ராஜஸ்தானி/மார்வாரி ஸ்டைல் சப்ஜி
ஹாய் ஹாய்! எல்லா எபி கிச்சன் விசிறிகள்,
வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வணக்கம்.
இந்த சப்ஜியின் பேஸ் க்ரேவி மட்டும்
பல வருடங்களுக்கு முன் குஜராத்தில் இருந்த உறவினரிடம் கற்றுக் கொண்டது. சின்ன வெங்காயம்
கிடைக்காததால் இங்கு கத்தரிக்காய் போட்டு செய்திருக்கிறேன். கத்தரிக்குப் பதில் சின்ன
வெங்காயம் போட்டுச் செய்தால் அது மிகவும் சுவையாக இருக்கும். சின்ன வெங்காயம் போட்டுச்
செய்வதானால் அதையும் நடுவில் சிறிதாக வகுந்து கொண்டு செய்ய வேண்டும்.
இந்த பேஸ் க்ரேவி பயன்படுத்தி கத்தரிக்காய்க்குப்
பதில் வெண்டை, குடைமிளகாய், ஸ்டஃப்ட் குடைமிளகாய், குழந்தை உருளைக் கிழங்கு, ஸ்டார்ஃப்ரூட்டும்
போட்டுச் செய்யலாம். நன்றாகவே இருக்கும்.
இனி ரெசிப்பிக்கு.
எபி ஆசிரியர்கள் அனைவருக்கும், நட்புகள் அனைவருக்கும் மிக்க
நன்றி
=====
====
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஎல்லாருக்கும் காலை வணக்கம்..
நீக்குஎபி க்கு மிக்க நன்றி!
வல்லிம்மா உங்களுக்கும் மிக்க நன்றி இந்த ரெசிப்பி இங்கு வந்திருக்கு என்று எனக்குச் சொன்னமைக்கு! இல்லேனா நினைவும் இருக்காது நேரமும்...
இடையிடையே வந்து கருத்து பார்த்து பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்
கீதா
ராஜஸ்தானி சப்ஜி புதுவிதமா இருக்கு. கொலாஜ் செய்த படங்கள், செய்முறை நன்றாக இருக்கு.
பதிலளிநீக்குபுதிய செய்முறைக்கு கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள்.
இதைச் செய்து பார்க்கலாமா, பசங்க ஏத்துப்பாங்களான்னு கேட்டு ஒரு தடவை முயற்சி பண்ணணும். பார்க்கிறேன்.
மிக்க நன்றி நெல்லை
நீக்குகீதா
முதல்ல, கத்திரிக்காய்க்குப் பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் என்பதைப் படித்ததும், என்ன இது, ஆரம்பமே சரியில்லையே என யோசித்தேன் (ரெண்டுக்குமே சம்பந்தம் இல்லையே)
பதிலளிநீக்குஅப்புறம் செய்முறைல, மையா அரைக்கலாம், கொரகொரன்னும்்அரைச்சுக்கலாம், வெண்ணைக்காய் போடலாம், காலிஃப்ளவர் வேணும்னா உபயோகிக்கலாம் என்று, ஏதோ கதம்ப சாதத்துக்கு ரெசிப்பி சொல்ற மாதிரி இருக்கே என்று தோன்றியது.
எப்படியோ, சகோதரியின் அருமையான செய்முறைக்கு நன்றி, ஆமாம் நாங்க ராஜஸ்தான்ல வேலை பார்க்கும்போது இதை நிறைய தடவை செய்திருக்கிறோம், சுரைக்காயும் சேர்க்கலாம், சீரகம் அதிகமாப் போடுவோம் என்றெல்லாம் வந்து, எனக்கு மட்டும்தான் ரெசிப்பி குழப்பமா இருந்தது போல என்று எண்ண வைத்திடுமோ?
நான் யாரிடம் (ராஜஸ்தானி பெண்மணி) கற்றுக் கொண்டேனோ அவர் சின்ன வெங்காயத்தில் செய்திருந்தார்.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர். கதம்ப சாதம் போல எல்லா காயும் போட்டு இல்லை. ரெசிப்பிய ஒயிங்கா வாசிங்க ஹா ஹா ஹா ஹா
சொல்லப்பட்ட காய்களில் ஏதேனும் ஒன்று. எல்லாம் கலந்து அல்ல...
மிக்க நன்றி நெல்லை
கீதா
ஏற்கெனவே பதில் கொடுத்தேன். ஆனால் இணையப் பிரச்னையால் போகலை. இந்த மாதிரி ரெசிபி கேள்விப் பட்டதே இல்லை. காய்களுக்குப் பதிலாகச் சின்ன வெங்காயம் போட்டுச் செய்த சப்ஜியும் புதுசா இருக்கு. ஏனெனில் ராஜஸ்தானில் சின்ன வெங்காயமே கிடைக்காது. தமிழ்நாடு, கேரளத்திலிருந்து தான் வரணும். ஒருவேளை இப்போக் கிடைக்கலாம். சரக்குப் போக்குவரத்து மேம்பட்டிருப்பதால். ஆனாலும் ராஜஸ்தானின் மார்வாரில் இப்படி ஒரு சப்ஜி செய்ததாகத் தெரியலை. ஒரு வேளை ஸ்ப்ரிங் ஆனியன் எனப்படும் வெங்காயத் தாளின் அடியில் உள்ள பாகமாக இருக்கலாம். அவை சின்ன வெங்காயம் அளவிலும் கிடைக்கும்.இந்த மாதிரி ஒரு செய்முறை இன்று வரை கேட்டதில்லை/சாப்பிட்டதும் இல்லை. புத்தம் புதுசு. அதிலும் வெங்காயம் இல்லைனாக் கத்திரிக்காய், காலிஃப்ளவர்னு!
நீக்குஒவ்வொரு காய் செய்முறைக்கும் பெயர்கள் மாறுபடும்.கொஞ்சம் குழப்பமாக உள்ள செய்முறை. அஜ்மேருக்குத் தெற்கே ராஜஸ்தானின் மேவார் பகுதி! அங்கே எல்லாம் காரம் கூடப் போட்டுப் பண்ணுவார்கள். அஜ்மேருக்கு வடக்கே ஜெய்ப்பூர் எல்லாம் மார்வார். நாம எல்லோரையும் "சேட்டு" அல்லது "மார்வாரி" என்போம். இரண்டு பகுதி சமையல் முறைகளிலும் வேறுபாடுகளும் உண்டு.
நீக்குசின்ன வெங்காயம் இல்லாததால் கத்தரிக்காயா ? வித்தியாசமாக இருக்கிறதே...?
பதிலளிநீக்குஆம்!
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்.
நீக்குசின்ன வெங்காயம் இல்லேன்னா
பதிலளிநீக்குகத்தரிக்காய்!!...
இன்னைக்கு கச்சேரி நல்லாயிருக்கும்!..
😄😃😃😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
நீக்குதுரை அண்ணா சி வெ லதான் சொல்லிக் கொடுத்தவங்க செஞ்சாங்க...
நீக்குஎங்கிட்ட சி வெ அன்று இல்லை கத்தரி எல்லாத்துகும் பொருந்திப் போகும் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.
இன்னைக்கு கச்சேரி நல்லாயிருக்கும்!..//
ஹா ஹா ஹா ஆனா என்னால் இன்று பக்க வாத்தியத்துக்கு ஏற்றாற் போல பாட இயலாதே ஹா ஹா
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைவரும் நல் ஆரோக்கியத்தோடு இருக்கப் பிரார்த்தனைகள்.
அன்பு கீதாவின்
செய்முறையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
வெகு கச்சிதம். மனம் நிறை பாராட்டுகள்.
மிக்க நன்றி வல்லிம்மா
நீக்குஎனக்கு நினைவு படுத்தியமைக்கும் மிக்க் நன்றி வல்லிம்மா
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் சகோதரி கீதாரெங்கன் அவர்கள் அவர்களுக்கே உரித்தான அருமையான படங்களுடன், விளக்கமான செய்முறைகளும் தந்து பகிர்ந்திருக்கும் ராஜஸ்தான் ஸ்டைல் சப்ஜி மிகவும் நன்றாக உள்ளது. எப்போதுமே கத்திரிக்காய் எதனுடனும் இசைவாய் சேர்ந்து தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துக் கொள்ளும். சின்ன வெங்காயம் முழுதாக (வகுந்து கொள்ளாமல்) போட்டு ஒருமுறை இந்த மாதிரி (ஆனால் கருஞ்சீரகம் இல்லாமல்) செய்துள்ளேன். இதனுடன் எந்த காய்கறிகளும் சேர்க்கலாம் என தெரிந்து கொண்டேன். அருமையான முறையில் இதை செய்திருக்கும் சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் நன்றிகள். இதை எங்களுடன் பகிர்ந்திருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா மிக்க நன்றி
நீக்குநீங்களும் செய்துருக்கீங்க ஆஹா சூப்பர்
சொல்லப்பட்ட ஏதேனும் ஒரு காய் தான் அக்கா. எல்லா காய்களும் கலந்து அல்ல
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
நல்ல க்ரேவி.
பதிலளிநீக்குஇதில் பேபி உருளைக்கிழங்கும், கத்திரிக்காயும் நன்றாக இருக்கும்.
கருஞ்சீரகம், ஜீரகம் பிறகு பெருங்காயமும் போட்டால்
சரியாக இருக்குமா.
எல்லாப்படங்களும் வெகு அழகாக வந்திருக்கின்றன.
இத்தனை வேலைகளுக்கு நடுவில்
நல்ல ரெசிப்பி அனுப்பி இருக்கிறீர்கள்.
நன்றி மா. மகளிடம் சொல்லி
செய்து பார்க்கச் சொல்கிறேன்.
கருஞ்சீரகம், ஜீரகம் பிறகு பெருங்காயமும் போட்டால்
நீக்குசரியாக இருக்குமா.//
நன்றாகவே இருந்தது அம்மா
ஏதேனும் ஒரு காய் தான் போட்டால் நன்றாக இருக்கும் அம்மா
மிக்க நன்றி வல்லிம்மா
கீதா
ராஜஸ்தானி/மார்வாரி ஸ்டைல் சப்ஜி மிக அருமையான அழகான படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.
பதிலளிநீக்குசெய்முறையில் சேர்த்து கொண்டவை மட்டும் குறிப்பில் சொல்லி விட்டு பின்பு" பின் குறிப்பு " -என்று போட்டு மற்ற காய்களிலும் செய்யலாம் என்று போடலாம் கீதா.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமதி அக்கா.
நீக்குநானும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன் கோமதி அரசு மேடம்
நீக்குஸ்ரீராம், நெல்லைத் தமிழன் இருவருக்கும் நன்றி.
நீக்குமார்வாடி செய்முறை நன்று. அவர்களது சமையல் முறையில் ஒன்றிரண்டு செய்ததுண்டு. நன்றாகவே இருக்கும். கீதாஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குரசித்தேன், ருசித்தேன்
பதிலளிநீக்குகாலை வணக்கம் அணைவருக்கும்.
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமதி மேடம்.
கீதா மேடம் சப்ஜி அருமை.
னிச்சயம் செய்து பார்க்கிறோம்.
எனக்கும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு சப்ஜி மட்டுமே சாப்டு அலுத்துவிட்டது.
வழக்கமா நறுக்கி, வெட்டி, அரைத்து வேக் வைத்து என்று சமயல் குறிப்பு சொல்வார்கள்.
இன்னைக்கு மேடம் குறிப்புகள் ள வகுந்து போன்ற எக்ஸ்ட்ரா வார்த்தைகள் சமயல வண்முறையா மாத்திருச்சு.
எப்படியும் சுவையான சப்ஜி. நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி அரவிந்த்
நீக்குஇரண்டே படம்... வேலை முடிந்தது... அருமை... பகிர்ந்து கொள்ள எளிது... நன்றி...
பதிலளிநீக்குசெய்யும் போதே திட்டம் போட்டு படம் எடுப்பது சரி தான்... எப்போது காணொளி...? இப்போது கிண்டில் முடிந்து காணொளி உலகம் அல்லவா....?
கோமதி அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், கடவுள் உங்களுக்கு அருள வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கும், வேண்டுதலுக்கும் நன்றி பானு.
நீக்குசப்ஜியின் செய்முறையும், படங்களும் சிறப்பு. கத்தரிக்காய், சின்ன வெங்காயம் தவிர்த்து காலிப்பூவிலோ, வெண்டைக்காயிலோ செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஎன்னையும் நெல்லையையும் தவிர்த்த எல்லோருக்கும் புரிஞ்சிருக்கு போல! என்னோட ம.ம.க்குள் புகுந்துக்கலை. ஆனாலும் காலிஃப்ளவரிலும் பண்ணலாம், வெண்டைக்காயிலும் பண்ணலாம், கத்திரிக்காயிலும் பண்ணலாம் என்கிறப்போ கொஞ்சம் எங்கோ இடிக்குது. யாரானும் ஓடி வந்து நிஜம்மாவே இடிக்கிறதுக்குள்ளாக ஓடிடறேன். ஜூட்!
பதிலளிநீக்குநான் ஊரிலேயே இல்லை. நேத்து முழுக்க மின்சாரம் வோல்டேஜ் பிரச்னை. சாயந்திரம் ஐந்து மணிக்குப் பின்னர் சரியானது. இன்னிக்குக் காலம்பரவே குழாயில் நீர் வரலை. டாங்க் முழுவதும் காலியாகி! பாதி குளிக்க ஆரம்பிச்சாச்சு! அதுக்கப்புறம் சமையலுக்குத் தண்ணீர் பிடிக்கும் குழாயில் பிடிச்சுக் குளிச்சுட்டு வெளியே வந்தேன். தண்ணீர் அதன் பின்னர் தான் மேலே ஏற்றினார்கள். அப்புறமா வீட்டு வேலைகள் முடிஞ்சு பூத்தொடுத்துக் கண்களுக்கு ஓய்வும் கொடுத்துட்டு வந்தால் சுத்தம்! இணையமே இல்லை. இப்போத் தான் வந்திருக்கு. ஓடிடறேன் யாரானும் வந்து என்ன புலம்பல்னு கேட்கும் முன்னர். :))))
பதிலளிநீக்குகீதாமா , நானும் முதலில் என்னடான்னு யோசித்தேன். பிறகு
பதிலளிநீக்குமுன்னால எப்பவோ,
இதே மாதிரி ஏதோ ஒரு பதிவு எழுதி எல்லோரும் கேட்ட நினைவு வந்தது. நம்ம கீதா ஆர். அதைத்தான் சொல்ல வருகிறார்.
ஏதாவது ஒரு காய்னு புரிஞ்சது.:)
மின் நிலா படங்களும், கீதா ரங்கன் திருபாகமும் வெகு ஜோர்.
பதிலளிநீக்குஅப்படியே திரட்டிப் பால் ஜாடையில்
நன்றாக வந்திருக்கு.
வாழ்த்துகள் கீதா.ஆர்.
நன்றி கௌதமன் ஜி.
நன்றி.
நீக்குஇந்தத் திருபாகம் நானும் தான் பண்ணி தி/கீதாவுக்கு முன்னாடியே என்னோட வலைப்பக்கத்தில் போட்டேன். ஆனால் பாருங்க! எ.பி.யில் வந்தால் தான் அதுக்கு போணி! இல்லைனா இல்லை. என்னத்தைச் சொல்றது? :)))))))
பதிலளிநீக்குஹா ஹா ! அதனால் என்ன? எல்லோரும் எங்கள் குடும்பம்தானே !!
நீக்கும்ம்ம்ம்ம், இங்கே சுட்டியை மட்டுமானும் கொடுத்துத் திருப்திப் பட்டுக்கிறேன். பார்க்கிறவங்க பார்க்கட்டும்.
நீக்குhttp://sivamgss.blogspot.com/2017/10/blog-post_16.html
அல்ப திருப்தி! :))))))
நீக்கு