என் மனைவி லட்டு செய்கிறேன் என்று சொன்னதுமே, நான், இது எதுக்கு வேண்டாத வேலை, பேசாம கடைல காசு கொடுத்தா லட்டு தந்துடப்போறான் என்று சொன்னேன். ஆனால் அவங்க அம்மா, அப்பா வந்திருந்தார்கள். அம்மா முன்னால லட்டு பண்ண அவளுக்கு ரொம்ப ஆசை. பசங்களுக்கும் பிடிக்கும், உறவினர்களுக்கும் பிடிக்கும் என்பதால் டிரெடிஷனல் லட்டு செய்தாள். அட.. எங்கள் ப்ளாக் திங்கக் கிழமை பதிவுக்கு எழுதி அனுப்பலாமே என்று நினைத்துப் படங்கள் எடுத்தேன்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு 2 டம்ளர்
ஜீனி 2 ¼ டம்ளர்
அரிசி மாவு 2 ஸ்பூன்
பூந்தி பொரிக்க எண்ணெய்
உலர் திராட்சை கொஞ்சம், முந்திரிப் பருப்பு 10, கிராம்பு 4, இவற்றைப் பொரிக்க நெய் 1 ஸ்பூன்
நிறமி (கேசரி பவுடர்) கொஞ்சம்
செய்முறை
முதல்ல கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கட்டி தட்டக்கூடாது. அது சுலபமாக ஜார்ணியில் (பூந்தி கரண்டி) இருந்து விழும்படி இருக்கணும். தோசைமாவு பதம்.
தனியாக, நெய்யில் உடைத்த முந்திரிகளையும், உலர் திராட்சையையும், கிராம்பையும் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டின்மீது எண்ணெய் வடிகட்டியை வைக்கவும். (5ஆவது வரிசையில் கடைசிப் படம்).
ஜீனியை வைத்து சிரப் செய்துக்கோங்க. இது ஒரு ஸ்ட்ரிங்க் வரும்படி இருக்கணும். (ஜீனிப் பாகை கட்டை விரல், ஆள்காட்டி விரலில் எடுத்து பிரித்தால், ஒரு இழை வரணும். சூடா எப்படி எடுத்துப் பார்க்கிறது என்ற கேள்வி வராதுன்னு நினைக்கறேன். சிலர் ஸ்பூனில் எடுத்தே கண்டுபிடித்துவிடுவார்கள்). இதுல, கேசரிப் பவுடர், கொஞ்சம் ஏலக்காய் பவுடர் கடைசில கலந்துக்கோங்க.
இப்போ கடாயில் எண்ணெய் (அல்லது நெய்) காயவைத்து, அதில் பூந்தி மாவை, அதற்குரிய கரண்டியில் கொட்டி, பூந்தி தயார் செய்யுங்கள். (படத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்) பூந்தி ரொம்பவும் மொறுமொறுப்பாக ஆகக்கூடாது. அதனை எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டுவிட்டு, பிறகு அதிலிருந்து எடுத்து ஜீராவில் போடவும். கொஞ்சம் கலக்கிக்கோங்க.
இதைப்போன்றே எல்லா மாவையும் பூந்தி செய்து அதை ஜீராவில் போட்டுக் கலந்துடுங்க.
அத்துடன், ஏற்கனவே வறுத்து தயாராக இருக்கும் உலர் திராட்சை, முந்திரி, கிராம்பு போட்டு கலந்துக்கோங்க.
அளவுப்படி ஜீரா, மாவு தயார் செய்திருந்தால், எல்லாம் கலந்ததும் உருண்டை பிடிக்கும் அளவு கட்டியாக இருக்கும். (அதாவது ஜீரா ஜாஸ்தியாக நெகிழ இருக்காது).
இப்போது கை நிறைய இனிப்பு பூந்திக் கலவையை எடுத்து லட்டுபோன்று உருண்டையாகப் பிடிக்கவேண்டியதுதான்.
நிறைய ஸ்டெப்ஸ் இருக்கறமாதிரி தோணும். ஆனால் செய்வது சுலபம்தான்.
கிராம்பு, முந்திரி, உலர் திராட்சை ஒவ்வொரு லட்டுவிலும் இருக்கணும்னா, அவற்றை ஊறும் பூந்தியில் கலக்காமல், லட்டு பிடிக்கும்போது, அதனுடன் 2 முந்திரி, ½ கிராம்பு, 2 உலர் திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கணும். இனிப்பு பூந்தியில், கொஞ்சம் சதுரக் கல்கண்டுகளையும் சேர்க்கலாம். அப்போ லட்டுகளில் ஓரிரு கல்கண்டும் அகப்படும்.
லட்டு பண்ணின உடனேயே சாப்பிடக்கூடாது. கொஞ்சம் மொறுமொறுப்பா இருக்கும். கொஞ்ச நேரம் கழித்தபிறகுதான் சாஃப்டா இருக்கும்.
எனக்கு, துளி பச்சைக் கற்பூரம் கலந்தால் வாசனையாக இருக்கும் என்ற எண்ணம். ஆனால் (நல்லவேளை) நான் செய்முறையில் மூக்கை நுழைக்கவில்லை.
இதனையே, சின்னத் துளைகள் உள்ள பூந்திக் கரண்டியில் மாவை விட்டுப் பொரித்தால், சிறிய பூந்திகளோடு லட்டு செய்யலாம் (ஆனால் எனக்குப் பிடிக்காது).
அட இவ்வளவு ஈசியா, நாமே செய்துடலாம் போலிருக்கே என்று நினைத்தேன். அதன் விளைவு அனேகமா நானே திருப்பதி லட்டு செய்ய முயற்சிப்பதில்தான் முடியும் என்று நினைக்கிறேன். மனைவி இன்னும் அதுக்கு ஒத்துக்கலை. எனக்கு திருப்பதி லட்டு மிகவும் பிடிக்கும். அவளுக்கு பாரம்பர்ய லட்டுதான். திருப்பதி லட்டு நான் செய்தால் எங்கள் பிளாக்குக்கு அனுப்பாமலா போய்விடுவேன் .
நீங்களும் இதனைச் செய்துபாருங்கள்.
அன்புடன்
நெல்லைத்தமிழன்
நலம் வாழ்க..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்!
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் துரை கீதா ரெங்கன்.
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஸ்ரீராம் இன்று 6:02 க்குத்தான் என் கணினியில் வந்தது. க்ளிக் பண்ணிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்...
பதிலளிநீக்குகீதா
பதிவு காணலையே என்றதும் கொஞ்சம் கவலை வந்துவிட்டது ஸ்ரீராமுக்கு என்ன ஆச்சுனு...இப்ப கொஞ்சம் சமாதானம்...இருந்தாலும் நீங்க கொஞ்சம் பிஸி அல்லது ஏதோ ஒரு டென்ஷனில் இருப்பது போல இருக்கு
நீக்குகீதா
//நீங்க கொஞ்சம் பிஸி அல்லது ஏதோ ஒரு டென்ஷனில் இருப்பது போல இருக்கு
நீக்கு//
ஆமாம் கீதா... இந்த வெள்ளி வரை அந்தப் பழைய பிஸி மறுபடி... டென்ஷன் !!
கணினியில் ஷெட்யூல் செய்து வைத்திருந்தது தேதி தப்பாய் இருந்திருக்கிறது. . அதை இன்றைய தேதிக்கு மாற்றவேண்டி இருந்தது.
இந்த வெள்ளி வரை அந்தப் பழைய பிஸி மறுபடி... டென்ஷன் !!//
நீக்குதெரிகிறது....பிரார்த்தனைகள்...எப்போதும் உண்டு..ஸ்ரீராம்..
கீதா
வேலை பார்க்கிறவங்களுக்கு ஒண்ணு ஆடிட் சமயம் டென்ஷன் ஜாஸ்தி. இல்லைனா திடுமென அதிகமாகும் அலுவல் வேலை இல்லைனா புது மேனேஜர்... எல்லாம் கடந்துபோகும் ஶ்ரீராம்
நீக்குwill come.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை கீதா அக்கா...
நீக்கு//Will come..//
நீக்குWelcome!?...
நம்ம பதில்...
நீக்குWelcome...!
ஆமா இல்ல! நான் ஒரு நாள் கூடச் சொன்னது இல்லை. வழக்கத்தில் வரலை! ஆனால் நினைச்சுப்பேன். இன்னிக்கு யதேச்சையாக இப்படி அமைந்திருக்கு! :) நன்றி துரை!
நீக்கு//ஆமா இல்ல! நான் ஒரு நாள் கூடச்// - கீசா மேடம்... ஆமாமா இல்லையா? அதைச் சரியாகச் சொல்லுங்க முதலில்.
நீக்குபடங்களைப் பார்த்ததுமே நெல்லையின் ரெசிப்பினு தெரிஞ்சுருச்சு...ஹா ஹா ஹா வரேன் காபி ஆத்திட்டு
பதிலளிநீக்குகீதா
காலைல காப்பி ஆத்தறதுக்கு முன்னாலேயே எபி தளத்துக்கு வந்தீங்களா கீதா ரங்கன்..
நீக்குஎங்க வீட்டுல காலைல நேர சாப்பாடுதான். பானங்கள் சமாச்சாரம் இல்லை. ரென்சனும் இல்லை. ஹாஹா
தித்திக்கும் திங்களில்
பதிலளிநீக்குதீஞ்சுவையாய் லட்டு..
அன்பின் நெ.த. அவர்களின் குறிப்பு..
சுவைக்க கேட்கவா வேண்டும்!..
சுவைக்கும் கேட்கவா வேண்டும்!..
வாழ்க நலம்...
ஹஹா... பாட்டாவே படிச்சுட்டீங்களா!!!
நீக்கு//அன்பின் நெ.த. அவர்களின் குறிப்பு.. சுவைக்க கேட்கவா வேண்டும்!...... வாழ்க நலம்... //
நீக்குசந்தேகப்படறீங்களா துரை ஸார்... இங்கே வாழ்க நலம் போட்டிருப்பது காட்டுகிறதே....
(நாராயண... நாராயண.....)
இதற்கு பதில்/ விளக்கம்
நீக்குபிறகு தருகிறேன்..
ஹா... ஹா... ஹா... பின்னர் விளக்கம் தரும் அளவு பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க...!!
நீக்குஹா ஹா ஹா ஹா லட்டு புடிச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே!!!
நீக்குஸ்ரீராம் நாராயண நாராயண கலகம் நன்மையில் முடியும் ஸ்ரீராம்!!!
கீதா
:)))))
நீக்குஶ்ரீராம் "ரெ ன் ச ன்"ஐக் குறைக்க லட்டு பதிவு தானா கிடைத்தது? எல்லோரும் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னமே, "நலம்" சந்தேகத்தைக் கிளப்புகிறாரே....
நீக்குஇன்று காலை பயணம். பயணத்தின்போது மொபைல் மூலமாக பதில் எழுத்த் தயங்குவேன். பேட்டரி சார்ஜ் போயிடுத்துன்னா "அவசியத்துக்கான படங்கள்" எனுக்க இயலாமல் போய்விடும். நான் கொஞ்சம் (நிறையவே) முன்ஜாக்கிரதை முத்தண்ணா..100 ரூபாய் ஹோட்டலுக்கு ஆகும்னா, 500 ரூ பாக்கெட்டில் இருக்கான்னு டேபிள்ல உட்காரும்வரை தொட்டுப் பார்த்து செக் (இது வேற செக்) பண்ணிக்கொள்வேன்.
இருந்தாலும் இப்போவே எல்லோருக்கும் காலை வணக்கங்கள் வச்சுக்கறேன்.
மறுமொழி கொஞ்சம் தாமதமானால் பொறுத்துக்கோங்க.
@ ஸ்ரீராம்..
நீக்கு>>> சுவைக்க கேட்கவா வேண்டும்!..
சுவைக்கும் கேட்கவா வேண்டும்!.. <<<
சுவைக்க கேட்கவா வேண்டும்!..
- பொறுப்பா எல்லாத்தையும் செஞ்சு தட்டு நெறையக் கொடுத்துட்டாங்களே...
( எடுத்துச் ) சுவைக்க ( யாரையும் ) கேட்கவா வேண்டும்!..
( ஒருத்தரையும் கேட்க வேண்டாம்!... நம்ம இஷ்டம் தான்!..)
சுவைக்கும் கேட்கவா வேண்டும்!..
- கைப்பக்குவத்துடன் செய்ததாயிற்றே!.. அதன் )சுவைக்கும் கேட்கவா வேண்டும்!..
கன்னலில் லட்டுவத்தோடு கார் எள்ளின் உருண்டை - என்று பெரியாழ்வார் கண்ணனுக்கு ஊட்டுகின்றார்...
அருணகிரியாரும் வேழமுகத்தவனுக்கு இலட்டு படைக்கின்றார்...
அத்துணை சிறப்புடைய லட்டுவத்தை - திங்களின் தீஞ்சுவையாய்
அன்புடன் வழங்கிடும் அன்பின் நெ. த. அவர்கள் (என்றென்றும் ) வாழ்க நலம்!...
நெல்லை நானும் அப்படியே வெளியில் செல்லும் போது மொபைல் சார்ஜ் பார்த்துக் கொள்வ்ன்...எமர்ஜென்சி கால் அல்லது முக்கியமான அழைப்பை மிஸ் செய்யக் கூடாது என்று..போகும் தூரத்தைப் பொருத்தும்...
நீக்குஅதே போல கடைக்குள் செல்லும் போது பைசா இருக்கிறதா என்று ரொம்பவே செக் செய்துதான் போவேன்...எனக்கு மறதி வேறு அதிகமா....ஹா ஹா ஹா அதனால ..அதே போல ரயில் பிடிப்பது பஸ் பிடிப்பது எல்லாம் டென்ஷனில் ஓட மாட்டேன். கொஞ்சம் முன்னதாகவே சென்று காத்திருந்தாலும் காத்திருப்பேன்...கடைசி நிமிட டென்ஷன் பிடிப்பதில்லை.....
கீதா
துரை செல்வராஜு சார்.. வருகைக்கும் பாடலுக்கும் மிக்க நன்றி.
நீக்குநல்ல பாடல்கள் தொடர்பானவைகளை எடுத்துச் சொல்லியிருக்கீங்க. இசைப்பாட்டு பாட எனக்கு ஆசை அந்த இலக்கியங்களின் மூலமாக.
இங்கேயே எழுத முயல்கிறேன் தாமதமானாலும்.
கீதா ரங்கன் - அது என்னவோ, எனக்கு செலவழிக்கப் போவதைவிட மிக அதிகமாக பாக்கெட்டில் பணம் வைத்துக்கொள்வேன்.
நீக்குரயில், பஸ் எல்லாவற்றிர்க்கும்அரை மணி முன்னதாகப் போவதைத்தான் நான் விரும்புவேன். பசங்க, மனைவி அப்படி நினைக்கறதில்லை. அரைமணி முன்னால கூட்டிக்கிட்டுப் போனா ஏதோ அவங்களை தியாகம் செய்யச் சொன்னமாதிரி அலுத்துக்குவாங்க. ஒரு மணி நேரம் முன்னால் போனாத்தான் என்ன, கடைகள் பார்க்கலாம், ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாம், இல்லைனா நிம்மதியா நடக்கலாம்னு நான் நினைப்பேன்.
எங்க அப்பாவும் டைம் கீப் அப் பண்ணுவதில் ரொம்ப முனைப்பா இருப்பார்.
இந்த ஜெனரேஷன் டேக் இட் ஈஸி டைப். ஹாஹா
நன்றி
காலை வணக்கம்....
பதிலளிநீக்குஆஹா.... இன்னிக்கு இங்கே லட்டுவா.... அம்மா முன்பெல்லாம் லட்டு செய்வார். இப்போதெல்லாம் பிடிக்க முடிவதில்லை என்று விட்டுவிட்டார்.
லட்டு இங்கே விதம் விதமாகக் கிடைத்தாலும், நம்ம ஊர் லட்டு போல சுவை இல்லை. இங்கே பல ரகங்களில் கிடைக்கிறது - கிலோ 600 ரூபாய் லட்டு கூட உண்டு! இங்கே கிடைக்கும் லட்டு வகைகள் பற்றி ஒரு பதிவே எழுதலாம்! விரைவில் எழுதுகிறேன்.
உருண்டையாகப் பிடித்தால் லட்டு தான் இங்கே! :)
வாங்க வெங்கட் காலை வணக்கம்.
நீக்குமுன்பெல்லாம் லட்டு பிடிக்காது...
இப்போதெல்லாம் லே ஸா பிடிக்க ஆரம்பிச்சிருக்கு...
ஓவர் ஸ்வீட்டாய் இருந்தால் அலர்ஜி!
வெங்கட் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குலட்டு பிடிப்பதற்கு மெஷின் இப்போல்லாம் இருக்கு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கையால் லட்டு பிடிப்பது என்பது எவ்வளவு கடினம் தெரியுமா?
பஹ்ரைனில், இனிப்பு செய்யும் கடைகளின் வேலைகளை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் ஆயிரம் லட்டுகளுக்கு ஆர்டர் வரும். 4+ அடி விட்டமுள்ள தாம்பாளத்தில் ஜீரா, பூந்தி கலந்த கலவை இருக்கும். அதன் முன்னால் சின்ன ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இரு கைகளால் ஒரே சமயத்தில் லட்டு பிடிப்பார். இதுபோல வாய் பேசிக்கொண்டிருக்கும், கை தொடர்ந்து லட்டு பிடித்துக்கொண்டிருக்கும். இருபது லட்டுகள் பிடித்தாலே கை வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்தமாதிரி லட்டு பிடிப்பார்கள்.
நிறைய பேரின் உடலுழைப்பைப் பார்த்து (ரோடு போடுகிறவர்கள், கார்ப்பொரேஷன் குப்பை அள்ளுபவர்கள், கடைகளில் வேலைபார்க்கிறவர்கள்) நான் பல தடவை வெட்கியிருக்கிறேன். சமூகத்தில் உடலுழைப்புக்கான சம்பாத்தியம் உட்கார்ந்த இடத்திலிருந்து சம்பாதிப்பவர்களைவிட மிக மிகக் குறைவானது.
பூந்தி லட்டு செய்ததும் ஜிலேபி பிழிந்ததும், பாதுஷா தேய்த்ததும் பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போய் விட்டது. குழந்தைகளுக்கு இவை மூணும் பிடிக்கும் என்பதால் அவங்க இருந்தவரை ஒவ்வொரு தீபாவளிக்கும் உண்டு. இல்லைனா பாதுஷா கடையிலாவது வாங்கிடுவோம். இப்போ நான் பூந்தி லட்டு தேய்த்தேப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. இனிப்பு பக்ஷணங்கள் செய்வதும் குறைந்து விட்டது. அல்வா இல்லாத தீபாவளியே இருந்ததில்லை. இப்போல்லாம் அல்வா சாப்பிடுவதே ஸ்ராத்தத்தில் வெல்லம் போட்டுச் செய்வதை மட்டுமே. அதிலே கட்டாயமா கோதுமை அல்வா செய்யணுமே! :))))
பதிலளிநீக்குநீங்க பரவாயில்லைக்கா... நாங்க இதெல்லாம் வீட்டில் செய்ததே இல்லை...ஹிஹிஹி...
நீக்குகீதாக்கா என்னையும் உங்க லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க...ஆனா நான் இன்னும் முழுமையா செய்யாம இருக்கலா குறைந்து கொண்டெ வருது...லட்டு, பூந்தி, அல்வா, பாதுஷா, காஜா என்று செய்து....
நீக்குகீதா
எதையும் செய்துபார்க்கணும்னாலோ இல்லை வீட்டில் செய்யணும்னாலோ, அதற்கு ரசிகர்கள் இருக்கணும். நல்லா சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்லும் ஆட்கள் வீட்டில் இல்லைனா, யாருக்காக இதனைப் பண்ணுவாங்க? அவங்களே செய்து அவங்களே ஆர்வமாக சாப்பிடுவது அபூர்வம்.
நீக்குஎந்த வீட்டிலாவது, உணவு அவ்வளவு சுவையாக இல்லைனா, அதற்கு முக்கியக் காரணம், செய்கிறவர்கள் இல்லை, சாப்பிடுபவர்கள். ஆர்வமாகச் சாப்பிடுபவர்கள் இல்லாத வீட்டில், பாரம்பர்ய உணவுகள் செய்வது குறைந்துகொண்டே வரும்.
என் மனைவி ஆரம்ப காலங்களில் (திருமணம் ஆன புதிதில்) குழம்பு, ரசம் என்றெல்லாம் செய்வார். நான், ஏதேனும் ஒன்றுதான் என்னால் சாப்பிடமுடியும் அதனால் ஒன்றே செய் என்று சொல்லிட்டேன். ஆனால் என் கட்டளைகள் எல்லாம், பாரம்பர்ய விசேஷ தினங்களில் வேலைக்கு ஆகாது. அப்போதெல்லாம் மனைவி நினைத்தபடி செய்துவிடுவார். (அந்த அந்தப் பண்டிகைக்கு எது எது உண்டோ அவைகளை).
என் அப்பா அடிக்கடி சொல்வார், பண்டிகைகளைக் குறைக்கக் கூடாதுனு! என் மாமியார் வீட்டிலும் சொல்வாங்க! குழந்தைங்க நம்மோடு இல்லைனாலும் பண்டிகையைக் குறைக்காமல் கொஞ்சமாவானும் செய்யணும்னு எங்க வீடுகளில் ஓர் எழுதப்படாத சட்டமே உண்டு. ஏன்னா அப்போத் தான் குழந்தைங்க நல்லா இருப்பாங்கனு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்வாங்க. அப்போல்லாம் நான் சிரிப்பேன். நீங்க இங்கே பண்டிகை கொண்டாடினால் எங்கோ இருக்கும் நாங்க நல்லா இருந்துடுவோமானு எதிர்க்கேள்வியெல்லாம் கேட்பேன். இப்போ எனக்குனு வந்ததும் தான் அதன் தாத்பரியம் புரிகிறது. ஆகவே எங்கிருந்தாலும் குழந்தைங்க நல்லா இருக்கணும்னு நினைச்சுப் பண்டிகைகளை எளிமையாகவானும் கொண்டாடி விடுகிறேன். பட்டால் தானே தெரியும்! :)))))
பதிலளிநீக்குநெகிழ்கிறேன்.
நீக்குஅதே போல் உறவினர்/தாயாதி இறந்து பண்டிகையை விமரிசையாகக் கொண்டாட முடியாட்டியும் அப்போவும் எதையும் நிறுத்தியதில்லை. ஒரு இனிப்பாவது செய்து கொஞ்சம் போல் தேன்குழல் மட்டும் பிழிந்து குழந்தைகள் வரைக்கும் புதுசு எடுத்து முதல் நாளோ அல்லது பண்டிகை அன்று மாலையோ போட்டுக்கச் சொல்லுவாங்க! ஏனெனில் ஒரு வருஷம் தட்டினால் மூணு வருஷம் தட்டும் என்று சொல்வார்கள். ஆகவே நிறுத்துவது இல்லை. என் மாமியார், மாமனாரும் சங்கராந்தி சமயத்திலோ, கார்த்திகை சமயத்திலோ அப்படி நேர்ந்தால் என்னையும் என் ஓரகத்தியையும் எல்லாவற்றையும் செய்யச் சொல்லுவாங்க! பொங்கல் வைப்போம் மஞ்சள் கொத்துப் பானையில் கட்ட மாட்டோம். சங்கராந்தி பூஜை இருக்காது. அதே போல் கார்த்திகைப் பொரி செய்து நிவேதனம் பண்ணி தினம் ஸ்வாமிக்கு விளக்கேற்றுகிறாப்போல் ஏற்றி நாலைந்து விளக்குகளை மட்டும் வாசலில் வைப்போம். சரஸ்வதி பூஜைன்னா அன்னிக்குப் பாயசம் வடை செய்து பூ, பழங்களோடு நிவேதனம்! வரவங்களுக்கு வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுப்போம். எதையும் நிறுத்துவது இல்லை!
நீக்குமனதிற்கும், உடலுக்கும் உற்சாகம் அளிக்கவும் உறவுகளையும் நட்புக்களையும் புதுப்பிக்கத்தானே பண்டிகைகள்! அன்று ஏற்படும் சந்தோஷம் மனதில் நிலைத்தும் இருக்குமே! இனிய நினைவுகளாக இருக்கும்.
நீக்குயெஸ் யெஸ் அக்கா...நானும் ஏதேனும் ஒன்றேனும் செய்துவிடுகிறேன்...அட்லீஸ்ட் ஒரு வாயாவது....அதுவும் எல்லோருடனும் பகிர்ந்து உண்ணுதல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...ஆனால் அது பல சமயங்கள் இல்லாமல் போயிடுது...
நீக்குகீதா
கீதா ரங்கன், என் மனைவியும் அந்த அந்தப் பண்டிகைக்கு உரியவைகளை எப்போதும் செஞ்சுடுவார். நான்தான் எதுக்கு கஷ்டப்படணும்னு சொல்லிக்கிட்டே இருப்பேன்.
நீக்குஎனக்கு ஒரு வேளையில் சாம்பார், ரசம், மோர் என்று மூன்றும் சாப்பிட முடியாது. ஏதேனும் ஒன்றுதான் சாப்பிடுவேன். அந்த ஊர்ல இருக்கும்போது போகிக்கும் இன்னொரு நாளுக்கும்தான் எல்லாம் பண்ணச் சொல்லி, அங்கு வாழை இலை வாங்கி அதில் சாப்பிடுவோம் (பாருங்க, அந்த ஊரில் வாழை இலைக்கு எவ்வளவு கொடுத்தேனோ கிட்டத்தட்ட அதே விலை இங்கும் கொடுக்கறேன்)
கீசா மேடம்... உங்கள் பின்னூட்டங்கள் நிறைய தகவல்கள் தருகின்றன. நீங்க விளக்கமா உங்க அனுபவங்களை எழுதும்போது நாங்களும் படித்துத் தெரிந்துகொள்கிறோம். மிக்க நன்றி.
நீக்குஎன் மனைவி, அவள் அம்மாவிடம் இருந்து ரெசிப்பிக்களைக் கேட்டு அதனை கணிணியில் எழுதிவைத்திருந்தார். அதுபோல எந்த எந்த பண்டிகைக்கு என்ன என்ன செய்யணும் என்ற லிஸ்டும் அதில் உண்டு. இதையெல்லாம் ஆவணப் படுத்தி வைக்கலைனா, பிற்காலத்தில் அந்த அறிவை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கொண்டுசெல்ல இயலாமல் போய்விடும்.
கீசா மேடம்... நீங்க ஏன் ஒரு பதிவுத் தொடர் ஆரம்பித்து, அதில் எந்த எந்தப் பண்டிகைக்கு எந்த எந்த உணவுகளைப் பண்ணவேண்டும் என்று எழுதக்கூடாது? நீங்கள் சில பல தொடர்களில் அதனைச் சொன்னபோதும் அதற்கென்றே ஒரு தொடர் எழுதலாம் (பாருங்க எத்தனை பெண்டிங் வேலைகள் உங்களுக்கு இருக்குன்னு).
நீக்குஅருமை
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க சுவைக்கத் தூண்டுகிறது நண்பரே
திருப்பதி லட்டுக்காகக் காத்திருக்கிறேன்
வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்...
நீக்குமனைவி இந்தத் தீபாவளிக்கு மீண்டும் லட்டு செய்தார். அவரின் தாய்வீட்டுக்குக் கொண்டு சென்றார். எனக்கு மட்டும் ஒரு மிகப் பெரிய லட்டு (திருப்பதி லட்டைவிடப் பெரியதாக) செய்துவைத்துள்ளார்.
நான் இயல்பாகவே நிறைய இனிப்பு சாப்பிடுபவன். எடை குறையணும், வேறு பிரச்சனைகள் வந்துடக் கூடாதுன்னு நான் இனிப்பைப் பார்த்தாலே எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறார். எப்போ திருப்பதி லட்டு செய்யும் சந்தர்ப்பம் வரும்னு தெரியலை. ஆனால் நானே செய்ய மிகவும் ஆசை. பார்க்கலாம்.
கருத்துக்கு நன்றி
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குபடிப்படியாக புகைப்படங்கள் ஆசையை தூண்டுகிறது.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி.. கருத்துக்கு நன்றி.
நீக்குலட்டு செய்வது எளிது என்றாலும் இதுவரை வீட்டில் செய்வது இல்லை...இங்கு கடைகளில் Motichoor Ladoo தான் அனேகமாக கிடைக்கும்.. இப்படி நல்ல பூந்தி லட்டு சாப்பிட வேண்டும் என்றால் இங்குள்ள பாலாஜி கோயிலுக்கு சென்று வாங்கி சாப்பிடுவோம் இங்குள்ள கொயில் லட்டுவை சாப்பிட்டால் திகட்டவே செய்யாது அதனால் சாப்பிட்டு கொண்டே இருக்கலாம்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை. 'கண்ணதாசன்' அளவிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு நீங்கள் கவிதைகள் எழுத முயற்சித்திருக்கலாம். ஆனால், 'காணாமல் போய்விட்டேன்' என்று புரளி வந்துவிட்டதே... அது உங்கள் கைவண்ணமா? ஹாஹா
நீக்குகோவில் லட்டுகளில் எந்தக் கெமிக்கலும் சேர்ப்பதில்லை (பச்சைக் கற்பூரம் சேர்க்கப்படலாம்). ஆனால் கடைகளில், லட்டு எளிதாகப் பிடிக்க, குளூகோஸ் சிரப்பில் கையை நனைத்துவிட்டு லட்டு பிடிப்பார்கள். அதனால் லட்டு உருண்டையா ஷேப் மாறாமல் கட்டியாக இருக்கும். கடை லட்டு திகட்டுவதன் காரணமும் இதுதான்.
அனைவருக்கும் காலை வணக்கம். லட்டுக்கு ஆசை. வரவில்லை. ஆனால்்படங்கள் பிரமாதம் . நெல்லையாரின் பாஸ்க்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவல்லி சிம்ஹன் மேடம்... லட்டுக்கு ஆசை வழவில்லைனு சொல்லிட்டீங்களே.. அவனவன் லட்டுக்கு ஆசைப்பட்டு கூட பெருமாளின் திவ்ய தரிசனத்துக்காக திருப்பதி போகிறார்கள்....
நீக்குநெல்லைக்கு "பாஸ்" கிடையாதே.... "ஹஸ்பன்ட்" தானே உண்டு.....
வல்லிம்மா நெல்லையின் பாஸ் அல்ல ஹஸ்பண்ட்!!! ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அரசு மேடம்.
நீக்குலட்டு கீதாசாம்பசிவம் சொன்னது போல் ஒரு காலத்தில் செய்து இருக்கிறேன். பெரிய தங்கையும் நானும் சேர்ந்து சின்ன தங்கைக்கு தலை தீபாவளி பலகாரம் கொடுக்க நிறைய லட்டு பிடித்தோம், பூந்தி உருவம் தெரியாமல் இருக்க கொஞ்சம் இடித்துக் கொண்டு பிடித்தோம்.
பதிலளிநீக்குநெல்லை துணைவியார் செய்து இருப்பது முத்தாக பூந்தி தெரிவது செய்து இருக்கிறார். இதுவும் நன்றாக இருக்கிறது.
கடையில் எவ்வளவு வாங்கினாலும் நம் கையால் செய்தது என்றால் சிறப்பு.
செய்முறை விளக்கம் அருமை, எல்லா படங்களும் அருமை.
கருத்துக்கு நன்றி கோமதி அரசு மேடம்... பூந்தி தெரிந்தால்தானே லட்டு சுவையாக இருக்கும்? எனக்கு பூந்தியை அழுத்தி கிட்டத்தட்ட பூந்தி தெரியாமல் செய்யும் லட்டுக்கள் பிடிப்பதில்லை.
நீக்குவீட்டில் நம் கையால் செய்யும்போது அதில் சுகாதாரமும் நல்ல பொருட்களும் மட்டுமல்ல, நம் அன்பும் கலந்திருக்கிறது அல்லவா?
ஆகா...! அருமையாக செய்துள்ளார்...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். பதிவர்களிடம் பேசும்போது உங்கள் பெயர் வருவதை நான் கண்டிருக்கிறேன். அந்த உதவும் உள்ளத்தைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.
நீக்குமிக இஷ்டமான லட்டு ..
பதிலளிநீக்குநான் செஞ்சது இல்ல ..எங்க அத்தை ரொம்ப அருமையா செய்வாங்க ..போதும் ன்னு மனசு சொல்லாது அப்படி இருக்கும் சுவை..
இந்த தீபாவளிக்கு செய்யல ஏன்னா அதுக்கு முந்தி புரட்டாசியில் ஊருக்க போன அப்ப தான் செஞ்சு குடுத்தாங்க பசங்களுக்கு ..அதனால் தீபாவளிக்கு பாதுஷா..
ஊருக்கு போகும் போது எல்லாம் லட்டு பார்சல் வந்துடும் ...
உங்க செய்முறையும் , படங்களும் வெகு அருமை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா ப்ரேம்குமார்.
நீக்குகண்டிப்பாக உங்கள் அத்தையிடம் செய்முறையைக் கற்றுக்கொள்ளுங்கள். அந்தத் திறமை பரம்பரை பரம்பரையாகத் தொடரவேண்டும் இல்லையா?
நெல்லை லட்டு செமையா வந்துருக்கு...
பதிலளிநீக்குஎனக்குக் கொஞ்சம் மொறு மொறு என்று சாப்பிடப் பிடிக்கும்...ஸோ செஞ்சதும் சாப்பிடுவேன்..
படங்களும் அழ்கா எடுத்து நல்லா கோர்த்திருக்கீங்களே நெல்லை...
கீதா
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். எங்க அம்மா அந்த ஊருக்கு வந்தபோது ஒரு நாள் (மே 1னு ஞாபகம்), அன்றைக்கு முழுவதும் வெளியில்தான் சாப்பிடுவது, வீட்டில் எதையும் பண்ணச்சொல்வதில்லை என்று (சும்மா... உழைக்கும் மனைவிக்கு ஓய்வு அளிப்பதாக) நினைத்து காலை 5-6 மணிக்கு கார்ல கூட்டிட்டுப் போனவன், எல்லா இடங்களுக்கும் சுற்றி, பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், இரவு உணவு என்று வெவ்வேறு உணவகங்களின் உண்டோம் (இடையில் ஊர் சுற்றிப்பார்த்தல், மால்களுக்குப் போதல் என்று). அன்றைக்கு இரவு உணவு 11 மணிக்குத்தான் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். அங்க ஜாங்கிரி ரொம்ப நல்லா பண்ணுவாங்க. அப்போ சுடச் சுட ஜாங்கிரி கொண்டுவந்து வைத்தார்கள். அதை வாங்கிச் சுவைத்தோம். மொறுமொறுப்பா மிக நன்றாக இருந்தது. ஆனா பாருங்க, அந்தக் கடைல வாரம் இரண்டு முறை ஜாங்கிரி இரவில்தான் செய்வாங்க. விடு விடு என்று இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும் (நிறையப் பண்ணுவாங்க). ஆனால் சூடான ஜாங்கிரி சாப்பிட இரவு 10 மணிக்கு மேல் போகணும். நானோ 8.45க்கு உறங்கச் செல்பவன்...
நீக்கு//ஸோ செஞ்சதும் சாப்பிடுவேன்..// - இதன் தொடர்புடைய வேறு ஒன்று உங்களிடம் (அல்லது பொதுவா பெண்களிடம்) கேட்கணும்னு நினைத்திருக்கிறேன். அதை புதனுக்கு கேள்வியாக அனுப்பறேன். ஹாஹா
எனக்கு ட்ரடிஷனல் லட்டுதான்பிடிக்கும் நானும்மனைவிக்கு லட்டு பிடிக்க உதவியதுண்டு
பதிலளிநீக்குநன்றி ஜி.எம்.பி சார்....
நீக்குஆஆஆ நெல்லைத் தமிழன் வீட்டுப் பூந்தி லட்டோ.. சூப்பராக இருக்கு, இந்த ரெசிப்பி முன்பு எனக்கொருவர் தந்தார் அப்போ தொடக்கம் செய்ய நினைச்சு இன்னும் செய்யவில்லை, உறைப்பெனில் செய்திருப்பேன் இனிப்பென்பதால் சாப்பிட்டு முடியாதே எனும் தயக்கம்.
பதிலளிநீக்குஅதிரா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஜீரா ஜாஸ்தியாயிட்டால் லட்டு பிடிக்க முடியாது. அப்புறம் இன்னும் பூந்தி செய்து சேர்க்கணும். அப்படியே லட்டு எண்ணிக்கை அதிகமாயிடும். இருந்தாலும் ஆர்வத்திற்காக 4-5 லட்டு வருவதுபோல் செய்துபாருங்கள். அதில் கிராம்பு, கல்கண்டு, உலர் திராட்சை முந்திரி சேர்த்தால் உதிராகவே (அதை நாங்கள் குஞ்சாலாடு என்போம்) சாப்பிடலாம்.
இதுக்கு அரிசிமாவும் சேர்த்திருக்கிறா. சுடச்டுட உருட்டி எடுப்பதுதான் கஸ்டமாமே.
பதிலளிநீக்குஎன்னாதூ திருப்பதி லட்டோ? நீங்க செய்யபோறீங்களோ நெ த? சே சே ஏன் இந்த விபரீத ஆசை எல்லாம்?:).. நீங்க கவலைப்படாதீங்கநாங்க கடையிலயே வாங்குறோம்:)...
பதிலளிநீக்குஎன்னாதூ.... திருப்பதி லட்டு கடையிலா? இப்படி எல்லோரும் ஓடி ஒளிந்தால் நாங்க எப்பத்தான் இவைகளைச் செய்துபார்க்கிறது?
நீக்குநான் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி பார்க்கும்போது நினைத்துக்கொள்வேன்... என்னடா இத்தனை ஐட்டங்களையும் நடுவர்கள் சுவைத்துப் பார்க்கிறார்களே... அதனால்தான் பெரும்பாலான செஃப்கள் ரொம்ப குண்டாக இருக்காங்களோ என்று...
நெல்லை நீங்கள் எழுதியுள்ள உங்களின் மனைவியின் செய்முறையான லட்டுவின் குறிப்புகள் அப்படியே என்னுடைய செய்முறையும் ஒத்துப்போகிறது. என்ன வீட்டில் ஜெனிவாவில் குங்குமப்பூ இருக்கும் . அது கொஞ்சம் சேர்ப்பேன். பூந்திமாவு கரைக்கும்போது ஒரு சிட்டிகை நிறமி சேர்ப்பேன். சென்ற வருஷம் நவராத்திரியின்போது ஜெனிவா மருமகளுக்கு பதம் காண்பித்து நிறைய லட்டு செய்ய வைத்தேன். அங்கு செய்ததுதான். உங்கள் குறிப்பு பார்த்து,படங்களும் பார்த்து,பதமும் பார்த்து மிக்க ஸந்தோஷப்பட்டேன். ஆஹா,ஓஹோ என்று கொண்டாடினேன் என்று உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள். என்ன அருமையாக பதம் சொல்கிறீர்கள். நீங்களும் கைதேர்ந்தவர்தான். அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சியம்மா... உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கணும்.
நீக்குபாருங்க...இதெல்லாம் செய்தது என் மனைவிதான். நான் போட்டோக்கள் எடுத்து எ.பிக்கு அனுப்பினேன்.
ஆமாம்... நீங்க லட்டு செய்முறை வெளியிடலியே... படங்களோடு ஒரு இனிப்பு செய்முறை போடவேண்டும் (முடிந்தபோது) என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் ஏழு,எட்டு வருஷங்களாக எழுதி வருவதால்,எழுதி,ரிபிளாக் செய்து எல்லாம் ஆயிற்று. போட்டோவெல்லாம் கூட போட்டிருக்கிறேன். ஏதாவதுஅன்கேட்டகிரீஸ்லே இருக்கோ,இனிப்பு வகையில் இருக்கோ. நான் ரொம்ப முடிந்த நிலையில் இல்லே. அதனால்தான் எதுவும் எழுதலே. மன்னிக்கவும். எனக்குத் தெரியும் உங்கள் திருமதி செய்ததுதான் என்று. பாராட்டுகளெல்லாம் அவருக்குதான். நன்றி. அன்புடன்
நீக்குகாமாட்சி அம்மா... உங்களை என்கரேஜ் செய்யத்தான் அப்படி எழுதினேன். நிறைய பதிவர்கள் பதிவுகள் போடாமல், முகநூலில் ஆழ்ந்துடறாங்க. எனக்குத் தெரியும் உங்களுக்கு கொஞ்சம் பெரிய பதிவுகள் எழுதும்படி தற்போது உடல் நிலை இல்லைன்னு. ஆனா, எங்க எல்லாருடைய பிரார்த்தனையிலும், மனத்திலும், அன்பிலும் நீங்க இருக்கீங்க என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சொன்னா கொஞ்சம் அதீதமாச் சொல்றமாதிரி இருக்கும். திருவண்ணாமலை பற்றிப் படித்தாலோ அல்லது பார்த்தாலோ எனக்கு உங்கள் ஞாபகம் வரும்.
நீக்குஅட ஆண்டவா... கடைசியில் எல்லாப் பாராட்டுகளையும் என் ஹஸ்பண்டுக்குச் சொல்லிட்டீங்களே.. அப்போ விளம்பரம் பண்ணினவனுக்கு ஒரு பாராட்டும் கிடையாதா?
இடுகையை வெளியிட்ட எங்கள் பிளாக் ஶ்ரீராமுக்கு நன்றி. இந்தத் தடவை தீபாவளி அன்றே லட்டு செய்முறை வரமுடியாதபடி ஆகிவிட்டது.
பதிலளிநீக்குபின்னூட்டமிட்ட சில பதிவர்களுக்கு அவங்க ஊரிலிருந்தே மறுமொழி, இரவு தருகிறேன். (உடனே சிலர் ஸ்காட்லான்ட் ஏர்போர்ட் எங்க இருக்குன்னு சொல்லவேண்டாம் ஹாஹா)
தாமதமான மறுமொழிகள் இந்த முறை தவிர்க்க இயலவில்லை
Boarding pass ஐ துலைச்சிட்டாரோ நெ தமிழன்:) ஸ்கொட்லாந்தில இன்னும் காணம்:)... மறக்காமல் 4 லட்டும் எடுத்து வரவும்:)...
நீக்குஅதிரா... உங்கள் ஊருக்கு வரத்தான் திட்டமிட்டு, நானே செய்து (மனைவி செய்ததை நான் எதுக்கு உங்களுக்குத் தரணும் என்று) 5 லட்டுக்களோடு இங்க சென்னை ஏர்போர்ட்டுக்குப் போனேன்... அவங்க என்னைத் தீவிரவாதி ரேஞ்சுக்குச் செக் பண்ணி, இந்த மாதிரி பயங்கர ஆயுதங்களை நாட்டைவிட்டு எடுத்துச் செல்லக்கூடாது, அதிலும் லக்கேஜில் வைத்திருக்க்க் கூடாது என்று சொல்லிட்டாங்க. உங்களுக்குன்னு 5 பெரிய லட்டுக்களாகச் செய்துவந்ததுதான் பிரச்சனையாயிடுத்து. நமக்கு எதுக்கு வம்பு என்று நான் சாப்பிடாமல், அவங்களைச் சாப்பிட்டுப் பார்த்து பிறகு அனுமதிக்கச் சொன்னேன்... இன்னும் அனுமதி கிடைக்கலை(யா அல்லது சாப்பிட்டுப் பார்த்த அந்த ஆபீசர்.......யா என்று தெரியவில்லை).
நீக்குஆசையாய் ஒரு லட்டு சாப்பிட்டேன் பல்வலி
பதிலளிநீக்குவாங்க அசோகன் குப்புசாமி... லட்டு சாப்பிட்டா பல்வலியா? இது என்ன புதுக்கதை...
நீக்குஒரு சீரியஸ் பதில் உங்களுக்கு. லட்டு மட்டுமல்ல, கம்மர்கட் போன்ற இனிப்பு வகைகளை தூங்குவதற்கு முன்னால் சாப்பிடக்கூடாது, இனிப்பு எப்போது சாப்பிட்டாலும், கடைசியில் பல் தேய்க்கவேண்டும். இல்லைனா, இனிப்பு ஈறுகளில் தங்கி பற்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
லட்டு பார்க்கவே அழகா வந்திருக்கு .பொறுமையா படங்களை எடுத்து ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறை கொடுத்ததற்கே பூச்செண்டு தரலாம் .
பதிலளிநீக்குஎங்க வீட்ல இரண்டு லட்டு பிரியர்கள் இருக்காங்க :) என் கணவர் மற்றும் ஜெஸி நாலு கால் மகள் :)
ரெண்டு பேரும் போட்டி போட்டு சாப்பிடுவாங்க ..ஆனா ஜெசிக்கு கொஞ்சம் தான் தர சொல்லுவேன் அநேகமா நெய் வாசனைக்குத்தான் அவ ஆசையாகேக்கறான்னு நினைக்கிறேன் .
ஹீ ஹீ நானும் ஒரு முறை பூந்தி செய்யப்போய் ஷேப்பெல்லாம் அமீபா ப்ரோடியஸ் மாதிரி வந்து :)
அநேகமா திருப்பதி லட்டுக்கு இந்த ஜாரிணி இருக்காதுன்னு நினைக்கிறேன் ஸோ காத்திருக்கிறேன் திருப்பதி லட்டு ரெசிப்பிக்கு
அல்லோஓஒ பூந்தி லட்டு மட்டும்தேன் அப்பூடி வந்திச்சா?:)
நீக்குஎன்னாதூ.... லட்டு ரசிகர்கள் கணவரும் ஜெஸியுமா? இது என்ன புதுக் கதையா இருக்கூ.
நீக்குதிருப்பதி லட்டு செய்யறதுக்கு முழுவது நெய், அப்புறம் பொடித்த கல்கண்டு உபயோகப்படுத்தணும். தொடர்ந்து பண்டிகை, பயணம்னு ஏகப்பட்ட இனிப்புகளைச் சாப்பிட்டாச்சு. அதனால் இப்போதைக்கு லட்டு செய்யும் வாய்ப்பு இல்லைனே நினைக்கறேன். பார்ப்போம்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீங்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞர் ரூபன். தொடர்ந்து வருகை தாருங்கள்.
நீக்குபூந்தி லட்டு எனக்கு பதம் சரியாக வந்ததில்லை. பூந்திகள் சரியாக வந்தாலும் பொரித்ஹ்டெடுக்கும் பதம் பிழைத்து விடுகின்றது என நினைக்கின்றேன் லட்டுபிடிக்கும் போது உருண்டையாக பிடிக்க முடிவதில்லை.
பதிலளிநீக்குஎங்க ஹோட்டலில் பூந்தி செது ஜீராவில் ஊறவைத்து லட்டு பிடிக்காமல் அப்படியே டெசட்டாக ஹோட்டல் கெஸ்டுக்கு கொடுப்பதுண்டு. குருப் கெஸ்ட்களுக்கு பாத்திரத்தில் வைத்தால் விருப்பம் போல் அள்ளி எடுப்பார்கள்.ஆரஞ்சு, பச்சை வர்ணங்களில் செய்வோம்.
ஆனால் நான் செய்து பார்த்ததில்லை. நார்த் இந்தியன் குக் தான் சமைப்பார்.
நான் உங்கள் செய்முறை வைத்து கட்டாயம் செய்து பார்த்து விடுகின்றேன். நாளைக்கு இதுவே முதல் பணி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஷா. மாவு பதம் மிக முக்கியம். அப்போதான் உருண்டை உருண்டையா பூந்தி வரும்.
நீக்குபூந்தி-ஜீராவில் வாசனைக்கு பச்சைக் கற்பூரமோ இல்லை குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றைச் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கு என்று நினைக்கிறேன்.
தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கணும். தொடர்ந்த பயணங்கள்.