1) மதத்தால் அல்ல, மனிதத்தால் இணைவோம். புதுக்கோட்டை அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு, அதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், சைவ விருந்து பரிமாறி அசத்தினர்.
2) பாழாகிக் கொண்டிருந்த இந்த ஏரியைப் பற்றி ராமலக்ஷ்மி கூட முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருந்ததாய் நினைவு. சின்னப்பனஹள்ளி ஏரியை, தனியொருவனாய் காக்கப் போராடிய ப்ரபாசங்கர்.
3) எந்த நாடு, எந்த ஊராயிருந்தால் என்ன, தான் கொண்டிருக்கும் அபூர்வ ரத்த வகையால் 2 மில்லியன் குழந்தைகளைக் காப்பாற்ற உதவி இருக்கிறார் என்றால் சாதாரண விஷயமா என்ன? தகவல் முத்துக்கு நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
4) மத நல்லிணக்கம். குஜராத்தில், 500 ஆண்டுகள் பழமையான, அனுமார் கோவிலை, ஒரு முஸ்லிம் தன் சொந்த செலவில் புதுப்பித்து வருகிறார். மிர்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், மோயின் மேமன்.
வந்தாச்சு
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குஎங்கே துரை? காணோமே? என்னை முந்திட்டுக் கருத்து வந்திருக்கணுமே! :))))
பதிலளிநீக்குஆஜர்...இனிய காலை வணக்கம்..ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா...
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குபுதுக்கோட்டை விஷயம் படிச்சேன். மற்றவை புதுசு
பதிலளிநீக்குஹை கீதாக்கா காலை வணக்கம்....
பதிலளிநீக்குதுரை அண்ணாவின் கமெண்ட் சிலப்போ தாமதமாக...முதலில் வரும்....ஹாஹாஹா
கீதா
6.00 மணிக்கே வழக்கம் போல போட்டேன்... காக்கா வந்து தூக்கிக் கொண்டு போனது போல இருந்தது...
பதிலளிநீக்குதளம் திறக்கவில்லை...
தாழ்ப்பாள் துருப்பிடித்துக் கொண்டதோ என்னவோ!...
இனிய காலை வணக்கம் கீதா அக்கா.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குRh-ve ரத்த தானம் குறித்து இப்போதே அறிந்தேன். நானும் ஒரு நெகடிவ் ரத்தவகையைச் சேர்ந்தவள் என்பதால் இரு பிரசவங்களின் போதும் பட்ட கஷ்டங்கள், குழந்தைகளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் என எல்லாம் நினைவில் வந்து மோதின! இறை அருளால் கடுமையான மஞ்சள் காமாலையால் தாக்கப்பட்ட என் இரு குழந்தைகளும் பிழைத்துக் கொண்டார்கள். இதிலே வேடிக்கை என்னன்னா முதல் பிரசவத்தின் போது முதல் குழந்தைக்கு வந்த மஞ்சள் காமாலையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். இரண்டாவது குழந்தை பிறக்கையிலேயே மஞ்சள் காமாலையுடன் பிறக்கவும் தான் விழித்துக் கொண்டார்கள். :)))) இரு குழந்தைகளும் பிழைத்தது நிச்சயம் ஓர் அதிசயம் தான் எங்களைப் பொறுத்தவரையில். இப்போப் புதுசாப் பிறந்திருக்கும் பேத்தியும் அரிய வகை நெகடிவ் ரத்த வகை! இந்த நெகடிவ் வகை ரத்தம் என்னிடமிருந்து வந்திருக்கிறதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். :)))))))))
பதிலளிநீக்கு//பேத்தியும் அரியவகை நெகடிவ் ரத்தம்..//
நீக்குஆகா... இதல்லவோ தொட்டுத் தொடரும் பாரம்பர்யம்!..
வாழ்க நலம்..
மனதால் இணையட்டும் மக்கள்...
பதிலளிநீக்குநல்ல நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க இறைவன் திருவருள் புரியட்டும்...
துரை கொடுத்த "வாழ்க!" என்னும் கருத்து எனக்கு மெயிலில் வந்திருக்கு. ஆனால் இங்கே காணோமே? ஶ்ரீராம் தேடிக் கண்டுபிடிங்க! :)
பதிலளிநீக்கு// துரை கொடுத்த வாழ்க.... //
பதிலளிநீக்குஉங்களுடைய மெயிலில்!....
எப்படியோ - வாழ்க.. - என்றும் வாழ்க!..
கீதா அக்கா... சரியாய் பாருங்க... என் கண்ணுல படுதே! நீங்கள் நெகட்டிவ் ரத்த வகையா? அம்மாடி! அதை இந்த பாஸிட்டிவ் செய்திகளில் சொன்னது என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்!
பதிலளிநீக்குதுரை ஸார்.. "தொட்டுத் தொடரும் பாரம்பர்யம்" - ஸூப்பர்.
இப்போ வந்திருக்கு ஶ்ரீராம். இரண்டு முறை ரெஃப்ரெஷ் செய்தேன். அப்புறமா வந்திருக்கு! வாழ்க, வளர்க! ஆமாம், நான் நெகடிவ் ரத்தவகை தான். இது பற்றி முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே விபரமாக எழுதி இருக்கேன். பழைய பதிவுகளில் (பத்து வருஷம் முன்னால்?) இருக்கும்.
பதிலளிநீக்குபுதுக்கோட்டை, குஜராத் விடயங்கள் இன்னும் தொடரட்டும்
பதிலளிநீக்கு"இணக்கம்" எங்கு உருவாகிறதோ, அங்கு "பிணக்கு" களுக்கு கதவடைக்கப்படுமே...???
பதிலளிநீக்குஎங்க புதுக்கோட்டை மக்களப்பத்தி நல்ல நியூஸோடு ஆரம்பிச்சு, குஜராத்தின் குட்நியூஸோட முடிச்சிருக்கீங்க பதிவை. நன்றி.
பதிலளிநீக்குஇந்தியாவின் சாதாரணப் பொதுமக்கள் தங்கள் வேலையுண்டு, தாங்களுண்டு என்று இருப்பவர்கள். பொதுவாக மென்மையானவர்கள். நேர்வழிசெல்லும் நல்லவர்கள். அவர்களது மென்மனதை பலவாறாகத் திட்டமிட்டுக் கொன்று, சிதைத்து, கூறுபோட்டு, கருவாட்டு வியாபாரம் செய்கின்றனர் நம் கீழ்த்தர அரசியல்வாதிகள். இந்தக் கேடுகெட்டவர்கள் ஒழிந்தாலன்றி நிம்மதியில்லை நாட்டில்.
ஏரிகாத்த ராமனுக்கு-ப்ரபாசங்கர் ராய்க்கு- ஒரு விறைப்பான சல்யூட்.
பதிலளிநீக்குஅனைத்து பாசிடிவ் மனிதர்களும் பாராட்டத்தக்கவர்கள். பகிர்வுக்கு நன்றி (பல ஏற்கனவே படித்திருந்தாலும்)
பதிலளிநீக்குநெகடிவ் டத்தம்பற்றி கூறும் பாசிடிவ் பதிவு பாராட்டுகள்
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குமதம்கடந்த மனித நேயத்தோடு தான் வாழ்ந்து வருகிறோம்.
மாயவரத்தில் எங்கள் தெருவில் இருக்கும் காமாட்சி அம்மனுக்கு தினம் விளக்கு போடுவார் ஆட்டுத்தோல் வியாபாரம் செய்யும் முஸ்லிம் அன்பர். திருவிழா சமயம் ந்னகொடை கொடுப்பார் தாராளமாய்.
சந்தனகூடு திருவிழாவிற்கு நம் அன்பர்கள் நங்கொடை தருவார்கள் விழாவை சேர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் அருமை.மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிக்காமல் பக்தர்களுக்கு உணவிட்டு அழைப்பிதழ் அச்சிட்டு அசத்தி விட்ட புதுக்கோட்டை இஸ்லாமியர்களுக்கு பணிவான வணக்கங்கள். அறிமுகப்படுத்திய அனைவரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் நன்றிகன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நன்றி நண்பரே
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதுளசியும் கமென்ட் கொடுத்திருக்க, நானும் விரிவாகக் கொடுத்திருந்தேன். கமென்ட் போகாமல் என் நெட் போனதால் அப்படியே நின்றது. மீண்டும் நெட் இப்ப வந்ததும் கொடுத்தும் போகாமல்...காப்பி செய்து வைக்காமல் விட்டதால் கமென்ட் போகாமல்....
பதிலளிநீக்குதுளசி: எங்கள் ஏரியா மலப்புரம் மாவட்டம், தொட்டடுத்த கோழிக்கோடு எல்லாம் இஸ்லாமியர் நிறைந்த பகுதி என்றாலும் எல்லாருமே நட்புடன் தான் இருக்கிறார்கள். பிரிவினை எல்லாம் கிழ்த்தரமான (கீதா: கேடுகெட்ட) அரசியல்வாதிகளால் உருவாக்கபப்டுவது. கலவரங்களைத் தூண்டுவதும் அவர்களே.
எல்லா செய்திகளும் அருமை...
கீதா: ஹேரிஸ் பற்றி மனோ அக்கா த்ளத்தில் ...மாமனிதர்...
ஏரி காத்த பிரபா சங்கர் வாழ்க வளர்க! அந்தக் கொக்குடன் கூடிய படம் அழகு!
present sir!
பதிலளிநீக்குகீதா அக்கா... 5.58
பதிலளிநீக்கு6.00 மணி இன்னும் ஆகலையே!...
பதிலளிநீக்குitho now it is 6-00 :)
பதிலளிநீக்குlate
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. நன்றி. முதலாவது படம் FB-யில் காணக் கிடைத்தது. விரிவான செய்தியை இப்போது அறிகிறேன். மூன்றாவது தகவல் முத்தும் மனோம்மா பதிவில் பார்த்தேன். மத நல்லிணக்கச் செயல்கள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தட்டுமாக!
பதிலளிநீக்குபிரபாசங்கரின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆம், பெங்களூர் ஏரி ஒன்றின் வெற்றிக் கதை இங்கே:
http://tamilamudam.blogspot.in/2014/07/3.html
மத நல்லிணக்கம் - சிறப்பு. பல இடங்களில் அரசியல் மத நல்லிணக்கத்தினை சீரழிக்கிறது. என்ன சொல்ல.
பதிலளிநீக்குஅனைத்துமே நல்ல செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.