம் போல் அருமை. முடிவும் அப்படியே. யோசித்தேன் சரி குளிர்காலம் என்று சொல்லியிருக்கீங்க ..தை மாசம் போயாச்சு இனி எப்போ முகூர்த்தம் வைக்கலாம்? கல்யாணச் சாப்பாடு போட வேண்டுமெ. அதுவும் போன திருமணஞ்சேரி கல்யாணஜோடிக்கும் சேர்த்து போடணுமாக்கும்!!! மூன்று ஜோடியா? இந்த வீட்டிலேயே ரெண்டு ஜோடி...ஆவணியில் முகூர்த்தம் வைச்சுடலாமா?

    தொற்று வேறு படுத்துகிறதே. அதனால் என்ன இருக்கவே இருக்கிறது இப்போ டெக்னாலஜி. பேசாமல் ஒரு வீடியோ லிங்க்க் கொடுத்து எங்கள் எல்லாருக்கும் கல்யாணத்தைப் பார்க்க அரேஞ்ச் செஞ்சுடச் சொல்லிட்டாப் போச்சு என்ன சொல்றீங்க துரை அண்ணா.

    மிகவும் ரசித்தேன் கதையை. ரேடியோ பெட்டி வந்ததும் அதை ஜோதி ஆன் செய்ய

    கல்யாணப்பாடல் ஒலித்திட....அங்கு அப்போதே கல்யாணக் களை கட்டிவிட்டதாமே!

    அண்ணா ஜோ வுக்கு கார்த்தியா!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவணியில முகூர்த்தம் வெச்சிருக்காங்களாம்...

      நம்ம கதைக் களத்துல நோய்த் தொற்று எல்லாம் கெடையாது..

      கல்யாணம் ஏகத்துக்கும் தடபுடல் தெருவை அடைச்சுப் பந்தல்.. ந்னு ஜனங்க பேசிக்குறாங்க...

      நீக்கு
  34. கிராமத்து அன்னியோனியம் கதையில் மிளிர்கிறது. வத்தல் குழம்பு தாளிப்பு கம கமக்கிறது .
    இரண்டு வானொலி பெட்டிகளும் வந்தாகிவிட்டது இனி என்ன இரு வீட்டிலும் கச்சேரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி என்ன இரு வீட்டிலும் கச்சேரி தான்... கச்சேரி தான்!...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  35. .. வெள்ளிக்கிழமை அதுவுமா... வீட்டுக்கு ரேடியோ வந்துருக்கு!//

    தைக்கு வாழ்த்துப்பாட வந்துருச்சு மர்ஃபி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் நல்வாழ்த்துப் பாடட்டும் மர்ஃபி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  36. கதையோட்டத்தினூடே கருப்பூர் என்று படித்ததும் மனம் சற்றே நின்று நடைபோட்டது. என் தாயாரின் சொந்த ஊர், கமலாபுரம் கருப்பூர். போய்வர ஆசை எழுகிறது. அம்மாதான் இல்லை. ஊராவது இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளிடத்தின் தென் கரையான கருப்பூர், சோழபுரம் எல்லாம் கரும்பு சாகுபடிக்கு பிரசித்தமான ஊர்கள்...

      நீக்கு
  37. வீடு குறித்த வர்ணனை அற்புதம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  38. ஆஆஆஆஆஆஅ துரை அண்ணன்.. இது என்ன புது ஸ்டைல்:)) அனைத்தையும் கறுப்பாக்கிட்டார்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நான் தலைமயிரைச் சொல்லல்லே:))

    பதிலளிநீக்கு
  39. // ஜடைகள் ரெண்டும் இப்படியும் அப்படியுமாக ஆடின...//

    படத்தில ஒற்ரைச் ஜடை எல்லோ தெரியுது:) ஜோதியின் படம் போட்டது கெள அண்ணனோ:)).

    முடிவு “சுபம்”.. கதையை ரசிச்சுப் படித்தேன்.. வழமைபோல அழகிய எழுத்து நடை... ஆனா அனைத்துக் கதைகளும், கிட்டத்தட்ட ஒரே பற்றனில் எழுதுவதுபோல இருக்கே துரை அண்ணன், கொஞ்சம் மாறு கோணத்திலும் எழுதுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே தடத்தில் எழுதுவதில்லை..
      இருப்பினும் கவனத்தில் கொள்கிறேன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. Buttonஆ என யோசித்தேன். Pattern... பேட்டர்ன் என்று எழுதிவிட்டால் எல்லோருக்கும் புரிந்துவிடப் போகிறதே என்ற கவலையாயிருக்கும்..க்கும்.

      நீக்கு
    3. ///பேட்டர்ன் என்று எழுதிவிட்டால் எல்லோருக்கும் புரிந்துவிடப் போகிறதே என்ற கவலையாயிருக்கும்..க்கும்////

      https://i.pinimg.com/originals/5c/c4/bd/5cc4bdcb5484e0c79fe51761f9dee3cf.jpg

      நீக்கு
  40. என் மூத்த மகனின் முதல்பிறந்த நாளுக்கு ரூ 600 கொடுத்து ஒரு மர்ஃபி பெட்டி வாங்கி இருந்தோம் இங்கு பெங்களூர் வந்த போது வெறும்காபினெட் மட்டுமே இருந்தது வால்வுகள் கிடைக்காததால் அதை உபயோகிக்க முடியவில்லை எனக்கு ஒருசந்தேகம் துரை செல்வராஜுவின் கதைகளில் எல்லோருமே நல்லவர்கள் தானோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      எல்லா கதைகளுக்கு உள்ளும் குணங்கெட்ட ஒரு கதாபாத்திரத்தை வைக்கலாம் தான்.. ஆனால் அதனால் பயன் என்ன?...

      ஏதோ செவ்வாய்க் கிழமை காலையில் கதை வாசிக்கும் நேரத்தில் மனம் இதன் மூலம் சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டுமே!...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  41. அருமையான கதை. வெகு சிறப்பான நேரேஷன். ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் துரை செல்வராஜு சார். நன்றி ஸ்ரீராம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி...

      தாங்கள் எனது கதையை வாசித்திருப்பது இதுவே முதல்முறை என எண்ணுகிறேன்..

      நன்றி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!