1) சமூக சேவை செய்வதில் ஆர்வம் உள்ள சோனு சூட், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினக் கூலிகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும், மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் ஏழை தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களையும் வழங்கி வருகிறார். சிறப்பு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, அதில், 167 தொழிலாளர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதற்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றார்....
2) சிவகங்கையில், யாசகம் பெறும் முதியவர், கொரோனா நிவாரண நிதிக்காக, 5,000 ரூபாய் வழங்கினார்...
3) இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் இந்திய பெண் ராணுவ மேஜர் சுமன் கவானி.
4) இந்த வருடக் கடைசியில் தொட்டிலை ஆட்டுவார்களாம்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் கிடைக்கக்கூடும் என்று சீன அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் (SASAC) அந்நாட்டு சமூக ஊடகமான வீசாட்டில் தெரிவித்துள்ளது.
5) இந்திய அளவில் இது பாஸிட்டிவ் செய்தி என்று சொல்லலாம்.
புதிய, வென்டிலேட்டர் கருவியை வடிவமைத்துள்ள நாசா, அதனை தயாரிப்பதற்கான லைசென்சை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.
6) கொரோனா ஊரடங்கால் தவிக்கும் எளியவர்களுக்கு உதவிட மகள் நேத்ரா படிப்பிற்காக சேமித்த ரூ. 5 லட்சத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மதுரை தாசில்தார்நகர் சலுான் கடைகாரர் மோகனை 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
"இங்கு வசிக்கும் ஏழைகள் உதவி கேட்டனர். நானும் மனைவி பாண்டிச் செல்வியும் தயங்கினோம். 8வது படிக்கும் மகள் நேத்ரா, ''மக்களுக்கு உதவ வேண்டும்; இல்லை என்றால் சாப்பிட மாட்டேன். ஐ.ஏ.எஸ்., படித்து சம்பாதிப்பேன். என் படிப்பிற்காக சேமித்துள்ள
ரூ.5 லட்சத்திற்கு நிவாரணம் வழங்குங்கள்,'' என்றாள்...."
ஜூன் ஐந்தாம் தேதி செய்தி :
பிரதமர் நரேந்திர மோடியில் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
7) மக்களுக்காக ஏற்கெனவே 1,100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளது இன்ஃபோசிஸ் அறக்கட்டளை. சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், மறுவாழ்வு மையங்கள், 14,000-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 60,000-க்கும் அதிகமான நூலகங்கள் போன்றவற்றை கட்டித் தந்திருக்கிறார் சுதா மூர்த்தி.
8) இந்த தகவல் பரவிய நிலையில், கேரள நீர் போக்குவரத்து துறையினருக்கு, பாராட்டுகள் குவிகின்றன....
9) கிரிக்கெட் வீரர் ஷமியின் மனித நேயம்.
===============================================================================================
வெட்டுக்கிளிகளின் விஷமத் தாண்டவம்
ரமா ஸ்ரீநிவாசன்
இந்த வெட்டுக்கிளிகளின் விஷமத் தாண்டவம் என்று, எப்போது
துவங்கியது?
முதன் முதலாக இவ்வெட்டுக்கிளிகள் 1926-1931/1932 வருடங்களில்
நம் இந்திய நாடு ஆங்கிலேயரின் கையில் சிக்கிக் கொண்டிருந்தபோது
தங்கள் கோரத் தாண்டவத்தால் நம் மண்ணைச் சூறையாடின.
இதையடுத்து, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1931ல் பாலைவன
வெட்டுக்கிளிகள் பற்றிய விரிவான ஆராய்ச்சி துவக்கப் பட்டது.
இதையொட்டி 1939ல் ஓர் நிலையான லோகஸ்ட் வார்னிங் அமைப்பு
(LWO) கராச்சியில் ஒரு நிலையத்துடன் உருவாக்கப் பட்டது. அப்போது
நாம் பிரிக்கப்படாத ஒன்றிணைந்த பாரதமாக இருந்தோம் என்பது
குறிப்பிடத் தக்கது.
இவ்வமைப்பின் பணியே பாலைவன வெட்டுக்கிளிகள் மீது ஓர் கண்
வைத்து, அதன் ஓர் முக்கியமான அடையாளம் காட்டப் பட்ட கிளைப் பிரிவு இனத்தை கண்காணிப்பதேயாகும். ஏனெனில், கண் சிமிட்டும் நேரத்தில் இவ்வெட்டுக்கிளிகள் தார் பாலைவனத்திலிருந்து பறந்து வந்து நம் வயல்வெளி பயிர்களை சூறையாடி விடும்.
1926-1931களில் நிலமை மிகவும் மோசமாகப் போகவும், நம் நாட்டின்
விடுதலைக்கும் பின், நம் அரசு ஜோத்பூர், ராஜஸ்தானில் ஓர் நிலையத்தை டைரக்டரேட் ஆஃப் பிளாண்ட் ப்ரொடெக்ஷன் குவாரன்டைன் அண்ட் ஸ்டோரேஜ் பிரிவில் விவசாயத் துறையின் கீழ் துவக்கியது.
இத்தொற்றின் தட்ப வெப்ப இணைப்பு என்ன என்பதை இப்போது
பார்ப்போம் :
ஓர் வினோத முறையான வெப்பச் சூழல் இந்து மகா சமுத்திரத்தில்
ஓர் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்படுவதே இதன் தூண்டுதலாக
இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. “இந்தியன் ஓஷன் டிபோல்” என்னும் ஓர் நிகழ்வால் இந்து மகா சமுத்திரத்தின் கிழக்குப் பகுதிகளும் மேற்கு பகுதிகளும் வித்தியாசமாக வெப்பமாகின்றன. இதன் காரணமாக இந்தியாவிற்கும் மேற்காசிய கண்டத்திற்கும் அதிகப்படியான மழை கிடைக்கின்றது.
இந்த டிபோல் பாஸிடிவ்வாக இருக்கும்போது, மேற்கு பகுதிகள்
கிழக்கு பகுதிகளைவிட வெப்பமாக இருக்கும். போன வருடம்தான் இந்த
டிபோல் மிகப் பாஸிடிவ்வாகி இந்திய வட்டாரத்தில் ஒன்று அல்லது
இரண்டு டிகிரிகள் கூடிய தட்ப வெப்ப நிலையை கொடுத்தது.
இந்த இந்து மகா சமுத்திர டிபோலின் தாக்கம் எவ்வளவு
வலுவானதென்றால், அது நம் பயமான நீர் பஞ்சத்தையெல்லாம்
பொய்யாக்கி 2019 ஜுன் மாதத்தில் வருடக் கணக்காக பார்த்திராத மழை கொட்டோ கொட்டென்று இந்தியா முழுவதும் கொட்டித் தீர்த்தது.
இத்தொடர் மழை மேற்கு ஆசியா, ஓமன், ஏமன், ஆப்பிரிக்காவின்
எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா போன்ற இடங்களிலும் பெய்து
தீர்த்தது. இதன் காரணமாக, அங்குள்ள வறண்ட மண் தண்ணீர் பதத்தை
ஈர்த்து, இந்த வெட்டுக்கிளிகள் பெருக ஏதுவாகியது.
இந்த டிபோல் 2018ன் பின் வருடத்தில் தொடங்கினாலும், அதன்
பெருக்கம் 2019ல் மேலும் அதிகரித்தது. சாதகமான காற்று வீச்சும் கூட
சேர்ந்து இவ் வெட்டுக்கிளிகளை கூட்டம் கூட்டமாக இரானுக்கும்,
ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் கடைசியில் இந்தியாவிற்கும்
செல்ல வசதி செய்தது. இதைக் கண்ட யுனைட்டட் நேஷனின் ‘தி ஃபுட்
அண்ட் அக்ரிகல்சரல் ஆர்கனைஸேசன் (FAO) எல்லோரையும் இதைப் பற்றி எச்சரிக்க முற்பட்டது.
இதையடுத்து, சோமாலிய நாடு தழுவிய எமெர்ஜென்ஸியை பிப்ரவரி
2020ல் அறிவித்தது. அடுத்து ஏப்ரல் 2020ல் பாகிஸ்தான் அதையே
அறிவித்தது. இந்த வருடத்தின் எதிர்பார்க்காத சுமூகமான கோடைக்
காலமும் மார்ச்சிலிருந்து மே வரை திடீர் திடீர் மழையும் இவ்வெட்டுக்கிளிகள் பெருக ஏதுவாக இருந்தன.
இது வரை ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் 50,000
ஹெக்டேர்கள் வெட்டுக்கிளிகளால் சீரழிக்கப் பட்டுள்ளன. இது தொடர்ந்து பருவ மழைக் காலத்தை தொடுமானால் அது மிகப் பெரிய விவசாய நாசத்தில் முடியும்.
இவ்வெட்டுக்கிளிகளின் கலியாட்டத்தை எவ்வாறு எதிர் கொள்வது?
இதற்கு பூச்சிக் கொல்லி மருந்தும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும்
அடித்து சிறிது வெற்றி கொள்ளலாம். ஃபுட் அண்ட் அக்ரிகல்சரல்
ஆர்கனைஷெஷன் (FAO)வின் மே 27 பரிந்துரைப்படி வளர்ந்த
வெட்டுக்கிளிகள் குழுமங்களையும் சிறு திரள்களையும் பலுசிஸ்தான்
மற்றும் சிஸ்டான் - பலுசிஸ்தான் தெற்கு கடற்கரையோரங்களிலும்
பெருக்கிக் கொண்டிருக்கின்றன என்று அதிகாரபூர்வமாகத் தெரிய
வருகின்றது. இத்திரள்கள் கூடிய விரைவில் கோலிஸ்தான் - தர்பர்கர்
கோடைக் கால இனப் பெருக்க நிலங்களையடைந்து தன் நாச
வேலையைத் துவங்கும் என்றும் எச்சரித்திருக்கின்றது.
இந்தியாவில் இவை கிழக்கு நோக்கி முன்னேறி மத்திய பிரதேசம்
மற்றும் மஹாராஷ்டிராவின் கிழக்குப் பகுதிகளை நோக்கி பயணிக்கின்றன.
இப்பயணத்திற்கு ஏதுவாக இருந்தது அழுத்தமான மேற்கு நோக்கி வீசிய
“ஆம்ஃபன்” புயல்தான். ஜூலை வரை இனியும் சில படையெடுப்புக்கள்
ராஜஸ்தானிலிருந்து பீஹார், ஒரிஸா வரை சென்று திரும்பி பருவ
மழைக் காலத்தில் ராஜஸ்தான் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. இந்த போக்கு மெல்ல மெல்ல குறைந்து முடிவில் மறைந்து
போகும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் நமக்கு என்ன நல்ல
செய்தியென்றால், இவை நேபால், பங்களா தேஷ் மற்றும்
தென்னிந்தியாவை பாதிக்காது என்பதுதான்.
போதுமான நடவடிக்கை எடுக்கப் படுகின்றதா?
போன வருடமும் சரி இந்த வருடமும் சரி, பாகிஸ்தான் போதுமான
அளவு பூச்சிக் கொல்லி பரவலாக உபயோகிக்காததனால்தான் இப்புதிய
விஷக்கொல்லிக் கூட்டம் மேலும் பெருகுகின்றது என்று நம் இந்திய
அதிகாரிகள் புகார் செய்கிறார்கள்.
வழி வழியான நெறிமுறையின்படி ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தான் மற்றும் இந்திய பூச்சியியல் வல்லுனர்கள் ஒன்று சேர்ந்து எல்லை பேச்சுவார்த்தை நடத்தி பூச்சிக் கொல்லி பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். குழப்பமிக்கப் பொருளாதார நிலை மற்றும் போதுமான அளவில்லாத கண்காணிப்பு ஆகியவை தொடர் பிரச்சினைகளாக விளங்கும் இச்சமயத்தில் புதிய கொரோனா நோய் தாக்கம், இயற்கை சீற்றங்கள் மற்றும் வெட்டுக்கிளிகளின் விஷத்
தாண்டவத்தின் மீதும் ஓர் அசாதாரண கவனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வெட்டுக்கிளிகள் இங்கு உண்ண அதிக உணவில்லை என்பதால்
நகர்புறத்தை பதம் பார்க்க மாட்டா என்பது ஒரு புறம் இருந்தாலும், நாடு
முழுவதும் பிரகடனப் படுத்தப்பட்ட ஊரடங்கானது பூச்சிக் கொல்லிகளின் இருப்பையும் அவையின் போக்குவரத்தையும் வெகுவாக
பாதித்திருக்கின்றது. தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்க, பூச்சிக் கொல்லி வேலைகள் முடங்கி, வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தை தடுக்க முடியாமல் அதன் கோரத் தாண்டவம் மேலும் அதிகரிக்கக் காரணமாகியிருக்கின்றது.
முன் அனுபவத்தின்படி ஆராய்ந்தால், இவ்வகை வெட்டுக்கிளிகளின்
விஷமம் ஒன்று அல்லது இரு வருடங்கள் நிலைத்து விட்டு பிறகு எட்டு
அல்லது ஒன்பது வருடங்கள் தலை காட்டாமல் இருப்பது வழக்கம்.
ஆயின், அழுத்தமான இந்து மகா சமுத்திரத்தின் வெப்ப நிலை
ஏற்றத்தினால் டிபோல்ஸ் அதிகரித்து, வெட்டுக்கிளிகளின் விஷமம்
குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பித் திரும்பி வருவது வழக்கமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வருட வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கடந்த இருபது வருடங்களில் காணாத மோசமான ஒன்று என்று வல்லுனர்களும் விவசாயிகளும் கூறுகின்றனர். ஒரு வல்லுனரின் கணக்குப் படி, சில கூட்டங்கள் 7-8 கி.மீ. நீளமும் 3-4 கி.மீ. அகலமும் கொண்டதாக இருந்தன.
ஒரு சதுர கிலோ மீட்டர் (sq.k.m.) அளவு கொண்ட ஒரு கூட்டத்தில் 40-
80 மில்லியன் வெட்டுக்கிளிகள் இருக்கும் என்றும் இவை 35,000 மனிதர்கள் உண்ணும் உணவான பயிரைச் சீரழித்து விடும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஜூன் மாதம் இந்தியாவிற்கு இங்கிலாந்திலிருந்து கூடுதல்
தெளிப்பான்கள் வரும் வரை, நம் நாடு ரசாயன தெளிப்பான்களை வைத்து சமாளிக்க வேண்டிய சூழலில் உள்ளது. ஓர் அரசதிகாரியின் கூற்றுப்படி, நம் அரசு ட்ரோன்கள் மூலம் பூச்சிக் கொல்லியை தெளிக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
கடைசியாக எப்போது இந்த தீவிர நோய் பரவல் நம் நாட்டைத்
தாக்கியது?
இதற்கு முன் பெருமளவில் பாதிப்பு மிக்க இந்த தீவிர நோய் பரவல்
2010ல் ஏற்பட்டது. 1964க்கும் 1997க்கும் இடையே 13 வெட்டுக்கிளி
தாக்கங்களை நம் நாடு சந்தித்திருக்கின்றது. “லோகஸ்ட் வார்னிங்க்
ஆர்கனைஷேஷன்” பரிந்துரையின்படி 2010 முதல் 2018 வரை, பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இந்நோய் நம்மைத் தாக்கவில்லை.
ஆயின், 2019ல் குஜராத்தும் ராஜஸ்தானும் அதி வேகமாக பரவும்
வெட்டுக்கிளி தாக்குதலைப் பற்றி அறிக்கை விட்டன. சுமார் 3.5 லட்சம்
ஹெக்டேர் பரப்பிலுள்ள சீரகம், ராப்ஸீட் மற்றும் கடுகு பயிர்கள் சீரழிந்து 1993க்குப் பிறகு மிக மோசமான பயிரிழப்பை இரு மாநிலங்களும் எதிர்கொண்டன.
இன்றைய நிலமை என்னவென்றால், இவ்விஷக் கிருமிகள் மத்தியப்
பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர் பறந்து செல்லும் வாய்ப்பு மிக அழுத்தமாக உள்ளது என்பதுதான். எனவே, விவசாயிகளுக்கு இயற்கை
வைத்தியங்களும், பாரம்பரிய மாற்று வழிகளும் மற்றும் ரசாயன வழி
முறைகளும் பயிற்சியளிக்கப் பட்டுள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரமே சீரழியும் நிலையைப் பற்றி
படிப்பதற்கும், காண்பதற்கும் மிகவும் வேதனையைத் தருகிறது. நமக்கு
உண்ண உணவளிக்கும் விவசாயிகளுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்த்து
எந்தக் காப்பீடுமில்லை என்று எண்ணும்போது பகீர் என்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருசேர அவர்களுக்குகந்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால், அவர்கள் நலனால் நாடு நலனாக
இருக்கும் என்பதே என் பிரார்த்தனை.==================================
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நோயில்லாத வாழ்வு அனைவருக்கும்
பதிலளிநீக்குகிடைக்கட்டும்.
வரப்போகும் துரைக்கும் மற்ற அனைவருக்கும்
இந்த நாள் நன்னாளாக இறை காக்கட்டும்.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க... நற் பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குஅன்பு ஸ்ரீராமின் பாசிட்டிவ் செய்திகளுக்கு வாழ்த்துகள். மனதுக்கு உற்சாகம் இது போன்ற
பதிலளிநீக்குநல்ல செய்திகளே.
தன் படிப்புக்கான பணத்தை அளித்து உதவி இருக்கும் மாணவியின் பெருந்தன்மையை என்னவென்று சொல்லி வாழ்த்துவது!
நீக்குஎன்றும் நலமுடன் இருக்கட்டும்.
நேத்ராவும் ,அவள் தந்தையும் போற்றப்பட வேண்டியவர்கள்.
ஆமாம் அம்மா... ஸ்ரீராமின் செய்திகள் அல்ல, செய்தவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட மனிதர்களை பற்றி படிக்கையில் மனதில் மகிழ்ச்சி வருகிறது.
நீக்குஇன்றைய தினமலர் திருச்சி பதிப்பில் முதல் பக்கம் வலது ஓரம் நேத்ராவின் படத்துடன் சிறப்புச் செய்தி கட்டம் கட்டிப் போட்டிருக்காங்க. ஏழைகளின் நல்லெண்ணத் தூதுவர் நேத்ரா! என!
நீக்குகிரிக்கெட் வீரர் ஷமி இன்னும் வளம் பெறட்டும்..
பதிலளிநீக்குதிரு சோனு சூட் , பல உயிர்களைக் காத்திருக்கிறார்.
இது போல நல்லெண்ணம் கொண்டவர்களின் கொடை வீண் போகாது.
சிவகங்கை நல்லமனிதரின் 5000 ரூபாய் கோடிக்கு சமானம்.
நல்ல தர்மத்துக்கு அந்தப் பணம் பயன்படட்டும்.இது போல அதிசயங்கள் நடக்க
இந்தத் தொற்று உதவி இருக்கிறதும் ஒரு அதிசயம் தான்.
உண்மை அம்மா.
நீக்குசிவகங்கை முத்துக்கருப்பன் அவர்களின் கொடை தான் ஆகச்
பதிலளிநீக்குசிறந்தது.
இன்ஃபோசிஸ் செய்யும் உதவிகளைப் படித்தேன்.
பணம் படைத்தால் மட்டும் போதாது.
அதைக் கொடுத்து சரியான வேளையில்
அறிந்து செய்யும் நற்செயல்கள் உலகையும் அவர்களையும்
உயர்த்தும்.
பணமிருந்தால் போதாது. உதவும் மனமும் வேண்டும் என்று உணர்த்துகிறார்கள்.
நீக்கு//உதவும் மனமும்// - அதைவிட, எப்படியும் பிழைத்துக்கொள்வோம், நல்லா இருப்போம் என்ற பாசிடிவ் எண்ணமும் வேண்டுமோ? நாளை என்னாகும், என்ன புதுச் செலவுகள் வரும், நம் ஹெல்த் நல்லா இருக்குமா இல்லை செலவழிக்க வேண்டியிருக்குமா, பசங்க எப்படி இருப்பாங்க .....இப்படீல்லாம் நினைச்சுட்டு இருந்தால் காசை செலவு செய்ய எப்படி மனம் வரும்?
நீக்குபாஸிட்டிவ் எண்ணம் கண்டிப்பாக வேண்டும்தான். நான் சொல்லி இருப்பது இன்ஃபோஸிஸ் சுதா மேடம் குறித்து... பணமிருக்கும் எத்தனை மனிதருக்கு உதவும் மனம் இருந்து விடுகிறது... சந்திரபாபு பாடல் நினைவுக்கு வருகிறது!
நீக்குபணமிருக்கும் நிறையப் பேர் நிறையவே கொடுக்கிறாங்க ஸ்ரீராம். சுதா மூர்த்தி மட்டும் இல்லை.
நீக்குசுமன் கவானிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகேரள அரசின் ஏற்பாட்டால் பரீட்சை எழுத முடிந்த
மாணவி நலமுடன் இருக்க வேண்டும். உண்மையிலேயே உயர்ந்த செயல்.
ஆம். அரசின் உயர்பீடம் ஒவ்வொரு மக்களையும் தனித்தனியாகக் கூட கவனிக்கிறது என்கிற உணர்வு தரும் சுகம்.
நீக்குநாசாவின் சரியான தருணத்தில் கிடைத்த லைசென்ஸ் நன்மை பயக்கட்டும்.
பதிலளிநீக்குமிகவும் இன்றி அமையாதது வெண்டிலேட்டர்.
மனிதம் பிழைக்கும்.
சைனீஸ் வாக்சின் வரும் நேரத்தில் நம்மூரில்யே வந்து விடலாம்.
அன்பு ரமா ஸ்ரீயின் வெட்டுக்கிளிகள்
நீக்குசரித்திரம் திகிலூட்டுவதாக இருக்கிறது. நல்ல ஆராய்ச்சி செய்து இந்தக் கட்டுரையை அளித்த
ரமாவுக்கு வாழ்த்துகள்.
சீக்கிரம் இந்தத் தொல்லை
இந்தியாவை விட்டு விலகட்டும்.
எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும் அம்மா. இறையருள் நம்மையெல்லாம் காக்கட்டும்.
நீக்குஎல்லோருக்கும் கால வணக்கங்கள். வல்லி மாமி, திகிலூட்டுவதாக இருந்தாலும் அதுதான் உண்மை என்னும்போது, இன்னும் திகிலூட்டுகிறது. யாவும் யாவரும் நலம் பெற வேண்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நாட்டை அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து காப்பாற்ற அம்பிகையைப் பிரார்த்திக்கிறோம். அவளில் நாம் அடக்கம். நம்மைக் காப்பாற்றுவது அவள் பொறுப்பு.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா... வணக்கம். நல்வரவு. அம்பிகை இந்த அகிலத்தைக் காக்கட்டும்.
நீக்குஅநேகமாக ஓரிரு செய்திகளைத் தவிர்த்து மற்றவை ஏற்கெனவே தினசரியிலும் முகநூலிலும் படித்தவை. அனைவருக்கும் வாழ்த்துகள். நேத்ராவின் உண்மையான தேசப்பற்று வியக்கத்தக்கது. பாராட்டத்தக்கது. நல்லபடியாகப் படிப்பை முடித்து அவர் விருப்பம் போல் ஐஏஎஸ் முடிக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆமாம். அனைவரும் வாழ்த்துவோம். நன்றி அக்கா.
நீக்குரமா ஸ்ரீநிவாசனின் வெட்டுக்கிளிகள் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு என்பதோடு தொய்வில்லாமல் சரளமான நடையில் எழுத்துப் பிழைகளே இல்லாமல் வந்திருக்கிறது. வாழ்த்துகள் ரமா ஸ்ரீநிவாசன்.
பதிலளிநீக்குகீதா, எழுத, எழுட மெருகேரும் என்பது உண்மைதான் போலிருக்கிறது. நன்றாக மெருகேற்றி விட்டீர்கள் நீங்கள் யாவரும்.
நீக்குநடுவில் கொஞ்சம் வேலையாகப் போய்விட்டேன். அதனால் கொடுத்த கருத்து சரியாக வெளிவரவில்லை. திரும்பக் கொடுத்ததில் முன்னர் என்ன சொன்னோம் என்பது மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா..ஆ நல்ல கருத்துதான் கொடுத்திருக்கிறீர்கள்.
நீக்கு//முன்னர் என்ன சொன்னோம் என்பது மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!// - இந்த வயசிலேயேவா? அட டா..... ஹா ஹா
நீக்குநெல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குசொல்ல மறந்துட்டேனே, எனக்கு இன்னிக்கு நக்ஷத்திரப் பிறந்த நாள். முகநூலில் நண்பர் ஒருத்தர் வாழ்த்தி இருக்கார். அவரும் நானும் ஒரே நக்ஷத்திரம் என்பதால் அவருக்கு என் நக்ஷத்திரம் தெரியும். ஐந்தாவது பிறந்த நாள்னு போட்டிருக்கார். ஹிஹிஹி, மூணு பி.நா. தான் எனக்குத் தெரிந்து. 5 னு போட்டிருக்கார். யார் வேண்டாம்னு சொல்லப்போறாங்க! வாங்கிக் கட்டிப்போம்னு விட்டுட்டேன். :))))))))
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குகாலை வணக்கம்.. வாங்க நெல்லை..
நீக்குபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
பதிலளிநீக்குதீராமை ஆர்க்கும் கயிறு.
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடந்தால், அது, இருக்கும் செல்வத்தை வீணாகாமல் சேர்த்துவைக்கும் கயிறாகும்.
நீக்குநன்று.
நீக்குமதுரை சலூன் கடைக்காரரின் தயாள குணம் மிகவும் வியக்கவைக்கிறது.
பதிலளிநீக்குரமா ஸ்ரீநிவாசன் அவர்களது கட்டுரையும் லோகஸ்ட் பிரச்சனையை ஆழமாகப் பேசுகிறது. பாராட்டுகள்
அதே... அதே...
நீக்குஇப்பிரச்சனை சென்னையிலிருந்தாலும் என்னை ரொம்ப பாதித்து விட்டது. கொரோனா தொற்றின் நடுவே இது வேறா என்று குழம்பியிருந்ததால் வந்த ஆழம்.
நீக்குஅனைத்தும் பெருந்தன்மையான நிகழ்வுகள்...
பதிலளிநீக்குஒன்றிரண்டைத் தவிர ஓரளவுக்கு முன்பே வாசித்து விட்டேன்...
மனிதநேயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது..
உண்மை. நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குவெட்டுக்கிளியின் விபரீதம் அச்சமூட்டுகின்ற்து..
பதிலளிநீக்குஇதற்கு முன் வெட்டுக்கிளிகளில் படையெடுப்பில் என்ன விதமான மருந்து அடித்துத் தொலைத்தார்களோ...
வயல்வெளிகளில் பறந்து திரிந்த பல்வேறு பறவையினங்க்ள் காணாமல் போயின...
ஆனைச் சாத்தன் எனப்படும் கரிச்சான் குருவிகள் வெட்டுக்கிளிகளை தின்று ஒழிப்பதுடன் இரண்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டு விடுமாம்...
மயில்களும் இப்படியான வெட்டுக்கிளி வேட்டையில் ஈடுபடுமாம்...
இந்தப் பறவைகளின் இப்படியான நித்ய கடமைகள் எப்படி ஒழித்துக் கட்டப்பட்டன?..
ஒரே நேதத்தில் 24 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதும் இந்நாட்டில் தான்...
இயற்கையைப் பேணிக்காக்கும் வழியறியாமல்
எதை நோக்கியோ சென்று கொண்டிருக்கிறது உலகு...
வெட்டுக்கிளிகள் தொடர்ந்து அடுத்த மாதமும் படை எடுக்கும் என இன்றைய தொலைக்காட்சிச் செய்தி சொல்லுகிறது. முடியலையாம்.
நீக்குசற்று முன் தினமலரில் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது...
பதிலளிநீக்குபரவலாக புளியின் விலை உயர்ந்து - கிலோ இருநூறு ரூபாய்க்கும் மேல் சென்று விட்டதாம்...
சாலையின் இருமருங்கிலும் 90 சதவீதம் புளிய மரங்கள் தான் இருந்தன.. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒழிக்கப்பட்டன...
தஞ்சை - மன்னார்குடி 32 கி.மீ சாலை நெடுகிலும் புளிய மரங்கள் தான்.. இப்போது அங்கே எத்தனை மிச்சம் இருக்கின்றன என்று வாய்ப்புக் கிடைக்கும் போது கவனியுங்கள்...
புளியாரை எனப்பட்ட புளிச்சக்கீரை உடலுக்கு நல்லது... ஆனால் மக்கள் அதனை மதித்து நோக்காததால் பெருவாரியாக பயிரிடப் படுவதில்லை...
இவையெல்லாம் எதற்கு அறிகுறிகள்?..
துரை சார், நாம் எப்படி இயற்கையை சீரழித்து விட்டோம் என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறது. ஆயின் நாம் திருந்துவோம் என்று மிக சிறிய நம்பிக்கைதான் மிஞ்சுகிறது. ஏனெனில் நமக்கு முன் செல்கிறது நம் சுயநலம்.
நீக்குநம்பிக்கை .. நம்மை வாழ வைக்கட்டும்...
நீக்குதுரை ஐயா,
நீக்குதஞ்சை - மன்னார்குடி 32 கி.மீ. சாலை நெடுகிலுமிருந்த புளிய மரங்களின் பயன்பாடுகள்?..
சாலை அகலத்திற்காக
நீக்குஅவையனைத்தும் வெட்டித் தள்ளப்பட்டு விட்டன....
அதன் பயன்பாடுகள் (yield) யாருக்குப் போய்ச்சேர்ந்தன அவர்களுக்கு இழப்பாகி விடுமே என்று தான் கேட்டேன்.
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைத்து பாசிட்டிவ் செய்திகளும் சிறப்பு.
வெட்டுக்கிளிகள் குறித்த கட்டுரை - நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுகள்.
தேங்க்யூ வெங்கட் சார்
நீக்குஅருமையான செய்திகளின் தொகுப்பு...
பதிலளிநீக்குவெட்டுக்கிளி பற்றிய தகவல்கள் அச்சமூட்டுகின்றன...
உதவுவதற்கு மனம்தான் வேண்டும் என்பதை இவர்கள் நிரூபிக்கின்றார்கள்.
பதிலளிநீக்குவெட்டுக்கிளிகளின் தகவல்கள் பிரமிப்பூட்டுகிறது.
போற்றத்தக்கவர்கள், போற்றத்தக்க வேண்டிய செய்திகள். வெட்டுக்கிளிகள்..புதிய சிக்கலோ?
பதிலளிநீக்குஜம்புலிங்கம் சார், உலகம் முழுவதும் புதிய சிக்கல்கள் உருவாகிய வண்ணமிருக்கின்றது. நேற்று வளைய தலத்தில் படித்த ஞாபகம் எந்த நாட்டிலோ எபோலா திரும்ப வந்திருக்கின்றது என்று. உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் படிக்கும்போதே பயமாக இருக்கின்றது.
நீக்குஇக்கொரோனா தாண்டவக் காலத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் தன் உற்றார் உறவினரையும் தாண்டி இந்நாட்டில் இருக்கும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அனைவருக்கும் தங்களால் முடிந்த உதவியை வெளியே ஒலிபரப்பாமல் தன் போக்கில் செய்யும் நல் உள்ளங்கள் ஒவ்வொன்றையும் சிறம் தாழ்த்தி வணங்குவோம். ஏனெனில், இவர்கள்தான் உண்மையான கோவிட் செயல் வீரர்கள். மற்ற வீரர்கள் களத்தில் போராட தன்னிடத்திலிருந்த படி உதவும் கோடி உள்ளங்கள் இவை.
பதிலளிநீக்குரமாஸ்ரீ,
பதிலளிநீக்குஎந்த விஷயத்தையும் எழுத முற்படும் பொழுது அந்த விஷயத்தின் அடி ஆழத்திலிருந்து கெல்லி எடுத்து வாசிப்பவர்களுக்கு அதன் சரித்திரத்தையே எடுத்துரைக்கும் உங்கள்
பாணி எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாய் ஆகியிருக்கிறது. வெட்டுக்கிளிகளைப் பற்றி இந்த உங்கள் பதிவில் நான் புதிதாய் தெரிந்து கொண்ட விஷயங்கள் அனந்தம். பத்திரிகை சார்ந்திருந்தவர்கள், இருப்பவர்கள் பதிவுலகிற்கு வரும் பொழுது பதிவுலகிற்கான புதிய பரிணாமங்கள் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றன. அந்த மாற்றத்தை சித்தியடையச் செய்வதற்கான முயற்சிகளில் உங்கள் பங்களிப்பிற்கான என் மனமுவந்த வாழ்த்துக்கள்.
//இவ்வெட்டுக்கிளிகளின் கலியாட்டத்தை எவ்வாறு எதிர் கொள்வது?//
'கலியாட்டம்' என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் படித்து விட்டு அசந்து போனேன்.
வெட்டுக்கிளிகளுக்கு வேண்டுமானால் அவை களியாட்டமாக இருக்கலாம். நமக்கு கலியாட்டம் தான். மிகப் பொருத்தமான வார்த்தைகளை உங்களைப் பொறுத்தமட்டில் வெகு சுலபமாகக் கையாளும் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.
கலியின் தாக்கத்தால் களியாட்டம் (மகிழ்ச்சி) ஏது?..
நீக்குகலியாட்டம் தான்..
கலியின் ஆட்டம் தான்!...
ஜீவி ஐயா அவர்களது கருத்து அருமை..
கலி என்றால் துன்பம் என்று ஒரு பொருள் உண்டு. அந்த அர்த்தத்தில் சொன்னேன்.
நீக்குஜீவி சார், மிக்க மிக்க நன்றி. உங்கள் வாழ்ட்துக்கள் எனது உத்வேகம். மேலும் படிக் கற்கள் ஏற உதவும்.
நீக்குசிறந்த பதிவுகளின் திரட்டு
பதிலளிநீக்குபாராட்டுகள்
நம்ம தமிழ் சினிமாவில் நடிச்ச வில்லன்கள் இருவர் பசித்தவரை தேடிப்போய் உணவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கேன்...
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் மனதுக்கு இதமளிக்கின்றது
வெட்டுக்கிளிகளைப் பற்றிய கட்டுரை சிறப்பானது. கொரோனாவுக்கு சீனா மீது பழிபோடலாம். வெட்டுக்கிளிகளுக்கு? அனேகமாக அதுவும் அமெரிக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு சீன ஆய்வாளர்களால் கொண்டுசெல்லப்பட்டு பாலைவனங்களில் பரப்பபட்டதாக கொள்கை ஏதும் வெளிவருமா?
பதிலளிநீக்குமிக்க நன்றி செல்லப்பா சார்.இந்த சீனா மீது பழி போடுவது எல்லாம் வெறும் அரசியல் விளைதயாட்டு என்று தோன்றுகிறது. தன் மேல் இருக்கும் மக்களின் கண்களை வேறு புரம் திசைத் திருப்பும் விந்தை.
பதிலளிநீக்குபாஸிடிவ் செய்திகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குயாசகம் பெற்று அந்த பணத்தை நிவாரண உதவிய பெரியவரை வணங்க வேண்டும்.
மனித நேயம் மிக்க அனைவருக்கும் வணக்கங்கள்.
//நமக்கு
பதிலளிநீக்குஉண்ண உணவளிக்கும் விவசாயிகளுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்த்து
எந்தக் காப்பீடுமில்லை என்று எண்ணும்போது பகீர் என்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருசேர அவர்களுக்குகந்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால், அவர்கள் நலனால் நாடு நலனாக
இருக்கும் என்பதே என் பிரார்த்தனை.//
ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் கட்டுரை அருமை.
சேலம் மாணவர் ஒருவர் வெட்டுக்கிளிகளை கொல்லும் இயந்திரம் கண்டு பிடித்து இருக்கிறார். அது செயலுக்கு வந்தால் நாடு நலம் பெறும்.
வெட்டுக்கிளிகளை கொல்லும் இயந்திரம் கண்டு பிடித்து இருக்கிறார். அது செயலுக்கு வந்தால் நாடு நலம் பெறும்.//
நீக்குஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கீதா
அனைத்துச் செய்திகளும் அருமையான பாசிட்டிவ் செய்திகள்.
பதிலளிநீக்குவெட்டுக்கிளிகள் பற்றிய சகோதரி ரமா ஸ்ரீனிவாசன் அவர்க்ளின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. விவசாயிகள் பாவம் அவர்களின் நலன் மேம்பட வேண்டும். பிரார்த்திப்போம்
துளசிதரன்
நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.//
பதிலளிநீக்குநேர்தாவிற்கு வாழ்த்துகள். அவரது எண்ணங்கள் வெற்றியடைய வாழ்த்துகள். இவருக்குத்தான் பார்த்திபன் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தாரோ? கூகுளில் செய்தி மொபைலுக்கு வந்ததே..
மேஜர் கவானி சூப்பர்!! பெண்களுக்கு நிஜமாகவே பெருமை சேர்த்திருக்கிறார்.
கீதா
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே மனதிற்கு சந்தோஷம் அளிக்கின்றன.ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரை மிகச் சிறப்பு.
நீக்குசோனுசூட் செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. ஃப்ளைட் எல்லாம் அரேஞ்ச் செய்து..வாவ்..
பதிலளிநீக்குசிவகங்ககை முதியவரும் அசத்துகிறார். எளியவருக்கு என்ன அழகான மனப்பான்மை!
இந்த வருடக் கடைசியில் தொட்டிலை ஆட்டுவார்களாம்.//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இதை ரொம்பவே ரசித்தேன்....
சீனாவிலிருந்து வேக்சினா?!!!! ஆஆஆஆஆஆஆஆ என்னவோ தெரியலை சீனாவிலிருந்து என்று சொன்னாலே தயக்கமாக இருக்கிறது.
என் ஃப்ரென்ட் சொல்வதுண்டு....ஹெட் செட்/இயர் ஃபோன் கண்டுபிடிச்சு சேல் செய்யறவன் கண்டிப்பா ஹியரிங்க் எய்ட் கம்பெனியோடு டீல் போட்டுருப்பான்ன்னு...
கேரள நீர்போக்குவரத்து செய்தி சூப்பர் செய்தி. நிச்சயமாக அவர்களைப் பாராட்ட வேண்டும்.
சுதாமூர்த்தி வாழ்க! நிறைய சேவைகள் செய்து வருவது அவ்வப்போது தெரியவரும்.
ஷமியையும் பாராட்டுவோம்.
கீதா
ரமா வெட்டுக்கிளிகள் குறித்த கட்டுரை நல்லாருக்கு. பாராட்டுகள்
பதிலளிநீக்குஇப்படியான நிகழ்வுகள் இயற்கை நமக்குச் சொல்லும் சில அறிகுறிகள் என்றே எனக்குத் தோன்றும். நானும் மகனும் இன்று பேசிய போது இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படியான அறிகுறிகளை நாம் கூர்ந்து கவனிக்கத் தவறுகிறோம் என்றும்.
இதே கருத்தை இன்று வேறு ஒரு பதிவிலும் வாசித்தேன்.
கீதா
உதவும் கரங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவெட்டுக்கிளிகள் நல்லதொருபகிர்வு. இவற்றிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் திட்டங்கள் தான் வேண்டும்.
அந்தியில் ஈசல் பூத்தால்
பதிலளிநீக்குஅடை மழைக்கு அச்சாரம் என்று சொல்வார்கள்.
பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே மனதிற்கு சந்தோஷம் அளிக்கின்றன.ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரை மிகச் சிறப்பு.
பதிலளிநீக்கு