திங்கள், 17 டிசம்பர், 2018

"திங்க"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன்! - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி





புதினா பராட்டா – தக்காளி ஊறுகாய்/தயிருடன்….

பராட்டா – முதலில் ஒரு விஷயத்தினை தெளிவு படுத்திவிடுகிறேன் – பராட்டா என்றவுடன் நம் ஊர் மக்கள் இதனை மைதாவில் செய்யப்படும் வீச்சுப் Bபரோட்டாவுடன் குழப்பிக் கொள்கிறார்கள்! இந்தப் பராட்டா வட இந்திய மாநிலங்களில் கோதுமை மாவு கொண்டு செய்யப் படுவது. இந்தப் பராட்டாக்களில் பல வகைகள் உண்டு – லச்சா பராட்டா, ஆலு பராட்டா, கோபி பராட்டா, ப்யாஜ் பராட்டா, மட்டர் பராட்டா, மிக்ஸ் வெஜ் பராட்டா, பனீர் பராட்டா, மேத்தி பராட்டா என இதன் வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். தலைநகரின் பழைய பகுதியில் “பராண்டேவாலி கலி” என ஒரு தெருவே இருக்கிறது – இங்கே பல வகை பராட்டாக்களைச் சுவைக்கலாம் – அதிலும் இரண்டு மூன்று வகைகள் உண்டு – தவா எனும் தோசைக்கல்லில் செய்வது, எண்ணையில் பொரித்து எடுப்பது மற்றும் தந்தூரி அடுப்பில் சுட்டு எடுப்பது – என்று இருக்கிறது.

தலைநகரில் குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. சாதாரணமாகவே நான் இரண்டு வேளை சப்பாத்தி சாப்பிடுபவன். குளிர்காலம் வந்துவிட்டால் மூன்று வேளையும் சப்பாத்தி கொடுத்தாலும் மகிழ்ச்சி தான் – பொதுவாக இந்த ஊரில் குளிர் காலத்தில் அரிசி சாதம் சாப்பிட்டால் இன்னும் அதிகமாகக் குளிரும் என்று சொல்வதுண்டு. அந்த விஷயம் எனக்கும் பிடித்துக் கொண்டது. குளிர் வந்து விட்டால், சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து, சப்பாத்தியும், விதம் விதமான பராட்டாவும் செய்வது வழக்கம். சமீபத்தில் புதினா பராட்டா செய்த போது – மனதில் “ரொம்ப நாளா “திங்க” கிழமைப் பதிவோ, கதையோ எழுதி அனுப்ப”ச் சொல்லிட்டு இருக்காரே நம்ம ஸ்ரீராம், இதையே எழுதி அனுப்பலாமே என்று தோன்ற, இதோ எழுதியாச்சு – “எங்கள் பிளாக்”-ல் பதிவாகவும் வெளிவந்தாச்சு!

பராட்டா – எதில் செய்கிறார்கள் என்பதை முன்னரே சொல்லி விட்டேன் – சப்பாத்தி மாவு – வட இந்தியாவில் கிடைக்கும் சப்பாத்தி மாவு நன்றாகவே இருக்கும் – நம் ஊர் ரேஷன் கடை கோதுமையில் அரைக்கும் மாவு நன்றாக இருப்பதில்லை. இங்கே இருப்பவர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு – நாங்கள் எருமைக்கும் குதிரைக்கும் போடும் கோதுமையை விட தரம் தாழ்ந்த கோதுமை தான் உங்கள் ஊரில் கிடைக்கிறது என்பார்கள்! விதம் விதமான பராட்டாக்களை உண்பதுடன், செய்யவும் செய்வேன். அப்படிச் செய்த புதினா பராட்டா எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - இரண்டு கப்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
காரத்திற்கு – பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் [அ] கரம் மசாலா தூள். நான் கரம் மசாலா தான் பயன்படுத்தினேன்.
எண்ணெய்/நெய்.

எப்படிச் செய்யணும் மாமு?


1 – புதினா இலைகள்; 2 – பொடியாக நறுக்கிய பின்; 3 – கோதுமை மாவு [மேலே அஜ்வைன் [ஓமம்] தூவியிருக்கிறேன்; 4 – கோதுமை மாவின் மேல் பொடியாக நறுக்கிய புதினா இலைகள்

கோதுமை மாவுடன் உப்பு கலந்து கூடவே பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புதினாவினையும் கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போதே பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது கரம் மசாலாவினைச் சேர்த்துக் கொள்ளவும். நான் மிளகாய் சேர்க்கவில்லை – கரம் மசாலா தான் என்பதால் மாவுடன் பிசையாமல் வேறு முறையில் சேர்த்தேன். ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளலாம். மாவு சாஃப்டாக இருக்கும். நன்கு பிசைந்ததும் மாவினை மூடி வைத்து விடவும்.



5 – பிசைந்து வைத்த மாவு; 6 – மூடி வைத்ததைக் கூட ஃபோட்டோ எடுக்கணுமா?; 7 – உருண்டைகளாக உருட்டிய பின்; 8 – பராட்டாவாக இட்டபின்…


9 – எண்ணெய்/நெய் தடவி மேலே கரம் மசாலா தூவியுள்ளது; 10 – நீள வாக்கில் உருட்டியது; 11 – மீண்டும் உருண்டையாக…; 12 – மீண்டும் பராட்டாவாக இட்டபின்…

பதினைந்து நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். சப்பாத்தி மாதிரி இட்டுக் கொண்ட பிறகு கொஞ்சம் எண்ணெய் தடவி மேலே கொஞ்சம் கரம் மசாலா தூவி, அப்படியே இட்ட சப்பாத்தியை நீள வாக்கில் உருட்டி, உருண்டையாக ஆக்கி, மீண்டும் சப்பாத்தியாக இட்டுக் கொள்ளலாம். தவாவில் போட்டு, எண்ணெய்/நெய் விட்டு, இரண்டு புறமும் திருப்பி நன்கு வேகும் அளவிற்கு சுட்டு எடுக்க வேண்டியது தான். எல்லா பராட்டாவும் தயாரான பிறகு, ஊறுகாய் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்! சுவையாக இருக்கும். சிம்பிளான முறை தான் என்பதால் யாரும் செய்ய முடியும்!

தலைநகர் வந்த பிறகு தென்னிந்திய சமையலை விட வட இந்திய சமையலில் தான் அதிக நாட்டம் – சாம்பார், ரசம் என்று சாப்பிடுவதை விட இந்த ஊர் உணவு தான் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது. அவ்வப்போது வட இந்திய உணவு வகைகளை முடிந்தால் “எங்கள் பிளாக்” அல்லது என் தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புதினா பராட்டா முடிந்தால் செய்து பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்! மீண்டும் வேறு ஒரு சுவையான உணவு வகையுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி


===============================================================================================================



     எங்களைப் பொறுத்தவரை இது ஸ்டப்ட் சப்பாத்திதான்!  ஆனாலும் சுவையாக இருக்கும் என்று தெரிகிறது.  அப்புறம் சில சம்பவங்கள் எல்லாம் உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள்.  உங்களுக்கு கதை எழுத வரும்.  உங்கள் முதல் கதையை எங்கள் தளத்தில் வெளியிட ஆசை.  சீக்கிரம் அனுப்புங்கள் வெங்கட்....!  - ஸ்ரீராம்.

120 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம், ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, நெல்லை அப்பால வரும் அனைவருக்கும்..

    வல்லிம்மாவுக்கு மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.. இன்றைய ரெசிப்பி யாருதுன்னு பார்த்தீங்களா?

      நீக்கு
    2. பார்த்துட்டேன் பார்த்துட்டேன்!!! சூப்பர்ல ஸ்ரீராம்!! வெங்கட்ஜியின் திங்க வந்தாச்சு!

      அடுத்து கதையும் வரும் என்று எதிர்பார்ப்போம்!!! நல்லா எழுதறார்ல...

      திங்க கூட சூப்பரா படத்தோடு எழுதியிருக்கார்! அவர் எழுத்து திறமைய கேட்கனுமா சொல்லனுமா என்ன!! செம!!

      கீதா

      நீக்கு
    3. அடுத்து கதையும் வரும்னு எதிர்பார்ப்போம்.... ஹாஹா... வரும் அதுவும் வரும்!

      என் மீது நீங்களும் ஸ்ரீராம் அவர்களும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் பந்திக்கு முந்தி வந்தோர் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஜி! வரப் போகும் அனைவருக்கும், வந்த அனைவருக்கும் காலை வணக்கம்.

      நீக்கு
    3. வரவேற்ற அனைவருக்கும் நன்றி.

      நீக்கு
  3. ஹை நம்ம வெங்கட்ஜி யின் திங்க வா!! வாவ்!! வரேன்...

    அங்கயும் ஆஜர் வைச்சாச்சு அண்ணாச்சியின் கதை மாந்தருக்கு....

    இங்கும் வைச்சாச்சு...வரேன் திங்க அப்பால...இன்னும் காப்பி ஆத்தி கொஞ்சம் வேலை முடிச்சுட்டு


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இன்றைக்கு எங்கள் பிளாக்-ல் என் பதிவு! என் பக்கத்தில் பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு!

      வேலை முடிஞ்சு வாங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. பராட்டா – முதலில் ஒரு விஷயத்தினை தெளிவு படுத்திவிடுகிறேன் – பராட்டா என்றவுடன் நம் ஊர் மக்கள் இதனை மைதாவில் செய்யப்படும் வீச்சுப் Bபரோட்டாவுடன் குழப்பிக் கொள்கிறார்கள்! //

    அதே அதே வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் இந்தக் குழப்பம் உண்டு கீதா ஜி! அதனால் தான் இந்த முன்னோட்டம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இங்கே ராஜஸ்தானி உணவகங்களில் சில வகையான பரோட்டாக்கள் சாப்பிட்டிருக்கிறேன்.... அதிலும்

    தயிருடன் ஊறுகாய் முற்போக்கு கூட்டணி மாதிரி... அமோகமாக இருக்கும்...

    இந்த புதினா பரோட்டாவும் அந்த வகையே...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய உணவகங்களில் இந்த பரோட்டாக்கள் கிடைக்கும். காலை உணவு பெரும்பாலும் பரோட்டா தான் இங்கெல்லாம்.

      தயிருடன் ஊறுகாய் - அமோகமான கூட்டணி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    ஆஹா இன்னிக்கு திங்க கிழமைல நம்ம கைவண்ணமா.... நடக்கட்டும்! இப்பவே கண்ணைக் கட்டுது! யார் யாரெல்லாம் நமக்கு பொங்கல் வைக்கப் போறாங்களோ தெரியல! :)

    தலைப்பு - ஊறுகாய் சேர்த்திருக்கலாமோ...

    ஸ்ரீராம் - என்னை கதை எழுதி அனுப்பச் சொல்லும் உங்கள் தைரியத்தினைப் பாராட்டுகிறேன்!

    கருத்துரைத்த, இனிமேல் கருத்து சொல்லப் போகும் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தலைப்பு - ஊறுகாய் சேர்த்திருக்கலாமோ...//

      சேர்த்துட்டோம்ல...!

      நீக்கு
    2. //ஸ்ரீராம் - என்னை கதை எழுதி அனுப்பச் சொல்லும் உங்கள் தைரியத்தினைப் பாராட்டுகிறேன்!//

      அது நிச்சயம் நடக்கும்லா....!! அதைத்தவிர அங்க வேறொரு கோரிக்கையும் வச்சிருக்கேன்ல... பாத்தியளா?

      நீக்கு
    3. பார்த்தேன் ஸ்ரீராம் அண்ணாச்சி.... பத்மநாபன் அண்ணாச்சிட்ட சொல்லுதேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. //தக்காளி ஊறுகாய் தயிருடன்!//

      ஓ.... மாற்றி விட்டேன்.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் நான் அங்க சொல்ல நினைச்சேன் அண்ணாச்சி கதை எழுதலாமேன்னு அதுவும் எபிக்கு அனுப்பலாமேன்னு....

      இப்பத்தான் அங்கன பாத்தேம்ல நாரோயில்லருந்து தின்னவேலிக்குப் போயிட்டியளோ!!!

      கீதா

      நீக்கு
    6. /////அது நிச்சயம் நடக்கும்லா....!! அதைத்தவிர அங்க வேறொரு கோரிக்கையும் வச்சிருக்கேன்ல... பாத்தியளா?////

      ஆஆஆவ்வ்வ் கண்டு பிடிச்சுட்டேன்ன்ன்ன் பூஸோ கொக்கோ:), கொஞ்ச நாளாகவே ஶ்ரீராம் பிசியாக இருப்பதன் காரணம் இதுதேன்:)... பாசைகூட மாறிட்டுது பாருங்கோ:)... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே......:) ஹையோ மீக்கு நேரமாச்சூஊஊ பாய் பாய் ... இது வேற பாய்ய்ய்ய்ய்ய்ய்....🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      நீக்கு
    7. பாசை கூட மாறிட்டுது பாருங்கோ.... ;)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    8. நேற்று அண்ணாச்சியுடன் தொலைபேசியில் பேசும்போது கதை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்பதானே ஏதோ பதிவுகள் எழுத ஆரம்பிச்சு இருக்கேன், பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார் பத்மநாபன் அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. எனக்கு புரோட்டா சப்பாத்தி என்றால் குருமாதான் சாய்ஸ் அதனுடன் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் வெங்க்ட்ஜி சொன்ன முறையில் நான் மேத்தி சப்பாத்தி பண்ணுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //னக்கு புரோட்டா சப்பாத்தி என்றால் குருமாதான் சாய்ஸ் /

      எனக்கும் அஃதே!

      நீக்கு
    2. வடக்கில் குருமா கிடையாது! விதம் விதமான சப்ஜி - சப்பாத்தியுடன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    3. குருமாவெல்லாம் தமிழ்நாட்டோடு சரி! வடக்கே இல்லை. விதம் விதமான சப்ஜி கிடைக்கும். அநேகமாப் பலரும் ஆலு மட்டரோடு சாப்பிடுவாங்க! ஒரு பராத்தாவிலேயே திணற ஆரம்பிக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஹரியானா பக்கம் இதைத் தவா பூரி எனச் சிலர் சொல்கிறார்கள். தோசைக்கல்லிலேயே நிறைய நெய் ஊற்றிப் பொரித்தெடுப்பார்கள். நெய்யின் மணம் ஊரைத் தூக்கும். தேஷி கீ எனச் சொல்வார்கள்.

      நீக்கு
    4. கீதாக்கா பஞ்சாபி பராத்தா எல்லாம் இம்மாம் பெரிசு திக்காக இருக்குமே பஞ்சாபிகள் அந்த தடி பராத்தாவை மூணு உள்ள தள்ளுவாங்க நமக்கு ஒன்னே முழி புதுங்கும்....அத்தோடு ஒரு பெரிய உசரமான டம்ப்ளர் லஸ்ஸி வேற குடிப்பாங்க...

      பராத்தா எல்லாம் நல்ல திக்கா இருக்கும். சென்னைல ஜஸ் பராத்தான்னு ஒரு கடை இருந்துச்சு செமையா இருக்கும் அங்க பராத்தா. நல்லா தேஷி கீ போட்டுச் சுட்டு இல்லைனா வெண்ணை போட்டு திக்கா அத நாலா கட் பண்ணினா உள்ள வைச்சுருக்கற பூரணம் தெரிய மேல கொஞ்சம் க்ரிஸ்பா ஆனா ஸாஃப்டா செமையா இருக்கும்...இப்ப அந்த ரெஸ்டாரன்ட் எங்க போச்சுன்னே தெரியலை...நான் வீட்டுலயும் திக்கா செய்யறதுண்டு...உள்ள சப்ஜி பூரணம் வைச்சு செய்யறத...

      கீதா

      நீக்கு
    5. தேசி கீ - இது தான் வாழ்க்கையே இங்கே பலருக்கு! ஃபுல்கா ரொட்டி செய்தால் கூட மேலே வெண்ணை அல்லது தேசி கீ தடவி தான் தருவார்கள். கொழுப்பு வேண்டாம் என்பவர்கள் மட்டுமே மேல்பூச்சு இல்லாமல் ட்ரை ஃபுல்காவாக சாப்ப்பிடுவது. நான் என்றால் கூட பட்டர் நான் தான் இங்கே பலரும் சாப்பிடுவது!

      குருமா எல்லாம் தென்னிந்தியாவோடு சரி. சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
    6. இங்கே கிடைக்கும் லஸ்ஸிக்கு ஈடேது! அதுவும் பஞ்சாப், ஹரியானா கிராமங்களில் வீடுகளில் கொடுக்கும் லஸ்ஸி! அதுவும் பெரிய கிளாஸில்! ஒரு கிளாஸ் குடித்தாலே நமக்கு வயிறு நிரம்பிவிடும்! சொம்பில் வைப்பார்கள் - சில நண்பர்கள் வீட்டில் இப்படி சொம்பில் லஸ்ஸி குடித்ததுண்டு! கூடவே மில்க் ஸ்வீட்ஸ்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    7. லஸ்ஸி...

      டேஸ்ட் பார்த்து வருஷங்களாச்சு...

      இப்போ இதைப் படித்ததும் அடுத்த வாய்ப்பில் உடனே குடிக்கவேண்டும்!!

      நீக்கு
  8. இம்மாதிரி மேதி பராந்தா, மற்றக் கீரை வகைகள் போட்டும் செய்யலாம். நான் மிளகாய் வாயில் அகப்படும் என்பதால் பச்சைமிளகாய், புதினா, கொ.ம.இஞ்சி அரைச்சுச் சேர்த்துடுவேன். மேதி என்றால் மட்டும் அப்படியே பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன். பலரும் இந்த தேப்லாவுக்கும் பராந்தாவுக்கும் கூடக் குழப்பிக்கறாங்க! தேப்லா வேறே, பராந்தா வேறே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேப்லா வேறே, பராந்தா வேறே! //

      இப்ப இதை என்னங்கறீங்க கீதாக்கா? தேப்லாவா பரத்தாவா?

      நீக்கு
    2. கீதாக்கா அதே தான் தேப்லாவுக்கும் பராந்தாவுக்கும் குழப்பிக்கறாங்க...

      அப்புறம் பராந்தான்னும் சொல்லுவதுண்டு பராட்டான்னும் சொல்வதுண்டு. பராத்தான்னும்

      திருவனந்தபுரத்தில் இருந்தப்ப கீழ் ஃப்ளாட்டில் ஹரியானா குடும்பம் இருந்தது அவங்க பராந்தா ன்னு சொல்லுவாங்க பஞ்சாபி மக்களும்...

      கீதா

      நீக்கு
    3. கீசா மேடம்... எனக்குத் தெரிந்ததெல்லாம் பராத்தா இல்லைனா பரோட்டா. இந்த 'பராந்தா'லாம், பராந்தக சோழன் காலத்ததோ? ஒருவேளை பராந்தக சோழன் கண்டுபிடித்ததோ?

      நீக்கு
    4. நெல்லைத் தமிழரே, அது வட்டார வழக்கு மொழி! ராஜஸ்தான், உ.பிக்கு வடக்கே பராந்தா, இல்லைனா தவா பூரி! இங்கெல்லாம் பராத்தா! தமிழிலே சொல்றதும் செய்யறதும் புரோட்டா! (மைதா மாவில் முழுக்க முழுக்க) நாங்க அதனால் இங்கெல்லாம் ஓட்டலில் பராத்தாவே சொல்ல மாட்டோம். சப்பாத்தினு கேட்டுப்போம். சில ஓட்டல்களில் ஃபுல்கா கிடைக்கும். அப்படிக் கிடைச்சால் பிரச்னை இல்லை.

      நீக்கு
    5. பராட்டா, பரோட்டா, பராந்தே, பராண்டே இப்படி வட இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி சொன்னாலும் செய்முறை ஒன்றே. நெய்யில் பொரிப்பது, எண்ணையில் பொரிப்பது, தவா-வில் செய்வது, தந்தூரி அடுப்பில் செய்வது என பல விதங்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான ருசி.....

      ஏற்கனவே நெல்லைத் தமிழனினி கேள்விகளுக்கு பதில் சொன்ன கீதா ஜி, கீதாம்மா ஆகியோருக்கும் நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. விறு விறுனு போணியாகி விட்டது போல இன்றைய பதிவு. வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி... எங்கள் பிளாக்-ல் எல்லா நாளும் போணியாகும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. வெங்கட்டின் படங்களும் ஸ்பெஷல். அவர் ரெசிப்பியும் ஸ்பெஷல். டெல்லி நளன்!

      நீக்கு
    3. ஹைஃபைவ் ஸ்ரீராம்!! அதே அதே தில்லி நளன் ...படங்களும் செம...சரி சரி ஸ்ரீராம் பேக் பண்ணுங்க - மத்தவங்கள சொல்லவே வேண்டாம் எல்லாரும் ரெடியா இருப்பாங்க உங்களைத்தான் நகர்த்தனும் ஹா ஹா ஹா ஹா - சீக்கிரம் வாங்க அப்படியே தில்லிக்கு ஃப்ளைட் பிடிச்சு எல்லாரும் போய் நல்லா வெங்கட்ஜியின் சமையலை எஞ்சாய் செஞ்சுட்டு வரலாம்...

      கீதா

      நீக்கு
    4. வெங்கட்ஜி அதே....எபில எல்லா நாளும் போணியாகும்....ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. //உங்களைத்தான் நகர்த்தனும் ஹா ஹா ஹா ஹா - //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

      நீக்கு
    6. ஹா ஹா ஹா சரி சரி பரவால்ல அப்ப நீங்களும் ரெடினு சொல்லுங்க தில்லி போயிட்டு வந்துரலாம்....பூஸார்தான் ஏற்கனவே மோதி அங்கிளோட அப்பப்ப மீட்டிங்க் போடுற ஆளாச்சே...அப்படியே மோதி தாத்தாவையும் பார்த்துட்டு வந்துரலாம்.....அவங்களுக்கு அங்கிள் நா நமக்கு அவர் தாத்தாதானே ஸ்ரீராம்!!!!

      கீதா

      நீக்கு
    7. நோ கீதா மோதி அங்கிள் இப்போ ரொம்ப பிஸி, ஆனா நான் கேட்டால் அப்பொயிண்ட்மெண்ட் தருவார்:) எத்தனை பேர் ஜந்திக்க வருவீங்க என ஜொள்ளுங்கோ அரேஞ் பண்றேன் அதுக்கு ரொம்ப செலவாகுமே:)...

      நீக்கு
    8. படங்கள் - இந்தப் பதிவில் சேர்த்த படங்கள் அப்படி ஒன்றும் அசத்தலாக இல்லை ஸ்ரீராம்! :)

      டெல்லி நளன் - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    9. ஆஹா தில்லிக்கு வரீங்களா... வாங்க வாங்க... என்ன இப்ப கொஞ்சம் குளிர் அதிகம்! அதுக்கு தக்க உடைகளோடு வந்தால் நல்லது! இந்த சீசன்ல தான் காய்கறி எல்லாம் நல்லா கிடைக்கும். கூடவே சோர்வில்லாமல் ஊர் சுற்றலாம்!

      கீதா ஜி, ஸ்ரீராம், அதிரா - இன்னும் யார் யார் வரீங்களோ வாங்க! ஒரு ரவுண்ட் அடிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தேப்லா - சில நாட்கள் வைத்தும் சாப்பிடலாம் - குஜராத்தில் இந்த தேப்லா அதிகம் உண்டு. தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் இங்கே எல்லாம் தேப்லா கிடையாது. பராட்டாவிலும் எண்ணையில் பொரித்து எடுக்கும் பராட்டாக்கள் கூட உண்டு.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேப்லா ஆமாம் ஜி குஜராத்தில் அதிகம். சூப்பரா இருக்கும்.

      அப்புறம் கூபா ரோட்டி - ராஜஸ்தான் - ரோட்டி திக்காக செய்துட்டு அதுல வரிசையா.... கிள்ளுவது போல் லைட்டா கிள்ளி மலையும் பள்ளாமும் போல் வைத்துச் செய்யறது...எல்லாமே சூடா சாப்பிடனும்...

      கீதா

      நீக்கு
    2. ராஜஸ்தான், குஜராத் காக்ராவும் நல்லாருக்குமே....அதுக்கு ஒரு கடலை சட்னி பொடி அல்லது வட இந்திய ஊறுகாய் தொட்டுக்க சூப்பரா இருக்கும்...

      கீதா

      நீக்கு
    3. அந்த கடலை சட்னி ரெசிப்பியைக் கொஞ்சம் அனுப்பலாமே கீதா...

      நீக்கு
    4. அதிரடி, கீதா/தி எப்படிப் பண்ணுவாரோ தெரியாது. நான் வறுத்த வேர்க்கடலையைத் தோல் உரித்து வைத்துக் கொள்வேன். பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றபடி எடுத்துக் கொண்டு எண்ணெயில் வதக்கணும். மஹாராஷ்டிராவில் பூண்டு சேர்ப்பார்கள். அதுவும் 50 கிராம் பச்சை மிளகாய் குறைந்தது 50 கிராம் பூண்டு போடுவாங்க. பூண்டையும் ப.மி.யோடு சேர்த்து வதக்கணும். கொத்துமல்லி பிடிக்கும்னா அதுவும் ஆய்ந்து கழுவி இவற்றோடு சேர்த்து வதக்கணும். எல்லாத்தையும் கொரகொரவென (மிக்சிஜாரில் போட்டு) உப்புச் சேர்த்து அரைச்சு வைச்சுக்கணும். இது தாலி பீத் போன்ற ரொட்டி வகைகளுக்கு நன்றாக இருக்கும். நாங்க பூண்டு சாப்பிடுவதில்லை என்பதால் பூண்டு இல்லாமல் கொ.ம. தான் சேர்ப்பேன். காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் நல்லா இருக்கும்.

      நீக்கு
    5. அப்பவே பதில் கொடுக்கனும்னு நினைச்சேன் ஆனா கண்ணாடி ஃப்ரேம் உடைஞ்சு போச்சு வேற ஃப்ரேம் மட்டும் மாற்றி வர 7 மணி ஆயிடுச்சு. அப்புறம் ஆலு பராத்தா....தொட்டுக் கொள்ள மாங்கா ஊறுகாய் குஜராத் ப்ளஸ் தயிர்.

      கீதாக்கா நானும் இதே தான் மாமியார் போன்றவர்களுக்குப் பூண்டு சேர்க்காமல் ப மி அல்லது காஷ்மீரி சி மி சேர்த்து செய்வதுண்டு. ஃப்ளேவருக்கு க வே, ப கொ சேர்த்து கர கரவென்று பொடித்து....கடலை அதிகம் பொடிக்கக் கூடாதே இல்லையாக்கா எண்ணெய் விட்டுக் கொள்ளும்...

      மற்றபடி பூண்டு சேர்த்து செய்வதுண்டு. நார்த் கர்நாடகா ஸ்டைல் அல்லது மஹாராஷ்ட்ரா ஸ்டைல்....

      கீதா

      நீக்கு
    6. தாலிபீத் அதுவும் சாபுதானா-ஜவ்வரிசி தாலிபீத் உபவாசத்துக்கு மஹாராஷ்ட்ரா டிஷ் ரொம்ப நல்லாருக்கும்...பல வருடங்களுக்கு முன் பூனா போயிருந்தப்ப பக்கத்து ஃப்ளாட் அந்த ஊர் மாமியிடம் கற்றுக் கொண்டது...இதிலும் வேறு வேறு வகைகள் இருக்கு...அவங்க நடுல நாம் அடைக்கு ஓட்டை போடுவது போல் போட்டு செஞ்சுருந்தாங்க...இரண்டு வகை சாப்பிட்டேன் ...சாபுதானா தாலிபீத்தும், எல்லா மாவும் கலந்து கட்டிய தாலி பீத்தும்......கடலை பொடியும் கொடுத்தாங்க...நல்லாருந்துச்சு..

      கீதா

      நீக்கு
    7. கீசாக்கா உங்கள் முறை வேறாக இருக்கு... இங்கு பெங்களூர்+ஆந்திரா கப்பிள் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுக்கு லஞ்க்குப் போயிருந்தபோது, என்ன சட்னி பிடிக்கும் பீநட் சட்னி பிடிக்குமோ எனக் கேட்டா... அதென்ன பீநட்டில் சட்னி என்றேன், உடனேயே பச்சைக் கச்சான் பச்சை மிளகாய் கொஞ்சம் தேங்காய்ப்பூ உப்பு கொஞ்சம் தண்ணி சேர்த்து அரச்சு தந்தா, புளி சேர்த்தாவோ தெரியல்ல... சூப்பரா இருந்தது, அதனாலதான் ஒவ்வொருவரின் செய்முறையையும் அறியலாமே எனக் கேட்டேன்...

      நீக்கு
    8. குஜராத்தில் எந்த சப்ஜி செய்தாலும், அதில் கொஞ்சம் சீங்க் தாணா என அங்கே அழைக்கப்படும் வேர்க்கடலை சேர்ப்பதுண்டு - கொரகொரவென பொடியாகவோ அல்லது முழுதாகவோ - அங்கே கிடைக்கும் வேர்க்கடலை நன்றாக குண்டு குண்டாக இருக்கும்! சுவையும் நன்றாக இருக்கும்.

      கடலைச் சட்னி - இட்லி, தோசைக்கு ரொம்பவே நல்ல காம்பினேஷன். வீட்டில் செய்வதுண்டு. இங்கே இன்னும் இரண்டு மாதத்துக்கு நோ தோசை - மாவு புளிக்காது! பொங்கவே பொங்காது! அரைச்சு வைத்தால் அப்படியே இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி, கீதாம்மா, அப்பாவி அதிரா.

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம். ஆஹா! குளிருக்கு இதமாக பரோட்டா வருகிறேன் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் காலை வணக்கம்,
      வெங்கட் ஜியின் பராத்தா பார்க்கவே சூப்பர். இதமான செய்முறை. அமர்க்களமாக இருக்கு. எல்லோரும் தில்லி சலோன்னு போய் விடலாம. இந்த ஊர்க்குளிருக்கு அந்த ஊர்
      தேவலையாகத் தான இருக்கும். புதினாவோட, ஓமமும் சேர்த்துச் செய்தால் ஜீரணத்துக்குக் குறைவில்லை.
      வாழ்த்துகள் வெங்கட். கதையும் சீக்கிரம் வரட்டும். காத்திருக்கிறோம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....வல்லிம்மாவுக்கு மாலை வணக்கம்!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஓமமும் சேர்த்தால் - நான் சப்பாத்தி மாவு பிசையும் போதே ஓமமும் சேர்த்து தான் செய்வேன் மா....

      தில்லி சலோ - ஆஹா ஆனந்தம். வாங்க வாங்க...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  12. சப்பாத்தி மாவு – வட இந்தியாவில் கிடைக்கும் சப்பாத்தி மாவு நன்றாகவே இருக்கும் //

    வெங்கட்ஜி இங்கும் பங்களூரில் ரொம்பவே நன்றாகக் கிடைக்கிறது கிலோ 30 ரூபாய்தான் சூப்பரா இருக்கு.

    எனக்கும் குளிரில் மூன்று வேளையும் சப்பாத்தி, வித வித பராட்டாக்கள் (ஸ்டஃப்ட் பராட்டா பூரணம் போல் மாவு உருண்டைக்குள் வைத்துச் செய்வது, இந்த ரெசிப்பி படி மாவில் இப்படிக் கலந்து செய்யும் பராட்டா என்று) செய்து சாப்பிட ரொம்பவே பிடிக்கும் இங்கும் இப்போது இப்படித்தான் பெரும்பாலும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... எல்லாத்தையும் ஆராய்ஞ்சு வைங்க. நாங்க அங்க செட்டில் ஆகும்போது (அல்லது ஸ்ரீரங்கம்??) ரொம்ப உபயோகமா இருக்கும்.

      நீக்கு
    2. நெல்லை ஸ்ரீரங்கம்னா கவலையே இல்லையே கீதாக்கா இருக்காஹ, ஆதி இருக்காஹ....

      நானும் இங்க ஆராஞ்சுட்டுருக்கேன் ஆனா நீங்கல்லாம் சிட்டிக்குள்ளபா.....நாங்க புறநகர்ல...

      கீதா

      நீக்கு
    3. அதிரா.... நமக்கு சென்னை டெம்ப்ரவரிதான். எவ்வளவு வருஷம் என்றுதான் தெரியலை. ஆனால் டெம்பெரவரி...

      நீக்கு
    4. இல்ல எனக்கு டவுட்டு டவுட்டாவே வருது:) அந்த பக்கத்து வீட்டுத் திருட்டு மாங்காய் பிடுங்கியதிலிருந்து வீட்டைக் காலி பண்ணச் சொல்லியிருக்கலாம் இல்ல, நெ தமிழனின் குறட்டைச் சத்தம் தாங்காமல் பக்கத்து வீட்டுக்காரர் புகார் குடுத்திருக்கலாம்:)...
      ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:)

      நீக்கு
    5. அதிரா... நீங்கதான் கண் வச்சிட்டீங்க போலிருக்கு. இந்த பில்டிங் செக்ரெடரி இரண்டு வாரங்களுக்கு முன், பக்கத்து பில்டிங்லேர்ந்து இந்த வளாகத்தை எட்டிய எல்லா மரக்கிளைகளையும் வெட்டிட்டார். அதுனால வரும் சீசனில் கடைலதான் மாங்காய் வாங்கணும்.

      நீக்கு
    6. இப்போது தமிழகத்தில் கூட பல ப்ராண்டட் கோதுமை மாவு கிடைக்க ஆரம்பித்து விட்டது - விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நன்றாக இருக்கிறது கீதா ஜி! ஸ்டஃப்ட் பரோட்டா - நானும் செய்வதுண்டு - ஆலு, ப்யாஜ், பனீர் போன்றவற்றில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    7. எங்கே செட்டில் ஆவது என்பதை முடிவு செய்து சொல்லுங்கள். திருவரங்கம் ஓகே - கூட்டம் அதிகமாகி விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    8. //திருவரங்கம் ஓகே - கூட்டம் அதிகமாகி விட்டது. // - என்னால் கூட்டம் அதிகமாகிவிடாது. உங்க பெண் மேல் படிப்பு படிக்கப்போகும்போது, உங்கள் மனைவி தில்லிக்கு உங்களுடன் வந்துவிடலாம். அப்படீன்னா ஒரு குடும்பம் ஸ்ரீரங்கத்தில் குறைகிறதல்லவா? அதை நேர் செய்ய நாங்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்துவிடவேண்டியதுதான். ஹாஹா.

      நீக்கு
  13. //நாங்கள் எருமைக்கும் குதிரைக்கும் போடும் கோதுமையை விட தரம் தாழ்ந்த கோதுமை தான் உங்கள் ஊரில் கிடைக்கிறது என்பார்கள்//

    உண்மையான வார்த்தை.

    படங்கள் ஆசையை தூண்டி விட்டது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  14. காலையிலேயே படித்துவிட்டேன். சூப்பர் ரெசிப்பி. செய்துபார்க்கிறேன்.

    தேப்லா என்பது கொஞ்சம் கடினமா, அட்டை மாதிரி இருக்குமோ?

    இப்படி தில்லியிலேயே இருந்து உணவு விஷயத்துல வட இந்தியரா மதம் மாறிட்டீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////நெல்லைத் தமிழன்17 டிசம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:52
      காலையிலேயே படித்துவிட்டேன். சூப்பர் ரெசிப்பி. செய்துபார்க்கிறேன்.////

      விடுங்கோ என்னை விடுங்கோ ஆரும் தடுக்க வேண்டாம்ம்ம்ம்ம்ம் மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்:).. மசமடவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல் பயர் எஞ்சினுக்கு அடிச்சூஊஉ அதிராவைக் காப்பாத்துங்கோ பிக்கோஸ் மீக்கு நீந்த தெரியாதூஊஊ:)...

      நீக்கு
    2. தேப்லா கடினமாக இருக்காது.

      உணவு விஷயத்தில் வட இந்தியராக.... :) ஹாஹா... தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் அதிக வருட வாசம்....
      அதனால் அப்படித் தோன்றலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    3. எதுக்குதான் தேம்ஸ்ல குதிக்காம இருப்பீங்கன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்.... :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  15. புரோட்டாவின் வேறுபாட்டினை உணர்ந்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  16. இப்படிப்பட்ட பட விளக்கத்திற்கும் செய்முறைக்கும் நன்றி... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. அருமையான சப்பாத்தி...

    சோறு சாப்பிட்டால் குளிர்காலத்தில் இன்னும் குளிரும் என்பது புதுத் தகவல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா வட இந்தியர்கள் சொல்லுவது அப்படித்தான். அவர்கள் தினமுமே வீட்டில் ரொட்டிதான் சாதம் வெகு அரிது. சப்பாத்தி அதுவும் இப்படி யான பராத்தாக்கள் வயிறு ஃபில்லிங்கா ஆயிடும் மற்றும் கோதுமை க்ளூட்டன் இருப்பதாலோ என்னவோ பசி கொஞ்ச நேரம் தாங்கும்...

      வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் எனக்கும் எங்கள் வீட்டில் இப்படிச் சொல்லி சொல்லி மனதில் பதிந்துவிட்டது. சப்பாத்தி வெரைட்டிஸ், பராத்தா வெரைட்டிஸ் நிறைய செய்யக் கற்றுக் கொண்டேன் கல்யாணம் ஆகும் முன்பே. என் மாமா அவர் குடும்பம் ஜெம்ஷட்பூர் டாட்டா நகரில் இருந்தார்கள். வருடா வருடம் லீவுக்கு ஊருக்கு வருவாங்க அப்ப அந்த மாமியிடம் கற்றுக் கொண்டு செய்யத் தொடங்கினேன்...புகுந்த வீட்டிலும் வெரைட்டிஸ் சாப்பிட ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் நிறைய முயற்சிகள் கிச்சனில் நடக்கும்....

      கீதா

      நீக்கு
    2. நீங்கதான் சகலகலாவல்லியாச்சே கீதா... எல்லாம் உங்கட பாட்டி 4 மணிக்கு எழுப்பியதாலதான் வந்தது:)... நான் உருளைக்கிழங்கு .... ஆலுபரோட்டா மட்டும் செய்ததுண்டு.... எனக்கு விதம் விதமா செய்ய விருப்பம் கீதா, ஆனா நெ தமிழன் வீட்டைப்போல நம் உணவுகள் அல்லது இங்கத்தைய பாஸ்ட் பூட் வகைகள்தான் பிடிக்குது வீட்டில்..

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    4. வடக்கத்தியர்கள் அரிசி சாதம் என்றாலே கொஞ்சம் அலறுவார்கள். மாதத்தில் ஒரு முறை சாதம் செய்தாலே, அதை பெரிய செய்தியாகச் சொல்வது உண்டு - Aaj Maine chaaval banayaa.... என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    5. கீதாஜி சகலகலாவல்லி என்ப்தில் சந்தேகம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. படங்களுடன் செய்முறை அருமை.
    சுடச் சுட சாப்பிட்டாலும் குளிருமா வெங்கட்?
    தயிர் சாதம் தான் குளிரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே கோமதி அக்கா... குளிர்நேரம் தயிர் உணவு சாப்பிட்டால் எனக்கு உள்ளங்கால் எல்லாம் ஐஸ் போலாகிடுமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    2. அரிசி குளிர்ச்சி என்பது இங்கே உள்ளவர்கள் சொல்வது. பெரும்பாலும் குளிர்காலத்தில் தயிர் சேர்த்துக் கொள்ள விரும்புவதில்லை இவர்கள். நான் சேர்த்துக் கொள்வது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    3. குளிர்காலத்தில் முன்பெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்! செமயா இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  20. வெங்கட்ஜி அசத்தல் ரெசிப்பி!!! நா ஊறுது! இதுக்காகவே ஃப்ளைட் பிடிச்சு அங்க வந்துரலாம்னு ஹாஹா ஹா

    ஸ்ரீராம் ரெடியா போயிடலாமா....எபி க்ரூப்பை குண்டு கட்டா தூக்கிட்டு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... வெங்கட் ஸ்ரீரங்கத்துக்குச் செல்ல வரும்போது, சென்னைலேர்ந்து எக்மோர்ல/செண்ட்ரல்ல டிரெயின் பிடிக்கிற சமயத்துல பிடிச்சிட்டீங்கன்னா, சென்னைல இருக்கிற நிறையபேரோட டிக்கெட் செலவு மிச்சமாகும். நீங்க என்னன்னா, காஸ்டிலியான வழியை யோசிக்கிறீங்க...

      நீக்கு
    2. ////ஸ்ரீராம் ரெடியா போயிடலாமா....குண்டு கட்டா தூக்கிட்டு!!! /////

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஶ்ரீராமை தூக்கிட்டு எல்லாம் போக முடியாது கீதா:) வேணுமெண்டால் தண்ணிக் கப்பலுக்கு ஏற்பாடு பண்ணுங்கோ:)... ஹா ஹா ஹா நான் எந்த வசனத்தையும் எடிட் பண்ணல்லே இது அந்த புதினா சப்பாத்தி யில் இருக்கும் மிளகாய் மேல் ஜத்தியம்:)...

      நீக்கு
    3. ஆஹா... தில்லி வரலாம்... ஒரு பிரச்சனையும் இல்லை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    4. சென்னை வரும்போது சொல்லாம் வரணும் போல இருக்கே!! ஹாஹா..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    5. மிளகாய் மேல சத்தியமா.... ரொம்ப காரம்!
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  21. கதையும் விரைவில் அனுப்புங்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை - ம்ம்ம்ம். பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  23. அருமையான ரெசிபி அழகான படங்களுடன்!
    ஒரே ஒரு ட்வுட் - புதினாவை பச்சையாகவே சேர்க்கலாமா அல்லது வதக்கிக்கொள்ள வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வதக்க வேண்டிய அவசியம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மி.கி.மா.

      நீக்கு
  24. விதவிதமான பரோட்டாக்களல்லாமல், மிகுந்துபோன சமைத்த டாலுடனும் மாவைச்சேர்த்துப் பிசைந்து,பரோட்டாவோ,ரொட்டியோ செய்வதிலும் தேர்ந்தவர்கள் பஞ்சாபியர். ஸரிதானே? அருமையாக புதினா ரெஸிபி. நீங்கள் எழுதுவதற்கு கேட்கவேண்டுமா? பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா. எத்தனை வகை பராட்டாக்கள் இங்கே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா.

      நீக்கு
  25. புதினாவில் பரோட்டாவா?! புதினா என் வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிக்கும். சீக்கிரத்துலயே செஞ்சிடுறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்த்து சொல்லுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  26. என்னாச்சு... இன்னும் செவ்வாய்க்கிழமை பதிவு வரலையே....

    கீசா மேடம் மட்டும்தான் ஷெடியூல்ட் டயத்துக்கு ரொம்ப முன்னாலேயே வந்து அவசரப்படுத்தணுமா? நானும் செய்கிறேன்.

    அடுத்த பயணம் அக்கா ஊருக்கு.... பின்னூட்டங்கள் தாமதமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தாச்சு வந்தாச்சு செவ்வாய் பதிவு வந்தாச்சு! :) ஷெடியூல்ட் டயத்துக்கு ரொம்பவே முன்னால வந்து அவசரப்படுத்தணுமா! ஹாஹா.... நல்ல போட்டி!

      ஆஹா திருவரங்கம் பயணமா.... வாழ்த்துகள். வைகுண்ட ஏகாதசி திருவிழா - கோலாகலமாக நடக்கிறதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. நெல்லைக்கு அக்கா,தி/கீதா வெங்கட்! அவரைத் தான் சொல்றார். அநேகமா பெண்களூர் போவாரா இருக்கும். )))))) எம்.டி.ஆரில் சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க நெ.த.

      நீக்கு
    3. கீசா மேடம்.... சரியாகச் சொல்லியிருக்கீங்க.

      இந்தத் தடவை எம்டிஆரில் சாப்பிடுவது சந்தேகம். வெளில எங்கும் சாப்பிடமுடியாது . ஒருவேளை பையனைக் கூட்டிக்கொண்டு சாப்பிடப் போகலாம் (அவன் விருப்பப்பட்டால்).

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!