வறண்ட ஓடை... வளைந்த பாதை....
பாலம் வழி....
பாலம் தாண்டி.....
எந்த ஊர் என்றவரே...
கடந்த ஊரைச் சொல்லவா....
இங்குமங்கும் பாதை... நடுவில் பள்ளம்
நடுவே தெரியும் பாறை...
பாறையில் தெரிகிறதா ஒரு முகம்?
நகரும் வீடு...
தகரக் கொட்டகைகள்...
வறண்ட அருவி... வனத்திலே இருக்குமா குருவி?!
கலைக்கப்பட்ட வீடுகளோ?
வாழ்க..
பதிலளிநீக்குஆஜர் ஆஜர் ஆஜர்!! படம் பார்க்க!
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா!! கீதாக்கா
கீதா
அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குகுருவியில்லாத வானகம் - ஒரு
பதிலளிநீக்குஅருவியில்லாத கானகம்..
இறைவன் கொடுத்தது இன்பமே - அதை
மனிதன் கெடுத்தது துன்பமே...
மெய்யாலுமே தகரக் கொட்டாய்தான் வீடுகள்!!!
பதிலளிநீக்குவறண்டு போன நதியிது
வசந்தத்தைத் தேடுதுனு பாடலாமோ!!!
நதி ஏன் மெலிஞ்சுருச்சோ....வருணன் வரலைனு ஏக்கத்திலோ?!!!
கீதா
துரை அண்ணா கலக்கறீங்க போங்க!!! அழகா சொல்லிருக்கீங்க!! கவித கவித கொட்டுதே நதியை விடவும் அருவியை விடவும் வேகமாக!!
பதிலளிநீக்குகீதா
இன்னைக்கு நம்ம தளத்துல
பதிலளிநீக்குநெல்லை சுற்றுலா..
அது என்ன வெள்ளைவ் வெள்ளையாக?!! பனியின் மீதமோ!!!
பதிலளிநீக்குகீதா
இன்னிக்கு எழுந்ததே லேட்டு! ஃபர்ஷ்டு வர முடியாதுனு தெரியும். காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி! கஞ்சி இன்னும் ஆத்திட்டு இருக்கேன். நடுவிலே கடமை ஆத்த வந்தா திடுக்குறச் செய்த செய்தி! ஶ்ரீதேவி காலமானார் என்று! :) ரொம்பவே வேதனையாப் போச்சு!
பதிலளிநீக்குஇங்கே படங்கள் எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்தேன்,கயிலை யாத்திரைக்கான தங்குமிடம்னு போட்டிருக்கு. ஹூம்! இப்படித் தங்குமிடங்கள் எல்லாம் இருந்திருந்தால் நாங்க போறச்சே எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று நினைச்சேன். அநேகமாகக் கூடாரங்கள், ஷெட்டுகள் போன்றவற்றில் தான் தங்க முடிந்தது.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்கு//குருவியில்லாத வானகம் - ஒரு
பதிலளிநீக்குஅருவியில்லாத கானகம்..
இறைவன் கொடுத்தது இன்பமே - அதை
மனிதன் கெடுத்தது துன்பமே...//
ஸூப்பர் துரை செல்வராஜூ ஸார்...
//இன்னைக்கு நம்ம தளத்துல
பதிலளிநீக்குநெல்லை சுற்றுலா..//
வந்துடுவோம்... நாச்சியாருக்குப் போயிட்டு வர்றேன்!
கீதா... நீங்களும் வார்த்தைகளில் விளையாடறீங்க...
பதிலளிநீக்குஸ்ரீதேவி மரணம் நிஜமாகவே திடுக்கிட வைத்ததுதான் கீதா அக்கா.
பதிலளிநீக்குகீதாக்கா ஆ ஆ ஆ ஆ நெஜமாவா!! என்னது இது சோகச் செய்தி...நடிகை ஸ்ரீதேவியா..மெய்யாலுமே திடுக்...என்னாச்சு அவருக்கு?!!
பதிலளிநீக்குகீதா
கீதா... நீங்களும் வார்த்தைகளில் விளையாடறீங்க...//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்!!! இதெல்லாம் எப்பவாச்சும் மண்டைல பல்பு எரியும் போது!!! ஹிஹிஹிஹி....அப்பப்ப எரிஞ்சாலும் சட்டுனு ஃப்யூஸ் ஆகிடும்!!
கீதா
அருவியில்லாத கானகம்!/ இல்லை, இல்லை, கொஞ்ச தூரத்துக்கு ஓர் அருவியைப் பார்க்கலாம். அது பாட்டுக்குத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். அருவி கொட்டும்போது அதில் நனைந்த வண்ணமே நம்ம ஜீப் போகும்! மழைச்சாரல் போல அருவித் தண்ணீர் நம்ம மேலே அடிக்கும்.
பதிலளிநீக்குதுரை அவர்கள் தினம் ஒரு கவிதையால் நம்மை மகிழ்விக்கிறார். இப்போப் போட்டிக்கு தி/கீதாவும்! அதிரடியும் சேர்ந்துப்பாங்க என நம்புவோம்.
பதிலளிநீக்குஆ!! கார்டியாக் அரெஸ்ட் அப்படின்னு சொல்லுது செய்தி...வயசும் சின்ன வயசுதான்!!!! நான் அவங்களுக்கு வயசு அதிகம்னு நினைச்சேன்...
பதிலளிநீக்குகீதா
தி/கீதா, ம்ம்ம்ம், பாவம், குடும்பத்தில் அவங்க சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்த உடன் பிறந்தோர். அம்மா இருந்தவரைக்கும் ஆதரவு இருந்தது. சம்பாதித்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்ட சகோதரிகள்! நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம்!
பதிலளிநீக்கு12 மணிக்கு முன்பாக தினமலரில் செய்தி flash ஆனது...
பதிலளிநீக்குஇரவில் 2 மணி நேர ஓய்வு உறக்கம் இன்றிப் போனது...
ஏதோ மாதிரி இருக்கிறது மனம்...
மண்ணைத் துறந்து
விண்ணில் பறந்ததே - மயில்...
படங்கள் மலைபகுதியில் வாழும் மக்களின் கஷ்டங்களை சொல்வது போல் உள்ளது.
பதிலளிநீக்குகலைக்கபட்ட வீடுகளோ என்பது ஓடுகள் போன்று இருக்கும் இவை வைத்து நிறைய வீடுகளுக்கு கூறை வேய்ந்து இருப்பார்கள்.
பாறையில் தெரியும் முகம் யானையின் முகம் போல் தோற்றம் அளிக்கிறது.
ஸ்ரீதேவியின் மரணம் மனதை சங்கடபடுத்தியது.
திறமைவாய்ந்த நடிகை. குழந்தை முருகன் மனதில்
குழந்தையின் சிரிப்பு இன்னும் கண்களில்.
படங்கள் அருமை
பதிலளிநீக்குஆனாலும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வு கடினமானதுதானே
நன்றி கோமதி அக்கா. பாறையில் தெரியும் முகம் எனக்கு வயதான ஒரு மனித முகம் போலத்தெரிந்தது!
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குபாறையின் வடிவம் நாம் பார்க்கும் போது வலது புறம்..சுருக்கங்களுனான நெற்றி, இடுங்கிய கண்கள்,, நீளமான மூக்கி, நரைத்த உதிர்ந்த மீசை, ஒடுங்கிய கன்னமும் நாடியுடனுமான ஒரு தாத்தா முகம் போல..சோகத்துடன்....
பதிலளிநீக்குஇடப்பக்கம் கழுகாரின் முகம் போல.....
இப்பவாச்சும் கமென்ட் போகணுமே வைரவா....
கீதா
கழுகாரின் மூக்கின் கீழே நீண்ட தாடியுடன் கூடிய சூனியக் கண்களுடனான ஒரு கிழவரின் முகம் அவரின் இடப்பக்கம் உற்று நோக்கினால் ஓரு பெண்ணின் முகம் மறைந்து....அப்பெண்ணின் ஒரு புறம்முகம் மட்டும் தெரிவது போல உள்ளது...
பதிலளிநீக்குகீதா
தி/கீதா, ம்ம்ம்ம், பாவம், குடும்பத்தில் அவங்க சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்த உடன் பிறந்தோர். அம்மா இருந்தவரைக்கும் ஆதரவு இருந்தது. சம்பாதித்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்ட சகோதரிகள்! நிராதரவாக நின்றார். கட்டாயத்தின் பேரில் போனி கபூருடன் திருமணம் என்பார்கள். :( பாவம்!//
பதிலளிநீக்குகீதாக்கா இது புது செய்தி எனக்கு. இப்படியான ஒரு பேக் க்ரவுண்ட் இருக்கா...அப்ப கட்டாயத் திருமணம் தானா...
பாவம் தான்....
ம்ம்ம் செய்திகள் எல்லாம் ஸ்ரீதேவிய பாலிவுட் ஆக்டர்னுதான் சொல்லுது....ஒரு வேளை அங்க வாக்கப்பட்டதாலோ?!!!!
கீதா
நீங்கள் சொன்ன பின் பார்த்தேன் பாறையின் ஓரு பாதியில் (வலது பக்கம்)
பதிலளிநீக்குமனித முகம் தெரிகிறது.
//கீதாக்கா இது புது செய்தி எனக்கு. இப்படியான ஒரு பேக் க்ரவுண்ட் இருக்கா...அப்ப கட்டாயத் திருமணம் தானா... பாவம் தான்....// என்ன சொல்வது தி/கீதா! அவங்க குடும்பமே தெரிந்த குடும்பம்தான். :( அப்பா மதுரை வக்கீல் புதுத் தெரு. அம்மா தான் சிவகாசியோ சிவகங்கையோ நினைவில் இல்லை. தங்கைகள் இருவர்! இவர் மாதிரி அழகாக இருக்க மாட்டாங்க என்றாலும் ரொம்ப ஸ்டைலாக வில உயர்ந்த உடை உடுத்திக் கொண்டு தெருவில் சுற்றுவாங்க! அவங்க சித்தி (அம்மாவின் தங்கை) ஆழ்வார்ப்பேட்டையில் என் அண்ணா வீட்டுக்கு எதிர் வீடு தான். அவங்க நல்லாப் பழகுவாங்க! அவங்க பொண்ணும் குழந்தையிலேயே நல்லா இருப்பா! பின்னால் நடிக்க வந்து சோபிக்கலைனு நினைக்கிறேன். சித்தி, சித்தப்பா எளிமையாப் பழகுவாங்க! பார்க்கவும் எளிமை! அம்மா கொஞ்சம் டாம்பீகமா இருந்தாங்க! பின்னாட்களில் தெரியாது! அண்ணாவும் அங்கே இருந்து அம்பத்தூர் வந்தாச்சு. அவங்களும் ஶ்ரீதேவி மும்பை போனதிலே அங்கே போயிட்டாங்க!
பதிலளிநீக்குஶ்ரீதேவியின் ஒரு தங்கையின் மாமனார் நீதிபதியாக இருந்தப்போ ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டார். ராமசாமியோ என்னமோ பெயர்! அம்மா சீக்கிரமா இறந்தது ஶ்ரீதேவிக்கு ஷாக்! நினைச்சவரைத் திருமணம் செய்துக்க முடியலை. விஜயகுமார், மஞ்சுளா உதவியுடன் இந்தத் திருமணம் நடந்ததாகச் சொல்வாங்க! அவங்க தங்கைகள் ஶ்ரீதேவி மேல் கேஸ் கூடப்போட்டிருந்தாங்க!
பதிலளிநீக்குபாறையின் இடப்பக்கம் நந்தி முகம், வலப்பக்கம் சிங்க முகம், மேலிருந்து கீழ் மனித முகம்!
பதிலளிநீக்குஇந்தத் தங்குமிடங்கள் (கயிலை யாத்திரை) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டதுனு நினைக்கிறேன். ஏனெனில் சீன அரசால் ஏற்படுத்தப்பட்டது இப்படி இருக்காது. இந்திய வழியில் போகிறவர்களுக்காகனு நினைக்கிறேன். நாங்க காட்மாண்டு வழியில் தான் போனோம். கோமதி அரசு எந்த வழியில் சென்றார்னு நினைவில்லை.
பதிலளிநீக்குபடங்கள் அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
பதிலளிநீக்குநேற்றைய பிஸி தொடர்ந்து இப்போதுதான் ஓய்வு.எனவே மெள்ள வருகிறேன். எல்லோரும் நலம்தானே?
பதிலளிநீக்குஎன் மகள்தான் ஶ்ரீதேவி இறப்பு பற்றிய செய்தி கூறினாள். மிகவும் வருத்தமாக இருந்தது. அழகும், திறமையும் சேர்ந்த நடிகை. ஜானி படத்தில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
நான் இப்படி எல்லாம் எழுதியிருப்பதை பார்த்து விட்டு கீதா அக்கா, 'ஹே ஹே அழகா? ஹூ ஹூ நடிப்பா? என்றெல்லாம் கலாய்த்து தள்ளி விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. நல்ல வேளை, அவரை ஓப்பக் கொண்டு விட்டார்.
ஶ்ரீதேவி மீது அவர் சகோதரி கேஸ் போட்டார் என்று செய்தி வந்தது. ஆனால் அவருக்கு பெரிதாக நஷ்டமில்லை என்றுதான் செய்தி வந்ததாக ஞாபகம். அவருடைய தாயாருக்கு அமெரிக்காவில் தவறாக சிகிச்சை அளித்து விட்டனர் என்று இவர் கேஸ் போட்டு நஷ்ட ஈடும் கிடைத்தது.
பதிலளிநீக்கு//நான் இப்படி எல்லாம் எழுதியிருப்பதை பார்த்து விட்டு கீதா அக்கா, 'ஹே ஹே அழகா? ஹூ ஹூ நடிப்பா? என்றெல்லாம் கலாய்த்து தள்ளி விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. நல்ல வேளை, அவரை ஓப்பக் கொண்டு விட்டார்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ! ஜெ.மாதிரியான அழகு இல்லைதான் ஶ்ரீதேவி! :) ஆனால் அந்த நளினம்! உடல்கட்டு, கண்கள்! எப்போதும் குழந்தைத் தனத்தை வெளிக்காட்டும் முகம்! எல்லாவற்றுக்கும் மேல் தனிப்பட்ட அவருடைய வாழ்க்கை பிறருக்காகவே வாழப்பட்டது! ஆரம்பத்தில் அம்மா, சகோதரிகள்! பின்னால் கணவன்! அனைவருமே அவரையும் அவர் அழகையும் சுரண்டினார்கள். அதில் குளிர்காய்ந்தார்கள். அவர் தன் அழகை எப்போதும் பராமரிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்குப் பிடித்த உடையோ, தின்பண்டமோ, சாப்பாடோ அவர் சாப்பிட முடியாது! சாப்பிட்டதில்லை. பிடித்த வேலையைச் செய்தது இல்லை. பிடித்தவர்களுடன் பழக முடியாது. இப்போது சமீப காலமாகத் தன் மூத்த மகள் "ஜான்வி"க்காக அவரைத் திரையுலகில் நுழைப்பதற்காகப் பெரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். எல்லாம் சேர்ந்து அவரை மன அழுத்தத்தில் தள்ளி இருக்கும்! :(
பதிலளிநீக்குபாறையில் தெரியும் முகம் கழுகு முகம் கொண்ட சூனியக்கார கிழவனுடையது போல தோன்றுகிறது.
பதிலளிநீக்குஎப்போதும் ஒல்லியாக இருக்கவும், அழகான உடலைப் பராமரிக்கவும் எத்தனை எத்தனை அறுவை சிகிச்சைகள்! முதலில் மூக்குக்காக ஆரம்பிக்கப்பட்டது! பின்னர் தொடர்ந்தது! கணவனின் கடனை முழுதும் அவர் சம்பாத்தியத்தில் தான் அடைத்தார்! :( இப்போது!!!!!!!!!!!!!!!! :( இப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் பிறந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றும். அவருக்காக அவர் சம்பாதித்துக் கொண்டது ரசிகர்கள் மட்டுமே! பெயரும் புகழும் மட்டுமே!
பதிலளிநீக்குACCUMATISATION (?) CENTRE.. !!!
பதிலளிநீக்கு@ஶ்ரீராம்: வெள்ளி வீடியோவிற்கு இன்று பதில் போடுகிறேன்.
பதிலளிநீக்குஎனக்கு கார்த்திக், சூர்யா இருவரையுமே பிடிக்கும். மௌன ராகம் எல்லோருக்குமே பிடிக்கும். வருஷம் 16, கோகுலத்தில் சீதை இவைகளில் எல்லாம் ரொம்ப அழகாக நடித்திருப்பார்.
சூர்யாவுக்கு கண்கள் மிக நன்றாக ஒத்துழைக்கும். காதல் காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் மெல்லிய வெட்கம் அந்த காட்சியை enhance பண்ணும்.
ஏழாவது மனிதன் படத்தில் 'வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு'பாடலும் நன்றாக இருக்கும்.
ஞாயிறு படங்கள் பார்த்தேன். ரசித்தேன்.
பதிலளிநீக்குவறண்ட அருவி... வனத்திலே இருக்குமா குருவி?! - நல்லா எழுதியிருக்கீங்க.
Net down. Comment thro mobile.
பதிலளிநீக்குThe day exploded on the face, with Sridevi's sudden demise. Saw some of her wonderful earlier Tamil filmsviz. Moonraam Pirai, 16 Vayadhinilae etc.She shook Bollywood with astounding performances in films like Shekar Kapur's Mr. India, Chandini, Nagin etc.
Phenomenal talent, painful personal life. There's always an unavoidable tragic streak in the lives of such iconic personalities
படங்கள் ஸூப்பர் வர்ணனையும்...
பதிலளிநீக்குமானசரோவரும் ,மலை முகமும் மிக அழகு.
பதிலளிநீக்குஸ்ரீதேவி நம்மைவிட்டு அங்கு சென்றாலும்
நிம்மதியாக இருந்தாரா என்று தெரியவ்வில்லை. கீதா வெகு அழகாக எழுதி இருக்கிறார். கடைசியில் பலிகடா ஆக்கப் பட்டவர். பாவம். இப்பொழுது மரணத்தில்லும் புனைவுகள் புகுத்தப் பட்டுச் சீரழிகிறார்.
ஜன்மமே எடுத்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. யாரைத் திருமணம் செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. பெண்களாவது நலம் பெறட்டும்.
தகரக் கொட்டகைகள் - பனிபொழியும் ஊர்களில் இந்த தகரக் கொட்டகைகள் தான். பனி வீழ்ந்து கிடக்கும் கூரைகள் பார்க்க அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்தேன். நன்றி.
//யாரைத் திருமணம் செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. // Mithun Chakravarthi!
பதிலளிநீக்கு