பேபிகார்ன் பட்டர் மசாலா
சரி ரெசிப்பிக்குப் போவோம். போகும் முன் மிகவும் முக்கியமான ஒரு பொருள் சொல்ல விட்டுப் போய்டுச்சு. ஹாஹாஹா உப்பில்லா பண்டம் குப்பையிலேனு சொல்லுவதற்கு இணங்க. தேவையான உப்பை மசாலா சேர்க்கும் போது சேர்த்துக்கோங்க. (இதெல்லாம் சொல்லணுமா உங்களுக்குத் தெரியாதா என்ன?!! ஹிஹிஹி)
நான் செய்யும் மசாலா பொடி படம் எடுக்க மறந்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறேன் முதல் கொலாஜில். அப்புறம் அதைச் செய்த போது படம் எடுத்து இதோ இந்த இரண்டாவது கொலாஜில் சேர்த்துவிட்டேன்…
இதில் பட்டையும் சோம்பும் தான் முக்கியமானவை. லீஃப் அத்தனை முக்கியமில்லை. இந்த மசாலாப் பொடிக்கு முதல் கொலாஜில் ப்ராக்கெட்டில் கொடுக்கப்பட்டது இந்த ரெசிப்பி அளவிற்கானது. அதிலும் கூட அரை டீ ஸ்பூன் இந்த ரெசிப்பி அளவிற்குப் போதும்.
வெண்ணை சேர்த்த படம் இல்லைனு இந்த கொலாஜ்ல சொல்லிருக்கேன். அந்தப் படம் எடுக்கலைனு நினைச்சிருந்தா கடைசில அந்தப் படமும் இருந்தது. கொலாஜ்ல எல்லாம் முடிச்சு சேவ் செய்துட்டு கொலாஜ் போர்டில் க்ளியர் கான்வாஸ் கொடுத்து படத்தை அழித்தும் விட்டதால் சேவ் செய்த படத்தில் இந்த வரியை கட் செய்ய முடியாது. எடிட் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் கொலாஜ் செய்யணும். டைப் செய்யணும். இருக்கற நெட் பிரச்சனை, கணினி கைக்கு கிடைக்கும் நேரம் எல்லாம் பார்த்து, அட போகட்டும், அடுத்த கொலாஜ்ல அந்தப் படத்தைச் சேர்த்து ஒரு வரியையும் சேர்த்துவிடலாம் என்று நினைத்து இதோ அடுத்த கொலாஜ்ல அந்தப் படம், விளக்கம் எல்லாம்…
பட்டர் மசாலாவை இறக்கிய பின் மேலே பொடியாகக் கட்செய்த பச்சைக் கொத்தமல்லித் தழை போட வேண்டும். போட்டதை படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். அலங்காரம் எல்லாம் உங்கள் விருப்பம்.
இந்த பட்டர் மசாலா (பனீர், பேபிகார்ன்..இப்படி எது செய்தாலும்) எந்த ஒரு க்ரேவிக்கும் ஆத்தென்டிக் என்று எதுவும் இல்லை என்றாலும் நான் தெரிந்து கொண்ட வகையில் ஒவ்வொரு க்ரேவியையும் வித்தியாசப்படுத்த ஏதேனும் ஒரு முக்கிய பொருள் மற்றும் ப்ராசஸ் அல்லது சேர்க்கப்படாத பொருள் இருந்தால் அதை மட்டும் நோட் செய்து கொண்டுவிடுவதுண்டு. அப்படிப் பார்க்கும் போது பட்டர் மசாலா வகைகளுக்கு அவசியமாக கஸூரிமேத்தி கண்டிப்பாகச் சேர்க்கப்படும்.
அஃப்கானி பனீர் என்றால் தக்காளி இல்லாமல் க்ரேவி க்ரீமியாக வெள்ளையாக மெலன் விதைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். இப்படியான வித்தியாசங்கள்.
பூண்டோடு இஞ்சி சேர்த்து அரைக்கலாம். என்னிடம் அன்று இஞ்சி இல்லை அதனால் சேர்க்கவில்லை. இஞ்சி சேர்க்கவில்லை என்றாலும் சுவையில் அத்தனை வித்தியாசம் தெரியாது.
பூண்டு சுவை தூக்கலாக இருந்தால் பனீர் பட்டர் மசாலா சுவை அவ்வளவு நன்றாக இருக்காது. எந்த க்ரேவிக்குமே இது பொருந்தும். அது போலவே இஞ்சியும். தென்னகத்தில் சில உணவகங்களில் பூண்டு, இஞ்சி சுவை ரொம்பவும் தூக்கலாக இருக்கும். ஓவராக எண்ணையில் வதக்கியும் இருப்பார்கள். அது சுவையைக் கெடுக்கும். பெரும்பாலான வட இந்தியாவில் உணவகங்களில் மசாலா அதிகம் தூக்கலாக இருப்பதில்லை. நான் சாப்பிட்ட வரையில்.
பட்டர் மசாலாவுக்கு சில சமயம் க்ரீம் சேர்த்து செய்வதுண்டு. இந்த பேபிகார்ன் பட்டர் மசாலாவில் நான் க்ரீம் சேர்க்கவில்லை.
பாலில் பேபிகார்னை வேக வைத்தால் சுவை நன்றாக இருக்கும். வேக வைத்தும் வெண்னையில் லைட் ப்ரௌன் கலர் ஆகும் வரை வதக்கலாம். அல்லது வெண்ணெ யில் வதக்கிய பிறகு பாலில் வேக வைக்கலாம்.
கச கசாவையும், முந்திரியுடன் ஊற வைத்து இரண்டையும் அரைத்து சேர்க்கலாம்
க்ரீம் இல்லை என்றால் பிரச்சனை இல்லை. பட்டர் மசாலா க்ரேவியின் நல்ல டெக்சர் கிடைக்க குறிப்பாக பனீர் பட்டர் மசாலாவுக்கு பனீர் 4,5 துண்டுகளை நன்றாக மிக்ஸியில் அரைத்து சேர்த்துவிடலாம். மற்ற பட்டர் மசாலாவிற்கும் இப்படிச் செய்யலாம். சுவை + க்ரேவியின் க்ரீமி க்வாலிட்டி நன்றாக இருக்கும்.
Melon விதைகள் கிடைக்கிறது கடைகளில். இதனை ஊற வைத்து அரைத்தும் விடலாம். நல்ல க்ரீமி டெக்சர் கிடைக்கும். இது அஃப்கானி பனீரில் சேர்ப்பதுண்டு.
மெலன் விதைகள், முந்திரி, கசகசா, க்ரீம் என்று எல்லாமும் சேர்த்தும் செய்யலாம். எல்லாம் சேர்ப்பதாக இருந்தால் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தால் போதும். இல்லை என்றால் க்ரேவி ரொம்ப திக்காக அதில் போடும் பனீர் அல்லது பேபிகார்னையும் விட அதிகம் இருக்கும். இப்படிச் செய்வது ஹோட்டலுக்குச் சரிப்படும் ஆனால் வீட்டிற்குச் சரிவராது. இது என் தனிப்பட்ட அனுபவம்.
தக்காளி சேர்க்கும் எந்த க்ரேவிக்கும், க்ரேவியின் கலரை கொஞ்சம் பளிச்சென்று காட்ட நான் கொஞ்சம் காஷ்மீரி சில்லி பௌடர் சேர்ப்பது வழக்கம். நான் பெரும்பாலும் நார்மல் சிவப்பு மிளகாயை வீட்டிலேயே நைஸாகப் பொடித்துவிடுவது வழக்கம். அப்படி இல்லை என்றால் எம் டி ஆர் பொடிதான் வாங்குவது வழக்கம்.
தக்காளி சேர்க்கும் எந்த ஒரு டிஷ்ஷிற்கும் நான் கொஞ்சமே கொஞ்சம் சர்க்கரை/வெல்லம் சேர்ப்பது வழக்கம். இது அதன் புளிப்பை பேலன்ஸ் செய்து சுவை கூட்டும். பாட்டியிடம் கற்றது.
ஓகே நட்பூக்களே நம்ம எபி கிச்சன் டைரக்டர் ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எல்லா எபி ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லி உங்களுக்கும் நன்றி சொல்லிக் கொண்டு விடை பெறுகிறோம். நன்றி வணக்கம்.
இந்த ரெசிப்பியும் தனியே தன்னந்தனியேவான்னு நினைச்சு நம்ம பிஞ்சுவுக்கு அவங்க பாஸ் ட்ரம்ப் மாமாவிடம் ரகசியமா பேசி ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு செய்து அனுப்பச் சொல்ல அவரும் ரகசியத்தை லீக் செய்து இப்போதைய தன் முக்கியப் பணியைக் கூட தள்ளி வைச்சுட்டு பிஞ்சுவை அனுப்பி வைக்க..(அந்த ரகசியத்தை ந்யூஜெர்சியில் இருக்கும் மதுரைக்குத் தெரியக் கூடாதுன்னு ட்ரம்ப் மாமா சொல்லிருக்கார்)….பிஞ்சு தனியா வரமாட்டாங்களே ஹையோ தனியா போக பயமாக்கூன்னு அவங்க செக் அவங்க கையைப் பிடிச்சு கூட்டி வந்தா…இங்க பாருங்க என்ன ரகளைன்னு…
காலை வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குசொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
வாழ்க நலம்.
நீக்குசொல்வது எளிது !
நீக்குநெல்லை தமிழன் அவர்களுக்கு நன்றி..
நீக்கு// சொல்வது எளிது ! //
நீக்குஉண்மை!
இன்றைக்கு கீதா ரங்கன் ரெசிப்பி வரும் என நினைத்தேன்.
பதிலளிநீக்குபேபிகார்ன் பட்டர் மசாலா செய்முறை நல்லாருக்கு. நான் இதுவரை சாப்பிட்டதில்லை.
இங்கு பேபி கார்ன் நிறைய பார்க்கிறேன் (நார்மல் கார்ன் விற்பவர்கள், பேபி கார்ன் விற்கறாங்க. சீசன் போலிருக்கு.
இங்க சொன்ன பொடி மாதிரி என் பெண் சில பொடிகள் செய்துவைப்பா. நான் சென்னையிலிருந்து வந்தபோது பல பொடிகளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
எப்போ செய்துபார்க்கும் சந்தர்ப்பம் வருதுன்னு பார்ப்போம்.
பாராட்டுகள் கீதா ரங்கன்.
காலை வணக்கம் நெல்லை. வாங்க...
நீக்குவருக, வருக !
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இரண்டு நாட்களாக இணையத்தொடர்பு கிடைக்கவில்லை. நேற்று மாலையிலிருந்துதான் சரியாகி வந்துள்ளது. இனிதான் வலை உலா தொடர வேண்டும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், தினம் தினம் கூடிக்கொண்டே போகும் தொற்றுக் குறைந்து அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் திகழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஸ்ரீராம், துரை செல்வராஜு காணோமே.
அன்பு கீதா ரெங்கன்,
நீக்குநல்ல மசாலா வாசனை இங்கியே வருகிறது.
பேபி கார்ன் மிகப் பிடிக்கும். அதுவும் வெண்ணெயில்
வதக்கினது என்றால் இன்னும் சுவை. வெறும் மிளகு உப்பு
போட்டாலே அமிர்தமாயிருக்கும்.
இத்தனை படங்களோடு மிகப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்ததற்கே
சபாஷ் சொல்லணும்.
நன்றி மா. மகளிடம் சொல்கிறேன். இனிய வாழ்த்துகளும்
பாராட்டுகளும்.
நன்றியம்மா.. இதோ வந்து விட்டேன்...
நீக்குவாங்க துரை செல்வராஜு ஸார்.
நீக்குநன்றி துரை. நலமாக இருங்கள்.
நீக்குபேபி கார்ன் சாப்பிட்டிருக்கேன். அதிகம் பண்ணினதில்லை. இங்கே போணியே ஆகாது. அவ்வளவு ஏன்? வாங்கவே மாட்டாங்க! க்ரேவி செய்முறையில் கசூரி மேதி இவ்வளவு சேர்த்து இப்போத் தான் பார்க்கிறேன். நான் அதை அரைத்தெல்லாம் போட்டதில்லை. கீழே இறக்கும் முன்னர் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கைகளால் தேய்த்துச் சேர்ப்பேன் அவ்வளவு தான். இந்த பட்டர் மசாலாவெல்லாம் இப்போ அலுத்துவிட்டதால் அதிகம் பண்ணுவதில்லை. அதிலும் நாங்க இரண்டு பேர்தான். அவருக்கு மசாலாவே அதிகம் பிடிக்காது. பாரம்பரிய முறையில் கத்திரிக்காய்க் கூட்டு, தக்காளி+உருளை, தனி உருளை, சௌசௌ, வெண்டைக்காய் எனப் பண்ணிடறேன் சப்பாத்திக்கு. எப்போவானும் காய்கறிகள் போட்டுச் சாதம் கலந்தால் அன்னிக்கு மசாலா அரைப்பது உண்டு. என்னிடம் சோம்பு+லவங்கப்பட்டைப் பவுடர் எப்போதும் இருக்கும். முன்னெல்லாம் ராஜ்மா பண்ணும்போது தனியாகப் பொடி செய்து போடவெனத் தயாராக வைச்சிருப்பேன்.
பதிலளிநீக்குசலிக்காமல் செய்முறையைப் படங்கள் எடுத்துப் போடுகிறார் தி/கீதா. பாராட்டுகள். எல்லாம் நல்லா வந்திருக்கு. எனக்கெல்லாம் நடுவில் சமையலில் கவனம் அதிகம் போனால் படம் எடுக்கணும் என்பதே மறந்துடும். அப்புறமா நினைச்சுப்பேன். :))))))
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகீரெ ஒரு ஆஆஅரா!
நீக்குபுரியலையே! கீதா ரெங்கனைக் கீரெ எனச் சொல்லி இருக்கீங்க. அதென்ன ஆஆஅரா!?
நீக்குஆஆஅரா!?//
நீக்குஆல் இன் ஆல் அறுசுவை ராணி ஆல் இன் ஆல் அசகாய ராணி
ஸ்ரீராம் இதில் எது
சபாஷ்... இரண்டாவது.
நீக்குஇரட்டையர்கள் இருவரும் இல்லாதது பதிவுகள் "வெறிச்"ஓடுவதற்குக் காரணமோ?
பதிலளிநீக்குநான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க கீதாமா.
நீக்குஇந்த் கொரொனா எல்லார் ரொடீனையும் மாற்றிப் போட்டு விட்டது.
அன்புள்ள இரட்டையர்களே... எப்போ வருவீங்க...?
நீக்குசெய்முறை சொன்ன விதம் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குபேபி கார்னை வைத்து இப்படியெல்லாம் செய்யலாம் என்பது முதன்முறை... படிப்படியான செய்முறை விளக்கத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குஉங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு செய்முறை பற்றியும், கவனமாக செய்யாவிட்டால் உண்டாகும் சிறு பிரச்சனைகளையும் சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்...
அது கொலாஜ் (கலவை...?!)
ஸ்ரீராம் சார். கவனியுங்கள்... சகோதரி கீதா அவர்களிடமிருந்து, ஒரு தொழிற்நுட்ப பதிவு வருவதற்கு வாய்ப்புள்ளது...!
நெட் பிரச்சனை என்றால், கவலையும் இல்லை... கலவையும் இல்லை... வெண்ணை சேர்த்த படம் இல்லை என்பதால், மீண்டும் ஒருமுறை பேபிகார்ன் பட்டர் மசாலா செய்தீர்களா...? இல்லை இங்கு // கடைசில அந்தப் படமும் இருந்தது // என்று தட்டச்சு செய்தீர்களா...? ஹா... ஹா...
அவங்க தொநி நிபுணர் ஆயிட்டாங்க DD!
நீக்குநீங்க வெண்ணெய் சேர்த்த படத்தை பார்த்ததும் ஆஹா கீதா அவர்கள் ஒரு முட்டையை உடைத்து போட்டு இருக்கிறார்கள் என நினைத்தேன் அதன் பின் தான் தெரிந்தது அது வெண்னெய் என்று ....
பதிலளிநீக்குஒரு முட்டை வெண்ணெய்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபேபிகார்ன் ரெசிப்பி - நல்லா இருக்கு. இங்கே கிடைக்கிறது. நான் பொதுவாக வாங்குவதில்லை. ஒரு ஆளுக்குச் செய்ய இதெல்லாம் சரிவருவதில்லை.
பேபி கார்ன் மசாலா செய்வது ஈசிதான். அதை படமெடுத்து, கொலாஜ் ஆக்கி, அதில் செய்முறையையும் எழுதி வெளியிடுவதுதான் கஷ்டம். கீதா ரங்கன் கலக்கி விட்டார். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎனக்கு இவ்வளவு 'தக்கினிக்கி' எல்லாம் வராதுப்பா...!
நீக்குஒருவழியாய் வந்தாயிற்று...
பதிலளிநீக்குஇரவு முழுதும் தூக்கம் இல்லை...
அளவுக்கும் அதிகமாக A/c யை முடுக்கி இருக்கிறார்கள்... நடுக்க தாளவில்லை..
முன்னிரவில் எழுந்து குறைத்து வைத்தால் நள்ளிரவில் அதிகமாக்கி விடுகிறார்கள்...
அதிகாலையில் தூக்கம் ஆளை அழுத்தி விட்டது...
பேபிகார்ன் செய்முறை விரிவாக இருக்கிறது.
இதெல்லாம் செய்வதற்கு நமக்கு வாய்ப்பில்லை..
வாழ்க நலம்...
கீதா ரெங்கன் கை வலியின் காரணமாக பின்னர் வந்து சுருக்கமாக பதிலளிப்பார்.
பதிலளிநீக்குஒரு சின்ன யோசனை. தவறெனில் மன்னிக்க. எழுத்து நிறம் கறுப்பிலேயே வைத்தால் நல்லது. படிக்க கஷ்டமா இருக்கு
பதிலளிநீக்குஉங்களுக்குமா எல்கே? எனக்குத் தான் கண் பிரச்னையால் படிக்க முடியலையோனு நினைச்சேன். :)
நீக்கு😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
நீக்கு///இந்த ரெசிப்பியும் தனியே தன்னந்தனியேவான்னு நினைச்சு நம்ம பிஞ்சுவுக்கு அவங்க பாஸ் ட்ரம்ப் மாமாவிடம் ரகசியமா பேசி ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு செய்து அனுப்பச் சொல்ல///
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ அதானே பார்த்தேன் “பிஞ்சு” இல்லாமல் “பிஞ்சு கோன்” ரெசிப்பியோ என:)) ஹா ஹா ஹா கீதாவுக்குக் கொம்பியூட்டர் கிடைச்சதிலிருந்தே அட்டகாசச் சமையல் நடக்கிறது போலும்.... அசத்துங்கோ கீதா. ஆனா இன்று என் உள்ளுணர்வு பிழைச்சுப்போச்சு.. நான் இன்று கீதாவின் ரெசிப்பியை நினைக்கவில்லை, நெல்லைத்தமிழன் ஒன்று செய்து படம் எடுத்து வச்சிருக்கிறாராமெல்லோ.. அதுதான் வருமென நினைச்சேன்:)..
படங்கள் எல்லாம் கிளியராக சூப்பராக வந்திருக்குது கீதா, கீசாக்காவிடம் ரெயினிங் எடுத்தனீங்களோ? ஹா ஹா ஹா..
ரெசிப்பு சூப்பராக இருக்குது கீதா, ஆனா சும்மாவே சாப்பிடக்கூடிய பேபிக் கோனுக்கு இவ்ளோ மசாலா எல்லாம் சேர்த்து, இவ்ளோ மினக்கெடத் தேவையோ என்றிருக்குது. நிறைய மினக்கெட்டுச் செய்திருக்கிறீங்க... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅதிரா, எனக்கு இவ்வளவு மினக்கெட்டு வேலை செய்வது முடியாது இப்போது .யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம் போல மனதும், உடலும். கீதா வீட்டுக்கு இந்த கொரானா முடிந்த பின் போய் செய்து தரச்சொல்லி சாப்பிட வேண்டியதுதான்.
நீக்குஹா ஹா ஹா கோமதி அக்கா, இப்போ வீட்டுக்குள் இருந்து உசார் குறைகிறதோ?.. உண்மைதான் இன்னும் கொஞ்சக் காலம் இப்படியே இருந்தால் பலருக்கு மனச் சோர்வுதான் வரும். எங்களுக்கு கார்டின் இருப்பதால், அதிலேயே பாதிப் பொழுது போய் விடுகிறது, அதுவும் இப்போ வெயில் காலம் என்பதால்.
நீக்குபேபிகார்ன் பட்டர் மசாலா செய்முறை, படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசொன்னவிதம் அருமை.
கீதா பாராட்டுக்கள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅஆவ் !! கீதா படத்திலேயே குறிப்பு சேர்த்து இப்போல்லாம் கலக்கறீங்க :) பார்க்க சூப்பரா இருக்கே
பதிலளிநீக்குநானும் இலங்கை வாசனை சுருள்பட்டைதான் யூஸ் பண்ணுவேன் சமையலுக்கில்லை :) ஒன்லி FOR சுலைமானி டீ அப்புறம் பிரென்ச் டோஸ்டுக்கு பாலில் பவுடரா சேர்த்து ப்ரெட் முக்கி செய்வேன்
பதிலளிநீக்குரெசிப்பி சூப்பர் அண்ணா எனோ எனக்கும் சரி வீட்டிலும் இந்த பிரிஞ்சி ம்,மசாலா அவ்வளவு விருப்பமில்லை அம்மா எப்பவும் இப்படித்தான் செய்வார் ஆனா திருமணமானதும் நான் எடுத்த முடிவு நோ ஸ்பைசஸ் :)எல்லாருக்கும் பிடிக்கிறது எனக்குமட்டும் பிடிக்காம போகுது அது YYYY ??
பதிலளிநீக்குஏஞ்சல், உங்களுக்கு மட்டும் இல்லை. டீ ல ஏலக்காய் போட்டாலே எனக்குப் பிடிப்பதில்லை.
நீக்குஒரு பின்ச் கரம் மசாலா more than enough.
suvaip puratchi ennuL nadakkiRathu pOla irukkiRathu:)
ஹையா ஜாலி நம்மைப்போல் இருப்பது சந்தோஷமே ..என்னமோ காரம் அது இந்த கரம் மசாலா பஞ்சபூரந் காரம் எனக்கு எப்பவுமே நெஞ்செரிச்சு விடும் மெட்றாஸில் இருந்தப்போவே எனக்கு தயிர் ரசம் மட்டுமே பிடிக்கும் இதுக்காக திட்டு வாங்கியுமிருக்கிறேன் :)
நீக்குஇன்னொன்று சொல்லணும் இங்கே கிடைக்கும் பேபி கார்ன் இவ்வளவு பெரிசில்ல இங்கே கிடைப்பது வெண்டைக்காய் அளவுதான் அதில் சூப் செய்வேன் .உங்க படத்தில் இருப்பது அழகா பெரிசா இருக்கு .அந்த மசாலா இல்லாம இல்லைன்னா குறைவா சேர்த்து செய்கிறேன் .அழகான விளக்கமான ரெசிப்பிக்கு நன்றி கீதா
பதிலளிநீக்கு/அஃப்கானி பனீர்//அஆவ் கீதா இதெல்லாம் செய்வீர்களா !! நான் ஈஸி NAAN செய்து கொடுத்தேன் வீட்டில் நல்லா இருக்குன்னாங்க :)செய்து போடறேன் என் பக்கம்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்களின் பேபிகார்ன் பட்டர் மசாலா செய்முறை படங்கள் எல்லாம் வெகு பிரமாதமாக உள்ளது. கொலாஜ் படங்கள் போட்டு அதுலேயே எப்படி எழுதினீர்கள்.? எல்லாவற்றையும் கற்று தேர்ந்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அழகான நடையில் பட்டர் மசாலாவும் உருகி உருகி நன்றான வாசனையுடன் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. நான் பொதுவாக இந்த மசாலா வகைகள் போட்டு சமைப்பதில் வீக். ஒன்று ஜாஸ்தியாகும். இல்லை குறைவாகி வாசமில்லாமல் போகும். சூப்பராக விளக்கமளித்திருக்கும் தங்களுக்கு அன்பார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கினால் ஆவின் வெண்ணை இல்லையென்றால் வெண்ணையே வேண்டாம் என்று நாலு மாசம் ஓடிப் போய் விட்டது.
பதிலளிநீக்குவெண்ணை வாங்கி இலுப்ப சட்டியில் (?) போட்டு, பதமாக காய்ச்சி லேசாக சிவக்கத் த்யாராகும் ஒரு கல் உப்பும், முருங்க இலையும் போட்டு பொங்கி வரும் சமுயத்தில் அடுப்பை அணைத்து...
அடடா! அடியில் கசடு என்று ஒரு சேரும் பாருங்கள்! கரண்டிச் சாப்பிட முருங்க இலை வாசத்துடன் என்ன சுவை, என்ன சுவை?..
சிறு வயதில் வெண்ணை காச்சும் பொழுது இந்த கசடுக்காகவே காத்திருப்போம். உளுத்த மாவு போன்ற எதிலாவது பிசறிச் சாப்பிட அனுமதியோம்.. எங்களுக்கு கசடே வேண்டும் கோரஸாக அடம் பிடிப்போம்!..
* தயாராகும் சமயத்தில்
பதிலளிநீக்குசார் எங்கப்பா இப்படித்தான் முருங்கை இலை போட்டு காய்ச்சுவார்.ஊத்துக்குளி வெண்ணெய் எண்ணெய் செக்கிலிருந்து வாங்கித்தான் செய்வோம் ஊரில்
நீக்குஎனக்கு ஆவின் வெண்ணெய் பிடிப்பதில்லை. ஊத்துக்குளிதான்.
நீக்குஎங்க வீட்ல ஊரில் அதில்தான் கிறிஸ்மஸ் முறுக்குலாம் சுடுவாங்க அந்த வெண்ணை ஊ கு வெண்ணெய்க்கு தனிச்சிறப்பு .
நீக்குபேபி கார்ன் பட்டர் மசாலா சூப்பர்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் பேபி கார்ன் சார்ட்டே, மஞ்சூரியன் பிடிக்கும்.
நான் சேலத்தில் இருந்த பொழுது ஊத்துகுளி கிடைத்தது.. சென்னையில் எங்கே?..
பதிலளிநீக்குமாம்பலத்தில் சில கடைகளில் வெளிப்பலகையில் சாக்பீஸால் எழுதி வைத்திருப்பார்கள்.. கா... ஸ்டோரும் திருப்தி இல்லை.
அப்பளம் என்றால் கல்லிடைக்குறிச்சி அப்பளம் என்று அனைவரும் லேபிளில் போடுகிற கதை தான்!..
கௌ அண்ணா, ஸ்ரீராம், எபி க்கு பதிவிற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குகருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. கோமதிக்கா வாங்க வீட்டுக்கு கண்டிப்பா...செஞ்சு தரேன். எல்லாருமே வீட்டுக்கு வாங்க. (ஆஹா இப்ப யாரும் வர முடியாது அதான் கீதா அழைக்கிறான்னு நினைக்கப்படாது ஹா ஹா ஹா ஹா...) பிஞ்சு, பானுக்கா சொன்னது போல இது ஈசியான ரெசிப்பிதான் மெனக்கெடல் இல்லை. எப்போதாவதுதான் செய்வது. பிஞ்சு நீங்களும் செக்கும் இல்லாமல் பதிவா ஹா ஹா ஹா ஹா..
நெல்லை உங்க பொண்ணு செஞ்ச பொடிய எடுத்துவராம போயிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர். கீதாக்கா கஸூரி மேத்தி இதன் ஃப்ளேவரைக் கூட்டும் மசாலாவை விட என்பதால் அப்படிச் சேர்ப்பதுண்டு. படங்கள் எனக்கும் எடுக்க இயலாது. அதனாலேயே பல ரெசிப்பிஸ் போட முடிவதில்லை. மட்டுமல்ல வீட்டில் யாரும் இல்லாதப்ப செஞ்சாதான் எடுப்பது. அதனால்தான் பல ரெசிப்பிஸ் மிஸ்ஸிங்க் இங்கு அனுப்ப இயலாமல். இதெல்லாம் விருந்தினர் வந்தப்ப செஞ்சது. வல்லிம்மா அண்ட் ஏஞ்சல் நம் வீட்டிலும் மசாலா வாசனை தூக்கலாக இருக்காது. இங்கும் நெஞ்சைக் கரிக்கும் பிரச்சனைகள் உண்டு குறிப்பாக எனக்கு என்பதால். ரொம்ப மைல்டாக ஆனா ஃப்ளேவர் தெரியும். செஞ்சிருக்கும் பவுடரில் கொஞ்சமே கொஞ்சம் தான். படங்களில் காட்டியிருப்பது மொத்தமாகச் செய்து வைப்பது. அதுவுமெ கொஞ்சம்தான். ப்ரிஞ்சி சேர்க்காமல் செய்யும் பவுடரும். நீங்க தைரியமா சாப்பிடலாம் நெஞ்சு கரிக்காது. அதனால்தான் வருஷங்கள் ஆகிவிட்டது ஹோட்டலில் சாப்பிடுவதை அறவே தவிர்க்கிறோம் குறிப்பாக நார்த் இண்டியன் டிஷஸ். வீட்டில்தான் நார்த் இண்டியன் டிஷ் செய்வது. ஏஞ்சல் பேபி கார்ன் வெண்டை அளவுதான் சின்னதாகத்தான் உண்டு. இங்கு படத்தில் கொஞ்சம் பெரிதாகத் தெரியுது போல...சிலது கட் செய்யவே முடியலை. அதெல்லாம் போன பதிவில் போட்ட சூப்பில் போட்டுவிட்டேன். மீதிதான் இது. ஆஃப்கானி நாண்/பனீர் படம் எடுத்திருக்கிறேன்...இனிதான் அனுப்பணும்..
எல் கே, கீதாக்கா, வல்லிம்மா நோட்டட். ஃபான்ட் கலர் இனி கறுப்பில்...நீலமும் கடினமாக இருக்கா? நீலம் கண்ணுக்கு ஒகே தானே? இல்லையோ.
டிடி உங்க அளவு எல்லாம் டெக்னிக்கல் பதிவு போட இயலாது. ஹா ஹா ஹா. பதிவினூடே கொலாஜ் பத்தி சொன்னதும் விளக்கம் கொடுக்க சொன்னதுதான். ஃபோட்டோ கணினியில் காப்பி செய்யறப்ப நம்பர் ஏனோ வரிசையாக இல்லாலம் ஜிக்ஜாகாக இருந்ததால் மிஸ் ஆகி அப்புறம் கண்டெடுத்ததால் சேர்த்ததுனால விளக்கம். பானுக்கா நன்றி. மதுரை..... முட்டை ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டாக சொல்லிட்டார்.
கமலாக்கா கரெக்டா அளவா போட்டுட்டீங்கனா மைல்டா ஃப்ளேவருடன் இருக்கும். ஸோ நோ வொர்ரி மேக் கறி!
ஸ்ரீராம் கீரெ ஒரு ஆஆஅரா!// ஹா ஹா ஹா ஹா..அதைக் கண்டுபிடித்த ஏஞ்சல் ஆஹா...ஸ்ரீராம் பட்டமா ஹையோ என் முகம் எல்லாம் ஒரே பிங்கி பிங்கி....அதான் ஷை ஷை...ஒரே வெக்கம்!! அதெல்லாம் ஒன்னுமில்லை...ஏதோ ஒன்னு சொல்லுவாங்களே அதென்ன...ஹான்.... ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட், பட் கிங்க் ஆஃப் நன்....இது எனக்கு ரொம்பவே பொருந்தும்...கூடவே ஜாக் ஆஃப் ஆல் ட்ரேடும் கூட இல்லைனு சொல்லலாம்...மிக்க நன்றி உங்கள் எல்லோரது அன்பிற்கும் ஊக்கத்திற்கும்!!!!!!!!!!!
படங்களையும் பதிவையும் பாராட்டி நம்ம டிஷ்ஷை ரசித்த..ஹிஹிஹி..துரை அண்ணா, கில்லர்ஜி...வெங்கட்ஜி..மற்றும் எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி. இனி ஒரு வேளை யாரேனும் கருத்து கொடுப்பவர்களுக்கும் சேர்த்து நன்றி.
இடது கை கொஞ்சம் பிரச்சனை அதான் தனி தனியா கொடுக்க முடியாம இங்கு எல்லாருக்கும் சேர்த்து. அதனால்தான் ரெண்டு நாளா வலைப்பக்கம் வர முடியல. இன்னும் இரு நாட்கள் ஆகலாம் வலைப்பக்கம் தொடர்ந்து வர..இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மெதுவா அடிச்சு வைச்சு இப்ப கொடுக்கறேன்...
மிக்க நன்றி மீண்டும்
கீதா
//ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட், பட் கிங்க் ஆஃப் நன்// - ஹையோ ஹையோ... அந்தப் பழமொழி ஜேன் ஆஃப் ஆல் ட்ரேட், பட் குயின் ஆஃப் நன் என்று இருக்கணும். (எதுக்கு எப்போவும் மேல் சாவனிஸ்டா பழமொழிகள் இருக்கணும்).
நீக்குYou are talented Geetha Rangan. ரொம்பவும் இங்க எழுத விரும்பலை. இந்தத் தளத்துக்கு வரும் எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் டேலண்டட் தான் (என்னைத் தவிர). ம்யூசிக், சமையல், விரைவாக வேலை செய்வது, அனைவரிடமும் நட்பு பேணுவது, Trying to be friendly with all. வாழ்த்துகள். (அக்காவை தம்பி பாராட்டணும் இல்லையா?)
!?...
பதிலளிநீக்குஎன்ன பிரச்னையோ...
பதிலளிநீக்குதெரியவில்லை...
படங்களுடன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது ... வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்கு