பானுமதி வெங்கடேஸ்வரன் :
மற்ற உடல் ஊனங்கள் பரிதாபமாக பார்க்கப்படுகின்றன, காது கேட்காதது மட்டும் நகைச்சுவையாக்கப் படுகிறதே? ஏன்?
# இதற்கு நமது நகைச்சுவை எழுத்தாளர்கள் மட்டுமே காரணம் . சினிமா நாடகம் ஆகியவற்றில் காது கேளாதவரை - திக்குவாய் - பேச இயலாதோர் என்றெல்லாம் பலரை , கேலி செய்து நகைச்சுவை என்ற பெயரில் வியாபாரம் செய்தார்கள். நல்லவையாக கண் தெரியாதவரை அவ்வளவு கிண்டல் செய்து யாரும் எழுதவில்லை.
& ஒரு வேளை காது கேட்காதவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்குமோ?
மற்ற மாதங்களில் இல்லாத சிறப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைப்பது, அம்மனுக்கு மா விளக்கு போடுவது போன்றவை செய்யப்படுவது ஏன்?
# தை என்பது அறுவடை மாதம் . கல்யாண காலம் .
ஆடி மாதம் தட்சிணாயன ஆரம்பம் . இதைத் தவிர வேறு என்ன விசேஷம் என்பது எனக்குப் புரியவில்லை . ஒருவேளை விவசாய வேலைகள் அதிகபட்சமாக ஆகுமுன்னர் இருக்கிற சிறிய ஓய்வு காலம் என்று கொள்ளலாமோ என்னவோ .
எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து , சில விசேஷங்களை கொண்டாடுவது நமது மரபு . இது மக்களின் மனமகிழ்ச்சியை தொடர்ந்து வைத்துக் கொள்ள நம் வாழ்வு முறையில் நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு யுக்தி .
& " ஆடிக் காட்டு " என்று சொன்னால் உடனே ஆடும் திறமை உள்ளவர்கள் 'தை, தை' என்று ஆடுவதால் ஆடியும் தையும் கொண்டாட்ட மாதங்களாக ஆகி இருக்கலாம்!
= = = = =
எங்கள் கேள்விகள் :
1) நீங்கள் சமீபத்தில் வாங்கிய அல்லது பயன்படுத்திய வித்தியாசமான எலக்டிரிக்கல் / எலெக்ட்ரானிக் சாதனம் எது?
2) நீங்கள் சமீபத்தில் சென்ற வழிபாட்டுத்தலம் எது ?
3) சமீபத்தில் உங்களைப் பெரிதும் பாதித்த அல்லது பொங்க வைத்த நிகழ்வு எது?
4) உங்களுக்குப் பிடித்தவை பெரும்பாலும் பழைய சினிமா பாடல்களா - அல்லது புதிய பாடல்களா?
5) 'காக்கா கடி' கடித்து பண்டங்களை பகிர்ந்து கொண்டது உண்டா - அல்லது மற்றவர்களிடமிருந்து கா க பண்டங்கள் வாங்கி சுவைத்தது உண்டா? அப்படி நினைவில் உள்ள சில பண்டங்கள் எவை?
= = = = = =
படம் பாருங்க; கருத்து எழுதுங்க!
1)
தண்ணி காட்டுபவரின் நிழல் எது?
2)
இதெல்லாம் சாத்தியமா?
& இந்த வாரம் நாங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் மொத்தம் எவ்வளவு?
= = = = = =
அனைவருக்கும் வணக்கம்
பதிலளிநீக்குவணக்கம். எல்லோருக்கும் நல்வரவு.
நீக்குகாது கேளாதோருக்கான பதில் உண்மை ஜி
பதிலளிநீக்குஅனுபவம் பேசியுள்ளது!
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் பழைய/புதிய தொற்றுகள் அறவோடு நீங்கி ஆரோக்கியம் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குஆடி மாதம் தேவாதி தேவர்களின் மாலைக்காலம் ஆரம்பம். தை மாதம் விடியல் ஆரம்பம். ஆகவே இரண்டு மாதங்களுமே வழிபாட்டுக்கு உரிய காலமாக ஆகிறது. ஆடி மாதங்களில் தேவர்களின் மாலை நேரத்தில் அம்பிகையின் சக்தி பெருகும் என்பார்கள். அதனால் அநேகமாக அம்பிகை வழிபாடே அதிகமாக இருக்கும். அதே போல் தை மாதத்திலும் அம்பிகை கண் திறந்து அனைவரையும் கடாக்ஷிப்பதால் அந்த மாதமும் அம்பிகைக்கு உரிய மாதமாகிறது. இன்னும் விரிவாக எழுதணும்னால் பதிவே போடணும். இங்கே கணினி படுத்தல் ஆரம்பிக்கும் முன்னர் அவசரம் அவசரமாகப் பதில் எழுதிப் பதிவுகளைப் பார்க்கணும். :)
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குமூன்று கேள்விகள் கேட்டிருக்கீங்க. மாட்டுக்குத் தண்ணீர் காட்டும் நபர் அவர் நிழலிலேயே நிற்கிறாரே! உனக்கு வைச்சிருந்த மம்மம் நான் சாப்பிட்டுட்டேன்னு செல்லம் காக்கையிடம் சொல்லுது போல.
பதிலளிநீக்குஇதெல்லாம் வெளிநாடுகளில் சாத்தியமாகலாமோ என்னமோ!
முதல் பதில் தவறு. மற்ற கருத்துகளுக்கு நன்றி.
நீக்குஆமாம், அவர் நிழல் இல்லை அது. தலை தெரியுதே! அதைச் சரியாய்க் கவனிக்கலை. மாட்டின் அருகேயே தெரியுது அதுவா?
நீக்குநான் சொன்னது எத்தனை கேள்விகளுக்கான உங்கள் பதிலை!
நீக்குஎந்த சாதனமும் சமீபத்தில் வாங்கலை.
பதிலளிநீக்குவழிபாட்டுத் "த"ல"ம் எனில் எங்க ஊர் குலதெய்வக் கோயில் தான். "த"ள"ம் எனில் இணையத்திற்கே சில நாட்களாகச் சரியா வரமுடியலை. என்றாலும் கௌமாரம், ஆன்மிகம் போன்ற தளங்களுக்கு அவ்வப்போது செல்வது உண்டு.
இப்போதைய தமிழ்நாட்டு நிகழ்வுகள் பொங்க வைக்காமல் இருந்தால் தான் அதிசயம். :(
தலம்தான். தளம் இல்லை. சரி செய்துவிட்டேன். கருத்துரைக்கு நன்றி.
நீக்குநிச்சயமாப் பழையத் திரைப்படப் பாடல்கள் தாம். அவற்றில் உள்ள ராகம், பாவம், பொருள் போன்றவை இப்போதைய டமுக்குடப்பாப் பாடல்களில் எங்கே இருக்கின்றன?
பதிலளிநீக்குகாக்காக் கடினா என்னனு தெரியும். என்றாலும் அப்படி எல்லாம் பள்ளி நாட்களிலோ பின்னரோ யாரிடமும் பகிர்ந்தது இல்லை.
அப்பாடா! ஒரு வழியாப் படிச்சுக் கருத்தும் போட்டுட்டேன். பிள்ளையாருக்கு நன்றி.
விநாயகா போற்றி! கருத்துரைக்கு நன்றி.
நீக்குவழிபாட்டுத் தலம் திருப்பதிதான். ஐந்து நாட்கள் திருமலை வாசத்திற்குப் பிறகு இன்று இரவு கிளம்புகிறேன்
பதிலளிநீக்குTTD ல வருகிறீர்களா என்று பார்க்கிறேன்.
நீக்குIf you had seen TTD live at 4-5:15AM, probably i would have come last five days, as we were waiting in the main entrance for Satrumurai sevai
நீக்குஅப்படியா!
நீக்குதிரையிசை என்பது நம் பதின்மவயது காலத்தைப் பொறுத்தது. கீசா மேடத்துக்கு எம் கே டி பாகவதர் காலப் பாடல்கள், கீதா ரங்கன்(க்கா)வுக்கு 75-80 இளையராஜா, எனக்கு யுவன் என்று உண்மையைச் சொன்னால் யாருக்காவது கோபம் வருமா?
பதிலளிநீக்குநாராயண, நாராயண!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எம்கேடி காலத்துப் படங்களையோ/பாடல்களையோ அதிகம் ரசித்ததில்லை. ரொம்பவே நீட்டி முழக்கிக் கொண்டு இருக்கும் இல்லையோ?
நீக்குஅவருக்கு முந்தைய காலகட்டம் எனக்குத் தெரியாது. கீசா மேடம் சொன்னால் தெரிஞ்சிக்கறேன் ஹிஹிஹி
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை...ஓவர்தான். ஹான் வாங்க அப்படி உங்களுக்கு யுவன் தானா....எனக்கு அனிருத் அப்புறம் சாம் சி எஸ் ஹெ ஹெ ஹெ...
நீக்குகீதா
திருப்பதில உக்காந்துட்டு சேவாகாலம் பண்ணாம யுவன், இளையராஜானு பேசிக்கிட்டிருக்கீங்களா!!!....ஹாஹாஹாஹா
நீக்குகீதா
அதானே!
நீக்கு@கீதா.ரங்கன்: ஹை ஃபைவ் கீதா ரங்கன்! நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு புதிய பாடல்களும் பிடிக்கும்.
நீக்குபானுமதி வெங்கடேஸ்வரன்
இனிய பொழுது.. அன்பின் வணக்கங்களுடன்..
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்கு//வெள்ளிக் கிழமைகளில் விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைப்பது, அம்மனுக்கு மா விளக்கு போடுவது போன்றவை செய்யப்படுவது ஏன்?..//
பதிலளிநீக்குகாட்டுமிராண்டிகளாகத் திரிந்த நமக்குக் கல்விக் கண்களை த் திறந்து வைப்பதற்காகவே இந்நாட்டிற்கு வருகை தந்த வெள்ளைக் கும்பல் நமது பசி பட்டினி இவற்றைத் தீர்ப்பதற்காக நடைமுறை ப் படுத்தியதாக இருக்கலாம்..
( கூடிய விரைவில் இப்படியும் செய்திகள் தமிழகத்தில் வெளி வரக்கூடும்..)
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்கு( கூடிய விரைவில் இப்படியும் செய்திகள் தமிழகத்தில் வெளி வரக்கூடும்..)
நீக்குசெய்திகள் அல்ல. புத்தகம் வெளியிடப்படும். அதை அவரு மேடையில வாங்கிக்குவாரு ! கைதட்டுவானுங்க...
@ ஏகாந்தன்..
நீக்குஇப்படியும் யோசித்தேன்.. (வாத்தியார்) ஆசிரியர்களைப் பற்றிய பயம்..
இங்கே எழுதவில்லை..
தொற்று காலத்து ஆடி & தை மாதங்களின் "சிறப்பு"...?#
பதிலளிநீக்குஅரியவற்றுள் எல்லாம் அரிதே...
நன்று என்றவற்றுள்ளும் நன்றே...
பேதைமையுள் எல்லாம் பேதைமை...#
கருத்துரைக்கு நன்றி
நீக்கு& " ஆடிக் காட்டு " என்று சொன்னால் உடனே ஆடும் திறமை உள்ளவர்கள் 'தை, தை' என்று ஆடுவதால் ஆடியும் தையும் கொண்டாட்ட மாதங்களாக ஆகி இருக்கலாம்! //
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ரசித்தேன்!!
கீதா
நன்றி!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இக்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.
காது கேட்காமல் எப்படியோ (கஸ்டந்தான்) சமாளித்து விடலாம். கண்கள் தெரியாவிட்டால் ரொம்ப கடினம். அதானால் அதற்கு எங்குமே கிண்டல் கிடையாது. அப்படியும் ஒரு படத்தில் கவுண்டமணி ஜோக்காக மாலைக்கண் வியாதி பற்றி வந்துள்ளது.
காது கேட்காதவர்களுக்கு நகைச்சுவை உணர்வு... .. உண்மை.. எதையும் கேட்டால்தானே சீரியஸாக எடுத்துக் கொள்ளத்தோணும்.:))))பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி
நீக்கு1. சமீபத்தில் பயன்படுத்திய சாதனம் domestic Vacuum sealer.
பதிலளிநீக்கு2. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வீட்டினருக்காகச்சென்றேன்.
4. பழைய புதிய என்றில்லை. எப்பாடல் நன்றாக இருந்தாலும் கேட்கப் பிடிக்கும். ஆனால் கேட்கும் வாய்ப்பு குறைவு,
5. காக்கா கடி - ஆஹா நிறைய....அதுவும் துணிக்கிடையில் வைத்துக் கடித்துக் கொடுப்பது!! வாங்குவது. கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய், அப்படியான அந்தக் காலத்து பெட்டிக்கடைகளில் பாட்டிலில் வைத்திருக்கும் மிட்டாய்கள். ஏனென்றால் எங்கள் வீட்டில் காசு தரமாட்டார்கள். உறவுகளுக்கிடையில் காக்காய்கடி. மற்றபடி துணியில் சுற்றி கல்லால் தட்டி...
அப்புறம் புளியங்காய், நெல்லிக்காய்...
கீதா
ஆஹா! கருத்துரைக்கு நன்றி
நீக்குபடம் 2 - காகம் - வீட்டுக்குள்ளாற வடை பிஸ்கட் ஏதாச்சும் இருக்கா? கொஞ்சம் கொண்டு போடேன்...
பதிலளிநீக்குநாலுகால் செல்லம் - ஏன் நீ உள்ள வந்து பாத்துக்க...நான் வீட்டை காவல் காக்கறவன்...திருட மாட்டேனாக்கும்...
காகம் - அதனாலதான் நீயே கொண்டு வந்து கொடுன்றேன். உள்ள வந்தா நீ என்னை துரத்தி பிடிப்பியே...உனக்கும் கமிஷன் தரேன்...
கீதா
கருத்துரைக்கு நன்றி
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்குகேள்விகளில் - பிடித்த பாடல்கள் பழைய பாடல்கள்தான். புதியவை கேட்பது குறைவு.
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வாரம் தாங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் மொத்தம் ஒன்பது என நினைக்கிறேன்.
படங்கள் அருமை. "அவனவன் மற்ற மனிதருக்கே தண்ணி காட்டுகிறார்கள். நீ எனக்கு நிழலாக இருந்து நல்ல மனிதாபிமானியாக இருக்கிறாய்" என மாடு பேசத் தெரிந்தால் பேசி வாழ்த்தியிருக்கும்.
"உண்மையிலேயே நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.. ஆனால், நான் நிஜமாகவே இந்த மனிதர்கள் போல் உன்னை காக்காய் பிடிப்பதற்காக சொல்லவில்லை. என்பதை புரிந்து கொள்." என்கிறதோ அந்த நாலு கால் ஜீவன். .
" தாயைப் போல பிள்ளை.. இது அங்கே... இங்கே தந்தையைப் போல பிள்ளை." என்கிறான் சிறுவன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// தாங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் மொத்தம் ஒன்பது// கரெக்ட்.
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஆடி, தை மாதங்கள் பற்றிய என் சீரியஸ் கேள்விக்கு காமெடியாக பதில் கூறியிருக்கிறீர்கள்.. ம்..ம்..ம்..
பதிலளிநீக்குகீதா அக்கா சுருக்கமாக சொல்லியிருக்கிறார். அவரும் கூட ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் ஏன் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை என்று கூறவில்லை.
பானுமதி வெங்கடேஸ்வரன்
மன்னிக்க வேண்டுகிறோம்.
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்கு1. AUTOMATIC POOJA BELL மகன் வாங்கி தந்தது.
2. பழமுதிர்ச்சோலை, அழகர் கோவில்
4. பழசு, புதுசு இரண்டும் இசை நன்றாக இருந்தால் பிடிக்கும்.
5. காக்கா கடி கடித்து கொடுப்பதை வாங்க கூடாது, நீயும் அப்படி கொடுக்க கூடாது என்று அம்மா சொல்லி விட்டதால் உடைத்து கொடுத்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆரஞ்சுவில்லை மிட்டாய், புளிப்பு மிட்டாய் எல்லாம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1. மாட்டின் தலை நிழலில் தெரியும் பக்கத்தில் தண்ணீர் கொடுப்பவர் நிழல் தெரிகிறது. இடதுகையில் பை வைத்து இருக்கிறார் அதன் பக்கம் நிழல் தெரிகிறது.
பதிலளிநீக்கு2. உன்னை பிடிக்க முடியவில்லை,"கொஞ்சம் பக்கம் வா"
3. கேள்விகள் எட்டு , எத்தனை கேள்விகள் என்று கேட்டதை சேர்த்தால் 9 கேள்விகள்.
3 . கரெக்ட். கருத்துரைக்கு நன்றி.
நீக்குசமீபத்தில் பயன்படுத்திய மின்சார உபகரணங்கள் டிஷ் வாஷர், துணிகளை காய வைக்க ட்ரையர்
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு2.சந்திரமௌளீஸ்வரர் கோவில்
பதிலளிநீக்கு3. பொங்குவது அடிக்கடி நடக்கும். சமீபத்தில் மத்யமரில் ஒரு பெண்மணி எழுதியிருந்த ஒரு பதிவுக்கு ஒரு ஆண் போட்டிருந்த கமெண்ட் படித்து விட்டு டர்ஜ் ஆனேன்.
4. பாடல்களுக்கு ஏது காலம்? பழசு, புதுசு எல்லாமே பிடிக்கும்.
5. சிறு வயதில் நானும் என் சகோதரியும் ஒரு பைசா மிட்டாயைக்கூட பகிர்ந்து தான் சாப்பிடுவோம். எல்லாமே காக்காய் கடித்தான்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த வாரம் கேட்டப்பட்டிருக்கும் கேள்விகள் ஒன்பது.
பதிலளிநீக்குகரெக்ட்
நீக்குஒன்பது கேள்விகள் என்னும் சரியான விடையை கூறியிருப்பது பானுமதி வெங்கடேஸ்வரனாகிய நான்
பதிலளிநீக்குபுரிந்துகொண்டோம்!
நீக்கு