திரைக்கதை மன்னர் பாக்யராஜ் இயக்கி நடித்திருக்கும் படம்.
இளையராஜா இசையில் மலேஷியா வாசுதேவனும் எஸ் ஜானகியும் பாடியுள்ள ஒரு இனிமையான பாடல்.
பாடலாசிரியர் வாலி.
கணவன் தனது பெரிய சொத்துக்காக தன்னைக் கொல்ல முயற்சி செய்கிறான் என்று தெரிந்தும் அவனை நேசிக்கும் மனைவி. அது தெரியாமல் அவளைக் கொல்லும் முயற்சியில் ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும் பாக்யராஜ்...
மலேஷியா வாசுதேவன் குரலில் ஒரு இனிமையான பாடலை நமக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. காதலிக்காக, காதலனுக்காக என்னென்ன செய்வோம் என்று பட்டியலிட்டுப் பாடும் பாடல்!
ஒரு சிங்கிள் ஸ்ட்ரிங் இசையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கும் பாடல்கள் இரண்டு எப்போதும் என் நினைவில் இருக்கும். ஒன்று இந்தப் பாடல். இன்னொன்று உன்னை நான் சந்தித்தேன் படத்தின் "தேவன் தந்த வீணை" அதில் எஸ் பி பி யின் சுகமான ஹம்மிங் ஆலாபனையுடன் பாடல் தொடங்கும்.
இதில் வரிகள் தொடங்கி விடும்...
"நீங்காத எண்ணம் ஒன்று... நெஞ்சோடு உண்டு..." ஆண்குரல்.
உடனே எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் நாயகி வியப்புடன் திரும்பி ம்ம்ம்... என்னய்யா அது?" என்று ஜானகி குரலில் கேட்க பாடல் தொடங்குகிறது.
சரணங்களுக்கு இடையில் இளையராஜா விளையாடுகிறார். காட்சியாக காணாமல் கானம் மட்டும் கேட்டால், அந்த இசைக்கு உங்கள் மனதில் காட்சி உங்கள் கற்பனைக்கேற்ப ஓடும்.
சாதாரணமாக சரணங்களில் முதல் பகுதி இரண்டாம் பகுதிகளை குரல்கள் பங்கு போட்டுக்கொள்ளும். அதாவது முதல் சரணத்தை ஆண்குரல் தொடங்கினால் இரண்டாவது சரணத்தை பெண்குரல் தொடங்கும். ஆனால் இங்கு இரண்டு சரணங்களிலும் ஆண்குரல் தொடங்க, பெண்குரல் முடிக்கிறது. சரணங்களை முடிக்கும் வரிகளின் டியூன் இனிமையாக அமைந்திருக்கும்.
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
அதுபோலவே உனைக் காண நான் அலை பாய்கிறேன்
மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்
காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்
காலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குஆஹா இன்றைக்கு நடனப் புயல் பாட்டா? இதோ கேட்கிறேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் வெங்கட்.
நீக்குநடனப்புயல்... ஹா... ஹா... ஹா...
இன்னிக்கு கீதாஜியைக் காணோம்...
பதிலளிநீக்குஆமாம்... காணோம்... அவர் வந்தால்தான் பாடல் என்ன ராகம் என்று தெரியும்...
நீக்குஎனக்கும் பிடித்த பாடல். படம் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குதஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் மாதம் ஓரிரு படம் திறந்தவெளித் திரையரங்கில் போடுவார்கள் 16 mm. அங்கு இது போன்ற படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
நீக்குரசனையான பாடல்...
பதிலளிநீக்குகிளைமாக்ஸ் காட்சி மனதில் ஓடுகிறது...
வாங்க டிடி... கிளைமேக்ஸ் காட்சி என் நினைவில் இல்லை!
நீக்குஇந்தப்படம் பார்த்தேனா தெரியவில்லை. பாட்டை மத்தியானம் கேட்கிறேன். இப்போ வேலை!
பதிலளிநீக்குபடம் பார்த்திருக்க மாட்டீர்கள் கீதாக்கா.. அவசியமும் இல்லை. பாடல் கேளுங்கள் அப்புறமா...
நீக்குவரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம், பிரார்த்தனைகள். துரையின் எல்லாப் பிரச்னைகளும் தீரவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குமுன்னதாக வந்து வரவேற்கும் இருவரையும் காணோம்.. துரை ஸார் பிரச்னை தெரியும். கீதாவுக்கு இணையம் பிரச்னையாம். வாட்ஸாப்பில் சொல்லி இருந்தார்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்.காதுக்கு இதம்.
80 களின் இசையே இனிமைதான்.வந்தவர்களுக்கும் வரப் போகிறவர்களுக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
வாங்க வல்லிம்மா... ஆமாம் அப்போதைய பாடல்கள் இனிமைக்குக் குறைவில்லை.
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குமுதல்படம் இதுவரை பார்க்கவில்லை.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் அருமையானது. அடிக்கடி கேட்டதே...
நன்றி கில்லர்ஜி.
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, வந்தவர்கள் மற்றும் தொடரும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். லேட்!! பென்ச் மேல நில்லுங்க!!!!!
நீக்குஹா ஹா அஹ ஹா ஹா சிரிச்சுட்டேன்...பெஞ்ச் மேல நின்னுக்கிட்டேதான் பாட்டுக் கேட்டுட்டுருக்கேன்!!!....ஏன்னா சீன் எல்லாம் பார்க்கும் பொறுமை இல்லை ஹா ஹா ஹா..
நீக்குஇந்தப் பாட்டு பல முறை கேட்டுருக்கேனே அப்போ...அப்ப இப்படிப் பாட்டு கேட்டுருக்கேன்னா அதுக்கு நன்றி சொல்ல வேண்டியது இலங்கைவானொலிதான்...படம் பெயர் கூடத் தெரியாது. இப்ப இங்க பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் ஸ்ரீராம்...
எம் வி அவரின் குரல் செம இல்ல இதுல?!!!! எனக்கு எம் வியின் குரலும் ரொம்பப் பிடிக்கும்...வித்தியாசமான குரல்.... இளையராஜாவின் ஒவ்வொரு கல்யாணியும் ஒவ்வொரு விதம் ஸ்ரீராம் ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.....ஸ்வரங்கள் என்னவோ அதே தான் கல்யாணியின் ஸ்வரங்கள் மாறப் போவதில்லை....ஆனால் அவரது ஒவ்வொரு கல்யாணியும் ஒவ்வொரு ஷேட்....இதில் சத்தமக வரும் அந்த பப் பப் மட்டும் கொஞ்சம் இல்லாமல் இருந்தால்னு யோசிக்க வைச்சது அப்போவே...ஆனால் அது அந்தக் காலத்தில் பெரும்பாலான பாடல்களில் அந்தக் கருவி எட்டிப் பாக்கும்..
அருமையான பாடல்...
கீதா
இந்தப் பாடல் ஒருவித கல்யாணினா தேவன் தந்த வீணை அது ஒரு விதம்...ஜனனி ஜனனி அது தனி கல்யாணி...சுந்தரி கண்ணால் ஒரு சேதி அது ஒரு ஷேட், காற்றில் வரும் கீதமே அது ஒரு ஷேட்...நிறைய கல்யாணியில் போட்டுருப்பார் ஆனாலும் ஒவ்வொன்றும் ஒரு ஷேட்...
நீக்குகல்யாணி அப்படின்றது கச்சேரிகளில் மெயின் ராகமாகப் பாடப்படும் ஒன்று ஸ்வர விஸ்தாரம். ஆலாபனை என்று...ஆனால் அதே கர்நாட்டிக் கல்யாணியை திரை இசையில் கொண்டு வருவது அதுவும் இப்படியான பாடல்களில் கொண்டு வருவது...அப்ப எவ்வளவு யோசித்து நோடிஸ் எழுதியிருக்கனும் இல்ல?!!! அதுவும் வித்தியாசப்படுத்தி...
அவர் அதுவும் தனிதனியாக நோட்ஸ் எழுதுவாராமே!!! இசைக்கருவிகளுக்கு.அதாவது கீபோர்ட் அப்புறம் வயலின்/ஃப்ளூட்...
கீதா
இன்று இங்கு தேடி தேடிப் பார்த்தேன்.. எங்காவது ஜண்டைப்பிடிக்க[வம்பு அளக்க:)] ஏதும் துரும்பு கிடைக்குமோ என.. ம்ஹூம்ம்.. கிடைக்கல்ல கீதா:).. அதனால நாங்க ஷொப்பிங் போகிறோம்ம்:).
நீக்குஓ... கல்யாணியோ... அது சுகம். தேவன் தந்த வீணையும் கல்யாணியோ... ஆஹா...
நீக்குஇளையராஜா பற்றி நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் உண்மைதான். ஜீனியஸ் அவர்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குதேவன் தந்த வீணை -
உண்மையிலேயே தேவன் தந்த வீணை தான்...
இளையராஜா அவர்களது பாடல்களில் மிகவும் பிடித்தமானது...
மலேஷியா வாசுதேவன் பாடியுள்ள இந்தப் பாடல் அவருடைய சிறந்த பாடல்களுள் ஒன்று..
இன்றைய வெள்ளி வீடியோ அருமை..
வாழ்க நலம்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்... எனக்கு அதுவும் ரொம்பப் பிடிக்கும். இதுவும் பிடிக்கும். மலேஷியா வாசுதேவனின் சிறந்த பாடல்களில் ஒன்று இது.
நீக்குபடம் பார்த்திருக்கேன். பாடல் நினைவில் இல்லை. படம் நல்லாவே இருக்கும்
பதிலளிநீக்குவாங்க ராஜி... எனக்கெல்லாம் படம் பார்க்கவில்லை என்றாலும் பாடல்தான் நினைவில் நிற்கும்.
நீக்குபடம் பார்த்திருக்கிறேன். பாடல் கேட்ட நினைவில்லை. திருச்சி மாரீஸ் தியேட்டரில் பார்த்த நினைவு. அப்போது மாரீஸ் 70 எம்.எம்., மாரீஸ் ராக், மாரீஸ் ஃபோர்ட் என்று சினி காம்ப்ளெக்ஸாக இருந்தது. தற்போதய நிலை தெரியவில்லை.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... தஞ்சாவூர்ல அப்போது திருவள்ளுவர் தியேய்ட்டர் மட்டும்தான் 70 எம் எம்!
நீக்குதேவன் தந்த வீணை மிக அழகான பாடல். ஒரு வெள்ளியில் பகிரலாம்.
பதிலளிநீக்குகண்டிப்பாக பானு அக்கா. அந்த எண்ணம் எனக்கு ஏற்கெனவே உண்டு.
நீக்குஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
பதிலளிநீக்குஅது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ..
ஷாஜஹானின் சரிதத்தைப் படிக்காத கவிஞரோ !
ஷாஜஹானைப் பற்றிய உண்மை தெரிந்தால் இப்படிப் பாட்டு எழுதி இருக்க மாட்டாங்க! தேவதாஸும் அப்படி ஒண்ணும் என்னைக் கவரவில்லை. சாவித்திரி நடிச்சதும் சரி, ஐஷூ நடிச்சதும் சரி!அதிலே ஐஷூவின் உடைகள் தான் பேசும்படி இருந்தன.
நீக்குஇந்த ஜாஜ_ஹான் (ஷாஜகான்)
நீக்குடேவ்டாஸ் பத்தி -
திரு.ஏகாந்தன் அவர்கள் சொல்லியிருப்பதைத் தான் நானும் நினத்தேன்...
ஆனாலும் ஜொல்லவில்லை..
எதுக்கு ஊரு வம்பு...ன்னு....
சின்ன வயதில் இருந்தே இந்த வகையறா ராசாக்களை விரும்பியதே இல்லை...
வந்தார்கள் வென்றார்கள் படிப்பதற்கு முன்பே பள்ளி நூலகத்தில் நிறைய படித்திருக்கிறேன்...
கல்யாண அழைப்பிதழில்
கல்லறையின் படம் போடுபவர்களாயிற்றே நம்மவர்கள்..
என்ன சொல்லி.. என்ன செய்ய!..
ஷாஜஹான் மும்தாஜ் பற்றி அறியாதார் யார்? இருந்தாலும் பாடலுக்கு அவை பொருட்டில்லை ஏகாந்தன் ஸார். கவிதைக்கு பொய்யழகு!
நீக்குஏகாந்தன் சார்.. இந்த வருகள்ல தவறு இல்லையே... மும்தாஜ்/தாஜ்மகால் நினைக்கும் அவ்வளவு பேருக்கும் ஷாஜஹான் நினைவில் வருமே. தேவதாஸும் அதுமாதிரித் தானே (காதல் சக்சஸா என்பது கேள்வியில்லை)
பதிலளிநீக்குஅது இருக்கட்டும். ஃபாலோ ஆன் கொடுக்காம தாங்கள் ஆடி 5 விக்கெட்டை இழந்திருக்கிறார்களே அதுபற்றி என்ன நினைக்கறீங்க?
கோஹ்லியின் அபத்த முடிவுகளில் இது உச்சம் என நினைக்கிறேன். போன மேட்ச்சில் ஜடேஜாவைச் சேர்க்காமல் தவறுசெய்துவிட்டு, கோஹ்லியும் ரவி சாஸ்திரியும் வெவ்வேறுவிதமாக உளறிவைத்தது இன்னும் நினைவில்.
நீக்குஆஸ்திரேலியா மாதிரி ஒரு திமிர்பிடித்த டீமை ('team of criminals!- Ian Botham),' ஃபாலோ-ஆன் செய்யச் சொல்லி உள்ளே அனுப்ப இந்தியாவுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை இழந்துவிட்டு, தானே ஐந்தை 1 1/2 மணி நேரத்தில் இழந்து அசடு வழியும் கேப்டனையும் கோச்சையும்பற்றி என்ன சொல்வது? அவர்களை திரும்பவும் பேட் செய்யவைத்திருந்தால் 3 விக்கெட்டாவது இன்றே இழந்துவிட்டு, நாளை தேநீர் இடைவேளைக்குள் சிதறியிருப்பார்கள்.
என்னைக் கேட்டால், 54/5-லேயே நாளை காலை டிக்ளேர் செய்து ’போய் அடிச்சுக்காமிங்கடா!’ என்று கங்காருக்களை உள்ளே அனுப்பிவிடலாம். ஜடேஜா, பும்ரா என்று தாக்குப்பிடித்து, நாளைப் பொழுதைக் கடக்கமாட்டார்கள் அவர்கள்!
ஆனால் இந்த சாத்திரி, கோஹ்லியின் காதில் என்ன ஊதிக்கொண்டிருக்கிறதோ தெரியலையே!
கோஹ்லி செய்திருக்கும் இந்த மிகப்பெரிய தவறு இந்தியா ஜெயித்தால் மட்டுமே மறக்கப்படும். அநியாயம் இன்று விழுந்த விக்கெட்டுகள் ஏஷிர் முகாமில் விழுந்திருக்க வேண்டியவை. மனம் ஆறவேயில்லை.
நீக்குநீங்க ரசிக்கற மாதிரி டிசெக்ஷன் பண்ணி ரசிக்கலைனாலும் இரு பாடல்களுமே பிடித்த பாடல்கள். இந்தப் படத்தை வாங்கி வைத்து பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன்
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. பாடல் ஆரம்பமே நன்றாயிருக்கும் என்றாலும் சரணத்திலும் மலேஷியா வாசுதேவன் குரல் நன்றாயிருக்கும்.
நீக்குகேட்ட பாடல்தான், கேட்கலாம் நல்ல பாடல். முதல் படத்தில் பார்த்து நினைத்தேன் கதாநாயகி ரம்யா[கரெக்ட்தானே] பொன்வண்ணனோ என.. ஆனா பாட்டில் இது வேறு யாரோ... ஒருவேளை பாக்கி அங்கிளுக்கு ரெண்டு கதாநாயகிகளாக இருக்குமோ படத்தில:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..
பதிலளிநீக்குகதாநாயகி யார் என்று நான் பார்க்கவில்லை. நான் பாடலைத்தான் கேட்டேன். அதிரா... இந்தப் படம் பார்க்கும் ஆவல் வரவில்லையா? பாக்யராஜ் படங்கள் நன்றாயிருக்கும்.
நீக்குரம்யாவா? எந்த ரம்யா? ரம்யா கிருஷ்ணனை சொல்கிறீர்களா? அவர் இல்லை. சூர்ய கலாவா? சத்யகலாவா? என்று சந்தேகம் வந்தது. கூகுளார் சத்யகலா என்கிறார்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா அவ ரம்யா இல்லை சரண்யா பொன்வண்ணனைச் சொன்னேன்:)..
நீக்குஇந்தப் படத்தில் சத்தியமாக சரண்யா பொன்வண்ணன் இல்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்களில், அந்த "தேவன் தந்த வீணை" என்ன பாடல் என்ன யோசித்தும் தெரியவில்லை. மற்றொரு வெள்ளியன்று பகிர்ந்தால் கேட்ட பின் புரியுமென நினைக்கிறேன். மற்றொன்று பாக்கியராஜ் படத்தின் பாட்டு கேட்டுள்ளேன். இளையராஜாவின் இசையில் பாடல் நன்றாக இருக்கிறது. இப்போது தங்கள் பதிவிலும் ஒருமுறை கேட்டேன். தாங்கள் சொன்ன இரு வரி கதையை படித்த போது படம் எப்போதோ தொலை காட்சியில் பார்த்தது மாதிரி இருக்கிறது. ஆனால், கதை முழுமையாக நினைவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... என்ன? தேவன் தந்த வீணை பாடல் தெரியாதா? என்ன அநியாயம்? அந்தப் பாடலின் அந்த ஆரம்ப ஹம்மிங்கிலேயே நான் மயங்கி விடுவேன். ஆஹா....
நீக்குபாட்டு பாதி கேட்டேன் .மீதி அப்புறம் கேட்கிறேன் :) ஆமா பாக்கி அங்கிள் கூட டான்ஸ் ஆடும் அந்த பொட்டு வச்ச ஆன்டி யார் ?
பதிலளிநீக்குடிவியில் போட்டிருந்தாலும் 80-90 படங்கள் பார்த்தது வெகு குறைவே
//பாக்கி அங்கிளுக்கு//
நீக்குawwww goodness meeeee
நான் கமெண்ட் போட்டுட்டு மேலே பார்த்தா பூசும் பாக்கி அங்கிள்னு டைப்பியிருக்காங்க ஹாகிஈ
படம் பார்க்கவேண்டும் என்கிற அவசியமே இல்லை ஏஞ்சல்... பாடல் கேட்டிருந்தால் போதும். படம் முக்கியமே இல்லை. அனால் பாடல்கள் மிஸ் ஆகாது! நான் எனக்குச் சொன்னேன்!
நீக்குஅது ரேடியோ கேக்கிற பழக்கமும் என்கிட்டே இல்லை :) ஆனா துண்டுபேப்பர் விடாம நியூஸை மட்டும் சேகரிச்சு படிப்பேன் அதான் படம் பார்த்தாததான் பாட்டு நினைவில் இருக்கும் :) எனக்கு
நீக்குமலேஷியா வாசுதேவனின் பாடல்களில் இது எனக்கு பிடித்த பாடல்தான்.
பதிலளிநீக்குகேட்டு ரசித்தேன்.
படமும் பார்த்து இருக்கிறேன்.