நெல்லைத்தமிழன்:
1. நீங்கள் இளமையில் வாழ்ந்த இடங்களுள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு?
# இளமையில் நாம் வாழ்ந்த எந்த இடத்திற்கும் மீண்டும் போய்ப் பார்த்து வருவது என்பது சுவாரசியமான அனுபவம்தான் . ஆனால் அநேகமாக அவ்வாறு சென்று பார்ப்பது ஒரு ஏமாற்ற உணர்ச்சியையே பெரும்பாலும் ஏற்படுத்துகிறது . ஏனென்றால் எல்லா இடங்களும் தலைகீழாக மாறிப் போய்விடுகின்றன.
& கீழே காணப்படும் படத்தில் உள்ள JNF என்பது நான் பிறந்த வீடு என்று kayjees திங்கட்கிழமை படம் எடுத்து அனுப்பியிருந்தார். வீட்டின் பெயர் மட்டும் எழுபது ஆண்டுகளாக அப்படியே உள்ளது. ஆனால் வீட்டின் முகப்புத் தோற்றம் முற்றிலும் மாறியுள்ளது என்று அவர் சொன்னார். பிறந்து சில மாதங்களே அந்த வீட்டில் குடியிருந்தோம். பிறகு அருகில் உள்ள வேறு வீட்டுக்கு மாறிவிட்டோம்.
2. கோபத்தினால் நீங்கள் இழந்ததில் மறக்க முடியாதது எது?
# என் கோபம் எப்பொழுதுமே மிகவும் அற்ப ஆயுள் கொண்டது. N எனவே என் கோபத்தால் எனக்கு பெரிய நட்டம் எதுவும் ஏற்பட்டது இல்லை.
& கோபத்தினால் நான் இழந்ததில் மறக்க முடியாதது என்ன என்பது மறந்துபோய் விட்டது!
3. எதனால் நண்பனிடம் எல்லாம் பேச முடிகிறது, துணைவி/துணைவனை விட?
# வெட்கம் அல்லது அவமானம் தரக்கூடிய சில செய்திகளை மனைவியிடம் சொல்வது கடினம் . ஆனால் நம்மை முழுதும் புரிந்து கொண்ட நண்பரிடம் எதையும் சொல்ல நமக்குத் தயக்கம் வருவதில்லை . காரணம் என்ன சொன்னாலும் ஒரு தவறான புரிதல் அல்லது நட்புக்கு இடையூறு வரும் வாய்ப்புகள் உண்டாவது சாத்தியம் இல்லை.
& மனைவி, நாம் என்ன சொல்ல ஆரம்பித்தாலும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உடனே ஒரு judgement pass செய்து - சொல்ல வந்த விஷயத்தையே திசை திருப்பிவிடுவார். நண்பன் அப்படி இல்லை - சொல்ல வந்ததை முழுமையாகக் கேட்டு இறுதியில் நமக்கு வேண்டியது ஆறுதலா / அட்வைஸா / சும்மா கேட்டுக்கொண்டால் போதுமா என்பதை அறிந்து அதற்கேற்ப எதிர்வினை ஆற்றுவது ஒரு காரணமாக இருக்கலாம்.
4. வாழ்க்கையின் இந்த இடத்தை அடைந்தது என்னுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சியால்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா அல்லது பூர்வ ஜென்ம வினைப்பயன் என்று மோன்றுமா?
# உயர்வான ஒரு இடத்தை அடைவது என்பது அதற்கான உழைப்பு , நமது சாமர்த்தியம் இவற்றைப் பொறுத்து தானே இருக்கும் ? அப்படி இல்லாமல் ஒரு உயர்வு கிடைக்குமானால் அது ஒன்று குருட்டு அதிர்ஷ்டம் இல்லையேல் பூர்வ ஜன்ம புண்ணியம் என்றுதானே சொல்ல வேண்டும் ?
& இப்போதெல்லாம் 'பூர்வ ஜன்ம வினைப் பயன்' என்றுதான் அடிக்கடித் தோன்றுகிறது!
5. இன்றைக்குப் போய்விட்டாலும் கவலையில்லை என்ற மனநிலை இருக்கிறதா? இல்லை பந்தங்களினால் நிறைய பணிகள் இருப்பதாகவே எண்ணுகிறீர்களா?
# இன்றைக்கு போய்விட்டால் பரவாயில்லை என்று நான் நினைப்பதில்லை . உண்மையில், போவதற்கு ஒரு சிறு பயம்தான் என்னிடம் இருக்கிறது . பணிகள் இருக்கிறது என்பதால் அல்ல. ஆசை , பாசம் , பயம் இவைதான் காரணம் .
& ஒரு சில பணிகள் முடிந்தபிறகு போனால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
6. /அப்போ இரண்டு ரூபாய் ஒரு கிலோ! பால் இரண்டரை ரூபாய், மூன்று ரூபாய் லிட்டர். // - இப்படி அந்தக் காலத்தில் உப்பு 10 பைசா, புளி 2 ரூபாய் என்றெல்லாம் சொல்லுபவர்கள், அப்போ இருந்த சம்பளத்தையும், இப்போ அதே வேலைக்குக் கிடைக்கும் சம்பளத்தையும் மட்டும் ஏன் ஒப்பிடுவதில்லை?
# இன்றைய விலைவாசிகளுடன் இன்றைய சம்பளத்தையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . அப்படி பார்க்கும் போது கூட , சம்பளம் மிக அதிகமாக இருப்பதும் அல்லது சம்பளம் இன்றைய விலைவாசிக்கு பொருத்தம் இல்லாமல் குறைந்து இருப்பதும் , இரண்டுமே ஆங்காங்கு காணப்படுகிறது.
7. இப்போதைய 'த' எனக்குப் பிடிக்கவில்லை. அச்சம் என்பது மடமையடா பட நாயகி மஞ்சிமாவை ஆஹா ஓஹோ என்று நினைத்தேன்........ FIR பார்க்கும்வரை. அப்போ நாம ரசித்தது யாரை? நடிகையையா?
# நடிகைகளில் முதன்மையாக கவனிக்கப்படுபவர்கள் அவர்கள் அழகுக்காகவே கவனிக்கப்படுகிறார்கள் . கனவுக்கன்னி என்பது போன்ற பட்டங்கள் நினைவுக்கு வரவில்லையா ? அழகு என்பது நிலையற்றது மட்டுமல்ல , நம்முடைய மனப்பான்மையையும் , ஒவ்வொரு காலகட்டத்தையும் பொறுத்தது . ராஜகுமாரி பத்மினி போன்ற அந்த காலத்து அழகிகள் அப்போது அழகால் புகழ் பெற்று விளங்கினார்கள் . அவர்களுடைய இளவயதுப் படங்களை இப்போது நாம் பார்த்தால் கூட அவர்கள் அழகு என்று நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது . காரணம் ரசனையில் மாற்றம் . அதே சமயம் சுகாசினி லட்சுமி போன்ற அறிவு ஜீவிகள் கூட நடிகைப் பட்டாளத்தில் உண்டு . அவர்களை மதிப்பவர்கள் எப்போதும் உண்டு . ஆராதிப்பவர்கள் இல்லை. எனக்கு நந்திதா தாஸ் ரொம்பவும் பிடிக்கும் காரணம் அவரது அறிவு மற்றும் திறன்.
& மஞ்சிமா என்று ஒரு நடிகை இருக்கிறாரா ! கூகிள் செய்து பார்த்தேன் ! மஞ்சிமாவுக்கு தமன்னா எவ்வளவோ (ஃபி)மேல் என்று தோன்றுகிறது. (ஆனாலும் மஞ்சிமாவுக்கு கொஞ்சம் அனுஷ் ஜாடையும் இருக்கிறது!!)
8. நடிகை நமக்குப் பிடிக்கும் காரணமே, ஆண் பெண் மனத்தைப் பொருத்தா?# ஆண் பெண் என்ற பாகுபாடு ஏற்படுத்தும் கவர்ச்சி அல்லது தயக்கம் எப்போதும் இருக்கும் ஒன்று .
= = = = = =
எங்கள் கேள்விகள் :
1) பாரத பூமி புண்ணிய பூமி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏன் ?
2) மறைந்தவர்களில் - இருப்பவர்களில் நீங்கள் விரும்பும் 2 + 2 எழுத்தாளர் களின் பெயர்கள் யாவை ?
3) நம்மிடம் உள்ள கெடுதியை அடையாளம் கண்டு நாமே மாற்றிக் கொள்வதற்கு வெளியிலிருந்து நாம் பெற வேண்டியது ஏதும் உண்டா ? அவ்வாறான மாற்றம் எல்லாருக்கும் சாத்தியமா ?
4) தொலைக்காட்சி செய்தித்தாள் இரண்டும் பார்க்காமலேயே வாழ்வது எப்படி இருக்கும் ?
5) எதிர்காலத்தில் வரக்கூடிய மிகப் பெரிய கண்டுபிடிப்பு எதுவாக இருக்கும் ?
6) வருஷம் தோறும் பெருவெள்ளம் வருவதை எதிர்கொண்டு அதை நல்ல முறையில் தீர்க்க அரசு என்ன செய்யலாம் என்று யோசனை சொல்வீர்கள் ?
= = = = =
படம் பார்த்து உ தோ எ
1)
2)
3)
" உஷ் அப்பாடா - என்ன வெயில் ! யாராவது அந்த AC ய ஆன் பண்ணுங்க !"
= = = = =
அனைவருக்கும் வணக்கம்
பதிலளிநீக்குவணக்கம்! வாங்கோ!
நீக்குஇவங்களை வீட்டுக்கு வரச் சொன்னா, வாசல் வரை வந்து வணக்கம் போட்டுட்டு வந்த ஆட்டோலயே திரும்பிப் போயிடுவாங்களோ?
நீக்கு:)))))
நீக்குசுவாரஸ்யமான கேள்வி பதில்கள் இரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை.மதிய வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும். தொற்று காரணமாகத் தனிமைப்பட்டிருக்கும் முதலமைச்சர் விரைவில் உடல் நலம் பூரணமாகக் குணமடையப் பிரார்த்தனைகள். மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்கவும் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குகிறோம்.
நீக்குகேள்வி/பதில்கள் சுவாரசியம். நெல்லை ஒருத்தரே எல்லாக் கேள்விகளையும் கேட்டிருக்கார் போல. நாம் பிறந்து வளர்ந்த இடத்துக்கு இப்போது போனால் ஓர் அந்நியத்தன்மையே மனதில் ஏற்படுகிறது என்னைப் பொறுத்தவரையில். ஆகவே நான் கூடியவரை தவிர்க்கவே நினைப்பேன்/நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஆனால் கோபு ஐயங்கார் கடையைத் தேடிச் சென்று சாப்பிட்டுவிட்டு, அந்தக் காலத்தில் ஆஹா ஓஹோ என்று புலம்புவதை மட்டும் விட மாட்டேன் ஹாஹாஹா
நீக்குகொட்டிக்கிறதுக்குனு போறது வேறே! எந்த ஊரானாலும் போய்த் தான் தீரணும். ஆகவே அதெல்லாம் ஒண்ணும் பரவாயில்லை.
நீக்கு:))))
நீக்குமுதல் படம் டாம் அன்ட் ஜெரியை நினைவூட்டுகிறது. ஆனால் அதில் எலிக்குஞ்சு. இங்கே பூனையார். இரண்டாவது படம் இயற்கையாய்த் தெரியலை. மூன்றாவது படம், இப்போவும் தூளியில் தூங்கும் குழந்தை உண்டா? தூளியை விலக்கிக் கொண்டு குழந்தை பார்த்துச் சிரிக்கையில் நம்முள் ஏற்படும் அந்த சந்தோஷம்! அதான் சொர்க்கம்!
பதிலளிநீக்குஆம், உண்மைதான். கருத்துரைக்கு நன்றி.
நீக்குபாரத பூமி புண்ணிய பூமி என்பதை எழுதப் போனால் எழுதிண்டே இருக்கலாம்.
பதிலளிநீக்குமறைந்த எழுத்தாளர்களில் கல்கி, தேவன் தவிர்த்துப் பலரும் உண்டு. ஆனால் இவங்க முதலிடத்தில். இருப்பவர்களில் யார் எழுத்தாளர்கள் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கணும். :(
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநம்முடைய கெட்ட மனோபாவம் நமக்குப் புரிந்தது எனில் மாற்றிக் கொள்வது எளிது. சிலருக்கு அது தான் புரியாது. தாங்கள் தான் ரொம்ப நல்லவர்கள் என நினைப்பார்கள்.
பதிலளிநீக்குஅம்பேரிக்கா போனால் கூட ஐபாட் இருப்பதால்/கணினி இருப்பதால் அதன் மூலம் செய்தித்தாள் பார்த்துவிடுவோமே! அதே போல் தொலைக்காட்சியும் இப்போதெல்லாம் உலகெங்கும்! நாமாக விரும்பித் தடுத்துக் கொண்டால் உண்டு.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅவ்வளவெல்லாம் அறிவியல் ஞானம் இல்லை.
பதிலளிநீக்குஅரசு தூங்காமல் கோடைகாலத்திலேயே இந்தத் தூர் வாருவது, நதிகளில் முளைத்திருக்கும் மரங்கள், ஆகாசத்தாமரை போன்றவற்றை அகற்றி மணல் தோண்டி இருக்கும் இடங்களில் உள்ள ஆழமான பள்ளங்களைச் சமன் செய்வது எனச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் அந்த அந்த ஊர் மக்களைக் கொண்டே செய்ய வைக்கணும். நூறு நாள் வேலைத்திட்டத்தை/நூற்றைம்பதாக ஆக்கச் சொல்லிட்டு இருக்காங்க. அந்த வேலைத்திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கும் ஊர் மக்களை இதற்குப் பயன்படுத்திக்கணும். அப்போத் தான் அவங்களுக்கும் நம்ம ஊர் என்னும் எண்ணம் ஏற்படும். உழைக்காமல் சோம்பேறித்தனமாகப் பணமும், அரிசியும் வாங்கிக் கொண்டு இலவசச் சாப்பாடு சாப்பிடணும்னு தோணாது. இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதையும் மக்களுக்குப் புரிய வைக்கணும். அரசியல்வாதிகளும் கட்சிக்காரர்களும் தாங்கள் ஏதோ தங்கள் கையிலிருந்து கொடுப்பதாய் மக்களை நினைக்க வைக்கக் கூடாது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநகரங்களில் சாலைகளை மேம்படுத்தணும். ஒவ்வொரு பகுதிக்கும் அந்தப் பகுதி எம்பி, எம் எல் ஏ, கவுன்சிலர் உள்படக் கலந்து பேசிச் சாலைகளைத் தரமானதாகப் போடணும். கழிவு நீர் செல்லும் பாதைகளை அடைப்பு இல்லாமல் சுத்தமாக வைக்கணும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குசிலர், பழைய பதிலையே தட்டிக்கொட்டி புதுப் பதிவா போடுவாங்களாம். ஆனா சாலைகள் மட்டும் புத்தம் புதுசா இருக்கணுமாம்
நீக்குபழைய பதிவைத் தட்டிக்கொட்டிப் புதுசாப் போடுவது என்னை மட்டும் சார்ந்தது. அதன் பாதிப்புகளோ/பலன்களோ எனக்கு மட்டும் தான். ஆனால் சாலைகள்? யோசிக்காமல் எதை வேணுமானாலும் சொல்லுவதா? க்ர்ர்ர்ர்ர்
நீக்குயோசிக்க வேண்டிய விஷயம்.
நீக்குஇந்த வார கேள்விகள் உருப்படியான கேள்விகள். பதில்களும் ஏனோ தானோ என்று இல்லாமல் முழுமையாக மனதில் பதியும் வண்ணம் அக்கறையோடு தரப்பட்டுள்ளன. நன்றி.
பதிலளிநீக்குமூலச்சந்த் கடையைப் பார்த்தவுடன், அட இது கடலூர் புதுப்பாளையம் அல்லவா என்று மகிழ்ச்சி தோன்றியது. அந்த புதுப்பாளையத்தில் தான் நான் பிறந்து வளர்ந்து பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தேன்.
உங்கள் கேள்விகளுக்கு பதில்.
பாரத பூமி புண்ணிய பூமியாய் இருந்தது. தற்போது ..... கேள்விக்குறியே? புண்ணிய பூமியாய் இருந்தால் பிள்ளைகள் எல்லோரும் ஏன் வெளி நாட்டிற்கு ஓடி விடுகிறார்கள்?
மறைந்தவர்களில் பிடித்த 2 எழுத்தாளர்கள் சாண்டில்யன் மற்றும் சுஜாதா. இருப்பவர்களில் .....?
நம்மிடம் உள்ள குறைகள் மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போதே நம்முடைய குறைகள் நமக்கு தெரிய வரும். அது போலத்தான் கெடுதியும். கெடுதி என்பதை முதலில் ஒத்துக்கொள்வதே கஷ்டம். அவ்வாறு ஒத்துக்கொண்டபின் அதை மாற்ற நினைப்பது அடுத்த கஷ்டம். இதை எல்லாம் தாண்டி அதை மாற்ற தன் முயற்சி மட்டும் போதும் என்ற நிலையைக் கைவிட்டு வெளியில் இருந்து உதவி பெறுவது அடுத்த கஷ்டம். ஆக அவரவர் பழக்க வழக்கங்களை மாற்றுவது கடினம்.
தொலைக்காட்சி செய்தித்தாள் பார்க்காமல் ஜெயிலில் இருந்து சுதந்திரம் பெற்றார்கள் நம் தலைவர்கள்.
நிகழ்கால கண்டுபிடிப்புகளையே இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை, இதில் எதிர்கால கண்டுபிடிப்புகள் பற்றி ஆருடம் கூறுவதால் என்ன பயன்?
வெள்ளங்களைத் தடுக்க அரசு ஒன்றும் செய்யவேண்டாம். மன்னர்கள் வெட்டிய கண்மாய், குளம், ஏரி போன்றவற்றை மீட்டு ஆழப்படுத்தினால் போதும்.
Jayakumar
சிறந்த கருத்துரை. கருத்துரைக்கு நன்றி. கடலூர் புதுப்பாளையத்தில் பிறந்து, பிறகு ஐந்து வயது வரை ரெட்டி சத்திரத் தெருவில் வளர்ந்து, (அப்போது என் உடன் ஓடி விளையாடிய நண்பன் பெயர் ஜெயக்குமார் !!) பிறகு நாகையில் படித்து சென்னைக்கு வந்து சேர்ந்த கதை மிகவும் நீளமானது!!
நீக்குஉண்மை பேசுவது என்பது நல்ல குணம் என்றால் ஏன் பெரும்பாலானவர்கள் பொய் பேசுகின்றனர்? ஜெகே சார்? நீர் அதன் புதல்வர் இன்நினைவு அகற்றாதீர்
நீக்குஆம்.
நீக்குஅன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவணக்கம்!
நீக்குவாழ்க வையகம்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
வாழ்க, வாழ்க!
நீக்கு@ கேள்விகள்..
பதிலளிநீக்கு// 1) பாரத பூமி புண்ணிய பூமி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?.. ஏன் ?..//
நான் மறுத்தால் அல்லவோ ஒப்புக் கொள்ளவதற்கு!..
இது புண்ணிய பூமி என்றே சொல்லியிருக்கின்றேன் - எனது தஞ்சையம்பதி தளத்தில் ..(புண்ணிய பூமி - 11 ஜூலை/2022)
அதற்கான காரணங்களோடு..
ஆஹா! நன்றி.
நீக்கு1. அதிலென்ன சந்தேகம்? மனப்பூர்வமாக, உண்மையாக பாரத பூமி புண்ணிய பூமி என்றுதான் கூறுவேன். காரணம் subtle ஆனது என்பதால் விளக்குவது கடினம்.
பதிலளிநீக்கு2.லா.ச.ரா., அசோகமித்திரன், புதுமைப்பித்தன், தி.ஜ.ரா. கு.ப.ரா. ஆர்.சூடாமணி என்று பட்டியல் நீளம்.
இப்போது எழுதுகிறவர்களில் இரா.முருகன், சங்கரநாராயணன், ரிஷபன், வாஸந்தி, மாலா மாதவன், ராய செல்லப்பா, அப்பாதுரை, வெங்கட் நாகராஜன் தில்லையகத்து கீதா இவர்களோடு பானுமதி வெங்கடேஸ்வரனையும் கொஞ்சம் பிடிக்கும்.
நன்றி பா வெ
நீக்குஎன்னை எல்லாம் எழுத்தாளர்/எழுத்தாளிப் பட்டியலிலேயே சேர்க்கலை பாருங்க. அவங்களோட நெருக்கமானவங்களைத் தான் சொல்லி இருக்காங்க. ஆனால் ஶ்ரீராம் இல்லையே! எனக்கு ஶ்ரீராமின் சகஜமான நேரிலேயே பேசுவது போன்ற விவரணை ரொம்பப் பிடிக்கும். ரசித்துப் படிப்பேன்.
நீக்கு@கீதா அக்கா: ஆஹாங்..! இந்த பதிலை எழுதும் பொழுதே வில்லங்கத் தை விலைக்கு வாங்குகிறோமோ என்று தோன்றியது. வேறொன்றுமில்லை, எழுத்தாளர்கள் என்றதும் நமக்கு எஸ்டாபிளிஷ்ட் எழுத்தாளர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.நம்மிடையே இருக்கும் நல்ல எழுத்தாளர்களை நினைப்பது இல்லை. கீதா அக்காவை ரசிக்காமல் இருக்கமுடியுமா? நல்ல விமர்சகர். குறிப்பிட மறந்த பெயர்களில் ஸ்ரீராம், ரஞ்சனி நாராயணன், இன்னும் பலர் உண்டு.
நீக்குபி.கு.: இவர்களில் கீதாவோடு மட்டுமே நெருங்கிய பழக்கம் உண்டு.
அது சரி நம் இருவரையும் தவிர மற்ற எல்லோருமே இந்த கேள்வியை சாய்சில் விட்டு விட்டார்கள் பாருங்கள்..:))
நீக்குஒன்று கவனித்தீர்களா கீதா அக்கா? நம் இருவரைத் தவிர மற்றவர்கள் இந்த கேள்வியை சாய்சில் விட்டு விட்டார்கள்:))
நீக்குவல்லி அக்காவை பார்க்கவே முடிவதில்லையே..?
நீக்கு// அவங்களோட நெருக்கமானவங்களைத் தான் சொல்லி இருக்காங்க. ஆனால் ஶ்ரீராம் இல்லையே! எனக்கு ஶ்ரீராமின் சகஜமான நேரிலேயே பேசுவது போன்ற விவரணை ரொம்பப் பிடிக்கும். ரசித்துப் படிப்பேன்.// ஆம் ஆம் உண்மை ! பா வெ மேடம் என் பெயரைக் கூட குறிப்பிடவில்லை ..
நீக்கு@கௌதமன் சார், உங்களைச் சொல்லலையேனு எனக்கும் தோணினாலும் நீங்க அதிகம் கேள்வி/பதில் தானே கொடுக்கறீங்க, அதனால் சொல்லலையோனு நினைச்சேன். அதான் இங்கே குறிப்பிடவில்லை.
நீக்குவல்லி இப்போத் தான் சாப்பிட ஆரம்பிச்சிருப்பதாகச் சொன்னாங்க. இன்றைய நிலைமை என்னனு கேட்கணும். :( அவங்க குடும்பத்தில் எல்லோரையுமே உடம்பு படுத்துகிறது. இந்தியா வந்து வருஷங்கள் ஆனதாலோ என்னமோ! :(
நீக்குஏன், வெங்கட்டும் உங்களுக்குப் பழக்கமானவர் தானே பானுமதி! :)
நீக்கு//ஏன், வெங்கட்டும் உங்களுக்குப் பழக்கமானவர் தானே பானுமதி!// வெங்கட், கீதா இவர்களுக்கு முன்பே நீங்கள்தான் எனக்கு பழக்கம்.
நீக்கு//ஆம் ஆம் உண்மை ! பா வெ மேடம் என் பெயரைக் கூட குறிப்பிடவில்லை ..// வேணும், வேணும் எனக்கு நல்லா வேணும்.. கையை வெச்சுகிட்டு சும்மா இருக்க முடியாததற்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.
நீக்கு:)))))
நீக்கு3. வெளியிலிருந்து நமக்கு கிடைக்கும் அவமானங்கள், புறக்கணிப்புகள் இவைகளுக்கு காரணம் என்ன என்று யோசித்தால் நம்மிடம் இருக்கும் கெடுதியை உணரலாம்.
பதிலளிநீக்கு4. அதுதான் யூ ட்யூப், ட்விட்டர் போன்றவை இருக்கின்றதே..
5. கேன்சருக்கு மருந்து..?
6. மழை தொடங்கும் முன்பே ஆறுகள், குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட்டு ஆப்படுத்தப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு முறையாக செய்யப்பட வேண்டும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமெய் வருத்தத்தை அறியாதவர்களுக்கு குருட்டு நம்பிக்கைகள் தோன்றலாம்...
பதிலளிநீக்கு619 :-
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு@ JC..
பதிலளிநீக்கு// புண்ணிய பூமியாய் இருந்தால் பிள்ளைகள் எல்லோரும் ஏன் வெளி நாட்டிற்கு ஓடி விடுகிறார்கள்? ..//
ஓடுபவர்கள் ஓடட்டும்..
உணராதவர்கள்
ஒதுங்கட்டும்..
தாமரைக் குளத்துத் தவளைகள் தாமரைப் பூவை நுகர்ந்ததில்லை!..
ஆஹா ! என்ன உவமை!
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகெடுதியை அடையாளம் கண்டு மாற்ற முயல மிக முக்கியக் காரணம் நம்மைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நம் பசங்க தான். பசங்கள் ட உள்ள கெட்டகுணம், செய்கை நம்மைப் பார்த்து அவங்க கற்றுக்கொண்டது
பதிலளிநீக்குஅப்படியும் இருக்கலாம்.
நீக்குபெருவெள்ளம் - குளம் குட்டைகளை உண்மையா தூர்வாரி தண்ணீர் அதில் சேரும் வழியை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை காசு வாங்கிக்கொண்டு ஊக்குவிப்பதைக் கைவிடுவது
பதிலளிநீக்குநல்ல கருத்து. நன்றி.
நீக்குநெல்லையின் முதல் கேள்விக்கு - இலங்கைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனால் இப்போது செல்லும் நிலையில் இலங்கையும் இல்லை அது நல்லா இருந்தாலும் நான் செல்லும் நிலையிலும் இல்லை...
பதிலளிநீக்குகீதா
ஓ . sad
நீக்குநெல்லையின் 3 வது கேள்விக்கு - இதுக்குத்தான் முதல்ல இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது!!!!
பதிலளிநீக்குகீதா
பெண்ணைக் கல்யாணம் பண்ணிண்டால் போலீசைப் பக்கத்தில் வைத்திருப்பதுபோல என அனுபவஸ்தர்கள் பேசிக்கறாங்களே. இதுல ப்பிரண்டாம்
நீக்கு:))))))
நீக்குஹாஹாஹாஹா நெல்லை......இப்படி எடுத்துக்கோங்களேன் இடித்துரைப்பவள் தோழின்னு!!!!!!!
நீக்குகீதா
இங்க வர வேண்டியது கீழ போய்டுச்சு
ஆனாலும் புரிந்துகொண்டோம்.
நீக்கு6. நெல்லை ஹைஃபைவ்! அதேதான்...பணத்தின் மதிப்பு பற்றி யோசிப்பதில்லைதான்...ஆனால் அதே சமயம் பணத்தின் மதிப்பும் வீழ்ந்துவருகிறதுதா..
பதிலளிநீக்குகீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎன்னைப் பொருத்தவரை இந்த உலகமே புண்ணிய பூமிதான். எல்லா நாடுகளிலும் அந்தந்த நாட்டின் புராணங்கள் வரலாறு, மஹான்ககள் அவதரிப்புகள் உண்டே! அந்தந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் பூமி புண்ணிய பூமிதான். கடவுளின் படைப்பு என்று இந்த உலகையே சொல்கிறோமே...
பதிலளிநீக்குகீதா
இப்ப எல்லாரும் ஒத்துக்கறீங்களா? கீர எனக்குப் பெரிய அக்காங்கறதை. அதனால்தான் வயது முதிர்ந்த யோகி மாதிரிப் பேசறாங்க
நீக்கு👋👋👋👋
நீக்குஇப்ப எல்லாரும் ஒத்துக்கறீங்களா? கீர எனக்குப் பெரிய அக்காங்கறதை. அதனால்தான் வயது முதிர்ந்த யோகி மாதிரிப் பேசறாங்க//
நீக்குஹாஹாஅஹாஹா....ஏன் சின்ன வயசுனா யோகி மனம் வராதா என்ன!!? jokes apart...
எனக்கு இந்த மாதிரியானவை பள்ளிக் காலத்துலருந்தே உண்டு. மகனுக்குச் சொல்லிக் கொடுத்ததும் இதுதான்...
கீதா
யோகிகளுக்கு வயது தடை இல்லை. ஆம்.
நீக்கு3. நம் கெடுதிகலை நாமே உணர்ந்தால்தான் மாற்றிக் கொள்ள முடியும் அது வெளியோர் சொன்னாலும் சரி, வீட்டில் இருப்பவர்கள் சொன்னாலும் சரி...அதை நம் மனது உணர்ந்தால்தான் மாற்றம் ஏற்படும்..
பதிலளிநீக்குகீதா
உண்மை. நாம் ரியலைஸ் பண்ணாமல் மாற்றம் சாத்தியமில்லை
நீக்குஎழுத்தாளர்கள் - காலத்தை விஞ்சுபவர்கள் வெகு அபூர்வம். வாண்டுமாமா படித்த காலத்தில் தமிழ்வாணன் சில எழுத்து , கல்கி படிக்கலாம், பல எழுத்துகளைத் (உதாரணம்) தொடமுடியாது. வயதைப் பொருத்து ரசனை
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குதொலைக்காட்சி செய்தித்தாள் பார்க்காமல் - நிஜமாகவே சுக வாழ்வு.
பதிலளிநீக்குஇதோட இணையம் வாட்சப்
நீக்குஆம்.
நீக்குதொலைக்காட்சி, செய்தித்தாள் இந்த இரண்டுமே நம் வீட்டில் கிடையாது!!!!
பதிலளிநீக்குஆனால் கூகுள், யுட்யூப் இருக்கு. பார்க்கலாம்தான் செய்திகள் பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஆனால் நான் விரும்பும் சில படங்கள், காணொளிகல், சுற்றுலா காணொளிகள் பார்ப்பதுண்டு. செய்திகள் பெரும்பாலும் இப்படி வலைத்தளங்களின் வழி தெரிவதுண்டு
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு6. ஹாஹாஹா இத்தனை வருஷம் பல ஆய்வாளர்களும் , பெரியவர்களும் சொல்லாததா? அரசு இத்தனை வருடங்கள் செய்யவில்லையே....நாம் ஆலோசனை சொன்னாலும் அது நடக்குமா என்ன?
பதிலளிநீக்குஇருந்தாலும் அடிக்கடி சொல்வதுதான். இருக்கும் குளங்கள் ஏரிகளை மூடிவிடாமல் அதில் கட்டிடம் எழுப்பாமல், துண்டு நிலமாக்காமல் சுத்தப்படுத்தி அங்கு மழை நீர் எல்லாம் சென்று சேரும் வகையில் கட்டமைப்பு செய்ய வேண்டும் இருக்கும் கட்டமைப்புகளைச் செப்பனிட வேண்டும்..பெரியோர்கள் சொன்னதைச் சொல்கிறேன்!! வழிமொழிகிறேன்
கீதா
மழை நீர் வடிகால் வசதிகளைப் பெருக்கினாலே போதும். நீர் நிலைகளுக்கு அருகில் ஆக்ரமிப்புகள் அதிகம். ஏற்கனவே ரியல் எஸ்டேட் தான் நீர் நிலைகளைச் சுத்தி கூடவே ஏரிகளில் கழிவு நீர் வந்து சேர்கிறது இங்குதான் பார்க்கிறேனே...
நீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபாரதபூமி புண்ணிய பூமிதான் மலைகள் புண்ணியநதிகள் என அடங்கியுள்ளது கோடிக்கணக்கான முனிவர்கள் மகான்கள் அவதரித்த இடம். பல்லாயிரம் கோவில் தலங்கள் என சிறப்புடன் அமைந்துள்ளது. இந்து புராணங்களில் சிறப்புடன் போற்றப்படும் பூமி.
பதிலளிநீக்குசுஜாத்தா, ஜானகிராமன் கதைகள் பிடித்தமானது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு@ கௌதமன்..
பதிலளிநீக்கு// ஆஹா ! என்ன உவமை.. //
அந்த வார்த்தைகள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச ஸ்வாமிகளுடையவை..
நன்றி.. நன்றி..
நன்றி.
நீக்குநான் பிறந்து வளர்ந்த ஊராகிய ராசிங்கபுரத்திற்குச் செல்ல ஆசை. இடையில் ஒரு முறை சென்றதுண்டு. ஆனால் அதன் பின் செல்ல இயலவில்லை. கல்லூரிக்காலம் வரை தமிழ்நாடு என்பதால் நாகர்கோவிலுக்கும் மதுரைக்கும் செல்ல ஆசை.
பதிலளிநீக்குதுளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநம் பூமி கண்டிப்பாகப் புண்ணிய பூமி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே புண்ணிய பூமியில் பாலியல் பலாத்காரமும், அதுவும் பிஞ்சுக் குழந்தைகளைச் செய்வது , கொலைகளும் வேதனைப்படுத்தும் விஷயங்கள்.
பதிலளிநீக்குவெள்ளம் வருவதற்கானத் தீர்வுகள் வராமல் இருக்கத் தீர்வுகள் என்று அப்போதைக்குப் பேசப்பட்டு அப்புறம் மறக்கப்பட்டுவிடுபவை. ஏற்கனவே பேசப்படுபவைதான். இருப்பவற்றைப் பாதுக்காத்தாலே பெரிய விஷயம்.
முன்பு பிடித்த எழுத்தாளர் என்றால் சாண்டில்யன் பிடிக்கும். இப்போது வலைத்தளங்களில் நிறையப்பேர் மிக நன்றாக எழுதுகிறார்கள்.
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்விகள், அவற்றிற்கான பதில்கள் அனைத்தும் அருமை. படித்து ரசித்தேன். அனைவரது கருத்துரைகளும் சுவாரஸ்யமாக இருந்தது.
பாரத பூமி நிச்சயமாக புண்ய பூமிதான். ஆனால் அந்த புண்ணியங்களை பற்றி இப்போதெல்லாம் மதிக்காமல். அதைப்பற்றி சிறிதேனும் கவலையுறாமல் வாழுகிறோமோ எனவும் தோன்றுகிறது.
படிக்கும் போது மனதை தொடும் எல்லோரது எழுத்துக்களுமே ரசிக்கத்தக்கதுதான். .
இப்போது வந்திருக்கும் இந்த தொற்றைப் பார்த்து, பார்த்து எதிர்காலத்தில் பல நோய்கள் வந்து விட கூடாதே என அச்சம் வருவதை தவிர்க்க இயலவில்லை.
வெள்ளம் வரும் முன் அணைகட்ட வேண்டும் என்ற முன்னோர்கள் வாக்கு நினைவுக்கு வருகிறது.
படங்கள் அருமை. அவற்றிற்கான தங்களது கமெண்ட்ஸ்களும் அருமை.
பள்ளிக்குப் போய் வருகிறேன் எனச் சொல்லும் குழந்தைதான் எவ்வளவு அழகு.
இறுதிப்படம் "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே " என்ற சின்னத்தம்பி படப்பாடலை நினைவூட்டுகிறது.
அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் படித்தேன்.
அனைத்தும் அருமை.
தூளியில் குழந்தைகள் தூங்கும் குழந்தை உண்டா என்று கீதாசாம்பவிவம் கேட்டு இருக்கிறார்கள். என் தம்பி பேத்தி, தங்கை பேரன்கள் எல்லாம் தூளியில் போட்டு ஆட்டினால்தான் தூங்குவார்கள்.
என் பேரன்கள், பேத்தி எல்லாம் தூளியில் தூங்கவில்லை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு