ஞாயிறு, 7 ஜூன், 2020

ஞாயிறு  : திவ்யாவின் அக்ரிலிக் இதை விட அழகாக இருக்குமாக்கும்!


எத்தனை பட்டாம்பூச்சி தெரிகிறது?



 பூகம்பம் எல்லாம் ஒன்றும் இல்லைங்க......

மழைத்தண்ணீர் வழியே தெரிந்த காட்சிதான்

திவ்யாவின் அக்ரிலிக் இதை விட அழகாக இருக்குமாக்கும்!

கங்கைகொண்ட சோழபுரத்தில்  கல்தூணில் ஒரு சிற்பம் இருக்கும்
பல மிருகங்கள் உடலும் தலையும் பின்னலாக ....

கையாடல் தெரிகிறதா?


எங்கள் stretched limo பார்த்தீங்களா?

போயே  போயிந்தி


மழை கொஞ்சம் விட்ட மாதிரி இருக்கு ..வாங்க தரிசனம் முடிச்சுக்கலாம்


படம் பதிவாகுமுன் மின்னல் காணோம்



பையில் என்ன வைத்திருக்கிறார்?

 6 வித்யாசங்கள்?






========================================

மின் நிலா 003 : இங்கே க்ளிக்கவும் !

(இந்த வார மின் நிலாவில் பல புதிய மாற்றங்கள் செய்துள்ளோம் )

========================================


85 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்.கௌதமன் ஜி.
    மழையில் நனைந்த படங்கள் எல்லாமே
    அழகு. குழந்தைகள் பெயிண்டைத் தொட்டுத் தீற்றும் ஓவியங்கள்
    போல.

    மழையோடு விளையாடி உறவாடி கோவில் தரிசனம்
    செய்திருக்கிறார்கள் போல.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அழகாக வந்திருக்கின்றன.

    மின் நிலா பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.   நன்றி.  பாருங்கள்.

      நீக்கு
    2. பாருங்க, படிங்க, நண்பர்களுக்கு பகிருங்க!

      நீக்கு
  3. மின் நிலா,சுவாரஸ்யமாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.
    நடுவில் சேர்க்கப் பட்டிருக்கும்
    படங்கள் மிக அழகு.
    பாப்பி செடி சிகப்பாக இருக்குமா. நல்ல வண்ணம்.

    எங்கள் வலைப்பதிவுகள் பற்றி மீண்டும் அறிமுகமா?!

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா..  வாங்க, நல்வரவு, வணக்கம்.

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்தியா முழுதும் கொரோனா இல்லாத நாடாக மாறப் பிரார்த்திப்போம். கட்டுக்கு மீறி விட்டது. பிரார்த்தனை ஒன்றே வழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா,  நல்வரவு, வணக்கம்.

      ஆம்.  பிரார்த்தனை செய்வோம். கொ கணக்கு மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறது.  மும்பை மட்டுமே தனிமுயற்சியாக சீனாவை வெற்றிகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  பிரார்த்தனை ஒன்றே வழி.

      நீக்கு
    2. Herd immunity செட் ஆகவேண்டும். பார்ப்போம்.

      நீக்கு
    3. கௌதமன் சார், மிகச் சரியாகக் கூறினீர்கள். herd immunity மட்டுமே பதில். ஆனால் இந்நோயின் வேகத்தைப் பார்த்தால் herd immunityயே எகிரி விடும் போலிருக்கிறது. மக்களுக்கு பயம் விட்டு விட்டது என்றுதான் தோன்றுகிறது. அவர்களுக்கு இதன் ஆழமான தாக்கம் புரியவில்லை.

      நீக்கு
    4. எல்லாம் சரியாகும் என்று நம்புவோம்.

      நீக்கு
  6. அந்த இளம்பெண் தான் திவ்யாவா? படங்களுக்கான தலைப்புகள் அனைத்தும் ஸ்ரீராமால் எழுதப்பட்டிருக்கணும். அதிலும் அந்தச் செல்லம்! ஆறு வித்தியாசங்கள் என்ன? அறுபது இருக்கும்போல! படங்கள் அனைத்தும் கலாரசனையோடு எடுத்திருக்காங்க. முதல் நாலைந்து படங்கள். பனோரமா உள்பட. மாடர்ன் ஆர்ட் படங்கள் நன்றாக இருக்கின்றன. காமிராக்கண் வழியே பார்த்து அதிலும் ஓர் அழகைக் கண்டு பிடித்த காமிராக்காரருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் திவ்யா,  கார்த்திக்கின் பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  தலைப்புகள் நானல்ல!

      நீக்கு
    2. நானும் ஸ்ரீராம் நினைத்ததைப் போன்றுதான் நினைத்தேன்.

      நீக்கு
    3. நான் திவ்யா, கார்த்திக்கின் பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். Yes, me too.

      நீக்கு
  7. மின் நிலா தொகுப்பு அட்டகாசம். ஆனால் ஸ்க்ரோல் பண்ணி ஒவ்வொரு பக்கத்துக்கும் போக வேண்டி இருக்கே! அதனால் அந்தப் பக்கத்தைச் சொடுக்கினால் குறிப்பிட்ட பக்கத்துக்குப் போறாப்போல் இருந்தால் எப்பூடி இருக்கும்? "யாரு அங்கே? எங்களை வேலை வாங்கிட்டே இருக்கிறது?" அப்படினு சத்தம் எங்கே இருந்தே வருதே! மீ த எஸ்கேப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் மின் பத்திரிகை தயாரிப்பில் எல் கே ஜி சேர்ந்துள்ளேன். அதற்குள் என்னை எஸ் எஸ் எல் சி எழுதச் சொல்கிறீர்களே! Till yesterday, I was using 'open office' for document preparation. Yesterday I have downloaded WPS office and started learning the basics. So, please bear with me till I complete the KG classes!

      நீக்கு
    2. I don't want to go for Microsoft Word, since it is a costly affair!

      நீக்கு
    3. இன்னுமா எல்.கே.ஜி?.. இப்போ யு.கே.ஜி., இல்லையோ?.. :))

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. நோ யு ஆர் கேஜிஜி !!!!!! டபுள் க்ரேடு!!!!

      கீதா

      நீக்கு
    6. Sorry Sir Gouthamanji! I thought you are an expert in these matters. நான் இன்னமும் க.கை.நா. தான். என்னோட சேர்ந்து பலரும் இருப்பதை இப்போதே அறிந்தேன். :))))) மன்னிக்கவும். _/\_

      நீக்கு
    7. :)) கை நா புரியும் அது என்ன க கை நா?

      நீக்கு
    8. ஹிஹிஹி, கணினி கை நாட்டு அல்லது கம்ப்யூட்டர் கை நாட்டு! :))))) அதான் க.கை.நா.

      நீக்கு
    9. கேஜிஜி சார்... கீசா மேடம் சொல்ல வர்றது என்னன்னா, அவர் 'கணிணி கைநாட்டு' ஆனால் மற்ற எல்லாத்திலேயும் எக்ஸ்பர்டுன்னு. கணிணி தெக்கினிக்கிலவேணா அப்படி இருக்கலாம்.

      நீக்கு
  8. மின்நிலா நன்றாக மெருகேறிக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. எம்மை ஈர்க்கும் இனிய படங்கள்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அருமை ஜி
    மின்நிலாவில் கருத்துரைகளையும் சேர்க்கலாமே படிப்பதற்கு சுவாரஸ்யம் கூடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்பவற்றை கவனத்தில் கொள்கிறேன். மின் நிலா பற்றிய கருத்துகளை engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

      நீக்கு
    2. மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.

      நீக்கு
    3. நன்றி. பார்க்கிறோம்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    படங்கள் நன்றாக உள்ளன. அதற்கேற்ற வாசகங்களும் அருமை. மழை விழும் போது எடுத்த படங்கள் மார்டன் ஓவியங்களாக காட்சி தருகிறது. பனோரமா படங்களும் அழகாக உள்ளது. ஆறு வித்தியாசங்கள் தலைப்பு அந்த படங்களுக்கு பொருத்மாக அமைந்ததை ரசித்தேன்.

    மின் நிலா புத்தகம் அழகுடன் ஜொலிக்கிறது. இடையிடையே மலர்கள் படங்கள் கண்களுக்கு விருந்து. சிலேட்டு பல்பம் உரையாடல் பகுதியை படித்து ரசித்தேன். சிகரெட் டப்பாவில் சினிமா படம் காட்டி பல்பங்களை சேகரித்த வரலாறு சுவையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ரசிப்புக்கு எங்கள் நன்றி. வாழ்க வளமுடன்!

      நீக்கு
  12. அனைவருக்கும் அன்பின் வணக்கம்.. ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சார். புதிய வீடு வரப்போகின்றது. இட்லி சட்னி ரெடி.

      நீக்கு
    2. புது வீடு..
      அது எங்கிருந்து வரும்?...

      நாமல்லவா அங்கு போகப்போகிறோம்!..

      நீக்கு
    3. அதானே! அதற்கு முன்பு பாகற்காய் பிட்லை வேறு வரும்!

      நீக்கு
    4. நாங்க யாத்திரை போகும்போது, யாத்திரை கூட்டிச் செல்பவர், அவங்களோட உணவு தயாரிக்கும் டீமுக்கு ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன், என்ன சமையல் என்று யாரிடமும் சொல்லக்கூடாது. நாங்க சாப்பிட உட்காரும்போது, பரிமாறுவதற்கு முன்புதான் அவர் சொல்லுவார். (அது எதுக்குன்னா, எதையாவது விட்டிருந்தாலோ அல்லது ஒத்துக்கொள்ளாது என்று நினைத்தாலோ, அதற்கேற்றவாறு மற்றவற்றை வாங்கிக்கொள்ள).

      நீங்க என்னன்னா இந்த ட்ரெடிஷனை உடைக்கறீங்களே. நாளை என்ன வருதுன்னு நாங்க பாத்துக்கறோம். செவ்வாய் கதை துரை செல்வராஜு சார்னு சொல்லிட்டீங்க. நாளைக்கு அனேகமா கீசா இல்லைனா பா.வெ மேடமா இருக்கும். (இல்லை பா.வெ. இல்லை. அவங்கதான் புதுமைச் சமையலுக்குத் தாவிட்டாங்களே. அவங்க வீட்டுல பா.பி. போணியாகாது. கீசா மேடம் இல்லைனா எங்க அக்கா ஹா ஹா)

      நீக்கு
    5. //நாளைக்கு அனேகமா கீசா இல்லைனா// நான் இல்லை. ஏனெனில் நான் இப்போது எழுதுவதையும், இணையத்தில் படிப்பதையும் குறைச்சிருக்கேன். அதோடு ஏற்கெனவே எழுதி வைச்சதையே அனுப்பலை. புதுசா எதுவும் பண்ணும்படியான சூழ்நிலை இல்லையே! ஆகவே நோ பதிவு என்னிடம் இருந்து. பாகல்காய் பிட்லை எங்க வீட்டில் போணி ஆகும். ஆனால் பாகல்காயை ஜூஸாகச் சாப்பிட்டுடறோம். சமைக்கிறதில்லை.

      நீக்கு
    6. நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன்..

      எனது கதைகளுக்குள் பழைய வீடு, மொட்டை மாடி, வத்தக் குழம்பு, அடை, சட்னி கண்டதும் கல்யாணம் - இதைத் தவிர வேறொன்றும் இருக்காது என்று திங்க் கிழமையே விடுப்பு வாங்கிக் கொண்டு போய் விடுவார்களே!...

      என்றென்றும் செவ்வாயின் திகில் மாறாமலேயே இருப்பதாக!...

      நீக்கு
    7. //(இல்லை பா.வெ. இல்லை. அவங்கதான் புதுமைச் சமையலுக்குத் தாவிட்டாங்களே.// நீங்கள் யாரை சொல்கிறீர்கள் நெல்லை?

      நீக்கு
    8. எனக்குத் தெரிந்த பா.வெ. மேடம் நீங்கதான்...ஹா ஹா.

      நீக்கு
  13. மழைக் காலக் கோலங்கள்
    அழகு... அழகு...

    கண்ணாடியில் பட்ட மழைத்துளி
    கன்னத்தில் தெறித்தாற் போல்!...

    பதிலளிநீக்கு
  14. மின்நிலா புதிய பொலிவு..

    வாழ்க .. வாழ்க...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
    மின் நிலா தொகுப்பு அருமை!
    புகைப்படங்கள் அனைத்தும் அழகு!

    பதிலளிநீக்கு
  16. பட்டாம்பூச்சி...எத்தனை...முயற்சித்தேன். முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரகசியமா சொல்றேன் - என்னாலும் முடியவில்லை!

      நீக்கு
    2. இஃகி,இஃகி, இஃகி, இங்கேயும் அதே! இப்போத் தான் படத்தைப் பெரிசு பண்ணிப் பார்க்கலாம்னு வந்தேன்.

      நீக்கு
  17. அற்புதமான புகைப்படங்கள் ..மழையின் ஈரம் இப்போது எம்முள்ளும்...

    பதிலளிநீக்கு
  18. 'மழைத்துளி மழைத்துளி கண்ணாடியில் சங்கமம்' நீ வரைந்த வண்ணக் கோடுகளே நவீன ஓவியங்களாக .

    பதிலளிநீக்கு
  19. படங்கள் எல்லாமே நல்லாருக்குன்னாலும் என்னை ஈர்த்தவை செல்லமும், அப்புறம் கண்ணாடியில் விழும் மழைத்துளிகள் வழி எடுத்த படங்கள் செம செம....மிகவும் ரசித்தேன்...நானும் இப்படி எடுப்பதுண்டு. இவை கூடுதலாகக் கவர்ந்தன..

    கீதா

    பதிலளிநீக்கு
  20. படங்கள் எல்லாம் அழகு.
    பட்டாம் பூச்சி இலைகள் அழகு.
    கார் கண்ணாடியில் மழை வரைந்த ஓவியங்கள் கொஞ்சம் திகில்(பேய்) படத்தை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  21. மின் நிலா நன்றாக இருக்கிறது புதிய பகுதியில் எல்லோரையும் எழுத அழைத்து இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  22. பனோரமாவில் எடுக்கப்பட்ட படங்கள் மிக நன்றாக இருக்கின்றன. ஒரு வழியாக மின் நிலா படித்து விட்டேன். நம்ம ஏரியாதான் எங்கே போனது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஏரியா எங்கேயும் போகவில்லையே? விளக்கமாகச் சொல்லுங்கள்.

      நீக்கு
  23. படங்கள் அழகு.. ஆனாலும் கெள அண்ணன் என்னைப் பேய்க்காட்டிட்டார்ர்... அந்த ட்றிப் படங்களோடு, ஏனையவர்களின் படங்களும் வருமெனச் சொல்லிப்போட்டு.. அத்தொடர் மட்டுமே வந்திருக்குது இம்முறையும் கர்ர்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக் கடவுளே! நான் சொன்னது மின்நிலா பத்திரிகையில், ஞாயிறு படங்களுக்கு பதிலாக, அதே ஆசிரியர் எடுத்த பிரத்யேகப் படங்கள் , பதிவுகளுக்கு இடையே வெளியிடுவோம் என்றுதான்.

      நீக்கு
  24. ஆஆஆஆஆஆஆஅ ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்:)) இன்னும் 8ம் திகதி வரவில்லை:) ஆனால் ஜூன் 8 என்றே புத்தகம் வெளி வந்திருக்குது.. சரி அதை விடுங்கோ:)) நீங்கள் ரொம்ப ஸ்பீட்டூஊஊஊ...

    அந்தச் செடி எங்கோ பாலத்துக்குக் கீழே இருக்குது போலும், அப்போ வீட்டில் எங்கே பார்க்கிறதாம் ஹா ஹா ஹா...

    ஆரும் தொட்டிட முடியாதவாறோ போட்டிருக்கிறீங்க மின்நிலாவை..:), நிலா என்பதனாலோ அதுவும் சரிதான்.. ஹா ஹா ஹா.

    ஆவ்வ்வ்வ் அங்கு ஆசிரியர் வரிசையில் ஸ்ரீராம் முன்னுக்கு வந்திட்டாரே:) நான் இனி முதலாவது என்பேனா.. மூணாவது ஆசிரியர் என்பேனா?:)) ஹா ஹா ஹா..

    அதென்ன மூன்றாவது ஆசிரியரை மட்டும் கொஞ்சம் ஸ்டைலாக்கிப் போட்டிருக்கிறீங்கள் கர்ர்:)).. நான் “காஜி” என வாசித்து:).. இதாரிது புது வரவு எனப் பதறிட்டேனாக்கும் ஹா ஹா ஹா

    பக்கம் மூன்று, சூப்பராக இருக்குது, இலக்கம் போட்டு வரிசைப்படுத்திய விதம்.

    நோஓஓஓஓஓஓ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்ன்.. மிளகுஷியம் எனச் சொல்லிக்கொண்டு, சமையல் படம் போடாமல் மஞ்சள்ப்பூ போட்டிருக்கிறீங்கள்:)).. ஒரு பிங் பூ எனில் மன்னிச்சு விட்டிருப்பேன் ஹா ஹா ஹா..

    அஞ்சு பேர் இருக்கிறீங்களே?:) ஆர் வீட்டுத்தோட்டத்திலே போய்க் கேட்பேன் நான்:))..
    -இது பக்கம் 10:) க்கு:)

    ஓ அது பொப்பி மலர்களோ.. ஆவ்வ்வ்வ் பிரான்சில் பார்த்தது.. என் பக்கத்திலும் படம் போட்டிருக்கிறேன்...

    ஆஆஆஆஆஆ மறுபடியும் ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்ர்:).. எழுதியவர் நெல்லைத்தமிழன் என்பதற்குக் கீழே அவரின் செல்ஃபி ஒன்று போட்டிருக்க வேண்டும்:)) அடுத்த கதை அவர் எழுதும்போது மறக்காமல் போடவும்:)..

    பக்கம் 31... இந்தப் பூ ஊரில் இருந்தது, 2,3 கலர்களில்.. அழகோ அழகு.. ஆனா நினைக்க நினைக்க பெயர் நினைவுக்கு வருகுதில்லையே.. ஏதோ ரோஜா என்போம்..

    ஏன் ஒழுங்கு வரிசையில் குழப்பமாக இருக்குதே.. சனிக்கிழமையைப் போட்ட பின்னர் வெள்ளிக்கிழமைக் கதையைப் போட்டிருக்கிறீங்கள்.. அதிரா கண்ணுக்கு அனைத்தும் தெரியுமெல்லோ..

    நாளைய திங்களின் திகதி போட்டிருக்கிறீங்கள், ஆனா ஞாயிறு பற்றிய விபரம் புத்தகத்தில் இல்லை. இன்னொன்று, நீங்கள் பொதுவாக ஒரு திகதி கொடுத்தாலும், ஒவ்வொரு தலைப்பின் கீழும், அது வெளியான திகதியையும் குடுத்தால் நன்றாக இருக்குமெல்லோ.. சரி சரி நான் சொல்லி நீங்கள் கேட்கவோ போறிங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மொத்தத்தில் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. // எழுதியவர் நெல்லைத்தமிழன் என்பதற்குக் கீழே அவரின் செல்ஃபி ஒன்று போட்டிருக்க வேண்டும்:)) அடுத்த கதை அவர் எழுதும்போது மறக்காமல் போடவும்:)..// அவர் எங்களுக்கு அனுப்பினால்தானே! அவர் எங்களுக்கு அவருடைய செல்ஃபி, குல்ஃபி எதுவும் அனுப்புவதில்லை!

    பதிலளிநீக்கு
  26. பாகமண்டலா காட்சிகள் அழகு ...

    மின்நிலா வாசித்தேன் போன வாரம் தவற விட்ட பதிவுகள் அனைத்தையும் வாசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி ..

    படங்களும் , தொகுப்பும் மிக சிறப்பு

    வாழ்த்துக்களும் , மகிழ்ச்சியும்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!