அன்பின் ஸ்ரீராம்..
நலம் . நலமறிய ஆவல்...
முந்தைய வியாழன் அன்று தளத்தில் வெளியான கதை -
அம்மா காத்திருக்கிறாள்..
அந்தக் கதைக்கு அந்த நிமிடமே மறு கதை எழுதி விட்டேன்.. - மனதிற்குள்..
அடுத்தடுத்து விசேஷங்கள் வந்தபடியால் -
அதனை தட்டச்சு செய்யவில்லை...
இதோ - செய்து விட்டேன்...
இந்தக் கதையின் தலைப்பும்
அம்மா காத்திருக்கிறாள் - 1
அன்புடன்.,
அன்புள்ள துரை ஸார்..
இதே கதையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு எசப்பாட்டாக செம பாட்டு பாடிய இந்தப் பதிவையும் மறந்திருக்க மாட்டீர்கள்...
புதிய கதை பிறந்திருக்கிறது... நன்று.
சரி... இதுவும் ஒரு கோணம்...
நான் நினைத்தேன்........................................................ என்று.
அம்மா காத்திருக்கிறாள் 1...
அப்போ 2.... ? இன்னொன்றும் வருமோ?
அன்பின் ஸ்ரீராம்..
மகிழ்ச்சி.. நன்றி...
அம்மா காத்திருக்கிறாள் - 2
........ கிடைக்கும்..
ஏனெனில்
..................................................................
சரி...
கதையின் போக்கு எப்படி!..
அன்புடன்...
அம்மா காத்திருக்கிறாள் - 1
துரை செல்வராஜூ
------------------------------------
லெச்சுமியக்கா... இந்த வருசந் தீவாளி அவ்வளதானா?...
ரொம்ப வருத்தத்துடன் கேட்டாள் - அவள்...
ஏ.. மருதாணி.. அது பங்காளிங்களுக்குத் தான்..
நமக்கெல்லாம் தீவாளி இருக்கு புள்ளே!..
அப்போ முறுக்குக்கு ஊற வெச்சிடலாமா!..
தாராளமா அதுரசத்துக்கும் சேத்து ஊற வெச்சிடு!...
இந்தா.. பொண்டுகளா... சித்த நேரம் பேசாம இருங்கடி...
ஆத்தா கிடையா கிடக்கிறா... அவளப் பத்தி நாலு வார்த்தை பேசாம!...
என்ன செய்யிறது பெரியம்மா...
இருந்தவரைக்கும் நல்லாத்தான் பார்த்துக்கிட்டேன்...
நேத்து கூட கருவாட்டுக் கொழம்பு வெச்சிக் கொடுத்தேன்...
இன்னைக்கு விடியக் காலைல கஞ்சியும் கருவாடுமா
தின்னுப் புட்டுத்தான் மாடு அவுக்கப் போயிருக்கு!...
அங்கே தடுக்கி விழுந்தது எழுந்திருக்காமப் போயிடுச்சி...
லெச்சிமி சொல்றது சரிதான்.. அவ தான பக்கத்து ஊட்டுக்காரி...
ஆனாலும் இந்தப் பாவிப் பயலுக இன்னும் வந்து சேரலையே!..
சூரியனும் எறங்கப் போவுது!..
அவங்களும் மெட்ராஸ்...ல இருந்து வர வேணாமா?...
ஆமா... இவ எல்லாந் தெரிஞ்ச கணக்கா பேசுவா...
ஒரு ஏரோப்ளேனப் புடிச்சா ஒரு மணி நேரத்தில
திருச்சினாப்பள்ளிக்கு வந்துடலாம்...
அங்கே ஒரு பிளசர்காரப் புடிச்சா ஒரு மணி நேரத்தில கொல்லைக்காடு..
அப்படித்தானே செல்லக்கண்ணு மகன் அரேபியாவுல இருந்து வந்தான்...
உங்க சவுரியத்துக்கு ஏரோப்ளேன் வருமா?...இருந்தாலும் ஏரோப்ளேனுக்கு காசு
சாஸ்தியாமே!..
அவ்வளவு பணத்துக்கு எங்கே போவாங்க?..
புள்ளைகுட்டிய எல்லாம் கூட்டிக்கிட்டு வரணும் இல்லே?...
நீ வேற!... - அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தாள் ஆராயி..
ஆராயியும் - இதோ கிடையாய்க் கிடக்கும்
ஆத்தாவும் ஒரே வயதுடையவர்கள்..
பெரியவன் சம்முவம் என்னமோ கம்பீட்டராமே..
அதைப் படிச்சிப்புட்டு லச்ச ரூவா வாங்கறானாம் சம்பளமா!...
அவஞ்சின்னவன் அறிவு ஏதோ பேங்குல பெரிய ஆபீசராம்...
அவம் பொண்டாட்டியும் காலேஜில வாத்தியாரம்மாவாம்!...
இதெல்லாம் ஆரு போட்ட பிச்சை..ன்னு நெனைக்கிறீங்க?...
சலசலத்துக் கொண்டிருந்த பெண்கள் அடங்கிப் போனார்கள்...
அரட்டையடித்துக் கொண்டிருந்த ஆண்களும் ஆவல் ஆனார்கள்...
அந்தக் கூட்டத்தில் அமர்ந்து கொண்டு
அவ்வப்போது செல்போனில் -
ம்ம்.. வந்துட்டீங்களா?.. வந்துட்டீங்களா?.. - என்று
பீலா விட்டுக் கொண்டிருந்த சம்பந்தி வீட்டார்களும்
ஆத்தாவின் பழைய வாழ்க்கையைக் கேட்க ஆர்வமானார்கள்...
ஆட்டுப் புழுக்கையும் மாட்டுச் சாணியும் அள்ளிப் போட்டு
ஆத்தா வேடு கட்டி வெச்ச காசு... தெரியுமா!..
அவம்புருசன் உட்டுட்டுப் போறப்ப சம்முவத்துக்கு ஆறு வயசு..
அறிவுக்கு நாலு வயசு... அப்பவும் அவன் பால்குடி மறக்கல...
ஊரு சனமே அழுது நின்னுச்சு.. நல்ல மனசுக்காரி பருவதம்..
இவளுக்கா இந்த நெலமை..ன்னு...
இத்தனைக்கும் பெரியப்பன் சித்தப்பன் மாமன் மச்சான்..ன்னு
பதுனாறு குடும்பம்... யாருக்கிட்டயும் கையேந்தி நின்னாளா பருவதம்!..
அவ ரோசக்காரி இல்லையா!... ஒத்தையில நின்னு ஜெயிச்சா!...
பத்து வெள்ளாட்டை வாங்கி வாரத்துக்கு விட்டா...
நாலு பசு மாட்டை வாங்கிக் கட்டுனா...
சொம்பு சொம்பா பாலைக் கறந்தா...
மோரு தயிரு...ன்னு தலை..ல வெச்சிக்கிட்டு
தெருத்தெருவா கூவிக்கிட்டுப் போனா...
டவுன்..ல பத்து இருவது வாடிக்கை ஆச்சு..
நாலு எட்டாச்சு.. எட்டு பத்தாச்சு...
புழுக்கையும் சாணியும் பொன்னாச்சு...
ஆனாலும்
நடந்து நடந்து காலு ரெண்டும்
எலும்பாத் தேஞ்சு போச்சு...
டாக்டருங்க சொன்னதுக்கு அப்புறந்தான்
தலைச் சும்மாட்டை எறக்கி வெச்சா!...
அன்னைக்கு டவுன்..ல இருந்து
எத்தனை பேரு வந்து அழுதாங்க தெரியுமா...
இனிமே எம்புள்ளைக்கு நல்லபால் யாரு கொடுப்பா..ன்னு!..
அப்புறம் ஆளு வெச்சி செஞ்சா.. அது சரியா வரல..
அத்தோட பால் ஏவாரத்தை நிப்பாட்டிக்கிட்டா!..
ரெண்டு வீட்டை வாங்கிப் போட்டா...
அந்த மாங்கொல்லைய வாங்கிப் போட்டா...
இவ்வளவு பால் கறந்து வித்தாளே..
அவ ஒரு வாய் காப்பி குடிச்சி பார்த்துருப்பாளா?..
அந்த காப்பித் தண்ணிக்கான பாலு
எம்புள்ளைங்களுக்கு ஆவட்டும்.. ந்னு சொல்லுவா!..
அதுக்காக அவ கஞ்சப் பிசுநாரி இல்லே...
மாட்டுக் கொட்டாய்...ல சாணி அள்ளுன மருதன் மவளுக்கு
அவ தானே கண்ணாலம் செஞ்சு வெச்சா!..
படிக்கிற பசங்க ஏழபாழை..ன்னா
டவுசர் சட்டை எடுத்துக் கொடுப்பா..
அந்த மாயவரத்தான் மகன
பருவதந்தான் படிக்க வெச்சி வாத்தியாரா ஆக்குனா!...
கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் கண்களில் நீர் பெருகியது...
பெரியவனுக்கு சீயாழியில பொண்ணு பாத்து
பத்து பவுன் எதிர் மாலை போட்டவ பருவதம்!...
சின்னவன் அவனா தேடிக்கிட்டான்..
இருந்தாலும் அவம்பொண்டாட்டிக்கும் அதேமாதிரி தான்!...
இப்படியெல்லாம் வக்கணையா செஞ்ச அப்புறமும்
அந்தப் பயலுங்களுக்கு ஆத்தாளை வெச்சி காப்பாத்த முடியலை...
பெரியவன் பொண்டாட்டி சொன்னாளாம்..
உங்களுக்கெல்லாம் மெட்ராசு ஒத்து வராது...ன்னு....
என்னமோ அவங்கப்பன் கலைக்டர் வேல பாத்த மாதிரி...
அங்க பஜார்..ல கோழி ஏவாரம் செஞ்சவன் தானே...
ஒன்னு தெரியுமா... பருவதம் டவுன்..ல
பால் ஏவாரம் செஞ்சப்ப மாசாந்தரம் பணம் தர்றதுக்கு
யாரும் புள்ளக்குட்டிக்காரங்க த்டுமாறுனாங்க...ன்னா
பொழச்சுப் போவட்டும்....ன்னு கண்டுக்காம உட்டுடுவாளாம்!...
அவளப் பத்தி இந்த ஊரு என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கு?..
காஞ்ச கிழவி... சோத்துக் கையால ஈ வெரட்ட மாட்டா!... அப்பிடி..ன்னு...
செஞ்ச தருமத்தை
வெளிய சொல்லப்படாது.. ந்னு பருவதம் சொல்லுவா..
இப்பேர்ப்பட்டவளப் பெத்தவளா அடையறதுக்கு
அந்தப் பயலுங்க கொடுத்து வெச்சிருக்கணும்....
ஆனா எல்லாங் காலக் கோளாறாப் போயிடிச்சு!..
திடீரென ஆராயி மனம் உடைந்து பெருங்குரலில் அழவும்
கூட இருந்த பெண்களும் சேர்ந்து கொண்டார்கள்...
அந்த வேளையில் -
அருகிருந்த புளிய மரத்தின் அடியில் இருந்தும்
அழுகுரல் ஒன்று எழுந்தது...
அந்த அழுகுரல் -
இனிமேல் யாருடைய கண்களுக்கும்
தெரியவே முடியாத பருவதத்தினுடையது...
ஆம்!..
பர்வதம் ஒளி வடிவாக -
அங்கேயே உட்காந்திருந்தாள்...
நடப்பதைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று...
இனி அழுது என்ன ஆகப் போகிறதென்று
அனைவரும் முகம் துடைத்துக் கொண்ட வேளையில்
அந்தக் கார் வாசலில் வந்து மெல்ல நின்றது...
இதா வந்துட்டாங்களே!...
மறுபடியும் வெடித்துக் கிளம்பியது அழுகை...
அதைக் கேட்டதும் காரிலிருந்து இறங்கியவர்கள் மத்தியில்
வ்வ்வே... ஏஏஏ... ஏ!... - விகாரமான கூக்குரல்கள் எழுந்தன...
சரி.. சரி.. எல்லாரும் வந்துட்டாங்க... ஆக வேண்டியதக் கவனிங்க!...
***
சரி.. நாமும் கிளம்புவோம்!..
பருவதம் அங்கிருந்து புறப்பட்ட வேளையில்
பூத கணத்தார் இருவர் வந்து நின்றனர்...
வா.. போகலாம்..
அம்மா காத்திருக்கின்றாள்!...
என்னது அம்மாவா!.. - பர்வதத்துக்கு ஆச்சர்யம் மேலிட்டது...
ஆம்.. உனக்கும் எனக்கும்
இந்த ஊருக்கும் உலகுக்கும்
ஏன்!.. அண்டப்ரபஞ்சத்துக்கும்
அவள் அம்மா!...
அவள் காத்திருக்கிறாள்..
அம்மா காத்திருக்கிறாள்!...
ஃஃஃஃஃஃஃஃஃ
=========================================================================================================
அதுதான் நான் அதிகம் பேசுவதில்லை!! ஹிஹிஹி...
========================================================================================================
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, எல்லோருக்கும்!
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குவாழ்க நலம்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..
நீக்குஅம்மா காத்திருக்கிறாள் //
பதிலளிநீக்குஸ்ரீராம் அம்மா காத்திருக்கிறாள் 2 ஆஹா என் மனதில் அன்றே தோன்றி இன்னும் எழுத்து வடிவம் கொடுக்கவில்லை வழக்கம் போல....தாமதம்
இருக்கிறது வரும் ஸ்ரீராம்
கீதா
யூ டூ கீதா? காத்திருக்கிறேன்...
நீக்குஹா அஹ "யூ டூ" ரசித்தேன்....ஸ்ரீராம்....!!
நீக்குகீதா
எசப்பாட்டு செமையா எழுதிருந்தாங்க அதிரா....ஹைஃபைவ் சொல்லும்படியாக....
பதிலளிநீக்குகீதா
யாரு அவங்க... ஞானியாச்சே...
நீக்குஅதே அதே சபாபதே!!!!
நீக்குஆகா...
பதிலளிநீக்குஆனந்த அதிர்ச்சி...
இந்தக் கதை வெளியாகும் நாளை தாங்கள் ரகசியமாக வைத்திருந்தது இதற்குத் தானா!...
சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் கதையை இன்றைக்கு வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றி...
தாமதிக்கப்பட்டால் ஆறி, சுவை குன்றிவிடும் துரை ஸார்... ஃபிப்ரவரி வரை இதைத் தள்ளிவைக்க மனம் வரவில்லை!
நீக்குஸ்ரீராம்..
நீக்குதங்களது அன்பினுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்...
நோ ஃபீலிங்ஸ்... நமக்குள் சம்பிரதாயங்கள் எதற்கு?
நீக்குஇன்னும் காப்பி ஆத்தலை...காபி ஆத்திட்டு கொண்டு வரேன்...
பதிலளிநீக்குகீதா
மிக அருமை. முடிவில் பஞ்ச், அதை விட அருமை. அனைவருக்கும் அம்மா காத்திருக்கிறாள் தானே!
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... பார்ட் டூ வேற இருக்கு...
நீக்குஇதோட தொடர்ச்சியா? அல்லது அது வேறேயா எனப் பொறுத்திருந்து பார்க்கணும்! விரைவில் வெளியிடுவீர்கள் தானே?
நீக்கு//விரைவில் வெளியிடுவீர்கள் தானே? //
நீக்கு.. என்று நம்பப்படுகிறது!
@ ஸ்ரீராம், எங்கே உங்களைக் கடந்த இரு பதிவுகளிலும் காணோம்? சோபனம் பதிவாவது தத்துவம். மொக்கைலே கூட ஆளே காணோம்!
நீக்கு//Geetha Sambasivam1 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:22
நீக்கு@ ஸ்ரீராம், எங்கே உங்களைக் கடந்த இரு பதிவுகளிலும் காணோம்? சோபனம் பதிவாவது தத்துவம். மொக்கைலே கூட ஆளே காணோம்!//
ஆஆஆஆஆஆஆஆஆவ்வ் விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. இன்னும் கீசாக்கா பிரச்சனையை ஆரம்பிக்கல்லியே என ஓசிச்சேன்ன்ன் ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டாஆஆஆஆஅ ஹா ஹா ஹா:)..
@ கீதா S....
நீக்கு>>> மிக அருமை. முடிவில் பஞ்ச், அதை விட அருமை. அனைவருக்கும் அம்மா காத்திருக்கிறாள் தானே!..<<<
இதன் தொடர்ச்சி எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை...
இப்போதே களைகட்டி விட்டது..
இருந்தாலும் , இதன் அடுத்த பகுதிக்கும் அவசியம் சீக்கிரமாக வந்து உற்சாகப்படுத்த வேணும்..
மகிழ்ச்சி.. நன்றி...
கீதாக்கா... உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேனே... கொழுக்கட்டை மோதகம் வித்தியாசம் கேட்டிருந்தேனே...
நீக்குஞானாநந்தையின் பதிவு மிக மிகக் கடினமானது...
பதிலளிநீக்குபதிவைப் படித்தபின்
வெகுநேரத்துக்கு மௌனம் கலைய வில்லை என்பதே உண்மை...
ஆம்... ஞானி மிகவும் ஆழமான சிந்தனைகள் உடையவர்.
நீக்குஆமாம் துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம்...
நீக்குநான் வியந்து நின்றது என்னவென்றால் என் மனதிலும் இருக்கும் அதே சிந்தனைகள். நிறைய அனுபவங்கள் என் வட்டத்திற்குள்ளேயே ஆனால் என்னால் அதைத் தொகுத்து எழுத முடியவில்லை. மிக மிக மிக அழகாக எழுதியிருக்கிறார் ஞானி. நான் இன்னும் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றியது....தோன்றுகிறது அவர் பதிவை வாசிக்கும் போதும் சரி...பலரது பதிவுகளை வாசிக்கும் போதும் சரி....
கீதா
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ பெயிண்டாகிறேன்ன் நேக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளிச்சு அஎழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..
நீக்குhttp://www.hilariousgifs.com/gifs/fainting-kittens.gif
@ Thulasidharan V Thillaiakathu1..
நீக்கு>>> நான் வியந்து நின்றது என்னவென்றால் என் மனதிலும் இருக்கும் அதே சிந்தனைகள்... <<<
நல்ல உள்ளங்களில் இப்படியான ஒருமித்த சிந்தனை தோன்றும் என்பார்கள்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபாவம் அம்மா,பிள்ளைகள் வரும் வரை காத்திருந்து பிறகு கிளம்பினாளா.
பருவதம் போல இன்னும் எத்தனை அம்மாக்கள் அன்புக்காகக்
காத்திருக்கிறார்களோ. ஏகக் கனத்தை மனதில் ஏற்றிவிட்டாள் அம்மா.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா... அம்மா என்றாலே அன்புதானே?
நீக்கு@ revathi narasimhan..
நீக்கு>>> பாவம் அம்மா,பிள்ளைகள் வரும் வரை காத்திருந்து பிறகு கிளம்பினாளா.
பருவதம் போல இன்னும் எத்தனை அம்மாக்கள் அன்புக்காகக்
காத்திருக்கிறார்களோ...<<<
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.
அன்பின் ஜி
பதிலளிநீக்குயதார்த்த உரையாடல்கள், இன்றைய தலைமுறையின் முகத்திரையை கிழித்து வீசி விட்டீர்கள் மனம் கனத்து விட்டது.
காத்திருக்கிறேன் நானும்...
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.
அனைவருக்கும் காலை வணக்கம். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா.
நீக்கு@ கோமதி அரசு...
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மனம் கனத்துத்தான் போய்விட்டது
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு@ கரந்தை ஜெயக்குமார்..
நீக்குஅன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.
கதை படித்து மனம் நெகிழ்ந்து போனது என்ன கருத்து சொல்வது.
பதிலளிநீக்குகதையை உடனே வெளியிட்ட ஸ்ரீராமுக்கு நன்றி.
நன்றி.
நீக்குஉங்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம் பொருத்தமாய்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅந்த வேளையில் -
பதிலளிநீக்குஅருகிருந்த புளிய மரத்தின் அடியில் இருந்தும்
அழுகுரல் ஒன்று எழுந்தது...
அந்த அழுகுரல் -
இனிமேல் யாருடைய கண்களுக்கும்
தெரியவே முடியாத பருவதத்தினுடையது...//
என் கண்ணிலும் க்ண்ணீர்
@ கோமதி அரசு..
நீக்கு>>> இறந்தபின் அவர்களின் குண நலன்கள் பேசப்படுவது யதார்த்தம். அதை அழகான நடையில் சொல்லி இருப்பதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்..<<<
தங்களது வாழ்த்துரைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.
ஆராயிமூலம் கதை சொன்ன விதம் அருமை.
பதிலளிநீக்குஇறந்தபின் அவர்களின் குண நலன்கள் பேசபடுவது
யதார்த்தம். அதை அழகான நடையில் சொல்லி இருப்பதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
அதிராவிற்கும் பாராட்டுக்கள். அதிராவால் அருமையான கதை கிடைத்து விட்டது, அடுத்தும் வரப் போகிறது.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா நன்றி.. ஆனா இதில நான் தபால்காரர்தான்.. ஆரம்பிச்சது ஸ்ரீராம் எல்லோ..:))
நீக்குஸ்ரீராம் எழுதிய அம்மா காத்திருக்கிராள்தானே எல்லோரையும் கதை எழுத வைத்து இருக்கிறது அதனால் ஸ்ரீராமுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குநன்றி அக்கா.
நீக்குகோமதிக்கா உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்....எல்லோரும் ஒரு பூங்கொத்து கொடுத்துவிடுவோம்..
நீக்குஅதிரா வந்து பெரிய பரிசாகக் கொடுப்பார்...என்று வைரவரைப் பிரார்த்திக்கிறேன்....இங்கிருந்து காவிக்கொண்டு போனாரல்லோ!!! ஹா ஹா ஹா ஹா
கீதா
கீதா.. அதிரா இதையும் காவிக்கொண்டு போவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?
நீக்குஹா ஹா ஹா ஹா சொல்ல முடியாது ஸ்ரீராம்....அதிரடியாச்சே!!! அப்படினா டபுள் தமாக்கா (அதிரா இது தமனாக்கா இல்லை இங்கு பரிசு எல்லாம் தமாக்கா என்று விளம்பரப்படுத்தப்ப்டும் சொல்லிப்புட்டேன்.)...டிமான்ட் பண்ணிடுவோம்!! என்ன சொல்லுறீங்க?!
நீக்குகீதா
//அதிரா வந்து பெரிய பரிசாகக் கொடுப்பார்...என்று வைரவரைப் பிரார்த்திக்கிறேன்....இங்கிருந்து காவிக்கொண்டு போனாரல்லோ!!! ஹா ஹா ஹா ஹா//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீதா.. கஸ்டப்பட்டுக் காவிப்போனதுக்கு எனக்குத்தான் பரிசு தரோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).
//ஸ்ரீராம்.1 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:48
கீதா.. அதிரா இதையும் காவிக்கொண்டு போவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?//
இல்ல இப்போ மனம் கொஞ்சம் அமைதியாகிட்டுது.. இதை விட ஸ்ரீராமின் கதை உண்மையில் என்னைக் கொந்தளிக்கப் பண்ணிட்டுது.. ஹா ஹா ஹா அதிலும் எழுதியது ஆரெனத் தெரியாமையாலேயே ஓவர் கொந்தளிப்பூ ஹா ஹா ஹா:).
நெகிழ்ச்சியான கதை...
பதிலளிநீக்குதொடரட்டும்...
நன்றி டிடி
நீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.
துரை அண்ணா கதை அட்டகாசம்....செம ட்விஸ்ட் முடிவு இறுதியில்...துரை அண்ணா என்பதால் இந்த அம்மா உலகநாயகியாக இருக்குமோ என்ற ஒரு சின்ன எதிர்பார்த்தல் தோன்றியது...ஆனால் வேறு விதமாக...ஸோ முடிவு டிவிஸ்ட் செம......மிக மிக ரசித்தேன் கதையை ,,..துரை அண்ணா...செம கதை....உடனேயே எழுதியும் வீட்டீர்களே அதை...அதற்கு வாழ்த்துகள் அண்ணா...பாராட்டுகளும். ஸ்ரீராமும் உடனே வெளியிட்டுவிட்டார் அவர் சொல்லியிருப்பது போல் இல்லைனா ஆறிப் போயிருக்கும்...எனக்கெல்லாம் கரு தோன்றினாலும் உடனே எழுத வருவதில்லை....அதில் இங்கு பலரையும் கண்டு வியக்கின்றேன்....
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம்....
கீதா
நன்றி கீதா. கீழே நெல்லையின் கமெண்ட் பார்க்கவும்.
நீக்கு@கீதா ரங்கன் - //இல்லைனா ஆறிப் போயிருக்கும்...// - எனக்கு ஸ்ரீராம் எழுதின கதை, அதிரா இடுகை மறந்துவிட்டது. அந்த நினைவுகள் இல்லாமலேயே இந்தக் கதையை வாசித்தேன். அருமையாக இருந்தது. தொடர்ந்து இதே மாதிரி (பெற்றோரை கவனிக்காமல் இறந்த உடனே ஒப்பாரி கதை) கரு கொண்டு கதைகள் வந்துகொண்டிருந்தால் அதன் தாக்கம் குறைந்துவிடும்.
நீக்குமனதில் கரு தோன்றி, உடனே அதனை எழுத்தில் வடித்து, அதற்காக குறைப் பிரசவம் ஆன குழந்தையைப் போல் இல்லாமல் மிக நேர்த்தியாக வந்திருக்கும் இந்தக் கதை என்னைப் பொருத்தவரையில் 'செவ்வாய்' கிழமைக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும்.
நெல்லை.. உங்கள் யோசனையை நான் ஏற்கிறேன். மற்ற நண்பர்களும் சொல்லப்போகும் கருத்துக்காகக் காத்திருக்கிறேன்.
நீக்குநெல்லை நீங்கள் சொல்லியது சரிதான்...ஆனால் இப்போ கே வா போ ஸ்லாட் ஃபெப்ருவரியில்தான்....ஸோ இப்ப சூட்டோட சூடா வந்துருச்சு..ஒன்று...
நீக்குரெண்டாவது ஸ்ரீராமின் கதம்பம் தொடரும்..தொடரனும்...ஸ்லாட் மாற வேண்டாம்தான்.. ....ஆனால் இடையிடையே இப்படி ஏதேனும் வந்தால் போடுவதில் குறையில்லையே நெல்லை. நான் அப்படித்தான் நினைக்கிறேன்...
மூன்றாவது.... என் மனதில் தோன்றிய கருவில், கதையில் ஒப்பாரி கிடையாது...ஹா ஹா ஹா ஹா அது வேறு விதம்..
கீதா
இப்போ நெல்லைத்தமிழனுக்கு என்னதான் பிரச்சனையாம் கர்ர்ர்:)) வல்லாரை ஊஸ் குடிக்கச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா.. அவருக்கு நான் கஸ்டப்பட்டுச் செய்த குழைசாதமே நினைவிலில்லை:) கதையா நினைவில நிற்கும் கர்ர்ர்ர்ர்ர்:))..
நீக்குஎப்போ வெளி வந்தாலும் கதை நன்றாக இருந்தால் மனதைப் பாதிக்கும் இல்லை எனில் அப்படியே வாசித்தவுடன் மறந்திடுவோம், ஆனா அதுபோல இன்னொன்று படிக்கும்போது நினைவு வரும் ஆஆஆ அந்தக் கதைபோல இருக்கே என:)..
இதில படிக்கும் நமக்கு எப்பவும் ஆர்வமாக இருக்கும், ஆனா ஒரு சம்பவம் பற்றி தொடர்போல எழுதியவருக்கு, நீஈஈஈஈஈண்ட நாள் காத்திருக்கும்போது, இன்னொரு தடவை அப்படி தொடர்போல எழுத ஆசை வராது, இப்போ எழுதி என்ன இப்பவே வெளிவராதே.. அதனால பின்பு பார்க்கலாம் என ஆறப்போட்டு விடக்கூடும்.. எனவே இப்படி சுடச் சுட சில தொடர்போன்ற சம்பவங்களைப் போடுவதால்.. கதாசிரியரை உற்சாகப் படுத்துவது போலாகும் என்பதே என் கருத்து.
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ..
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ...
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ:)..
//தொடர்ந்து இதே மாதிரி (பெற்றோரை கவனிக்காமல் இறந்த உடனே ஒப்பாரி கதை) கரு கொண்டு கதைகள் வந்துகொண்டிருந்தால் அதன் தாக்கம் குறைந்துவிடும். //
நீக்குஇதை படு பயங்கரமாக ஆமோதிக்கிறேன்ன்.. ஹா ஹா ஹா..
சரி... நீங்க சொல்லிட்டீங்க க்கா.... எ.பி. எல்லாம் நல்லா இருக்கு என்றாலும், (என் பெர்சனல் ஒபினியன்... ஏன்னா அது என் ரசனையைப் பிரதிபலிக்கும், பொது ரசனையா இருக்க முடியாது), வெ, ச, ஞா தொடர்ந்து மூன்று நாட்கள் தொய்வு ஏற்படுகிறது என்று தோன்றுகிறது. ஒரு வேளை, ஞாயிறில், படங்களுடன், இன்றைய ஸ்பெஷல் என்று கவிதையோ, கதையோ-ஓரளவு சிறியதாக இருக்கணும்-இன்றைய கதை போல சேர்க்கலாம்னு தோணுது. வியாழன் ஸ்ரீராமின் எழுத்து மட்டும்தான் இருப்பது சிறப்பா இருக்கும் என்பது என் அபிப்ராயம்.
நீக்குஅதேபோல, மற்றவர்களது எழுத்துக்களை வெளியிட்டால் (அது தி பதிவோ இல்லை ஞாயிறு படமோ இல்லை செவ்வாய் கதையோ) அதில் எ.பி. ஆசிரியரது பின்னூட்டம் (முதலாக) இருக்கணும்னு நினைக்கறேன்.
//நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ..
நீக்குநெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ...// - அதிரா... இந்த மாதிரி நீங்க எழுதறதுதான் உங்க சொந்தத் திறமையை (படித்ததை/கேட்டதை பொருத்தமான இடத்தில் போடுவது) காண்பிக்கிறது. பாராட்டுகள்.
@நெ.தமிழன்
நீக்கு// வெ, ச, ஞா தொடர்ந்து மூன்று நாட்கள் தொய்வு ஏற்படுகிறது என்று தோன்றுகிறது//
இது 100 வீதம் உண்மை, இதிலும் ஞாயிறு பல நாட்கள் ஓகேயாக இருக்கும்.. வெ, சனிதான் பல சமயம் ரசனை குறைந்ததாகி விடுகிறது...
நீங்க சொன்னதைப்போல இப்படிக் கதையை இடைக்கிடை ஞாயிறில் வெளியிடலாம் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்...
இன்னுமொன்று அடிக்கடி இப்படி மாறிக் கொண்டிருந்தால் நமக்குப் பழகிடும்.. இது நீண்ட நாட்கள் ஒரு பற்றனில் வாழ்ந்திட்டோம்ம் அதனாலதான் நெல்லைத்தமிழனால இன்று கதை வெளிவந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லைப்போலும் ஹா ஹா ஹா..
இதுக்குத்தான் எனக்கு நினைவு வந்துது.. கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ என்பது.. அதாவது ஒரு சிஸ்டமெட்டிக்காகவே போய்க் கொண்டு இருப்பார்கள்.. அதில் மாற்றம் வருவதை அவர்களால ஏற்க கொஞ்சம் கஸ்டமாக இருக்கும் ஹா ஹா ஹா
//அதிரா... இந்த மாதிரி நீங்க எழுதறதுதான் உங்க சொந்தத் திறமையை (படித்ததை/கேட்டதை பொருத்தமான இடத்தில் போடுவது) காண்பிக்கிறது. பாராட்டுகள்.//
மியாவும் மியாவும் நன்றி.. ஹையோ தேம்ஸ் கரையெல்லாம் புகைப்போகுதேஎ:))
//நெல்லைத் தமிழன்
நீக்குசரி... நீங்க சொல்லிட்டீங்க க்கா...///
http://cdn2.sortra.com/wp-content/uploads/2016/02/grumpy-cat49.jpg
//அதில் மாற்றம் வருவதை அவர்களால ஏற்க கொஞ்சம் கஸ்டமாக இருக்கும் // - எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம் உண்டு. இரவு இந்த உணவு, அல்லது நாளை காலை இந்த உணவு என்று சொல்லிவிட்டால், அதில் மாற்றம் இருப்பது எனக்குப் பிடிக்காது. மனைவியும் நான் ஆபீசில் இருக்கும்போது இன்று இரவு இந்த உணவு என்று சொல்லியாச்சுன்னா (or conclude பண்ணியாச்சுன்னா) மாற்றத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். உணவுப் பழக்கத்திலும் எனக்கு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் கிடையாது. பேல்பூரி நான் சாப்பிட்டுப் பார்க்க, மனது ஏற்றுக்கொள்ள 15-20 வருடங்களானது. என் மனைவி பசங்களுக்காக பாவ் பாஜி செய்தபோதும் நான் சாப்பிடாமல் எனக்குப் பிடித்ததை மட்டும் சாப்பிடுவேன் (அப்புறம், ஐயோ...இப்படி இருந்துட்டோமே... இவ்வளவு ருசியா பாவ் பாஜி இருக்கே என்று பின்னால் நினைத்திருக்கிறேன். ஹாஹா).
நீக்குஅதுமாதிரி, பொருளை ஒரே இடத்தில்தான் நான் வைப்பேன். இது இந்த இடத்தில்தான் இருக்கும் என்று சொல்வேன். அதை மாற்றினால் ரொம்ப டென்ஷன் ஆகிவிடுவேன்.
குணம்லாம் பிறக்கும்போதே வருகின்றது என்று நினைக்கிறேன்.
அதிரா - அந்த 'க்கா' எங்கள் கீதா ரங்கனுக்கு....
நீக்கு//நெல்லைத் தமிழன்1 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:18
நீக்குஅதிரா - அந்த 'க்கா' எங்கள் கீதா ரங்கனுக்கு...///
ஹா ஹா ஹா ஓ அப்பூடியா அப்போ கீப் இட் மேலே:) இதைக் கீதா....க்கா:) கவனிகல்லபோல இன்னும்:))
http://cutecatkitten.com/wp-content/uploads/2013/06/Kitten-wants-to-give-you-a-rose-resizecrop--.jpg
>>> துரை அண்ணா கதை அட்டகாசம்....செம ட்விஸ்ட் முடிவு இறுதியில்.. <<<
நீக்குஅன்பின் கீதா..
தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி...
என் மனதில் தோன்றிய அம்மா காத்திருக்கிறாள் கருவும் கிட்டத்தட்ட இது போல என்றாலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு என்று நினைக்கிறேன்..என் க்தையின் முடிவு..எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பி ஸ்ரீராம் தான் சொல்லனும்...ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
வரட்டும் பார்க்கலாம்.
நீக்குஸ்ரீராம் கவிதை செம...ரொம்பவே யதார்த்தம்...உண்மை....ரசித்தேன்...மிகவும். ஏனென்றால் எனக்கும் கதை யோசிக்கும் போது அல்லது பதிவு யோசிக்கும் போது இப்படியான கட் வரும்...அதனாலேயே ரொம்பவே தாமதம் ஏற்படும்...ஏற்படுகிறது....அந்தப் பேச்சு பல சமயங்களில் வேண்டாத பேச்சாக இருந்துவிட்டால்...
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குமரத்தினடியிலிருந்தும் அழு குரல்// அந்த வரிகள் மனதை என்னவோ செய்தது....
பதிலளிநீக்குகீதா
இன்னும் கதையை படிக்க ஆரம்பிக்கலை. தளத்தின் ஃபார்மட்டை மாற்றாதீர்கள். வியாழன் அன்று, அனுபவம், படித்ததில் பிடித்தது, கதம்பம் வந்தால்தான் நல்லா இருக்கும். செவ்வாய் கதைக்கான நாள், புதன் கேஜிஜி பகிர்வு...
பதிலளிநீக்கு//தளத்தின் ஃபார்மட்டை மாற்றாதீர்கள். //
நீக்குஅப்படியா சொல்றீங்க?
ஆமாம் ஸ்ரீராம். முக்கியக் கதை வரும்போது ஏற்கனவே ஷெட்யூல் செய்ததை மாற்றிவிடுங்கள். தீபாவளி சம்பந்தப் பட்ட கதை இப்போது யாரேனும் அனுப்பினால், அடுத்த வாரமே வெளியிடலாம். கதையோ அல்லது எழுதி அனுப்பினதோ உடனே வெளிவரணும் என்று யாரும் நினைக்கக்கூடாது என்றே நினைக்கிறேன்.
நீக்குநீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.
நீக்குஆனால் முன்னரே கதை அனுப்பி தேதி வாங்கி இருப்பவர்கள் ஏமாறாமல் இருக்கத் தயார் என்றால் நீங்கள் சொல்வதுபோல செய்யலாம்.
நெல்லை நீங்கள் சொல்லியிருக்கும் இந்தக்கருத்தையும் சொல்ல வந்தேன் ...அதற்குள் வேறு வேலை வந்தது போய்ட்டேன்...இந்தக் கருத்தை அப்போது நான் பார்க்கலைனு நினைக்கிறேன்...
நீக்குஸ்ரீராம் சொல்லுவது போல் அனுப்புபவர்கள் ஓகே என்று சொல்லிவிட்டால் ஸ்ரீராமுக்கும் ஓகேதான் என்று நினைக்கிறேன்...
கீதா
நெல்லை அண்ட் ஸ்ரீராம் அப்படினா.... திங்க வுக்கு தீபாவளி அல்லது எந்தப் பண்டிகையானாலும் அப்பண்டிகை ஒட்டிய திங்க ரெசிப்பி வந்தா அதையும் அந்தப் பண்டிகை ஒட்டி வரும் திங்களில் போடணும்...ஆமாம்....அப்பவும் ஒரு வேளை ஸ்லாட் மாற்ற வேண்டி வந்தால் நம் மக்கள் ஓகே சொல்லிட்டா அதுவும் நன்றாக இருக்குமல்லோ...(அப்படி எல்லாம் யாரும் அனுப்பலையோ?!!!!)
நீக்குகீதா
கீதா ரங்கன் - அப்படி இல்லை. தீபாவளி அன்று தி. பதிவு வருகிறது என்றால், அன்று இனிப்பு அல்லது அது இல்லாவிட்டால் கார (மிக்சர் போன்று) ரெசிப்பி இருந்தால் வெளியிடலாம்.
நீக்குயோசித்துப்பாருங்கள், அட்டஹாசமான நகைச்சுவைக் கதை நாளை ஷெடியூல் செய்யப்பட்டிருக்கிறது, இன்று நாட்டு மக்கள் வருத்தப்படும்படியான நிகழ்வு நடந்திருந்தால், சிறுகதை நல்லா இருந்தாலும் பொருத்தமா இருக்காதுதானே...
நோஓஓஓஓஒ ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்.. இதில கொஞ்சம் மாத்தியும் ஓசிக்கோணும்:)).. தீபாவளியை நினைச்சு மூவர் பலகாரம் செய்து ரெசிப்பி அனுப்பினால்.. ஸ்ரீராமின் நிலைமை:)).. பிறகு நாட்டுக் கலவரம் ஆகிடுமெல்லோ ஹா ஹா ஹா:))..
நீக்கு//
நெல்லைத் தமிழன்1 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:47
ஆமாம் ஸ்ரீராம். முக்கியக் கதை வரும்போது ஏற்கனவே ஷெட்யூல் செய்ததை மாற்றிவிடுங்கள்//
அப்போ நான் எழுதி அனுப்பும் கதையை முக்கிய கதை இல்லை என பின்னே தள்ளி விடுவாரோ ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு நீடி வேணும்ம்ம்ம்.. முக்கிய கதை எனில் அது என்ன?:)). செவ்வாய்க்கிழமையை நினைச்சு கதை எழுதி அனுப்பினால் அவை அனைத்தும் அப்படியேதான் வெளியிடப்படோணும்.. ஏனையவற்றை இப்படி இடையே எங்காவது.. ஸ்ரீராமோ இல்லை கெள அண்ணனோ தம் இடத்தைத்தான் விட்டுக் குடுக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்.. பீஈஈஈஈஇ கெயார்ஃபுல்ல்ல்ல்ல். ஹையோ இது எனக்குச் சொன்னேன்:))
//யோசித்துப்பாருங்கள், அட்டஹாசமான நகைச்சுவைக் கதை நாளை ஷெடியூல் செய்யப்பட்டிருக்கிறது, இன்று நாட்டு மக்கள் வருத்தப்படும்படியான நிகழ்வு நடந்திருந்தால், சிறுகதை நல்லா இருந்தாலும் பொருத்தமா இருக்காதுதானே...///
அல்லோ இது வேற:)) தன் கருத்துக்கு ஞாயம் தேடித்தேடிச் சொல்றாராமாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா விடமாட்டனில்ல:))
ஆனா அடுத்தடுத்து ஒருவருடைய கதையோ சமையல் குறிப்போ இருப்பின், அதை இடைக்கிடை சற்று தள்ளிப்போட்டு விடலாம்ம்.. அதை மீ ஏற்றுக் கொள்வேன்ன்:)) ஜண்டைக்கு வர மாட்டேன்:)..
நீக்குதுரை செல்வராஜு சார்... கதை ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. உரையாடல்கள் மிக யதார்த்தம். அதுதான் கதையை வலுப்படுத்துது.
பதிலளிநீக்குஇருந்தாலும், சோகக் கதைகள் தருவதில் என்ன ஆனந்தமோ.......
//இருந்தாலும், சோகக் கதைகள் தருவதில் என்ன ஆனந்தமோ.......//
நீக்குஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ......
ஹா ஹா ஹா இன்று கதையில் பெரிய சோகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.. வயசான ஒருவரின் இழப்பில் நடக்கும் சம்பாசனைகளாகவே தோணுது எனக்கு... அவரை மரியாதையாக வழி அனுப்பி வைக்கின்றனர்..
அதேநேரம் எங்கும் யாரும் பொயிங்கவும் முடியாமல், வலு கவனமாக கதையை நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர் ஹா ஹா ஹா.
அன்பின் நெ.த.,
நீக்குஇது ஸ்ரீராம் அவர்கள் எழுதிய கதையின் தொடர்ச்சி தானே..
இப்படித்தான் நடத்த முடியும்... இதில் சோகம் ஏதுமில்லை..
தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..
கதைகொண்டு சென்ற விதம் நன்றாக உள்ளது. my tamil font not working . Somehow in online font I typed
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஆஆஆஆஆஆஆ இன்று அம்மா காத்திருக்கிறா பகுதி 1 வெளிவந்து விட்டதோ.. துரை அண்ணனின் கதை... ஆஆவ்வ்வ் இன்றுவரும் என மீ எதிர்பார்க்கவே இல்லை.. ஜாமத்தில ஜம்ப் பண்ணலாமோ என ஓசிச்சேன்ன் முடியாமல் போச்சு..
பதிலளிநீக்குஎங்களுக்கு நேரம் மாத்திட்டினம் தெரியுமோ?:) இனி எப்ப வேணுமெண்டாலும் நாங்க ஜம்ப்பு ஆகலாம்:)) மீ ட 1ஸ்ட்டாக:)) ச்ச்ச்ச்ச்சோஓ பீ கெர்ர்ர்ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் கீதாவுக்குச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா.
துரை அண்ணனின் பகுதி ரெண்டை வரும் புதன் கிழமைக்கு வெளியிடலாமே ஸ்ரீராம்:) கெள அண்ணன் ஒண்ணும் ஜொள்ள மாட்டார்ர்:)).. அப்பாடா ஐடியாக் குடுத்தாச்சு:))..
[[[ஆஆஆஆஆவ்வ் வரும் புதன் கிழமைப் பரிசு எனக்கில்லை என்பது நேற்றே முடிவாச்சு:)) நாமதான் பதிலே சொல்லல்லியே:)), அதனால இப்பூடிப் பண்ணி, ஆருக்கும் பரிசு குடுக்காமல் பண்ணிட வேண்டியதுதேன்ன்.. அஞ்சு நெல்லைத்தமிழன் எல்லாம் ஏதோ பிளஸ் 2 எக்ஸ்சாமுக்கு எழுதுவதைப்போல பதில் போட்டாங்க மீ பயந்துட்டேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)) நாம ஆரு போன ஜென்மத்தில ரஷ்யா அஞ்ஞானி சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே விஞ்ஞானி அதிராவ்ஸ்மியாவ்ச்சக்கா ஆச்சே:))]]
ஞானி பதில் சொல்ல பயப்படலாமோ?!!! ஹா ஹா ஹா ஹா அதுவும் விஞ்'ஞானி' ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஹா என் தலைல கை வெக்கறது ஆரூ? நான் ரொம்பப் பொல்லாதவன் ஆயிடுவேன்! ஜாஆஆ..... ககிரதை!
நீக்கு//kg gouthaman1 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:29
நீக்குஹா என் தலைல கை வெக்கறது ஆரூ? நான் ரொம்பப் பொல்லாதவன் ஆயிடுவேன்! ஜாஆஆ..... ககிரதை!///
ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈ ஆழம் அறியாமல் காலை விட்டிட்டமோ:))
https://media.giphy.com/media/xFOc3rYIGE3aE/200w_s.gif
நான் ப்ளான் பண்ணியாச்சு! உங்க டைம் மாறிவிட்டதுனு தெரியுமே!! ஸோ காலைல உங்க ஊர் இணையத்தோடு எங்க ஊர் இணையம் போட்டி போட வைக்க நானும் களத்தில் குதிக்க ப்ளான் பண்ணியாச்சூஊஊஊஊஊஊஊஊஊ....
பதிலளிநீக்குகீதா
ரெடி.. ஜூட்...
நீக்குஹா ஹா ஹா நான் ஜம்ப் பண்ணுறேனோ இல்லையோ எல்லோரையும் அலேர்ட் ஆக்கிடுவேன்ன்ன்:))
நீக்குவியாழன் என்பது ஸ்ரீராமின் ஆக்கங்களுக்கான நாள் என்றல்லவா நினைத்திருந்தேன்..
பதிலளிநீக்குஇதுக்கும் அதுக்கும் ஜம்பந்தம் இருக்கு ஏ அண்ணன்:) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராமால ஏற்பட்ட தாக்கத்தின் வெளிப்பாடே இக்கதை:).. அப்போ அவர் அதுக்கு தன் இடத்தைக் கொடுப்பதில் தப்பே இல்லை:)).. சே சே இன்னும் கதைக்கான கொமெண்ட் மீ போடத் தொடங்கவில்லை:))
நீக்குஹைஃபைவ் அதிரா! ஹலோ இதெல்லாம் சரிதான்...கொஞ்சம் மேலே போய் பாருங்கோ!! பெரிய பரிசு என்றதும் கண்ணில் படலையோ!ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
என்னாதூஊஊஊ பரிசா.. அதிராவுக்குத் தெரியாமல் ஆருக்காவது ஒளிச்சுக் குடுக்கிறாரோ ஸ்ரீராம்ம் கர்ர்ர் நில்லுங்கோ ...தோஓஓஓ போகிறேன்ன்:))
நீக்கு//இதே கதையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு எசப்பாட்டாக செம பாட்டு பாடிய இந்தப் பதிவையும் மறந்திருக்க மாட்டீர்கள்...///
பதிலளிநீக்குஹா ஹா ஹா இப்போவெல்லாம், கதையை எழுதியது ஆர் என, வடிவா செக் பண்ணிய பின்பே கதையைப் படிக்கச்சொல்லி மனம் ஆணை இடுது ஹா ஹா ஹா:))
@ ஏகாந்தன் Aekaanthan!..
நீக்கு>>> வியாழன் என்பது ஸ்ரீராமின் ஆக்கங்களுக்கான நாள் என்றல்லவா நினைத்திருந்தேன்..<<<
@ ஞானி:) அதிரா
>>> ஸ்ரீராமால ஏற்பட்ட தாக்கத்தின் வெளிப்பாடே இக்கதை:).. அப்போ அவர் அதுக்கு தன் இடத்தைக் கொடுப்பதில் தப்பே இல்லை..<<<
அன்பின் ஏகாந்தன்..
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
//நான் நினைத்தேன்........................................................ என்று.
பதிலளிநீக்குஅம்மா காத்திருக்கிறாள் 1...
அப்போ 2.... ? இன்னொன்றும் வருமோ?
அன்பின் ஸ்ரீராம்..
மகிழ்ச்சி.. நன்றி...
அம்மா காத்திருக்கிறாள் - 2
........ கிடைக்கும்..
ஏனெனில்
..................................................................///
கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எல்லோரும் பாதி பாதியாக் கதைக்கப் பழகியிருக்கினம்.. மீயும் எனி வசனங்களைப் பாதியில நிறுத்துவேன் கண்டு பிடிச்சு சொல்லோணும் நீங்கள்.. பூஸோ கொக்கோ:).
ஹலோ அதெல்லாம் ஃபில் அப்ஸ் புதிர்!!! இன்று புதன் செவ்வாய் வியாழன் (ஸ்ரீராம் கவிதை இருக்கல்லோ) எல்லாம் மிக்ஸ் ஆகி கதம்பம் வந்துருக்காக்கும்...(ஸ்ரீராம் நெல்லைக்கு இதையும் சொல்ல நினைச்சு இப்ப அதிரா நீங்க சொன்னதும்...ஆஹா விட்டுப்புட்டமே என்று நினைத்து சொல்லியாச்சு...ஸ்ரீராம் பாருங்க கதம்பம்தான் இன்று!!!!)
நீக்குகீதா
கீதா
//ஏ.. மருதாணி.. அது பங்காளிங்களுக்குத் தான்..
பதிலளிநீக்குநமக்கெல்லாம் தீவாளி இருக்கு புள்ளே!..///
இது உண்மையாகவே பல வீடுகளில் நடப்பதுதானே.. இந்த மனநிலையைத்தான் என்னால ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. போனவரைப் பற்றி ஆருமே சிந்திப்பதில்லை.. தமக்கு துடக்கிருக்கோ இல்லையோ என மட்டுமே சிந்திக்கின்றனர்.. அப்போ மனம் என ஒன்று யாருக்குமே இல்லையோ...
//மனம் என ஒன்று யாருக்குமே இல்லையோ...// - நம்மை நேரடியாகப் பாதிக்கும் துன்பத்துக்குத்தான் மனம் வருந்தும். மற்றவற்றைக் கேட்டுவிட்டு 'ச்சோ' என்று கணநேரம் நினைப்பதிலேயே அந்த எண்ணம் முடிவடையும். எப்போவோ படித்த சிறுகதை ஞாபகம் வருது. ஒரு விபத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே வருந்துவாள் தாய் (அந்த விபத்தில் தன் மகன் இறந்துவிட்டானே என்று..ஏனென்றால் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்பதுதான் செய்தி)... விபத்தினால் எல்லோருடைய கஷ்டம் என்றெல்லாம் அவள் சிந்திப்பாள். கடைசியில், தன் மகன் இறக்கவில்லை தப்பித்துவிட்டான் என்பதைப் பார்த்து அவளுக்கு வாய்கொள்ளா மகிழ்ச்சி. விபத்து பற்றிய சோக எண்ணம் அறவே அவளிடம் இருக்காது.
நீக்குஅடுத்த வீடு இடி விழுந்து நொறுங்கினால், 'ஐயோ..இப்படி ஆகிவிட்டதே' என்று மனம் எண்ணும். பிறகு, 'நல்லவேளை நம் பில்டிங்கில் இடி விழலையே' என்று மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்ளும்.
வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொல்வதற்கு நாம் எல்லோரும் வள்ளலார் இல்லையே.....
மிகச் சரியா சொல்றீங்க நெல்லைத்தமிழன்.. ஆனா இக்கதையில் வரும் இவ்வசனம், வீட்டுக்குள் உடம்பை வைத்துக் கொண்டெல்லோ அரிசியை ஊறப்போட நினைக்கினம்.. உடம்பை அடக்கம் செய்து விட்ட பின்னாவது இதுபற்றிப் பேசலாமெல்லோ.. மனிதாபிமானமும் இங்கே செய்த்து விட்டதே....
நீக்குஅல்லது என் புரிதல் தப்போ?..
@ ஞானி:) அதிரா
நீக்கு>>> வீட்டுக்குள் உடம்பை வைத்துக் கொண்டெல்லோ அரிசியை ஊறப்போட நினைக்கினம்...<<<
இது மிகவும் யதார்த்தமானது...
மனிதாபிமானம் எவ்விதத்திலும் சேதமாகவில்லை..
இழப்பு வீட்டில் இழந்தவர்களுக்குப் பாத்தியப் பட்டவர்களே
துக்கம் வீட்டுக்குள் இருக்கும்போது -
மசால் தோசை டிகிரி காஃபி - என, வெளுத்துக் கட்டி விட்டு
ஒப்புக்கு கண்ணைத் துடைத்துக் கொள்கிற காலம்...
அதைத் தான் ஸ்ரீராம் தனது படைப்பில் காட்டினார்...
இங்கே துக்கத்துக்கு வந்திருப்பவர்கள் வெள்ளந்தியான மக்கள்..
சற்று தூரமான சொந்தக்காரர்கள்..
ஆத்தா போய் விட்டாளே... இன்னும் சில நாட்களில் தீபாவளி வருகின்றதே..
பிள்ளைகள் மனதுக்குள் மூட்டை கட்டி வைத்திருக்கும் மகிழ்ச்சி என்னாவது?...
என்று யோசிக்கும் அப்பாவி நெஞ்சங்கள்...
பண்டிகை நேரத்தில் இப்படியான எண்ணங்கள் சகஜம்...
துரை அண்ணன் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் ஒரு இழப்பு நடந்த வீட்டில் நடக்கும் சம்பாசனைகளை.. நிஜமான உரையாடல்கள்.. ஆரம்ப வரிகளைத் தவிர்த்து:).
பதிலளிநீக்குஸ்ரீராமின் கதை ஒரு இழப்புக்கு மகன் போகும்போது நடக்கும் விசயங்கள்.. இது இழப்பு நடந்த வீட்டில் நடக்கும் விசயங்களை துரை அண்ணன் சொல்லிட்டார்ர்..
ஒருவர் நல்லவராக வாழ்ந்து கண்ணை மூடினாலோ இல்லை, மிக கெட்டவராக வாழ்ந்து கண்ணை மூடி விட்டாலோ.. கண்ணை மூடிட்டால் எல்லாம் ஒன்றுதான்.. உடம்புக்கு என்ன மரியாதை.. உடலை எரிக்கும்வரை கொஞ்சம் அவர்களைப்பற்றிப் பேசுவார்கள் அத்தோடு அது முடிஞ்சு போயிடும்.
பதிலளிநீக்குநாம் நல்லவராக வாழ்ந்தா மட்டும் சிலை வச்சு., டெய்லி நம்மை நினைப்பினம் என்றும் இல்லை... அதேபோல கெட்டவராக வாழ்ந்தாலும் சிலை வைப்பினம் என்றில்லை.. போயிட்டால் போயிட்டதுதான்..
அதனால.. நீ பொய் சொன்னால், களவெடுத்தால், அடுத்தவருக்கு துரோகம் செய்தால்.. உனக்கு அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்பாய்.. துன்பப்படுவாய்.. கூடாத ஜென்மமாகப் பிறப்பாய் என்பதுக்கெல்லாம் நான் பயப்பிடுவதுமில்லை.. அதை நம்புவதுமில்லை.. உயிர் நம்மை விட்டுப் பிரிந்தபின் எல்லா உடலும் ஒன்றுதான்... ஜாதி மத பேதமெல்லாம் அங்கேது.. சுனாமியில் ஒன்றாக கலந்த உடல்கள் எத்தனை.. அப்போ நல்லவர் கெட்டவர் என பேதம் எல்லாம் இருந்துதோ..
ஆனா இப்போ நாம் உயிரோடிருக்கும் போது, நம் காதுக்கு. நம்மை ஆரும் திட்டிடகூடாது.. திட்டும்படி நடக்கக்கூடாது, ஆர் மனதையும் நாம் துன்புறுத்திட்டோமே என வருந்துமளாவுக்கு நடக்கக்கூடாது, மற்றவர் நம்மைப் புகழும்படி வாழோணும்... இப்படி நினைத்தே நாம் நல்லவர்களாக இருக்கோணும் எனத்தான் நினைப்பேன்.. ஏனெனில் வாழும்போதே இவை நமக்கு தெரியும், அதன் பலனையும் அனுபவிக்க முடியும்...
மற்றும்படி இறந்தபின் மரியாதை கிடைக்கும்.. சிலை வைப்பார்கள் என்பதற்காக எல்லாம் பயந்து வாழ்வதில் என்ன பயன்...
சிந்திக்க வைக்கும் வரிகள்.
நீக்கு//மற்றவர் நம்மைப் புகழும்படி வாழோணும்... இப்படி நினைத்தே நாம் நல்லவர்களாக இருக்கோணும் எனத்தான் நினைப்பேன்..//
நீக்குஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...
அதனால.. நீ பொய் சொன்னால், களவெடுத்தால், அடுத்தவருக்கு துரோகம் செய்தால்.. உனக்கு அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்பாய்.. துன்பப்படுவாய்.. கூடாத ஜென்மமாகப் பிறப்பாய் என்பதுக்கெல்லாம் நான் பயப்பிடுவதுமில்லை.. அதை நம்புவதுமில்லை.. //
பதிலளிநீக்குஹைஃபைவ் ஆதிரா...எனக்கும் இதே தான்....இதுக்கு இன்னும் கருத்து சொல்ல நினைத்தேன் ஆனால் இப்ப நேரம் இல்லை. கொஞ்சம் வெளியில் செல்லனும்...ஸோ மாலை வந்துதான்...
கீதா
கீதா...எங்கள் புளொக்கில மாலை ஆனாலே எல்லோரும் குல்ட்டுக்குள்ள போயிடுவார்கள்.. பின்பு பேச முடிவதில்லை கர்ர்ர்ர்:) அதனாலேயே என் வேலைகளைக்கூட விட்டு விட்டு பலசமயம் காலையிலேயே இங்கிருந்து கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சுப் போட்டு, பின்பு ஹையோ நேரம் போயிட்டுதே எனப் பதறுவேன்ன்..
நீக்குஇப்போ புரியுதோ அதிரா இஸ் எ குட் கேள்:)) ஹா ஹா ஹா..
நீக்கு@ ஞானி:) அதிரா..
>>> இப்போ நாம் உயிரோடிருக்கும் போது, நம் காதுக்கு. நம்மை ஆரும் திட்டிடகூடாது.. திட்டும்படி நடக்கக்கூடாது, ஆர் மனதையும் நாம் துன்புறுத்திட்டோமே என வருந்துமளாவுக்கு நடக்கக்கூடாது, மற்றவர் நம்மைப் புகழும்படி வாழோணும்..<<<
நம்பினாலும் நம்பாவிட்டாலும் - இதுதான் ஆன்மீகம்..
மகத்தான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
துரை செல்வராஜு சார், இதுதான் ஆன்மீகம்னு சொன்னது எல்லோருக்கும் புரிந்திருக்குமான்னு தெரியலை.
நீக்குநாம ஒவ்வொரு பிறப்பிலும் முந்தைய பிறப்பைவிட பெட்டர் ஆன்மாவாகிக் கொண்டே சென்றுதான் நம் டெஸ்டினியை அடைய முடியும் (ஆன்ம விடுதலை அல்லது பிறப்பறுக்கும் தன்மை). நாம என்னவா இருந்தோம்னு தெரியாது. என்னவா இருப்போம்னு தெரியாது. இந்தப் பிறப்பில் தவறுகளைக் குறைத்துக்கொண்டே வருஙதுதான் நாம் செய்யக்கூடியது.
அதிரா- நீங்கள் இப்போ நல்லவங்களா இருக்கணும்னு நினைக்கறீங்களே... அதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.
எவரெஸ்ட் சிகரத்துல ஏறணும்னாலும், இப்போ எடுத்து வைக்கிற அடிதானே முக்கியம்.
அன்பின் நெ.த.,
நீக்குதங்களின் கருத்தினை அப்படியே வழிமொழிகின்றேன்...
மகிழ்ச்சி.. நன்றி...
@ அதிரா: ..மற்றும்படி இறந்தபின் மரியாதை கிடைக்கும்.. சிலை வைப்பார்கள் என்பதற்காக ...//
பதிலளிநீக்கு.. என்பதற்காகத்தான் காக்காயும் காத்துக்கொண்டிருக்கிறது!
ஹா ஹா ஹா:).. இடைவெளியை நிரப்பினேன் ... சிரிச்சேன்ன்ன்:)..
நீக்குபுதிதாக வரும் கதைகளை "நம்ம ஏரியா"வில் போட்டு விட்டு இங்கே அறிவிப்புச் செய்யலாம். கதையும் உடனே வெளியாகும். போணியும் ஆகும். நம்ம ஏரியா இல்லைனா காத்து வாங்கிட்டு இருக்குமே!
பதிலளிநீக்குகதையை எழுதி அனுப்பிய பின் யோசித்தேன்...
நீக்குசுடச்சுட வெளியானால் நன்றாக இருக்கும்..
ஆனால் மிக நீளமான வரிசையாச்சே!.. - என்று..
நம்ம ஏரியாவில் வெளியாகக் கூடுமோ!?..
பதிப்பாசிரியருக்கு ஆலோசனைகள் கூறுவது எங்ஙனம்?..
ஆனாலும் ,
ஸ்ரீராம் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து யூகித்துக் கொண்டேன் -
இந்தக் கதை இந்த வாரமே வெளியாகக் கூடும் என்று!...
அதன்படியே - வியாழன் விருந்து என்றாகி விட்டது...
இதன் தொடர்ச்சி என்றைக்கோ!?..
மகிழ்ச்சி.. நன்றி..
ஆஹா.... என்ன மாதிரி எல்லாம் கற்பனைகள் சுட்டுப்போட்டாலும் நம்மால் ஆகாது பாராட்டுக்சள்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கீதா அக்கா சொல்வது போல இப்படிப்பட்ட சிறப்பு கதைகளை எங்கள் ஏரியாவுக்கு மடை மாற்றி விடலாமே.
பதிலளிநீக்கு@ Bhanumathy Venkateswaran...
நீக்குதங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மற்ற யோசனைகளுக்கான விவாதங்களுக்கு பின்னர் வருகிறேன். துரை இவரின் இரண்டாம் கதையை வெ,ச, ஞா இந்த மூன்று நாட்களில் வழக்கமான பதிவுடன் இணைத்து வெளியிடுவது பற்றி வாசக நண்பர்கள் கருத்தை இரவே சொன்னால் அதற்குத் தகுந்தவாறு ஏற்பாடு செய்து விடுவேன். நான் எங்கள் இல்ல விழாவில் இருக்கிறேன்.
பதிலளிநீக்குஸாரின் என்பது இவரின் என்று வந்துள்ளது. மன்னிக்கவும்.
நீக்குசற்று முன் திரு.நெ.த., அவர்கள் இங்கே இருந்தார்கள்....
நீக்குவெள்ளி பதிவோடு சேர்த்துவிடுங்கள். 'சனி'-நல்லவர்களைப் பற்றியது. அது தனி சப்ஜெக்ட். ஞாயிறு-பெரும்பாலும் வருகை குறைவாக இருக்கும்னு தோணுது. எல்லோரும் வார இறுதி பிஸியில் இருப்பார்கள். திங்கள் கிழமை, சமையல் குறிப்பில் கும்மி அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் மீண்டும் ஞாயிறு பதிவைப் பார்த்து கருத்து எழுதுவது குறைந்துவிடும்.
நீக்குஶ்ரீராம் நெ தமிழன் சொன்னதுபோல வெள்ளி கதையையும் போட்டு ஒரு சோஓஓஓஓகப் பாடலையும் போட்டு விடுங்கோ... பாடையிலே போகையிலும் பாவி உன்னைத் தேடி ... அப்பூடி ஹா ஹா ஹா .. இல்லாட்டில் ஞாயிறு என்பது பெண்ணாக சே சே கதையாகப் போடுங்கோ சனிக்கிழமை விடுமுறை நாள் ஹாஆஆஆஆஆஆஅ:)
நீக்கு////துரை செல்வராஜூ1 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:21
நீக்குசற்று முன் திரு.நெ.த., அவர்கள் இங்கே இருந்தார்கள்....///
கர்ர்ர்ர் அதெப்பூடி எங்களுக்குத் தெரியாமல் அங்கு வந்தார்ர்ர்ர்ர்ர்:)... அல்லது துரை அண்ணன் இப்போ சென்னையிலயாஆஆஆஆஅ ப்ண்ணுமே பிரியல்லே உலகத்திலே....:)..
சரி அதை விடுங்கோ இப்ப முக்கியம் டக்கென செல்பி எடுத்திடுங்கோ நெ தமிழனோடு:)..
சோகப்பாடலா? ஐயோ...
நீக்குதிரு. நெ.த., அவர்கள்
நீக்குஇங்கே தளத்தில் உலவிக் கொண்டிருந்தார் எனச் சொன்னேன்..
கதையை விட பின்னுட்டங்கள் மிக மிக அதிகம் ...
பதிலளிநீக்குநிதர்சன கதை..
பதிலளிநீக்குஇன்று பல பல வீடுகளில் இதான் நிலைமை..
அதுவும் எங்க ஊரில் சிறு வயதினர் அனைவரும் வெளியூர்களில் ...
அங்கு கிராமத்தில் வயதானவர்கள் மட்டுமே அதிகம் அவர்களே விவசாயத்தை பார்த்துக் கொண்டு எங்கள் வரவிற்காக காத்துக் கொண்டிருகின்றனர்..
என்ன செய்வது அவர்கள் அங்கு இருந்தால் மட்டுமே தங்கள் இயல்பில் இருப்பதாக உணர்கிறார்கள் ...
பல சிந்தனைகளை தூண்டுகிறது...
அருமையான கதை ..
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்கு"சிந்திக்க வைக்கும் வரிகள்"
பதிலளிநீக்குஎன்று கே ஜி ஜி பின்னூட்டம் அளித்திருப்பதாக மெயில் பாக்ஸ் சொல்கிறது. இந்தப் பின்னூட்டக் குவியலில் அதை அவர் எதற்குச் சொல்லி இருக்கிறார் என்று தேடிப் பார்க்கிறேன், காணவே காணோம்!
மேலே அதிராவின் ஆன்மீக பந்திக்கு கீழே ஜொள்ளியிருக்கிறார் ஸ்ரீராம்.. விடிய எழும்பியதும் தேடிக் கண்டு பிடியுங்கோ.. மொபைலில் இக்கருத்து பார்த்து, ஸ்ரீராம் என்ன சொல்கிறார் என நினைச்சேன்.. கொம்பியூட்டர் வந்ததும்தான் எல்லாமே பிரிஞ்சு போச்ச்:)) ஹா ஹா ஹா..
நீக்குஅம்மா காத்திருக்கிறாள் 2 நாளை வெள்ளி வீடியோவுடன் வெளியாகிறது.
பதிலளிநீக்குநண்பர்களே ஒரு பத்திரிகையின் இரண்டாம் பக்கம் போல இப்படி வெவ்வேறு விஷயங்களை பதிவாக தினசரி கொடுக்கவேண்டும் என்ற பேச்சு எங்களுக்குள் முன்பு இருந்தது.
வாசகர்களின் பொறுமையை ரொம்ப சோதிக்க வேண்டாம் என்று அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தோம்.
இது ஒரு சுப ஆரம்பமாக இருந்தால் நன்றாயிருக்கும்!!!
ஓஓ இதை இப்போதான் பார்க்கிறேன்ன்ன்ன்.. சுப ஆரம்பமாகட்டும் வாழ்த்துக்கள்.
நீக்குஒன்று தெரியுமோ ஶ்ரீராம்.. எப்பவும் ஒரே மாதிரி இருந்தாலும் போரடிக்கும்.. அடிக்கடி இல்லாவிடினும் இடைக்கிடை மாற்றம் தேவை.
நானும் நினைப்பதுண்டு அதிரா.
நீக்கு/// அம்மா காத்திருக்கிறாள் 2 - நாளை வெள்ளி வீடியோவுடன் வெளியாகிறது ///
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி...
முடிவு அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குநான் தில்லியிலிருந்து,மும்பை வருவதால் கம்யுட்டர் பேக் ஆகிவிட்டது. இப்போதுதான் ஆற அமர பார்க்கிறேன். வயதானவள் இல்லையா கதையின் ஸப்ஜெக்ட் கஷ்டம் எனக்கு.அன்புடன்
பதிலளிநீக்குஅன்பின் அம்மா...
பதிலளிநீக்குதங்களது வருகையே மகிழ்ச்சி... ஆற அமர - கதையை வாசியுங்கள்..
மகிழ்ச்சி.. நன்றி..