சச்சின் டெண்டுல்கர் விளையாடும் புயல் விளையாட்டில் அவருடன் விளையாடிய கங்குலியின் ஆட்டமோ, டிராவிடின் ஆட்டமோ கண்ணில், கவனத்தில் படாமல் சென்றுவிடும் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் அதுவும் சிறப்பான விளையாட்டாய்த்தான் இருக்கும். ஆனால் இந்தப் புயலில் அது காணாமல் போயிருக்கும்.
19 வயத்துக்குட்பட்டோர் உலகக் கோப்பையை இளம் இந்திய அணி வென்றிருக்கிறது. அதன் மூல காரணம், முழுக் காரணம் ராகுல் டிராவிட். இரண்டு வருடங்களுக்கு முன் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றபோது டிராவிட் கவலைப்படவில்லை. அவர் பார்வை தொலைவில் இருந்தது.வருங்கால இந்திய அணிக்கு நல்ல ஆட்டக்காரர்களை வார்த்தெடுப்பதில் கவனமாக இருந்தார். சாதித்தும் காட்டியுள்ளார்.
டிராவிட் என்றதும் இந்த நினைவு வந்ததால் அங்கு சென்று விட்டேன். பாடலுக்கு வருகிறேன். பூந்தளிர் என்றொரு படம். அதில் எனக்கு(ம்) பிடித்த மிக மிக மிக மிக மிக இனிமையான "வா பொன்மயிலே" என்றொரு மெகா பாடலில் காணாமல் போனது இன்றைய இந்தப் பாடல். அதே படத்தில் இடம்பெற்ற பாடல்.
1979 இல் வெளியான படம். பஞ்சு அருணாசலத்தின் பாடலுக்கு இசைஞானி இசை. சிவகுமார் கதாநாயகன் என்றாலும் இந்தக் காட்சியில் வருபவர் சிவச்சந்திரன். படம் நான் பார்த்ததில்லை. காட்சியுடன் பாடலைக் கேட்டாலும், காட்சியைக் காணாமல் ஒருமுறை பாடலை தயவுசெய்து ரசியுங்கள். எப்போதுமே பாடகரின் குரலின் வசீகரம் அப்போதுதான் முழுவதும் புலப்படும்.
இடையில் வரும் ஓரிரு வசனங்கள் திருஷ்டிப்பரிகாரம். MP3 யில் இந்தக் கஷ்டம் இருக்காது. ஆனால் இன்று 'வெள்ளி வீடியோ' பதிவாச்சே!
எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் பி ஷைலஜா பாடிய பாடல். எஸ் பி ஷைலஜாவுக்கு பல்லவியை மட்டும் இரண்டு முறை பாடுவது தவிர பெரும்பாலும் ஹம்மிங்குக்கு மட்டுமே வாய்ப்பு.
மற்றபடி முழுக்க முழுக்க எஸ் பி பி ராஜாங்கம். அலையில் மிதந்தாடும் படகு போல சரணத்தில் வரும் வரிகளை எஸ் பி பி பாடியிருப்பார். நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று. வரிகளில் பெரிய ஆழமோ, கவர்ச்சியோ இல்லை. கவர்ச்சி முழுக்க முழுக்க இளையாராஜா டியூனிலும், எஸ் பி பி குரலிலும்தான். ரசித்துவிட்டுச் சொல்லுங்கள். இளைமையை ஆட்சி செய்யும் பாடல். எளிமையான, இனிமையான ஒரு பாடல்.
தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே
துணையை விரும்பி இணையும்பொழுது அமைதி அரும்புமே
ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்
நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே
புதிய வழியில் புதிய உறவில் புதிய உலகிலே
செல்லுங்களேன் செல்வங்களே உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்
வந்தாச்சா?
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குதொடர!
பதிலளிநீக்குவந்துட்டேனுங்கோ....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.. ஸ்ரீராம்.... துரை அண்ணா, கீதாக்கா.... பானுக்கா
கீதா
ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகீதாக்கா...நான் இன்னிக்கு உங்க பின்னாடித்தான்....மொபைல்லருந்து...
பதிலளிநீக்குகீதா
பாட்டை அப்புறமாக் கேட்டுக்கறேன். இப்படி எல்லாம் படம் வந்ததே உங்களால் தான் தெரிஞ்சுக்க முடியுது!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்கு// வந்துட்டேனுங்கோ..??
ஹா... ஹா.. ஹா...
இன்னைக்கு வெள்ளிக்கிழமை...
பதிலளிநீக்குபால் பாயசம் வைக்கலாம்....
வந்த வேலை முடிஞ்சது. அப்புறமா வரேன். ஹிஹிஹி, அதிரடி கிட்டேக் கேட்டதாச் சொல்லுங்க! வந்து ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் பார்த்துடறேன். :))))
பதிலளிநீக்கு// இன்னைக்கு வெள்ளிக்கிழமை...
பதிலளிநீக்குபால் பாயசம் வைக்கலாம்....//
தை வெள்ளிகளில் பாஸ் ச.பொ செய்து தந்தார். பால் பாயசம்? கேட்டுப் பார்க்கிறேன்!!!!
// வந்த வேலை முடிஞ்சது. அப்புறமா வரேன். ஹிஹிஹி, அதிரடி கிட்டேக் கேட்டதாச் சொல்லுங்க! வந்து ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் பார்த்துடறேன். :))))//
பதிலளிநீக்குஅதிரா வந்து என்னென்ன சொல்லப் போகிறாரோ... இன்று நீங்கள்தான் ஃபர்ஸ்ட் வேற... கர்..... grrrrrr
காலை வணக்கம்!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குஅன்று பாடல் வரிகளில் சிறப்பம்சம் இல்லா விட்டாலும்... இசையும், குரலும் இரசிக்க வைத்து விடும்.
பதிலளிநீக்குஇன்று பாடல் வரிகள் சிறப்பாக இருந்தாலும்கூட இசையும், குரலும் பாடலை கொலை செய்து விடுகிறது.
அருமையான பாடல்
பதிலளிநீக்கு19 வயத்துக்குட்பட்டோர் உலகக் கோப்பையை இளம் இந்திய அணி வென்றிருக்கிறது//
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் பார்த்தேன் அந்த இளைஞர்களுக்கு எவ்வளவு சந்தோஷ்ம், உற்சாக துள்ளல் அவர்களுக்கு அப்போதே வாழ்த்து சொன்னேன் மனதில். இங்க்கும் சொல்கிறேன் வாழ்த்துக்களை.
பாடல் பகிர்வு அருமை. இனிமையான பாடல்.படம் பார்த்தது இல்லை.
இரண்டு பாடல்களையுமே கேட்டேன். கல்லூரி காலத்தில் பேருந்து பயணங்களில் கேட்டது.
பதிலளிநீக்குசச்சினுக்கு முன் கங்குலி,ட்ராவிட் போல சிவாஜி,எம்.ஜி.ஆர், ரஜினி,கமல் என்ற சுழல் காற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மு.ரா மற்றும் சி.கு. இல்லையா?
இனிய பாடல் காதுகளில் ரீங்காரமிட்டது பதிவுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இன்று கீசாக்காவா 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ கடவுளே அதுதானாக்கும்.. ஜாமம் 12.20 க்கு கட்டிலால விழுந்திட்டேஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:) கை வேற நோகுதே கர்ர்ர்:)).. துரை அண்ணன் எங்கின பிராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் கர்ர்:))...
பதிலளிநீக்குகீசாக்கா கடக ராசியா இருப்பாவோ:) வரவர முதலிடத்துக்கு வந்து கொண்டிருக்கிறா:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).... வந்த வேலையைக் கவனிப்போம்:)).
///ஸ்ரீராம். said...
// இன்னைக்கு வெள்ளிக்கிழமை...
பால் பாயசம் வைக்கலாம்....//
தை வெள்ளிகளில் பாஸ் ச.பொ செய்து தந்தார். பால் பாயசம்? கேட்டுப் பார்க்கிறேன்!!!!///
கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் என்ன சொன்னாலும் உடனே தனக்குத்தான் என முடிவெடுத்திடுறது:).. துரை அண்ணன் சொன்னது:).. இங்கு வரும் நமக்கு பால் பாஆஆஆஆஆஆஅயாசம் செய்து தரலாம் என :))
ஆவ்வ்வ்வ் பெல்பொட்டம்.. பெல்பொட்டம்:) பாட்டு எனக்கென்னமோ பெரிசா பிடிக்கல்லே.. அதிலும் வீடியோ ம்ஹூம்.. தனியாக பாட்டுக் கேட்டால் ஓகே. இருப்பினும்... அடி என்னடி உலகம் இதில எத்தனை கலகம் பாட்டுக்கு கிட்டவும் வராது:)) .. ஹையோ இதுக்கு மேல இங்கிருந்தால் கதிரையாலயும் விழுந்திடுவேன் மீ ரன்னிங்ங்ங்ங்ங்:)))..
பதிலளிநீக்குஇந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீராம் ஏமாத்திப்போட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹையோ இது வேற ஏமாத்துறதாக்கும்:) என் நாக்குத்தேன் நேக்கு எடிரி:))
துளசி: இந்தப் பாடல் அப்போது ரொம்பப் பேமஸ் ! கல்லூரியில் அதிகமாகப் பாடப்பட்ட பாடல். எத்தனை வருடங்களாயிற்று கேட்டு!! இந்தப் படமும் பார்த்திருக்கிறேன்...
பதிலளிநீக்குகீதா: ஓ! இந்தப் பாடல் நிறையக் கேட்டிருக்கேன்...ரொம்பப் பிடித்த பாடல்...நீங்கள் சொல்லியிருக்கும் மற்றொரு பாடலும் அதே பிடித்த பாடல்... ஆனால் படம் எல்லாம் தெரியாது என்பதால் இது ஏதோ கமல் படப் பாடல்னே நினைச்சேன். அதுவும் கமலும் அந்தப் பெண்...அந்தப் பெண்...ம்ம்ம் ஹையோ ...இருங்க ஹான் நினைவுக்கு வந்த்ரூச்சு..ரதி ஆம் கமல் ரதி பாடும் பாடல்னு நினைச்சிருந்தேன்...ஹிஹிஹிஹி... இன்னிக்குத்தான் தெரியும் இந்தப் படத்தின் பாடல்...என்று...ஹிஹிஹி நம்ம சி கே அம்புட்டுத்தான்....
இன்னிக்கு வெள்ளிக்கிழமை, பால் பாயசம் வைக்கலாம்!" அப்படினு துரை சொன்னது எனக்காக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம் பாட்டுக்கு அவரை நினைச்சுண்டால் இங்கே அதிரடி வந்து எல்லோருக்கும் பால் பாயசம் வேணும்னு சொல்லிட்டு இருக்காங்க. நான் முதல்லே வந்ததுக்குப் பால் பாயசம் வைக்கச் சொல்லி துரை சொல்லி இருக்கார். :))))))
பதிலளிநீக்குகபிலுக்குப் பின்னர் எனக்குப் பிடிச்ச ஒரே கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தான்! அமைதி, நிதானம், பெருந்தன்மையான போக்கு, விட்டுக் கொடுத்தல், குழுவோடு ஒத்துழைத்தல்னு பல + பாயின்டுகள். ஆகவே அவர் தலைமையில் பயிற்சி எடுத்த பிள்ளைகள் கோப்பையைக் கைப்பற்றியதில் ஆச்சரியமே இல்லை. வருங்கால இந்தியக் குழுவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமற்றபடி பாட்டைப் பத்தி எல்லாம் எனக்கு ஏதும் தெரியாது! எஸ்.பி. ஷைலஜா திறமையான பாடகி. அவரைச் சரியானபடி ஊக்குவிக்கும் ஆட்கள் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்பார். அவரை நினைத்தால் பல விதங்களில் மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.
பதிலளிநீக்கு//கீசாக்கா கடக ராசியா இருப்பாவோ:) வரவர முதலிடத்துக்கு வந்து கொண்டிருக்கிறா:)/// ஹாஹாஹா, தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :))))
பதிலளிநீக்குஅதிரா ஆமாம் எனக்கு இன்னிக்கு செகன்ட் ப்ளேஸ் கூடப் போயிருச்சு!!! நேத்தே நான் 2வது வந்துட்டேன்னு கீதாக்கா நற நறநறனு சொன்னாங்க ஹா ஹா ஹா ஹா ஹா....
பதிலளிநீக்குகீதா
கர்ர்ர்ர் :) இது ஸ்ரீராமுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிட்டிருக்கிங்க எங்களுக்கு தராம :)
பதிலளிநீக்குபாட்டு .இனிமைதான் ஆனா கடைசி ஸீனில் அந்த குட்டி பாப்பாவை தண்டவாளத்தில் படுக்க வச்ச மாதிரி இருந்தது .இந்த படத்தை டிவியில் போட்டப்போ பார்த்து கஷ்டமா போச்சு :(
வா பொன்மயிலேவும் சூப்பர் பாட்டுதான் ஆனா இந்த சிவகுமார் ஓவரோ ஓவரா எக்ஸ்பிரெஷன்ஸ் தருவார் அவர் மருமக மாதிரி அதுதான் ஒரே குறை :)
//Geetha Sambasivam said...
பதிலளிநீக்குஇன்னிக்கு வெள்ளிக்கிழமை, பால் பாயசம் வைக்கலாம்!" அப்படினு துரை சொன்னது எனக்காக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
கீசாக்கா இது ரெம்ம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊ:)).. உங்களுக்கு பால் ஆயாசம் ஆகாது:) இப்போ ஸ்ரீராம் பொஸ் இடம் டொல்லியிருப்பார்:) எதுக்கும் சேமியாப் பாயாசமாவே செய்யச் சொல்லுங்கோ:) நேக்கு ஜவ்வறி:) சி புய்க்காது:)..
ஸ்ஸ்ஸ்ஸ் நல்லவேளை ஜாமீஈஈஈஈஈ:) ஸ்ரீராம் தன் பொஸ்:) ஐ இங்கின வரவிடாமல் முள்ளு வேலி போட்டு அந்தப்புரமா நிக்க வச்சிருக்கிறது இல்லை எனில் என்ன ஆகும்:)).. ஹையோ மீக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்டும் ஓடல்லே:)..
///Geetha Sambasivam said...
பதிலளிநீக்கு//கீசாக்கா கடக ராசியா இருப்பாவோ:) வரவர முதலிடத்துக்கு வந்து கொண்டிருக்கிறா:)/// ஹாஹாஹா, தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :))))//
தஞ்சாவூரு மாப்பிள்ளையோ ஆரு துரை அண்ணனையா ஜொள்ளுறீங்க:)) ஹா ஹா ஹா :)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..
//Geetha Sambasivam said...
கபிலுக்குப் பின்னர் எனக்குப் பிடிச்ச ஒரே கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தான்!///
அடடா... கீசாக்கா அரசியல்ல குதிக்கிறாக:) கீரை வடையில பின்னிப் பெடல் எடுக்கிறாக:) கியூவரிசையில நிண்டு பிட்ஸா வாங்கிச் சாப்பிடுறாக:).. குளோசப் ல படம் புடிக்கிறாக:).. இப்போ கிரிக்கெட்டும் ஆடுறாங்கோ:)).. கீசாக்கா உண்மையிலயே நீங்க அப்பேரிக்காவில இருக்க வேண்டியவர்:) ஏதோ பை மிசுரேக்கால ஸ்ரீவல்லிப்புத்தூரில இருக்கிறீங்க:))
//Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஅதிரா ஆமாம் எனக்கு இன்னிக்கு செகன்ட் ப்ளேஸ் கூடப் போயிருச்சு!!! நேத்தே நான் 2வது வந்துட்டேன்னு கீதாக்கா நற நறநறனு சொன்னாங்க ஹா ஹா ஹா ஹா ஹா....
கீதா//
நீங்க துலா ராசிபோல:) ஹா ஹா ஹா:))..
///Angel said...
கர்ர்ர்ர் :) இது ஸ்ரீராமுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிட்டிருக்கிங்க எங்களுக்கு தராம :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதுக்கு இப்போ உங்களுக்கு சக்கரைப் புக்கையில் ஆசை கர்:) திரும்பவும் ஹைபினேட் மூட் க்குப் போகவோ:)) ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈ முடியல்ல என்னால:)).. இண்டைக்கு நைட்.. ஐஸ் வோட்டருக்குள்ள கலை வச்சிருந்தாவது இங்கின 1ஸ்ட்டா வரோணும் நான்:))..
எங்க இன்னும் எங்கட நெல்லைத்தமிழனைக் காணல்லியே:).. தண்ணி இல்லாக் காட்டுக்கு அனுப்பிட்டினமோ இன்று ஹையோ:).. அதனாலதான் கீசாக்கா இதுவரை சேஃப் ஆ இருக்கிறா:))..
பதிலளிநீக்கு//ஐஸ் வோட்டருக்குள்ள கலை வச்சிருந்தாவது இங்கின 1ஸ்ட்டா வரோணும் நான்:))..//
பதிலளிநீக்குசே.சே.. அது காலை ஆக்கும்:)..
//ஏதோ பை மிசுரேக்கால ஸ்ரீவல்லிப்புத்தூரில இருக்கிறீங்க:))// ஹாஹாஹாஹா, ஹிஹிஹிஹிஹி, ஹூஹூஹூஹூ, ஹெஹெஹெஹெஹெஹெ!
பதிலளிநீக்கு// ஹாஹாஹாஹா, ஹிஹிஹிஹிஹி, ஹூஹூஹூஹூ, ஹெஹெஹெஹெஹெஹெ!//
பதிலளிநீக்குஅச்சச்சோஒ சிரிப்பு பலமா இருக்கே ஏற முடியல்லியே:))
https://thumbs.dreamstime.com/z/tortoiseshell-tabby-cat-climbing-tree-trunk-grey-ginger-rough-using-her-claws-chasing-stick-41975584.jpg
காலைலயே பதிவைப் படித்துக் கேட்டுட்டுப் போயிட்டேன். ஐபேட்ல கமென்ட் போட்டா ஸ்பேம்ல போகுது. கம்ப்யூட்டர் ஆன் பண்ண சோம்பல். வாரம் முழுக்க உபயொகப்படுத்தரதால.
பதிலளிநீக்குகீசா மேடம் கிரிக்கட் பத்தி சொன்னது நான் ஒத்துக்கறேன். விளையாட்டுல கபில், டிராவிட் ஜென்டில்மென். கும்ளே, தெண்டுல்கர் சேத்துக்கலாம். கவாஸ்கர், கங்குலி, தோனி, இப்போ உள்ள கோஹ்லி எல்லாரும் பாலிட்டீஷியன்ஸ்.
காலைலயே பதிவைப் படித்துக் கேட்டுட்டுப் போயிட்டேன். ஐபேட்ல கமென்ட் போட்டா ஸ்பேம்ல போகுது. கம்ப்யூட்டர் ஆன் பண்ண சோம்பல். வாரம் முழுக்க உபயொகப்படுத்தரதால.
பதிலளிநீக்குகீசா மேடம் கிரிக்கட் பத்தி சொன்னது நான் ஒத்துக்கறேன். விளையாட்டுல கபில், டிராவிட் ஜென்டில்மென். கும்ளே, தெண்டுல்கர் சேத்துக்கலாம். கவாஸ்கர், கங்குலி, தோனி, இப்போ உள்ள கோஹ்லி எல்லாரும் பாலிட்டீஷியன்ஸ்.
சச்சின் , கங்குலி/திராவிட் கம்பேரிசன், வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களை மட்டும் பெரிய achieverஆ நினைத்து அதுக்கு முக்கிய காரணமான மனைவியையோ கணவனையோ மறந்துவிடுவதை ஞாபகப்படுத்தியது.
பதிலளிநீக்குபின்னே என்னவாம் @miyaav நானும் சிரிக்கறேன் :)
பதிலளிநீக்குஸ்ரீரங்கம்னாலே அது கீதாக்கா தானே :) அப்புறம் ஆதி மலைக்கோட்டை நா அது கோபு ஸார்
ஸ்ரீவில்லிபுத்தூராம் :))))))))))))))))))))))))))))
@miyaav srivilliputhoor is in viruthunagar
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகிரிக்கெட் முன்பெல்லாம் எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி விடாமல் பார்த்துக் கோண்டிருந்தோம்.இப்போது என்மகனுக்கும் சரி,எனக்கும் சரி நேரமே கிடைப்பதில்லை.
இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்திருக்கிறேன்.படம் பார்த்த ஞாபகம் வரவில்லை. அருமையான இசையுடன் அற்புதமான குரலும் மிகவும் ரசிக்க வைத்தன.மீண்டும் கேட்க வைத்தமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சரியாகச் சொன்னீர்கள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. 19 வயதுக்குட்பட்டோர் அணியில் திறமை வாய்ந்த ஏகப்பட்ட பேர்களைத் தயார் செய்து வைத்திருக்கிறார் டிராவிட்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. ஆமாம், சிவகுமார், முத்துராமன் எல்லாம் நீங்கள் சொல்வது போலத்தான்!
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குவாங்க அதிரா... பால் பாயசத்தை நினைவுபடுத்தினார் துரை செல்வராஜூ ஸார். யாருக்காயிருந்தால் என்ன, எனக்கு சாப்பிட ஆசை வந்தது. தப்பா?
பதிலளிநீக்குஉங்களுக்கு இந்தப் பாடல் பிடிக்காதது ஆச்சர்யம். சரணங்களில் எஸ் பி பி யின் குரலை ரசிக்கலாம். சரி... உங்கள் விருப்பம்!!!
துளஸிஜி... நீங்களும் ரசித்திருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகீதா... கமல்-ரதி? உல்லாசப்பறவைகள் பாடல்?
வாங்க கீதா அக்கா... பாயசம் எனக்காக்கும்னு நினைச்சேன்னு நினைசீங்களா? எனக்கும் ஆர்வம் வந்ததுன்னு சொன்னேன். எஸ் பி ஷைலஜா திறமையான பாடகி இல்லைன்னு நான் சொன்னேனா? grrrr !
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்... தாய் வெள்ளி பூரா காலைல கொஞ்சமா சர்க்கரைப்பொங்கல் செய்து தந்தாங்க பாஸ்!
பதிலளிநீக்கு/ இந்த படத்தை டிவியில் போட்டப்போ பார்த்து கஷ்டமா போச்சு ://
பாட்டை மட்டும் கேளுங்கன்னா படத்தை ஏன் நினைக்கறீங்க? காட்சியையே பார்க்காமல் பாட்டைக் கேளுங்கன்னு சொல்றவன் நானு... நான் இந்தப் படம்லாம் பார்த்ததே இல்லை தெரியுமோ?
// ஆனா இந்த சிவகுமார் ஓவரோ ஓவரா எக்ஸ்பிரெஷன்ஸ் தருவார் //
ஹா.... ஹா... ஹா... என் பெரிய பையன் சிவகுமார் போலவே பேசிக் காட்டுவான்
வாங்க அதிரா... கீதா அக்கா கடக ராசி, கீதா துலா ராசி.. நான்?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... வெள்ளி வீடியோவில் நான் ஒரு பாட்டு போட்டிருக்கேன் பாருங்க / கேளுங்க!!!!
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்.. அதிராவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்கு எப்படி வித்தியாசம் தெரியும்? பாவம்...
பதிலளிநீக்குவாங்க சகோதரி கமலா ஹரிஹரன். ரசித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்டூஊஊஊ அப்போ மீ பாதிதான் பாஸ் ஆஆஆஆஆ?:)... ஸ்ரீ கரெக்ட்டுத்தானே:)....
பதிலளிநீக்குதுரை அண்ணனால எங்களுக்கும் பாயாசம் குடிக்கும் ஆசை வந்திட்டுதூஊ செய்யப் போறேன் பட் கீசாக்காவுக்கு இல்ல:) அவ கீரை வடை ரெசிப்பி சொல்லிம் வரை குடுக்க மாட்டேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
ராகுல் த்ராவிட்பற்றி நீங்கள் ஆரம்பித்ததால் கொஞ்சம் சொல்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மன்களில் ஒருவர் அவர் என்பதில் சந்தேகமில்லை. டெண்டுல்கர் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இவரும் கங்குலியும் விளையாடியதால் அதிகம் ஹைலைட் ஆகவில்லை என்பதில் உண்மை இருக்கிறது. கங்குலிக்கு சிறந்த பேட்ஸ்மன் என்பதோடு கேப்டன்சி திறமை, சாதுரியம், தைர்யம் என்றெல்லாம் நிறைய ப்ளஸ்கள். இந்த அளவுகோலில் திராவிடும், டெண்டுல்கரும் கங்குலியின் பக்கம்கூட வரமுடியாது.
பதிலளிநீக்குஉலகக்கோப்பையை வென்ற இந்திய அண்டர்-19 அணி மிகத் திறமை வாய்ந்த அணி. ஜெயித்திருக்கக்கூடிய அணியே இது. இதனைப்பற்றி பதிவெழுத நினைத்தேன். நேரம் வாய்க்கவில்லை. த்ராவிடினால்தான் நமக்கு உலகக்கோப்பை என்றிருக்கிறீர்கள். நோ. எனக்கு உடன்பாடில்லை. திராவிட் ஆர் நோ-த்ராவிட் இந்த அணி வெனறிருக்கும்.
ராகுல் த்ராவிடை நீங்களும் நமது தமிழ் மீடியாவும் ஒரேயடியாக உயர்த்திப்பிடிக்கின்றீர்கள். அதாவது சிறந்த க்ரிக்கெட்டர் என்பதோடு மகாப்பட்ட மனிதர் என்பதாய். 2007 வெஸ்டிண்டீஸ் உலகக்கோப்பையில் அவருடைய அசட்டுத்தனமான கேப்டன்சியை அறிந்திருக்கிறேன். வில்லன் கோச் க்ரெக் சேப்பலின் ப்ரஷரை, ஆதிக்கத்தை இந்த அசடினால் சமாளிக்க முடியவில்லை என்பது எல்லோர்முன்னரும் நின்ற உண்மை . விளைவு? இந்தியா பாதியிலேயே வெறுங்கையுடன் வீடு திரும்பியது. இந்த அசட்டின் விளக்கெண்ணெய்த்தனம் சதிகார சேப்பலுக்கு அருமையாகத் துணைபோனது. இன்னும் சொல்லலாம். நீண்டுவிடும் .. க்ரிக்கெட் இதிகாசத்தை இத்துடன் முடிக்கிறேன்.
வீடியோவுக்கு வருகிறேன். பாடல்வரிகள் அச்சுபிச்சு. சாதாரணவரிகளுக்கு இசையினால், குரலினால் மேன்மை கொடுத்திருக்கிறார்கள். சரி, அந்த சிவசந்திரனுடன் கையில் மைக்ரோஃபோனுடன் சுற்றிவரும் ஆண்ட்டி யாரோ?
வாங்க ஏகாந்தன் ஸார்... இன்று உங்களைக் காணோம் என்று போஸ்டர் ஒட்ட நினைத்தேன். வந்து விட்டீர்கள். ராகுலின் அசட்டு கேப்டன்சி அவரது மைனஸ் பகுதிகளில் ஒன்று. ஒருமுறை டெண்டுல்கர் டபுள் சென்சுரியை நெருங்கி கொண்டிருக்கும்போது காரணமின்றி டிக்ளேர் செய்ததும் நினைவில் இருக்கிறது. ஆனாலும் இந்த டீமின் வெற்றியில் டிராவிடின் பங்கு இருக்கிறது என்றே நம்புகிறேன்.
பதிலளிநீக்குஇன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ரெகார்ட் T 20 மேட்ச் பார்த்தீர்களா? 245 ஐத் துரத்தி எடுத்து சாதனை செய்துள்ளது ஆஸ்திரேலியா - 20 ஓவர்களில்!
சிவச்சந்திரனுடன் ஆடுவது யார் என்று எனக்கும் தெரியவில்லை. சாதாரண வரிகளுடன் இனிமையான பாடல். அவ்வளவே!
@@ ஸ்ரீராம் :) இப்போ புரியுதா நான் அடிக்கடி off ஆகுற ரீஸன் :) எ.கொ .ஆ .கோ அதான் பிரச்சினையே
பதிலளிநீக்குநான் வெளியே சுற்றிவிட்டு மாலையில்தான் வீடு திரும்பினேன். ஆஸி-நியூஸி கதையை நீங்கள் சொன்னதும்தான் ஸ்கோர்போர்டைப்பார்த்தேன். அடேங்கப்பா! ஆஸி=தெ.ஆப்பிரிக்கா 400 ப்ளஸ், ஒன்-டே சரித்திர சேஸைப்போலல்லவா இருக்கிறது !
பதிலளிநீக்குஇந்த மேட்ச்சில் ப்ரமாத செஞ்சுரி அடித்த அதிரடி கப்ட்டிலை ஐபிஎல் ஏன் கண்டுகொள்வதில்லை? நியூஸியின் வீலர், விக்கெட் ஏதுமெடுக்காமல், 3.1 ஓவரில் 64 ரன்களை தாரை வார்த்திருக்கிறாரே மனுஷன்.. டி-20 உலக ரெக்கார்டோ இதுவும்?
இன்னைக்குக் கொஞ்சம் மெதுவாவே வரேன். கஞ்சியைப் பார்க்கணும். :)
பதிலளிநீக்குஅட? இன்னும் வரலை! :)
பதிலளிநீக்கு// எ.கொ .ஆ .கோ //
பதிலளிநீக்குஏஞ்சல்.... ரொம்ப யோசித்துப் பார்த்து விட்டேன். அபுரி!
ஏகாந்தன் ஸார்... நான் நியூசிலாந்து இன்னிங்ஸ் பார்க்கவில்லை. ஆஸ்திரேலியா சேஸ் மட்டும் அவ்வப்போது பார்த்தேன். மகன் பார்த்துக் கொண்டிருந்தான். கப்டிலை ஏனோ ஐ பி எல்லில் எடுக்கவில்லை. ஏலம் முடிந்த உடன் தானே இப்படி ஆடிக் காட்டியிருக்கார் அவர்? ஆம், உலக ரெகார்டுதான் இது.
பதிலளிநீக்கு@ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு// எ.கொ .ஆ .கோ //
ஏஞ்சல்.... ரொம்ப யோசித்துப் பார்த்து விட்டேன். அபுரி!
haaaahaaa:)
எனக்கு கொஞ்சம் ஆர்வ கோளாறு அதிகம்
ஏஞ்சல்... அநியாயம்... எ ஆ கோ அதிகம் என்று இருக்கவேண்டும்!!!
பதிலளிநீக்கு