நெல்லைத்தமிழன் :
ஒரு காலத்தில் நம் கனவுக் கன்னியாக இருந்தவர்களை இப்போது பார்க்கும்போது, இவங்க மேலயா க்ரேஸாக இருந்தோம் என்று தோன்றுவதன், நம்மைப் பார்த்து நகைத்துக்கொள்வதன் காரணம் என்ன?
ஒரு காலத்தில் நம் கனவுக் கன்னியாக இருந்தவர்களை இப்போது பார்க்கும்போது, இவங்க மேலயா க்ரேஸாக இருந்தோம் என்று தோன்றுவதன், நம்மைப் பார்த்து நகைத்துக்கொள்வதன் காரணம் என்ன?
* நம்மை நாம் கண்ணாடியில் பார்க்காததும் ஒரு காரணம்!
# பத்மினி இப்படி ஆகிவிட்டாரே என்று நான் அது போல பிரமித்து, அதன் பின் அவர் பத்மினியல்ல, அவரது தாயார் என்று தெரிந்து திகைத்ததும் உண்டு..!
& எனக்கும் அந்த பீலிங்க்ஸ் உண்டு தலைவரே!
====
வேறு யாரும் எங்களைக் கேள்விகள் கேட்கவில்லை. அதனால எங்கள் கேள்விகள் - உங்களுக்கு.
1 ) புதிதாக ஒரு சமையல் குறிப்பு படித்து, அதை செய்து பார்க்க முடிவு செய்கிறீர்கள். வேண்டிய பொருட்கள் எல்லாம் வீட்டில் உள்ளன. நீங்க ..
a ) எல்லாவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு வரிசைக்கிரமமாக வைத்துக்கொண்டு சமையலை ஆரம்பிப்பீர்கள்?
b ) யார் என்ன வரிசை/அளவுகள் சொல்லியிருந்தாலும் அதை பொருட்படுத்தாது, உங்கள் சொந்த முறையில் பொருட்களின் அளவுகளும், செய்முறையும் இருக்கும்?
c ) வேறு ஏதாவது ?
2 ) தொலைக்காட்சி விளம்பரங்களில் உங்களுக்குப் பிடித்த விளம்பரம் எது? ஏன்?
3 ) பிடித்த விளம்பரத்தில், விளம்பரப்படுத்தப்படும் அதே பிராண்ட் பொருள் உங்கள் வீட்டில் உள்ளதா?
4 ) பற்பசை, பல் தேய்க்கும் பிரஷ், சோப், ஹேர் ஆயில் போன்றவற்றை எப்பொழுதும் குறிப்பிட்ட பிராண்ட்தான் உபயோகிப்பீர்களா?
5 ) உங்கள் ஓட்டுரிமை உள்ள ஊரில், நீங்கள் இருக்கும்பொழுது, நடந்த தேர்தல்கள் எல்லாவற்றிலும் நீங்கள் ----
a ) தவறாமல் வோட் போடுவீர்கள்.
b ) சில சந்தர்ப்பங்களில் வோட் போட்டது இல்லை.
c ) எப்பொழுதாவது வோட் போட்டது உண்டு.
(இந்தக் கடைசிக் கேள்விக்கு வல்லிசிம்ஹன் தவிர வேறு யாராவது சரியான பதில் தருகிறார்களா பார்ப்போம்! )
=========================
=========================
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
வாழ்க நலம்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம், வாங்கோ!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடத்திலிருப்பவர் குமாரி கமலாவா? கடைசி கேள்விக்கு அவசரப்பட்டு தவறாகவே பதில் தருகிறேனோ என நினைக்கிறேன். ஒரு ஆர்வ கோளாறுதான் காரணம். மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். ஆனால் சரியான பதில் இல்லை.
நீக்குபானுமதி
நீக்குஇல்லை.
நீக்குஅந்தக்கால நடிகைகளில் இவர் யாராக இருக்கும் பானுமதி இல்லை எனில்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சௌகார், எம்.என்.ராஜம், ஈ.வி.சரோஜா, லலிதா, பத்மினி, ராகினி, வைஜயந்தி, கமலா இவர்களில் யாரும் இல்லை எனில் பின் யாராக இருக்கும்?
நீக்குஅதுதானே... அந்தக்கால முகம், உடை பாவனைகளாக இருக்கிறது. பரிச்சயமான முகமாகவும் உள்ளது. யாரென்று தெரியாமல் தலைக்குள் அனேகமாய் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன. சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் வந்து புதிருக்கு விடை சொல்வாரா? காத்திருக்கிறேன்.
நீக்கு//பானுமதி// ஆ! சிறுவயதில் நான் கிருஷ்ணர் வேஷம் போட்டுக் கொண்டதுண்டு. ஆனால் "நான் அவளில்லை, நான் அவளில்லை, நான் அவளில்லை"
நீக்குஹா ஹா !!
நீக்குநானும் சுமார் பதின்மூன்று/பதினைந்து வயசு வரைக்கும் கிருஷ்ணர் வேஷம் நவராத்திரிக்குப் போட்டுக் கொண்டிருக்கேன். ஆதலால் நானும் இல்லை.
நீக்குபோட்டோ இருக்கா?
நீக்குஆக எங்கள் ப்ளாக் வாசகர்களில் இருவர் கிருஷ்ணர் இல்லையென தெரிந்து விட்டது. நான்தான் சந்தேகம் கேட்பவள்.எனவே நானும் அவனில்லை. பின்னே யார் கிருஷ்ணராக வந்து காட்சி தருபவர். ஸ்ரீராமராவது வந்து தெளிவாக்கினால் பரவாயில்லை. இல்லை புதிரைப் போட்டவர்தான் விடுவிக்க வேண்டும். நன்றி.
நீக்குஇருந்தது. இப்போ எங்கே இருக்குனு தெரியாது! :)))))
நீக்கு//போட்டோ இருக்கா?// - தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நான் பெண் வேடம் போட்டு நாடகம் முழுமைக்கும் வந்தேன். அப்போ என் பெரியப்பா வீட்டில்தான் அந்த போட்டோக்களை ஒரு ப்ரேமில் மாட்டி வைத்திருந்தேன். கால வெள்ளத்தில் போன இடம் தெரியவில்லை. (பத்தாம் வகுப்பில்).
நீக்குஎனக்குத் தெரிந்து 80கள் வரையில், குழந்தை பிறந்து ஒரு வயது ஆன பிறகு எடுக்கும் முதல் போட்டோவே கிருஷ்ணன் மேக்கப்பில் எடுப்பதுதான் (கொண்டை, செயின் போட்டு புல்லாங்குழல் ஊதும் போஸில்).
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் எப்போதும் அளவில்லாத ஆரோக்கியத்துடன்
வாழ வேண்டும்.
இறைவன் அருள் கூட வேண்டும்.
அப்படியே வேண்டுவோம்.
நீக்குசமையல் குறிப்புகளைச் சொல்பவர்கள் சொல்லும் முறையைக் கடைப்
பதிலளிநீக்குபிடிப்பேன்.
அளவுகளும் ஓரளவுக்கு.:)
ஹா ஹா ஓரளவுக்கு! அங்கேதான் இருக்கு சூட்சுமம்!
நீக்குபேபி கமலா கிருஷ்ணனாக வந்தார் மீரா படத்தில்.
பதிலளிநீக்குஅதற்குப் பிறகு
பத்மினி நாட்டிய நாடகங்களில், அவர் தங்கை ராகினி கிருஷ்ணனாக
வருவார்.
பிறகு என்.டி.ராமராவ்.
ஸாரி இவர் யாரென்று தெரியவில்லை.
ஆனால் பார்த்த முகமாக இருக்கிறது.
உங்களுக்கே தெரியவில்லை என்றால் .. .. வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. (ஒரே ஒரு களூ - சமீபத்தில் நீங்க எங்கள் பிளாக் gmail மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்த படங்கள் வெளியிடப்பட்டிருந்த அதே புத்தகத்தில் பிற்பகுதியில் வெளியாகியுள்ளது இந்தப் படம்.
நீக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குSD Subbalakshmi
நீக்குYesssoo yessu
நீக்கு:))
நீக்குதேர்தல் நடக்கும் நாட்களில் ஊரில் இருந்தால் நானும் கணவரும் கட்டாயம் வோட் செய்வோம்.
பதிலளிநீக்குமிக நன்று. வாழ்க!
நீக்குமுன்னாட்களில் வரும் ஹார்லிக்ஸ் விளம்பரம்,
பதிலளிநீக்குசுசித்ராவின் குடும்பம்
லக்ஸ் ஸோப், காம்ப்ளான் எல்லாம் பிடிக்கும். காட்பரீஸ்
எக்ளேர் விளம்பரம் ரொம்பவே பிடிக்கும்/
இவை எல்லாமே வீட்டில் இருப்பது உண்டு.
ஆர்வமான பதிலுக்கு நன்றி.
நீக்குஎனக்கு லக்ஸ் விளம்பரதாரர்கள்ட கேட்கணு. யப்பா...உங்க சோப்பைப் போட்டு அப்போ கவர்ச்சியா இருந்தவங்க, போகப் போக காணச் சகிக்க முடியாத அளவு மாறிட்டாங்களே.. அதுதான் உங்க சோப்பின் ரகசியமா என்று. ஹாஹா.
நீக்குவிளம்பரத்தில் நடித்த யாருமே அந்த சோப்பை பயன்படுத்தியிருக்கமாட்டார்கள்.
நீக்கு//விளம்பரத்தில் நடித்த யாருமே அந்த சோப்பை பயன்படுத்தியிருக்கமாட்டார்கள்.// அந்த சோப்பை பயன்படுத்தவே முடியாது. ஏனென்றால் அது சோப்பே கிடையாது. சோப்பு போல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் வில்லையாம். விளம்பரங்கள் நிறைய டேக் எடுக்க வேண்டி வரும் என்பதால் சோப்பு கொழகொழவென்று ஆகி விடக்கூடாது, கரைந்து விடக் கூடாது எனவே நிஜ சோப்பை பயன்படுத்த மாட்டார்களாம். விளம்பர படங்கள் எடுக்கும் ஒரு புகைப்பட கலைஞர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஐஸ்க்ரீம்கள் சம்பந்தப்பட்ட விளம்பர படங்கள் எடுப்பதுதான் மிகவும் சவாலான விஷயமாம். விளக்குகளின் உஷ்ணத்தில் ஐஸ்க்ரீம் உருகிவிடும் என்பதால் எல்லாவற்றையும் ரெடி செய்த பிறகு கடைசியில்தான் ஐஸ்க்ரீமை வைப்பார்களாம். நிறைய ஸ்டாக் வேறு ஃபிரீசரில் வைத்திருப்பார்களாம்.
நீக்குஅட அப்படியா!ஆனாலும் லக்ஸ் சோப் மிகவும் விலை மலிவான சோப். அந்த விளம்பரத்தில் நடிக்கும் கோடீஸ்வர நடிகைகள், வீட்டில் அதை உபயோகிக்கமாட்டார்கள் என்பதுதான் நான் சொல்ல வந்தது.
நீக்கு4 ஆவது கேள்விக்கு ஆம் என்பதே பதில்.
பதிலளிநீக்குஎப்பொழுதும் ஒரே ப்ராண்ட் தான்.
இந்த ஊருக்கு வந்த பிறகு நாறிவிட்டது.
பயந்துபோனேன்! மாறிவிட்டது தான் இப்படி ஆயிற்றா!!
நீக்குhahahahhahahahahahahahahahahahhahaah. மாறித்தான் விட்டது. மன்னிக்கவும்.
நீக்குஎல்லோருமே புரிந்துகொள்வார்கள்; கவலை வேண்டாம்.
நீக்குஎஸ்.டி. சுப்புலக்ஷ்மி படம் பார்த்தேன். சயனக் கோலத்தில் கிருஷ்ணர்:)
நீக்கு//இந்த ஊருக்கு வந்த பிறகு நாறிவிட்டது.//நான் சாதாரணமாக நகைச்சுவை துணுக்குகள் படித்தால் வாய்விட்டு சிரிக்க மாட்டேன். இன்று இதைப்படித்ததும் வாய் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன். வாழ்க தட்டச்சுப் பிழை!
நீக்குபி.கு. இந்த பதிலை டைப் பண்ணும் பொழுது ஏகப்பட்ட பிழைகள் வந்தன. கவனமாக திருத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இரசிப்புக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நல்லவிதமாக அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஆம், அதே, அதே. நன்றி.
நீக்குநல்லா இருக்கு உங்க கேள்விகள் எல்லாம். நாம் எப்போவுமே திப்பிசத்தையே அதிகம் விரும்புவோம். என்றாலும் தொலைக்காட்சி இல்லாட்டியும் யூ ட்யூப் பார்த்துச் செய்தவை முத்துக்குழம்பும், சவரன் துவையலும். அதுவும் நான் அதெல்லாம் பார்க்கிறது எப்போவானும் தான். விடாமல் பார்த்து என்னைத் தொந்திரவு செய்து பண்ணச் சொல்லுவது நம்மவர் தான். முத்துக்குழம்பு என்பது ஒண்ணுமே இல்லை, மணத்தக்காளி வற்றல் போட்ட ஒரு வகை மிளகு குழம்பு என்பதைப் புரிந்து கொண்டபின்னர், சவரன் துவையல் என்பது பருப்புத் துவையல் என்பதும் புரிந்த பின்னர் அந்தச் செய்முறையை மறுபடி பார்க்காமல் செய்தேன்.
பதிலளிநீக்குஅட! அப்படியா! பெயர்களை மட்டும் கவர்ச்சியாக வைத்து, புதிய மொந்தையில், பழைய கள்ளை விற்பனை செய்கிறார்கள் போலிருக்கு!
நீக்குஇல்லை, பெயரும் பழைய பெயர் தான்.
நீக்கு:))
நீக்குஆமாம், அது நினைவில் இருந்ததால் தான் மறுபடியும் யூ ட்யூபில் எப்படிப் பண்ணணும்னு பார்க்காமல் நானாகவே செய்தேன். :))))) மனோ சாமிநாதன் கூட சுமார் 40 வருஷங்களுக்கு முந்தைய மங்கையர் மலரில் இந்தக் குறிப்புப் படித்த நினைவு இருப்பதாகச் சொன்னார். :)
நீக்குஆனால் இதை எல்லாம் பார்த்தாலும் "என்னோட செய்முறை" என ஒன்று உண்டே. அதுபடித் தான் செய்வேன். ஶ்ரீராம் போட்ட சரவணபவன் சாம்பாரிலும் நான் அதைக் கடைப்பிடித்துத் தான் பண்ணினேன். :))))))))
பதிலளிநீக்குஎன் வழி, தனீ வழி என்கிறீர்களா!
நீக்குஎதுக்கு கிளாஸுக்குப் போவானேன்... வாத்தியார் சொல்லித் தந்த மாதிரி எழுத மாட்டேன், நானே புதுவிதமா எழுதுவேன் என்று சொல்வானேன்.
நீக்குஎனக்கு நேற்று ஒரு கன்ஃப்யூஷன். தேங்காய் சீயனுக்கு, தேங்காய்/வெல்லம் அளவு என்ன என்பதில் கருத்து வேறுபாடு (இங்க மூணு பேருக்கு). பாரம்பர்யமா 1க்கு 1/4 என்பது ஒரு கட்சி, நான் 1க்கு 1 போடலாமே என்று நினைத்தேன் (பி.கொ பண்ணுவதுபோல). சரி நம்ம சீனியர் (ஹாஹா) என்ன சொல்றாங்கன்னு பார்த்தால், அவங்க சொல்றது இப்படி இருக்கு.
ஒரு மீடியம் சைஸ் தேங்காய்க்கு ஒரு கிண்ணம் வெல்லம். அட ஆண்டவா. எந்த மீடியத்தில் படித்த தேங்காய் என்று நான் தேடுவேன். கிண்ணம் என்பது cupஆ இல்லை அவங்க வீட்டுப் பாத்திரமா இல்லை சரவணபவனில் டிபனோடு கொடுக்கும் சாம்பார் கிண்ணமா? அதைவிட, அழுத்தி எடுக்காத 1 கப் தேங்காய் துருவலுக்கு இவ்வளவு வெல்லம், அல்லது அழுத்தி எடுத்த தேங்காய் துருவல் 1 கிண்ணத்துக்கு இவ்வளவு வெல்லம் என்று எழுதப்படாதோ? என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு இதுதானே புரியும்? இதுதான் 'தனீ வழி' போலிருக்கு (சும்மா கலாய்த்தேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேண்டாம். ஹாஹா)
ஹா ஹா !!
நீக்குஹிஹிஹி, நெல்லையாரே, படிக்கிற காலத்திலேயே இப்படித்தான். தமிழுக்குக் கோனார் உரையும் ஆங்கிலத்துக்கு மிராண்டா உரையும் படிச்சாலும் எழுதும்போது நானாகத் தான் எழுதுவேன். அப்படியே பழக்கம் ஆகி விட்டது. :( சரியா, தப்பானு தெரியாது. சின்ன வயசில் அம்மாவோ, அப்பாவோ சமைக்கும்போது வந்து சொல்லிக் கொடுத்தால் கோபம் வரும்! நீங்கல்லாம் போனால் தான் சமைப்பேன்னு சொல்லி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திடுவேன். ஆனாலும் அப்பா கேட்க மாட்டார். தாளிக்கக் கடுகு எடுக்கிறதிலே இருந்து சொல்லிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பார்! :))))
நீக்குஅளவெல்லாம் பார்த்துச் செய்தால் இப்படித் தான் மண்டையைக் குழப்பிக்கணும் நெல்லையாரே! நான் எழுதும்போது மத்தவங்களுக்காக உத்தேசமா அளவைக் குறிப்பிட்டாலும் பண்ணும்போது கண் திட்டம் தான். தேங்காய்த் துருவலுக்கு ஏற்ற வெல்லத்தூளைச் சேர்த்துப் பூரணம் கிளறீனால் சிய்யம்/சுகியன்/சீயம் எதுவேண்டுமானாலும் பண்ணலாம். அல்லது கொழுக்கட்டையே கூடப் பண்ணிடலாம். :)))))
நீக்குஎன் வழிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழி!
நீக்குஹா ! இவ்வளவு ஈ இருக்கும் சமையலா! நான் ஓடிடறேன் !!
நீக்கு// ஆங்கிலத்துக்கு மிராண்டா உரையும் படிச்சாலும்// அது மினர்வா உரை என்று நினைக்கிறேன். மிராண்டா,பெப்சி எல்லாம் குளிர்பானங்கள். இது எப்படி நெல்லையார் கண்களில் தப்பித்தது? கீதா அக்காவின் உரையில் தப்பு கண்டுபிடித்து விட்டேன். ஹாஹா! today is my day:)))
நீக்கு//கடுகு எடுக்கிறதிலே இருந்து சொல்லிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பார்! // எல்லாருக்கும் சொல்லித் தரும் கலை வராது. எனக்கும் அந்த குணம் உண்டு. என் பெண் 8ம் வகுப்பு படிக்கும்போதே, நான் தளிகை பண்ண சில விஷயம் சொல்லித்தரவா என்றதற்கு, இல்லப்பா, உங்ககிட்ட கத்துக்க முடியாது, நான் எடுக்கறதுக்குள்ளயே நீங்களே செய்ய ஆரம்பித்துடுவீங்க என்று சொல்லிட்டா. அப்புறம் யோசித்துப் பார்த்தேன்..... I will always feel I will do it faster than communicating. இது ஒரு bad குணம்தான்.
நீக்குYes Banumathy, It is Minerva! Sorry, தொ(ல்)லைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்துண்டே எழுதினதன் விளைவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கே எனக்கு!
நீக்குIn that S S L C Minerva guide one of the lessons (which my elder brother studied) was " Ferdinand and Miranda". So, I think G S got confused about the name of the guide.
நீக்குYes, me too. It was part of "The Tempest" from Shakespeare I think!
நீக்குcorrect.
நீக்குFull fathom five thy father lies
நீக்குOf his bones are coral made;
I too studied the same book in April 1968.
My brother studied it in March 1965!
Ariel's song.
நீக்குநெல்லை கேள்விக்கு *ஶ்ரீராமும் பதில் சொல்லி இருக்காரே? :))))))
பதிலளிநீக்குஅட! அப்படியா!!
நீக்குஇஃகி,இஃகி,இஃகி,இஃகி!
நீக்குதொலைக்காட்சி விளம்பரங்கள் இப்போதெல்லாம் கலாச்சாரத்தை மாற்றக் கூடியதாகவும், கெடுக்கக் கூடியதாகவும் தவறான கருத்தை இளையதலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதாகவும் வருகின்றன. திருமணமே வேண்டாம், சேர்ந்து வாழலாம் என்னும் கருத்தை ஒரு தேநீர் விளம்பரமும், இன்னொரு விளம்பரம் திருமணம் ஆனாலும் குழந்தைகள் வேண்டாம், சொந்த பிசினசும், விருதுகளும், வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் இருந்தால் போதும் என்னும் கருத்தையும் திணிக்கிறது. இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் குழந்தையே இல்லாமல்? கடைசியில் எல்லா இந்தியர்களும் இப்படி நினைக்க ஆரம்பித்தால் விரைவில் இந்தியாவில் வயதானவர்கள் மட்டுமே இருப்பார்கள். விரைவில் இந்தியர்களே இருக்க மாட்டார்கள்.
பதிலளிநீக்குதனிமரம் தோப்பு ஆகாது. கவலை வேண்டாம்!
நீக்குஅதே மாதிரி, தோப்பும் தனிமரமாக முடியாது!
நீக்கு:))
நீக்குநேரம் ஆகிவிட்டது. பின்னர் வரேன்.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்குஎனக்குப் பிடித்த, நான் செய்யும் வாய்ப்புள்ள சமையல் குறிப்புகளை எழுதி வைப்பேன். குறிப்புப்படிதான் செய்வேன். உதாரணமா மசாலாவடை செய்குறிப்பு சமையல் திலகம் நளபாகச் சக்கரவர்த்தி கேஜிஜி சார் எழுதியதை செய்யலாம் என நினைத்திருந்தால், அதில் பேண்டு, சோம்பு சேர்க்கச் சொல்லி அதி எனக்குப் பிடித்தமில்லை என்றால் அவைகளைச் சேர்க்கமாட்டேன். அளவைத் தவறாகப் போட்டு (அதாவது செய்முறை எழுதியவர்) அதனால் நான் செய்தது சொதப்பினால், இனி அவர் எழுதும் எந்தக் குறிப்பையுமே கன்சிடர் பண்ண மாட்டேன், இல்லாவிடில் இணையத்தில் பலருடைய குளிப்புகளையும் படித்து கன்ஃபர்ம் செய்துகொண்டுதான் பண்ணுவேன்.
பதிலளிநீக்குசெஃப் தா அவர்களின் ரிப்பன் பகோடா காணொளியில், பொட்டுக்கட மாவு லை 1/2 கப் என்றும் சொல்லும்போது 1/4 கப் என்றும் இருந்தது. இரு முறைக்கு மேல் அப்பட 1/4 கப் என்று சொல்லியதால் அதன்படி செய்தால் எண்ணெயில் போட்டதும் டிஸ் இன்டக்ரேட் ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல் மனைவியின் உதவியை நாடினால், 1/8 அளவுக்குமேல் பொட்டுக்கடலை மாவு போடக்கூடாதே என்றாள். அளவெல்லாம் சொதப்பி, அரிசி மாவு சேர்த்து, ஒரு ஈடே திருப்தியாக வரலை. மீதி மாவை அவளிடம் கொடுத்து எதையாவது பண்ணி செலவழித்துக்கொள் என்று சொல்லிட்டேன். இதில் அதிசயம் என்னவென்றால் அந்த காணொளி கீழோ சிலர், செய்துபார்த்தேன் சூப்பராக வந்தது என எழுதியிருந்ததுதான். அப்போதுதான் தெரிந்தது காணொளி கீழே பின்னூட்டம் எழுதுபவர்கள் உண்மையை எழுத வேண்டியதில்லை என்பது. ஹாஹா
விளக்கமான, நகைச்சுவையான பதிலுக்கு நன்றி. ( // இணையத்தில் பலருடைய குளிப்புகளையும்.. // ) இணையத்தில் இதெல்லாம் வேற பார்க்கிறீர்களா!! சொல்லவே இல்லே !!
நீக்குநான்(ங்கள்) ஒரு காலத்தில் பார்த்ததெல்லாம் லிரில் சோப் விளம்பரக் குளியல்தான். மற்றபடி வேறு குளியல்கள் இணையத்தில் இருந்தால் அதைப் பார்த்திராதவர்கள் இருப்பார்கள் என்றா நினைக்கறீங்க?
நீக்குநான் பார்த்திருக்கேன் சுவாமி.
நீக்குஎத்தனை எழுத்துப் பிழை! அது சரி நெல்லையாரே அது யாரு செஃப் தா? புதுசா இருக்காங்களே! பொட்டுக்கடலை மாவெல்லாம் நிறையப் போட்டால் பிழியும்போதே ஓட்டு பக்கோடா கரைந்து விடும். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பெயருக்குப் போட்டுக்கணும். பொட்டுக்கடலை மாவு போட்டால் வெண்ணெய் சேர்க்காமல் அரைக்கரண்டி எண்ணெயைச் சூடாக மாவில் விட்டுப் பிழிந்தால் போதும்.
நீக்குமன்னிக்கணும். ஐபேட்ல நான் நினைக்கும் வேகத்துக்கு அது வேலை செய்யறதில்லை. திரும்ப படித்து போஸ்ட் செய்ய நினைப்பதில்லை. எனக்கே படிக்க நாராசமா இருக்கு. இனி ரொம்பவே கவனமாக இருக்கறேன்.
நீக்குஎனக்கு ஒன்று சரியாக வரலைனா, சட்டுனு விட்டுடமாட்டேன். இப்போ 1 கப் அரிசி மாவு, 1/4 கப்புக்கு துளி அதிகமா கடலை மாவு, 1/4 கப்பில் பாதி அளவுக்கு பொட்டுக்கடலை மாவு, மற்ற சமாச்சாரங்கள் போட்டு செய்த ஓட்டு பகோடா (ரிப்பன் பகோடா) நல்லா வந்திருக்கு. டேஸ்ட் தெரியலை. இரவுதான் தெரியும்.
சொதப்பின ரெசிப்பில 1க்கு 1/4 பொ.கடலை மாவு + 25 கிராம் வெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த எண்ணெய் எல்லாம் போட்டு, வேஸ்ட் ஆனதுதான் மிச்சம் (அந்த மாவை அட்ஜஸ்ட் செய்து தோசை வார்த்துடுவேன் என்று மனைவி சொன்னது மட்டும்தான் எனக்கு ஆறுதல் ஹாஹா)
எனக்கு எல்லா விளம்பரங்களுமே பிடிக்கும். சட் என அடுத்த சேனலுக்குப் போய் அங்குள்ள நிகழ்ச்சியை சிறிது பார்க்க வாய்ப்புத் தருவதால்.
பதிலளிநீக்குஅது சரி.. உங்களை எரிச்சலூட்டும் விளம்பரம்(ங்கள்) என்னன்ன?
அதை அடுத்த வார கேள்வியா கேட்டுடுவோம்!
நீக்குவிளம்பரத்தை வைத்து நான் எதையும் வாங்குவதில்லை. விளம்பரங்களே போலி என்பது என் அபிப்ராயம்.
பதிலளிநீக்குநல்ல பொருளுக்கு எதுக்கு விளம்பரம் தேவை? உதாரணமா 90களில் லேக்டோ(பெயர் சட்னு நினைவுக்கு வரலை) சாக்கிலேட் ரொம்ப ஃபேமஸ். ஆனா வியாபாரிகள் அதை டிஸ்டிரிபியூட்டரிடமிருந்து தேவையானதை வாங்க முடியாது. ரெண்டு பெரிய பாக்கெட் வேணும்னா மற்ற ஃ்ளேவர் சாக்கிலேட்டுகள் 6 பாக்கெட் வாங்கணும்னு தலைல கட்டுவாங்க. சிந்தால் சிவப்பு(?) நிற பாக்கெட்டுக்கான விளம்பரத்தை விட மற்ற நிறங்களுக்குத்தான் அதிக விளம்பரம் செய்வாங்க
அட! புதிய தகவலாக இருக்கே! எனக்கு சிவப்பு லேபிள் வாட்டர்பரீஸ் காம்பவுண்ட் விளம்பரம் ஞாபகத்திற்கு வருகிறது. மஞ்சள் லேபிள் வா ப கா வும் இருந்தது.
நீக்குவிளம்பரத்துல frauds அவதானிக்கணும்னா, எல்லா வித பேஸ்ட், சிவப்பு கிரீம் மற்றும் மற்றவற்றையும் பாருங்க. டிஸ்கிளெய்மர்ஸ், அந்த விளம்பரமே உண்மைத் தன்மை கிடையாது என்று சொல்லும், மற்றும் அதில் வரும் டாக்டர்கள் யாருமே இந்தியாவைச் சேர்ந்தவங்களா இருக்க மாட்டாங்க (கீழ சின்னதா, இங்கிலாந்து டாக்டர் என்றெல்லாம் போட்டிருப்பாங்க, ஆனால் இந்திய முகத்தோட).
நீக்குநான் சின்னப் பையனா இருந்தபோது உமிக்கரி உபயோகித்திருக்கேன். கொஞ்சம் பந்தாவாக, மாமா வீட்டில், இன்னொரு மாமா அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்த கால்கேட் உபயோகித்திருக்கேன். இப்போ பார்த்தா விளம்பரத்துல டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா, கரி இருக்கா, வேப்பங்குச்சி இருக்கா, மூலிகை இருக்கான்னு அதே பசங்க கேட்கறாங்க. கொஞ்சம் விட்டால் விரலால பல் தேய்க்கிற மாதிரி ஒரு பிளாஸ்டில் விரலையே இலவசமா தந்துடுவாங்க போலிருக்கு.
:))))
நீக்குஅந்தச் சாக்லேட் பெயர் லாக்டோ பான் பான்! ரொம்ப ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். அப்போல்லாம் யாரானும் வாங்கிக் கொடுத்தால் கூட இதைக் குறிப்பிட்ட் வாங்கித் தரச் சொல்லுவோம். இன்னொன்று காட்ஃபரீஸ் எக்ளேர்ஸ் வருவதற்கு முன்னாலேயே ஒரு போர்ன்விடா டின்னில் வந்த சாக்லேட்டுகள். ஆஹா, ஓஹோ!
நீக்குபொதுவாகவே எனக்கு எந்தப் பொருளையும் உடனே வாங்கும் எண்ணம் வராது. அது தேவையா? பின்னாலும் பயன் அளிக்குமா, நீடித்து வருமா என்றெல்லாம் யோசிப்பேன், விளம்பரம் பார்த்து வாங்கியதெனில் அது பதஞ்சலி பொருட்கள் தான். அதுவும் அவருக்குத் தான் இதில் ஆர்வம். உடனே வாங்கி வந்துட்டார். இப்போவும் விளம்பரத்தில் வரும் அந்த மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் சின்ன டேபிள் எனக்கு வாங்கித் தரேன்னு சொல்லிண்டே இருக்கார். நான் தான் சம்மதம் கொடுக்கலை. :) ஆனால் பொதுவாக எந்தப் பொருளையும் ப்ராண்ட் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவது பிடிக்காத ஒன்று. மளிகைக் கடை கூட மாற்ற மாட்டேன். அதே அவர் நேர் மாறாக ஒவ்வொரு பொருளை ஒவ்வொரு கடையில் வாங்குவார். இப்போத் தான் கொரோனா, லாக்டவுன் காரணமாகக் கீழே உள்ள கடைகளிலேயே வாங்கிக்கறோம். இல்லைனா உள்ளே சித்திரை வீதிக்குப் போகணும் வாடிக்கைக் கடைக்கு!
நீக்கு// எக்ளேர்ஸ் வருவதற்கு முன்னாலேயே ஒரு போர்ன்விடா டின்னில் வந்த சாக்லேட்டுகள்.// " போர்ன்விடா டின்னில்.. " எவர்சில்வர் வெண்கலப்பானை போலவா போர்ன்விடா டின் சாக்கலேட்?
நீக்குஎங்க ஊர்ல எல்லாம் போர்ன்விடா டின்னில் போர்ன்விடாதான் வரும்!
நீக்குஹாஹாஹா, அது சாக்லேட் டின் தான். அளவு போர்ன்விடா டின் அளவில் இருக்கும். ஆனால் போர்ன்விடா இருக்காது! முழுக்க முழுக்க சாக்லேட்! காட்ஃபரீஸ் காரங்களோடதோ? நினைவில் வரலை. ரொம்பச் சின்ன வயசு அப்போ!
நீக்குஅட! எவர்சில்வர் வெண்கலப்பானையை வெளியே எடுக்கறதுன்னா கொஞ்சம் நாளாகும்னுஜ் சொன்னேனே! அது மேலே வைத்திருக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பெட்டியை எடுக்கணும் முதல்லே! நேரம் வரட்டும்!
நீக்கு//மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் சின்ன டேபிள்// - என்னைப் பொறுத்த வரையில், சின்னக் குழந்தைகளுக்கு ஓகே. நமக்கு அது சரிப்படாது. ரொம்ப fragile. அதுனால மாமாவின் decision மிகச் சரியானது.
நீக்குஎது? மாமா அந்த டேபிளை எனக்கு வாங்கித் தரேன்னு சொன்ன டெசிஷனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அநியாயமா இல்லையோ? நான் குறுக்கே விழுந்து தடுக்கலைனா இத்தனை வருஷங்களில் இப்படி எத்தனையோ சாமான்களை வாங்கி இருப்பார். இப்போதைய ட்ரென்ட் இன்வெர்டரில் ஓடும் மிக்சி! துடித்துக் கொண்டிருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காசுக்குப் பிடிச்ச கேடு! :(
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இன்று ஸ்ரீஜெயந்தி கொண்டாடும் அன்பர்களுக்கு ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்! முறுக்கும்,சீடையும் வெடிக்காமல் நன்றாக வரட்டும்.
பதிலளிநீக்குஹரே கிருஷ்ணா ! நாங்களும் ஸ்ரீகிருஷ்ணா படம் போட்டிருக்கோம்!!
நீக்குமுறுக்கு வெடிக்கவில்லை (அது வெடிக்கும் என்று இதுவரை கேள்விப்படலை). மனைவி சூப்பரா பண்ணியிருக்கா. சீயன் (பருப்பு மற்றும் தேங்காய்), மனஹோரம் நான் பண்ணிட்டேன். உப்புச் சீடை/வெல்லச் சீடை இனித்தான் பண்ணப்போறாங்க. நானும் கொஞ்சம் வெல்லச் சீடை பண்ணலாமான்னு யோசனைல இருக்கேன். அப்புறம் தேன்குழல், இன்னொரு டைப் மனஹோரம் பண்ணலாமான்னு யோசனை.
நீக்குகூரியரில் எனக்கு அனுப்பவும்.
நீக்குசீடை கட்டாயம் வெடிக்கும். முறுக்கு ஒரு முறை எங்க மாமியாருக்கு வெடிச்சிருக்கு. மனோஹரம் எங்க பக்கமெல்லாம் நல்ல கனமாகப் பிழிந்து நிறைய வெல்லம் போடுவார்கள். தஞ்சாவூர்ப் பக்கம் உளுத்தமாவுத் தேன்குழலைப் பிழிந்து உடைத்துக் கொண்டு அதில் வெல்லம் சேர்ப்பார்கள். நாங்க அப்படிப் பண்ண மாட்டோம். அரிசி மாவு+கடலைமாவு+பொட்டுக்கடலை மாவு+உளுத்தம் மாவு சேர்த்துத் தேன்குழலாகப் பிழியும் நல்ல கனமானதாக வரும்படி பிழிவோம்.கிருஷ்ண ஜயந்திக்கு எங்க வீட்டில் திரட்டுப் பால் உண்டு. அதைத் தவிரவும் வடை, பாயசமும் உண்டு.
நீக்குஇன்றும் நாளையும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடும் அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள். இங்கே ஶ்ரீரங்கத்தில் இன்று ஶ்ரீஜயந்தி. நாளை உறியடி.
நீக்கு//மனோஹரம் எங்க பக்கமெல்லாம்// - ஹல்ல்ல்ல்ல்லோ.. மனோஹரம் எங்க நெல்லைக்கான இனிப்பு. ஏரியாவிட்டு எங்க ஏரியாவுக்கு சொந்தம் கொண்டாட வேண்டாம். கபர்தார்.
நீக்குமனோகரம் இரண்டு ரெசிப்பில செய்வேன். நேற்று செய்த ரெசிப்பி புதியது. அதுனால சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் எப்படி வந்திருக்கு என்று. இன்னொரு முறையிலும் செய்யவா என்று கேட்டதற்கு, இப்போது பண்ணியிருக்கும் இனிப்புகளையே யார் சாப்பிடப்போறான்னு தெரியலை, வேண்டாம் என்று என் பாஸ் (அட.. வேற என்ன பண்றது, ஆர்டர் போடறவங்களை அப்படித்தான் கூப்பிடணும்) சொல்லிட்டா.
நாங்க, பொட்டுக்கடலை மாவு சேர்த்து விசேஷங்களுக்கு, கடவுளுக்குச் செய்ய மாட்டோம்.
பதில்கள்
பதிலளிநீக்குசமையல் குறிப்புகள் படிப்பேன். செய்யமாட்டேன். மனைவியார் அவருடைய டிபார்ட்மென்டை விட்டுக்கொடுக்கமாட்டார். பிரிட்ஜ் பக்கம் போனால் கூட எனன என்ன என்று பின்னாடியே வந்து விடுவார்.
தற்போதைய விளம்பரங்கள் பிடிப்பதில்லை. கொஞ்சம் நினைவுக்கு வருவது ஹமாம் மற்றும் எக்ஸல் விளம்பரம் தான். என்ன இருந்தாலும் பழைய லிரில், லிப்டன் லாவோஜி, லக்ஸ் போன்ற என்றும் நினைவில் நிற்பவை தற்போது இல்லை.
குறிப்பிட்ட பற்பசை சோப்பு போன்றவற்றை தொடர்வது இல்லை. பற்பசை நீம் தொடர்ச்சியாக உபயோகித்து கொண்டிருந்தேன். தற்போது கோல்கேட் தான். சோப்பு தற்போது மெடிமிக்ஸில் இருந்து லைஃப்பாய் க்கு கொரான காரணம் மாறிவிட்டேன்.
தவறாமல் வோட்டு போடுவேன்.
படத்தில் இருப்பவர் எஸ்.வரலட்சுமி என்று நினைக்கிறேன்.
Jayakumar
விவரமான கருத்துரைக்கு நன்றி. படத்தில் இருப்பவர் அவர் இல்லை.
நீக்கு5000 வருஷ பாரம்பரியம் என்பதைக் கேட்டாலேபிடிக்கவே பிடிக்காதுமுன்பு ஹார்லிஸ் விளம்பரத்தில் வரும் இப்போதைய நடிகை நடித்ததுபிடிக்கும்
பதிலளிநீக்குஅது யாரு?
நீக்குத்ரிஷா?
நீக்குபடத்தில் இருப்பவர் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா!(எப்பூடி?)அதை ஒப்புக் கொள்ள முடியாதவர்கள் எஸ்.வரலட்சுமி என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்களா?
பதிலளிநீக்குஹா ஹா இது சூப்பரா இருக்கே!
நீக்குநான் இதுவரையிலும் வோட் செய்ததில்லை. இனிமேல் நோட்டோவுக்கு செய்வதாக உத்தேசம்.
பதிலளிநீக்கு(இதுகூட எனது வோட் பிறருக்கு பயனாகி விடக்கூடாதே என்ற 'கெட்ட' எண்ணமே காரணம்)
நடத்துங்க, நடத்துங்க!
நீக்குதேவக்கோட்டை தேவராஜூ சுயேட்சையாக நின்றால் அவருக்கு வோட் போடுவீங்களா ?
நீக்குநாங்க ஓட்டுப் போடுவதைத் தவிர்த்ததே இல்லை. ஊரில் இருந்தால் ஓட்டர்கள் பட்டியலில் எங்கள் பெயரும் இருப்பதை முன் கூட்டியே பார்த்து வைத்துக் கொண்டு காலையிலேயே ஏழரைக்குள்ளாகப் போய்ப் போட்டுவிட்டு வந்துடுவோம்.
நீக்குபற்பசை, சோப்...... - எனக்கு ஒரு விநோத பழக்கம் உண்டு. பற்பசை 3 வகை, சோப் - 4 வகை, எண்ணெய் இரண்டு வகை, ப்ரஷ் 3-4, செண்ட்-7 வகை என்று வைத்துக்கொள்வேன். அன்றைக்கு என்ன மூடோ அதன்படி உபயோகிப்பேன். என்னவோ நான் இப்படியே பழகிட்டேன் கடந்த 20 வருடமாக. ஆனால் முடிந்த அளவு இந்திய ப்ராண்டுகள் மட்டும்தான் உபயோகிப்பேன் (20 வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டு ப்ராண்டுகளை ஆரம்பத்தில் உபயோகித்தது தவிர)
பதிலளிநீக்குவாக்களிப்பது - அதற்கான வாய்ப்பு ரொம்ப அபூர்வம். அப்படி வாய்ப்பு கிடைத்தபோது வாக்களித்திருக்கிறேன்.
விசித்திரமான ஆளாக இருக்கிறீரே!
நீக்குநாங்களும் சின்ன வயசில் உமிக்கறிதான்! அதன் பின்னர் கோல்கேட் பவுடர். பேஸ்டை விட இது நன்றாக இருக்கும். அதன் பின்னர் பற்களில் பிரச்னை வந்த பின்னர் ஆயுர்வேதப் பல்பொடி! மாத்திரைகளாகக் கிடைக்கும். அதைப் பொடி செய்து வைத்துக்கொள்வேன். இப்போது பதஞ்சலி தான் ஐந்தாறு வருஷங்களாக. மாற்றுவதில்லை. ஒரே ஒருதரம் மெஸ்வாக் பயன்படுத்தி இருக்கேன். விமானப் பயணங்களில் அநேகமாக மெஸ்வாக் தான் கொடுக்கிறாங்க. ஓட்டல்களிலும் அதான் வைக்கிறாங்க.
நீக்குஇப்போ நான், மெஸ்வாக், க்ளோஸப், டாபர் ரெட் வைத்திருக்கிறேன். பொதுவா கோல்கேட்டை தவிர்க்கிறேன். பதஞ்சலிமேல நம்பிக்கை வராததுனால இன்னும் அந்த பிராண்டை உபயோகித்ததில்லை. கோல்கேட் பவுடருக்கு முன்னால இன்னொரு பவுடர் (வெள்ளையா காரமா இருக்கும்) பல்பொடி வந்தது. அது ரொம்பவே நல்லா இருந்தது.
நீக்கு//கோல்கேட் பவுடருக்கு முன்னால இன்னொரு பவுடர் (வெள்ளையா காரமா இருக்கும்) பல்பொடி வந்தது. அது ரொம்பவே நல்லா இருந்தது.// அது பயோரியா பல்பொடி. நஞ்சன்கூடு நம்பூதிரி பல்பொடியும், குரங்குமார்க் பல் பொடியும் கூட நன்றாக இருக்கும்.
நீக்குபயோரியாதான். இப்போவும் இருக்கா? ஹாஸ்டலுக்கு அதைத்தான் கொண்டு சென்றிருந்த நினைவு.
நீக்குபுதன் கேள்வி - டயபடிஸ் வருவதற்கு இந்த பற்பசைகளும் ஒரு காரணமா? இல்லை பற்கள் பாதிக்கப்படுவதற்கு மட்டும்தான் காரணமாக இருக்கா? வெல்லச் சீடைக்குப் போடற மாதிரி இனிப்பு சேர்க்கறாங்க. அதுதான். ஹாஹா
பதில் சொல்கிறோம்!
நீக்கு1. முன்பே ஒரு முறை இந்த கேள்வியை யாரோ கேட்டிருந்த நினைவு. அப்போது சொன்ன அதே பதிலையே இப்போதும் சொல்கிறேன், முதல் முறை செய்யும் பொழுது சமையல் குறிப்பி குறிப்பிட்ட அதே அளவை போடுவேன். பிறகு எங்கள் ரசனைக்கேற்ப மெட்ரிக் கொள்வேன்.
பதிலளிநீக்கு2. ஹமாம் சோப், ப்ரு காபி, லிப்டன் த்ரீ ரோஸஸ், சர்ஃப் எக்ஸெல்,லேஸ் சிப்ஸ், குட் டே பிஸ்கட், எப்போதுமே காட்பரீஸ்(குறிப்பாக Fuse) விளம்பரங்கள் பிடிக்கும். காரணம் என்ன? பொருள்களை விளம்பரபடுத்துவதோடு கொஞ்சம் மனித நேயம், லேசான குறும்பு, சொல்ல வந்ததை அப்படியே சொல்லாமல் நம்மை கொஞ்சம் யோசிக்க வைப்பது இப்படி பல காரணங்கள்.
3. எல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் விளம்பரங்களைப் பார்த்து பொருள்களை வாங்கி ஏமாந்திருக்கிறேன்.
4. ஆமாம், அடிக்கடி இவற்றை மற்றும் பழக்கம் இல்லை.
5. நிச்சயமாக. அந்த ஜனநாயக கடமையை தவற விட்டதேயில்லை. சென்ற தேர்தலில் ஓட்டளிப்பதற்காக மெனக்கெட்டு சென்னை சென்றுவிட்டு, எங்கள் பெயர் அந்த லிஸ்டில் இல்லாததால் ஏமாற்றமும், கோபமும் வந்தது.
கடைசி கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன்.
நல்ல பதில்கள்! நன்றி. நீங்க கடைசி கேள்விக்கு சொன்ன பதில் தவறு.
நீக்குநம்மை நாமே பார்த்து நகைத்துக்கொள்ள வயதும் ஒரு காரணமாகலாம்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குஎனக்கு அந்த திரீ ரோஸஸ் - பணிப்பெண்ணுக்குத் தேநீர் ஊற்றிக் கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும்..
பதிலளிநீக்குநானும் இங்கு கீழ்நிலை பணியாளர்களுக்குக் கொடுப்பது வழக்கம்...
அப்படியா! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் !
நீக்குநாங்க அநேகமா தினமும் எங்க வீட்டில் வீட்டுவேலைகளுக்கு உதவும் பெண்ணுக்குத் தேநீர் போட்டுக் கொடுத்துட்டு நாங்களும் குடிப்போம்.
நீக்குமற்றபடி முகமெல்லாம் சாக்லேட்டை இழுப்பிக் கொள்வது..
பதிலளிநீக்குரவுண்டு மிட்டாய் கொடுத்தவனோடு காணாமல் போவது, நூடுல்ஸ் தின்றதும் அறிவாளி ஆகி விடுவது - இதெல்லாம் பிடிக்காது...
நடுச்சாலையில் தளுக்கிக் குலுக்கி ஆடியபடி மிராண்டா பாட்டிலாக மாறி விடுவது...
அட விதியே!...
ஏதோ ஒரு பானம் விளம்பரம்... பேட்ஸ்மேன் செஞ்சுரி அடித்ததும் கவுன் அணிந்த இளம்பெண் போலீஸ்காரருக்கு டிமிக்கி கொடுத்து, க்ரௌண்ண்ட் உள்ளே ஆடியபடியே செல்லும் விளம்பரம் நினைவுக்கு வருகிறது!
நீக்குஅட ! நம்ம ஸ்ரீராம்!! பார்த்து ரொம்ப நாளாச்சு! சௌக்கியமா?
நீக்குஆமா, இல்ல? ஶ்ரீராம் சௌக்கியமா?
நீக்குஸ்ரீராம் அவர்களுக்கு நல்வரவு...
நீக்குவாழ்க நலம்...
அட..! மேலே ஸ்ரீ ராமராவது வந்து கிருஷ்ணர் யாரென்று தெளிவாக்க வேண்டுமென கூறி விட்டு கருத்துரைப் படிகளில் இறங்கி வந்தால்,நிஜமாகவே ஸ்ரீராம் வருகை....!
நீக்குநலமாக இருக்கிறீர்களா சகோதரரே.. தாங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று தாங்கள் நலமாகி கருத்துடன் வந்ததற்கு கிருஷ்ணருக்கு மனம் நிறைந்த நன்றி சகோ.
//ஆமா, இல்ல? ஶ்ரீராம் சௌக்கியமா?// - ஆமாவா? இல்லையா? இதுலயே குழப்பமா?
நீக்குஸ்ரீஜெயந்தி அன்று ஸ்ரீராமின் வருகையா? ஒரே குழப்பமா இருக்கே. வாங்க வாங்க.
நீக்குஏன், ராமநவமி அன்றுதான் எதிர்பார்த்தீர்களா?
நீக்கு:))
நீக்குஆமாவா? இல்லையா.. வில் ஆரம்பித்த குழப்பங்களிலிருந்து, ஸ்ரீஜெயந்தியன்று எப்படி ஸ்ரீராமின் வருகை என ஒரே குழப்பமாக உணரும் நெல்லை சகோதரருக்கு இன்றிரவு ஸ்ரீ கிருஷ்ணர் வந்து "கிருஷ்ணரும், ராமரும் வேறு வேறல்ல.. நான் ஒருவனேதான்" என்று தெளிவுபடுத்தி, நீங்கள்.. நீங்களே செய்திருக்கும் பட்சணங்களை திருப்தியுடன் உண்டு சென்ற பின் குழப்பம் தீர்ந்து விடும்...
நீக்குஉங்களுக்கு எனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் நெல்லைத் தமிழர் சகோதரரே..
ஸ்ரீராம் வருகைக்கு வாழ்த்துக்கள்.
நீக்குநெல்லைத்தமிழருக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
நன்றி அனைவருக்கும், கமலா ஹரிஹரன் மேடத்துக்கும் சேர்த்து. //நீங்களே செய்திருக்கும்// - அனைத்தும் அல்ல. முருக்கு சுத்தினது அதன் ப்ரபரேஷன் என் மனைவி (சுத்தினது) மற்றும் அவள் அக்கா. பருப்பு, தேங்காய் சீயன், நான் செய்தேன். அப்புறம் மனோஹரம், தேன்குழல், ரிப்பன் பகோடா (இதெல்லாம் கிருஷ்ணர் சாப்பிட பல் இருக்குமான்னு கேட்கக்கூடாது சொல்லிட்டேன்). வெல்லச் சீடை நான் பண்ணி சரியா வரலை. உப்புச் சீடை அவங்க பண்ணிட்டாங்க. எனக்கு ரொம்ப ஆசை இது மாதிரி பட்சணம் பண்ண (அப்போத்தானே கத்துக்க முடியும்). இப்படியாக ஸ்ரீஜெயந்தி நிறைவுபெற்றது.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குகிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடியதற்கு மிக்க மகிழ்ச்சி. படசணங்கள் மிக அருமையாக உள்ளன. (கண்ணனோடு சேர்ந்து இவங்களுக்கும் எப்படி சுவை தெரியும் என எண்ண வேண்டாம். பட்சணங்களின் பெயர்ளை வைத்துச் சொல்கிறேன். ஹா ஹா.)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஊறுகாய்க்கு ஆடும் டான்ஸ் பற்றி கேட்க வில்லையே..
பதிலளிநீக்குஅது என்ன விவரம் ? சொல்லுங்க!
நீக்குஏதோ ஒரு ஊறுகா கம்பேனி..
நீக்குபெயர் மறந்து போனது..
அரையாடை அணிந்த விளம்பர நாரிகள்
டங்கு டக்கா.. டகர டக்கா!.. என்று ஆடியபடி ஊறுகாயை சுட்டு விரலால் வழித்து நடு நாக்கில் தடவிக் கொள்வார்கள்..
இங்கு என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை... தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதும் இல்லை..
எப்போதோ ஊரில் பார்த்தது..
அரையாடை மட்டும் பார்த்து, என்ன ஊறுகாய் என்று பார்க்காமல் விட்டுவிட்டீர்கள் போலிருக்கு!
நீக்கு!?...
நீக்குஉங்களுக்காகத்தான் பார்த்துப் பார்த்து
பதிலளிநீக்குமொளகா வாங்கறேன்...னு ஏதாவது பினாத்துனாங்க... ன்னா
அந்த வகையறா பக்கமே போக மாட்டேன்...
இத்தனைக்கும் எங்கள் வீட்டில் மசாலா அரைத்துத் தான் சமையல்...
ஊரில் விளம்பரங்களைக் கண்ட ஆத்திரம்
இங்கே குவைத்தில் அந்த மசாலாக்கள் சலுகை விலையில் கிடைத்தாலும் வாங்குவதில்லை...
அடப் பாவமே!
நீக்குநான்/நாங்க ஆச்சி மசாலா பொருட்களை எல்லாம் வாங்குவதே இல்லை. எல்லாமே வீட்டுத் தயாரிப்புத் தான். கரம் மசாலா கூட அவ்வப்போது தேவையானப்போப் பண்ணிப்பேன். இரண்டு மாசங்களுக்கு வரும். கடையில் வாங்குவதில் அம்சூர் பொடியும், கசூரி மேதியும் இருக்கும்.
பதிலளிநீக்குஅமசூர் வாங்கியிருக்கேன். க மே வாங்கியதில்லை. என்ன அது?
நீக்குகாய்ந்த வெந்தயக்கீரை. நாமே வாங்கிக் காய வைத்துக் கொண்டால் கடைகளில் வரமாதிரி இருப்பதில்லை. இரு முறை வெந்தயக்கீரை வாங்கி முயற்சி செய்து பார்த்தேன். சரியா வரலை அல்லது எனக்குத் தெரியலை! :)))) சப்பாத்திக்கூட்டுக்கெல்லாம் இறக்கும் முன்னர் இதை ஒரு கால் ஸ்பூன் எடுத்துக் கைகளால் தேய்த்துப் போட்டுவிட்டுக் கீழே இறக்கினால் வாசனை தூக்கும்!
நீக்குநெல்லைத் தமிழரின் கேள்வியும் உங்கள் பதிலும் அருமை.
பதிலளிநீக்குகேள்விகளுக்கு மற்றவர்கள் கொடுத்து இருக்கும் பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது படிக்க.
//உங்கள் ஓட்டுரிமை உள்ள ஊரில், நீங்கள் இருக்கும்பொழுது, நடந்த தேர்தல்கள் எல்லாவற்றிலும் நீங்கள் ---- //
ஒட்டுபோட்டு விடுவேன். ஒரு தடவை ஓட்டு லிஸ்டில் எங்கள் பேர் இல்லை என்று சொல்லி விட்டார்கள் அதனால் போடவில்லை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்வி, பதில் அருமை. முதலிரண்டு பதில்கள் மனம் விட்டு நகைக்க வைத்தன. விளம்பரங்கள் குறித்து கருத்துக்களில் வந்த ஏகப்பட்ட கருத்துக்களை படித்து ரசித்தேன். எதற்கெடுத்தாலும் அந்த விளம்பரத்தை நினைவு கூறுமளவிற்கு சில மறக்க முடியாது நம்மோடு என்றும் கலந்து விட்டது.
ஒரு தடவை நான் சென்று ஓட்டு போட்ட அந்த கட்சி ஜெயித்தவுடன் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். .
கடைசியிலாவது கிருஷ்ணர் யாரென புதிர் விலகுமென நினைத்தேன். அடுத்த புதன் கேள்வி பதிலில் இதன் பதில் இடம் பெறுமோ? ஒரு வேளை ஜி.வரலக்ஷ்மியோ?
பார்க்கலாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடுத்த புதன் பதிவில் சரியான பதிலை சொல்கிறோம்.
நீக்குகருத்துரைகளும் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு