திங்கள், 11 ஜனவரி, 2021

"திங்க"க்கிழமை :  ரவா ஜாமுன்   - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 ரவா ஜாமூன் - நெல்லைத்தமிழன்

 

இதனை இணையத்தில் எங்கோ படித்தபோது குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டேன். எந்தத் தளம் என்பது மறந்துவிட்ட து. கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்கி ஜாமூன் செய்வதற்குப் பதிலாக இதனைச் செய்துபார்க்கலாமே என்று நினைத்து, கிச்சன் என் வசம் வந்த அன்று செய்தேன்.

 

தேவையானவை

 

ரவை 1 கப்

6-7 முந்திரியை அரைத்த பவுடர்

காய்ச்சின பால் 2 ½ கப்

ஜீனி 1 கப்

தண்ணீர் 1 கப்

ஏலக்காய் தூள், நெய் 1 ஸ்பூன்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

 

செய்முறை

 

ரவை பெரிதாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.


கடாயில் ரவையை வெறும்ன வறுக்கவும். நிறம் மாறக்கூடாது. அத்துடன் முந்திரி பவுடர் சேர்க்கவும்.


ஒரு நிமிடம் வறுபட்ட தும், அடுப்பை மீடியமில் வைத்து, காய்ச்சின பாலைச் சேர்த்துக் கலக்கவும். கட்டிகள் இருக்க க்கூடாது. நன்றாக கிளறி, ரவை, பாலை எல்லாம் உறிஞ்சிய பிறகு அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடணும்.


இன்னொரு கடாயில் ஜீனியும் தண்ணீரும் சேர்த்து, சர்க்கரைப் பாகு தயார் செய்யணும். பாகு பிசுபிசுப்பாக இருந்தால் போதும். அதில் வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர். அதற்குப் பதில் வெனிலா அல்லது ரோஸ் எஸென்ஸும் சேர்க்கலாம்.


ரவை கலவை ஆறின பிறகு, 1 ஸ்பூன் நெய் விட்டு அழுத்தி சாஃப்ட் ஆகப் பிசையவும். அதில் ஒரு பகுதியை சப்பாத்திக் கல்லில் அரை இஞ்ச் தடிமனில் இட்டு, ஒரு வட்டக் கிண்ணம் அல்லது மூடியினால் வட்ட வட்ட பிஸ்கட் சைஸில் பாதுஷா போல கட் செய்யவும்.  இப்படியே மொத்த கலவையையும் பிஸ்கட்டுகளாகச் செய்துவைத்துக் கொள்ளவும்.


பிஸ்கட்டுகளின்மீது ஃபோர்க்கினால் சிறிய துளைகள் போட்டுக்கொள்ளவும். இது பொரியும்போது உப்பக்கூடாது என்பதற்காக.


எண்ணெய் நன்கு சூடானதும், மிதமான தீயில் Golden Brown நிறத்துக்கு பொரித்தெடுக்கவும்.


எடுத்ததை, உடனே தயார் செய்துவைத்திருக்கும் சூடான சர்க்கரைப் பாகில் பத்து நிமிடங்கள் போடவும்.  பாகு உள்ளே புகுந்து நன்கு ஜாமூன் மாதிரி ஊறியிருக்கும்.










இந்த இனிப்பு பரவாயில்லாமல் இருந்தது.  ரவா ஜாமூனில், என்னவோ மிஸ்ஸிங் என்று தோன்றியது. ரொம்ப மெதுவாகத்தான் செலவழிந்தது. மகள், பிளாண்டாக இருக்கிறது என்று சொன்னாள். கொஞ்சம் இனிப்பு கோவா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. பார்வைக்கு ரொம்ப அழகான ஸ்வீட்.  இனிப்பு கோவா சேர்த்துச் செய்து பாருங்கள்.

97 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்று இந்த ரவா ஜாமூனா... வெளியிட்டதற்கு எபிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை...  வாங்க...  பார்க்க பாதுஷா போல இருக்கும் ரவா ஜாமுன் இப்போது இந்த நேரம் ஒன்று கிடைத்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம்!!!

      நீக்கு
    2. வாங்க ஶ்ரீராம்.... காய்ந்து கிடந்த நிலத்தில் போனாப் போகுதுன்னு இறைவன் மழையா அனுப்பித் தள்ளறார். நீங்க என்னடான்னா... சூடா வெங்காய பஜ்ஜி வேணும், கொதிக்கக் கொதிக்க சாம்பாரில் மூழ்கிய இட்லி, சாம்பார் வடை வேணும்னு ஆசைப்படாம, இனிப்பு வேணும்னு நினைக்கறீங்களே..

      நீக்கு
    3. தில்லையகத்து கீதா ரங்கன்ட சொல்லணும்... இனிப்பு செய்முறையை படித்தால் டயபடீஸுக்கு ஆபத்தில்லை என்று..

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம் நான் இப்போதான் தூங்கப்போறேன் :)நாளைக்கு வரேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...  வணக்கம்.      தூங்கிட்டு அப்புறமா வாங்க ஏஞ்சல்!

      நீக்கு
    2. உங்களுக்கு இரவு வணக்கம் ஏஞ்சலின்... நான் இப்போதான் வேலைகளை ஆரம்பிக்கப் போகிறேன்.

      பேய்க்காட்ட முடியாதுன்னு அவல்க என்ன என்ன சொல்லி கதிகலங்க வைக்கப்போறாங்களோ

      நீக்கு
    3. ஏஞ்சல் நீங்க தூங்கப் போறேன் என்று சொன்னதை வேகமாக படிக்கும் போது தொங்கப் போறேன் என்று படித்து என்னடா நெல்லைத்தமிழனி அவ்வளவு மோசமாகவா ரிசிப்பி போட்டு இருக்கிறார் என்று குழம்பி போனேன்... நானும் தூங்கப் போறேன் இப்ப இங்க இரவு 11.30 ஆச்சு காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கனும்

      நீக்கு
    4. வாங்க மதுரைத் தமிழன் துரை... இந்த ரெசிப்பி நீங்க செய்யறீங்க, அதுல பாதியை கேரேஜ்ல வைக்கறீங்க. வார நாட்கள்லயா இல்லை வீக் எண்ட்ல பண்ணப்போறீங்களான்னு நீங்க முடிவு செஞ்சுக்குங்க.

      நீக்கு
    5. ஹலோ ட்ரூத் :))))))) garrrrrrrrrrrrrrrrr

      நீக்கு
  3. ஜாமூன் வட்டமா குண்டா இருக்கும் எங்க தலைவியையும் என்னையும் யாரும் பேய்க்காட்ட முடியாது :)
    ஸ்ஸ்ஸ் யாரது பேய்ங்களுக்கு பேய்க்காட்ட முடியுமான்னு முணுமுணுக்கறது ????  நாளை வர்ர்ரேன்ரோம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க...  வாங்க...     நெல்லை பாவமா ஒரு ஜாமுன் செஞ்சு வச்சு கடை திறந்திருக்கார்...  நீங்க பாட்டுக்க பேய் பிசாசுன்னு பயமுறுத்திகிட்டு....

      நீக்கு
    2. ஹாஹாஆ :) சரி சரி எனக்குதான் இனிப்பே பிடிக்காது அதனால் தான் இவ்ளோ கலாய்ச்சிங் :)))

      நீக்கு
    3. இன்னமும் தூங்கவில்லையா நீங்கள்!

      நீக்கு
    4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      முரளிமா. ஜாமூன் என்றால் குண்டாக உருண்டையாக
      இருக்க வேண்டாமோ.

      இதுவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்லி இருப்பது போல
      இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

      நல்ல படங்கள். நான் எதை செய்யும்பொதும்
      இவ்வளவு கவனம் செலுத்திப்
      படங்கள் எடுப்பதில்லை.
      நீங்கள் வெகு ரசனையோடு செய்திருக்கிறீர்கள்.

      மனம் நிறை வாழ்த்துகள். கூடாரை வெல்ல இந்த ரவை
      ஜாமூன் வந்திருக்கிறது!!!!

      நீக்கு
    5. ஏஞ்சலின்... உங்க கமென்டைப் படித்ததும், "அப்பளாம் என்ன வட்டமா இருக்கணும்னு சட்டமா" என்ற செந்தில் வசனம் நினைவுக்கு வருது. (அந்தப் படத்தின் வெற்றிதான் இயக்குநர் சங்கரின் பாதையை மாற்றியது)

      நீக்கு
    6. வாங்க வல்லிம்மா.... காலையில் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி வரவைக்குது.

      எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். எதிர்காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு மழலை பிறந்து அதற்கு லக்ஷ்மி எனப் பெயரிட்டு உங்களை வந்து வாழ்த்தச் சொன்னால், எங்க தாமரையைக் காணோம், மற்ற இரண்டு கைகள் எங்கே என்றெல்லாம் கேட்டுடுவீங்களோன்னு யோசிக்கிறேன்.

      வல்லிம்மா... இதை எபிக்கு செய்முறையா அனுப்பப்போகிறோம் என முடிவு செய்துவிட்டாலே ஒவ்வொரு ஸ்டெப்பையும் இரண்டு படங்களாவது எடுத்துடுவேன். அப்புறம் அதில் உருப்படியானவைகளைக் கோர்க்க வேண்டியதுதான்.

      நீக்கு
    7. //சரி சரி எனக்குதான் இனிப்பே பிடிக்காது // - இதை காலைல கவனிக்கவிட்டுட்டேன். அச்சப்பம் கருகினதுக்கு இது காரணம் இல்லையே

      நீக்கு
    8. //"அப்பளாம் என்ன வட்டமா இருக்கணும்னு சட்டமா" //

      ஹஹ்ஹா ஆனாலும் வட்டமான அப்பளத்தைத்தவிர வேற ஷேப்பை மனம் ஏற்காது 

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம். 2020ல் பதுங்கியிருந்த சிங்கம் அதாங்க நம்ம நெல்லை இந்த வருடம் சீறிப் புறப்பட்டு விட்டதோ..? வெல்கம் வெல்கம். இதை ரவை ஜாமூன் என்பதற்கு பதிலாக ஜீரா பூரி என்றால் பொரு்தமாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.

      ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அழகா ரவா ஜாமூன்னு பேர் வச்சா, விருந்தினர் வந்து பிறந்த குழந்தையின் பேரை மாத்தி வைக்கிறார்ப்போல் சட்னு பேரை மாத்திட்டீங்களே..... இனிப்புக்கு என்ன பேர் வச்சா என்ன... நல்லா இருந்தாச் சரிதான்.

      ஆனால் ஜீரா பூரிக்கும் இதுக்கும் குறைந்தபட்சம் ஏழு வித்தியாசங்களாவது உண்டு.

      நீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    என்றென்றும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு இனிப்பாக கொண்டாடி விடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   உங்கள் இந்த கமெண்ட் பார்த்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.  நெல்லை மன்னிப்பாராக....

      நீக்கு
    2. வாங்க துரை செல்வராஜு சார்.... இன்று கூடாரை வல்லி... நேற்று நான் செய்த சர்க்கரைப் பொங்கல், ரொம்ப அதிகமா அடுப்பில் நிறைய வெல்லத்தோடு கொதிக்க வைத்ததால் சாதம் கொஞ்சம் விரைத்துக்கொண்டுவிட்டதுன்னு, என் FIL மனைவியை இன்று சர்க்கரைப் பொங்கல் செய்து அனுப்பச் சொல்லியிருக்கார்.

      நீங்கள் சர்க்கரைப் பொங்கல் செய்தீர்களோ?

      நீக்கு
    3. ///என் FIL மனைவியை //

      ஹா ஹா ஹா இங்கின கொமாப் போடத்தவறியதால் பொருட்பிழையாகிப்போச்சூஊஊஊஊ.. இது ஆருடைய மனைவி பற்றிப் பேசுறீங்க என மீ கொயம்பிட்டேன்ன்ன்ன்:))

      நீக்கு
    4. எப்பவும்போல் //ஹஸ்பண்ட் // எழுதியிருந்த குழம்பிருக்க மாட்டீங்கல்ல தையத்தக்க தா தை தாத்தா மகள் :))))))

      நீக்கு
    5. ஹா ஹா ஹா அது அஞ்சு பாரைன்ல இருந்து வந்ததும் ஹஸ்பண்ட் பதவியைப் பறிச்சிட்டார்ர் அண்ணியிடமிருந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது, எங்கள் அப்பாவின் ஒபிசில ஒருவருக்கு குழந்தை பிறந்ததாம் 2ம் தடவை.. அப்போ அவர் லீவுக்காக லெட்டர் அனுப்பியிருந்தாராம்.. அதில எழுதியிருந்தாராம்.. “மை செக்கண்ட் வைஃப்ஸ் டெலிவெரி.....” என ஹா ஹா ஹா.. பின்பு அவர் வந்ததும் அவரை எல்லோரும் விரட்டினார்களாம் எப்போ உனக்கு 2 வது மனைவி வந்தா? சொல்லவே இல்லையே என ஹையோ ஹையோ... ஹா ஹா ஹா..

      நீக்கு
    7. அங்க கமா போட்டாலும் தவறா புரிஞ்சுக்கலாம், கமா போடலைனாலும் குழம்பலாம். இருந்தாலும் இந்த மாதிரி குழப்பி யோசிக்க வச்சால், படிக்கறவங்களுக்கு அல்ஸமீர் வராதுன்னு சிமியோன் டீச்சர்....ஐயோ..இல்லை இல்லை ஏதோ ஒரு வாட்சப் செய்தில படித்தேன். அவ்ளோதான்.

      நீக்கு
  8. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    காரசாரமான ரெசிபிகளை இரு தடவைகளாக (சாபுதானா வடை திருமால் வடை) தந்த நீங்கள் இந்த தடவை இனிமையான ரவை ஜாமூன் ரெசிபி தந்து விட்டீர்கள். அதுவும் உங்கள் பாணிப்படி இறைவனுக்கு நைவேத்தியம் செய்து அவன் தந்த பிரசாதமாக, தந்தது. அந்த இறுதி படம் மிகச்சிறப்பு. நானும் பிரசாதம் பெற்று மகிழ்ந்தேன்.

    ரவை ஜாமூன் படங்கள் செய்முறைகள் எல்லாமே நன்றாக உள்ளது. கடைசியில் ஜீனியில் ஊறிய பிறகும், விள்ளும் போது சற்று கடுத்தமாக இருந்ததோ? (ரவை என்பதினால்) ஆனால் ருசி நன்றாகத்தான் இருந்திருக்கும். இனிப்பில் ஊறியவைகள் எல்லாமே சாப்பிட நன்றாக இனிக்க இனிக்கத்தான் இருக்கும். (ஆழ்ந்த இறை பக்தியில் ஊறி, தனக்கும், பிறருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் நினைக்கும் மனித மனங்களைப் போல..இதில்ஆழ்ந்த இறைபக்தி என்பது உடலுக்கு தீங்கு தராத இனிப்பு.) புதிதான ரெசிபியை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.. நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... //ஆழ்ந்த பக்தி// - கவர்ந்த சிந்தனை.... ஆனா பாருங்க.. எல்லா மருத்துவர்களும், சீனி, மைதா உடலுக்குக் கெடுதல்னு சொல்றாங்க. அவங்க இப்படிச் சொன்னதற்கு அப்புறம்தான் ஊர் முழுக்க பேக்கரிகள் மற்றும் இனிப்புக் கடைகளாகப் பெருகிவிட்டன. ஒருவேளை அவங்க எந்த அட்வைசும் பண்ணாமல் இருந்திருந்தால், நாமே பண்டிகைகளுக்கு மட்டும்தான் இனிப்பு செய்து சாப்பிட்டிருப்போமோ?

      நான் சீனியைத்தான் குறை சொன்னேன். நீங்க தவறா புரிஞ்சிக்கிட்டு, பிள்ளையார் கொழுக்கட்டையை மறந்துடாதீங்க

      நீக்கு
  9. சில சமயம் "கல்லாகி போகும் ரவா லட்டை ஜாமூனில் போட்டுப் பார்த்தால் என்ன...?" எனும் சிந்தனை வருகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். ரவா லட்டு விரைவில் செய்து எபிக்கு அனுப்பணும். அருமையான செய்முறை கைவசம் இருக்கு.

      அது எப்படி கல் போன்று ரவாலட்டு கட்டியாகும்?

      நீக்கு
    2. ///அது எப்படி கல் போன்று ரவாலட்டு கட்டியாகும்?//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இது என்ன படு அப்பாவியாகக் கேள்வி கேட்கிறீங்க?:).. ரவ்வையில் செய்யும் லட்டு பல தடவை பாறாங்கல்லாகிடும்:)) பல் இருப்போர்தான் கடிச்சுச் சாப்பிட முடியும்.. அதுக்கொரு காரணம், நம் ஊரில் பால் சேர்க்காமல் செய்வார்கள் அப்போ சீனிப்பாகின் தன்மை மாறிட்டால் கல்லாகிடும்.. அந்தப் பயத்திலேயே நான் லட்டு ட்ரை பண்ணாமல் இருக்கிறேன்.

      பால் சேர்த்துச் செய்வார்கள் அது நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது, அத்துடன் சிலசமயம்.. லட்டுப்போல இல்லாமல் ஆகவும் சொஃப்ட்டாகிடும்.

      நீக்கு
    3. ரவா லட்டுக்கான சில ரெசிப்பீஸ் வச்சிருக்கேன். இன்னும் அதைச் செய்ய வேளை வரலை. ரவா லட்டுன்னு நிறையபேர், ரவை, ஜீனியை பொடி பண்ணி உருட்டிச் செய்யறாங்க. அது வேலைக்காகாது. ரவா லட்டுன்னா ரவை தெரியணும், உடைக்கும்படி இருக்கணும். எதுக்கு நீண்ட நாட்கள் வைத்திருக்கணும்?

      செஞ்சுட்டு சும்மாவா இருக்கப்போறேன்...தி.பதிவுல வரத்தானே செய்யும். ஆனால் எப்போ செய்வேன் என்றுதான் தெரியலை.

      நீக்கு
    4. ///செஞ்சுட்டு சும்மாவா இருக்கப்போறேன்...தி.பதிவுல வரத்தானே செய்யும்.///

      http://1funny.com/wp-content/uploads/2011/03/praying-cat.jpg

      ஹையோ ஆண்டவா திருவனந்தபுரத்து வெள்ளை வைரவா.. என் லொக்டவுன் முடியும்வரை நெல்லைத்தமிழனுக்குக் கிச்சின் கிடைச்சிடக்குடா:))

      நீக்கு
  10. கொஞ்சம் பால் போளி ருசியில் அழுத்தமாக இருக்கும் என்று தோன்றியது எதுவும் சாப்பிடலாம் நன்றாக ரசிக்கலாம் நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சியம்மா..... பால் போளியை நினைவுபடுத்திட்டீங்களே... எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது அது. சாப்பிட்டு சில மாதங்கள் ஆகிவிட்டன. என்ன பிரச்சனைனா, அது என் பசங்களுக்கும் பிடிக்கும்..ஹாஹா. அதுனால மனைவியை பண்ணச் சொன்னா 15-20ஆவது இடச் சொல்லணும். ஏற்கனவே அவளுக்கு இப்போ வேலை ஜாஸ்தியாயிடுச்சு.

      நீக்கு
  11. போகிற போக்கை பார்த்தால் இந்த வருஷம் எங்கள் ப்ளாக்கில் கிச்சன் கில்லாடியாக நெல்லைத்தமிழன் மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை நெல்லைத்தமிழன் கலக்குறீங்க நான் கலக்கிறீங்க என்று சொன்னது சரக்கை அல்ல புது புது ரிசிப்பியாக போட்டு கலக்குறீங்க என்று சொன்னேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட... நாம நல்லாப் பண்ணறோமான்னு மனசுல நினைப்பு வரும்போது, யாரோ என்னோட ரெசிப்பில அளவைத் தவறாப் படிச்சுட்டு, செய்ததில் பாதியை காராஜில் பத்திரமாக வைத்தேன் என்று எழுதினார்களே...அதை நினைத்துக்கொள்வேன்.

      எப்போப் பார்த்தாலும் அரசியல் இடுகைகளையே போட்டு டென்ஷன் ஆகாமல் இப்போல்லாம் அப்போ அப்போ வித வித டாபிக்குகளையும் போடறீங்க. பாராட்டுகிறேன்.

      நீக்கு
    2. //நான் கலக்கிறீங்க என்று சொன்னது சரக்கை// பஹ்ரைன்ல நாங்க, நிறைய பேச்சலராக இருந்தவங்க ஆபீஸ் கொடுத்திருந்த பில்டிங்க்ல தனித் தனி flatல இருந்தோம். பெரும்பாலும் வட இந்தியர்கள் மற்றும் சில மலையாளிகள். பார்ட்டி வைக்கறேன் என்று எல்லாம் வாங்கி வைத்தார்கள். நான் மத்தவங்க (ஹோட்டல் அல்லாமல்) செய்யும் உணவைச் சாப்பிடமாட்டேன். I was an odd person there. இருந்தாலும் பார்ட்டில நானும் கலந்துக்கணும் என்பதால், வைத்திருந்த இரண்டு மூன்று பிராண்டுகளை ஒரு டம்ளரில் விட்டு ஒரு ப்ராஜக்ட் மேனேஜருக்குக் கொடுத்தேன். நல்லவேளை நான் செய்ததை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதான் எனக்குத் தெரியும் எதையும் கலக்கக்கூடாது என்று. ஹாஹா.

      நீக்கு
  12. இனிப்பின் சுவை தூக்கலாகத் தெரிய ஒரு சிட்டிகை ஒரே ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்  என்று வெங்கடேச பட் அடிக்கடி சொல்வார். பாகில் ரோஸ் எசென்ஸ் அல்லது வனிலா எசென்ஸ் சேர்க்கலாம்.
    நீங்கள் செய்தது கோல்கப்பாவை பாகில் முக்கி ஜாமுன் ஆக்கி விட்டீர்கள் என்று  சொன்னால் அடிக்க வராதீர்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்... இதுக்கு என்னதான் பேர் வைக்கறதுன்னு யோசிச்சு, ஜீராவில் முக்கி எடுப்பதால் 'ஜாமூன்' என்று சொல்லிட்டேன். கோல்கப்பா என்றால் என்ன?

      நீக்கு
    2. கோல்கப்பா தில்லியில் நிறையக் கிடைக்கும். பானிபூரிக்குத் தம்பி.

      நீக்கு
  13. ரவா ஜாமூன் - ம்ம்ம். பார்க்க நல்லா இருக்கு! செய்து, சுவைத்துப் பார்க்கும் ஆர்வம் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். செய்துபார்க்க நேரமில்லை என்று சொன்னால் நியாயம். ஏன் 'ஆர்வம்' இல்லைன்னு சொல்லிட்டீங்க? இனிப்புகளை விரும்புவதில்லையா?

      நீக்கு
  14. ரவா ஜாமூன் மென்மையா இருக்குமா ?? பாகில் ஊற நேரமெடுக்குமா ?ரவைக்கு பதில் சோள மாவு grits ல செய்யலாமோன்னு தோணுது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடா பாகில் போட்டு பத்து நிமிடங்கள் காத்திருந்தாலே போதும். நீங்க ஸ்வீட்டெண்ட் கோவா சேர்த்துப் பண்ணிப் பாருங்க.

      நீக்கு
    2. ///Angel11 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:15
      ரவா ஜாமூன் மென்மையா இருக்குமா ?? பாகில் ஊற நேரமெடுக்குமா ?///

      ஆஆஆஅ ஆரம்பிச்சுட்டாய்யா இங்கயும் கொஸ்ஸன் கேய்க்க:)) அதுசெரி இவ எப்பூடி மிட்நைட் இங்கின வந்தா? இது நாட்டுக்கு நல்லதில்லையே... நானும் முழிப்புத்தான்[இப்போ எங்களுக்கு ஃபுல் லொக்டவுன் எல்லோ.. நோஓஒ ஸ்கூல் ஆனா சம்பளம் வருமாக்கும் ஹா ஹா ஹா சனி மாற்றம் உண்மைபோலத்தான் தெரியுது:))].. முழிப்பெனினும் புளொக் நினைப்பு வரவில்லை..

      அதுசரி நீங்க இதுக்குப் பதில் சொல்ல வாணாம் நெ தமிழன்.. முதல்ல சாபுதானா வடையைச் செய்யச் சொல்லுங்கோ பின்பு இதுக்குப் பதில் சொல்லுங்கோ... முக்கிய விடயம்.. வடை செய்ததும் படம் அதிராக்கு மெயிலில் அனுப்போணும் அப்போதான் மி நம்புவேன்..

      ஊசிக்குறிப்பு: நான் செய்த வடைப்படம் அஞ்சுவுக்கு மெயிலில் அனுப்பிட்டேன்.. சாட்சிக்காக...

      நீக்கு
    3. ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு மிக்சி லிங்கேல்லாம் அனுப்பி தூக்கம் கலைச்சதே நீங்கதான் :) அந்த டைம்  இங்கே வந்தேன் 

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இங்கின ஆராவது ஜொள்ளட்டும் எது நல்ல மிக்ஸி கிரைண்டர் என:))

      நீக்கு
    5. அதிரா.... ஒருத்தர் லண்டன்லேர்ந்து, மனசுல இன்னைக்கு திங்கக் கிழமை பதிவு வந்திருக்குமே.... 'உள்ளேன் ஐயா' என்று ப்ரெசெண்ட் கொடுத்திடுவோம்னு வந்தால், அதைக் குறை சொல்லலாமோ?

      நீக்கு
    6. //நோஓஒ ஸ்கூல் ஆனா சம்பளம் வருமாக்கும் ஹா ஹா ஹா// - கொரோனா, கொரோனா வெர்ஷன் 2 என்று ஒவ்வொன்றாக வரவேற்பதில் நீங்கதான் முதல்ல நிப்பீங்க போலிருக்கு. நல்ல குளிர் காலத்துல குவில்டுக்குள்ள தூங்கறதுக்கு சம்பளம் தந்தால், பிறகு வேலைபார்த்து சம்பளம் வாங்க கஷ்டமா இருக்காதா?

      நீக்கு
    7. //முதல்ல சாபுதானா வடையைச் செய்யச் சொல்லுங்கோ// - அதிரா...ஏஞ்சலின் கண்டிப்பாகச் செய்வாங்க. என்னை நம்புங்க. அவங்க வெயிட் பண்ணறது, அவங்க ஹஸ்பண்டுக்கு லீவு விடணும் என்பதற்காகத்தான். அப்போதானே வடையை எண்ணெயில் பொரித்து பொன்னிறமா எடுக்க முடியும். இவங்க தனியா இருக்கும்போது செய்தால் ஆபத்தல்லோ.

      நீக்கு
    8. //எது நல்ல மிக்ஸி கிரைண்டர் என:))// - இதுக்குல்லாம் மத்தவங்க பதில் சொல்லுவாங்க. ஆனால் பட்டர்ஃப்ளை மிக்சி, லாயக்குப்படாது. இதுக்கு முன்னால ஸ்மீத் மிக்சி 20 வருஷத்துக்கும் மேலவே உபயோகித்தோம். எனக்கு உபயோகிக்கத் தெரியாமல் அரிசி அரைக்கறேன்னு ஒரு தடவை மோட்டாரை ரிப்பேர் பண்ணினேன். அந்த பிராண்ட் சூப்பர், ஆனா இப்போ இல்லை. ப்ரெஸ்டிஜ் நல்லா இருக்குங்கறாங்க. ப்ரீத்திக்கு கேரண்டி தர நிறையப்பேர் இருக்காங்க. நான் அழகா இருக்குன்னு பட்டர்ஃப்ளை மிக்ஸி வாங்கினேன். அது, 30 பேர் உள்ள ஃபேமிலிக்குத்தான் உபயோகப்படும்னு நினைக்கிறேன். ஐந்து பேருக்குக் குறைவா இருந்தால் வேலைக்காகாது. அவங்க சின்ன ஜார்ல, ஏகப்பட்டது அரைத்து வீணாக்கினால்தான் அது சரியா வேலை செய்யும். கொஞ்சமா போட்டா அரைக்கவே அரைக்காது.

      நீக்கு
    9. //பிறகு வேலைபார்த்து சம்பளம் வாங்க கஷ்டமா இருக்காதா?//

      ஹா ஹா ஹா இதேதான்.. போன ஏப்ரல் மேயிலயும் இதேதானே நடந்துது.. அதிராவுக்கு வெள்ளி துலாவில ஆக்கும்.. க்கும்..க்கும்ம்ம்:))

      நீக்கு
    10. எங்களிடமும் ஸ்மீத் இருந்துது நெல்லைத்தமிழன், அது பத்து வருடத்தில போறிங்காகிட்டுது அதனால அதை தூக்கி வச்சுப்போட்டு பிரீத்தி வாங்கினேன்.. அது 5 வருடத்தில, நான் காய்ஞ்ச ஊறுகாயைப் பொடியாக்க எண்ணிப் போட்டு அடிச்சேன் அது, சுழலும் பிளாஸ்ரிக்கை உடைச்சுப்போட்டுது.. அப்போ அதை காபேஜ்ஜில எறிஞ்சிட்டு பழையபடி அந்த ஸ்மீத் மிக்ஸியை தேடி எடுத்துப் பாவிக்கிறேன் அதுக்கு இப்போ வயசு 20:)).. ஆனா வேலை செய்கிறது, சத்தம் காதைக் கிழிக்குது அதனால அதை வீசோணும்... என் பிரச்சனை வெட்டாக அரைக்க என்னிடம் குட்டிக் குட்டி பிளெண்டர் மற்றும் பிரீத்தி கல்லுக் கிரைண்டர் எல்லாம் இருக்குது, ஸ்பைஸஸ் க்காகத்தான் ஒன்று வேணும்.. அஞ்சுவைத் தேடச் சொன்னேன், அவ இப்போ தேடுவதை விட்டுப்போட்டு நீ வாங்கினால் சொல்லு நானும் வாங்கப்போறேன் என்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சுவைத் தேடித் தரச்சொல்லுங்கோ.. இங்கு அமேசனில் மட்டும்தானே நல்லது கிடைக்குது, அமேசன்.இண்டியாவில 3250 என விலை போட்டிருக்குது, அதேபொருள் டொட் யூகேயில 118 பவுண்ட்ஸ் எனக் காட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    11. எனக்கும், மசாலா பொடிகள், கூட்டுக்கு தேங்காய் அரைக்க (கொஞ்சமாகச் செய்யும்போது) சின்ன ஜார் வேணும். சமையலறைக்கு என்ன தேவை என்று தெரியாமலேயே இந்த மிக்சிக்காரங்க, மிக்சி தயார் பண்ணி மார்க்கெட்ல விட்டுடறாங்க. பொண்ணு அழகா கண்ணுக்கு லட்சணமா இருந்தால் மட்டும் போதுமா, சமையல் செய்யத் தெரிய வேண்டாமா? ஐயையோ.... நான் மிக்சியைச் சொன்னேன். கொஞ்சமா அரைத்தால் அப்படியே இருக்கும், அரைபடுவதில்லை.

      Youtubeல யோகாம்பாள் சுந்தர் (சமையல் குறிப்புகள் வீடியோ போடுகிறவர்) உபயோகிக்கும் மிக்ஸி குறைந்த அளவெல்லாம் அரைக்க நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். என் பெண்ணோட எக்ஸாம் முடிந்ததும் அதை வாங்கச்சொல்லணும். (அப்புறம் கிச்சன்ல அதுக்கு இடத்தைத் தேடணும்)

      நீங்க நல்ல மிக்சியைக் கண்டுபிடித்தால் சொல்லுங்க (ஆனா பட்டர்ஃப்ளை வாங்கி பத்து மாசம்தான் ஆகுது)

      நீக்கு
    12. //பொண்ணு அழகா கண்ணுக்கு லட்சணமா இருந்தால் மட்டும் போதுமா, சமையல் செய்யத் தெரிய வேண்டாமா? ஐயையோ.... நான் மிக்சியைச் சொன்னேன். //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா பொண்ணு எண்டாலே சமைக்கத்தானோ.. இதுதானே போனகிழமை சண்டைப்பிடித்தோம்:)).

      //Youtubeல யோகாம்பாள் சுந்தர் //
      நானும் பார்ப்பேன் அழகாகச் சொல்லுவா.. அவவிப் பார்க்கும்போதெல்லாம் கீசாக்காதான் அது என நினைப்பேன்:))..

      எனக்கு எப்பவும் வித்தியாசமாக இருக்கோணும் நெடுகவும் ஒரேமாதிரி இருப்பது பிடிக்குதில்லை, அதனால ஏதும் வேறு ஸ்டைலில் குட்டியாக தேடினால் சரியாக கிடைக்குதில்லை.

      எனக்கு புதினம் தெரியாது, மிக்ஸ்சிக்கு ஜார்கள் தனித்தனியே வாங்கலாம் என.. அதனால அமேசனில் நல்ல அழகாகன பிலிப்ஸ் குட்டி ஜார் படம் போட்டு, வெட் அண்ட் ட்றை கிரைண்டர் என இருந்துது.. மூடிக்கும் லொக் இருந்துது சின்ன குட்டி.. ஆஹா இது சூப்பராச்சே என, இருப்பினும் டவுட்டில மெயில் போட்டேன் இதில ஸ்பைஸஸ் அரைக்கலாமோ என.. யேஸ் மடம் எல்லாம் அரைக்கலாம் எனப் பதில் வந்துதா, ஓடர் பண்ணிட்டேன்ன்.. வந்ததும் ஆசையாக திறந்தேன், அரைக்கும் பட்டினைக் காணம் தேடினால் அது சட்னி ஜார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா அது பிலிப்ஸ் கிரைண்டர் வாங்கோணுமாம், சரி வாங்குவோமே எனப் பார்த்தால்.. அதிலயும் கப் கிடைக்குது.. அப்போ வேஸ்ட் என திரும்ப 3.50 முத்திரைக் காசு ஒட்டி அனுப்பினேன்:))

      நீக்கு
    13. ///நீங்க நல்ல மிக்சியைக் கண்டுபிடித்தால் சொல்லுங்க (ஆனா பட்டர்ஃப்ளை வாங்கி பத்து மாசம்தான் ஆகுது)//ஆஆஆ என் ப்ரீத்தி க்கு ஏப்ரல் வந்தா 18 ஆக்கும் :)சட்னிஜார் உடைஞ்சி அப்புறம் பெரிய சத்தம் வருது மற்ற ஜார் யூஸ் பண்றச்ச .எங்கள் இருவருக்குமே சின்ன மினி சைஸ் மிக்சி போதும் இட்லிப்பொடி ட்ரை பொடிகள் ரசத்துக்கு அப்புறம் தேங்காய் சட்னி  வெங்காய சட்னி அரைக்கத்தான்  ,இதில்வேறு கணவர் புது மிக்சி வந்தா பழசை வீசணும்னு ஆர்டர் .அது ரத்னா ஸ்டோர்ஸில் மெட்றாஸில் வாங்கினது அப்டிலாம் வீசிட முடியுமோ :(  என்கூட 18 வருஷமா ட்ராவல் பண்ணுது 

      நீக்கு
  15. பெயர் எதுவாக இருந்தால் என்ன ? சுவையாக இருந்தால் சரிதான்.

    படங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி... ஓரளவு சுவையாக இருந்தது. அவ்ளோதான்

      நீக்கு
  16. உருளைக்கிழங்கில் குலாப்ஜாமூன் செய்திருக்கேன். மில்க் பவுடர் சேர்த்துத் தான். அதே போல் ப்ரெடிலும் ஜாமூன் செய்திருக்கேன். கொஞ்சம் உ.கி.கொஞ்சம் பால் பவுடர் சேர்த்து. ஆனால் ரவையில் இப்படிப் பூரி பொரித்துப் பாகில் போட்டுவிட்டு அதை ஜாமூன் என்று வாய் கூசாமல் சொன்னதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஜீரா போளி பண்ணிட்டு அதை குலாப் ஜாமூன்னு பெயர் வைச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆஆஆ கீசாக்கா பொயிங்கிட்டா நெல்லைத்தமிழன் தேம்ஸ்க்கு ஓடுறார்ர்ர்ர் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    2. நல்லா தடிமனான குக்கி சைஸ்ல பொரித்து அதை ஜீரால போட்டு எடுத்தா என்னதான் பேர் சொல்றது? 'கீதா' என்று பெயர் இருக்கிறதே..கீதையைப் பற்றி பத்து மணி நேரம் விளக்கம் சொல்லுங்கன்னு கேட்க முடியுமா? அது அநியாயமில்லையோ?

      ஜாமூன் என்று பேர் வச்சதற்கு ஜாமீன் எடுக்க வேண்டியிருக்கும்னு கனவுலயும் நினைக்கலயே சாமீ...

      நீக்கு
  17. இன்னிக்கு மாமியார் ஸ்ராத்தம் ஆகி இருப்பதால் வெளியே சாப்பிட முடியாது. ஆகவே நெ.த.வோட கோல்கப்பா/ரவா போளி/ஜீரா போளி/பால் போளி எனக்கு வேண்டாம். ஏலக்காயோ, அல்லது ரோஸ் எஸென்ஸோ கொஞ்சம் கூடச் சேர்க்கலை. அப்புறம் அது எப்படி நல்லா இருக்கும். ரவையோட பால் பவுடர் சேர்த்திரூந்தாலும் போனால் போகுதுனு ஒத்துக்கலாம். இதை எப்படி ஒத்துக்கறது? வாய்ப்பே இல்லை. :))))) அதான் இன்னிக்கு போணியே ஆகலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆகவே நெ.த.வோட கோல்கப்பா/ரவா போளி/ஜீரா போளி/பால் போளி எனக்கு வேண்டாம்.//ஹா ஹா ஹா கீசாக்கா எங்கட வீட்டில இன்று ஸ்ராத்தம் இல்லை எனினும்.. நேக்கும் இந்த இனிப்பு வாணாம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹையோ கலைக்கப் போறார்ரே மீ ஓடிடுவேன்ன்:))

      நீக்கு
    2. என்னவோ கோல்கீப்பர் பெயர்லாம் சொல்றீங்க.. காமாட்சியம்மா 'பால் போளி' என்று ஞாபகப்படுத்தியதும் அதையும் சேர்த்துக்கிட்டீங்க. ரொம்ப க்ளோஸப் படங்கள்னால பூரி சைஸுக்குத் தெரியுதா?

      அது சரி... இன்று ச்ராத்தம் நன்றாக நடந்ததா? உங்க தளிகைதானா? வாத்தியார்கள்லாம் வந்திருந்தார்களா?

      நீக்கு
  18. ஆஆஆஆஆ திரும்படியும் நெல்லைத்தமிழன் ரெசிப்பியாஆஆஆஆ.. நான் சொன்ன பேச்சை மீறாமல் சாபுதானா போன வெள்ளி செய்திட்டேன்... நன்றாக வந்தது நன்றாக இருந்தது, உடனே முடிஞ்சு போச்சு ஆனா அது வடை எனச் சொல்வதைவிட உருளைக்கிழங்கு பற்றிஸ் எனச் சொல்வதுபோல இருந்துது, சவ்வரிசியின் சுவையே அங்கு தெரியவில்லை... ஒருவேளை நான் இன்னும் அதிகம் சவ்வரிசி போட்டிருக்கோணுமோ தெரியாது.. சரி அது போகட்டும்.. இது என்ன இது... புயு ரெசிப்பி.. அஞ்சூஊஊஊஊஊ நெல்லைத்தமிழன் ரவ்வை லட்டைப் பொரிச்சுப் புதுப்பெயர் சூட்டியிருக்கிறார் போல இருக்கே.. நில்லுங்கோ வாறேன்ன்ன்ன்.. ஒழுங்காப் படிச்சிட்டுத்தான் பேசுவேனாக்கும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோ நோ :) பை மகள் :) திஸ் இஸ் ரவா அரியதரம் 

      நீக்கு
    2. kஅர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
      //பை மகள் :) //

      இது எனக்கா சொன்னீங்க கர்ர்ர்:)) நான் நெ தமிழனின் மகள் செய்த குறிப்பு எனச் சொல்லிட்டீங்க என நினைச்சு பதறி அடிச்சு திரும்பப் போய்ப் படிச்சு மேலே.. இதைக் கொப்பி பண்ணி வந்தேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 பிள்ளையை[என்னைச் சொன்னேன்:)] ரென்சனாக்குவதே அஞ்சுவுக்குத் தொழிலாப்போச்சு:))

      //கிச்சன் என் வசம் வந்த அன்று செய்தேன்.

      //

      நீக்கு
    3. இதுக்குப் பெயர் ரவ்வா அரியதரமோ.. இப்பூசிச் ஒல்லியிருந்தால் நான் எதுக்குக் கலங்கிப்போய் நிறிகிறேன் கர்ர்:)) இப்பூடிப் பெயர் வச்சிருந்தால் நான் தெளிஞ்ச நீரோடையாகி இருப்பேனெல்லோ..:))

      //ரவா ஜாமுன்//
      இந்தப்பெயர் பார்த்ததும், குலாப் ஜாமூன் என் அநினைச்சுட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கீதாரெங்கனாலதான் இப்போ நெல்லைத்தமிழனும் கண்டபடி பெயர் சூட்டுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      நீக்கு
    4. அதிரா... சாபுதானாவுக்கு நான் கேரண்டி. ஆனால் இங்க கிடைப்பதுபோல பெரிய வெள்ளை ஜவ்வரிசி அங்க கிடைக்குதான்னு தெரியலை.

      ஆனால் ரவா ஜாஜாஜாமூமூமூன்ன்ன்ன் - எதுக்கு வம்பு?

      நீக்கு
    5. ஏஞ்சலின்.... தயவு செய்து அரியதரம் பெயரை நினைவுபடுத்தாதீங்க. அழகான தமிழ்ப்பெயர் அதிரசம் என்று இருக்கும்போது, எதுக்கு ஃப்ரெஞ்ச் பெயரான 'அரியதரம்' என்பதை பலதரம் நினைவுபடுத்தறீங்க? ஹா ஹா

      நீக்கு
    6. அதிரசத்துக்கு வெல்லம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எண்ணெயை வடிகட்டணும். இதுக்கு லைட்ட சீனிப்பவுடர் சேர்த்து பொரித்து பிறகு ஜீராவில் குளிப்பாட்டணும் இல்லை நீந்த வைக்கணும்.

      கீதா ரங்கன்(க்கா) இணையத்துக்கு வராததுனால எல்லாரும் அவரைக் கலாய்க்கறீங்களா? அவங்களிடம் இப்போ சொல்றேன். ஹாஹா

      நீக்கு
    7. ஹையோ இப்போதான் பார்க்கிறேன் நிறைய எழுத்து மாறி வந்திருக்குது என் கொமெண்ட்ஸ்:)) கர்:))..

      அது நெல்லைத்தமிழன் நான் விடமாட்டனெல்லோ அஞ்சுவைக் கொயப்பிட்டேன்ன்ன்:)).. நாங்க இலங்கையில் சீனி அரியதரம் எனத்தான் சொல்லுவோம்ம்.. யூ ரியூப்பில் தேடுங்கோ கிடைக்கும்:))..

      //கீதா ரங்கன்(க்கா)//

      ஹா ஹா ஹா கீ தா இங்கின இல்லை எனினும் அந்த பிராக்கெட் போடாமல் எழுதப் பயப்பிடுறீங்களே நெல்லைத்தமிழன் அண்ணா:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    8. //நிறைய எழுத்து மாறி வந்திருக்குது என் கொமெண்ட்ஸ்// - அடடா..அது அதிரா தமிழ்னு நினைத்தேன்.

      அரியதரம் தெரியும். கலாய்த்தேன். இதுபோல வேறு ஒரு இனிப்புக்கு முந்திரி சேர்க்காமலேயே நாகர்கோவில்காரங்க முந்திரிக் கொத்து என்று சொல்வாங்க. அது ஒரு சூப்பர் இனிப்பு. தி பதிவுக்காக ஒரு தடவை செய்யணும்.

      நீக்கு
    9. அதுதான் என்பக்கம் நான் செய்து போட்டிட்டனே:)).. எங்கட பயத்தம்பணியாரம்.. நீங்கதான் சொன்னீங்க அது முந்திரிக் கொத்து என:))

      நீக்கு
    10. http://gokisha.blogspot.com/2020/08/blog-post.html

      ஆஆஅ  எனக்கு நினைவிருக்கு மேடம் தை மகள் அந்த முந்திரிக்கொத்து //பயற்றம்பணியாரத்தில் மிளகுத்தூள் சீரகத்தூள்  எல்லாம் சேர்த்தாங்க .வரலாறு முக்கியம் அதனால் சுட்டி இணைக்கிறேன் 

      நீக்கு
    11. ///நெல்லைத் தமிழன்11 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:09
      ஏஞ்சலின்.... தயவு செய்து அரியதரம் பெயரை நினைவுபடுத்தாதீங்க. அழகான தமிழ்ப்பெயர் அதிரசம் என்று இருக்கும்போது, //

      அவ்வ்வ்வ் எனக்கிப்போ இருக்கிற தமிழ் அறிவும் காணாம போச்சு :) ரீசண்டா ழி /ளி /லி லகூட சந்தேகம் வந்து எல்லாத்துக்கும் இந்த தைமகள் தான் காரணம் 

      நீக்கு
  19. படம் பார்க்க சூப்பராக அழகாக இருக்குது நெல்லைத்தமிழன், ஆனா இது லட்டைச் செய்து பின்பு பாகில் போட்டதுபோல இருக்குது.. ஒரு வேளை பாகில் போடாதுவிட்டால் செதியில பழுதாகிவிடும் என்பதாலாக இருக்கும்...

    எனக்கு இனிப்புப் பிடிக்காதென்பதால நா ஊறவில்லை.. இனிப்புப் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல ரெசிப்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்பு பிடிக்காமல் எப்படித்தான் ஒரு மனுஷனால (மனுஷியால) வாழ முடியுமோ? என்னதான் டயட் டயட் என்று நினைத்துக்கொண்டாலும், இனிப்பை மட்டும் என்னால், 'வேண்டாம்' என்று மனதாறச் சொல்லவே முடியலை.

      அது சரி... ஆளாளுக்கு, இது பூரி, லட்டை தட்டையாக்கினது, கோல்கீப்பர், போளி என்றெல்லாம் சொல்றீங்களே... இப்போ எனக்கே குழப்பமா இருக்கு..நான் என்னதான் செய்தேன் என்று....ஹாஹா.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ரவா லட்டை சீனிப்பாகில போட்டுக் குளிப்பாட்டி இருப்பதைப்போல இருக்குது:)).. ஆனா ஒன்று இப்போ உறைப்பு பதார்த்தத்தை நீங்க எப்படிச் சமைச்சு தந்தாலும் நான் சாப்பிடுவேன்.. அதேபோல இனிப்புப் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.

      நான் சுவீட் வகைகள் எடுக்க மாட்டேன், ஆனா எனக்குப் பிடிச்சது புளிப்புச் சேர்ந்த சுவீட் வகைகள்... ஹரிபோ தெரிஞ்சிருக்கும் அப்படியான சவர் ரேஸ்ட் பிடிக்கும்... மற்றும்படி ரீக்கு சீனி சேர்க்காமல் குடிக்க மாட்டேன்.. வேறு இனிப்பு வகை பிடிப்பதில்லை. சொக்கலேட் கவர் பண்ணியதுபோல பிஸ்கட், கேக் கிடைக்கும்.. அதில் அந்த சொக்கலேட்டை அப்படியே உடைச்சு காபேஜ்ஜில் போட்டு விட்டு உள்ளே இருப்பதைச் சாப்பிடுவேனாக்கும்:))

      நீக்கு
    3. ஸ்வீட் வகைகள் சாப்பிட்டா டயபடீஸ் வரும், ரொம்ப குண்டாகிடுவாங்க என்றெல்லாம் சொல்றாங்க. அதில் உண்மையும் இருக்கும்.

      ஹரிபோ ஸ்வீட் - இப்போத்தான் கன்ஃபர்ம் ஆச்சு. உங்க வயசு 8 கூட இன்னும் தாண்டலைனு....

      இனிப்பு பிடிக்காதவங்க சாப்பிடவேண்டிய இனிப்பு, ரசமலாய், ரசகுல்லா(ஜீராவை கொஞ்சம் எடுத்துட்டு) போன்றவை. ரசமலாய் டாப் கிளாஸாக இருக்கும்.

      நீக்கு
    4. //ரசமலாய், ரசகுல்லா(//

      இதை நான் முன்பு சாப்பிட்டதில்லை இப்போ 2 வருடமாகத்தான் ஏசியன் ஷொபில் கண்டு பிடிச்சு அங்கு போகும்போது வாங்குவேன் எனக்கு நல்லாப் பிடிக்கும்.. ஆனா என்ன சொல்லுங்கோ இது எனக்கு மட்டுமே வீட்டில பிடிக்கும் ஹா ஹா ஹா..

      //ஸ்வீட் வகைகள் சாப்பிட்டா டயபடீஸ் வரும்,//
      இதில நான் ஒரு குட்டி ஆராட்சி செய்தேன்.. இதை மாறிப்பார்த்தேன் அதுவும் பொருந்துது.. அதாவது டயபட்டிஸ் வரப்போகுது அல்லது வந்தோரின் வாய் அதிகமாக இனிப்பைத் தேடுது:))..

      நீக்கு
    5. ஐயோ..... எனக்குமே ஷுகர் லெவல் செக் பண்ணி ஆறு மாதமாகிறது. இரவு நிம்மதியா தூங்கவிடாமப் பண்ணிட்டீங்களே......

      Actually ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா....சிலருக்கு ஒரு பாக்டீரியா உடலில் டெவலப் ஆகுதாம். அதுதான் இனிப்பின்மீதான ஆசைக்குக் காரணமாம். ரொம்பவும் கட்டுப்படுத்திக்கொண்டு இனிப்பே சாப்பிடாமல் இருந்தால் 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்..ஐயையோ..மெல்ல அந்தப் பாக்டீரியா போயிடும்'னு சொல்றாங்க.

      என்னவோ...சின்ன வயசுலயே நம்ம உணவை ஊட்டி ஊட்டி உங்க பசங்களை வளக்காமப் போயிட்டீங்க.. அது சரி... நம்மை நம்ம பெற்றோர் பயமுறுத்தியதுமாதிரி (இதைச் சாப்பிட்டா பிசாசு பிடிச்சுக்கிட்டுப் போயிடும் என்றெல்லாம்.... என் அம்மா சின்ன வயசுல எனக்குச் சொன்னதை எழுதியிருக்கிறேன். பெண்ணைத் தொட்டுப் பேசினா காது அறுந்து போயிடும்னு.. நான் அப்படி காது அறுகிறதா என்று அப்போவே செக் பண்ணிப்பார்த்துட்டேன் ஹாஹா) இந்தக் காலத்துப் பசங்களை அரியதரம் சாப்பிடு குழைசாதம் சாப்பிடுன்னுலாம் சொல்லமுடியுமா? அவங்க பற்றீஸ், நூடுல்ஸ், ப்ரெட் ஜாதியாயிற்றே

      நீக்கு
    6. gut bacteria :) மைக்ரோப்ஸ் தான் இனிப்பு craving கிற்கு காரணம் .gut  மைக்ரோப்ஸ் கொஞ்சம் நம்ம மூளை மாதிரி நமக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கும் அந்த மைக்ரோப்ஸ் எனக்கும் மகளுக்குமில்லைன்னு நினைக்கிறேன் :) 
      ///நான் அப்படி காது அறுகிறதா என்று அப்போவே செக் பண்ணிப்பார்த்துட்டேன் ஹாஹா) //

      ஆஆஆ :) இதை பாக்காமல் விட்டீங்களே தை தக்கா மகள் :)

      நீக்கு
    7. ///ஹரிபோ ஸ்வீட் - இப்போத்தான் கன்ஃபர்ம் ஆச்சு. உங்க வயசு 8 கூட இன்னும் தாண்டலைனு....//

      ஹையோ உங்களுக்கு விவரமே தெரில இங்கே பிரிட்டிஷ் ஸ்கொட்டிஷ் ஐரிஷ் எல்லாம் 80 வயசு பாட்டீஸ் thathaaas தான் ஹரிபோ சாப்பிடறாங்க :) அநேகமா 8 க்கு பக்கத்தில் 0 போடா மறந்திட்டிங்கன்னு நினைக்கிறன் 

      நீக்கு
  20. சரி சரி எல்லோரும் ஓடிட்டினம் மீயும் ஓடிடறேன்ன் ஒடியல்கூழ் செய்யப்போறேன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்றுவாருங்கள். அடுத்த வாரம் என்ன வருதுன்னு பார்க்கணும்.

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்பா  பணி கடமை அழைத்ததால் கும்மியில் தொடர்ந்து கலாட்டா பண்ண முடியலை :)

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!