வெள்ளி, 14 டிசம்பர், 2018

வெள்ளி வீடியோ : ஏழுகடல் உந்தன் ஆட்சியிலே வரும் ஐயப்பா இந்த ஏழுலகம் உந்தன் காட்சியில் வரும் ஐயப்பா



இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த வேலையைக் கையில் எடுத்தேன்.  ஏதோ காரணங்களினால் தடைப்பட்டுக் கொண்டே வந்தது!


1975 இல் வெளிவந்த இந்தப்படம் மலையாளத்திலும், தமிழிலும் வெளியானது.   அப்போது மிகவும் ரசித்துப் பார்த்த படம்.  இப்போதும் கூட அதே சுவாரஸ்யத்தோடு பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு பாடலாகத் தேடினேன்.  கிடைக்கவில்லை.  அனைத்துப் பாடல்களும் மொத்தமாக கீழுள்ள காணொளியில் கிடைத்தது.  காட்சி இருக்காது.  கானம் மட்டும். 

அனைத்துப் பாடல்களும் என்று பெயரே தவிர "முல்லைக்கொடியினிலே புதிய மொட்டு மலர்ந்ததடி..  பிள்ளைக்கலி தீர..." என்கிற பாடலும், ஹரிவராசனம் பாடலும் கிடைக்கவில்லை.

நம்பி அனைத்துப் பாடல்களையும் கேட்கலாம் எனினும் 27:5ஸ் நிமிடங்களுடன் இந்தப் படத்தின் பாடல்கள் முடிந்து வேறு சில பாடல்கள் இடம்பெறுகின்றன.


(1)

அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே 
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே 
இன்பநிலை கொண்டுவந்தாய் சிவபெருமானே -இன்று 
எங்கள் குலம் வாழவைத்தாய் சிவபெருமானே 

பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே - நீ 
பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே 
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே - நீ 
கைநிறைய அள்ளித்தந்தாய் சிவபெருமானே 

கோகுல பாலகனே கண்ணபெருமானே எங்கள் 
 கோவிந்தநாயகனே கண்ணபெருமானே 
கோபியர் லீலை கொண்டாய் கண்ணபெருமானே -எங்கள் 
குடும்பத்தை வாழவைத்தாய் கண்ணபெருமானே 

ஒன்றுக்கு ரெண்டு தந்தாய் கண்ணபெருமானே - அதில் 
உன்முகம் காணவைத்தாய் கண்ணபெருமானே 
நன்றி இங்கு சொல்லுகிறோம் கண்ணபெருமானே - உன்னை 
நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ணா பெருமானே 

சிவபெருமானே ...   கண்ணபெருமானே ... சிவபெருமானே ...   கண்ணபெருமானே ஹரி ஓம் ஹரி ஓம்  


(2)

ஸ்வாமி சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா  ஹரிஹரசுதனே  அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா 

இருமுடி தாங்கிய தலை ஒருகோடி கோடியுமே உனைத்தேடி 
அருள்பெற திருத்தலம் வந்தோம்  நாடி 
எருமேலி தன்னில் ஒருபேட்டை துள்ளி 
ஒருமக்கள் போல்வந்தோம் ஐயப்பா...
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா... ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா 

அழுதை எனும்நதி தனில்தலை மூழ்கி 
அங்கிருந்திரண்டுகல் எடுத்து அதை 
அந்த கல்லிடும் குன்றினில் விடுத்து 
கரிமலை ஏறி ஹரிஹர பாடி 
வந்தோம் ஆனந்தம் தொடுத்து 
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா 

பம்பையில் குடிலிட்டு பஜனைகள்பாடி 
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு 
பம்பா விளக்கினை நகர்த்தி 
சபரிபீடம் கண்டு சரங்குத்தி ஆடிட 
ஒருதாயின் மைந்தர்கள் வந்தோம் 
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா  

தைமுதல் தேதி திருப்பொங்கல் நாளில் 
ஸ்வாமிநின் வாசலைத்தேடி 
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி 
பதினெட்டு படிகண்டு கோவிலில் சென்று 
பரவசமானவர் கோடி 
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா 


(3)

சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் தர்ம 
சாஸ்தாவின் சன்னதியில் அபிஷேகம் 
கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை நாமும் 
கும்பிட்டுப் பாடுகின்றோம் மெய்யப்பனை 

பாலெனச் சொல்லுவது உடலாகும் அதில் 
தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் 
வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும் இந்த 
நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும் 
ஏழுகடல் உந்தன் ஆட்சியிலே வரும் ஐயப்பா 
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியில் வரும் ஐயப்பா 
அய்யப்பா நீதான் மெய்யப்பா 

வாசமுடைய பன்னீர் அபிஷேகம் எங்கள் 
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் 
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம் அதில் 
இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம் 
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த 
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா 
ஐயப்பா நீதான் மெய்யப்பா  ஐயப்பா நீதான் மெய்யப்பா 


உள்ளத்தில் வெண்மைதன்னை கையில் எடுத்து அதில் 
உன்பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு 
உருகும் விபூதியினால் அபிஷேகம் அதில் ]
ஓம் என்ற சந்தனத்தில் அபிஷேகம்..
ஏழுகடல் உந்தன் ஆட்சியிலே வரும் ஐயப்பா 
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியில் வரும் ஐயப்பா 
அய்யப்பா நீதான் மெய்யப்பா 

(4)

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா 
அன்று திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா 

உலகினைப் பாய்போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா 
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா 
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா 
அன்று இந்திரவில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா 

கொடியவள் மகிஷி கொலைபுரிந்தாளே அறியாயோ நீயே 
அவள் கொடுமையை அழிக்க மறந்து விட்டாயே ஸ்ரீமன் நாராயணா 
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே 
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே 

தோளிலந்த சாரத்தை எடுத்து வரவேண்டும் நீயே கணை 
தொடுத்திடவேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே 
அனந்தசயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே  உன் 
அன்பரை எல்லாம் துன்பத்திலியூர்ந்து காப்பாய் பெருமாளே

இரதங்கள் படைகள் என எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள் 
நாராயணன் எனும் தலைவனின் துணையால் 
போர்க்களம் வாருங்கள் 
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வெளிக்கொண்டு வாருங்கள் 
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள் 
ஸ்ரீமன் நாராயணா ஸ்ரீபதி ஜெகன்னாதா வருவாய் திருமாலே துணை தருவாய்ப் பெருமாளே 

(5)

குருர் ப்ரஹ்மாஹ் குருர் விஷ்ணு..  குருர் தேவோ மஹேஸ்வரா..  குரு சாஃஷாத்  பரப்ரஹ்மஹ் தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ 

கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார்  அவர் 
கருணையுள்ளவர் இரக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார் 

எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில் முன்னே நிற்கின்றார் - அவர் 
எழுத்தறியாத மனிதருக்கெல்லாம் எழுத்தாய் நிற்கின்றார்....   எழுத்தாய் நிற்கின்றார்...

கால்களில்லாத முடவருக்கெல்லாம் காலாய் வருகின்றார்...  அவர் 
கைகளில்லாத ஊனருக்கெல்லாம் கைகள் தருகின்றார்....   கைகள் தருகின்றார்....

வாழத்தெரியா மனிதருக்கெல்லாம் வாழ்வை அளிக்கின்றார் - அவர் 
வாய்பேசாத ஊமைகட்கெல்லாம் வார்த்தைகள் தருகின்றார்....  வார்த்தைகள் தருகின்றார்....


(6)


தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் ஸ்வாமி 
திருவிளக்கின்  ஒளியினிலே குடி இருக்கும் ஸ்வாமி...  
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் ஸ்வாமி 
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் ஸ்வாமி 
ஐயப்ப ஸ்வாமி அருள்புரி ஸ்வாமி...

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே  - எங்கள் 
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே 
அண்டமெலாம் காத்தருளும் சக்தியும் நீயே - என்னில் 
அன்பு வைத்து நதிவரையில் ஓடிவந்தாயே 
ஐயப்ப ஸ்வாமி இன்னும் அருள்புரி ஸ்வாமி...  

தந்தை உண்டு அன்னை உண்டு எந்தன் மனையிலே - ஒரு 
தம்பி மட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே 
அன்புகொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே நாங்கள் 
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே 
ஐயப்ப ஸ்வாமி இன்னும் அருள்புரி ஸ்வாமி...  




அதே போல "தங்கப்பதுமை ஒன்று" பாடலும் அந்தத் தொகுப்பில் இல்லை.  தனியாகத்தான் கிடைத்தது.  சற்றே நீண்ட பாடலாயினும் ரசிக்க முடிகிறது.  காட்சியில் லக்ஷ்மி நாட்டியம்.

(7)

தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் 
சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது 

மோகினி என்பதிவள் பெயரல்லவோ நெஞ்சம் 
மோகம் திரண்டிருக்கும் தல்லவோ 
மாலவன் பெண்மை கொண்ட மலரல்லவோ புவி 
மனதை மயக்க வந்த சிலையல்லவோ 

கனியைப் பிளந்து வைத்த கலசங்களும் - இன்பக் 
கள்ளில் வடித்தெடுத்த வடிவங்களும் 
இலையில் மறைத்துவைத்த மலர்ப்பந்தலும் -காணும் 
எவருக்கும் போதைதரும் இதழ்வண்ணமும் கொண்டு 

முத்துமணித்திரை கட்டியணைத்தொரு பூச்செண்டு மொய்த்து 
சுகம்பெற தேடிவரும் சில பொன்வண்டு 
தத்தை முகத்தொரு முத்து பதிப்பவன் நானென்று 
தாவுவார்கள் சிலர் தழுவுவார்கள் சிலர் 
ஆவலோடு சுகம் பழகுவார்கள் சிலர் 

தை தத்தை என தாவிடும் கால்களும் மன்னர்கள் மார்பினிலே 
தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே 
கொஞ்சும் இவள் நெஞ்சில் ஒரு மதுரசம் அஞ்சும் இவள் கண்ணில் ஒரு புதுரசம் 
இரவிலே சுகமெலாம் பெருகிட உறவினைத் தேடுவோம் வருகவே 

காலம் பிறந்ததென்று களிகொள்ளுங்கள் - உங்கள் 
கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள் 
தேவருலகில் திருமாகாணங்கள் இந்த தேவி துணையில் பலநாள் வாழுங்கள் 



எனக்குத் தெரிந்து இந்தப் படத்தில்தான் ஹரிவராசனம் பாடல் முதலில் இடம்பெற்றது என்று நினைவு.  அதுவும் கிடைத்து விட்டதால் கீழே அதையும் பகிர்ந்து விட்டேன்.  இந்த வரிகளையும் இணையத்திலிருந்தே எடுத்து விட்டேன்.

ஹரிவராசனம் விஸ்வமோகனம் 

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் 
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் 
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் பக்தமானஸம் 

பரணலோலுபம் நர்த்தனாலயம் 
அருணபாசுரம் பூதநாயகம் 
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம் 

களபகோமளம் காத்ரமோகனம் 
களபகேசரி வாஜிவாகனம் 
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம் 

ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம் 
ச்ருதிமனோகரம் கீதலாலசம் 
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 
சுவாமி சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா



60 கருத்துகள்:

  1. என்ன ஒரே பக்தி பரவசமாக இருக்கிறது? மாலை போட்டுக்கொண்டிருக்கிறீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. முதல் வாரத்திலிருந்தே முயற்சி செய்து இப்போதுதான் கைகூடியது. எனக்கு இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே மிகவும் பிடிக்கும். இன்றைய பாடல்கள் துரை செல்வராஜூ ஸாருக்காகவும்...

      நீக்கு
    2. என்னது!..
      எனக்காகவுமா!....

      தன்யனானேன்...
      ஸ்வாமி சரணம்!....

      நீக்கு
    3. உங்கள் ஐயப்ப சரிதம் முடியும் முன் இதைப் பகிர நினைத்திருந்தேன்.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா,பானுமதி வெங்கடேஷ்வரன் மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. நல்ல தொகுப்பு. கேட்க வேண்டும் பாடல்களை - வேலை செய்தபடியே.....

    பதிலளிநீக்கு
  4. ஸ்வாமி ஐயப்பன் படத்தில் எல்லாப் பாடல்களும் இனிமையிலும் இனிமை...

    TMS அவர்களது சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் என்ற பாடல் அன்றைக்கு பல்லாயிரக்கணக்கானோரை கட்டிப் போட்டது...

    இசை ஜாம்பவான் அமரர் தக்ஷிணாமூர்த்தி..

    இந்தப் படத்தின் வசனம் எழுதப் போய் மனம் திருந்தியது என்றார் கவியரசர்...

    இந்தப் படத்தினால் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு சபரி மலையில் புதிதாக பாதை ஒன்று அமைத்துக் கொடுத்தார் மெரிலாண்ட் சுப்ரமணியம் அவர்கள்...

    தேடி வரும் கண்களுக்குள் ஓடி வரும் ஸ்வாமி - என, மாதுரி பாடிய பாடல் உயிரை உருக்கும்..

    கும்பகோணத்தில் டைமண்ட் டாக்கீஸில் ஆறேழு தடவைகளுக்கு மேல் பார்த்த படம்...

    திருப்பாற்கடலில் - பாட்டு அன்றைய அரசியல் சூழலை மனதில் கொண்டு கவியரசர் எழுதினார் என்பார்கள்..

    பின்னும் பல படங்கள் வருவதற்கு இதுவே பிள்ளையார் சுழி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடி வந்த கண்களுக்குள் பாடலைப்பாடியது அம்பிளி என்று ஞாபகம் துரை ஸார். எனக்கு இதில் கிடைக்காத பாடல் "முல்லைக்கொடியினிலே எனும் நீண்ட பாடல்தான். அதுவும் எனக்குமிகவும் பிடிக்கும். அதில்தான் ஜெயசத்ந்திரன்குரல் ஒலிக்கும்.

      நீக்கு
    2. இசை தேவராஜன் இல்லையோ... G. தேவராஜன்.

      நீக்கு
    3. இதில் 3, 4 மற்றும் ஹரிவராசனம் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. கார்த்திகை மாதம் ஐயப்பபக்தர்களுக்கு இந்த பாடல் பகிர்வு மகிழ்ச்சியை தரும்.
    அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கும்.
    முதல் பாடல் பந்தளமன்னரும், மகாராணியும் அவர் அவர் பூஜை அறையில் பாடும் பாடல்.
    மிக மிக அருமையான தருணம் இறைவனுக்கு நன்றி சொல்லும் பாடல்.

    படம் எத்தனைமுறை போட்டாலும் தொலைக்காட்சியில் போட்டாலும் விரும்பி பார்க்கும் படம்.

    பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
    தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வருவான் மணிகண்டன்.
    சுவாமியே ஐயப்பா சரணம் சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா... இந்தப் படம் தொலைக்காட்சியில் போடுகிறார்களா என்று தெரியாது. நான் பார்த்து இந்தப் படம் ஒளிபரப்பியதில்லை. எனக்கும் படம் பிடிக்கும். எனக்கு இந்தப்படத்தில் எல்லாப் பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்.

      நீக்கு
  7. இஷ்டமான தெய்வமே ஹரிஹரன் ஈன்ற தெய்வமே பாடல் ரேடியோவில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். சீர்காழியின் குரல் ஐயப்பா ஐயப்பா என்று குழைகிறது குரல்.
    சபரி ஆலயம் வீற்றவனை தஞ்சம் என்று சரண்புகும் பாடல்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்துப் பாடல்களும் இனிமை. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
    அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் ஸ்ரீராம்..
    நினைவில் இருப்பதை பதிவு வெளியான நேரத்தில் சொன்னேன்...

    அறைக்குத் திரும்பியதும்
    சரி பார்த்துச் சொல்கிறேன்....

    பதிலளிநீக்கு
  10. இந்தப் படம் வெளியான வருடம் ராஜஸ்தான் வாசம். ஆகையால் படம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பின்னால் தூர்தர்ஷனில் வந்து பார்த்திருக்கலாம். நினைவில் இல்லை. ஹரிவராசனம் பாடல் தவிர்த்து மற்றவை கேட்டதே இல்லை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூர்தர்ஷனில் எனக்குத் தெரிந்து இந்தப் படம் போடவில்லை. எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும் கீதா அக்கா.

      நீக்கு
    2. அப்போப் பார்த்திருக்க மாட்டேன். பார்த்ததாய் நினைவும் இல்லை.

      நீக்கு
  11. பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா. மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.

      நீக்கு
  12. ஸ்ரீராம் நேற்றைய உங்கள் கவிதைக்கு 'தேடல்' என்ற பெயர் பொருத்தமாக இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழு திருப்தி இல்லை பானு அக்கா!!

      நீக்கு
    2. இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு! பெரிய தலைப்பு! எனக்கே பிடிக்கலையே! :)

      நீக்கு
  13. 1975 ல் ஆறேழு தடவைகளுக்கு மேல் பார்த்த படம்.

    ஆனால் அதற்குப் பிறகு பார்க்கவில்லை...

    பூனை கண்களை மூடிக் கொண்டதைப் போல
    நானாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன்..

    திரு. தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையமைப்பு என்றும்
    தேடுகின்ற கண்களுக்குள் - பாடலைப் பாடியவர் மாதுரி என்றும்!...

    தேடுகின்ற கண்ணுகளில் - என்று,
    இதே பாடல் மலையாளத்தில் அம்பிளி பாடுவதாக வருகின்றது...

    1975 க்குப் பிறகு 2018.. எவ்வளவு தூரம் வந்து விட்டோம்!...

    அன்பின் ஸ்ரீராம் அவர்களின் புண்ணியத்தில்
    ஸ்வாமி ஐயப்பன் படத்தை வேலை விட்டு அறைக்கு வந்ததும் ஒரு மணி நேரம் பார்த்தேன்....

    1975 ல் ஐயப்பன் படத்தைப் பார்த்தபோது மனம் உருகி கண்ணீர் வடித்திருக்கின்றேன் - ஒரு குழந்தையாக...

    இன்னும் மனம் குழந்தையாகத் தான் இருக்கிறது...

    இந்த ஐயப்பன் வரலாற்றில் புலிப்பால் கொண்டு வருதற்கு பன்னிரண்டு வயதுடைய மணிகண்டன் புறப்படும் தருணம்!...

    ( இந்த ஒன்றைப் பற்றியே பல பதிவுகள் எழுதலாம்!...)

    இப்போதும் கூட பழைமையான சில படங்களைப் பார்க்கும்போது மனம் உடைந்து விடுகின்றது...

    ஔவையார் திரைப்படத்தில் ஸ்ரீமதி குசலகுமாரி அவர்கள் ஔவையாராக உருமாறும் காட்சி,
    அதன்பின் விநாயக மூர்த்தியின் திருமேனியில் இருந்து யானை வெளிப்படும் காட்சி,

    நந்தனார் திரைப்படத்தில் - நந்தனார் ஒரே நாளில் பயிர்களை விளைவித்ததைக் கண்டு வேதியர் ஓடி வந்து நந்தனார் காலில் விழுந்து வணங்குகின்ற காட்சி,

    திருவிளையாடலில் - தனி மலையில் நிற்கும் முருகனிடம் -
    ஏன் இப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?..
    - என்று ஔவையார் பரிதவிப்புடன் கேட்கும் காட்சி..

    பாசமலரில் - பற்பல காட்சிகள், வசனங்கள், பாடல் வரிகள்...

    குறிப்பான காட்சி.. - காதலனையே கணவனாகக் கொண்டு வந்து நிறுத்தும்போது மகிழ்ச்சியில் திக்கித் திணறி அண்ணனிடம் ஓடி வரும் ராதா!..

    குறிப்பான பாடல் வரி - கண்ணில் மணி போல மணியில் நிழல்போல கலந்து பிறந்தோமடா..
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா!...

    இதெல்லாம் மனதை வெகுவாக உடைத்து விடுகின்றன...
    இதனால்தான் இவற்றின் பக்கம் அதிகம் போவதில்லை...

    இருக்கட்டும்.. இதெல்லாம் பின்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்..

    ஆர்வத்துடன் அளித்த செய்தி பிழையானது..
    அன்பு நெஞ்சங்கள் பொறுத்தருள்க...

    சாமியே சரணம் ஐயப்பா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயப்பன் கிட்டேயிருந்து பாசமலர் வரை சென்று விட்டீர்கள். நான் ஸ்வாமி அய்யப்பன் படத்தை தஞ்சையில்தான் பார்த்தேன். எந்தத் தியேட்டர் என்று நினைவில்லை. மனதில் தங்கிவிட்ட படம். மிக இனிமையான பாடல்கள்.

      நீக்கு
  14. ஸ்வாமி ஐயப்பன் படத்தில் பாடல்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கும். குறிப்பாக 'திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா' பாடலும், கடைசியில் வரும் 'சபரி மலையில் வண்ண சந்திரோதயம்' பாடல் உள்ளத்தை உருக்கும். படமும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதுரி பாடலும், அம்பிளிப்பாடலும் மிக இனிமையாக இருக்கும் பானு அக்கா. கேட்டுப்பாருங்கள்.

      நீக்கு
  15. என் அத்தைப்பெண்ணை பெண் பார்க்க வந்த பொழுது அவர்கள் வழக்கம் போல் பாடத்தெரியுமா? என்று கேட்டார்கள். அவளுடைய அத்தை, (அதாவது என் அத்தையின் நாத்தனார்), "ஓ, நன்றாகப்பாடுவாளே", என்று கூறி விட்டு "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா.." பாடலை பாட ஆரம்பித்து விட்டு என் அத்தை பெண்ணுக்கும் ஜாடை காட்ட, அவளும் சேர்ந்து கொண்டாள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சென்றதும், என் அத்தை தன் பெண்ணிடம்,"ஏண்டி, அந்த பாட்டையா பாடுவாய்?" என்று கோவித்துக் கொண்டாள். காரணம், அந்த பையனின் அப்பா பெயர் நாராயணன்!

    பதிலளிநீக்கு
  16. ///
    இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த வேலையைக் கையில் எடுத்தேன்.///
    கீசாக்காவின் மூணுவிட்ட டம்பியாக இருப்பாரோ.... சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு... அப்பாஆஆஆஆவீஈஈஈ:)

    பதிலளிநீக்கு
  17. இதில் 4,5 மட்டுமே கேட்டிருக்கிறேன் ஏனையவை கேட்டதாக நினைவிலில்லை. உண்மையைச் சொன்னால் கிட்டத்தட்ட 10 வருடங்களாகத்தான் எனக்கு ஐயப்பன் எனவும் சபரிமலையில் இருக்கிறார் எனவும் ஐயப்பசுவாமியைத் தெரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> உண்மையைச் சொன்னால் கிட்டத்தட்ட 10 வருடங்களாகத்தான் எனக்கு ஐயப்பன் எனவும் சபரிமலையில் இருக்கிறார் எனவும் ஐயப்பசுவாமியைத் தெரியும்...<<<

      ஆகா.. ஞானி அல்லவா!... உண்மையெல்லாம் வெளிப்படுகின்றது..

      ஆனாலும்,

      ஞானி அல்லவா!... உண்மை எப்படித் தெரியாமல் இருந்தது!?...

      உங்கட நாட்டில் இந்தப் படம் வெளியானதில்லையோ!?..

      நீக்கு
    2. தெரியவில்லை துரை அண்ணன், அப்பா அம்மா கும்பிடுவதைத்தானே நாம் பின் தொடர்வோம், அந்த வகையில் நம் குடும்பங்களில் ஐயப்பர் பக்தர்கள் இருக்கவில்லை...
      ஆஞ்சநேயரைக்கூட ஒரு 15 வருசம் முன்னாடிதான் கண்டுபிடிச்சேன், தெரியும் முன்பே ஆனா வீட்டில் யாரும் வணங்கவில்லை... ஆனா இப்போ அவர் எனக்கு பிரெண்ட் ஆக்கிட்டேன் தெரியுமோ:)..

      நீக்கு
    3. அம்மாவிடம்தான் கேட்டுப் பார்க்க வேண்டும் படம் பற்றி ஆனா அம்மாவுக்கு படமென்றாலே அலர்ஜி:) ஹா ஹா ஹா...

      நீக்கு
    4. ஓ... என்ன ஆச்சர்யம்... இப்பதான் தெரியுமா?

      நீக்கு
  18. பகல் நேரம் கிடைக்கையில் அனைத்துப் பாடல்களையும் கேட்க முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேளுங்கள் அதிரா... இனிமையாக இருக்கும். யூடியூபில் படமும் பார்க்கலாம். நன்றாக இருக்கும்.

      நீக்கு
  19. 'Season's' greetings!! :))
    சிறு வயதில் மிகவும் பிடித்துப் போய் 15 பை...சா.... செலவழித்து பாடல் புத்தகம் வாங்கி மனனம் செய்த பாடல்கள்!! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட... பாட்டுப் புத்தகம் வாங்கி மனனம் செய்தீர்களா? அவ்வளவு ஈர்த்திருக்கிறது பாடல்கள். நன்றி மி கி மா.

      நீக்கு
  20. கார்த்திகை மாத இனிய கானம் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. சபரி மலைக்குச் செல்ல விரதம் இருப்பவர்களுக்கு இப்பாட்ல்களை சமர்ப்பணமாக்கலாம்

    பதிலளிநீக்கு
  22. கர்ர்ர்ர்ர்ர்... பழைய நினைவுகளை மீட்டெடுத்த பாடல்களை நான் இணையத்தில் இல்லாதபோது வெளியிட்டமைக்கு.

    இந்த எல்பில எல்லாப் பாடல்களும் மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம் நான் இந்தப் படத்தை மலையாளம் தமிழ் இரண்டிலும் பார்த்திருக்கேன். எங்கள் வீட்டில் படத்துக்கே அழைத்துச் செல்லாத என் மாமா எங்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு சென்ற படம் வீட்டு உறுப்பினர்கள் நாங்கள் 20 பேர் சென்றோம். எனக்கு மிகவும் பிடித்த படம். பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். அப்புறமும் இந்தப் படம் பார்த்திருக்கேன் ஊர்த்திருவிழாவின் போது கோயில் தேரடியில் போடுவார்களே! அப்ப நான் வளர்ந்துவிட்டதால் இந்தப் படத்தின் பாடல்கள் புத்தகம் வீட்டுக்குத் தெரியாமல் என் தோழியிடம் 10 பைசா கொடுத்து வாங்கிய நினைவு. வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்தே வந்தேன் பள்ளியில் இருந்து 6 கிலோ மீட்டர். ஹா ஹா ஹா...ஹரிவராசனம் பாடலும் திருப்பாற்கடலில் பாடலும், சபரி மலையில் வண்ண பாடலும் பை ஹார்ட் அப்போது!!!

    திருப்பாற்கடலில் பாடல் பைரவி ராகம், ஹரிவராசனம் மத்யமாவதி ராகம், சபரி மலையில் வண்ண சந்த்ரோதயம் ஆனந்த பைரவி ராகம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே சிந்துபைரவி ராகம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. தங்கப்பதுமை மோகனம்...ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா சியாமா ராகம்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!