வியாழன், 20 டிசம்பர், 2018

அந்த பொழுது போகாத மாலை


அந்த பொழுது போகாத மாலை 
(அனுபவம்)

நான் சென்றிருந்த கல்யாண ரிஸப்ஷனில் அவ்வளவு கூட்டமில்லை.  மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் மேடைக்கு வராதது கூட அதற்குக் காரணமாயிருக்கலாம்.  என்றாலும் வழக்கமாகக் களைகட்டும் கூட்டம் மிஸ்ஸிங் என்றே தோன்றியது.

அங்கிருந்த போட்டோகிராஃபர் தொழிலுக்கு புதுசோ...  இப்போதுதான் போட்டோ எடுத்துக் பழகுகிறாரோ என்று சந்தேகப்பட வைக்கும் அளவு அங்கிருந்த  இருபது பேர் மட்டுமே கொண்ட கூட்டத்தை வளைத்து வளைத்து எடுத்தவர்களையே மறுபடி மறுபடி எடுத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு சற்று தூரத்தில் நின்று கேமிராவை போகஸ் செய்து கொண்டிருந்தார்.

யான் நோக்குங்கால் அருகிலிருப்பவரை எடுப்பது போல திரும்பியும், நோக்காக்கால் என்னையும் போட்டோ  எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.  'நோக்கினாலே'  ஃபோட்டோக்களில் என் முகம் 'உவ்'வென்றும், 'ஓ' வென்றும் அமைந்துவிடும் என்பதால் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அலுத்துப்போய் வெளியே நடந்தேன்.

சாலைப் போக்குவரத்து மிதமாக இருந்தது.

சாலையில் இரண்டு பசுக்கள்(தானா?  ஆமாம், ஆமாம் பசுக்கள்தான்) தெருவின் ஓரத்தில் என்றும் சொல்லாமல், நடு என்றும் சொல்லமுடியாமல் ராஜநடை போட்டுச் சென்று கொண்டிருந்தன.  

படம் :  நன்றி இணையம்.

அதன் பின்னால் பர்தா அணிந்த ஒரு பெண்மணி மெதுவாய் நடந்து கொண்டிருந்தாள்.  மாடுகளில் ஒன்று மெதுவாய்த் திரும்பிப் பார்த்தது.  யூ டர்ன் எடுத்தது.  பர்தாப் பெண்மணி பதறி, நின்று, திரும்பி நடக்க முற்பட்டு, சரிவராது என்று சட்டென எதிர்த் திசைக்கு மாறி நடந்தாள்.

இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பான தூரத்தில் நின்று அந்த இடத்தைக் கடக்கும் வழிக்காக பயத்துடன் பார்த்திருந்தார்கள்.

இரண்டும் இப்போது நடுத்தெருவில் சற்றே ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு ஏறுக்கு மாறாக நிற்க, போக்குவரத்து அந்த இடத்தில் சற்றே ஸ்தம்பித்து பிறகு சுதாரித்து நகர்ந்து கொண்டிருந்தது.  பெரிய போக்குவரத்து இல்லாத சாலை என்றாலும் ஓரளவு இருந்தது.  மாநகரப் போக்குவரத்துக்கு கழக பஸ்கள் ஓரிரண்டு அவ்வப்போது கடந்துகொண்டிருந்தன.

ப்ளூ டூத்தில் பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்த ஒரு பைக்கர் பக்கத்தில் வரும்வரை கவனிக்கவில்லைபோலும்.  அருகே வந்து பிரேக் அடித்தவர், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பைக்கை சாலை ஓரம் கொண்டு நிறுத்திவிட்டு ப்ளூ டூத்தைத் துறந்து வலதுபக்கம் போக்குவாரத்தைப் பார்த்தபடி நடந்து மாடுகளை அடைந்தார். 

மெல்ல அவைகளை ஓட்டிக்கொண்டு சாலை ஓரத்தையும் தாண்டி தூரத்தில் கொண்டு சென்று விட்டவர் திரும்பி அந்தச் சிறுவர்களுக்கு கைகாட்டி பாதுகாப்பாக அந்த இடத்தைத் தாண்டி வைத்தார்.  பின்னர் வந்து பைக்கை எடுத்தார்.  அவர் பார்வை என்னை ஒருமுறை பார்த்தது.  புன்னகைத்தேன்.  பாராட்டுகிறேனாம்.  பதில் புன்னகை கிடைக்கவில்லை.  பைக்கை எடுக்க நினைத்தவர் சற்று தூரத்தில் இருந்த கடையைப் பார்த்துவிட்டு அங்கு வந்தார்.

படம் : நன்றி இணையம் 

சிறிது நேரத்தில் இரண்டு சீப்பு வாழைப்பழங்களுடன் வந்தவர் அந்த மாடுகளுக்குக்  கொடுத்துவிட்டு பைக்கேறிச் சென்று விட்டார்.  அந்த கடைக்காரர் வெளியே வந்தவர் வந்து மாடுகளைப் பார்த்தவர் உள்ளே செல்லுமுன் என்னைப்பார்த்துப் புன்னகைத்தார்.  

"யாரோ மாடுகளை விட்டுட்டுப் போயிட்டாங்க"  

"நம்மளுதுதான்.  கடையை மூடும்போது நம்ம கூடவே வந்துடும்.  பக்கத்துலதான் வீடு" என்றுவிட்டு உள்ளே சென்று விட்டார்!



=============================================================================================================

அதற்கும் முன்பு....

சண்டைக்குப்பின் 
இதோ கை குலுக்கிக் கொள்ளும்
இவர்கள் இருவரும் 
முன்பு பகைவர்களாகவும் 
அதற்கும் முன்பு 
நண்பர்களாகவும் இருந்தவர்கள்.





==================================================================================================


'அண்ணாதுரையும், தம்பியரும்' என்ற நுாலிலிருந்து: கடந்த, 1953ல், தி.மு.க., மும்முனை போராட்டம் நடத்தியதன் விளைவாக, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி உட்பட ஐந்து பேருக்கு, மூன்று மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது. 




சிறையில், அண்ணாதுரையும், நெடுஞ்செழியனும் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள், குப்பை கூடையில் ஒரு பழைய புத்தகத்தை கண்டார், நெடுஞ்செழியன். அதை எடுத்து புரட்ட, அதில், நல்ல படங்கள் பல இருக்கவே, ஒவ்வொன்றாக வெட்ட ஆரம்பித்தார்.

அதைப் பார்த்து, 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டார், அண்ணாதுரை. 
நெடுஞ்செழியன் விஷயத்தை சொன்னதும், 'எல்லாரும் திருடிவிட்டு சிறைக்கு வருகின்றனர்; நீ திருடிவிட்டு, சிறைக்கு வெளியே போகப்போகிறாயா?' என்று கேட்டார்.

'யாருக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் செய்யக்கூடிய காரியம் திருட்டாகாது;  இந்த புத்தகம் பயனற்று குப்பையில் கிடந்தது. இப்படங்களை சிறை அதிகாரியின் அனுமதியோடு தான் எடுத்துச் செல்வேன்...' என்றார். 

உடனே, அண்ணாதுரை, 'தெருவில் ஒரு பிணம் கிடக்கிறது என்று வைத்துக் கொள். அந்த பிணத்தால் யாருக்கும் பயனில்லை; அதற்காக, அந்த பிணத்தின் வேட்டியை அவிழ்த்துக் கொண்டு வந்து விடுவதா?' என்று கேட்டார். 


படித்ததிலிருந்து....


========================================================================================================


என்ன செய்கிறார்?  சாவித்ரிக்கு தெரியாமல் பின்னால் இட்லியுடன் வருகிறார் போலும்.  அப்பொழுதெல்லாம் இட்லி விலை கம்மியாகத்தான் இருந்திருக்க வேண்டும்!!!  பழைய பைண்டிங் கலெக்ஷ்னிலிருந்து ஒரு படம்!


======================================================================================================

அவ்வப்போது சில பழைய கமெண்ட்ஸை பகிர உத்தேசம்.

முன்பு- சில வருடங்களுக்கு முன்னர் - ஒரு பதிவில் அப்பாதுரை போட்டிருந்த கமெண்ட் :

அப்பாதுரை said...

இல்லாத ஒண்ணை உணர்வது இயலாத காரியம். தெரியாத ஒண்ணை உணர ஏதோ ஒரு 'பாதிக்கும்' அடையாளம் தேவைப்படும், இல்லாவிட்டால் உணர முடியாது.  உணர்ந்தே அறியக்கூடிய சக்திகளுக்கு வரம்பு உண்டு. ஒன்றை உணர்ந்து அறியணும்னா அதை வரம்பில்லாத சக்தினு சொல்ல முடியாது. இதை விஸ்தாரமா பதிவுல எழுத எண்ணம். இங்கே டீசர்.

"புதிய கண்டுபிடிப்புகள் எது வரவேண்டும்?" என்று முன்பு நாங்கள் கேட்டிருந்த கேள்விக்கு அப்பாதுரையின் பதில்.

வரும் என்று எதிர்பார்ப்பது பக்கவிளைவில்லாத பசியடக்கும் என்சைம்.
வரவேண்டும் என்று விரும்புவது குறைந்த செலவில் அதிகமாகத் தயாரித்து வினியோகிக்கக் கூடிய செயற்கை அரிசிக்கான என்சைம்.

வரும் என்று எதிர்பார்ப்பது இணைய வர்த்தகத்துக்கானப் பொதுப் பணம்.
வரவேண்டும் என்று விரும்புவது இணைய வழியே உலகத்தரக் கல்வி.

வரும் என்று எதிர்பார்ப்பது தண்ணீர் தேவைப்படாத சலவை எந்திரம்
வரவேண்டும் என்று விரும்புவது சலவை தேவைப்படாத துணி.

வரும் என்று எதிர்பார்ப்பது தினசரி உபயோகத்துக்கான வயர்லெஸ் மின்சாரம்.

வரவேண்டும் என்று விரும்புவது தினசரி உபயோகத்துக்கான மின்சாரம்லெஸ் சாதனங்கள்.

வரும் என்று எதிர்பார்ப்பது கேன்சருக்கு சிங்கில் டோஸ் மருந்து.
வரவேண்டும் என்று விரும்புவது தலைவலிக்கு சிங்கில் டோஸ் மருந்து.

ஒரு முறையாவது சந்திக்க எண்ணும் நபர்: பில் கேட்ஸ். கேட்க விரும்பும் கேள்வி: ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?

இளைய தலைமுறையினரிடம் இல்லாத, ஆனால் இருக்க வேண்டும் என்று விரும்புவது: மூத்த தலைமுறையின் தவறுகளை அறியும் திறன், மூத்த தலைமுறையின் குறைகளை மன்னித்து மறக்கும் பக்குவம்.

மீண்டும் அடுத்த வாரம்......

225 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் மற்றும் மகிழ்வான நாளாக அமைந்திடட்டும், ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்!

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. 'நோக்கினாலே' ஃபோட்டோக்களில் என் முகம் 'உவ்'வென்றும், 'ஓ' வென்றும் //

    கண்டிப்பா இதுக்கு இன்னிக்கு தேம்ஸ் கமென்ட் வரும் பாருங்க!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஃபோட்டைவைக் கூடப் போடாத ஸ்ரீராம் சும்மா பேச்சுத்தான் இப்படி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வருமோ!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. அவர் எடுத்த ஃபோட்டோவை நான் எப்படி போடமுடியும்? அவர் எங்கே இருக்கிறாரோ...!!!!

      நீக்கு
    3. ///
      'நோக்கினாலே' ஃபோட்டோக்களில் என் முகம் 'உவ்'வென்றும், 'ஓ' வென்றும் ////
      அது கீதா... ஶ்ரீராமுக்கு “போட்டோபோமியா” வா இருக்குமோ?:)... சும்மா சும்மா எல்லாம் ஜிரிக்கிறார் :) ஏன் போட்டோ எடுத்தா மட்டும் ஜிரிக்கிறாரில்லை:)... ஹையோஅவரின் மீசை துடிக்க முன் மீ ரன்னிங்:).. ஹா ஹா ஹா:)

      நீக்கு
  3. என்ன, துரை சாரை காணோம்? இணைய இணைப்பில் பிரச்னையா?

    பதிலளிநீக்கு
  4. பசுக்கள் இருந்த படத்தைப் பார்த்ததும் அட! சென்னையில் இப்படி ஒரு இடம் எங்கே ஸ்ரீராம் என்று கேட்க நினைத்தேன் கடைசில பார்த்தா படம் கர்ட்டசி இணையம்....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பசுமை அதைச் சொல்ல விட்டுப் போச்சு அந்த கமென்டில்

      கீதா

      நீக்கு
    2. சாலையில் இரண்டு மாடுகள் நின்றிருந்ததும், பர்தா அணிந்த பெண்மணி விலகிச் சென்றதும் வீட்டுக்கருகில் கண்ட காட்சி.

      கூட்டமில்லா வரவேற்பும் (பின்னர் கூட்டம் சேர்ந்து விட்டது) போட்டோக்ராபரும் வேறு நாளில் வேறு இடம்.

      மற்றவை எல்லாம் கற்பனை கீதா. ஹிஹிஹி....

      நீக்கு
    3. நிஜமாவே உங்க கற்பனை அசத்தல் ஸ்ரீராம்....உண்மையாவே சொல்வது போல்!!!

      கீதா

      நீக்கு
  5. ஓ ஆமாம் ல துரை அண்ணாவைக் காணலையே! என்னாச்சு?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடுகையில் 'அண்ணா' 'துரை' வந்ததால் இன்று 'துரை' 'அண்ணா' லேட்டோ?

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா.... அண்ணாதுரையும் அப்பாதுரையும் வந்துட்டதால...!!!

      நீக்கு
    3. நான் ஜொன்னனே:) சென்னையை விட்டு வெளியூர் வந்ததும் நெ தமிழனுக்கு கிட்னி என்னமாதிரி வேர்க் பண்ணுது பாருங்கோ ஹா ஹா ஹா:)...

      நீக்கு
  6. ஸ்ரீராம் உங்களை எடுக்கத்தான் அந்த ஃபோட்டோ க்ராஃபர் முயற்சி செய்திட்டிருந்தார்னு நினைக்கிறேன்!!! விதம் விதமா....எடுத்து பயிற்சிக்கு..வெளியில அவர் சமூக வளைத்தளத்துல போட்டுருப்பாரோ?!!!!!..ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி எடுத்தாலும் இவன் மூஞ்சி சரி இல்லையேன்னு யோசிச்சிருப்பார் போல...

      நீக்கு
    2. அப்படியே போட்டாலும் தேம்ஸ்காரங்கனால கண்டுபிடிக்க முடியாது ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்.... நான் தான் போட்டோவில் உவ்வ்ன்று இருந்திருப்பேனே...

      நீக்கு
    4. ஹா ஹா ஹா "ஸ்ரீராம்" இது மட்டும் தான் தெரியும் அவங்களுக்கு...மற்றபடி தெரியாதே!!! நீங்க எப்படி இருந்தாலும்!! அவங்க ஞானியாக இருந்தாலும்! சரி சரி ஞானியார் மண்டை குடையட்டும்!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  7. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீராமின் ஃபோட்டோவுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பா? அவர் தான் போடவே விடறதில்லையே! என்ன காரணமாய் இருக்கும்?

      நீக்கு
    3. ஃபோட்டோ எதற்கு போடவேணும்? நீங்கள் எல்லாம் உங்கள் போட்டோக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறீர்களா என்ன? அதுதான் அக்கா...​! ஹிஹிஹி...

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட ஃபோட்டோ தான் சிரிப்பாய்ச் சிரிக்குதே! எல்லோரும் போட்டுட்டாங்க! :) நான் எவ்வளவு சின்னவள் என்ற என்னோட இமேஜையே தகர்த்து எறிஞ்சுட்டாங்க ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

      நீக்கு
    5. அடிக்கடி வெளியிடுகிறீர்களா என்றுதான் கேட்டேன். :)))

      நீக்கு
    6. நான் எவ்வளவு சின்னவள் என்ற என்னோட இமேஜையே தகர்த்து எறிஞ்சுட்டாங்க ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)//

      ஹா ஹா ஹா...அக்கா எங்க எப்ப போட்டீங்க உங்க ஃபோட்டோவை ஓ ஃபேஸ் புக்கா?!!! அதானே இப்ப பொறந்த குழந்தை நீங்க!! யாருக்கா உங்க இமேஜை தகர்த்தது! சொல்லுங்க ஒரு கை பார்த்துடுவோம்!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    7. ஃபோட்டோ எதற்கு போடவேணும்?//

      அதானே!!!! வேனுன்னா நேர்ல போய் பார்க்கலாமே!! என்ன சொல்றீங்க ஸ்ரீராம்....(ஸ்பாஆஆஆஆஆஆஅ இன்னிக்கு தேம்ஸ்கு வேட்டை!! ஹா ஹா ஹா ஹா)

      கீதா

      நீக்கு
    8. தேம்ஸ் சென்னைக்கு வந்தால் வரவேற்போம்!

      நீக்கு
    9. வரவேற்றால் மட்டும் போதாது:).. செல்பி எடுத்து புளொக்கில போட விடோணும்:)

      நீக்கு
    10. சென்னையை எப்படி செல்பி எடுப்பது?

      நீக்கு
  8. போனவாரம் போன ரிசப்ஷனை நினைவூட்டியது ஸ்ரீராம் சென்ற ரிசப்ஷனின் நினைவலைகள். அதைப் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டுப் பாதியில் நிறுத்தினேன். அண்ணாதுரை சொன்னது அப்படி ஒண்ணும் பெரிய விஷயமாய் இல்லையே! புத்தகங்களை, அதுவும் கேட்பாரில்லாமல் கிடக்கும் புத்தகங்களை எடுத்து வைச்சுக்கிறதும் பிணத்தின் வேட்டியை உருவுவதும் ஒண்ணாயிடுமா? அறிஞர் ஆச்சே! அதான் அப்படித் தோணுதோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தெரியலை. எனக்குத் தப்பாய்த் தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அண்ணாதுரை சொன்னது அப்படி ஒண்ணும் பெரிய விஷயமாய் இல்லையே! //

      அது சரி, இதை அருகிலிருந்துகவனித்து அந்தப் புத்தகத்தில் எப்படிக் கொண்டுவரமுடிந்தது?!!

      நீக்கு
    2. புத்தகங்களை, அதுவும் கேட்பாரில்லாமல் கிடக்கும் புத்தகங்களை எடுத்து வைச்சுக்கிறதும் பிணத்தின் வேட்டியை உருவுவதும் ஒண்ணாயிடுமா? //

      அதே அதே அக்கா எனக்கும் இதே தான் தோன்றியது. இதே கருத்தைச் சொல்ல போனப்ப உங்களுக்கு பதில் கொடுத்தப்ப இதே கருத்தை நீங்க சொல்லிருக்கறதைப் பார்த்துட்டேன் சோ டிட்டோ செய்து ஹைஃபைவ் சொல்லிடறேன். எனக்கும் அவர் புத்தகம் எடுத்தது தப்பா தோனலை..

      கீதா

      நீக்கு
    3. அண்ணாத்துரையின் வார்த்தைகள் 'ரசக்குறை'வாகத்தான் எனக்குப் படுது.

      நீக்கு
    4. //'ரசக்குறை'வாகத்தான்//

      கம்பரசம் எழுதியவராச்சே!

      நீக்கு
    5. ஆஆஆ கம்பபாரதம்- கம்பரசம்.... அதிரா எங்கயோ போயிட்டேன்ன்ன்ன்:)...

      நீக்கு
  9. இயக்குநர் இட்லியை சாவித்திரிக்கு ஊட்ட வராரா? இட்லி பழசோ? சாவித்திரி முகத்தைத் திருப்பிக்கிறார்! அப்பாதுரையின் பதில்கள் எப்போதுமே அருமையாவும் உள்ளார்ந்த ஹாஸ்யம் இழையோடியும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இட்லிதானா?

      அப்பலோ இட்லியா, ஆர்டினரி இட்லியா?

      நீக்கு
    2. ஸ்ரீராம் இயக்குநர் சைடில்தானே வரார்!!! சாவித்திரி இப்படி இருக்கனும் ஹீரோ (ஹீரோ ஹூரோ?!!) இப்படி வரனும்.... காதலன் வரேன்னு சொல்லிட்டு இன்னுமா வரலைன்னு கொஞ்சம் செல்லக் கோபத்துல தோட்டத்துல இருக்கற ஹீரோயினை சமாதானப்படுத்த காஸ்ட்லி இட்லி வாங்கி இப்படி ஊட்டனுன்னு இயக்குநர் நடிச்சுக் காட்டுறாரோ!!!! (அப்போ எல்லாம் அப்போலா இல்லையோ?!!)

      கீதா

      நீக்கு
    3. ஆனா ஸ்ரீராம் அது இட்லி போல இல்லையே பிஸ்கட் நு நினைக்கிறேன்....!!

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம் இப்ப காவேரி இட்லி விலையும் கேக்குறாங்க போல!!!!! கேட்டு வந்துருச்கே மீம்ஸ்!

      கீதா

      நீக்கு
    5. ஹையோ ஹையோ. லைட் மீட்டரை எல்லோரும் இட்லி ஆக்கிட்டீங்களே!
      Jayakumar

      நீக்கு
    6. வேறு பலருக்கும் கூட தெரிந்திருக்கும். எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும்பொழுது, நாம் அதை சீரியஸ் ஆக்க வேண்டாம் என்று நினைத்தேன்.

      நீக்கு
    7. ஜேகே ஸார்.. நேற்றைய இட்லி டிரெண்டுக்காகவே சேர்க்கப்பட்ட படம் அது!

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஸ்ரீராமைப் படம் எடுக்க நினைத்த படக்காரர் ஏமாந்திருப்பார்.

    மாடுகள் நகைச்சுவை மிகச்சுவை. நெடுஞ்செழியன் செய்த காரியத்தில் தப்பென்ன இருக்கிறது.
    அறிவாளிகளைப் பற்றி நமக்கு அவ்வளவாகப் புரியாது.
    சாவித்திரியின் அருகில் மேக் அப்,டச் பண்ணுகிறவராக இருக்கலாம்.

    அந்தப் படமே செயற்கையாக இருக்கிறது.
    சாவித்திரியின் கட் அவுட் போலத் தோன்றுகிறது.மாயமே நான் அறியேன் பாடல் வரும் காட்சி. மிஸ்ஸியம்மாவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாவித்திரியின் அருகில் மேக் அப்,டச் பண்ணுகிறவராக இருக்கலாம்.//

      ஓ அப்படியும் இருக்குமோ!! அது மேக்கப் பஃப்/ஸ்பாஞ்ச்?!!!

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் வெங்கட்.

      வாங்க வல்லிம்மா. சாவித்ரிக்கு பின்னணியில் நிலவைப் போல செட் செய்கிறாரோ என்னவோ...!

      நீக்கு
  11. ஆஹா உங்களை படம் எடுத்துட்டாரா.... கீதாஜி சொன்ன மாதிரி வலைப்பதிவில் வந்திருக்க போது! :)

    அண்ணாதுரை - பிணத்தின் வேட்டி.... இவர் சிஷயருக்கு சிஷ்யரான துரை நினைவுக்கு வருகிறார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு வலை என்றால் என்ன என்றே தெரிந்திருக்காது என்கிற தைரியம்தான் வெங்கட்!

      யு மீன் துரை தயாநிதி?!!!!! முருகா!

      நீக்கு
    2. கிசு கிசு மாதிரி எழுதினா இந்தப் பிரச்சனை. அப்பாவிகளையெல்லாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கவேண்டியிருக்கும், புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். அண்ணாதுரை சிஷ்யன் கருணாநிதி சிஷ்யன் துரை முருகன். இல்லை 'வைகோ' (நான் அரசியல் வைகோவைச் சொன்னேன். தியானம் புரிந்துகொண்டிருக்கும் திருச்சி வை.கோ அவர்களை அல்ல) வாக இருக்கும். ஸ்ரீராம் என்னன்னா... நேர 'துரை தயாநிதி' என்ன கனெக்‌ஷன்.

      இதுக்கு வெங்கட் பதிலளிக்கமாட்டார். அவர் போட்ட பின்னூட்டமே அதிசயம்தான் (அரசியல்னா, காண்ட்ரவர்சியான பின்னூட்டம்னா அவர் அந்தர்த்யானம் ஆகிவிடுவார்).

      நீக்கு
    3. எனக்கு அவர் யாரைச் சொல்கிறார் என்று ஐடியாவே இல்லை. எனவே துரை பெயர்களை சொல்லி வைத்தேன்!

      நீக்கு
    4. சென்னையில இருந்தால் எப்பூடி ஶ்ரீராம் ஐடியா வரும்?:)... ஹா ஹா ஹா

      நீக்கு
    5. ​என்னை சென்னையை விட்டு கிளப்ப சதி நடக்கிறது!

      நீக்கு
  12. சிறையில் நெடுஞ்செழியன் செய்தது பெரிய தவறொன்றும் இல்லையே...
    இதைக்கூட தனது பேறறிவால் 'திருட்டு' என்று கண்டு பிடித்தவருக்கு... நடிகை பத்மினியோடு வாழ்ந்தது மட்டும் கண்ணியமான முறையோ...

    பெரிய மனிதர்கள் சொல்வது, செய்வது எல்லாமே சிறந்தது என்று நம்பும் மூடர்கள் அன்றே அதிகம்... அவர்களின் சந்ததிதானே நாம்.

    தில்லானா மோகனாம்பா'வில் நலம்தானா... என்ற பாடல் உருவானதின் பின்னணியை மக்கள் மறந்து இருப்பார்கள்.

    தமிழகம் இன்று மன்னார்குடியின் வசம் சிக்கியதின் அடிப்படையே உயர்ந்த மனிதர் என்று சொல்லப்படும் இந்தக் குட்டையன்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////பெரிய மனிதர்கள் சொல்வது, செய்வது எல்லாமே சிறந்தது என்று நம்பும் மூடர்கள் அன்றே அதிகம்... அவர்களின் சந்ததிதானே நாம்.////

      நீங்க கண்ணதாசன் அங்கிளைச் சொல்லல்லத்தானே கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்:).. அவர் பெரிய மனிதர் அல்ல தத்துவ ஞானி.... அதிராவைப்போலவேதேன்ன்ன்ன்:)..

      நீக்கு
    2. ஆ... கில்லர்ஜி... நடிகை பத்மினியோட வாழ்ந்தாரா? புதிய செய்தியா இருக்கே... பானுமதி பற்றிதான் ஏதோ சொல்வார்கள்..

      நலம்தானா பாடல் பின்னணி பற்றி சொல்லுங்க ஜி... அறிய ஆவலா இருக்கேன்.

      நீக்கு
    3. //நீங்க கண்ணதாசன் அங்கிளைச் சொல்லல்லத்தானே கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்:).. //

      சேச்சே... அப்படி எல்லாம் இருக்காது அதிரா... அவர் வெளிப்படையான மனிதர்,

      நீக்கு
    4. //கில்லர்ஜி... நடிகை பத்மினியோட வாழ்ந்தாரா ?//

      ஏன் இந்தக்கொலைவெறி ???

      நீக்கு
    5. //நலம்தானா பாடல் பின்னணி பற்றி சொல்லுங்க ஜி... அறிய ஆவலா இருக்கேன்//

      ராணி புருஷன் (அதாவது குட்டையன்) அமெரிக்காவில் முதல்முறை சிகிச்சை பெற்று வந்தபோது பத்மினி நலம் விசாரிப்பதுபோல் நக்கலடித்து கேட்டு பாடுவதுதான்... நலம்தானா.... உடலும் உள்ளமும் நலம்தானா... என்ற பாடல்.

      மற்றபடி சூரக்கோட்டை வி.சி.கணேசனுக்காக பாடிய பாடல் அல்ல!

      நீக்கு
    6. ../கில்லர்ஜி... நடிகை பத்மினியோட வாழ்ந்தாரா ?//..

      ஸாரிஜி... அண்ணா விடுபட்டுப்போய் விட்டது!

      நீக்கு
    7. //தமிழகம் இன்று மன்னார்குடியின் வசம் சிக்கியதின் அடிப்படையே // - கில்லர்ஜி... உங்க அனுமானம் தவறு. அண்ணாவாலயா மன்னார்குடிக்கு வாக்கு வந்தது? அண்ணா கட்சியை, அதற்குப் பிறகானவர் ஒழுங்கா வச்சிருந்தா, ஒழுங்கா தமிழகத்தை ஆண்டிருந்தா, அந்தக் கட்சி எப்படி பிளவுபட்டிருக்கும்?

      நீக்கு
    8. நண்பரே அண்ணா மலையாளியைக் கொண்டு வந்து, அவன் கன்னடத்தியைக் கொண்டு வந்ததின் விணையே மன்னார்குடி என்று சொன்னேன்.

      நீக்கு
  13. திரு. அப்பாதுரை அவர்களின் பின்னூட்டம் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  14. மாடுகளை ஓட்டிச் சென்று சாலையிலிருந்து ஓரமாகத்தள்ளி நிறுத்தி, பசங்களைச் சாலையைக் கடக்க உதவி மாடுகளுக்கு வாழைப்பழமும் வாங்கிக் கொடுத்து வாவ் அந்த மனிதர் வாழ்க!
    என்ன ஒன்றே ஒன்று புன்னகைத்திருக்கலாம்...! என்று தோன்றியது!

    இப்படி கடைக்காரரைப் போல மாடுகளை அவிழ்த்துவிட்டு மேய்க்க வைப்பவர்கள் சென்னையில் எங்கள் வீட்டருகிலும் இருக்க்காங்க...பாவம் மாடுகள் கண்ட ப்ளாஸ்ட்டிக் கவரைக் கூட விழுங்குகிறது...மாடு வளர்த்தா மட்டும் போதாதே...அதை நன்றாகப் பராமரிக்கவும் செய்யனும்...அதனாலேயே நான் இருந்த ஃப்ளாட்டை தொட்டடுத்து இருந்த மாடு வளர்ப்பவர்களிடம் பால் வாங்குவதை நிறுத்தினேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா... இந்த பதிவின் கற்பனை சதவிகிதம் பற்றி,மேலே சொல்லி இருந்தேன்... நீங்க கவனிக்கவில்லை!!!

      நீக்கு
  15. இல்லாத ஒண்ணை உணர்வது இயலாத காரியம். தெரியாத ஒண்ணை உணர ஏதோ ஒரு 'பாதிக்கும்' அடையாளம் தேவைப்படும், இல்லாவிட்டால் உணர முடியாது. உணர்ந்தே அறியக்கூடிய சக்திகளுக்கு வரம்பு உண்டு. ஒன்றை உணர்ந்து அறியணும்னா அதை வரம்பில்லாத சக்தினு சொல்ல முடியாது. இதை விஸ்தாரமா பதிவுல எழுத எண்ணம். இங்கே டீசர்.//

    அருமையா இருக்கு கருத்து!!! அப்பாஜியின் கருத்தைப் பற்றி சொல்லனுமா என்ன?!!! அது சரி ..டீசர் பதிவாச்சோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பின்னூட்டம் கவர்ந்ததாலேயே முதலில் அதைப் பகிர்ந்தேன். அவ்வப்போது சில பழைய பின்னூட்டங்களைப் பகிர எண்ணம்...

      நீக்கு
  16. அப்பாதுரை சகோவின் வரும் என்றதும் வர வேண்டும் என்றதும் சூப்பர்...

    இப்பத்தான் யூஸ் அண்ட் த்ரோ ட்ரெச்ச் கொஞ்சம் வந்துருக்குதே....அண்டர் கார்மென்ட்ஸ் வந்து சில வருடங்கள் ஆகுது 10 வருடம் இருக்கும்னு நினைக்கிறேன்...ட்ரெஸ்ஸும் வந்தாச்சே!!! 7, 8 வருஷம் ஆகிடுச்சு...

    நான் நெட்ல பார்த்திருக்கேன்...சும்மா தேடித்தான் பார்ப்போமேனு தேடினா ஆஹா இதுவும் வந்துருச்சான்னு தோனிச்சு..வடக்கே கொண்டாடப்படும் ஹோலிக்கு அன்னிக்கு மட்டும் யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போடற குர்தாஸ் வந்துருச்சு. 500, 150க்குக் கூட தில்லில சரோஜினி நகர் மார்க்கெட்ல கிடைக்குத்துன்னு விவரம் சொல்லுது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... யாரோ விர் கமெண்ட்டைப் படித்து விட்டு தயார் செய்திருக்கார்கள் போல...! இவருக்கு ராயல்டி கொடுக்க வேண்டாமோ... இளையராஜா கிட்ட சொல்லவேண்டும்!

      நீக்கு
  17. தண்ணி இல்லா சலவை - இதுதான் ட்ரை க்ளீனிங்னு இல்லையோ?!!!! அது ஏற்கனவே இருக்கே...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. நட்பும் சண்டையும் மீண்டும் நட்பும் நல்லாருக்கு ஸ்ரீராம்...ஆனால் சண்டை ரொம்பப் பெரிதானால் புரிதல் இல்லைனா விழும் பள்ளத்தை நிரப்பவே முடியாதே! புரிதல் இருந்தால் மீண்டும் நட்பு நன்றாக இருக்கும் அதற்கு அசாத்திய புரிதல் வேண்டும் இல்லைனா என்னதான் நட்பு நன்றாக இருந்தாலும் ஓரத்தில் அந்த வடு இருக்குமோ?!!!! நல்ல மிக மிக நல்ல புரிதல் இருந்துவிட்டால் விரிசலும் வராதோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதல் இருப்பதால்தான் சண்டை(களு)க்குப் பிறகும் சேர்கிறார்களோ!

      நீக்கு
  19. சாவித்திரி பக்கத்திலிருப்பவர் கையில் இருப்பது இட்லியா?! இட்லியை யாராவது காது கிட்டக்க கொண்டு போவாங்களா?! அது மானிட்டர் சகோ..

    நண்பர்கள்ன்னா சண்டை, சமாதானம்லாம் சகஜம்...

    போட்டோகிராபர் கதை பாதியிலேய் நின்னு போச்சுதே ஏன்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டோகிராபர் கதை கதை இல்லை சகோ... சின்னஞ்சிறு அனுபவம்!

      நீக்கு
  20. கல்யாணத்தில் வேடிக்கை பார்க்க எத்தனையோ விஷயங்கள் இருக்க, மாடுகளை வேடிக்கை பார்த்து விட்டு வந்திருக்கும் உங்களை என்ன செய்தால் தேவலை?

    குப்பையில் கிடக்கும் புத்தகத்தை எடுத்து ஒருவர் பயன்படுத்துகிறார் என்றால், பாராட்டாமல் அதை பிணத்தின் மேலிருக்கும் வேட்டிக்கு ஒப்பிடுவது சரியாக தோன்றவில்லை.
    அப்பாதுரை அவர்களின் விருப்பஙகளும், எதிர்பார்ப்புகளும் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணத்தில் 'வேடிக்கை பார்க்க' மேடைக்கு கீழேயும் யாரும் வரவில்லை. மேடைக்கு ஆள் வரவில்லையே... அதான்!

      நீக்கு
  21. //..இதைக்கூட தனது பேறறிவால் 'திருட்டு' என்று கண்டு பிடித்தவருக்கு...//
    //..பெரிய மனிதர்கள் சொல்வது, செய்வது எல்லாமே சிறந்தது என்று நம்பும் மூடர்கள் அன்றே அதிகம்... அவர்களின் சந்ததிதானே நாம்..//

    கில்லர்ஜியில்லாத பின்னூட்டங்கள் சுவைக்கவில்லையே என்று நினைத்துப் படித்துக்கொண்டிருந்தேன். வந்தார்.. வந்து, போட்டாரய்யா ஒரு போடு!

    இங்கே, தமிழின் தனிப்பெரும் ஆளுமையும், காரசார மேடைப்பேச்சாளருமான ஜெயகாந்தனை கொஞ்சம் ‘கோட்’ செய்கிறேன் - வாசிப்பின்பத்திற்காக. (அண்ணாதுரையின் அஞ்சலிக்கூட்டத்திலேயே இப்படிப் பேசியவர் ஜெயகாந்தன் ):

    ‘’நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து, பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்துவிடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம், அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும் மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிறபொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை....

    அவரை ’அறிஞர்’ என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் ’பேரறிஞர்’ என்று பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள், பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்...’’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர்! அங்கு நிற்கிறார் ஜெயகாந்தன்👌👌

      நீக்கு
    2. ஜெயகாந்தனின் இந்தப் பேச்சு ரொம்பப் பிரபலம் ஏகாந்தன் ஸார்... நானும் முன்னர் படித்திருக்கிறேன், பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஏகாந்தன் ஜி நான் உண்மையைத்தான் உளறினேன்.

      நீக்கு
    4. சரிதான்.
      ஆனால், உண்மையைச் சொல்லுதல் உளறலாகாது!

      நீக்கு
    5. ஆனால் அதே ஜெயகாந்தன் கடைசி நாட்களில் கொஞ்சம் மாறித்தான் போனார்.

      நீக்கு
    6. இல்லை. நான் அப்படிக் கருதவில்லை.

      நீக்கு
  22. @ ஸ்ரீராம்: //...யான் நோக்குங்கால் அருகிலிருப்பவரை எடுப்பது போல திரும்பியும், நோக்காக்கால் என்னையும் போட்டோ எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்...//

    என்ன! உங்களது அவதார நோக்கம் அவருக்கு புரிந்துவிட்டிருக்குமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவதார நோக்கமா? அது என்னது?

      நீக்கு
    2. சாரி, அது ’நோக்க’மில்லை. முக்கியத்துவம் என்றிருக்கவேண்டும்!
      அதாவது எபி ஆசிரியருள் ஒருவராக, கவிஞராக, கேமராமேனாக இப்படி பல்துறை வல்லுநர் என்று..புரிந்துகொண்டுதான் தன் கேமராவைத் தீட்டியிருப்பாரோ!

      நீக்கு
  23. அப்பாதுரை.. அண்ணாதுரை.. தம்பிதுரையும் வருவாரோ என ஒரு கணம் தவித்துப்போனேன்!

    பதிலளிநீக்கு
  24. சாவித்ரியும் சாதாரண ஆசாமியும்:

    ஒரு பெண்ணிடம் எதையாவது கொடுக்கவேண்டுமெனில், எப்படி இரண்டடி தள்ளி நின்று பௌவ்யமாகக் கொடுக்கவேண்டும் எனப் புரிந்துவைத்திருந்தார்கள் அந்தக்காலத்து ஆண்கள் என்று படத்தில் தெரிகிறது.

    அப்படியே, ஒரு ஆண் அருகே வர நேர்ந்தால், அவனையே உற்றுப்பார்த்து அசடுவழியாமல், கொஞ்சம் வேறெங்கோ பார்த்திருந்தால், இன்னும் அழகாகத் தெரிவோம் என்பதும் அந்தக்கால அழகிகளுக்குத் தெரிந்திருந்தது என்று -

    இப்போது சொன்னால், அது out of place ஆகி நிற்குமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்தில் ஒருவர் நம்மை நோக்கியே வருகிறார் எனத் தெரிந்தபின்பும், வேறெங்கோ பார்த்தால்...
      பட்டிக்காடு....
      லெவல் காட்டுறா.....
      இன்னொரு வார்த்தை இருக்கு தெரியுமோ? “வெருள்தல்” என... ஹா ஹா ஹா அப்படி வெருளுறா எனவும் சொல்லிவிட வாய்ப்புண்டு ஏ அண்ணன்:).... காலத்தோடு நாமும் மாறோணுமெல்லோ:)..

      நீக்கு
    2. அடடடடடடடா...... நீங்கள் சொன்ன பிறகுதான் அந்த அர்த்தத்தில் பார்க்கிறேன். உண்மைதான் இல்லை?

      நீக்கு
    3. //இன்னொரு வார்த்தை இருக்கு தெரியுமோ? “வெருள்தல்” //

      வெருளுவதற்கும் மருளுவதற்கும் என்ன வேற்றுமை அதிரா?

      நீக்கு
    4. படத்தில் சீனில் நடிக்க சாவித்ரி ரெடியா மூடுடன் இருக்கிறார். அப்போது 'ஸ்டார்ட்' சொல்லுவதற்கு முன்பாக லைட் ரீடிங் பார்க்கிறார் (அனேகமா க்ளோசப் ஷாட்டா இருக்கலாம்).

      இதுக்கு என்ன மாதிரி கற்பனைகள் உலவுகின்றன. நல்லவேளை, சாவித்திரியைத் தொட்டுப் பார்க்க அவர் சென்றார், சாவித்திரி முகத்தைத் திருப்பிக்கொண்டார் என்று மட்டும்தான் கமெண்ட் வரலை.

      நீக்கு
    5. வெருள்தல் என்றால் அது நல்ல வார்த்தை இல்லை ஶ்ரீராம் வேண்டுமென்றே கண்ணை உருட்டுதல், நெழிதல், இப்பூடி வரும்:)...
      மருள்தல் என்றால் மயங்கி நித்தல் என வருமென நினைக்கிறேன்...

      நீக்கு
    6. வெருள்தால், மருள்தல் இரண்டும் அனேகமா ஒரே பொருள்தான்.

      முதலிரவில், குடித்துவிட்டு வந்திருந்த கணவனைப் பார்த்து அவள் வெருண்டாள். (அஞ்சினாள், பயந்தாள்)
      மாடு வெருண்டு ஓடியது (பயந்து ஓடியது)
      கணவனுக்குத் தெரியாமல் பணத்தை தன் தந்தைக்குக் கொடுத்ததை கணவன் கண்டுபிடித்துவிடுவானோ என்று அவள் மருண்டாள்
      புலியைக் கண்டு மான் மருண்டது (பயந்தது)

      அறியாமையையும் மருள் என்ற பொருளில் குறிப்பிடலாம். இருளில் கயிறைப் பார்த்து அவள் பாம்பு என்று நினைத்து மருண்டாள்

      நீக்கு
  25. ///
    நான் சென்றிருந்த கல்யாண ரிஸப்ஷனில் அவ்வளவு கூட்டமில்லை//
    ஶ்ரீராம் வந்திருக்கிறார் எனக் கேள்விப்பட்டு, ஒரு மருவாதைக்காக கூட்டம் குறைஞ்சு போச்சோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி... நான் வரப்போவது அங்கு யாருக்கும் தெரியாது!

      நீக்கு
    2. இதுக்கு நான் பதில் எழுதினா ஸ்ரீராம் கோபிச்சுக்குவாரு. அதனால் எழுதலை. ஹாஹாஹா. (அடடா... இவங்கள்லாம் வந்துட்டாங்களா.. அப்போ உடனே பந்திக்கு முந்திக்கவேண்டியதுதான் இல்லைனா அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது, என்று எண்ணியிருப்பார்களோ என்று எழுத நினைத்தேன். ஸ்ரீராமின் உருவம்-ஒல்லியோ ஒல்லி-இந்த கமெண்ட்டுக்குச் சரிப்படாது என்று எழுதாமல் இருக்கிறேன் ஹாஹாஹா)

      நீக்கு
    3. //ஸ்ரீராமின் உருவம்-ஒல்லியோ ஒல்லி-இந்த கமெண்ட்டுக்குச் சரிப்படாது//

      ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    4. குட்டித்தாடி... நிறையமுடி... மீசை இல்லை... மெல்லீசு ஆவ்வ்வ்வ்வ்வ்வ் நிறையத் தகவல்கள் கிடைக்குதே 3ராம் பற்றி ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)..

      நீக்கு
    5. அப்போ அதை வைத்து கம்பியூட்டரில் ஒரு படம் வரையச் சொல்லி கண்டு பிடித்து விடலாம்! அப்படித்தானே தமிழ்ப் படங்களில் எல்லாம் கண்டு பிடிப்பார்கள்!!!!!!

      நீக்கு
  26. ///நோக்கினாலே' ஃபோட்டோக்களில் என் முகம் 'உவ்'வென்றும், 'ஓ' வென்றும் அமைந்துவிடும் என்பதால் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அலுத்துப்போய் வெளியே நடந்தேன்.///

    ஹா ஹா ஹா அப்போ போட்டோ எடுக்கவே இல்லையோ?:) அது அந்தக் கமெராமானுக்கு கூட தெரிஞ்சிருக்கும், கஸ்டப்பட்டு ஸ்மைல் பண்ண வச்சு எடுத்தாலும், எங்கும் பப்ளிக்கில் போட்டிடக்கூடாது என மிரட்டிடுவார் ஶ்ரீராம்:).. அப்போ எடுத்து என்ன பிரயோசனம் என நினைச்சு எடுக்காமல் விட்டிருப்பார்:).. ஹா ஹா ஹ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கல்யாண வீட்டுக்கே அந்தப் படங்களை எத்தனை நாட்கள் கழித்துக் கொடுப்பாரோ....

      நீக்கு
  27. ///பின்னர் வந்து பைக்கை எடுத்தார். அவர் பார்வை என்னை ஒருமுறை பார்த்தது. புன்னகைத்தேன். ////
    கமெராவுக்கு மட்டும் உம் ஆ?:)..

    பாராட்டுகிறேனாம். // ஹா ஹாஹா நீங்களாகவே முடிவுக்கு வரக்குடாது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் புன்னகைக்காததன் அர்த்தம் : "போடா புண்ணாக்கு... இங்கதான இருந்தே... நான் வந்துதான் இடை எல்லாம் செய்யணுமா?"

      நீக்கு
  28. ///நம்மளுதுதான். கடையை மூடும்போது நம்ம கூடவே வந்துடும். பக்கத்துலதான் வீடு" என்றுவிட்டு உள்ளே சென்று விட்டார்!//
    கடசி வரைக்கும் ஶ்ரீராம் என்ன சொல்ல வாறார் எனப் புரியவே இல்லை... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /கடசி வரைக்கும் ஶ்ரீராம் என்ன சொல்ல வாறார் எனப் புரியவே இல்லை... //

      அய்ய்யோஓஓஓ... வெற்றி... வெற்றி... நானும் இலக்கியவாதி ஆயிட்டேன்...

      நீக்கு
    2. நீங்க ஜொன்னீங்க ஆனா மறந்திட்டீங்க:).... ஹையோ இந்த மறதியை வச்சே தப்பிடலாம்:)..

      நீக்கு
    3. ஆ.... ஞாபகத்திலகம் ஏஞ்சலுக்கு போட்டியா?

      நீக்கு
    4. https://vignette.wikia.nocookie.net/theunitedorganizationtoonsheroes/images/3/3b/Jerry_mouse_portrait.jpg/revision/latest?cb=20170429030010

      நீக்கு
  29. அந்த சிறையிலிருந்து வெளியே வந்தபின்புதான் கண்ணதாசன் அங்கிளுக்கு எழுத்தில் வேகம் வந்ததுபோல “ போய்வருகிறேன்” எனும் கதைப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://vignette.wikia.nocookie.net/villains/images/3/36/The_Devil_%28Tom_%26_Jerry%29.jpg/revision/latest?cb=20120704024443

      நீக்கு
    2. ஹலோவ் மியாவ் எந்த சிறை :) ?????????
      இந்த சிறையில் இருந்தது அண்ணாதுரை தாத்தாவும் நெடுஞ்செழியன் தாத்தாவும் :)


      /

      நீக்கு
    3. கண்ணதாசன் தாத்தா பற்றி நீங்கள் ரொம்பவே விவரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அதிரா.

      நீக்கு
    4. அல்லோ மிஸ்டர் க அங்கிளும் ஜிறையில் இருந்தார்... கர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  30. ///என்ன செய்கிறார்//
    ஹா ஹாஹா படம் ஆயிரம் கதை சொல்லுது, எவ்ளோ மரியாதையாக மேக்கப் பிரஸ் ஐ எட்டடி தள்ளி நிண்டு பூச றை. பண்ணுறார்:)... மரியாதையைக் கொடுத்தால் .. மரியாதையை வாங்கலாம் என நன்கு தெரிந்திருந்த காலம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைஸா பின்னால் வந்து இட்லியை நிலாவாக்குகிறார்.

      நீக்கு
  31. காணாமல் போயிருக்கும் அப்பாதுரை அண்ணனை நினைவு படுத்தியிருக்கிறீங்க...பில் கேட்ஸ் இடம் கேட்க நினைக்கும் கிளவி:).. ஹா ஹா ஹா இப்போ யாரிடம்தான் சில்லறை இருக்கும்?:)..

    ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ மொபைல் கொமெண்ட்ஸ் முடியல்ல:) அதிலயும் நம்ப மாட்டீங்க வலது கைக்குள் படுத்து என் தோழில் தலை வைத்து டெய்சிப்பிள்ளை குல்ட்க்குள் நித்திரை, ... அவவை அப்படியே அணைச்சுப் பிடித்தபடியே .அதே கை . யால்தான் .. கொமெமெட்ஸ் போட்டு முடிக்கிறேன் ஹா ஹா ஹா...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெய்சிப்பிள்ளையை கேட்டதாகச் சொல்லுங்கள்! அப்பாதுரை அண்ணன் காணாமல் எல்லாம் போகவில்லை! அவரும் ஜீவி ஸாரும் வாட்சாப் குழுமத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது நீண்ட விவாதங்கள் நிகழ்த்துவார்கள்.

      நீக்கு
    2. டெய்சிப்பிள்ளைதான் எங்களுக்கு எலாம்:).. காலை 5..5.30 வந்து குல்ட்டைத் தூக்கச் சொல்லி முகத்தில் தட்டுவா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஓ வாட்ஸப்பில இருக்கினமோ ... மகிழ்ச்சியாக இருந்தால் மகிழ்ச்சியே...

      நீக்கு
    3. ட்ரெயினிங் பத்தாது :) மியாவ் ..நம்ம ட்ரெயினிங்கில் ஜெஸ்ஸி சரியா என் கணவரை மட்டும் எழுப்புவா ஓராயிரம் கற் கர் சொல்லி ..மல்ட்டி நல்லா தூங்கும் நாங்க எழும்பும்போதே எந்திரிப்பா :)

      நீக்கு
    4. மல்ட்டி அஞ்டுவைப்போல , ஜெஸி அதிராவைப்போல ஹா ஹா ஹா:)

      நீக்கு
  32. நானும் அப்பாவி அதிரா போலவும், தி.கீதா போலவும் ஒரு பதிவுக்கு ஒன்பது பின்னூட்டங்கள் போட வேண்டும் என்று பார்க்கிறேன். அந்தக்கலை கைவரவே மாட்டேன் என்கிறதே... ஹூம்!😖

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே.. அதே.. சபாபதே!...

      நம்ம தளத்துக்கு வர்றவங்களுக்கு நன்றி சொல்றதுக்கே (!) நேரம் பத்தலை...

      கண்ணைக் கட்டுதுங்க சாமீய்!..

      நீக்கு
    2. நானும் இந்தக் கருத்துகளை வழிமொழிகிறேன்...

      நீக்கு
    3. 9 என்ன 90 ஏ போடலாம் பானுமதி அக்கா:)... ஆனா என் எனர்ஜிக்கு போட்டியா ஆரும் பேச வரமாட்டினமாம்:).. எல்லோரும் ஓஇரு கொமெண்ட்ஸ் உடன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழே இருந்து பேர்ட் வோச்சிங்:) கர்ர்ர்ர்ர்:) ... இங்குலோடிங். 3ராம்:)))) ஹா ஹா ஹா ( கண்டுபிடிங்கோ)

      நீக்கு
    4. நாலு கமெண்ட்டுக்கு பதில் சொல்லவே நாக்கு தள்ளுது.. இதில் நானூறு கமெண்ட்டா...

      நீக்கு
    5. //நானும் இந்தக் கருத்துகளை வழிமொழிகிறேன்...// சொல்றதுக்கே (!) நேரம் பத்தலை...// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இது தப்பு இல்லையோ? பின்னூட்டம் போடறவங்க, இடுகை எழுதினவங்க என்ன சொல்றாங்கன்னு எதிர்பார்ப்பாங்கன்னு நினைக்கறேன். அப்படி இல்லைனா, அப்புறம், 'ரசித்தேன், அழகு, நன்றி, படித்தேன், ஆஹா அருமை, நல்லா எழுதியிருக்கீங்க, பாராட்டுகள், சரியா வந்திருக்கு' இந்த மாதிரிதான் பின்னுட்டங்கள் வரும். இல்லைனா 'காலை வணக்கம்', 'அப்பால வர்றேன்' (கீதா பெயர்ல ஆரம்பிக்கிறவங்களை வம்புக்கு இழுக்கலைனா எனக்குத் தூக்கம் வராது), 'நன்றிகள்', 'மாலை வணக்கம்' என்றுதான் பின்னூட்டங்கள் வரும்.

      நீக்கு
    6. ஓ... தவறான பொருள் வருகிறதோ... நாராயணா... நான் அப்படிச் சொல்லவில்லை! அதிராவின் பெருமையை உயர்திச் சொல்ல வந்து உளறி இருக்கிறேன்! மன்னிக்கவும்.

      நீக்கு

    7. @நெல்லைத்தமிழன் அன்ட் ஸ்ரீராம் .உண்மையில் நான் இந்த நல்ல வழக்கத்தை அதிராவிடம் இருந்தே கற்றுக்கொண்டேன் .முந்திலாம் என் பக்கம் யாரவது பின்னூட்டம் தந்தா இங்கே பதில் தராம அவங்க பக்கம் ஓடிப்போய் அவங்க பதிவுக்கு பதில் தருவேன் பிறகே மாற்றிக்கொண்டேன் .எழுதறவங்களுக்கு சந்தோஷமும் திருப்தியும் தருவது இப்படி பேசி பழகி சந்தோஷத்தை தரும் அதை யாராவது ஒளிஞ்சிருந்து படிச்சாலும் அவங்க மனசும் சந்தோஷப்படுமே இது நமக்கு வெற்றிதானே :) இதனாலேயே நான் பெரும்பாலும் சந்தோஷமனா விஷயங்களை மட்டும் பின்னூட்டத்தில் சொல்லிடுவேன் .இன்னிக்கு பதிவில் அந்த அதற்கும் முன்பு பத்தி இங்கே ஒரு சம்பவம் நியூஸில் ஆனா ஷேர பிடிக்கலை :)





      நீக்கு
    8. ஸ்ரீராம்.20 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:22
      நாலு கமெண்ட்டுக்கு பதில் சொல்லவே நாக்கு தள்ளுது.. இதில் நானூறு கமெண்ட்டா...///

      ஶ்ரீராம் நாக்கு வெளியே தள்ளுவது எதுக்குத் தெரியுமோ?... நம்மை றீபிரெஸ் பண்ணவே.... பப்பீஸ் பப்பீஸ்ட அப்பா அம்மா அவங்கட டாடி மம்மி எல்லோரையும் கவனியுங்கோ... சண்டையிட்டாலோ கோபம் வந்தாலோ ஓடிக்களைச்சாலோ உடனே நாக்கை வெளியே நீட்டுவினம்... அது தம்மை றீபிரெஸ் பண்ணவே......

      ச்ச்சோஓஓ 4 கொமெண்ட்டில உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளுதோ... றீபிரெஸ் ஆகிடுங்கோ எகயின் நாலு கொமெண்ட்... திரும்படியும் நாக்கை நீட்டுங்கோ எகயின் நாலு கொமெண்ட் திரும்ப நாக்கை நீட்டுங்கோ:)... இந்த ரேஞ்சில போனால் இண்டைக்கெட் 400 போட்டிடுவீங்க...:)... கமோன் த்றீராம் ஸ்ராட் மூசிக்க்க்க்க்க்க்க்:)....

      ஹையோ ஆரது குறுக்கே நிற்பது... அஞ்சு கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ மீ ரன்னிங்ங்ங்ங்ங்:)...

      நீக்கு
    9. உண்மைதான் போஸ்ட்டை விட, கொமெண்ட்ஸ்க்குப் பதில் கிடைக்கும் இடத்திலேயே அதிகம் பேச வருது... ஏனெனில் நமக்கு தேவை கும்மி கோலாட்டம்.... மகிழ்ச்சி..... எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கடமை நேர்மை எருமை:)...

      நீக்கு
    10. நீங்க எந்த நாட்டு ஆட்களை சொல்றீங்க அஞ்சு:)))))) ஹா ஹா ஹா கொமெண்ட்ஸ் இல்லாட்டிலும் ஸ்ரட்ஸ் ல என்னென்னமோ நாடெல்லாம் படிச்சிருக்கினம் நம் போஸ்ட்டை எனக் காட்டுதே:) ஹா ஹா ஹா எனக்கு பூட்டான் லெபனான் ல எல்லாம் ரசிகர்கள் இருக்கினம் தெரியுமோ:)...

      நீக்கு
    11. ஹாங் ஹாங் :)எனக்கு ரஷ்யா போட்ஸ்வானா கென்யா நைஜீரியா மிடில் ஈஸ்ட் ,பாகிஸ்தான் பர்மா தைவான் மொரிஷியஸ் இன்னும் பல ஐரோப்பிய வட தென் அமெரிக்க ஆபிரிக்க நாடெல்லாம் காட்டும் :)))
      நம்ம பதிவை ட்ரான்ஸ்லேட் பண்ணா அடுத்த நிமிஷஜமே காலி ஆனாலும் வியூவர்ஸ் தொடர்ந்து வராங்க :))))

      நீக்கு
    12. அரட்டை அரங்கம்னு பெயர் வைத்து விடலாம்! சுவாரஸ்யம்தான்.

      நீக்கு
  33. அப்பாத்துரை சாரின் எண்ணங்கள் ரசிக்கும்படி இருந்தது.

    //இளைய தலைமுறையினரிடம் இல்லாத, ஆனால் இருக்க வேண்டும் என்று விரும்புவது: மூத்த தலைமுறையின் தவறுகளை அறியும் திறன், மூத்த தலைமுறையின் குறைகளை மன்னித்து மறக்கும் பக்குவம்.// - இது எங்கேயோ இடிக்கிறதே அப்பாதுரை சார்... நீங்க எங்கேயோ உங்க அப்பா ரொம்ப ரொம்பக் கண்டிப்பானவர்னு சொல்லியிருந்தீங்களே (ம ற க் கா ம)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நெல்லை.. நீங்க தொல்லியல் துறையில் பணியாற்றுகிறீர்களா?

      நீக்கு
    2. நோஓ நெ தமிழனுக்குத் தெரிஞ்சதெல்லாம் வல்லியல் மெல்லியல் இடையியல் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)...

      நீக்கு
    3. ஆமாம் அதிரா. எனக்குத் தெரிந்ததெல்லாம் மெல்லியல் (பெண்ணுக்கான உவமை. அவள் மென்மைத் தன்மை மிக்கவள்), இடையிலள் (அதாவது இல்லததுபோல் இருக்கும் இடை... சட்... நினைவுக்கு உடனே தமன்னா வருகிறாரே), வல்லியல்-வலிமையுடைய - அது நான் இல்லைங்கோ.....

      நீக்கு
    4. ஹலோவ் யாராவது எனக்கு நெல்லை தமிழனின் ஹஸ்பண்ட் மொபைல் நம்பர் இல்லேனா மெயில் ஐடி கொஞ்சம் தரீங்களா ..ஒண்ணுமில்லை ரெசிப்பில டவுட்டு கேட்கணும் :)

      நீக்கு
    5. ரெசிப்பிலதானே டவுட்டு - விடுங்க. உங்க வீட்டுல பண்ணப்போறது உங்க ஹஸ்பண்ட். இங்க நான் செய்து செய்து ரெசிப்பி பழக்கமாயிடுச்சு. நாங்க ரெண்டுபேருமே (உங்க கணவரும் நானும்) மெயிலில் பேசிக்கிறோம்....

      சரி..சரி.. நேரமாவுது. போய் டேவடை கிச்சினை கூட்டுங்கோ. அதை மூடி 7 மாதம் ஆயிடுச்சு.

      நீக்கு
    6. ஆமால்ல :) செய்றேன் சீக்கிரமே

      நீக்கு
    7. அப்பாதுரையா, அப்பாத்துரையா?

      நீக்கு
  34. /"யாரோ மாடுகளை விட்டுட்டுப் போயிட்டாங்க" //

    கர்ர்ர் 4 SSSS R EEEE ராம் .அந்த ரெண்டு குழந்தைகளையும் ரோட் க்ராஸ் பண்ணி விட்ருக்கலாமே நீங்க :)

    நான் ஆடு வாத்து எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணியிருக்கிறேன் ட்ரெயினிங் வேணும்னா சொல்லுங்க .ஆடு மேய்ப்பது எப்படி னு விரைவில் ஆன்லைனில் புக் வெளியிட யோசனை .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் போய் ஹெல்ப் செய்வதற்குள் அவர் வந்து விட்டார்... ஹிஹிஹி...

      நீக்கு
    2. https://i.pinimg.com/originals/93/25/b9/9325b91561b508070b44f6bb860c6cfd.gif

      நீக்கு
    3. என்னாதூஊஊ அஞ்சூஊஊ ஆடு மேய்க்கிறீங்களோ பிரித்தானியாவில... எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி வேணும் தூக்கித் திரிய:)..

      நீக்கு
    4. உங்களுக்கு பை one கெட் ஒன்னு இலவசமா ஆட்டுக்குட்டியும் பாபா பா :) சுப்புக்குட்டியும் தரேன் :)))))))))

      நீக்கு
  35. ங்கே ஞே !!! அண்ணாதுரை தாத்தா எதுக்கு அவ்ளோ சீரியஸா யோசிச்சார் ..அந்த மாதிரி கட்டிங்ஸ் இது வேற கட்டிங்ஸ் :) எடுத்து வைப்பது நல்ல பழக்கம்தானே ..நானா இப்படி பழைய பேப்ப ரெல்லாம் கிராப்ட்டுக்கு யூஸ் பண்ணுவேன் ..

    பதிலளிநீக்கு
  36. அது மினி இட்லி மாதிரி இருக்கு :)))))))))))))))))

    இப்போ ஸ்ரீராம்கு எதுக்கு இட்லி பேச்சு :))))))))))))))

    ஹாஹாஹா ஆனா எல்லாருக்குமே புரியும் தெரியும் இந்த இட்லி மீட்டர் சேசே மேட்டர் பூனைக்கு புரியாது அறியாது தெரியாது :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அது சீக்ரெட் வேர்ட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
    2. https://i.pinimg.com/originals/7f/68/10/7f6810e18df7a17d61784d72bf1cec1c.gif

      நீக்கு
    3. ஹையோ ஹையோ ஸ்ரீராம் அரிசியியல் பத்தி தெரிஞ்ச பூனைக்கு அரசியல் பூஜ்யம்தான் :)

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இலங்கை ஜனாதிபதி ஆரெண்டு ஜொள்ளட்டோ? கேழுங்கோ ஜொள்றேன்ன்ன்:)

      நீக்கு
    5. ​இலங்கை ஜனாதிபதிகள் மியூசிக்ல சேர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!​

      நீக்கு
    6. ஹாஹா அதுவும் chair இல்லாம :) மியூஸிகல் சேர் விளையாட்டு

      நீக்கு
  37. // நெடுஞ்செழியன். அதை எடுத்து புரட்ட, அதில், நல்ல படங்கள் பல இருக்கவே, ஒவ்வொன்றாக வெட்ட ஆரம்பித்தார்.//

    ஸ்ஸ்ஸ் அந்த காலத்தில் சிறையில் கத்திரிக்கோல் வைச்சிருக்காங்க !!! எவ்ளோ நம்பிக்கை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... ஆனால் ஏஞ்சல் இவர்கள் எல்லாம் வி ஐ பி என்பதால் A வகுப்பு சிறையில்தான் இருப்பர்கள். அங்கு இது மாதிரி வசதிகள் இருக்கும்.

      நீக்கு
  38. // வரவேண்டும் என்று விரும்புவது தினசரி உபயோகத்துக்கான மின்சாரம்லெஸ் சாதனங்கள்.//
    அவ்வ்வ் அப்போ நாங்க தோசை இட்லிலாம் எப்படி செய்றதாம் :))))))
    ஆனாலும் உண்மையே மின்சாரம் இல்லா சாதனங்கள் ஆரோக்கியத்துக்கு பாதை தான் .

    மூத்த தலைமுறையின் தவறுகளை அறியும் திறன் இளையதலைமுறைக்கு இருக்கு என்று ஆணித்தரமாக சொல்லலாம் .அது மாதிரி மன்னித்து மறக்கும் பக்குவமும் இந்த காலத்து குழந்தைகளுக்கு உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது ஒரு லிஸ்ட் கேட்டால் நீங்க என்னென்ன சொல்வீங்க ஏஞ்சல்..

      நீக்கு
    2. ஹய்யோஓஒ நிறைய இருக்கு சொல்ல ..வரேன் கொஞ்சம் நேரத்தில்

      நீக்கு
    3. எங்க விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சு லிஸ்ட்டை இன்னும் காணம்:).. ஸ்கூல் விட முந்தி லிஸ்ட் வந்திருக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:)

      நீக்கு
    4. நிறைய தோணுச்சு ஆனா அவசரமா டைப்பினா சரி வராது..:) ஆனா அங்கே புதனில் கேள்வி கேட்டுவசிட்டேன் 15 :)

      நீக்கு
    5. 1,ஞாபக சக்தியில் நல்லது மட்டுமே நினைவில் இருக்கிற மாதிரி கோபம் பொறாமை வெறுப்பு துஷ்ட எண்ணம் அழுக்கு எண்ணம் இதெல்லாம் அழிக்கிற ஒரு அழி ரப்பர் வேணும்அல்லது அது ஒரு மேஜிக் wand மாதிரி இருக்கணும்
      இந்த வாண்ட் வச்சி எதிராளியின் மனசில் இருப்பதையும் கெட்டதை அழிச்சிடணும்

      2, யானை முதல் பூனை வரை ரோட்டில் பயமில்லாமா நடமாடனும் அதுக்கு ஒன்லி சுரங்கப்பாதை டியூப் ட்ரெயின் பஸ் மனுஷங்க பயன்படுத்தனும் .ரோட்ல பஸ் ரெயில் போகக்கூடாது .


      3,ஒரு குட்டியூண்டு ஸ்டிக்கர் உடம்பில் ஓட்டிகிட்டா கொசுங்க கண்ணுக்கு நாம் தெரியாம போகணும் :)

      4, பொறுப்பில்லாம மனுஷங்க ரோட்டிலும் கடலிலும் கொட்டும் கழிவுகள் அவங்களையே தேடி வர மாதிரி ஒரு வசதி

      5,கரண்ட் ஒயர் மேலேயே துணி காயப்போடும் வசதி .யாருக்கும் ஷாக் அடிக்காத வயரிங் சிஸ்டம் .

      6, சோமபானம் சுராபானம் குடிக்கும்போது தண்ணி சுவையில் இருக்கிற THEKNIK :) அப்போ எல்லாரும் தண்ணி மட்டுமே ஐ மீன் H 2O மட்டுமே குடிப்பாங்க :)


      7,யாராச்சும் சிகரெட் புடிச்சா புகை வெளியே போகாம டைரக்டா அவங்க லங்ஸ் கே புகையை திருப்பு அனுப்பும் டெக்னீக் சாதனம் .

      8, எல்லார் கையிலும் எப்பவும் பணம் இருக்கும்படி மினி பண மெஷின் .அந்த மெஷினுக்கு அதிகமா பணம் வச்சிருக்கவங்க பேங்கில் இருந்து ஆட்டோமெட்டிக்கா பணம் டைவர்ட் செய்யப்படணும் .
      அம்பானி பாங்க்லருந்து அமிஞ்சிக்கரை ஆட்டோக்காரர் வரை எல்லார்கிட்டயும் ஒரே அமவுண்ட் இருக்கும்

      9, குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வாரங்கனா அது எல்லா சாலையிலும் சென்சர் மூலம் கண்டுபிடிச்சி மைக் போட்டு இந்த வண்டி குடிச்சிட்டு வருது பப்லிக் கவனம்னு சொல்லும் சாதனம்

      இல்லேனா குடிகார ட்ரைவர் ஏறினதும் //நோ நீ குடிச்சிருக்க அதனால் ஸ்டார்ட் பண்ண மாட்டேன்னு சொல்லும் கார் :))

      இதை விட இன்னும் நிறைய இருக்கு இப்போதைக்கு இவ்ளோ தான்

      நீக்கு
    6. அடடே... எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு... கொசு விஷயம் எனக்கு பிடிச்சிருக்கு. யானைக்கும் பூனைக்கும் தனி டிரான்ஸ்போர்ட் ஆரம்பிக்கச் சொல்லாம இருந்தா சரி...

      நீக்கு
    7. ஹாஹா :) கொசு பேட் ,மேட் எல்லாத்துக்கும் வேலையில்லா அதுங்களை அடிச்சி நம்ம ரத்தத்தை பார்க்கிற காட்சியும் இருக்காது

      நீக்கு
  39. கிழித்து எடுக்கப்பட்டது எல்லாம் 'சில்ல்' ஸ்மிதா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி படங்களாக இருந்ததாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க எல்லாம் அப்பவே இருந்தார்களா ஜி...

      நீக்கு
    2. ராஜகுமாரி, பத்மினி, பானுமதி என்பதற்குப் பதிலாக விரல் தவறி அப்பிடி அடிச்சிட்டார் கில்லர்ஜி! சரி, விடுங்க. அதில் ஒருத்தியைப்பத்தி அறிஞ்சரின் கமெண்ட்டைப் பத்தியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிடாதீங்க.. ஏற்கனவே 174 -ஐத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கு கமெண்ட் மீட்டர் !

      நீக்கு
    3. ராஜகுமாரின்னா டி ஆர் ராஜகுமாரியா? அவர்தான் கல்யாணமே பண்ணிக்கலையே ஏகாந்தன் ஸார்?

      நீக்கு
    4. கேயார் விஜயா ,பத்மப்ரியா ஜோ அனுஷ் இவர்களுக்கெல்லாம் முன்னாடி டி ஆர் ராஜ்குமாரியா !!!:) அவங்க படத்தி சேர்ச் பண்ணி பார்த்திட்டு வரேன் இருங்க :)

      நீக்கு
    5. அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டதா யாரு சொன்னது இப்ப? அறிஞ்சரப் பத்திப் பேசிக்கிட்டிருக்கப்ப, அம்மி மிதிக்கலையே.. அருந்ததி பாக்கலையே..ன்னா எப்படி?!

      ஒல்லியா இருங்க.. தப்பில்ல. கொழந்ந்தையாவேற இருக்கணுமா!

      நீக்கு
    6. அப்படி இல்லை... அந்தக் காலத்தில் அவ்வளவு குமுதம் படிச்சிருக்கோம்.. நம்ம கண்ணில் படாமல் போய்விட்டதே என்றுதான்...!!

      நீக்கு
  40. கல்யாண ரிஸப்ஷனில் போட்டோகிராஃபர் உங்களை திருமணவீட்டாருக்கு நெருங்கிய சொந்தம் என்று நினைத்து படங்கள் எடுக்க முயன்று இருக்கிறார். நீங்கள் போஸ் கொடுத்தால் என்ன? அவர் இணையத்திலா வெளியிட போகிறார்?

    மாடு கற்பனை நல்ல கற்பனை, தெருவில் திரிகிற மாடுகளுக்கு இரண்டு சீப்பூ வாழைப்பழம் பெரிய மனதுக்காரார்.

    சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும் நட்பில் சகஜம்.

    அண்ணாவின் பேச்சு நன்றாக இல்லை.

    பழைய பைண்டிங் கலெக்ஷ்னிலிருந்து ஒரு படம் நன்றாக இருக்கிறது.

    //இதை விஸ்தாரமா பதிவுல எழுத எண்ணம்//

    அப்பாதுரை அவர்களை விடாதீர்கள் எப்படியாவது எழுத வைத்து விடுங்கள், எழுதுகிறேன் என்று பாதியில் விட்ட பதிவுகளை தொடராமல் இருக்கிறார்.

    அப்பாதுரை அவர்கள் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    கதம்பம் தேவகோட்டை ஜியை நிறை பேச வைத்து இருக்கிறது.










    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... நான் போஸ் கொடுத்து நொந்து போயிட்டேன். அவர் எடுக்கறதாக காணோம். அதுதான் எழுந்து வெளியே சென்றுவிட்டேன்.

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோமதி அக்கா.

      நீக்கு
    2. பிறந்தநாளா! கோமதிஜியை வாழ்த்துவதில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.
      பல்லாண்டு இனிதே வாழ்க, பரமனருளால்.

      நீக்கு
  41. முன்பெல்லாம் அப்பாதுரை சார் ரெகுலராக பதிவு எழுதிக் கொண்டிருந்தார் பிறர் பதிவுகளுக்கும் கமெண்ட் எழுதுவார் என்பல பதிவுகளுக்கு பின்னூட்ட்ம் எழுதி இருக்கிறார் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் இந்தப் பதிவில் காணும் பின்னூட்டம் எந்தப்[பதிவுக்கு வந்தது என்ற் எழுதி இருந்தால் நலமாக இருந்திருக்கும்/
    இல்லாத ஒண்ணை உணர்வது இயலாத காரியம். தெரியாத ஒண்ணை உணர ஏதோ ஒரு 'பாதிக்கும்' அடையாளம் தேவைப்படும், இல்லாவிட்டால் உணர முடியாது. உணர்ந்தே அறியக்கூடிய சக்திகளுக்கு வரம்பு உண்டு. ஒன்றை உணர்ந்து அறியணும்னா அதை வரம்பில்லாத சக்தினு சொல்ல முடியாது. இதை விஸ்தாரமா பதிவுல எழுத எண்ணம். இங்கே டீசர்.

    பதிலளிநீக்கு
  42. ஆஹா! மாதங்கள் கடந்து வலையில் நுழையலாச்சு.... ரசனையுடனான துணுக்காக பதிவுகள். அப்பாதுரையின் செறிவான பின்னூட்ட்ம்.... பழைய நினைவுகளை மேலெழுப்பி விட்டது ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஆஹா... வாங்க மோகன்ஜி... உங்கள் வரவு நல்வரவாகுக... எங்கள் ப்ளாக்குக்காகவே ஒரு கதை எழுதிக் கொண்டிருந்ததாய்ச் சொன்னபோது பார்த்தது!!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!