இன்றைய 'கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரனின் சிறுகதை இடம்பெறுகிறது.
அன்புள்ள ஸ்ரீராம்,
வணக்கம். இத்துடன் கேட்டு வாங்கி போட்ட கதைக்காக என்னுடைய கதையை இணைத்துள்ளேன்.
அறுபதுகளின் இறுதியில் ஆனந்த விகடனில் வெளியாகி, பின்னர் மேடை நாடகமாக சக்கை போடு போட்ட தனிக்குடித்தனம் நாடகத்தை இப்போது எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன் விளைவு இந்தக் கதை. நகைச்சுவையாக எழுத விரும்பினேன், ஆனால் சீரியசாகி விட்டது.
நன்றி!
அன்புடன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
=============================================================================
தனிக் குடித்தனம் 2017
அம்மா நான் கிளம்பறேன். இன்னிக்கு ராகுலை ஸ்கூலிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து விட முடியுமா?
அர்ச்சனா செருப்பை மாட்டிக் கொள்ளும் போது "அப்பாக்கு என்னமா உடம்பு சரியில்லையா? இன்னும் எழுந்திருக்கலையே?" என்று கேட்டதற்கு "அதெல்லாம் ஒண்ணுமில்ல ராத்திரி ரொம்ப நேரம் கம்யூப்யூட்டரில் ஏதோ பார்த்துண்டிருந்தார்.., லேட்டாகத்தான் தூங்கினார்.." என்ற வித்யாவின் பதிலில் திருப்தி அடைந்த அர்ச்சனா கிளம்பிச் சென்றதும் ராஜு உள்ளிருந்து வெளியே வந்தார். " என்ன இன்ஸ்டரக்ஷன் இன்னிக்கு? புள்ளையை ஸ்கூலிலிருந்து கூட்டிண்டு வரணுமா? ஏனாம்?
பாலு(ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லும் ஆட்டோக்காரர்) மத்தியானம் ஊருக்குப் போறானாம், அதான்.
"அப்போ நாளைக்கு.."
"நாமதான் கொண்டு போய் விடணும்....."
"நாம என்ன நாம? நீங்கதான் கொண்டு போய் விடணும்னு சொல்லு, நீயா போகப் போற..? என்னால முடியாது"
"சரி நான் போறேன்..., நம்ம குழந்தைகளுக்கு நாம செய்யாமல் யார் செய்வார்கள்?"
"ஏன் அவ புருஷனை செய்யச் சொல்லு.."
"அவனால பண்ண முடிஞ்சா, அவன் பண்ண மாட்டானா?"
"கிழிச்சான்.., வீட்டுல ரெண்டு கிழம் தண்டமா உட்கார்ந்திருக்கே, செய்யட்டுமே என்கிற எண்ணம்... இதெல்லாம் வேண்டாம் தனியா போய் தொலைக்கலாம்னு சொன்னா நீ எங்கே கேக்கற..? புள்ள, மாட்டுபொண்ணுனு உட்கார்ந்திருக்க.."
"தனியா போனா மட்டும் நமக்கு வேலை கிடையாதா?"
வித்யாவின் கேள்விக்கு ராஜு பதில் சொல்லத் தொடங்கும் பொழுது, காலிங் பெல் அழைத்தது. கதவைத் திறந்து கூறியரை வாங்கினாள்.
இதுக்குத்தான் நாம் இருக்கிறோம். கூரியர் வாங்க, அடுத்தது தோபி வருவான், அயர்ன் பண்ண வேண்டிய துணிகளை கொடுத்து, அவன் கொண்டு வருவதை வாங்கி வெச்சு... காசு வாங்காத வேலைக்காரார்கள்..."
ராஜு பேசிக்கொண்டே, இல்லை பொருமிக் கொண்டே போக, வித்யா பதில் சொல்லாமல் உள்ளே சென்றாள். பதில் சொல்ல ஆரம்பித்தால் அது அனாவசிய தர்க்கத்தில்தான் முடியும் என்பதால் பதில் சொல்வதை தவிர்த்தாள். ஆனால் ராஜு விடுவதாயில்லை.
"தெரியாமத்தான் கேக்கறேன், என்னும் எத்தனை நாளைக்கு இப்படி வேலை செஞ்சுண்டே இருக்கப் போறதா உத்தேசம்? திருப்பி திருப்பி சமையல், துணி தோய்ச்சு, உலர்த்தி, மடிச்சு வைச்சு... எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போர? உனக்கு போரே அடிக்கலையா?
என்ன பண்ண முடியும்?
இது எதுவும் செய்ய வேண்டாம், நிம்மதியா நாம இஷ்டப்பட்டதை செஞ்சுண்டு இருக்கலாம். நான் சொல்றத கேட்டா போறும்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது வித்யாவிற்கு தெரிந்ததால் மௌனம் சாதித்தாள்.
ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாம் என்பதை நீண்ட நாட்களாக சொல்லி வந்தாலும், ஆறு மாதங்களுக்கு முன் நண்பர்கள் ரீ யூனியனுக்கு சென்று விட்டு வந்த பிறகு அவருடைய நண்பர் ஒருவர் தான் தங்கி இருக்கும் சீனியர் சிட்டிசன் ஹோமிற்கு இவர்களை விருந்தினர்களாக அழைத்ததன் பேரில் அங்கு சென்று விட்டு வந்த பிறகு ராஜுவின் சீனியர் சிட்டிசன் ஹோம் மோகம் அதிகமாகி விட்டது.
ராஜுவின் மகனுக்கும் மகளுக்கும் அவர் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக திருமணம் முடிந்து விட்டது. அவர் எல்லோரிடமும்," இனமே நான் பிரீ, எல்லா ஊர்களுக்கும் போகப் போறேன்." என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நாம் நினைத்தபடியே எல்லாம் நடந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம்?
அவரோடு இருந்த அவருடைய தந்தை திடீரென்று படுத்த படுக்கையாகி விட்டார். ராஜுவின் இரு தம்பிகளில் ஒருவர் வெளிநாட்டிலும், மற்றவர் மும்பையிலும் இருக்கிறார்கள். மும்பையில் இருக்கும் மகனுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது, எனவே தந்தை ராஜுவோடுதான் இருந்தார். அவர் படுத்த படுக்கையாகிவிட வீட்டை விட்டு எங்கேயும் போக முடியாத நிலை.
அவரை நல்லபடியாக கரையேற்றிய பிறகு ஒரு வருடம் கோவிலுக்கு செல்லக் கூடாது என்று சிலரும், சென்றால் தப்பில்லை என்று வேறு சிலரும் சொன்னார்கள். கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன? ஊட்டி,கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்குச் செல்லலாமே, என்று வித்யாவிடம் சொன்னார். ஆனால் அவளால் வயதாகிவிட்டால் கோவில்,குளம் என்றுதான் செல்ல வேண்டும் என்னும் இந்திய சிந்தனையில் இருந்து விடுபட முடியவில்லை. எனவே இரண்டு பேருக்கும் திருப்தி அளிக்கும் விதமாக பெங்களூர், மைசூர், தலைக் காவேரி, கூர்க் என்று சென்று விட்டு வந்தார்கள்.
மருமகள் சூலுற்றாள். மசக்கையில் கஷ்டப்பட்ட அவளுக்கு தேவையான சிசுருஷைகள் செய்வதிலும், குழந்தையோடு வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையை பார்த்துக் கொள்வதிலும் வித்யா பிசியாகி விட்டாள். ராஜு தான் தனிமை படுத்தப்பட்டதாக உணர்ந்தார்.
தான் ஆசைப் பட்டபடி தன்னுடைய ஒய்வு காலத்தை கழிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் பெரும்பாலான நேரங்களில் கோபமாக குறிப்பாக மனைவி மேல் ஆத்திரமாக வெளிப்பட்டது.
குடும்பத்தில் மூத்த மகன் என்பதால் பொறுப்புகள் அதிகம், பெற்றோர், தம்பிகள், தங்கைகள் இருவருக்கும் திருமணம் ஆகியிருந்தாலும் அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வருகை புரிவார்கள். மனைவி வித்யாவும் இதே போன்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்திருந்ததாலோ என்னவோ எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டாள்.
அவர்களுக்கென்று தனிமை கிடைத்ததே இல்லை. அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரும் மட்டும் எங்கும் சென்றதும் கிடையாது. எல்.டி.சி. சலுகையில் சில ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள் அப்போதும் பெற்றோர்களும் உடன் வருவார்கள்.
சிறு வயதில் குடும்பத்தில் எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை குறையில்லாமல் செய்தாகி விட்டது. இனிமேலாவது ஒய்வு எடுத்துக் கொள்ளலாம், நம் விருப்பப்படி வாழலாம் என்றால் இந்த மக்கு வித்யாவிற்கு புரிய மாட்டேன் என்கிறதே..என்று ஆதங்கப் பட்டார்.
அவருடைய நண்பர் தங்கியிருந்த முதியோர் இல்லம் ஒரு ஸ்டார் ஹோட்டலைப் போல இருந்தது. அங்கே இருப்பவர்கள் எல்லோரும் வசதியானவர்கள். பெரும்பாலானவர்களின் இரு குழந்தைகளுமே வேய் நாட்டில் இருப்பதால் பெற்றோர்கள் அந்த ஹோமில் இருப்பது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. தினசரி ஸ்கைப்பில் அல்லது வாட்ஸாப் வீடியோ காலில் பேசிக்கொண்டு, இந்தியா வரும் பொழுது பெற்றோகளோடு நன்கு நாட்களோ, ஒரு வாரமோ தங்கி விட்டு செல்வதில் அவ்வப்பொழுது பணம் அனுப்பிக் கொண்டிருப்பதில் தங்கள் கடமையை சரிவர செய்வதாக திருப்தி பட்டுக்கொண்டிருந்தனர்.
நமக்கு என்னடா வேணும்? வேளா வேளைக்கு காபி, டிஃபன், சாப்பாடு எல்லாம் கிடைக்கிறது. வீட்டில் டி.வி. இருக்கு, எங்கேயாவது போகணும்னா இவங்களே வண்டி அரேன்ஜ் பண்ணித்தறாங்க. கோவில் இருக்கு, லைப்ரரி இருக்கு, பேச, பழக நம் ஏஜ் க்ரூபில் மனிதர்கள்..
தனியா வீட்டில் இருந்தோம்னு வெச்சுக்கோ, நிறைய ப்ராப்லம்...நம்மளே எல்லா வேலையையும் செஞ்சுக்கணும். உடம்பு முடியாம போச்சுன்னா ரெண்டு பேருமே வயதானவர்கள், யார் கவனிச்சுக்க முடியும்? தவிர உன் மனைவியை நினைத்துப் பாரு, எவ்வளவு நாள் அவங்க சமைத்துக் கொண்டே இருப்பாங்க? நண்பன் சீனியர் சிட்டிசன் ஹோமின் வசதிகளை பட்டியல் இட்டுக்கொண்டே போக ராஜு மெர்சலானார்.
தனியா வீட்டில் இருந்தோம்னு வெச்சுக்கோ, நிறைய ப்ராப்லம்...நம்மளே எல்லா வேலையையும் செஞ்சுக்கணும். உடம்பு முடியாம போச்சுன்னா ரெண்டு பேருமே வயதானவர்கள், யார் கவனிச்சுக்க முடியும்? தவிர உன் மனைவியை நினைத்துப் பாரு, எவ்வளவு நாள் அவங்க சமைத்துக் கொண்டே இருப்பாங்க? நண்பன் சீனியர் சிட்டிசன் ஹோமின் வசதிகளை பட்டியல் இட்டுக்கொண்டே போக ராஜு மெர்சலானார்.
இவ்வளவு சொன்ன உங்க நண்பர் அந்த ஹோமுக்கு எவ்வளவு பைசா கட்டணும்னு சொன்னாரா?
கொஞ்சம் அதிகம்தான், ஆனால் நம்மால் அபோர்ட் பண்ண முடியும். என்று மனைவியிடம் கூறி விட்டார். ஆனால் முதியோர் இல்லத்தில் சேர வேண்டும் என்ற அவரின் விருப்பத்தை மகனும் மகளும் வேறு காரணம் கூறி மறுதலித்தார்கள்.
"நாங்கள் வெளியூரில் இருந்தால் நீங்கள் சீனியர் சிட்டிசன் ஹோமில் இருக்கலாம், நாங்கள் இங்கே இருக்கும் பொழுது நீங்கள் அங்கு செல்வது சரியாக இருக்காது. தவிர இட் இஸ் டூ எர்லி பார் யூ. சீனியர் சிட்டிசன் ஹோமுக்கெல்லாம் போனால் எல்லாருமே வயதானவர்களாகத்தான் இருப்பார்கள், அந்த சூழலே உங்களை இன்னும் வயதானவர்களாக உணரச் செய்யும். இங்கே என்றால் மிடில் ஏஜ்ட் பீப்பிள், குழந்தைகள் என்று எல்லோருடனும் பழக முடியும். இட் மேக்ஸ் தி டிபாரென்ஸ்.."
யார் என்ன சொன்னாலும் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு சொர்க்கம் இருக்கும் பொழுது தான் நரகத்தில் உழல்வதாகத்தான் ராஜுவுக்கு தோன்றியது.
வேலைச் சுமையை காட்டி மனைவியை கன்வின்ஸ் செய்ய முயன்றார். நீயும்தான் எவ்ளோ வருஷமா வீட்டு வேலை செஞ்சுண்டே இருக்க..? ரெஸ்ட் எடுத்துக்கணும்னு தோணலையா?
வேலை செய்ய முடியறதேன்னு சந்தோஷமா இருக்கு? தவிர என்ன பெரிய வேலை? எல்லாத்துக்கும் ஹெல்ப்புக்கு ஆள் இருக்கு, அர்ச்சனாவும் கூட மாட ஒத்தாசையா இருக்கா, அப்புறம் என்ன?
வித்யா தீர்மானமாக கூறிவிட ராஜுவால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் தன் விருப்பம் நிறைவேறாத கோபத்தை விதம் விதமாக காட்டத் தொடங்கினார். மகனுக்கு ம் மருமகளுக்கும் சிறு சிறு உதவிகள் கூட செய்ய மறுப்பது, காபியோ, உணவோ கிடைப்பதில் கொஞ்சம் தாமதமானாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது என்று அவரின் வம்படிகள் அதிகமாகிக்கொண்டே சென்றது. ஏதாவது ஒரு விஷயத்தால் சண்டை வந்து தங்களை தனியே போக விடுவார்கள் என்று எதிர் பார்த்தார்.
ஒரு நாள் மருமகளுக்கு அவள் சிநேகிதி பரிசளித்த க்ளாஸ்வேர் ஒன்றை கை தவறி போடுவது போல கீழே போட்டு உடைத்தார். அந்த க்ளாஸ்வேர் அர்ச்சனாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அதை பரிசளித்த அவள் தோழி இப்போது உயிரோடு இல்லை. அவள் ஞாபகமாக அதை பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தாள். என்றாலும் ராஜு அதை உடைத்ததை அர்ச்சனா பெரிது படுத்தாமல் விட்டு விட்டாள்.
அவருடைய விருப்பத்தை தொலைகாட்சி நிறைவேற்றியது. ஒரு நாள் அவர் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய பேரன் சேனலை மாற்றி கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்தான்.
நான் பார்த்துண்டிருக்கேன், சேனலை ஏன் மாத்தறை?
கார்ட்டூன் பார்க்கணும் தாத்தா
கார்ட்டூன் எப்போ வேணா பார்க்கலாம், மேட்ச் முடியப்போறது, போடு
போ தாத்தா என்று பேரன் கூறியது அவருக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.
மரியாதை இல்லாமல் எதிர்த்தா பேசற? என்று குழந்தை முதுகில் ஓங்கி அறைந்தார். அதே சமயத்தில் அவர் மகன், மருமகள் இருவரும் வீட்டிற்குள் பிரவேசித்தனர். ஓடிப் போய் பெற்றோர்கள் காலை கட்டிக்கொண்ட குழந்தை வீறிட்டு அழுதான். பெற்றோர்கள் சமாதானப்படுத்தியபின் அழுகையை நிறுத்திய குழந்தை சற்று நேரம் கழித்து மூச்சு விட திணற ஆரம்பித்தான், பயந்து போனவர்கள் டாக்டரிடம் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். ஏதோ அதிர்ச்சிதான் மூச்சுத்திணறலுக்கு காரணம் என்று கூறிய மருத்துவர் குழந்தைக்கு வைத்தியம் பார்த்ததோடு," என்ன சார் படிச்சவங்களே இப்படி நடந்துக்கலாமா? சின்ன குழந்தைகளை அடிப்பதே தப்பு, அதுவும் முதுகுல அடிக்கலாமா" என்றார்.
வீட்டிற்கு வந்து குழந்தை சாதாரணமாக தூங்குவதை பார்த்த பிறகு, தங்கள் அறையை விட்டு வெளியே வந்த மகன் தந்தையிடம், "உங்களுக்கு எங்க போகணுமா அங்க போய்க்கோங்கோ" என்றான்
இல்லடா, அது என்று ஏதோ சொல்ல வந்த அம்மாவை கையமர்த்தினான். "ப்ளீஸ்மா, எதுவும் பேசாத, போறும்.." என்று கூறி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டான்.
மறு நாள் காலை டி.வி. பக்கம் யாரும் போகவில்லை. வீட்டில் ஒரு சந்தோஷமற்ற அமைதி நிலவியது. மகன் இரண்டு,மூன்று சீனியர் சிட்டிசன் ஹோம்களின் அட்ரஸ் மற்றும் தொலைபேசி எண்களை அப்பாவின் மெயில் ஐ.டி.க்கு அனுப்பினான்.
அவருடைய நண்பர் இருக்கும் ஹோமில் தற்சமயம் இடம் காலி இல்லை என்று கூறி விட்டார்கள். சென்னையில் பார்த்த மற்ற இடங்கள் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை. கோவைக்குச் செல்ல தீர்மானித்தார்.
அவர்கள் அங்கு செல்லும் நாள் வந்த பொழுது சந்தோஷத்தைவிட இப்படி சண்டை போட்டுக் கொண்டு கிளம்புகிறோமே என்னும் வருத்தம் அதிகம் இருந்தது. வாழ்க்கையில் சிலவற்றை அடைவதர்க்காக சில காரியங்களை செய்கிறோம், அடைந்த பிறகுதானே அப்படி அசட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
அவர்களை மகன் தன் காரிலேயே கோவைக்கு கொண்டு விட்டான். அங்கு அவர்களுக்கு தேவையானவைகளை வாங்கி கொடுத்து விட்டு," நீங்க இங்கேதான் இருக்கணும்னு இல்லப்பா, எப்போ வேணா எங்க கிட்ட வரலாம்" என்று கூறி விட்டு சென்றான்.
அவர்கள் உணவருந்த சென்ற போது "வெல்கம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் ராஜு" என்று கை தட்டி வரவேற்றனர். முதலில் தன்னை அங்கே பொருத்திக் கொள்ள சிரமப்பட்ட வித்யா, மெள்ள மெள்ள காலையில் நடைப் பயிற்சி, மதியம் அருகில் உள்ள கோவில் களுக்குச் செல்வது, யூ டியூபில் திருப்புகழ், சௌந்தர்ய லஹரி கற்றுக் கொள்வது என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பொழுதை ஓட்ட ஆரம்பித்தாள். ராஜு நினைத்தது போலவே நிறைய ஓய்வு கிடைத்தது. எந்த தொந்திரவும் இல்லாமல் டி.வி. பார்க்க முடிந்தது, ஆனால் அதுதான் ஏதோ செய்தது. நடுவில் ஒரு முறை மகள்,மாப்பிளை, சம்பந்திகள் இவர்களை பார்க்க வந்தார்கள்.
"ஏ க்ளாஸா இருக்கே..! நம்மளும் இங்கே வந்துடலாமா?" என்று மாப்பிள்ளையின் அப்பா தன் மனைவியிடம் கேட்ட பொழுது,"வேண்டாம்.." என்று இவர் மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.
ஆரம்பத்தில் மகனும், மகளும் தினசரி போனில் பேசிக்- கொண்டிருந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு அது வாரம் இரு முறை என்று ஆனது.
ஒரு நாள் வழக்கம் போல் எழுந்து கொண்டு வாக்கிங் சென்று விட்டு வந்த வித்யா, சோபாவில் உட்கார்ந்தாள். டிபன் சாப்பிட போலாமா என்று இவர் கேட்டதற்கு அவளிடமிருந்து பதில் இல்லை, கண்கள் சொருகி மெல்ல சரியத் தொடங்கினாள்.
பதறிப்போன ராஜு இண்டர்காமில் ஹோமின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வித்யாவை பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
உடலில் சர்க்கரை அளவு குறைந்திருக்கிறது, வேறு ஒன்றும் இல்லை. என்று கூறி ஒரு நாள் அப்ஸர்வேஷனில் வைத்துக் கொண்டிருந்து விட்டு அனுப்பினார்கள். கிளம்பும் முன் அந்த டாக்டர், அவங்களுக்கு மனசுக்குள் ஏதோ கவலை, இருப்பது போல தெரிகிறது. உங்க மகனையோ, மகளையோ வராகி சொல்லுங்க, நான் பேசறேன் அவங்களோட என்றார்.
விஷயம் கேள்விப்பட்ட அவர் மகன் வந்து பெற்றோர்களை ஊருக்கு அழைத்துச் சென்றான். அவர்களை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த பேரன் பொம்மையை வீசி எறிந்து விட்டு ஓடி வந்து காலை கட்டி கொண்ட பொழுது இழந்த ஏதோ ஒன்றை பெற்றது போல இருந்தது.
மகன் வீட்டில் ஒரு வாரம் கழித்து விட்டு மீண்டும் ஹோமிற்கு செல்ல வேண்டும் என்னும் பொழுது அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மகள் கருவுற்றிருக்கிறாள் என்னும் நல்ல செய்தி கிடைத்தது.
இன்னும் கொஞ்ச நாள் உனக்கு இங்கே வேலை இருக்கும், ஹோமிற்கு போக முடியாது. பேசாமல் வெகேட் பண்ணிடலாமா என்று ராஜு கேட்ட பொழுது, பொங்கி வந்த மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு வித்யா சரி என்றாள்.
*********************
வந்த்ஹாச்சு
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எழுத்துப் பிழை, வந்துட்டேன்! :) கமென்ட் போகவே மாட்டேன்னு அடம்!
பதிலளிநீக்குகாலை வணக்கம்...கீதாக்கா, துரை சகோ, ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்
பதிலளிநீக்குகீதா
வணக்கம் ஸ்ரீராம் / கீதா...
பதிலளிநீக்குஆ... கீதா அக்கா.. காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்/ கீதா..
பதிலளிநீக்குதுரை சகோவைக் காணலையே...துரை சகோ நேற்று என் கருத்து பார்த்து பிந்தி விட்டீர்களா?!!! ஆஆஆஆ!! வேண்டாம் வாங்க சகோ!!! நீங்க முதல்ல இனிய காலைவணக்கம் சொல்வது நல்லாருக்கு ...வாங்க..
பதிலளிநீக்குகீதாக்கா எனக்கும் கமென்ட் மிகவும் ஸ்லோ ஆகுது...நேத்து ஏஞ்சலும் சொல்லிருந்தாங்க....
கீதா..
கீதா அக்கா.. எல்லா தளங்களிலும் கமெண்ட் போட்டு ஒன்றரை நிமிடங்கள் கழித்துதான் செல்லவே தொடங்குகின்றன!!
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்கு5.58 !?..
பதிலளிநீக்கு6.00 மணிய மாற்றியாச்சா?...
சொல்லவேயில்லை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1481809
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்...அப்போ என் கணினி குறை இல்லை...எனக்கும் 1 1/2 நிமிடம் சில சமயம் 3 நிமிடம் எடுக்கிறது...சில தளங்கள் ஓபன் ஆக மாட்டேங்குது...ஆனா இன்னும் ஸ்லோ ஆகுது...என் கணினி திணறுது ஹா ஹா..எனக்கு ப்ளாகர் கான்ஃபிளிக்ட் என்றும் வருகிறது...பாவம் ப்ளாகரே திணறுது போல
பதிலளிநீக்குபானுக்கா கதை...வாசிக்க வருகிறேன் அப்புறம்...
வலைத்தள ஜனந்யாகக் கடமை ஆற்ற முடியலையே..
கீதா
ம்ம்ம்ம்ம். ஒரு விதத்தில் ஹோம் என்பது சரியாக இல்லை தான். உடலில் தெம்பு இருக்கும்வரை செய்துக்கலாம் தான். ஆனாலும் இந்த ஹோமுக்குப் போகணும் என்னும் எண்ணம் எங்களுக்கும் உண்டு! எங்க பையர் தான் தடுக்கிறார். :)
பதிலளிநீக்குநான் இந்த தம லிங்க் இணைக்கவே வந்தேன் :)
பதிலளிநீக்குநாளையிலிருந்து மாட்டுப் பொங்கல்/கணுப் பண்டிகை வரை வர முடியாத்! :)))))
பதிலளிநீக்குலிங்க் சரியான்னு பாருங்க . எங்காப்லாகில் என்னால் கமெண்ட் போடவே முடில :)
பதிலளிநீக்குஎல்லாருக்கும் வணக்கம் நான் தூங்கபோறேன் :)
பதிலளிநீக்குதுரை சகோ எனக்கும் அப்படித் தோன்றியது....கொஞ்சம் முன்னாடி ஆகிவிட்டதோனு....உங்கள் தளம் இன்னும் திறக்கவே இல்லை...ப்ளாகர் சண்டி பண்ணுது...இல்லை என் கணினியின் மெமரி ப்ராப்ளமோ இரண்டும் சேர்ந்து படுத்துதோ,....வெங்கட்ஜியின் தளமும் நேற்று படுத்தியது...
பதிலளிநீக்குகீதா
நன்றி ஏஞ்சல்... தளம் சுற்றி தாமதமாகத் திறப்பதால் இப்போதுதான் உங்கள் கமெண்ட் பார்த்து, தம வாக்களித்து, லிங்க் இணைத்து விட்டேன். நன்றி.
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்.. பானுமதி மேடம் படம் இணைக்க விட்டிருந்தேன். அதை இணைக்க லேட் லாஜிக் கொண்டே போக, எதற்கும் இருக்கட்டும் என்று பப்ளிஷ் கொடுத்து விட்டேன்! அதுதான் சற்று முந்தியது போலும்!
பதிலளிநீக்குஇந்த மாதிரியான சிக்கலில் எத்தனை பேரோ...
பதிலளிநீக்குநேர்த்தியான கதை ..
மங்கலகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி..
I have been suggesting to my husband that we should move to a home when we become senior citizens.... That's a long way now though...
பதிலளிநீக்குStory provokes various lines of thought... After all, man is a social animal:))
பானுக்கா நல்ல கதை. இதில் நிறையப் பேசலாம். முன்பெல்லாம் பார்த்தீங்கனா, பெரியவர்கள் தங்கள் கூழந்தைகளூடான் தான் இருந்தார்கள்> அப்போது இல்லாத எண்ணங்கள் இப்போது உள்ள பெரியவர்களீடம் தோன்றி உள்லது என்றால் நம் வாழ்வியல் எவ்வளவு தூரம் மாறீயுள்ளது என்பதற்கு உதாரணமாக அமைகிறது. ஒரு விதத்தில் பார்க்கப் போணாஅல் குழந்தைகள் வெளீநாட்டில் இருந்தால், இங்குப் பெற்றோர் தனியாக ஒரு ப்ஃப்ளாஆடில் வாழ்வதற்கு அதே மாதிரியான சூழலில் ஒரு முதியோர் இல்லத்தில் இருப்பதில் சரிதான் என்று தோண்றூகிறது. அங்கேயே ஒரு ஃப்ளாட் வாங்கிக் கொண்டு கூட கூட இருக்கிறார்களே இப்போது அதற்காஅன ஃபெசிலிட்டிஸ் வந்துவிட்டது. அங்கு பஜன், உடற்பயிற்சி, கைவேலைகள், இப்படி நிறாய்ய ஆக்டிவிட்டிஸ் கூட இருக்கிறாது. ஆனால் பணம் வேண்டும்…நானா நானியில் அது மிகவும் நார்மல் ரேட்டாக இருப்பது போல் உள்ளது. சமீபத்தில் வெளீநாட்டில் இருக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பார்த்த போது அறிந்து கொண்டேண். ஆனால் குழந்தைகள் ஊல் நாட்டில் இருக்கும் போட்ஹு அவர்கல் அருகிலோ அலல்து அவர்கள் ஈறுக்கும் ஃப்ளாடிலோ வேறு ஒரு ஃப்ளாட்டில் தங்கலாம். பேரன் பேத்தி என்ற சந்தோஸ்ஹாம், நம் குழந்தைகள் என்ற சந்தோஷம்ம்…குழந்தைகளூம்< பெரியவர்களை கொஞ்ச நாள் எங்கேணூம் போய் வாருங்கள் என்றூ க்ஹோள்லி இடையிடையில் அனுப்ப வேண்டும். இபப்டி இருந்துவிட்டால் இப்படியான தருணாங்கள் வராது. முடிவு அருமை. எனக்குப் பிடித்தது
பதிலளிநீக்கு. கீதா
கதையைப் படித்துவிட்டேன். பிறகு வருகிறேன். கொஞ்சம் கலக்கம் தரும் சப்ஜெக்ட்.
பதிலளிநீக்குஸாரி பானுக்கா என் கருத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு.. நெட்டில் அடித்தப்பவும் சரி வேர்டில் அடித்து போட்டப்பவும் சரி நிறைய பிழைகள்...அதனால் மூடிவிட்டுத் திரும்ப வந்தேன்....இப்போது ஒழுங்காக அடிக்கிறது.
பதிலளிநீக்குஇப்போது பெரியவர்கள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் இருபப்தும் எங்கள் குடும்பத்தில் இருக்கிறது. இல்லை என்றால் அருகில். புரிதலில். பெரியவர்கள் உதவியாகவும் இருக்கிறார்கள் அதே சமயம் குழந்தைகள் அவர்களை அவர்களுக்குப் பிடித்த இடம், அலல்து செயல்களைச் செய்யுங்கள் என்று ஊக்கமும் அளிக்கிறார்கள். நல்ல புரிதலில் இருக்கும் குடும்பங்களை நான் பார்க்கிறேன். எதிர்மறையாகவும் நடக்கிறதுதான்...ஆனால் பணம் இல்லாத குடும்பங்களிலும் கூட அன்புடன் சேர்ந்து இருப்பவர்களும் இருக்கிறார்கள் அல்லது வெளியில் தள்ளப்பட்டு அவதிப்படும் முதியோர்களும் இருக்கிறார்கள்.
கீதா
காலைல போட்ட பின்னூட்டம் எங்க சிக்கிக்கொண்டதோ. ஸ்ரீராம்தான் வந்து விடுவிக்கணும்.
பதிலளிநீக்குகதை நேர்த்தியா இருக்கு. ஆனாலும் 'இக்கரைக்கு அக்கரை பச்சை'. இன்னொன்று, வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் மிகவும் யோசனை செய்து எடுக்கணும். பையனோடு சேர்ந்து வாழ்ந்தால், அதைத் தொடரணும் (ஒரு ரெண்டு மாசம் எங்கேனும் இருந்துவிட்டு வரலாம், அவங்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும். பெரியவங்க வீட்டில் இருப்பது பலவிதத்திலும் நன்மை). ஆனால், ஒரு தடவை விலகி, பசங்க குடும்பத்தில், நாம் இல்லாதது பழகிவிட்டால், திரும்ப அங்கு சேர்வது கடினம்.
இந்தக்கால முதியவர்களின் மன ஓட்டம் இது. பலஸமயங்களில் அவமதிப்புகளைக்கூட கண்டும் காணாது போகவேண்டியிருக்கும். அப்போது முதியோர் ஹோம்கள் என்ற கானல் நீர் மனதில் தென்படும். தெம்பு உள்ளபோதே ஏதாவது முதியோர் இல்லங்களில் சேர்ந்து பழகிக்கொள்ள வேண்டும். எதற்கு லெக்சர். கதை உள்ளத்தில் உள்ளபடி முதியோர்களுக்குத் தோன்றும்படி அமைந்துள்ளது. ஒரு முறை விலகினால்கூட ஒட்டுவது கஷ்டம். கதை நல்லபடி முடிந்திருப்பது விசேஷம். வீட்டுக்கு வீடு வாசற்படிதான். வாழ்த்துகள். அன்புடன்
பதிலளிநீக்குபானுமதி அக்கா, பிரேக் எடுக்க விரும்பாமல் ஒரே மூச்சில் படிச்சு முடிச்சேன்... உரையாடல்கள் மிக அருமை.... உண்மைச் சம்பவம் போலவே இருக்கு... ஏன் 2017 எனப் போட்டீங்க?...
பதிலளிநீக்குசில வயசான ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள்... அப்படியானவர்களைப் பார்க்க எனக்கு சிரிப்புத்தான் வரும் கோபம் வராது... ஹா ஹா ஹா அவர்கள் கொஞ்சம் இன்றஸ்ரிங்கான பேசனாக இருப்பினம்...
மிக அருமை.... இதுக்குத்தான் சொல்வார்கள் யாரையும் இழுத்துப் பிடிச்சால்.. அவர்களுக்கு ஆசை இன்னும் அதிகமாகும்... ஓரிரு தடவை சொல்லிப்பார்க்கோணும் கேட்கவில்லையா... போய் அடிபட்டு வாங்கோ என விட்டிடோணும்...
வாழ்த்துச் சொல்லவும் பயம்மாக்கிடக்கு:) அதனால மிக அருமையான கதை எனச் சொல்லி அமர்கிறேன்.
நான் நினைக்கிறேன் புளொக்குக்கு ஒவ லோட் ஆகிட்டுது... இனி இந்த புளொக்கை இப்படியே ஓரமாக வைத்துவிட்டு, ஒரு புதிசு ஆரம்பிக்க வேணும் போல.
பதிலளிநீக்குஎன்பக்கமும் அப்படித்தான், சில போஸ்ட் திறக்குதே இல்லை, நேற்று என் பாவக்காய்க்கு பதில் போடலாம் நெ தமிழனுக்கும் அஞ்சுவுக்கும் பதில் போட எவ்வளவோ ட்றை பண்ணியும் ம்ஹூம்ம்ம் திறக்குதே இல்லை:(
கீசாக்காஆஆஆ முதல் பிளேஸ்க்கு வாழ்த்துக்கள்:)...
பதிலளிநீக்குஅதுசரி எதுக்கு மாட்டுப் பொங்கலுக்கு நீங்க பிசியாகிறீங்க?:) எங்களுக்கு ஏதும் தெரியாதென நினைச்சிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:) உங்களிடம்தான் கெள இல்லையே... பிறகென்ன... உப்பூடிச் சொல்லி எஸ்கேப் ஆகிடாமல் என் பக்கம் வரோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)...
மிய்யாவ்வுக்கு ஒன்னுமே தெரியலை..
நீக்குநேத்து பாவக்காய் சாப்பிட்ட எல்லார்க்கும் காசி அல்வா கொடுத்துட்டு 5.58 க்கு பதிவு ரிலீஸ்..
அப்புறம் வூட்டுல கௌ இல்லாட்டியும் கௌ படத்தை வெச்சி மாட்டுப் பொங்க கொண்டாடலாம்..
மிய்யாவ்வுக்கு ஒன்னுமே தெரியலை..
நீக்குநேத்து பாவக்காய் சாப்பிட்ட எல்லார்க்கும் காசி அல்வா கொடுத்துட்டு 5.58 க்கு பதிவு ரிலீஸ்..
அப்புறம் வூட்டுல கௌ இல்லாட்டியும் கௌ படத்தை வெச்சி மாட்டுப் பொங்க கொண்டாடலாம்..
மகன், மகளுக்குத் திருமணம் ஆனாலும் தன்னையும் தன் பெண்டாட்டியையும் அவர்களிடமிருந்து விடுபட்ட 'தனி யூனிட்'டாக நினைக்கக் கூடிய ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும்பாலும் இந்த எண்ணம் சரிப்பட்டு வராது என்றாலும் புருஷன் நினைப்பே தன் நினைப்பு என்று நினைக்கும் பெண்களும் புருஷனின் இந்தப் போக்குக்கு இணக்கமாகப் போகும் தன்மையையும் இயல்பாகவே பெற்று விடுகிறார்கள். சிறு வயசிலிருந்தே குடும்பத்தோடு ஒட்டாமல் 'எல்லாவற்றிலும் தான் தனி' என்று வளரும் ஆண்கள் பிற்காலத்தில் இப்படியே ஆகியும் போகிறார்கள்.
பதிலளிநீக்குமகன், மகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்கள் குடும்பம் தான் அவர்களுக்கு என்று ஆகிப்போகும் காலகட்டத்தில் பெற்றோர்களும் தனித்து வாழ்வது அவரவர்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றுகிற மாதிரி சரிப்பட்டும் போகிறது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை அருகிப் போகிற இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் தனித்து வாழ்வது தான் புத்திசாலித்தனம் என்றும் ஒரு பார்வை பெருபாலான குடும்பங்களில் ஏற்பட்டு வருகிறது.
கதை மாந்தர்களின் உரையாடல்களை சரியான புரிந்து கொள்ள உதவும் "......." கொட்டேஷன்கள் பல இடங்களில் விட்டுப் போயிருப்பது சிலருக்கு கதையை வாசித்துப் புரிந்து கொள்ள சிரமப்படுத்தலாம்.
வாழ்த்துக்கள்.
அதிரடி மியாவ், மாட்டுப் பொங்கலுக்குனு இல்லை. சொந்தம், பந்தம் எல்லாரும் வராங்க! அவங்கல்லாம் 16 ஆம் தேதி தான் திரும்பறாங்க! அதான் வர முடியாதுனு சொன்னேன்! :))))
பதிலளிநீக்கு'ராஜூ' என்ற பெயர் சிறு வயசுக்காரர் தோற்றம் கொடுக்கிறது. ராஜகோபாலன், ராஜாராமன் என்பது போல இருந்திருந்தால் இன்னும் கதை வாசிப்பவர்கள் உணர்விற்கு ஒட்டி வரும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா!
பதிலளிநீக்குஒரு விதத்தில் ஹோம் என்பது சரியாக இல்லை தான். உடலில் தெம்பு இருக்கும்வரை செய்துக்கலாம் தான். ஆனாலும் இந்த ஹோமுக்குப் போகணும் என்னும் எண்ணம் எங்களுக்கும் உண்டு! பலரின் நிலை இன்று இதுதான். காலத்தின் கட்டாயம்.
நன்றி!
நன்றி! துரை செல்வராஜூ சார்!
பதிலளிநீக்குவாங்க எம்.சி.மாதவி. எனக்கும் ஒரு நல்ல ஹோமுக்கு போகலாம் என்ற எண்ணம் உண்டு. பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் சிலரை பருகும் பொழுது அங்கே தனிமை உணர்வு அதிகமாகி விடுமோ என்று இப்போது தோன்றுகிறது. நன்றி!
பதிலளிநீக்குமன்னிக்கவும், பார்க்கும் பொழுது என்று படிக்கவும்
பதிலளிநீக்குவாங்க கீதா, நீண்ட தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி! முடிந்த வரை சேர்ந்திருப்பது நலம்.
பதிலளிநீக்குவாங்க நெ.த. பின்னூட்டத்திற்கு நன்றி! //ஆனால், ஒரு தடவை விலகி, பசங்க குடும்பத்தில், நாம் இல்லாதது பழகிவிட்டால், திரும்ப அங்கு சேர்வது கடினம்.// உண்மைதான். ஆனால் அப்படியும் சிலர் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவாங்க காமாட்சி அம்மா! வணக்கம்! நறுக் சுருக் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குநன்றி ஆதிரா! நான் இந்தக்கதையை 2017ல் எழுதினேன் அதனால் தனிக்குடித்தனம் 2017. அது சரி வாழ்த்துச் சொல்ல ஏன் பயப்படணும்? நிறைய சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வாழ்த்த எதுவும் தடை கிடையாது. ஒரு விஷயம் தேம்ஸ் கரையில் பாராட்டு விழா என்றால் கொஞ்சம் முன்னாலேயே சொல்லி விடுங்கள், ஏனென்றல் என் டைரி நிரம்பி வழிகிறது,டேட் ஒதுக்குவது கொஞ்சம் கஷ்டம். ஹி ஹி
பதிலளிநீக்குவாவ் !பானுக்கா அழகான அன்பான கதை .நிறையபேர் இப்படித்தான் இருப்பதை விட்டு இல்லாத இடம் நோக்கி போறாங்க ..ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள சில காலம் அவகாசம் எடுக்கும் ராஜூவுக்கும் நல்ல படிப்பினை ஹோம் கொடுத்திருக்கு .
பதிலளிநீக்குவாங்க ஜி.வீ .சார்! வணக்கம்! ஒரு பத்திரிகையாளராக உங்களின் நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி!
பதிலளிநீக்கு//கதை மாந்தர்களின் உரையாடல்களை சரியான புரிந்து கொள்ள உதவும் "......." கொட்டேஷன்கள் பல இடங்களில் விட்டுப் போயிருப்பது சிலருக்கு கதையை வாசித்துப் புரிந்து கொள்ள சிரமப்படுத்தலாம்.//
எப்படி விட்டுப் போனது என்று தெரியவில்லை. இரண்டு மூன்று முறை படித்தும் என் கண்களில் படவில்லை. (இரண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்தேன்). சுட்டிக்காட்டியதற்கு நன்றி. எதிர் காலத்தில் கவனமாக இருக்கிறேன்.
@ ஜி.வி. சார். //'ராஜூ' என்ற பெயர் சிறு வயசுக்காரர் தோற்றம் கொடுக்கிறது. ராஜகோபாலன், ராஜாராமன் என்பது போல இருந்திருந்தால் இன்னும் கதை வாசிப்பவர்கள் உணர்விற்கு ஒட்டி வரும்.//
பதிலளிநீக்கு60ஐ நெருங்கி கொண்டிருப்பவர் ஆது 60+ ஆணுக்கான பெயர் என்பதற் ராஜு என்னும் பெயரை தேர்ந்தெடுத்தேன். இள வயதில் யார் ராஜு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள்? அசோக், கௌஷிக், விவேக், அரவிந்த், என்றல்லவா இருக்கும்.
*அல்லது என்று படிக்கவும்
பதிலளிநீக்குநன்றி ஏன்ஜெல்!
பதிலளிநீக்குதனிக் குடித்தனம் நாடகம் பார்த்திருக்கிறேன் அதில் மனசில் நின்றது “ நீலச் சொக்காய் கேட்டால் நீளச் சொக்காயாக்கி இருக்கிறாயே ” என்பதுபோல் பூர்ணம் விசுவநாதன் கூறுவார்
பதிலளிநீக்குதனிக்குடித்தனம் நாடகம் பார்த்ததில்லை. படித்திருக்கிறேன். நிறைய முறை ரேடியோவில் கேட்டிருக்கிறேன். நிறைய வசனங்கள் மனப்பாடம். திரைப்படமாக வந்த பொழுது பார்க்க த் தோன்றவில்லை.
நீக்கு//நீலச் சொக்காய் கேட்டால் நீள சொக்காயாக்கி இருக்கிறாயே என்பது போல பூர்ணம் கூறுவார்.//
நீக்குநீல சொக்காய், நீள சொக்காய், லோயர், அப்பர், முன்னால பின்னால போன்ற வார்த்தை ஜாலங்கள் க்ரேஸி மோகனுக்கானவை. மெரீனா அப்படி எல்லாம் எழுத மாட்டார். நடுத்தர வர்க்கத்து பிராமண குடும்பங்களின் இயல்பான நிகழ்வுகள்தான் அவரது நகைச்சுவை. தனிக்குடித்தனம் நாடகத்தில் பூர்ணம் பேசும் பிரபலமான வசனம், "எங்காத்து பழக்கம் என் தலை பெரிசு லட்டு, என் இடுப்பு உயரம் பருப்பு தேங்கா.."என்பது.
"இல்லை காமு நான் முதலில் சுவற்றை ஒட்டடை அடித்து விடுவேன். அப்புறம் கதவு, ஜன்னல் இப்படி வரிசையாக அடிப்பேன்.."
நீங்கள் குறிப்பிட்டதும் இருந்திருக்கலாம். எனக்கு ஞாபகம் இல்லை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமனதை தொட்ட நல்ல கதை. முடிவும் நல்லபடியாக முடித்திருப்பது நிம்மதியாக இருந்தது. வயது ஏற ஏற இத்தகைய உணர்வுகள் பொதுவாக தலை தூக்கி விடும் போலிருக்கிறது. முதியோர்களும் சில சமயங்களில் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டாலும், அலலது, நிரந்தரமாகவே தக்க வைத்துக் கொண்டாலும் வித்யா மாதிரியான அம்மாக்களுக்கு பிரச்சனை ஏதும் வராமலிருக்கும்.
கதை எழுதிய பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கும், அதை அனைவரும் படிக்குமாறு பகிர்ந்தளித்த தங்களுக்கும் வாழ்த்துக்களுடன், எனது நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றி!
நீக்கு"இக்கரைக்கு அக்கரை பச்சை"
பதிலளிநீக்குபுதிய வரவின் விளைவு பெருசுகளின் மனதை மாற்றியது.
சீரியஸ்தனம் இருப்பினும் இரசிக்கவே வைத்தது.
கதாசிரியருக்கு வாழ்த்துகள்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோ!
நீக்கு//60ஐ நெருங்கி கொண்டிருப்பவர் ஆது 60+ ஆணுக்கான பெயர் என்பதற் ராஜு என்னும் பெயரை தேர்ந்தெடுத்தேன். இள வயதில் யார் ராஜு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள்?//
பதிலளிநீக்குபானுமதி, எனக்குத் தெரிந்து அறுபதைக் கடந்த பல ராஜுக்கள் உண்டு. எங்க வீட்டிலேயே என்னுடைய சொந்தத் தம்பி, பெரியம்மா பிள்ளை என இருவர். அதைத் தவிரவும் சில உறவினர்கள் பெயரே ராஜூ தான்! :))))
அதுதான் 60+ என்று சொல்லி விட்டேனே. மீள் வருகைக்கு நன்றி!
நீக்குஇன்றைய நிதர்சனத்தை ஒரு அருமையான சிறுகதையாக்கிக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் பானுமதி வெங்கடேஸ்வரன்!
பதிலளிநீக்குஅறுபது வயது வரை நிறைய பொறுமையுடனும் மன தைரியத்துடனும் வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளித்து பழகிய பிறகு 60 வயதுக்குப்பின்னாலும் அதே பொறுமையை பக்குவத்துடன் கையாளத் தெரிய வேண்டும். சுய இரக்கம், தனிமை உணர்வு இவற்றையும் பக்குவப்படுத்த வேன்டிய நிர்ப்பந்தந்ததில் இருக்கும் முதிய தம்பதியர் இப்படித்தான் முடிவெடுக்க முடியும். பாசச்சங்கிலிகள் கட்டிப்போட்டிருக்கும்வரை இதைத்தவிர வேறு வழியில்லை.
வயது இன்னும் முதிரும்போது, பிணிகள் அடிக்கடி வந்து ஆட்கொள்ளும்போது, " விருப்ப ஓய்வு " மாதிரி அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் முதியோர் இல்லத்தில் புகுந்து கொள்ளலாம்.
வாங்க மனோ. பாராட்டுக்கு நன்றி. வயது இன்னும் முதிரும் போதும், பிணிகள் ஆட்கொள்ளும் பொழுதும்தானே குழந்தைகளின் ஆதரவு தேவை..?அப்போது முதியோர் இல்லத்திற்குச் சென்றால் தன்னிரக்கமும்,தனிமையும் வாட்டாதா?
நீக்குசிக்காமல், சிணுங்காமல் சீராகச் சென்று முடிந்திருக்கிறது கதை. ஆசை ஆசையாகப் போன மாமா, இவ்வளவு சீக்கிரமாக எபௌட்-டர்ன் ஆகும்படி ஆகிவிட்டதே!
பதிலளிநீக்குஹாஹாஹா! அவர் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!
நீக்குஹா ஹா ஹா!அவர் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான். பாராட்டுக்கு நன்றி!
நீக்குஇக்கரைக்கு அக்கரை பச்சை...
பதிலளிநீக்குஇக்கரைக்கு அக்கரை பச்சை...
பதிலளிநீக்குவாங்க பாரதி, வணக்கமும், நன்றியும்.
நீக்கு//இள வயதில் யார் ராஜு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள்? அசோக், கௌஷிக், விவேக், அரவிந்த், என்றல்லவா இருக்கும்.//
பதிலளிநீக்குஅசோக், கெளஷிக் இத்யாதிகளெல்லாம் கூட இருபது வருடங்களுக்கு முன்.. 60 வருடங்களுக்கு முன்?..
ராஜூ என்பது நிச்சயம் முழுப்பெயராக இருக்காது. கூப்பிடுகிற பெயராக இருந்திருக்கும்.
முழுப்பெயராக 'ராஜா' என்பது இருந்திருக்கிறது.
ஆமாம், நான் யோசித்ததே கூப்பிடுகிற பெயரைத்தான்.
நீக்குநல்ல கதை. பல சமயங்களில் அக்கரை பச்சையாக இருப்பது போலத் தோன்றும். ஆனாலும் உண்மை நிலை வேறு என்பது அங்கே போன பின்னர் தான் தெரியும்.
பதிலளிநீக்குநல்ல கதை பகிர்வுக்கு பாராட்டுகள்.
நன்றி வெங்கட்!
நீக்குநடைமுறை யதார்த்தமான சிறுகதை பாராட்டுகள்
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
நீக்குஅன்பு பானு,
பதிலளிநீக்குஅமிர்தம் போலக் கதை. எங்கும் நடப்பதுதான். மிக அழகாக எழுதிப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
இந்தக் கலக்கம் குழப்பம் எனக்கும் உண்டு. எங்கள் குழந்தைகள் தங்கமானவர்கள்.
தனியாகப் போவது அவ்வளவு சுலம் இல்லை.
எல்லாம் ஆண்டவன் சித்தப்படி நடக்கட்டும். மிக நன்றியும் வாழ்த்துகளும்.
வல்லி அக்காவை இன்னும் காணுமே என்று நினைத்தேன். கோமதி அரசு அவர்களும் வரவில்லை.
நீக்கு//தனியாக போவது சுலபம் இல்லை// நான் வலியுறுத்த விரும்பியது இதைத்தான். சரியாக சொல்லி விட்டீர்கள். நன்றி!
கருத்து கூறியிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி! யாரையாவது நான் குறிப்பிட மறந்திருந்தால் மன்னிக்கவும்.
நீக்குLast but not the least, my sincere thanks to Engal blog and Sriram for their support & encouragement!🙏🙏🙏
பானுக்கா... "கடந்த முப்பது நாள் பதிவுகளில்" உங்கள் கதை முதல் இடம்! பார்த்தீர்களா?
நீக்குகோமதி அக்காவின் மாமியார் உடல்நிலை சரியில்லாதிருந்து காலமாகி விட்டார்கள். கோமதி அக்கா கோவையில் இருக்கிறார். அவர் வர கொஞ்ச நாட்களாகும். கோமதி அக்கா குடும்பத்தாருக்கு எங்கள் அனுதாபங்களும், இரங்கல்களும்.
நீக்கு///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குமிய்யாவ்வுக்கு ஒன்னுமே தெரியலை..
நேத்து பாவக்காய் சாப்பிட்ட எல்லார்க்கும் காசி அல்வா கொடுத்துட்டு 5.58 க்கு பதிவு ரிலீஸ்..///
அதுதான் கீசாக்கா 1ச்ட்டாஆஆஆஆஆஆ ஹா ஹா ஹா:)).. பாவக்காய் வேர்க் பண்ணியிருக்கு..
///அப்புறம் வூட்டுல கௌ இல்லாட்டியும் கௌ படத்தை வெச்சி மாட்டுப் பொங்க கொண்டாடலாம்.//
ஓ ...ஆனா அப்படிக் கொண்டாடி என்ன பண்ணுவது:).. அடுத்தடுத்துப் பொங்கல் பொங்கி உடம்பை வளர்ப்பதாகும் ஹா ஹா ஹா:)..
///Bhanumathy Venkateswaran said...
பதிலளிநீக்குஒரு விஷயம் தேம்ஸ் கரையில் பாராட்டு விழா என்றால் கொஞ்சம் முன்னாலேயே சொல்லி விடுங்கள், ஏனென்றல் என் டைரி நிரம்பி வழிகிறது,டேட் ஒதுக்குவது கொஞ்சம் கஷ்டம். ஹி ஹி///
ஓ அப்போ நீங்க எங்கட ட்றம்ப் அங்கிளை விட பிஸிபோல.. ஹா ஹா ஹா:))..
//ஓ அப்போ நீங்க எங்கட ட்றம்ப் அங்கிளை விட பிஸி போல//
நீக்குநோ! மோடி அங்கிளை விட... ஹா ஹா ஹா!
புதனா..புதிரா.. ஊர் வம்பா??...
பதிலளிநீக்குஎல்லாம் தான்..
எல்லாம் எப்போ வரும்?..
பதிலளிநீக்குஎப்போ வேணாலும் வரலாம்!..
அதிசயமாக நானும் ஓடி வந்து தாயச்சியை தொடலாம் என்று பார்த்தால் எங்கள் ப்ளாக் திருப்பள்ளி எழுச்சியே நடக்கவில்லையே..😥
நீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாழ்த்து எதற்கு? சிறுகதைக்கா? அலலது தாய்ச்சியைத் தொட ஓடி வந்ததற்கா? எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கு நன்றி!
நீக்குஎன்னுடைய நெட் ஒர்க்கும் ஸ்லோவாகி விட்டது :((
பதிலளிநீக்குஎளிய நடையில்...தொய்வில்லா கதை...
பதிலளிநீக்குகதை கருவும்...உணர்வுகளும் வெகு நேர்த்தி ..அருமை
கோமதி அரசு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குஓ அப்படியா! நான் கவனிக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷம்! வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குகோமதி அரசு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குநன்றி அனுராதா பிரேம்குமார்.
பதிலளிநீக்குஎல்லோரும் சொல்வது போல் 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்று தெரிந்தும் அவரவர் அனுபவித்தே உணரநினைக்கின்றனர்...!
பதிலளிநீக்குநன்றி பிரசாத்!
பதிலளிநீக்குகோமதி அரசு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்புடன்
பதிலளிநீக்குஅருமையான கதை பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமகள்,மகன் வெளிநாட்டில் இருந்தால் நானாம் நானி ஹோமில் இருப்பது நல்லதே.
எங்கள் உறவினர் அங்கு இப்போதுதான் போய் இருக்கிறார்.
அவரிடம் நன்றாக இருக்கிறதா என்று கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
கதை நன்றாக இருக்கிறது சொல்லிய பாங்கு அருமை.
அத்தை அவர்கள் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குதகவல் தெரிவித்த ஸ்ரீராமுக்கு நன்றி.