1) சுசீலா கோலியைச் சந்தியுங்கள்! விவசாயக் கூலிக்குச் சென்று கொண்டிருந்த, படிக்க எந்த வசதியுமே இல்லாத அந்த கிராமத்தில், அரசாங்கத்தின் உதவியும் ஆரம்ப காலங்களில் கிடைக்காத நிலையில், சுமார் 250 குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்த பெண்.
2) கர்நாடக தலைமைச் செயலாளர் திருமதி ரத்னா பிரபா. மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை விசாரித்து, அவனுக்குப் படிப்பில் ஆர்வம் இருப்பதை அறிந்து படிக்க ஏற்பாடு செய்தார். 27 வருடங்களுக்குப் பின் அந்த "சிறுவன்" அவரைச் சந்தித்து நன்றி சொன்ன சம்பவம். பிரதமரும் பாராட்டிய சம்பவம்.
3) பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் முன்னேற்றத்துக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்று அவர்களுக்கு மொபைல் செயலிகள் குறித்து இலவசப் பயிற்சி கல்வி வழங்கும் ஆசிரியை ரேணுகா.
4) "புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி... பாரதி சொன்னானே... கவி பாரதி சொன்னானே...."
மாணவி நந்தினி கூறியதாவது: "என் தாய் இறந்த பின், தந்தை என்னை விட்டு சென்று விட்டார். அதன்பின், என் பெரியம்மா பாதுகாப்பில் இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, பெரியம்மா திருமண ஏற்பாடு செய்தார்.
'திருமணம் வேண்டாம்' எனக் கூறினேன்; ஏற்கவில்லை; என் நண்பர்கள் கூறியதையும் ஏற்கவில்லை. கலெக்டருக்கு போன் செய்தேன்; அவரது உதவியாளர் பேசினார்...."
வாழ்க...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா...நான் ஆஜர்!!
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசுசீலா கோலிக்கு சல்யூட்!!! பொக்கே!! பாராட்டுகள்!
பதிலளிநீக்குநகரத்தில் இருந்து கொண்டும் எதுவும் செய்ய முடியாமல், செய்யாமல் இருப்பவர்களின் நடுவே எந்த வசதிகளும் இல்லாத கிராமத்தில் வாழும் சாதாரண எளிய மக்கள் இவர்கள் செய்யும் சேவையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை...
கீதா
புதுமைப் பெண்கள் வாழ்க...
பதிலளிநீக்குரத்னபிரபா அவர்களுக்கும் பாராட்டுகள்!! இந்தச் செய்தியும் முதல் செய்தியும் வாசித்ததும் கண்களில் நீர் கோர்த்தது மனம் நெகிழ்ந்து. ரத்னபிரபா அவர்களைப் பிரதமர் பாராட்டியதும் நல்ல விஷயம். இப்படி நல்ல செயல்களை அறிந்து பாராட்டி ஊக்குவித்தால் அரசுப் பணியாளர்கள் பாசிட்டிவாக நேர்மையாக நல்ல விதமாகச் செயல்படுவார்கள். இப்படியான செய்திகள் நம்பிக்கை அளிக்கிறது.
பதிலளிநீக்குஆசிரியை ரேணுகா!! வாழ்க! இது ஒரு வித்தியாசமான பயிற்சி. வறுமையில் படிக்கக் கஷ்டப்படும் கிராமத்துக் குழந்தைகளுக்குத் தங்கள் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்ள உதவும் பயிற்சி..சூப்பர்!!! குடோஸ் டு ஆசிரியை ரேணுகா!!
அட! மாணவி நந்தினி! எப்படித்ட் தைரியமாகச் செயல்பட்டிருக்கிறார்!! வாழ்த்துகள் நந்தினி! மேலும் நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேறிடவும் வாழ்த்துகள்! அரசும் உடனே செயல்பட்டு அந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துப் பாராட்டி வாவ்!! எத்தனையோ பெண் குழந்தைகள் இப்படியான சூழலில் சிதைக்கப்ப்ட்டு, இப்படியான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பெண் குழந்தைகளைப் பாழாகும் செய்திகளின் நடுவே இப்படியான செய்தி மகிழ்வளிக்கிறது.
அம்மாணவிக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் நன்றாக வரவேண்டும் என்றும் மனது வேண்டுகிறது. அனைத்தும் கல்வி சார்ந்த பாஸிட்டிவ் செய்திகள்!!! சூப்பர்ப் ஸ்ரீராம்!
கீதா
கல்வி சார்ந்த பெண்கள் முன்னெடுத்துச் செல்லும் பாசிட்டிவ் செய்திகள்...!! பாரதி கண்ட பெண்கள் வாழ்க!!!
பதிலளிநீக்குகீதா
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
பதிலளிநீக்குமூலவரின் (சுசீலா கோலி ) படத்தை போடாமல்
உற்சவ மூர்த்தி (ரத்ன பிரபா)படத்தை போட்டது ஏன் ?
இன்னும் பொது கழிப்பிடங்களில் ஆண் /பெண் படம் போடும் வழக்கம்
தொடர்வதையே இது காட்டுகிறது.
சில நாட்களாக இணையம் வர இயலா நிலை
பதிலளிநீக்குஇன்று தான் வந்தேன்
தம காணவில்லையே
பாராட்டுக்குறியவர்கள் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குநாலு செய்திகளையும் படித்தேன். ரத்னப் ப்ரபா அவர்கள் செய்தது எதையும் எதிர்பாராமல் ஒருவனுக்கு வாழ்வு தந்தது. அது அவன் தலைமுறையை மாற்றிவிடும். ரேணுகா அவர்கள் செய்வது சமூக சேவை. எளியர்வர்களுக்குத் தன் நேரத்தைச் செலவழித்து கல்வி தருகிறார். மாணவி நந்தினி, தான் முன்னேறவேண்டும் என்பதை மனதில் கொண்டு, தன் அறிவுத்திறத்தால் அதற்குரிய வழியைக் கண்டுபிடித்துள்ளார், அவருக்கு பரிசு வழங்கியதன்மூலம் தமிழக அரசு தன் கடமையைச் செய்துள்ளது. எல்லாவற்றையும்விட மிகவும் கவர்ந்தது, சுசீலா கோலியின் அர்ப்பணிப்பு, அவர் கணவரும் அவருக்குச் செய்த நன்மை. வாழ்க்கை வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தைக் கொண்டுவந்துள்ளார் சுசீலா கோலி. மிகுந்த பாராட்டுக்குரியவர்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவிராட் கோலியிலிருந்து சுசீலா கோலிக்கு கவனத்தைத் திருப்பியிருக்கிறீர்கள். நல்லது. கிராமத்து வீடுகளிலிருந்து குழந்தைகளை வெளியே இழுத்து பாடம் சொல்லிக்கொடுப்பது பகீரதப் பிரயத்னம்தான். பாராட்டுக்கள். ரத்னப்ரபா பரவாயில்லை. (துணைக் கலெக்டர் போஸ்ட்டிலிருந்து தலைமைச் செயலர் வரை வந்தவருக்கு இத்தனை வருடங்களில் எவ்வளவோ செய்வதற்கு வாய்ப்பிருந்திருக்கும்.) நந்தினி simply gutsy . இந்தச் சிறுவயதில் சமயோசிதபுத்தியும், துணிவும் காட்டியிருக்காவிட்டால், கிழிந்த துணியாய்ப் போயிருக்கும் அவர் வாழ்க்கை.
பதிலளிநீக்குஎல்லாம் சரி; இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலை?
ரேணுகா என்ன செயற்கரிய செய்துவிட்டார் அப்படி? பின்தங்கிய மாணவிகளுக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது. So ? அதற்காக மொபைல் செயலியா? முதலில் அத்தகைய மாணவிகளிடம் சொந்தமாக நல்லதொரு மொபைல் இருக்குமா? வாங்கத்தான் முடியுமா? மரத்தடியிலே உட்கார்ந்து ஓசியிலே குட்டித்திரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் பொழுது போகும். பணம் கொட்டிவிடுமா ஏழைகளுக்கு? என்ன சொல்லவருகிறது தினமணி?
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்கு