வியாழன், 10 செப்டம்பர், 2020

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத கவிஞன் 

இந்த நீண்ட லாக் டவுன் காலங்களில் முதல் சில நாட்கள் டிப்ரெஷனிலேயே கழிந்தன.  பின்னர் சில த்ரில்லர் வகையறா படங்கள் அவ்வப்போது அமேசான் ப்ரைமிலும் நெட்ப்ளிக்சிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன்.  அப்புறம் படங்கள் பார்க்கவும் மூட் வரவில்லை!  

விட்டுப்போன புத்தகங்களை படிக்கலாம் என்று பார்த்தால், அவற்றை இன்னும் பிரித்து எடுக்கவே இல்லை.  மெல்ல மெல்ல பிரிக்கத்தொடங்கினேன்.  அவ்வப்போது சில புத்தகங்கள் கிடைத்தன.  வாங்கி வைத்தபோது எந்த சுவாரஸ்யத்தில் வாங்கி வைத்திருக்கிறேன் என்றே சில புத்தகங்களை பார்த்தபோது புரியவில்லை.  அப்போது சுவாரஸ்யமாயிருந்த சில புத்தகங்கள் இப்போது புரட்டக் கூடத் தோன்றவில்லை என்பது கொடுமை!  

அப்பா தனது டைரியில் கு அழகிரிசாமியின் கட்டுரைகள் புத்தகம் கிடைத்தது பற்றியும், படித்தது பற்றியும் மிக சிலாகித்துச் சொல்லி இருந்தார்.  அவர் கலெக்ஷனில் அப்படி ஒரு புத்தகம் இருந்தது பார்த்ததாக எனக்கு நினைவில்லை.  அப்படி என்ன சிறப்பு அதில் இருக்கக் கூடும் என்கிற என் எண்ணங்களுக்கிடையே ஒருநாள் அந்தப் புத்தகமும் கிடைத்தது.   நான் சென்னை வந்தபின் அவர் சேர்த்த கலெக்ஷன்களில் ஒன்று!



பிரித்துப் படிக்கையில் அதைத்தொகுத்தவரின் முன்னுரை அவர் செய்த முயற்சி, முஸ்தீபுகளைச் சொன்னது பிரமிப்பாய் இருந்தது.  அதில் சில பக்கங்கள் படித்தாலும் மனம் அதிலும் செல்லவில்லை.

லைட் ரீடிங் வகையறாக்களாக சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்.  சுஜாதாவின் ஓரிரு புத்தகங்கள் - மீள் வாசிப்புக்கு.  அப்பாவின் பைண்டிங்கிலிருந்து ராஜ திலகம் கிடைக்க, அதையும் வைத்துக் கொண்டேன்.   சில பழைய மஞ்சரி பொக்கிஷக் கலெக்ஷன்கள்..

புது வீட்டு கிரகப்ரவேசத்துக்கு 'எங்கள் ஆசிரிய மாமா' கேஜிவொய் வரும்போது சென்னையில் புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருந்தது.  'அங்கிருந்து உனக்கு ஏதாவது புத்தகமாக பரிசு கொடுக்கலாம் என்றால் என்ன புத்தகம் வேண்டும்' என்று கேட்டார்.  நான் பார்த்து வைத்திருந்து, விலை அதிகம் என்றதால் வாங்காமல் வைத்திருந்த புத்தகம் ஒன்று இருந்தது.  அப்போது அது 999 ரூபாய்.  என்ன பட்ஜெட் என்று கேட்டேன்.  'அதைப் பற்றி நீ கவலைப்படாதே' என்றார்.  சொன்னேன்.  அதை வாங்கி வந்து எனக்குப் பரிசளித்து விட்டார்.  இப்போது அதன் விலை 1200 ரூபாய்.



அந்தப் புத்தகம் முகில் எழுதிய 'அகம் புறம் அந்தப்புரம்'.  1030 பக்கங்கள்.  ரொம்ப ஆவலாகப் படிக்கக் காத்திருந்த புத்தகம்.  முகிலின் மற்ற புத்தகங்கள் இதை அப்படி எதிர் பார்க்க வைத்திருந்தன.  ஆனால் என்னவோ கொஞ்சம் போரடிப்பது போல இருக்கிறது.   ஒரே சமாச்சாரம் பற்றியே எழுதி, அதைப் படிப்பது கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது.  பாதி தூரம் வந்திருக்கிறேன்!

கு அழகிரிசாமி புத்தகத்தை யாரோ திண்டுக்கல் மத்திய நூலகத்திலிருந்து' நகர்த்தி' வந்திருக்கிறார்.  படிக்கவோ, விற்கவோ...!  அப்பா அதை மதுரை நியூ சினிமா சமீபம் இருந்த பழைய புத்தகக்கடையிலிருந்து வாங்கி இருக்கிறார்.  அதையும் குறித்திருக்கிறார் பாருங்கள்!



இந்தப் புத்தகம் பற்றியும் அப்புறம் எழுத வேண்டும்.  இந்தப் புத்தகத்தின் பொருளடக்கம் முதல் பக்கம்.  இன்னும் இரண்டாம் பக்கத்திலும் பொருளடக்கம் தொடர்கிறது!

ராஜதிலகம் தொடர்ந்து படித்து முடித்தேன்.  மீள்வாசிப்புதான்!  அமிஷ் எழுதிய சிவா முத்தொகுதி தமிழில் கடகடவென்று படித்து முடித்தேன்.  அதை கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக படிக்காமல் வைத்திருந்தேன்.  இப்போது சடசடவென படித்து முடித்தேன்.  மறுபடியும் ஒரு தேக்க நிலை வந்தது.  சில புத்தகங்கள் புரட்டிக்கொண்டிருந்தபோது இந்தப் புத்தகம் கிடைத்தது.


சுவாரஸ்யமில்லாமல் மெதுவாய்ப் புரட்டிவிட்டு மறுபடி உள்ளே வைக்க நினைத்தேன்.  அடுத்த பக்கம், அடுத்த பக்கம் என்று இழுத்தது.  இவர் எழுத்து நான் படித்ததில்லை.  இதுதான் முதல்முறை.  ஏனோ கவர்ந்து விட்டது.

திரு வலம்புரி ஜான் திருமதி திலகவதி ஐ பி எஸ் க்கு கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்.  திருமதி திலகவதி  அப்பாவுக்கு கொடுத்திருந்தார்.  மதுரையில் இருந்தபோது அவரும் அங்கே பணியில் இருந்தார்.  இன்னொரு பிரபலம் மூலம் அப்பாவுக்கு அவர் அறிமுகமாக, அந்நேரத்தில்  மதுரை வீட்டுக்கு ஓரிரு முறை வந்திருந்தார் அவர். 



புத்தகத்திலிருந்து சில பகுதிகள்...

"அறிந்து கொள்ள ஆரம்பித்த காலத்தில் இருந்து அறியாமை என்னை அழவைத்திருக்கிறது.  ஒவ்வொரு புத்தகமும் நான் முட்டாள் என்பதைத்தான் குட்டிக்குட்டிச் சொல்லுகிறது."

"எங்கே உங்கள் புத்தகங்கள் என்று கேட்கிறார்கள்.  விழுதுகளை பார்க்க நேரம் இல்லாத அரசமரத்துக்கு சருகுகளை அரிப்பற்குப் பொழுது எங்கே இருந்து வரும்?    பறவைகள் கூடுகளை சுமந்துகொண்டு போவதில்லை.  கோழிக் குஞ்சுகள் தோடுகளை தோள்களிலே ஏற்றிக் கொள்வதில்லை."

"புத்தகங்களைத் தலைகீழாகப் படிக்கிற என் மகன் கூட அவனால் முடிந்தவரைக்கும் எனது புத்தகங்களை படிக்காமலே கிழித்து விடுகிறான்.  என் மாதிரி படித்தும் ஒன்றும் 'கிழிக்காமல்' இருப்பதற்கு படிக்காமலேயே கிழிப்பது பரவசம் தருவதுதானே?"

"எழுத்து வாழ்க்கை இரண்டிற்கும் இடைவெளி கூடாது.  எழுதுகிறபோது இடைவெளி இல்லாமல் எழுதுகிறவர்கள்தான் உண்டு.  எழுதுகிறபடி வாழ்கிறவர்கள் இப்போதெல்லாம் அமாவாசை நாளில் ஆகாயத்தோப்பில் பூக்கும் அகத்திப்பூவைப்போல அரிதாகிக் கொண்டு வருகிறார்கள்.  கலப்புமணத்துக்காகக் கொடிபிடிக்கிற- கொள்கை முழக்குகிற காதலர்களைத் தங்கள் கதைகளிலே நடமாட விடுவார்கள்.  பிள்ளைக்குப் பெண் பார்க்கிறபோது மாத்திரம் அவர்களது இலட்சியம் இலவம்பஞ்சு மாதிரி மேகவீதியில் மின்னி, மின்னித் திரிகின்றது.  கண்கள் சாதி, வகுப்பு, ஊர் தெரு எல்லாம் வந்துவிடும்!

விதவைத்திருமணம் பண்ணுகிறவர்களுக்கு விழா எடுக்க வேண்டும், சிலை வைக்கவேண்டும் படம் திறக்க வேண்டும் என்றெல்லாம் எழுதுவார்கள்.  எழுத்தோடு சரி.  சொந்தக் சகோதரி கணவனை இழந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருப்பாள்.  சேர்ந்து அழுவார்களே தவிர, அவளை ஒருவரோடு சேர்த்து வைத்து மகிழ மாட்டார்கள்."

இன்னும் பெரிய முன்னுரை இந்த விஷயத்துக்கு அவர் கொடுத்து, சொல்ல வருவது என்னவென்றால், "பாரதிக்கிருந்த பெரும் சிறப்பு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாதிருந்தது என்பதுதான்"  என்கிறார்.

"பாரதி நம்மைப் பிடித்தது ஏதாவது வகுப்பில் படித்தபோது...  பத்தாவது வயதில் 'எந்தையும் தாயும் காது வழியாகப் போவதற்கு பதிலாக காட்சியாக கண்ணுக்கு உள்ளேயே ஏறி நின்றது.  கல்லூரி காலமெல்லாம் கடிகாரம் கட்டமுடியாத நாட்களிலேகூட 'நல்லதோர் வீணை செய்தே...'

பேசுவதற்காக அவனைப் படித்தேன்.  பிறகு அவனே என்னை பேச வைத்தான்.  சில இடங்களில் என்னைப் பேசாதிருக்கப் பண்ணி விட்டான்.  கூடுதல் பட்சம் என்னை அழவைத்தான்.  குறைந்தபட்சம் என்னை அதிர வைத்தான்."

"ஒருநாள் திருநெல்லைச் சீமையில் பொருனை நதி பொங்கி பெருக்கெடுத்து ஓடுகின்ற மணல் வெளிகளில் சுத்தானந்தரோடு பாரதி நடந்து போகிறார்.  "நம்மிடத்தில் கொஞ்சம் பணம் இருக்கிறது.  அது விரைவில் இரண்டாயிரம் ஆகும்,   இருபதாயிரம் ஆகும்- என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

அடுத்தும் தொடுத்தும் வருகின்ற சுத்தானந்தருக்கு வியப்பால் விழிப்புருவங்கள் வில்லாகின்றன.  அது எப்படி இரண்டாயிரம் இருபதாயிரம் ஆகும்?   வியந்து போகிறார் சுத்ததானந்தர்.  "எப்படி?" என்று கேட்கவும் செய்கிறார்.

"அமுதம் என்றொரு தமிழ்ப் பத்திரிகை தொடங்க இருக்கிறோம்.  இரண்டாயிரம் இருபதாயிரம் ஆகும் ஓய்...   பாரும்!" என்று நெல்லைத்தமிழில் ஓய் போட்டுக்கொண்டே ஓங்காரமாகப் பேசுகிறார் பாரதி.

அப்போது ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்கிறதாம்.

"ஆண்டவனே!  இன்று நாளெல்லாம் அலைந்தேன்; ஒரு பழம் கூட விற்கவிலையே!" என்று ஒரு தாய் கூக்குரலிட்டுக் கொண்டே வருகிறாள்.

அவ்வளவுதான்!  "தாயே!  வா இங்கே!  பாரதி வாழுகின்ற காலத்தில் ஓர் ஏழைத்தாய் வாடுவதா? வருந்துவதா?  வா இங்கே!" என்கிறார் பாரதி.
அவள் கூடையை இறக்கும்வரை கூட பொறுமையில்லாமல் இவரே இறக்கி, பழங்களை தானே எடுத்து சுத்ததானந்தருக்கும் கொடுத்து 'சாப்பிடும் ஓய்'  என்கிறார்.  தானும் சாப்பிடுகிறார்.

சாப்பிட்டாயிற்று.  வேண்டியவரை அள்ளியாயிற்று.  ஆறு ரூபாயை எடுத்து அந்த அம்மாளிடம் நீட்டுகிறார்.  "இதற்கு ஆறு ரூபாயா?" என்று கேட்கிறார் அந்த அம்மணி.

"ஆமாம் தாயே!  ஆமாம்.  நீ சாப்பிடு.  உன் குழந்தைகளுக்குக் கொடு.  நன்றாய் இரு!" என்கிறார்.

பிறகு, "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்கிறார்.

அவள் "இரண்டு பெண்கள்" என்றாள்.

"நமக்கும் அப்படியே" என்று நடக்க ஆரம்பித்து விட்டார் பாரதியார். 

கற்பனை முகடுகளில் தடம் பதித்து தமிழ் வளர்த்த காவிய வானம்பாடி இப்போது தரைக்கு வந்து விட்டது.  இதுதான் மேகம் தரைக்கு வந்த இங்கிதமான இதிகாசக் கதை.

இரண்டாயிரம், இருபதாயிரம் என்று கற்பனையில் பறந்து கொண்டிருந்த கவிப்பறவையை ஒரு ஏழைத்தாயின் அவலக்குரல் நிமிடத்தில் கீழே இறக்கிவிட்டது.  அந்த ஒரே நிமிடத்தில் அவளது வறுமைக்கோலம் அவர் மனதை வாட்ட ஆரம்பித்து விட்டது.  "அமுதம்" பத்திரிகை, பணம் பண்ணுதல் எல்லாம் மறந்தே போயிற்று.

"மனிதர் நோக மனிதர் பார்க்கும் 
வாழ்க்கை இனி உண்டோ?"

என்று பாட்டு மட்டும் பாடிவிட்டுப் போகவில்லை கவியரசர்.  கட்டியபடிதான் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்.  எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் அவரது வரலாற்று நதி நடந்து போவதைப் பார்க்கிறோம்."

இப்படிச் சொல்லும் வலம்புரி ஜான் அடுத்து இதே விஷயத்துக்கு திருமலாச்சாரியார், யதுகிரி அம்மாள் சமேதராக நடந்து போகும்போது ஏற்பட்ட ஒரு பாம்பாட்டி அனுபவத்தையும் சொல்கிறார்.

இந்தப் புத்தகம் படிக்கப் படிக்க அவ்வப்போது சில பகுதிகளை பகிர்ந்து கொள்ள விருப்பம்!

=================================================================================================


அதோ தெரிகிறதா, கட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீடு?  லாக் டவுன் காரணங்களால் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  எங்கள் ஏரியாவில் செல்லங்கள் அதிகம்.  நிறைய பகுதிகளில் செல்லங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனவாம்.  எங்கள் ஏரியாவில் அப்படி எல்லாம் கஷ்டப்படவில்லை.  உணவு கிடைத்துக் கொண்டிருந்தது அவற்றுக்கு.  

குழாமோடு வசிக்க இந்த வீட்டைத் தெரிவு செய்து கொண்டார்கள் சில செல்லங்கள்!


நான்கு செல்லங்கள் விளையாடிக் கொண்டிருந்தன.  படத்தில் இரண்டு தெரிகிறதா?  மூன்றாவது அந்த வழியே கீழே குதித்து விட்டது.  அது போன வழி கண்டு மற்ற இரண்டும் பரபரப்படைந்தன.   அது எப்படி திரும்பி ஏறி வரும் என்று டென்ஷன் ஆன காட்சி  !


இதோ...   கீழே குதித்த பெரிய செல்லம்!  சற்று சுற்றிவிட்டு மீண்டும் உள்ளே செல்ல முயல, ஏற முடியவில்லை அதனால்.  மேலே காத்திருந்த தோழர்கள் பதட்டமடைந்து இங்குமங்கும் ஓடிவிட்டு வழி தெரியாமல் மொட்டை மாடியில் வந்து நின்றன.  எட்டி எட்டி எச்சரிக்கையுடன் பார்த்தன.  சற்று நேரத்தில் பெரிய செல்லமும் மொட்டை மாடி வந்து அவற்றோடு இணைந்து விளையாடிவிட்டு அப்புறம் எல்லா செல்லங்களும் கீழே இறங்கி காணாமல் போயின!





=================================================================================================

மதன் வரைந்த ஜோக்ஸ் பார்த்திருக்கிறோம்.  கீழே உள்ளவை அவர் வரைந்த சில பொதுவான அரசியல் கார்ட்டூன்கள்.

புகைப்படத்தில் சரியாக விழாமல் உள்ள பகுதி அன்று - இன்று !



சென்னைக்கு வந்த புயல் வழக்கம்போல திசைமாறி ஆந்திரா சென்றபோது!


விளக்கம் தேவையா என்ன?!  படம் முழுசாய் வரவேண்டி புத்தகத்தை சற்றே அகல விரித்தபோது இற்றுப்போன பைண்டிங் நூல் விட்டுக்கொண்டு புத்தகம் தனித்தனி ஏடுகளாகி விட்டது ஒரு சோகம்!



பூச்சிகளுக்கு ஏதோ மனம் சரியில்லை போலிருக்கிறது.  இல்லாவிட்டால் இந்தப் புத்தகத்தைத் தேடித் பிடித்திருக்குமா?!!  வலது ஓரத்தைப் பாருங்கள்!

===

நிற்க. சென்ற வாரம் சாண்டில்யனின் ராஜ திலகம் கதையின் ஓவியத்திற்கு, குமுதம் ஏன் அந்த சிறப்புக் குறிப்பு கொடுத்திருந்தார்கள் என்பதை kgg சொல்கிறேன். 


இந்த ஓவியம் வெளியிடப்பட்ட ஓரிரண்டு இதழ்களுக்கு முன்பாக, இதே ராஜ திலகம் கதைக்கு ,

லதா வரைந்த இந்த ஓவியம் வெளியாகியிருந்தது. 

( நோ, நோ, படத்தை பெரிய சைஸ்ல போடக்கூடாது. போட்டால் சாண்டில்யனின் ஆவி எங்களை பயமுறுத்தும்!) 

அதைப் பார்த்த சாண்டில்யன் பொங்கி எழுந்து, குமுதத்திற்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருந்தார். அதில், 'தான் எப்பொழுதுமே தமிழ் மரபுகளை மீறி தன் கதைகளில் எழுதியது இல்லை' என்றும், 'தமிழ்ப் பெண்கள் யாரும் இப்படி ஆடை இன்றி குளிக்கமாட்டார்கள்' என்றும் எழுதி இருந்தார். தன் கதைக்கு ஓவியர் இப்படி ஒரு ஓவியத்தை வரைந்திருக்கக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

அதை கிண்டல் செய்யும் வகையில் குமுதம் வெளியிட்ட குறிப்புதான் முதல் படத்தில் உள்ளது. 

===


113 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அன்பு கௌதமன் ஜி. அன்பு ஸ்ரீராம்.
    அனைவரும் நலமோடு இருக்கப் பிரார்த்தனைகள்..

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் வருகிறேன். குளிர் அதிகமானதால்
    தலைவலி.
    சாண்டில்யன், லதா நல்ல ஜோடி. குமுதம்
    ஏன் மறுக்கப் பட்டது என்று இப்போது
    புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே நெல்லைத்தமிழன் எழுதியிப்பதை கவனிங்க. அதுவும் சரியாக இருக்கக் கூடும்.

      நீக்கு
    2. சென்னையில் கூட காலையில் குளிர். தலைவலி தேவலாமா?

      நீக்கு
  3. மதன் ஜோக்ஸ்,
    நல்ல சுவை. திரு.பாலசுப்ரமணியம் அவர்களின்
    தொகுப்புகள் பிரமாதம்.
    எத்தனை சிரத்தையுடன் எழுதி வைத்திருக்கிறார்!!!
    அன்புத் தந்தைக்கும்,
    சேமித்த மகனுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. செல்லங்களின் படங்கள் வெகு சுவை. படங்கள் எடுத்த உங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகளும். ஸ்ரீராம் வலம்புரி ஜான் புத்தகம் பற்றி எழுதி இருப்பது எல்லாம் அவருடைய "தாய்" பத்திரிகையில் படிச்சிருக்கேனோ? பாரதியார் பற்றி இம்மாதிரி நிறையவே தகவல்கள் உண்டு. நான் பெரும்பாலும் நம்புவது சீனி.விஸ்வநாதன் எழுதுவதை!எழுதியதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. தாய் பத்திரிகையில் வரவில்லை என்று நினைக்கிறேன். முன்னுரையில் அப்படி ஏதுமில்லை.

      நீக்கு
  6. வலம்புரி ஜானின் எழுத்து வசீகரம். பாரதி பற்றிய எழுத்து ரசிக்கும்படி இருந்தது.

    புத்தகங்களோடு பூச்சியையும் வாழவைக்கும் பண்பு வாழ்க

    பதிலளிநீக்கு
  7. லதாவின் ஓவியம் அழகு. நானும் நினைத்தால் ஜெ அளவுக்கு இறங்க முடியும் என்று சொல்கிறாரோ? ஓவியர் ஜெ வின் பெண்கள் ஓவியங்கள் பல, naturalஆக இருக்காது, அதீத poseகளாக இருக்கும். லதா அவர்கள் வரைந்தது naturalஆக இருக்கிறது.

    இந்த, கதாசிரியர் பொங்கி எழுவதே பேசி வைத்துக்கொண்டு ஏற்றும் பரபரப்புக்காக இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதுபோல இருக்கலாம். குமுதத்துக்கு தெரியாத விளம்பர யுக்தியா?!!

      யவனராணியில் லதா ஓவியங்கள் டாப். சாண்டில்யன் கதைக்கு வர்ணம் கூட படம் வரைந்திருக்கிறார். ஜலதீபம்.

      நீக்கு
    2. ஜலதீபம் படங்கள் வெகு சுமார் என்பது என் அபிப்ராயம். லதாவின் ஓவியங்கள் மிக அழகு (அந்தக் காலத்தில் எனக்கு அவ்வளவாகப் பிடித்ததில்லை, ஆனால் அதன் எழில் பிறகுதான் எனக்குத் தெரிந்தது). உங்க பின்னூட்டம் பார்த்து இரு நூல்களையும் திரும்பவும் பார்த்து கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்.

      நீக்கு
    3. ஓ.. உங்கள் கலெக்‌ஷனில் இவை இருக்கின்றனவா?

      நீக்கு
  8. அரசியல் கார்ட்டூன்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. காலையில் எதற்கு பழையரசியல் சிந்தனை என்று தோன்றிற்று.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீதர் கார்ட்டூன்களே வந்து கொண்டிருந்த "ஆனந்த விகடன்" பத்திரிகை திடீரென "மதன்" வரைந்த கார்ட்டூன்களைப் பிரசுரித்தது. ஸ்ரீதரே அவற்றுக்கு விளம்பரம் கொடுத்தாற்போல் பொருளோடு அமைந்திருக்கும் அவை. பின்னர் மெல்ல மெல்ல ஸ்ரீதர் விலகி "மதன்" வந்து சேர்ந்தார். பின்னால் அவரும் விலகி விட்டார். விகடனின் மகிமையும் குறைந்து விட்டது. இப்போது வரும் விகடனை எல்லாம் நான் பார்த்ததோ/படித்ததோ இல்லை சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டன விகடன், குமுதம் படிப்பதை நிறுத்தி. கல்கி மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். அதுவும் ஆச்சு 10 வருஷங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். மின்நிலா, தினமலர் வாரமலர் தவிர எந்த வாரப் பத்திரிக்கையும் படிப்பதில்லை.

      நீக்கு
    2. நான் சமீபத்தில் எபி கூட பார்க்கவில்லை!

      நீக்கு
  10. //விதவைத் திருமணம் பண்ணுகிறவர்களுக்கு விழா எடுக்க வேண்டும், சிலை வைக்க வேண்டும் படம் திறக்க வேண்டும் என்றெல்லாம் எழுதுவார்கள். எழுத்தோடு சரி. சொந்தக் சகோதரி கணவனை இழந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருப்பாள். சேர்ந்து அழுவார்களே தவிர, அவளை ஒருவரோடு சேர்த்து வைத்து மகிழ மாட்டார்கள்//

    செருப்படி வாக்கியங்கள், சுடும் உண்மைகள்.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய பதிவு நீள் பதிவாகிவிட்டது. அழியாச்சுடர்கள் போன்று அழியாப் பொக்கிஷங்கள் உங்கள் அப்பா வைத்து விட்டுப் போயிருக்கிறார். நன்று. 

    "அகம் புறம் அந்தப்புரம் " தலைப்புக் கவர்ச்சி.  கடைசியில் லதா ஓவியம் படத்தில் கவர்ச்சி. குமுதம் குசும்பு, பாரதியின் தன்னலம் காணாது பிறர்க்கு உதவும் தன்மை, மதனின் நறுக் கார்ட்டூன்கள் என்று பல்சுவை கதம்பமாக பதிவு மிளிர்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீள்பதிவானாலும் ரசிக்க முடிந்ததா? நாளை பாரதியார் நினைவு நாள். வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  12. நறுமலர்க் கதம்பம் இன்றைய பதிவு...
    மகாகவியைப் பற்றிய செய்திகள் அருமை...

    பதிலளிநீக்கு
  13. வலம்புரிஜானைப் பற்றி அவர் எழுதியவைகளைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றிய என் அபிப்ராயம், எந்த நம்பிக்கையையும் தீவிரமாகப் பற்றிக்கொள்ளாமல், முழு விசுவாசமாக இல்லாமல், தான் மற்றவர்களைவிட அறிவாளி என்று எண்ணிக்கொண்டு வாய்ப்புகள் அத்தனையையும் வீணடித்தவர் என்பதுதான். (அல்லது சம்பாதிக்க, பிழைக்கத் தெரியாதவர்). ஆனானப்பட்ட சோலை அவர்களே கடைசியில் புகழ் மாலை சூட்டி புத்தகம் எழுதி வாழ வழிவகை செய்துகொண்டார்.

    எங்கள் கல்லூரிக்கு எம்.ஏ. தொலைதூரக் கல்வி பரீட்சை எழுத வந்திருந்தவர், அல்லக்கைகள் புடைசூழ வந்திருந்ததுதான் என் நினைவில் தோன்றும் அவர் முகம்.

    நல்ல கொழுகொம்பு கிடைத்தும் அதைப் பற்றிக்கொள்ளத் தெரியாமல், நீக்குப் போக்கு தெரியாமல், கம்பாசிடரே பிரிண்டிங் பிரஸ்ஸுக்கு அதிபர், புத்தக ஆசிரியர் என்று எண்ணிக்கொண்டதைப் போல தனக்கும், தன் குடும்பத்துக்கும் கடைசி காலத்தில் பிரச்சனைகளை வரவழைத்துக்கொண்டார்.

    ஆனால் இளைஞர்கள் எல்லோரையும் encourage செய்து அவர்கள் அந்த அந்தத் துறையில் பெரியாளாக வரணும் என்று எண்ணிய ஆத்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விமரிசனக் கருத்து. நன்றி.

      நீக்கு
    2. இப்படியும் சிலர். இந்த வரிசையில் இன்னும் சிலர் கூட சேரக் கூடும். சுவாரஸ்யமான பின்னூட்டம்.

      நீக்கு
  14. //விழுதுகளை பார்க்க நேரம் இல்லாத அரசமரத்துக்கு சருகுகளை அரிப்பற்குப் பொழுது// - இவரது வர்ணணைகளும் உவமைகளும் சிரிப்பு வரவழைப்பவை, ஆனால் அவர் மனதில் உதித்தவை (பலர் போல காப்பி அடித்து எழுதியவர் இல்லை). முட்டைக்குச் சவரம் செய்துகொண்டிருந்தார் என்பது போல பல உவமைகள் என் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  15. இந்த வார தொகுப்பு சற்று பெரியதாக இருந்தாலும் சுவை. புத்தகங்கள் வாங்குவதோடு நிற்காமல் அதைப் பற்றி குறிப்புகளும் எழுதி வைத்திருக்கும் உங்கள் தந்தை வியக்க வைக்கிறார். வலம்புரி ஜானின் கட்டுரை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. அப்பா அவர் படிக்கும் புத்தகங்களில் இப்படி நிறைய எழுதும் பழக்கம் இருந்தவர். என்னிடமும் அந்தப் பழக்கம் கொஞ்சம் இருக்கு!

      நீக்கு
  16. மதனின் அரசியல் கார்ட்டூன்கள் வேற லெவல்! ஆர்.கே.லஷ்மண் அளவிற்கு கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையின் கருத்து வேறாயிருக்கிறது!

      நீக்கு
    2. மதியின் அரசியல் கார்ட்டூன் டாப் என்பது என் அபிப்ராயம்.

      காலையில் அரசியல் சம்பந்தமானவைகளைப் படித்து அதன் நினைவில் ஆழப் பிடிக்கவில்லை. மற்றபடி மதன் கார்ட்டூன் முழுவதும் அவர் மனதில் உதித்ததா இல்லை தான் வேலை பார்த்த பத்திரிகைக்கு ஏற்ற, ஆசிரியர் சொன்ன கருத்துக்கு ஏற்ற கார்ட்டுன்னா என்பது ஆராய்ச்சிக்கு உரியது.

      நீக்கு
    3. மதியை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். இப்போது அவர் கார்ட்டூன் அவ்வப்போது தினமணியில் வருகிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  17. எங்கள் வீட்டில் என் சகோதரிக்கு ஜெயராஜின் படங்கள் பிடிக்கும். நான் அவற்றை ஆபாசம் என்று சொன்னால்,"ப்ரபோஷன் இல்லாமல் வரையும்  லதாவின்  படங்கள்தான் ஆபாசம்" என்பாள்(ர்). அவளால்தான் நான் ஜெயராஜின் படங்களை ரசிக்க ஆரம்பித்தேன்.  சாண்டில்யன் கதைகள் என்றால் லதாவின் படங்கள்தான். அப்போதெல்லாம் எந்த ஓவியர் படம் போடுகிறார் என்பதை வைத்து எப்படிப்பட்ட கதையாக இருக்கும்? என்று தீர்மானிக்க முடியும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஜெ... யையும் ரசிப்பேன். லதாவையும் ரசிப்பேன். ஆனால் லதாவின் ஓவியங்கள் சாண்டில்யன் கதைகளுக்கு எடுபட்ட மாதிரி மற்றவைகளில் சோபிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. சாண்டில்யன் கதைகளுக்காகக் குமுதத்திற்காகக் காத்திருந்தவர்கள் அதிகம் அப்போது. அதில் பல பெரிசுகள் உண்டு-அவர்களில் சிலர் சாண்டில்யன் கதையை மட்டும் வாசித்துவிட்டு ஓசிவாங்கிய குமுதத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவது உண்டு!
      லதாவைத் தவிர சாண்டில்யன் தொடருக்கு வேறு ஓவியரை நினைக்கமுடியாது!

      நீக்கு
    3. @ பா.வெ. - எதை வைத்து ப்ரொபோஷன் இல்லாமல் ஓவியங்கள் இருக்கும் என்று சொல்கிறார்? இருக்கும் சிறிய பக்கத்தில், ப்ரதானமாகத் தெரியும்படி முகத்தையும் வயிற்றுக்கு சிறிது மேல் வரை மட்டும்தான் பெரிதாக சில ஓவியங்கள் இருக்கும் என்பதால் சமச்சீர் (அட !) இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? அதுவும் தவிர அவர்கள், பழைய திரைப்படங்களைப் பார்த்தால், தன் இந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வார் என்று நான் உறுதியாகச் சொல்வேன் (அதுக்கும் உதாரணம் வேண்டும்னா சொல்லுங்க)

      ஜெ. ஓவியங்கள் பெரும்பாலும் சாதாரண அதீத பெண்களின் இயல்பாக காணமுடியாத போஸ்கள். (ஆனால் பதின்ம வயதில் நான் ரசித்த ஓவியங்கள். லதாவின் ஓவியங்களை ராஜகுமாரன்கள்தான் சிலாகிக்க முடியும். ஜெ. வின் ஓவியங்களை பதின்ம வயதில் உள்ள எல்லோரும் சிலாகிக்க முடியும்)

      முடிந்தால் இன்று எபி குழுமத்தில் சில ஓவியங்களைப் பகிர்கிறேன். (இருவரின்) அப்போது புரிந்துவிடும்.

      நீக்கு
    4. என் அப்பாவைப் பெற்ற பாட்டி பயங்கர சாண்டில்யன் ரசிகை. அவர்தான் கடல்புறா சேகரித்து பைண்ட் பண்ணி வைத்திருந்தார். புத்தகம் சமீப காலங்களில் வீணாகி விட்டது.

      நீக்கு
    5. நெல்லை தான் ஜெ யின் பரம ரசிகர் என்பதை நிரூபிக்கிறார்!

      நீக்கு
  18. வலம்புரிஜான் எழுத்து எனக்கு அதிக மசாலா சேர்த்த உணவுபோல் ...அதிகம் விரும்பிப் படிப்பதில்லை...நான் சாண்டில்யன் எழுத்தினைப்போல அவர் கதைக்கான ஓவியங்களின் தீவீர இரசிகன்..அருமையான பதிவு..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அவர் எழுத்து புதிது. முன்பு படித்ததில்லை. நன்றி ரமணி ஸார்.

      நீக்கு
  19. வாங்க, ஸ்ரீராம். உங்களை இங்கு பார்த்ததில்
    மகிழ்ச்சி.

    நலமே விளைக.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. இந்த ஓவியத்தின் பின் இவ்வளவு கதைகள் உள்ளனவா?

    பதிலளிநீக்கு
  21. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கும் ஶ்ரீராமை வருக வருக என்று வரவேற்கிறோம்

    பதிலளிநீக்கு
  22. அது யார் முகில்?.. கேள்விப்பட்டதே இல்லையே?..
    கட்டுரையாளரா?.. கதாசிரியரா?..
    அவர் புகைப்படம் புத்தகத்தில் இருந்தால் போட்டிருக்லாமிலே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகில் சமீப கால எழுத்தாளர். ஜூவி போன்ற புத்தகங்களில் எழுதி வந்தவர். அவர் நூல்கள் சில பற்றி முன்னரே எபியில் எழுதி இருக்கிறேன்.

      நீக்கு
  23. குமுதம், 70-களில் ‘அபூர்வ சந்திப்பு’ எனும் தொடரைக் கொண்டுவந்தது. இடக்குமிடக்கான சந்திப்புகள்! அதில் ஒரு முறை 'வலம்புரி ஜான் vs. ? ' சந்திப்பு/உரையாடல் வந்திருந்தது. சந்தித்த நபர் நினைவில் இல்லை. இன்னொரு வாரம் ‘நா.பா.’vs இராம அரங்கண்ணல்’ சந்திப்பும் இலக்கிய உரையாடலும் வந்தது நினைவிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தொகுப்பும் கொஞ்சம் வீட்டில் கலெக்‌ஷனில் இருக்கிறதோ என்று சந்தேகம்.

      நீக்கு
  24. கு. அழகிரிசாமி ஐயா அற்புதமான சிறுகதை எழுத்தாளர். பெரும்பாலும் கல்கியில் தான் எழுதினார். எனது 'நா.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' நூலில் அவர் பற்றியும் தொகுத்து எழுதியிருக்கிறேன்.

    கல்லூரி தமிழ்த் துறை விரிவுரையாளர் ஒருவர், பதிப்பாசிரியாராய் செயல்பட்டு தமிழ் எழுத்தாளர் ஒருவரின் கட்டுரைகளை வெளியிட்டது ஆச்சரியமாய் இருந்தது.
    இந்த மாதிரியான நற்காரியங்களை இந்தக் காலத்தில் எதிர்ப்பார்க்க முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. எதிர்பார்க்கக் கூட இல்லை, நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற உண்மை சுட்டது.

    தன்னைப் பற்றியே பிரதானப்படுத்தும் காரியங்களில் மூழ்கியிருக்கும் கால கட்டத்தில் இன்னொருவரை முன்னிலைப்படுத்தி அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்துவா?
    கனவு காண்பதற்கும் ஒரு அர்த்தம் வேண்டும் என்று இன்னொரு எண்ணம் இடித்துரைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இந்தப் புத்தகத்தைக் கைக்கொண்டபோது உங்கள் ஞாபகம் வந்தது. நீங்கள் ரசிக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று...

      நீக்கு
  25. பாரதி பற்றி யார் எழுதிய நூலைப் பார்த்தாலும் பிரஞ்சு புதுச்சேரியிலிருந்து அவர் தமிழக
    எல்லைக்குள் நுழையும் பொழுது கடலூரில் கைது செய்யப்பட்ட பொழுது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டுத் தான் தமிழகம் வந்தார் என்ற அவதூறு பற்றி ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று தான் பார்ப்பேன். அது பற்றி ஒருகால் குறிப்பிட்டு விவரித்திருக்கும் செய்திகளைப் படித்தாலே முழுப் புத்தகத்தையும் ஐந்து நிமிட வாசிப்பிலேயே எடை போட்டு விடலாம்.

    பாரதியார் பற்றி எந்த நூல் கிடைத்தாலும் நீங்களும் இந்த சோதனையைச் செய்து பாருஈங்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்துடலாம். ஆனால் வலம்புரி ஜான் எழுதி இருப்பது அவர் வாழ்க்கை வரலாறல்ல... அவர் பார்வையில் பாரதி.

      மேலும் நாய் வாய் வைப்பது போ சில புத்தகங்களை மாறி மாறிப் படித்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் அதுவும் இல்லை!

      நீக்கு
    2. //அவர் பார்வையில் பாரதி.//

      அந்த ஜெகஜ்ஜோதியை பார்க்கவும் முடியுமோ? பார்வை தான் என்னாவது?..

      நீக்கு
  26. தமிழ்வாணன் பற்றிய நினைவுகளை மீட்டி விட்டீர்கள். இன்னொரு தமிழ்வாணன் இருக்கப் போவதுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தனி பாணி கைக்கொண்ட எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தலாம்!

      நீக்கு
    2. எழுத்தில் இல்லை, ஸ்ரீராம். அவர் கொண்டிருந்தன யாருக்கும் அடிபணியாத வீரத்தில், சுய நம்பிக்கையில், எல்லா விஷயங்களையும் கையாண்ட சகலகலா
      வல்லுனராய் இருந்த திறமையில்... இன்னும் என்னன்னவோ..

      நீக்கு
  27. புத்தகத்தின் சில பகுதிகளே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது...

    சாண்டில்யன் என்னவெல்லாம் கவனித்துள்ளார்...!

    கணினி சரியாகி விட்டது குறித்து மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    நலமா? இன்றைய கதம்பம் அனைத்தும் நன்றாக உள்ளது. கு. அழகிரிசாமி எழுதிய கதைகள் நன்றாக இருக்கும். ஒரு தீபாவளி கதையை (ராஜா வந்திருக்கிறார்) மறக்கவே முடியாது. அவரின் கட்டுரைகளை அடிக்கடி பகிருங்கள். தங்கள் அப்பா நல்ல இலக்கிய படைப்புகளை சேமித்து வைத்திருக்கிறார். அவருக்கும் நன்றி.

    பாரதியார் பற்றிய செய்திகளை புத்தகத்தின் வாயிலாக தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி. ஆசிரியரின் எழுத்து அருமையாக உள்ளது.

    செல்லங்களின் அன்பான தவிப்பு புரிகிறது.
    மதன் ஜோக்ஸ நன்றாக உள்ளது.

    எழுத்தாளர் சாண்டில்யனின் கதைக்கு லதாவின் ஓவியம் எப்போதுமே மிகப் பொருத்தமாக இருக்கும். அப்போதைய கால கட்டத்தில் சாண்டில்யன் எழுத்துக்களும் கொஞ்சம் லதாவின் ஓவியத்திற்கு ஏற்றபடிதான் இருக்கும். அவ்வாறு இருக்கையில் இந்த ஓவியத்தில் ஆசிரியர் தப்பான பார்வையில் என்ன குறை கண்டாரோ? அந்த குளிக்கும் பெண்ணின் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம்... அதை தன் கைவண்ணத்தில் கொண்டு வந்திருக்கும் லதாவை பாராட்ட வார்த்தைகளில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வழக்கம்போல அனைத்தையும் தொகுத்து விமர்சித்து விட்டீர்கள். நன்றி. லதாவின் குளிக்கும் அழகியை கலைக் கண்ணோடு பார்த்து ரசித்திருக்கிறீர்கள். கு அழகிரிசாமி கதை படித்திருக்கிறீர்கள் என்பதோடு நினைவிலும் இருக்கிறது என்பதும் ஆச்சர்யம்.

      நீக்கு
    2. //கால கட்டத்தில் சாண்டில்யன் எழுத்துக்களும் கொஞ்சம்// - சாண்டில்யன் நாவல்களில் மூன்று அத்தியாயங்களுக்கு ஒரு முறை காதலர்கள் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் வரும். பயங்கர போர். அதையெல்லாம் எப்போதுமே தாண்டிச் சென்றுவிடுவேன். அதுபோல, அவர் நாவல் ஆரம்பிக்கும்போது செய்யும் வர்ணனையே சில சமயங்களில் பல பக்கங்களை விழுங்கிவிடும். என்னதான் செய்தி என்று பார்த்தால் 'இளந்திரையன் குதிரையில் வந்தான்' என்பதாக இருக்கும். ஹாஹா.

      இந்தத் தொடர்கதைக்குமே அவர் ஒரு பக்கத்துக்கும் மேல், அந்தப் பெண் குளிப்பதைப் பற்றி எழுதியிருப்பார். ஓவியரும், பாவம் போனால் போகட்டும் என்று அந்தப் பெண்ணை அவர் வர்ணனைப்படி வரைந்திருப்பார். (குமுதம் எப்போதுமே ஏடாகூடமான விஷயங்களைப் போட்டுவிட்டு, இப்படி யாராவது நடந்துகொள்வார்களா என்று சமூக அக்கறையுடன் கேட்கும், இரு தரப்பினரையும் பேலன்ஸ் செய்வது போல)

      நீக்கு
    3. ஆமாம். .அவர் கதைகளில் வர்ணனைகள் அதிகம். அதில் அவரை மிஞ்ச எவராலும் முடியாது

      /என்னதான் செய்தி என்று பார்த்தால் 'இளந்திரையன் குதிரையில் வந்தான்' என்பதாக இருக்கும். ஹாஹா./

      ஹா.ஹா.ஹா. அப்போது இந்த வர்ணனைகள் இவர் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது.

      /இந்தத் தொடர்கதைக்குமே அவர் ஒரு பக்கத்துக்கும் மேல், அந்தப் பெண் குளிப்பதைப் பற்றி எழுதியிருப்பார்/

      ஹா.ஹா.ஹா.ஆனால் நாணத்துடன் அந்தப் பெண் குளிப்பதை காட்டும் ஓவியம் அவருக்கு பிடிக்கவில்லையென ஓவியத்தை பத்திரிக்கை பிரபலமாக்கி விட்டது போலும்... ! எனக்கு பத்திரிக்கைகளைப் பற்றி அவ்வளவாக தெரியாது. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    4. //குமுதம் எப்போதுமே ஏடாகூடமான விஷயங்களைப் போட்டுவிட்டு, இப்படி யாராவது நடந்துகொள்வார்களா என்று ... //

      நெல்லை, உங்களுக்குன்னு (எஸ்.ஏ.பி. கால) ஒரு குமுதக் கதையைப் போட்டு, அது எவ்வளவு சமூக அக்கறை உள்ள பத்திரிகைன்னு காட்டனும்னு எனக்கு இப்போ யோசனை ஓடிக்கொண்டிருக்கு.. நீங்கள் வாசிக்காத குமுதக் கதையா என்ன? இருந்தாலும் ஜீவி கதைன்னா, கேப்ஸ்யூல்குள்ளே மருந்துப்பொடியை வைக்கிற மாதிரி வைச்சு..... ஹஹாஹஹா.. :)))

      நீக்கு
    5. தி.நகர் மாஹாலெஷ்மி தெருவில் (சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரே) பாஷ்யம் ஐயங்காரைப் பார்க்க இரண்டு மூன்று தடவைகள் போயிருக்கிறேன். விக்கெட் கேட்டிற்கு உள்ளடங்கிய வீடு. அந்தக்கால வழக்கம் மாறாத தாத்தா, பாட்டி, பையன், மாட்டுப்பெண், பேரன்கள் என்று மனசை நிறைக்கும் கூட்டுக்குடும்ப
      வாழ்க்கை. வாசல் கேட்டைத் தாண்டி உள்பக்கம் கொஞ்சம் நடந்து வீட்டுப் படிக்கட்டுகள் என்று தனி வீடு.

      முதல் தடவை அவரைப் பார்க்க நான் போயிருந்த பொழுது பத்து - பன்னிரண்டு வயது இருக்கும, அவர் பேரன் போலிருக்கு.

      "யார் வேணும்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.

      "சாண்டில்யன் ஸார்.." என்று இழுத்தேன்.

      உடனே உள்பக்கம் திரும்பி, "மன்னி.. அண்ணாவைப் பார்க்க யாரோ வந்திருக்கா பாரு.." என்று குரல் கொடுத்து விட்டு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஜமாவுடன் சேர்ந்து விளையாட ஓடி விட்டான்.

      மடிசார் புடவையில் திருமதி சாண்டில்யன் வந்தார்கள். என்னைப் பார்த்து,
      "வாங்கோ.." என்றார். பெரிய திண்ணை. அங்கிருந்த மர நாற்காலியைக் காட்டி, "உள்ளே இருக்கார்.. சொல்றேன்.. உங்காருங்கோ.." என்றார்.

      உட்கார்ந்தேன். வந்தார். கைகூப்பியவாறு எழுந்தேன்.. "உட்காருங்கோ.. உட்காருங்கோ.." என்று எதிர்ப்பக்கம் இருந்த இன்னொரு நாற்காலியில் அவர் உட்கார்ந்தார்.

      அப்பொழுது மனோரஞ்சிதம் என்ற பெயரில் புது பத்திரிகை ஒன்று வெளி வந்து கொண்டிருந்தது. அதற்கு ஸார் தான் ஆசிரியர். அந்தப் பத்திரிகைக்காக
      கதை ஒன்று கொண்டு போயிருந்தேன். என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு கதையைக் கொடுத்தேன். "படிச்சுப் பாக்கறேன்.." என்று அதை வாங்கி வைத்துக் கொண்டார். கதை அவருக்கு பிடிச்சிருந்தது போலிருக்கு.
      இரண்டு வாரம் தாண்டி வந்த மனோரஞ்சிதத்தில் அந்தக் கதையை பிரசுரித்தும் விட்டார். இப்படித் தான் பெரியவருடன் எனக்குப் பழக்கம் ஆரம்பித்தது.

      நானும் சாண்டில்ய கோத்திரம் தான். அது தெரிந்து "அப்படியா?" என்று கேட்ட போது முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. ஃபோனில் பேசினால் என்னை மனசில் பதித்து வைக்க அவருக்கு அதுவும் ஒரு அடையாளம் ஆயிற்று.

      எந்த ஜென்மத்தில் பண்ணிய புண்ணியமோ??. இந்த மாதிரியான ஜாம்பவான்களின் நெருக்கம் கிடைத்தது.

      மாட்னி ஷோ சினிமா, கன்னிமாரா நூலகம் இதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்று பின்னால் தெரிந்தது.

      நீக்கு
  29. சுவாரஸ்யத்தில் வாங்கி வைத்திருக்கிறேன் என்றே சில புத்தகங்களை பார்த்தபோது புரியவில்லை. அப்போது சுவாரஸ்யமாயிருந்த சில புத்தகங்கள் இப்போது புரட்டக் கூடத் தோன்றவில்லை என்பது கொடுமை! ////////////////////////இது எல்லோருக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  30. வலம்புரி ஜானின் பார்வையில் பாரதியார்
    நல்ல அனுபவம்.
    பாரதி போல் இனி யாரைப் பார்க்க முடியும்.
    திரு .ஜான் கொஞ்சம் எல்லோரையும் அசட்டையாகப்
    பார்ப்பது போலத் தோன்றும்.
    அவர் அளவுக்கு மற்றவர் உயரவில்லை என்று எண்ணினாரோ???

    பதிலளிநீக்கு
  31. இன்னமும் மொபைல்தான்!////Wishing everything to become alright.

    பதிலளிநீக்கு
  32. அனைத்துப் பகுதிகளும் மிக நன்று ஸ்ரீராம்.
    நாளைய பாடலை எதிர்பார்த்து இன்னாளுக்கான வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  33. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    //அப்பா தனது டைரியில் கு அழகிரிசாமியின் கட்டுரைகள் புத்தகம் கிடைத்தது பற்றியும், படித்தது பற்றியும் மிக சிலாகித்துச் சொல்லி இருந்தார்.//

    அப்பாவின் டைரிக்குறிப்பு தனி பதிவாக போடலாம். அவ்வளவு விஷயங்கள் குறிப்புகள் இருக்கே!

    செல்லங்கள் விளையாட்டு அருமை.

    பதிலளிநீக்கு
  34. //பூச்சிகளுக்கு ஏதோ மனம் சரியில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் இந்தப் புத்தகத்தைத் தேடித் பிடித்திருக்குமா?!! //

    தேடி படித்து இருக்கிறது. மனநலம் சரியாகி போய்விட்டது. இல்லையென்றால் முழு புத்தகமும் போய் இருக்கும் போலவே!

    பதிலளிநீக்கு
  35. லதா அவர்களின் ஓவியம் சரித்திர நாவல்களுக்கு நன்றாக இருக்கும்.
    சமூக நாவலுக்கு வரைந்த ஓவியங்கள் அவ்வளவாக கவரவில்லை.

    பதிலளிநீக்கு
  36. செப்டம்பர் 11. *சாண்டில்யன் அவர்களின் நினைவுதினம் என்று பசுபதிவுகள் வலைத்தளத்தில் படித்தேன்.
    இன்று சாண்டில்யன் அவர்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து இருக்கிரீர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!