சனி, 27 ஜூன், 2020

வயது, 14 ; ஒரு கம்பெனிக்கு, சி.இ.ஓ


1)  மத்திய பிரதேசம், நீமச் மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் டீ விற்பனை செய்து வரும் சுரேஷ் கங்க்வாலின் மகளான ஆஞ்சல் கங்க்வால் 24 சமீபத்தில் இந்திய விமானப் படையின் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐதராபாதை அடுத்துள்ள டிண்டிகல்லில் உள்ள விமானப் படைஅகாடமியில் பயிற்சி முடிந்த அவர் போர் விமானங்களை இயக்க உள்ள ஒரு சில பெண் விமானிகளில் ஒருவராக திகழ்கிறார்...




2)  மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி அடுத்தடுத்து சாகுபடி செய்து கோடையிலும் விவசாயத்தில் குன்றாத வருமானம் ஈட்டி வருகிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த ஆசிரியை பிரசன்னா. இவர் எம்.எஸ்ஸி., (இயற்பியல்) மற்றும் பி.எட்., பட்டங்கள் பெற்று திருப்பாலை நல்லமணி அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

3)  வயது, 14 தான். ஒரு கம்பெனிக்கு, சி.இ.ஓ.,...   'டிரம்மர்' சரண்.





4)  இந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பு விட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்திவரும் ஆசிரியர் தமிழரசன்.






=====================================================================


எலன் மஸ்க் – ஏ ஸைன்டிஃபிக் மார்வெல்
ரமா ஸ்ரீநிவாசன் 

அப்துல் கலாம் அவர்களின் அரிய வார்த்தைகளில் :

“Dream, dream, dream. Dreams transform into thoughts and
thoughts result in action"

இவ்வாக்கியத்தின் கருத்தை உண்மைப்படுத்தினாரோ என்று ஐயுறும் அளவிற்கு எலன் ரீவ் மஸ்க் என்பவர் தன் வாழ்க்கைப் பாதையை வழி நடத்தி வருகின்றார்.

எலன் ரீவ் மஸ்க் என்பவர் மேல் நாட்டைச் சேர்ந்த ஓர் இன்ஜினியர்,  தொழில்துறைப் பொறியாளர், தொழில்நுட்ப முனைவாளர் மற்றும் ஓர் ஈடில்லா பரோபகாரர்.

என்ன இவ்வளவு முகவுரை என்று பார்க்கின்றீர்களா? 

சொல்கிறேன். 

இவருடைய பிரம்மாண்டமான சாதனைகளைப் பற்றி நான் இன்று பேனா ஏந்தும் காரணம், ஜூன் 28ஆம் தேதி ( அதாவது நாளை)  அவர் தன் 50 ஆவது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.  அதற்குள் எத்தனை சாதனைகள், எத்தனை நல்லெண்ண உபகாரங்கள், எத்தனை ஆச்சரியப்பட வைக்கும் ஹிமாலய வெற்றிகள்? மேலும் படியுங்கள். நீங்களும் ஆமோதிப்பீர்கள்.

இவர் ப்ரிடோரியா, தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். ஆயின் இவர் தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்குமான குடிமகனுக்கான சான்றுள்ளவர். 

(எலனின் குடும்ப வாழ்க்கை ஏற்றங்கள் + மாற்றங்கள்  நிறைந்தது. முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் (2000 - 2008) மூலம் 1+2+3 = 6 பையன்கள். அதில் முதல் பையன் பத்து வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தான். இரண்டாம் மனைவி  டாலுலாஹ் ரைலீ ( 2010 - 2016) என்னும் பாடகி.  அதற்குப்பின் ஆம்பர் ஹெர்ட் என்னும் அமெரிக்க நடிகையுடன் ஓராண்டு நட்பு. அதற்குப்பின் 2018 தொடங்கி, கனடா பாடகி Grimes என்பவரோடு வாழ்கிறார் எலன். 


கிரைம்ஸ் - எலன் தம்பதியர்க்கு இந்த ஆண்டு மே நான்காம் தேதி ஒரு பையன் பிறந்துள்ளான். அவனுடைய பெயர்  "X Æ A-12"     என்று வைத்தார்களாம். கலிபோர்னியா சட்டப்படி நவீன 
ஆங்கில  அகராதியில் இல்லாத எழுத்துகள் பெயரில் வரக்கூடாதாம். அதனால் அந்தப் பையனின் பெயர் தற்போது,  "X AE A-XII" என்று மாற்றப்பட்டுள்ளது. ) 

தன் பதினேழாவது வயதில் ப்ரிடோரியாவை விட்டு கனடாவை அடைந்தவர் குவீன்ஸ் பல்கலை கழகத்தில் இரண்டு வருடங்கள் படித்த பின்னர் பென்ஸில்வேனியா பல்கலை கழகத்தில் சேர்ந்து பொருளாதாரத்திலும் இயல்பியலிலும் (Physics) பட்டம் பெற்றார். பிறகு 1995ல் கலிஃபோர்னியா சென்றவர் தன் சகோதரருடன் சேர்ந்து ஜிப்2 என்னும் ஓர் வலையுலக கம்பெனியைத் துவங்கி 1999ல் அதை காம்பேக் நிறுவனத்திற்கு 340 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். இதற்கு பின் மஸ்க், எக்ஸ்.காம் (X.com) என்னும் ஓர் நிகழ்நிலை வங்கியை (online bank) துவக்கி, அதை 2000ஆம் ஆண்டு கன்ஃபைனிடி (Confinity) நிறுவனத்துடன் சேர்த்தார். பே பால் (PayPal) என்னும் ஓர் சேவையை 1999ல் அறிமுகம் செய்து அதன் வெற்றியினால் கவரப் பட்ட ஈ பே (eBay) இக்கம்பெனியை 1.5 பில்லியன் டாலர்களுக்கு அக்டோபர் 2002ல் வாங்கியது.

இதைத் தவிர, எலன் மஸ்க் a) ஸ்பேஸ்X (Aerospace technology concern) மற்றும் டெஸ்லா இன்க் (எலெக்டிரிக் வாகனங்கள் உற்பத்தி) கம்பெனிகளின் சீஃப் எக்ஸிகூட்டிவ் ஆஃபீஸர், b) போரிங் (டனல் போர் செய்யும்) கம்பெனியையும் நிறுவியவர், c) ந்யூராலின்க் (மனித மூளையையும் கம்ப்யூட்டரையும் இணைக்கும்) நிறுவனம், ஓபன் ஏ.ஐ,யின் (Open AI) இணை நிறுவனர் மற்றும் இணைத் தலைவர் என்று அடுக்கிக் கொண்டே
போகலாம்.

டிசம்பர் 2016ல் ஃபோர்ப்ஸின் ”World’s Most Powerful People” லிஸ்ட்டில் 21வது
இடத்தைப் பிடித்தார். பின்னர், 2018ல் ராயல் ஸொஸைடீயின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் அதே ஃபோர்ப்ஸின் “Most Innovative Leaders of 2019” லிஸ்டில் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் தன் சுய உழைப்பால் ஓர் பில்லியனராக உருவாகி ஜூன் 2020ல் 38.8 பில்லியன் டாலர்களுக்கு சொந்தமானவராகியிருக்கின்றார். அது மட்டுமின்றி உலகிலேயே இவர்தான் ஓர் வாகன உற்பத்தி நிறுவனத்தின் மிக நீண்ட கால சீஃப் எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸராக (CEO) நிலைத்திருக்கின்றார்.

தன் வணிக நாட்டங்களை தாண்டி மஸ்க் ஹைப்பர் லூப் என்னும் ஓர் அதிவேக போக்குவரத்து அமைப்பை கற்பனை செய்து நிறுவினார். “உலகத் தரத்தை மாற்றி மனித குலத்திற்கு உதவி” என்பதையே தன் மூன்று நிறுவனங்களான ஸ்பேஸ்X, டெஸ்லா மற்றும் ஸோலார் ஸிடி ஆகியவையின் இலக்குகளாக வைத்தார்.

அவருடைய அசைக்க முடியாத இரு இலக்குகள் நிலையான ஆற்றல் (sustainable energy) கொண்டு உலக வெப்பத்தைக் குறைத்தல், செவ்வாய் கிரகத்தில் ஒரு மனித காலனியை அமைத்து ஒட்டு மொத்த மனித அழிவைத் தடுப்பது ஆகியவை.

மஸ்க்கின் ஸ்பேஸ்X இது வரை 100 மெர்லின் 1டி என்ஜின்களை தயாரித்துள்ளது. ஒவ்வொரு மெர்லின் 1டி என்ஜினும் 40 சாதாரண கார்களை செங்குத்தாக தூக்கும் சக்தி கொண்டது.

2006ல் நாஸா தனக்கு குழுவினர் மற்றும் சரக்குகளை விநியோகிக்க ஸ்பேஸ்X நிறுவனத்தை மற்றொன்றுடன் தேர்ந்தெடுத்தது. டிசம்பர் 23, 2008ல் மறுபடியும் 1.6 பில்லியன் டாலர் கமர்ஷியல் ரீசப்ளை சர்வீஸஸ் நிரல் கான்டிராக்ட்டையும் அமெரிக்க ஸ்பேஸ் ஷட்டில் காலம் 2011ல் முடிந்த பின் ஸ்பேஸ்Xற்கே வழங்கியது. இதன்படி ஸ்பேஸ்X உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக ஓர் வணிக ரீதியான நிறுவனம் இன்டர்னேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு ராக்கெட் ஏவுதலுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட பெருமையை அடைந்தது.

மலிவான வின்வெளிப் பயணத்தின் திறவுகோல் ராக்கெட்டுகளை மீண்டும் பயன் படுத்தக் கூடிய வசதியுள்ளவையாக உற்பத்தி செய்வதேயாகும் என்று அழுத்தமாக நம்பியவர் மஸ்க்.

2017ல் ஸ்பேஸ்X வெற்றிகரமாக 18 பயணங்கள் முடித்து தன் முந்தைய ஆண்டின் எட்டு பயணங்களையும் மிஞ்சியது.



2017 க்குள் சிறப்பான வளர்ச்சியடைந்து செப்டம்பர் 2019ல் முதல் ப்ரோடோடைப் வாகனம் உலகுக்கு காட்டப்பட்டது. 2012ல் புதிய ராக்கெட் இஞ்சின் (Raptor) உருவாக்கம் துவங்கி ஆகஸ்ட் 2019ல் வெற்றிகரமான முதல் சோதனை பயணம் மேற்கொள்ளப் பட்டது.

இவை யாவற்றிற்கும் பின்னால் மஸ்க் கம்பீரமாக நின்று தன் அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் உற்சாகப் படுத்தி முன்னேற்றியதுதான், வெற்றியின் ரகசியம். 

மே 30, 2020 அன்று ஸ்பேஸ்X தன்னுடைய முதல் டெமோ2 மனிதன் இயக்கிய ஃப்ளைட்டை வின்வெளிக்கு ஐ.எஸ்.எஸ்ஸுடன் சேர்ந்து அனுப்பி இச்சாதனையை புரிந்த முதல் தனியார் நிறுவனமாகியது. மேலும் இதுவே முதல் முதலாக ஓர் அமெரிக்க வின்வெளி வீரர் அமெரிக்க மண்ணிலிருந்து அமெரிக்க ராக்கெட்டில் வின்வெளிப் பயணம் செய்ததாகும்.

2006ல் எலன் மஸ்க்கின் வார்த்தைகளில் டெஸ்லாவின் முதன்மை திட்டம் :
“ஸ்போர்ட்ஸ் கார் உருவாக்குவது. அவ் வருமானத்தைக் கொண்டு ஓர் மலிவான காரை உற்பத்தி செய்வது; அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து இன்னும் கூட மலிவான ஓர் காரை வெளிக்கொண்டு வருவது; இதைச் செய்யும்போதே  பூஜ்ய உமிழ் எலெக்ட்ரிக் காரை (Zero Emission Vehicle) தயாரிப்பது” என்பதுதான்.

ஆம்.  இத்திட்டத்தை வெற்றிகரமாக ஜூலை 2016ல் நிறைவேற்றினார்.

“யாவரும் காணும் ஒரே செயலை வித்தியாசமான கோணத்தில் யோசிப்பது என்பதுதான் படைப்பாற்றல்” என்று நம் அப்துல் கலாம் கூறியுள்ளார். இவ்வரிகளை தன் வித்தியாச சிந்தனையால் நிதர்சனமாக்கி இருக்கின்றார் எலன் ரீவ் மஸ்க்.

அவர் ஓர் ட்வீட் விஷயத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் சட்டப்படி வழக்கில் சிக்கினாலும், பின்னர் லாவகமாக வெளி வந்து விட்டார்.

ஜூலை 2018ல் தாய்லாந்திலுள்ள தாம் லுவாங்க் சுரங்கத்தில் சிக்கிய மனிதர்களைக் காப்பாற்றி வெளிக் கொணர்வதற்காக குழந்தை அளவில் ஓர் மினி நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி அளித்தார். இதற்காக மஸ்க்கை கௌரவித்து மார்ச் 2019ல் தாய்லாந்து அரசு “மெம்பர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி டைரெகன்பான்” என்ற விருதை மஸ்க்கிற்கும் அவரது குழுவிற்கும் அளித்தது.

பரோபகாரம் :

1. 2010ல் ஸோலார் ஸிடியுடன் சேர்ந்து அலபாமாவின் சவுத் பே கம்யூனிடி அலையன்ஸிலுள்ள புயல் நிவாரண அமைப்பிற்கு 25 கிலோ வாட் சூரிய சக்தி அமைப்பை மஸ்க் பௌண்டேஷன் அமைத்துக் கொடுத்தது.

2. ஜூலை 2011ல் மஸ்க் ஃபௌண்டேஷன் ஜப்பானிலுள்ள ட்சுனாமியால் சீரழிக்கப் பட்ட சோமாவிற்கு 250,000 டாலர்கள் நன்கொடையாக கொடுத்து அங்கு ஓர் சூரிய சக்தி பிராஜக்டிற்கு வழி செய்தது.

3. ஜூலை 2014ல் மஸ்க் வார்டென்கிலிஃப்ஃபில் ஓர் டெஸ்லா அறிவியல் சென்டர் அமைப்பதற்காக 1 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடல்லாமல் அங்குள்ள மியூஸியம் கார் பார்க்கில் ஓர் டெஸ்லா சூப்பர் சார்ஜர்ரையும் அமைத்துக் கொடுத்தார்.

4. செயற்கை நுண்ணறிவை மனித குலத்திற்கு உபயோகமாக செலவழிப்பதற்காக மஸ்க் ஜனவரி 2015ல் 10 மில்லியன் டாலர்களை ஃபயுச்சர் ஆஃப் லைஃப் இன்ஸ்டிடூட்டிற்கு கொடையாகக் கொடுத்து ஓர் உலகளாவிய ஆராய்ச்சி நிரலை துவங்க ஏது செய்தார்.

5. 2015லிலிருந்து மஸ்க் X பிரைஸ் ஃபௌண்டேஷனின் அறங்காவலராகவும் “தி கிவிங்க் பிலெட்ஜ்”ஜின் signatory ஆகவும்  இருக்கின்றார்.

6. அக்டோபர் 2018ல் ஃப்லின்ட் நீர் நெருக்கடியை தாண்ட வேண்டி மஸ்க் ஃபௌண்டேஷன் 480,000 டாலர்கள் வழங்கி புதிய வடிகட்டுதல் அமைப்புடன் கூடிய நீர் ஃபௌண்டன்களை எல்லா ஃப்லின்ட் மிச்சிகன் பள்ளிகளிலும் அமைத்தது.

7. அக்டோபர் 2019ல் மஸ்க் 1 மில்லியன் டாலர்களை “டீம் ட்ரீஸ்” என்னும் ஓர் 20 மில்லியன் மரம் நடும் முயற்சிக்கு ஆர்பர் டே ஃபௌண்டேஷனுடன் நன்கொடையாக வழங்கினார்.

ஏறக்குறைய 23 வேறுபட்ட பிரமிக்க வைக்கும் விருதுகளைப் பெற்றுள்ள எலன் மஸ்க் இவ்விருதுகளின் பெருமைக்கும் மதிப்பிற்கும் கூடுதல் பெருமை சேர்த்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நமது நாட்டுப் பிரதமர் அமெரிக்க பயணத்தின் போது எலன் ரீவ் மஸ்க்கும் அவர் சந்தித்த பிரபலங்களில் ஒருவர் என்றால் அவரின் தகுதியை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.


=======================


கொசுறு செய்தி :  ஜூன் 28, 'எலன் மஸ்க்'குக்கு மட்டும் பிறந்தநாள்
 (28 - 06- 1971) இல்லை; எங்கள் ப்ளாக் பிறந்தநாளும் அதே! (28 - 06 - 2009)


                                                         =======================

107 கருத்துகள்:

  1. எலன் ரீவ் மஸ்க் இவரை மிகப்பெரிய சாதனையாளராக உலகம் அங்கீகரிக்கிறது. சாதனையே மாற்றமே இல்லை.

    இந்த பாராட்டுதலுக்கு அடிப்படையே அவரிடமிருக்கும் மில்லியன்கள்.

    ஒரு பெண்ணுடனும் உருப்படியாக வாழாத இவனது தவறுகள் பணம் என்னும் பேப்பர்களால் அலங்காரமாக மறைக்கப்படுகிறது.

    எலன் ரீவ் மஸ்க் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகள்.

    எங்கள் பிளாக் தளத்திற்கும் எமது பிறந்தநாள் வாழ்த்துகள்கூடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது பெர்சனல் விஷயத்தை ரமா ஶ்ரீநிவாசன் குறிப்பிட்டிருக்க வேண்டாம். வேஷ்டியில் பட்ட இங்க் கறை போல அது மட்டும்தான் பளிச் என்று படிப்பவர்களுக்குத் தெரியும்.

      கட்டுரை பல விவரங்களைத் தந்தது. நம் நாட்டு இளம் தொழில் முனைவோரைப் பற்றியும் தேடலாம்.

      நீக்கு
    2. உண்மை.  வெள்ளைத்தாளில் கருப்புப்புள்ளி!

      நீக்கு
    3. மன்னிக்க வேண்டுகிறேன். ர ஸ்ரீ அவர்கள் சுருக்கமாக மூன்று வரிகளில், நாசுக்காக எழுதியிருந்தார். அதில் இருந்த சில தகவல்கள் (மனைவி பெயர், குழந்தைகள் எண்ணிக்கை) சரியாக இருக்கிறதா என்று செக் செய்தேன். சரியான தகவல்களைத் திரட்டி, அவற்றை அடைப்புக்குறிக்குள், பச்சை எழுத்தில் வெளியிட்டேன். தவிர மேலை நாடுகளில், " என் குழந்தைகளும், உன் குழந்தைகளும், நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கின்றன " என்று கணவனோ அல்லது மனைவியோ சொல்வது சகஜம். எனவே, போற்றுவோர் ர ஸ்ரீ யைப் போற்றுங்கள். தூற்றுவோர் அடியேனை தூற்றுங்கள்.

      நீக்கு
    4. இதில் யாரையும் போற்றவும், தூற்றவும் இல்லை ரமா மேடம் அவர்கள் ஒரு சாதனையாளரின் உண்மை நிகழ்வுகளை கட்டுரையாக்கினார். கௌதமன் ஜி அதனுள் உள்ள புள்ளி விபரத்தை தந்து இருக்கிறீர்கள் அவ்வளவுதான்.

      நான் சொல்ல வருவது சமூகத்தில் பெரிய மனிதர்கள் தவறு செய்தால் அதை நாகரீகமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

      கமலும், கௌதமியும் இணைந்து வாழ்ந்தது சட்டப்படி குற்றம்தானே...

      இதே செயலை கை வண்டி இழுக்கும் சுப்பனும், வீட்டு வேலை செய்யும் முனியம்மாவும் நமது தெருவில் வாழ்ந்தால் தவறாகிறது.

      தவறுகளை சுட்டிக் காட்டுவதை இறைவன் விரும்புவார்.

      நக்கீரரை சிவன் தண்டிக்கவில்லையே...

      நீக்கு
    5. // கை வண்டி இழுக்கும் சுப்பனும், வீட்டு வேலை செய்யும் முனியம்மாவும் நமது தெருவில் வாழ்ந்தால் தவறாகிறது.// சொல்வதெல்லாம் உண்மை என்ற ஒரு கண்றாவி, சானல்களில் வருகிறதே - (என்னம்மா இப்படி செய்யறீங்களே !!!) அதை எல்லாம் தாங்கள் பார்ப்பதில்லையா கில்லர்ஜி ! அவைகளில் சுப்பனும் முனியம்மாவும்தான் அதிகம்.

      நீக்கு
    6. பார்த்து இருக்கிறேன் ஜி. நீதிபதி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கௌதமி, சின்மயி போன்றவர்கள் போகாதது ஏனென்றுதான் விளங்கவில்லை.

      நீக்கு
    7. எலனின் குடும்ப வாழ்க்கை இரண்டு பத்திகளை ரமா ஸ்ரீநிவாசனின் அனுமதியோடு நீக்கிவிடலாம். இது என் தனிப்பட்ட கருத்து!

      நீக்கு
    8. ர ஸ்ரீ எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்; தீர்ப்பு சொல்லவும்.

      நீக்கு
    9. அப்படி நீக்கக் கூடாது. அந்த குறிப்புகள் இருப்பதில் தவறொன்றும் இல்லை.

      நீக்கு
    10. யாரையாவது சிறப்பானவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவீர்களானால் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறப்பு. உங்கள் இஷ்டத்திற்கு கூட்டி, கழித்து யார் வாழ்க்கையையும் சிதைத்துப் பார்க்கக் கூடாது. அதற்கு நமக்கு உரிமையும் இல்லை. உங்களுக்கான சிறப்புகளை ஏற்றுக் கொள்வதானால் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவைகளில் உங்கள் கவனம் ஏன் போகிறது?..
      அவரது குறைகள் என்றும் சிறப்புகள் என்று நீங்கள் நினைப்பது எல்லாமே உங்களின் பார்வையே. குறைகள் எனப்படுவது பிற நாட்டு பழக்க வழக்கங்களில் நமக்கிருக்கும் புரியாமையே

      நீக்கு
    11. நம் "எங்கள் பிளாக்"கிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மென்மேலும் பாஸிடிவ் செய்திகள், கருத்துள்ள கதைகள், அறுசுவை பொருந்திய ரெஸிப்பிகள் மற்றும் ஸ்வாரஸியமான கேள்வி பதில்கள் என பட்டை தீட்டி ஜொலிக்க பிரார்த்திக்கின்றேன்.

      நீக்கு
    12. அதே போல் தாராளமாக அந்த இரு பத்திகளை நேயரின் விருப்பத்திற்கேற்ப நீக்கலாம்.

      நீக்கு
    13. நீக்கினாலும் நீக்காவிட்டாலும் எனக்கு எதுவும் இல்லை. இங்கே எழுந்த ஆக்ஷேபங்களைப் பார்த்துட்டுச் சொன்னேன். இம்மாதிரிச் சாதனையாளர்களின் பலருடைய வாழ்க்கைச் சரிதங்களையும் படித்து வந்திருக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையும் சேர்த்து! என்னை எதுவும் பாதித்ததில்லை.

      நீக்கு
    14. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல்
      (அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:504)

      பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
      ஆகவே, நண்பர்களே - சேர்த்த பகுதி சேர்ந்தே இருக்கட்டும். எலன் கொலை / கொள்ளை / கற்பழிப்பு / போன்ற பஞ்சமா பாதகம் எதுவும் செய்துவிடவில்லை. அவர்களின் நாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டு, அவர்களின் சம்மதத்துடனேயே விவாகரத்தும் பெற்றிருக்கிறார்.
      அவர் பெற்ற எல்லா மகன்களும் அவரின் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகிறார்கள். ஒரு நேரத்தில், ஒருவருடன்தான் வாழ்ந்து வருகிறார். மனைவி, துணைவி, இணைவி என்று வந்தவர்களை எல்லாம் வாரிப்போட்டுக்கொண்டு வண்டி ஓட்டவில்லை. வணக்கம். அந்தப் பகுதியை நீக்கவேண்டிய அவசியமில்லை என்று கருத்துரைத்த எல்லோருக்கும் நன்றி!

      நீக்கு
  2. டிரம்மர் சரணின் இணைப்பு திரைப்படநடிகர் கிஷோரின் தகவலைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சோதித்துப் பாருங்கள்.  சரி செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விரைவில் நிலைமை சரியாகவும் அவரவர் பிரச்னைகள் தீரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம். நம் பிரச்னைகளை எல்லாம் அறிந்தும் அறியாதது போல் இருக்கும் எல்லாம் வல்ல ஈசனைப் பரிபூரணச் சரணாகதி அடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  

      பிரார்த்திப்போம் கீதா அக்கா..    வேறு வழி ஒன்றுமில்லை.  குறை ஒன்றுமில்லை என்று பாடிய வாய்களால் இப்போதிருக்கும் பெரிய குறையை சரி செய்து கொடேன் என்று கெஞ்சும் நிலை.

      நீக்கு
  4. செய்திகள் சில தெரியும். ட்ரம்மர் சரண் என வந்திருக்கும் பையரின் விபரங்கள் வரவில்லை. கில்லர்ஜி சொல்வது போல் யாரோ நடிகர் கிஷோரின் விபரங்கள் வருகின்றன. திருமதி ரமாவின் கட்டுரையில் உள்ளவர் பற்றி இன்று வரை அறியவில்லை. அறியத் தந்தமைக்கு நன்றி. ஆனாலும் எலன் ரீவ் மாஸ்க் அவ்வளவாய்க் கவரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது மறுபடி பாருங்கள் கீதா அக்கா...    இப்போதுதான் மறுபடி இணைத்தேன்.

      நீக்கு
  5. நற்செய்திகள் நானும் படித்தேன் இணையத்தில். நல்ல செய்திகள்.

    நீமச் - நீமுச் அல்ல! :)

    எங்கள் பிளாக் - 11 வருடம் - ஆஹா... அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.    அந்த வார்த்தை எங்கு வருகிறது என்று பார்த்துத் திருத்த வேண்டும்.

      நீக்கு
    2. மன்னிக்கவும், பத்து வயது முடிந்திருக்கும் குழந்தையைப் பதினான்கு வயது எனத் தவறாகச் சொல்லிட்டேன். பதினோராம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் எங்கள் ப்ளாக் விரைவில் பருவ வயதைக் கடந்து பெரியவங்க பட்டியலுக்குப் போக வாழ்த்துகள்/பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. // நீமச் - நீமுச் அல்ல! :) //

      மாற்றி விட்டேன்!!

      நீக்கு
    4. தலைப்பில் பதினான்கு என வந்திருப்பதால் ஆழ்மனதில் அது தங்கிவிட்டது. எங்கள் ப்ளாகிற்கும் பதினான்கு வயதுனு நினைச்சுட்டேன்.

      நீக்கு
  6. எலன் ரீவ் மாஸ்க்குக்கும், (நாம் சொல்வதை அவர் அறிவாரோ?) எங்கள் ப்ளாகுக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பதினான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறதா எங்கள் ப்ளாக்? அல்லது பதினான்கு முடிந்து விடுகிறதா? இனி வரும் ஆண்டுகளிலும் எங்கள் ப்ளாக் இதே உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் தொடர்ந்து செயலாற்றவும் இன்னும் அநேகப் பதிவர்கள், நண்பர்களாகப் பெறவும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினான்கு அல்ல, பதினொன்று!  2009 இல் தொடங்கபப்ட்டது.  எண்ணங்களுக்கும், துளசிதளம், நாச்சியாருக்கும்  தம்பிதான் எங்கள் பிளாக்.!

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. 2009 ஜூன் 1 அன்று நான் வலைத்தளம் ஆரம்பித்தேன். என் வலைத்தளத்திற்கும் 11 ஆச்சு.

      நீக்கு
    3. கொண்டாட்டங்களுக்கு நடுவில் எங்கள் பதிவுகளும் உங்கள்
      பதிவுகளுடன் வந்துவிட்டன.
      கீதா சாம்பசிவம், வல்லிம்மா, கோமதிமா
      வலத்தளங்களூக்கும் வாழ்த்துகள்.
      ;)

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான உங்கள் / நம் பிரார்த்தனைகள் அந்த ஆண்டவன் செவிகளை எட்டட்டும்.  வாங்க கமலா அக்கா...   வணக்கம்.

      நீக்கு
    2. கண்டிப்பாக ஒருநாள் எட்டும். எட்டும் வரை நாம் அனைவரும் விடாமல் அவனிடம் நம் பிரார்த்தனைகளை சொல்லிக் கொண்டேயிருப்போம்.

      நீக்கு
  8. ட்ரம்மர் சரணின் விபரங்கள் சரியாக வந்திருக்கின்றன. படித்துத் தெரிந்து கொண்டேன். புதிய செய்தியும் ஆகும்.

    பதிலளிநீக்கு
  9. போற்றத்தக்கவர்களைப் பற்றிய பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  10. EngalBlog ற்குஉளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். -பாபு

    பதிலளிநீக்கு
  11. பதினோராம் ஆண்டு பிறந்தநீள் வாழ்த்துகள்.

    அது சரி... எபி ஆசிரியர்களுள் பலர் இங்கு எழுதுவதோ இல்லை தொடர்புகொள்வதோ இல்லையே.. இந்த ஆண்டிலாவது அந்தக் குறையை சரி செய்வீர்களா? மூவரைத் தவிர, அதிலும் இருஙரைத் தவிர மற்றவர்கள் சைலன்ட் டைரக்டர்களாக இருக்கின்றனரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் நிர்வாகக்குழுவில் இருக்கிறார்கள் நெல்லை!  நாங்கள் நிருபர்கள்!

      நீக்கு
    2. // பிறந்த'நீள்' வாழ்த்துகள் // ஆஹா! நீடூழி வாழ்க என்பதற்கு சுருக்கமான பிரயோகம் கண்டுபிடித்த நெல்லைத்தமிழனுக்கு பாராட்டுகள்.
      // இருஙரைத் தவிர // இதில் ஏதேனும் குறியீடு உள்ளதா என்று யோசிக்கவேண்டும்! நன்றி.

      நீக்கு
    3. விவிசி, விவிசி. கௌதமன் சார், சரியான நேரத்துக்கான நகைச்சுவை! விவிசி, விவிசி! :)))))

      நீக்கு
    4. கேஜிஜி சார்... ரொம்ப மிஷ்கின் படம் பார்த்தால், எந்த சீன்ல எந்தக் குறியீடு இருக்கோன்னு தோணும். பின்னூட்டம் இடுவதற்கு நேரமாகக்கூடாது என்று ஐபேடில் எழுதறேன். ஸ்க்ரோல் செய்து எழுத்துப்பிழை சரிபார்க்க நேரமோ பொறுமையோ இருப்பதில்லை. என்ன செய்ய?

      நீக்கு
  12. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எங்கள் ப்ளாக் பதினோறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தற்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.
    இதே போல இன்னும் பல்லாண்டு எங்கள்
    அனைவருக்கும் நற்செய்திகளையும்
    நல் உணவுக்கான ரெசிப்பிகளும்,
    நல்ல கதைகளும் நிறைய படிக்கக் கொடுக்க
    பிரார்த்தனைகள். மீண்டும் காலை இறைவன்
    அருளால் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...   வணக்கம்.  மழை கடந்து சென்று விட்டதா?  நலம்தானே?

      வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.

      நீக்கு
    2. பதினொரு வயது முடித்து பன்னிரெண்டாம் ஆண்டில் நாளை அடி எடுத்துவைக்கிறோம்.

      நீக்கு
    3. பதினோறாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள். திருத்திவிட்டேன்
      கௌதமன் ஜி.

      நீக்கு
  13. எங்கள் பிளாக்கிற்கு இன்று பிறந்த நாள்...

    ஆல் போல் தழைத்து
    அறுகு போல் வேர் ஊன்றி
    மூங்கில் போல் சுற்றம் முகிழ்த்து வாழ்க!...

    என்றென்றும் அன்புடன்
    துரை செல்வராஜூ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...    வணக்கம்.  வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பிறந்த நாள் நாளைதான்.

      நீக்கு
    3. பிறந்த நாள் நாளை தான்!...

      நலம் வாழ்க நாளெல்லாம்...

      நீக்கு
    4. கௌ அண்ணா நாளையாக இருந்தாலும் எல்லா நாளுமே பிறந்தநாள்தான்!!! புதுசு புதுசா கற்கிறோமே!

      கீதா

      நீக்கு
  14. விவசாயி & ஆசிரியை பிரசன்னா செய்தி சிறப்பு...

    எலன் ரீவ் மஸ்க் பற்றிய தகவல்கள் அருமை... X AE A-XII - வியப்பு...!

    பதிலளிநீக்கு
  15. பாசிட்டிவ் செய்திகளில் இரு செய்திகள் ஏற்கனவே அறிந்தது. ஆசிரியர் தமிழரசன் ஹேட்ஸ் ஆஃப்!!! வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. எங்கள் ப்ளாக் ஆஹா1 பிறந்தநாளுக்கு வாழ்த்துகள். பல்லாண்டு சிறப்பித்தடவும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. எலன் மஸ்க் பற்றிய கட்டுரை சிறப்பு. சாதனையாளர். இதுவரை அறியாத தகவல்கள்.

    அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ரமா, பெரும்பாலும் சாதனையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால் அதில் பல ஓட்டைகள் இருக்கும். மனித மனம் நெகட்டிவை உள்வாங்கிக் கொள்ளும். பாசிட்டிவை தூக்கி எறிந்துவிடும். அது சாதனைகளாகவே இருந்தாலும். வீடானாலும் சரி நாடானாலும் சரி உலகமேயானாலும் சரி. மகாத்மா காந்தி உட்பட...அதிய விடுங்கள் கலாம் அவர்களையுமே.....

    எனவே தனிப்பட்ட வாழ்க்கையை எழுதாமல் நல்லதை மட்டுமே பகிர்வோம். தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவையில்லையே. மட்டுமல்ல இங்கு பாசிட்டிவ் செய்திகள் என்பதுடன் வரும் போது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பட்ட வாழ்க்கை சூழல்கள், அதனால் நமக்கு நாமே விளைவித்துக் கொள்ளும் குழப்பங்கள் எல்லாம் நம்மவர்களுக்கு மட்டுமே போலும்.

      அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் ஆசாபாசாங்கள் இருக்காதா - என்பது உங்கள் பதிலாய் இருப்பின் அவர்களின் சொந்த வாழ்க்கை சூழல்கள் கொண்டுள்ள இலட்சியங்களைப் பாதிப்பதே இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

      வரலாற்று ஏட்டில் புரட்டிப் புரட்டிப் பார்க்கும் பக்கங்களில் இப்படியான நிறைய மானுடர்களே நிறைந்துள்ளனர். இதற்கான நிறைய உதாரண புருஷர்களை என்னால் வரிசைபடுத்த முடியும்.

      கீதோபதேசத்தின் அடிநாதம் கூட இதுவாக இருப்பதை ஆழ்ந்து பார்த்தால் உணரலாம், சகோ.

      நீக்கு
    2. மனிதன் என்றிருப்பவன் குறையும் நிறையும் சேர்ந்த ஓர் பிறவி. நாம் குறைகளை தள்ளி நிறைகளை மட்டும் சுட்டிக் காமிப்போம் என்று எழுதினேன். அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விடுங்கள். வசிதியுள்ள எத்தனி மனிதர்கள் பரோபகாரம் செய்கிரார்கள்? எத்தனை பேர் தன்னை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள்? அதில் இவர் தனிப்பட்டு நின்றதால் எழுதினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"

      நீக்கு
    3. ஆமாம் ரமா மிகவும் சரிதான். அதைத்தான் சொல்லியிருக்கிறேன். அதை கொஞ்சம் வேறு விதமாக. நல்லதைத்தான் சொல்ல வேண்டும்.

      கீதா

      நீக்கு
    4. ரமாஸ்ரீ,

      அதை குறையென்று எப்படி கணிக்கிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேனாட்டு வாழ்க்கை முறைகள் பற்றி அறியாதவர்களா நாம்?
      கறுப்புக் கண்ணாடி தரித்து அதை அந்த நபரிடம் கண்ட குறையாக ஏன் பார்க்க வேண்டும்? அது அவரிடமிருந்த குறையென்று நீங்கள் மனப்பூர்வமாக நம்பினீர்கள் என்றால் அதைப் பற்றி எழுதியிருக்கவே வேண்டாம். இப்படியெல்லாம் குறுகிய வட்டத்திற்குள் சாதனையாளர்களை அடைத்தால் ஒரு தமிழ்ப் பதிவுக்கு இலாயக்கற்றவர்களாகவே இப்படியானவர்கள் என்றும் இருப்பர்.

      நீக்கு
    5. எலனின் திருமண வாழ்க்கையை நான் ஒரு குறையாக நினைக்கவில்லை. நான் அந்தப் பகுதியை வெளியிட்டதற்குக் காரணம் இரண்டு : ஒன்று அவருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் ஆண் குழந்தைகள். இரண்டாவதாக, கடைசி பையனுக்கு அவர் வைத்த பெயர் பற்றிய விவரங்கள் - இவை இரண்டும் எனக்கு வித்தியாசமாகப் பட்டதால், அதை சேர்த்தேன். மேலை நாட்டு நடைமுறையில், திருமணம், விவாகரத்து ஆகியவை எல்லாமே சர்வசாதாரணம்.

      நீக்கு
    6. எஸ். இந்த காரணங்களினாலேயே இந்தத் தகவல்களில் எனக்கும் ஒரு பிடிப்பு ஏற்பட்டது, கெள். அந்த கடைசி குழந்தைக்கு அவர் வைத்த பெயர் உலகத்திற்கே ஒரு புதுமை. நம் நாட்டில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?..

      தங்கள் பதில் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
    7. ஜீவி சார்....இந்தப் பெயர் வைத்ததில் என்ன புதுமை இருக்கு? நம்ம நரிக்குறவர்கள், குழந்தை எங்க பிறக்குதோ அந்த ஊர் பெயரை வைப்பாங்க. அந்த இன்னொவேஷனை விடவா? அந்தப் பையன் தன் பெயரை நண்பர்கள்ட சொல்ல வெட்கப்படுவானா இல்லையா? நம்ம நாட்டிலும் கணிணி என்றெல்லாம் குழந்தைக்குப் பெயர் வைக்கிறாங்களே.

      நீக்கு
    8. நெல்லை. பெயரைப் பற்றி என்ன அவ்வளவு சுளுவாகக் கணக்குப் போட்டு விட்டீர்கள். உங்கள் ஊர் சுலோச்சனா முதலியார் பாலம் படாத பாடா?

      நீக்கு
  18. நாளை பிறந்தநாள் காணும் எங்கள் பிளாகிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நிறைய நிறைய படைப்புகள் வந்து பல ஆண்டுகள் வலையுலகில் சஞ்சரித்து வாழ்ந்திட வாழ்த்துகள்!

    பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே அருமை

    எலன் மஸ்க் பற்றி எங்கோ வாசித்த நினைவு. ஆனால் இத்தனை தகவல்கள் அறிந்ததில்லை. அவருக்கும் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்.கட்டுரை எழுதிய சகோதரி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராடுகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. எலன் மஸ்க் பற்றி அறிந்ததில்லை. ஆனா, எங்கள் பிளாக் பற்றி தெரியும். பொறந்த நாள் கொண்டாடும் எங்கள் பிளாக்குக்கு வாழ்த்துகள்...
    பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு இதமளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  20. //“Dream, dream, dream. Dreams transform into thoughts and
    thoughts result in action" //

    ரமாஸ்ரீ,

    கொடி அசைந்ததால் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடி அசைந்ததா என் கிற மாதிரி இது..

    எனக்கெல்லாம் தொடர்ந்த யோசிப்பு எண்ணங்கள் தான் வேறுவகையான பின்னல் கொண்டு கனவுகளாய் வந்தன. சில நேரக் கனவுகள், கனவுகள் இவை என்று பிரித்து அறிய முடியாதவாறு விழிப்பு நேர யோசிப்பின் தொடர்ச்சியாகவே இருக்கும். அதாவது தூக்கத்திலும் யோசிப்பு தொடர்கிற மாதிரி.

    எங்கோ போகிற மாதிரி, யானை-நாய் என்று துறத்துகிற மாதிரி, மலை, அருவி, திடுக்கிடுதல் என்றெல்லாம் கனவுகள் எனக்கு வந்ததேயில்லை. கனவுகளும் எதாவது ஒரு யோசனை தொடருகிற மாதிரியே இருக்கும்.

    கடந்த ஐந்தாறு வருடங்களாக சுத்தமாக கனவுகளே கண்டதில்லை. அயர்ந்த தூக்கம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ.வி. சார், நீங்கள் நம்ப மாட்டீர்கள். எனக்கு தினம் கனவுகள் காணும் பழக்கம் உள்ளவள். அதுவும் அன்று பகல் பொழுது நடந்தது ஏதாவது ஆழ்ந்து மனதைத் தாக்கியிருந்தால், அதுவே கனவிலும் வந்து படமாய் ஓடும். பழகி விட்டது.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தன் தீவிர முயற்சியினால், இந்திய விமான படையின் விமானியாக தேர்வாகி பயிற்சி பெறும் வீராங்கனை ஆஞ்சல் கங்க்வால் அவர்களை பாராட்டுவோம்.

    தன் நிலத்தில் கிணற்று நீரைக் கொண்டு கோடையிலும் தப்பாமல் காய்கறிகள் சாகுபடி காணும் மதுரை திருப்பாவையை சேர்ந்த ஆசிரியை பிரச்சனா அலர்களையும், தன் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு. அவர்கள் வீட்டிற்கே சென்று கல்வியறிவு பெறச் செய்வதுடன் தன் ஒரு நாளைய பொழுதோடு, தன் கைப்பணத்தைக் கொண்டு அவர்களுக்கு புத்தகம் நோட்டு என செலவழிக்கும் ஆசிரியர் தமிழரசன் அவர்களையும் மனதாற வாழ்த்தி பாராட்டுவோம்.

    14 வயது சிறுவனின் அபார முயற்சியினை பாராட்ட வார்த்தைகளில்லை. அவரையும் மனதாற வாழ்த்துவோம். இன்று சிறப்பான செய்திகளை பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரை திருப்பாவையை// அது "திருப்"பாலை" கமலா. உங்கள் கண்கள் ஏற்கெனவே பிரச்னை கொடுப்பதாய்ச் சொன்னீர்கள்! இப்போ அதான் தடுமாற்றம்! :( என்னனு கவனிங்க!

      நீக்கு
    2. ஹா ஹா. ஹா. நானும் தட்டச்சு செய்யும் போதே நினைத்தேன். பேருந்தில் திருப்பாலை என்ற ஊர் பெயர் இருப்பதை அங்கு (திருமங்கலம்) இருக்கும் போதே பார்த்திருக்கிறேன். கை,வை என்றது வைகையானது போல், லை, வையாகி இங்கு திருப்பாவையாகி விட்டது. நேற்று இரவு மூன்று மணியிலிருந்து ஏனோ உறக்கமே வரவில்லை. ஏதேதோ கவலைகள்.. அதனால் இன்று பகலிலும் கண் அழற்சியுடன் களைப்பாகவும் உணர்கிறேன். நீங்கள் சொல்வது போல், இப்போதெல்லாம் எழுத்துக்கள் தடுமாற்றம் நிறைய வருகிறது. கவனிக்கிறேன். உங்கள் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    நாளைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் "எங்கள் ப்ளாக்"கிற்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள உதவி செய்வதுடன் எங்களின் ஒவ்வொரு நாட்களையும், அன்றைய கவலைகளை மறந்து ஊக்கமும், உற்சாகமும் தரும் வண்ணம் சிறந்த பதிவுகளை பகிர்ந்து, அதன் மூலம் நல்ல நட்புகளை நாங்கள் பெறும்படி செய்த "எங்கள்" பதிவுலகம் இன்னமும் நீண்ட செழிப்புடன் வளர்ந்து புகழுடன் பிரகாசிக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நன்றி. எல்லாமே உங்களைப் போன்ற வாசகர்களால் தான் சாத்தியமானது.

      நீக்கு
  23. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  24. எ.பி.க்கு என்றும் பதினாறு தான்! 'ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்' என்ற கவிஞன் வாக்கை மறந்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. நாளை "மின் நிலா" எங்கள் ப்ளாகின் பிறந்தநாள் சிறப்பு மலராக வரும் என எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாம். ஆனா .... அடுத்த பிறந்த நாளில் சிறப்பு மலர் போடுவோம். இப்போதான் பெற்றெடுத்து பெயர் வைத்திருக்கிறோம்!

      நீக்கு
  26. எங்கள் ப்ளாக் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்! (நாளை என்றாலும் இன்றும் வாழ்த்தலாம்.)
    வாழ்க வளமுடன். உங்கள் தளத்தின் சாதனைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  27. பாசிடிவ் செய்திகள் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    எலன் மஸ்க் பற்றி அறிந்ததில்லை அவர் திறமையை அவர் செய்யும் பரோபகாரத்தை தெரிந்து கொண்டேன் ரமா ஸ்ரீநிவாசன் அவர்களால்.

    பதிலளிநீக்கு
  28. கோமதி அவர்களே, நாம் யாவருமே ஒருவர் இன்னுருவருக்கு கூறிதான் பல நல்ல விஷயங்களை அறிகின்றோம். அவ்விதத்தில் நான் நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு பெருமையுருகிரேன்.

    பதிலளிநீக்கு
  29. ஆசிரியர் தமிழரசன் அவர்களை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது. 'அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' அதிலும் இவர் மாணவர்களை தேடிச் சென்று கல்வி புகட்டுவது மிகவும் சிறப்பு. 
    டிரம்மர் சரணின் தெளிவு பாராட்டுக்குரியது. 
    ஆசிரியப் பணியில் இருந்து கொண்டே விவசாயம் செய்யும் பெண்மணி பிரசன்னா,  டீ கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்து போர் விமானங்களை இயக்கும்  விமானியாக உயர்ந்துள்ள ஆஞ்சல் கங்க்வால் இருவரும் தன்னம்பிக்கையாளர்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //டீ கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்து போர் விமானங்களை இயக்கும் விமானியாக உயர்ந்துள்ள ஆஞ்சல் கங்க்வால் இருவரும் தன்னம்பிக்கையாளர்கள்.//டீ விற்பனை செய்பவர்களை லேசாக நினைத்து வீடக் கூடாது, அப்படித்தானே? ;)

      நீக்கு
  30. எலன் மாஸ்க் பற்றி இப்போதுதான் அறிந்து கொண்டேன். நன்றி ரமா.  

    பதிலளிநீக்கு
  31. கீதா ரங்கன் நாளை ஒரு கேக்கை எதிர்பார்க்கலாமா? 

    பதிலளிநீக்கு
  32. ஆசிரியர் தமிழரசனின் சேவை அள்ளப்பரியது.
    என்னாளும் நல் வாழ்வு பெறவேண்டும்.

    தேனீர்க்கடை வைத்திருப்பவர்கள் நல்ல உழைப்பாளிகள். அவரின் மகள் ஒரு போர்விமான
    பைலட்டாக வரவேண்டும் என்றால் எத்தனை
    சிரமங்களை மீறி வந்திருக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்கு மனம்
    நிறை பாராட்டுகள்.
    ட்ரம்மர் டீனேஜ் சி இ ஓவுக்கு ஆசிகள். சீக்கிரமே தங்கை லதாவையும் அழைத்துக் கொண்டு
    பெரிய ட்ரூப் ஆரம்பிக்க வாழ்த்துகள்.

    ரமா ஸ்ரீயின் ஈலன் மஸ்க் கட்டுரை
    பிரமாதம்.
    சமீப கால ராக்கெட் லான்ச்கிலிருந்து,
    இந்தோனேசியக் குகைகளில் சிக்கியிருந்த
    சிறுவர்களை விடுவித்தது வரை ஏகப்பட்ட
    நற்காரியங்கள் செய்திருக்கிறார்.
    அவர் பணி தொரட்டும். நன்றி ரமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேனீர்க்கடை வைத்திருப்பவர்கள் நல்ல உழைப்பாளிகள்//

      வல்லிம்ம யாரைச் சொல்றாங்க? மோ என்று பெயரின் முதலெழுத்து, கடைசி எழுத்து டி என்பவரையா? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. "மோ" முதல் எழுத்து "தி" கடைசி எழுத்து! "டி" இல்லை. அவங்க வேறே, இவர் வேறே! நிரவ் மோடி வைரக் கடைக்காரர், மோதி பிரதமர் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. நிரவ் மோடி பிறவிப் பணக்காரர்னு நினைக்கிறேன். "மோதி" அப்படி இல்லை.

      நீக்கு
    3. வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்கையாஆ - தி தான் போட்டிருக்கணும். டி என்பது தட்டச்சுப் பிழைதான் (ஐபேட் ல எழுதினா நிறைய தட்டச்சுப் பிழை வருது. அதை சரி பண்ண திரும்ப படிப்பதில்லை. ஸ்க்ரோல் செய்வதில் உள்ள சங்கடங்கள்தான்). பேர்ல கூட பிரதமருக்கு கெட்ட பெயர் வந்துடக்கூடாதுன்னு மெனெக்கெடறீங்க. இந்த கொ.ப.செ போஸ்ட் உங்களுக்குக் கொடுக்கணும்னு யாருக்கும் தோண மாட்டேங்குதே.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!