ராகங்கள் பாடுகின்ற போது ரசிகர்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தோம்.
**..தோம்?. ஆம், நண்பருடன் T.Nagar German Hall -லில் நடந்த சிவரஞ்சனி - நளின காந்தி கச்சேரி பற்றி தான் சொல்கிறேன்.
ஜி என் செட்டி சாலையில் பால மந்திர் அருகேதான் நண்பர் வீடு. புதிதாக வாங்கியிருந்த டெல் இன்ச்பிறான் கணினியைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் கூப்பிட்டிருந்தார். சரியாகத்தான் படித்தீர்கள் - கேட்பதற்கு என்பது சரியே. பாட்டுக்கள் கேட்கும்போது சுனாதமாய் ஒலிக்கிறது. மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பார்களே அது இது தானோ?
பார்த்தீர்களா எழுத எடுத்துக்கொண்ட பொருளை விட்டு விட்டு வேறெங்கோ அலைகின்றேனே!
நாங்கள் பாய் இருக்கைகளில் அமர்ந்த போது நாட்ட குறிஞ்சி மாதிரியோ அல்லது நாட்டக்குறிஞ்சியிலேயோ வெகு விஸ்தாரமாக ஸ்வரம் பாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேருமே சற்றுக் "கீச்" ஆக இருந்தாலும் கேட்க நன்றாகத்தான் இருந்தது. அடுத்து பைரவியில் ஒரு டான்ஸ் பாட்டு - உங்கள் எல்லோருக்கும் பரிச்சயமாக இருக்கலாம். நான் சமஸ்கிருதத்தில் ரொம்ப வீக்.
இவர்கள் ஏன் பக்க வாத்தியத்தில் கடம் இல்லாமல், கஞ்சிரா வைத்துக் கொண்டு பாடுகின்றனர் என்று யோசித்துக் கொண்டே
இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கேட்ட போது அவர்கள் அடிக்கடி மேல் ஸ்தாயியைப் பிடிக்க முயல்வதும் வெற்றியடைந்தாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் நண்பர் இன்னொரு நண்பரை "காட்டியா" கேட்டிருந்தது நினைவுக்கு வர ....
ஏ சீ பஸ்ஸில் படம் பார்த்த (அ)திருப்தியுடன் வெளி வந்தோம்.
இதென்ன தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் .... என்கிறீர்களா?
கேட்டவரை தானே எழுத முடியும்?
//கேட்டவரை தானே எழுத முடியும்?//
பதிலளிநீக்குநான் கேட்டேனா?
அடேடே ஜெர்மனி போயிருந்தீர்களா?
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
கான மாலியாடக் கண்டிருந்த வான் கோழி கதையாக அல்லவா இருக்கிறது இந்தக்கதை?
பதிலளிநீக்குஎங்கே தெரிகிறது, யாரென்று புரிகிறது. ஆனால் எப்போது என்பது புதிராக இருக்கிறது!
திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி யாரென்று (அதற்குள் G N B என வேண்டாம்) அலைகிறோம் இந்த ஞானானி யாரென்று!
Sivaranjani - NalinaKanthi
பதிலளிநீக்குSriLakshimi Venkatramani
Shyama sastri
Natta Kurinchi
Bhairavi
Saveri
Chintamani
I also went home thinking about so many "i" endings!
What is "Kaatiya /Gattia / Gautier? " mentioned in the piece?
பதிலளிநீக்குNalinakanti and Sivaranjani duo give what is known as open-mouthed singing. Sruti sudhdham is their plus point. However, they appear to have unemotional approach to music. It is as though they say, "Well I have arrived, here is what I know, and let me see whether you enjoy it or not; i do not care!"
OK, have sruti also included in the list with "i" at the end.
பதிலளிநீக்குAs to "kaatiya", I may have to refer to the friend again. Like I mentioned I mentioned what I heard.
கேட்டேன் காட்டியா பற்றி
பதிலளிநீக்குகாட்டியா என்றால் என்ன எங்கள் அங்கத்தினர்கள் அறிய ஆவலாக உள்ளனர் என்று நண்பரிடம் தொலை பேசியில் கூப்பிட்டுக்கேட்டேன்
அவர் சொன்னது அப்படியே: "computer assisted three dimensional interactive application" என்னுடைய எண் எழுத்து வட்டத்துக்குள் இது வரவில்லை. மற்றவர்கள் தெரிந்த வரை விளக்கவும்.
I know only computer in this.
பதிலளிநீக்குThe rest of the phrase
complicates my 0.001 IQ brain.