வெள்ளி, 26 ஜூன், 2020

வெள்ளி வீடியோ : நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்

1990 இல் வெளிவந்து காணாமல்போன படம் கவிதை பாடும் அலைகள்.  ராஜ்மோகன் ஜனனி நடிப்பில் வெளிவந்த படம்.  ஜனனி பின்னர் ஈஸ்வரி ராவ் என்கிற பெயரில் பிரபலமானார்.  பல தமிழ்ப்படங்களில் நடித்தார்.  காலாவிலும் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார்.


இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ், ஒரே ப்ளஸ் இளையராஜாதான்!  இதன் பாடல்களால்தான் இந்தப் படம் சிலரது நினைவில் இருக்கிறது!  படத்தின் பாடல்களை எழுதி இருப்பவர் கங்கை அமரன்.  இயக்கம் டி கே போஸ்.



வானிலா தேனிலா எனும் மனோ -சித்ரா பாடிய பாடலும், அருண்மொழி -சித்ரா பாடிய உன்னைக் காணாமல் நானேது பாடலும், அப்புறம் இன்று மெயினாகப் பகிரப்போகும் கண்ணே என் கண்மணியே பாடலும் இந்தப் படத்தின் இனிய பாடல்கள்.



அருண்மொழி பாடிய பல பாடல்கள் இனிமையாக இருக்கும்.  டிராக் பாட வந்து பாடகர் ஆனவர் என்று நினைக்கிறேன்.  இளையராஜா இசையில் பல நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

உன்னைக் காணாமல் நான் ஏது 
உன்னை எண்ணாத நாள் ஏது 
உன்னைக் காணாமல் நான் ஏது 
உன்னை எண்ணாத நாள் ஏது 
பூங்குயிலே பைந்தமிழே 
என்னுயிரே நீ தான் 

கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் 
காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன் 
கவிஞனைத் தேடினேன் கவிதை கேட்க வந்தேன் 
வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும் 
ஜீவனை ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம் 
இனி எந்நாளும் பிரிவேது அன்பே 

ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம் 
கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம் 
பிரிவினை ஏது இணைந்து பாடும் போது 
காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளும் 
காலங்கள் போன போதும் வானத்தைப்போல வாழும் 
இது மாறாது மறையாது அன்பே... 


  

அடுத்து வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  ஆரம்ப இசை முதல் மனோ குரல் வரை மிகவும் இனிமையான பாடல்களில் ஒன்று.  ராஜ்மோகனுக்கு கதாநாயகனாய் நடிக்கும் ஆசை வந்ததால் எடுத்த படமோ, வருமானவரிக் கணக்குக்காக எடுத்த படமோ...    நல்ல இரு பாடல்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.    



ஆடியோவும் சுமாராகத்தான் கேட்கிறது.  எனினும் ரேடியோவில் கேட்கும்போது நன்றாகவே இருந்தது ஒலியின் தரம்.  வரிகளும் கூட இன்னும் சிரத்தை எடுத்து எழுதி இருக்கலாம் என்றும் தோன்றும்.

கண்ணே என் கண்மணியே 
என் கையில் வந்த பூந்தோட்டமே 
பொன்னே என் பொன்மணியே 
தினம் பொங்கிவரும் நீரோட்டமே  
நீ கேட்கத்தானே நான் பாடினேன் 
நீ இல்லாத நேரம் நான் தேடினேன் 
வாடி வாடி மானே  

ராசா என் ராசாக்கண்ணு 
ஒன்ன நம்பி வந்த ரோசாக்கண்ணு 
ஒன்னோட ஒண்ணா நின்னு 
தினம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு  

மாலைக்கும் மாலை என்மாமன் பொண்ணு சேல 
அழைக்கும் வேள அசத்தும் ஆள 
சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோல 
கட்டுங்க வாழ கொட்டுங்க பூவ 
நீ கூறும் வேள இனிவேறென்ன வேல 
ஏன் மாமந் தோள தெனம் நான் சேரும் மால 
ஒண்ணு தாங்க கூரச் சேல 
காலம் சேர்ந்ததும் மால மாத்தணும் 
காதல் கத சொல்லி போத ஏத்தணும் 
வாடி வாடி மானே  

உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு 
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு 
கண்ணுக்குள் உன்ன நா கட்டி வச்சேன் பாரு 
கலைப்பதாரு பிரிப்பதாரு 
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும் 
பூவான வானம் அதில் போய் ஆட வேணும் 
இனி மேலே என்ன வேணும் 
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன் 
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன் 
ராஜா ராணி போலே  

 








67 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கடா பதம் தப்புதேன்னு பார்த்தேன்.

      ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் என்று வந்திருக்கணும்.

      நீக்கு
    2. ஒரு பிறவியுள், ஆமை போன்று (இங்கு நான்கு கால்கள், தலையை இழுத்துக்கொள்வதை வைத்து உதாரணம் காண்பிக்கப்பட்டிருக்கு என நினைக்கிறேன்) ஐந்து பொறிகளையும் - புலன்களையும் அடக்கினால் அது அவனுக்கு ஏழ் பிறப்பிலும் அவனுக்கு அது காவலாகும்.

      ஒரு புலனை அடக்குவதே உம்பாடு எம்பாடு என்று ஆகிடுது. இதுல ஐம்புலன்களையுமா?

      நீக்கு
    3. ஆமைகள் எல்லாம் சீமானுக்கு பயந்து, ஓடிப்போய் ஒளிந்துகொண்டுவிட்டன போலிருக்கு!

      நீக்கு
    4. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து...

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை இருவருக்கும் நல்ல நாளுக்கான வாழ்த்துகள்.
      எப்போதும் சந்தோஷமும், உடல் நலமும்
      நம் எல்லோருடனும் இருக்க இறைவனிடமும் ,அன்னையிடமும்
      பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...    இனிய வணக்கம்.  நன்றி.

      நீக்கு
    4. எ பி உ பி க்கள் எல்லோருக்கும் நல்வரவு! வாழ்க நலமுடன், வாழ்க பல்லாண்டுகள்!

      நீக்கு
    5. எ.பி வாசகர்கள்னு சொல்லியிருக்கலாம். உ.பி.ன்னு சொன்னதுனால எங்களுக்கெல்லாம் அல்வாதானா?

      நீக்கு
  3. இனியகாலை வண்க்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.

    இங்கும் லாக்டவுன் கொண்டுவருவது பற்றி பேச்சு அடிபடுகிறது. இந்த நாள் மற்றும் இனி வரும் நாட்களும் நல்ல நாளாக, நாட்களாக அமைந்திடட்டும்.

    படம் பெயர் எல்லாம் கேட்டது கூட இல்லையே!!! ஹா ஹா அதான் சொல்லிட்டீங்களே காணாமல் போன படம்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...    வணக்கம்.  வாழ்த்துகளுக்கு நன்றி. பாட்டு கேட்டால் தெரியலையா!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா...    வாங்க...  வணக்கம்.

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. ஓ ஈஸ்வரி ராவ் பெயர் ஜனனியா முன்னர்?! காலா வரை வந்திருக்காங்களா!!!

    நீங்க சொல்லிருக்கற பாடல்கள் இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்கள் டக்கென்று நினைவுக்கு வரவில்லை. ஒரு வேளை கேட்டால் நினைவுக்கு வரலாம்.

    கேட்டுவிட்டு வருகிறேன் ஸ்ரீராம். அது அப்புறம் தான் முடியும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அநேகமா இந்தியா முழுக்க மறுபடி இன்னொரு நாடடங்கு வருமோனு நினைக்கும்படியான செய்திகள்! கவலைகள்! என்ன தான் முடிவு இதுக்குனு புரியலை. அந்த ஆண்டவன் தான் வழி காட்டணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா....   நாடு முத்துவதுமே உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது.   ஆண்டவன் மனதில் என்ன நினைவோ...   சீக்கிரம் நினைவுக்கு வந்து நம்மை எல்லாம் காக்கட்டும்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. இந்தப்படமும் தெரியாது. பாடல்களும் தெரியாது. ஈஸ்வரி ராவ் பெயர் கேள்விப் பட்டிருக்கேன். அம்புடுதேன். அது சரி, இன்னிக்கு விமரிசனம் ஒண்ணும் இணைக்கலையா? அதை எதிர்பார்த்துக் கொண்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பேர்களுக்குத் தெரிந்திருக்காது கீதா அக்கா...     விமர்சனம் மின்நிலாவில் 

      நீக்கு
  8. இனிய காலை வணக்கம்.

    இரண்டு பாடல்களையும் “கேட்டு” ரசித்தேன். இதுவரை கேட்டதாக நினைவில்லை.

    ஹீரோ கேள்விப்பட்டதே இல்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   ஹீரோ அப்புறம் மொத்தமா காணாம போயிருப்பார்.   அதென்ன கேட்டு \க்கு அடைப்புக்குறி?!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. "அடைப்புக்குறி?” - கேட்க மட்டுமே செய்தேன். காணொளி பார்க்கவில்லை என்பதையே அப்படிக் குறிப்பிட்டேன் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஓ....   நல்லது....   அது சரிதான்..  ஹா..  ஹா...  ஹா...

      நீக்கு
  9. வெள்ளிக்கிழமைக் கான படம் நினைவு இல்லை.
    இரண்டாவது பாடல் கேட்ட மாதிரி இருக்கிறது.
    இனிமையாகவும் இருக்கிறது.
    இருவருக்குமே இருபதுக்குள் வயது இருக்குமோ.

    அதுவே அந்த நாட்களில் வழக்கமாக இருந்த ஞாபகம்.
    அலைகள் ஓய்வதில்லை படம் வந்ததிலிருந்து இந்த மாதிரி இளஞ்சோடிகள்
    பிரபலமாக இருந்திருக்க வேண்டும்.
    முதல் பாட்டில் மலையாள வாடை இருக்கிறது.:)

    எஸ்பிபி இருப்பதால் இரண்டாம் பாடல்
    கேட்கும்படி நன்றாக இருக்கிறது.

    நீங்கள் கேட்டவை
    பகுதிக்கு நான் ஒரு பாடலைச் சொல்லலாமா என்று நினைத்தேன்!!
    பந்தபாசம் என்று ஒரு படம் வந்தது,.
    அதில் ''பந்தல் இருந்தால் கொடி படரும் ''பாடல் நன்றாக இருக்கும்.
    அரதப் பழசு தான். முடிந்தால் ஒலி பரப்புங்கள் மா.
    இந்தப் பாடலிலும் இந்திப் பாடல் சாயல் இருக்கிறது:)
    தேடிக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...   அலைகள் ஓய்வதில்லை சின்ரோம்!  இரண்டாவது பாடல் எஸ் பி பி இல்லை.  மனோ.   நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் முயற்சி ஸ்வீய்கிறேன் அம்மா.   பந்தபாசம் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு பாடல் கேட்டு வெளியிட்டிருக்கேன்.

      நீக்கு
  10. படமும் பாடல்களும் கேட்ட நினைவு இல்லை.

    பாடல்களின் காணொளி கேட்டு பிறகு எழுதறேன்.

    பதிலளிநீக்கு
  11. இம்மாதிரி பாடல்களையும் வரிகளையும் எப்படித்தான் தேடுகிறீர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ரசித்த, நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லாத பாடல்களை பகிர்கிறேன் ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  12. ஜனனி தெரியும் அவர்தான் ஈஸ்வரி ராவ் என்பது இன்று அறிந்தேன். காலா படத்தில் நடித்த செய்தியும் புதிது.

    பாடல்கள் இரண்டும் ரசித்த பாடல்களே...

    பதிலளிநீக்கு
  13. இனிமையான பாடல்கள்...

    கொடைக்கானல் பண்பலையில் பலரும் அடிக்கடி இந்தப் பாடல்களை ஒலிபரப்ப சொல்வார்கள் - இன்று வரையிலும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    இரவு என்றங்களில் இது மாதிரி பாடல்கள் தாலாட்டும்.

      நன்றி DD.

      நீக்கு
    2. // இரவு என்றங்களில் //

      *இரவு நேரங்களில் 

      நீக்கு
  14. இன்றைய பாடல்களைப் பலமுறை கேட்டிருக்கின்றேன்...

    ஆனால் படம் பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்.  நானும் படம் பார்க்கவில்லை!

      நீக்கு
  15. இர்ண்டு பாடல்களுமே கேட்ட நினைவில்லை ஸ்ரீராம் இதுதான் முதல் தடவையாகக் கேட்கிறேன். மெலடிஸ். இரு பாடல்களுமே ராஜாவின் வேறு பாடல்களை நினைவு படுத்துகின்றன. இரண்டாவது பாட்டு இதே போன்று வேறொரு ராஜா பாடல் நினைவுக்கு வருது வழக்கம் போல வார்த்தைகள் நினைவுக்கு வர மாட்டேங்குது மெட்டு மட்டுமே நினைவுக்கு வருகிறது. நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையராஜாவின் இனிய பாடல்களில்
      இப்படி ஓரஞ்சாரமாக ஒன்றுக்கு ஒன்று இன்னொன்று என வருவதுண்டு

      சட்டென நினைவுக்குப் பிடிபடாமல் எங்கோ இருந்து கொண்டு நம்மைப் பார்த்துச் சிரிப்பதுண்டு...

      நீக்கு
    2. // சட்டென நினைவுக்குப் பிடிபடாமல் எங்கோ இருந்து கொண்டு நம்மைப் பார்த்துச் சிரிப்பதுண்டு...// ஆஹா ! வெண்ணை திருடிய கண்ணன் தூணுக்குப் பின்னே ஒளிந்துகொண்டு எட்டிப் பார்த்துச் சிரிப்பதுபோல ஒரு பிரமை!

      நீக்கு
    3. கீதா...    இளையராஜா மட்டுமல்ல, எல்லா இசை அமைப்பாளர்களுமே நிறைய பாடல்களை விதம் விதமாக தருவார்கள்.  ஒரு மோகன ராகத்தை, ஒரு கல்யாணியை எவ்வளவு விதமாகக் கேட்கிறோம்?

      நீக்கு
    4. ஹா..  ஹா...  ஹா...    நான் ரசித்த வரியை கே ஜி ஜியும் ரசித்திருக்கிறார்.  நன்றி துரை ஸார்.

      நீக்கு
  16. முதல் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். இரண்டாவது பாடல் கேட்டது இல்லை.
    பாடல்கள் இனிமை.
    ஈஸ்வரி ராவ் பேர் ஜனனி என்பது இப்போதுதான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...   எனக்கு மட்டும் என்ன?  அந்ததந்த பாடல்களுக்கான விவரங்கள் தேடும்போதுதான் எனக்கும் இது மாதிரி விவரங்கள் கிடைக்கின்றன!

      நீக்கு
  17. இந்த இரு பாடல்களுமே கேட்ட நினைவில்லை. படமும் பார்த்ததில்லை.

    90 களில் கேரளத்தில் என்பதால் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    பாடல்கள் இனிமையாக இருக்கின்றன ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி ஜி...   இப்போது பாடல்களை ரசித்திருப்பீர்கள்.  நன்றி.

      நீக்கு
  18. இன்று இரு பாடல்களும் கேட்ட பாடல்களே, ஆனா முதல் பாடல்தான் மனதில் நிற்கும் பாட்டு, அந்த வரியை ஸ்லோமோசனில் இழுத்துப் படிக்கும் விதம்தான் அழகு.. உன்னைக்...காஆஆஆஆஆஆஆஅணாத.... என..

    படம் இப்பொழுதுதான் அறிகிறேன்.. ரேடியோவால பாட்டுக்கள்தான் தெரியுது. முன்பு இலங்கை வானொலி எனில்.. படம் என்ன பாடியவர் ஆர் எண்டெல்லாம் சொல்லுவினம் தெரியவரும்.. இப்போதைய நெட் ரேடியோக்களில் பாட்டு மட்டுமே வருகிறது பெரும்பாலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   எனக்கு இரண்டாவது பாடல்தான் ரொம்ப இஷ்டம். இரண்டாவது பாடல் மனோ பாடியது.  அதே சமயம் அருண்மொழி பாடிய பல பாடல்கள் ஹிட்.

      நீக்கு
  19. காணொளியும் கேட்டேன். டைரக்டருக்கு ஒன்றும் உதிக்காமல், பேசாமல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை மலர்க்குவியலுக்குள் வைத்து ரசிகர்களைச் சூடேற்றிய காட்சியையும் இன்னும் ஒரு காட்சியையும் காப்பியடித்திருக்கிறார்.

    பாடல்.... கேட்டதே இல்லை. ரொம்ப சுமார் ரகமோ? இல்லை படமெடுத்த லட்சணத்தைப் பார்த்து பாடல் மனதைக் கவரவில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சியைப் பார்க்காமல் பாடல் மட்டும் ரசித்துப் பாருங்களேன்...   அதுவும் கொஞ்சம் ஆடியோ பெட்டர் க்வாலிட்டி உள்ளதாக...

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் இரண்டுமே இனிமையாக இருக்கிறது முதல் பாடல் எப்போதோ கேட்ட நினைவு உள்ளது.இன்ன படம் என்றுதான் தெரியாது. இரண்டாவது இப்போதுதான் கேட்டு ரசித்தேன். பின்னது முதல் பாட்டின் மெட்டோடு கொஞ்சம் ஒத்துப் போகிறதோ எனத் தோன்றுகிறது.

    மனோ. சித்ரா குரலில் பாடல் நன்றாக உள்ளது. அருள்மொழி என்றொரு பாடகர் இருக்கிறார் என இப்போதுதான் அறிந்து கொள்கிறேன். அவர் பாடிய முதல் பாடலை கேட்டு ரசித்திருக்கிறேனே ஒழிய பாடகர் யாரென இதுவரை அறிந்து கொண்டதில்லை. (சரியான ஞான சூன்யமோ என நீங்கள் முணுமுணுக்கலாம். ஹா ஹா ஹா. )

    இப்படத்தின் கதாநாயகி கதாநாயகன் இருவருமே அழகாக உள்ளனர். ஆனால் படந்தான் அவ்வளவாக கேள்விப்பட்டதில்லை, கதாநாயகன் அந்த கால ரவிச்சந்திரனையும், ஆரம்ப கால பிரசாந்தையும் நினைவு படுத்துகிறார். கதாநாயகியும் வேறு ஒரு நடிகையின் சாயல் தெரிகிறது. எனக்குத்தான் சொல்லத் தெரியவில்லை. இவர்தான் ரஜினியுடன் நடித்தார் என்பதும் எனக்குப் புதுச்செய்தி.
    திரைப்படங்கள் சம்பந்தபட்ட நிறைய விஷயங்கள் உங்களால் கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    இரண்டு பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே டியூன் என்கிறீர்களா?  நான் அதுமாதிரி யோசித்ததில்லை.

      அருண்மொழி இளையராஜா இசையில் நிறையவே நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

      //ஒழிய பாடகர் யாரென இதுவரை அறிந்து கொண்டதில்லை.//

      அவரவர்களுக்கு என ஒரு இன்ட்ரஸ்ட் உண்டு அக்கா...   இதில் என்ன இருக்கிறது?

      வெறும் பாடல்களை மட்டும் பகிராமல் அதனுடன் கூட ஓரிரு சுவாரஸ்யமான விஷயங்களையும் இணைத்துத் தர முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  21. கரகாட்டக்காரன் படத்தில்
    மாங்குயிலே.. பூங்குயிலே... என்ற பாடல் புகழ் பெற்றது...

    அந்தக் காலத்தில் முருகன் கோயில்களில் காவடித் திருவிழாக்களில் பாடப்படும்
    ஏறு மயில் ஏறி விளையாடும்.. எனும் திருப்புகழின் மெட்டு அது என்றார்கள்...

    அதன் பிறகு தம்பி பொண்டாட்டி என்ற படத்தில் அந்தத் திருப்புகழ் பாடலை அதே மெட்டில் போட்டு அசத்தினார்கள்...

    அந்தப் பாடலில் கூட
    கமால காசன், ரசினி காந்த்து என்ற
    அரிதாரங்களுடன் அழகன் முருகனின் பெயர்களைச் சேர்த்துப் போட்டு கலாட்டா பண்ணியிருந்தார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    நான் கேட்டதில்லை.   கந்தர் சஷ்டி கவசம் டியூனில் பதினெட்டு வயது என்று பாடல் ட்யூன் போட்டார் தேவா!

      நீக்கு
    2. அப்படிப் போட்டு அலங்க மலங்க அடித்ததில் இருந்து தான் தேவாவின் சரிவு தொடங்கியது என்றார்கள்...

      கந்த சஷ்டி கவசத்தை காப்பி அடித்து வேளாங்கண்ணி மாதா கவசம் இருக்கிற்து தெரியுமோ!...

      அதை முழுதாகக் கேட்டதில்லை...
      கேட்கப் பிடிக்கவில்லை என்பது தான்...

      நீக்கு
    3. அதுக்கு தேவா காரணத்தை ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார். காட்சிப்படி கதாநாயகி முருகன் படத்துக்கு முன்னால் கந்தசஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருப்பதாகவும், கதாநாயகன், அதுக்கு அவசரப்பட்டு சீக்கிரம் வரச்சொல்லுவதாகவும், அதைத் தொடர்ந்த அதே மெட்டில் பாட்டு வரணும் என்று சொல்லி டைரக்டர் அந்தப் பாடலை வாங்கிக்கொண்டாராம். பிறகு, படத்தின் நீளம் கருதி, பாட்டுக்கு முந்தைய காட்சியை வெட்டிவிட்டாராம். அதனால் தேவாவுக்கு கெட்ட பேர் வந்துவிட்டது என்று சொல்லியிருந்தார்.

      பெரும்பாலும் இயக்குநர்கள்தான் தனக்கு இந்த மாதிரியான பாடல் வேண்டுமென்று கேட்பார்கள். சும்மா வேலையத்துப்போயா 'ஆ..ஊ....ஏய்..' இந்த மாதிரிலாம் இளையராஜா பாட்டு போட்டிருக்கிறார்? எல்லாம் இயக்குநர்களின் ஆசை.

      நீக்கு
    4. //கந்த சஷ்டி கவசத்தை காப்பி அடித்து வேளாங்கண்ணி மாதா கவசம் இருக்கிற்து தெரியுமோ!...// - நீங்க வேற... இறை பக்தியை வியாபாரமாக்குவதில் பலர் முன்னணியில் இருக்கிறார்கள். திருச்சில, பரீட்சைக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு ஹயக்ரீவ மந்திரம் ஜெபித்து தாயத்து தரப்படும் என்று ஒரு கிறிஸ்துவ அமைப்பு விளம்பரம் கொடுத்திருந்தது. சமீபத்தில் பட்டையாக திருநீறு, குங்குமம் தரித்துக்கொண்ட பாதிரி, கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்வதும் காணொளியாக வந்திருந்தது.

      இதற்கு ஒரு காரணம் சொன்னார்கள். மதம் மாறும்போது மாறுபவர்களுக்கு கல்சுரல் ஷாக்கிங் (அப்புறம் மனக் குற்றம்) இருக்கக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்கிறார்களாம். அப்புறம் வாரிசுகள் ஆட்டமேட்டிக்கா புது மதத்தைப் பற்றிக்கொள்வதில் எந்த இடைஞ்சலும் இருக்காது என்பதற்காக.

      ஆனால் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

      நீக்கு
    5. ஆமாம்... தாங்கள் சொல்வதை நானும் யோசித்து இருந்தேன்... ஆனால் வெளியில் சொல்வதில்லை..

      ஆகாத விஷயங்களில் இருந்து அகன்று விடுவது நல்லது அல்லவா!...

      நெல்லை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
    6. இப்படியான Cultural Shocking ஏற்படக் கூடாது என்று தான் விடியற்காலையில் சுப்ரபாதம் போலும்..

      சென்னை - தாம்பரத்திற்கு விடியலில் பேருந்தில் வந்து இறங்கினால் அங்குள்ள சர்ச்சில் ஏசு சுப்ரபாதம் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்...

      நீக்கு
    7. இயேசுவின் பெயரில் போற்றித் திரு அகவல் கூட இருக்கு. போற்றித் திரு அகவலின் அப்பட்டமான காப்பி! நம் காமாட்சி விளக்குப் போலவே இயேசுவை/கன்னி மேரியைச் செதுக்கி விளக்குகள், மணிகள் என வந்திருக்கின்றன.

      நீக்கு
  22. உன்னை காணாத நாள் ஏது.. பாட்டு கேட்க பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  23. //நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்..//

    சொகமா ரசிக்கிறேன் என்றால், முதல் வரி ஒன்ன நினைக்கிறேன் என்று வர வேண்டாமா?..

    என்ன சினிமாக் கவிஞர்கள் இவர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்ன என்றே இருக்கும் என்று நினைக்கிறேன்.  பாடும்போது அப்படிதான் வரும் என்று நினைவு. டைப் அடிக்கும்போது அந்த வார்த்தை தானாக ஒழுங்காகி விட்டிருக்கும்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!