வெள்ளி, 1 மே, 2020

வெள்ளி வீடியோ :  வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி

இந்த ஏப்ரல் 11 வந்ததும் ஐம்பது வருஷங்கள் ஆகின்றன இந்தப் படத்துக்கு.

வியட்நாம் வீடு.  இதற்கு வசனம் எழுதிய, இந்தக் கதையை எழுதிய சுந்தரம் பின்னர் வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அறியப்பட்டார்.


இன்றைய சூழல்களோடு பொருத்திப் பார்க்காமல் அன்றைய சூழல்களோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய படம்.  ஆனால் எந்நாளிலும் ஒய்வு பெறும் ஆணின், குடும்பத்தில் தன் முக்கியத்துவம் இழக்கும் ஆணின் உணர்வுகளை பிரதிபலித்த முதல் படம்.  பின்னாளில்  விசு ஒரு படத்தில் இது போன்று நடித்திருப்பார்.


முதலில் இதை நாடகமாக எழுதிக் கொண்டு போய் ஒய் ஜி பார்த்தசாரதியிடம் காட்டியபோது அவர் இதில் ஸ்கோப் இல்லை என்று மறுத்துவிட, சிவாஜி இதை உள்ள வாய்ப்பைப் புரிந்து கொண்டு நடிக்கச் சம்மதித்த்தாராம்.

ஒருமுறை நாடகத்துக்கு வந்த ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமாரையும்,எஸ் எஸ் வாசனையும் நாடகம் முடிந்து உடனே புறப்பட்டு விடும் வழக்கம் கொண்ட சிவாஜி வரவேற்று உபசரித்தபோது முதலில் அவர்கள் கண்ணீரைத் துடைத்து ஆற்றுப்படுத்த வேண்டி இருந்ததாம்.



இந்தப் படத்தில் வரும் பாலக்காட்டுப்பக்கத்திலே'' பாடல் சமீபத்தில் தனுஷ் படம் ஒன்றில் ரிமேக் செய்யப்பட்டிருந்தது.  பாபு படத்தில் வரும் வரதப்பா வரதப்பா கஞ்சி வ்ருதப்பா''  பாடலில் பிரெஸ்டிஜ் பத்மநாபன் பற்றிய பிரஸ்தாபம் வரும்.  பின்னாளில் வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கிய கெளரவம் படத்திலும் பிரெஸ்டிஜ் பத்மநாபன் ப்பற்றிய பிரஸ்தாபம் வரும்.

இந்தப் படத்தில் சிவாஜி பத்மினியை "சாவுத்ரி...""என்று வித்தியாசமாக அழைப்பார்.  அவரது மேனரிஸங்கள் பின்னாட்களில் என் பாஸின் பெரியப்பா ஒருவரை நினைவுபடுத்தியது எனக்கு.  அல்லது மாற்றிச் சொல்லவேண்டும்!

இந்தப் படத்தின் பாடல்களை எழுதி இருப்பவர் கண்ணதாசன்.  இசை கே வி மகாதேவன்.  இயக்கம் பி மாதவன்.  சிவாஜி- பத்மினி நடித்தது.  

கொஞ்சம் ஓவர் ஆக்டிங் எண்டு சிவாஜி எதிர்ப்பாளர்கள் சொல்லக்கூடும்.   அதைத்தெரிந்தும் ரசித்தோம் நாங்கள்.    சாதாரணமாக நடிக்கவும் தெரியும் எனக்கு...   இப்போதைக்கு இதுமாதிரி நடித்தால்தான் ஈடுபடுகிறது என்று சொல்வாராம் சிவாஜி.

உன்னைக் கரம் பிடித்தேன்'.... வாழ்க்கை ஒளிமயமானதடி''  என்றதும் பத்மினி முஃசத்தில் தெரியும் பாவம்...   என் தேவையை யாரறிவார்...''  எனும்போது அவர் முகத்தில் தெரியும் தவிப்பு...   உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்'' எனும்போது முகத்தில் காட்டும் பரவசம்...

''பாலக்காட்டு பக்கத்திலே' இந்தப் படத்தின் இன்னொரு நல்ல பாடல்.  இன்று பகிரப்படும்  உன் கண்ணில் நீர் வழிந்தால்""பாடல் பாரதியார் பாடல் பாணியில் எழுதப்பட்டது.  இந்தத்தலைப்பிலேயே பின்னாட்களில் ரஜினி நடித்து ஒரு திரைப்படம் வந்தது.  (அதில் இளையராஜா இசையில் ஒரு எஸ் பி பி ஜானகி குரலில் அற்புதமான பாடலும் இருந்தது!)

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி 
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ...

உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை 
ஒளிமயமானதடி 
உன்னை மணந்ததினால் சபையில் 
புகழும் வளர்ந்ததடி...

காலச் சுமைதாங்கி போலே 
மார்பில் எனைத்தாங்கி 
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் 
விம்மல் தணியுமடி 

ஆழம் விழுதுகள்போல் உறவு 
ஆயிரம் வந்துமென்ன 
வேரென நீ இருந்தாய் அதில் நான் 
வீழ்ந்து விடாதிருந்தேன் 

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் 
பிள்ளைக்குலமடியோ - என்னைப்  
பேதைமை செய்குதடி 
பேருக்குப் பிள்ளை உண்டு - பேசும் 
பேச்சுக்கு சொந்தம் உண்டு 
என் தேவையை யாரறிவார் 
உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்....


90 கருத்துகள்:

  1. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி...

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இன்னல் தீருமடி என்றா பாட்டில் வருகிறது? அதில் என் வேதனை தீருமடி என்று வந்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... பார்த்துத் திருத்த வேண்டும்.

      நீக்கு
    2. 'வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என்
      விம்மல் தணியுமடி ' என்பதுதான் சரியான
      வரிகள்.

      நீக்கு
  4. எத்தனை எத்தனையோ
    ஆண்களின் விம்மலைப் பிரதிபலித்த பாடல் இது...

    அவர்களது மனச்சுமையை சற்றே
    இறக்கி வைத்த பாடல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..எத்தனை எத்தனையோ ஆண்களின் விம்மலைப் பிரதிபலித்த பாடல் //

      ஆணுக்காக ஒரு பாடலாவது இருக்கிறதே! போதும்..

      நீக்கு
  5. படம் நன்றாக இருக்கும். சிவாஜியும் நன்றாக நடித்து கண்ணீரை வரவழைத்திருப்பார்.

    ஆமாம் இந்தப் படத்திலா கடைசியில் வாயில் இரத்தம் வந்து அதன் பின் அரை மணி நேரம் வசனம் பேசி பிறகு இறக்கும் காட்சி வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மிருதங்க சக்கரவர்த்தி?

      நீக்கு
    2. வசந்த மாளிகையிலும் ரத்தம் வந்ததே ? ஆணிடமிருந்து பின் என்னதான் வரும்..

      நீக்கு
    3. அது செம படமாச்சே ஏகாந்தன் ஸார்.்

      நீக்கு
    4. அப்போதெல்லாம் கதாநாயகனோ, நாயகியோ இறந்தால்தான் ரசிகர்களின் அனுதாப ஓட்டைப் பெற முடியும் என்றே வலிந்து சாக அடித்திருப்பார்கள்.

      நீக்கு
  6. உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

    விரைவில் நிலைமை சீராகி உழைப்பாளிகளின் வாழ்வு ஒளிபெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஆமாம்.... வேதனை தீருமடி என்பதே சரி...

    ஆலம் விழுதுகள் போல் உறவு
    ஆயிரம் வந்தும் என்ன!...

    வேரென நீயிருந்தாய்..
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்!..

    நாலடியாரின் கருத்தை மறுத்தளித்த வரிகள்..

    பதிலளிநீக்கு
  8. அன்பும் அறிவும் ஆதரவும் கொண்டு இலங்கும்
    இல்லத்தரசிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இனிய பாடல்...

    பதிலளிநீக்கு
  9. நான் அடிக்கடி கேட்டு மனம் ஆற்றுப்படுத்தும் பாடல் ஜி.

    பதிலளிநீக்கு
  10. நெஞ்சை விட்டு அகலாத காட்சிகளில் கூட..

    பென்ஷன் விவரம் கேட்க அலுவலகத்துக்குச் சென்று புதிய மேனேஜரால் (K.A.ராமதாஸ்) அலட்சியப்படுத்தப்படும் காட்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.

      என் அப்பாவுக்கு அப்படி ஒரு அனுபவம் உண்டு. ஆனால் மாறுதலில் வேறிடம் சென்றபின்.. நான் சாட்சியாய் நின்றிருந்தேன்..

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்.. இது எந்த அலுவலகத்திலும் உண்டு. நாம் ரிசைன் பண்ணியாச்சுனா பொதுவா நமக்கு அடுத்தது அந்த இடத்திற்கு வருபவர் (உடனடியாக) நமக்குக் கீழ் பணியாற்றியவராகத்தான் இருப்பார்.

      கௌரவமாக நடத்துவது, நடந்துகொள்வது பெரிய மனித்த்தன்மை, அது ஒரு சிலருக்குத்தான் உண்டு.

      நீக்கு
    3. நாம் மறுபடி அங்கு செல்லாதிருக்கும் நிலை இருந்தால் நலம்.

      நீக்கு
  11. நீ முந்திண்டா நோக்கு...
    நா முந்திண்டா நேக்கு!...

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பாடல் அருமை. பாடல் வரிகள் மனப்பாடமானவை. சிவாஜி, பத்மினி நடிப்பும் மனதில் நிரந்தரமாக தங்கிப் போனவை. படத்தைப்பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.

    பின்னாளில் இதைப் போலவே விசு நடித்தது வீடு, மனைவி, மக்களா? விசு அவர்களும் தேர்ந்த நடிகர். முகத்தில் அனேக பாவங்களை சுலபமாக கொண்டு வருவார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பாடல் வரிகளை மனதிலிருந்துதான் டைப் செய்தேன். அதனால்தான் நெல்லையும் துரை ஸாரும் சந்தேகம் கிளப்பியதும் எனக்கும் சந்தேகம் வந்து விட்டது!

      நீக்கு
  14. அனைவருக்கும் நல்வரவும் காலை/மாலை வணக்கமும். நல்ல பொழுதாகக் கழிய வாழ்த்துகளும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடப் பிரார்த்தனைகளும். ஊரடங்கு தளர்த்தப்படப் போவதாய்ச் சொல்கின்றனர். ஏற்கெனவே முன்னர் ஒரு நாளும் நேற்றும் தளர்த்தியதில் கூடிய கூட்டம்! :( நம் மக்கள் நாங்கல்லாம் தமிழன்டா, தனித்துவம் வாய்ந்தவர்டா என்னும் வீர உணர்வு உள்ளவர்கள். அதை இந்தக் கொரோனா ஊரடங்கிலும் காட்டி வருகின்றனர். என்ன சொல்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. நல்வரவு, வணக்கம், நன்றி.

      நேற்று சென்னை எண்ணிக்கை 138.

      நீக்கு
  15. பாடல் நிறையக் கேட்டிருக்கேன். ஆனால் இந்தப் படம்னு தெரியாது. நல்லவேளையாக இந்தப் படமும் பார்த்ததில்லை. பின்னாட்களில் பார்த்த கௌரவமும், ராஜராஜசோழனும் கூட அம்பத்தூர் மனமகிழ் மன்றத்தின் தயவில் பார்த்தது. ஜிவாஜி படம்னு இல்லை பொதுவாக எந்தப் படமும் எல்லோரும் பார்த்துட்டாங்க, நாமும் பார்க்கணுமேனு திரை அரங்குகளுக்கு ஓடோடிச் சென்று பார்க்கும் நிலைமையில் இருந்ததில்லை. பிறந்த வீட்டில் சென்ட்ரல், தங்கம் திரை அரங்குகளுக்கும் நியூ சினிமாவுக்கும், சித்ராலயா படங்களுக்கும் பாஸ் வரும். பார்ப்போம். திருமணம் ஆகித் திரை அரங்குகளுக்குப் போய்ப் பார்த்த படங்கள் குறைவு. ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கையில் திறந்தவெளி அரங்குகளில் பார்ப்போம், அநேகமாக தினம்! திரை அரங்குகளிலும் பாதிக்கட்டணம். எப்போவானும் நல்ல புதுப்படம்னா போவோம். (ஹிந்தி தான், இஃகி,இஃகி,இஃகி!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு கேட்டு ஆனால் இந்தப் படமென்று தெரியாது! என்ன சோகம்! எவ்வளவு புகழ்பெற்ற பாடல்!

      நீக்கு
  16. அனைவருக்கும் அன்பு வணக்கம். மறக்க முடியாத படம் கூட. பாதியில் சிவாஜியும் பத்மினியும் படும் சிரமங்கள் மனம் கலங்கி, படம் பார்ககாமல் வெளியே வந்துவிட்டோம் நானும் அம்மாவும். வரப்போகும் ரிடையர்மெண்ட் நினைவு கொண்டு வந்த கலக்கம் அது. சென்னை வந்த பிறகு மீண்டும் பார்தத போது அவ்வளவு பஆதிக்கவில்லை:). கண்ணீர் விடாதவர்களைப் பார்கக முடியாது. நடிப்பும் வேடப் பொருத்தமும் அத்தனை பொருந்தி இருக்கும். நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. இந்தப் படம் பார்த்து நிறைய பிள்ளைகள் நாம் நம் சிவாஜியை இப்படிப் படுத்தக் கூடாது என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள்!

      நீக்கு
    2. உண்மையே. பெற்றோர் வாழ்க்கை நலமாகவே இருந்தனர்.ஶ்ரீராம்.

      நீக்கு
  17. சில பாடல்களை கேட்டாலே, மனதில் உள்ள பாரத்தை கண்கள் சுத்தமாக்க ஆரம்பிக்கும்... அந்த வகையில் இந்த பாடல்... பல முறை பதிவில் பயன் படுத்திய அருமையான பாடல்...

    பதிலளிநீக்கு
  18. இனிய காலை வணக்கம்.

    இனிமையான பாடல்.

    ஓவர் நடிப்பு எண்டு சொல்லக் கூடும்! ஹாஹா... சொல்லாமல் விடுவார்களா என்ன! பாடலை கேட்டு ரசித்தேன்! :)

    பதிலளிநீக்கு
  19. இப்படி அல்பமான படங்களில் நடித்தவரைக் கொண்டு போய் -

    லா.டி. ராஜாக்கண்ணு, திரிசூலம், சந்திப்பு மாதிரியான மகா காவியங்களில் நடிக்க வைத்தார்களே!..

    அடடா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... ஆனாலும் திரிசூலத்தை நான் அப்போது ரசித்தேன்.

      நீக்கு
    2. திரிசூலத்தை நான் மூனு தடவை பார்த்திருக்கிறேன்....

      பேர் பொருத்தம் சரி ஆயிடிச்சா!...

      நீக்கு
    3. ஓ... நீங்க மூணு தரம்தானா?!!

      நீக்கு
    4. நான் பாகுபலியையே 3 தடவைகள் பார்த்துவிட்டேனே ஹா ஹா ஹா:)

      நீக்கு
    5. அதற்குள்ளாகவா? இரண்டு பாகமுமா? இரண்டாம் பாகம் மட்டுமா?

      நீக்கு
    6. முதலாவது ஒரு தரம்:)
      2ம் பாகம் மூன்று தரம்....
      அந்த நானா நானா பாட்டு எண்ணவில்லை எத்தனை தரமென:)... ஹா ஹா ஹா கடவுளே இதை நெல்லைத் தமிழன் பார்த்திடக்குடா:)...

      நீக்கு
  20. அருமையான பாடல். பாஅதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலில் வரும் உன கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் வரிகளை பல்லவியக்க் கொண்டு கண்ணதாசனின் வரிகள் உருக வைத்துவிடும் சிறப்பன பகிர்வு ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  21. சிறு வயதில் பார்த்த படம். சிவாஜியின் தோற்றம் இந்தப் படத்தில் கச்சிதமாக பொருந்தியது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான், ஆனால் அவ்வளவு ஆழமான வசனங்களை சோபராக நடித்தால்  எடுபடுமா? சிறிது நாட்கள் முன்பு இந்தப் படத்தை தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள், அதில் சிவாஜி ரிடையர் ஆகி வந்ததும், பத்மினி, மூத்த மகனான ஸ்ரீகாந்திடம்,"நீ அப்பாவிடம் அப்பா நீங்க கவலைப்படாதீங்கோ, இனிமே குடும்பத்தை நான் பார்த்துக்கறேன்னு சொல்லு" என்று சிவாஜிக்குத் தெரியாமல் சொல்லும் காட்சியை பார்த்த பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.  பல வீடுகளில் நடந்த விஷயம்.   

    பதிலளிநீக்கு
  22. //''பாலக்காட்டு பக்கத்திலே' இந்தப் படத்தின் இன்னொரு நல்ல பாடல்.// இந்தப் படத்திற்கு இப்படி ஒரு பாடல் தேவையா? ஆபாசம்! என்று சிலர் சொன்னார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா!...
      அவங்களும் வந்துட்டாங்க!...

      நாடகத்தில் கூட நடித்தவர் ஜி. சகுந்தலா.. திரைப்படத்தில் பத்மினி.. வாய்ப்பு கொடுக்கப் படாததால் அப்போது ஒரு பிரச்னை கிளம்பியது என்றார்கள்...

      நீக்கு
  23. அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமினாதன் மேடம். வாங்க.. வாங்க..

      நீக்கு
  24. நல்ல பாட்டு. டி.எம்.எஸ் அருமையாக, கம்பீரமாகப்பாடியிருப்பார். ஆனால் சிவாஜியின் மிகை நடிப்பால் அந்த இளம் வயதில் என்னால் இந்தப்படத்தை ரசிக்க முடிந்ததில்லை. பத்மினியின் நடிப்புமே சற்று மிகையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ, என் கருத்தை உங்க வாயால் சொல்லிட்டீங்க. எனக்கும் பல "ஜி"வாஜி" படங்களை ரசிக்க முடிந்ததில்லை. பத்மினியைப்பிடிக்கவே பிடிக்காது! :))))) யாரும் அடிக்க வரதுக்கு முன்னாடி நான் ஓடிடறேன்.

      நீக்கு
    2. நன்றி மனோ சாமினாதன் மேடம்.

      நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  25. நல்ல பாடல் கேட்டு நெகிழ்ந்தேன்.
    முன்பு சிறு வயதில் படம் பார்த்து அழுது இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. சிவாஜியின் மானரிஸ்ம்களை பலரும் பின் பற்ற அவரானால் பெரியவரைப் போல்நினைக்க வைத்தார் ஒரு படத்தில் ஒரு சிறந்த நடிகன் கலைஞன்

    பதிலளிநீக்கு
  27. இந்தப் படம் வந்து 50 ஆண்டுகளோ, இக்காலப் படங்களோடு ஒப்பிடுகையில் கலர் தவிர வேறெந்தக் குறையுமில்லை.

    பாடல், இதைக் கேட்காதோர் ரசிக்காதோர் இருக்க முடியாதே.. ஆனால் பாட்டுக் கேட்கும்போதெல்லாம் சந்தோசத் துள்ளல் வராது, ஏதோ ஒரு இனம் புரியாத கவலைதான் மனதில் வரும்...

    பதிலளிநீக்கு
  28. பாடல் கேட்டிருக்கிறேன். படம் பின்னாளில் டிவியில் பார்த்தேன் ஓவர் நடிப்புதான்.

    பதிலளிநீக்கு
  29. தமிழ் சினிமாவின் ‘மைல்கல்’ படங்களில் ஒன்று வியட்நாம் வீடு. குடும்பப்பிணைப்பு, பாசம் காட்டும் கதைகளை அலட்சியப்படுத்துவோரையும் பார்க்க வைத்தது; பிரமிக்கவைத்தது. கண்ணீரை ஓரமாக இறக்கிவிட்டது.
    A colossal film. Sivaji excels effortlessly and takes all the credit. Padmini tries to match him frame by frame..

    பதிலளிநீக்கு
  30. சிவாஜியும் பத்மினியும் அந்த சமூகத்து தம்பதிகளாகவே நடிப்பில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

    ஒரு தம்மாத்துண்டு க்ளூ: இந்தப் படத்தில் பத்மினியின் பெபர் இன்னொரு பிரபல நடிகையின் பெயர். அப்போ பத்மினியின் பெயர் என்ன என்பது கேள்வியல்ல. அந்தப் பிரபல நடிகையின் பெயர் என்ன என்பது தான் கேள்வி. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் பத்மினியின் (பிரபல் நடிகையின்) பெயரை சிவாஜி அழைத்தவிதம் பற்றி மேலே ஸ்ரீராம் குரிப்பிட்டு இருக்கிறார்.

      நீக்கு
    2. பிரபல நடிகையின் பெயர் நடிகையர் திலகம் சாவித்திரி

      நீக்கு
    3. நன்றி ஜீவி ஸார்.

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    4. நானும் அதைப் பார்த்து விட்டேன், மோமதிம்மா. சாவுத்ரியை எத்தனை பேர்கள் கண்டு கொண்டார்கள் என்று தெரிவதற்காக.

      நீக்கு
  31. படமும் பாடலும் மறக்கக் கூடியதே அல்ல

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!