இந்த 2021 ஆம் ஆண்டு, உலக மக்கள் எல்லோரும் எல்லா துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் ஆரோக்கியமும் அடைந்து மகிழ எல்லோரும் பிராரத்திப்போம்.
====
10 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தூசித்தட்டி, துப்புரவு வேலை செய்து அதே அலுவலகத்தில் தலைவர் நாற்காலியில் அமர்வார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். தலைவராக பொறுப்பேற்று நாற்காலியில் அமரும்போது, அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‛நான் 2011ம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். ரூ.2000 சம்பளம் வாங்கிய நான் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு ரூ. 6000 சம்பளம். எனது பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.' என்றார்.
= = = =
நினைத்ததை நடத்திக் காட்டும் நுட்பம்!
கணினிக்கும், மூளைக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஆராய்ச்சியில், 'பேஸ்புக்' ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடக்கும் இந்த ஆய்வில், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி, பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மைக் ஷ்ரோபெர், தம் அலுவலக கூட்டத்தில் பேசியுள்ளார். சில இணைய தளங்களிடம் அக்கூட்டத்தின் காணொளி காட்சிகள் கசிந்துள்ளது.
மூளைக்கும், கணினிக்கும் இடைமுகமாக ஒரு தலைக்கவசம் போன்ற கருவியை, பேஸ்புக்கின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதை அணிந்து கொள்பவரின் மூளையில் உதிக்கும் எண்ணங்களை, அக்கருவி கட்டளைகளாக மாற்றி கணினியின் மென்பொருளுக்கு தருகிறது. இதன் மூலம், விசைப் பலகை, சுட்டி போன்றவற்றை கையால் இயக்காமல், வெறும் எண்ணத்தின் மூலமாகவே கருவிகளை இயக்க முடியும்.
“இந்த தொழில்நுட்பத்தை பெருவாரியான மக்கள் ஏற்கும் வகையில் உருவாக்கி, அறிமுகப்படுத்த வேண்டும்” என, மைக் ஷ்ரோபெர், அந்த சந்திப்பில் பேசியிருக்கிறார்.
= = = =
முதுமையை ஒத்திப்போடும் ஆராய்ச்சி.
உடலுக்கு வயதாகும் வேகத்தை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில், ஒரு விந்தையான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த, 50 ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்குத் தரப்படும் ஒரு மாத்திரையில், 'மெடோலாசோன்' என்ற வேதிப்பொருள் உள்ளது. இதற்கு, மனித செல்களின் சேதாரமடையும் தன்மையை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக, ஜப்பானிலுள்ள ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மெடோலாசோனை, ஆய்வகத்தில் சில வகை புழுக்களுக்கு கொடுத்த போது, அவற்றின் செல்கள் சேதாரமடையும் வேகம் வெகுவாக குறைந்தது. அதாவது அந்த புழுக்கள் மூப்படையும் வேகம் குறைந்து, இளமை நீடிப்பது தெரியவந்தது.
இதே போன்ற ஒரு மாற்றத்தை, மனிதர்களின் உடலிலும் கொண்டுவர முடியும் என, ஒசாகா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வயதாவது ஒரு நோய் அல்ல என்றாலும், வேகமாக மூப்பு எய்தும் வேகத்தை குறைப்பதன் மூலம், மூப்பினால் வரும் பிற உடல்நலக் குறைகளை தவிர்க்க முடியும். மேலும், இளமைத் தன்மையை சற்று நீட்டிக்கவும் முடியும் என்பது ஒரு போனஸ்தானே?
= = = =
பசையாகும் பிளாஸ்டிக் குப்பை!
வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், 'மேற்சுழற்சி' செய்ய முடியுமா? முடியும். பிளாஸ்டிக்கை மேற்சுழற்சி செய்து, பசைகளை தயாரிக்க முடியும். இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
உலோகங்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட புதிய பொருட்களை உருவாக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தால், முன்பு இருந்ததைவிட மதிப்புக் குறைந்த பொருட்களையே உருவாக்க முடியும்.
இந்த சிக்கலை தவிர்க்கிறது 'அப்சைக்கிள்' எனப்படும் மேற்சுழற்சி முறை. இந்த முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கிலிருந்து, பாலிஎத்திலினை பிரித்தெடுத்து, சில புதிய வினையூக்கிகள் மூலம் பசைகளை தயாரிக்கலாம்.
இந்த பசை, செயற்கை இடுப்பு மற்றும் மூட்டுக்களை பொருத்துகையில், பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை ஒட்டவும் பயன்படும். மற்ற பசைகளைவிட மேற்சுழற்சி பிளாஸ்டிக் பசைக்கு, 20 சதவீதம் கூடுதல் ஒட்டும் தன்மை உள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
= = = =
தேன் எடுக்கும் ரோபோ!
தேனீ வளர்ப்பும், தேன் எடுப்பதும் மிகவும் சிக்கலான தொழில். அந்த சிக்கலில் பாதியைக் குறைக்க, ரோபோவை பயன்படுத்தலாம் என்கிறது, தென்கொரியாவை சேர்ந்த, 'டேசுங்' என்ற நிறுவனம்.டேசுங், தயாரித்துள்ள 'ஹைவ் கண்டரோலர்' என்ற ரோபோவை, ஒரு தேனீ பெட்டியின் மூடியை திறந்து, பெட்டியின் மேல் வைத்துவிடவேண்டும்.
பிறகு, அந்த ரோபோவே மெதுவாக பெட்டிக்குள் உள்ள தேன்கூட்டு சட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தேனீக்களை விரட்டி, தேனை வடித்து எடுத்துவிட்டு மீண்டும், பெட்டிக்குள் வைத்துவிடும்.
இந்த ரோபோவால், 90 சதவீதம் ஆட் கூலியும், 75 சதவீத நேர விரயமும் மிச்சமாவதாக டேசுங் நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. தேனீ எடுப்பவர்களுக்கு உடல் சோர்வும், தேனீக் கடியும் மிச்சம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
= = = =
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் பெருகி மன அமைதியுடன் வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கமும் நன்றியும்.vvvvvvvvvvvvvvvvv
நீக்குமுதல் செய்தி ஆச்சரியமூட்டியது. ஏனெனில் சில நாட்கள் முன்னர் தான் நம்ம அக்த்தியர் நாடி ஜோதிடம் சொல்லும், "டிங்கு டிங்கே" புற்று நோய்க்கான மருந்து க்ண்டுபிடிக்கப்பட்டு முற்றிலும் ஒழியும் எனச் சொல்லி இருந்தார். அவர் சொன்னது சரியாகிவிடும் போல இருக்கு. மற்றச் செய்திகளும் இப்படிப் பலிச்சுட்டால்? நல்ல செய்திகள் எனில் பரவாயில்லை. மாறுபட்டவை? கொஞ்சம் இல்லை, நிறையவே கவலை அளிக்கும் விஷயம். மேலே இருக்கிறவன் தான் பார்த்துக்கணும்.
பதிலளிநீக்குடிங்கு டிங்கே தமிழ் அல்லது நம்நாட்டுச் செய்திகளில் வருவதற்குமுன் வெளிநாட்டுச் செய்திகளில் கசிந்திருந்திருக்கக் கூடிய விவரங்களைப் பார்த்திருப்பரோ!
நீக்குஅட?இது வரைக்கும் யாரும் வரலையா? மீ த போணி? நேற்று கோமதி அரசு எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். கண்ணீரே வந்துவிட்டது. அவங்களை மறுபடி வலைப்பக்கம் வரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் வர வேண்டும். மன ஆறுதல் பெற வேண்டும். இந்த மார்கழி மாதம் எத்தனை கோயில்கள் போயிட்டுக் கோலங்களும் ஸ்வாமி தரிசனங்களுமாகக் கொடுத்திருப்பார்! அது இல்லாமல் வெறிச்சோ வெறிச்!
பதிலளிநீக்குகோமதி அக்காவோடு அவ்வப்போது உரையாடுகிறேன். எனக்கும் வாழ்த்துச் சொல்லியிருந்தார். வல்லிம்மாவும் அடிக்கடி அவருடன் பேசுகிறார். விரைவில் அக்காவை இங்கும் அவர் தளத்திலும் எதிர்பார்க்கலாம். சரிதானே கோமதி அக்கா?
நீக்குகேரளாவில் இந்த வருஷம் பெண்கள் ஆட்சி போல! பப்பாளி ஸ்ட்ரா புதுசு. முதுமையை எதுக்கு ஒத்திப் போடணும்? வயசாயிடுச்சுனே நினைக்காமல் இருந்தால் போதுமே! இஃகி,இஃகி,இஃகி! மற்றச் செய்திகளும் புதியவை. தேடித்தேடி எடுத்துப் போடும் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யருக்கு (கௌதமன் சார்) நன்றி.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஎங்கும் நலம் தங்கிட வேண்டிக் கொள்வோம்...
இணைந்து பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய நல்ல செய்திகள் அருமை. பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. ஆனந்தவள்ளி என்ற செய்தியை தவிர்த்து அனைத்துமே புதிதாகத்தான் படிக்கிறேன்.
இயற்கை ஸ்ட்ரா நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பிளாஸ்டிக் கழிவுகள் பசையாகும் முயற்சி, தேன் எடுக்க ரோபோ என்ற விந்தை அனைத்துமே நன்றாக உள்ளது. இந்தப் புதுமைகளைப் பற்றி தினமும் படித்து நினைத்தாலே, முதுமை அனைவரிடமும் வர யோசிக்குமே.. அதற்கு மருந்தே வேண்டாம். சனியில் வெள்ளியாக நடிகர் ஜெமினிகணேசன் அவர்கள் பாடிய பாட்டு "உனக்கென்ன கவலை.. நீ ஒரு ராஜா.. வந்தால் வரட்டும் முதுமை... என்ற பாடல் பிண்ணனியில் மனசுக்குள் ஓடுகிறது. ஹா.ஹா.
அனைத்து பகிர்வினுக்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைத்து நல்ல செய்திகளுக்கும் மிக நன்றி.
இரத்தப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பது மிக
அருமை.
புத்தாண்டு நன்மைகளைக் கொண்டு வருகிறது.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைத்து நல்ல செய்திகளுக்கும் மிக நன்றி.
இரத்தப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பது மிக
அருமை.
புத்தாண்டு நன்மைகளைக் கொண்டு வருகிறது.
வாங்க வல்லிம்மா... வணக்கமும், நன்றியும்.
நீக்குhttps://www.nu.nl/285203/video/hoge-onderscheiding-voor-rat-en-ander-positief-nieuws-in-2020.html
பதிலளிநீக்குவணக்கம் சென்ற வருட நல்ல செய்திகள் தொகுப்பு வீடியோ
நன்றி vic
நீக்குAI நுட்பம் உட்பட சில இயற்கையை மீறுவது, விளைவு : எங்கே செல்லும் இந்தப் பாதை...?
பதிலளிநீக்குதேனெடுக்கும் ரோபோ செய்தி பற்றிச் சொல்கிறீர்களா DD ?
நீக்குவைக்கோலுக்கு Straw என்று பெயர்... ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நெற்பயிர்கள் இடுப்பளவு உயரமுடையதாக இருக்கும்... வைக்கோலை நறுக்கிப் போட்டு இளநீர் குடித்ததும் காட்டாமணக்குப் பாலை எடுத்துக் குமிழ் ஊதியதும் நினைவுக்கு வருகின்றன..
பதிலளிநீக்குஇது எனக்கும் நினைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் பழக்கம்.
நீக்குஇந்நாட்களில் இயந்திர அறுவடை...
பதிலளிநீக்குநெல் மணிகள் சேமிப்பு போக எஞ்சிய உலர்ந்த பயிர்கள் வைக்கோல் ஆகாமல் முழுதாகக் கூளம் ஆகி விடுகின்றன...
ஆரம்பத்தில் இந்தக் கூளத்தைத் தின்ன விரும்பாத கால்நடைகள் தற்போது வேறு வழியின்றி தின்னப் பழகியிருக்கின்றன...
பாவம், அவை பேப்பர், போஸ்டர் பிளாஸ்டிக் என்று கிடைப்பதை எல்லாம் உண்கின்றன.
நீக்குபப்பாளியின் இலைத் தண்டுகள் இனி குழாய்க்காக ஒழிக்கப்படலாம்.. இதனால் பப்பாளி விளைச்சல் குறையக் கூடும்... பப்பாளிப் பூக்கள் இலைத் தண்டுகளின் இடுக்கில் மலர்ந்து காயாகக் கூடியவை...
பதிலளிநீக்குஓ... அப்படியா?
நீக்குஅனைத்தும் நல்ல செய்திகள்
பதிலளிநீக்குபஞ்சாயத்து தலைவருக்கு வாழ்த்துகள்.
நன்றி ஜி.
நீக்குரத்தப் புற்று நோய்க்கும், எலும்பு புற்று நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கப் பற்றிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனா சினிமாக் காரர்களுக்குத்தான் கஷ்டம், இனிமேல் கதாநாயகனையோ நாயகியையோ எந்த வியாதியால் சாகடிப்பார்கள்?
பதிலளிநீக்குபிளாஸ்டிக் மேற்சுழற்சி முறையால் பிளாஷ்டிக்கை மூட்டு சிகிச்சைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது நல்ல செய்தி.
துப்புரவு தொழிலாளராக பணியாற்றியவர் பஞ்சாயத்து தலைவரானது ஜனநாயகத்தின் வெற்றி.
தேன் எடுக்கும் ரோபோ, பொறுத்திருந்து பார்க்கலாம்.
அனைத்துமே அரிய, உயர்ந்த செய்திகள்!
பதிலளிநீக்குகணினிக்கும் மூளைக்கும் நேரடித்தொடர்பு ஏற்படுத்தினால் அது நல்லது தானா? அல்லது இது புதுமையா?
இந்த கண்டுபிடிப்பை விட பப்பாளிக்குழாய் கண்டுபிடிப்பு எத்தனை ஆரோக்கியமானது! இளநீர் வியாபாரி சேகரையும் அவர் மகன் செந்திலையும் நிச்சயம் வாழ்த்த வேண்டும்!
அனைத்துமே சிறப்பான தகவல்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்கு