சனிக் கிழமை அரை நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வழியில் நண்பர் அறிவு நம் வீட்டுக்கு வருகை தந்தார். எங்கள் ப்ளாகில் எதுவும் புது இடுகை உண்டா என்றார். அதில் தொடங்கி அப்படியே KGJ, தமிழ் மணம் இன்னும் பிற வலய தளங்களை மேய ஆரம்பித்தோம்.
சற்று நேரத்தில் தொலை பேசி சிணுங்க அடுத்த அறைக்குப் போய் பேசி விட்டு - நாமும் ஒரு கார்ட்லெஸ் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வந்தவன் நம் அறிவுவின் செய்கைகளை கண்டதும் சற்றே குழம்பிப் போனேன் :
கையை கணினியின் திரைக்கு முன் மேல் மூலைக்கும் கீழ் மூலைக்கும் ஆடிக்கொண்டே சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மக்கள் செய்வது போல் செய்து கொண்டிருந்தார். "என்னய்யா பாட்டு சப்தம் எதுவும் காணோம் தாளம் மட்டும் போடுகிறீரே?" என்று சொல்லிக் கொண்டே அருகில் போய்ப் பார்த்தால்,
உன் கம்ப்யுட்டர் ஹாங் ஆயிட்ட மாதிரி இருக்கு என்றார். எப்படி சொல்றீங்க? என்று கேட்டதும் இங்கே வந்து பாருய்யா அப்போ தெரியும் என்றார். போனேன்.
ஒரு தமிழ் வலய தளம் மின்னிக் கொண்டிருந்தது. "இங்கே சொடுக்கவும்!"
கண் கோளாறினால் "இங்கே கொடுக்கவும்" (SUBMIT HERE) "இங்கே சொடுக்கவும்" என்று கண்ணில் பட்டு விட்டதோ?
பதிலளிநீக்குசொடுக்கு = click என்றால்,
பதிலளிநீக்குsu do ku = ?
இப்படிக்கு,
T-I-C
akka, athu su-doku.
பதிலளிநீக்குஅது இருக்கட்டும்,
பதிலளிநீக்குT-I-C = ?
அதைச் சொல்லுங்க முதலிலே!
To be Indefinitely Continued - like a mega serial?
பதிலளிநீக்குi have found it out!
பதிலளிநீக்குT-I-C=Tongue-In-Cheek!
am i right?