98 வயதிலும் சுண்டல் கடை வைத்து உழைக்கும் முதியவர்.
= = = =
கைக்குழந்தையுடன் கடமை; பெண் போலீசுக்கு பாராட்டு.
சண்டிகர்: சண்டிகரில், பெண் போலீஸ் ஒருவர், கைக்குழந்தையுடன், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்ட, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
யூனியன் பிரதேசமான சண்டிகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கான்ஸ்டபிளான இவர், போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது.பிரசவ விடுமுறை முடிந்து, பிரியங்கா நேற்று பணியில் மீண்டும் சேர வேண்டும். ஆனால், அவர் பணிக்கு வரவில்லை. இதையடுத்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள், பிரியங்காவை தொடர்பு கொண்டு, உடனடியாக பணிக்கு வரும்படி உத்தரவிட்டனர். 'வீட்டில் குழந்தையை பராமரிக்க யாரும் இல்லாததால், என்னால் பணிக்கு வர முடியவில்லை' என, பிரியங்கா தெரிவித்துள்ளார். 'விடுமுறை முடிந்து விட்டதால், பணிக்கு உடன் வர வேண்டும்' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தையை துாக்கி கொண்டு, பணிக்குச் சென்றார் பிரியங்கா. குழந்தையை இடுப்பில் வைத்தபடியே, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்.இதை பார்த்த சிலர், 'குழந்தையுடன் பிரியங்கா பணியில் ஈடுபட்டுள்ளதை, மொபைலில், 'வீடியோ' மற்றும் புகைப்படம் எடுத்தனர். அவற்றை, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.பிரியங்காவின் கடமை உணர்வை பாராட்டி, பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். மேலும், சிலர், குழந்தையுடன் பிரியங்கா பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
= = = =
மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 30வது முறையாக, துாத்துக்குடி யாசகர், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இதுவரை அவர் 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார் - துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் யாசகர் பூல்பாண்டியன்.
இவர் சில நாட்களுக்கு முன் சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக வழங்க ரூ.10ஆயிரம் நிதி வழங்கினார்.
இவருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
= = = =
மூன்று செய்திகளும் சிறப்பு.
பதிலளிநீக்குதன்கீழ் பணியாற்றும் ஒருவரின் வீட்டுச் சூழலை அறியாமல் கடமைக்கு அழைப்பது மனிதாபிமான செயலா? போலீஸின் விடுமுறை, நேரமில்லாப் பணியை நாம் கவனத்தில் கொள்வதில்லை என்று நினைக்கிறேன். பாவம்தான்.
அரசு உத்தியோகத்தில் விடுமுறை நேற்று முடிந்தால் இன்று உடனே பணியில் சேரவேண்டும். இல்லை எனில் தொடர்ந்து சம்பளமில்லாத விடுமுறையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுச் சம்பளத்தோடு அளித்த விடுமுறை தினங்களுக்கான சம்பளமும் நிறுத்தி விடுவார்கள். இன்று பணியில் சேர்ந்து விட்டு நாளையிலிருந்து மீண்டும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ விடுமுறை அல்லது சம்பளமில்லா விடுமுறை என! அதிலும் பணியில் சேரும் நாளுக்கு அடுத்து சனி, ஞாயிறு வந்துவிட்டால் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்றாலும் உடனே பணியில் சேரணும். இல்லை எனில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்கான சம்பளமும் நிறுத்தப்படும். இதெல்லாம் நான் வேலையில் இருந்தவை. இப்போதும் அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் பிரசவ விடுமுறை ஆறு மாதங்கள் கிடைக்கின்றன. எனக்கெல்லாம் 60 நாட்கள் தான். ஆகவே சின்னக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான் 55 நாட்களிலேயே பிறந்த வீட்டிலிருந்து சென்னை வந்தேன். விடுமுறை முடியப் போவதைக் குறித்து ஓர் நினைவுக்கடிதமும் வரும். அப்படி வந்ததுமே உடனே நம்மவர் என்னைக் கிளம்பி வரச் சொல்லிட்டார். வந்து 61 ஆம் நாள் பணியில் சேர்ந்து ஒரு வாரம் போனபின்னர் மீண்டும் சம்பளமில்லா விடுமுறை எடுத்துக் கொண்டேன்.
நீக்கு//இதெல்லாம் நான் வேலையில் இருந்தவை.// வேலையில் இருந்தப்போ இருந்த நடைமுறைகள். (என்று வந்திருக்கணும். நடுவில் சில வார்த்தைகள் விடுபட்டு விட்டன.)
நீக்குஅசோக் லேலண்ட் அலுவலகத்திலும் நான் பணிபுரிந்த நாட்களில் விடுமுறை சட்டங்கள் கிட்டத்தட்ட இதே முறைதான். ஒரு வருடத்தில் 7 CL, 7 SL, 15 EL + 12 days National / festival holidays. மொத்தமே அவ்வளவுதான். ஒரு வருடத்தில் 52+7+7+15+12 = 93 நாட்கள் அதிகபட்ச விடுமுறை. ஆனால் - உற்பத்தி திட்டமிடுதல் ஒரு வருடத்தில் 300 வேலைநாட்கள் என்னும் அடிப்படையில். 365 - (52+12) பெரும்பான்மையான தொழிலாளர்கள் விடுமுறைகளை எடுத்துக்கொள்ளாமல் வருட இறுதியில் அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
நீக்குகீசா மேடம்... நான் போலீஸ் துறைக்குத்தான் அனுதாபி. மற்ற அரசுத்துறை பணியாளர்களைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவதற்கே என் ஆதரவு. இல்லை என்று சொல்பவர்கள் மின்சாரம், பொதுப்பணித்துறை மற்றும் அரசு நிறுவனங்களை அணுகிப்பார்க்கச் சொல்லுங்கள். லஞ்சம் ஊழல் திறமையின்மை, வேலை செய்யாமை இவற்றில் மூழ்கி இருக்கின்றன. சில விதிவிலக்குகளை நான் சொல்லவில்லை.
நீக்குகுழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த அந்தப் பெண்மணிக்கு துறைவாரியாக நடவடிககி எடுக்க உத்தரவாகி இருக்கிறியாது என்று படித்தேன். யாரோ புண்ணியவான் இதை வீடியோ எடுத்து இணையத்தில் போட, அது வைரலாக பாராட்டு ஒரு பக்கம் என்றால் கண்டனம் மறுபக்கம்.
நீக்குநெல்லை... நீங்கள் போலீஸ் துறைக்கு அனுதாபி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் அவர்கள்மேல் நல்ல அபிப்ராயம் கிடையாது.
நீக்குகீதா அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் விதிகள் பெரும்பாலும் இப்போதும் நடைமுறையில் உள்ளவையே....
நீக்குஅரசுத்துறையில் 12 நாட்கள் CL. சில துறைகளுக்கு ஈடு செய் விடுப்பு ஆறு மாதத்துக்கு பத்து நாட்கள் உண்டு. பல துறைகளுக்கு அது கிடையாது.
நீக்குநான் சொன்னவை அனைத்தும் மாநில அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டதே! மத்திய அரசுக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே மாற்றங்கள் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்து எங்க நண்பர் வட்டங்களில் மத்திய அரசுப் பணியில் இருந்த பெண்கள் ஆறு மாதத்துக்கு மேல் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வருடம், இரண்டு வருடமெல்லாம் சம்பளம் இல்லாமல் விடுமுறை போடுவார்கள். அப்போதும் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுவலகம் வந்து தன் இருப்பை நிரூபிக்க வேண்டி இருக்கும். தொடர்ந்து அலுவலகம் வராமல் இருக்க முடியாது. இது மாநில அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். நாங்க ராஜஸ்தான் போனப்போ அலுவலகத்தில் சொல்லவில்லை. அங்கே போய் 2 மாதத்தில் துறை ரீதியான மெமோ வந்தது. பின்னர் என் சொந்தக் கையெழுத்தில் விடுமுறை விண்ணப்பம் அனுப்பினேன். எமர்ஜென்சி நேரத்தில் உடனடியாக வேலைக்கு வரும்படி உத்தரவே வந்துவிட்டது. ஆனால் அப்போது குடும்ப ரீதியாக அப்படி எல்லாம் வேலைக்குச் செல்லவென்று வர முடியாத சூழ்நிலை என்பதால் ஒரேயடியாக ராஜிநாமாக் கடிதத்தை அனுப்பும்படி ஆயிற்று. :(
நீக்குமுதியவக்கு முன் நானொரு சோம்பேறிதான்.
பதிலளிநீக்குகுழந்தையுடன் வேலை செய்யும் காவலருக்கு அரசு உரிய மாற்று வழிகளை செய்து கொடுக்க வேண்டும்
பெண் வேலையாட்களுக்கு டிசிஎஸ் செய்து கொடுக்கும் மாற்று வழிகளுக்கும், வசதிகளுக்கும் நிகரே இல்லை. அவங்க குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தால் அலுவலக ரீதியாக நடத்தப்படும் குழந்தைக் காப்பகத்தில் குழந்தையை விட்டு விட்டு ஒரு மணிக்கு ஒரு முறை அல்லது முடிந்தபோது போய்ப் பார்த்துக் கொள்ளலாம். வீட்டில் குழந்தையை விட்டு வந்தால் அதற்கேற்பப் பணியின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். அல்லது சில மாதங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். என் பெரியப்பா பேத்தி டிசிஎஸ்ஸில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை பார்க்கிறார். பெருங்களத்தூரில் இருக்கும் அவர் தன் ஒரே மகனை இப்படித் தான் வளர்த்து வந்தார். இப்போது பையருக்கு ஏழு வயது ஆகிறது. அதன் பள்ளி நேரத்துக்கு ஏற்பத் தன் பணி நேரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். காலையில் கணவர் பள்ளிக்குக் குழந்தையை அனுப்பிவிட்டுச் சென்றால் மாலை திரும்பி வரும் நேரம் இவர் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.
நீக்கு// என் பெரியப்பா பேத்தி டிசிஎஸ்ஸில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை பார்க்கிறார். பெருங்களத்தூரில் இருக்கும் அவர் தன் ஒரே மகனை இப்படித் தான் வளர்த்து வந்தார். இப்போது பையருக்கு ஏழு வயது ஆகிறது. அதன் பள்ளி நேரத்துக்கு ஏற்பத் தன் பணி நேரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். காலையில் கணவர் பள்ளிக்குக் குழந்தையை அனுப்பிவிட்டுச் சென்றால் மாலை திரும்பி வரும் நேரம் இவர் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.// நல்ல திட்டமிடல் ! வாழ்த்துகள்.
நீக்குஎன்ன... எங்க ஊரைப் பத்தி கீசா மேடம் எழுதியிருக்காங்களே.... எங்க ஊர்ல, அவங்க ரிலேஷனா?
நீக்குஎது உங்க ஊர் நெல்லை? பெருங்களத்தூர்?
நீக்குஆமா இல்ல?
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்கள் எல்லோரும் எங்களைப் பிடுங்கி எடுத்துக் கொண்டிருக்காங்க. சில, பல காரணங்களால் இப்போப் போட்டுக்க முடியலை. போகப் போகப் பார்ப்போம். இறைவன் அருளால் அனைத்தும் இனிதே நடைபெறவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குசெய்திகள் மூன்றும் அறிந்தவை/தெரிந்தவை. தொடரட்டும் நற்செய்திகள்.
பதிலளிநீக்கு.. டும்
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் ஆரோக்கியத்துடன் , அமைதியுடன்
இருக்க இறைவன் அருள வேண்டும்.
வேண்டுவோம்.
நீக்குமூன்று செய்திகளும் அறியாதவை தான்.
பதிலளிநீக்குஅந்த பெண் காவலரின் நிலைமை பரிதாபம்.
முதுகிலோ மார்புப் பக்கமோ இணைத்து
வைத்துக் கொள்ளலாம்.
கீதாமா சொல்வதைப் பார்த்தால் எத்தனையோ செய்திகள் தெரிய வருகின்றன.
பரந்த அறிவு அவர்களுக்கு.
பெண்போலீஸ் குழந்தையோடு நிற்பதைக் கண்டால்
மஹா அபாயமாகத் தெரிகிறது.
வெய்யில்,குளிர் எல்லாம் அந்தக் குழந்தையைப்
பாதிக்காதா.:(
ஆம். பாதிக்கும்தான்.
நீக்குஎங்க மருமகள், பிள்ளை இருவருமே இதற்கென இருக்கும் தூளியை வாங்கி உடலில் கட்டிக் கொண்டு குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்தவாறு வைத்துக்கொண்டு விடுவார்கள். குழந்தை அப்படியே தூங்கவும் செய்யும். நமக்குத் தான் பார்க்கப் பாவமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அது தான் வசதியாக இருந்தது. 2 வயசு வரைக்கும் குஞ்சுலுவை இப்படித் தான் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு வெளியே செல்வார்கள்.
நீக்குஎனக்குப் பரந்த அறிவெல்லாம் இல்லை வல்லி. இம்மாதிரி உறவினர்கள் இருப்பதால் தெரிய வருகிறது. இப்போக் குழந்தையை ஸ்வீகாரம் எடுத்திருக்கும் என் அண்ணா மருமகள் குழந்தையைப் பார்த்துக்கொள்ளவென்றே தன் வேலையை விட்டு விட்டாள்.
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலமே வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குஇங்கேயும் நிறைய நண்பர்கள் போட்டுக்கொண்டு விட்டார்கள்.
பதிலளிநீக்குநானும் பதிவு செய்து கொண்டு விட்டேன்.
அழைக்கும் போது போகலாம்.
எல்லோருக்கும் தடுப்பூசி நன்மை செய்யட்டும்.
எல்லோருக்கும் தடுப்பூசி நன்மை செய்யட்டும்.
நீக்குஹையோ, அதை ஏன் கேட்கறீங்க? எங்க உறவினர்கள் அனைவரும் மாற்றி மாற்றி ஊசி போட்டுக்கொள்ள வற்புறுத்தி வருகின்றனர். யோசிக்கணும். ஏப்ரலில் என் கடைசி மைத்துனரின் வருஷ ஆப்திகம் வருவதால் எல்லாவற்றுக்கும் யோசிக்க வேண்டி இருக்கு. கண் அறுவை சிகிச்சையையே அதற்காகவே தள்ளிப் போட்டிருக்கோம்.
நீக்குஒரு பாலச்சந்தர் திரைப்படத்தில் நாகேஷ் கைக்குழந்தையை ஒரு பிரம்பு தொட்டில் கூடையில் வைத்து ஆபிசுக்கு கொண்டுவருவார்.வேலையின் நடுவே அவ்வப்போது குழந்தையையும் கவனித்து கொள்வார். அதேபோன்று இந்த போலீஸ் பெண்ணும் செய்திருக்கலாம். பெண்களை பொறுத்த வரையில் maternity leave தொடர்ச்சியாக வேறு எந்த லீவும் எடுக்கலாம்.maternity லீவு சம்பளத்தை அது பாதிக்காது.
பதிலளிநீக்குMaternity leave can be combined with any other leave without furnishing any medical certificate for up to 2 years. ... It is seen that maternity leave was increased from 135 days to 180 days under the 6th CPC. The 'period in continuation' was also increased from 1 year to 2 years.
இது இல்லாமல் கணவர்களுக்கு paternity லீவு உண்டு. 15 நாட்கள்.
Jayakumar
தகவல்களுக்கு நன்றி.
நீக்குJC சார்.. நீங்கள் சொல்லி இருக்கும் படம் இரு கோடுகள்!
நீக்குஆமாம், இரு கோடுகள் படத்தில் தான் நாகேஷ் இப்படி எடுத்து வருவார். அந்த மாதிரிச் சில பெண்கள் கூட்டி வந்தாலும் தினமெல்லாம் கூட்டி வர முடியாது. என்றாவது ஒரு நாள் கூட்டி வரலாம். இப்போதுள்ள திருத்தப்பட்ட விடுமுறைச் சட்டத்தின்படி கணவர்களுக்கும் மனைவியின் பிரசவத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. என் பிரசவங்களின் போதெல்லாம் என் கணவருக்கு விடுமுறை எல்லாம் அளிக்கவில்லை.
நீக்கு98 வயதிலும் உழைக்கும் பெரியவர்க்குக் கோடி வந்தனங்கள்.
பதிலளிநீக்குஇது எப்படி அவரால் முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.
அரசும் அவரைக் கௌரவித்தது மிக மிக மகிழ்ச்சி.
நல்ல செய்தி.
வாழ்த்துவோம்; வணங்குவோம்.
நீக்கு30 ஆவது முறையாகப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவி இருக்கும் மதுரைப்
பதிலளிநீக்குபெரியவருக்கு வணக்கங்கள்.
அனைத்து செய்திகளும் மனத்தை மகிழ்விக்கின்றன.
மிக மிக நன்றி ஜி.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்.
நீக்கு//98 வயதிலும் சுண்டல் கடை வைத்து உழைக்கும் முதியவர். //
பதிலளிநீக்குவணங்கவேண்டும் முதியவரை.
//கைக்குழந்தையுடன் கடமை; பெண் போலீசுக்கு பாராட்டு.//
கடமை என்றாலும் அந்த பெண் போலீசுக்கு கஷ்டம்தான்.
யாசகம் பெறுபவர் 30 முறை நன்கொடை அளிப்பது வியப்பு தான்.
அவருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துவோம்.
நீக்குஇன்றைய பதிவு அருமை..
பதிலளிநீக்குஇப்பதிவுக்காக கீதாக்கா வழங்கியுள்ள கருத்துகள் அற்புதம்..
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். 90 வயதிலும் உழைத்து வாழும் முதியவரும், தான் இரந்து பெற்ற செல்வத்தை நன்கொடையாக அளிப்பவரும் போற்றத் தகுந்தவர்கள்.
பதிலளிநீக்குஆம். நன்றி.
நீக்குகை குழந்தையோடு பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலரின் நிலை பரிதாபம்தான். குழந்தை காப்பகங்கள் எதுவும் அருகில் இ்லையோ?
பதிலளிநீக்குநான் மஸ்கட்டில் பணி புரிந்த பொழுது, என் இரு குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து சிக்கன் பாக்ஸ் வந்தது. நான் லீவ் லெட்டர் கொடுத்தனுப்பிய பொழுது,அதை ஒரு அவமரியாதையாக கருதிய என் மேலதிகாரி அலுவலகம் வந்து பர்மிஷன் பெற்றுச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். என் சகோதரரும் மஸ்கட்டில் இருந்ததால் நான் பர்மிஷன் போட்டு விட்டு திரும்பி வரும் வரை அவர் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். என் பெண்ணிற்கு மம்ஸ் வந்த பொழுதும் கஷ்டப்பட்டேன்.
அப்படியா. சட்ட திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவது மனிதாபிமானமற்ற செயல்.
நீக்குகஷ்டம் தான்! தனியாகக் குழந்தையும் பெற்றுக்கொண்டு அலுவலகம் சென்று தனியாய்க் குழந்தையையும் பார்த்துக்கொள்ளும் நிறைய இந்தியப் பெண்களை அம்பேரிக்காவில் பார்க்கலாம். டே கேர் எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையைக் காலை ஏழு மணிக்கு விட்டால் மாலை மூன்று வரை இருக்கலாம். தகப்பன் குழந்தையை விட்டு விட்டு வேலைக்கு மெதுவாகச் சென்றால் மனைவி காலை சீக்கிரம் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகையில் குழந்தையை அழைத்துக் கொண்டு சீக்கிரம் வீட்டுக்கு வருவார். இப்படி நிறையக் குடும்பங்களின் வாழ்க்கை முறையை அங்கே பார்க்க முடியும். என்ன ஒரு வசதி எனில் அங்கெல்லாம் ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் வேலை அல்லது வாரத்துக்கு இத்தனை மணி நேரம் வேலை எனக் கணக்கு இருப்பதால் பலரும் வியாழக்கிழமையே வார நேரம் முழுவதும் வேலை செய்து, கூடுதல் நேரம் அன்றே வரும்படி வேலை செய்து முடித்துவிட்டுப் பின்னர் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துக் கொள்வார்கள்.
நீக்குமூவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகெளதமன் ஸார்! அடுத்த புதன் கேள்வி- பதில் பகுதிக்காக சென்ற புதன் கேள்வி-பதில் பகுதி பின்னூட்டமாக கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் தகவலுக்காக. அருள் கூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி.
நன்றி. பார்க்கிறேன்.
நீக்குநீண்ட இடைவெளிக்குப் பின்......வருகிறேன்.
பதிலளிநீக்குமுதியவரின் சுறுசுறுப்பு வாழ்த்துகள். கைக் குழந்தையுடன் பணிபுரியும் பெண் காணூம்போது கவலை கொள்கிறது.
வாங்க. நலமா? கருத்துரைக்கு நன்றி.
நீக்கு98 வயதிலும் உழைக்கும் முதியவர் போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குநாளிதழ்களில் படித்தேன். முதியவர் பற்றிய செய்தியை மிகவும் சிறப்பாகக் கருதுகிறேன்.
பதிலளிநீக்குசிறப்பான செய்திகள்.
பதிலளிநீக்கு