எம் ஏ காஜா இயக்கத்தில், கங்கை அமரன் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன்.
இரண்டு பாடல்களில் ஒரு பாடலை முன்னர் பகிர்ந்து விட்டேன். இது இரண்டாவது பாடல்.
தடம் மாறும் மனைவி பற்றிச் சொல்லும் பாடல். கே ஜே யேசுதாஸ் குரலும், எஸ் ஜானகி குரலும் இனிமை. வரிகளும்.
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறுபுறம்
அவள் வானில் இரண்டு நிலவு
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
.
பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரைக் கொண்டது
தெய்வம் அதைச் சூடிக் கொண்டது
மாலையென தோளில் கொண்டது
பூவில் உள்ள தேனைக்கண்டு
ஒரு சோலை வண்டு அதை திருடிச்சென்றது
தலைவன் ஒரு கோயிலில் - அவன்
தேவியோ தெரு வாசலில்
.
.
மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கதில் சோகம் வந்தது
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின்வழி வாழ்க்கை செல்வது
போட்டு வைத்த கோடு தாண்டி - தன்
வீடு தாண்டி அன்னப்பேடு சென்றது
மணக்கும் வரை பூக்கடை
மணம் மாறினால் அது சாக்கடை .
.
இனியதாய் மலரட்டும் வெள்ளி! காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடர்ந்து வரும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குவாழ்க நலம்...
பதிலளிநீக்குஸ்ரீராம் இது ஃபேமஸ் பாட்டா...ஹா ஹா ஹா எதுக்கு கேக்கறேன்னு தெரியுதா!!!!!
பதிலளிநீக்குகீதா
தெரியுது... தெரியுது...!!!
நீக்குகீதா ரங்கன்... இது பேமஸ் பாட்டுதான். இது கங்கை அமரன் எழுதிய பாட்டா?
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குபாட்டு அப்புறம் தான் கேட்க முடியும்...
பதிலளிநீக்குஎன்ன பாடல் என்று யோசிக்கிறேன்....அதாவது மெட்டை...படம் எல்லாம் இப்பத்தானே தெரிய வருது...மட்டுமல்ல இப்ப வாசித்தாலும் முழு தகவலும் மண்டையில் பதிய மறுக்கிறது....ஹூம் என்ன சொல்ல...
கீதா
அப்புறமா கேட்டு என்ன ராகம்னு சொல்லுங்க... மோகனம்னு மட்டும் சொல்லிடாதீங்க!
நீக்குமோகனம்னு மட்டும் சொல்லிடாதீங்க!//
நீக்குஹா அஹ ஹா ஹா ஏன் ஸ்ரீராம் ஏதேனும் போட்டியா...பெட் கட்டியிருக்கீங்களா...
போன வாரத்தைப் போல இந்தப் பாட்டும் வலஜி/வலச்சி ராகத்தை பேஸ் செய்ததுதான் ஸ்ரீராம்...சென்ற வாரப்பாட்டும் வலஜி யை பேஸ் செய்ததுதான் என்றாலும் வேறு ஸ்டைல்...இதுல கர்நாட்டிக் ஸ்டைல்..
அருமையான பாட்டு....நிறைய கேட்டிருக்கேன் ஸ்ரீராம்...பிடித்த பாடலும் கூட...சென்ற வாரம் எஸ் பி பிக்கு ஏற்ற பாடல்...அந்த வலஜி பேஸ்.....இது தாஸேட்டனுக்கு ஏற்ற பாடல் இவர் ஸ்டைல் வலஜி
கீதா
காலையில் இம்மாதிரி துரோகம் செய்தவங்களைப் பத்திப் படிக்க மனசு இன்னும் தயாராகவில்லை. நேற்றைய பதிவின் தாக்கம்! :))))) இருந்தாலும் பதிவுனு மனசைத் தேத்திக்க வேண்டியது தான்! :))))
பதிலளிநீக்கு@ஸ்ரீராம், ஆண்டாள் பார்க்க வந்தீங்களோ? தெரியலை, போய்ப் பார்க்கிறேன்.
வாங்க கீதாக்கா.. என் கமெண்ட் வெளியிட்டிருக்கீங்களே...
நீக்குகீசா மேடம்... ஏன் "துரோகம்" என்ற பெரிய வார்த்தைகளை உபயோகப்படுத்தறீங்க? உச்ச நீதி மன்றமே ஆராய்ந்து இதுவரை நடத்ததுதான் தவறு என்று தீர்ப்புச் சொல்லியிருக்காங்க. தீர்ப்புக்கு மாறா கருத்து வச்சிக்காதீங்க. இக்கி இக்கி இக்கி....
நீக்கு:P:P:P:P:P:P:P @ Ne.tha.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குசுட்டிக்குப் போய் அந்தப் பாட்டையும் பார்த்து வைத்துக் கொண்டேன் பதிவு நினைவு இருக்குது...பாடல்தான்....
பதிலளிநீக்குஅடிக்கடி கேட்க முடியாததால் இருக்கலாம்...
கீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா. நன்றி.
நீக்குநீங்களே சொல்லி விட்டீர்கள்
பதிலளிநீக்குயரை குற்றம் சொல்வது?
விதிவழி வாழ்க்கைதான்.
பாடலை கேட்டேன்.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்கு79இல் இது போலப் படங்கள் வந்ததா. சம்சாரத்தில் மூழ்கிப் பல படங்கள் பார்க்க விட்டுப்
போச்சு. ரசிக்க முடியவில்லையே ஸ்ரீராம்.
வாங்க வல்லிம்மா... ஏன்மா பாடலை ரசிக்க முடியவில்லையா? காட்சியை மறந்து விடுங்கள். யேசுதாஸ் குரலை, டியூனை ரசியுங்கள்.
நீக்குok ma. will do. yes His voice is very good.
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குஅருமையான பாடல். ரசிக்கும்படியான படம்.
பதிலளிநீக்குபலமுறை ரசித்து கேட்டபாடல்...
பதிலளிநீக்குஇயக்குனர் எம்.ஏ.காஜா நிறைய படங்களை விஜயனை வைத்து இயக்கியவர் இளவயதிலேயே காலமாகி விட்டார் என்று தகவல்... உண்மையா ?
// வீடு தாண்டி அன்னப்பேடு சென்றது..//
பதிலளிநீக்குபறவைகளில்
அன்னம், மயில், கிளி, புறா, சிட்டு - இவை எல்லாம் கற்பு நெறியில் வாழக்கூடியவை என்பார்கள்...
சேவல் - மூன்று, நான்கு என இணை சேர்த்துக் கொள்ளும்.. ஆனால்,
அடுத்த சேவலை தனது வட்டத்துக்குள் விடாது...
சேவல் சீவல் ஆகும் வரை அடுத்த சேவலுக்கு அங்கே வேலையில்லை...
காக்கைகள் பகலில் கூடுவதில்லை...
விலங்குகளில் நெறியுடன் வாழ்வது - நரி..
இணையைப் பிரிந்தால் வேறொன்றைத் தேடுவதில்லை...
ஐந்தறிவு எனப்படும் ஜீவன்களுக்குள்
இன்னும் கூட இருக்கலாம்...
ஆனால்,
ஆறறிவுகள் தான் ஓரறிவுக்கும் கீழாயின..
போதாக்குறைக்கு
வைக்கோல் போரில் தீ வைத்த மாதிரி
கள்ள உறவு தவறில்லை என்று சொல்லியாயிற்று...
வேலி தாண்டும் வெள்ளாடுகளுக்குக் கவலையில்லை -
கழுத்துக்குக் கத்தி வரும் வரை!...
ஜீவ ராசிகளைப் பற்றிய தகவல்கள் சூப்பர் அண்ணா....
நீக்குகீதா
நல்ல பின்னூட்டம் துரை செல்வராஜு சார்... இன்னொன்று சொல்ல விட்டுவிட்டீர்கள்... மனிதர்களைத் தவிர மற்ற பிராணிகளுக்கு கூடுவதற்கென்று சமயம், காலம் உண்டு...
நீக்கு// மனிதர்களைத் தவிர...///
நீக்குஅன்பின் நெ.த..
நல்லதொரு சேதி சொன்னீர்கள்...
காலையில் அந்த குறிப்பு நினைவில் வரவில்லை...
மகிழ்ச்சி.. நன்றி..
மணம் மாறினால் அது சாக்கடை...
பதிலளிநீக்குமனம் மாறினால் அது சாக்கடை...
@ துரை செல்வராஜு: //..பறவைகளில்அன்னம், மயில், கிளி, புறா, சிட்டு - இவை எல்லாம் கற்பு நெறியில் வாழக்கூடியவை என்பார்கள்...//
பதிலளிநீக்குபுறாக்களின் தாம்பத்திய நெறியை/உறவு ஒழுங்கினை பால்கனி/டெர்ரஸ் என்று நான் கவனித்துவருகிறேன். அவைகளில் எளிமையான நேர்மை தெரிகிறது. உறவினில் நிம்மதி இருக்கிறது. கிளி,சிட்டு,காகம், நரி பற்றிய மேலதிகத் தகவல்கள் நன்றாயிருக்கின்றன.
ஐந்தில் அமைதி இருக்கிறது. ஆறு சேறாகிவிட்டது...
பறவைகளைக் கூர்ந்து நோக்குவதும் இனிமை...
நீக்கு// ஆறு சேறாகி..//
நயமாக இருக்கின்றது...
இந்தப் பாடல் நிறைய முறை கேட்டிருக்கிறேன்,ஆனால் பொருள் கவனித்ததில்லை. விடுகதை, தொடர்கதை என்று வந்ததும் ஸ்ரீப்ரியா,நடித்த 'அவள் அப்படித்தான்' படம் என்று நினைத்து விட்டேன்.
பதிலளிநீக்குநல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிரீர்கள் துரை செல்வராஜ் சார். நன்றி!
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி: எம்.ஏ.காஜா ஒரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். உயிரோடுதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
தங்களது கருத்துரைக்கு நன்றி.. மகிழ்ச்சி...
நீக்குஸ்ரீராம் ஜி இப்பாடலை நிறைய கேட்டதுண்டு அப்போது இலங்கை வானிலி உபயத்தினால். படம் எல்லாம் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குநல்ல பாடல்.
என் உடல் நலம் பரவாயில்லை. இருமல் மட்டும் இன்னும் நிற்கவில்லை. வகுப்புகளும் தொடர்ந்து இருக்கின்றன. கல்லூரியில் மொபைல் பயன்படுத்தல் ஆசிரியர்களுக்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.
வீடு வந்தால் வகுப்புகள் ப்ரிப்பரேஷன், வீட்டுப் பணிகள் என்று நேரம் போய்விடுகிறது பதிவுகள் பார்ப்பதற்கும், எழுதுவதற்கும் இப்போது கொஞ்சம் சிரம்மாகத்தான் இருந்து வருகிறது பாலக்காட்டில் இருந்தது போல் இல்லை..
துளசிதரன்
இப்போது எங்கே இருக்கிறீர்கள்
நீக்குஎனக்குப் பாடலும்காட்சியும் பிடிக்க வில்லை
பதிலளிநீக்குஇனிய பாடல் கேட்டு ரசித்தேன்
பதிலளிநீக்குஇனிய பாடல்....
பதிலளிநீக்குகேட்டிருக்கிறேன்....