1991இல் வெளிவந்த திரைப்படம் சிகரம். அனந்து இயக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் இசையில் அவரே கதாநாயகனாயும் நடித்து வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் சில அற்புதமான பாடல்கள் உண்டு.
இதோ இதோ என் பல்லவி, அகரம் இப்போ சிகரம் ஆச்சு, வண்ணம் கொண்ட வெண்ணிலவே போன்ற பாடல்கள் நன்றாக இருக்கும். அந்த வரிசையில் இந்தப்பாடல் கொஞ்சம் ஸ்பெஷல். மகனுக்கு தந்தை பாடும் தாலாட்டு. சிறிய பாடல்.
வைரமுத்து வரிகளில் எஸ் பி பி .கடைசிவரி கவர்ச்சி! பாடல் முடிந்தபின்னும் உங்கள் தூக்கம் கலையாமல் இருக்க சற்றே நீளும் சிறு இசை...
நல்ல பாடல்.
புலிக்குப் பிறந்தவனே பூப்போல வளர்ந்தவனே
கனவுக்கும் வலிக்காமல் கண்ணுறங்கு பொன்மகனே
தந்தை போல் ஓரன்னை தாய் போல ஓர் தந்தை
வரமாகப் பெற்றவனே சுகமாக நீ உறங்கு..
நாளை உந்தன் சோலையிலே நட்சத்திரம் எத்தனையோ
மகராசன் தோள்களிலே மாலைவகை எத்தனையோ
இந்திரனார் சேதி வரும் மந்திரிமார் ஓலை வரும்
அப்போது நேரமில்லை இப்போதே கண்ணுறங்கு
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ், நட்பூஸ் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். சப்பாத்தி போட்டாச்சா?
நீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம் காப்பி ஆத்த போனேன் கரன்ட் பெரும்பாலும் 6.15.....20 க்கு போய்டுது....ஸோ போய் காப்பி ஆத்திட்டு சப்பாத்திக்கு ஒரு பான் எவர்சில்வர்தான் அத போட்டுட்டு சூடு ஏறறாதுக்குள்ள இங்க வந்து வணக்கம் வைச்சுட்டு போய் ஒரு 4 சப்பாத்தி போட்டு எடுத்ததும் கரன்ட் ஆஃப். பரவால்ல அப்புறம் எனக்குத்தானே மெதுவா போட்டுக்கலாம்ன்னு 4 இருக்கே லஞ்ச்பாக்ஸுக்குனு விட்டுட்டேன்...
நீக்குஅப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு வந்துச்சு மீண்டும் போயிருச்சு....ஸோ என் வேலை வாக்கிங்க், வீட்டு வேலை எல்ல்லம் முடிச்சுட்டு வந்தா வாட்சப் கால்ஸ் என் தங்கை பெண்கள் எல்லாம் முடிச்சு வரதுக்குள்ள கரண்டும் வந்து இதோ இபப்தான் வர முடிஞ்சுச்சு...
கீதா
வாழ்க நலம்...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், அக்கா கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குநல்வரவு தெரிவித்த, தெரிவிக்கப் போகும் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.
நீக்குSPB வாழ்க...
பதிலளிநீக்குஆமாம்... வாழ்க... வாழ்க...
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குஇந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பிடித்தமான பாடல்கள்.
நன்றி வெங்கட். காலை வணக்கம்.
நீக்குஆம், எல்லாமே நல்ல பாடல்கள்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்குபாடலைக் கேட்கலை. இந்தப் படம் ஜிவாஜி நடிச்சு வந்ததுனு நினைச்சேன். இல்லையா? சரி அப்புறமா வரேன்.
பதிலளிநீக்குஇல்லை கீதா அக்கா.. எஸ் பி பி தான் க.நா! ஆ பா வும் உண்டு. சின்னப் பாடல்தான்...
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபாடல் இனிமை. வரிகள் நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் மற்ற பாடல்களை அடிக்கடி கேட்டு ரசித்து இருக்கிறேன், இந்த பாடல் கேட்டது இல்லை.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
வணக்கம் கோமதி அக்கா. சிறிய பாடல் என்பதால் நிறைய பேர்கள் இந்தப் பாடலை மிஸ் செய்திருப்பார்கள்!
நீக்குஇதில் எஸ்.பி.பி.யும், கே.ஜே.யேசுதாஸும் இணைந்து பாடிய பாடல் ஒன்று இருக்கிறதே...
பதிலளிநீக்கு//அருவிகூட... ஜதிகள் பாடுது...//
என்று தொடங்கும் மிகவும் அருமையான பாடல். காணொளி காண இயலவில்லை
வாங்க கில்லர்ஜி... நீங்கள் சொவ்லது இந்தப் படத்தில் இல்லை. அது கௌரி மனோகரி என்கிற திரைப்படத்தில்...
நீக்குhttps://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8
மன்னிக்கவும், பெயரை மாற்றி விட்டேன் இணைப்புக்கும் சென்றேன்.
நீக்குஇப்புலிப் பாடலும் கேட்டேன்
இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் பிடிக்கும்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற கண்ணதாசனின் பாடலை தழுவி எழுதப்பட்டது போல் இருந்தாலும் பாடல்வரிகள் இசை பாலுவின் தேன்குரல் அருமை
பதிலளிநீக்கு
நீக்கு@ திரு. டி.என். முரளிதரன் - மூங்கில் காற்று..
>>> காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற கண்ணதாசனின் பாடலை தழுவி எழுதப்பட்டது போல் இருந்தாலும் ..<<<
தழுவி எழுதப்பட்டது மாதிரியே தோன்றும்!..
- பல பாடல்களின் வரிகள்...
உதாரணத்திற்கு ஒரு சில..
படம் - உயர்ந்த மனிதன்
பாடல் - நாளை இந்த வேளை பார்த்து..
நாளை இந்த வேளை பார்த்து
ஓடிவா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை
சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு
நின்று போய்விடு...
- திரு.வாலி..
பம்பாய் படப்பாடலின் சில வரிகள்..
வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ...
- திரு. வைரமுத்து..
***************************
படம் - வியட்நாம்வீடு..
பாடல் - உன் கண்ணில் நீர் வழிந்தால்..
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.
- கவியரசர்...
நினைவெல்லாம் நித்யா படப்பாடலின் சில வரிகள்...
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்..
இலையுதிர்காலம் முழுதும்
உனக்கு மகிழ்ந்து வேராவேன்...
- திரு. வைரமுத்து..
வைரமுத்துவின் ஆரம்பப் பாடல்களில் கவிதை இருந்தது கொஞ்சம். கவனித்திருக்கிறேன். உதாரணமாக 1981 படமான ராஜபார்வையின் இந்தப்பாடல். (சுஜாதாவும் குறிப்பிட்டிருக்கிறார்):
நீக்குஅந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே...
நன்றாக வந்திருந்தது. எஸ்பிபி, ஜானகி பிரமாதமாகப் பாடிவிட்டார்கள். அதைப்போன்ற சிலதிருக்கும் என நினைக்கிறேன்.
பிறகு வந்தவற்றில் எதுகை மோனை தேடி எங்கோ மறைந்துவிட்ட கதைகளே அதிகம். பெரிய்ய எளுத்தாளராகி, விருதுகள் ’வாங்கிய’பின் கவிதை காணாமற்போய்விட்டது போலும்.
அவருக்குப் பின் வந்து, திரைப்பாடல் எழுதியவர்களில் என்னைக் கவர்ந்தவர் நா.முத்துக்குமார். அவருக்கும் என்ன அவசரமோ, அகிலத்தைவிட்டே போய்விட்டார்.
அதில் வரும் வார்த்தைகள் சில பழைய பாடல்களை நினைவூட்டுவது நிஜம்.
நீக்குஇந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கும் பிடிக்கும்...
பதிலளிநீக்குஅருமையான வரிகள் அவை..
நன்றி சகோதரி அனுபிரேம்.
நீக்குஅருமையான பாடல் ஸ்ரீராம்...கேட்டிருக்கேன்....
பதிலளிநீக்குஇந்தப் படத்துல எல்லா பாடலுமே சூப்பார் பாடல்கள்....எல்லாமே ரசிக்கலாம்...
இந்தப்பாட்டோட ராகம் மிக்ஸ்டா வருது...பாடி பாடி பாத்துட்டுருக்கேன்...
கீதா
நீலாம்பரி வாசனை இல்லையோ? நன்றி கீதா.
நீக்குமுன்பு ரசித்ததை இன்று மறுபடியும் ரசிக்க வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குபல்லாப் பாட்டும் பந்தப் படத்தில பாட்டிருக்கிறேன் பராம், பானா பந்தப் பாட்டு பட்டும் பாட்டதில்லை பருமையா பருக்கு , பானா பட்டிப் பாட்டூஊஊ....
பதிலளிநீக்குஹையோ மழை விட்டும் தூவானம் விடாதாமே அப்படி இருக்கு என் நிலைமை:) எல்லாம் பவ் அண்ணனால சே சே கெள அண்ணனால வந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்:)...
இந்த ரேண்ஜ்சில போனால் என் டி யைப் பிடுங்கி தேம்ஸ்ல வீசிடப்போகினமே:).
ஶ்ரீராம் முதல் இரு வசனத்தையும் கரெக்கா எழுதவும் இங்கு:)..
நன்றி அதிரா.
நீக்குசிகரம் படத்தை எப்போது டி.வி.யில் போட்டாலும் பார்ப்பேன். அதற்காக ஆல் டைம் ஃபேவரிட் என்றெல்லாம் சொல்ல முடியாது. படம் அது பாட்டுக்கு எந்த ட்விஸ்டும் இல்லாமல் செல்லும். இந்தப் படத்தில் ராதா மிக அழகாக இருப்பார். இந்தப் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை.
பதிலளிநீக்குபடம் பார்க்கும் பொறுமை எல்லாம் இல்லை பானு அக்கா. பாடல் மட்டும்!
நீக்குஇருந்தாலும் பாட்டைத்தேடிப் பிடித்து போடுகிறீர்களே கேட்ட பாடல் என்பதாலா பாராட்டுகள்
நீக்குஇனிமை பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்
பதிலளிநீக்குமிக மிக அருமையான பாடல். இதுவரை இதைக் கேட்டதில்லை.
பதிலளிநீக்குநீங்கள் பதிந்ததில் மிக மகிழ்ச்சி. இது போலத் தாலாட்டினால் எந்தக் குழந்தையும் உறங்கும்.
மனம் நிறைந்தது.