செவ்வாய், 14 ஜூலை, 2009

கூடாது கூடாது கூடாது!

*வெளியிலிருந்து வியர்க்க விறுவிறுக்க வந்த உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. அதுவும் குறிப்பாக குளிர்ந்த தண்ணீர்.

*ஆண்களிடம் வயதையும் பெண்களிடம் வருமானத்தையும் ....... மன்னிக்கவும் ....பெண்களிடம் வயதையும் , ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது.

*திருமணமானவர்களிடம் அவசரப் பட்டு எத்தனை குழந்தைகள் என்று கேட்கக் கூடாது.

*டாக்டர் நிறைய தண்ணீர் குடிக்க சொல்லி இருக்கிறார் என்று அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து கிட்னியை ஓவர் டைம் வேலை வாங்கக் கூடாது.

*சமையல் எரி வாயுக் கசிவு இருப்பின் ஜன்னல் கதவுகளைத் திறந்து கசிந்த வாயுவை வெளியே அனுப்பு முன் மின் பொத்தான் எதுவும் ஆபரேட் செயக் கூடாது .

*நாக்கிலுள்ள சுவை நரம்புகள் தூண்டப் பட்டால்தான் ஜீரணம் நல்ல படி முறையாக சீக்கிரம் இருக்கும். அடிக்கடி சுத்தம் என்ற பெயரில் வாய் கொப்பளித்து சுவையை அழித்து விடக் கூடாது.

*'shock' அடிக்கிறதா என்று check செய்யும் பொழுது tester இல்லாத பொழுது கையால் தொட்டு check செய்யும் போது பின் விரல்களால், புறங் கையால் தொட வேண்டும். முன் விரல்களால் தொடக் கூடாது.

*கை கடிகாரம், அலை பேசி, படமெடுப்பான்(ஹி...ஹி....camera..) ஆகியவற்றை இன்னொரு electronic சாதனத்தின் மேலே வைக்கக் கூடாது.

*தினமும் 'engalblog' பார்க்காமல் இருக்கக் கூடாது. ஏதாவது comment செய்யாமலும் போகக் கூடாது!!

3 கருத்துகள்:

  1. //பெண்களிடம் வருமானத்தையும் ....... //

    நம் குழு பெண் வாசகிகளிடம் பேரிடி
    பெறப் போகிறீர் -- ஆட்டோ ஏதாவது
    உங்கள் அருகில் வந்தால் அங்கிருந்து
    ஓடி விடுங்கள்!
    MCP No 1

    பதிலளிநீக்கு
  2. இது போல இன்னும் நிறைய கூடாத விஷயங்கள் இருக்கின்றனவே! அவற்றில் நாகரிகமான சிலவற்றை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாமே.

    தண்ணீர் பஞ்ச காலத்தில் சென்றவிடத்தில் ஒரு சொம்பு அல்லது சின்ன அண்டா தண்ணீர் வாங்கி குடிக்கக் கூடவே கூடாது!

    சென்ற இடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களின் பின்னணி பற்றி சரி வர தெரிந்து கொள்ளாமல் மேதாவித்தனமான கமெண்ட்கள் அடிக்கக் கூடாது.

    நோயாளிகளைக் காணச்சென்றவர்கள் இப்படித்தான் எங்க சித்தப்பாவுக்கு என்று கதை சொல்வதோ இந்த ஆஸ்பத்திரியிலேயா சேர்த்தீங்க என்கிற பாணியில் விசாரிப்பதோ கூடாது.

    இரவல் செல் போன் இல நேரம் போவது தெரியாமல் பேசக்கூடாது.

    சென்ற இடத்தில் சிறுவர் சிறுமிகளிடம், கணக்கு விடுகதை சரித்திரம் பூகோளம் என்று கேள்வி கேட்டு சங்கடம் செய்யக்கூடாது

    yraman

    பதிலளிநீக்கு
  3. கூடாது கூடாது பற்றி

    ஆண்களிடம் வருமானத்தை நீங்களே கேட்டு வாங்கிக்கொண்டு விட்டால்,
    அவர்கள் செலவுக்கு என்ன செய்வர், பாவம்!

    எத்தனை குழந்தைகள் என்று கேட்பதில் அவசரப் பட்டு எத்தனை - அவசரப் படாமல் எத்தனை என்றெல்லாமா கேட்பார்கள்?

    ஷாக் அடிக்கிறதா என்று விரல்களால் டெஸ்ட் செய்வதை விட பக்கத்து வீட்டுப் பையனைக் கூப்பிட்டு கொஞ்சம் அந்தக் கம்பியை எடுத்துத் தருகிறாயா என்று
    கேட்கலாமா என்று நினைப்பவர்கள் நினைப்பை உதறி விட்டு, வேறு முயற்சிகள் செய்வது நல்லது.

    கைக் கடிகாரம் பற்றிய அனுபவத்தை ஜே - யிடம் கேளுங்கள். Cell house -க்கு
    டிஜிடல் கடிகாரத்துடன் போன கதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    மற்ற blog தலங்களிலிருந்து புகைப்படங்களை எப்படி இணைப்பது என்றறிந்து சேர்க்கலாம் - ஆ கு வின் ஆசி பெற்றவற்றை மட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!