1979 ஆம் வருடம் வெளிவந்த படம். 'ஆ நிமிஷம்' என்கிற மலையாள படத்தின் தமிழ்த்தழுவல். நூல் வேலி. பாலச்சந்தர் இயக்கம்.
காட்சியில் வருபவர் பெயர் நாராயண ராவ் என்று விக்கி சொல்கிறது.
துறுதுறுப்பான சிறுபெண் வேடத்தில் சரிதா.
பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். கண்ணதாசன் எழுதிய பாடல். பாடி இருப்பவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
காட்சியைப் பார்க்காமல் பாடல் மட்டும் கேட்டால் அது ஒரு சுகம், சுவை. ஒவ்வொரு சரணத்துக்கு முன்னாலும் எஸ் பி பி இழுக்கும் ஹம்மிங் ரசிக்கத்தக்கது. எம் எஸ் வி யின் இனிமையான பின்னணி இசை, டியூன்.
கண்ணதாசன் வரிகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!
தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம் - என்
கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்னச் சின்ன நடை திண்டாட்டம் - அதைக்
கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
பூந்தோட்டம் கண்டு மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம் - அந்த
வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
என்ன என்ன சுகம் உள்ளோட்டம் என்னை
இந்திரலோகத்தில் தாலாட்டும்
=========================================================================================================
"அம்மா காத்திருந்தாள்" - நேற்று முதல் பாகம். இன்று அதே தலைப்பில் இரண்டாவது கதை தொடர்கிறது. மக்களே... வெள்ளி வீடியோவையும் கண்டுக்கோங்க... கதையையும் கண்டுக்கோங்க...
அம்மா காத்திருக்கிறாள் - 2
துரை செல்வராஜூ
****************************** ********
உடலினின்று நீங்கிய பின்னும்
அங்கேயே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பருவதத்தின் ஆவி - பூத கணத்தாருடன் புறப்பட்டது...
நடக்கிறார்களா.. பறக்கிறார்களா.. மிதக்கிறார்களா!..
ஒன்றும் சொல்ல இயலவில்லை..
அங்குமிங்கும் பனிச்சாரலாக மேகத்திரள்கள் ...
மேலே செல்லச் செல்ல
வையகம் சுருங்கிட வானகம் விரிந்து கொண்டேயிருந்தது...
சிறிது நேரத்துக்கெல்லாம்
மேலே கீழே சுற்றிலும் - என, எங்கெங்கும் நிர்மலமான பரந்த வெளி...
மேகத் துணுக்கு கூட மிதந்து திரியவில்லை...
பருவதத்தின் அருகிருந்த ஜயன் என்ற பூத கணத்தார் வினவினார்..
பூலோக வாழ்க்கையை விட்டுவிட்டு வருகிறாயே..
உனக்கு வருத்தமாக இல்லையா!...
எதுக்கு சாமீ வருத்தம்... இருக்குற வரைக்கும் நல்லா இருந்தோம்...
அத விட்டுப் புறப்பட்டாச்சு.. அவ்வளவு தான்...
ஜயா!... நான் அப்பொழுதே சொன்னேனே இவர்களைப் பற்றி!..
- விஜயன் என்ற பூத கணத்தார் நினைவூட்டினார்..
அதுசரி... இம்பூட்டு தூரம் வந்திருக்கோம்!..
பசி தாகம்... ன்னு ஒன்னும் இல்லையே!..
பருவதத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது...
பசி தாகம், தூக்கம் விழிப்பு இதெல்லாம் பூமியில் தான்!..
அந்த எல்லையை நாம் கடந்தாயிற்று!..
ஏஞ் சாமியளா... என்னால ஒங்களப் பாக்க முடியுது!..
ஆனா என்னையப் பாத்துக்க என்னால முடியலையே?..
அது மாய தேகம் .. கழன்று விட்டது... இப்போது ஆத்ம ஸ்வரூபம்..
ஒரு நெல்லளவு ஒளிப் புள்ளியாக இப்போது இருக்கின்றாய்..
உன்னை நீயே கண்டு கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்!...
சாமீ.... என்னமோ சொல்றீங்க...
எனக்கு ஒன்னும் புரியலிங்க!...
இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் புரியும்!..
அந்த நேரத்தில் -
லட்ச லட்சமான ஒளிப் புள்ளிகளைக் கடந்து கொண்டிருந்தார்கள்...
இதுங்க...ள்லாம் என்ன சாமீ.. மினுக்கட்டாம் பூச்சி...ங்களா?...
இதெல்லாம் பூமியிலிருந்து பிரிந்த நல்ல ஆன்மாக்கள்...
இந்த ஒளிப் புள்ளியைப் போலத் தான் நீயும் இருக்கின்றாய்...
நல்ல ஆன்மாக்கள்.. ஆயினும் இன்னும் அழைப்பு
கிடைக்காததால் ஆங்காங்கே திரிந்து கொண்டிருக்கின்றன...
இன்னும் மேலே செல்லச் செல்ல
லட்ச லட்சமாகத் திரிந்துகொண்டிருந்த ஒளிப் புள்ளிகள்
ஆயிரம் ஆயிரமாக நூறு நூறாக பத்து பத்தாகக் குறைந்து
ஒரு நிலையில் ஒன்றும் இல்லாமல் - ஏக வெளியாக விரிந்திருந்தது...
அதோ பார்!...
எதிரில் பிரம்மாண்டமான ஒளிப் பிழம்பு...
என்னது இது!?...
முதன்முறையாக அதிர்ச்சியில் - பர்வதத்தின் ஆன்மா...
இதுதான் வெள்ளியங்கிரி!...
அப்படின்னா?...
திருக்கயிலாய மாமலை!...
அதோ திருவாசல்.. உள்ளே செல்வாயாக!..
அப்போ நீங்க!?..
அம்மையே... உள்ளே சென்று அம்மையப்பனைத் தரிசிப்பீர்களாக!...
அந்த பூத கணங்களுக்கு வணங்கி விட்டு
மெல்ல நடந்தாள் பர்வதம்...
நடுவழியில் காளை ஒன்று படுத்துக் கிடந்தது...
இதென்ன... எங்க வூட்டு செவலைக் காள மாதிரியே இருக்கு!...
ஆசையுடன் அருகில் சென்று
அந்த காளையின் முகத்தை வருடிக் கொடுத்தாள்...
அம்மா... அதோ அம்மையப்பன்.. தரிசிப்பீர்களாக!..
அட... மாடு பேசுதே!.. என்னா அதிசயம் இது?..
அம்மா... அடியேன் நந்தி.. மேலே செல்லுங்கள்!...
ஒன்றும் புரியாதவளாக பர்வதம் நடந்தாள்...
எதிரில் -
ஒளிமயமாக இறைவனும் அம்பிகையும்!...
பருவதம் வாழ்நாளில் கோயில்களைப் பார்த்திருக்கிறாளே.. தவிர,
உள்ளே போய் ஒருநாளும் கும்பிட்டதில்லை....
வருசத்துக்கு வருசம் தேரு திருவிழா... ந்னு நடக்கும்....
அந்த சமயத்தில் தெருவில் வரும் சாமி ஊர்வலத்தைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொள்வாள்...
மற்றபடி வீட்டு மாடத்தில் விளக்கேற்றி வைத்து கும்பிடுவது...
எப்பொழுதாவது
கேணிக்கரை பிள்ளையாருக்கு ஒரு குடம் தண்ணி எடுத்து ஊற்றுவது....
அவ்வளவு தான் பருவதத்தின் பூஜை... புனஸ்காரம் எல்லாம்...
அப்படியான பருவதம் இன்னைக்கு கயிலாச மலைக்கு வந்து
சாமிக்கு முன்னால நிற்கிறது.... என்றால் நம்பவே முடியலை...
இருந்தாலும் கைகூப்பி நின்றாள்...
தாயே மகமாயீ... காளியம்மா!..
வா.. மகளே.. வா!...
வாழ்க்கையில் படாதபாடுகளைப் பட்டுவிட்டாய்..
உன்னுடைய அன்பும் பண்பும் சொல்லத் தக்கவை!..
கயிலாயத்தின் கற்பகவல்லி திருவாய் மலர்ந்தாள்...
தாயே... கடவுளும் வந்து எங்கூட பேசுமா!..
அந்த அளவுக்கா நான் நல்லது பண்ணியிருக்கேன்!?...
திகைத்து நின்றாள் - பருவதம்...
நீ ஒரு கெடுதலும் செய்ததில்லை!...
அதுவே புண்ணியம் தானே!...
நீ உண்ணக் கொடுத்தாய்.. உடுக்கக் கொடுத்தாய்!..
கல்விக்கண் திறந்து வைத்து கை தூக்கி விட்டாய்!..
ஏழ்மையில் இருந்த இளம்பெண்ணுக்கு
மாங்கல்ய தாரணம் செய்து வைத்தாய்!..
இவற்றையெல்லாம் விட
வேறொரு அறமும் வேண்டுமா.. மகளே!..
என்னமோ தாயீ!.. நீதான் சொல்றே..
எனக்கு அதெல்லாம் மறந்து போச்சு!..
மெல்ல நகைத்தாள் மீனாம்பிகை....
உயிர்களின் பொருட்டு
உன்னை மீண்டும் பூமியில் பிறப்பிக்க இருக்கின்றோம்!...
மௌனமாக இருந்தாள் பருவதம்...
இதோ உனக்கு முன்னால் ஏழு கலசங்கள் இருக்கின்றன...
எந்த ஒன்றையும் நீ தேர்ந்து கொள்ளலாம்!...
நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பினால்
அந்தக் குடும்பம் பெருமை கொள்ளும்...
நோய் நொடியின்றி பசியும் பஞ்சமும் இன்றி
ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் விளங்கும்...
நாலு பேருக்கு நல்லதைச் செய்வதுடன்
ஊருக்கு உபகாரமாக விளங்கும்!...
அத்தனையும் நீ அந்தக் குடும்பத்தில்
மகளாகப் பிறப்பதனால்!...
விவரங்களைக் கூறினாள் - வேதாந்த நாயகி...
தனக்கு முன் தெரிந்த
ஏழு கலசங்களையும் உற்று நோக்கினாள் - பர்வதம்...
அந்தக் கலசங்களில்
தெரிந்த முகங்களும் - தெரியாத முகங்களும் தென்பட்டன....
ஒவ்வொன்றாக உற்று நோக்கிய பருவதம்
அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தாள்....
ஐந்தாவதாக இருந்த கலசத்தை நோக்கி விரலை நீட்டினாள்...
ஏன் அந்தக் கலசத்தைத் தேர்ந்தெடுத்தாய்!..
- அம்பிகையின் திருமுகத்தில் வியப்பு...
தாயே... என்னோட ரெண்டு பசங்களும் என்னை மதிக்கல தான்...
ஆனாலும் அவங்கள ஒருநாளும் பிரிச்சுப் பாக்க முடியாது..
இவன ஒதுக்கி அவன் வூட்ல பொறந்தாலும்
அவன ஒதுக்கி இவன் வூட்ல பொறந்தாலும்
அது நியாயம்...ன்னு எம்மனசு ஒத்துக்காது...
இந்தா... இந்தப் புண்ணியவதி...
எனக்கு பொண்ணு இல்லாத குறையத் தீர்த்தவ...
கூடமாட ஒத்தாசையா இருந்தவ...
முந்தா நாளு கூட
கத்தரிக்கா கொழம்பு வச்சி சோறு போட்டவ...
எனக்காவ பாசமா.. நேசமா
ஒரு சொட்டு கண்ணுத் தண்ணி விட்டவ...
அவளுக்கு நா பொண்ணாப் பொறக்கணும்...
வாயார அம்மா... ன்னு கூப்புடணும்...
ஏதோ விதி.... ன்னு ஒன்னு இருந்தா
அன்னைக்கு வாழாத வாழ்க்கைய
எம்புருசனும் வந்து என்னோட வாழட்டும்...
எம்புள்ளைங்களும் மறுபடி வந்து பொறக்கட்டும்!...
கல்யாணமாயி அஞ்சு வருசமா
புள்ள இல்லாம இருக்குறா லெச்சிமி...
அவளோட கர்ப்பத்துல என்னைய சேர்த்துடு..
அவளோட மடியில என்னைய சேர்த்துடு தாயீ!..
அம்மையப்பனை வீழ்ந்து வணங்கினாள் பருவதம்...
ஈசன் புன்னகைத்தான்.. அவனது திருக்கரத்தினை
இன்முகத்துடன் பற்றிக் கொண்டாள் அம்பிகை!..
அவ்வண்ணமே ஆகட்டும்!...
அம்மையப்பன் ஆசி நல்கினர்...
மீண்டும் உன்னைப் பூமிக்கு
பூத கணங்கள் அழைத்துச் செல்வர்..
நீடூழி வாழ்க.. எங்கள் செல்வ மகளே!..
குத்தங் குறை எல்லாத்தையும் மன்னிச்சுக்கணும்...
அம்மையே... அப்பா!... நீயே கதி... நீயே கதி!...
அந்த ஆன்ம சுடர் அங்கிருந்து விரைந்து புறப்பட்டது...
பருவதம் தனக்கு மகளாக வருவதை
அறியாதவளாக - அங்கே லெச்சுமி!...
பூத கணங்களுடன் விரைந்த ஆன்ம சுடர்
இப்படியாகச் சொல்லிக் கொண்டது
அம்மா காத்திருக்கிறாள்!...
ஃஃஃஃஃ
துரை செல்வராஜூ ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇதுக்கு என் வன்மையான கண்டனங்கள்.. நாங்களும் வரலாம் எல்லோ அப்பபா:).. பெயர் ஜொன்னா இனிமேல் அதிரா பெயரையும் சேர்த்துச் சொல்லோணும்:) இல்லை எனில் நாட்டுக் கலவரத்தை உருவாக்குவேனாக்கும்.. ஹா ஹா ஹா:)).. யூப்பர் மாட்டி இண்டைக்கு காலையிலேயே நாரதர் கலகத்தை ஆரம்பிச்சாச்சு:))
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம் இன்று சீக்கிரமே வந்துவிட்டதே!!
பதிலளிநீக்குஎத்தனை கர் சத்தம் கேட்கப் போகுதோ...ஹா ஹா கௌ அண்ணா தக்கினிக்கு தொத்திக்கிடிச்சோ உங்களுக்கும் ஹா ஹா ஹா ஹா
கீதா
இது அநியாயம் அக்கிரமம்.. நான் இப்பவே போகிறேன் காண்ட் கோர்ட்டுக்கு:)..
பதிலளிநீக்குஸாரி மியாவச்காவ்... முக்கியமான விசேஷம். "எங்கள்" வீட்டு விசேஷம்..
நீக்குஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் வீட்டில விஷேஷமாம்ம்ம் அப்போ எல்லோரும் வாங்கோ.. அழையா விருந்தாளியா நுழைஞ்சு:) வடை பாயாசத்தோடு ஒரு வெட்டு விட்டிட்ட்டு வந்திடலாம்:) ஹா ஹா ஹா.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நீக்குஅப்பவும் நினைச்சேன்.. ஏதும் கெள அண்ணன்போல ஏடாகூடம் நடக்குமோ ரைம் ல என, இருப்பினும் சே.சே.. ஸ்ரீராம் கரெக்ட்டா 6 மணிக்குத்தானே போடுவார் என நினைச்சுட்டேன்ன்..
பதிலளிநீக்குமாற்றம் கொண்டு வரோணும் எண்டதற்காக இப்பூடியா பண்ணுவீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:).
வாங்க அதிரா நானும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்...
நீக்குகீதா
அதிரா முதல்ல கில்லர்ஜி பதிவு வந்திருக்கும்னு போனேன் ஆனா அங்க நீங்கதான் ஃபர்ஸ்ட்ரடூஊஊஊஊஒனு உங்க குரல் தான் கேக்கும்னு தெரியுமா ஸோ எபியும் சைட்ல ஓபன் பண்ணிப் பார்த்தாதாஆஆஆஆஆஆஆஆஆ ஆஹா வந்துருச்சு பாட்டுனு டக்னு அதிரா குதிப்பதற்குள் குதிக்கனும்னு குதிச்சுட்டேன்...ஹா ஹா ஹா
நீக்குகீதா
கீதா
//மாற்றம் கொண்டு வரோணும் எண்டதற்காக இப்பூடியா பண்ணுவீங்க //
நீக்குஅட, கொண்டுவர விடமாட்டேங்கறீங்களே...!
முதலில் பாடல் வரிகள் என்று நினைத்தேன் துரை அண்ணாவின் கதையா...ஆஹா அப்ப 2 வந்துருச்சு.....நான் அனுப்பினா அது எத்தானவதோ..ஹா ஹா ஹா அதுவும் நம்ம ஸ்லோ கோச்சுக்கு அடுத்த வருஷன் கடைசி ஆகிடுமோ?!!!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
பாடல் வரிகளைத்தானே தலைப்பாக்கி இருக்கிறேன் கீதா?
நீக்குவாழ்க நலம்..
பதிலளிநீக்குபாட்டுக் கேட்டமாதிரியும் இருக்கு கேளாத மாதிரியும் இருக்கு.. முதல் பந்தி மட்டும் கேட்டேன் மிகுதி பகலில் கேட்கிறேன். அருமையாக இருக்கு.. அந்தக்கால சரிகா எவ்ளோ ஸ்லிம்மா இருக்கிறா..
பதிலளிநீக்குஇது நூல் வேலி என்கிறீங்க.. முள் வேஎலி என ஒரு படமும் வந்ததெல்லோ.. நாசர் ரேவதி நடிச்சதென நினைக்கிறேன்.. எங்கட முத்துராமன் மாமாவின் மூத்த மகனும் ஒரு ஹீரோ:)..நல்ல படம் ஆனா சோகம்..
முள்வேலி? கேள்விப்பட்டதேயில்லை.
நீக்குஆஆஆஆஆ இங்கே 100 ஆவது கொமெண்ட் போட்டது மீதானாக்கும்:))
நீக்குஸ்ரீராம் அதை நான் முள்வேலி என பதிவு செய்திருந்தேன் என் கிட்னியில் ஆனா இப்போ தேடினால் அது தொட்டால்சிணுங்கி என வருது:).. நாசர் அல்ல அது ரகுவரன் ...
ஓ... உங்கள் வழக்கப்படி இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேனே...!
நீக்குஇல்ல அந்தப் படம் பார்த்து விட்டேன், இப்போ நூல்வேலி யைக் குறித்துக் கொண்டேன்:)..
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா , அதிரா மற்றும் அனைவருக்கும் நல்வரவு... ம்
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் எங்கள் புளொக்கின் 3 ஆவது ஆசிரியருக்கும், லேட்டா வந்த கீதாவுக்கும்.. மற்றும் கரெக்ட்டா 6 மணிக்கு மீ த 1ஸ்ட்டா எட்டிப் பார்த்த துரை அண்ணனுக்கும்:).
பதிலளிநீக்குஹா இதாரு எப்ப குதிச்சாலும் நான் தான் ஃபர்ஸ்டூனு...சொல்லுறது...நோ நோ நோ..கில்லர்ஜி ராத்திரி ஜல் ஜல் சமயத்தில் பதிவு போட்டு அதுக்கும் நீங்க முதல்ல குதிச்சு ஃபர்ஸ்டூஊஊஊஉனு சொல்ல வேண்டியது....அப்படி பாத்தா அங்க இந்திய நேரத்துக்கு விடியும் சமயம்... ஆரு ஃபர்ஸ்டூஊஊஊனு வந்தது பார்க்கணும் ஹெ ஹெ ஹெ ஹெ
நீக்குகீதா
கீதா அது விதி விளையாடிவிட்டது நேற்று கர்ர்ர்:)).. கரெக்ட்டா 6 மணிக்குப் போட்டிருந்தாரெனில் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ ஹா ஹா ஹா..
நீக்குகில்லர்ஜி போடும் நேரம் எங்களுக்கு ஈசிதான் 1ஸ்ட்டாகக் குதிப்பதற்கு, ஆனால் அந்நேரம் பல சமயம் பிசியாக இருப்போம்... அவருடைய நேரம் எங்கள் இரவு 7.30.
//மக்களே... வெள்ளி வீடியோவையும் கண்டுக்கோங்க... கதையையும் கண்டுக்கோங்க...//
பதிலளிநீக்குஹா ஹா ஹா உசாராத்தான் இருக்கிறீங்க:)
அவ்வ்வ்....
நீக்குஆஆஆஆஆவ்வ்வ்.. என்னமோ எழுதப்போகிறார் துரை அண்ணன் என எண்ணியிருந்த என் எண்ணத்தை எல்லாம் உடைச்சுத் தேம்ஸ்ல வீசிட்டீங்க துரை அண்ணன்.. இப்படி ஒரு கோணத்தில போய் எழுதுவீங்க என எதிர்பார்க்கவே இலை நான். சூப்பரா எழுதியிருக்கிறீங்க.. அதுவும் ஆரம்பத்தில கடவுளே மிரட்டப் போகிறாரோ ஆன்மா அலைவது சுற்றுவது பற்றி எல்லாம் சொல்லி, எனப் பயந்தேன்.. அப்படியும் இல்லாமல் அருமை.. அருமை உண்மையில் நல்லா இருக்கு.. மகிழ்வான நிறைவும் கூட.
பதிலளிநீக்குஅன்பின் ஞானி..
நீக்குதங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி...
நெஞ்சார்ந்த நன்றி..
//நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பினால்
பதிலளிநீக்குஅந்தக் குடும்பம் பெருமை கொள்ளும்...
நோய் நொடியின்றி பசியும் பஞ்சமும் இன்றி
ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் விளங்கும்...//
இதிலகூடப் பாருங்கோ.. இந்த ஜென்மத்தில தான் மிரட்டுறாங்க எனப் பார்த்தால், அங்கு போனபின்பும் மிரட்டியே பிறவி எடுக்கப் பண்ணுறாங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. இதனாலதான் இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்பூடக்கூடா..
>>> இதிலகூடப் பாருங்கோ.. இந்த ஜென்மத்தில தான் மிரட்டுறாங்க எனப் பார்த்தால், அங்கு போனபின்பும் மிரட்டியே பிறவி எடுக்கப் பண்ணுறாங்க..<<<
நீக்குஇதில் மிரட்டல் எங்கே இருக்கிறது... மறுபிறவியின் பலாபலன்கள் சொல்லப்படுகின்றன..
இது தான் ஆன்ம லாபம் என்பது!..
கீசாக்கா ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா .. கீசாக்கா வந்தா, அதிரா வந்து கொமெண்ட்ஸ் போட்டிட்டுப் போய் நித்திரையும் ஆகி, கைலாயம்/சொர்க்கம் பற்றிய கனவில இருக்கிறா இப்போ எனச் சொல்லிடுங்கோ கீதா.. ஹா ஹா ஹா.. ஓகே நாளை சந்திப்போம்ம்.. நல்ல்லிரவு.._()_.
பதிலளிநீக்குஆமாம், அதிரடி, லேட்டுத் தான்! உடம்புப் படுத்தல் ஜாஸ்தியாவே இருக்கு! ஒண்ணு மாத்தி ஒண்ணு! :))))) காலம்பர சீக்கிரம் எழுந்துக்கும் வழக்கமே இப்போ ஒரு மாசமாப் போயிடுச்சு! எழுந்துட்டால் அப்புறமா கொஞ்சம் வேலைகளைச் சுறுசுறுப்பாப் பார்த்துடறேன். என்றாலும் மருந்துகள் முடிய இன்னும் 2 நாளாகும் என்பதால் அது வரை தூக்கம், மயக்கம்! எழுந்தால் கொஞ்ச நேரம் தடுமாற்றம்! பின்னர் சரியாயிடும். :))))
நீக்குஅதிரா கீதாக்காவுக்கு ஏற்கனவே மாத்திரைகள் உறங்க வைத்துக் கொண்டிருக்கின்றன....இப்பத்தான் மெதுவா தேவலாம் ஆகி வந்துக்கிட்டிருக்காங்க...
நீக்குஆஹா நீங்க கைலாயம் சொர்க்கம் போறீங்களா...அப்ப அடுத்த கதை வருதோ...ஸ்ரீராம் சொன்னது போல் இங்கிருந்து காவிக் கொண்டு போய்.....ஹிஹிஹிஹிஹி
கீதா
நல்லிரவு வணக்கம்...உங்கள் கனவுகளுக்கும் சேர்த்து!!!!! பூஸாரே...
நீக்குகீதா
கீதாக்கா.. உடம்பு படுத்தல் இன்னுமா சரியாகலை? மறுபடியும் டாக்டரைப் பார்க்கவில்லையா?
நீக்குகீசாக்கா, உங்களுக்கு இப்போ தேவை நிறைய ரெஸ்ட் தான், நன்கு அடிக்கடி நித்திரை கொள்ளாட்டிலும், சும்மா படுத்திருங்கோ, நிறைய தண்ணி குடியுங்கோ.. எல்லாம் சரியாகிடும், உடம்பை முடியாதபோதும் கஸ்டப்படுத்தினால் அது இன்னும் மோசமாகும்.. அப்பப்ப மைண்ட் ரிலாக்ஸ் க்காக இங்கு வந்து பேசுங்கோ... சீக்கிரம் எல்லாம் குணமாகிடும்... சாப்பாட்டையும் கவைனிச்சுக் கொள்ளுங்கோ.
நீக்குகீதா ஹா ஹா ஹா..
நீக்குஇது கதையின் தொடர்ச்சி. வெறும்ன இந்தக் கதையை பின்னால் படிப்பவர்களுக்கு ஒன்றும் புரிந்துகொள்ள இயலாது. அதனால் முந்தைய பகுதியின் சுட்டியைச் சேர்த்துவிடுங்கள்.
பதிலளிநீக்குபகுதி ஒன்று தனிக்ககதை ஆனால் பகுதி இரண்டுக்கு, ஒன்று தேவை. இரண்டையும் சேர்த்து, பின்னால் மீள்பதிவாக ஒரு செவ்வாயில் வெளியிட்டுவிடுங்கள்.
நான் சொல்ல வந்தேன் நெல்லை ஹைஃபைவ்...இக்கதையைத் தனியாகப் படிக்க முடியாதுதான். அல்லது முதல் வரிகளுக்கு மேலே புதியதாய் கதை தொடங்குவது போல் வரிகள் இருந்தால் இரண்டும் சேர்த்தும் படிக்கலாம்...தனித் தனியாகவும் படிக்கலாம் என்றும் எனக்குத் தோன்றியது...
நீக்குகீதா
@ To all concerned! :D நேற்றையக் கதையின் தொடர்ச்சி என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. அப்படி ஒண்ணும் கஷ்டமாய்த் தெரியலை. இருந்தாலும் இதன் முதல் பகுதி படிக்காதவர்களுக்கு எனச் சொல்லிட்டுச் சுட்டியைத் தரலாம். மற்றபடி கதை புரியாதமாதிரி எல்லாம் இல்லை.
நீக்குஎப்போதாவது காலி செவ்வாய் அமையுமாயின்....!
நீக்குநல்லவேளையாக அந்தக் கலசங்களில் எங்கே போகப் போறோம்னு கண்டு பிடிக்க முடிஞ்சது! அதனால் லக்ஷ்மி கலசத்தைத் தேர்ந்தெடுக்கப் பருவதத்துக்கு சுலபம் ஆயிற்று. அருமையான கற்பனை வளம். செழுமையாகவும் அதே சமயம் வளமாகவும் நேர்மறையாகவும் சிந்தனைகள். வாழ்த்துகள் துரை!
பதிலளிநீக்குஅடுத்த பிறவியை அந்த ஆன்மா தெரிவு செய்ய முடியும் என்று ஹேமா கூட அவர் தளத்தில், ஒரு புத்தகப் பகிர்வில் எழுதி இருந்தார்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஸ்ரீராம் இந்திரா சௌந்தர்ராஜன் ஆன்மா மறு ஜென்மம், போன்ற கதைகள் நிறைய எழுதியிருக்கார் இல்லையோ?
நீக்குகீதா
இருக்கலாம் கீதா. நான் படித்ததில்லை.
நீக்கு//ஸ்ரீராம்.2 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:55
நீக்குஅடுத்த பிறவியை அந்த ஆன்மா தெரிவு செய்ய முடியும் என்று ஹேமா கூட அவர் தளத்தில், ஒரு புத்தகப் பகிர்வில் எழுதி இருந்தார்.//
இதை நான் நம்ப மாட்டனே:), ஏனெனில் அப்பூடி எனில் எல்லோரும் மிக நல்ல இடத்தில, நல்ல உயர்வாகப் பிறக்கோணும் எனத்தானே தெரிவு செய்வார்கள்..
சாய்ஸிலிருப்பது உயர்வா தாழ்வா என்று அங்கு எப்படித் தெரியும் அதிரா?
நீக்குஎனக்குப் புரியுதில்ல ஸ்ரீராம், நாம்ங்களே தெரிவு செய்யலாம் எனில் அப்போ என்ன அது?.. இப்போ உணவுக்கு வழியில்லாத, மக்களால் அடித்து விரட்டப்படக்கூடிய மிருகங்கள்.. மற்றும் குறைபாடுள்ள மனிதர்கள் இப்படியானவை இல்லாமல் நல்ல ராஜகுமாரியாக ராஜ யோக வாழ்வைத் தெரிவு செய்யலாமெல்லோ...
நீக்குஅங்கு ஒளிப்புள்ளிகளாக திரிந்துகொண்டிருக்கும் ஆன்மாக்களின் நல்லது எது, அல்லது எது என்று தெரிய வாய்ப்பு கம்மி. மேலும் பன்றியாக பிறப்பெடுத்த முனிவர் கதை தெரியும்தானே? அப்படி நிகழ்ந்தால்?
நீக்குபாட்டு இனிதான் கேட்கனும் ஸ்ரீராம் 8 மணிக்கு மேலதான் கேட்க முடியும்..
பதிலளிநீக்குதுரை அண்ணா கதை சூப்பர்....பருவதம் மேல் உலகம் சென்ற பின்னும் எத்தனை நல்ல மனது...அவருக்கு...கதை அருமை அண்ணா...வித்தியாசமான கோணம்....அருமை அண்ணா ...ரசித்துப் படித்தேன் உங்கள் நடையை...மொழியை...கதையை
கீதா
>>> அண்ணா...வித்தியாசமான கோணம்....அருமை.. <<<
நீக்குஅன்பின் கீதா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
உடலை விட்டு உயிர் பிரிந்தால் ஆன்மாக்கள்(?) அல்லது பிரிந்த உயிர்கள்(?) தங்களுக்கான நேரம் வரும் வரைக்கும் இப்படித் தான் அலையும் எனச் சொல்கின்றனர். வெளிநாடுகளில் கூட இப்படித் தான் நினைக்கப்படுகிறது என்பதைச் சில, பல நாவல்கள் மூலம் தெரிந்து கொண்டேன். சில சமயங்கள் நாம் பார்க்கும் அதிகப்படியான நக்ஷத்திரங்கள் அப்படி அலைந்து திரியும் ஆன்மாவோ என்றும் தோன்றுவது உண்டு.
பதிலளிநீக்குஅதை வைத்துத்தான் நம்ம ஏரியாவில் ப்ரிடிஷ் ஏர்வேஸ் ஃப்ளைட்டு விளம்பரக் கதைக்கு நான் நட்சத்திரக் கதை எழுதியது கீதாக்கா.... என் அத்தைகள் என் அம்மா, என் தாத்தா, இப்ப என் பாட்டி எல்லோரும் வானில் நட்சத்திரமாய் இருக்காங்கனு நினைச்சுப்பேன்...என் பாட்டியும் தாத்தாவும் துருவ நட்சத்திரக் கதை சொல்லி இப்படியும் எனக்கு சிறு வயதில் கதை சொல்லி அது அப்படியே பதிந்துவிட்டது...
நீக்குகீதா
>>> என் அத்தைகள் என் அம்மா, என் தாத்தா, இப்ப என் பாட்டி எல்லோரும் வானில் நட்சத்திரமாய் இருக்காங்கனு நினைச்சுப்பேன்.....<<<
நீக்குஅப்படியே உள்வாங்கிக் கொண்டிருக்க ஒருநாள் உண்மைகள் விளங்கும் என்பது திருவாக்கு...
@ Geetha Sambasivam..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உண்மை என்னவோ யார் அறிவார்கள்? உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதைக் கண்டு இங்கே வந்து சொன்னவர் யார்? கண்டவர் விண்டிலர்/ விண்டவர் கண்டிலர்!
பதிலளிநீக்கு>>> உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதைக் கண்டு இங்கே வந்து சொன்னவர் யார்?..<<<
நீக்குஞான த்ருஷ்டியினால் உணர்ந்து கொண்ட பெரியோர்கள் சொன்னதையும் தான் நாம் நம்பவில்லையே...
இதற்கெல்லாம் விளக்கத்தை எனது தளத்தில் தருவதற்கு முயற்சிக்கிறேன்...
துரை அண்ணா உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் அபாரம். அதை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை வார்த்தைகள் இல்லை அண்ணா....உங்கள் கதைகளில் நேர்மறை சிந்தனைகள், இது போன்ற ஆன்மீக கருத்துகள் விரவி வரும் என்பது தெரியும் என்றாலும் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சிவருவது போல் ஓர் எண்ணம் தோன்றியது....அருமை அருமை அண்ணா...
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஜி
பதிலளிநீக்குஎனது சிந்தை எப்பொழுதும் இதுவே...
///நீ ஒரு கெடுதலும் செய்ததில்லை!...
அதுவே புண்ணியம் தானே!//^
நானும் இறைவனை கண்டது போன்ற உணர்வை தந்தது எழுத்தின் மயக்கம்.
@ KILLERGEE Devakottai..
நீக்குஅன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
//காட்சியில் வருபவர் பெயர் நாராயண ராவ் என்று விக்கி சொல்கிறது.//சரத்பாபு இல்லையோ? இந்தப் படம் பார்த்த நினைவு. பாட்டைக் கேட்டால் ஒருவேளை புரியலாம். பாட்டைப் பின்னர் கேட்கிறேன்.
பதிலளிநீக்குகீதாக்கா... படத்தின் நாயகர் சரத்பாபுதான். இந்தப் பாடல் காட்சியில் பாடுவதுபோல் நடிப்பவர் நாராயணராவ்.
நீக்குஸ்ரீராம்ஜி அருமையான பாடல் ரசிக்கும்படியான பாடல் வரிகளே...
பதிலளிநீக்குபல்லாயிரம் முறைகள் கேட்டு இருக்கிறேன்.
நூல்வேலி படத்தில் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய அந்த பாடலை அடுத்த வாரம் வெளியிடுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
பாடல் மனதில் நிற்கிறது முதல் வரி ஞாபகம் வரமறுக்கிறது.
"மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே..."
நீக்குஆம் இதுவே.... நான் தினமும் இலங்கை வானொலியில் கேட்பேன்.
நீக்குஹையோ அந்தப் பாட்டு இந்தப் படத்திலா மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடல்...ஆஹா அருமையான பாடல் சாமா ராகத்தில் அமைந்த பாடல்...
நீக்குகீதா
அருமை
பதிலளிநீக்குரசித்தேன்
நன்றி நண்பரே...
நீக்குமிக மிக ரசித்தேன். அழகான வரிகள். அருமையான குரல். இனிய இசை. அந்த நாட்களுக்கே போனது மனம்.
நீக்குநூல்வேலி நல்ல படம். பாலச்சந்தர் கைவண்ணம்.
மிக நன்றி ஸ்ரீராம்.
மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குவணக்கம் அனைவருக்கும் வாழ்க வளமுடன்/
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.
நீக்குபாடல் கேட்ட மாதிரி தான் இருக்கிறது.
பதிலளிநீக்குமௌனத்தில் விளையாடும் மனசாட்சியே.. அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
பாடல் பகிர்வு இனிமை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஅம்மா காத்திருக்கிறாள் கதை தொடர்ச்சியும் அருமை அருமை.
பதிலளிநீக்குகதை விவரிப்பு அருமை.
கடமையை செய்து கொண்டு இருந்த பர்வதம், உதவிகளை பலனை எதிர்ப்பார்க்காமல் இயல்பாய் செய்த பர்வதம்
கையிலை போனது சாத்தியமே. வழியில் படுத்து கிடந்த நந்தியை செவலைக்காளை என்று தடவி கொடுப்பது எல்லாம் அருமை.
குழந்தைகளிடம் பாரபட்சம் பார்க்கவில்லை, தனக்கு உதவிய பெண்ணுக்கு உதவும் எண்ணம் இப்போதும் உயர்ந்து நிற்கிறார் பர்வதம்.
கதை நிறைவில் லட்சுமி அம்மா காத்திருக்கிறாள்.
என்ன சொல்வது ! மிக அருமையான கதை.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஸ்ரீராம் உங்களுக்கு நன்றி. உடனே வெளியிட்டத்ற்கு.
கயிலை போனது சாத்தியமே!
நீக்கு@ கோமதி அரசு..
நீக்குதங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ம் ம் என்று முடியும் பாடல் சந்தோசம்...
பதிலளிநீக்குகதை அருமை...
Thank you DD.
நீக்குஸ்ரீராம் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல். நிறைய கேட்டிருக்கேன்...கில்லர்ஜி சொல்லியிருப்பது போல் இலங்கை வானொலி மூலம்...
பதிலளிநீக்குசக்கரவாகத்தின் குட்டியான மலையமாருதத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ராகம் என்று முதலில் தெரிந்துவிட்டது..குடும்பத்திலும் இதன் பங்காளி குடும்பத்திலும் குழப்பம் விளைவிக்கும் கூட்டம் இருக்காங்க ஹா ஹா ஹா ஆ ஹா இருந்தாலும் என் சிற்றறிவிற்கு இது வலஜி என்று தெரிகிறது....வேறு யாரேனும் தெரிந்தவர்கள் விளக்கினாலும் கற்றுக் கொள்ளலாம்...
கீதா
இது வலஜியா... கில்லர்ஜியா... என்று உறுதியாக தெரியவில்லையே...
நீக்குஇல்லை கில்லர்ஜி. இது அலாவுதீன் கில்ஜி.....
நீக்குகீதா ரங்கன் ராகத்தில் கில்லாடி. நமக்கு ஒண்ணும் தெரியாது. அதுனால அவங்க இது "பாதாள கரண்டி" ராகம் என்று சொன்னாலும் தலையாட்டவேண்டியதுதான்
ஹா ஹா ஹா ஹா ஹா...கில்லர்ஜி அண்ட் நெல்லை...
நீக்குநெல்லை நீங்க என்னை ரொம்பவே சொல்லறீங்க...அந்த அளவுக்கு இல்லை நெல்லை. மெய்யாலுமே. நான் அதனாலதான் ராகம் சொல்லத் தயங்கறேன். ஏன்னா அது கரெக்டா ஆத்தெண்டிக்கா தெரிஞ்சா சொல்லுவேன் இல்லைனா ஒரு சந்தேகத்தோடுதான் சொல்லுவேன்...அதுவும் சினிமா பாடல்கள் அப்படியானவை.
கீதா
//கில்லர்ஜி சொல்லியிருப்பது போல் இலங்கை வானொலி மூலம்...
நீக்கு/
நம்மூர் ரேடியோலயே அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல் இது கீதா. நெல்லை அடிக்கடி பிரபல பாட்டு போடுங்கள், பிரபல பட்டு போடுங்கள் என்று சொன்னதால் இந்தப் பாடலை இந்த வாரம் தெரிவு செய்தேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராம். அப்போ நான் சொல்றேன்.... இனி பிரபல பிரபல .... பாட்டு போடுங்கள்.
நீக்குவெள்ளிப் பதிவுல நான் பார்க்கிறது என்ன என்றால், பிரபல பாடல்களை நாம் கேட்டிருப்போம் கூடப் பாடியிருப்போம். ஆனா இங்க நீங்க கவிதை வரிகளை ஹைலைட் செய்து போடறீங்க. அப்போதான் கவிதையா அதனைப் படிக்கிறேன். வரிகளின் அர்த்தத்தை ஊன்றிக் கவனிக்கிறோம்.
ஹா... ஹா... ஹா...
நீக்கு40 சதவிகிதம் என்று சொல்லலாமா, அந்த அளவு நீங்கள் அதிகம் கேட்டிராத, நான் அடிக்கடி கேட்ட பாடல்களைப் பகிர்கிறேன்!
பிரபலபிரபல பாடல்கள் பத்து தேறுமா?
பாடல் பிரபலமாவது வேறு, மனதுக்குப் பிடிப்பது வேறு இல்லையா? ஒருவருக்குப் பிடித்த பாடல் இன்னொருவருக்குப் பிடிப்பதில்லை!
ரெட்டப்பின்னல் போட்டிருந்தாலும், ஒத்தக்கண்ண மூடியிருந்தாலும் மொகத்துல ஒரு ஆண்ட்டி லுக்கு ஓரமாத் தெரியத்தான் தெரியுது. ஹ்ம்.. இருந்தாலும் சரிதா, நடிக்கத் தெரிந்த ஒருசில தமிழ் நடிகைகளில் ஒருத்தி. ஆகவே, மதிப்பிற்குரியவர்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா...ஏகாந்தன் அண்ணா சரிதா சின்ன வயசுலேயே அவங்க முகம் கொஞ்ச ஓவர் மெச்சுர்ட் போலத் தோன்றும்...வயதிற்கு மீறியதாகத் தெரியும் என்பது போல் எனக்குத் தொன்றும்....
நீக்குஒரு சிலர் கிழவியா இருந்தா கூட முகம் ரொம்பவே யங்கோ யங்கா இருக்கும்....வைரவா இது தேம்ஸ்லருந்து குதிக்கும் பூஸாருக்குத் தெரியாம இருக்கணும்...தெரிஞ்சா கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒரு ஆட்டமே போட்டுட்டுப் போய்டுவார்!! ஹா ஹ ஹா
கீதா
வாங்க ஏகாந்தன் ஸார்... இதைவிட மரோசரித்ராவில் இன்னும் சிறுபெண் கேரக்டரில் நடித்திருப்பார்!!!
நீக்குஸ்ரீராம் இந்தப் பாடலில் இதே மெட்டில் வேறொரு பாட்டும் உண்டோ? எனக்கு இருப்பது போல் தோன்றியது ஆனால் வார்த்தைகள் வழக்கம் போல் நினைவுக்கு வரலை...
பதிலளிநீக்குகீதா
என்ன பாட்டு கீதா? நாக்கு ஒன்றும் பிடிபடவில்லையே...
நீக்குபாட்டு நல்லாருக்கு. நிறைய முறை காதில் விழுந்திருக்கு.
பதிலளிநீக்குஅடுத்த முறை நல்ல ஹிட் சாங்ஸ்ம் போடுங்களேன்.
அனுராதா ஶ்ரீராம் மாதிரி கீதா ரங்கன் அவங்க, ராகம் இதெல்லாம் பத்தி எழுதி அதையும் இடுகைல சேர்த்தா இன்னும் நல்லாருக்கும். Her knowledge (and at times yours on identifying similar songs) is amazing.
ஹையோ நெல்லை அனுராதா ஸ்ரீராம் எங்கே நான் எங்கே....அவங்க ஆராய்ச்சியே பண்ணிருக்காங்க குறிப்பா இளையராஜா பாடல்களை...நான் எல்லாம் ஒன்றுமே இல்லை நெல்லை...இடுகையில் சேர்க்கும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது..நான் சொல்லுவதை வைத்து.ஆத்தென்டிக்கா போடவும் முடியாது அதற்கான விற்பன்னர்கள் நிறைய இருக்காங்க நெல்லை. நான் சும்மா அரை வேக்காடு...என்று கூடச் சொல்ல முடியாது கால், காலே அரைக்கா...இன்னும் குறைவா இருக்கும் வேக்காடுதான் நெல்லை..நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கு. இதற்கும் சில கணக்குகள் உண்டு...எனக்கும் கணக்கிற்கும் வெகு தூரம்..அந்த அளவிற்கு அறிவு எல்லாம் கிடையாது நெல்லை.....அதான்...
நீக்கு.இது சும்மா நான் சொல்லலை....உண்மையான என் மனதில் இருக்கும் வார்த்தைகள்..
கீதா
// பாட்டு நல்லாருக்கு. நிறைய முறை காதில் விழுந்திருக்கு. //
நீக்குஅப்பாடி... நெல்லை வாயால் நல்லாருக்கு கமெண்ட்...
//அடுத்த முறை நல்ல ஹிட் சாங்ஸ்ம் போடுங்களேன். //
போச்சுடா... அப்போ இது என்ன?!!
கீதா அடக்கமா ஒன்றும் தெரியாது என்று சொன்னாலும் எங்களுக்கெல்லாம் அவர் திறமை தெரியாமல் இல்லை.
நீக்குகண்ணதாசன் வரிகளில் ஏதோ ஒரு ஆர்ப்பாட்டம்..
பதிலளிநீக்குபாட்டோட்டம்... வரியாட்டம்!
நீக்குஸ்ரீராம் சரணம் வரிகள் இரண்டாவது முறை பாடும் போது வெள்ளோட்டம் என்று இரண்டாவது முறை வரும் சங்கதியும் சரி அதே போல மற்ற வரிகளிலும் சங்கதிகள் அழகான ப்ரயோகம் எஸ்பிபி...சரணம் தொடங்கும் முன் ஹம்மிங்க் அழகா இருக்கும் நீங்க சொல்லியிருப்பது போல்....சங்கதிகள் செமையா இருக்கும் ஃபீலோடும்...
பதிலளிநீக்குகீதா
அதே... அதே கீதா... இப்படி ரசிக்க நீங்கள் இல்லாமல் போன வாரங்களில் எல்லாம் கஷ்டப்பட்டு போனேன் போங்க...
நீக்குஆட்டம் ஓட்டம் என்று ஒரே ஆட்டம் போட்டிருக்கிறார் கவிஞர்!! வரிகள் செம ...காய் காய், தான் தான் போல என்ன ஒரு கவித்துவம் இல்லையா...
பதிலளிநீக்குகீதா
அதே... அதே ...
நீக்குசரி ஆட்டம் ஓட்டத்திலிருந்து மீண்டும் கதைக்குத் தாவறேன்...
பதிலளிநீக்கு//சாமீ.... என்னமோ சொல்றீங்க...
எனக்கு ஒன்னும் புரியலிங்க!...//
துரை அண்ணா நேக்கு அப்படியே பொருந்தும் வரிகள்.
//நடுவழியில் காளை ஒன்று படுத்துக் கிடந்தது...
இதென்ன... எங்க வூட்டு செவலைக் காள மாதிரியே இருக்கு!...
ஆசையுடன் அருகில் சென்று
அந்த காளையின் முகத்தை வருடிக் கொடுத்தாள்...//
மிக மிக ரசித்த வரிகள்....நானும் இப்படித்தான் செஞ்சிருப்பேன்....இப்பவும் கோயிலில் நந்தியெம்பெருமானைப் பார்த்தால் தொட அனுமதி இருந்தால் தொட்டுப் பார்ப்பது வழக்கம்...
//அவ்வளவு தான் பருவதத்தின் பூஜை... புனஸ்காரம் எல்லாம்...// ப்ரவதத்துடன் நானும் ஹைஃபைவ் வைக்கிறேன்.
இந்த வரிகளைப் படித்ததும் ஒரு கதை நினைவுக்கு வருது. ஒருவன் பூசை எல்லாம் செய்து தான் பூசை எல்லாம் செய்வதால் இறைவன் பார்த்துக் கொள்வான் என்றும் மற்றொருவன் ஒவ்வொரு நாளையும் இறைவனைத் தொழுது தன் கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்து பொறுப்புடன் உழைப்பவனாக இருப்பவனை இறைவன் அருளுவதாக....
கீதா
///மிக மிக ரசித்த வரிகள்....நானும் இப்படித்தான் செஞ்சிருப்பேன்....இப்பவும் கோயிலில் நந்தியெம்பெருமானைப் பார்த்தால் தொட அனுமதி இருந்தால் தொட்டுப் பார்ப்பது வழக்கம்...///
நீக்குஹா ஹா ஹா கீதா.. அதே அதே.. எனக்கும் இது ரொம்பவும் பிடிக்கும்.. நந்தியை மற்றும், அங்கிருக்கும் வாகனங்களின் முகத்தை எல்லாம் தொட்டுத்தடவி விடுவேன்ன் அதில் ஒரு சந்தோசம்:)..
அன்பின் அதிரா...
நீக்குஇதற்கெல்லாம் தனிப் பதிவில் பதில் கூறுகிறேன்..
நீக்கு@ கீதா...
>>> இப்பவும் கோயிலில் நந்தியெம்பெருமானைப் பார்த்தால் தொட அனுமதி இருந்தால் தொட்டுப் பார்ப்பது வழக்கம்...<<<
இதற்கெல்லாம் தனிப் பதிவில் பதில் கூறுகிறேன்..
துளசிக்கு உடம்பு சரியில்லை. 4 நாட்களாக. ஜுரம் கபக்கட்டு, இருமல்...பேசவும் முடியவில்லை. பதிவுகள் அதனால் வாசிக்க முடியலை என்று சொல்லச் சொன்னார்.
பதிலளிநீக்குகீதா
துளஸிஜி... உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீக்குஅன்பின் துளசி அவர்களுக்கு எனது அன்பினைக் கூறுங்கள்..
நீக்குநலம் பெற வேண்டுகிறேன்...
துரை செல்வராஜ் கதையைத் தொடர்கிறேன். நூல்வேலி பற்றிய கூடுதல் செய்தி : டைட்டில் போடும்போது கைகளை வைத்தே நிழலில் உருவங்கள் காட்டப்பட்டிருக்கும். தப்புத்தாளங்கள் படத்தில் சரிதா எதிர்மறைப் பாத்திரத்தில் வந்ததை நேர் செய்வதற்காக இந்தப் படம் எடுத்ததாக அப்போது படித்த நினைவு. மகள் போன்று இருந்தவளை அத்தகைய நிலைக்கு உட்படுத்துவாரா என்று நம்மை உறைய வைக்கும் கதைக்கரு.
பதிலளிநீக்குதப்புத்தாளங்கள் படத்துக்காக இது எடுக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
நீக்குஇதில் மட்டும் பாஸிட்டிவ் கேரக்டரா என்ன!
நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
இன்றைய பதிவிலுள்ள பாடலை எப்போதோ கேட்டது...
பதிலளிநீக்குஆயினும்
மௌனத்தில் விளையாடும் மனசாட்சி பாடல் மனப்பாடம்..
மிக மிக அழுத்தமான பாடல்..
கவியரசர்க்கே இப்படியெல்லாம் வாய்க்கும்...
ஆனாலும் இந்தப் பாடல் திரையில்
சிற்சில வரிகளாக ஒலிக்கும் என்று நினைக்கிறேன்...
அம்மா மீண்டும் வருகிறாள். அற்புதமான முடிவு+ஆரம்பம். லெக்ஷ்மியின் குடும்பம் இனி சோபிக்கும். கைலாய வர்ணனையும்,ஆன்மாக்கள் சுடர் வடிவில் நடமாடுவதும்
நீக்குஉண்மையே.
பர்வதம் அம்மாவின் பழுதில்லா மனதுக்குக் கிடைத்த பலன் மெய் சிலிர்க்க வைக்கிறது மனம் நிறைந்த பாராட்டுகள்.
அன்பின் அம்மா..
நீக்குதங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குபாடலுடன் கதையும் நன்று
பதிலளிநீக்குஅன்பின் அசோகன்..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
நீக்குநல்ல பாடல். பல முறை கேட்டிருக்கிறேன். வலஜியா? இடஜியா என்றெல்லாம் தெரியவில்லை.
பதிலளிநீக்குகதை பிரமாதம் துரை சார். எங்கேயோ அழைத்துக் கொண்டு போய் விட்டீர்கள்.
//வலஜியா? இடஜியா //
நீக்குஹா... ஹா... ஹா...
மறக்க முடியுமா படத்தில் இடம்பெற்ற "வசந்த காலம் வருமோ?" பாடல் வலஜி ராகம் என்று நினைக்கிறேன் கீதா.
பதிலளிநீக்குஅடடா என்ன அருமையான பாடல். 'வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ வைகை பெருகி வருமோ' - அந்தப் பாடல்தானா என்று கூகிளில் போய் செக் செய்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கவில்லை என்றால் இன்று கேட்டிருக்கமாட்டேன். என்ன அருமையான பாடல்....
நீக்குஆம், நல்ல பாடல். பாடலில் இடம்பெறும் ஆண்குரல் யேசுதாஸ் குரல்.
நீக்கு@ கீதா: ..அதே போல மற்ற வரிகளிலும் சங்கதிகள் அழகான ப்ரயோகம் ..//
பதிலளிநீக்குஇத்தனை சங்கதிகளைக் கண்டுவைத்திருக்கும் நீங்களே உங்களை கால், அரைக்கால் என்று சொல்லிக்கொண்டால், ஒரு சங்கதியும் தெரியாத எங்கள் கதி அதோகதி அல்லவா ?
@ கீதா: ...இப்பவும் கோயிலில் நந்தியெம்பெருமானைப் பார்த்தால் தொட அனுமதி இருந்தால் தொட்டுப் பார்ப்பது வழக்கம்...//
பதிலளிநீக்கு@ அதிரா: ..ஹா ஹா ஹா கீதா..அதே அதே..எனக்கும் இது ரொம்பவும் பிடிக்கும்..நந்தியை..//
டெல்லியில் சிவன் கோவில்களில், சன்னிதிகளில் இதனைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன்: வந்தமா சாமியைத் தள்ளி நின்னு கும்பிட்டுவிட்டுப் போனமா, என்கிற பயபக்தி என்பதெல்லாம் தெற்கில்தான். டெல்லியில் (பொதுவாக வடக்கில்) குறிப்பாக பெண்கள் சிவனுக்குத் தானே பக்கத்தில் இருக்கும் பாத்திரத்திலிருந்து மொண்டு மொண்டு தண்ணீர் விடுவார்கள். தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்கிறார்களாம். கூடவே நந்தியின் திமிழில் உரிமையோடு ஒருகை வைத்துக்கொண்டு, காதருகே முகத்தை உரசவைத்துக்கொண்டு சிவனைப் பார்த்து ரகசியம் சொல்லிப் பிரார்த்திப்பார்கள்! இவர்களது (ரகசிய) பிரார்த்தனையை நந்தி கேட்டு, சிவனுக்கு ரெகமண்ட் செய்வாராம்..அப்போதுதான் கேட்டது கிடைக்குமாம். நம்பிக்கை! அவர்களோடு கூடவரும் சிறுமிகளும் நுனிக்காலில் எம்பி, நந்தியின் காதில் சொல்கிறேன் என்று நந்திதேவரின் காதைப்பிடித்துத் திருகாத குறைதான்!
உங்கள் இருவரையும் எங்கள் ப்ளாக் செலவில் டெல்லிக்கு அனுப்பிவிடலாம். நந்தியைத் தொட்டு காதில் ரகசியங்கள் சொல்லி, அப்படியே சிவனுக்கும் உங்கள் கையால் அபிஷேகம் செய்து எங்களுக்கும் சேர்த்து வரம்பெற்று வருவதற்காக..!
ஹா ஹா ஹா எனக்கு ஒண்ணு புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:) ஏ அண்ணன் கோயில்ல போய்க் கும்பிடவில்லை ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:)..
நீக்குஆஆஆ ரிக்கெட்டைப் போடுங்கோ அப்பூடியே ஹரிதுவார் க்கும் ரெயின் ரிக்கெட் போட்டுத் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)
@ துரைராஜு:
பதிலளிநீக்குஉங்களின் அகா-2 கையிலாயம்வரை போய்விட்டதே.. இப்போது வாய் திறக்கவே பயமாயிருக்கிறதே..!
* மேலே @ துரை செல்வராஜு..!
பதிலளிநீக்கு@ ஏகாந்தன் Aekaanthan !..
நீக்கு>>> உங்கள் இருவரையும் எங்கள் ப்ளாக் செலவில் டெல்லிக்கு அனுப்பிவிடலாம். நந்தியைத் தொட்டு காதில் ரகசியங்கள் சொல்லி, அப்படியே சிவனுக்கும் உங்கள் கையால் அபிஷேகம் செய்து எங்களுக்கும் சேர்த்து வரம்பெற்று வருவதற்காக!..<<<
காசி விஸ்வநாதரையும் உஜ்ஜயினி மாகாளேஸ்வரரையும் தரிசிக்க ஆவல்..
என்றைக்கு எண்ணம் ஈடேறுமோ!..
தங்களன்பின் வர்கையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
@ துரை செல்வராஜு://..என்றைக்கு எண்ணம் ஈடேறுமோ!..//
நீக்குகாசியும், உஜ்ஜயினும் உங்களுக்கு வித்தியாச அனுபவத்தை அளிக்க வாய்ப்பதிகம். எப்போது? அதை அவனே சொல்வான்..
பருவதம்மாவை பர்வதமாகவே சித்தரித்த உங்கள் கதை,நாமும் பருவதம்மாவைப் போல மேன்மையாக ஆகணும் என்ற ஒரு எண்ணத்தையும்,அடக்கமுடியாத மன ஒரு உணர்ச்சிகளையும் கொடுத்து ,மேலே சிந்திக்க மறுக்கிறது. என்னே ஒரு ஆத்ம ஞானமான கதை. பாராட்ட அகராதியில் வார்த்தைகளில்லை. தெரியவுமில்லை.அன்புடன்
பதிலளிநீக்கு@ காமாட்சி..
நீக்குஅன்பின் அம்மா..
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி...
தங்களது கருத்துரை மனதை நெகிழ்த்திவிட்டது...
மனமார்ந்த நன்றி...
துரை செல்வராஜுவின் அம்மா காத்திருக்கிறாள் முந்தைய கதைக்கு ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேன் அதுவே இதற்கும் இறப்புக்குப் பின் என்ன என்ற கற்பனை அதீத நம்பிக்கை பால் இருக்கலாமோ என்று தோன்றுகிறது வாழ்த்துகள் துரை சார்
பதிலளிநீக்கு