திங்கள், 8 ஜனவரி, 2018

'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங்கன் ரெஸிப்பி






பாகற்காய் உப்பு சார்  (என்ன ஸார்?!!  உப்பு சார்!)


ஹாய் ஹாய்! நண்பர்களே! ரொம்ப நாளாச்சு இல்லையா நம்ம எபி சிக்கன்…ஓ காட் டங்க் ஸ்லிப் ஆகிப் போச்சு எபி ஆசிரியர்கள் மன்னிக்கவும்!!! எபி கிச்சன் திங்க தொடர் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்ம தொடருக்கு நாம சந்திக்க தாமதமாகிடுச்சு. அது சரி புயலையும், அமெரிக்க கிழக்குச் சீமையையும் காணலையே!! ஆப்ஸென்டோ?

நான் ஃபர்ஸ்டூனு தர்க்கம் பண்ணிக் கொண்டே ரெண்டு பேரும் வர….. ஏற்கனவே மத்தவங்க எல்லாம் இங்க ஆஜர்!!! உள்ள வாங்க சத்தம் போடாம என்று உட்கார வைத்தாயிற்று. ஸ்ப்பாஆஅ. புயலுக்கு, ஏற்கனவே ஏஞ்சல் இருப்பதைப் பார்த்து கர்ர்ர்ர்ர். ஓகே கைஸ் ஏற்கனவே லேட்டு ஸோ நேரா க்ளாஸுக்குப் போயிடுவோம்

இன்று என் மாமியாரின் ரெசிப்பி “பாகற்காய் உப்பு சார்” செய்முறை. உப்புசார் என்றதும் ஊறுகாயோ என்று நினைத்திட வேண்டாம். இதுவும் ஒரு குழம்பு வகையே. ஆனால் ஏன் இதை உப்பு சார் என்று சொல்கிறீர்கள் என்று என் மாமியாரிடம் கேட்க அவரும், “அப்படித்தான் சொல்றது” என்று சொல்லிவிட்டார். ஸோ கப்சிப்!

சரி செய்முறைக்குப் போகும் முன் பாகற்காய் பற்றிய மருத்துவ குணங்களை நம் எபி கிச்சனில் கேள்விகளுக்குப் பதிலாகச் சொல்லப் போவது உணவுத் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அன்பான மனிதர். அவர் சொல்லுவது போல நான் சொல்லுவதை விட அவரே சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்ட போது உடன் மகிழ்வுடன் இயைந்தார். நம் எல்லோருக்கும் நன்றாக அறிமுகமான, நம்மைக் கட்டிப் போடும் அழகு தமிழில் ஆன்மீகம் மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளைப் பல இலக்கியப் பாடல்களுடன் தரும் நம் அன்பு சகோதரர் திரு துரை செல்வராஜு அவர்கள். அருமையான கதைகளும், கவிதைகளும் எழுதுவார். நல் வாக்குகளும், அன்புமே உருவான நம் அன்பு சகோதரரை நம் எபி கிச்சனுக்கு திங்க தொடருக்கு வருக வருக என வரவேற்போம் நண்பர்களே!


அழைப்பு மணியின் சத்தம் ஒலித்ததுஆகாஅவர்களாகத் தான் இருக்கும்ஒரே சமயத்தில் பல குரல்கள்..ஒன்று மட்டும் பரிச்சயம்.. அது தேவகோட்டை ஜி...தவிரவும் தேவகோட்டையாருடன் அபுதாபியில்பழக்கம்...மற்றவை மகளிர் மாநாடு போல ஒரே கூச்சல்எனசந்தோஷக் குரல்கள் முன்னே செல்ல வாசற்கதவு திறக்கப்பட்டது...

அடுத்த சில விநாடிகளில் எ பி யின் சமையலறை கூடத்தில்...

“நான் தான் ஃபர்ஸ்ட்டூடூடூடூ..!.”. - புயலரசி.. இளவரசி!.. - எனபோட்டிக்குப் போட்டி...சில விநாடிகளில் கீரை வடையுடன் (!?) காஃபி!..”என்ன பார்க்கிறீங்கள்.. சாப்பிடுங்கோ!.. கீரை வடை நான்.. நானேதான் செய்தனான்...”

“அதுதானே யோசனையா இருக்கு!?.” எல்லாரும் சிரித்தார்கள்நல்லவேளை வெகுதொலைவில் தேம்ஸ் இருந்ததால் தப்பித்ததுமகிழ்ச்சியுடன் கீரைவடையைத் தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் -

“அண்ணன்.. நீங்கள் சொல்லுங்கோ.. பாவக்காய் மேலுக்கு நல்லம் தானே!.”

“ஆமாம்.. நல்லது தான்!.. இல்லை என்று யார் சொன்னது!..
“இவையள்.. இவையள் தான் சொல்லுறாங்கோ!...”

“பாகற்காய் நல்லது தான்.. ஆனாலும் அதிகம் பாவிக்கப்படாது!..”

“அது எப்படி..ன்னு சொல்லுங்க ஜி!.”.- தேவகோட்டையார் மீசைக்குள்ளிருந்து பேசினார்...

“பாகற்காயை ஏன் ராத்திரியில் சாப்பிடக் கூடாது?”. - கீதா..

பொதுவாகப் புளிப்புகசப்பு சுவைகளை இரவில் தவிர்க்கச் சொல்வது பாரம்பர்ய வைத்தியம்... மென்மையான இனிப்பு தவிர மற்ற சுவைகள் இரவு நேரத்துக்கு ஆகாதுஅந்தச் சுவைகள் இனிய இல்லறத்திற்கு எதிர்விளைவுகளைக் கொடுக்கும்வெற்றிலையின் காரம்.. பாக்கின் துவர்ப்பு நல்லதுஅதனால தான் இரவில் தாம்பூலம் தரிப்பதுஇரவு நேரத்துக்கு எளிமையான உணவு.. ஒரு குவளை பால்பனங்கற்கண்டு போட்டுக்காய்ச்சியது.. அது போதும்..ன்னு சொல்றவங்களும் இருக்காங்க.”

“ஓஹோ.. இப்படியெல்லாம் இருக்குதா!.. நமக்குத் தெரியாமப் போச்சே!.”

“அதெல்லாம் இஸ்கோலுக்குப் போயிருந்தாத் தெரியும்கர்ர்ர்ர்ர்ர்ர்”

மற்றபடிக்கு சின்ன வயதிலிருந்தே பாகற்காய் கீரை வகைகளுக்குப் பழக்கி விட்டால் பின்னாளில் பல குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம்எல்லாரும் சொல்வது என்ன?... என் பிள்ளை பாகற்காய் சாப்பிட மாட்டான்.  என் மகள் கீரை சாப்பிட மாட்டாள்... என்னவோ இவங்க எல்லாவற்றையும் சாப்பிடுவது மாதிரி!. பிஸ்கட் சாக்லேட் விளம்பரத்துக்கு வர்ற ஆர்வம் - இயற்கை உணவுகள்..ல இல்லை..ங்கறது தான்.. வேதனை...”

“உண்மை தான் ஜி!.”

“பிஸ்கட் சாக்லேட்  அதீத இனிப்பு வகை இதுங்களா.. வயிற்றுக்குக் கேடு உண்டாகுதா இல்லையா!... அதை சரி செய்ய மருந்து..ங்கற பேர்ல.. வேறொரு ரசாயனம்..  நூற்றுக் கணக்கில செலவு வேறஆனால் - பாகல்இலைகளைக் கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் ஒரு குவளை குடித்தால் - வயிற்றில் எந்தப் பிரச்னையும் இருக்காதுமலச்சிக்கல் வராது.. பூச்சி புழு தொந்தரவுகள் இல்லாமல் போகும்... வேப்ப இலைக்குநிகரானது பாகல் இலை.”

“ஆச்சர்யமா இருக்கு!..”

“வாரம் ஒருநாள் பாகற்காயை சாப்பாட்டுல சேர்த்துக் கொள்வது ரொம்ப நல்லதுஅதிக காரம் அதிக புளிப்பு இல்லாம செய்யணும்..  பாகற்காய் சமையல்..ல கொஞ்சம் வெல்லம் போடுறது வழக்கமா இருக்கு,ஊடகங்கள்..லயும் அப்படிச் சொல்றாங்க..”

“ஏங்!.... அது தப்பா?..”

“அதற்குப் பாகற்காயை சமைக்காமலே இருக்கலாம்ஆங்கில மருத்துவம் பரவலாக ஆவதற்கு முன்னால பாகல் இலையில சாறெடுத்து கண்ணாடி விரியன் கட்டு விரியன் இந்த மாதிரி விஷங்களுக்கு விஷ முறிவுசெஞ்சிருக்காங்க.”

“ஓ!..”

“ஆனால் அதெல்லாம் முறையான சித்த வைத்தியர்கள் தான் செய்யணும்சமீப காலமா எல்லாரும் பாகற்காயை விரும்புறதுக்கு ஒரே காரணம், எல்லாருக்கும் சர்க்கரை பிரச்னை வந்தது தான்அலட்சியத்தினாலநமக்குநாமே வரவழைத்துக் கொள்வது தான் இதுரெண்டு வருஷத்துக்கு முன்னால நானும் சர்க்கரையினா.. பாதிக்கப்பட்டேன்இன்றைக்கு முற்றும் முழுவதுமா நான் நன்றாக இருப்பதற்குக் காரணம் இயற்கை உணவுமுறைதான்ஆங்கில மருத்துவம் எப்படியோ எனக்குத் தெரியாதுஆவாரம் பூநாவற்பழம்வெந்தயம் முக்கியமா பாகற்காய்.. இதெல்லாம் தான் எனக்குக் கை கொடுத்த அற்புதங்கள்பாகற்காய் இரத்தத்திலசர்க்கரையோட அளவைக் குறைக்கிறது..ங்கிறது முற்றிலும் உண்மை.  ஆனாலும் முறையான சித்த மருத்துவர்களோட மேற்பார்வை அவசியம்.  அந்தக் காலத்தில் பாகற்காய் எல்லாம் வீட்டு வேலியில் பரவிக் கிடக்கும்.இன்றைக்கு வீடெல்லாம் புறாக் கூண்டு போல ஆனதும் தோட்டம் எல்லாம் காணாமல் போய்விட்டதுஎதையும் வருமுன் காப்பது மிக மிக நல்லது... அதற்காகப் பாகற்காயை தினமும் சாப்பிடுவதும் ஆபத்து.


கேளப்பா நீயுந்தான் செவிகளையே தீட்டி
தீரப்பா நோயைத்தான் பாகலையே காட்டி
நாளப்பா நல்லதுதான் தீயினிலே வாட்டி
ஓரப்பா உண்பதுதான் உணவுக்குள் ஊட்டி..” அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“நல்லா சொன்னீங்க ஜீஅதுவும் நீங்களே எழுதிய பாடலோடு”.  - தேவகோட்டையார் கை தட்டினார்.

“ஆகா!.. அருமை அருமை அப்போ இன்னிக்கு மதிய விருந்து பாகற்காய் குழம்போடுதான்!!...” மாஸ்டர் செஃப் மரைன் லிண்டாவிடம் உற்சாகம் மிய்யா..வ்வ்.. என்றது.

“ம்ஹூம்... வீட்டுக்கு முதன்முதலா வந்திருப்பவர்களுக்கு பாகற்காய் பரிமாறுவது தமிழர் பண்பாடு இல்லை...”

“அப்படி..ன்னா.. நான் புதுசா ஸ்வீட் 66 செய்றேன்...”

“இல்லை.. இல்லை.. நான் தான் செய்வன்...”   கர்ர்ர்ர்ர்ர்.. கர்ர்ர்ர்ர்ர்!...- அங்கே சந்தோஷம் தழைத்து விளையாட மதிய உணவு களைகட்டியது..

பாகற்காய் – 1 பெரியது/நீளமாக

புளி – எலுமிச்சை அளவு ஊற வைக்கவும்

உப்பு – தேவையான அளவு

அரைக்க/பொடிக்க

கொத்தமல்லி விரை – 2 டீஸ்பூன் (டீஸ்பூன் அளவு என்பது நான் எப்போதும் உபயோகிப்பது  அளவு ஸ்பூன் படத்தில் உள்ளது

மிளகு – 1 டீஸ்பூன்

ஜீரகம் _ 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

எள்ளு – 1 டீஸ்பூன்

பச்சரிசி – ½ ஸ்பூன்

(இவை அனைத்தும் ஸ்பூன் விளிம்பின் மேலேயும் இருக்குமாறு அளந்து கொள்ளவும்)

கொப்பரை/வறுத்த தேங்காய்/வெயிலில் காய வைத்த ட்ரை தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் பூ வறுத்தது. ஸ்பூன் விளிம்பிற்குள் இருப்பதாக..

மிளகாய் வற்றல் – 3

பாகற்காயைக் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல்.




வாணலியில் (நான் இக்குழம்பை மண் சட்டியில் செய்வது வழக்கம்) நல்லெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயைப் போட்டு நன்றாகக் கலர் மாறும் வரை வதக்க வேண்டும். (படத்தில் உள்ளது போல்). கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். காய் முக்கால் பதம் வெந்திருக்கும் போது தேவையான உப்பு போட்டு, புளி முழுவதும் நன்றாகக் கரையும் வரை கரைத்து வாணலியில் விடவும். மாமியார் இதற்கு மஞ்சள் பொடி சேர்க்க மாட்டார். ஆனால் நான் ஒரு சிட்டிகை சேர்ப்பேன்.




அது கொதிக்கட்டும். அதற்குள் அரைக்க/பொடிக்கக் கொடுத்திருப்பதில் கொப்பரையைத் தனியாக வறுத்துக் கொள்ளவும். எண்ணை இல்லாமல் உ பருப்பு வெந்தயம் சேர்த்து வறுத்து லைட்டாக வறுபட்டு வரும் போது மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து எல்லாம் சிவந்து வரும் சமயம் எள்ளு பச்சரிசி சேர்த்து வறுத்து, எல்லாம் ஆற வைத்துப் பொடித்தோ இல்லை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தோ கொள்ளவும். 





பாகற்காய் வெந்ததும் அதில் பொடித்ததைப் போடவும். அரைத்துச் சேர்த்தால் கட்டித் தட்டிடாமல் கிளறிக் கொண்டே சேர்க்கவும். சிம்மில் வைத்துக் கொதிக்க விடவும். கொஞ்சம் நல்லெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கறிவேப்பிலையும் சேர்க்கவும். கொதிக்கும் சமயம் வெல்லம் கொஞ்சம் சேர்க்கலாம். 




நான் சேர்ப்பதுண்டு. (ஸ்ரீராம் திதிக்காது. இருந்தாலும் கைஸ் வெல்லம் சேர்க்காம கொஞ்சம் தனியா எடுத்துக் கொதிக்க வைத்துடுவோம்! திங்க வின் டைரக்டருக்கும், சிறப்பு விருந்தினருக்கும்!!!) கொதித்து வட இந்திய க்ரேவி போல் வந்ததும் ஆஃப் செய்யவும். ஆற ஆற இன்னும் கொஞ்சம் கெட்டியாகும்.





இக்குழம்பு செய்தவுடன் சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும். கொஞ்சம் எண்ணை இன்னும் சேர்த்தால் குளிர்காலம் என்றால் 4,5 நாள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம் ஒரு வாரம் வரை கூட நன்றாக இருக்கும். ஆனால் கைஸ் ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் என்று பல ஆரோக்கியக் குரல்கள் கேட்கிறது. சரி இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது!










அழகாய்ப் பேசி எ பி கிச்சன் தொடரைச் சிறப்பித்த சகோதரர் துரை செல்வராஜு அவர்களுக்கு எங்கள் அனைவரது நன்றிகளும்! திங்க டைரக்டர் ஸ்ரீராமுக்கும் மிக்க நன்றி! செய்முறையைச் செய்து படங்கள் எடுத்து உதவிய நெல்லைத் தமிழனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல!










105 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இரண்டு கீதாக்கள் காத்திருந்தும் நீங்கள் முதலில்!

    பதிலளிநீக்கு
  2. துரைசெல்வராஜு சகோ அண்ட் ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்!!

    ஸ்ரீராம் இன்றைய பதிவில் நாம துரை சகோவுக்கு பெரிய பாராட்டு அண்ட் பூமாலை, பொக்கே கொடுக்கணும்...பாருங்க எவ்வளவு அருமையான உரை...கிச்சனுக்குள்ள நுழைவதிலிருந்து...பாகற்காய் பத்தி சொல்லுவது அவரது உரை...அவரே அவரது மொழியில் எழுதிக் கொடுத்தது..

    அந்தப் பாடலைப் பாருங்க வாவ்!! எப்படி அழகா இட்டுக்க்ட்டி எழுதறார் இல்லியய

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பாகற்காய் புராணம் ஆனாலும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் ஸ்ரீராம் நான் காதிருந்தேன் அதுவும் நேத்தைய பதிவுக்கு கமென்ட் போட்டு அப்புறமும் நெரம் இருந்தது...ஆனாலும் நெட் கொஞ்சம் ஸ்லோ

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஓ..அதற்குள் பாராட்டுரையா!...

    அன்பின் நன்றி என்றென்றும்..

    பதிலளிநீக்கு
  6. விதி செய்த சதியோ எ.பி? மடிக்கணினி செய்த சதியோ எ.பி? முதல் முதலாக நான் வரவே கூடாதென மடிக்கணினி செய்த சதியோ எ.பி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  7. துரைசெல்வராஜு சகோ மிக்க மிக்க நன்றி!!! உங்கள் மொழியே அருமைதான்!!! ஸ்ரீராம் நம்ம எபி சார்பில் துசெரா வுக்கு ஒரு விழா எடுத்துருவோம்!! என்ன சொல்றீங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் கீதா அக்கா,.

    பதிலளிநீக்கு
  10. கீதாக்கா மத்தவங்க பிந்தினா மட்டும் தான் நாம முந்த முடியும் இங்கு நம் இணையம் அப்படி அக்கா...நாம் எடுத்திருக்கும் இணையம்...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆமாம் கீதா... உரையாடல் வடிவில் நீங்கள் செய்திருப்பதும் புதுமை. அதில் துரை செல்வராஜூ சாரை இணைத்து அவர் ஆற்றி இருக்கும் உரையாடல் உபயோகமானது. துரை செல்வராஜுவின் பன்முகத் திறமை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. நெல்லைக்கும் மிக்க மிக்க நன்றி...என் கேமரா சரியா இல்லைனதும் அவர் தான் செஞ்சு ஃபோட்டோ அனுப்பறேன்னு சொல்லிட நான் ரெசிப்பி அவருக்கு அனுப்ப அவர் பாருங்க எப்படி அழகா செஞ்சு ஃபோட்டோ எடுத்து அனுப்பிருக்கார் பாருங்க...சூப்பர்...நெல்லை உங்களுக்கும் ஒரு பொக்கே...ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. யெஸ் ஸ்ரீராம் துரை செல்வராஜு சகோ பன்முகத் திறமை மிக்கவர்...இன்னும் சொல்லப் போனால் நம்ம கோடாரி ஜி இருக்காரே அவர் சொன்னது...துரை சகோ ரொம்பத் தன்னடக்கம் ஆனா அவர்கிட்ட பேசினா அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைப்பார் என்று....நிறைகுடம் தளும்பாது!!!!

    துரைசெல்வராஜு சகோ எப்படி உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியும்?!! இவ்வளவு அழகா எழுதிக் கொடுத்திருக்கீங்களே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம் முதல் நீல கமென்ட் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அப்புறம் வரேன்..கிச்சன் கடமை அழைக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அட்டகாசம், இந்தக் குழம்பை என் மாமியார் அரைப்புளிக்குழம்பு என்பார்கள். செய்து வைத்துக் கொண்டு ஊறுகாய் போலவும் மோர் சாதம் வரை தொட்டுப்போம்.

    தில்லையகத்து கீதா, வித்தியாசமாக சிந்தித்து எழுதுகிறீர்கள். நிஜம்மாவே திரு துரை அவர்கள் சொன்னாரா? அல்லது உங்கள் கற்பனையா? எதுவாக இருந்தாலும் அருமை! பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. கீதாக்காவுக்கும் காலை வணக்கம்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் குவைத் மன்னரும், நானும் பேசிக்கொண்டதை எங்களுக்கு தெரியாமல் ஒலிப்பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

    அன்பின் ஜி பாகற்காய் மட்டுமல்ல! எல்லா உணவு வகைகளுக்கான மருத்துவ குணமும் அறிந்தவர் என்பது அவருடன் பேசிப்பார்த்த என்னைப் போன்றவர்கள் அறிந்ததே...

    பதிவை இரசித்தேன் நன்றி

    சிறு வயது முதலே வீட்டில் பாகற்காய் எனக்காக அடிக்கடி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  19. நல்ல பகிர்வு. உரையாடல் மூலம் பாகற்காயின் பெருமை சொல்லி இருப்பது சிறப்பு.

    அது சரி நடுவில் “படத்தில் இருப்பது போல பாகற்காயை” என எழுதி இருக்கிறது... படம் எங்கே? காக்கா தூக்கிக் கொண்டு போனதா....

    பாகற்காய் - என் மகளுக்கு ரொம்பவும் பிடித்தது!

    பதிலளிநீக்கு
  20. கீதா கேப்டன்சியில் எங்கள் ப்ளாகின் சமையல் டீம் விளையாடிய மேட்ச் நன்றாக இருக்கிறது. பங்கெடுத்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பாகல்..பாகல்..பாகல்
    பாகல் இல்லையேல்
    பாகல் இல்லையேல்
    சாதல்..சாதல்..சாதல் !

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி..எபிகிச்சன் எபிசோட் டைரக்டர்!!! எனக்கும் வாய்ப்பு கொடுத்து இங்கு வெளியிடுவதற்கு...அப்புறம் பதியைப் பற்றிய உங்க கமென்டுக்கும்...மிக்க நன்றி..

    கீதா

    பதிலளிநீக்கு
  22. சமையல் குறிப்போடு மருத்துவ குறிப்புமா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  23. அட்டகாசம், இந்தக் குழம்பை என் மாமியார் அரைப்புளிக்குழம்பு என்பார்கள். செய்து வைத்துக் கொண்டு ஊறுகாய் போலவும் மோர் சாதம் வரை தொட்டுப்போம்.

    தில்லையகத்து கீதா, வித்தியாசமாக சிந்தித்து எழுதுகிறீர்கள். நிஜம்மாவே திரு துரை அவர்கள் சொன்னாரா? அல்லது உங்கள் கற்பனையா? எதுவாக இருந்தாலும் அருமை! பின்னர் வருகிறேன்.//

    கீதாக்கா அட!! ஒருவேளை எல்லா மாமியார்களும் செய்வாங்களோ?!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..

    அக்கா இடையில் வரும் பாகற்காய் குறித்துச் சொல்லுவது முழுவதும் அந்தப் பாடலுடன் சேர்த்து துரைசெல்வராஜு சகோ எழுதியதுதான்...அந்தப் பாடல் அவரே எழுதியது...ஸோ பாராட்டுகள் அவரைச் சேரும்...அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது...மிக்க நன்றி கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கில்லர்ஜி ஹா ஹா ஹா ஹா...காற்று என் காதோடு வந்து சொல்லிச் சென்றது ஜி!!

    னீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருந்து துரை சகோவுக்கு...மிக்க நன்றி கில்லர்ஜி...கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  25. "உப்புச்சார்", 'உப்பு சார்' என்றாகிவிட்டது.

    ஒருத்தர் சமைச்சாலே அது நல்லா இருக்குமா என்பது சாப்பிட்டுப் பார்க்கும்வரை கேள்விக்குறிதான். இதுல மூணுபேர் சேர்ந்து செஞ்ச 'திங்கக் கிழமை பதிவு' எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  26. துரை செல்வராஜு சார் - பாகற்காய் மிக நல்லது. நன்றாக எழுதியிருக்கீங்க. ஒருவேளை நீங்க, 'நாடி ஜோதிடம்' தயாரிக்கிற Groupஆ? உங்கள், 'கேளப்பா நீயும்தான்' அதை நினைவுபடுத்துகிறது. நல்ல introduction. பாகல் சாப்பிட்டால் பிரஷர் குறையும். ஆனால் வாரம் ஒரு முறைதான் எடுத்துக்கொள்ளலாம். எனக்கு பாகல் சாம்பார் மிகவும் பிடிக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது செய்வேன். நல்லா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  27. சார்.. சார்.. அப்பு சார்!..

    என்னப்பா!..

    எங்கள் பிளாக்கில் உப்பு சார்!..

    உப்பு சாரா?.. கரிக்குமே!..

    நல்லது சொன்னா கேளுங்க..

    சரி..

    கொஞ்சம் சுவைத்துப் பாருங்க!..

    இதோ வர்றேன்!..

    பதிலளிநீக்கு
  28. கீதா ரங்கன் - சென்றமுறை உங்கள் தி.பதிவை (தென் திருப்பேரை கூட்டு) முழுவதும் படித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டபின்புதான் அதனைச் செய்ய முடிந்தது என்று என் ஹஸ்பண்ட் சொன்னா (செய்முறை தனித் தனியாகக் கொடுக்காததால்). இந்தமுறை செய்முறை மிக நல்லா கொடுத்திருக்கீங்க.

    நான் இதனைச் செய்துபார்க்க ரொம்ப நாளாகிவிட்டது. (எனக்கு புதிதா ஒன்றை முயற்சிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகும். பிடிக்குமா, பிடிக்காதா போன்று கேட்டுக்கொள்வேன்). இந்தத் தடவை எல்லோரும் இங்க இருந்தபோது, ஒரு நாள் அதிகாலை எழுந்து, இதனையும் பைனாப்பிள் கேசரியையும் செய்தேன்.

    இந்த உப்புச்சார் என்ற வார்த்தையையே, திருமணம் ஆனபின்பு என் மனைவியிடம்தான் கேட்டிருக்கிறேன் (அவள் முதல் முதலில் செய்த குழம்பு, உப்புச்சார்). எங்க அம்மா, 'வரத்து அரைத்த குழம்பு' (வரத்தரைச்ச குழம்பு) என்று ஒன்று செய்வார்கள். அதுபோலவும் இல்லாமல் கிட்டத்தட்ட அதுமாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. நான் இதனை அடிக்கடி செய்யச் சொல்லமாட்டேன்.

    இங்கு வாங்கியிருந்த புது பாகற்காய் இருந்தது. இந்த உப்புச்சார் ரொம்ப நல்லா வந்தது. இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜலம் சேர்க்கவேண்டும். கொஞ்சம் குழம்புபோல் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும். நான் அப்படித்தான் செய்தேன். என் பெண்ணுக்கு பாகற்காய் பிடிக்காது (குழம்பா சாப்பிட, மோர் சாதத்துக்கு தொட்டுக்குவா). எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. இதனையே வாழைக்காய் கொண்டும் செய்யலாம். நல்ல செய்முறை.

    பதிலளிநீக்கு
  29. துரை செல்வராஜு சார் - உங்கள் விளக்கத்தில் எழுத்துப் பிழை இருக்கு. அவங்க எழுதும்போது, 'கீரை வடை' என்று எழுதமாட்டாங்க. நம்ம கழுத்தில் கீறுவதுபோல், 'கீறை வடை' என்று எழுதுவார்கள். :-)

    பதிலளிநீக்கு
  30. வெங்கட்ஜி கருத்திற்கு மிக்க நன்றி!!!

    படத்தில் இருப்பது போல பாகற்காயை...// படம் இருகே ஜி....முதல் மூன்று படங்களில் மூன்றாவது....கட் பண்ணியய்து....இந்த ரெசிப்பி எழுதும் போது செய்முறையை எடுக்க என் கேமரா பழுதாகிட நெல்லை தான் ஃபோட்டோ அனுப்பறேன்னு சொல்லி ரெசிப்பியை செய்து ஃபோட்டோ அனுப்பிஆர்....எல்லாம் ரெசிப்பியில் உள்ளது போல அனுப்பிருக்கார்...அவருக்குத்தான் நன்றி சொல்லணும்...

    ஹை ரோஷினிக்குப் பிடிக்குமா ஆதிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க இது நல்லாருக்கும்...

    மிக்க நன்றி வெங்கட்ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஏகாந்தன் சகோ ஹா ஹா ஹா ஹா கிரிக்கெட் ஸீசன்!!!! மேச் பார்க்கும் எஃபெக்ட் இங்கு ஹா ஹா ஹா..

    உங்க கவிதை "பாகல் ஹோ" ஹா ஹா ஹாஹா..ஸாரி முதல்ல.பாகல்..பாகல் பாகல் ந உடனே ஹிந்தி மீங்க் போய்ட்டேன்....ஹிஹிஹி

    மிக்க நன்றி ஏகாந்தன் சகோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு...
    இந்தப் பதிவில் தங்களுடைய பணி மகத்தானது.. சிறப்பானது..

    @ நெல்லைத் தமிழன் said...

    >>> நீங்க, 'நாடி ஜோதிடம்' தயாரிக்கிற (!) Groupஆ? <<<

    நாடி ஜோதிட வகையறாக்கள் எல்லாம் இல்லை..
    அடிக்கடி சித்தர் பாடல்களைப் படிப்பது வழக்கம்..
    அதனால் அந்த சாயலில் எழுதினேன்..

    >>> எனக்கு பாகல் சாம்பார் மிகவும் பிடிக்கும்..<<<

    அப்போதெல்லாம் கொல்லைத் தோட்டத்தில் மிதி பாகல் படர விட்டிருப்போம்.. மூன்று வாரத்தில் மஞ்சள் பூக்களுடன் பிஞ்சு விட்டு காய்க்க ஆரம்பித்து விடும் .. கட்டை விரல் அளவில் சின்ன சின்ன சங்குகளைப் போல அழகாக இருக்கும்..

    அவற்றைப் போட்டு என் அம்மா சாம்பார் செய்வார்கள்.. அந்த வாசம் இன்னும் என்னுடன் வாசம் செய்கின்றது..

    >>> 'கீறை வடை' என்று எழுதுவார்கள். :-)..<<<

    அந்தத் துல்லியம் எனக்குத் தெரியவில்லை..

    இப்படியொரு அழகான பதிவை உருவாக்கிய அன்பின் கீதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  33. நெல்லை உப்புச்சார் நுதான் சொல்லிருக்கணும்....ஆனா எங்க மாம்கியார் உப்பு சார் உப்பு சார் நு சொல்லிச் சொல்லி அப்படியெ உச்சரித்துப் பழகிடுச்சு...எழுத்தில்ரும் வந்திருச்சு....எழுதும் போது கூடக் கவனிக்கலை நான்....கணினி மீண்டும் ஸ்லோ ஆகிடுச்சு.படுத்துது.....திரும்ப வரேன்.....

    கீதா

    பதிலளிநீக்கு

  34. //..உங்க கவிதை "பாகல் ஹோ" ஹா ஹா ..//

    நீங்கள் ’பாகல் ஹோ..ஹோ !’ என்று எழுதியதைப்படித்ததும், 1981-ல் வந்த அர்மான் ஹிந்தி படத்தில் உஷா உத்துப் பாடிய ‘ரம்பா ஹோ.. ஹோ..ஹோ..’ ஞாபகத்தில் இடறியது. ரம்பாவைக் கொஞ்சம் அழுத்தி ‘ர்ர்ரம்பா ஹோ..!’ என்று பாடுவது உஷாவின் அதிரடி ஸ்டைல் ! அவர் ஒரு அனாயாச பாடகி. One and only Usha Uthup ! உங்கள் உப்புச்சார் உஷா உத்துப்பிடம் கொண்டுவந்துவிட்டிருக்கிறது..

    பாகலில் பாகலாவது ஒரு பக்கம்.. பாட்டில் பாகலாகிக் கிடப்பது மறுபக்கம் !

    பதிலளிநீக்கு
  35. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் லேட்டிலயும் மீதேன்ன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ.... இந்த திங்கள் செவ்வாயை சனி நாயிறுக்கு:) மாத்தினால் நாங்களும் ஜாமம் ஜாமமாக் கலக்குவோமெல்லோ:)...

    கீதாஆஆஆஆ ரெசிப்பியோஓஒ:)... வாவ்வ்வ்வ்வ் அதுதான் கீசாக்கா பெயரை மாத்திட்டாவோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)...

    பதிலளிநீக்கு
  36. நெல்லை மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு...

    நீங்க சொல்ற வரத்தரைச்ச குழம்பும் என் பாட்டி செய்வதும் ஒன்றா என்று தெரியவில்லை..ஆனால் திங்க பதிவுக்கு வருது...

    புதுசா செய்யறதுக்கு யோசனையா ஆ!! அப்ப பெண்கள் எங்களை என்ன சொல்லறீங்க..நாங்க பிறந்த் வீட்டுல சாப்பிட்டது ஒன்று புகுந்த வீட்டுல டோட்டலி வித்தியாசமான உணவு முறை..அதையும் நாங்க செய்யறோமே...புதுசா கத்துக்கிட்டு..ஹா ஹா ஹா ஹா

    நெல்லை முன்ன எல்லாம் கேசரினுமட்டும்தான் செய்வாங்க...ஆனா அப்புறம் பைனாப்பிள் கேசரினு புதுசா வரலையா இப்ப நீங்க கூடச் செய்திருக்கீங்களே...அப்படித்தானே...!!!

    நெல்லை நான் நிறைய தப்புத் தப்பா செஞ்சே நிறைய புது ரெசிப்பிஸ் வந்துச்சு ஹா ஹா ஹா ஹா...சும்மா ட்ரையல் அண்ட் எரர் தான்...பழைய கதை இதெல்லாம். இப்பவும் புதுசா ஏதேனும் தெரிஞ்சா செய்துடுவேன்...

    நல்லாருந்த்ச்சுனும் உங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சதுனு சொன்னதுக்கு மிக்க நன்றி நெல்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  37. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மிக்க நன்றி கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  38. பானுக்கா மிக்க நன்றி அக்கா கருத்திற்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  39. //இப்படியொரு அழகான பதிவை உருவாக்கிய அன்பின் கீதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..//

    அதில் நீங்களும் சகோ உங்களால் தானே!!! மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  40. நோஓஓஓ பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு ஊரெல்லாம் போய்ச் சொன்னதாமே... மீ தான் கிணறு வெட்டினேன் ... மீ தான்ன்ன் கிணறு வெட்டினேன் என:)... அப்பூடி இருக்கே இன்று கீதாவின் பாக்காய் சார்:)...

    விடுங்கோ என்னை விடுங்கோ.... எனக்கும் இனி ஒரு சமையல் அஸிஸ்டெண்ட் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:).... என்னால தனிய சமைச்சூஊஊ அனுப்ப முடியாதூஊஊஊ:)... நான் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  41. அது நெல்லைத்தமிழனின் பாவக்காயோ?:) ஹையோ இப்பூடி ஒரு பாவற்காயை மீ பிறந்து வளர்ந்ததுக்கு பார்க்கவே இல்லை:)... பாலைவனத்தில் விளைஞ்சிருக்குமோ?:)... பாவம் அதிராவை விட வயக்கெட்டுப் போயிருக்குதே:)...

    பதிலளிநீக்கு
  42. @கீதா ரங்கன் - " அப்ப பெண்கள் எங்களை என்ன சொல்லறீங்க..நாங்க பிறந்த் வீட்டுல சாப்பிட்டது ஒன்று புகுந்த வீட்டுல டோட்டலி வித்தியாசமான உணவு முறை.." - ஏங்க... அருமையான அம்மா கையில சாப்பிட்ட உணவை விட்டுவிட்டு, புதுசா யாரோ (??) செய்யற சமையலை கஷ்டப்பட்டு எங்க நாக்கிற்குப் பழக்கிக்கறோமே... நாங்க பரிதாபம் இல்லையா? உங்களுக்கென்ன... நீங்க சமையல் கத்துக்கறதுக்கு (பிறந்த வீட்டுல எங்க செஞ்சிருக்கப்போறீங்க), நாங்க, பரிதாபமா ஒரு ஆள் கிடைக்கறோம் இல்ல. நாங்க பாவமா நீங்க பாவமா?

    பதிலளிநீக்கு
  43. நீங்கள் ’பாகல் ஹோ..ஹோ !’ என்று எழுதியதைப்படித்ததும், 1981-ல் வந்த அர்மான் ஹிந்தி படத்தில் உஷா உத்துப் பாடிய ‘ரம்பா ஹோ.. ஹோ..ஹோ..’ ஞாபகத்தில் இடறியது. ரம்பாவைக் கொஞ்சம் அழுத்தி ‘ர்ர்ரம்பா ஹோ..!’ என்று பாடுவது உஷாவின் அதிரடி ஸ்டைல் ! அவர் ஒரு அனாயாச பாடகி. One and only Usha Uthup ! உங்கள் உப்புச்சார் உஷா உத்துப்பிடம் கொண்டுவந்துவிட்டிருக்கிறது..

    பாகலில் பாகலாவது ஒரு பக்கம்.. பாட்டில் பாகலாகிக் கிடப்பது மறுபக்கம் ! //

    ஆஹா!! ஏகாந்தன் சகோ..நீங்கள் சொல்லிருக்கும் பாடலைக் கேட்டதில்லை...ஆனால் உஷா உதுப் பிடிக்கும் அனாயசமான பாடகி! நீங்க சொல்லிருக்காப்ல அவங்க சில வார்த்தைகளை அழுத்தி உச்சரித்துப் பாடுவாங்க ஆமாம்...யுனிக் வாய்ஸ் அண்ட் யுனிக் சிங்கர்!! நான் வியந்து பார்க்கும் பாடைகளில் ஒருவர்..இப்ப கூட அப்படியே கலக்கறாங்க...நீங்க சொல்லிருக்கும் பாடலையும் கேக்கறேன்.

    ஆமாம் சில பாடல்கள் நம்மை பாகல் ஆக்கிவிடும் டிட்டோ செய்யறென்...சொல்வனத்தில் வந்த உங்க கதையை வாசித்துட்டேன் அன்றே உங்கள் தளத்தில் லிங்க் வந்ததும்...ஆனால் சொல்வனத்தில் கருத்திட முடியலை..அப்புறம் நேற்றெல்லாம் விருந்து என்று பிஸி....வரேன் கருத்திட...

    மிக்க நன்றி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  44. Jokes apart.. பெண்கள் பிறந்த இடத்திற்கு உரிமை கொண்டாட முடியாமல், வளர்ந்து அவங்களுக்கென்று ஒரு வீட்டை உருவாக்கறாங்க. அவங்க பாராட்டுக்குரியவங்கதான்.

    பதிலளிநீக்கு
  45. /////நெல்லைத் தமிழன்January 8,
    - ஏங்க... அருமையான அம்மா கையில சாப்பிட்ட உணவை விட்டுவிட்டு, புதுசா யாரோ (??) செய்யற சமையலை கஷ்டப்பட்டு //////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தோஓஓஓஓஓ புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்ன்ன் என் வேலை பறிபோனாலும் பறவாயில்லை... இப்பவே இதை அண்ணி காதில பத்த வச்சால்தான்:) எனக்கு தொண்டையால ரீ இறங்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)... இப்போதைக்கு ஹொலிடேயில் போகமாட்டார் எனும் நம்பிக்கையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
  46. ஹையோ என் செக் :) எங்க போயிட்டாஆஅ:)... அஞ்சூ கமோன்ன்ன்ன்ன் விடிஞ்சிடுச்சூஊஊஊ ... கீதா கொமெண்ட் போடக் கஸ்டப்படுறா... விடாமல் குழப்புவோம்ம்ம்:)
    புலவர் ஐயா வந்து திட்டினாலும் பறவாயில்லை:)... நமக்குக் கடமை முக்கியம்:)...

    மிகுதிக்கு சத்து நேரத்தில வாறேன்ன்ன்... இப்போ இந்த சமூகம்:) ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொள்கிறது:)... இது வேற குட்டி:))...

    பதிலளிநீக்கு
  47. வாங்க அதிரா!!! ஹா ஹா ஹா ஹா அணீல்11! ஹை சூப்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அணில்...

    நாம எல்லாரும் சேர்ந்து செஞ்சதாக்கும்!!!!! ஹா ஹா ஹா ஹா வரேன்...கணினி ரொம்ப தொல்லை செய்யுது...ஸ்லோவா இருக்குது இல்லை படுத்துவிடுகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  48. நெல்லை உங்க கருத்தைப் படிச்சுட்டு ரொம்ப சிரிச்சுட்டேன்....//
    ஏங்க... அருமையான அம்மா கையில சாப்பிட்ட உணவை விட்டுவிட்டு, புதுசா யாரோ (??) செய்யற சமையலை கஷ்டப்பட்டு எங்க நாக்கிற்குப் பழக்கிக்கறோமே... நாங்க பரிதாபம் இல்லையா? உங்களுக்கென்ன... நீங்க சமையல் கத்துக்கறதுக்கு (பிறந்த வீட்டுல எங்க செஞ்சிருக்கப்போறீங்க), நாங்க, பரிதாபமா ஒரு ஆள் கிடைக்கறோம் இல்ல. நாங்க பாவமா நீங்க பாவமா?//

    நாங்களும் எங்க அம்மா, பாட்டி கையால சாப்பிட்டுட்டு...(ஆமா சமைக்கறது இல்லைதான்....ஹிஹிஹிஹி பிறந்த வீட்டுல..) புது வீட்டுல மாமியார் சாப்பாடு...முதலில் சமைக்க எல்லாம் விட மாட்டாங்களே..அவங்க கிச்சனாச்சே!!! சும்மா சுத்துவேலைதான்...பார்த்து பார்த்துக் கத்துக்கிடணும்...எப்படிச் செய்யணும் நு கேட்டா..."இது கூடவா தெரியாதுனு பதில் வரும்....இப்படித்தான்னு சும்மானாலும் பதில் சொல்லுவாங்க...அப்படிக் கத்துக்கிட்டது கணவருக்குச் செஞ்சு போடும் போது..."எங்க அம்மா சமைக்கற மாதிரி இல்லைம்பாங்க" ...திரும்ப மாமியார்கிட்ட...."அம்மா உங்க பிள்ளை நீங்க சமைச்சா மாதிரி இல்லைனு சொல்றார்...எப்படிச் செய்வீங்க கொஞ்சம் சொல்லித் தாங்களேன்" அப்படினு சொன்னதும் அம்மா அப்படியே பெருமை பொங்க சொல்லித் தருவார்...இப்படித்தான் நான் நிறைய கத்துக்கிட்டேன். ரெண்டாவது நான் அப்படிக் கேட்டது நிஜமாகவே...சும்மா அம்மாவை ஐஸ் வைக்க இல்லை...நான் புதுசா கத்துக்கணும்னு...நல்லா சமைக்கணும்னு...இதெல்லாம் முதல்ல கல்யாணம் ஆன புதுசுல்...ஆஃப் லேட் வருஷம் கடந்து அவங்க எண்ணங்களும் மாறும் போது இப்ப அவங்க வாயிலிருந்தே அப்ரிசியேஷன் கிடைக்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு....இருக்கும். மருமகள்கள் கல்யாணம் ஆன புதிதில் கொஞ்சம் பொறுமையா, கணவன்மார்களிடம் பொசசிவ்வா இல்லாம, எங்கம்மா இப்படிச் செய்வாங்க அப்படிச் செய்வாங்கனு சொல்லாம ஈகோ இல்லாம, பிறந்த வீடு அது இதுனு பேசாம..கத்துக்கற ஆர்வம் இருந்துட்டா... இருந்துட்டா மாமியார்களின் மனம் போல மருமகள் ஆகிடலாம்..அதுக்கு அப்புறம் பிறந்த வீட்டுச் சமையல், புத்தகங்களில் கற்ற குறிப்புனு செய்தாலும் மாமியார் நல்லாருக்கு புது ரெசிப்பினு பாராட்டும் நிலை...இது என் அனுபவப் பாடம்...

    உங்க கருத்து தப்பே இல்லை ரொம்ப கரீக்டுதான்...நான் எங்க (மருமகள்கள்) பக்கத்து விஷயத்தையும் சொன்னே அம்புட்டுத்தேன் ஹா ஹா ஹா ஹா ஹா.
    உங்களின் ஜோக்ஸ் அபார்ட் கமெண்டையும் பார்த்துட்டேன்....நன்றி நன்றி அக்கருத்திற்கு...கணினி படுத்தறதால ஒரே அடியா பார்த்த கமென்ட்ஸ்க்கு அடிச்சுடறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஹையோ என் செக் :) எங்க போயிட்டாஆஅ:)... அஞ்சூ கமோன்ன்ன்ன்ன் விடிஞ்சிடுச்சூஊஊஊ ... கீதா கொமெண்ட் போடக் கஸ்டப்படுறா... விடாமல் குழப்புவோம்ம்ம்:)
    புலவர் ஐயா வந்து திட்டினாலும் பறவாயில்லை:)... நமக்குக் கடமை முக்கியம்:)...//

    ஹா ஹா ஹா ஹா ஹா மியாவ்!! கஸ்டப்படறது கருத்துக்கு இல்லையாக்கும்...கணினி படுத்துது...ஹிஹிஹிஹி...ஆமாம் ஏஞ்சல் எங்க கானும்...இன்னிக்குத் தொடர்ந்து கும்மி அடிக்க முடியுமா தெரியலை...கம்ப்யூட்டர் நால..

    தில்லைஅகத்து ப்ளாக்ல மதுரைக்கு வம்புக்கு இழுத்து இன்னும் பதில் கொடுக்கலை...இன்ஃபேக்ட் அதுல உங்களையும், ஏஞ்சலையும் இழுத்து பதில் கொடுங்க நான் பிஸினு சொல்ல நினைச்சேன்..அப்புரம் நேற்று ஞாயிறு இல்லையா நீங்க ரெண்டுபேருமே பிஸியா லீவுலஎஞ்சாய் செஞ்சுட்டு வீக் என்ட் ப்ரிப்பரேஷன் அது இதுனு இருப்பீங்கனு வேண்டாம்னு விட்டேன்..அப்புறம் வந்த மத்தவங்க கமென்ட்ஸ்குக்குப் பதில் கொடுக்கலை...நேத்து பிஸி...இன்று கணினி தொல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  50. @ கீதா:
    //..நான் வியந்து பார்க்கும் பாடைகளில் ஒருவர்..//

    ஐயய்யோ! இப்பிடி முடிக்கிறீங்களே கதய!
    சரி, சரி, இது கணிணியோட மிஸ்டேக்க்கு..

    யூ-ட்யூபில் கேளுங்கள்: ர்ர்ரம்பா ஹோ...ஹோ...ஹோ...

    பதிலளிநீக்கு
  51. நெல்லை என்னதான் சொல்லுங்க அம்மா சமையல் அம்மா சமையல்தான்...நீங்க சொன்னப்புல...
    என் பையன்....அவன் ரெண்டு பாட்டி சமைச்சு சாப்பிட்டதால அவனும் சொல்லுவான் அம்மா இந்த ரெசிப்பி அப்பா பாட்டி சமைக்கற மாதிரி இல்லை..இந்த ரெசிப்பி வேம்புபாட்டி (எங்கம்மா) சமைக்கறா மாதிரி இல்லை..உன் பாட்டி சமைக்கறா மாதிரி வரலைனு..அப்படினு நிறைய சொல்லுவான்.....ஸோ மீண்டும் ரெண்டு பாட்டிகளிடமும், என் பாட்டியிடமும் கத்துப்பேன்...இதெல்லாம் அவனுடைய ரொம்பச் சின்ன வயசுல அப்புறம் பாட்டிகளை அப்ரிசியேட் செஞ்சாலும், நான் செய்வதையும் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினான்

    கீதா

    பதிலளிநீக்கு
  52. ஏகாந்தன் சகோ கேட்கிறேன்...ஆஹா பாடகி என்பது எப்படி வந்துருக்குனு பாருங்க...கீ போர்டும் இணையமும் (மைன்ட் பாடி கோஆர்டினேஷன் இல்லாத மாதிரி) கோஆர்டினேஷன் இல்லாம வேலை செய்யுது ஹா ஹா ஹா...ரொம்பத்தப்புத் தப்பா அடிக்குது......வெங்கட்ஜி தளத்துல போய் அவர் பகிர்ந்திருந்தபாடலை ஓபன் செய்ததும் கணினி படுத்துவிட்டது...

    கேட்கிறேன்...மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ஆங்ங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்ன்ன்ன்:)).. பாகற்காய் உப்புசார் இல்ல கைப்புசார்:))//

    ///அது சரி புயலையும்,///

    அது கீதா .. நான் விட்டுக் குடுத்தேனாக்கும் துரை அண்ணனுக்கு:)).

    /// ஸ்ப்பாஆஅ. புயலுக்கு, ஏற்கனவே ஏஞ்சல் இருப்பதைப் பார்த்து கர்ர்ர்ர்ர்///

    ஹா ஹா ஹா நேரில் நடப்பதைப்போலவே இருக்கு கீதா நீங்க எழுதுவது:))...

    /// சாப்பிடுங்கோ!.. கீரை வடை நான்.. நானேதான் செய்தனான்...”

    “அதுதானே யோசனையா இருக்கு!?.” எல்லாரும் சிரித்தார்கள். நல்லவேளை வெகுதொலைவில் தேம்ஸ் இருந்ததால் தப்பித்தது. மகிழ்ச்சியுடன் கீரைவடையைத் தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் -///

    அப்பாடாஆஆஆ கீரை வடை ஃபினிஸ்டாஆஆஅ?:)) மிஞ்சிடுமோ என நினைச்சேன்.. ஆளாளுக்கு வெளிப்படையா ஒண்டு.. ஒளிச்சு ஒண்டென ரெண்டு எடுத்துச் சாப்பிட்டு விட்டினமே:))

    பதிலளிநீக்கு
  54. @அதிரா- "எனக்கும் இனி ஒரு சமையல் அஸிஸ்டெண்ட் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)." - நீங்க இதை இப்படிப் பார்க்காதீங்க. நான் செய்தபோது ரொம்ப நல்லா வந்தது இந்த ரெசிப்பி. எங்களுக்கும் பிடிச்சிருந்தது. அதைச் சொல்லும்போது, கீதா ரங்கன் அவர்களுக்கும் convincingஆக இருக்கும் இல்லையா. நானே அவங்கள்ட சொல்லியிருக்கேன், பாரம்பர்ய சமையல் குறிப்பு தந்தால், நான் செய்து படத்துடன் அனுப்பறேன்னு (அதிலும் இனிப்பு வகைகள். நாங்க நிஜமாகவே ஸ்வீவீவீவீட்ட்ட்ட்ட்ட் ஆட்கள். சும்மா வெறும்ன ஸ்வீட் 16னு சொல்றவங்க இல்லை)

    'சமையல் அசிஸ்டென்ட்' எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னு லண்டன்லேர்ந்து ஒருத்தர் எழுதியிருக்காங்களே. (அச்சச்சோ அப்பம் செய்து, ஒண்ணும் சரியா வராம, 'கணவனே கண் கண்ட தெய்வம்'னு சொன்னப்பறம், அட்டஹாசமா அச்சு முறுக்கு வந்ததே). அவங்க வழியைக் கடைபிடிக்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  55. ///“அண்ணன்.. நீங்கள் சொல்லுங்கோ.. பாவக்காய் மேலுக்கு நல்லம் தானே!.”

    “ஆமாம்.. நல்லது தான்!.. இல்லை என்று யார் சொன்னது!..

    “இவையள்.. இவையள் தான் சொல்லுறாங்கோ!...”///

    ஹா ஹா ஹா இலங்கைத்தமிழ் துள்ளி விளையாடுது:))... மேல் என நாங்க சொல்வது உடம்பை அல்ல:).. வெளிப்பகுதியை:).. அதாவது இங்கே உடம்புக்கு நல்லது எனத்தான் சொல்லுவோம்... மேல்ல தண்ணியை ஊத்துக்கோ... மேலை நல்லா போர்த்து மூடுங்கோ குளிருது இப்படி:)) ஹா ஹா ஹா..

    ///தேவகோட்டையார் மீசைக்குள்ளிருந்து பேசினார்..///

    ஹா ஹா ஹா இது ரொம்ப ஓவரூஊஊஊஊஊஊ:) மாருதிக்குள்ளிருந்து பேசினார் எனில் ஒத்துக்கலாம்:))

    பதிலளிநீக்கு
  56. வணக்கம் அன்புறவுகளே!..

    கூட்டாகக் கொடுத்த ”பாகற்காய்ச் சார்” அசத்தலாக இருக்கிறது!
    (கூட்டாகன்னா எல்லோரும் சேர்ந்து கொடுத்த.. ஐயோ இது குழம்பு இளமதி!
    கூட்டில்லன்னு சொல்லவருவீங்க என்பதால் சொன்னேன்..:))
    இதுவரை இப்படி நான் அறிந்திருக்கவில்லை. பாகற்காய் நாங்களும் விரும்பிச் சாப்பிடும் ஒன்றுதான்.
    மூவரின் கைப்பக்குவமும் கதை வசனம் நடிப்பு எல்லாம் வித்தியாசமாக அலாதியாக இருக்கிறது!

    இப்படிச் செய்முறை அறிந்ததில்லை கீதா! அருமையாக இருக்கிறதே! செய்து பார்த்துவிடுகிறேன்.
    இதன் வசன கர்த்தாவும் பாடலாசிரியருமான துரை ஐயா
    நல்ல விளக்கத்துடன் தன் திறமைகளை அள்ளித் தெளித்திருக்கிறாரே.!அசத்தீட்டார்!
    நடிப்பு செயல்முறை, நிழற்பட வல்லுனர் நெ த சகோதரரின் கைவண்ணம்
    சொல்லவே தேவையில்லை! துல்லியம்! மிகச் சிறப்பு!
    உங்கள் கூட்டு முயற்சியால் பாகற்காய்ச் சார் வெல்லம்போல் தித்திக்கிறது!..:))

    பதிவிட்ட சகோ ஸ்ரீராமுக்கும் ”பாகற்கற்காய்ச் சார்” கூட்டணித் தயாரிப்பாளர்களுக்கும்
    மிக்க நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  57. பாகற்காய் சார் செய்முறை எனக்கு புதுசு

    பதிலளிநீக்கு
  58. ///“பாகற்காயை ஏன் ராத்திரியில் சாப்பிடக் கூடாது?”. - கீதா..

    பொதுவாகப் புளிப்பு, கசப்பு சுவைகளை இரவில் தவிர்க்கச் சொல்வது பாரம்பர்ய வைத்தியம்... மென்மையான இனிப்பு தவிர மற்ற சுவைகள் இரவு நேரத்துக்கு ஆகாது. ///

    ஓ இது எனக்கு இப்போதான் தெரியும்... பொதுவாக பகலில் சாப்பிட வைப்பதே கடினம் இதில் இரவில் எங்கே ஆப்பிடுவது... ஆனா எனக்கு இது தெரியாது.. கீரை வகைகள்தான் இரவில் சாப்பிடக்கூடாது செமிபாடாகாது என எங்கட கண்ணதாசன் அங்கிள் ஜொள்ளியிருக்கிறார்:)..

    எனக்கு வெற்றலை பாக்கு போட பிடிக்கும் எப்பவுமே:)) சின்ன வயசிலிருந்தே.. அப்பாவுக்குத்தெரியாமல் அப்பம்மா விடம் ஒளிச்சு வாங்கிச் சாப்பிடுவோம்..:)).. அப்பாவுக்கு தெரியாமல் வெத்திலையில் குட்டிப் பாக்குத்துண்டு வச்சு சுருட்டி மடிச்சுப்போட்டு, நம் கைக்குள் ஒளிச்சு தருவா அப்பம்மா:))...

    என்ன ஒரு கவலை எனில் இங்கு வாங்குவது கஸ்டம்:)).. கனடா போனால்தான் வாங்கி வருவோம்:))

    பதிலளிநீக்கு
  59. ///”மற்றபடிக்கு சின்ன வயதிலிருந்தே பாகற்காய் கீரை வகைகளுக்குப் பழக்கி விட்டால் பின்னாளில் பல குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம். எல்லாரும் சொல்வது என்ன?... என் பிள்ளை பாகற்காய் சாப்பிட மாட்டான். என் மகள் கீரை சாப்பிட மாட்டாள்... என்னவோ இவங்க எல்லாவற்றையும் சாப்பிடுவது மாதிரி!.///

    ஹா ஹா ஹா அருமையாகச் சொன்னீங்க துரை அண்ணன்... எனக்கு பாகற்காய் பிடிக்கும்... வீட்டில் பிள்ளைகளுக்கு கதை சொல்லிச் சொல்லிக் குடுத்திடுவேன், சின்னவருக்கு வாயில வச்சிட்டு விழுங்குங்கோ விழுங்கோ என்பேன் விழுங்கிடுவார்:))... மூத்தவர் பிளேட்டில் போட்டிட்டால் போட்டதெதையும் கொட்டமாட்டார் கஸ்டப்பட்டுச் சாப்பிடுவார்.. என் கணவரைப்போலவே:))..

    சிலநேரம் வேண்டாம் அம்மா கைக்குது எடுங்கோ என்பார்.. இல்லை அப்பன் இது உடம்புக்கு நல்லது.. சப்பாமல் விழுங்கிடுங்கோ என்பேன்:)) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  60. ///பிஸ்கட் சாக்லேட் அதீத இனிப்பு வகை இதுங்களா..ல வயிற்றுக்குக் கேடு உண்டாகுதா இல்லையா!...///

    இது நெல்லைத்தமிழனுக்குத்தானே?:)

    ///பாகற்காய் சமையல்..ல கொஞ்சம் வெல்லம் போடுறது வழக்கமா இருக்கு,ஊடகங்கள்..லயும் அப்படிச் சொல்றாங்க..”///
    இது என் ரெசிப்பி பாவக்காய்:))

    http://gokisha.blogspot.co.uk/2017/03/blog-post_73.html

    ஹா ஹா ஹா அருமையான பாவக்காய் பற்றிய உரையாடலும் விளக்கமும்.. நன்றி கீதா .. துரை அண்ணன்.. இனித்தான் செய்முறைக்கு வரப்போறேன்ன்...

    பதிலளிநீக்கு
  61. ஆஆஆஆவ் வித்தியாசமான குறிப்பு கீதா, கத்தரிக்காய் தொக்கின் சாயலும் இருக்கே:)).. இப்படி எப்பவும் செய்ததில்லை.. நிட்சயம் இம்முறை தமிழ்க்கடை போய் வாங்கி வந்து செய்யப்போகிறேன்...

    நெல்லைத்தமிழன் அழகழகா நிறையப் படங்கள் எடுத்துப் போட்டிருக்கிறார்ர்ர்... படமே போதும் விளக்கம் தேவையில்லை எனச் சொல்லும் அளவுக்கு படமே கதை சொல்லுது.. வாழ்த்துக்கள் நெல்லைத்தமிழன்...


    ///திங்க டைரக்டர் ஸ்ரீராமுக்கும் மிக்க நன்றி//

    ஓ அவர் எப்பவும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாரோ?:) எனக்கிது தெரியாமல் போச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா:)) அப்போ ஸ்ரீராம் இல்லை சாப்பாட்டுராம்:))) ஹா ஹா ஹா பத்த வச்சிட்டேன்ன்ன்ன்:)) இனி வியக்கம்:) சொல்றேன் பேர்வழி என எல்லோரும் ஓடி வருவதற்குள் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))..

    பதிலளிநீக்கு
  62. @அதிரா. நன்றி. - "வாழ்த்துக்கள் நெல்லைத்தமிழன்..." - ஒரு வழியா ஒத்துக்கிட்டீங்களே, என்னைவிட நீங்க பெரியவர் (வயசைச் சொன்னேன்) என்று. தமிழ்நாட்டுல, சின்னவங்க, பெரியவங்களைப் பார்த்து 'வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்' என்றுதான் சொல்லுவாங்க. அதை மனதில் வைத்துக்கொண்டு, என்னை 'வாழ்த்தியதற்கு' ந ன் றி.

    பதிலளிநீக்கு
  63. ///நெல்லைத் தமிழன் said...
    துரை செல்வராஜு சார் - உங்கள் விளக்கத்தில் எழுத்துப் பிழை இருக்கு. அவங்க எழுதும்போது, 'கீரை வடை' என்று எழுதமாட்டாங்க. நம்ம கழுத்தில் கீறுவதுபோல், 'கீறை வடை' என்று எழுதுவார்கள். :-)///

    ஹா ஹா ஹா எடுத்துக் குடுக்கிறாராமாம்ம்ம்ம்ம்ம்ம்:))..

    ///நெல்லைத் தமிழன் said...
    Jokes apart.. பெண்கள் பிறந்த இடத்திற்கு உரிமை கொண்டாட முடியாமல், வளர்ந்து அவங்களுக்கென்று ஒரு வீட்டை உருவாக்கறாங்க. அவங்க பாராட்டுக்குரியவங்கதான்.///

    ஹா ஹா ஹா கர்ர்ர்:) சொல்றதை எல்லாம் டொல்லி முடிச்சுப்போட்டூஊஊ பின்பு பட்டெனச் சரண்டரும் ஆகிடுவார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ///நானே அவங்கள்ட சொல்லியிருக்கேன், பாரம்பர்ய சமையல் குறிப்பு தந்தால், நான் செய்து படத்துடன் அனுப்பறேன்னு///

    ஆனா என் ஒடியல்கூழ் மட்டும் செய்ய மாட்டேன் என அடம்புய்க்கிறீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஹா ஹா ஹா:)..

    ///நாங்க நிஜமாகவே ஸ்வீவீவீவீட்ட்ட்ட்ட்ட் ஆட்கள். சும்மா வெறும்ன ஸ்வீட் 16னு சொல்றவங்க இல்லை)///

    ஹா ஹா ஹா சுவீட் 16 க்கு சுவீட்ஸ் பிடிக்காது:) அதில இன்னொன்று சொல்லோணும்.. இந்த ஜனவரியில் இருந்து சுவீட் டச்சூஊஊஊஊஊ பண்ணுவதே இல்லை அதாவது சீனி போட்டு ரீ கூடக் குய்க்க மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறேன்ன்ன் என்னை வாழ்த்தி வாழ்த்துங்கோ:)).. ஏனெனில் மீக்கு சுவீட்ஸ் பிடிக்காது ஆனா சீனி போடாமல் ரீ குடிக்கவே மாட்டேன்.. இப்போ சீனியே போடாமல் தேவைப்பட்டால் ஒரு குட்டித் துண்டு சக்கரையோடு குடிக்கிறேன்ன்ன்ன்:))...

    இல்ல எனக்கு சமைக்க அஸிஸ்டெண்ட்.. வலையுலகில் இருந்து தேவைஈஈஈஈஈஈஈஈஈ:)).. இல்லை எனில் மீ
    டீக்குளிப்பேன்ன் தேம்ஸ் கரையில்:))

    பதிலளிநீக்கு
  64. @ நெல்லைத்தமிழன்///

    //தமிழ்நாட்டுல, சின்னவங்க, பெரியவங்களைப் பார்த்து 'வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்' என்றுதான் சொல்லுவாங்க///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வலையுலகம் வந்தபின்புதான் இவ்வசனம் நானும் அறிஞ்சேன்ன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்பினம்.. எனக்கு அதில் உடன்பாடில்லை... யாரும் யாரையாயினும் எப்பவும் வாழ்த்தோணுமாம்.. வாழ்த்த வாழ்த்த அவை நல்லாயிருப்பினமாம்ம் எனத்தான் கேள்விப்பட்டேன்... என்னைப்பொறுத்து வாழ்த்த வயசு முக்கியமில்லை.. மனம்தானே முக்கியம்:))... அதனால இனிமேல் எல்லோரும் எப்பவும் என்னை எங்க கண்டாலும் வாழ்த்துங்கோ:)) நான் உங்க வயசை எல்லாம் கேய்க்க மாட்டேன்ன்ன்:)) எனக்குப் பாருங்கோ அடுத்தவர்களின் விடுப்பு அறிவது புய்க்காது:)) ஹா ஹா ஹா.. நிஜமாத்தான்:).


    ஹையோ என் பாவக்காய் ரெசிப்பிக்கு நெ.தமிழனின் கொமெண்ட் வந்திருக்கூஊஊஊஊஊஊ நில்லுங்கோ ஓடிப்போய்ப் பார்த்திட்ட்டு வாறேன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
  65. (அதிலும் இனிப்பு வகைகள். நாங்க நிஜமாகவே ஸ்வீவீவீவீட்ட்ட்ட்ட்ட் ஆட்கள். சும்மா வெறும்ன ஸ்வீட் 16னு சொல்றவங்க இல்லை)

    'சமையல் அசிஸ்டென்ட்' எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னு லண்டன்லேர்ந்து ஒருத்தர் எழுதியிருக்காங்களே. (அச்சச்சோ அப்பம் செய்து, ஒண்ணும் சரியா வராம, 'கணவனே கண் கண்ட தெய்வம்'னு சொன்னப்பறம், அட்டஹாசமா அச்சு முறுக்கு வந்ததே). அவங்க வழியைக் கடைபிடிக்கவேண்டியதுதான்.//

    பாரம்பரியச் சமையல் ஆமாம் அதிரா நெல்லை சொல்லிருக்கார்...அனுப்பறேன்..திங்கவுக்கும்

    ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நெல்லை...அடுத்த வரிகளைப் பார்த்துட்டு..சரி மத்த கமென்ட்ஸும் பார்க்கப் போறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  66. இளமதி கருத்திற்கு ரொம்ப நன்றிமா....இந்தக் கூட்டுல ஹாஹா அதான் இந்தக் குழு கொஞ்சம் கலாய்த்தல் குழு அதுல சிறப்பு விருந்தினர்கள் எங்க ஷோவுக்கு வருவாங்க...

    செஞ்சு பாருங்க நல்லாருக்கும் அப்படின்றதுக்கு நான் காரண்டி கொடுத்து செஞ்சு சுவைத்த நெல்லையைக் காட்டிடுவேன்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  67. வாங்க ராஜி ரொம்ப நன்றி கருத்துக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  68. நெல்லை நீங்க சொன்னீங்கல்ல என் முதல் ரெசிப்பிய பார்த்து செய்முறை எடுக்கறது கஷ்டமா இருந்துச்சுனு அதான் மாத்திட்டேன் நெல்லை...நன்றிபா...

    அதிரா எங்க மாமியாரும் சொல்லுவாங்க பாகற்காய், நெல்லிலக்காய், இஞ்சி கீரை இதெல்லாம் ராத்திரி சாப்பிடக் கூடாது.ஆனால் மாமியாருக்குக் காரணம் சொல்லத் தெரியவில்லை....அவங்க எங்க பெரியவங்க அப்படித்தான் சொல்லுவாங்கனு சொல்லிட்டாங்க...அப்புறம் அது ஏன்னு எங்கள் ஆயுர்வேத மருத்துவர் சொன்னார்...அது செரிக்க நிரைய நேரம் எடுக்கும் ராத்திரி நாம் உறங்மும் போது ஜீரண உறுப்புகளை வேலை செய்யச் சொல்லி மூளை கமான்ட் செய்யும் மூளையும் ரெஸ்ட் எடுக்காது...அது நல்லதல்லவே...ஸோ நாம பகல்ல சாப்பிட்டா நிறைய வேலை செய்வோம், நடப்போம் அப்ப ஈஸியா செரிமானம் ஆகும்னு..

    கீதா

    பதிலளிநீக்கு
  69. அதிரா ஹா ஹா ஹா நானும் வயது பார்ப்பதில்லை வாழ்த்த!! சரி சரி நீங்க ஸீனியர்தான் அதனால உங்களையும் வாழ்த்துவேன் ஹா ஹா ஹா ஹா ஹா...

    ஒவ்வொரு கமென்ட் வரவும் 4 நிமிஷம் 5 நிமிஷம் எடுக்குது....கணினி ஆஃப் செய்து ஆஃப் செய்து மீண்டும் திறந்து என்று இருப்பதால் அதிகம் போட முடியலை...அப்புறம் வரேன் மத்த தளங்கள் பார்த்துட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  70. //வாவ்வ்வ்வ்வ் அதுதான் கீசாக்கா பெயரை மாத்திட்டாவோ //

    அதிரடி அதிரா, யாருமே கவனிக்கலை! நீங்க கவனிச்சிருக்கீங்க! கண்ணிலே வி.எ. விட்டுட்டுப் பார்ப்பீங்க போல! இன்னிக்கு என்னோட மடிக்கணினி சோதனை! அதனால் வேறே ஒரு ஐடி உடனே திறந்ததால் அதன் மூலம் எ.பி.க்கு வந்தேன். :))))அப்படியும் லேட் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நான் காலையிலேயே பார்த்துட்டேன்...அப்புறம் போய்ட்டு வந்ததும் கருத்துகள் இருந்த உடனே உங்ககிட்ட கேக்க மறந்து போச்....அப்புறம் கம்ப்யுயூட்டர் வேற படுத்திச்சா...பதில் கொடுக்கறதுல போச்...அதிரகேட்டதும் நினைவு வந்துச்சு....அவங்க கேட்டதுனால நான் கேட்கலை... அவங்க ஒரு முறை கேட்டா கீதா 100 முறை கேட்டா மாதிரி..ஹிஹிஹி..இது என்ன நா நீங்க சிஸ்டம் சரி பண்ணப் போறீங்க இல்லியா அதான் ஹாஹாஹா..சரிதானே அதிரா..

      கீதா.

      நீக்கு
  71. வணக்கம் சகோதரரே

    அருமையான சமையல் பதிவு. உங்கள் கூட்டணியில் பாகலும் தித்தித்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் பாகற்காய் பிடிக்கும். செய்முறை படங்கள், விளக்கங்கள் உரையாடல்கள் அனைத்துமே நன்றாகவிருந்தது.பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் அக்காகருத்திற்கு...

      கீதா

      நீக்கு
  72. பாகற்காய் ஊறஊற குழம்பில் காயின் ருசி அதிகமாகும். கரன்ட் இல்லை. கணினி வேலை செய்யலே. அதனாலே நான்தான் கடைசியாக இருக்கும். பாகற்காய் உப்புச்சார் அழகாக படங்களுடன் புதிய முறையில் ருசிகரமாக இருக்கிறது. வறுத்த ஸாமான்களை பொடித்துப் போட்டு விட்டால் குழம்பு அதிகம் திக்காகாது. பருப்புகள்,அரிசி,எள்,தேங்காய் ஸாமான்கள் நிறைய. பாகற்காயிற்கு வெல்லம் போடுவது உடம்பில் ஊறிவிட்ட பழக்கம். நெ.தமிழன் படங்கள்,துரை செல்வராஜ்ஸார் எனக் கூட்டணி பலம். நிறைய எழுதலாம். கீதாரெங்கன் நன்றாக எழுதுகிறீர்கள். வகைவகையாக எதிர் பார்க்கிறேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி அம்மா வாங்க...நான் அரைத்துதான் போடுவேன்...மாமியார் அரைத்தும் விடுவார்....பொடி செய்தும் போடுவார்...பொடி செய்து போட்டால் கூடக் கொஞ்ச நேரம் கொதிக்க விடுவார்....மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  73. அஆவ் !! கீதா சாரி சாரி :) லேட்டாகிடுச்சி அதுக்குள்ள இத்தனை கமெண்ட்ஸ் ..பாகல்காய் உப்பு சார் :) வித்யாசமான பேராயிருக்கே .எங்கம்மா இப்படித்தான் விதஹ்விதமா பேசுவாங்க .பிட்லை ,தான் கரண்டி புளிமண்டி வெண்டைக்கா மண்டி நெய் கத்திரி எனக்கு இப்போதான் ஒவ்வொன்னா புரியுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் வாங்க வரும் போதே சொல்லிட்டு வரணும்.லேட்டா வந்தாலும் லேட்டஸ் டா வருவேன்னு....அப்பத்தான் பூசாருக்குப் புகையும்...ஹாஹாஹாஹா...

      பூசார் இன்று செக்கரோட்டரி காணும்னு தவிப்பு.....ஹாஹாஹா...

      ஆமா நிறைய உண்டு ஏஞ்சல் இன்று என் கம்ப்யுயூட்டர் அப்பப்ப சோர்ந்து விட்டது..ஸோ.ரொம்ப கும்மி அபிக்க முடில.இப்ப எழுப்பிருக்கேன்.இப்ப கூட மொபைல் வழி அடிக்குறேன்....

      கீதா

      நீக்கு
  74. ஹாஹாஹா :) சமையற்கூடத்தில் அரட்டை கச்சேரி காபி வித் துரை அண்ணா :) ஆனா அந்த கீரைவடைதான் கொஞ்சம் இடிக்குது :) சரி வருவோம் பாகற்காய் மேட்டருக்கு

    அஆவ் கீதா ஸ்ரீராம் எனக்கு காலைல போனில் படம் தெரிஞ்சது இப்போ காணோமே எங்கே படம் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது படம் தெரிலியா...கொஞ்சம் பூசார் கேளுங்க அவர் தான் நெல்லை போட்டோ பார்த்து கண்ணு விட்டார்...ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  75. எனக்கு மட்டும்தான் நடக்குதா இல்லை எல்லாருக்குமேவா ..பதிவில் பின்னூட்டத்தை போட்டா லேசில் போக மாட்டேன்கிறதே !! நாலைஞ்சு தடவை க்ளிக் செஞ்சேன் அப்புறம் தான் வெளியாகுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் எனக்கும் கமெண்ட் போக ரோMமம்ம்மம்மம்மம்ப டைம் எடுத்துச்ச்....இப்ப மொபைலில் கூட...ஆனா மத்தவங்க சொல்லல்லி யே...

      கீதா

      நீக்கு
  76. கீதா அருமையான ரெசிப்பி அதுவும் துரை அண்ணாவின் பாவற்காய் குறிப்புகள் மிகவும் சூப்பர்ப் .இரவில் நாங்கள் பெரும்பாலும் அரிசியில் செய்த புட்டு இடியாப்பம் போன்ற லைட் உணவுகளைமட்டுமே உண்போம் .
    வெற்றிலை பாக்குத்தரிப்பதன் அருமைகளை அழகா சொன்னிங்க துரை அண்ணா .அதெல்லாம் இங்கே கிடைக்கும் ஆனால் சின்னத்திலேயே அம்மா சொன்னாங்க வெற்றிலை சாப்டா மாடு முட்டும்னு அதான் தொடமாட்டேன் :) ஹாஹா :)

    அதேமாதிரி விருந்தினருக்கு பாகற்காய் சமைக்கக்கூடாது என்பதை போல அறுசுவை அரசர் தனது புத்தகத்தில் சொல்லியிருந்தார் கல்யாணம் போன்ற வைபவங்களுக்கு வற்றல் கத்திரி பயன்படுத்துவதில்லைன்னு .
    அதேபோல நான் பாகற்காய் சமைக்கும்போது எப்பவும் மோர் வெல்லம் எதையும் சேர்த்ததில்லை அப்படியே கழுவி நறுக்கி பொரிப்பேன்

    மீசைக்கு உள் சிரிச்ச தேவகோட்டையார் :) ஹாஹாஹா :) எங்கப்பாவுக்கும் பெரிய மீசைதான் நிறையபேர் போலீஸ்காரர்னு பயப்படுவாங்களாம் .

    பாகற்காய் நானா சின்னவளா இருந்தப்போ தொட்டதேயில்லை ஆனா என் மகள் ஆப்போஸிட் .க்ரிஸ்பியா பொரிச்சி தர சொல்வா ரொம்ப ஆசை அவளுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்வ தாங்ஸ் ஏஞ்சல் கருத்துக்கு...சில சமயம் பாகல் நல்ல இளசா இருந்தா வெல்லாம் போட மாட்டேன்....இல்லைனா கொஞ்சம் போடுவேன்....பொரிச்சலு. பிடிக்கும்

      Geethaa

      நீக்கு
  77. ரெசிப்பி வித்யாசமா இருக்கு கீதா அம்மா எப்பவுமே ஷாலோ fry தான் தேங்காய் எண்ணெயில் பொரிப்பாங்க சாம்பாருக்கு நல்லா இருக்கும்னு .அதுவும் கூட பெரிசா தேங்காய் துண்டுகளை கீறினாப்ல போடுவாங்க //உளுந்து பொடிச்சி சேர்த்தாங்களானு நினைவில்லை .செய்து பார்க்கிறேன் சுவை நல்லா இருக்கும்போலிருக்கே .

    நான் சில நேரம் தாய்லாந்த் வகை பாகற்காயை வாங்கி குழம்பு வைப்பேன் .அதிலும் செய்யலாமான்னு பார்க்கிறேன் இதே ரெசிபியை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க அம்மாவின் குறிப்பையும் நோட் செய்தாச்சு...மாமியாரும் இந்தக் குழம் புக்கு ரெக்டங்கிள்ல கொஞ்சம் பெருசா கட் பண்ணுவாங்க...

      செஞ்சு பாருங்க..தாய் பாகல் வித்தியாசமா இருக்குமா...

      கீதா

      நீக்கு
  78. ஹலோ மியாவ் :) உங்க பாவக்காய் ரீட்மோர் பதிவு லிங்கை கொடுத்து என்னை வசமா மாட்டி விட்டீர்களே :) நான் எப்பவோ நடந்த களைப்பில் பின்னூட்டத்தில் விட்ட மிஸ்டேக்கை நெல்லைத்தமிழன் கண்ணில் பட்டுடுச்சி :) கர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  79. ராமசேரிப் புகழ் அஞ்சு:)) அண்ட் கண்ணளகி கீதா... இப்போ எங்கயும் கொமெண்ட் போட்டால் உடனே எடுக்குதில்லை கர்:)) தமிழ் புளொக்ஸ்ல ஏதோ கோளாறுபோல.. 2,3 தரம்.. போட்டுக் குத்தினால்தான் பயத்தில சுத்தத் தொடங்குது ஹையோ ஹையோ:))..

    அஞ்சு நீங்க விட்ட ஸ்பெல்லிங் மிசுரேக்கை, நெல்லைத்தமிழன் பார்த்தால்தான் நல்ல விலை உயர்ந்த வெடியாக வைப்பார்:)).. நான் வச்சால் அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்றாகிடுதே எல்லோருக்கும்:)) அதனால்தான் மாட்டி விட்டேன் நெ.தமிழனிடம்:))

    பதிலளிநீக்கு
  80. யெஸ் மியாவ் :) பிளாக்ஸ் எல்லாம் அதிருது :)
    எனக்கும் கமெண்டை போட்டோமா போகனோமான்னு முடியலை அங்கேயே இருந்து சீட்ல உக்கார்த்தி ட்ரெயின் போறவரைக்கும் டாட்டா காமிச்சபின் தான் கமெண்ட் விழுது

    பதிலளிநீக்கு
  81. எங்கள் குடும்ப ப்ளாகிற்கும், தில்லையகத்து கீதாவுக்கும், ஸ்ரீராம், நெல்லைத்தமிழன் அனைவருக்கும் நன்றி.

    இதே சினேகம் எப்போதும் வளர் வாழ்த்துகள். இங்கே மிதி பாகல் நிறையக் கிடைக்கிறது.
    அதை வறுத்து அரைத்த குழம்பாக உங்க முறைப்படி செய்கிறேன் கீதா.
    நன்றி.
    உப்புச்சார் என்றால் ஊறுகாய் என்ற பொருளும் தொனிக்கும்.

    பதிலளிநீக்கு
  82. ஏஞ்சலின், கமென்ட் கொடுத்தா உடனே எனக்கும் போகிறதில்லை! நாலைந்து க்ளிக்குக்கு அப்புறம் தான் போகுது. அதான் நேத்திக்கு முதலிடம் போச்சு! இன்னிக்கு என்னனு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
  83. நேற்று நிறைய தடவை வந்து பார்த்து பார்த்து ஏமாந்துவிட்டேன் பதிவு வரவில்லை என்று.... ஆனால் ஆபிஸ் சென்ற பின் பார்த்தால் இங்கே எல்ளோரும் கும்மி அடிச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  84. ///ஏன் இதை உப்பு சார் என்று சொல்கிறீர்கள் என்று என் மாமியாரிடம் கேட்க அவரும், “அப்படித்தான் சொல்றது” என்று சொல்லிவிட்டார்//

    மாமியாரை கேள்வி கேட்கிற அளவிற்கு பெரிய ஆளாகிவிட்டீர்காள் அப்படி கேள்வி கேட்டும் அவர்கள் இன்னும் அமைதியாக இருக்கிறார்களா அது நல்லதுக்குகில்லையே உங்கள் மாமியாரை என் வாட்சப் குருப்பில் சேர்கணுமே

    பதிலளிநீக்கு
  85. பண்ணியது இரண்டு பாவக்காய் அதை நாலு ஐந்து நாளுகழிச்சு சாப்பிட்டால் நல்லா இருக்குமாம். பாவக்காயை பண்ணி வைச்சிட்டு அதை சாப்பிட பிடிக்காம வைத்திருக்கும் குழந்தை சொன்ன ஐடியாவாக அல்லவா இருக்கிறது இது

    பதிலளிநீக்கு
  86. ///ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம் ///


    ரிசிப்பிதான் புதுசாக இருக்கு என்று பார்த்தால் சாப்பிடும் முறையும் அல்லவா புதுசா இருக்கு எல்லோரும் வழக்கமாக தட்டில் அல்லது இலையில் வைச்சு சாப்பிடனும் என்று சொல்லுவாங்க ஆனால் இவங்க ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம் என்று அல்லாவ சொல்லுறாங்க

    பதிலளிநீக்கு
  87. ///மென்மையான இனிப்பு தவிர மற்ற சுவைகள் இரவு நேரத்துக்கு ஆகாது. அந்தச் சுவைகள் இனிய இல்லறத்திற்கு எதிர்விளைவுகளைக் கொடுக்கும். வெற்றிலையின் காரம்.. பாக்கின் துவர்ப்பு நல்லது. அதனால தான் இரவில் தாம்பூலம் தரிப்பது. இரவு நேரத்துக்கு எளிமையான உணவு.//

    இங்க வருகிற என்னைத்தவிர( நான் என்றும் 16 ) மற்ற எல்லோரும் 40 ப்ளஸ் அவங்களுக்கு எல்லாம் இந்த வயசில் இந்த அட்வைஸ் தேவையா? இப்ப பாருங்க எல்லாம் பாகற்காய் ரிசிபபியை பண்ணி பார்பதற்கு பதிலாக இரவில் தாம்பூலம் ரெடி பண்ணப் போறாங்க..இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு எங்க்ள்ப்ளாக் தளம் ஒன்ர்கள்தான் பொருப்பு

    பதிலளிநீக்கு
  88. //அட்டகாசம், இந்தக் குழம்பை என் மாமியார் அரைப்புளிக்குழம்பு என்பார்கள். // ஹெஹெஹெஹெ, இப்போத் தான் பார்த்தேன். அரைப்புளிக் குழம்பு செய்முறையே வேறே! நேத்திக்கு முதல்லே வர முடியாத காரணத்தாலும், கணினி செய்த சதியாலும் அவசரத்தில் போட்ட கமென்ட். உண்மையில் இந்தக் குழம்புக்குக் கடுகு, பாவக்காய்க் குழம்புனு பெயர்! செய்முறை எழுதி வைச்சிருந்ததை எடுத்துப் பார்த்ததும் தான் நினைப்பே வந்தது. அரைப்புளிக்குழம்புக்கு மோர்+புளி சேர்ப்பாங்க! :))))

    பதிலளிநீக்கு
  89. http://geetha-sambasivam.blogspot.in/2016/04/blog-post.html

    http://geetha-sambasivam.blogspot.in/2016/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  90. மதுரை கமென்ட் எல்லாம் சரியா போகாததால் ரொம்ப கும்மி அடிக்க முடியலை...உங்க கமென்ட் கூட இப்பத்தான் பார்த்தேன்...

    ஹா ஹா ஹா மாமியாரை வர்சப் க்ரூப்பிலா.../பண்ணியது இரண்டு பாவக்காய் அதை நாலு ஐந்து நாளுகழிச்சு சாப்பிட்டால் நல்லா இருக்குமாம். பாவக்காயை பண்ணி வைச்சிட்டு அதை சாப்பிட பிடிக்காம வைத்திருக்கும் குழந்தை சொன்ன ஐடியாவாக அல்லவா இருக்கிறது இது//

    ஹா ஹா ஹா ஹா ஹா....உர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர் எல்லாம்....

    கீதா/

    பதிலளிநீக்கு
  91. கீதாக்கா நீங்க அரைப்புளிக் குழம்புனு சொன்னதும் எனக்கும் அந்த டவுட் வந்தது...ஒரு வேளை உங்க மாமியார் அப்படிச் சொல்றார் போலனு நினைச்சேன்...நிங்கள்.அரைப்புளிக் குழம்பு என்பதை நாங்கள் தேங்கா அரைச்ச குழம்பு/எரிகொள்ளி என்போம்...புளியும், மோரும் விட்டு செய்வது...இந்த அரைப்புளிக் குழம்பு என்பதை நான் நெட்டில் அப்புறம் இங்கு எபியில் தான் ரெசிப்பி சேம் என்றாலும் பெயரை அறிந்தேன்....ஏதோ ஒரு பின்னூட்டத்தில் ஐ திங்க் நெல்லையின் ரெசிப்பிக்கு வந்த பின்னூட்டத்தில்...

    அப்புறம் நீங்க கெட்டியா வைச்சு சாப்பிடுவோம்னு சொன்னதும் டவுட் வந்துச்சு..அந்தக் குழம்பை எப்படிக் கெட்டியா வைக்க முடியும்னு...அப்புறம் கேட்க நினைத்து விட்டுப் போச்சு...

    ஓ கடுகு பாவக்காய் குழம்பா பெயர்...ஓகே ஒகே...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!