இளநீர் பிட்டு/புட்டு/களி- அடப் போய்யா Pudding
நான் உணவில் பழைமைவாதின்னு நிறைய தடவை சொல்லியிருக்கேன். புது உணவை சாப்பிட முயற்சிக்க மாட்டேன். என் ஹஸ்பண்ட் அப்படி இல்லை. எப்படி இருக்குன்னு சாப்பிட்டுப் பார்ப்பாள். என்னால, வட இந்திய உணவுகள் சிலவற்றை (அதுவும் சிலவற்றைதான். உதாரணமா மட்டர் பனீர், மலாய் கொஃப்தா, கடாய் வெஜ் போன்ற சைட் டிஷ்தான் நான் ரோட்டிக்கு அல்லது ‘நான்’னுக்கு ஆர்டர் செய்வேன். மற்றவற்றை சுவைத்துப் பார்க்கவாவது நான் அவ்வளவாக விரும்பமாட்டேன்) ஏற்றுக்கொள்வேன். மற்றபடி எல்லா உணவுகளையும் சுவைத்துப் பார்க்க விரும்புவதில்லை.
எங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் வெண்டார், நான் அவங்களுக்கு ஸ்பெஷல் கிளையண்ட் என்பதால், தாய்வான் ஒரு முறை சென்றிருந்தபோது, விலை உயர்ந்த ஜப்பானீஸ் ரெஸ்டாரெண்டுக்கு என்னைக் கூப்பிட்டுப்போய் இரவு உணவு அளித்தார்கள். அவங்களை embarrass பண்ணும் விதமா நான் அவங்க ஆஃபர் பண்ணின எதையும் சாப்பிடலை. அரிசி, காய்கள்லாம் போட்டு சூப்பில் கொதிக்க வைத்தமாதிரி (நம்ம ஊர் பருப்புருண்டைக் குழம்பு மாதிரின்னு வச்சுக்குங்களேன்) ஒன்றைக் கொடுத்தார்கள். நான் சாப்பிடுவதுபோல் பாவனை செய்துவிட்டு ஆரஞ்ச் ஜூஸ் சாப்பிட்டேன்.
என் பெண்ணோ, கேக், புட்டிங் போன்று சிலவற்றைச் செய்துபார்ப்பாள். நான் எதையும் சாப்பிடமாட்டேன். (எல்லாம் என்னுடைய வளைந்துகொடுக்காத மனசுதான் காரணம். என்ன செய்ய?). ஒரு விடுமுறை தினத்தில், நிறைய இளநீர், மற்றும் வழுக்கைகளை (இளநீருடன் கூடிய மெல்லிய தேங்காய்களை) வாங்கி வந்திருந்தாள். அதனுடன் சைனா கிராஸ் பாக்கெட்டும் பார்த்தேன். பக்கத்துல பாதாமும் வைத்திருந்தாள். அப்போ, சைனா கிராஸை வாங்கி ஏதோ செய்ய நினைத்து சரியாக வராததை ஒருவர் இடுகையில் எழுதியிருந்ததைப் படித்து ஞாபகத்தில் வந்தது. சரிதான், என்னதான் இவ செய்யறா என்று பார்க்க ஆரம்பித்தேன். எல்லாம் செய்துமுடித்த பிறகு, அதற்கான பாத்திரத்தில் விட்டு, குளிர் சாதனப் பெட்டியில் வைத்தாள்.
மறுநாள் என்னிடம் காண்பித்தாள். பார்க்க அழகாக இருந்தது. ஒன்றை ஆபீசுக்குக் கொண்டுபோனாள். இன்னொன்று அம்மாவும் பெண்ணும் சாப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். குளிர்சாதனத்தில் இன்னொரு பாத்திரத்தைப் பார்த்த நான், அட இவ்வளவு செலவழித்து இதைச் செய்திருக்கிறாளே, வேஸ்டா போயிடப்போகுதேன்னு நினைத்து, அதிலும் அந்த இளநீர் ஞாபகத்தில், நான் சாப்பிட்டுப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அப்புறம் என் பெண், வாட்சப்பில், எனக்குப் பிடித்திருந்தால் முழுவதையும் எடுத்துக்கச் சொன்னாள். சாப்பிட்டேன். ரொம்ப நன்றாக இருந்தது.
இந்த வாரத் திங்கக் கிழமை பதிவுக்கு அந்த ‘இளநீர் ஃபுட்டிங்’.
தேவையான பொருட்கள்
பால் 2 பாக்கெட்
கண்டன்ஸ்ட் மில்க் 20 கிராம்
ஜீனி 1 கப்
சைனா கிராஸ் 10 கிராம்
இளநீர் + இளம் தேங்காய்(வழுக்கை)
பாதாம் பருப்பு உடைத்தது – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதல்ல இளநீரையும் வழுக்கையையும் தனித்தனியாக எடுத்துக்கோங்க. தேங்காயை (வழுக்கையை) மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கோங்க.
இளநீரில் சைனா கிராஸைப் போட்டு மெல்லிய தீயில் சைனா கிராஸ் முழுவதும் இளநீரில் கரைந்து கலக்கும்வரை கொதிக்கவையுங்கள்.
பக்கத்திலேயே, பாலையும் ஜீனியையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, அது கொஞ்சம் கட்டியாகும்வரை கொதிக்கவைக்கவும். அத்துடன் கண்டன்ஸ்ட் பாலையும் சேருங்கள்.
பிறகு இளநீர்+சைனாகிராஸ் மிக்ஸில், இதனைச் சேர்க்கவும்.
இரண்டையும் சேர்த்தபிறகு இன்னும் கொதிக்கவையுங்கள்.
நன்றாக கொதித்தபிறகு, அதில் திருத்திய தேங்காய்களைச் சேருங்கள்.
இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் (ஃபுட்டிங் டிரே) இட்டு, அதன் மீது பாதாம் துகள்களைத் தூவுங்கள்.
இதனை குளிர்சாதப் பெட்டியில் வைத்துவிட்டால் சில மணி நேரங்களில் கட்டியாக ஆகிவிடும்.
அப்புறம் என்ன… எடுத்துச் சாப்பிடவேண்டியதுதான்.
ரொம்ப சுலபமான செய்முறை இல்லையா? சுவையாக இருக்கும். செய்துபாருங்கள்.
குளிர்சாதனத்தில் வைத்துச் சில மணிநேரங்கள் கழித்து, இளநீர் ஃபுட்டிங் ரெடி.
அது சரி… இப்படிச் செய்வதற்குப் பதிலாக, இளநீர், வழுக்கை-இளம் தேங்காய், பால், பாதாம் போன்றவற்றைத் தனித்தனியாகச் சாப்பிடலாமே. கஷ்டத்துக்குக் கஷ்டமும் இல்லை. நேரடியாக சத்து நம் உடம்பில் சேருமே என்று கேட்கிறீர்களா? நீங்கள் என் கட்சிதான். உங்களுக்கும் இந்தச் சிந்தனைக்காக உங்கள் வீட்டில் ஆதரவு இருக்காது. ஹா ஹா ஹா.
குறிப்பு: ஃபுட்டிங் (Pudding) என்று எழுதுவதற்குப் பதிலாக, தமிழில் தகுந்த வார்த்தை இருக்கான்னு தேடினேன். களி, புட்டு, பிட்டு என்பதெல்லாம் சரியான வார்த்தைகளா எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு இதற்குச் சரியான வார்த்தை தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்
நெல்லைத்தமிழன்
இனிய காலை வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குகீதா ரங்கன் மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நீக்குநெல்லை அண்ணே/தம்பி ..இன்னும் பயணம் முடியலையா...அண்ணேன்னு சொன்னது காதுல விழுந்துருக்குமே..!!!
நீக்குகீதா
வந்துட்டேன்.. வந்துட்டேன்.... எங்க... இன்னும் சில நாட்களில் அடுத்த பயணத்தில் உங்கள் ஊருக்குக்கா :-)
நீக்குஅல்லோ நெ தமிழன் ... உங்க ஊருக்கு அக்காஆஆ என தெளிவாச் சொல்லோணும்ம்ம்:)..
நீக்குஅதிரா - இனி கிடைத்த வாய்ப்பிலெல்லாம் 'அக்கா' என்று கீதா ரங்கனை சுலபமாச் சொல்லிடலாம்தான். கேட்டாக்க, அதிராவே அப்படித்தான் சொல்லச் சொன்னாங்கன்னு சொல்லிடலாம். ஆனா அவங்க வீட்டுக்கு எப்போவாவது போக நேர்ந்தால் கோபத்தில் ஒருவாய் தண்ணீர் கூட தராமல் அனுப்பிடுவாங்களே....
நீக்குஹா ஹா ஹா வாசல் படியில வலது காலை எடுத்து வைக்கும் போதே கீதா இருக்கிறாவோ எனக் கேட்கோணுமாக்கும் பின்பு திரும்பும்போது போயிட்டு வாறேன் கீதா அக்காஆஆஅ எனச் சொல்லி திரும்பிப் பார்க்காமல் நடக்கோணும்ம்ம் இந்த தெக்கினிக்கு நமக்குள் இருக்கட்டும்:)
நீக்குநல்ல தெக்கினிக்குதான் அதிரா. ஆனா அவங்க எங்க ஊர்க் காரங்களாச்சே அதிரா. திரும்ப அவங்க வீட்டுக்குப் போகவேண்டாமா?
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்கு@Durai and Sriram & Geetha இன்னிக்கு எழுந்தது ரொம்பவே லேட். ஆறு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாக் கடமைகளை ஆத்திட்டுக் காஃபி ஆத்தும்போது ஆறேமுக்கால் ஆயிடுச்சு. வரவேற்ற இனி வரப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்குகாலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குகாலை வணக்கம் வெங்கட்.
நீக்குஇளநீர்/ பிட்டு/ புட்டு!?...
பதிலளிநீக்குஒற்றைப் பூவாகவும் சூடிக் கொள்ளலாம்..
சரமாகத் தொடுத்தும் சூட்டிக்கொள்ளலாம்.
இளநீர் + வழுக்கை = புட்டிங் ..
ஆகவும் சாப்பிடலாம்...
பூ என்றால் என்ன!..
புய்ப்பம் என்றால் என்ன!..
வாசனை வேணும் நமக்கு!..
அதானே... பெயரா முக்கியம்? சுவைதான் முக்கியம். படங்களையும் விவரங்களையும் படித்த பிறகு "இதை நமக்கு யாராவது செய்து தரமாட்டார்களா?" என்று ஏக்கம் வந்துவிட்டது.. யாரங்கே"ஏன், நீயே செய்து பார்க்கக் கூடாதா?" என்று கேட்பது? அது என் காதில் விழவில்லை!
நீக்குஸ்ரீராம் நான் சென்னையில் இல்லாமல் போய்விட்டேனேன்னு தோனிச்சு....இருந்திருந்தா செஞ்சு கொண்டு வந்து தந்திருக்கலாமேன்னுதான்....
நீக்குஸ்ரீராம் இப்பல்லாம் திங்க பதிவுக்குக் கூட எதுவும் அனுப்ப முடியலை விரிவா ஃபோட்டோ எடுக்க முடியாததால.....அதற்கான வாய்ப்பு அமையவில்லை...
கீதா
வாங்க துரை செல்வராஜு சார்... என்னாதூ... பூ... புய்ப்பம்.... உதாரணமே சரியில்லையே நைனா. சும்மா ஜிலு ஜிலுன்னு தண்ணிமாதிரி தொண்டைக்குள்ள இறங்குறதுக்குப் பதிலா, கேக் கணக்கா சும்மா ஜிவ்வுனு குளிச்சியா தொண்டைக்குள்ள இறங்கும்போது... பூவாவது புஸ்பமாவது....
நீக்குநன்றி சார்.
ஸ்ரீராம் - //"இதை நமக்கு யாராவது செய்து தரமாட்டார்களா?" என்று ஏக்கம் வந்துவிட்டது..// - பாருங்க... ஹஸ்பண்டை, பாஸை இந்தத் தளத்தை ரெகுலராக படிக்கும்படிச் செய்திருந்தால் நம் மனத்தில் உள்ளதை அவங்க அறிந்துகொள்ள சுலபமான வாய்ப்பு கிடைக்குமே....
நீக்குஅட! டெண்டர் கோக்கனட் புட்டிங்க்!!!!! இதில் சில ஜெலட்டின் சேர்த்துச் செய்வாங்க...நான் ஜெலட்டின்சேர்க்க மாட்டேன் என்பதால் இதே போன்று அகர் அகர்/ சைனா க்ராஸ் போட்டு செய்ததுண்டு...ரொம்ப நல்லாருக்கும். என் மாமியாரே சாப்பிடுவாங்க. அவங்களுக்கு இப்படி ஈசியா கடிக்காம முழுங்கும் பதார்த்தங்கள் ரொம்ப பிடிக்கும்...அதே போன்று மைத்துனர் ஒருவருக்கும்....
பதிலளிநீக்குகீதா
இதான் இந்த கீதா கிட்ட... அவங்க செய்து பார்க்காத டிஷ் ரொம்பக் கம்மி!
நீக்குகீதா க்கா ....
நீக்குசாப்பிட ஆசையா தான் இருக்கு ..எனக்கும் நீங்களே செஞ்சு குடுதுடுங்க்க்
ஹா ஹா ஹா ஸ்ரீராம் அப்படி எல்லாம் இல்லை....நிறைய செய்யாதது இருக்கு....இப்படிச் செய்து பார்த்தது எல்லாமே என் புகுந்த வீட்டினரில் பெரும்பான்மையோர், என் கஸின்ஸ் என் அப்பா எல்லாருமே என் பையன் கேக்கவே வேண்டாம்....பு வீ குழந்தைகள் எல்லாருமே புதுசா செய்தா விரும்பி சாப்பிடுவாங்க...பெரும்பான்மை பிடிச்சிருக்கும்...பெரும்பான்மை பிடிக்காததை செய்ததில்லை....அவ்வளவுதான் மேட்டர்...நான், என் பையன், கடைசி மைத்துனர், நாத்தனார்கள் இருவர் எல்லாருமே களம் இறங்குபவர்கள்..அதனால எல்லாரும் கூடினா புதுசு புதுசா தான்.. ..கினிபிக்ஸ் இருக்கும் போது என்ன கவலை ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
அனு செய்துடலாம்........லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்...(நீட்டினது உங்க ஏரியா தூரத்துக்காக ஹா ஹா ஹா ஹா)
நீக்குகீதா
வாங்க கீதா ரங்கன். உங்க கிட்ட நான் வியக்கறது... நிறைய வெரைட்டில்லாம் செய்து பார்க்கும் அந்த எண்ணமும் உழைப்பும்தாம். ரொம்ப திறமையானவங்க நீங்க.
நீக்குஎன் பெண் சேர்க்கும் பொருட்களில் ரொம்ப சென்சிடிவ். என் பையனும் வாங்கும் பொருட்களில் என்ன என்ன இன்கிரிடியண்ட்ஸ் இருக்குன்னு உன்னிப்பாப் பார்ப்பான். நான் இதில் முன்னெல்லாம் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. நான் வாங்கி வந்தப்பறம், அதில் 'Egg Powder' சேர்த்திருக்கான் என்றெல்லாம் கமெண்ட் செய்து அவங்க ரிஜெக்ட் செஞ்சபோதுதான் (அந்த ஊரில் வைத்து), நான் ரொம்ப கவனமாப் பார்த்து வாங்குவேன். அவங்க பல சாக்லெட் பிராண்டுகளை அதனால் ரிஜெக்ட் செஞ்சிருக்காங்க.
எப்போதுமே விரும்பிச் சாப்பிடுபவர்கள் இருக்கும்போதுதான் நிறைய செய்துபார்க்கத் தோணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாப்பிடுபவர்கள், ஏதோ வயித்தை ரொப்பினால் போதும் என்று மெகானிக்கலாகச் சாப்பிட்டால் வெரைட்டியா செய்துபார்க்கத் தோணாது. அதுவரைல நீங்க லக்கிதான்.
உங்க பொண்ணு ரெசிப்பியும் பார்த்துக்கறேன்...வரேன் காபி ஆத்திட்டு...
பதிலளிநீக்குகீதா
இதென்ன புதுச் சாக்கு. காபி ஆத்தறது என்று சாக்கு சொல்வது (இல்லைனா கஞ்சி ரெடிபண்ணணும்னு சொல்றது) எ.பிளாக்கில் ஒரே ஒருத்தர்தானே. அந்த உரிமையையும் நீங்க எடுத்துக்காதீங்க கீதா ரங்கன்.
நீக்குஆஹா.... புட்டிங்க் பார்க்க நன்றாக இருக்கிறது. சமீபத்தில் சென்ற ஊரில் புட்டிங்க் என்ன வேண்டும் எனக் கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
பதிலளிநீக்குதிருவனந்தபுரம் சென்றபோது இளநீர் மற்றும் நுங்கு சேர்த்து ஒரு பானம் சுவைத்தேன். Ultimate taste.....
வருகைக்கு நன்றி வெங்கட். நீங்க எப்படித்தான் இவ்வளவு பயணங்கள் மேற்கொள்கிறீர்களோ... அதுவும் ஒவ்வொரு ஊரில் உணவும் வேறுபடும்... ஒன்றை அனுபவிக்கணும்னா இன்னொன்றை இழக்கணும் என்பது உண்மைதான்.
நீக்குஆமாம்... அது என்ன புது பானம் திருவனந்தபுரத்தில்? சொல்லுங்க... வாய்ப்பு இருக்கும்போது நானும் தேடி வாங்கிச் சுவைப்பேனே..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅற்புதமா இருக்கு பார்க்க. சுவைக்கவும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். எல்லாமே உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கக் கூடிய பதார்த்தங்கள் தான்.
உங்கள் மகள் பல்கலை வித்தகியாக இருப்பார் என்று தெரிகிறது முரளிமா. குழந்தைக்கு நல் வாழ்த்துகள். செய்து சாப்பிட ஆசைதான்.
வாங்க வல்லிம்மா.... என் பெண் அவளா மனசு இருக்கும்போது இதுமாதிரி ஏதேனும் செய்துபார்ப்பாள். (அவள் ரொம்ப பிஸி... எப்போவாவது அவளுக்குத் தோணணும்). சில நாட்களுக்கு முன்புகூட எங்களுக்கு சர்ப்ரைஸா மட்டர் பனீர் (எனக்குப் பிடிக்கும்னு) செய்தாள். ஆனாப் பாருங்க, என் மனசுல, எதுக்கு அவளுக்கு வேண்டாத வேலை, கஷ்டம்... நானே செய்துடுவேனே என்று தோன்றும்.
நீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அனைவருக்கும் வணக்கம் , வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்கு//அட இவ்வளவு செலவழித்து இதைச் செய்திருக்கிறாளே, வேஸ்டா போயிடப்போகுதேன்னு நினைத்து, அதிலும் அந்த இளநீர் ஞாபகத்தில், நான் சாப்பிட்டுப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அப்புறம் என் பெண், வாட்சப்பில், எனக்குப் பிடித்திருந்தால் முழுவதையும் எடுத்துக்கச் சொன்னாள். சாப்பிட்டேன். ரொம்ப நன்றாக இருந்தது.//
பதிலளிநீக்குவேஸ்டா போக கூடாது என்று சாப்பிட்டு பார்த்தீர்களா?
குழந்தைசெய்தவுடன் சுவைத்துப் பார்த்து பாராட்டினால் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும் .
இப்போதும் மகளுக்கு அப்பா சாப்பிட்டுப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும்.
புதுமைகளை செய்து பார்க்க, செய்து கொடுக்க ஏற்ற வயது மகளுக்கு .பாராட்டுக்கள்., வாழ்த்துக்கள்.
படங்களுடன் செய்முறை அருமை.
பக்கத்து வீட்டில்(மாயவரத்தில் இருக்கும் போது) அரிசியை அரைத்து அதனுடன் சாதம் சேர்த்து அரைத்து கொஞ்சம் சீனி, ஏலக்காய் கலந்து (தோசை மாவு பக்குவத்தில் இருக்கும் அந்த கலவை) அதை குக்கர் பாத்திரத்தில் ஊற்றி வேக வைத்து இப்படி வெட்டி தருவார்கள். அது நினைவுக்கு வந்து விட்டது.
குழந்தைசெய்தவுடன் சுவைத்துப் பார்த்து பாராட்டினால் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும் .
நீக்குஇப்போதும் மகளுக்கு அப்பா சாப்பிட்டுப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னதில் மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும்.//
கோமதிக்கா ஹைஃபைவ்......நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்....அதுக்குள்ள உங்க கமென்ட் பட்டுவிட்டது...
யெஸ் யெஸ் யெஸ்........அதே அதே நெல்லை உங்க மகளுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்....நானும் இப்படித்தானெ..இப்போதும் கூட புதுசா ஏதாவது செய்து பார்க்க விருப்பப்படுவேன்...
கீதா
வாங்க கோமதி அரசு மேடம்...
நீக்கு//வேஸ்டா போக கூடாது என்று சாப்பிட்டு பார்த்தீர்களா?// - சரியான பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க. உண்மைதான். எனக்கு எதையும் புதிதாக முயற்சி செய்து சாப்பிடமாட்டேன்.
என் பெண், அவளுக்குத் தோணும்போது ஏதேனும் செய்வாள் (ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை.. அவளுக்கு இதுக்கு நேரம் கிடையாது. திடுமென்று போர் அடிக்கிறது என்று தோன்றினால், ஏதேனும் ரெசிப்பியோடு சமையலறையில் புகுந்துகொள்வாள்). அவ்வப்போது அத்தகைய செய்முறைகளையும் (ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருந்தாலும்) பகிர்ந்ந்துகொள்கிறேன்.
அரிசியை அரைத்து, வெல்லம்.... தோசை மாவு பதத்தில் - இதனைப் படித்தபோது எனக்கு 7வது படிக்கும்போது தாளவாடி என்ற ஊரில், எங்களுக்கு பால் கொண்டுவந்து தருபவர், சீம்பாலை, இட்லிபோல் செய்து தந்தார். அதாவது சீம்பாலை எடுத்து அப்படியே இட்லித் தட்டில் ஊற்றி வேகவைப்பது. ரொம்ப நல்லா இருந்தது. அதற்கு அப்புறம் அந்தமாதிரி சாப்பிட்டதே இல்லை.
கோமதி அரசு மேடம்/கீதா ரங்கன்(க்கா) - //செய்தவுடன் சுவைத்துப் பார்த்து பாராட்டினால்// - நான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே... எனக்கு உடனடியாக பாராட்டும் குணமே கிடையாது என்று.. இதைப் பற்றி என் அலுவலக அனுபவங்களையே எழுதலாம்...... எல்லாம் பிறவிக் குணமோ? ஹா ஹா ஹா.
நீக்குஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நெல்லைத் தமிழன்.
நீக்குவாழ்க வளமுடன்.
மிக்க நன்றி கோமதி அரசு மேடம்....
நீக்குநான் இளநீரை கொதிக்கவிடுவதில்லை. கொஞ்சம் தண்ணீரில் தான் அகர் அகரை கொதிக்கவிடுவதுண்டு.
பதிலளிநீக்குஇளநீரை அப்படியே சேர்த்துக் கொள்வேன். அதாவது அகர் அகர் நன்றாக ஆறியதும்.
பாலை நன்றாக திக்காக்கிக் கொண்டுவிடுவேன் சட்டென்று செய்ய வேண்டும் என்றால் மட்டும் கண்டென்ட்ஸ்ட் மில்க் சேர்ப்பேன் அதுவும் பாலைக் குறைத்துக் கொண்டு சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு க மி சேர்ப்பதுண்டு. வழுக்கை கொஞ்சம் அதிகமாகச் சேர்ப்பதுண்டு...மற்றபடி இதே மெத்தட்தான்...
டேஸ்ட் நல்லாருக்கும்....கிட்டத்தட்ட இளநீர் பாயாசம் போலத்தான்....ஆனால் அகர் அகர் சேர்க்க மாட்டோமே பாயசத்தில்..
கீதா
அட... இதுவும் நல்ல மெதடாகத்தான் இருக்கு கீதா ரங்கன். எனக்கும் அவ பண்ணும்போது எதுக்கு இளநீரைக் கொதிக்க வைக்கிறா.. சத்து போயிடாதோ என்று தோன்றியது....
நீக்குநான் இளநீர்ப் பாயசம், மைலாப்பூரில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன். எனக்கு அவ்வளவாகப் பிடிக்கலை. இதையா இப்படி ரொம்பப் பெரிய இதுவாகச் சொன்னார்கள் என்று தோன்றியது. நானும் நிறைய பாயச வகைகள் செஞ்சு பார்த்திருக்கேன். (பண்ணினா எனக்கு அண்டா நிறையத்தான் பண்ணத் தெரியும் அப்போ). சமீபத்தில் தென் தமிழ் நாட்டில் ஒரு கோவிலில், புஷ்கரத்தின்போது உணவு சாப்பிட்டபோது அங்கு செய்திருந்த சிம்பிள் பாயசம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போவே அதில் ஜீனியும் சேர்த்திருக்காங்கன்னு தெரிஞ்சுவிட்டது. என் ஹஸ்பண்டும் அங்கு வந்திருந்ததால் அவள் சென்னையில் எனக்குச் செய்து தந்தாள். மிகவும் பிடித்திருந்தது (ஆனால் உங்களில் நிறைய பேர் அதனைச் செய்திருப்பீர்கள்). அதனை ஒரு நாள் செய்து தி.பதிவுக்கு அனுப்புகிறேன்.
இளநுங்கில் இப்படி புட்டிங் செய்தது உண்டு. ஆனால் அதன் முக்கியத்துவம் அதாவது அதன் மூலத்தன்மை, அதன் அசலான நன்மைகள் போயிடுமோனு ஒரு எண்ணம். ஆகவே பின்னர் முயற்சிக்கலை. என்றாலும் நுங்குத் துண்டங்களைச் சுண்டக்காய்ச்சிய பாலில் போட்டு அடித்துச் சாப்பிட்டால் நன்றாகத் தான் இருக்கும். இதுவரை இப்படிச் செய்தது இல்லை. உங்க மகள் நல்ல கற்பனாவளம் பொருந்தி யோசிச்சுச் செய்யறா. வாழ்த்துகள்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
பதிலளிநீக்குகீதாக்கா யெஸ் நுங்கும் இப்படி செய்யலாம்னு சொல்ல வந்தேன் இடையில் வேலைகள் வந்ததால் போய் வந்து பார்க்கும் போது நீங்களே சொல்லிட்டீங்க....ஆமாம் நுங்கு சுண்டக் காய்ச்சிய பாலில் போட்டு சூப்பரா இருக்கும்...ஆனால் நானும் சமீபகாலமாக சர்க்கரை தவிர்த்து வருவதால்...எனக்க்கு என்றுமே தவிர்க்கனும் தான்...ஆனால் வீட்டிலுள்ளோர் எல்லாருமே வயதாவதால் தவிர்க்க வேண்டியதாகிப் போனதால் செய்வது மிகவும் குறைந்து போனது. சென்னையில் இருந்தப்ப அவன் நுங்கு சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது என்பதால் அவனும் ஆசையாகச் சாப்பிடுவான் என்பதால் அவன் வந்தப்ப நுஞ்சு அப்படியேவும் சாப்பிட்டான்... நுங்கு புட்ட்டிங்க் மற்றும் மில்க் ஷேக் அடித்து கொடுத்தேன் ...அதன் பின் செய்யவில்லை...
நீக்குகீதா
கீதா சாம்பசிவம் மேடம்.... வாங்க.. இள நுங்கில் எனக்கு தோலை எடுப்பது கடினமான வேலை (நுங்குத் தண்ணீர் வெளியே வந்துவிடும். அப்புறம் தோல் எடுப்பது இன்னும் கஷ்டமாகிவிடும். தோலெடுக்காமல் சாப்பிட்டால் கொஞ்சம் துவர்ப்பாக இருக்கும், அது உடம்புக்கு நல்லதென்றாலும் எனக்கு அவ்வளவு இஷ்டமாவதில்லை)
நீக்குநான், நுங்கையும் பாலையும் சேர்த்து மிக்சியில் அடித்து சாப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு நன்றாக வரவில்லை.
இப்போ இங்கு 10 நுங்கு (சுளைகள்) 70 ரூபாய் என்று கடந்த வாரத்தில் வந்தது. உங்க ஊரில் நுங்கு கிடைக்குமோ இந்த சீசனில்?
//நானும் சமீபகாலமாக சர்க்கரை தவிர்த்து வருவதால்...//
நீக்குகீதா ரங்கன்.... எனக்கு இனிப்பு எப்போதுமே ரொம்பவும் பிடிக்கும். சமீபத்தில் என் உறவினர் ஒருவர், ஒரு சில பிராணாயாம பயிற்சிகளைச் செய்யச் சொல்லிவிட்டு (ஒரு மாத பிராஜக்ட்) அதன் மூலம் எந்த கிரேவிங்கும் குறைந்துவிடும் என்று சொன்னார். நான் அதனை சரியாகக் கடைபிடித்தும்... பாருங்க இனிப்பு சாப்பிடும் ஆசை அதிகரித்ததே தவிர குறையவில்லை.
சமீபத்தில் நான் சாப்பிடும் இனிப்பில் அளவு அதிகமாகிறது. ஒரே கவலையாவும் இருக்கு... ஒருவேளை சுகரில் கொண்டுவிடப்போகிறதோ என்று...
செய்முறை சுலபமாகத்தான் இருக்கிறது வீட்டில் சொல்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி... பயணங்களினால் (கேமரா இப்போவெல்லாம் கொண்டுசெல்வதில்லை. மொபைலிலேயே படங்கள் எடுக்கறேன், வாட்சப்பும் பார்க்கிறேன். அதனால் தளங்களுக்குச் செல்வதில்லை, பேட்டரி சார்ஜ் போயிடும் என்று). இந்த மாதிரி பக்திப் பயணங்கள், எ.பி. ஆசிரியர் ஒருவரின் விழாக்கொண்டாட்டத்தில் ஆரம்பித்தது. இன்னும் தொடர்கிறது.
நீக்குஆகா
பதிலளிநீக்குசாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது
வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்... ஒரு நாள் உங்கள் ஊருக்கு வந்து, உங்களுடனும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுடனும் தஞ்சைப் பெரிய கோவிலையும், ராஜராஜன் காலம் சம்பந்தமான பள்ளிப்படைகளையும் பார்க்கணும்னு ஆசை... பார்ப்போம் எப்போ வாய்ப்பு கிடைக்கிறது என்று...
நீக்குபார்க்கவே அழகாக இருக்கிறது.. மகளின் ஆர்வத்துக்கு பாராட்டுகள்..நாங்களும் ஒருமுறை செய்து பார்த்தோம்..சைனா கிராஸ் இருக்கு.. உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்..
பதிலளிநீக்குவாங்க ஆதி வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஎன் அப்பா நான் செய்ததை சாப்பிட கொஞ்சம் யோசிப்பார்...:) ஆனால் என் கணவர் அப்படியல்ல...:))
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா....ஆதி சூப்பர்....பாருங்க உங்க மேல வெங்கட்ஜிக்கு என்ன நம்பிக்கைனு!!! ஹா ஹா ஹாஹ்
நீக்குஎங்க வீட்டுல எல்லாரும் ரொம்பவே சாப்பாட்டுக்கு மட்டும் ஆதரவு!!! ஹிஹிஹிஹிஹி
கீதா
ஆதி வெங்கட்... உங்க ஒரு வரி என்னை மிகவும் யோசிக்க வைத்தது... ஒரு ஸ்டேஜுல நிறைய ஆண்களுக்கு, போதும் சாப்பிட்டது (வெரைட்டியாக) என்று தோன்றிவிடும். அப்போ மனைவி தருவதைத் தவிர பிறர் தருவதையோ அல்லது ஹோட்டல் போன்ற வெளியிடங்களுக்குச் செல்வதையோ மனது தவிர்த்துவிடும்.
நீக்குஎன் அப்பாவும், 'அம்மாவைக் கூட்டிக்கொண்டுபோ, நான் வரலை' என்று சொல்லுவார். இப்போவே, நானும் அதனைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்...
//என் கணவர் அப்படியல்ல...:))// - நாம் செய்வதை விட, பிறர் செய்துபோட்டால் அது தரும் உற்சாகமே தனி... நிச்சயம் உங்களுக்கும் அப்படியே இருக்கும்..
நீக்கு
பதிலளிநீக்குஇறுதி படத்தில் வந்திருப்பது பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது....சுவைக்கவும் அருமையாக இருக்கும் என நினைக்கிறேன்
வாங்க மதுரைத் தமிழன் துரை அவர்கள்.. இன்னும் நீங்க ரொம்ப பிஸியா? கருத்து எழுதாவிட்டாலும், உங்கள் தளத்தை நான் விரும்பிப் படிப்பேன் (எனக்குப் பிடித்தவர்களை நீங்கள் கன்னா பின்னாவென்று விமர்சித்தபோதும்).
நீக்குசுவைக்க நல்லா இருந்ததனால்தான் இதனை நானும் சாப்பிட்டேன்... இங்கும் பகிர்ந்துகொண்டேன்... என் பெண் ரசமலாய் செய்தாள். கடைகளில் ஏதோ ஒன்று சேர்ப்பதை அவள் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த ரொம்ப சாஃப்ட்னெஸ் மிஸ்ஸிங்.
புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது...!
பதிலளிநீக்குஆமாம் திண்டுக்கல் தனபாலன். அதனால்தான் அனுப்பிவைத்தேன். வருகைக்கு நன்றி.
நீக்குரசித்தேன், ருசித்தேன். அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...
நீக்குதலைப்புப் பார்த்து உள்ளே வந்து, படம் பார்த்தனா அப்படியே பெயிண்ட் ஆயிட்டேன்ன்ன்ன் எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோஓஓஒ....
பதிலளிநீக்குஎந்தத் தலைப்புப் போட்டாலும் மயங்கியிருக்கமாட்டேன்ன் இது புட்டு எண்டு போட்டிட்டாரே.... டமில் சாவதை விடமாட்டேன்ன்ன்ன் இதோ புறப்படுறேன்ன்ன்ன்ன்:)..
எல்லா ஆங்கில வார்த்தைக்கும் டமில் தேடக்கூடாது, அப்படி எனில் bread க்கு என்ன டமில்???? நாங்க பாண் என்போம்:) அது ஜிங்களமாமே ஹா ஹா ஹா...
இது அகரகர் புடிங்..... அச்சோ அஞ்சு இந்தப் பக்கம் வராமல் இருக்கோணும் ஜாமீஈஈ:), இல்லை எனில் நான் செய்த அகரகர் ஐ மேடை ஏத்திடுவா:)...
அதானே ஞானி அதிரா தமிழ்ல டி ஆக்கும் எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க!!!! ஞானிக்கு தமிழ் இனி மெல்லச் சாகும்னு சொன்னா அம்புட்டுத்தேன்....பொயுங்கி எழுந்துருவார்...அதனால நெல்லை இனி தமிழ்ல டி வாங்கினவங்க கிட்ட கொஞ்சம் கன்ஸல்ட் பண்ணிக்கோங்க ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
அப்பூடிச் சொல்லுங்கோகீதா... புடிங்கைப்போய்ப் புட்டாமே ஹையோ என்னால முடியல்ல விடுங்கோ என் கையை விடுங்கோ மீ தேம்ஸ்ல குடி:) க்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:)..
நீக்குhttp://gokisha.blogspot.com/2012/09/blog-post_7006.html
நீக்குநீங்க ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு அதை நானா செய்யாம விடுவேனா :) அதுவும் இது டிசம்பர் மாசம் எல்லாருக்கும் கிஃப்ட் உண்டாச்சே :)
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர், ஆனா அஞ்சு இப்போ லிங் பார்த்துப் போய்ப் படிச்சனா.. ஹப்பியா இருந்துது:)
நீக்குவாங்க அதிரா.... சில தொகுதிகள்ல வாக்குகளை எண்ணும்போது, திடுமென்று ஒரு கட்சிக்கு வாக்குகள் மட மடவெனச் சேர்வது மாதிரி, நீங்க வந்த திடும் என்று பின்னூட்டங்கள் அதிகமாயிடும்... இன்றைக்கு அப்படிப் பார்த்தபோது (எண்ணிக்கையை மட்டும்) நீங்க வந்திருக்கீங்களோன்னு மனதில் பட்டது. வருகைக்கு நன்றி (ரொம்ப பிஸியாக இருந்தபோதும்).
நீக்குநான் தமிழ்த் தலைப்பு வைக்கலாம் என்று எண்ணி (கில்லர்ஜியை மனதில் நினைத்துத்தான்), தேடியபோது வந்த வார்த்தைகள் எனக்கும் பிடித்தமாயில்லை. ஃப்புட்டிங் என்று சொன்னாலே நல்லாத்தான் இருக்கு.
பிரெட் ஐ நாங்கள் ரொட்டி என்போம். இல்லை பன் (Bun வடிவத்தில் இருப்பதை) என்று சொல்லுவோம். சும்மா தனித் தமிழில் சொல்றோம் என்று வெதுவெதுப்பான் என்றெல்லாம் சொல்வது எனக்குப் பிடித்தமாயில்லை. எது சொல்வதற்கு புரிவதற்கு எளிதோ அந்த அந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுத்தணும். பேருந்து நிலையம் (Bus Stand) சொல்வதற்கு எளிது, அதனால் மக்கள் மனதில் நிலைபெற்றிருக்கிறது. குளம்பி என்று காபியைச் சொல்வது மக்கள் மனத்தில் நிலைபெறவில்லை.
நீங்கள் அகரகர் புட்டிங் என்று எழுதினதைப் பார்த்தபோதே எந்த இடுகையில் படித்திருக்கிறோம், அது சரியாக வரவில்லை என்று எழுதியதை என நான் யோசித்தேன் (உண்மைல, என் பெண் பண்ணும்போதே.... இந்த சைனா கிராஸ் ஐட்டம் ஒருத்தருக்கு சரியாக வரலைன்னு படித்தோமே... என்று யோசித்தேன்).
பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டிக்கொள்ளக்கூடாது என்று சொல்வதைப்போல, உங்கள் செக் உடனேயே அந்த இடுகையை இங்கு எடுத்துக்கொடுத்துவிட்டார் (பாருங்க... அதில் நான் பின்னூட்டம் போட்டிருந்தும் நீங்கள் மறுமொழி கொடுக்கலை...)
“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்ம்”:)))
மிக்க நன்றி.
ஹா ஹா ஹா ஓ அதில் கொமெண்ட் போட்டீங்களோ மீ பார்க்கிறேன்ன்ன்:)...
நீக்குஇப்படியான விசயத்துக்கெல்லாம் அவ கண்ணில விளக்கெண்ணெயோடு தீவா, அலர்ஜியும் போயிடும் தூக்கமும் வராது அவவுக்கு...
அதெப்படி னு தெர்ல எனக்கு ஜுரம் ஹெடேக் அலர்ஜி இவ்ளோ ஏன் என்ன நிலையில் இருந்தாலும் உங்க லிங்கை குடுத்து கலாய்ச்சாதான் உடம்பே சரியாகுது ..
நீக்குஅஞ்சூஊஉ அப்போ என் டொக்டர் பீஸைத் தாங்கோஓஓஓ
நீக்குநெ தமிழன் நீங்க புடிங் என்றே சொல்லியிருந்தால் நான் ஏன் ரென் சனாகப் போறேன்ன்ன்ன் இது புட்டு எனப் போட்டு டமில் தேடியதால் பொயிங்கிட்டேனாக்கும்:)
நீக்கு/////அதிலும் அந்த இளநீர் ஞாபகத்தில், நான் சாப்பிட்டுப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.////
பதிலளிநீக்குஆஆஆ ஆட்களுக்கு முன்னால நான் சாப்பிட மாட்டேன் என நடிச்சுப்போட்டு, களவா ரேஸ்ட் பார்த்திருக்கிறார் ஹா ஹா ஹா எங்கள் அப்பாவிலும் இந்தக் குணம் இருந்தது:)..
இல்லை அதிரா... நான் சாப்பிட்டிருக்கமாட்டேன். இதில் இன்கிரிடியண்ட்ஸைப் பார்த்து, குளிர்சாதனத்தில் இருந்தது அழகாக இருந்ததால் சாப்பிட்டுப்பார்த்தேன். (இதில் சிறிது சேமியா சேர்த்திருக்கலாமோ... இல்லை டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கலாமோ என்றெல்லாம் தோன்றியது. பெண்கிட்ட சொல்லியிருந்தால், போப்பா... உங்களுக்குத் தெரியாது என்று சொல்லியிருப்பாளோ?)
நீக்குஇருப்பதை விட்டுப்போட்டு பறக்கிறதுக்கு ஆடைப்படாதீங்கப்பா எனச் சொல்லியிருப்பாவோ ஹா ஹா ஹா
நீக்குமகள் சூப்பராகச் செய்திருக்கிறா, மிக அழகாக வந்திருக்கு. கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்திருக்கிறா அதனாலதான் கட்டியாக வந்திருக்கு, நான் பல வழிகளில் கொண்டன்ஸ்ட் மில்க் சேர்க்காமல் அகர் அகர் புடிங் செய்திருக்கிறேன், பதம் கட்டியாக எடுக்க முடியாமல் விட்டு விட்டென்.
பதிலளிநீக்குஅதிரா க மி கொஞ்சம் நிறைய சேர்த்தாலும் சரி அல்லது கார்ன் ஸ்டார்ச் சேர்த்தாலும் கட்டியாக வரும்...
நீக்குகீதா
@athira
நீக்கு// பதம் கட்டியாக எடுக்க முடியாமல் விட்டு விட்டென்.// haaaaahaaaa
https://i.pinimg.com/originals/e7/26/af/e726af7e5faef3499ed1c5cd6aa7e17c.gif
எனக்கு இப்போ அகர் அகர் செய்யும் ஆசையே போயிட்டுது:)
நீக்குஅதிரா... சிலபேர்... பொ றா மை னால உங்களை கலாய்ப்பாங்க. ஆனா அதுக்கெல்லாம் நீங்க அசரலாமா?
நீக்குஅடுத்தது அகர் அகர் சேர்த்து செஞ்சு பாருங்க. என்ன இருந்தாலும், வெந்நீர், தயிர் சாதம் செய்முறைக்கு அப்புறம் தேவதைக் கிச்சனுக்கே பூட்டுப் போட்டவங்களைப் பார்த்து நீங்க பயப்படலாமா, தயங்கலாமா?
/கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 100000000000 டைம்ஸ் for நெல்லை தமிழன் ..
நீக்குஇப்போ சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க 2019 நீங்க மயக்கம் போட்டு விழற அளவுக்கு ரெசிப்பிசும் பதிவுமா போடுவேன் இது அதிரா செஞ்ச களி அகரகர் மேல் யானை :) ஆனை ஆணை
நீக்குஅச்சச்சோஒ நெல்லைய்ஹ் தமிழன் இது தேவையா உங்களுக்கு... ச்ச்ச்சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்திட்டீங்களே... மீ 2019 ல அந்தாட்டிக்கா போகிறேன்ன் மோடி அங்கிள் வரச்டொல்லி வன் லெக்கில நிக்கிறார்ர்ர்:)
நீக்கு//2019 நீங்க மயக்கம் போட்டு விழற அளவுக்கு ரெசிப்பிசும் //
நீக்குஅதிரா.... எனக்கு தமிழ் சரியா படிக்க வருதான்னு இப்போ சந்தேகம் வந்துடுத்து. நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்..
மயக்கம் போடற அளவு ரெசிப்பின்ன அது, அனெஸ்தீஷியாவுக்கு உபயோகப்படுகிற மருந்துகள்தான். அதைத்தான் தேவதைக் கிச்சன்ல வெளியிடப்போறாங்களா? சொன்னீங்கன்னா, எனக்குத் தெரிந்த பார்மஸிஸ்டுகளுக்குச் சொல்லுவேன். அவங்க வீட்டிலேயே செஞ்சு கடைகள்ல விற்க ஆரம்பிக்கலாம்.
அது நெல்லைத்தமிழன் கிட்டத்தட்ட இது ஒரு ஒபரேசனும் சக்ஸசும் மாதிரி, நம்மை மயக்கிப் போட்டுக் கொமெண்ட் போடப் பண்ணி தன் ரெசிப்பி யூப்பர் எனச் சொல்ல வைக்கப்போறா.. இந்த வலையில மீன்கள் மாட்டலாம் மீ மாட்ட மாட்டேன்ன் மீ தண்ணி மாதிரி:)
நீக்குஇனிமே சொல் இல்லை ஒன்லி செயல் :)
நீக்குஏஞ்சலின்... உங்களுக்கும் நேற்றைக்கு பிறந்த நாளா? தாமதமான வாழ்த்துகள்.
நீக்குஇன்று போல எப்போதும் மன மகிழ்ச்சியோட வாழ்க்கை அமையப் ப்ரார்த்திக்கிறேன்.
இல்ல இல்ல நான் நேத்து பிறக்கலை :)
நீக்குஆனா அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றீஸ் :)
நெல்லைத் தமிழன் அஞ்சுவுக்குப் போன மாதமே முடிஞ்சுது
நீக்கு'அங்க' இப்படி சொல்லியிருக்கிறார் ஒருவர். அதற்கு மறுமொழி எதுவும் கொடுக்கலையே நீங்க. (70ம் பிறந்த நாள் கண்டவர் சொன்னது). ஒருவேளை பிறந்த நாள் கொண்டாட்ட மயக்கத்தில் எழுதிவிட்டாரா?
நீக்குஅஞ்டுவுக்கு வருடத்தில ரெண்டு பி நாள் வருதாக்கும் ஹா ஹா எதுக்கும் விடியட்டும் பார்ப்போம்:)
நீக்குhaahaa :) இப்போ தான் கவனிச்சேன் ..அவர் சரியா சொல்லியிருக்கார் பாருங்க தேதி :)
நீக்குபடங்கள் எல்லாம் சூப்பர் நெல்லை...செய்த விதமும் ரொம்ப நல்லாருக்கு..
பதிலளிநீக்குபல்கலை வித்தகி உங்க பொண்ணுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! நெல்லை
கீதா
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.
நீக்குஇரண்டு வகையாக யோசிக்கலாம்.
ஒண்ணு, இருக்கும் ஒரு திறமையை கடுமையான உழைப்பின்மூலம் வளர்த்துக்கொண்டு, பெரிய ஆளாக ஆக முனைவது. திறமை இருந்தாலும் முயற்சி செய்தாலும் துறையில் முன்னணிக்கு வருவது பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.
இரண்டு, எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் ஈடுபாடு காண்பித்து வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுவது. இதில் பெரிய ஆளாக வர வாய்ப்புகள் குறைவு.
என் பெண் இரண்டாவதைத்தான் விரும்புகிறாள். வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி
நுங்கு இளசிலும் சரி இளநீர் வழுக்கையிலும் சரி தேங்காய்ப்பால் சேர்த்து செய்யலாம். அது ஒரு தனிச்சுவையோடு இருக்கும். மில்க் க்ரீமும் சேர்த்துச் செஞ்சா செம ரிச்சி ரிச்சி...தான்...
பதிலளிநீக்குஇபப்டி பல காம்பினேஷன்ல செய்யலாம். எங்க வீட்டுல ஒரு தடவை இதோடு சாக்கலேட் சிரப் போட்டு ஒரு வாண்டு கேட்க....அப்படியும் செய்ததுண்டு..அம்பேரிக்காகாரங்க வீட்டு கிட் என்பதால் அவங்க வீட்டுல ஹெர்ஷே சிரப் இருந்துச்சு...ஸோ அது விட்டு செஞ்ச்துண்டு ஆனால் அந்த வாண்டு மட்டும் விரும்பி சாப்பிட்டது...மற்றவர்களுக்கு சாக்கலெட் டாமினேத் செய்து அதன் சுவை மட்டுமே தெரிந்ததால் சாக்கலேட் சிரப் போடாமல் மற்றவர்களுக்கு...
கீதா
ஆமா கீதா ரங்கன்... சாக்லெட் ஆசை உள்ளவர்களுக்கு இதில் சாக்லேட் சேர்த்தால் பிடிக்குமாயிருக்கும். ஆனால் வெனிலா மணம், தேங்காய்பால் இதெல்லாம் இயற்கையாக இந்த புட்டிங்கில் சேர்வதுபோல சாக்லேட் சேருமான்னு தெரியலை.
நீக்குhttp://www.neelscorner.com/china-grass-chocolate-recipe-chef-zakir/
நீக்குவரும் இங்கே பாருங்க ..மகள் கிட்ட சொல்லி செஞ்சு சாப்பிடுங்க
சூப்பரான ரெசிபி..
பதிலளிநீக்குவாங்க அனுராதா ப்ரேம்குமார். வருகைக்கு நன்றி.
நீக்குஉங்களுடைய பல டாபிக்குகளுக்கான இடுகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சமீபத்தில் படித்த பிள்ளை உலகாசிரியனின் இடுகை எனக்கு சுஜாதா தேசிகன் மற்றும் கோமதி அரசு மேடம் எழுதி நான் படித்த இடுகைகளை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
நீக்குஇரண்டு நாட்கள் தொடர்ந்து 'சாற்றுமுறை' தரிசனத்தில் கணீர் குரலில் சீயர்கள் சாத்துமுறை சொல்லும்போது (நானும் மெதுவாகச் சேர்ந்துகொண்டேன்) திருமலையப்பன் சன்னிதியில் எனக்கு சிலிர்த்துவிட்டது. எப்படி எதிரொலித்தது. அந்தச் சூழல், இறைவனுக்கு கற்பூர ஹாரத்தியின்போது இயற்கையான வெளிச்சத்தில் அவன் முகம்.... என்றேனும் வாய்ப்பிருந்தால் இதனைப் பற்றி எழுதணும்.....
////நான் ரோட்டிக்கு அல்லது ‘நான்’னுக்கு ///
பதிலளிநீக்குஆஆஆஆவ்வ்வ்வ்வ் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன் அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுமெல்லோ பிக்கோஸ் மீக்கு டமில்ல டி ஆக்கும்.... ஒரு டமில் புரொபிஸரே டமிலைக் கொல்றாரே கர்ர்ர்ர்ர்ர்:)... ரோட்டால போன கதையாக்கிடக்கே இது:)..
அது நான்:) அல்ல நாண் என வருமாக்கும் ... ஆஆஆ வழி விடுங்கோ நான் ஓடிடுறேன்ன்ன்ன் பெல் அடிச்சிடப் போகுதே......:).
அதிரா... இது எந்த நாண்?
நீக்கு“கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”
என்று கம்பன் சீதையின் அழகை வருணிக்கும்போது சொல்லும் 'நாண்' ஆ?
அல்லது,
"தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்."
இதில் இராமன் ஏற்றிய 'நாணா'?
அதிராமியாவ் என்ற ஞானியை 5 செகண்டுக்கு முன்னாடி காணவில்லை என்று பிபிசி பிளாஷ் நியூஸில் செய்தி ஓடுது :)
நீக்குஅதில் கடைசீயாக நெல்லைத்தமிழன் எங்கள் ப்லாகில் //நாண் // பின்னூட்டத்தை அதிரா படித்திருக்கிறார் என்று அவரது ஸ்நாப் சாட் தகவல்கள் உறுதிசெய்துள்ளன :)))))))))))))))
அஞ்சூஊஊ நெல்லைத்தமிழன் இப்போ பாரதப் போரில தேருக்குப் பக்கத்தில நிண்டோ பேசுறார்ர்ர்ர்:)
நீக்குhttps://goo.gl/images/k5dusi
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஅதிரா... உங்க பிஸி நேரத்துல வந்து பின்னூட்டங்கள் போட்டதற்கு மிக்க நன்றி.
நீக்குஆனாலும் இதைச் சொல்லாமலிருக்க மனதில்லை. தப்பா எடுத்துக்காதீங்க.
நான் எழுதியிருக்கிறது இராமாயணம் (கம்ப இராமாயணம்). நீங்க சொல்லியிருக்கிறது மகாபாரதம் (குருஷேத்திரத்தில் நடந்த போரின்போது). இன்னும் அந்தக் குழப்பம் உங்களுக்குத் தீரலையா? இல்லை தூக்கக் கலக்கத்தில் அம்மாவின் மடிமீது இருக்கும்போது அம்மா சொன்ன கதைகள் அரையும் குறையுமாக உங்கள் காதில் விழுந்ததனால் வந்த குழப்பமா?
சில படங்கள் கமெண்ட் போட்டா அது சேவ் பண்ண வைக்குது கர்ர்ர்
நீக்குநெ தமிழன் எனக்குத் த்ர்ரியாத மகாபாரதமோ?:) எனக்குத் தெரியாத கம்பராமாயணமோ?:)... நான் அஞ்சு கண்டு பிடிக்கிறாவோ பார்ப்போம் என செக்கு பண்ணினேன்... பிரேக்கில அவசர கொமெண்ட்ஸ் போடுறேன் அதனால என் செக்கை ஒழுங்கா தேம்ஸ்ல தள்ள முடியுதில்ல இப்போ , ஆனாலும் இண்டைக்கு நைட் தள்ளுவேன்ன்ன்ன்ன் வெயிட் அண்ட் சீஈஈஈ:).. ஹா ஹா ஹா...
நீக்கு/////Angel3 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.////
ஆஆஆஆ இது ஏதோ படுபயங்கர ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டுப் பாஞ்சு டிலீட் பண்ணிட்டா கர்ர்ர்ர்ர்ர்:)
ஹாஹ்ஹா நெல்லைத்தமிழன் கம்ப பாரதி :) இப்போ நாண் என்றதும் குருஷேத்ர போர் சீனுக்கு ஜம்ப் ஆகிட்டாங்க :)
நீக்குபுட்டிங் பிரமாதமாக இருக்கும் போலிருக்கிறது. செய்து பார்த்து விட வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஅதிரா சொலவது போல புட்டிங் என்பதே தமிழ் வார்த்தைதான், அதற்கு ஏன் வேறு வார்த்தை தேடுகிறீர்கள்?
வருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... 'ஃப்புட்டிங்' தமிழ் வார்த்தைதான் என்று ஆமோதித்துவிட்டீர்கள். இனி இதனையே உபயோகப்படுத்த வேண்டியதுதான்.
நீக்குஅப்படியே சாப்பிட்டுக்கலாமே. நானும் உங்க கட்சிதான். பிகாஸ், ஐஅம் சோம்பேறி
பதிலளிநீக்குவாங்க ராஜி... அப்படியே சாப்பிட்டுக்கலாம்தான். தப்பில்லை. ஆனால் சோம்பேறின்னு சொல்லாதீங்க. நாங்களும் உங்க 'படங்களோடு கூடிய' செய்முறைகளை (சைவம் மட்டும் ஹா ஹா) படிக்கிறேனாக்கும்.
நீக்குஅழகா வந்திருக்கு நெல்லைத்தமிழன் அகர் அகர் ஜெல்லி .
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடிக்கும் .சம்மரில் தான செய்வேன் .ஒரு வியட்னாமிஸ் நண்பி ஒருவர் வித விதமா மோல்ட் வச்சிருக்காங்க அதில் செய்து அசத்துவார் ..அப்புறம் நம் பதிவுலக சமையல் ராணி ஜலீலா //அவள் விகடனில் // சமீபத்தில் வெரைட்டி ரெசிப்பீஸ் இதில் போட்டிருந்தார் ..
நான் தேங்காய் பாலில் செய்தேன் rooh அப்ஸா றோஸ் எசன்ஸ் என வித விதமா கலக்கலாம் ..காபி சுவையில் கூட வியட்னாமிஸ் தோழி செஞ்சு தந்தா ....கடல் பாசி வயிற்று புண்களை ஆற்றும் குணமுள்ளது ..
வித விதமாக கேக் புட்டிங் செய்யும் மகளுக்கு பூச்செண்டையும் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.
நீக்குகடல் பாசி வயிற்றுப் புண்களை ஆற்றும். இந்த அகர் அகர், அதில்தான் செய்கிறார்களா? இதற்காகவே நான் ஜிகர் தண்டாவை (இப்போ ஹிந்தி லெசன்ஸ் படிக்கும்போது, அதில் ஜிகர் என்பதற்கு இதயம் என்றும் தண்டா என்பதற்கு குளிர்ச்சி என்றும் போட்டிருந்தார்கள். இதயத்தைக் குளிர்விக்குமாம்) வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஐஸ்கிரீம் இல்லாது சாப்பிடுவேன்.
ரூ அஃப்ஸா - பஹ்ரைனில் இருந்தபோது ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதைப் பார்த்து இரண்டு பாட்டில்கள் வாங்கினேன் (படத்தை ஒழுங்காகப் பார்க்காமல், ரோஸ் எஸென்ஸ் என்று நினைத்துக்கொண்டு). செலவழிக்கவே முடியாமல் கடைசியில் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். இப்போ என்றால், நான் மைதா ஸ்வீட்டோ இல்லை வேறு இனிப்புகளோ செய்யும்போது அதனையும் கூடச் சேர்த்து வித்தியாசமாகச் செய்திருப்பேன்/செலவழித்திருப்பேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநான் 3-4 ஐட்டங்கள்தான் பாகிஸ்தானில் தயாரித்தது வாங்குவேன் (தேசப் பற்று.... ஹாஹாஹா).
நீக்கு1. முடி போல மெலிதாக இருக்கும் வறுத்த சேமியா. சும்மா இரண்டடி இருக்கும் ஒவ்வொண்ணும். மொத்தமா அதை இரண்டாக மடித்து பேக் பண்ணியிருப்பாங்க.
2. ரோஸ் குல்கந்து. அவங்க பிராண்ட் தான் அங்க கடைகளில் கிடைக்கும். நன்றாகவும் இருக்கும்.
3. முன்பெல்லாம் அவங்க பாஸ்மதி அரிசி (கொஞ்சம் விலை குறைவு). அப்புறம் பாஸ்மதி சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். அதற்குப் பதிலாக சோனா மசூரி அல்லது பொன்னி மெல்லிய அரிசி.
4. வருடா வருடம்.. ஏப்ரல்-ஜூனில் வரும் பாகிஸ்தான் மாம்பழங்கள். மிக மிக அருமையா இருக்கும். (விலை கொஞ்சம் மலிவு, தோலை மட்டும் எடுத்துடணும்.. ரொம்பத் துவர்ப்பா இருக்கும் தோல்).
ஒரு தடவை வாங்கிய ரூஅஃப்சா, பாகிஸ்தானில் தயாரானது.....
அது ஒரிஜினல் ரெசிப்பி றோஸ் பெட்டல்ஸ் சில பழங்கள் Kewra எல்லாம் சேர்த்து தான் செய்றாங்க ..இஸ்லாமியர் நோன்பு காலத்தில் இதை முக்கியமா யூஸ் செய்வாங்க . நானா சபிஜா சீட்ஸை ஊற வச்சி இதோட கலந்து குடிப்பேன் ..ரொம்ப நல்லா இருந்திச்சி ..ஆனா கொஞ்சம் கலரிங் வேலை காட்டினதாலே விட்டுட்டேன் .என் மகளுக்கு இந்த ஜூஸ் பிடிக்கும் சம்மருக்கு நல்லா இருக்கும்
நீக்கு//It was formulated by Naqi in 1906 in Ghaziabad, British India, and launched from Old Delhi, India. Currently, Rooh Afza is manufactured by the companies founded by him and his sons,//
நீக்குஅந்த சிரப்போட ஆதி மூலம் இந்தியா தான் அதனால் வாங்கி யூஸ் பண்ணுங்க :)
sabja seeds
நீக்குஇந்த ஜெல்லி புட்டிங்கை faloodaa விழும் போட்டு சாப்பிடலாம் ....
பதிலளிநீக்குஅதோட இது 100 % வெஜிடேரியன் என் போன்றோருக்கு உடலுக்கு தீங்கு தராதது
அவசர ஸ்பெல்லிங் மிஸ்டேக்// பலூடாவிலும் //
நீக்குவரவர எல்லோருமே வலு உஷாராகிடுகினம் இல்லாட்டில் அதிரா கண்ணில பட்டிடும் எனும் பயம்:)
நீக்குஏஞ்சலின்... ஃபலூடா எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. சமீபத்தில் திருப்பதியில் ஃபலூடா வாங்கிச் சாப்பிட்டேன். அதில் ஜெல்லி ஃபுட்டிங் ஏற்கனவே சேர்ப்பார்களே....
நீக்குநீங்க அபூர்வமா மிஸ்டேக் விடறதுனால, நான் உடனே சொல்லிடுவேன். என் கண்ணிலும் உடனே பட்டுடும். (மீதி வாக்கியங்களை நீங்களே பூர்த்தி பண்ணிக்கோங்க. எதுக்கு 'அ' வோட கோபத்தை நான் சம்பாதிச்சுக்கணும்.
/ அப்போ, சைனா கிராஸை வாங்கி ஏதோ செய்ய நினைத்து சரியாக வராததை ஒருவர் இடுகையில் எழுதியிருந்ததைப் படித்து ஞாபகத்தில் வந்தது. //
பதிலளிநீக்குஅது நெல்லைத்தமிழன் நான் இன்னிக்கு காலைல அலாரம் அடிச்சதும் ஆஃப் செஞ்சிட்டு எங்கள் பிளாக்கை திறந்ததும் கண்ணில் இந்த வரி பட்டுச்சா :) உடனே கைகாலெல்லாம் பரபரத்துச்சு அதாகப்பட்டது லெக்ஸும் ஆடலை ஹாண்ட்ஸும் ஓடலை :) ஹையோ ஹையோ எப்படியாச்சும் இந்த விஷயத்தை உங்க கண்ணில் காட்டிடணுமேன்னு காபி போட்ட கையோட ஓடி வந்து லிங்கை கொடுத்தேன் .அப்புறம்தான் மூச்சு சீராச்சு
ஏஞ்சலின்... மிக்க நன்றி... அந்த இடுகைல என்னோட பின்னூட்டமும் இருந்திருக்குமே.... பாருங்க...
நீக்கு"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்."
இதைப் படிச்சிருக்கறதால, சும்மா யாரும் செய்முறை இடுகை போட்டால் செய்துபார்க்கமாட்டேன். இதற்கு முன்னால் என்ன என்ன செஞ்சிருக்காங்க, அதெல்லாம் எப்படி வந்திருக்கு, அதற்கு பின்னூட்டங்கள் என்ன என்ன வந்திருக்கு என்றெல்லாம் ஆராய்ச்சி செஞ்ச பிறகுதான் நான் செய்துபார்ப்பேன்.
அப்படி அப்போ ஆராய்ந்ததில சிக்கினதுதான் நீங்க சொன்ன 2012ல் சிலர் எழுதின இடுகை. அதற்கு நான் 2017ல் பின்னூட்டம் போட்டிருக்கேன். ஹா ஹா ஹா
வெளியிட்டமைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்கு நன்றி. இப்போதுதான் 'சைனா கிராஸ்' படம், நான் கட்&பேஸ்ட் பண்ணும்போது கண்ணாடி நகலாக வந்திருக்கிறது என்பதைப் பார்த்தேன். அதுவும் அழகாத்தான் இருக்கு.
பதிலளிநீக்குகாமாட்சி அம்மா.... எப்போதிருந்தாலும் முடிந்தபோது படித்துக் கருத்திடுங்கள். (ஒரு வரியாகிலும்) நான் படிப்பேன்....
பதிலளிநீக்குமிக்க அழகாக இருக்கிறது. ஸுலபமகவும் இருக்கு . சைனாகிராஸை உபயோகப்படுத்தி இதுவரை நாட்டுப்பெண்கள்கூட எதுவும் செய்ததாக ஞாாபகமில்லை. செய்ததில்லை. அதனால் இந்தவிஷயம் தெரியாது. ஆத்திலே பெரியவருக்கு ரொம்ப முடியாதிருந்து, இப்போது தேவலை. நான் கருத்து எழுதிண்டு உட்கார ஸவுகரியமில்லை. காரணம் இதுதான். உங்கள் பெண்ணிற்கு என் பாராட்டுகள். புதியதாகவும்,ஸுலபமாகவும்,ருசியாகவும் அகர்அகர் புட்டிங். நன்றி உங்களுக்கும். அன்புடன்
நீக்குவாங்க வாங்க காமாட்சி அம்மா.... நான் கருத்துக்கள் 133 என தவறா ஞாபகம் வச்சிருந்ததால உங்க கருத்தை இன்னைக்குத்தான் பார்த்தேன்....மிக்க நன்றி உங்க வருகைக்கு...
நீக்குஎல்லாம் நலமுடன் நடக்கும்... இப்போ மும்பையிலா?
உங்க ரெசிபி பார்த்தவுடன் செய்யும் ஆவல் வந்து இன்று செய்துள்ளேன்.. பார்க்கலாம் செட் ஆகிறதா என்று...
பதிலளிநீக்குநிச்சயம் செட் ஆகும் ஆதி வெங்கட். உங்கள் மகள் அதனை ஆசையோடு சாப்பிடுவாள். எப்படி இருந்ததுன்னு அவள் சொன்னதை இங்கு எழுதுங்கள்.
நீக்கு