ஒரு பொருளை சிறப்பாக விளம்பரம் செய்ய விரும்பும் நான் என்ன செய்வேன்? செலவைப் பற்றிக் கவலை இல்லை என்றால் முதல் பக்க விளம்பரமாகத் தர முயற்சிப்பேன். அதற்கு கட்டணம் அதிகம்.
சரி, ஊடகராக நான் என்ன செய்யவேண்டும்? முன்னுரிமை கொடுத்து முதலில் வருபவருக்கோ, அல்லது வேறு விதிமுறைகளுக்குட்பட்டோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து வெளியிடலாம். காசுக்கு ஆசைப்பட்டால்? அதிக வருமானம் பார்க்க நினைத்தால்?
வாசகனாக எனது பார்வை எப்படி இருக்கும்? செய்தித் தாளின் முதல் பக்கத்தில் முக்கியச் செய்தியாக என்ன வந்திருக்கிறது? எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்? ஆனால் அடுத்தடுத்து பல "முதல் பக்கங்கள்" பார்க்க நேருமாயின் வாசகனாக எனது மனதில் எரிச்சல்தான் வரும். விளம்பர வருமானம் இல்லாமல் இந்நிறுவனங்களை நடத்த முடியாதுதான்.. ஆனாலும்?
முதல் பக்க விளம்பரம் கொடுக்க நினைத்து காசு கொடுத்திருக்கும் என் முகத்தில் இப்போது அந்த செய்தித் தாளை பார்க்க அசடு வழியும். எத்தனை முதல் பக்கங்கள்!
எல்லாம் ஒரே நாளின் (செய்தித்தாள்) முதல் பக்கங்கள்!!
ஊடகராக நான் இப்போது வேறொன்று கூடச் செய்ய முடியும். இதனை முதல் பக்கங்களில் 'முதன்மை முதல் பக்கத்துக்கு' இன்னும் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம்.
வாசகராக இதெல்லாம் என் கற்பனைதான். உண்மை நிலை வேறாயிருக்கலாம். ஆனால் இத்தனை முதல் பக்கங்கள் காணும் வாசகர் நிலை எரிச்சல்தான். விகடனின் மடக்கி மடக்கி வரும் அட்டைப்படம் போல.
முன்பெல்லாம் இப்படி இல்லை!
"நியாயத்தையெல்லாம் எதிர்பார்க்காதே ஸ்ரீராம்.. இது வியாபார உலகம்!"
==============================================================================================
ரசித்த வரிகள் - ஒளிப்பதிவாளர், நடிகர் இளவரசு
குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறீர்களா?
குணச்சித்திர நடிப்பு என்பது கடைமடை விவசாயம் போன்றது. கதாநாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர் எல்லோரும் பாசனம் செய்ததுபோகத்தான் நமக்கு வரும். நாங்கள் கீழத் தஞ்சை விவசாயிகள். சினிமாக்களில் இறந்துபோன குடும்ப உறுப்பினராக ஒரு ஃபோட்டோ வீட்டில் மாட்டியிருப்பதைக் காண்பிப்பார்கள். பார்த்திருக்கிறீர்களா? அப்படியாகவும் நாங்கள் கதைக்குள் இருக்க வேண்டியிருக்கும்.
இவருக்குள் இப்படி ஒரு சிந்தனையா?
=========================================================================================================
"ம்ம்ம்ம்.... அனுஷ்க்கா அலப்பறை ஆரம்பமாயிடுச்சு மறுபடி...."
===================================================================================================================================
பிற்சேர்க்கை : இன்றைய தினமலர் நாளிதழிலிருந்து...
பிற்சேர்க்கை : இன்றைய தினமலர் நாளிதழிலிருந்து...
"யாருன்னு காட்டுங்க... அவங்களை எதிர்க்க உங்க கூட நானும் வர்றேன்.."
====================================================================================================================
மிகவும் மூத்த பதிவர் ஐயா திரு காஷ்யபன் அவர்கள். நம்மை யாராவது குறை சொன்னால் நாம் எப்படி பதில் அளிப்போம்? ஐயாவின் பதிலைப் பாருங்கள். இவர் வயதில் நான் இருப்பேனா, இருந்தாலும் எழுதுவேனா என்பதே தெரியாது....
"சும்மா ஷேர் செய்தால் போதுமா ஸ்ரீ? நீயும் கத்துக்கோ..."
==================================================================================================
70 களில் வந்த குமுத கிசுகிசுகள்! கண்டுபிடிக்க முடிகிறதா?
"காலம் கடந்த கிசுகிசுக்களால் என்ன பயன்? அவன் கிடக்கான்.. நாம தூங்கலாம் வா..."
================================================================================================================================
இரண்டு வருடங்கள் ஆகின்றன. கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதி ஆரம்பித்து... நிறுத்தவோ, மாற்றவோ மனமில்லை. நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் கதைகள் அனுப்பலாம். எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.
"இன்னும் இன்னும் இன்னும் சிறுகதைகளை எதிர்பார்த்து ஆவலுடன்....."
=============================================================================================================
"இந்த வாரம் கொஞ்சம் ஓவர்தான்... போகலாமா?.."
"ஓகே... கிளம்பலாம்..."
"வர்றோம்... அடுத்த வாரம் பார்க்கலாம்!"
படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து....
வாழ்க..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துறை செல்வராஜு அண்ணா....
பதிலளிநீக்குஅண்ணாவின் மா 2 பதிவுக்கு கமெண்ட் போட்டு ...நெட் கட்.. ஆகிட....போச்சானு தெரிலே....மொபைலில்..இருந்து இது
கீதா
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆஹா காலையில் அழகான நம் செல்லங்கள் படம்....பாக்க...ஹோ...வரேன் வரேன்...
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குகவிதையே
பதிலளிநீக்குகவிதையானது!...
யாருக்காவது புரியுதா?..
தெரிஞ்சவங்களுக்குப் புரியும்!...
வந்த வேலை நல்லபடியா முடிஞ்சது...
நாராயண...
இதோ வரேன் துரை அண்ணாவின் மாந்தோப்புக்கு இன்னுறு விசிட் அடிச்சுட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
கீதா ரெங்கன்... ஆமாமாமாம்... "செல்லங்கள்" படம்தான்.
பதிலளிநீக்குகவிதையப் பார்த்ததும்
பதிலளிநீக்குகையும் ஓடலே... காலும் ஓடலே..
வணக்கம் ஸ்ரீராம்/ கீதா.. மற்றும் அனைவருக்கும்...
வாழ்க நலம்..
கவிதை உங்களை படுத்துகிறதோ துரை செல்வராஜூ ஸார்? கவிதைதானே?!!
பதிலளிநீக்குஹையோ இந்த முதல்பக்க விளம்பரங்கள்...மாமியார் வீட்டுக்குப் போகும் போது ஹிந்து பார்த்து கொஞ்சம் சலிப்பும் எரிச்சலும் வரும்...விளம்பரம் விளம்பரம்...விளம்பரம்....உலகம் மிகவுமே வியாபார உலகமாயிருச்சு...ஏன் உறவுகளுக்குள்ளும் தான் குடும்பத்துக்குள்ளூமே....கணவன் மனைவிக்குள்ளூமே நுழைந்துவிட்டதே...இது உன் பைசா இது என் பைசா என்று...
பதிலளிநீக்குசெல்லம் சொல்லும் கமென்டைத்தான் நாம் எடுத்துக்கணும்...வேற வழி!!??
கீதா
ஹை சைக்கிள் கேப்ல அனுஷ்காவும் வந்துட்டாங்களே!!!
பதிலளிநீக்குசரி வரேன்...கண்ணி சொல்லறா...நான் நேரடியா உனக்குச் சொல்லமா இருக்கேன் அப்பவே இருந்து காத்துக்கிட்டுருக்கேன்...உனக்கு அங்க இருக்கற ஃபோட்டோ செல்லங்களை ரசிக்கறியா..இதுல அனுஷ்கா அக்காவையும் பார்த்தது போதும் முதல்ல என்னைக் கூட்டிட்டுப் போ...இல்லைனா இங்கேயே போயிடுவேன்னு..
போயிட்டு வரேன்...
கீதா
புகைப்படங்கள் இன்னும் திறக்கவில்லை இணையம் பிரச்சனை.
பதிலளிநீக்குகதம்பம் மணத்தது
இதை அனுஷ்கா சொல்வதற்கு தகுதி இருக்கா ?
இள்வரசு அவர்களின் வரிகள் சிந்திக்க வைக்கின்றன. ரசித்தோம்
பதிலளிநீக்குஸ்ரீராமுக்கு வயசு என்னாகுது - துளசி
ஹிஹிஹி அதை எல்லாம் நான் சொல்லமாட்டேம்பா...ஆனா அவரு டீன்ல இருக்காப்புலதான் தெரியுது...அந்தக் கவிதையத்தானே சொல்லுற அதான் அலப்பறைனு செல்லம் கிண்டலடிக்குதே!! ஹா ஹா ஹா...
நானும் தான்..பார்க்குறேன் ஆனால் எனக்குக் கவிதை எல்லாம்வ் வர மாட்டேங்குதே!!! - துளசி
உனக்கு வயசாயிருச்சு சும்மா கெட அந்தால...
கீதா: ஸ்ரீராம் அடுத்த தினமலர் செய்தி ஹா ஹா ஹா ஹா...பார்த்துப்பா....வீரவேசமா கிளம்புறதெல்லாம் சரிதான்..."என் படத்தைப் போட்டுட்டுக் கவிதை வேறயானு" அனுஷ்கா சொல்லிடாம...ஹிஹிஹிஹி...
அதிரா ஏஞ்சல் ஸ்ரீராம் புறப்பட்டுட்டார் மீசையை முறுக்கிட்டு கையில அறுவாளோட!!! ஹா ஹா ஹா ஹா
அந்தக் கால கிசு கிசு சூப்பர். அப்பவும் புரியலை இப்பவும் புரியலை. அனுஷ்கா மோகம் இவ்வளவு தூரம் வந்துட்டதா. ஹாஹா. புதுப்பகுதி வரப் போகிறதா. நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇனி பத்திரிக்கைகளை ஆன்லைனில் படித்தால் போதும்.
விளம்பரங்களுக்கு நாம் பணம் கொடுப்பானேன்.
காஷ்யபன் ஐயாவின் பதில் மிக மிகப் பக்குவப்பட்ட பதில்!! உங்கள் வரிகளையே நாங்களும் வழிமொழிகிறோம் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குசெல்லம் சொல்லிருச்சு...ஷேர் செய்தா போதாது கத்துக்கணும்னு ...யெஸ் நாம் கற்றுக் கொள்வோம்!!
பதிலளிநீக்குகீதா
காலம் கடந்த கிசுகிசுக்கள்// ஹா ஹா ஹா ஹா...அதானே!!
பதிலளிநீக்குகிசு கிசுக்கள் கண்களில் தெரிந்தது...ஆனா கஷ்டபட்டு வாச்க்கணுமா இருக்கு...பரவால்ல!! அதான் செல்லம் சொல்லிருச்சே..
கீதா
நிறைய பொரித்திருக்கிறீர்கள் ஸ்ரீராம். பார்ட்-பை-பார்ட்டாகப் பின்னூட்டம்.(ரெண்டு மணிக்கு க்ரிக்கெட் ஆரம்பிப்பதற்குள், கொஞ்சம் கிறுக்கிவிடுகிறேன்)
பதிலளிநீக்குமுதலில் ’தி ஹிண்டு’ பற்றிச் சுருக்கமாக: இந்தப் பத்திரிக்கை தன் மதிப்பை வாசகர்களிடையே இழந்து நாட்களாகிவிட்டது. டெல்லியிலும் பழைய ஞாபக-ஏக்கத்தில் (அல்லது ஏக்க-ஞாபகத்தில்) (nostalgia), தமிழ்க்குடும்பங்கள் (பெரும்பாலும் பிராமணர்கள்) ஆங்கில ஹிண்டு இன்னும் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். என் அண்ணாவின் வீட்டிற்கும் வருகிறது. (ஆனால் அவர் ஹிண்டுவோடு நிற்காமல் மற்ற நாளிதழ்களையும் வாங்குபவர்-பிழைத்தார்). ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியமாக, மதராஸின் ஒரு கம்பீர அடையாளமாகக் கருதப்பட்ட (நாட்டின் மற்றபகுதிகளிலும் மதிக்கப்பட்ட) ஹிண்டு, தன் செல்வாக்கை நாளடைவில் இழந்து, காலாவதியாகிவிட்ட நடிகையைப்போல், பொருந்தாத சாயம் பூசி அலைகிறது இப்போது. அவர்கள் பத்து பக்கங்களை முதல் பக்கம் எனப் போட்டுக்கொள்ளலாம். விளம்பரங்களைக் கலர்க்கலராய் விசிறி காசு சம்பாதிப்பதில் மற்றவர்களோடு போட்டிபோடலாம்.வெல்லலாம். ஆனால் பத்தோடு பதினொன்னுதான் ஹிண்டு இப்போது. (ஆனந்தவிகடனின் கதியும் இதுதான். ஆடி சலுகையில் புடவை, நகை வித்த காலம்போய், சீசனுக்கு ஏற்றவாறு சலுகைவிலையில் பத்திரிக்கை விற்கிறது ஆவி !).
கதைகள் எழுதறோம் எழுதறோம்....உங்கள் ஆதரவுடன்...நீங்கள் இப்படி ஆதரவு அளித்து ஊக்குவிப்பதால் இங்கு எத்தனை கதாசிரியர்கள் புதிதாகவும் வந்திருக்கிறார்கள்!! அதற்கு உங்களுக்குத்தான் பாராட்டுகள் சொல்லவேண்டும்..எங்களின் அன்புடனான பொக்கே!! மேடை போட்டுருவமா!!!!
பதிலளிநீக்குகீதா
பி2-அனுஷ்கா:
பதிலளிநீக்குகையை வெட்டணுங்கறாங்க இந்தம்மா. இதுக்கு முன்னாலே ஒரு அம்மா (கேப்பிட்டல்ல படிக்கவேண்டியது), வேற ஒன்ன வெட்டினாத்தான் நிலைமை சரியாகும்னாங்க. அவங்க சொன்ன பல விஷயங்கள்ல அதிமுக்கிய விஷயம் இது. ஐபிசி-யின் ஷரத்தையே இப்பிடி மாத்தியிருந்தா, குத்தம் செஞ்ச ரெண்டு மூணு பாவிகளப் புடிச்சி ஒடனே சீவியிருந்தா, பெண்களுக்கெதிரா வன்முறையா – பெண்களுக்கு எதிரேகூட ஒரு பயலும் நிக்கமாட்டான் நாட்டிலே ..
இப்போப் பத்திரிகைகள், தினசரிகள் எல்லாம் யார் வாங்கறாங்க! அதிலும் ஹிந்து? வாய்ப்பே இல்லை! மஞ்சள் பத்திரிகையை விட மோசமாக உள்ளது! விகடன் கேட்கவே வேண்டாம்! அவற்றை எல்லாம் பார்த்தே எவ்வளவோ வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் வீட்டுக்கு வந்த விருந்தினர் யாரோ "துக்ளக்" பத்திரிகை வாங்கி இருந்தனர். இங்கேயே கிடந்தாலும் எடுத்துப் படிக்கத் தோணலை!
பதிலளிநீக்குஅனுஷ்கா சொன்னாப்போல் கையை மட்டும் இல்லை ஏகாந்தன் சொல்றாப்போலயும் செய்யறது தான் நல்லதுனு நினைக்கிறேன். மற்றபடி இளவரசுங்கறவரைத் தெரியாது! அதோட சினிமா விஷயங்களும் சுத்தம்! காஷ்யபன் அவர்கள் எப்போதுமே நிதானமாக யோசித்து பதில் சொல்லுவார். அவர் மனைவி சம்ஸ்கிருதப் பண்டிதை எனக் கேள்விப் பட்டிருக்கேன். செல்லங்கள் எல்லாம் எங்கே பிடிச்சீங்க? எல்லாம் நல்லா இருக்குங்க! அவங்க சிந்தனையும் அப்படி தான் இருக்கும் போல! :)
பதிலளிநீக்குஎன்ன செய்வது இப்போதெல்லாம் விளம்பரங்களுக்கிடையேதான் செய்திகளையும், கட்டுரைகளையும் நாம் வாசிக்கவேண்டியுள்ளது. 1990களின் இடையில் இலண்டனிலிருந்து வெளிவருகின்ற The Sun இதழின் ஒரு படியை, நான் கேட்க அவர்கள் அனுப்பியிருந்தார்கள். டேப்ளாய்ட் வடிவில் 84 பக்கங்களைக் கொண்டிருந்த அவ்விதழில் சுமார் 50 விழுக்காடு விளம்பரங்களே இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இதையெல்லாம் பார்க்கும்போது சாதாரணமாகத் தெரிகிறது. அண்மையில் The Guardian இதழைக்கூட மறுபடியும் டேப்ளாய்ட் (பெர்லினர் வடிவத்திலிருந்து) மாற்றியுள்ளார்கள். The Observer இதழைக்கூட மாற்றிவிட்டார்கள். சந்தா மூலம் வரும் வருமானம் குறைவாகவே உள்ளது என்றும் அதனால் அவ்வடிவிற்கு மாறுவதாகவும் அவர்கள் கூறுவதையும் யோசிக்க வேண்டியுள்ளது.
பதிலளிநீக்குகாஷ்யபன்-பெரிய மனிதர் பெரிய மனிதர்தான்!
பதிலளிநீக்குஅனுஷ்கா பற்றிய கவிதைக்கு போட்டுக் கொள்ளுங்கள் ஒரு 100 மார்க்.(100/100)
அந்தக் கால கிசு கிசுவை இப்போது படித்து என்ன செய்யப் போகிறோம்?
பைரவர்கள் சூப்பரோ சூப்பர்! எங்கே சுட்டீர்கள்? காமிராவில்தான்.. ஹி ஹி!!👌👌
ஸ்ரீராம் அனுஷ்காவைப் பார்த்து கவிதை பிறந்ததா..இல்லை கவிதைக்கு அனுஷ்கா படமா ?!! ஹிஹிஹி...
பதிலளிநீக்குஅதிரா மீதிய கவனிச்சுப்பாங்க...மீ ரன்னிங்க்....
பானுக்கா ஆமாம் நாம அரம ஜொள்ளாம இருக்க முடியுமா...கவிதை சூப்பர்ல!!! தானா வந்து விழுதுப்பா நு ஸ்ரீராம் சொல்லுறார்!! ஹாஅ ஹாஆ..
சரி சரி ஓவர் டு பூஸார்...பைரவர்க்கு எல்லாம் பதில் சொல்ல பூஸார் பாய்ந்து வருவார்...
கீதா
நான் நயன் தாரவை பற்றி ஏதாவது பேசினால் ஒடோடி வந்து அவங்க உங்க சகோதரிதானே என்று சொல்லும் ஏஞ்சல் அதிரா இங்கே ஸ்ரீராம் மட்டும் அடிக்கடி அனுஷ்கா பற்றி பேசும் போது சைலன்டாக இருப்பது ஏன்....?
பதிலளிநீக்குபி3- காஷ்யபன்: இவரைப்பற்றி நவீனவிருட்சம் ப்ளாகில் படித்திருக்கிறேன். ‘கோணல் மரம்’ என்ற பெயரில் இவரது சிறுகதைத்தொகுதியை விருட்சம் வெளியிட்டிருக்கிறது. கணையாழியில் கதைகள் பல எழுதியவர். அசடு என்கிற நாவலொன்றையும் வடித்தவர்.
பதிலளிநீக்குஇளம் தலையினரில் பலருக்கு –அதிலும் ஆங்கிலம் மெத்தப்படித்தவருக்கும்- humility என்கிற ஆங்கிலவார்த்தைக்கு அர்த்தம் சரியாகத் தெரியாது. தமிழில் தன்னடக்கம் எனலாம். அடக்கம் என்கிற வார்த்தைக குறிப்பிடும் அடக்கத்தை விட, ஆழமான, உன்னதமான உள்ளுறையும் குணம் இது. சிலருக்கு மட்டுமே வாய்க்கும். காஷ்யபனுக்கு வாய்த்திருக்கிறது என்பது அவரது பதிலில் இருக்கிறது.
பி4 - குமுதம்: நடிகைகள் சிலருக்குக் குழந்தை பிறக்காததுபற்றிக் காலங்காலமாகக் கவலைப்பட்டுவரும், பாரம்பரியம் மிக்க கலை, இலக்கிய இதழ் குமுதம். அது பிறந்த நேரம் அப்படி !
பதிலளிநீக்குகூடவே தமிழ்வளர்க்கும் அரும்பணியையும் குமுதம் அயராது செய்துவருகிறது. கவர்ச்சி என்கிற சொல்லை ‘கவர்ஸ்ரீ’ என எழுத வேறு யாரால் முடியும்?
இன்றைக்குக் கொடுத்துள்ளவற்றை மிகவும் ரசித்தேன். .நல்ல கலவை.
பதிலளிநீக்குகிசுகிசுல அர்த்தமே இல்லை. இன்னைக்குக் கொடுத்தாலே ஆளு யாருன்னு கண்டுபிடிக்கறது கொஞ்சம் கஷ்டம். இதுல அந்தக்கால கிசுகிசுக்களை எப்படிக் கண்டுபிடிக்கறது?
காஷ்யபன் அவர்களைப் பற்றி ஒரு அபிப்ராயம் கொண்டிருந்தேன். (ஜி.எம்.பி சார், அவரை ஆஹா ஓஹோ என்பதுபோல் சொல்லும்போதும் எனக்கு அபிப்ராயம் மாறவில்லை. In fact தீர்மானமாக நினைத்தேன்). ஆனால் இந்தச் செய்தியைப் படித்தவுடன், அவரின்மீது அன்புதான் தோன்றியது. என் ஆபீசில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. என்னைப் பார்க்கவந்த ஆடிட்டர் ஒருவரை வெளியே காத்திருக்கச்சொன்னேன். இன்டர்காமில்தான் அவருக்கு சில விளக்கங்கள் சொன்னேன். (பொதுவா ஆடிட்டர்களைப் பற்றி-கணிணி ஆடிட்டர்களைப் பற்றி எனக்கு பெரிய அபிப்ராயம் கிடையாது. சின்னப் பசங்க, ஒண்ணும் தெரியாம ஏதேனும் கண்டுபிடிக்கறேன்னு சல்லி விஷயங்களைக் கண்டுபிடித்து பெரிய விஷயங்களைக் கண்டுபிடிக்கவே தெரியாது. Application knowledgeலாம் இருக்கவே இருக்காது). கடைசியில் என்னைப் பார்க்கணும்னதும், வரச்சொன்னேன். உள்ளே வரும்போதுதான் அவர் மாற்றுத் திறானாளி என்று அறிந்துகொண்டேன். மனது ரொம்பவும் வருத்தமடைந்தது. அப்புறம், அவர் வெளியே செல்வதற்கும் உதவி செய்தேன். ஒருத்தரோட வயது, அனுபவம், அவருடைய நிலை இவைகளைப்பற்றித் தெரியாமலேயே, அவர்களுடைய கருத்துக்களை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது என்று எனக்கு மனதில் தோன்றுகிறது.
'பெண்களைச் சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும்-அனுஷ்கா' - ஸ்ரீராமுக்கு மட்டும் அந்தத் தலைப்பை CUT செய்து புதிய தலைப்பை வைக்க வாய்ப்பு இருந்தால், 'அனுஷ்காவைச் சீண்டுபவர்களின்' என்று தலைப்பை மாற்றியிருப்பார்.
"அவளைக் கண்டதும்,
தனது வாழ்த்துக் கவிதையை (ஜொள்ளுக் கவிதையை)
புதுப்பித்துக் கொள்ள,
அகராதியைப் புரட்டிக்கொண்டிருக்கிறார்
ஒரு ரசிகர்"
இப்படி நான் 'தமன்னா'வுக்கு ஒரு கவிதை எழுதி படத்தோட ஸ்ரீராமுக்கு அனுப்பினால் பிரசுரம் செய்வாரா என்று இங்கு வந்திருக்கும் சகோதர சகோதரிகளைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்க.
நடிகர் இளவரசு, சிங்கம்புலி, சிங்கமுத்து போன்ற பலர் மிகுந்த திறமைசாலிகள். நமக்கு அவங்க காமெடி நடிகர்களாகவோ அல்லது குணசித்திர நடிகர்களாகவோதான் தெரியும். இளவரசு அவர்கள் பல திறன்கள் அமையப்பெற்றவர்.
'ஊடக ஊழல்' - இதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு. இந்தப் பத்திரிகைகள், இத்தகைய விளம்பரங்கள் வெளியிடும்போது, நமக்கு அவை விளம்பரம் என்று தெளிவாத் தெரியும். அதனால் அந்தப் பக்கங்களைக் கடந்துபோயிடலாம் (இல்லை படத்தைப் பார்க்கலாம்). உங்களுக்கெல்லாம் அதிக பக்கங்கள் விலைக்குப் போடும்போது எடைகூடும். ஆனால் கல்கி, ஆனந்தவிகடன், மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகள், செய்தி வடிவத்தில் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமோ எழுதி, indirect advertisement பண்ணுவதுதான் அயோக்கியத்தனம் என நினைக்கிறேன். மிக பொடி எழுத்தில் வலது கீழ்ப்பக்கம் ADVT என்றிருக்கும், இல்லைனா, 'சிறப்புபக்கம்' போன்ற லேபிள் பொடி எழுத்தில் இருக்கும். இது, பத்திரிகை மீது நல்லெண்ணம் கொண்ட வாசகர்களை ஏமாற்றும் வேலை.
பதிலளிநீக்குபி-5 எங்கள் ப்ளாக்: மேலே…//இரண்டு வருடங்கள் ஆகின்றன.. //
பதிலளிநீக்குFB-யில் : //ஆச்சு, வெற்றிகரமாக ஒரு வருஷம்//
மெய்யாலுமே என்னதான் கணக்கு? ரெண்டா, ஒன்னா?
2016 , 2017, 2018.
நீக்குபி 6-குணசித்திரவேடம்: இளவரசு-வின் கடைமடை விவசாய விளக்கம் கனகச்சிதம். ( இடையில்
பதிலளிநீக்குஅனுஷ்காவுக்கு ரெண்டு படம் போட்டு ஹைலைட் செய்ததால், இளவரசு கடைசி ஸ்பாட்டில் ஒதுங்கும்படி ஆகிவிட்டது - கடைமடை விவசாயம்!)
வாங்க கீதா... முதல் பக்க முக்கியத்துவம். காசு! காசு! காசு!
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி... புகைப்படங்கள் திறந்து விட்டதா? அனைத்தும் பார்த்தாயிற்றா?
பதிலளிநீக்குதுளஸிஜி... வாங்க... வயசுல என்ன இருக்கு? எல்லாம் மனசுலதான்! வயசானவங்கள்லாம் நாந்தான் வலையுலகில் குழந்தை என்று சொல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நன்றி கீதா.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா,,, கிசுகிசுக்களை உடைக்க தனித்திறமை வேண்டும்! எனக்கில்லை!
பதிலளிநீக்குவாங்க கீதா... காஷ்யபன் பதில் ரஃம்பப் பிடித்ததால் ஷேர் செய்தேன். ஐயாவிடம் அனுமதி வாங்காமலேயே....
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார். இந்து பற்றி உங்கள் அபிப்ராயம்தான் எல்லோருக்கும். முக நூலில் பார்த்தபோது இதே நாளில் 2014 லேயே இந்தியா வெளிநாட்டில் ஆடும் கிரிக்கெட் பார்ப்பியா.... பார்ப்பியா.... பார்ப்பியா... என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குநிறைய நிறைய கதைகள் எழுதி அனுப்புங்கள் கீதா ரெங்கன். இவன் கேட்கவில்லையே என்று காத்திருக்கவேண்டாம்.
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... கையை வெட்டினாலும் எதை வெட்டினாலும் தாமதிக்காமல் செய்ய வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்! தப்பு செய்பவர்களுக்கும் பயம் இருக்காது.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. சரிதான். அனால் நான் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தினால் எங்கள் பேப்பர்க்காரர் வருத்தப்பட்டு கெஞ்சுகிறார். "இன்னும் கொஞ்ச கால வாங்குங்கள் ஸார்" என்கிறார்.
பதிலளிநீக்குகாஷ்யபன் ஸார் அப்பாதுரை மேல் மதிப்பு வைத்திருப்பவர். அப்பாஜியும் நாகபுரி சென்று அவரைச் சந்தித்திருக்கிறார்.
வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. விளம்பர வருமானம் இன்றி ஒரு செய்தி ஆச்சு ஊடகத்தை நடத்த முடியாதுதான். ஆனால் அதில் கொஞ்சம் நியாயம் இருக்கவேண்டும் என்று சொல்ல வந்தேன்!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. 100 மதிப்பெண்களுக்கு நன்றி. அரம கொபசெ! பைரவர்களை இணையத்திலிருந்துதான் சுட்டேன்! கீழே நன்றி தெரிவித்திருக்கிறேனே...
பதிலளிநீக்குவாங்க கீதா... உங்களுக்கே தெரியும் அனுஷ்க்காவே ஒரு கவிதை என்று. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். அப்புறம் என்ன கேள்வி!
பதிலளிநீக்குவாங்க மதுரை.. நீங்கள் அனாவசியமாக தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனாலும் அனுஷ் மேல் பொறாமை கொண்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள்!!!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்.. அதனால்தான் குமுத கிசுகிசு என்றே போட்டேன்!
பதிலளிநீக்குவாங்க நெல்லை... நீண்ட நாட்களுக்குப்பின் பாராட்டி இருக்கிறீர்கள். உங்கள் கொற்றம் வாழ்க.. குலம் வாழ்க...!
பதிலளிநீக்குகாஷ்யபன் ஸார் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
அனுஷ் தலைப்பை அப்படி மாற்றியிருக்கலாம். அவர் எல்லோருக்கும் சேர்த்தே சொல்லும் நல்லவராக இருக்கிறாரே என்றுதான்.........!
இதே வரிகளை புரட்டிப்போட்டு தமன்னாவுக்குக் கவிதை அனுப்பினால் எப்படி? வேறு எழுதி, பொருத்தமான படத்தையும் அனுப்புங்கள். நானாச்சு வெளியிட!
விளம்பரங்களைத் தாண்டிச் சென்று விடலாம்தான். ஆனால் இவர்கள் செய்திருக்கும் செயலைப் பாருங்கள். விகடன் அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு நிம்மதியாகப் படிக்க முடியாது. குழந்தை கிழித்த புத்தகம் போல லாலீபீலி என்று தொங்கும்!
வாங்க ஏகாந்தன் ஸார். கேஜிஜி பதில் சொல்லி விட்டார். எனினும்,
பதிலளிநீக்கு2016 ஜனவரியில் தொடங்கப்பட்டது 'கேட்டு வாங்கிப் போடும் கதை'.
அதை 2017 ஜனவரியில் குறிப்பிட்டு இனியும் தொடரும் என்று சொல்லியிருந்தேன் முக நூலில்.
இப்போது 2018 இன்னமும் தொடர்வதை பற்றிச் சொல்லி உங்களிடமிருந்தெல்லாம் இன்னும் கதைகளையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.
இளவரசுவின் பேட்டி வந்து 15, 20 நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதே குறித்து வைத்து விட்டேன்!
பதிலளிநீக்குநன்றி கேஜிஜி.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஒரு குட்டி இடைவேளையின் பின் திரும்ப அனுக்காவை:) இறக்குமதி செய்ததும்... வியாழக்கிழமை எல்லோரும் சுறுசுறுப்பாகிட்டினமே:)).. என்னதான் சினிமாவையும் நடிகர்களியும் திட்டினாலும்... :) ஒரு உற்சாகமும் பிறப்பது அங்கிருந்துதான் போல:).. எனக்கு ஊர் வம்பு பிடிக்காது பாருங்கோ:)..
பதிலளிநீக்கு///"யாருன்னு காட்டுங்க... அவங்களை எதிர்க்க உங்க கூட நானும் வர்றேன்.."
//
ஹா ஹா ஹா இம்முறை வைரவர் வாரம்போல:)..
///ஊடக ஊழல்!
பதிலளிநீக்குஒரு பொருளை சிறப்பாக விளம்பரம் செய்ய விரும்பும் நான் என்ன செய்வேன்? செலவைப் பற்றிக் கவலை இல்லை என்றால் முதல் பக்க விளம்பரமாகத் தர முயற்சிப்பேன்.////
///"நியாயத்தையெல்லாம் எதிர்பார்க்காதே ஸ்ரீராம்.. இது வியாபார உலகம்!"///
///"இன்னும் இன்னும் இன்னும் சிறுகதைகளை எதிர்பார்த்து ஆவலுடன்....."///
ஹா ஹா ஹா:))..
அனுக்கா சொல்றது சரிதான்...
பதிலளிநீக்கு///"யாருன்னு காட்டுங்க... அவங்களை எதிர்க்க உங்க கூட நானும் வர்றேன்.."
///
இது ஆரூ ஸ்ரீராமோ?:) இந்தச் சாட்டை வச்சாவது அனுக்காவுடன் ஃபிரெண்ட்டாகிடலாம் என நினைக்கிறார்போல:)).. அதுக்கெல்லாம் விடவே மாட்டோம்ம்:) மன்றம் வைக்க மட்டும்தேன் விடுவோம்:)... மற்றபடி ட்றுத் க்கு சொன்னதைப்போல:) ஸ்ரீராமின் அன்புச் சகோதரி அனுக்கா:) என போஸ்ட்டர் ஒட்டிடுவோம்ம்ம்:)) ஹா ஹா ஹா..
///ஸ்ரீராமுக்கு வயசு என்னாகுது - துளசி///
பதிலளிநீக்குஹா ஹா ஹா துளசி அண்ணனுக்கு திடீரென ஏன் இந்தச் சந்தேகம்:)) வயசைச் சாட்டி ஸ்ரீராமை அனுக்காவிடமிருந்து பிரிக்க ஜதீஈஈஈஈ நடக்குதுபோல:))... பின்ன அனுக்காவின் பூர்வீகம் துளசி அண்ணனின் இடமாச்சே:)) அதனால அவரோட கவலை அவருக்கு ஹா ஹா ஹா:))..
//ஹிஹிஹி அதை எல்லாம் நான் சொல்லமாட்டேம்பா...ஆனா அவரு டீன்ல இருக்காப்புலதான் தெரியுது..///
ஹா ஹா ஹா இது ஆரு கீதாவோ?:) ஹா ஹா ஹா
///அதிரா ஏஞ்சல் ஸ்ரீராம் புறப்பட்டுட்டார் மீசையை முறுக்கிட்டு கையில அறுவாளோட!!! ஹா ஹா ஹா ஹா//
சே...சே..சே.. நீங்க எந்தக்காலத்தில கீதா இருக்கிறீங்க?:).. ஸ்ரீராம் அஃப்டி [Audi] கார்ல புறப்படுகிறார்:) ஏனெண்டால் அவர்தான் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறாரெல்லோ:)..
//ஏகாந்தன் Aekaanthan ! said... பெண்களுக்கெதிரா வன்முறையா – பெண்களுக்கு எதிரேகூட ஒரு பயலும் நிக்கமாட்டான் நாட்டிலே .///
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது என்னமோ உண்மைதான்.. உலகம் இப்படித்தான் நகர்கிறது போல தெரியுது.. இருப்பினும் பல அப்பாவிப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்கள் அகப்பட்டு விடுகிறார்கள்:)..
///ஸ்ரீராம் அனுஷ்காவைப் பார்த்து கவிதை பிறந்ததா..இல்லை கவிதைக்கு அனுஷ்கா படமா ?!! ஹிஹிஹி...
அதிரா மீதிய கவனிச்சுப்பாங்க...மீ ரன்னிங்க்....///
ஹா ஹா ஹா நைட் கனவில டூயட் பாடும்போது வந்த கவிதையா இருக்கும் கீதா:)
///Avargal Unmaigal said...
பதிலளிநீக்குநான் நயன் தாரவை பற்றி ஏதாவது பேசினால் ஒடோடி வந்து அவங்க உங்க சகோதரிதானே என்று சொல்லும் ஏஞ்சல் அதிரா இங்கே ஸ்ரீராம் மட்டும் அடிக்கடி அனுஷ்கா பற்றி பேசும் போது சைலன்டாக இருப்பது ஏன்....?///
ட்றுத் நீங்க என்னதான் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினாலும்:) நயந்தாரா உங்களுக்கு அன்புத் தங்கைதான் என நயகரா எல்லாம் போஸ்டர் ஒட்டுவோம்:)..
வாங்க அதிரா.... மதுரையின் எண்ணத்தை செவ்வனே நிறைவேற்றி விட்டீர்கள்.
பதிலளிநீக்கு// ஸ்ரீராமின் அன்புச் சகோதரி அனுக்கா://
இரண்டு வியாழங்களாக தொப போனது! இந்த வாரம் அனுவையும் வைரவர்களையும் கண்டதும் பட்டாசு கொளுத்தியது போல ஒரு சுறுசுறு!
// Audi கார்ல புறப்படுகிறார் //
ஆடிப்போனேன்! நானா!
* பி-3-யில் 'இளந்தலைமுறையினரில்' என வாசிக்கவும்.
பதிலளிநீக்கு@ நெல்லைத்தமிழன்
பதிலளிநீக்கு///'பெண்களைச் சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும்-அனுஷ்கா' - ஸ்ரீராமுக்கு மட்டும் அந்தத் தலைப்பை CUT செய்து புதிய தலைப்பை வைக்க வாய்ப்பு இருந்தால், 'அனுஷ்காவைச் சீண்டுபவர்களின்' என்று தலைப்பை மாற்றியிருப்பார். ///
ஹா ஹா ஹா கோடைக் கானலில் இடீடிச்சா கடலூரில மழை கொட்டிய கதையாவெல்லோ இருக்குதூஊஊஉ ஹா ஹா ஹா என்னமாதிரி பொயிங்குது:))
///"அவளைக் கண்டதும்,
தனது வாழ்த்துக் கவிதையை (ஜொள்ளுக் கவிதையை)
புதுப்பித்துக் கொள்ள,
அகராதியைப் புரட்டிக்கொண்டிருக்கிறார்
ஒரு ரசிகர்"
இப்படி நான் 'தமன்னா'வுக்கு ஒரு கவிதை எழுதி படத்தோட ஸ்ரீராமுக்கு அனுப்பினால் பிரசுரம் செய்வாரா என்று இங்கு வந்திருக்கும் சகோதர சகோதரிகளைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்க.///
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனின் நித்திரை போச்சே:)).. நெல்லைத்தமிழன்:) , ஸ்ரீராம் தன் ரசிகைக்காக எப்பூடி எல்லாம் உழைக்கிறார்:)).. அது அவர் அனுக்காவை நினைச்சு எழுதியது:)).. நீங்க தமனாவை நினைச்சு ஒரு கவிதை எழுதி அனுப்புங்கோ அப்பூடின்னா புகை விட்டுக்கொண்டே:) இங்கின வெளியிடுவார்:) இல்ல வெளியிட வச்சிடுவோம்:)) ஹா ஹா ஹா:))..
கவிதை எழுதிப் பரிசு வாங்குவோரும் இருக்கிறார்கள்:)
அதைப் புதுப்பித்துப் பரிசு வாங்குவோரும் இருக்கிறார்கள்:).. ஹா ஹா ஹா:)..
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குவாங்க மதுரை.. நீங்கள் அனாவசியமாக தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனாலும் /////// அனுஷ்/////// மேல் பொறாமை கொண்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள்!!!///
ஹையோ ஹையோ ஹையோ இதை கேட்க இங்கின ஆருமே இல்லையா:)) அது செல்லப் பெயரோ அனுக்காவுக்கு:)).. மீ தேம்ஸ்கரையில் சூஊஊஊஊஉ சைட்டு பண்றேன்:).. அருகிலே ஒரு கடிதம்:) கடிதத்திலே சூசைட்டுக்கார காரணம். எங்கள் புளொக்கில் வெளியான வியய்சக்கிழமைப்:) பதிவு:)).. கீ ழே அதிராவின் கை எழுத்திருக்கும்:))... என்னை ஆரும் தடுக்காதீங்கோ:))
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குவாங்க நெல்லை... நீண்ட நாட்களுக்குப்பின் பாராட்டி இருக்கிறீர்கள். உங்கள் கொற்றம் வாழ்க.. குலம் வாழ்க...!///
ஹா ஹா ஹா முடியல்ல வைரவா என்னால முடியல்ல:)) நெல்லைத்தமிழன் பாராடியதாக இவரே கற்பனை பண்ணிட்டார்ர் ஹையோ அனுக்கா ஃபீவர் முத்திடுச்சூஊஊஊஊஊஊ:)).. எங்கே போயிட்டீங்க எல்லோரும்ம்ம்ம்ம்ம்:)).. இப்போ எங்கள் புளொக்கின் மூணாஆஆஆஆவது ஆசிரியரைக் காப்பாற்ற வேண்டிய நேரம்ம்ம்ம்:))
ஸ்ரீராம் - பழைய இடுகைகளை நான் பார்க்கிறேன் (என்ன பின்னூட்டம் போட்டிருக்கிறேன் என்று). பொதுவா இந்தமாதிரி நீங்கள் கலவையான செய்திகளைப் போடும்போது ரசித்துப்படிப்பேன் (சந்தடி சாக்குல அனுஷ்காவுக்கு ஆள் சேர்க்கப்பார்ப்பீங்க.).
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பப் பிடித்தது, பழைய குமுதம் கிடைத்தால் படிப்பது (எஸ் ஏ பி காலம். இப்போதைய அல்ல. இப்போ வருவது வெறும் எங்கும் கிடைக்கும் சினிமாச் செய்திகள்). எப்படி, 'பத்திரிகைகளிலிருந்து' பைன்ட் செய்த நாவல்களை விலைக்கு வாங்குவது என்று யோசிக்கிறேன். இல்லை, விகடன் போல, குமுதமும் 'பொக்கிஷம்' வெளியிட்டால் கண்டிப்பா நான் வாங்குவேன் (ஆனா விகடனை விட, குமுதம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி விலைக்கு அவங்க புத்தகங்களை விக்கறாங்க).
உங்களுடைய, self விமரிசனம்போல் நாலுகால்கள் படத்துடன் வெளியிட்டிருப்பதையும் நான் மிகவும் ரசித்தேன். திறமையானவர் நீங்கள்.
>>>>
பதிலளிநீக்குகவிதையே
கவிதையானது!...
<<<<
அப்படீ...ன்னு விடியக்காலை..ல 6.04 க்கு எழுதிப் போட்டேன்...
அத இப்போ தான் பிளாக்கர் வெளியிட்டு இருக்கு...
ம்.. என்னத்தைச் சொல்றது!..
/ஆனால் அடுத்தடுத்து பல "முதல் பக்கங்கள்" பார்க்க நேருமாயின் வாசகனாக எனது மனதில் எரிச்சல்தான் வரும்//
பதிலளிநீக்குஇது கொஞ்சம் ஓவர் ..இப்படியா வீடு மனை சேல்ஸ் எல்லாம் முதல் பக்கத்தில் நிரப்பி வைப்பாங்க .கண்டிப்பா எரிச்சல்தான் வரும் செய்தியை தெரிந்துகொள்ள பேப்பர் ஆவலா வாங்கினால் வீடு வாங்கு இதைவாங்குன்னு எரிச்சல்படுத்தக்கூடாது .ஹிஹி :) நம்மூர் ல இப்படின்னா இங்கே ட்ரெண்டிங் நியூஸ் முதல் பக்கத்தில் கொஞ்சம் போட்டு see page 4 for மோர் டீடெய்ல்ஸ் னு போடுவாங்க :)
இளவரசு சில படங்களில் பார்த்திருக்கிறேன் நல்ல திறமையான நடிகர்
ஒருவரது எழுத்துகளையும் பதிவுகளையும் பார்த்து/ படித்து ஒருவரை எடை போடலாமா என்ன இருந்தாலும் ஸ்ரீராமும் ஆண்பிள்ளைதானே நடிகைகளில் அவரைக் கவர்ந்தவர் யாராயிருந்தால் என்ன நம்மை யார் கவர்கிறார்கள் என்பதுதானே முக்கியம்
பதிலளிநீக்கு@அவர்கள் உண்மைகள் aka ட்ரூத் :) அதென்னமோ தெரில உங்களை நயனுக்கு அண்ணாவாவே மனசுக்கு தோணுது :) இருங்க மல்ட்டி கிட்ட கேட்டுட்டு சொல்றேன் ஸ்ரீராமை அனுஷ்காவுக்கு அண்ணன் ஆக்கலாமான்னு :)
பதிலளிநீக்குஹாஹா :) ஸ்ரீராம் தப்பிச்சார் ..மூணு தடவை மல்ட்டி கிட்ட கேட்டேன் விரல் மாத்தி கேட்டதால் வேணாம்ணே தொடுது
விரல் மாத்தி மாத்தி கேட்டாலும் அண்ணா ஆக்க வேணாம்னே தொடுறா மல்ட்டி :)
பதிலளிநீக்குஅப்புறம் இங்கே தமனா ரசிகர் தாராளமா எழுதுங்க பாவனா ரசிகர் கூட எழுதலாம் கலாய்க்க நானாக ரெடி
பதிலளிநீக்குஹா ஹா பைரவ நாலுகால் செல்லங்கள் சூப்பரா இருக்காங்க அதுவும் அனுஷ்காவுக்கு போட்டவங்க ரெண்டு பெரும் செம
பதிலளிநீக்குஇன்னிக்கு ஸ்ரீராம் செம ஜாலி மூடில் இருக்கார்னு நினைக்கிறேன் :)
ஆவ் !! அப்போவும் கிசுகிசுலாம் இருந்ததா !! இப்பெல்லாம் யூ டியூப் அந்த வேலையை செய்யுதே எப்படி அவ்ளோ பழைய புக்ஸை பத்திரமா வச்சிருக்கீங்க ஸ்ரீராம் !!
பதிலளிநீக்குகேட்டுவாங்கி போடும் பகுதிக்கு வாழ்த்துக்கள் :) தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்
'கேட்டு வாங்கிப் போடும் கதை'களின் முதல் கதையை முதல் பக்க விளம்பரம் மாதிரி தனித்து எடுப்பாகப் போட்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநடிகைகளில் லஷ்மிக்குப் பிறகு வந்தவர்களின் யார் பெயரையும் அவர்கள் நிழற்படங்களைப் பார்த்துச் சொல்லத் தெரியாது எனக்கு.
பதிலளிநீக்கு'கிசுகிசு' என்ற வார்த்தையே குமுதத் தயாரிப்பு தானே?
பதிலளிநீக்குகுமுதத்தின் வெற்றியின் ரகசியம் புரிகிறது.
பிலாக்குகளும் குமுதம் மாதிரியான உள்ளடக்கத்தை கொண்டிருந்தால் தான் அரக்க பரக்க வாசித்துத் தள்ளுகிறார்கள் என்பது ரொம்ப நாளைக்குப் பிறகு எனக்குத் தெரிந்த உண்மை.
அனுஷ்கா பேட்டியை படித்ததும் யோக்கியச்சி யோகாம்பாள் வர்றா செம்பை எடுத்து உள்ளே வையி பழமொழிதான் ஞாபகம் வந்தது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமுதல் பக்கமாவது கடைசி பக்கமாவது?.. எல்லாப் பக்கங்களிலும் விளம்பரத்திற்கு போக கிடைத்த இடுக்கில் தான் செய்திகள். அதுவும் அந்தந்த பத்திரிகைக்கான அரசியலை காசு கொடுத்து வாங்கும் வாசகர் மனசில் திணிக்கும் வேலையைச் செய்வது.
பதிலளிநீக்குவெள்ளைத் தாளை கறுப்பு மசியிட்டு போணியாக்கும் பத்திரிகைகள் என்று நா.பா. அழகாகச் சொல்லுவார்.
விளம்பரங்களை பக்கம் பக்கமாக போட்டு நிரப்பி 'அதிக பக்கங்கள்; அதே விலை' என்று விசேஷ நாட்களில் இவர்கள் செய்யும் தகிடுதத்தம் இருக்கிறதே....
பதிலளிநீக்கு//.. 2014 லேயே இந்தியா வெளிநாட்டில் ஆடும் கிரிக்கெட் பார்ப்பியா.... பார்ப்பியா.... பார்ப்பியா... என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறேன்!//
பதிலளிநீக்குஓ! நமது க்ரிக்கெட் டீம் உங்களையும் பாடாய்ப்படுத்தி வருகிறது போலிருக்கிறது. இவர்கள் தென்னாப்பிரிக்காவில் இப்போது ஆடும் ஆட்டம் என்னை சரியாக சிந்திக்க முடியாதபடி செய்துவருகிறது. க்ரிக்கெட் பற்றி பதிவு எழுதி நாளாகிறது. இரண்டு சிறுகதைகள் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குகின்றன. பின்னூட்டங்களுக்கு பதிலெழுதுவதற்கே ப்ரயத்தனம் தேவைப்படுகிறது.
இருந்தும், க்ரிக்கெட்டை விடுவதாயில்லை!
வாங்க அதிரா.. இந்த கலாட்டாவில் அந்தக் கவிதை பற்றி அபிப்ராயம் என்று ஒன்றும் தனியாக வரவில்லை பார்த்தீர்களா! அனுஷ் செய்த மாயம்!
பதிலளிநீக்குநெல்லை.. பழைய புத்தகக்கடைகளில் நீங்கள் எதிர்பார்ப்பது (பழைய குமுதம் கலெக்ஷன்) கட்டாயம் கிடைக்கும். மயிலையில் ஒரு இடத்தில ஒரு பேமஸ் பழைய புத்தகக்கடை உண்டு என்று நினைவு.
பதிலளிநீக்குநன்றி
வாங்க ஏஞ்சல்...
பதிலளிநீக்குஆமாம். செய்தியை அதுவும் நடுநிலையான செய்திகளை எதிர்பார்க்கும் வாசகனுக்கு இரண்டிலுமே ஏமாற்றம்தான்!
வாங்க ஜி எம் பி ஸார்... ஒருவரது எழுத்துகளையும், பதிவுகளையும் வைத்து அவரை எடை போடமுடியாது என்பது என் எண்ணம். என்னை வைத்தே சொல்கிறேன்! அனுஷ் பிடிக்கும்தான் என்றாலும் அவரை இங்கு பயன்படுத்திக்கொள்வது சும்மா கலாய்த்தலுக்கும், ஜாலிக்கும்தான்!
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்... மல்ட்டி பற்றி எங்கள் பிளாக்கில் வந்ததால் அதற்கு நன்றிக்கடன் போலும்! ஹா... ஹா.... ஹா...
பதிலளிநீக்குஆமாம் ஏஞ்சல்... பாவனா ரசிகர் யார்? ஸ்ரீராம் செம ஜாலி மூடெல்லாம் இல்லை. உண்மையில் தாங்க முடியாத சளி, இருமலினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். பேசவே முடியாமல் இருமல் வரும். இருமினால் இழுத்துப் பிடித்துக் கொண்டு விடும். அவஸ்தை!
பதிலளிநீக்குகிசுகிசு அப்போதான் ரொம்ப ஃபேமஸ்! என் அப்பா நிறைய பழைய புக் பைண்டிங் கலெக்ஷன் சேர்த்து வைச்சுட்டுப் போயிருக்கார்!
வாங்க ஜீவி ஸார்..
பதிலளிநீக்குமுதல் கதை பற்றி படம் வெளியிடும்போது நானும் நினைத்துக் கொண்டேன்! நீங்களும் சொல்கிறீர்களா என்று காத்திருந்தேன்!
//நடிகைகளில் லக்ஷ்மிக்குப் பிறகு...//
நல்லவேளை, டி ஆர் ராஜகுமாரிக்குப் பிறகு என்று சொல்லவில்லை!
வாங்க கில்லர்ஜி.. அப்பப்போ தவணை முறையில் வந்து அனுஷை திட்டி விட்டுப் போகிறீர்களே...!
//விளம்பரங்களை பக்கம் பக்கமாக போட்டு நிரப்பி 'அதிக பக்கங்கள்; அதே விலை' என்று விசேஷ நாட்களில் இவர்கள் செய்யும் தகிடுதத்தம் இருக்கிறதே....//
இது இன்றும் இருக்கிறது ஜீவி ஸார்... குறிப்பாக விகடன். நாம் கேட்டோமா? அவர்களாக செய்யும் தகிடுதத்தம்!
வாங்க ஏகாந்தன் ஸார்.. கிரிக்கெட்... பார்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவஸ்தை. இப்ப கூடப் பாருங்க.. பார்திவ் ஒரு Four அடிச்சவன், உணர்ச்சி வசப்பட்டு அடுத்த பந்தையும் அப்படி அடித்திருக்க வேண்டாம்! எட்டரைக்கு இன்றைய ஆட்டம் முடிந்துவிடும் என்று பார்த்தால் ஒன்பது மணிவரை ஆட்டம் இருக்காம்.
பதிலளிநீக்குஅடடா டேக் கேர் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குசரியாத்தான் சொன்னீங்க
பதிலளிநீக்கு