ஞாயிறு, 28 ஜூன், 2020

பூச்சிகள் அண்டாதிருக்க ஒரு பூஞ்சணம்




தலைக்காவிரியிலிருந்து வரும்   ஒரு காப்பி தோட்டம் .  எஸ்டேட் என்று சொல்லாமல்   தோட்டம் என்று சொல்வதன் காரணம் அடுத்து வரும் படங்களில்


மிகவும் சிரமப்பட்டு 10 கார் நிறுத்த வகை செய்திருக்கிறார்கள்



டூரிஸ்ட்கள் மட்டும் வருவதால் வெள்ளைக்கார்களின்  அணிவகுப்பு



குடை..   மழைக்கோ வெயிலுக்கோ நன்றாக 4 பேர் நிற்கலாம்



ஷில்லாங்கில் கூட இந்த செடி பார்த்தோம்   மழை பெய்துகொண்டே இருந்தால் நன்கு வளருமோ ?



நாம் பார்க்கும்போது இச்செடியின் பூக்கள் உதிர்ந்து கொஞ்சம்  முட்கள் மட்டுமே பாக்கி 




பெயர் கேட்டு எழுதிய காகிதத்தை வாயு வச்சவன் பறித்து கொண்டு போய்....



எதிரில் இருந்த பள்ளத்தாக்கில் போட்டுவிட்டார்




தாத்தா சோழ ராஜாக்கள் ஒரு குடை கீழ் ஆண்டனர் என்று படிக்கிறோமே  இப்படிக் குடை  அந்தக்காலத்திலேயே பண்ணினார்களா ?!




காற்றோடு போன கடுதாசியில் இந்த மரத்தின் பெயரும்


ஆனால் மரத்தை விட படரும் கொடி முக்கியம்
நம் வாசகர்களுக்கு நன்கு தெரிந்த கொடி




காப்பிச்செடி



இன்னும் கொஞ்சம் கிட்டே போய்




கொத்து கொத்தாக காய்கள்



பெரிய கொய்யா ஒளிந்திருக்கிறது








காப்பிப்பூக்கள்



pea berry , plantation , ரோபஸ்டா , ரோபஸ்டா அரேபிகா என்று

சொன்னாலும் நமக்கு எல்லாமே கிளாக்காய்  மாதிரியே இருந்தது



வேறு பூச்சிகள் அண்டாதிருக்க ஒரு பூஞ்சணத்தை வளர்க்கிறார்கள்



கொக்கோ விழுமா என்று உலுக்கிப் பார்க்கிறார்கள்



இந்த மரத்தை சற்று தூரத்தில் இருந்து பார்த்த  போது .....



இந்த காப்பியில் caffeine மிக அதிகம். உடலுக்கு தீங்கு
இருந்தாலும் சில கம்பெனிகள் இவற்றை வளர்த்து ஸ்ட்ராங் காப்பி செய்கிறார்கள் என்கிறார் guide



சுற்றிலும் நிறைய fern

==================

இன்று எங்கள் ப்ளாக் பிறந்தநாள். 




===========================================



114 கருத்துகள்:

  1. தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காதெனின்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தந்தச் சமயங்களில் மழை பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளரும். பஞ்சமில்லாத் தன்மை இருந்தால்தான், அங்கு தானம் செய்பவர்களும் தவம் செய்து ஒழுகுபவர்களும் நிறைந்திருப்பர்.

      ஆக மொத்தம், பசி வந்தால் (பஞ்சம் வந்தால்) பத்தும் பறந்துபோம்.

      நீக்கு
    2. நல்ல குறள், நல்ல விளக்கம் , நன்றி!

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. பதிவும் படங்களும்
    காலையில் தஞ்சாவூர் டிகிரி காஃபி
    குடித்த மாதிரி இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...    நான் இப்போதுதான் காபி குடித்தேன்!

      நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. இங்கே அதிகாலை 3:35..
      இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தபின் ஆறு மணியளவில் தான் காஃபி..

      நீக்கு
    3. அப்போ எழுந்து வந்ததும் மறுபடியும் ஒரு காஃபி குடிக்கலாம்!

      நீக்கு
  4. அங்கே கோகோ செடிகளும் வளர்க்கிறாங்களா? காப்பிச் செடி, காப்பி பிரியர்கள் கண்ணுக்கு விருந்து

    பதிலளிநீக்கு
  5. இந்தோனேஷியாவில் காப்புத் தோட்டங்களைக்குக் கூட்டிச் சென்றதும் விதவிதமான காபி எங்களுக்குக் கொடுத்ததும் நினைவுக்கு வருது. அங்கு ஸ்பெஷல் காப்பிக்காக பூனைகளைக் (அதுவும் ஷ்பெஷலாக்கும்) கூண்டுக்குள் வளர்த்துவந்தார்கள்.

    மின்னிலாவுக்கு படங்கள் அனுப்ப முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காப்பிக்காக பூனைகளைக் (அதுவும் ஷ்பெஷலாக்கும்) கூண்டுக்குள் வளர்த்துவந்தார்கள். //

      ஏன்?

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம்,

      இனிய காலை வணக்கம்.
      அந்தப் பூனையின் பெயர் மறந்துவிட்டேன்.
      அவை போடும் புழுக்கைகள் தான் சுத்தப் படுத்தப்
      பட்டு காப்பியாகின்றன.
      பயங்கர விலை.

      நீக்கு
    3. வாங்க அம்மா..    வணக்கம்.

      //அவை போடும் புழுக்கைகள் தான் சுத்தப் படுத்தப்பட்டு காப்பியாகின்றன.//

      ஐயே....!

      நீக்கு
    4. வல்லிம்மா சொன்னதுபோல, காப்பிப் பழங்களை உணவாகச் சாப்பிட்டு வெளியில் வரும் கொட்டைகளைச் சுத்தப்படுத்தி அதை காப்பி பௌடர் ஆக்குவாங்க. ரொம்ப விலை.

      நீக்கு
    5. கேள்விப்பட்டதாகத்தான் நினைவு!

      நீக்கு
    6. அய்யா சாமிங்களே ! நல்ல வேளை நான் காபி சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டேன்! - அந்த காபிப்பொடியின் பெயர் cato-miyaano-excreta வா?

      நீக்கு
    7. ஹா...   ஹா...  ஹா...   இனி காஃபி சாப்பிடும்போது இது ஞாபகத்துக்கு வந்து படுத்தும்!  நல்லவேளை, நான் விலை குறைந்த சாதாரண காபிபௌடர்தான் வாங்கறேன்!

      நீக்கு
    8. Kopi luwak is a coffee that consists of partially digested coffee cherries, which have been eaten and defecated by the Asian palm civet (Paradoxurus hermaphroditus). It is therefore also called civet coffee. ... Kopi luwak is produced mainly on the Indonesian islands of Sumatra, Java, Bali, Sulawesi, and in East Timor.

      நீக்கு
  6. எங்கள் ப்ளாக்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  நன்றி.   இந்த மாதத்தில் எங்களுக்கு 27 நாட்கள் முன்னதாக உதித்த உங்கள் தளத்துக்கும், இன்றைய உங்கள் 500 வது பதிவுக்கும் வாழ்த்துகள் கோமதி அக்கா.   500,  5000 ஆகட்டும்.

      நீக்கு
    2. //உங்கள் 500 வது பதிவுக்கும் வாழ்த்துகள் கோமதி அக்கா. 500, 5000 ஆகட்டும்//

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      500 , 5000 ஆவது அப்பாடியோ!

      நீக்கு
  7. படங்கள் எல்லாம் அழகு.
    இன்றைய பதிவு பசுமை , கண்ணுக்கு குளிர்ச்சி.
    வண்ணக்குடையுடன் இளவரசன் அழகு.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். உலகம் முழுதுக்குமான பிரார்த்தனைகளைத் தொடர்ந்து செய்வோம். இன்று தங்கள் பதிவுகளுக்குப் பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் ப்ளாக், கோமதி அரசு ஆகியோருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். தொடரும் நாட்களில் பற்பல முன்னேற்றங்கள் காணவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  பிரார்த்திப்போம்.   வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. //எங்கள் ப்ளாக், கோமதி அரசு ஆகியோருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். தொடரும் நாட்களில் பற்பல முன்னேற்றங்கள் காணவும் வாழ்த்துகள்.//


      உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. காஃபித்தோட்டம் அழகு.படங்களும் அதை விட அழகு. நாங்கள் ஹொரநாடு அன்னபூரணி கோயிலுக்குப் போனப்போக் காஃபித் தோட்டங்கள் பார்த்தோம். அங்கிருந்து காஃபி, ஏலக்காய், தேயிலை போன்றவை வாங்கியும் வந்தோம். உண்மையிலேயே தரமான காஃபித் தூள், தேயிலைத்தூள். ஊட்டியிலும் தேயிலைத்தூள் நன்றாக இருக்கும். கொடைக்கானலில் மரத்தூளைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  ஏமாற்றுக்காரர்கள் எங்குதான் இல்லை!

      நீக்கு
    2. கொடைக்கானலில் ஓட்டல்காரர்களில் இருந்து அனைவரும் ஏமாற்றுக்காரர்களே! தங்கினால் தமிழ்நாடு ஓட்டலில் மட்டும் தங்கணும்.

      நீக்கு
  10. அங்கெல்லாம் மிளகுக் கொடிகளும் நிறையக் காணக்கிடைத்தன. பயணமே மலைக்காட்டுப் பாதையில் தான். அருமையான சுகமான பயணமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் என்ன, வீட்டை விட்டே வெளியே வரமுடியாத காலம் ஆகி விட்டது இப்போது!

      நீக்கு
    2. இதுக்கே இப்படிச் சொல்றீங்க. ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று உங்களுக்கு இருந்தால் இன்னும் போர் அல்லவா? (உங்க மேனேஜருக்கு என்ன தெரியப்போகுது.. இங்க வாங்க. கூட்டுக்கு திருவமாறி வைங்க. அப்படியே கீழ காய்கறிக்காரி வந்திருக்கா... போய் எப்போதும் வாங்கற மாதிரி இல்லாம இளசா நாலு முருங்கையும், எது சிறுகீரைனு அவங்கள்ட கேட்டு வாங்கிவாங்க. போன தடவை மாதிரி முளைக்கீரைனு நினைச்சுக்கிட்டு அரைக்கீரை வாங்கிவராதீங்க.... என்றெல்லாமும் கேட்க வேண்டியிருக்குமே)

      நீக்கு
    3. ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் என் மகன் படும் பாட்டை தினமும் பார்க்கிறேன் நெல்லை.  சாதாரணமாக அலுவலகம் சென்று வந்தால் மாலை ஆறு மணிக்கோ, ஏழு ஏழரைக்கோ ப்ரீ ஆகிவிடும் அவன், இந்தக் கொரோனா காலங்களில் காலை பத்து முதல் இரவு பதினொன்றரை வரை வேலை செய்கிறான்.  ரொம்பவே டைட்.

      நீக்கு
    4. எங்க பையர், மாப்பிள்ளை இருவருக்குமே வொர்க் அட் ஹோம் வேலை கூடவே வாங்குது!

      நீக்கு
    5. எங்கள் வீட்டிலும் மகன், மகள், மருமகன் எல்லோருக்கும் ஒர்க் ஃபிரம் ஹோம். கடுமையாகத்தான் இருக்கிறது. எல்.கே.ஜி. படிக்கும் பேத்திக்கும் ஒரு tab கொடுத்து அதில்  பாடங்களை  அனுப்புகிறார்களாம். பாடங்களை குழந்தையை செய்ய வைத்து யூ டியூபில் அனுப்ப வேண்டுமாம்.  மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்கிறாள் மகள். 

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அழகு.

    காஃபித் தோட்டம் - ஆஹா.... தேயிலைத் தோட்டங்கள் சில இடங்களில் பார்த்திருந்தாலும், இதுவரை காஃபித் தோட்டத்திற்குச் சென்றதில்லை.

    பதினோறு ஆண்டுகள் முடிந்து பன்னிரெண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் “எங்கள் பிளாக்”.... வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்.

    எனது வலைப்பூ தொடங்கியதும் 2009-ல் தான். செப்டம்பர் 30!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...

      இந்தியாவில் நீங்கள் பார்க்காத இடங்கள் என்பதை ஒரு பஸ் டிக்கெட்டின் பின்புறம் குறித்து வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்!!

      நீங்களும் 2009 என்று தெரியும்.

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பஸ் டிக்கெட்டின் பின்புறம் - ஹாஹா.... இல்லை ஸ்ரீராம். பல பக்கங்கள் கொண்ட நோட் புக்கே தேவை. பார்த்தது சுண்டு விரல் நுனி அளவே. இதுவரை செல்லாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்தம் ஒன்பது. மற்ற மாநிலங்களில் சில இடங்கள் பார்த்திருந்தாலும் எல்லா இடத்திற்கும் சென்றதில்லை! - எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டுமென்றால் ஒரு பிறவி போதாது!

      நீக்கு
    3. ஹா...   ஹா..  ஹா...    ஆனாலும் எங்களை (அல்லது என்னை விட) எல்லாம் விட நீங்கள் சென்று வந்திருப்பது கடல் அளவுதான்!

      நீக்கு
  12. குடைதான் ஹீரோ.
    அதன் கீழ் நிற்கும் இளவரசனும் ஜோர்.
    தாத்தா ஏதோ விளக்குகிறார்.பேரன் கேட்டுக் கொள்கிறார்.
    குடகு நாட்டில் தான் என் தோழியின் காப்பி எஸ்டேட்
    இருந்தது.
    அதிலிருந்து வரும் காப்பிப் பொடி மாதாமாதம் எங்கள் வீட்டுக்கும் வரும்.
    இன்று வரை அது போலக் காப்பி சாப்பிடவில்லை.

    படங்கள் அத்தனையும் நல்ல வெளிச்சத்தில்
    பச்சையும், மரங்களும்,கொடிகளும்
    நல்ல படங்களாக வந்திருக்கின்றன.

    எங்கள் ப்ளாகின் 12 ஆவது பிறந்த நாளுக்கான அன்பு வாழ்த்துகள்.
    எங்கள் எல்லோருக்கும் நல்ல துணை எங்கள் ப்ளாக்.
    அன்பு கோமதியின் 500 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்.
    நட்பு ஒன்றே பிரதானமாகப் போற்றும் கோமதிமா,
    அன்பின் வடிவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனைக்கும், கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லிம்மா.,

      நீக்கு
    2. //அன்பு கோமதியின் 500 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்.
      நட்பு ஒன்றே பிரதானமாகப் போற்றும் கோமதிமா,
      அன்பின் வடிவம்.//

      அக்கா, கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.
      நான் உங்களைத்தான் அப்படி சொல்வேன்.
      உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா...   வாங்க...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம். 

      நீக்கு
  14. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    அழகான படங்கள் அதுவும் பூக்கள், காபி மரங்கள், மிள்குக் கொடி, கோக்கோ மரம் எல்லாம் அழகு. இயற்கையின் அழகே அழகுதான் அதுவும் மழை நாள் ஸோ குளிச்சு சுத்தபத்தமா பளிச்சுனு இருக்கு எல்லாம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்றா...   இப்போல்லாம் காலைலயே வந்துட முடியுது!!    

      வாங்க கீதா...  வணக்கம்.

      நீக்கு
  15. நிறையப் பக்கங்களுடன் வந்திருக்கும் மின் நிலாவின் கடைசிப் படம் அழகோ அழகு. மற்றவையும் நன்றாக இருந்தாலும் இது தனி! அரவிந்த் அவர்கள் கொடுத்திருக்கும் விமரிசனமும் கதைக்கருவும் மனதைக் கவர்ந்தது. இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதும், இப்படி ஒரு நாவல் வந்திருப்பதும் இன்றே அறிந்து கொண்டேன். மற்றவை பின்னர். இப்போக் கடமை அழைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கடமையோ... அதான் முருங்கைக்கீரை சூப், நெல்லிச்சாறு குடித்தாகிவிட்டதே... ஓ... காப்பி போடும் நேரமா?

      நீக்கு
    2. கீதாக்கா அந்த எழுத்தாளர் பெண். வலையுலகில் எழுதி வருபவர். சமீபகாலமாக அவ்வப்போதுதான் வலை வருகிறார். எங்கள் ஊர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். துர்காமாதா கதைக்கரு ந்ல்ல கரு.

      கீதா

      நீக்கு
    3. நான் புத்தகம் வாசிக்கவில்லை. விமர்சனங்களிலிருந்து தெரிந்து கொண்டதுதான்

      கீதா

      நீக்கு
    4. மின் நிலாவைப் புரட்டி விட்டு கருத்து சொல்லி இருப்பதற்கு நன்றி கீதா அக்கா.  மெதுவா வாங்க...

      நீக்கு
    5. நெல்லைத்தமிழரே, நெல்லிச்சாறு காலை வெறும் வயிற்றில். முருங்கைக்கீரை சூப் பத்துப் பத்தரை மணி அளவில்! எல்லாம் தயாரிக்க நேரம் எடுப்பதையும் கணக்கில் எடுத்துக்கோங்க! அதோடு வீடு எனில் வேலைகள் இருக்கத்தான் செய்யும். என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கு!

      நீக்கு
    6. கீசா மேடம்.... தெரியாதா..எத்தனை வேலைகள் உண்டு என்று. சும்மா காலைல எப்போதும் உள்ள கலாய்ப்புதான்.

      நீக்கு
    7. அணைவருக்கும் மிக்க நன்றி.
      மின் நிலா இதழில் எனது நூல் அறிமுகம் இடம்பெறச் செய்த ஸ்ரீராம் ஐய்யா கௌதமன் ஐய்யா உட்பட அணைவருக்கும் மிக்க னந்றி.

      நீக்கு
  16. 2009லேயே பிளாக்குகள் தொடங்கி மிகப்பிரபலமாக இருக்கும் எங்கள் பிளாக், வெங்கட் நாகராஜ், கோமதி அரசு மேடத்தின் திருமதி பிளாக் எல்லோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். (கீசா மேடமும் அப்போதிலிருந்துதானா)

    எல்லாமே தரமான வலைத்தளங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசிதளத்தை விட்டுட்டீங்க நெல்லை...    இன்னும் சில தளங்கள் கூட இருக்கும்.  நிறைய தளங்களில் இப்போது எழுதுவதில்லை.

      நீக்கு
    2. கீதா எங்களுக்கு எல்லாம் முன்னோடி.
      கீதா சாம்பசிவம் எங்களுக்கு முன்பே எழுத ஆரம்பித்து விட்டார் நெல்லை.

      மிகப்பிரபலம் எல்லாம் இல்லை நான் நானும் எழுதி கொண்டு இருக்கிறேன் வலைத்தளத்தில் என்று எழுதி கொண்டு இருக்கிறேன்.

      //எல்லாமே தரமான வலைத்தளங்கள்.//
      மகிழ்ச்சி.

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நெல்லை.

      நீக்கு
    3. நெல்லையாரே, என் வலைப்பக்கம் வலது பக்கம் கீழே நான் ப்ளாக் ஆரம்பித்த வருடம் வருமே! பார்த்ததில்லையா? சில நாட்கள் முன்னர் கூட எழுதி இருந்தேனே! 2005 ஆம் வருடம் ஆரம்பித்து, 2006 ஆம் வருடத்திலிருந்து தொடர்கிறேன் என்பதைச் சொல்லி இருந்தேன். மசால் தோசைப்பதிவுக்கு முந்தைய பதிவைப் பாருங்கள்.

      நீக்கு
    4. @ஸ்ரீராம், கீசா மேடம் - வலைத்தளங்கள் 11ம் ஆண்டில் அடியெடுத்துவைப்பவை, மற்றும் நான் தொடர்பவை. லிஸ்ட் போட்டால் நிறைய மிஸ் ஆகிடும்.

      அதுவும்தவிர, துளசிதளம், கீசா மேடம்லாம் ரொம்ப ரொம்ப சீனியர் இல்லையோ (வயசைச் சொல்லலை.... தளம் ஆரம்பித்த வருடம். ஹா ஹா)

      நீக்கு
  17. கேரளத்தில் அதுவும் மலப்புரத்தில் நிறைய இவை நிறைய உண்டு. ஊட்டி ஒட்டித்தானே அந்த மாவட்டம்.

    இந்த இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்ய இப்போது வாய்ப்பே இல்லை. ஹூம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. மின்நிலாவில் அரவிந்தின் விமர்சனம் அருமை. துர்கா மாதா எழுதிய ஜீவா ஒரு வலைப்பதிவரும் கூட. காயத்ரி எனும் பெயரில் என்னில் உணர்ந்தவை எனும் வலை அவருடையது

    எங்கள் ஊரான நாகர்கோவிலைச் சேர்ந்தவர்!!!! நான் படித்த கல்லூரியில் படித்தவர்!!! ஆனால் ரொம்ப ஜூனியர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. காப்பிப்பூக்கள் போல படங்கள் அனைத்தும் அருமை...

    எங்கள் Blog வலைப்பூவிற்கு வாழ்த்துகள் பல...

    பதிலளிநீக்கு
  20. படங்கள் அருமை ஜி
    எங்கள் பிளாக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. எங்கள் ப்ளாகிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன். 

    பதிலளிநீக்கு
  22. தன்னுடைய 500வது பதிப்பை வெளியிட்டிருக்கும் திருமதி.கோமதி அரசு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவுகளை அழகான புகைப்படங்களோடு அவர் வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு எங்கள் வாழ்த்துகளும் உரித்தாகுக.

      நீக்கு
    2. //இன்னும் நிறைய பதிவுகளை அழகான புகைப்படங்களோடு அவர் வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன். //

      உங்கள் வாழ்த்துக்களுக்கும், உங்கள் அன்பான விருப்பத்திற்கும் மிகவும் நன்றி.

      நீக்கு
    3. கெளதமன் சார், உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  23. காபி செடி, காபி பூ, காபி காய்... ஆஹா! காபியின் மணம் நாசியில்! இதோ செகண்ட் டோஸ் காபி குடித்து விட்டு வருகிறேன். 

    பதிலளிநீக்கு
  24. 11 வது பிறந்தநாள் காணும் எபி என்றேன்றும் தழைத்து ஓங்கிட பிறந்தநாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. எங்கள் பிளாகிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறவர்கள் உங்கள் வாழ்த்துக்களை ஒரு நிமிடத்திற்கு மேற்படாத வீடியோ பதிவுகளாக செய்து ஸ்ரீராம் அவர்களின் மொபைலுக்கு அனுப்பினால், வரும் வெள்ளி வீடியோவில் இணைக்கச் சொல்லலாம்.  

    பதிலளிநீக்கு
  26. மதிய வணக்கங்கள் நண்பர்களே. இப்போதுதான் வர முடிந்தது.
    முதலில், எங்கள் பிளாக்கிற்கு இனிய 11ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர நாம் யாவரும் பாடு படுவோம்.
    என் இரண்டாவது பெண்ணின் நெருங்கிய தோழியின் குடும்பம் கூர்க்கில் ஓர் தோட்டம் வைத்திருப்பதால், மூன்று அல்லது நான்கு முறை அங்கு சென்று தங்கியிருக்கின்றொம். என்ன அருமையான சூழல்! என்ன அழகான மழை கோப்பான தட்ப வெப்ப நிலை! ஆஹாஹாஹா சொர்க்கம் என்றே கூறலாம். நினைவுமுடித்தியதற்கு நன்றி. மார்ச் வரை அங்கிருந்துதான் தேனும் காப்பிக் கொட்டையும் எங்களுக்கு வந்து கொண்டிருந்தது. வீட்டிலேயே அரைத்து காபி சாப்பிடும் குடும்பம் நாங்கள். இந்த கொரோனாவில் நான்கு மாதங்களாக வரவு நின்று விட்டது.

    பதிலளிநீக்கு
  27. தளம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    காபி தோட்ட புகை படங்கள் அழகு. ஒளிந்திருந்த கொய்யாவையும் கொய்து விட்டது உங்கள் கேமரா.

    பதிலளிநீக்கு
  28. சகோதரி கோமதி அரசு, சகோதரர் ஸ்ரீராம்- இருவரின் வலைத்தளங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  29. புகைப்படங்கள் அனைத்தும் அசத்தும் அழகு!

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    காலை வணக்கத்திற்குப் பிறகு எ. பியின் காஃபி படங்களை பார்த்தவாறு காப்பி தயாரிக்க சென்றவள்,டிபன், சமையல் சாப்பாடு என முடித்து விட்டு மாலை காஃபிக்குள்ளாவது வர வேண்டுமென இப்போதுதான் வர முடிகிறது. இன்றைய படங்கள் அனைத்தும் அழகு.காஃபி தோட்டம் அழகாக உள்ளது.அனைத்துமே படங்களுமே பசுமையாக உள்ளது. வாசகங்களும் சிறப்பு.

    நேற்றே வாழ்த்தி விட்டாலும். எ. பிக்கு இன்றும் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. மின் நிலா 6 இன்னும் மிளிர்திருக்கிறது!

    படங்கள் ரொம்பவே அட்டகாசமாக இருக்கின்றன! மீதி மெயிலில் அனுப்புகிறேன.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இன்றைய படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன. மலர்களும் மலைகளும் அழகாக இருக்கின்றன. புகைப்படங்கள் நல்ல ப்ளிச்சென்று இருக்கின்றன குறிப்பாக மலர்கள், காபி, மிளகு எல்லாம்.

    எங்கள் வீட்டிலேயே மிளகுக் கொடி இருக்கிறது. பிரிஞ்சி இலை மரம் கூட இருக்கிறது. எங்கள் பகுதியில் காபி தோட்டமும், கோக்கோ மரங்களும், நிறைய உண்டு. நிலம்பூர் ரப்பர் மரங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. தேக்கும்.

    மின்நிலா நன்றாகப் பளிச்சென்று வளர்ந்திருக்கிறது. முழுநிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் படங்கள் இன்னும் தெளிவாக இருப்பது போல் தெரிகிறது. சில பகுதிகள் இனிதான் வாசிக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. காலையில் வேலைக்குச் செல்லும் வேளையில்
    எங்கள் பிளாக்கிற்கு ஒன்றும் ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது தளத்திற்கு ஒன்றுமாகத் தோன்றிய வரிகள்..

    வேலை முடிந்து அறைக்குத் திரும்பியாயிற்று..

    இதோ அந்த கவிதை வரிகள்..
    ,........

    எங்கள் Blog.. அது
    உண்மையில்
    உங்கள் Blog.. ஆனாலும்
    எங்கள் Blog..

    சிறகு இங்கெதற்கு
    என்றிருந்தேன்..
    உறவெனத் தமிழுடன்
    உடன் வந்தார்..
    சீதாராமனின் மனங்
    கொண்ட பொருளை
    எழுதுக என்றே
    எனைக் கண்டார்..

    ஸ்ரீராம்.. ஸ்ரீராம்..
    எனக் கொள்ள
    என்னில் நானே
    எனைக் கண்டேன்..
    மீண்ட சொர்க்கம்
    என நின்றேன்..

    கௌதம்.. கௌதம்
    என்றொரு குழந்தை
    கூடி விளையாட
    நல்வரமே..

    என்னுள் வளரும்
    கற்பனைக் கெல்லாம்
    எபியே என்றும்
    நீரூற்றும்...

    கதையாய்க் கவியாய்
    சொல்வதற் கெல்லாம்
    நல்முகம் காட்டும்..
    எபி வாழ்க..

    இயலாய் இசையாய்
    எபி காட்டும்
    நலங்கள் கூடத்
    தமிழ் வாழ்க..
    எபியும் வாழ்க
    பல்லாண்டு..
    இனிமையில் வாழ்க
    பல்லாண்டு..
    *****

    பதிலளிநீக்கு
  34. இதில் உள்ள பெரும்பான்மை செடிகள் பங்களூரில் பல இடங்களில உள்ளன. ஆயினும், அழகிய புகைப்பட பதிவு.

    பதிலளிநீக்கு
  35. எங்கள் ப்ளாகிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. 12 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எங்கள்புளொக்குக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் பல ஆண்டுகள் இதேபோல் இனிதே போஸ்ட்டுக்கள் போட்டு உற்சாகத்தோடு இருக்க வாழ்த்துகிறேன்...

    மிகத் தாமதமாகிவிட்டது போலும் வாழ்த்துச் சொல்ல.. நேற்றுத்தான் கீதா .. 3 புளொக் ஓனருக்கு.. அதுதாங்க என் செக்:) க்கு தகவல் அனுப்பியதால் தெரியவந்தது:).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!