கீதா சாம்பசிவம்
திண்டுக்கல் தனபாலன்
துரை செல்வராஜூ
நெல்லைத் தமிழன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
ஏஞ்சல்
நிஷா
ஆகியோருக்கு நன்றி.
என்னைப் பொருத்தவரையிலும், என் அலுவலக (Ashok Leyland) ஆராய்ச்சி + அபிவிருத்திப் பகுதிக்கு ட்ரைனிங் வருபவர்கள் எல்லோரும் என்னிடம் பெற்ற பயிற்சி, மற்றும் விவரங்கள் அதிகம். அப்படி மெண்டர் ஆக இருந்து, நான் பெற்ற சந்தோஷமும் மிக அதிகம்.
அலுவலகத்தை விட்ட பின், வீட்டிற்கு சமையல் செய்து கொண்டுவந்து கொடுத்த ஏழைக் குடும்ப பையனுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்க இசைந்தேன். ஆனால், அந்தப் பையன், பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, பாடம் கேட்க வரவில்லை.
இப்போதெல்லாம் மெண்டரிங் செய்ய நான் இருக்கும் ஏரியாவில் ஒன்றும் வாய்ப்பு இல்லை!
பானுமதி வெங்கடேஸ்வரன் :
1.அ).தீபாவளி அன்று டெலிகாஸ்ட் செய்யப்பட்ட படங்களில் எதைப் பார்த்தீர்கள்?
எதையும் பார்க்கவில்லை. படம் பார்க்கும் சுவாரஸ்யமே இல்லை.
ஆ). 96 படம் 76ல் வெளியான 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படத்தை நினைவூட்டவில்லையா?
இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை. 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்பது 'புஷ்பா தங்கதுரை' என்னும் ஸ்ரீவேணுகோபாலனின் கதை என்று நினைக்கிறேன். தினமணி கதிரில் (?) அந்தக் கதை தொடராக வந்தபோது சில வாரங்கள் மட்டும் படித்த ஞாபகம்.
2. நீங்கள், ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுதான் கீழே வைக்கும் ரகமா? அல்லது இரண்டு மூன்று புத்தகங்களை ஒரே சமயத்தில் படிக்க ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம் படித்து முடிக்கும் ரகமா?
ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பேன் என்று சொல்பவர்களைப் பார்த்துப் பொறாமைப் படும் ரகம்!
எல்லாப் புத்தகங்களையும் அப்பப்போக் கொஞ்சம் கொஞ்சம் ..... படிப்பேன் / பார்ப்பேன். நகைச்சுவைப் பகுதிகள் ஏதாவது இருந்தால் படிப்பேன். போரடிக்கும்போது புத்தகத்தை எங்காவது வைத்துவிட்டு, வைத்த இடத்தை மறந்துபோய்விடுவேன்!
நிஷாந்தி பிரபாகரன் : (முகநூல் கேள்வி)
What Is Love?
What Is True Love?
Love என்பது கணவன் மனைவிக்கிடையில் மட்டும் தான் சாத்தியமா?
காதல் எனும்சினிமாத்தன புரிதலை கடந்த விளக்கம் தேவை
அன்பு என்றால் என்ன?
உண்மையான அன்பு என்றால் என்ன ?
லவ் அல்லது அன்பு, ஆண் பெண் இடையே மட்டும்தான் சாத்தியமா அல்லது கணவன் மனைவிக்கிடையே மட்டும்தான் சாத்தியமா ?
இங்கு Love என்னும் பதத்தை அன்பு என்று சுமாராக மொழி பெயர்த்திருக்கிறேன்.
இதை மிகவும் ஆழமான கேள்வி என்று சொல்லலாம் . இதற்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. எளிமையான சில கேள்விகளுக்கு கூட பதில் அவ்வளவு எளிதானது அல்ல.
உதாரணமாக "உருளைக்கிழங்கின் சுவை எப்படி இருக்கும்" என்ற கேள்விக்கு எழுத்திலே பதில் சொல்ல முடியாது. சாப்பிட்டுப் பார் தெரியும் என்றுதான் சொல்லவேண்டும். உருளைக்கிழங்கின் சுவையே அப்படி என்றால் அன்பு, ஞானம் போன்ற சொற்களுக்கு விளக்கம் சொல்ல எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் ?
எனினும் அனுபவத்தால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஆராய்ந்து பதில் சொல்ல முடிகிறதா என்று பார்ப்போம்.
Love is deeply positive favorable disposition between a male and female preferably husband and wife என்பது சினிமா, இலக்கியம் ஆகியவற்றில் காணப்படும் கதைகளுக்கான அடிப்படை. இது வேறு அன்பு காதல் என்ற பெயரில் உலவுவது ஆனால், 'காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி' என்று கூறப்படும் காதல் இது அல்ல.
" For want of a better word for that sacred something which is beyond words " என்று J.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் (Not in same words). இது அன்பே சிவம் என்று உயர்வாக குறிப்பிடப் படும் உணர்வு.
இது பற்றி நமக்கு நேரடியாக ஏதும் தெரியாது. இது பற்றி யாரோ எழுதி இருப்பதை அடிப்படையாக வைத்து சில விஷயங்கள் சொல்ல முடியும்.
விருப்பு, வெறுப்பு, லட்சியம், ஆசை கருத்து என்று ஏதும் இல்லாது ஒரு மனம் இருக்க முடியுமா ? நடப்பு என்னவோ அதை அபிப்ராயம் ஏதுமின்றி அதனின்றும் விலகலோ வேறுபாடோ இன்றி முழுமையாக நோக்கியவாறு ஒருவர் இருக்க முடியுமா ?
Can one observe with choice less awareness with all the faculties at his command ? " With charity for all and malice towards none". அவ்வாறு இருப்பவர் உண்மை அன்பை உணர்ந்தவர் ஆகின்றார். அன்பே சிவம் என்பதற்கு அவரே விளக்கமாக இருப்பார்.
True love என்பதை கணவன் மனைவி என்று தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல என்று எனக்குப் படுகிறது. காரணம், கணவன் மனைவியரிடையே உள்ள பிணைப்பு எப்போதும் அன்பு மயமானது மட்டும் அல்ல. திருப்திகரமான அல்லது வெற்றிகரமான இல்லறம் என்பது வேறு அன்புமயமான பிணைப்பு என்பது வேறு.
ஆழ்ந்த நன்றியுணர்ச்சி கூட இறுக்கமான பிணைப்புக்குக் காரணமாக இருக்கலாம். அன்பு என்பது உறவு, குடும்பம், ஊர், தேசம் கடந்ததாக இருக்க வேண்டும். "காக்கை குருவி எங்கள்.... "
உண்மையான அன்பு என்பது இரண்டு குறைபாடுகள் மிக்க நபர்களிடையே இருக்க முடியுமா என்பதே ஒரு கேள்வி. வாழ்வாதாரங்களுக்காக சார்ந்திருத்தல், வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணை வேண்டி இருத்தல், போன்ற பலவிதமான தூண்டுதல்கள் இறுக்கமான பிணைப்பை உண்டாக்குகின்றன பழகிப் போய் விட்டதனால் உண்டான பிணைப்பு என்பதும் ஒரு அம்சம். அந்நியோன்யம் மிக்க தம்பதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு மைனாரிட்டி என்பது என் கணிப்பு.
பானுமதி வெங்கடேஸ்வரன்.
பேனா நண்பர்கள், முகநூல் நண்பர்கள் என்ன வித்தியாசம்?
பேனா இப்போது முகநூலாகி விட்டது.
முகநூல் என்பது இணைய நட்புக்கான குறியீடென்று கொள்க.
==============================================================
எங்கள் இந்தவாரக் கேள்விகள், இந்த ஆய்வுக் கட்டுரையின் உள்ளே உள்ளன. கேள்விகளைத் தேடிக் கண்டுபிடித்து, கருத்துகளைக் கூறுங்கள்.
கேள்வி - பதில் பற்றி ஓர் ஆய்வு :
கேள்வி-பதில் என்பது முற்றிலும் பிரபலமான ஒரு பகுதி எல்லா இடங்களிலும் இதை காண்கிறோம்
"கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று" என்று ஒரு பிரபலமான திரைப்பாடல். கேள்விக்கும் பதிலுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும் என்று இந்த பாடல் நமக்கு தெரிவிக்கிறது. அதாவது கேள்வி கிடைத்ததும் பதில் உடனே வந்துவிடாது , அதை சற்று ஆலோசித்து ஆராய்ந்து பார்த்து உண்மை என்ன என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்பதைக் குறிப்பதாக இருக்குமோ என்னவோ.
கேள்வி கேட்பவர் பலவிதமான காரணங்களால் உந்தப்பட்டு கேள்வியை எழுப்புகிறார்.
தகவல் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேள்வி கேட்பது ஒருவகை. ஆனால் இந்தக் காலத்தில் இணையத்தில் எல்லாத் தகவல்களும் எளிதாகவும் இலவசமாகவும் கிடைத்துவிடுவதால் தகவல் அறியும் கேள்விகள் என்பது அரிதாகிக் கொண்டு வருகிறது.
ஒரு பொருள் பற்றி பதிலளிப்பவர் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்று அறிய முற்படும் கேள்வி இரண்டாவது வகை. நம் கருத்துடன் அவர் ஒத்துப் போகிறாரா அல்லது நமக்கு எதிரான கருத்து கொண்டிருக்கிறாரா என்று அறிய ஒரு ஆர்வம். ஒத்த கருத்தைக் கொண்டவராக இருப்பின், " அதானே ! இது ஏன் பலருக்கும் தெரியவில்லை " என்பது மாதிரியான உப கேள்விகள் எழுப்பலாம். எதிர் கருத்து கொண்டவராக இருந்தால், "அதெப்படிச் சொல்லப் போகலாம் ? நீங்கள் இதைப் பார்க்கவில்லையா நீங்கள் அதைப் படிக்க வில்லையா ? அவர் அப்படிச் சொல்லவில்லையா இவர் அப்படிச் செய்யவில்லையா?" என்பது போன்ற கேள்விகள் எழுப்பலாம்.
மூன்றாவது வகை கேள்வி trivia, banter ரகத்தைச் சேர்ந்தது.
" இந்த நட்சத்திரம் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் "
" வெந்தய தோசை, வெங்காய தோசை இரண்டில் எது சிறந்தது ? ஏன் ? "
மாதிரியான கேள்விகள். இது பொழுதுபோக்குக்காக அரட்டை அடிக்கும் மனப்பான்மையை சேர்ந்தது. ஒரு ஜாலிக்காக கேட்கிறார்கள் . ஒரு ஜாலிக்காக பதில் சொல்ல வேண்டும். பொழுது ஜாலியாக போகும் அவ்வளவுதான்!
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அரசியல் மத நம்பிக்கைகள் சம்பந்தமான கேள்விகள். " என்னடா எல்லாம் இப்படி இருக்கிறது" என்கிற சலிப்பு அல்லது விரக்தி காரணமாக எழும் கேள்விகள். இதற்கு பதில் அளிப்பவர் கேட்டவரை சமாதானம் செய்ய முற்படலாம் . அல்லது " உங்கள் எண்ணம் தவறு . இது இப்படித்தான் இருக்கும் ஏனென்றால் இதுதான் காரணம் " என்று விளக்க முற்படலாம்.
தமது வெறித்தனமான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் கேள்விகள் இதில் எந்த வகையிலும் வராது.
கேவலமான வார்த்தைகளால் ஒருவரை விமர்சித்து எழுப்பப்படும் கேள்விகள் அவ்வாறே!
நீங்கள் விரும்பும் கேள்வி எத்தகையது?
அதேபோல் பதிலளிப்பவர் தம்மிடம் இருக்கும் தகவலை அளிக்கிறார். தம் கருத்தைச் சொல்கிறார். தகவல் கிடைக்காத போது சாமர்த்தியமாக ஏதேனும் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். தம் கட்சிக்கான வாதப்பிரதிவாதங்களை பலமாக வைக்கிறார் அல்லது குறும்பாக ஏதேனும் சொல்லி தட்டிக் கழிக்கிறார்.
ஆழ்ந்த, கருத்துப் பொதிந்த பதில்கள் அபூர்வமாகவே வரும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
=================================
என்ன இன்னிக்கு லேட்டு?
பதிலளிநீக்குஹா ஹா ஹா அதானே....
நீக்குகீதா
உங்க கடிகாரம் ஃபாஸ்ட்டு....!!!
நீக்குஹா ஹா ஹா கீதாக்கா அண்ட் துரை அண்ணா இது வழக்கமான எபி நேரத்துல வந்திருக்கு!!! நாம் கௌ அண்ணாவை நினைச்சுட்டுருந்துருக்கோம்...நானும் 5 மணிலருந்து பார்த்துட்டுருந்தேன்...என்னடா கௌ அண்ணா மறந்துட்டாரோன்னும் தோனிச்சு...ஸ்ரீராமுக்கு ஒரு மெஸேஜ் கொடுத்துப் பார்க்கலாம்னும் நினைச்சேன் அப்புறம் 6 மணி வரை பார்ப்போன்னு விட்டுட்டேன்..ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா அப்பால வரும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குவாழ்க வளம்...
பதிலளிநீக்குஅன்பின் Kgg, ஸ்ரீராம், கீதா அக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும்....
பதிலளிநீக்குநல்வரவு....
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஇன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதலை.. பெஞ்சு மேலே நிக்கலாம்...ந்னு வந்தா
பதிலளிநீக்குவாத்தியாரே லேட்டு!....
லேட்டு இல்லை.. வழக்கமான டைம்!
நீக்குவணக்கமிட்ட எலலோருக்கும் இனிய மழைக்காலை வாழ்த்துகள்.
நீக்குசென்னைல இருக்கீங்களா கொ அண்ணா....மழைக்கால வாழ்த்துகள்னு போட்டதுனால...
நீக்குநாளை சென்னை போறேன் மழையிடம் சொல்லிருக்கேன் நீ பொழிந்து கொள்.... என் காரியங்கள் தடங்கல் ஆகாமல் இருக்கும்படி பார்த்துக்கன்னு...ஹா ஹா ஹாஹா ஹா
கீதா
அன்பு, பாசம், காதல், நேசம் என எப்படிச் சொன்னாலும் அதை விளக்குவது கஷ்டம்! முதலில் தன்னைத் தான் அறிந்து கொண்டு தன் மேல் நம்பிக்கை வைத்து தன்னிடமே அன்பு செலுத்துபவர்களால் தான் இதைப் புரிஞ்சுக்க முடியும் என நினைக்கிறேன். அந்த வகையில் நானெல்லாம் அன்பில்லாதவள் என்றே சொல்லலாம். ஈசனிடம் காதலாகிக் கசிந்துருகுவது என்பது வேறே! மனிதர்கள் மட்டுமில்லாமல் உறவு, சுற்றம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காண்பிப்பவர்கள் வேறே! அந்த மனம் எல்லோருக்கும் வராது. அப்படியான மனம் கொண்டவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஇந்தக் "காதல்" இப்போதைய நடைமுறையில் ஆண், பெண்ணுக்கான ஈர்ப்பு என்றே ஆகிவிட்டது. ஆனால் இறைவனிடமும் மற்றவரிடமும் காதலாகிக் கசிந்துருகிய பெரியோர் பலர் இருந்திருக்கின்றனர். "கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி"யவர்கள் பலர் உண்டு. அவர்களைப் பார்த்துச் சிறிதேனும் நானும் கற்றுக் கொள்ள வேண்டும்!
பதிலளிநீக்குஇப்போக் கொஞ்சம் ஜாலியா! இந்தப் பதிவிலிருந்து கேள்விகளைக் கண்டு பிடிக்கிறவங்களுக்கு என்ன பரிசு? பதில் சொன்னால் போனஸ் உண்டா? (இதை இந்த வாரக் கேள்வியாயும் வைச்சுக்கலாம்)
பதிலளிநீக்குஹலோ! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை சைஸுக்கு கேள்விகள் எழுதியிருக்கோம். இதைக் கண்டு பிடித்ததற்குப் பரிசா! அட வைரவா!
நீக்கு"மென்டரிங்" என்பதற்கு நான் நினைத்த அர்த்தம் முழுக்க முழுக்க வேறே! இங்கே நீங்க சொல்லி இருப்பது வேறே. அந்த வகையில் பார்த்தால் பலருக்கும் சமையலில் (ஹி,ஹி) நான் மென்டராக இருந்திருக்கேனே! இது தெரியாமாப் போயிடுச்சே! அதான் பரிசு அறிவிக்கலையோ?
பதிலளிநீக்குநல்ல, பால் பாயாசம் பண்ணி சாப்பிடுங்க. அதுதான் பரிசு!
நீக்குபின்னர் வருகிறேன்....வாசிக்க....
பதிலளிநீக்குஇப்ப நாச்சியாரைப் பார்க்க அவருடன் பேச நம்ம ஏரியாவுக்கும் நாச்சியார் வீட்டுக்கும் போகனும்...ஹா ஹா ஹா
கீதா
வாங்க, போங்க, வாங்க!
நீக்குGeetha R.💕💕💕💕💕💕💕💕💕💕
நீக்கு// விருப்பு, வெறுப்பு, லட்சியம், ஆசை கருத்து என்று ஏதும் இல்லாது ஒரு மனம் இருக்க முடியுமா ? நடப்பு என்னவோ அதை அபிப்ராயம் ஏதுமின்றி அதனின்றும் விலகலோ வேறுபாடோ இன்றி முழுமையாக நோக்கியவாறு ஒருவர் இருக்க முடியுமா ? //
பதிலளிநீக்குஇதைப் படிச்சுட்டு "ஆன்மிகம் ஃபார் டம்ப்மீஸ்" போனால் அங்கே விடை காத்திருக்கிறது. என்ன ஒரு தற்செயலான ஒற்றுமை!
ஆமாம்... ஆமாம்....
நீக்குஆன்மீகம் ஃபார் டம்ப்மீஸ் நு தளமா பார்க்கிறேன்...நன்றி கீதாக்கா
நீக்குகீதா
வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கழிப்பவர்களை யாரையும் எந்தக் குற்றமும் சொல்லாமல் தன் பிரச்னைகளைச் சிரித்த முகத்துடன் எதிர்கொள்பவர்களைப் பார்த்துக்கொண்டும் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டும் தான் இருக்கோம். ஒப்புக்கொள்ளும் மனம் தான் வேண்டும்.
பதிலளிநீக்குசரிதான்... ஆனால் எப்போதுமே பிரச்னைகளை சிரித்த முகத்துடன் அணுக முடிவதில்லை!
நீக்குசரிதான் கீதாக்கா ஆனால் ஸ்ரீராம் சொல்லுவது போல் பெரும்பாலும் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் அரிதாக சிரித்த முகத்துடன் அணுக முடியவில்லை...சிரிப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் வருத்தம் என்றில்லை.....யோசனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் தீர்வு கிடைக்க....அச்சமயங்களில்...
நீக்குகீதா
அன்பே சிவம் //
நீக்குஇதைத்தான் அடிக்கடி சொல்லுவது....சொல்லிப் பார்த்துக் கொள்ளுவது....பின்பற்ற முயற்சி செய்வது....ஆனால் நடைமுறையில் ஹிஹிஹிஹிஹி தான்....பல முறை இதிலிருந்து நழுவி நடந்து கொண்டுவிட்டு வருந்தி....வெட்கப்பட்டு....குற்ற உணர்வும் கொண்டு... மீண்டும் அ சி வை மனதுள் ஓதிக் கொள்வது..
நாம என்ன அதிரடி புலியூர் பூஸானந்தா போல ஞானியா என்ன ஹா ஹா ஹா ஹா
கீதா
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஎன்ன இன்று கேள்விகள் குறைந்து விட்டன?
பதிலளிநீக்குதிடுமென்று தியரி கிளாஸுக்குள் வந்த ஃபீலிங். ஜே.கே ரெஃபரென்ஸைப் பார்த்து இவர்தான் இந்தக் கேள்விக்கு பதில் எழுதியிருப்பார் என நினைக்க வைத்தது.
பதிலளிநீக்குபொதுவா கேள்விகள் கேட்பதே ஜாலியான பதில்களுக்காகத்தான் என்பது என் அபிப்ராயம்
அனைவருக்கும் காலை வணக்கம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகேள்விகள் எல்லாம் நல்ல கேள்விகள் அதற்கு
பதில்கள் எல்லாம் மிக அருமை.
நானும் கொஞ்சம் நுழையலாமா?
பதிலளிநீக்கு//..What Is Love? What Is True Love?..
அன்பு என்றால் என்ன? உண்மையான அன்பு என்றால் என்ன ?//
மேலே உள்ள கேள்வியில் அல்லது ..களில், மொழி மாறும்போதே கதையும் மாறிவிட்டதாகத் தெரிகிறதே, கவனித்தீர்களா! ஆபத்தான பிரதேசத்தில் நுழைகிறீர்கள் என்று உணர்ந்து அவரையும், இவரையும் quote செய்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். தப்பினால் தப்பில்லை
!
//..Can one observe with choice less awareness with all the faculties at his command ?..//
இங்கே ஜேகே-யிலிருந்து கொடுத்திருக்கிறீர்கள். Choiceless awareness என்று வந்திருக்கவேண்டும். (வார்த்தைகளுக்கிடையே இடைவெளிக்கு டைப்போ காரணமாக இருக்கலாம்) ஆனால் அவருடைய context-ல், ‘observe’ என்றால், ‘choiceless awareness’ என்றால் என்ன என்று விளக்கவேண்டிவரும். விளக்க முற்பட்டால் அது, பதில் என்பதைத் தாண்டி பதிவு என்றாகிவிடும். ஆனால் அது புரியாதவர்களுக்கு ‘இவைகள்’ வெறும் வார்த்தைகளாகவே அமையும்.
//..அன்பு என்பது உறவு, குடும்பம், ஊர், தேசம் கடந்ததாக இருக்க வேண்டும்…//
அடப்பாவமே! அப்படியா தோன்றுகிறது உங்களுக்கு?
எப்போது ‘இருக்கவேண்டும்’, ‘இருக்கப்படாது’ என்கிற ‘conditions’ வந்துவிடுமோ, அங்கே ‘அது’ – அதாவது ‘அன்பு’, இருக்காது. ஓடிவிடும்! Conditions மட்டுமே தாராளமாய் இருக்கும்!
// அன்பு, பாசம், காதல், நேசம் என எப்படிச் சொன்னாலும் அதை விளக்குவது கஷ்டம்! முதலில் தன்னைத் தான் அறிந்து கொண்டு தன் மேல் நம்பிக்கை வைத்து தன்னிடமே அன்பு செலுத்துபவர்களால் தான் இதைப் புரிஞ்சுக்க முடியும் என நினைக்கிறேன். அந்த வகையில் நானெல்லாம் அன்பில்லாதவள் என்றே சொல்லலாம். ஈசனிடம் காதலாகிக் கசிந்துருகுவது என்பது வேறே! மனிதர்கள் மட்டுமில்லாமல் உறவு, சுற்றம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காண்பிப்பவர்கள் வேறே! அந்த மனம் எல்லோருக்கும் வராது. அப்படியான மனம் கொண்டவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். //
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் அம்மா - அருமை அருமை அம்மா...
அன்பு வேறு பாசம் வேறு...
பாசம் 1) எதிர்ப்பார்க்கும், 2) நிபந்தனை விதிக்கும், 3) திணிப்பு கண்டிப்பாக இருக்கும், 4) தற்காலிகமானது, 5) பாதியில் பரிதவிக்கவிட்டு ஓடிவிடலாம், 6) நிராகரிக்கும் தன்மை கொண்டது, 7) தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும், 8) பகட்டானது, 9) போலியானது, 10) தூண்கள்
இதற்கு எதிர்மறையானது அன்பு... 1) எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும், 2) நிபந்தனையும் இருக்காது, 3) திணிப்பும் இருக்காது, 4) அன்பு நிலையானது... 5) அந்தம் வரை நீடித்து நிலைத்து நிற்கும்... 6) எதையும் ஏற்றுக் கொள்ளும் மற்றும் அரவணைக்கும், 7) அமைதிப்படுத்தும், 8) சாதாரணமானது, 9) ஆடம்பரம் இல்லாதது, 10) விழுதுகள்
மேலும் அன்பானது பகிர்ந்துகொள்ள மட்டுமே முடியும்... ஆளுமைப்படுத்த முடியாது... அன்பின் அளவிற்கு பாசம், நிலைத்து நிற்க வாய்ப்பே இல்லை...
தன் குழந்தைகளிடம் மட்டும் வெளிப்படுத்துவது பாசம்... உலக பிள்ளைகள் அனைத்தும் தம்முடைய குழந்தைகளாக கொண்டாடுவது மட்டுமல்ல அன்பு... அனைத்து உயிர்களிடத்திலும் அவ்வாறு இருப்பதே அன்பு...
இதனால் பாசம் வேண்டாம் என்று சொல்லவில்லை... பாசம் அன்பாக மாறினால் அனைத்தும் வசமாகும்...
draft-ல் இருந்த சிந்தனை பதிவை இங்கே பதிவு செய்து விட்டேன்... எப்போது எழுதி முடிப்பேன் என்று எனக்கே தெரியாது... தொழில் அப்படி...! இப்போது இந்த பதிவிற்கு வருகிறேன்...
// நீங்கள் விரும்பும் கேள்வி எத்தகையது...? //
இதுவரை படித்த எனது இந்த கருத்துரையிலிருந்து கேள்வி பிறக்கவேண்டும் அல்லவா...? இதோ க்ளூ :-
தூண்கள் - தந்தை... விழுதுகள் - தாய்...
அடுத்து...
// நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? //
//தூண்கள் - தந்தை... விழுதுகள் - தாய்...//
நீக்குதிண்டுக்கல் தனபாலன், நிறைய சிந்தனை செய்ய வைத்துவிட்டீர்கள். ஆனால் தாய் 'அன்பு' மட்டும் செலுத்துவாள் என்று சொல்லமுடியாது. 'அன்பு' என்பது இரத்த உறவு இல்லாவிடினும் மானிடத்தின் எல்லாக் கூறுகளிலும் காண்பிப்பது அல்லவா?
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொல்லியவர் வள்ளலார் அல்லவா?
நம் மூத்த பதிவர் (https://www.blogger.com/profile/00941340360552842602) திருமிகு.சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் இன்றைய பதிவில் 'இரக்கம்' பற்றிய ஒரு கருத்துரை சொல்லியுள்ளார்... 'இசை' என்பது எவ்வாறு 'இரக்கம்' ஆனது...? - என்பதைப் பற்றி பதிவு எழுதுகிறேன் என்று கூறியுள்ளேன்... அதைத்தான் கிடைக்கும் நேரங்களில் சிறிதுசிறிதாக எழுதிக் கொண்டிருக்கிறேன்...
நீக்குதந்தை பற்றி குறைகள் சொல்லவில்லை... ஆனால், தாய் அனைத்திற்கும் ஒரு படி மேல் தான்... அதில் இதற்கான விடையும் உண்டு...
இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறையினர் அன்புக்காக ஏங்க மாட்டார்கள் காரணம் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத சூழல் நிறைந்து, அதன் பொருள் மறைந்து விடும்.
பதிலளிநீக்குயெஸ் அன்பு பாசம் இரண்டிற்கும் வித்தியயசம் உண்டு. நிறையவே உண்டு....பாசம் என்பது சிறைக்கைதி...
பதிலளிநீக்குநான் சொல்ல வந்த பல கருத்துகளையும் கீதாக்கா, டிடி சொல்லிவிட்டார்கள்.. ஹப்பா எனக்கு தட்டும் வேலை மிச்சம்....நன்றி கீதாக்கா அண்ட் டிடி....
உங்கள் கருத்தை டிட்டோ செய்து ஹைஃபைவ் சொல்லிடறேன்.....அருமையான கருத்துகள் என்னால் இந்த அளவு அழகாய் சொல்லிருக்க முடியுமா என்றால் நஹி....நஹி...
கீதா
?
பதிலளிநீக்கு!
நீக்குநீங்கள் விரும்பும் கேள்வி எத்தகையது?...
பதிலளிநீக்குஇது ரொம்ப சிக்கலான கேள்வி!...
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே... - அப்படி...ன்னார் ஒருத்தர்..
ஏதோ ஒரு படத்தில பார்த்தேன்...
நேர்முகத் தேர்வுக்கு வந்தவர் சொல்வார் -
நீங்க கேட்கிற கேள்வி ஒன்னொன்னுக்கும் என்னால ரெண்டு பதில் தர முடியும்.. சார்!..
கேள்வி கேட்பவர் (சூர்யா) கேட்பார் ஒரு கேள்வி -
உங்க அப்பா பேர் என்ன?...
பதில் சொல்பவர் : நாகு (என்கிற), நாகராஜன் சார்!
நீக்கு>>> நாகு (என்கிற), நாகராஜன் சார்!..<<<
நீக்கு!?..
hahahahahh.
நீக்குஅன்றைக்கும், இன்றைக்கும் - (இனி எதிர் காலத்திலும்
பதிலளிநீக்குவிடை தெரியாத கேள்விகள் - நிறையவே!..
அதில இருந்து ஏதோ நம்மால முடிஞ்சது..
1) ஏன் இப்படி தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய் (முருகா)!?..
2) கொடி அசைந்தும் காத்து வந்ததா?..
காத்து வந்ததும் கொடி அசைந்ததா?..
3)நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா!..
தெரியும் .. என்றால் நேற்றுவரை பழகியது பொய்யா!?..
தெரியாது.. என்றால் நாளைமுதல் வாழப் போவது பொய்யா!?..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்..
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்..
>>> அன்பு, பாசம், காதல், நேசம் என எப்படிச் சொன்னாலும் அதை விளக்குவது கஷ்டம்!.. <<<
இதைக் கொஞ்சம் பிரித்து மேயலாம்!..(!?...)
அன்பும் பாசமும் வேறு வேறு தான் என்றாலும்
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் மாதிரி..
பூவில்லாமல் தலையில்லை... தலையில்லாமல் பூவில்லை..
பூவும் தலையும் இல்லாமல் நாணயம் இல்லை!..
போதும்.. போதும்!... பூவே அரச முத்திரையாய் இருந்து
அந்த நாட்டில் பூவைச் சிறப்பித்து நாணயம் வெளியிட்டால்!?..
பழனி மலைக்குப் பால் காவடி தான்!..
சரி.. காதல், நேசம் .. என்பது?..
ரெண்டு பக்கமும் வெள்ளையா இட்டலி இருக்கலாம்.. இடியாப்பமும் இருக்கலாம்!..
ஆனா தோசை இருக்க முடியாது!..
அந்தத் தோசைக்கு ரெண்டு பக்கம் மாதிரி தான் காதலும் நேசமும்!...
கொஞ்சம் முறுகல்... ஆனாலும் சுவைதான்..
ஓவரா கனவு வருது டாக்டர்..ன்ன மாதிரி
ஓவரா முறுகிடிச்சி...ன்னா
முறிஞ்சிடுச்சி..ன்னு அர்த்தம்!..
சரி.. சரி... நான் கிளம்பறேன்...
பிக்சர் டியூப்பை மாத்துறேன்..ன்னு யாரும் வந்துட்டா என்ன பண்றது!?..
மிக அருமையான விளக்கங்கள் அன்பு பற்றி. கருத்துகள் உட்பட. எல்லாமே மிகச்சிறப்பான பதில்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
உண்மையான அன்பு என்று சொன்னால், பொய்யான அன்பு என்று ஒன்று இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். அன்பு ஒன்றுதான்.அதில் நிஜம், போலி என்றெல்லாம் கிடையாது. பாசம் அது பாசமாக இருப்பதால் வழுக்கும். யார் மீது பாசம் வைதிருக்கிறோமோ அவர் செய்யும் தவறுகள் கண்ணுக்குத் தெரியாது. அன்பு அந்த தவறை செய்யாது. தாம் அன்பு வைத்திருக்கும்
பதிலளிநீக்குஓரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே மலரும் அன்பைத்தான் காதல் என்று புரிந்து கொள்கிறோம். பௌதீக வாழ்க்கையில் இந்த காதல் திருமணதிற்குப் பிறகும் நீடிப்பது துர்லபமே.
"வாளால் அறுத்து சுடினும், மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன் போல்.." போன்ற அன்பெல்லம் மனித காதலில் சாத்தியமில்லை.
நீங்கள் விரும்பும் கேள்வி எத்தகையது?
பதிலளிநீக்குகொஞ்சம் யோசிக்க வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கணக்கு சம்பந்தப்பட்ட புதிர் அல்லது கேள்வி என்றால் நான் ஜூட். புளியோதரைக்கு ஏற்ற சைட் டிஷ் ஜவ்வரிசி வடகமா? வெங்காய வடகமா? போன்ற கேள்விகள் எரிச்சலூட்டும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஎதைப் பற்றி?
அடுத்த புதனுக்கான கேள்வி:
பதிலளிநீக்கு"எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது,அதனால் நீயும் கடவுளை கும்பிடக்கூடாது" என்று மனைவியை வற்புறுத்தினால் உறவினர்கள் கோபிக்கிறார்கள். நம் கொள்கையை மற்றவர் மீது திணிக்க வேண்டாம் என்று பெருந்தன்மையாக நடந்து கொண்டால் சமுதாயம் கேலி செய்கிறது. பாவம் இந்த நாத்தீகர்கள் என்ன செய்வார்கள்?
"எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. பாரம்பர்ய வழக்கங்களில் நம்பிக்கை உண்டு. நீங்கள் அதனைக் குறை சொல்லுவதை பெருந்தன்மையாக அனுமதிக்கறேன். ஆனால் உங்கள் கருத்து தவறு. வீட்டில் உங்கள் கருத்துக்கு மாறாகத்தான் நடக்கும். என் குழந்தைகளையும் அப்படித்தான் வளர்ப்பேன்" என்று வீட்டிலும் வெளியிலும் தைரியமாக நடந்துகொள்ளும் இந்த ஆத்திக திருமதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபுன்னகை.
நீக்குஉடையுடுத்துவதிலும், தலை அலங்காரத்திலும் ஒரு சமயம் ஒன்று பிரபலமாக இருக்கிறது, பின்னர் வேறு ஒன்று அந்த இடத்திற்கு வருகிறது. இந்த fashion எனப்படும் விஷயம் எங்கே எப்படி துவங்குகிறது? எப்படிபரவுகிறது?
பதிலளிநீக்குமிக ரசித்துப் படித்தேன். அன்பு வேறு .பாசம் வேறு, காதல் வேறு.
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் அனுபவித்துப் புரிந்து கொண்டால் அந்த இன்பம் அளவிட முடியாது.
ஆத்திகம் ,நாத்திகம் எல்லாம் மேற்போர்வைகள். உண்மையில் அனைவருக்கும் கடவுள் பக்தி ரிஉக்கத்தான் செய்கிறது.
மனைவியின் ஆத்திகத்தை மறுக்கும் கணவனுக்கும்,அவளால் தனக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும்.
எனக்கு கேள்வி கேட்க தெரியாது ஸ்கூல்ல டீச்சர் கேள்வி கேட்டா முழிப்பேன். பரிட்சையில ? வேற வழி பதில் எழுதிடுவேன்
பதிலளிநீக்கு