திங்கள், 5 பிப்ரவரி, 2018

"திங்க"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி


கடுகோரைக்கான கடுகு பச்சடி/கடுகு குழம்பு ஹை! ஃப்ரென்ட்ஸ் வணக்கம். ரொம்ப நாளாச்சோ?! சரி… நாம இன்னிக்கு கடுகு ரெசிப்பி ஒன்னு பார்க்கப் போறோம். கடுகுன உடனே அங்க யாரு ‘கடுகு தாளிக்கத்தான் யூஸ் பண்ணுவம்’னு கடுகு போல வெடிக்கறது!!! ஓ!! நம்ம பூஸார்! நோ கடுகு தாளிப்பு!! இது ரொம்ப நல்லாருக்கும் பூஸார்! நாம புளியோதரை செய்வோம் இல்லையா? நீங்க கூட நெல்லையின் புளியோதரை ரெசிப்பி செய்திருந்தீங்களே!! (நீங்கதானே செஞ்சீங்க?!!! இல்லை நெல்லையோட ஃபோட்டோவா ஹா ஹா) அது போல இது கடுகோரை செய்ய உதவும். தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.  


இந்தக் கடுகுப் பச்சடி செய்து வைச்சுட்டா கெடாது. இது எங்க மாமனார் ஊரான வாங்கல் ஸ்பெஷல். மாமியார், மாமியாரின் தங்கை எல்லோரும் அடிக்கடிச் செய்வார்கள். (மாமியாரும் மாமனாரும் கஸின்ஸ் தான்).

சரி கடுகு நல்லதா என்று கேட்போருக்கு….  மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்று சொல்லுவது போல் கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது!!! அதைப் பற்றிச் சொல்ல, நம்ம, சென்ற எபிஸோடில் பாகற்காய் பற்றி சொன்ன நம் அன்பிற்கினிய துரை செல்வராஜு சகோ மீண்டும் நம்ம கிச்சனுக்கு வருகை தந்துள்ளார் கைஸ்! அவரை வரவேற்போம். வருக துரை சகோ! நீங்கள் இங்கு வந்து கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி! பார்வையாளர்களே! இனி அவரது மொழியில் கடுகைப் பற்றி ஒரு சிறு உரை!!

கீர.. கீரேய்!..

யம்மா.. கீர வாங்கலியா...கீர!..

என்ன கீர..வெச்சிருக்கீங்க?..

அரைக் கீர,முளக் கீர, பொன்னாங் கண்ணிக் கீர, அவுத்திக் கீர, முருங்கக் கீர ஏன்!..  கடுகுக் கீர கூட இருக்கு!..

கடுகுக் கீரையா!..

ஆமா.. கடுகுக் கீர தான்!..

கடுகு தாளிக்கிறதுதானே செய்வோம்.. அதோட கீரை கூடவா சமைக்கிறது?..

நல்லா சமைக்கலாமே..  ஒடம்புக்கு ரொம்பவும் நல்லதாச்சே..

அப்படியா.. நான் இப்ப தான் கேள்விப் படறேன்!...

புள்ளைங்களுக்கும் சரி.. பெரியவங்களுக்குஞ் சரி.. வயிறு உப்புசமா மந்து....ன்னு இருக்கும்... சரியா சாப்புட முடியாது..

ஆமா.. என் பையன் அப்படித்தான் இருக்கான்.... இஷ்டமா சாப்பிடறதே இல்லை..

அப்போ.. இன்னைக்கே செஞ்சு கொடும்மா..  நல்லா நெறக்க வயிறார சாப்புடும் கொழந்தெ...

எப்படி செய்றது..ன்னு சொல்லுங்களேன்!... எழுதிக்கிறேன்!..

இத வேற எழுதணுமாக்கும்... மனசு.. வெச்சிக்க ஆகாதா!...

எழுதி வெச்சிக்கிட்டா என்னோட சிநேகிதி..ங்க கீதா, ஆதிரா, ஏஞ்சல் இன்னும் ஏலியன் ஜூலியன் இவுங்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர்.. இருந்து அனுப்பிவிடுவேன்.. அதுக்குத் தான்..

அப்புடியா.. சரி.. எழுதிக்க.. கைப்பிடி கடுகுக் கீரய நல்ல தண்ணியில ஒரு தரம் கழுவிட்டு ரொம்பப் பொடிசா இல்லாம நிதானமா நறுக்கிக்க...

ம்.. நறுக்கிக்கவும்!..

பத்து சின்ன வெங்காயம் மூணு பல்லு பூண்டு இதுங்களையும் சுத்தம் செஞ்சிட்டு சன்னமா நறுக்கிக்க...

ம்.. நறுக்கிக்கவும்!..

சட்டியில கடல எண்ணய ஊத்தி கடுகு கறுவப்பிலை தாளிச்சு... வெங்காயம் பூண்டு இதுகளைப் போட்டு வதக்கி...

ம்.. வதக்கவும்!..

அரை வேக்காடு ஆனதும் கீரயப் போட்டு நாலு குறு மொளகு நாலு நறுஞ்சீரகம் கொஞ்சம் கல்லுப்பு போட்டு கிளறி சட்டிய இறக்கி மூடி வெச்சா முடிஞ்சது வேலை..

ம்.. முடிஞ்சது வேலை!..  பசுந்தயிரோட சேத்து பிசைஞ்சு சாப்புட்டா வயிறு குளுகுளு..ன்னு இருக்குமே!..  அடுத்த வேளைக்கு நல்லா பசி எடுக்குமே!..

பாசிப் பருப்ப வேக வச்சி அதைக் கடஞ்சி அதுங்கூடயும் கடுகுக் கீரயப் போட்டு கூட்டு வெக்கலாம்..

அடிக்கடி கீரை சாப்பிடலாமா.. அம்மா!..

அடிக்கடி எதுக்கு.. எந்தக் கீர ஆனாலும் சரி..  வாரத்துல ஒரு நாளைக்குப் போதும்...  மொத்தமா வாரத்துல மூணு நாளைக்கு மேல வேணாம்!..

ஏன்?..

முகத்துல பசலை புடிக்கும்.. அதுவுமில்லாம குடல் இளகிப் போகுமே!...

!..

இன்னொன்னுஞ் சொல்லவா!.. நாலு கடுகு நாலு மொளகாய் கொஞ்சம் உப்பு எடுத்து புருசனுக்கும் புள்ளைக்கும் திஷ்டி சுத்திப் போடு.. காத்து கருப்பு அண்டாது!.. கொஞ்சம் கடுகை ஊற வெச்சி அரச்சி நல்லெண்ணயில வதக்கி முழங்கால்.... பத்து போட்டா மூட்டு வலி எல்லாம் ஓடிப் போகுமே..

இதெல்லாம் எங்கேம்மா படிச்சீங்க!..

நா எங்கே படிச்சேன்!.. எல்லாம் ஆயி அப்பன், பாட்டன் பாட்டி சொல்லிக் கொடுத்தது தான்!...

வீட்டுக்குள் தானிருக்க விருந்திற்கு பேர்சேரும்
நாட்டுக்குள் நலஞ்சேரும் பேயோடும் பிணிபோகும்
மூட்டுக்குள் தான்முடக்கும் வினையோடு விடந்தீரும்
பாட்டுக்குள் வருங்கடுகு சீரோடு பேராகும்...

ஆகா.. சித்தர் பாட்டா இது!...

இல்லே... இல்லே.. நானே இட்டுக் கட்டுனது!..

இவ்வளவு விஷயமா?.. ஆச்சர்யம் தான்!..

இன்னும் இருக்கு.. ஆனா யாரு கேக்குறா இந்தக் காலத்துல...சரி.. நான் கெளம்பறேன்... இன்னும் ரெண்டு தெரு போகணும்!..

மறுபடி எப்போ...ம்மா வருவீங்க?..

கீர கிள்றதைப் பொறுத்து ரெண்டு நாள்.. வர்றேன்... கீர.. கீரேய்!..


கடுகுப்பச்சடி/கடுகு குழம்பு - கடுகோரை


புளி – ஒரு எலுமிச்சை அளவு. தண்ணீரில் ஊறப் போட்டுவிடுங்கள்.

படத்தில் காட்டியுள்ள ஸ்பூன் தான் அளவு. ஓகேயா…கைஸ்!!

கடலைப் பருப்பு – 2 ஸ்பூன் ஹீப்ட் ஆக

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன் ஹீப்ட் ஆக

வெந்தயம் – 1 ஸ்பூன் ஹீப்ட் ஆக

கொம்பு மஞ்சள் – சிறிய துண்டு. படத்தில் காட்டியுள்ளது போல். தட்டி தண்ணீரில் ஊறப் போட்டுக்கோங்க. கொம்பு மஞ்சள் இருந்தால் நல்லது. இல்லை என்றால் மஞ்சள் பொடி ¾ ஸ்பூன் எடுத்துக்கோங்க. பொடி போட்டால் கொஞ்சம் சுவை மாறுகிறது.

பெருங்காயம் – சிறிய துண்டு படத்தில் காட்டியுள்ளது போல்

..
கடுகு – 7-8 ஸ்பூன். நான் 8 ஸ்பூன் எடுத்துக் கொண்டுள்ளேன்.

நல்லெண்ணை/சமையல் எண்ணை – கால் கப்

மிளகாய் வற்றல் – 12 அதில் 4 மிளகாய் வற்றலைச் சிறிய துண்டுகளாகக் கிள்ளிக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியது போல்.


 


எப்படி செய்யணும்னு சொல்லறேன் கேளுங்க...

நெல்லை அண்ட் ஸ்ரீராம் கிச்சன்ல நான் சொன்ன பொருள் எல்லாம் எடுத்து வைச்சுட்டீங்க!! குட்! எல்லாரும் ஆளுக்கொரு வேலைய எடுத்துக்கோங்க. இப்ப நான் சொல்லச் சொல்லச் செய்யணும் ஓகேயா!! அங்க என்ன மியாவ் சத்தம்? மதுரை அண்ட் கில்லர்ஜியோட ஒத்தையா ரெட்டையா போடறீங்களா என்ன வேலைய எடுத்துக்கலாம்னு பூஸாரே?!!!! ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்…  இங்க கவனிக்கோணும். ஏஞ்சல் பூஸாரின் வாய்க்கு ஒரு சின்ன ப்ளாஸ்டர் போடுங்க!!!!

எண்ணையை வாணலியில் விட்டு அதில் கிள்ளி வைத்துள்ள மிளகாய் வற்றலைப் போட்டு சிவந்து பொரிந்ததும், சும்மா பேருக்கு கடுகு போட்டு, பெருங்காயத் துண்டையும் போட்டு, பருப்புகளையும் தாளித்துக் கொள்ளுங்கள். அடுத்து வெந்தயத்தையும் தாளித்து சிவந்து வரும் போது கரைத்து வைத்தப் புளித் தண்ணீரை விட்டு தேவையான உப்பைப் போட்டுக் கொதிக்க விடுங்கள். சிம்மில் வைத்தால் தெறிக்காது. (அதிரா வெந்தயம் தாளிக்கும் போது வாணலியைத்தான் பார்க்கணும் இல்லைனா கறுத்துவிடும் கசக்கும்… ஓகேயா!! அப்புறம் கிச்சன் ஷோ முடிஞ்சதும் கலாய்க்கலாம்!!!)

அது கொதிக்கட்டும். இப்போது மிக்சியில் கடுகு, மஞ்சள் துண்டு, மற்றும் மீதமுள்ள 8 மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் போட்டு நன்றாக நைஸாக அரைக்கணும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு. படத்துல பாருங்க அரைத்த பேஸ்ட். வாணலியில் கொதித்து புளி பச்சை வாசனை போனதும் இந்த அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போது வெல்லம் சிறிய நெல்லி அளவு சேர்க்கலாம் பிடித்தால். நன்றாகக் கொதித்துக் கெட்டியாகி வரும். படத்துல காட்டிருக்கு பாருங்க அந்தப் பதம். அவ்வளவுதான் கடுகு பச்சடி ரெடி. இப்ப உதிர உதிர வடித்த சாதத்தில் கொஞ்சம் பச்சடி போட்டு, வேண்டும் என்றால் நல்லெண்ணை விட்டு கலக்க வேண்டியதுதான். கடுகோரை ரெடி! கெட்டியாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் தளர குழம்பு போல் எடுத்தால் அது கடுகு குழம்பு! ஆனால் குழம்பிற்கு உ.ப, க.ப தாளிக்க வேண்டாம்.


 
 
 


கிச்சன் ஷோவுக்கு வந்துச் சிறப்பித்து அழகான பாடலுடன், கடுகு கீரை பற்றிய குறிப்புகளூடன் உரையாற்றிய துரை சகோவுக்கு எபி கிச்சன் குழுவின் மனமார்ந்த நன்றி!

ஓகே கைஸ் அடுத்த ரெசிப்பி எபிஸோடுக்கு ஒழுங்கா வந்துடணும். தேதி நம்ம கிச்சன் ஷோ டைரக்டர் ஸ்ரீராம்கிட்ட கேட்டு சொல்லறேன் ஓகேயா!  இங்கு வருகை தரும் பார்வையாளர்களும் எங்கள் அடுத்த கிச்சன் ஷோவுக்குத் தவறாம வந்திருங்க இன்னும் பல சுவையான ரெசிப்பிகள் ஒவ்வொரு திங்களும் வரும்…..அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது எபி கிச்சன் குழு.


[ இது நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை, செய்ததில்லை, சுவைத்ததில்லை யுவர் ஹானர்! - ஸ்ரீராம் ]


தமிழ்மணம்.



53 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் மற்றும் கீதா / கீதா அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் வரவேற்பு அளித்து சிறப்பித்த எபி சமையல் அரங்கினர்க்கு அன்பின் நன்றியும் மகிழ்ச்சியும்...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... கீதா ரெங்கனைக் காணோம்...

    பதிலளிநீக்கு
  4. GR வந்துடுவாங்க..
    இணைய இணைப்பு சரியில்லை என்று சொல்லி இருந்தார்கள்..

    பதிலளிநீக்கு
  5. கிச்சன் கலாட்டா குவைத் மன்னரின் தலைமையில் இரசிக்க வைத்தது.

    நல்லவேளை நானும், மதுரையும் பாத்திரம் கழுவிய வேலையை பப்ளிக்ல போட்டு உடைக்கல... சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  6. நாங்க ஒடைக்கலே..ந்னாலும்
    நீங்க ஒடச்சிட்டீங்களே... ஜி...

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... கடுகுக் கீரை குறிப்புகள் மற்றும் கடுகுக் குழம்புகடுகோரை குறிப்புகள் பலே ரகம். இங்கே கடுகுக் கீரை நிறையவே கிடைக்கும் - சர்சோன் கா சாக் ரொம்பவே பிரபலமான ஒரு உணவு - சோள ரொட்டியும் கடுகுக் கீரை சப்ஜியும் குளிர் காலத்தில் சாப்பிடுவார்கள். ரொம்ப நல்ல சுவையோடு இருக்கும். அதுவும் கடுகுக் கீரையை மண் பாத்திரத்தில், விறகு அடுப்பில் செய்வார்கள் இங்கே கிராமங்களில். அது ரொம்பவே சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. //http://geetha-sambasivam.blogspot.in/2011/11/blog-post_09.html// இதுவும் கடுகோரைங்கிற பேரிலே தான் வெங்கடேஷ் பட் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போவோ செய்து காட்டினது. நானும் அம்பேரிக்காவில் இருக்கிறச்சே செய்து பார்த்தேன். இப்போவும் செய்கிறேன். தில்லையகத்து கீதாவோடது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு! அதையும் பார்ப்போம். மற்றபடி சர்சோன் கா சாக் எனக்கு அவ்வளவா பிடிக்காது! :))))) ஆனால் கடுகு எண்ணெய் பயன்படுத்தி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  9. கடுகுக்கீரைப்பற்றி சகோ துரைசெல்வராஜூ உரை நன்று.
    கடுகுக் குழம்புகடுகோரை குறிப்பும் அருமை.
    வெந்தயம் வறுக்கும் போது சொன்ன குறிப்பு அருமை..
    செய்து பார்க்கிறேன் கீதா.

    பதிலளிநீக்கு
  10. காலையிலேயே படித்துவிட்டேன். இது நான் இதுவரை கேள்விப்படாத பச்சிடி. இதை உபயோகப்படுத்தி கடுகோரையா? இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. எந்த ஊரில் இது பண்றாங்க? நெல்லை sideல எங்க வீடுகள்ல இதைச் செய்து கேள்விப்பட்டதேயில்லையே. நல்லாருக்குமா கீதா ரங்கன்?

    பதிலளிநீக்கு
  11. கடுகு வாசனை, (திருவமாறுவதுபோல் இல்லாமல், நிறைய கடுகு) நல்லா இருக்குமா சாதத்துக்கு?

    பதிலளிநீக்கு
  12. புளியஞ்சாதத்திற்கு எங்கள் பாட்டி வறுத்த கடுகைப் பொடித்துப் போட்டு பார்த்திருக்கிறேன். இது அப்படியே கடுகை அரைத்துச் செய்வது. அப்பாடி எவ்வளவு பேர் ஒத்தாசைக்கு? கடுகில் சிறியவகைக்டுகு,பெரியவகை, லேசான மஞ்சள் நிறம் என்று பலவகை இருக்கிறது. சிறியவகைக்கடுகுதான் ருசியானது. சிறிது போட்டாலும் போதும். கடுகுக்கீரை குளிர்காலத்தில்தான் நன்றாக இருக்கும். கொஞ்சம் ரஃப். அதனாலே வென்தயம் தாளித்துக் கொட்டி வதக்குவார்கள் நேபால்காரர்கள். வெண்ணெய் சேர்த்துச் செய்வார்கள் வட இந்தியர்கள். அதிலும் இரண்டு வகைக் கீரை. கடுகின் வித்தியாஸம் மாதிரி. ஃபாரின்லேயும் அதே ருசியில் வேரு கீரை கிடைக்கிறது. நிறைய சமைத்துப் பழக்கம் உண்டு. உங்கள் குறிப்பு சற்று வித்தியாஸம். மருமகள்களுக்குச் சொல்கிறேன்.
    கடுகோரையும் இன்னுமொரு கலந்தசாதஸ்பெஷல். அச்சாஹை சொல்வார்கள். மேல்நாட்டில் இந்தக்கடுகை பேஸ்ட்மாதிரி ஏதோ கலவைகளும் சேர்த்து கொடுப்பார்கள். ஸரியாகச் சொல்லத் தெரியவில்லை எனக்கு. இந்தசாதம் ரொம்ப ஸ்பெஷலாகத் தோன்றுகிறது. நன்று. எழுதிய விதமும் கீதாஸ்பெஷல். படங்களெல்லாம் அழகு. கடுகும்,மிளகாயும், மஞ்சளுடன் அரைபட்டு அழகாகக் காட்சி தருகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் பாண்டிச்சேரி பயணம்..மகனின் நெருங்கிய நண்பனின் கல்யாணம்....அதான் ஆஜர் வைக்க முடியலை...இப்ப மொபைல்ல பாத்தப்பதான் ஆஹா இன்று கடுகோரை வந்துருச்சுனு...

    நெட்டும் படுத்துகிறது...இப்பத்தான் சென்னை வந்து சேர்ந்தேன்...நெட் அணைந்து அணைந்து வருகிறது...ஒரு நாள் வீட்டில் இல்லை எனவே வீட்டில் சில வேலைகள் பெண்டிங்க் முக்கியாமனதை முடித்துவிட்டு வருகிறேன்...பதில் தருகிறேன்....ஒவ்வொன்றாக....எங்கள் தளத்திலும் துளசியின் பதில்களை வெளியிடணும்...வரேன் வரேன்....மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் எபி இப்படி எங்களை ஊக்குவித்து சமைக்க வைப்பதற்கு....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் இனிய வணக்கம்!

    ஆஹா.. இன்று கீதாவின் கடுகுப் பச்சடி ரெஸிப்பியா? இப்படி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு கடுகு ரொம்ம்ம்பக் காரமாக இருக்காதோ?…
    தாளிப்புக்குப் போடும் கடுகையே ஸ்பூனில் எடுத்து அளவாகப் போடப் பழக்கினா என் அம்மா. அதிகமானால் அந்தக் காரமே வயிற்றில் பிரச்சனை தரும் என்பது அவவின் கருத்து. அதனாற்தான் கேட்டேன்.
    செய்து பார்க்க வேண்டும்.

    துரை ஐயாவின் அசத்தலான கடுக்குக் கீரைச் சம்பாஷனை! அதிலும் அந்தப் பாடலும் ஆஹா… அத்தனை பொருள் நிறைந்ததாக மிக மிக அழகாக இருக்கிறது.
    ஐயாவின் கவித்துவத்துக்குக் கூடுதல் சபாஷ்!!..:)

    நல்ல பகிர்வு! இதனைப் பகிர்ந்தவர்களுக்கும் பதிந்தவருக்கும் நன்றி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. வந்துட்டேன்!!!! எல்லோருக்கும் வணக்கம்....என்னாச்சு இன்னும் அதிரடிகளைக் காணவில்லை?!!!!

    துரை செல்வராஜு அண்ணா இன்று காலை வணக்கம்சொல்ல முடியலை....நேற்றும்...பாண்டிச்சேரி பயணம்...மற்றும் இணையமும் சரியாக இல்லை. இதோ இப்போது வருகிறது...வரும்வரை பதில்கள் தருகிறேன்...

    துரை செல்வராஜு அண்ணா உங்கள் கடுகுக்கீரை உரையால்தான் பதிவே அதிருது!!!! உங்களுக்குத்தான் எங்கள் எபி கிச்சன் சார்பில் நன்றி உரைக்கணும்!!! மிக்க மிக்க நன்றி அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் வந்துவிட்டேன்!!!

    கனம் கோர்ட்டார் அவர்களே ஸ்ரீராமுக்குச் சொல்கிறேன்..கேள்விப்பட்டதில்லை என்றாலும்..(எனக்கே இது புதிதுதான்...கல்யாணம் ஆன பிறகு மாமியார் வீட்டில் செய்துதான் பழக்கம்..ஹிஹிஹி).இது நன்றாக இருக்கும் என்றும் செய்து பார்க்கலாம் அல்லது செய்து சுவைபார்க்கத் தரப்படும் என்றும் சொல்லிக் கொள்கிறேன் யுவர் ஆனர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கரந்தை சகோ மிக்க நன்றி கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வெங்கட்ஜி!! வாங்க...கடுகோரை நன்றாகவே இருக்கும்...(எனக்குப் பிடித்திருந்தது மாமியார் வீட்டிற்கு வந்து பழகிய போது...!!) எனக்கும் சர்சோன் கா சாக் பீடிக்கும் அதுவும் மண்சட்டியில் விறகு அடுப்பில் யெஸ் ரொம்ப நல்லாருக்கும். நான் பாண்டிச்சேரியில் இருந்த போது இப்படிச் செய்ததுண்டு. இங்கு அப்படிச் செய்ய முடிவதில்லையே...

    மிக்க நன்றி வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஹிஹிஹி கில்லர்ஜி!!! நாங்க பதிவுல சொல்லாதத எல்லாம் இப்படி நுழலும் தன் வாயால் கெடும்னு சொல்லிக்கிட்டீங்களே!!!! ஹா ஹா ஹா ஹா ஹா....துரை செல்வராஜு அண்ணா ஹா ஹா ஹா நீங்களும் கரீக்டா சொல்லிட்டீங்க!! மிக்க நன்றி கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஹை கீதாக்கா வாங்க...வெங்கடேஷ் பட் செய்துகாட்டினாராஆ!! நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் பார்க்கிறேன் அக்கா...அவர் குறிப்பு எப்படினு பார்க்கணும்...

    இது என் மாமியார் சைட் செய்வது....நல்லாருக்கு கீதாக்கா...மிக்க நன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கோமதிக்கா வாங்க!! ஆமாம் துரைசெல்வராஜு அண்ணா ரொம்ப அழகா பாடல்கள் எழுதுகிறார் இல்லையா?!!! அசத்துகிறார்!!!!

    வெந்தயம் வறுக்கும் போது சொன்ன குறிப்பு!!// ஹா ஹா ஹா அதிராவை சும்மா கலாய்க்க எழுதினாலும் அவர் முன்னாடி நெல்லையின் குறிப்பு ஒன்றை கருக்கிட்டேன் என்று சொல்லியிருந்ததால் இப்படி அவரைக் கலாய்ப்பது ஹாஹா... அக்கா நன்றி அக்கா...ஆனால் ஆம் அக்கா வெந்தயம் வறுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்...வாணலி நன்றாகச் சூடானதும் வெந்தயத்தைப் போட்டால் இன்னும் நல்லது அப்போது அது நன்றாக வறுபடுகிறது...எல்லாம் ஒரே போல...சரியான பக்குவத்தில்..

    மிக்க நன்றி கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நெல்லை வாங்க....வாங்க....ஆமாம் இது நம்மூர் பக்கங்களில் செய்து பழக்கமில்லை. நானும் திருமணம் ஆனபிறகு மாமியார் வீட்டில் தான் முதல்முறையாகச் சுவைத்தேன். நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. வாங்கல் ஸ்பெஷல் என்று என் சின்ன மாமியார் சொன்னார் (வாங்கல் என்பது வடுவூர் அருகில் மோகனூரையும் வாங்கலையும் பிரித்து காவிரி ஆறு ஓடுகிறது. தண்ணீர் இல்லை என்றால் ஆற்றின் குறுக்காகவே நடந்து மோகனூரை அடைந்து விடுகிறார்கள். தண்ணீர் இருந்தால் பரிசல் போலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நிறைய மணல் மேடுக்கள், செடிகள் இருப்பதால் அதுவும் கடினமாகிவிடுகிறது... குறுக்கே பாலம் இல்லாத போது பஸ் சுற்றிச் செல்ல ரொம்ப தூரம். மோகனூர் நாமக்கல் மாவட்டத்தில், வாங்கல் கரூர் மாவட்டத்தில். குறுக்கே பாலம் வந்ததும் 37 கி மீ குறைந்துள்ளதாகச் சொல்லபப்டுகிறது. வாங்கல் எனது மாமனாரின் ஊர். வடுவூர் என் மாமியாரின் ஊர்.

    கடுகோரை நன்றாக இருக்கிறது நெல்லை. உங்களுக்கு மாவடு சார் பிடிக்குமா? அதாவது கடுகு மிளகாய்வற்றல் அரைத்து விடப்பட்டுச் செய்வது....கிட்டத்தட்ட அந்த டேஸ்ட் ஆனால் கடுகு அரைத்து நன்றாகக் கொதித்து நல்லெண்ணையில் ஊறி வெந்தயம் எல்லாம் போடுவதால் அந்தச் சுவையுடன் நன்றாகவே இருக்கு நெல்லை. எனக்குப் பிடித்திருந்தது. அடிக்கடிச் செய்வதும் உண்டு. அடுத்த முறை வரும் போது சொல்லுங்கள் செய்து தருகிறேன்..டேஸ்ட் பாருங்கள்

    மிக்க நன்றி நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இய்ஹையெல்லாம்செய்ஹு பார்க்க அசாத்திய பொறுமையும் திறமையும் வேணும் மேலும் கௌக்குக்கீரைஇங்கே கிடைக்காது

    பதிலளிநீக்கு
  24. எழுத்துப்பிழைகள் பப்லிஷ் ஆகும் முன் சரிபார்க்கவில்லை

    பதிலளிநீக்கு
  25. வாங்க காமாட்சியம்மா...ஆமாம் அம்மா எங்கள் ஊர்ப்பக்கத்தில் கடுகு கொஞ்சம் பெரிதாகக் கிடைக்கும். இங்கு சென்னையில் கடுகு சிறிதாகப் பார்த்துப் பழக்கம். ஆனால் இப்போது பெரிதும் கிடைக்கிறது. ஏனென்றால் பல கடைகளும் தென்னகத்தாரால் நடத்தப்படுவதால். கடுகு மஞ்சளும் உண்டு. அதுவும் இங்கு கிடைக்கிறது. வெளிநாடுகளில் கிடைப்பது போல். ஓ சிறியவகைதான் ருசியாக இருக்குமா? அப்படி என்றால் அடுத்த முறை கடுகோரை சிறிய கடுகில் செய்து விடுகிறேன்...மிக்க நன்றி காமாட்சிம்மா இந்தக் குறிப்பிற்கு..ஆமாம் நீங்கள் எல்லாம் எவ்வளவு சமைத்திருப்பீங்க அனுபவம் நிறையவே இருக்கும்....கடுகுக் கீரை பற்றி நீங்கள் சொல்லியதையும் குறித்துக் கொண்டுவிட்டேன் காமாட்சிம்மாஅ...கடுகுக்கீரை சமையல் நீங்கள் போடுங்களேன் அம்மா முடிந்தால்...

    நீங்கள் சொல்லியிருப்பது அந்த மேல்நாட்டில் செய்வது மேயனைஸ்!...அல்லது மஸ்டர்ட் சாஸ்?...அதானோ...

    மிக்க நன்றி காமாட்சிம்மா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. நெல்லை மாவடுச்சார் என்று வந்திருக்கணும் மாவடு சார் என்று வந்துவிட்டது....ஹா ஹா மொபைலில் சிலது அடித்தேனா...

    இப்ப மீண்டும் கணினி இணையம் வந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  27. இளமதி கடுகு எண்ணெயில் வறுத்து அரைத்து அல்லது நிறைய தாளித்தால் நல்லதில்லை என்று என் மாமியாரும் சொல்வார். ஆனால் கடுகு பச்சையாக அரைத்துச் சேர்ப்பது வாய்வுத் தொல்லைக்கு நல்லது என்றும் சொன்னார். செய்தாலும் கொஞ்சம் தானே சாதத்தில் கலந்து சாப்பிடுவது...

    ஆமாம் துரை செல்வராஜு அண்ணா மிக அழகாக அவரே எழுதிய பாடல் சொல்லி அசத்துகிறார்!!! இல்லையா!!!

    மிக்க நன்றி இளமதி தங்களின் கருத்திற்கு.
    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஜி எம் பி சார் இது ஈசிதான் ஸார். அப்படிப் பார்த்தால் சமையல் பதார்த்தங்கள் பலதிற்கும் அது எளியதாக இருந்தாலும் சரி, ப்ராஸஸ் நிறைந்ததாக இருந்தாலும் சரி பொறுமை தேவைதான்....அப்போதுதான் சமைப்பது நன்றாக வரும்...மிக்க நன்றி ஸார். கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  29. சுவை மிகுந்த ரெசிபிகள் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  30. ஜி எம் பி ஸார் கடுகுக் கீரை இங்கு கிடைப்பது சிரமம் தான் ஆனால் நாம் கடுகு போட்டால் நன்றாக வளருகிறது. அந்தக் கீரையை நாம் சமைக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கீதாக்கா நீங்கள் கொடுத்த லிங்க் வர மாட்டேங்குதே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கீதாக்கா லிங்க் கிடைத்துவிட்டது...பார்க்கிறேன்...நன்றி கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    கீதா ரெங்கன் அவர்களின் கடுகுபச்சடி செய்முறையும், படங்களும், அதன் பக்குவமும் மனதை மிகவும் கவர்ந்தது. இது வரை கேள்விபட்டதில்லை. குறிப்புகள் குறித்துக்கொண்டேன்.பதிவு அருமை. நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் சகோ! தங்களின் கருத்திற்கு. செய்து பாருங்கள் நன்றாகவே இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  35. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஆஆவ் !! கடுகோரை வித்யாசமான ரெசிப்பி ,..இதுவரைக்கும் கேள்விப்பட்டதுமில்லை டேஸ்ட் பார்த்திடவுமில்லை .தாளிக்கும்போதே கொஞ்சூண்டுதான் சேர்ப்பேன் ஏன்னா அது எல்லா டைரக்க்ஷனிலும் பட்டார்படார்னு தெறிக்குமே :)
    சிலர் வற்றக்குழம்புக்கு ஒரு டீஸ்பூன் அரைப்பதை பார்த்திருக்கேன் ரெசிப்பிக்களில் .ஆனால் சமைத்தது தயாராக இருக்கும் படம் பார்க்கவே நாவூறுது .எனக்கு பொதுவா கலந்த சாதங்கள் ரொம்பவே பிடிக்கும் என் பொண்ணுக்கும் ..காரணம் அதில் வெங்காயம் பூண்டு இல்லாததுதான் :)

    பதிலளிநீக்கு
  37. துரை அண்ணா நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கார் :) உணவு வகைகளை பற்றி அவரிடம் தகவல்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கு ..அதேபோல கடுகுக்கீரை ஒருமுறை இங்கே பாகிஸ்தானிய நண்பி செய்து கொடுத்தார் நம்ம நாக்கு தேங்காய் சேர்த்து கீரைக்கூட்டாக சாப்பிட்டே பழகிட்டது அவங்க செய்யும் தாளிதம் ஒரு குட்டி ஸ்பூனுக்கு மேலே இறங்கலை :) ஆனால் வட இந்தியரின் மிக விருப்பவுணவு கடுகு /saag வித் பனீர் /saag வித் பொட்டேட்டோ ..கூட சோள ரொட்டீ :)
    யாராவ்து சவுத் இண்டியன் ஸ்டைலில் இந்த கீரையை சமைச்சு காட்டினா ஒரு பிடி பிடிக்கலாம் :)

    அஸ்பாரகஸ் /கேல் /இதெல்லாத்தையும் நம்ம டேஸ்டுக்கு பொரியலாக்கினவங்க இதையும் பரிசீலனை செய்யவும் :)
    ரெசிப்பிக்கு நன்றி கீதா ..

    பதிலளிநீக்கு
  38. @காமாட்சியம்மா ..அது மஸ்டர்ட் ஸாஸ்.honey mustard dressing / .இங்கே எல்லா கடைங்களிலும் பிரென்ச் fries ஹாஷ் பிரவுன் இதுக்கு தொட்டுக்க தராங்க .எனக்கு அந்த டேஸ்ட்டே பிடிக்காது

    பதிலளிநீக்கு
  39. கீதா, கொஞ்சம் இங்க வர முடியுமா. என் அணைப்புகளை வாங்கிக் கொள்ள....கடுகு அரைத்தி
    முதுகு வலில்லு போட்டுக்கறேன்.
    சூப்பர் ரெசிபி பி/நாவூறச் செய்கிறதி இரண்டு நாட்கள் கழ்ழ்த்து செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. கடுகு பச்சடி குறிப்பு அருமை கீதா! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  41. படிக்கும் போதே மணக்கிறது...

    சமையல் குறிப்பு என்பதையும் தாண்டி, உரையாடல் பாணியில் பல அறிய தகவல்களையும் தந்தமைக்கு நன்றி

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  42. ஏஞ்சல் வாங்க!! எங்கே காணலையேனு பார்த்தேன்....

    இந்து மஸ்டர்ட் ஸாஸ் போல மணம் இருக்காது ஏஞ்சல். நம்ம ஊர் பருப்புகள் மிளகாய் கறிவேப்பிலை எல்லாம் சேர்ந்து வருவதால் கிட்டத்தட்ட புளியோதரை போல ஆனால் கடுகின் மணத்துடன் நன்றாக இருக்கும். கடுகு மணம் பிடிக்காதவங்களுக்குப் பிடிக்காதா இருக்கலாம்...கொஞ்சமா செஞ்சு பாருங்க....இதுலயும் பாதி அளவு செஞ்சு பார்க்கலாம்...

    துரை அண்ணா கலக்குறார் இல்லையா!!!

    மிக்க நன்றி ஏஞ்சல்...

    என்னாச்சு அதிராவைக் காணோம்?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. ஹை வல்லிம்மா!!!!! எப்படி இருக்கீங்க? வாவ் இங்கு உங்கள் கருத்து பார்த்து சந்தோஷம்..

    வரேன் அம்மா உங்க அணைப்பிற்கு மிக்க நன்றிமா...ரொம்ப நெகிழ்ந்துவிட்டேன். கடுகு அரைத்து முதுகுவலிக்கு அட!!! மெதுவா செஞ்சு பாருங்க. இப்ப டேக் குட் ரெஸ்ட் வல்லிமா....

    ரொம்ப சந்தோஷம்...நன்றி வல்லிம்மா

    கீதா

    பதிலளிநீக்கு
  44. மனோ அக்கா செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க...

    மிக்க நன்றி அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  45. வாங்க சாம்! மிக்க நன்றி சாம் கருத்திற்கு.....அட! திங்க பதிவுக்கு ஏற்ற படி உங்க பதிவு ஒரு சாண் வயிறே இல்லாட்டா.. வருகிறோம் வாசிக்க
    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  46. கடுகோரை சுவைத்ததில்லை. புளியோதரை ஃபேமிலி போல் இருக்கிறது. சிறிய மாற்றங்களுடன். செய்முறை செய்யத் தூண்டுகிறது. செய்து பார்க்கிறேன். கலகல் சமையல் எபிசோட் சூப்பர். டெல்லியில் கடுகு எண்ணெயில் சமைப்பார்கள். அது நாற்றமாகத் தான் தோன்றும்..:)

    பதிலளிநீக்கு
  47. நோஓஓஓஓஒ ஐ ஒப்ஜக்ஸன் யுவ ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அடுத்த திங்களுக்கு இதைப்போடோணும்:).. மீ தா 1ஸ்ட்டா நான் இங்கே வரோணும்:)).. இது சரியே இல்லை... இன்ரு வந்து எப்பூடி முழங்கினாலும்:) என் முழக்கம் ஆரையுமே பாதிக்காமலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போயிடப்போகுதே:)...

    கீதா எனக்கு.. ஏன் எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடிச்ச கடுகு இலையில் சுண்டல்... இங்கு பாகிஸ்தான் /
    அப்புறிக்கன்:) கடைகளில் எப்பவுமே கிடைக்கும்.... நான் தேங்காய்ப்பூவும் சேர்த்து சுண்டல்போல செய்வேன்.. நல்ல இனிமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  48. கடுகோரை புதுசா இருக்கு.. ஆனா பார்க்க பளாபளாஅ என தளதளக்குது.. செய்ய விருப்பமாக இருக்கு, ஆனா கடுகு அதிகம் சேர்த்தாலே ஒரு வித கசப்பு தன்மை வந்திடுவதுபோல எப்பவும் ஃபீல் ஆகும்.. பாஅர்ப்போம் ஒரு தடவை முயற்சித்து.

    ///ஆகா.. சித்தர் பாட்டா இது!...

    இல்லே... இல்லே.. நானே இட்டுக் கட்டுனது!..///

    ஹா ஹா ஹா கர்:) இட்டுக் கட்டவும் தெரியுமோ துரை அண்ணனுக்கு:)..

    பதிலளிநீக்கு
  49. //மறுபடி எப்போ...ம்மா வருவீங்க?..

    கீர கிள்றதைப் பொறுத்து ரெண்டு நாள்..ல வர்றேன்... கீர.. கீரேய்!..

    ///

    ஹா ஹா ஹா இந்த கீரைச் சவுண்டைப் பார்த்தால் கீசாக்காபோல இருக்கே:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. என் வய் தேன் நேக்கு எடிரி:).. அதுக்காக என் வாயை மாத்திட முடியுமோ டொல்லுங்கோ:).. ஹா ஹா ஹா.

    //நெல்லை அண்ட் ஸ்ரீராம் கிச்சன்ல நான் சொன்ன பொருள் எல்லாம் எடுத்து வைச்சுட்டீங்க!! குட்! எல்லாரும் ஆளுக்கொரு வேலைய எடுத்துக்கோங்க. இப்ப நான் சொல்லச் சொல்லச் செய்யணும் ஓகேயா!! அங்க என்ன மியாவ் சத்தம்? //

    ஹா ஹா ஹா அது கீதா.. ஒழுங்கா எடுத்து வைக்கினம் இல்லை:) அதுதேன்ன் ச்ச்சும்மா மிரட்டினேன் இருவரையும்:)) ஹையோ இதை பபுளிக்கில டொல்லிடாதீங்கோ:))..

    பதிலளிநீக்கு
  50. ///பூஸாரே?!!!! ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்… இங்க கவனிக்கோணும். ஏஞ்சல் பூஸாரின் வாய்க்கு ஒரு சின்ன ப்ளாஸ்டர் போடுங்க!!!!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதா ஓடிவாங்க:) நேற்றைல இருந்து பிளாஸ்டரோடயே கலைக்கிறா:) நான் அகப்பட்டால்தானே.. மீ ஆரூஊஊஊஊஊ?:) 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:) அதனால என்னைப் பிடிக்க முடியுமோ?:).. ஆனாலும் விடாமல் துரத்துறா கீதா:) ஸ்ஸ்ஸ்டொப்ப்ப்ப்ப்ப்:) பண்ணச் சொல்லுங்கோ மீ செவ்வாய்க் கிழமைக் கதை படிக்கோணும்ம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  51. இது கீதா ரங்கன் ரெசிப்பி கடுஹோரை. இன்று என் ஹஸ்பண்ட் செய்தாளாம். ஆவக்காய் ஊறுகாய் (மாங்காய் இல்லாத) பேஸ்ட் மாதிரி இருந்ததாம், ஆனால் காரம் அவ்வளவு இல்லையாம். என் பெண்ணும் மச்சினனும் மிக அருமை என்று சொல்லிச் சாப்பிட்டார்களாம். என் பெண்ணுக்கு புளியோதரை பிடிக்காது. ஆனால் இதனை மிக விரும்பிச் சாப்பிட்டாளாம். அவள் favorite தயிர் சாதம் இன்னைக்கு சாப்பிடலையாம். Thanks for the recipe

    நானும் விரைவில் செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!