ஏஞ்சல் :
1, எதிர்மறை விஷயங்கள் செய்திகள் எதுவும் சிலருக்கு பார்க்கவோ கேட்கவோ பிடிப்பதில்லை இதன் காரணம் என்னவா இருக்கும் ?
# "கண்ணே நல்வாக்கு நீ சொல்லடீ" எனும் சென்டிமென்ட்டுக்கு எதிர்த்துணை உணர்ச்சி. பிடித்ததை நாடுவதும் பிடிக்காததை ஒதுக்குவதும் மனித இயல்பு.
& இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)2, The Greatest Showman இந்த ஆங்கிலப்படத்தை தமிழில் ரிமேக்கினால் யார் அந்த Hugh Jackman கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் ?
A , சித்தப்பா ரஜினி
B , அங்கிள் கமல் இந்த படத்தை கண்டிப்பாக பார்த்துவிட்டு பதில் சொல்லவும் :)))))))))))
# படம் பார்க்க முயற்சிக்கிறேன். பின்னர் பதில் சொல்கிறேன். ரஜினி கமலைத் தாண்டி நல்ல நடிகர்கள் கிடையாதா என எதிர்க்கேள்வியைக் கேட்டு வைக்கிறேன்.
# விலை மலிவு கற்பதெளிது ஆமோதிப்பு=காரியசித்தி.
& ஜால்ரா போடுவது மற்றவர்களைப் பார்த்தே போடத் தெரிந்துகொள்ளலாம். தெரிந்துகொண்டு ஜால்ரா போடுவதால் ஆதாயங்கள் அதிகம்.
4, கோவிட் VACCINE பற்றி உங்கள் கருத்து ?# தயக்கம் அச்சம். போடத்தான் வேண்டுமா என்ற வினா.
& ஏதோ எல்லோருக்கும் பயன்பட்டால் சரிதான்.
5, இளைய தலைமுறை மூத்த தலைமுறையைவிட விட சில விஷயங்களில் அவதானமாக விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதில் உடன்படுகிறீர்களா ?
# கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள், எச்சரிக்கையாக இல்லையோ என்று தோன்றுகிறது.
6, நிஜ வாழ்க்கை உலகம் என்பது வேறு ஆனால் அடிக்கடி மக்கள் போலியான விஷயங்களில் திசை திருப்பப்படுவதன் காரணம் என்ன ?
# கவர்ச்சி, உடனடித் திருப்தி - சந்தோஷத்தில் நாட்டம் ஆகியவற்றின் ஈர்ப்பு சக்தி மிக்க வலுவானது.
& நிஜ வாழ்க்கை உலகம் - அன்றாடம் அனுபவிக்கும் / அவதிப்படும் சமாச்சாரம். போலியான விஷயம் - என்பது ஒரு மாற்றத்திற்காக மன சந்தோஷத்திற்காக நாம் காணும் சினிமா போல.
7, Thug Life ..எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு ரௌடி பேபி அல்லது ரௌடி பையன் // நானும் ரவுடிதான் மொமெண்ட் .. அனுபவமாவது இருந்திருக்கும் .அப்படி உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் எதாவது இருக்கா ?
# இருக்கிறது ஆனால் சொல்லத் தரமில்லாததாக..
& எல்லாம் இப்போ மறந்து போச்சு!
8, ஸ்கூல் படிக்கும்போது செய்த சில அற்ப விஷயங்கள் இப்போ படு அற்பத்தனமா தோணுது உங்களுக்கு அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கா ?.உதாரணத்துக்கு ஒரு ரூபா காயின் போட்டு சும்மா தோணின நம்பருக்கு கால்போட்டு பேசியிருக்கோம் நானும் தோழிகளும்.இப்போ நினைச்சா அது தப்புன்னு தோணுது ..
# என் பள்ளி வாழ்க்கை கல்வி தாண்டிய நடவடிக்கை முற்றும் அற்றதாக இருந்தது.
& ஸ்கூலுக்குப் பக்கத்தில் உள்ள தோட்டங்களில் (ஊட்டி பக்கத்தில் படித்த சமயம் ) முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வால்பேரி போன்ற பல விஷயங்களை கூட்டமாக போய் திருடித் தின்றது. ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் படித்த சமயத்தில் மாங்காய் / கொய்யா தோப்புகளில் பறித்துத் தின்ற மாங்காய் / கொய்யாக்காய் எல்லாம் நினைவில் இருக்கு. பறித்து சாப்பிடுவோமே தவிர வேறு லாப நோக்கம் எதுவும் கிடையாது.
9, திருப்தியடைதல் / போதும் என்ற மனம் என்பது சிலருக்கு மட்டும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கே அது ஏன் ?
# திருப்தி தேடுகிற நபரின் ஆசைகளின் ஆழம், தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும்.
10, சில விஷயங்கள் தவறு ஆனாலும் சிலநேரம் சரியாக மனசுக்கு தோணும் அப்படி உங்களுக்கு தோணியிருக்கா ?
# பல முறை அன்றாடம்.
& மீண்டும் அந்த சில விஷயங்கள் என்ன என்று சொல்லிடுங்க!
11, உலகமே பயத்துடன் அடுத்த நாளை எப்படியிருக்குமோ என எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் சென்னை சினிமா தியேட்டர்கள் திறப்பது அத்யாவசியமா ??
# நிச்சயமாக இல்லை தான். ஆனால் ஆயிரக் கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் எனும் உண்மை யோசிக்க வைக்கிறது.
12, சிலர் மட்டும் எப்பவும் ஒருவித வன்மம் ,குரோதம் ,வெறுப்பு ,ஆக்ரோஷம் போன்ற பிசாசு குணங்களுடன் திரிவதேன் ?இது பிறப்பால் அமைந்ததா ? அல்லது சூழ்நிலைகளால் அமைந்ததா ?
# எல்லாவற்றுக்கும் மனோதத்துவ அடிப்படையில் காரணம் இருக்கும். அவர்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.
நெல்லைத்தமிழன் :
1. நமக்குச் சம்பந்தமில்லாதவரது மரணம் நம்மை பாதிப்பது ஏன் ?
# 'நமக்கும் இதுதான் ஒரு நாள்' என உள்மனதில் தோன்றுவதால் தான்.
2. எந்த ஒரு துக்க நிகழ்வும் வெகு சீக்கிரமே நம் மனதால் மறக்கப்பட்டு அதன் தாக்கம் போய்விடுவது எப்படி?
# எதனுடைய தாக்கமானாலும் (நல்லதோ அல்லாததோ) காலக்கிரமத்தில் வீரியம் தேய்ந்து நினைவாக மட்டும் இருப்பது மனதின் படைப்புத் தத்துவம். அது ஒரு வரப்பிரசாதம்.
3. ஒரு நண்பர், உங்களை வாங்கன்னு ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றால் நீங்கள் முதலில் ஆர்டர் செய்வது எது?
# சூடாக பஜ்ஜி/போண்டா/வடை. குடிக்க வெந்நீர்.
& யார் கூட்டிச் செல்கிறார்களோ அவர்களுடைய choice ல விட்டுவிடுவேன். அவர்தானே பணம் கொடுப்பவர். அவருடைய நிதி நிலைமை + மன நிலை தெரியாமல் நான் எதையும் ஆர்டர் செய்யமாட்டேன். எங்கள் நண்பர்களிடையே எழுதப்படாத ஒப்பந்தம் - யார் அழைக்கிறார்களோ அவர்கள்தான் பில் தொகை செலுத்தவேண்டும்.
4. திருமணத்துக்குப் பெண் பார்த்த அனுபவம் பகிரமுடியுமா? அங்கேயே 'சம்மதமா' என்று பெற்றோர்/அண்ணன்கள் கேட்டு நெளியவைத்த அனுபவம் உண்டா?
# முன்பே பகிர்ந்து விட்டதாக நினைவு.
5. என்ன வாங்கிக்கொடுத்தாலும் என்ன செய்தாலும் திருப்தி அடையாதவர்கள் பெண்கள் என்று உபநிஷத்துகள் கூறுவதில் உண்மையுண்டா?
# உபநிடதங்கள் அப்படிச் சொல்கிறதா என்று தெரியவில்லை. பொதுப்படையாகச் சொல்லப் படுவது எல்லாருக்கும் பொருந்தாது. ஆணோ பெண்ணோ, நீடித்த அல்லது நிரந்தர திருப்தி என்பது எளிதில் கிடைப்பது அல்ல.
& நம்ம வாசகிகள் எல்லோரும் வந்து இதற்கு பதில் சொல்லி, நெ த சந்தேகத்தைத் தீர்க்கவும்!
= = =
சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது போல, 2020 ஆம் ஆண்டு திங்கள் / செவ்வாய் பதிவுகளின் விவரங்கள் இப்போ பார்ப்போம்.
திங்க கிழமைப் பதிவுகள் :
அதற்கும் அடுத்த இடம் :மசாலா சப்பாத்தியும், வரமிளகாய் சாஸும் - ஸ்ரீராம் https://engalblog.blogspot.com/2020/02/blog-post_3.html
செவ்வாய் கதை பதிவுகள் :
புள்ளி விவரங்களை உங்களுக்காக திரட்டித் தந்துள்ளவர் : கௌதமன்
= = = =
மின்நிலா பொங்கல் மலர் தயார்.
ஜனவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
மலரைப் படித்து நிறை / குறைகளை விமரிசனமாக (ஐநூறு வார்த்தைகள் அளவில்) எழுதி பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் அனுப்பவும். சிறந்த பத்து விமரிசனங்களுக்கு பரிசு அளிக்கப்படும்.
மொத்தம் 295 (A4) பக்கங்கள் Size: 21.3 MB
email மூலம் பெற விரும்புவோர், உங்கள் email id எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
= = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபோகி நாள் நல்வாழ்த்துகள்.
தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகட்டும்.
அனைத்துக் கேள்விகளும் பதில்களும்
மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
வாழ்த்துகள் ஏஞ்சல் , வாழ்த்துகள்
நெல்லைத் தமிழன்.
வாங்க வல்லிம்மா... வணக்கமும், நன்றியும்,
நீக்குthanks vallimmaa :)
நீக்குதிங்க கிழமை பதிவுகளில் பாராட்டுப் பெற்ற, நம் அதிரா, ஸ்ரீராம், ரமா
பதிலளிநீக்குஸ்ரீனிவாசன் அனைவருக்கும்
பொங்கல் பரிசாக சர்க்கரைப் பொங்கல் அனுப்பி வைக்கலாமே.
அதே போல
கதைகள் இவ்வளவு எழுதி முதற்படியில்
நிற்கும் அன்பு துரை செல்வராஜுவுக்கு
நல்ல பரிசு கொடுக்க வேண்டும்.
எனக்குமா! நன்றிம்மா.. ஆரம்பத்தில் மசாலா சப்பாத்தி வருட இறுதியில் இன்னொரு சப்பாத்தி என்று செய்திருக்கிறேன் / எழுதி இருக்கிறேன் என்று தெரிகிறது!
நீக்குநன்றி வல்லிம்மா... பரிசு கிடைச்சதும் உங்களுக்கு வட்சப்பில் போட்டோ எடுத்து அனுப்பி வைக்கிறேன்:)
நீக்குஅன்பு அதிரா,
நீக்குஉங்க ஊருக்கும் லாக்டௌன் உண்டா.
இன்னும் நல்ல ரெசிப்பி எழுதி அனுப்புங்கோ.
சுவைக்கலாம்.
கதைகள் எழுதிய நம் கீதா ரங்கன், கீதா சாம்பசிவம்,
பதிலளிநீக்குகமலா ஹரிஹரன், ஜீவீ சார்
அன்பு பானுமதி வெங்கடேஸ்வரன், ஏகாந்தன் ஜி,
பரிவை குமார் , அப்பாதுரை அனைவருக்கும்
மனம் நிறை பாராட்டுகள்.
நம் எல்லோருக்கும் ம்கிழ்ச்சி தந்தவர்கள் இவர்கள்.
ஆம். பாராட்டுகளும், வாழ்த்துகளும், நன்றியும்.
நீக்குஉங்களுக்குத்தான் முதலில் பரிசு தரணும் ஸ்ரீராம். இத்தனை தொந்தரவுகளுக்கு நடுவில்
நீக்குநீங்களும் கௌதமன் ஜியும் அயராமல் பாடுபடுகிறீர்கள்.
எல்லா வளமும் பெற வேண்டும்.
அனைவருக்கும் வரும் தைத் திரு நாள், போகி
பதிலளிநீக்குஎல்லாம் நன்மை கொண்டு வரட்டும். இனிய பொங்கல் தின வாழ்த்துகள்.
நன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குவாக்சின் பற்றி கொஞ்சம் யோசனையாகத் தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஇங்கே நடக்கும் தொந்தரவுகள் முடிந்து அமைதி வந்து
எங்கள் முறை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் வாக்சின் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தகவல்... பிரிட்டன் கொரோனா தவிர மூன்றாவது வகையாக ஜப்பான் கொரோனா ஒன்று நேற்று கண்ணில் பட்டுள்ளதாம்!
நீக்குயாராவது கீதா சாம்பசிவம் மேடத்தை சரியா ப்ரார்த்தனை செய்யச் சொல்லுங்கப்பா. அவங்க எப்போப் பார்த்தாலும் கொரோனா ஒழியட்டும்னு மட்டும் ப்ரார்த்தனை பண்ணறாங்க போலிருக்கு. கொரோனா போய், கொரோனா 2.0 வந்துடுச்சு. இப்போ ஸ்ரீராம் சொல்றதைப் பார்த்தால் கொரோனா 3.0 வந்துரும் போலிருக்கு.
நீக்குஅவர்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை பண்ணுவது பெரிய ரங்ஸ்க்கு கேட்கலை. கோயிலுக்கு போனால் தான் சரியாகும் போல.
நீக்குJayakumar
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஎங்கும் நலம் வாழ்க...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குwelcowme to one and all
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம்.
நீக்கு// welcowme // பசுவுக்கும் நல்வரவு!
நீக்குஹாஹாஹா, அந்தப் பசு டெல் கணினியில் மட்டும் அப்படித்தான் வருது. இதையே நாலைந்து முறை தட்டச்சியும் ஒவ்வொரு முறையும் பசு வரவே கடைசியில் விட்டுட்டேன்! :( மறுபடி அதில் முயற்சி செய்து பார்க்கணும்.
நீக்குproblem in typing. :(
பதிலளிநீக்குஏன் என்ன ஆச்சு? கண் படுத்துகிறதா?
நீக்குகண்ணெல்லாம் இல்லை. அந்த டெல் கணினியில் மவுஸ் நிற்காமல் ஓடுகிறது. என்னென்னவோ வார்த்தைகள், எழுத்துகள், குறியீடுகள் எல்லாம் வருகின்றன. இங்கே தட்டச்சினால்>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இப்படியே வருகிறது.
நீக்குஅனைவருக்கும்
பதிலளிநீக்குதைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகளுடன்!..
நன்றி துரை செல்வராஜூ ஸார்... உங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குஆனந்தப் பொங்கல் எங்கும் பொங்கட்டும்..
பதிலளிநீக்கு'ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட....' என்கிற யேசுதாஸ் குரல் காதில் விழுகிறது!
நீக்குகேள்வி, பதில் எல்லாம் படிச்சேன். புள்ளி விபரங்களோடு யார் முதல், யார் இரண்டாவது எனச் சொன்ன கௌதமன் சாருக்குப் பாராட்டுகள். இன்றைய தினம் பழையன கழியும்போது பழசான கொரோனாவும் சேர்ந்து கழிந்து ஒழிந்து போகட்டும்.
பதிலளிநீக்குஆம், அப்படியே ஆகட்டும்.
நீக்குகாலையில் பல கேள்விகளுடன் கேள்வி கேட்கும் மனோநிலையில் வந்தேன். கணினி படுத்தலால் முடியவில்லை. அப்புறம் இந்தக் கணினியை எடுத்தாலும் குஞ்சுலு வந்து விட்டது. அதோடு வேலைகளும்!
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும். பிறகு வருகிறேன். கேள்வி பதில் நன்று
பதிலளிநீக்குகதை, சமையல் குறிப்புகள் எழுதி எபிக்கு வலு சேர்த்தவர்களுக்குப் பாராட்டுகள்.
நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் இன்றைய நாள் பழையன கழிந்து புதியன புகும் நாளாக கருதப்படும் போகி வாழ்த்துக்கள்.
மேலும் அனைவருக்கும் நாளை வரும் பொங்கல் தின அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அனைவரின் வாழ்விலும் இனிதான பொங்கலைப்போல், நல்லவைகள் நடந்து வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் திகட்டாத இனிதானவையாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது. கேள்விகள் கேட்ட சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கும், சகோதரர் நெல்லைத் தமிழருக்கும், கேள்விகளுக்கெல்லாம் திறமையுடன் பதிலளித்த எ.பி ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.
எ.பியின் திறமையான பங்களிப்பானவர்களின் மத்தியில், அணிலாக வந்த/வரும் என்னையும் கெளரவித்த கெளதமன் சகோதரருக்கு என் மனமார்ந்த பணிவுடன் கூடிய நன்றிகள்.🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குகமல் அங்கிள், ரஜினி சித்தப்பா என்றால் அவர்கள் இருவரும் மைத்துனர்கள் உறவு முறையா ? விளக்கம் கொடுக்கவும்.
பதிலளிநீக்குஏஞ்சல் பதில் சொல்லட்டும்.
நீக்குhaaahaaa :)
நீக்குசித்தப்பா என் அப்பாவின் ஒன்று விட்ட தம்பி :)அங்கிள் எங்கம்மாவின் ரெண்டுவிட்ட தம்பி :)))))))))
அடடே நல்ல உறவு வாழ்த்துகள்.
நீக்கு:))))
நீக்குஇன்னமும் கோவிட் தன் விளையாட்டை முடிக்கவில்லை... அதற்குள் அவசர வாக்சின்...!
பதிலளிநீக்கு//அவர்களுடைய choice ல விட்டுவிடுவேன்// - ஹா ஹா.... இது என்ன புதுவிதமா இருக்கு? யார் என்னைக் கூட்டிக்கொண்டு சென்றாலும், எனக்குத் தேவையானதை நான் ஆர்டர் செய்வேன். அவர்கள், இது இங்கு சூப்பர் என்று சொன்னால், அது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றினால் ஆர்டர் செய்வேன்.
பதிலளிநீக்குகூப்பிடுபவர்கள் ஏன் கூப்பிடுகிறார்கள் என்பதுதான் சிக்கலான விஷயம்.
நீக்குஆமோதிப்பு = காரிய சித்தி..
பதிலளிநீக்குஆமோதிப்பு > காரிய சித்தி..
ஆமோதிப்பு !?..
ஆ !!
நீக்குகோவிட் வேக்சின் - என் அபிப்ராயம்...இவ்வளவு அவசரமாக இதற்குத் தீர்வு தேவை இல்லை. அரசுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த இந்த கேடகரி மட்டும் வேக்சின் போட்டுக்கொள்ளணும் என்று வரிசைப்படுத்த வேண்டும். ஓசியில் இதனை வழங்கக்கூடாது.... பெரும்பாலும் தகுதியில்லாதவர்களே அதனால் பயன் பெறுவதால்.
பதிலளிநீக்குவேக்சின் வருவது, இன்னும் ஆபத்து. ஒரு பயலும் மாஸ்க் போட்டுக்கொள்வதோ இல்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோ நடக்கப்போவதில்லை.
காலத்தின் கோலம் !!
நீக்கு//இந்த இந்த கேடகரி மட்டும் வேக்சின் போட்டுக்கொள்ளணும் என்று வரிசைப்படுத்த வேண்டும். //
நீக்குஅச்சோ இங்கே 80 வயதுக்கு மேற்பட்ட அதாகப்பட்டது தைமகள் போன்றோரும் அடுத்தது ஹெல்த் கேர் செக்டரில் இருக்கும் என் போன்றோரும் முதலில் வேக்சின் போடணும் .PriorityRisk groupஎன்று ஒன்றும் சொல்லலையா அங்கே ?
:))))))
நீக்குஇவ்வருடமும் அதிக சிறுகதைகளை எழுதியதற்கு எபியும் அன்பிற்குரிய வாசகர்களுமே காரணம்..
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும்!...
உங்களுக்கும் எங்கள் நன்றி.
நீக்குகோவிட் வாக்சின் பற்றி இப்போது எந்தக் கருத்தும் சொல்ல முடியலை. நாங்கள் இருவர் மட்டும் ஓட்டலுக்குப் போனால் எனக்குப் பிடித்ததையே கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன். மற்றவருடன் போனால் போகிறவர்களைப் பொறுத்து இருக்கிறது. பிள்ளை, பெண்ணுடன் போனால் நம் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுக்கலாம்.
பதிலளிநீக்குநல்ல அணுகுமுறை !
நீக்குஅதிகக் கதைகள், அதிகப் பார்வையாளர்கள் என்ற வரிசைகளில் முதலிடம் பெற்ற துரைக்கு வாழ்த்துகள். கமலாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வருடம் தொடர்ந்து பல கதைகள் எழுதி முதலிடமும் பிடிக்க வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துகள். ( ஏற்கெனவே து செ - நிறைய துண்டு போட்டு வெச்சிருக்கார. அவரை நீங்க பீட் செய்யவேண்டும் என்றால், அடுத்த முப்பது நாட்களுக்குள் இருபது கதைகள் எழுதி அனுப்பினால் வாய்ப்பு உண்டு.)
நீக்கு1.நாத்திகம் என்பது "கடவுள் இல்லை" என்னும் மறுப்பா? அல்லது மூட நம்பிக்கை ஒழிப்பா?
பதிலளிநீக்கு2.ஆத்திகம்/நாத்திகம் இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு?
3. ஆன்மிகம் வேறே ஆத்திகம் வேறே என்பது சரிதானே?
4. ஆன்மிகவாதி நாத்திகம் பேசினால் எடுபடுமா? இல்லை எனில் அவருடைய பக்தியை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டுமா?
5. பொதுவான கருத்து மனித நேயம் இருந்தால் அவர்கள் நாத்திகவாதிகளாகவே இருப்பார்கள் என்றும்/ கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர்கள் மனித நேயம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா?
6. கடவுளைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
பதில்கள் அளிப்போம்.
நீக்குஆஆஆஆஆஆ கீசாக்காவுக்கு இன்னும் டவுட்டுகள் இருக்கோ:)).. கீசாக்கா பேசாமல் நாத்திகத்துக்கு மாறிடுவோம் வாங்கோ:)).. ஹையோ ஏன் எல்லோரும் கலைக்கினம்ம்ம்ம்:))
நீக்குஆ -> நா ; நா -> ஆ எல்லாம் செய்வதற்கு ஆ வும் நா வும் அரசியல் கட்சிகளா என்ன!
நீக்குஇந்த வாரத்தின் கேள்வி பதில்கள் சுவாரசியம். புள்ளிவிவரங்கள் தொகுத்துத் தருவது சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :)
பதிலளிநீக்குவித்தியாசமான கேள்விகள் கேட்டதற்கு எங்கள் நன்றி.
நீக்கு///அதிகம் பேர் படித்த சமையல் பதிவு : கத்தரிக்காய் பனீர் பிரட்டல் - அதிரா ரெஸிப்பி https://engalblog.blogspot.com/2020/01/blog-post_13.html
பதிலளிநீக்கு//
மேளதாளத்துடன் Ben Nevis மலைஉச்சிக்கேறி அந்த கத்திரிக்காய் போஸ்ட் முதலிடத்தை பிடிச்சதுக்கு வாழ்த்துக்களை அறிவிக்கிறேன் தெரிவிக்கின்றேன்
ம்ஹூம்ம் நான் ஏற்கனவே ரெண்டு தோடு போட்டிட்டேன்ன்.. அப்பா அம்மா குத்திவிட்டதொண்டு மீயாகக் குத்தியதொண்டு:)).. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)).. ஒரு ஸ்கொட்லாந்து மலையில ஏறவே ஒராளுக்கு தலைசுத்துதாம் இதில ஒம்.....பேது மலை தாண்டி பென் நேவிஸ் கேய்க்குதாம்ம்ம்ம்ம் கர்ர்ர்ர்:))
நீக்குஹா ஹா ! இப்போதான் கச்சேரி களை கட்டுது !
நீக்குமற்ற பதில்களுக்கு மற்றும் & கேட்ட சில துணை கேள்விகளுக்கு அப்புறம் வரேன்
பதிலளிநீக்குநன்றி. வாங்கோ!
நீக்குஆஆஆஆஆஆஆ வழிவிடுங்கோ வழிவிடுங்கோ.. அஞ்சு அஞ்சு மணி ஜாமத்தில என்னை எழுப்பிச் சொல்லிட்டா அதிரா உங்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசெல்லாம் தரப்போறாராம் கெள அண்ணன் ஓடுங்கோ ஓடுங்கோ என. அதனால கொரோனா லொக் ரவுனையும்.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே லொக்டவுனையும் கவனிக்காமல் பியூட்டிப் பாலர் போய் லிப்ஸ்ரிக்கெல்லாம் போட்டு வந்தேனா.. வழியில மாஸ்க் கட்டும்போது அது அழிஞ்சு முகமெல்லாம் சொவந்து போச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா இப்போ அதுவா முக்கியம்.. கெள அண்ணன் நான் என்வலப் வாங்கிறதுக்கெல்லாம் கூச்சப்படமாட்டேனாக்கும்:).. நீங்களும் என் பரிசைக் கூச்சப்படாமல் மேசைக்குக் கீழாலயோ மேலாலயோ தாங்கோ:)).. ஆனா ஒண்ணு அஞ்சுட கண்ணில மட்டும் பட்டிடக்கூடாது:)).. கொண்டுவா பிளெண்டர் வாங்கப்போறேன் என மிரட்டுவா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குபரிசா !! நான் சொன்னேனா ?
நீக்குசில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பித்துக்கொண்டது போல தோன்றுகிறதே(எந்த சில கேள்விகள் என்று நீங்களே சொல்லி விடுங்கள் என்று பதில் வருமே)
பதிலளிநீக்குஎந்த சில கேள்விகள்?
நீக்குசென்ற வருடத்தில் அதிக சமையல் குறிப்புகள் அனுப்பியது நான் என்று தெரியும். இரண்டாம் இடத்தில் கீதா ரங்கன் வருவார் என்று நினைத்தேன். ரமா ஶ்ரீனிவாசனா? மொத்தமாக மத்யமரில் மூழ்கி விட்ட அவரை மீட்டுத்தரச் சொல்லி நேர்கொண்ட பார்வையில் பஞ்சாயத்திற்கு போகலாமா?
பதிலளிநீக்குஆ ! அப்படி ஒரு வழி இருக்கா! பார்ப்போம்!
நீக்குஆஆங்ங்ங் பொயிண்டுக்கு வந்திட்டேன்ன்ன்ன். இதை வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்போல இருக்கெனக்கு:))... ஆனாலும் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. என் மனக்கருத்தைச் சொல்லிடுறேன்ன்.. இதுபற்றி நெல்லைத்தமிழனும் அடிக்கடி பேசுவார் அப்போதெல்லாம் நான் இக்கருத்தைச் சொல்லோணும் என நினைச்சு விட்டுவிட்டேன்ன்.. சரி சரி எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காது:) அதனால ஸ்ரெயிட்டா விசயத்துக்கு வாறேன்ன்:))
பதிலளிநீக்கு//1, எதிர்மறை விஷயங்கள் செய்திகள் எதுவும் சிலருக்கு பார்க்கவோ கேட்கவோ பிடிப்பதில்லை இதன் காரணம் என்னவா இருக்கும் ? ///
# "கண்ணே நல்வாக்கு நீ சொல்லடீ" எனும் சென்டிமென்ட்டுக்கு எதிர்த்துணை உணர்ச்சி. பிடித்ததை நாடுவதும் பிடிக்காததை ஒதுக்குவதும் மனித இயல்பு./////
பதில் கரெக்ட்.. நாம் எல்லோருமே.. நல்லதைத்தான் விரும்புகிறோம், நல்லதை அழகானதைப் பார்த்தாலோ கேட்டாலோ மகிழ்ச்சியடைகிறோம்... அதில் தவறில்லை..
///& இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று///
இதுவும் கரெக்ட் தான்...
ஆனா இரு பதில்களும் என் கணக்குப்படி இரு கோணத்தில் இருக்கிறது... இதுவும் கரெக்ட் தான்..
ஆனா இது நாம் அடுத்தவர்களுக்குச் செய்வது பற்றித்தான் சொல்லப்படுகிறது, நாம் செய்வது சொல்வது நல்லதாக இருக்கோணும் எனத்தான் சொல்லப்படுகிறது..
ஆனா நாம் நம் காதுகளில் நல்ல விசயங்கள் மட்டும்தான் கேட்கோணும், கூடாத விசயங்கள் சொல்லுமிடத்தில் இருக்கக்கூடாது, அவற்றைக் கேட்டிடக்கூடாது என ஒதுங்கி ஓடுவது சரியென நான் சொல்ல மாட்டேன்.
இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை, அப்படி இருக்கையில் நாம் எப்பவும் நல்லதையே நாடிக்கொண்டிருந்தால், ஒரு சமயம் கெட்ட விசயம் ஒன்று அறியும்போது, அதைத்தாங்கும் சக்தி நமக்கு இல்லாமலே போய் விடுமெல்லோ. அதனால யார் என்ன சொன்னாலும் பேசினாலும் கேட்கோணும், பின்பு நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் பதிக்கலாம்.. இப்படித்தான் நான் நினைப்பதுண்டு..
இன்னொன்று சிலர் தன்னை அறியாமல், தான் நல்லது பேசுகிறேன் என நினைச்சே ஒரு விசயம் பேசும்போது, அது நமக்கு எதிர்மறையாகத் தெரியலாம்... ஆனா அதுக்காக அவரை விட்டே ஒதுங்கிவிடுவது நல்ல செயல் என நான் சொல்ல மாட்டேன்,
ஆனா நாம் அடுத்தவருக்க்கு எப்பவும் நல்லதையே சொல்லோணும் நல்லதையே செய்யோணும் என நினைப்பது தவறில்லை, அதை நாம் செய்யலாம், ஆனா அடுத்தவரும் அதையேதான் செய்யோணும், அப்படி இருக்கும் இடத்தில் மட்டுமே நான் இருப்பேன் எனச் சொல்வதை என் மனம் ஏற்றுக்கொள்வதில்லை... அது அப்படி இடங்களில் நாம் அன்னம்போல வாழ்வது நல்லதென நினைப்பேன்...
என் கருத்தில் தப்பு இருக்கலாம் இருப்பினும்.. கருத்தை சொல்வதுதான்.. முக்கியமெல்லோ ஜொள்ளிட்டேன்ன்:))
இதுவும் கரெக்ட்தான்!
நீக்குகீதா அக்காவின் கடைசி கேள்வியை படித்தவுடன், எப்போதோ படித்த சவீதாவின்," இயற்கையை வெறுக்கிறேன்
பதிலளிநீக்குதொட்டபெட்டாவிற்கு மேல்
குவிந்து கிடக்கும்
மேகத் துணுக்குகளுள்
ஒன்றை
சஹாராவிற்கு இரவல் தர விரும்பாத
இயற்கையை வெறுக்கிறேன்
கடவுள் என்பவன்
கண்முன் வந்தால்
காலரைப் பிடித்து
நீதி கேட்பேன்"
என்னும் புதுக்கவிதை நினைவுக்கு வந்தது.
நல்லா இருக்கு ! நன்றி.
நீக்கு///2, The Greatest Showman இந்த ஆங்கிலப்படத்தை தமிழில் ரிமேக்கினால் யார் அந்த Hugh Jackman கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் ?//
பதிலளிநீக்கும்ஹூம்ம்.. தியேட்டரே திறக்க முடியல்லியாம்ம்.. இதில கி மு நாக் காலக் கிளவியை:) எல்லாம் தூக்கி வந்திருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்:)).. கொரோனாவுக்கு வேப்பிலையோ? மஞ்சளோ? எது முக்கியம் எனக் கேட்ட்டிருந்தால் பொன்னாடை போர்த்தியிருப்பேனாக்கும்:)) ஹா ஹா ஹா
ஹலோவ் தையதக்கா மகள் :) எதுக்கு தியேட்டர் ?நான் மாறாவையே அமேஸான் பிரேமில் பார்த்திட்டேன் .நெட்ப்ளிக்ஸ் லாம் ஏத்துக்கிருக்கு :) இன்னும் அப்டேட் ஆகாத தைமகள்
நீக்குஅதானே!
நீக்குஅல்லோ மிஸ்டர் அஞ்சு... உங்களுக்கு யூ ரியுப் ஒண்ணூஊஊ இருக்குதென அறிமுகப்படுத்தி:) இப்போ அதுக்கு அடிமையாக்கிவிட்டது இந்தக் கொட்டிஸ் சுனாமி:) தான் என்பதை மறந்திட்டீங்க கர்ர்:))..
நீக்குகெள அண்ணன் இப்போ ஓடிவந்து கேளுங்கோ அதானே! என:))
///9, திருப்தியடைதல் / போதும் என்ற மனம் என்பது சிலருக்கு மட்டும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கே அது ஏன் ?//
பதிலளிநீக்குபிள்ள தனைப்பற்றிக் கேய்க்கிறா போல இருக்கே:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. பாருங்கோ நான் என் கத்தரி பன்னீரிலயே திருப்தியாகிட்டேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா
//10, சில விஷயங்கள் தவறு ஆனாலும் சிலநேரம் சரியாக மனசுக்கு தோணும் அப்படி உங்களுக்கு தோணியிருக்கா ? //
பதிலளிநீக்குநிறையவே...:)) அதாவது அஞ்சுட பாங் கார்ட், பின் நம்பர் கேட்பது தவறான விசயம்தேன்ன்:)).. ஆனா என் மனசுக்கு அப்பூடிக் கேய்ப்பது சரியாகவே தோணுதே:))
அதிலொன்னும் பிரச்சினையில்லை தை மகள் நான் பணமே போடாம ஒரு அக்கவுண்ட் வச்சிருக்கேன் அந்த நம்பரை கொடுப்பேன்
நீக்குநல்ல counter !!
நீக்கு11, உலகமே பயத்துடன் அடுத்த நாளை எப்படியிருக்குமோ என எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் சென்னை சினிமா தியேட்டர்கள் திறப்பது அத்யாவசியமா ??
பதிலளிநீக்குசென்னையிலும் பீதி தான்.. ரிலீசாவுற படங்களைப் பாத்தா..
/// ரிலீசாவுற படங்களைப் பாத்தா..//
நீக்குசொல்லுறதை டெலிவாச்:) சொல்லோணும்:)).. படங்களைப் பார்ட்த்ஹோ இல்லை நடிகைகளைப் பார்த்தோ?:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. கெள அண்ணன் என் பரிசைத்தாங்கோ மீ ஓடிடுறேன்ன்:))
எச்சூஸ்மீ மியாவ் நீங்க அண்ணாத்த படத்தோட ரிவ்யூ எழுதுங்களேன் ப்ளீஸ்
நீக்குஆஆஆஆஆஆ அஞ்சு லாண்ட் ஆனதாலதான் பூமி அதிர்ச்சியால என் ரீ ஊத்துப்பட்டுதோ ஆவ்வ்வ்வ்வ்:)).. ஐயா ஜாமி மீ ஒரு நல்ல பொண்ணு.. மீ ஓடிடுறேன்ன்:))
நீக்குஹா ஹா ஹா !
நீக்கு//நெல்லைத்தமிழன் :
பதிலளிநீக்கு1. நமக்குச் சம்பந்தமில்லாதவரது மரணம் நம்மை பாதிப்பது ஏன் ? ///
100 வீதம் பலருக்கும் இக்கேள்வி பொருந்தும், ஆனா அது நமக்கு சம்பந்தமில்லாவிடினும் நாம் அந்த சம்பவத்துள் ஒன்றிப்போய் அதுபற்றி நம் மனதில், நம்மவர் போல ஒன்றி விடுவதினாலதான் நமக்கு அது பெரிதாக தெரிகிறது.[இதில ஒரு சம்பவம்.. இப்போ நாம் புளொக்குகளில் கும்மி அடிக்கிறோம், இதைப் பலர் தொடர்ச்சியாகப் படிச்சுக் கொண்டிருக்கலாம், அதனால அவர்களுக்கு நாம் சம்பந்தமில்லாவிடினும் நெருங்கியவர் ஆகிடுவோம், இத்தனைக்கும் நமக்கு அவரை தெரியாது, ஆனா நமக்கொன்று நடக்கும் பட்சத்தில் அவர் நிட்சயம் கவலைப்படுவார்].. முபு ஒரு தடவை அப்படித்தான், ஒரு நண்பி வந்து, அதிரா எங்கே உங்களைக் காணவில்லை, உங்கள் கொமெண்ட்ஸ் படிக்காமல் மிஸ் பண்ணினேன் தெரியுமோ என்றா, எனக்கு தூக்கிவாரிப்போட்டது, ஏனெனில் அவவை எங்கும் நான் பார்த்ததில்லை.. தெரியாது..[நான் சொல்வது கொமெண்ட்ஸ், எழுத்துக்களில்].
இன்னொன்று அநியாய மரணங்கள் நடக்கும்போதும் நம் மனம் கலங்குகிறது.
நேற்று அறிஞ்ச ஒரு கதை, இது கனடாச் சம்பவம்.. நம் நாட்டினர்தான்.. கணவருக்கு பிறந்ததினமாம், மனைவி அவருக்கு சேபிறைஸ் பேர்த்டே பார்ட்டி வைக்க எண்ணி, இப்போ கொரோனா லொக்டவுன் என்பதனால, தன் சகோதரங்களை மட்டும் இரகசியமாக வீட்டுக்கு அழைச்சிருக்கிறா.. அவர்களும் வந்திருக்கின்றனர், கணவர் வேலைக்கோ எங்கென சரியாக தெரியவில்லை.. அந்நேரம் பார்த்து ஆரோ அறிவிச்சு, பொலீஸ் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள்..
பின்பு வீட்டுக்கு வந்த கணவருக்கு, பார்ட்டியை விடப் பொலீஸ் வந்தது பயங்கர கோபமாகி, ரென்சனாகி, இந்நேரம் உனக்கொரு சேபிறைஸ் பார்ட்டி தேவையோ என ஓங்கி அடிச்சிருக்கிறார் மனைவியை, அது அடி பலமா.. இல்லை, அடிச்ச வேகத்தில கீழே விழுந்து அடிபட்டுதோ.. சரியாக தெரியவில்லை, மனைவி அதிலேயே இறந்திட்டாவாம்.. வயசு 40-45 என்றனர்... அப்போ இதைக் கேட்கும்போது மனம் கலங்கத்தான் செய்கிறது, கொரோனாவுக்குத் தப்பினாலும் விதி நம்மை விடாது:(.
அப்போ மனைவி ஆசையாக கணவருக்கு பார்ட்டி செய்ய நினைக்கப் போய்.. ஒரு உயிரே போய் விட்டதே... நன்மைக்குக் காலமில்லையோ???
அச்சோ பாவம் ..உண்மையில் அந்த மனைவி மீதுதான் தவறு ..இது pandemic காலம் எனும்போது இந்த அனாவசிய சர்ப்ரைஸ் தேவையா ?.
நீக்குஇது அந்த கணவருக்கும் எதனை மன உளைச்சலை தரப்போகுது ..வாழ்நாள் முழுக்க இது அவரை குத்தும் :(
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன அஞ்சு இது, ஒரு விருப்பத்தில வீட்டுக்குள்ள செய்ய நினைச்சா, அது தப்புத்தான் இருப்பினும் கணவர் அடிச்சது எப்படி சரியாகும்... திட்டியிருக்கலாம், சிலர் ஆ எண்டாலும் ஊ எண்டாலும் கையை ஓங்குவதினாலதான் இப்படித் தண்டனையே...
நீக்குஉண்மை அன்பெனில், எனக்காகத்தானே செய்தாய் என நினைச்சு, மனைவிக்கு சப்போர்ட் பண்ணியிருக்கலாம் , நீ பொலீஸ் வந்ததுபற்றிப் பயப்படாதே, பணம் கட்டலாம்... நான் இருக்கிறேன் என..
சில நல்லவர்களாக இருப்பார்கள் ஆனா ரென்சனாகிவிட்டால் என்ன பண்ணுகிறோம் எனத் தெரியாமல் பண்ணிடுவார்கள்... இந்த குடும்பத்தில் இருவரும் பாவம் எனத்தான் நான் சொல்வேன்ன்.. இதைத்தான் விதி என்கிறோம்.
மியாவ் நீங்க சொல்றது உண்மைதான் ..பொதுவா பெண்கள் அனைவருக்கும் திருமணமான ஒரு வருடத்திலேயே கணவர் பற்றிய ஒரு அனுமானம் ஏற்பட்டிருக்கும் .அப்படி இருக்கும் பட்சத்திலார்வக்கோளாறில் செய்யப்போகத்தானே இப்படி ஏற்பட்டது :( அக்கனவர் மூக்குமேல் கோபத்தை சுமப்பவர்னு நினைக்கிறேன் .சில ஜந்துக்கள் அப்படிதான் கெட்ட வார்த்தை கைநீட்டல் என்று மூர்க்கர்களாக இருக்காங்க .அதனால்தான் பெண்கள் கொஞ்சம் யோசிச்சு செய்யணும்னு சொன்னேன் .
நீக்குஉண்மைதான் //அந்த நான் இருக்கிறேன் //என்ற வார்த்தை மலையையும் தகர்க்கும் ..மிஞ்சிப்போனா 200 டொலர் வந்திருக்குமா fine :( உயிரின் விலை இதுவா ?
நீக்குஆனா பொதுவாவே அன்பான புரிதலுள்ள மனைவியும் கணவனும் அமைவது இறைவன் கொடுத்த வரம் .அந்த வரம்.
நீக்குஅந்த கம்ப்ளெயிண்ட் கொடுத்தோரின் மனநிலையும் மோசமானதாய் இறுக்கும் இப்போ
நீக்குதைமஅ குறிப்பிட்டது கொடூர சம்பவம். அன்புக்குத் தண்டனை துர்மரணம். துக்கம். இப்படியெல்லாம் வேதனைகள் எங்கும் நிகழ்ந்துவிடாது ஆண்டவன் அருளுவானாக.
நீக்குமனம் கலங்கத்தான் செய்கிறது. என்ன மனிதர்கள் !
நீக்குஅதிர்ச்சியான செய்தியா இருக்கே அதிரடி! :(
நீக்குஅதிர்ச்சிதான் .. கவலைதான்.. ஆனா விதி தவிர வேறேது, கணவர்கூட ஒருநாளும் அடிக்காதவராகக்கூட இருக்கலாம், சிலருக்கு பொலீஸ் கோர்ட் கேஸ் எனில் படு ரென்சனாகிடுவினமெல்லோ.. அப்படி ஒரு ரென்சனில் தன்னிலை மறந்து கை ஓங்கியிருப்பாரோ எனவும் யோசிக்கிறேன்..
நீக்குஎன்னவாயினும் போனது போனதுதானே..
//2. எந்த ஒரு துக்க நிகழ்வும் வெகு சீக்கிரமே நம் மனதால் மறக்கப்பட்டு அதன் தாக்கம் போய்விடுவது எப்படி? //
பதிலளிநீக்குஇது தப்பு... வெளித் துக்கம், தெரியாதோர் மரணம் மறக்கப்படலாம், ஆனா நம் உறவுக்குள் நெருங்கியவர்கள் எனில் அது எப்படி மறக்கப்படும்? தாக்கம் இருக்காது என ஈசியாக சொல்ல முடிகிறது உங்களால்?..
அது நாமும் கூடவே இறந்திட முடியாது, நம் ஸ்ரேசன் வரும்வரை வாழத்தான் வேணும் என்பதால், அதனை நினைப்பதைக் குறைத்து, வேறு விசயங்களில் மனதை செலுத்துகிறோம்.. மரணம், இழப்பு என்பது எப்பவும் நீறு பூத்த நெருப்புத்தானே தவிர, நெருப்பு அணைஞ்சு கரியாகிடாது.. அது நாம் இறக்கும்போதுதான் கூடவே இறக்கும்...
எவ்வளவோ மறந்ததுபோல இருந்தாலும் சிரித்துப் பேசினாலும் பிரியாணி சாப்பிட்டாலும், இரவு கனவில் அப்பா வந்திட்டார் எனில், அடுத்த நாள் முழுக்க மனம் கனக்கும்.. பழைய நினைவுகளுக்கும் மனம் புகுந்து துன்பப் படுவதை மறக்க, மீண்டும் நாட்கள் ஓட வேண்டும்..
“நாள் செய்வதுபோல, நல்லோர் செய்யார்”...
நீங்கள் சொல்வது யோசிக்க வைக்கிறது.
நீக்கு///3. ஒரு நண்பர், உங்களை வாங்கன்னு ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றால் நீங்கள் முதலில் ஆர்டர் செய்வது எது?
பதிலளிநீக்கு# சூடாக பஜ்ஜி/போண்டா/வடை. குடிக்க வெந்நீர்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈ:)).. ஸ்கொட்லாந்தில ஒரு ஹோட்டேலையும்.. பஜ்ஜி போண்டா ஓடரையும் நினைச்சேன்ன்.. கையில இருந்த சூடான ரீயைக் கீ போர்ட்டில ஊத்திட்டேன் ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))...
முதல்ல மெனுவைப் பார்க்கோணும் என்ன இருக்குதென:), பின்பு செலக் பண்ணோணும் பின்புதானே ஓடர் கொடுக்கலாம்:)) ஹா ஹா ஹா...
தமிழ்நாட்டில் பஜ்ஜி / போண்டா / வடை இல்லாத ஹோட்டல்கள் மிகவும் கம்மி.
நீக்கு///5. என்ன வாங்கிக்கொடுத்தாலும் என்ன செய்தாலும் திருப்தி அடையாதவர்கள் பெண்கள் என்று உபநிஷத்துகள் கூறுவதில் உண்மையுண்டண்டா//
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் ஆண்டவா இதைப் படிக்கவோ இன்று கொம்பியூட்டரை ஓன் பண்ணி புளொக் வந்தேன்.. விடுங்கோ என் கையை விடுங்கோ.. இதுக்கு மேலயும் இந்த உசிரு இந்த உடம்பில இருக்கோணுமோ?:)) மீ இப்பவே டீக்குளிக்கிறேன் தேம்ஸ் கரையில:) மசமசவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல் ஃபயர் எஞ்சினுக்கு அடிச்சு இந்த சுவீட் 16 ஐக் காப்பாத்துங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
இதில சும்மா இருக்கிற உபநிஸத்தை ஜெல்ப்புக்கு அழைக்கிறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அண்ணி இண்டைக்கு கிச்சின் அடைப்புச் செய்யுங்கோ.. டயட் பண்ணுவாருக்கும் நெ தமிழன் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...
இது போதாது. இன்னும் strong ஆ சொல்லணும்.
நீக்குநேற்றே கேட்கணும்னு நினைச்சேன். எந்த உபநிஷத்தில் நெல்லை சொல்லி இருக்கிறாப்போல் சொல்லி இருக்குனு ஆதாரங்களோடு நிரூபித்தால் நல்லது. இது நெல்லைக்கான பதில். அவர் தானே சொல்லி இருக்கார் உபநிஷத்துகள் சொல்லுவதாக.
நீக்குஅவர் வருவாரா ?
நீக்குவரணும், வந்தே ஆகணும்.
நீக்குஹா ஹா ஹா விடாதீங்கோ கீசாக்கா.. மீ உங்களுக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறேனாக்கும்:)).. அவர் காசிக்குப் போயிருப்பாரோ:))
நீக்குஎங்கே நெல்லை?
நீக்கு///அதிகம் பேர் படித்த சமையல் பதிவு : கத்தரிக்காய் பனீர் பிரட்டல் - அதிரா ரெஸிப்பி ///
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ் இந்தக் கறிக்கு எல்லோரும் ஓட ஓட விரட்டினீங்க என்னை:)), கத்தரியில பன்னீரோ என.. இப்போ தெரியுதோ அதிரா எப்பவும். டிபரெண்டாகவே இருக்கப் பிடிக்கும் செய்யப் பிடிக்கும் பேசப்பிடிக்கும் :).. ஹா ஹா ஹா இதுக்கு மேல இங்கிருக்க மாட்டென் ஓடிடுறேன்ன்.. ஆரையும் காணம் கம்பிமேல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
:)))
நீக்குகடவுள் என் முன்னே வந்தா நான் கேட்கும் கேள்விகள் :)) எல்லா கடவுளர்களும் மன்னிப்பார்களாக .இது ஜாலிக்காக எழுதிய பதில் :))நம்ம வழக்கப்படி குறைந்தது 12 கேள்வியாவது கேப்பேன்
பதிலளிநீக்கு1,எச்சூஸ்மீ நீங்க கடவுள்தானா? ஐடி கார்ட் காட்டுங்க ?எச்சூஸ்மீ உங்க வயசென்ன ?3, டியர் கடவுளே உங்களுக்கு காதல் தோல்வி அனுபவம் இருக்கா ?4,கடவுளே நீங்க சைட் அடிச்சிருக்கீங்களா ? நீங்க சிங்கிளா ? இல்லை கமிட்டடா ?5,மனுஷர் செய்ற தப்புக்கல்லாம் உங்கள எதுக்கு வையறாங்க ?அதுவும் ஐரோப்பியர் மோசம்பா கெட்ட வார்தைள்லாம் திட்டறாங்க அதுபத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ?6, டியர் காட் நீங்க முகப்புத்தகதில் இருக்கீங்களா ?7, உங்களுக்கு கனவுகள் வருமா ?8,எங்களுக்கு பயம் வந்தா உங்களை கூப்பிடறோம் உங்களுக்கு பயம் வந்தா யாரை கூப்பிடுவீங்க ?9, உங்க பேங்க் பேலன்ஸ் எவ்ளோ 10, கடவுளே உங்களுக்கு கொரோனா வந்துச்சா ?11, உங்களுக்கு கண் இருக்கா ? நிறையபேர் கடவுளுக்கு கண்ணில்லைங்கிறாங்க அதான் கேட்டேன் ?12,கடவுளே உங்களுக்கு மசாலாதோசை பிடிக்குமா இல்லை பூரி மசாலா பிடிக்குமா ?
எங்கள் பதில்கள் அடுத்த வாரம்.
நீக்குaaaaaaa w!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகடவுள் பதில் தரப்போறாரா ஆஆஆஆஆ !!!!
அச்சோ இது தெரிஞ்சிருந்தா கிம் கர்டாஷியன் kanye வெஸ்டலாம் ,பத்தி கேள்வி கெட்டிருப்பேனே :))
நீக்கு:)) பதில் அளிப்போம் என்று நான் சொன்னது கீ சா கேள்விகளுக்கு !!
நீக்குgrrrrrr :))))))))))))))))))))))) haahaa
நீக்குஎன்னாதூஊஊஉ அஞ்சு கேள்வி கேட்டிருக்கிறாவோ? நான் ஏதோ ஒரு பராக் கதை எழுதியிருக்கிறா எண்டெல்லோ நினைச்சேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
நீக்குகடவுள்: இதனால்தான் நான் வருவதில்லை. ஒருத்தி காலரைப் பிடித்து நீதி கேட்பாளாம், இன்னொருத்தி கன்னா பின்னாவென்று கேள்விகள் கேட்கிறாள்.. ஆளை விடுங்க ஜுட்!
பதிலளிநீக்குஹாஹாஹா :) பானுக்கா ..அவருக்கு பூமி வரும் ஐடியா இருக்கும்னு நினைக்கறீங்க :)
நீக்குகருணை உள்ளம் கொண்டவர்கள் யாவருமே கடவுள்தான்.
நீக்குஎல்லாவற்றையும் படித்தேன் ரசித்தேன் எங்கள் ப்ளாக் நட்புகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் அன்புடன்
பதிலளிநீக்குமிக்க நன்றி காமாட்சியம்மா .உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நீக்குகோவிட் வாக்சின் பற்றிய பயம் நிறையபேருக்கு இருக்குன்னு நினைக்கிறேன் .ஆனா போடுவதும் போடாததும் அவரவர் விருப்பம்தான் .எனக்கு முதல் டோஸ் போட்டாச்சு செகண்ட் டோஸ் இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் அலோகேட் ஆகலை
பதிலளிநீக்கு//முதல் டோஸ் போட்டாச்சு// அட! பரவாயில்லையே!
நீக்கு///அன்பே வா ' எம்ஜியார் போல போஸ் கொடுக்கிறார். ஆக, 'சி ர / அ க' இருவருமே இந்த கேரக்டருக்குப் பொருத்தம் இல்லை. //
பதிலளிநீக்குஅப்போ அ .சாமீ இல்லைன்னா அ .குமார் :)))))))))))))))) இவங்களும் எனக்கு பிடிக்கும்
அ சாமி நல்ல choice.
நீக்கு//10, சில விஷயங்கள் தவறு ஆனாலும் சிலநேரம் சரியாக மனசுக்கு தோணும் அப்படி உங்களுக்கு தோணியிருக்கா ?
பதிலளிநீக்கு# பல முறை அன்றாடம்.
& மீண்டும் அந்த சில விஷயங்கள் என்ன என்று சொல்லிடுங்க!//
ஓகே இன்றைய பின்னூட்டத்தில் நம்ம தைமகள் குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் கணவன் மனைவியை கேவலம் போலீஸ் வந்தாங்கன்னு அறையப்போக உயிர் போச்சே .அதை படிச்சதும் மனம் வன்முறையை நாடி அந்த கணவனை கையை உடைக்க தோணியது .இது தப்பு வன்முறை தீர்வல்ல என்றாலும் போன உயிருக்கு ஒரு சிறு நீதி நியாயம் ன்னு மனசுக்கு தோணுது .இதுக்காக என்னை யார் கையும் உடைக்க சொல்லிடாதீங்க நான் வெறும் வாய்ச்சொல் வீரி :)
// அதை படிச்சதும் மனம் வன்முறையை நாடி அந்த கணவனை கையை உடைக்க தோணியது// உடனடியாக அப்படித் தோன்றுவது இயற்கையே. ஆனால் நிச்சயம் அப்படி எல்லாம் செய்யமாட்டோம்.
நீக்குஉண்மைதான் . மனநலம் பாதிக்கப்பட்டோர் /மற்றும் உணர்ச்சிவசப்பட்டு காரியங்களை செய்வோரிடம் நாமும் உணர்ச்சிவசப்படுவது முறையல்ல
நீக்குmy one and only question for this week :))))))))
பதிலளிநீக்கு1, பாராட்ட ஆயிரம் முறை யோசிக்கும் சிலர் குற்றம்சாட்டும்போது கொஞ்சம் கூட யோசிப்பதில்லையே ? அது ஏன் ? ?
இதுவும் மை வன் அண்ட் ஒல்லி:)) கொஸ்ஸன்:))..கெள அண்ணன் அஞ்சுவுக்கு ஏன் கேள்வியாவே வருதாம்? எந்தக் கேள்விக்கும் விடை தெரியுதில்லையாமோ?:)) ஹா ஹா ஹா மீ ரன்னிங்:))
நீக்கு2,2, சிடுமூஞ்சி /சுடுமூஞ்சி ,முன்கோபி , திமிர் , அகங்காரம் ,இந்த மாதிரி கேரக்டர்ஸை எப்படி சமாளிப்பீர்கள் ?
நீக்குரெண்டு கேள்வி கேட்டுட்டேன் :)
நீக்கு//அஞ்சுவுக்கு ஏன் கேள்வியாவே வருதாம்? எந்தக் கேள்விக்கும் விடை தெரியுதில்லையாமோ?:))//
நீக்குஹ்ஹஹ்ஹா அந்த அக்கேள்வியாலேதான் வசமா மாட்டினேன் எங்கே எப்போன்னு சொல்ல மாட்டேனே :))ஆனா அதுக்கெல்லாம் அசையாது இந்த லண்டன் நரி :))
ஹா ஹா ஹா என்னாதூஊஊஊஊ லண்டன் நரியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. காட்டுநரியோ வீட்டில வளர்க்கும் நரியோ எனக் கொஞ்சம் ஜொள்ளுங்கோ பிளீஸ்ஸ்?:))
நீக்குகெள அண்ணன்... நரிக்குணம் என்றால் என்ன??:))
எங்கள் பதில்கள் அடுத்த வாரம்.
நீக்கு