முன்னொரு காலத்தில் பெரும்பாலும் (அப்பவும் உண்டு. ஆனா ரொம்பக் கொஞ்சம். செல்லப்பா ஸார் பதிவு நினைவிருக்கா?) இலவசங்கள், லஞ்சம், அன்பளிப்புகள் இல்லாமல் தமிழன் வாக்களிக்கும் கடமையைச் செய்துவந்தான் (நம்புங்க மக்களே).
ஆனால் பின்வந்த காலத்தில் வளர்ச்சி பெற்ற தமிழன், 200 ரூபாய் முதல் நானூறு ரூபாய் வரை விலை (கூடிப்) போனான். மேலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் சுயத்தை அடகு வைத்தான். சமீப காலங்களில் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஆறாயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய் என்று நிற்கிறது. (சிலர் லட்சக்கணக்கில் கூடச் சொல்கிறார்கள்)
இன்னும் பத்து வருடங்களில் / இருபது வருடங்களில் இந்நிலை எந்நிலையை எட்டியிருக்கும்? நீங்களாயிருந்தால் உங்கள் எதிர்பாப்பு என்ன?
அல்லது இதை மாற்ற என்ன வழி?
நாகரீக எல்லை மீறாமல் நறுக் சுருக் மற்றும் புன்னகைக்க வைக்கும், வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் என பதில்கள் ப்ளீஸ்...
=================================================================================
அட்? தாமதம்! :)
பதிலளிநீக்குநான் தான் ஃபர்ஸ்ட்!
பதிலளிநீக்குஆகா, இப்படியும் ஒரு கற்பனையா
பதிலளிநீக்குபதில்களுக்காக நானும் காத்திருக்கிறேன் நண்பரே
தம+1
மெதுவா வரேன்! கொஞ்சம் யோசிக்கணும்!
பதிலளிநீக்குஅப்பாடி, கீதாம்மா முந்திட்டாங்க டோய்! அதுவும் Second கணக்குல முந்திட்டாங்க போல!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா அக்கா,. தாமதம் இல்லை அக்கா. சரியான நேரமே...!
பதிலளிநீக்குஹாஹாஹா, வெங்கட், நீங்களும் வரீங்களா? ஜாலி தான்! :) இன்னிக்கு துரையைக் காணோம். ஒளிஞ்சுட்டு இருந்து பார்க்கிறாரோ?
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
பதிலளிநீக்குவாங்க நண்பர் கரந்தை ஜெயக்குமார்... காலை வணக்கம். நன்றி.. உங்கள் பதில்?
பதிலளிநீக்குஶ்ரீராம், நான் தாமதம் செய்து விட்டேன் அப்படினு சொன்னேன், கடைசியிலே பார்த்தால் துரை ஒளிஞ்சுட்டு இருக்கார் போல! முந்தைய பதிவில் வந்தார். இங்கே காணோமே! ?????????
பதிலளிநீக்குகீதா அக்கா... துரை ஸார் புதன் பதிவு வழக்கம் போல தாமதமாகும் என்று இருந்திருப்பார்!
பதிலளிநீக்குவாக்குக்கு காசு அல்லது அன்பளிப்பு - ரொம்ப காலமாகவே நம் ஊரில் இருக்கு! எதுல நாடு முன்னேறுதோ இல்லையோ, இப்படிக் கொடுப்பதில் முன்னேறி இருக்கு! இன்னும் பல வழிகளைக் கண்டு பிடிப்பார்கள் - போங்கடா நீங்களும் உங்க அரசியலும்னு இருந்தாலும் சும்மா விட மாட்டாங்க! :)
பதிலளிநீக்குஎப்படி எல்லாம் கொடுப்பார்கள், என்ன கொடுப்பார்கள் என்பது பற்றி பிறகு வந்து சொல்கிறேன்!
//எப்படி எல்லாம் கொடுப்பார்கள், என்ன கொடுப்பார்கள் என்பது பற்றி பிறகு வந்து சொல்கிறேன்! //
பதிலளிநீக்குஓகே.. கண்டிப்பா வாங்க வெங்கட்!
ரெண்டு நாளா தான் இந்த விளையாட்டு! அடிக்கும் குளிர்ல எழுந்திருப்பது சிரமம்!
பதிலளிநீக்குஅவசர குடுக்கையா, நான் தான் ஃபர்ஸ்ட் நு சொல்லி மூக்குடைப்பட்டார் மொக்கைச்சாமி!
ஹெஹெஹெ, வெங்கட், ஜாலியா இருக்கு! ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தான். அப்புறமா எனக்கும் வர முடியாது! வீட்டு வேலைகள் இருக்கும். :)))))
பதிலளிநீக்கு//அவசர குடுக்கையா, நான் தான் ஃபர்ஸ்ட் நு சொல்லி மூக்குடைப்பட்டார் மொக்கைச்சாமி! //
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா.. இல்லை வெங்கட். சென்னையிலேயே குளிர் தூக்குது. உங்க ஊர்ல கேட்கணுமா!
//அப்புறமா எனக்கும் வர முடியாது! வீட்டு வேலைகள் இருக்கும்.//
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... என்ன வேலை? வெளிநாட்டிலிருந்து விருந்தினர்?
ஆ!!! இன்று வம்பு சானல் சீக்கிரம் வந்துவிட்டதே!!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதாக்கா... ஸ்ரீராம் துரை சகோ அட! வெங்கட்ஜி!! நேற்றும் சீக்கிரம் வந்தார்..ஹா ஹா ஃபர்ஸ்டூஊஊஊஊ சொல்றதுக்கு இப்போ போட்டி ஹா ஹா ஹா
கீதா
துரை சகோ!! என்னாச்சு?!!! காணலையே!! வேலைப்பளுவா? நலந்தானே?!!
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரெங்கன். காலை வணக்கம். வெங்கட் எதேச்சையா வந்தாராம். துரை சகோ நேற்றே லீவு எடுக்க நினைத்திருந்தார் போல.. இன்னிக்கி எடுத்திட்டார்!
பதிலளிநீக்கு:)))
கீதாக்கா வீட்டு வேலைகள்...விருந்தினர் வருகையா?
பதிலளிநீக்குஎனக்கு விருந்தினர் வருகை...8 ஆம் தேதி வரை நீடிக்கிறது..வருகை..எங்கள் வீட்டிற்கு நேரடியாக இல்லை என்றாலும் சந்திப்புகள் தொடர்கின்றன. வெளிநாட்டில் இருக்கும் உறவினர் இங்கு வரும் போதுதானே அவர்களோடு நேரம் செல்வழிக்க முடிகிறது...அதுவும் மிக மிக நெருங்கிய நட்புடன், அன்புடன் கூடியவர்களாக இருப்பதால்...
கீதா
ஆமாம், தில்லையகத்து கீதா! விருந்தினர் வருகை தான்! :)
பதிலளிநீக்குகருத்திற்கு பின்னர் வருகிறேன்...வேலைகளை முடித்துவிட்டு..
பதிலளிநீக்குகீதா
துரை சகோ லீவா!!!!!! ஆ!! என்ன ஆச்சு....இந்தியா வருகையோ?!!!
பதிலளிநீக்குகீதாக்கா எஞ்சாய்!!!
கீதா
நாங்கல்லாம் விலை போகமாட்டோமாக்கும் (விபோமச-விலைக்குப் போகாத மக்கள் சங்கம்!!!)...எங்க விலை? எந்த அரசியல்வாதியாலும் கொடுக்க முடியாது ....விலை மதிக்க முடியாத ஒன்றாக்கும்!!! நோ மானிட்டரி வேல்யு....ஆர் பொருட்கள் வேல்யு
பதிலளிநீக்குஎப்படி மாறும்? மாற்றம் மக்களில் கையில்தான் இருக்கிறது....வருகிறேன் பின்னர்..
என் கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வந்திருக்கிறேன் நாம்கலாச்சாரசீரழிவில் இருக்கிறோம் ஆண்டவனையெ விலைக்கு வாங்க முயற்சிக்கும் நம் கலாச்சாரம் மாறுமா இதெல்லாம் மாறுவது கஷ்டம் ஒட்டு மொத்தமாக குணங்களை மாற்ற முடியுமா
பதிலளிநீக்கு//இன்னும் பத்து வருடங்களில் / இருபது வருடங்களில் இந்நிலை எந்நிலையை எட்டியிருக்கும்? நீங்களாயிருந்தால் உங்கள் எதிர்பாப்பு என்ன?// என் எதிர்பார்ப்பு இந்நிலை மாறியிருக்கும்.. பணப் புழக்கமே இல்லாத டிஜிட்டல் இந்தியாவில் நோ லஞ்சப் பணம்!! நேரா 50 இன்ச் டிவி தான்!! அல்லது ஏசி!!
பதிலளிநீக்குஉண்மையில் என் எதிர்பார்ப்பு வெளிப்படையான ஓட்டளிப்பு!! மனசாட்சிக்கு பயந்த வேட்பாளரும் வாக்காளரும்!
இப்போதுதான் பள்ளிப்பக்கம் கூட ஒதுங்காத குடும்பங்களின் வாரிசுகள் பள்ளி, கல்லூரி என்று வரத் தொடக்னியிருக்கிறார்கள். பசி என்றால் பத்தும் பறக்கும் என்பது போல் ஏழ்மையில் இருப்பவர்கள் இப்படியான பண வரவை ஏற்கத்தான் செய்வார்கள். மட்டுமல்ல நாங்க வாங்கினாலும், வாங்கலைனாலும் எங்க தொகுதி ஒன்னும் முன்னேறிடப் போவதில்லை அப்படி இருக்க வாங்கினா என்னா தப்புனு வாங்குவதும் நேரிடுகிறது. இதில் படித்தவர்களும் அடக்கம். என்றாலும் பலர் யாரிடம் அதிகம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுவதும் சிலர் குறிப்பாகப் படித்தவர்கள் வாங்கிவிட்டு வேறொருவருக்கு ஓட்டு போடுவதும் நடக்கிறது....
பதிலளிநீக்குஇப்போதைய பெருச்சாளிகள் குறையும் போது, இளைஞர்கள் நுழையும் வாய்ப்புண்டு. ஆனால் அரசியல் நெடி இல்லாத பணம் கொடுத்தும் வாங்கியும் அரசியல் செய்யும் நெடி அடிக்காத குடும்பத்து இளைஞர்கள் வந்தால் நலல்து. படிப்பறிவும், விழிப்புணர்வும் இதற்குப் பெருக வேண்டும்.
கீதா
//இந்நிலை எந்நிலையை எட்டியிருக்கும்? //
பதிலளிநீக்குஇந்நிலை நீடித்தால் சாமான்ய மக்கள் வேட்பாளாராக நிற்கும் தகுதியை இழந்து இருப்பார்கள் பெரும் செல்வந்தர்கள் மட்டும்தான் வேட்பாளராக நிற்க முடியும் அம்பாணி அதானி போன்றவர்கள்தான் அல்லது அவர்கள் கைகாட்டும் நபர்கள் மட்டும்தான் இந்தியாவை ஆள முடியும்
இபுஞா அவர்கள் ஒரு பதிவு போட்டிருந்தார். பணம் வாங்குவது தவறா இல்லைஅயனு. ஆர் கே நகர் மக்கள் சாமான்யர்கள் மட்டுமல்ல அந்தத் தொகுதி சென்னை நகரத்துள் இருந்தாலும் இத்தனை வருடங்களாக அத்தனை முன்னேற்றம் அடையாத பகுதி என்றும் சொல்லி அதனால் மக்கள் வாங்குவதில் தவறில்லையெ என்றும் அதே சமயம் அந்தப் பகுதியில் நோட்டா ஓட்டுகள் 640 விழுந்திருக்கிறது என்பது மக்கள் தங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளின்/தேர்தலில் நின்றவர் மீதும் நம்பிக்கை இல்லை எனப்தைச் சொல்லியிருக்கிறது என்று.
பதிலளிநீக்குஅப்போ அந்த முழு தொகுதியும் நோட்டாவோ இல்லை புறக்கணித்தலோ நடந்திருந்தால்?? என்பதுதான் எனது தனிப்பட்டக் கருத்து.
ஏதோ ஒரு கிராமம் தேர்தலையெ புறக்கணித்தது என்று வாசித்த நினைவு..அப்படி எல்லோரும் புறக்கணித்தால் ஒரு புரட்சி வந்தால் மாற்றம் வரும்...
எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் எல்லா கணக்கு வழக்குகளும் டிஜிட்டலைஸ்ட் ஆகும் போது...என்றும் தோன்றுகிறது..
கீதா
இன்னும் ஒரே ஒரு கருத்து இத்தோடுமுடித்துக் கொள்கிறேன்...ஹிஹிஹிஹி..
பதிலளிநீக்குஅரசு என்பதற்கும், ஆட்சி நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் உண்டுதானே...அரசு என்பது மக்களுக்கானது. ஆட்சி என்பது மக்கள் சார்ந்தது. அரசு என்பது மதம்,சாதி, இனம், ஏழை பணக்காரன் கட்சி என்று எந்தத் தொடர்பும் அற்றது. ஆனால் இங்கு சாமானிய மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள், திட்டங்கள், உதவித் தொகைகள், மக்கள் நலப்பணிகள் பல கட்சி சாயம் பூசப்படும் போதும், அந்தத் திட்டங்கள் ஆட்சி மாறும் போது நிறுத்தப் பட்டோ அல்லது மாற்றப்பட்டோ ஆகும் போது பெரும்பான்மையான மக்களுக்கு எப்படி ரீச் ஆகும். கட்சி சாயத்துடன் தானே?! இது மாற வேண்டும். ஆட்சி மாறினாலும் நலத்திட்டங்கள் தொடரப்பட வேண்டும். மக்களும் இதைப் பிரித்துப் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். பல அரசு சார்ந்த நலத்திட்டங்கள் அப்போதிருக்கும் ஆட்சியின் படங்கள் ஒட்டப்டும் போது மக்கள் மாய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாயத்திலிருந்தும் விடுபட வேண்டும். இவை எல்லாம் நட்னதால், மக்களிடமிருந்து புரட்சி எழுந்தால்...நிச்சயமாக எதிர்கால அரசியல் மாறும்.
விழிப்புணர்வு ரொம்பவே தேவை.
கீதா
உலகில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும் போது பேரழிவிற்கு பின்னால்தான் பல நாடுகள் மிக வளர்ச்சி அடைந்ததென்று அறியமுடிகிறது அதை பார்க்கும் ...எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்தியாவின் அழிவுகாலம் இப்போது தொடங்கி இருக்கிறது இந்த அழிவு உச்சநிலை அடையும் போது மக்கள் புரட்சி செய்து இந்தியாவை உச்ச வளர்ச்சிக்கு கொண்டு செல்வார்கள் இந்த புரட்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு அப்புறம் நிச்சயம் நடக்கும் என்று என் மனது சொல்கிறது
பதிலளிநீக்குவழக்கம் போல
பதிலளிநீக்குகோழி எல்லாம் கூவி - மிச்சம் இருக்கும்
குயில்கள் எல்லாம் கூவி முடித்த பின்னால்
காற்றடைப்பான்கள் எல்லாம் கதறும் நேரத்தில் தானே
புதிரோடு புதன் மலரும் !.. என்று நினைத்திருந்தேன்..
இருந்தாலும் நேற்றைய பதிவில் யாராவது வந்திருப்பார்களே.. என்று அங்கே சென்றால் ஒருவரையும் காணோம்..
சரி.. வந்ததற்கு ஏதாவது செய்து விட்டுப் போவோம்.. என்று 6.01..! என குறித்து வைத்தேன்..
சற்றைக்கெல்லாம் ஒரு சிந்தனை..
திரு கௌதம் ஜி அவர்கள் சீக்கிரமாக விழித்திருந்தால்!?..
சட்டென தளத்திற்கு வந்து பார்த்தால்.......!?..
வரலாற்றில் இல்லாத கதையாக - வாரச் சந்தையில் 23 கருத்துரைகள்..
அவற்றுள் என்னைக் காணோமே.. என்ற கவலைகள் வேறு..
நான் மிகவும் கொடுத்து வைத்தவன்..
அனைவருக்கும் நன்றி.. வாழ்க வளம்..
இப்படியே போய்க் கொண்டிருந்தால் உங்கள் குழந்தைக்கு Pre K.G /L.K.G.அட்மிஷன் குறைந்த பட்சம் இன்ஜினீயரிங் அட்மிஷன் என்று ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமக்கள் மனநிலை மாறினால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை. மாறும் என்று நம்பலாம்.வேறு வழியில்லை.
பத்து வருடங்களுக்குப் பிறகு நான் இருந்தால் ??? எனது விலை
பதிலளிநீக்குஎம். எல். ஏவின் பதவியை எந்த நொடியும் பறிக்கும் அதிகாரம் எனக்கு வேண்டும்.
அடுத்தவங்க ஓட்டுக்கு பணம் கொடுக்கறத என்னால நிறுத்த முடியுமோ இல்லையோ, 'Charity Begins at home' என்ற வரிகளுக்கேற்ப 'நான்', பணம் கொடுக்க மாட்டேன் ஓட்டுக்கு (தேர்தல்ல நான் கலந்துகொண்டால் )
பதிலளிநீக்குஇயற்கை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்காது. இன்னொரு சுனாமி நிச்சயம். கடலிலடம் லஞ்சம் கேட்க முடியாது தரவும் முடியாது
பதிலளிநீக்குநம்ம மனசுல எது நியாயம் என்று தெரியும். இருந்தாலும், Temptationஐக் கடந்து வருவது சுலபமல்ல. ஒரு கடைல நாம பொருள் வாங்கும்போது ஏதேனும் அவன் மிஸ் செய்தாலோ அல்லது 5 ரூ அதிகமாக நம்மிடம் தந்துவிட்டாலோ, நம்மால அதைத் தவிர்க்க முடிகிறதா? இல்லை, கூட ரெண்டு வெண்டைக்காய் போடு என்பதைக் கேட்காமல் இருக்க முடிகிறதா? அப்போது மனசாட்சி விழித்துக்கொள்ளும், நம் மனசு, இந்த ரெண்டு வெண்டைக்காயிலா அவங்க நஷ்டப்படப்போறாங்க, எப்படியும் 20 ரூ காய்கறியை 40 ரூபாய்க்கு விக்கறாங்களே என்பதுபோன்ற சமாதானம் சொல்லும். நாம சின்ன விஷயத்துல செய்யறத, ஏதிலிகளும் மற்றவர்களும், பெரிய விஷயங்களுக்கும் செய்யறாங்க. நம்ம ஆசையைக் கட்டுப்படுத்தாமல், இவைகளைத் தவிர்க்கமுடியாது.
பதிலளிநீக்குஇதை மாற்ற ஒரே வழி, பள்ளிகளில் குழந்தைகளிலிருந்து ஆரம்பித்து, 'வாக்குக்குப் பணம் வாங்கும்' பழக்கத்தால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளைப் பற்றி Moral வகுப்பில் சொல்லித்தரவேண்டும் (இப்போ நீதிபோதனை வகுப்பே கிடையாதாமே.. எங்களுக்கு கல்லூரியிலும் இந்த வகுப்பு இருந்தது). அப்படி தொடர்ந்து Preach செய்யும்போதுதான், 60%ஆக இப்போது இருக்கிற 'பணம் வாங்கும் வாக்காளர்கள்', மெதுவாக குறைந்துகொண்டுவரும்.
ஒரு காலத்தில் வேட்பாளர்கள் முக்கியமில்லை. கட்சியே முக்கியம். அதான் இந்தக் கட்சிக்குத் தான் வாக்குப் போடுவேன் என்று உடும்புப்பிடியான தீர்மானம்.
பதிலளிநீக்குஅப்படி மத்திய தர மக்களின் மனசில் படிந்த ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி.
சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி (!) என்று ஸ்பெஷல் கேட்கரி கட்சி அதுவாக இருந்தது.
துரை சகோ வந்துட்டீங்களா...ஹப்பா நீங்க நலமே!!...உங்கள் கருத்தை ரசித்தேன்...ஆமாம் நான் கூட கௌதம் அண்ணா இன்று லேட்டாகத்தான் வம்பு சானலைத் தொடங்குவார் என்று நினைத்து எதுக்கும் போட்டுப் பார்ப்போம் என்றால் ஏற்கனவே வம்பு ஸ்டார்ட் ஆகியிருந்தது கீதாக்காவின் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட் குரலும் வெங்கட்ஜியின் ஃபர்ஸ்டூஊஊ குரலும் கேட்டிட.. ஆஹா என்று நானும் ஆஜர் வைச்சேன்...கௌதம் அண்ணா வந்துட்டார்...ஆனால் பதிவு ஸ்ரீராமின் கருத்து போல இருந்துச்சு......ஹா ஹா ஹா....
பதிலளிநீக்குகீதா
கீதா... நாம் விலை போவதில்லை. விலை போன மக்கள் முடிவை மாற்றுகின்றனர். (பின்னர் அனுபவிக்கும்போது அவர்களே புலம்புவார்கள். அது வேறு விஷயம்!)
பதிலளிநீக்குஜி எம் பி ஸார்... திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது பாடல் நினைவுக்கு வருகிறது. யாரும் யாரையும் மாற்றமுடியாது என்று தெரிகிறது.
பதிலளிநீக்குவாங்க மிடில்க்ளாஸ்மாதவி.. மனசாட்சியா? அப்படீன்னா?
பதிலளிநீக்குவாங்க மதுரை... நீங்கள் சொல்வது போலதான் எனக்கும் தோன்றியது. சமீபத்து 2015 டிசம்பர் சென்னை வெள்ளம் போல!
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்... எனக்கும் நீங்கள் வேண்டுமென்றே விட்டுக்கொடுத்து வரவில்லையோ என்ற சம்சயமும் இருந்தது. ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் காரணத்தை நான் முன்பே ஊகித்திருக்கிறேன் பாருங்கள்!
பதிலளிநீக்குவாங்க பானு மேடம்.. எஞ்சினீரிங், மருத்துவக் கல்லூரி அடிமிஷன்... ம்ம்ம்ம்... கொஞ்சம் காஸ்ட்லீ!
பதிலளிநீக்குநல்ல ஐடியா கில்லர்ஜி. ஆனால் அதை அவர்கள் தரமாட்டார்களே!
பதிலளிநீக்குவாங்க மாதவன்.. வீட்டிலிருந்து தொடங்குவது நல்ல செயல். மொத்த மக்கள்தொகையில் 10% தேறுமா?
பதிலளிநீக்குநல்ல கருத்து நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... சின்னச்சின்ன விஷயங்களில் கூட மக்கள் எதிர்பார்க்கும் சின்னச்சின்ன லஞ்சங்கள் பற்றி அழகாகவே சொல்லி இருக்கிறீர்கள். இப்போது இருக்கும் மக்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு வாக்குக்கு லஞ்சம் வாங்குவது பாவம் என்று சொல்லித்தரவேண்டும். அவர்களே சரியில்லையே... சொல்லித் தருவார்களா?!!
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... காட்சியைப் பார்த்து, வேட்பாளர் பற்றிக் கவலைப்படாமல் வாக்களித்தது சென்ற சட்டசபைத் தேர்தல் வரை தொடர்ந்ததே... இப்போதுதானே நிறைய மந்திரிகளின் 'மகிமை' வெளியில் தெரிய வருகிறது!
பதிலளிநீக்குகீதா...
பதிலளிநீக்கு//ஆனால் பதிவு ஸ்ரீராமின் கருத்து போல இருந்துச்சு......//
அவரிடம் அனுமதி வாங்கப்பட்டது!!!
எனக்குத் தோன்றிய கருத்தை யாராவது சொல்வார்களோ என்று பார்த்தேன்!
பதிலளிநீக்குஅதாவது, நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளரிடம் பேசி, தொகுதியில் செய்யாமல் நின்று போயிருக்கும் சில பெரிய வேலைகளை (ஒன்றிரண்டாவது) முடிப்பதற்கு பேசி வைத்துக்கொண்டு (ஊர்ப் பஞ்சாயத்துக் கட்டுப்பாடு போல) யார் நம்பிக்கையாய் வாக்குறுதி தருகிறாரோ, அவருக்கு வாக்களிக்கலாம். இந்த சாக்கில் குளம், ஆறு தூர் வருவதோ, சாலைகள் (தரமாக) போடுவதையோ உறுதி செய்து கொள்ளலாம். வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர் செய்யாமல் போனால்? அதையும் யோசித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்.
அந்தக் காலத்தில் வாக்காளர்களுக்கு கட்சி வேட்பாளர்களிடமிருந்து கிடைத்த ஒரே சலுகை
பதிலளிநீக்குகாரிலோ, மாட்டு அல்லது குதிரை வண்டியிலோ (ஆட்டோ அக்காலத்தில் இல்லை) வாக்காளர்களை வீட்டிலிருந்து வாக்குப் போடும் இடத்திற்கு கூட்டிச் செல்வது. இந்தச் சலுகை அனுமதிக்கப்பட்ட சலுகையாக இருந்தது.
இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சி நினைவில் இருக்கிறது:
என் தாய் மாமன் வீட்டு வாசலில் ஒரு கருப்பு கார் நின்றது. காங்கிரஸ் கட்சி கார் என்று நினைத்து மாமன் குடும்பத்துடன் தெரியாமல் காரில் அமர்ந்து விட்டார். (அப்பொழுது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யாகப்ப நாடார் என்று நினைக்கிறேன்.)
ஓட்டுப் போடும் இடம் வந்து கார்க்காரன் "பார்த்துப் போட்டுடங்க.." என்று விளம்பரச் சீட்டு கொடுத்ததும் தான் வேறு கட்சி காரில் ஏறி வந்து விட்டோம் என்று மாமனுக்குத் தெரிந்திருக்கிறது. மிகுந்த கோபத்துடன் காரிலிருந்து இறங்கி, காரில் ஏறும் போதே சொல்ல வேண்டாமா? தெரிந்தால் ஏறி இருக்க மாட்டேனே?" என்று சத்தம் போட்டிருக்கிறார்.
அடுத்து அவர் என்ன செய்தார் என்பது தான் விஷயமே. ஒரு மாட்டு வண்டி பிடித்து குடும்பத்தோடு வீட்டுக்கு வந்து விட்டார். (பாவம் காரில் கூட்டி வந்தவனுக்கு ஓட்டுப் போடாமல் இன்னொருத்தருக்கு போடப் போகிறோமே என்ற நியாயம்)
அடுத்த அரைமணி நேரத்தில் சொந்த காசில் குடும்பத்தோடு மாட்டு வண்டியில் சாவடிக்குச் சென்று தன் தேர்தல் கடமையை ஆற்றி இருக்கிறார்.
சின்ன விஷயம் தான். ஏமாளித்தனமானது கூட. இருந்தாலும் அந்தக் கால மனுஷங்களுக்கே உரிய சில நியாய தர்மங்கள் இருந்தன.
மேற்கண்ட பண்டைய தேர்தல் கால அனுபவம் தஞ்சையில் நடந்தது. யாகப்பா தியேட்டர் அதிபர் யாகப்ப நாடார் தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளாராக களத்தில் இறங்கியிருந்தார்.
பதிலளிநீக்குஜீவி ஸார்.. ஸூப்பர். இந்த மாதிரி ஆட்களை இப்போது பார்க்க முடியுமா? இப்போது விஜயகாந்த் உள்ளிட்ட கட்சித் தலைவர்களே "யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்குங்க.. ஆனால் வாக்கை உங்கள் மனசாட்சிப்படி (எங்களுக்குப்) போடுங்க" என்கின்றனர்!
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்- அந்தக் கால மனுஷங்களுக்கே உரிய சில நியாய தர்மங்கள் இருந்தன. - இப்போது இது வெகுவாக அருகிவிட்டது. இதில் படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடே இல்லை. முன்பெல்லாம், வெற்றிலையில் சத்தியம் செய்யச் சொல்வார்கள் (பாமக இதை உபயோகப்படுத்தியது என்று படித்திருக்கிறேன்). அந்தக் காலத்தில் (எம்ஜியார் ஆட்சியின்போது), லட்டுக்குள் மூக்குத்தி வைத்துத் தருவது போன்ற ஜேப்படி வேலைகள் இருந்தன. இப்போ, 'காசு வாங்காதீர்கள்' என்று சொல்ல எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பயம், அவர்களுக்கே அந்த தார்மீக உரிமை இல்லை (அவங்களே பெரும்பாலும் ஃப்ராடு), இன்னொண்ணு, அவங்க அப்படிச் சொன்னால், அவங்களுக்குக் கிடைக்கிற ஓட்டும் கிடைக்காது (எங்களுக்கு வர்ற வரும்படியைக் கெடுக்கறான்னு). ஆனால், இளைய தலைமுறை கண்டிப்பாக வித்தியாசமாக சிந்திப்பார்கள், ஃப்ராடுத்தனம் (காசு வாங்குவது) செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன்...
பதிலளிநீக்கு//லட்டுக்குள் மூக்குத்தி வைத்துத் தருவது போன்ற //
இந்த முறை வாழைப்பழத்துக்குள் பணம் வைத்தார்கள் போல! வாட்ஸாப்பில் வந்தது!
//ஆனால், இளைய தலைமுறை கண்டிப்பாக வித்தியாசமாக சிந்திப்பார்கள், ஃப்ராடுத்தனம் (காசு வாங்குவது) செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். //
நம்பிக்கைகள்! அதைத்தவிர வேறு வழி?
//இப்போது விஜயகாந்த் உள்ளிட்ட கட்சித் தலைவர்களே "யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்குங்க.. ஆனால் வாக்கை உங்கள் மனசாட்சிப்படி (எங்களுக்குப்) போடுங்க" என்கின்றனர்!//
பதிலளிநீக்குஸ்ரீராம். அண்ணாவே சொன்னது தான் இது.
"வெங்கடாஜலபதி படத்தின் கீழே வைத்து காசைக் கொடுப்பார்கள். வாங்கிக் கொள்ளுங்கள். ஓட்டை மட்டும் உதய சூரியனில் போட்டு விடுங்கள்.." என்று அண்ணாவே சொல்லியிருக்கிறார்.
'ஜனங்களைப் பார்த்து காசு வாங்கிக்காதே' என்றால் அது நெகட்டிவ் அப்ரோச்சாகப் போய் பாதிப்பேற்படுத்தும் என்ற காரணத்தால் சொன்னது இது. ("கொடுக்கற மகராசன் கொடுக்கறான்; அதை வாங்கிக்காதேன்னு இவரு என்ன சொல்றது" என்ற அதிருப்தியாக மாறி விட்டால்?.. தேர்தல் காலத்தில் அனுபவப்பட்டவர்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பேசுவார்கள். எதைச் சொன்னாலும் வம்பாகி விடும் காலம் தேர்தல் காலம்.
லட்டுக்குள் மூக்குத்தியா?!
பதிலளிநீக்குதிருமிகு ஜீவி அவர்கள் சொல்லிய தஞ்சாவூர் நிகழ்வு போல மகாபாரதத்தில் ஒன்று உள்ளது..
பதிலளிநீக்குகர்ணனை வீழ்த்திய காரணங்கள் பல.. அவற்றுள் ஒன்று தேரோட்டிய சல்லியனின் செயல்..
சல்லியன் ஒரு நாட்டில் அதிபதி.. நகுலனுக்கு தாய் மாமன் முறை..
யுத்தத்தில் கலந்து கொள்ள படையுடன் வரும் வழியில் மாபெரும் விருந்து கிடைக்கிறது..
தின்றுவிட்டு தாம்பூலம் தரிக்கும் வேளையில் துரியோதனன் எதிர் வந்து விருந்து எப்படி என்கிறான்..
விஷயம் அறிந்த சல்லியனுக்கு அவமானமாகின்றது..வேறு வழியின்று தின்ற சோற்றுக்கு கௌரவர் பக்கம் நின்று சண்டையிடுகின்றான்..
கடைசியில் கண்ணனுக்கு நிகராகத் தேரோட்டியும் பெருமை சேரவில்லை..
சல்லியனை தேரோட்டி என்றும் கர்ணன் அவமதிப்பு செய்கிறான்..
விளைவு பாதியில் தேரை கைவிட்டுச் செல்கிறான்..
இதுமாதிரி நட்டாற்றில் விட்டுச் செல்பவர்களை - சல்லிப்பயல் என்பது தஞ்சாவூர் பக்கத்து வழக்கம்....
ஒரு தடவை ராஜிவ் காந்தி "He is seeing through black glass.." (அதனால் எல்லாமே கருப்பாக--எதிர்மறையாக அவருக்குத் தெரிகிறது என்ற அர்த்தத்தில்) என்று கருணாநிதியைக் குறித்து தேர்தல் காலத்தில் சொல்லப் போய், கலைஞரோ, வெகு தழைவான குரலில், தன்னிரக்கத்தோடு ராஜிவ் சொன்னதை சாமர்த்தியமாய் பயன்படுத்திக் கொண்ட (திறமை?) நாடு அறியும்.
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்..
பதிலளிநீக்குபாவம் சல்லியன் என்று அனுதாபம் தான் மிஞ்சுகிறது.
கர்ணனின் தூஷணைகளைத் தாங்கிக் கொண்டு கடைசி வரை தன்னை வெகுவாகக் குறைத்துக் கொண்டு எந்த துரோகமும் இல்லாமல் கர்ணனுக்கு தேரோட்டவே சல்லியன் முயற்சிக்கிறான். இருந்தும் அவனுக்கு எதிரிகள் மட்டத்தில் தான் இழிவுப் பெயர்..
மஹாபாரதத்தின் வாசிப்பு அனுபவத்தில் சல்லியன் மேல் வாசிப்போருக்கு அனுதாபமே மிஞ்சும்.
தஞ்சாவூர்க்காரர்கள் ரசனைக்குப் பெயர் பெற்றவர்கள். சல்லிக்காசுக்குக் கூட பயன் படாதோர் என்பதைச் சுட்ட சல்லியன் என்றார்களோ?..
ஆமாம் சகோ ராஜி.. அது எம் ஜி ஆர் காலத்து ஸ்டைல்!
பதிலளிநீக்குஸூப்பர் துரை செல்வராஜூ ஸார். நீங்கள் சொன்னதும் எனக்கும் அந்த சம்பவத்தோடு இது பொருந்துவது தெரிகிறது.
பதிலளிநீக்குஜீவி ஸார்...
பதிலளிநீக்கு//ஸ்ரீராம். அண்ணாவே சொன்னது தான் இது.//
ஆமாம்.. எதுவுமே புதுசு இல்லேதான்! ஆனாலும் இப்போ ரொம்ப அதிகமா இருக்கே... எப்பதான் மாறும்!
ஜீவி ஸார்...
பதிலளிநீக்குராஜீவ் காந்தி - கருணாநிதி சம்பவம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ரசனை!
//தஞ்சாவூர்க்காரர்கள் ரசனைக்குப் பெயர் பெற்றவர்கள். //
ஹிஹிஹி... நானும் தஞ்சாவூர்தான்!
ராஜீவ் அவர்கள் சோனியாவுடன் த்ஞ்சையில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது தான் கண்ணாடி பேச்சு பேசியதாக நினைவு..
பதிலளிநீக்குராஜீவ் அவர்கள் சோநியாவுடன் மேற்கொண்ட தஞ்சை பிரசாரத்தின் போது தான் இந்த கண்ணாடி விஷயம் பேசப்பட்டதாக நினைவு..
பதிலளிநீக்குஸ்ரீராம் உங்கள் கருத்தும் நன்றாகவே இருக்கு....தொகுதியில் நிற்பவரோடு பேசி....
பதிலளிநீக்குஅதுதான் ஸ்ரீராம்....மக்கள் எல்லோரும் ஒத்துழைக்கணுமே...விலை போகாமல் இருக்க வேண்டுமே ..அதை முதலில் முறியடிக்க வேண்டாமா...விலை போகக் கூடாது நம் தொகுதி மேம்பாடு முக்கியம்ன்ற எண்ணம் மக்களிடம் வரணும் இல்லையா
கீதா
கில்லர்ஜி அதுதான் மக்கள் சேர்ந்து செய்தால் தனிமனித அதிகாரமோ பயமோ வேண்டாமே
பதிலளிநீக்குகீதா
கேரளத்தில் அரசியல் விழிப்புணர்வு ரொம்பவே அதிகம். இங்கும் கொஞ்சம் இப்படி நடக்கும் என்றாலும் தமிழ்நாடளவு மக்களை கேரளத்தில் விலைக்கு வாங்கிட இயலாது. கேரளத்திலும் சினிமாத் துறையினரும் அரசியலில் வரத் தொடங்கியுள்ளனர். என்றாலும் மக்கள் அதில் அத்தனை மயக்கம் கொள்வதில்லை. அரசியலை அரசியலாகவே பார்க்கிறார்கள். எதற்கும் எதிர்த்துக் கொடி பிடிக்கத் தயங்கமாட்டார்கள். போராட்டங்களை அத்தனை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இங்கும் ஊழல்கள் உண்டுதான். தமிழ்நாட்டிலும் மக்கள் கொஞ்சம் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழும்.
பதிலளிநீக்குபணம்.. பணம்.. பணந்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. எங்கிருந்து வந்தாலும், எப்படி சம்பாதிக்கப்பட்டிருந்தாலும், வர்றத வாங்கி உள்ளே வை என்கிறது வாக்காளனின் மனம். இது மேலும் கீழ்நிலைக்குத்தான் போகுமே தவிர, நிலைமை சீரடைய மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இலவசமில்லை என்றால் வாழ்க்கை சப்பிட்டுப்போய்விடுகிறது தமிழனுக்கு. தேர்தலின்போதும் இலவசம், தேர்தலுக்குப் பின்னும் இலவசம் என்று காலங்காலமாய் சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருக்கிறார்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசியல்வாதிகள். இப்போதுபோய் ஒன்னுங்கிடையாது.. ஓட்டுப்போடு.. அதுதான் உன் கடமை எனத் தத்துவம் பேசினால் வாக்காளன் இப்படிப் பாடிவிடக்கூடும் :
பதிலளிநீக்குகாசேதான் கடவுளடா
இலவசந்தான் இறைவனடா
ஒன்னுமே கொடுக்கமாட்டேன்னா
ஓட்டுக் கிடையாது போய்வாடா!
//.மக்கள் எல்லோரும் ஒத்துழைக்கணுமே...விலை போகாமல் இருக்க வேண்டுமே .//
பதிலளிநீக்குஆமாம் கீதா... நீங்கள் சொல்லி இருப்பது போல கேரளாவில் விழிப்புணர்வு அதிகம்தான். அங்கு வாக்காளர்களுக்கு காசு தருவார்களா என்று தெரியவில்லையே!
வாங்க ஏகாந்தன் ஸார்... தமிழ்நாட்டில்தான் இந்த அவலநிலை போல. பிஹார், உ பியில் கூட இந்நிலை கிடையாது என்று தோன்றுகிறது. இதற்கும் ஒரு கவிதை எழுதி விட்டீர்கள்...!
பதிலளிநீக்குலஞ்சம் வாங்காமல் வோட்டுப் போட்டிட்டேன்ன்:))
பதிலளிநீக்குபயத்தில கடேசிப் பெட்டியில் ஏறி இருந்து பேசுறேன்ன்.. என் குட்டிக் கிட்னிக்குத் தெரிஞ்சளவில.. லஞ்சம் வாங்குவது தப்பு, ஆனா இந்த இலவசப் பொருட்களை வாங்கிட்டு வோட் போடுவதில தப்பென்ன இருக்கூஊஊஊ?:)) அதாவது நான் நினைப்பது என்ன வெனில், கொள்ளை அடிச்ச காசிலதானே வோட்டுக்குத்தானம் கொடுக்கினம்... அதை மக்கள் வாங்கினால் என்ன தப்பு.. ஒருவரின் உழைப்பையோ இல்லை கஸ்டத்தையோ காசாகவோ பொருளாகவோ கொடுத்தால்தானே தப்பு...
பதிலளிநீக்குஇன்னுமொன்று, ஆட்சிக்கு வரமுந்தானே இப்பூடிக் குடுப்பினம்.. வந்தபின்பு மக்களைத் திரும்பியும் பார்க்காயினமெல்லோ?:) அப்போ வோட் போடுறது போடுறதுதான்.. சும்மா தருவதை வங்கிட்டுப் போட்டால் என்ன?:).. அத்தோடு தானமா கொடுப்போர் ஒன்றும் தம் வீட்டுப் பணத்தை தூக்கிக் கொடுக்கவில்லைத்தானே, அடுத்து ஆட்சிக்கு வந்தபின்னர் டபிள் ரிபிளா சேர்ட்த்திடுவினம் தானே...
இப்பூடி எல்லாம் நான் ஓசிக்கிறேனாக்கும்..
//இன்னும் பத்து வருடங்களில் / இருபது வருடங்களில் இந்நிலை எந்நிலையை எட்டியிருக்கும்? //
பதிலளிநீக்குஅப்போ 20 வருஷத்துக்கு அப்புறம் பணத்துக்குல்லாம் வேல்யூ இருக்காது :) அப்போ அநேகமா மக்களுக்கு தண்ணி ..நான் சொல்றது H2O அப்புறம் bottled air இதைத்தான் மக்கள் எதிர்பார்ப்பாங்க :) ஆகமொத்தம் அப்பவும் லஞ்சம்தான் ..என்று வரும் ..
ஆனால் நான் மியாவ் சொன்ன மாதிரி காசுக்கெல்லாம் அடிபணியமாட்டேன் காற்று தண்ணி இது குடுத்தா வாங்கி யூஸ் பண்ணிட்டு எனக்கு இஷ்டமானவங்களுக்கு ஒட்டு போடக்கூடிய சாத்தியமுண்டு .பணமில்லைனாலும் வாழலாம் காற்று தண்ணி வேணுமே :) JUST KIDDING :)
ஆனால் எனது கொள்கை சே நோ டு லஞ்சம்தான் :) .இங்கிலாந்தில் யாரும் எனக்கோ இல்லை பிறருக்கோ பணம் தரலை வாக்களிப்பது எனது மற்றும் மக்களின் ஜன்நாயக கடமை அதை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செய்யப்பட்டால் போதும் .
மேலும் நான் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நடைமுறையிலும் செயல்படுத்தும் ரகம் :) பணத்துக்கு எந்த அகிலத்திலும் விலைபோக மாட்டேன் :) அந்த பணத்தை வாங்கி ஏழைகளுக்கு விநியோகம் செஞ்சால் அதுவும் பாவப்பட்ட பணமே .பட்டினியோடு இருந்து பரலோகம் போவேன் தவிர பாவகாரியத்துக்கு துணை நிற்கமாட்டேன் அந்த திருட்டுராஸ்கல்ஸ் பாவத்தையும் நாம் சுமக்கபங்கெடுக்க நேரிடும் கை நீட்டி லஞ்சம் வாங்கினா
பதிலளிநீக்குஅப்போ என் எக்கவுண்ட் நெம்ம்ம்ம்பர் தரட்டோ அஞ்சு?:) உங்களிடம் இருப்பதை அப்பூடியே மாத்தி விடுங்கோ:)
நீக்குஇந்தாங்கோ இந்தாங்கோ அஞ்சு ... மோர் மோர்... ஆங் குடிச்சிட்டுக் கொண்டினியூ:)...
நீக்கு@athiraமியாவ் said...
பதிலளிநீக்குஅப்போ என் எக்கவுண்ட் நெம்ம்ம்ம்பர் தரட்டோ அஞ்சு?:) உங்களிடம் இருப்பதை அப்பூடியே மாத்தி விடுங்கோ:)//
ஹையோ மியாவ் உங்களுக்கு இந்திய அரசியல்வியாதிகள் பற்றித்தெரிஞ்சா கண்ணாலும் அந்த பாவப்பட்ட பணத்தை பார்க்க மாட்டிங்க :) நானா கைநீட்டி வாங்கவே மாட்டேன் அப்போ எப்படி உங்க அக்கவுண்டுக்கு அனுப்ப முடியும் :)
/லஞ்சம் வாங்காமல் வோட்டுப் போட்டிட்டேன்...//
பதிலளிநீக்குஹா.... ஹா.. ஹா.. நன்றி அதிரா..
//கொள்ளை அடிச்ச காசிலதானே வோட்டுக்குத்தானம் கொடுக்கினம்... அதை மக்கள் வாங்கினால் என்ன தப்பு.. //
இதில் நான் அஞ்சு கட்சி. இப்படிச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்து விடுகிறோம் என்று தோன்றுகிறது. முன்பு எனக்கும் அந்த எண்ணம் இருந்தது.
ஏஞ்சலின்..
பதிலளிநீக்குஆமாம். நீங்கள் சொல்வது சரியே.
//அந்த பணத்தை வாங்கி ஏழைகளுக்கு விநியோகம் செஞ்சால் அதுவும் பாவப்பட்ட பணமே .//
ம்ம்ம்.... சரிதான்.
அதிரா...
பதிலளிநீக்கு//அப்போ என் எக்கவுண்ட் நெம்ம்ம்ம்பர் தரட்டோ அஞ்சு?:)//
ஹா... ஹா... ஹா...
//இந்தாங்கோ இந்தாங்கோ அஞ்சு ... மோர் மோர்..//
ஹலோ... இந்த பனிக்கும் குளிருக்கும் மோரா? ஒரு 'ரீ' கொடுக்கக் கூடாது?!!