சென்றவாரம், நான் நினைத்து கேட்டவை :
1) மாமியாரும் ஒருவீட்டு மருமகளே
2) நீலாவுக்கு நெறஞ்ச மனசு
3) சவரக்கத்தி ( சக்கரவர்த்தி என்பதுதான் சரியான படப் பெயர் . அதை 7 எழுத்துக்களாக சௌகரியத்திற்கு சுருக்கி சக்ரவர்த்தி என்று எழுதியவர்கள் எல்லோரும் , மற்றும் சதிலீலாவதி என்றவர்கள் எல்லாம் ஏறுங்க பெஞ்சு மேலே)
4) பணம் பந்தியிலே
5) பூலோக ரம்பை
6) ஸ்கூல் மாஸ்டர்
7) என் ஆளோட செருப்பக் காணோம் ( எங்களுக்கும் காலம் வரும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பதிலே )
8) மஹா கவி காளிதாஸ் ( ஹி ஹி கவுண்டிங்ல கோட்டை விட்டுட்டேன்! அதனால் நான் பெஞ்சு மேல ஏறிக்கறேன்!) மலபார் போலீஸ் என்று சொன்னவர்களுக்கு முழு மதிப்பெண் கொடுக்கின்றேன் . மானம் காத்த ம போலீஸுக்கு நன்றி.
9) எங்க வீட்டுப் பெண்
10) துகாராம்
சரியான பதில் கூறிய ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பதிலுக்கும் நூறு மார்க் . அக்கவுண்ட்ல போட்டு வச்சிக்குங்க. அப்புறம் வித்டிரா பண்ணிக்கலாம்.
இந்த வாரம்:
தமிழ் படப் பாடலின் முதல் வரி ... முதல் எழுத்து, கடைசி எழுத்து ( கவனிக்கவும் : வரியின் கடைசி எழுத்து )
நீங்க அந்தப் பாலின் முதல் வரியை எழுதவும் .
Note: some have more than one right answer.
1). அ ............................. ளே !
2). பே ................... யா?
3). இ ......................... கை
4). ஆ ................... ரோ
5). தை ..................... வ்
6). டி ..................... லே
7) லி ................................. டு
8) கா ...................... டு
9) டோ ...................... ரா
10) டை .................... வா
1) அன்பு மலர்களே, 2)பேசுவது கிளியா, 4) ஆராரிரோ பாடியதாரோ - டக்னு தோணிணவை. மற்றதை திங்க்கிட்டு வரேன்.
பதிலளிநீக்கு3) இது நாட்டைக் காக்கும் கை.
பதிலளிநீக்குஇதோ யோசிக்கிறேன்....
பதிலளிநீக்கு6. டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பார்த்து தங்கமே தில்லாலே
பதிலளிநீக்கு6. டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பார்த்து தங்கமே தில்லாலே
பதிலளிநீக்குஇந்த வாரம் காப்பியடிச்சா பரவாயில்லையா??...
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்த சில பாடல்களை சகோ துரைசெல்வராஜூ அவர்கள் சொல்லி விட்டார்.
பதிலளிநீக்குமற்றவைகளை யோசிக்க வேண்டும்.
போன புதிர் பதிவில் சில நூறுகள் வாங்கி விட்டேன்.
எனக்கு தெரிஞ்ச பாடல்களா?...
பதிலளிநீக்குநான் ஒன்னும் சொல்லலையே!..
//அந்தப் பாலின் முதல் வரியை// எந்தப் பால்? ஆடு, மாடு, புலி? வரினு வந்திருக்கிறதாலே வரிப்புலியின் பாலோ?
பதிலளிநீக்குஅது சரி, இந்த வாரம் மாடரேஷன் இல்லையா? எல்லோரும் என்னைப் பார்த்துக்காப்பி அடிக்கப் போறாங்களே!
பதிலளிநீக்கு1. அவள் பறந்து போனாளே!
4. ஆராரோ ஆராரோ (சினிமா பெயரே இதான்னு நினைக்கிறேன்.)
6. டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே, உலகம் போற போக்கைப் பாரு தங்கமே ஜில்லாலே! (நெ.த. சொல்லிட்டார்ங்கறதாலே பொற்காசைக் குறைக்காதீங்க!)
2. பேயா னு கேட்டிருக்கிறதைப் பார்த்துட்டுப் பயம்மா இருக்கே! பாடல் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசு மொழியா?
5 ஆவதுக்கு தை ..... ஆரம்பம்....முடிவு வ்?????? ம்ம்ம்ம்? மெதுவா வரேன் அப்புறமா. அநேகமா ஶ்ரீராம் 100க்கு 200 வாங்குவார். அவர் ஆட்டத்திலே சேரலையா? எங்கே தி/கீதா? அவங்களும் வாங்குவாங்க!
போன புதிரிலே அநேகமா 100/100க்கு மேல் எடுத்துட்டேனே! ஹையா! ஜாலி! செக்கா, காஷா, தங்கமா, வெள்ளியா?
பதிலளிநீக்கு@கீதா சாம்பசிவம்://.. ஹையா! ஜாலி! செக்கா, காஷா, தங்கமா, வெள்ளியா?
பதிலளிநீக்குவைரத்த விட்டுட்டீங்களே..
4) -க்கு விடையெழுதுவதற்காக பாடலைக் கொஞ்சம் மாத்தி எழுதிடலாமா:
பதிலளிநீக்குஆருக்கு மாப்பிள்ளை ஆரோ ?
ஏகாந்தன் சார், அதெல்லாம் என்னோட பிறந்த நாள் வசூலில் வரும். வைரம், நவரத்தினங்கள் எல்லாம். இப்போதைக்கு இது போதும்! எனக்கு அதிக ஆசையே கிடையாதாக்கும்! :)))))
பதிலளிநீக்குஹை, ஏகாந்தன், தப்பு, அது யாருக்கு மாப்பிள்ளையாரோனு வரணும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க பாட்டுக்கு எழுதிட்டுப் போயிடுவீங்க! கேஜிஜியும் சரினுடுவார்! :))))
பதிலளிநீக்குஅந்தப் பால்...ஆஹா ஆண் பாடும் பாடலா இல்லை பெண் பாடும் பாடலா என்பதற்கு எந்தப் பால் வரிகள் என்று அர்த்தமோ...ஹிஹிஹி
பதிலளிநீக்குஇந்தக் கமெண்டை அடித்து இன்னும் போகாமல் இப்பத்தான் போகும்னு கொடுக்கறேன்...போகுதானு பார்ப்போம்...
கீதா
//அந்தப் பாலின் முதல் வரியை// எந்தப் பால்? ஆடு, மாடு, புலி? வரினு வந்திருக்கிறதாலே வரிப்புலியின் பாலோ?//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா கீதாக்கா நான் ஆண் பாலா பெண் பாலா அதாவது ஆண் பாடும் பாடலா பெண் பாடும் பாடலானு வேற புதிரோனு நினைச்சேன் ஹிஹிஹிஹி (பாடல் தான் பால் நு வந்துருக்குனு தெரிஞ்சாலும் ...)
நானும் கேட்டேன் கா கமென்ட் மாடரேஷன் இல்லை...இப்பதான் நெட் வந்துச்சு இங்க வந்தா நெல்லை சொன்ன பாடல் தான் எனக்கு டக்குனு தோணிச்சு...அவர் சொல்லிட்டான் இனி நான் சொன்னா காப்பி!!! அதுவும் சூடா காப்பி!! ஹிஹிஹிஹி...எனவே சொல்லலை...
அக்கா போட்டி விதிகளின் படி ஸ்ரீராம் பார்ட்டிசிபேட் பண்ண முடியாது!!! ஹா ஹா ஹா ஹாஹா
கீதா
ஆராரோ வும் கண்டு பிடிச்சென்..ஆனா பா க வும், கீ சா அக்காவும் சொல்லிட்டாங்க..ஸோ போச்சு!!!
பதிலளிநீக்குகீதா
கீதாக்கா ஏற்கனவே ஒரு வைர நெக்லஸ் அ அ வின் செக்ரட்டரியிடம் இருக்குனு நினைக்கிறேன்...அதிரடி யைப் பிடியுங்க....அங்கருந்து எபிக்கு வரணும்...அது சுத்தி சுத்தித்தான் வரும்னு நினைக்கிறேன்...பச்சைக் கல் நெக்லஸ்னு நினைக்கிறேன்....ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்கு//அதெல்லாம் என்னோட பிறந்த நாள் வசூலில் வரும். வைரம், நவரத்தினங்கள் எல்லாம்// ஓ இது தனிக்கணக்கா....கீதாக்கா...ஹா ஹா ஹா...அதிரா போட்டி போட்டி!!!
//இப்போதைக்கு இது போதும்! எனக்கு அதிக ஆசையே கிடையாதாக்கும்! :)))))// ஹா ஹா ஹா கீதாக்கா இதுக்கும் போட்டி போட்டி..ஷேர் கேட்டு வரும் பாருங்க...
அதிரா உங்க வைர நெக்லஸ் எங்கருக்கு? இப்ப? ஹிஹிஹிஹி...
ஹப்பா நா க முடிஞ்சு போச்சு!!! அப்புறமா வந்து அ அ வை வேடிக்கை பார்க்கலாம்...
கீதா
4. ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
பதிலளிநீக்கு5. தை மாத மேகம் - அது தரையில் வாடுது - இந்தப் பாடலா இருக்கணும். பாருங்க.. ஒரு வாரம் கழித்து கேஜிஜி சார் வந்து, சாரி... 'ம்' போடுவதற்குப்பதிலா 'வ்' வந்துடுச்சு. எனக்குப் பதிலா கீசா மேடம் பெஞ்சுமேல ஏறி நிற்பாங்கன்னு சொல்லப்போறார்.
நெ.த. 5 ஆம் பாட்டுக்கு நானும் "தை மாத மேகம்" தான் நினைச்சேன். ஆனால் "வ்"னு முடியறதே! வேண்டும்னா வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வே என்று பழிப்பு(அழகு) காட்டலாம். அல்லது வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனத் தந்தி அடிக்கலாம்.
பதிலளிநீக்குஎல்லாரும் சொல்லிட்டதால நான் டெபாசிட்டை இழக்கிறேன். ஹாஹா.
பதிலளிநீக்கு8) காதல் சடுகுடு, கண்ணே தொடு தொடு.
பதிலளிநீக்குபாலகணேஷ் சொல்லி விட்டார் என்பதற்கு பதில் சகோ துரைசெல்வராஜூ என்று சொல்லி விட்டேன்.
பதிலளிநீக்கு